நிரந்தர பக்கங்கள்

12/02/2008

செயல் வகை - மீள்பதிவு, காரணம் கடைசியில் தரப்பட்டுள்ளது

லத்தீன மொழியில் modus operandi என்று குறிப்பிடுவார்கள். அதை அப்படியே ஆங்கிலத்திலும் பாவிக்கிறார்கள். அதன் பொருள்தான் இப்பதிவின் தலைப்பு.

புகழ் பெற்ற பெர்ரி மேஸன் நாவல்களில் ஒன்றில்தான் modus operandi என்ற சொல்லை முதல் முதலாகப் பார்த்தேன். பெர்ரி மேஸனும் அவரது காரியதரிசி டெல்லா ஸ்ட்ரீட்டும் ஒரு வாடிக்கையாளரின் கேசுக்காக ஷெரீஃப் அலுவலகத்தில் சென்று ஆவணங்களைத் தேடும் சமயம் போலீஸ் அதிகாரி ட்ராக் (Tragg) அவர்களை அங்கு பிடிக்கிறார். "நாங்கள் இங்குதான் இருப்போம் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தீர்கள்"? என்று பெர்ரி மேஸன் கேட்க, modus operandi என்று சுருக்கமாக பதிலளிக்கிறார். அதாவது ஒரு குறிப்பிட்ட வகை வழக்குகளில் மேஸன் என்ன செய்வார் என்பதை ட்ராக் அவதானித்து வைத்திருக்கிறார். ஆகவே அவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால் எங்கு செல்ல வேண்டும் என்பதையும் ஊகித்து வைத்திருக்கிறார்.

அதே போல நான் ஐ.டி.பி.எல்.லில் சேர்ந்த புதிதில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதன் நூலகத்தில் லைப்ரரியனான அழகிய பெண்ணுடன் கடலை போட்டுக் கொண்டு இருப்பேன். ஆகவே அல்ஜீரியாவிலிருந்து ஏதேனும் முக்கிய டெலக்ஸ் வந்தால் பியூன் நேராக அங்கு வந்துதான் என்னிடம் அதை மொழிபெயர்ப்புக்குத் தருவார்.

ஆனால் இந்த modus operandi என்னும் சொல் வேறு சூழ்நிலையில் சாதாரணமாக போலீஸாரால் பாவிக்கப்படுகிறது. ஒவ்வொரு தொழில் முறை குற்றவாளிக்கும் அவன் வேலை செய்வதில் தனி முத்திரை இருக்கும். சிலர் இரவில் மட்டும் சுவற்றில் கன்னமிட்டு திருடுவார்கள். சிலர் பட்டப்பகலில் வீட்டிலிருப்பவரை ஏமாற்றி உள்ளே நுழைந்து திருடுவார்கள். இன்னும் சிலர் திருடிய வீட்டின் நடு ஹாலில் மலம் கழித்து செல்வார்கள்.

ஆகவே குற்றம் நடந்த இடத்தைப் பார்வையிடும் போலீஸ் அதிகாரி குற்றம் செய்யப்பட்ட முறையைப் பார்த்து ஷார்ட் லிஸ்ட் செய்வார்கள். அம்முறையில் வழக்கமாக குற்றம் செய்பவரின் பட்டியலைப் பார்ப்பார்கள். முக்கால்வாசி நேரங்களில் அவர்கள் வெகுவிரைவில் குற்றவாளிகளை இம்முறையின் மூலம் பிடிப்பார்கள்.

தக்கர்கள் (Thugs) என்ற கொள்ளையர்கள் 1700-1800 களில் பிரபலம். பயணிகளை சில்க் டவலால் கழுத்தை நெரித்து கொல்வது அவர்கள் பழக்கம். அதே போல பிண்டாரிகள், குஜ்ஜர்கள் என்றெல்லாம் இருந்திருக்கின்றனர்.

இந்த modus operandi இன்னமும் உபயோகத்தில் இருக்கிறது. அப்படித்தான் எனது சைக்கிள் மாம்பலம் தலைமை தபால் நிலையத்தில் உள்ள சைக்கிள் நிறுத்துமிடத்திலிருந்து திருட்டு போயிற்று. போலீஸ் ஸ்டேஷனில் புகார்கொடுக்க சென்றபோது உடனே கான்ஸ்டபிள் ஏட்டிடம் சொன்னார். "சார், இது யாரோ புது திருடன். வழக்கமா இந்த ஏரியாவில் சைக்கிள் திருடும் நபர் ஊரில் இல்லை". இது எப்படி இருக்கு?

12B ரூட்டில் வேலை செய்யும் பிக்பாக்கெட்காரர் 13 ரூட்டுக்கு சாதாரணமாக வரமாட்டார். இதுவும் modus operandi-யை சேர்ந்ததே. அதே போல செயின் திருடர் பிக்பாக்கெட் அடிக்க மாட்டார். ஏனெனில் தாங்கள் எதில் தேர்ந்தவர்களோ அதைத்தான் செய்வார்கள். இல்லாவிட்டால் மாட்டிக் கொண்டு உதை வாங்குவது யார்?

பாண்டவர்கள் அக்ஞாதவாசத்தில் விராட மன்னனுக்காக யுத்தம் செய்ய வேண்டிய நேரத்தில் சமையற்காரனாக வேடம் தரித்த பீமன் ஆவேசத்துடன் மரத்தை பிடுங்கச் சென்றபோது யுதிஷ்டிரர் அவனைத் தடுத்து சாதாரண முறையில் யுத்தம் செய்யவைத்தார். அதே போல கீசகனை கொன்றது யார் என்று தெரியாது எல்லோரும் இருந்தபோது துரியன் மட்டும் அது பீமனாகத்தான் இருக்க வேண்டும் என கண்டுகொண்டதும் இந்த modus operandi-யை வைத்துத்தான். ஏனெனில் கீசகனை அச்சமயம் கொல்லும் சக்தி வாய்ந்தவர்கள் துரியன், கர்ணன், பரசுராமர், பீஷ்மர் மற்றும் பீமன்.

ஒருவரைத் தேவையின்றி மட்டம்தட்டி நக்கல் செய்வது அவரது விரோதிகள் அல்லது அவர்தம் அள்ளக்கைகள்தான் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ளுவார்கள். மொச பிடிக்கிற நாயினுடைய மூஞ்சியைப் பார்த்தால் தெரியாதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: ஓராண்டுக்கு முன்னால் வந்த இப்பதிவை அப்போதே நையாண்டி செய்து இப்போது மீள்பதிவு செய்யப்பட்ட இடுகையை புரிந்து கொள்ளவே இந்த மீள்பதிவு செய்யப்படுகிறது.

18 comments:

  1. //
    ஒருவரைத் தேவையின்றி மட்டம்தட்டி நக்கல் செய்வது அவரது விரோதிகள் அல்லது அவர்தம் அள்ளக்கைகள்தான் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ளுவார்கள்.
    //

    போலியுடைய ஆவி இன்னும் உங்களைப் பயமுறுத்திக் கொண்டு தான் இருக்கிறது போல.

    ReplyDelete
  2. DOndu sir,

    Neenga enna sollaringahnu sollaravangaluku puriyum, sarithaneh ;-) (ennaku oru alavuku puriyudhu :))

    ReplyDelete
  3. //போலியுடைய ஆவி இன்னும் உங்களைப் பயமுறுத்திக் கொண்டு தான் இருக்கிறது போல.//
    பயமா, டோண்டு ராகவனுக்கா? Ha!

    //(ennaku oru alavuku puriyudhu :))//
    நல்லது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. //ஒருவரைத் தேவையின்றி மட்டம்தட்டி நக்கல் செய்வது அவரது விரோதிகள் அல்லது அவர்தம் அள்ளக்கைகள்தான் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ளுவார்கள். மொச பிடிக்கிற நாயினுடைய மூஞ்சியைப் பார்த்தால் தெரியாதா?
    //

    சுற்றி வளைத்து அடித்தாலும் சரியாகவே அடித்துள்ளீர்கள்

    ReplyDelete
  5. //அதே போல நான் ஐ.டி.பி.எல்.லில் சேர்ந்த புதிதில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதன் நூலகத்தில் லைப்ரரியனான அழகிய பெண்ணுடன் கடலை போட்டுக் கொண்டு இருப்பேன்.//
    பச்சை கடலயா? வருத்த கடலயா? எதை போடுவீர்கள்.

    ReplyDelete
  6. \\மொச பிடிக்கிற நாயினுடைய மூஞ்சியைப் பார்த்தால் தெரியாதா?//

    Does this dog wear a "(d)tavusar"?

    ReplyDelete
  7. //ஒருவரைத் தேவையின்றி மட்டம்தட்டி நக்கல் செய்வது அவரது விரோதிகள் அல்லது அவர்தம் அள்ளக்கைகள்தான் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ளுவார்கள்.//

    வயித்தெரிச்சல் அதிகமாக இருந்தாலும் இம்மாதிறி செய்யலாம். யாராவது அருகில் உள்ள மருந்து கடையின் விலாசத்தை அளித்தால் நல்லது.

    ReplyDelete
  8. ஐய்யய்ய... இதப் போய் பெருசா எடுத்துப்பாங்களா?

    ReplyDelete
  9. 'வேட்டையாடு விளையாடு' வில் கமல் Forensic expert இடம் அவ்வார்த்தையை style-ஆக இவ்வாறு கேட்பார் "மோடஸ் ஓபரண்டை ?" . Brevity, the soul of wit !!

    - shivatma.

    ReplyDelete
  10. //ஆனால் இந்த modus operandi என்னும் சொல் வேறு சூழ்நிலையில் சாதாரணமாக போலீஸாரால் பாவிக்கப்படுகிறது.//
    எவ்வளவு அறிய விசயத்தை மிக எளிதாக சொல்லி விட்டீர்கள்,
    உளவு துறையினர் இதை signature என்று சொல்வார்கள்,
    ஒவொரு குற்றவாளியும், அவனுகென்று ஒரு தனித்துவம் வைத்திருப்பான்,
    இதற்கென்று ஒரு தனி பாடமே இருக்கிறது காவல் துறையில்,
    மற்ற படி எனக்கு அரசியல் தெரியாது,
    ஹி ஹி ஹி

    வால்பையன்

    ReplyDelete
  11. பின்னுட்டங்களை பார்க்கும்போது
    இது original-ஆ அல்லது போலி டொண்டுவா என்றே எனக்கு புரியவில்லை.,

    அன்புடன்.,
    இட்லிசம்பார்ர்.,(இட்லிவடை இல்லை)

    ReplyDelete
  12. இப்பதிவுக்கான Stimulation பதிவு ஒன்று வந்திருக்கிறதே? வாசித்தீர்களா? அப்பதிவின் நோக்கம் மோசமானதாக இருந்தாலும் நடை சரளமாக, நகைச்சுவையாக இருந்ததால் மனம்விட்டு சிரித்தேன்.

    ரமேஷ்

    ReplyDelete
  13. புகழ் பெற்ற பெர்ரி மேஸன் நாவல்களில் ஒன்றில்தான் modus operandi என்ற சொல்லை முதல் முதலாகப் பார்த்தேன். பெர்ரி மேஸனும் அவரது காரியதரிசி டெல்லா ஸ்ட்ரீட்டும் ஒரு வாடிக்கையாளரின் கேசுக்காக ஷெரீஃப் அலுவலகத்தில் சென்று ஆவணங்களைத் தேடும் சமயம் போலீஸ் அதிகாரி ட்ராக் (Tragg) அவர்களை அங்கு பிடிக்கிறார். "நாங்கள் இங்குதான் இருப்போம் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தீர்கள்"? என்று பெர்ரி மேஸன் கேட்க, modus operandi என்று சுருக்கமாக பதிலளிக்கிறார். அதாவது ஒரு குறிப்பிட்ட வகை வழக்குகளில் மேஸன் என்ன செய்வார் என்பதை ட்ராக் அவதானித்து வைத்திருக்கிறார். ஆகவே அவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால் எங்கு செல்ல வேண்டும் என்பதையும் ஊகித்து வைத்திருக்கிறார்.



    கழுத கெட்டா குட்டிச்சுவரு.

    ReplyDelete
  14. //கழுத கெட்டா குட்டிச்சுவரு//
    நல்ல லோக்கலைசேஷன் modus operandi-க்கு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. //இப்பதிவுக்கான Stimulation பதிவு ஒன்று வந்திருக்கிறதே? வாசித்தீர்களா?//

    பார்த்தேன். அது Stimulation அல்ல. Simulation. அந்தச் சொல்லும் இங்கு பொருந்தாது. அதை பகிடி என்பார்கள். அதைச் செய்வதன் மூலம் தான் அள்ளக்கைதான் என்பதை சம்பந்தப்பட்ட பதிவர் நிரூபித்ததுதான் நடந்தது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. GREAT QUOTE:

    Life is not about the people
    who act true to your face
    It's about the people who remain true behind your back.

    ramakrishanahari

    ReplyDelete
  17. dondu sir's modus operandi is "sameebathil" -- if you find this word in any tamil article, you can immediately conclude that itis dondusir's creation!!!

    ReplyDelete
  18. மோடஸ் ஆப்பரண்டி என்றால் mode of operation என்று சொல்லியிருக்கலாம்...!!!

    ReplyDelete