அறுபதுகளில் மிகப்பிரபலமாக இருந்தவர் எர்ள் ஸ்டான்லி கார்டனர். அவர் சட்ட நிபுணர். அமெரிக்க கோர்ட் நடவடிக்கைகள் பற்றிய விஷயங்களுக்கு அவர் ஒரு அத்தாரிடி. அவர் யார் என்று இன்னும் புரியாதவர்களுக்கு இன்னொரு பெயரைக் கூறினால் உடனே புரிந்து கொள்வார்கள். பெர்ரி மேஸன். ஏதாவது ஞாபகம் வருகிறதா?
எர்ள் ஸ்டான்லி கார்டனர் உருவாக்கிய பாத்திரம்தான் பெர்ரி மேஸன் என்னும் வழக்கறிஞர். The Case of Vevette Claws என்ற நாவல் 1933-ல் வந்தது. அதற்கு அடுத்து வந்த நாவல்கள் வரிசைக்கிரமத்தில்: The case of sulky girl, The case of howling dog, The case of stuttering bishop". இதற்கப்புறம் தெரியாது. இந்த 4 நாவல்களை சொன்னது கூட முந்தைய நாவலில் அடுத்த நாவலைப் பற்றி ஒரு பாரா வரும். அதன் பிறகு கதாசிரியர் அந்த உத்தியை விட்டு விட்டார். மொத்தம் 80 சொச்சம் புத்தகங்கள் இந்த சீரீஸில் வந்துள்ளதாக அறிகிறேன்.
இந்த பெர்ரி மேஸன் இருக்கிறாரே, அவர் குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதாடும் எதிர்தரப்பு வக்கீல். அவருக்கு தன் கட்சிக்காரரின் நலந்தான் முக்கியம். அதற்காக அவர் என்னென்னவோ சாகசங்கள் எல்லாம் செய்வார். அவற்றைப் பற்றி வழக்கறிஞரான என் பெரியப்பாவிடம் கேட்ட போது அவர் அவ்வாறெல்லாம் ஒரு வக்கீல் இந்தியாவில் செய்தால் அவரது சன்னதை பிடுங்கி விடுவார்கள் என்று கூறி விட்டார்.
பெர்ரி மேஸனிடம் தோற்பதற்காகவே உருவாக்கப்பட்டவர் ஹாமில்டன் பர்கர் என்னும் அரசு தரப்பு வக்கீல். பெர்ரி மேஸனின் அந்தரங்கக் காரியதரிசி டெல்லா ஸ்ட்ரீட், நண்பர் தனியார் துப்பறியும் நிபுணர் பால் டிரேக். பெர்ரி மேஸனை காப்பியடித்து தமிழில் கதைகள் எழுதியவர் கலாதர் என்பவர். பெர்ரி மேஸனுக்கு மோகன் என்று பெயர், டெல்லா ஸ்ட்ரீட்டுக்கு புஷ்பா என்று பெயர், இதில் அவர் மோகனின் மனைவி. பால் டிரேக்குக்கு சுந்தர் என்று பெயர், புஷ்பாவின் தம்பி. ஆக நன்றாகத்தான் தமிழ்படுத்தியுள்ளார்கள் என்று கூறிடத்தான் வேண்டும்.
பெர்ரி மேஸனின் பல குண நலன்கள் என்னால் விரும்பி போற்றப்பட்டவை. அநியாயத்தை எதிர்த்துப் போராடும் பெர்ரி மேஸனின் குணம் எனக்கு பிடிக்கும். பெர்ரி மேஸனின் செயல்பாடுகள் என் நடவடிக்கைகளை பாதித்தன. அவரைப் போலவே எனக்கும் பிளாக்மெயிலர்களை பிடிக்காது. ஒரு நாவலில் அவர் பிளாக்மெயிலர்களை எப்படி எதிர்க் கொள்வது என்று கூறியிருப்பார். (The case of phantom fortune).
1. உங்களை பற்றிய ரகசியம் ஏதேனும் பிளாக்மெயிலரிடம் சிக்கி விட்டதா? உதாரணத்துக்கு ஒரு கதையில் ஒருவர் சிறு வயதில் குற்றம் செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு, பிறகு வெளியில் வந்து தன் உழைப்பால் பெரிய பணக்காரரானவர். அவர் பழைய வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்ட பிளாக்மெயிலர் ஒருவன், அவர் பழைய கதைகளை பத்திரிகைகளுக்குக் கொடுக்கப்போவதாக மிரட்ட, பெர்ரி மேஸன் அந்தப் பணக்காரருக்கு தரும் அட்வைஸ் என்னவென்றால், அவரே முந்திக் கொண்டு பத்திரிகைகளுக்கு தன்னை பற்றிய நியூஸை கொடுத்து விட வேண்டும் என்பதே. அதனால் பிளாக் மெயிலரின் ஆயுதம் மழுங்கி விடும்.
2. பிளாக் மெயிலரை டிராப் செய்து போலீஸிடம் மாட்டி விடுவது. அமெரிக்காவில் பிளாக் மெயிலர்களுக்கு தண்டனை ஏழாண்டு சிறையாகும்.
3. மூன்றாவது யோசனை அந்தத் தேவிடியாப் பையனை கொன்று விடுவதே ஆகும். (Kill that son of a bitch).
மிகுதியை புத்தகத்தில் காண்க.
எர்ள் ஸ்டான்லி கார்டனர் வேறு பெயர்களிலும் எழுதியுள்ளார். அவை: A.A. Fair, Charles M. Green, Grant Holiday, Carleton Kendrake, Charles J. Kenn(e)y, Robert Park, Robert Parr, Les Tillray. அவற்றில் A.A. Fair மட்டும்தான் நான் அறிவேன். மீதி பெயர்களில் எழுதியிருந்தது எனக்கே புதிய செய்திதான். A.A. Fair புத்தகங்களில் டொனால்ட் லாம் என்று ஒரு தனியார் துப்பறியும் நிபுணர் வருவார். அவர் முதலில் வக்கீலாகத்தான் தொழில் துவங்கினாலும் சன்னது பறிக்கப்பட்டு இந்த தொழிலுக்கு வருகிறார். நிறைய உதை எல்லாம் வாங்குவார்.
அதே போல எர்ள் ஸ்டான்லி கார்டனர் வெளியிட்ட DA series புத்தகங்களும் நன்றாக இருக்கும். அவற்றில் Doug Selby DA ஆக வருவார். இந்த சீரீஸில் மொத்தம் 9 புத்தகங்கள். அவை: The D.A. Calls it Murder, The D.A. Holds a Candle, The D.A. Draws a Circle, The D.A. Goes to Trial, The D.A. Cooks a Goose, The D.A. Breaks a Seal, The D.A. Takes a Chance, The D.A. Calls a Turn, The D.A. Breaks an Egg
இவையெல்லாம் (Retrieved from "http://en.wikipedia.org/wiki/Doug_Selby").
ஆனால் ஒன்று மட்டும் கூற வேண்டும். இந்த ஆசிரியர் பெர்ரி மேஸனுடனுடம்தான் அதிகம் சேர்த்து பார்க்கப்படுகிறார். சொந்த வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் "The court of last resort" என்ற அமைப்பின் மூலம் சேவை செய்துள்ளார்.
இப்பதிவை முடிக்கும் முன்னால் மறுபடி பெர்ரி மேசனிடம் வருகிறேன். சில வாக்கியங்கள் நெட்டுரு ஆகி விட்டன. உதாரணத்துக்கு: "Objected to as being incompetent, irrelevant and not proper cross examination" "Objection! Your honour" "Objection overruled/sustained". பெர்ரி மேசன் நாவல்கள் படிக்கும்போது தீயதை எதிர்த்து போராடி வெற்றி பெறும் மனோபாவம் வளரும்.
இத்தலைமுறையில் பலருக்கு பெர்ரி மேசன் அனுபவங்கள் இருக்காது என அஞ்சுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
5 hours ago
19 comments:
பெரி மேஸனின் இன்ஸ்பிரேசன் தான் சுஜாதாவின் கணேஷ் என நினைக்கிறேன்
நைலான் கயிறு முதல் பிரியா வரைக்கும் அப்படித்தான் செய்தார். பிறகு பிரியா படத்தை எடுத்த விததைப் பார்த்து நொந்து போய் உத்தியை மாத்தினார். கணேஷ் சற்று அதிக இந்தியத் தன்மையுடன் காண்பிக்கப்பட்டார். பழைய கணேஷின் சாதனைகளைத் தொடர வசந்த்தை உருவாக்கினார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆம். நான் விரும்பி படிப்பதுண்டு. நல்ல பதிப்பு.
நன்றி லியோ மோகன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
There was a series "Matlock" loosely based on Perry Mason and to some extent, american "Ganesh". A famous actor(don't remember his name now) portrayed Matlock.
Now a days, the lawyer stories have been taken to another dimension in "Law & Order" series. Not sure which channel in India is broadcasting this. If they do, don't miss it. It addresses very healthy/interesting/disturbing questions/views/debates of people that are in law and also portray the people who do the crime.
3. மூன்றாவது யோசனை அந்தத் தேவிடியாப் பையனை கொன்று விடுவதே ஆகும். (Kill that son of a bitch).
- Oh, no...Relax :). Just kidding, though your translation is close, it may raise some eye brows of your regular readers(including myself).
நீங்கள் ஆண்டி க்ரிஃபித்தையா கூறுகிறீர்கள்?
Matlock TV Show
TV Series Summary for Matlock
Television Show Summary
This 80's TV show features Ben Matlock, a defense attorney who was raised in Georgia and educated at Harvard. He charges $100,000 per case but he always finds the real criminal.
TV Show Plot For Matlock
Other characters on the Matlock legal drama series were: daughters and lawyers Charlene and Leanne; Matlock's investigators Tyler Hudson, Conrad McMasters and Cliff Lewis. Ben's girlfriend, associate D.A. Julie March; and his contact on the Atlanta police, Lt. Bob Brooks.
Jake and the Fatman was an 80's TV series spin-off based on a character from the 1986 Matlock episode titled The Don.
ABC (1992-1995) and NBC (1986-1992) broadcast a total of 195 episodes over Matlock's ten year network run.
Cast of Matlock TV Show
Andy Griffith - Benjamin Matlock
Nancy Stafford - Michelle Thomas
Clarence Gilyard Jr. - Conrad McMasters
David Froman - Lt. Bob Brooks
Kene Holliday - Tyler Hudson
Richard Newton - Judge Richard Cooksey
Julie Sommars - A.D.A. Julie March
Daniel Roebuck - Cliff Lewis
Brynn Thayer - Leanne McIntyre
Michael Durrell - D.A. Lloyd Burgess
Linda Purl - Charlene Matlock
Al Wiggins - Judge Clagett
Warren Frost - Billy Lewis
Don Knotts .... Les Calhoun
Trivia for the TV Show Matlock
Former Andy Griffith show cast members Don Knotts, Aneta Corsaut, Jack Dodson, Betty Lynn, and Arlene Golonka all appeared on the Matlock TV series.
Ratings Info for Matlock Series
1986-87 - 1st Season - Ranked #15
1987-88 - 2nd Season - Ranked #14
1988-89 - 3rd Season - Ranked #12
1989-90 - 4th Season - Ranked #20
"Just kidding, though your translation is close, it may raise some eye brows of your regular readers(including myself)." (கூகளாண்டவர் துணை).
மலையாளத்தில் பட்டி மோனே என்று அழைப்பார்கள். அதுதான் சரியான மொழிபெயர்ப்பு. பை தி வே நான் செய்தது வெறும் மொழிபெயர்ப்பே. கருத்து பெர்ரி மேசனுடையது. அதனாலேயே அப்பாத்திரத்தை எனக்கு பிடிக்கும்.
மற்றப்படி கொல்வது எல்லாம் 'டூ மச்'தான். செருப்பாலடித்தால் போதும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் சொல்லும் விஷயம் எனக்கு புதிய தகவல். தேசிகன் அவர்களைக் கேட்டால் தெரியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Thanks. Matlock was played by Andy Griffith. Didn't strike to check his name Google/Wikipedia(sleeping time :) ).
BTW, when will be the next post on Thiru. Kamarajar?
காமராஜர் பற்றிய அடுத்தப் பதிவு நாளை வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஓகோ! ஆனானப்பட்ட சுஜாதாவே "இன்ஸ்பயர்டு பை" பெரி மேஸனா? என்ன சொன்னாலும் நான் அவர் எழுத்துக்களை விரும்பிப்படிப்பவன். 6ம் வகுப்பிலிருக்கும்போது கொலையுதிர் காலம் படித்ததால் வீட்டில் குமுதம், விகடனுக்கெல்லாம் தடா பொட்டுவிட்டார்கள். நைஸாக ஒரு முடிதிருத்தும் நிலையத்தில் போய் படித்துவிடுவேன் :D
பெர்ரி மேசனால் தூண்டப்பட்டுத்தான் அவரது நைலான் கயிறு என்னும் நாவலில் கணேஷ் வந்தது. அதில் கேசில் வெற்றியடைவதோடு கணேஷ் சும்மாயிருந்து விடுவார்.
மேலே கேஸை பின் தொடர்ந்து முழு உண்மையையும் கண்டுபிடிப்பவர் ராமநாதன் என்ற ரிடையர்ட் அதிகாரி. அவரும் கொலைகாரானை பிடிக்காமல் போக விட்டு விடுவார். ஏன்? நாவலில் காண்க.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அய்யா,
பெர்ரி மேசனை மீண்டும் ஞாபகத்துக்கு வரவழைத்து விட்டீர்கள்..
10 வது 11 வது படிக்கும் போது நீங்கள் சொல்வது போல அனைத்து பெர்ரி மேசன் புத்தகங்கள் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது..courtesy என் சிநேகிதன்..The case of the crooked candle and the case of mythical monkeys இன்றும் பசுமையாக ஞாபகத்தில் இருக்கிறது.
என்னைக் கேட்டால் பெர்ரி மேசன் படித்துவிட்டு தான் Alistair Maclean/James Hadley Chase படிக்க போகவேண்டும் என்பேன்.
பாலா
சுஜாதா,மாத நாவல்கள் எழுதியதை நிறுத்தியதற்க்கு சொன்ன காரணம். ஒரு முறை பயணத்தில் ஒருவன் மாத நாவலைப் படித்து விட்டு, வாழைபழம் தின்று விட்டு தோலை எரிவோமே அந்த அலட்சியத்துடன் கடைசி பக்கம் முடிந்ததும், ஜன்னல் வழியாய்
தூக்கிப் போடுவதைப் பார்த்தாராம். என் அம்மாக்கூட ஒவ்வொரு முறையும் பயணத்தின் பொழுது, மாச நாவல்கள் வாங்குவார்.என்னுடைய சாய்ஸ் "சேஸ்"
பெரிமேசனை தொடர்ந்து இன்று என் மனம் கவர்ந்த ஜான் கிருஷ்ஷம் எழுதும் வக்கீல் சம்மந்தமான கதைகள்.கணேஷ் போல வக்கீல்களின் ஸ்மார்ட்னஸ் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அதன் காரணமாக என்னவோ என் மகளை வக்கீலுக்கு படிக்க தூண்டியிருக்கலாம் :-)
இவ்வளவு பேர் இன்னும் பெர்ரி மேசனை ஞாபகம் வைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. பின்னூட்டத்திற்கு நன்றி பாலா அவர்களே.
சுஜாதா மாத நாவல் எழுதாது விட்டதற்கு நீங்கள் கூறியது போலத்தான் ஒரு காரணம் இருக்கும் என நானும் நினைத்தேன். ஆனால் நிச்சயமாகத் தெரியாததால் கூறவில்லை. நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"மலையாளத்தில் பட்டி மோனே என்று அழைப்பார்கள். அதுதான் சரியான மொழிபெயர்ப்பு. பை தி வே நான் செய்தது வெறும் மொழிபெயர்ப்பே. கருத்து பெர்ரி மேசனுடையது. அதனாலேயே அப்பாத்திரத்தை எனக்கு பிடிக்கும்.
மற்றப்படி கொல்வது எல்லாம் 'டூ மச்'தான். செருப்பாலடித்தால் போதும்."
ஆமென். :))))
கிருஷ்ணன்
"மற்றப்படி கொல்வது எல்லாம் 'டூ மச்'தான். செருப்பாலடித்தால் போதும்."
தூம் ததா (அப்படியே ஆகட்டும்). சொற்றொடருக்கு நன்றி கவுண்டமணிக்கு, படம் லக்கிமேன்?
முகம்மது யூனுஸ்
"சொற்றொடருக்கு நன்றி கவுண்டமணிக்கு, படம் லக்கிமேன்?"
ஆம் என்றுதான் நினைக்கிறேன். தூம் ததா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Of course Prakash.
Regards,
Dondu N.Raghavan
மாயவரத்தான் அவர்களது பதிவு பிளாக் மெயிலருக்கு என்ன தண்டனை? அதில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.
இந்தியன் பீனல் கோட் படி 7 ஆண்டுகள் வரை தண்டனை. மேலும் பிளாக்மெயிர்களை பற்றி பெர்ரி மேசன் கூறியதை எனது இந்தப் பதிவில் பாருங்கள்.
"ஒரு நாவலில் அவர் பிளாக்மெயிலர்களை எப்படி எதிர்க் கொள்வது என்று கூறியிருப்பார். (The case of phantom fortune).
1. உங்களை பற்றிய ரகசியம் ஏதேனும் பிளாக்மெயிலரிடம் சிக்கி விட்டதா? உதாரணத்துக்கு ஒரு கதையில் ஒருவர் சிறு வயதில் குற்றம் செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு, பிறகு வெளியில் வந்து தன் உழைப்பால் பெரிய பணக்காரரானவர். அவர் பழைய வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்ட பிளாக்மெயிலர் ஒருவன், அவர் பழைய கதைகளை பத்திரிகைகளுக்குக் கொடுக்கப்போவதாக மிரட்ட, பெர்ரி மேஸன் அந்தப் பணக்காரருக்கு தரும் அட்வைஸ் என்னவென்றால், அவரே முந்திக் கொண்டு பத்திரிகைகளுக்கு தன்னை பற்றிய நியூஸை கொடுத்து விட வேண்டும் என்பதே. அதனால் பிளாக்மெயிலரின் ஆயுதம் மழுங்கி விடும்.
2. பிளாக் மெயிலரை டிராப் செய்து போலீஸிடம் மாட்டி விடுவது. அமெரிக்காவில் பிளாக் மெயிலர்களுக்கு தண்டனை ஏழாண்டு சிறையாகும்.
3. மூன்றாவது யோசனை அந்தத் தேவிடியாப் பையனை கொன்று விடுவதே ஆகும். (Kill that son of a bitch)."
இதில் கொடுமை என்னவென்றால் பிளாக்மெயிலருக்கு பயந்து கொண்டு மற்றவர்களையும் அவனிடம் மாட்டிவிடுபவர்கள் இன்னொரு கொடுமை.
இப்பின்னூட்டத்தின் நகலை மேலே சுட்டிய எனது அதே பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment