நிரந்தர பக்கங்கள்

1/01/2009

டோண்டுவை கவர்ந்த நிகழ்வுகள்/செய்திகள்-1

நண்பர் நக்கீரன் பாண்டியன் எனது டோண்டு பதில்கள் 01.01.2009 பதிவில் இவ்வாறு பின்னூட்டம் இட்டுள்ளார். “ஜெயமோகன் பதிவுகளில் உள்ள சிறப்பானவற்றை தொகுத்து வழங்கியது போல் பிற உங்களை கவர்ந்த பிரபல பதிவர்களின் பதிவுகளில் ,தாங்கள் படிக்கும் சிறப்பான பதிவுகளின் சாராம்சத்தை சுருக்கமாய் கொடுத்தால்,உங்கள் பதிவுகளுக்கு நாளும் வந்து போகும் 600-700 வாசகர்கள் நன்மை பெறுவர்களே. நீங்கள் பல சுட்டி கொடுத்துள்ளீர்கள், இருந்தாலும் இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும். டோண்டு பதில்கள் மாதிரி டோண்டுவை கவர்ந்த நிகழ்வுகள்/செய்திகள் புதிய தொடர் வாரம் ஒரு முறை பதிவு மலரட்டுமே”!

நல்ல யோசனைதான். ஆகவே செய்ய வேண்டியதுதான். எப்போது? எப்போதோ என்ன இப்போதே ஆரம்பித்து விடுகிறேன். பதிவர்கள் என்றில்லை நான் அனுபவிக்கும் எல்லா நிகழ்வுகளுமே இங்கு பரிசீலனைக்கு வைக்கப்பட்டு அவற்றிலிருந்து சுவாரசியமானவை தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவுகளாக வரும். முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற யோசனைக்கே இடமில்லை. தமிழ் பதிவுகளில் நான் படித்த முதல் பதிவரிலிருந்தே ஆரம்பிக்கிறேன். அவர்தான் நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா. அவரேதான், இந்த டோண்டு ராகவன் பதிவு போட காரணமாக இருந்தவர். “ஐயோ பாவம், அவர் செஞ்சதை எத்தனைவாட்டி சொல்லி அவரை போட்டு கொடுப்பே” என்று கத்துகிறான் முரளி மனோஹர்.

மார்கழி மாதம் ஆரம்பித்த நாளில்ருந்தே அவர் தினம் ஒரு திருப்பாவை என்ற ரேஞ்சில் பதிவிட்டு வருகிறார். கடந்த ஆண்டு மார்கழியில் செய்ததை இப்போது விரிவுபடுத்தி எழுதுகிறார். இந்த மார்கழி முதல் தேதி அவர் இட்ட பதிவு அவரது வலைப்பூவின் 400-வது பதிவு என்பதும் இன்னொரு விசேஷம். அதில் அவர் எழுதுகிறார், “சென்ற வருடம் மார்கழி மாதத்தின் போது ஒரு சில திருப்பாவை பாசுரங்களுக்கு பொருள் விளக்கத்தையும், சிறப்பையும் எனது திருப்பாவைப் பதிவுகளில் எழுதியிருந்தேன்.

விட்டுப்போன பாசுரங்களுக்கு, பொருள் விளக்கத்தையும், சிறப்பையும் எடுத்துச் சொல்லும் பதிவுகளை இந்த மார்கழி மாதம் இட உத்தேசம். திருப்பாவையின் முதல் பாடலிலிருந்து ஆரம்பிக்கிறேன். அதற்கு முன் மார்கழி பற்றியும், பாவை நோன்பு குறித்தும் ஒரு சிறிய முன்னுரை !

மார்கழி, பன்னிரண்டு தமிழ் மாதங்களில் ஒரு மாதம். 'மாரி' என்ற வார்த்தையிலிருந்து உண்டானது 'மார்' என்பது. 'மாரி' என்றால் மழை என்று பொருள். 'கழி' என்றால் 'கழிந்த' அல்லது 'பின்னர்' என்று அர்த்தம். எனவே, மழைகாலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள்.

மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், 'மார்கழி நோன்பு' ஆகும். ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு நலத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப் பெண்களால் நோற்கப்படுவதால் 'பாவை நோன்பு' என்றும் கூறப்படுகின்றது. கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித் துதித்து வழிபட்டனர்.

தான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள கோபியராகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, 'பாவை நோன்பு' நோற்ற சமயம் சூடிக் கொடுத்த நாச்சியார் பாடிய முப்பது பாடல்களே 'திருப்பாவை'.

'திருப்பாவை' யும் (திருமால் மீது பாடப்பட்ட பாடல்கள்), மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய 'திருவெம்பாவை' யும் பாவைப் பாட்டுக்களில் சிறந்தவை. திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது. திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் 'திருப்பள்ளியெழுச்சி' யிலுள்ள பத்து பாடல்களும் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழி மாத முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது. இப்பாடல்களில் பக்திப் பெருக்கும், தன்னலமற்ற இறைசேவை ஆகியவை தவிர வேறு நோக்கம் எதுவும் இல்லாமலிருப்பதையும் காணலாம்”
.


திருப்பாவையில் எனக்கு பிடித்த பாட்டு உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் என்று தொடங்கும் 18-வது பாடல். அது பற்றி பதிவர் தேசிகன் எழுதியதைப் பார்ப்போம்.

“திருப்பாவை - 18
நந்த கோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல்
ஸாவேரி ராகம், ஆதி தாளம்

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பொழிப்புரை:
மத யானையை மோதி தள்ளுகின்ற வலிமையும், போரில் பின் வாங்காத
தோள்ளை படைத்தவனுமான நந்தகோபாலன் மருமகளே ! நப்பின்னையே!
மணம் வீசும் கூந்தலை உடையவளே கதவைத்திற!
கோழிகள் சுற்றிலும் வந்து கூவுவதைக்கேள்!
குருக்கத்தி(மல்லிகைப்பூ) கொடிப் பந்தலில் குயில்கள் பலமுறை கூவி விட்டன
பந்தைத் தாங்கிய விரல்களையுடையவளே ! உன் கணவன் பேர் பாட வந்துள்ளோம்.
உன் தாமரைக் கையால் வளையல்கள் ஒலிக்க
மகிழ்ச்சியுடன் வந்து கதைவை திறக்கவேணும்.

ராமானுஜருக்கு பிடித்த திருப்பாவை
ராமானுஜருக்கு திருப்பாவையில் ஈடுபாடு மிக அதிகம். அதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்ற பெயர் பெற்றார். இந்த பெயரையே அவர் விரும்பினார்.
"உந்துமத களிற்றன்" என்ற திருப்பாவை பாடிக்கொண்டு பிக்ஷைக்கு ஒரு நாள் பெரிய நம்பி திருமாளிகைக்கு (வீட்டிற்கு) சென்ற போது "செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய்" என்று பாடி முடிக்க, நம்பியின் மகள் அத்துழாய் கைவளை குலுங்கக் கதவை திறப்பதும் ஒரோ சமயம் நிகழ, ராமானுஜர் அவளை நப்பின்னை என்று நினைத்து ஸாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார் (சேவித்தார்) என்று கூறுவர்.
இதனால் இந்த பாட்டை கோயில்களில் இன்றும் இரண்டு முறை பாடுவது வழக்கம்”
.


அப்பதிவுக்கு நான் இட்டப் பின்னூட்டம்:
“ராமானுஜர் தன்னைச் சேவித்து மயக்கமடைந்ததைக் கண்ட அத்துழாய் திகைத்து நிற்க, அப்பக்கம் வந்த பெரிய நம்பி ராமானுஜரை ஆதரவுடன் எழுப்பி, "என்ன திருப்பாவை ஜீயரே, 'உந்து மதகளிற்றன்' பாடலை பாடிக் கொண்டே வந்த போது அத்துழாயைக் கண்டு இச்சிறுமிதான் நப்பின்னை என்று மயங்கினீரோ?" என்றுக் கேட்டதாகவும் அதன் பின்பே ராமானுஜருக்கு இப்பெயர் வந்ததாகவும் நான் அறுபதுகளில் கல்கியில் படித்த ஞாபகம்.
எனக்கு மிகப் பிடித்தத் திருப்பாவைப் பாடல்களில் இது மிக முக்கியமானது”.

இந்தப் பாடலுக்கு பாலா அவர்கள் எழுதப்போவதை பார்க்க நான் ஆவலுடன் இருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

46 comments:

  1. திருப்பாவைக்கு விளம்பரம் கொடுத்தமைக்கு நன்றி :) இதனால் எனது திருப்பாவைப் பதிவுகள் விரிவாக வாசிக்கப்படும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  2. srivillipuththur soodi koduththa naadasiyaar andalin thiruppaaavai paRiya pkthirasam sottum arumai pathivinukku arul vazhi kaattyamaikku nanri

    ReplyDelete
  3. நன்றி.

    எனினும் சில கேள்விகள். தெரிந்தால், சொல்லலாம்.

    திருப்பாவை, ஒரு பெண்ணால் எழுதப்பட்டது. அல்லது, அருளப்பட்டது.

    அந்த பக்தியின் வழி ஆணின் வழியோடு ஒத்து வராது.

    தன்னை ஒரு நாயகியாகவும், கடவுளை தன் காதலனாக, அல்லது, மணக்கவிரும்பும் மணாளாக உருவகித்து வழிபட்ட பக்தியாகும்.

    இதைப்பற்றி, பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

    ஒரே ஆண்கள் கூட்டமல்லவா, இதைப்பற்றிச் சிலாகித்து எழுதிவருகிறார்கள் வலைப்பதிவர்களில் கூட.

    அப்படியே, ஒரிருவர் பெண்களுள் இருப்பினும், அவர்தம் கருத்தென்ன?
    இப்படிப்பட்ட சிருங்கார ப்க்தியினைப்பற்றி.

    இது, சாத்தியமா? பாமரப்பெண்ணொருத்தி, தன்னை மணப்பெண்ணாகவும், கடவுளை மணாளனாகவும், உருகி, பக்திப்பரவசம் படலாமா? அதை இச்சமூகம் ஏற்றுக்கொள்கிறதா? அவள் கணவன் என்ன நினைப்பான்? அவளை விட்டுப் பிரிந்து விடுவான் அல்லவா? கிரஹ்ஸ்தரான் அப்பெண்ணுக்கு இப்படிப்பட்ட பக்தி சரிவருமா? அவள் துறவரம் ஏற்றாலன்றோ இப்பக்தி சாத்தியமாகும்.

    இங்கே, மீராபாயின் வாழ்க்கையை நினைவு கூறலாம். இதே மணப்பெண்-மணாளன் பக்தி. இதே கண்ணனே அங்கும். அவள் ச்மூகம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மனிதனோடு அவளால் நிலவுலக வாழ்க்கை வாழ முடியவில்லை. துறவறத்தால்தான் கண்ணன்மேல் பக்தியைத் தொடர முடிந்தது.

    இன்னிலைதான் மற்றவருக்கும் வரும்?

    Dondu Ragavan, you may try. I will be posing the same queries in the blogs of your favourite bloggers also.

    ReplyDelete
  4. I have posted my queries raised in your blog in the member anbudan bala's blog who was recommened by you.

    At the same time, I cant do so in other famous explicator of Thiruppavai in blogosphere who was recommended by you, by name, Desikan, as I am not his team member. He seems to serve the paasurams on a platter only to an eclectic few, I think! Strange are the ways of these men who frame God in narrow walls of exclusivism! Ok, may it remain his preference. No problem! You are better in keeping an open house for common folks! Thank you!!

    I hope he will read my questions posted in your blog, here; and answer them there.

    ReplyDelete
  5. திருப்பாவையின் பாசுரங்களின் பொருளுரை மற்றும் பாசுர விசேஷம்
    அனைவரும் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பினை ஏற்படுத்துக் கொடுத்த டோண்டு ராகவன் ஐயாவுக்கு நன்றி.


    சுவாமி.

    ReplyDelete
  6. H happiness
    A always
    P pour
    P positive to
    Y you



    N new
    E emerging
    W world in the

    Y year and
    E ever
    A after
    R repeat


    WISH YOU HAPPY NEW YEAR 2009


    RAMAKRISHNAHARI

    ReplyDelete
  7. டோண்டு ஐயா அவர்களுக்கு,

    மீண்டும் நன்றி.


    ஆன்மிகம் சார்ந்த பதிவு , ஆன்மீகச் செம்மல் பாலா அவர்களின் திருப்பாவை பற்றிய அருமையான பதிவினை சென்று படிப்பதற்கு உதவி செய்துள்ளீர்கள்.

    இதை ஒரு பதிவுலக் சேவையாய் சொல்லலாம்.

    புது வருடத்தில் தொடங்கிய இந்தப் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.


    அன்புடன்
    நக்கீரன் பாண்டியன்.

    ReplyDelete
  8. ///enRenRum-anbudan.BALA said...
    திருப்பாவைக்கு விளம்பரம் கொடுத்தமைக்கு நன்றி :) இதனால் எனது திருப்பாவைப் பதிவுகள் விரிவாக வாசிக்கப்படும் என்று நம்புகிறேன்///

    பாலன் ஐயா அவர்களே,


    தாங்கள் திருப்பாவை பற்றி
    மிக அழகாய் பதிந்துள்ளீர்கள்
    நன்றி ஐயா.

    ReplyDelete
  9. கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
    கபடு வாராத நட்பும்
    கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
    கழுபிணியிலாத உடலும்
    சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும்
    தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
    தடைகள் வாராத கொடையும்
    தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
    துன்பமில்லாத வாழ்வும்
    துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
    தொண்டரொடு கூட்டு கண்டாய்
    அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
    ஆதிகடவூரின் வாழ்வே!
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
    அருள்வாமி! அபிராமியே!


    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. //ஒரே ஆண்கள் கூட்டமல்லவா, இதைப்பற்றிச் சிலாகித்து எழுதிவருகிறார்கள் வலைப்பதிவர்களில் கூட.
    அப்படியே, ஒரிருவர் பெண்களுள் இருப்பினும், அவர்தம் கருத்தென்ன?
    இப்படிப்பட்ட சிருங்கார ப்க்தியினைப்பற்றி//.

    எம்.எஸ். நடித்த மீரா படத்தில் ஒரு காட்சி. ஹரிதாஸ் மீராவை காண மறுக்கிறார், ஏனெனில் அவர் பெண்களை பார்க்கா மாட்டாராம். அப்போது மீரா கேட்கிறார், புருஷோத்தமன் கண்ணன் மட்டுமே ஆண். அவன் பக்தர்கள் அத்தனை பேரும் பெண்களே. இங்கு வந்து ஆணென்ன பெண்ணென்ன?

    வைணவத்தின் ஒரு தத்துவம் கடவுள் மட்டுமே ஆண், அவன் பக்தர்கள் எல்லோருமே அவன் முன்னால் பெண்தான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. 101.நம்மிடயே வாழும் பலர் எதையோ பறித்துகொடுத்துபோல் எப்போதும் இருக்கும் போது ஒரு சிலர் சிரித்துக் கொண்டே வாழ்வில் வலம் வரும் வாழ்வியல் ரகசியம் தெரிந்தவர்களில், தாங்கள் சமீபத்தில் சந்தித்த நபர் யார். அவரைபற்றி சொல்லவும்?

    ReplyDelete
  12. 102. திருமங்கல இடைத் தேர்தலில் அதிமுகவை விட, திமுக ஆள் பலம், அதிகார பலம்,பண பலம்,பிரச்சார பல்ம்,செது ஊடக பலம் போன்றவற்றை பெற்று , தெம்பாய் இருப்பது அங்குள்ள மக்கள் மனநிலையை தனக்கு சாதகமாக்கி கொள்ளுமா?கவுத்து விடுமா?

    ReplyDelete
  13. 103.திருநெல்வேலி என்றால் அல்வா,மதுரை என்றாலே மல்லிகைப் பூ இப்படி பிற நகரங்களின் சிறப்பை எழுதவும்?

    ReplyDelete
  14. 104.பொதுவாய் காதல் திருமணங்கள் முதலில் இனித்து பின் கசக்கிறது.காதல் திருமணம் செய்து முழுவதும் இனிப்பாய் வாழ்ந்த தம்பதியினர் யார்?

    ReplyDelete
  15. 105.தமிழ் இலக்கிய உலகில் ஒரு ஜாபம்பவானய் இருந்து ,கம்பராமயணத்திலும் சீறாப்புராணத்திலும் நல்ல ஆளுமை பெற்றிருந்தை போல் இன்றய இலக்கிய உலகில் இனம்,மதம் தாண்டி இலக்கியச் சேவை ஆற்றும் பண்பாளர் யாரும் உள்ளனரா?

    ReplyDelete
  16. 106. இந்தியாவில் குடி அரசு தினம், சுதந்திரம் தினம் முதலிய கொண்டாட்டங்களில் ஆண்டுக்கு ஆண்டு ராணுவப் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் கூடி கொண்டே போகிறதே? இப்படியே போனால்?

    ReplyDelete
  17. 107. சென்னையில் தற்சமயம் மின்தடை எப்படி உள்ளது.இன்வெர்ட்டர் வசதி உங்கள் இல்லத்தில் உண்டா?

    ReplyDelete
  18. 108.குடும்ப சூழ்நிலையில் வாழும் பேரிளம் பெண்களும் பூயுட்டி பார்லருக்கு படையெடுப்பது பற்றி கமெண்ட் என்ன?காலம் மாறி காசை கரைக்கிறாதா?இது சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்கள் புண்ணியமா?

    ReplyDelete
  19. 109.மாமியார் vs மருமகள் சண்டை போல் மாமனார் vs மருமான் சண்டை வருவதில்லையே?

    ReplyDelete
  20. 110. செய்தி மற்றும் ஊடகத்துறையின் அபாரவளர்ச்சியின் பயனாய் வந்து விழும் தகவல்கள், சில சமயம் பல தீமைகளை அள்ளித் தெளித்து விடும் பாதகச் செயல் நடந்துவிடுகிறதே?

    ReplyDelete
  21. Most of the posting of bloggers in tamil manam have tamil manam comments tool bar, fixed in the top.In your posting where it is? Have you got any special s/w programme for this .If not how the comments put in your posting are collected by Tamil manam. please explain in detail.

    ramakrishnahari

    ReplyDelete
  22. /இது, சாத்தியமா? பாமரப்பெண்ணொருத்தி, தன்னை மணப்பெண்ணாகவும், கடவுளை மணாளனாகவும், உருகி, பக்திப்பரவசம் படலாமா? அதை இச்சமூகம் ஏற்றுக்கொள்கிறதா? அவள் கணவன் என்ன நினைப்பான்? அவளை விட்டுப் பிரிந்து விடுவான் அல்லவா? கிரஹ்ஸ்தரான் அப்பெண்ணுக்கு இப்படிப்பட்ட பக்தி சரிவருமா? அவள் துறவரம் ஏற்றாலன்றோ இப்பக்தி சாத்தியமாகும்./

    புது புதுசா ப்ராப்ளம் கிளப்புறீகளே!

    ReplyDelete
  23. //புது புதுசா ப்ராப்ளம் கிளப்புறீகளே!//

    சிந்திக்க விரும்பும் சிலருக்காக !

    ReplyDelete
  24. //வைணவத்தின் ஒரு தத்துவம் கடவுள் மட்டுமே ஆண், அவன் பக்தர்கள் எல்லோருமே அவன் முன்னால் பெண்தான்.
    //
    அருமையான தாத்பரியம் ! ஆழ்வார்களே பல திருப்பாசுரங்கள், தங்களை பெண்களாக வரிந்து கொண்டு, பாடியிருப்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

    எ.கா: நம்மாழ்வார், குலசேகராழ்வார்

    ReplyDelete
  25. ஆனைக்கும் அடி சருக்கும். பாலாவுக்கும் சருக்கி விட்டது.

    நம்மாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும்தான் அப்படி வணங்கினர்.

    நம்மாழ்வார்: பராங்குச நாயகியாக
    திருமங்கையாழ்வார்: பர கால நாயகியாக.

    எங்கே வந்தார் குலசேகரர் இங்கே?

    நான் இராகவன் எழுதியதை ஏற்றுக் கொள்கிறேன்.

    எனினும், நான் கேட்ட கேள்வி நம் இற்றை வாழ்க்கையோடு தொடர்புள்ளது. இதற்கு ஆன்மிக வழியாகப் போய் பதில் சொன்னால் பொருந்தாது.

    என் கேள்வி:

    நம் வீட்டுச் சிறுபெண், மணவயதில், இரங்கனைத்தான் கட்டிக்கொள்வேன். என்றும், முடியாத பட்சத்தில், இரங்கனை மணாளாக வரித்துக்கொண்டு தன் வாணாளைக் கழித்து மடிவேன் என்கிறாள்.

    என்ன செய்வார் இராகவன் தந்தையாக இருப்பின்?

    என்ன செய்வார் பாலா அவரும் அப்படி இருப்பின்?

    இதற்கு எனக்குப் பதில் தெரியும். ஆனால் அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

    நான் ஆழ்வார் பாடல்களுக்கு வலைபதிவு எழுதவில்லையே!

    சிந்திக்க விரும்பும் சிலருக்காகவும் இக்கேள்வி எழுப்பப்படுகிறது.

    இங்கே ஒன்று நோக்க வேண்டும்: அனபர்களே.

    திருப்பாவை ஒரு பெண்ணால் பாடப்ப்ட்டது.

    பரகால, பராங்குசநாயகி பாக்கள் ஆண்களால் பாடப்பட்டது. ஆண்கள் இருவரும், தமிழ் இலக்கிய மரபொன்றை பய்ன்படுத்தினார்கள். தமிழ் இலக்கியம் - பக்தியில் மட்டுமல்ல், பொது இலக்கியத்திலும் - நாயகன் - நாயகி பாவத்தை இல்க்கியம் படைக்க அனுமதிக்கிறது.

    ஆண்டாளை ஒரு பெண் படிப்பின் அவளுக்கு, இராகவனின் மனப்பக்குவம் வருமா? இறைவன், ஆண், பக்தர்கள் பெண்கள் என்று!

    அவள் நிலையென்ன?

    இங்கே, மீராவுக்கு வருவோம். தன் 10 வயதில், தன் தாயுடன் சேர்ந்து, தங்கள் மாளிகையின் மாடத்திலிருந்து ஒரு மணவூர்வலத்தைப் பார்த்தாள். அப்போது, தன் தாயிடம்:

    எனக்கு எப்போது திருமணம் அம்மா?

    உனக்கு வயது வரும்போது?

    எனக்கு மணாளன் யார்?

    உனக்கு கண்ணனே மணாளன்!

    --

    தாய் என்ன பொருளில் சொன்னாலோ? ஆனால், குழந்தை அதை நம்பி விட்டது.

    பின்னாளில், அவளுக்கு ஒரு இராஜகுமாரனைப் பார்த்து கட்டிவைத்தார்கள். அவளால் அவனுக்கு மனைவியாக வாழ முடியவில்லை.

    சிந்திக்க விரும்பும் சிலரே பதில் சொல்லுங்கள்.

    ReplyDelete
  26. //சிந்திக்க விரும்பும் சிலரே பதில் சொல்லுங்கள்.//


    vivaatha
    medai redi

    ReplyDelete
  27. அனானி,
    நான் யானையெல்லாம் கிடையாது, நாலாயிரத்தில், அடி சறுக்குவதற்கு :-) பூனை தான் !

    நம்மாழ்வார், கலியன் பற்றிய உங்கள் கருத்துகள் சரியே. என் புரிதலைச் சொல்கிறேன். குலசேகர மன்னன் தனது பெருமாள் திருமொழியில், 5வது பதிகத்தில், வித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் பற்றிய பாசுரங்களை தன்னை பெண்ணாக பாவித்து எழுதியதாக கேள்விப்பட்டதுண்டு. அவ்வளவு தான்.

    அவற்றில் சில:

    தருதுயரம் தடாயேல்* உன் சரணல்லால் சரணில்லை*
    விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ்* விற்றுவக் கோட்டம்மானே*
    அரிசினத்தால் ஈன்றதாய்* அகற்றிடினும்* மற்றவள்தன்-
    அருள்நினைந்தே அழும்குழவி* அதுவே போன்றிருந்தேனே


    கண்டார் இகழ்வனவே* காதலன் தான் செய்திடினும்*
    கொண்டானை அல்லால்* அறியாக் குலமகள்போல்*
    விண்தோய் மதிள்புடைசூழ்* விற்றுவக்கோட் டம்மா* நீ-
    கொண்டாளாயாகிலும்* உன் குரைகழலே கூறுவனே


    மீன்நோக்கும் நீள்வயல்சூழ்* விற்றுவக்கோட் டம்மா *என்-
    பால்நோக்காய் ஆகிலும்* உன் பற்றல்லால் பற்றில்லேன்*
    தான்நோக்காது* எத்துயரம் செய்திடினும்* தார்வேந்தன்-
    கோல்நோக்கி வாழும்* குடிபோன்று இருந்தேனே


    வாளால் அறுத்துச் சுடினும் *மருத்துவன்பால்*
    மாளாத காதல்* நோயாளன் போல் மாயத்தால்*
    மீளாத் துயர்தரினும்* விற்றுவக்கோட்டம்மா*நீ-
    ஆளா உனதருளே* பார்ப்பன் அடியேனே

    ReplyDelete
  28. 111.இலங்கைதமிழர் பதுகாப்பு நிதிக்கு மொத்தம் சேர்ந்த தொகை எவ்வளவு? அதிகத் தொகை அள்ளிக் கொடுத்தவர் யார்?

    ReplyDelete
  29. 112.தமிழ் திரைப்பட பாடல் எழுதும்
    கவிஞர்களில் இப்போது படு பிசி யார்?

    ReplyDelete
  30. 113. இந்தியத் திரையுலகில் இன்று 'நம்ப்ர் ஒன்' இயக்குனர் யார்?
    திறமையும்,வெற்றியும்,வருமானமும்,புகழும் ஒருங்கே பெற்றவர்

    ReplyDelete
  31. 114.தற்கால மக்களில் படிக்காத பாமரர்களிடம் கூட விழிப்புணர்வு கூடியுள்ளதே?

    ReplyDelete
  32. 115.அரசியலில் முதியவ்ர்கள் இளைஞர்களுக்கு தானாக வழிவிடமாட்டார்கள் போலிருக்கே?

    ReplyDelete
  33. 116.விரசமும் ஆபாசமும் கொடிகட்டி பறக்கும் திரைப் பட பாடல் வரிகளுக்கு தணிக்கை இருக்கிறதா?

    ReplyDelete
  34. 118.காஞ்சி மட வழக்கு எந்த நிலையில் உள்ளது? தீர்ப்பு எப்போது?

    ReplyDelete
  35. 119.சினிமா இயக்குனர்களில் நடிக்க வந்தவர்களில் பெரும் வெற்றது யார்

    ReplyDelete
  36. 120.நெஞ்சு வலியின் அடையாளங்களும்,வாயுத் தொல்லையின் அறிகுறிகளும் ஒன்றாமே?
    இசிஜி தான் நல்ல பதிலாம்?

    ReplyDelete
  37. திருநெல்வேலி மாவட்டம்,அம்பாசமுத்திரம் தாலுகா விலுள்ள அழகான கிராமம் கடையம்.இயற்கை அழகு கொஞ்சும் பொதிகைத் தென்றல் மேனியை வருடிச் செல்லும் மேற்குத்தொடர்ச்சி மலைஅடிவாரம்.
    இரண்டு நதிகள் .ராமநதி மற்றும் ஜம்பு நதி.ஊரை வளமாக்கும் புண்ணிய நதிகள்.

    ஆழ்வாற்குறிச்சியிலே தேவி அக்கா பரமகல்யாணியும்,கடையத்தில் தேவி தங்கை நித்யகல்யாணியும் அருள் பாலிக்கிறார்கள்.

    காட்டுக்குள் பெரிய சிவன் கோவில் இருக்கிறது.தேசியக் கவி பாரதியாரின் மனைவி செல்லமாள் பிறந்த ஊர்.

    இந்த ஊரில் மார்கழி மாத பஜனை பிரசித்தம்.

    கோவிலை சுற்றிள்ள நான்கு ரதவீதிகள் வழியாக சிறுவனாய் இருக்கும் போது திருப்பாவை,திருவெம்பாவை பாடால்கள் பாடிய நிணைவுகளை மீண்டும் நிணைக்க வைத்த, உங்களை கவர்ந்த இந்தப் பதிவுக்கு நன்றி.
    உங்களின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா


    சுவாமி.

    ReplyDelete
  38. 117.டியரக்டர் சிகரம்,டியரக்டர் இமயம்
    ஒப்பிடுக?

    ReplyDelete
  39. அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
    அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
    பொறிகளின்மீது தனியர சாணை,
    பொழுதெலாம் நினதுபே ரருளின்
    நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
    நிலைத்திடல் என்றிவை யருளாய்
    குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
    குலவிடு தனிப்பரம் பொருளே!


    இறையாற்றல் கருணை புரிந்து
    துணையிருக்கும் தங்களுக்கு.

    ReplyDelete
  40. எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லவே எண்ணல் வேண்டும்
    திண்ணிய நெஞ்சம் வேண்டும்
    தெளிந்த நல்லறிவு வேண்டும்.
    பண்ணிய பாவமெல்லாம்
    பரிதிமுன் பனியே போல
    நண்ணிய நின் முன் இங்கு
    நசித்திடல் வேண்டும் அன்னாய்.


    இனி ஜெயம் தான்

    ReplyDelete
  41. உலகத்தில் இருவகை மனிதர்கள் காலம் காலமாய் வாழ்ந்து வருகிறார்கள்.

    முதல் வகையினர்:

    சகமனிதர்களுக்கு தேவையானவற்றை அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் காலம் நேரம் பார்க்கமால் காசு பணம் கரைவதை எண்ணிப் பார்க்காமல் எந்த ஒரு பிரதி உபகாரம் எதிர் பார்க்காது உதவிகள், நன்மைகள் ,நல்லவைகள் ஆகியவற்ற செய்து விட்டு,
    இந்த நன்மைகளை செய்த பெரியவர்கள், நமக்கு நன்றி தெரிவித்து விட்டு மகிழ்ந்து தன் பணியை தொடர்வார்கள்.


    இரண்டாவது வகையினர்:

    சகமனிதர்களுக்கு வாக்காலும் செயலாலும் சொல்லில் அடங்காத் துன்பங்களை அளித்தும் ,இழித்தும் பழித்தும் கேவலமாய் பேசியும் எழுதியும் நம் மனதையும் உடலையும் ரணமாக்கிவிட்டு ,பின்னர் ஏதுமே நடவாத மாதிரி நாம் ஏதோ பஞ்சமா பாதகம் செய்த பாவனையில், நம்மை பார்த்து மன்மிரங்கி நம்மை மன்னித்து விட்டதாய் அருள் பாலிப்பார்கள்.



    உங்கள் வாழ்வில் கடந்து சென்ற அறுபதுக்கும் மேற்பட்ட வருடங்களில் இந்த இருவகை மனிதர்களில் உங்களுக்கு சந்தோஷத்தையும் மனநிறைவையும் பரிபூர்ண நிம்மதியையும் தந்திட்ட முதலாம் வகை மாமனிதர் யார்?
    அனுபவங்கள் எவை?
    தற்சம்யம் எங்கிருக்கிருக்கிறார்?
    சமீபத்தில் அவரை சந்தித்தீர்களா?


    அய்யகோ! ஏன்தான் மகர நெடுங்குழைக்காதர் இந்த மாதிரி ஜென்மங்களை, நம்மை சந்திக்க வைத்து நம்மை சோதிக்கிறானோ தெரியவில்லயே என தங்களை மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கிய கம்சன்கள்/சகுனிகள்/இரண்யர்கள்/குடிலன்கள் பற்றியும் சொல்லவும்.

    நக்கீரன் பாண்டியன்

    ReplyDelete
  42. @நக்கீரன் பாண்டியன்
    மிகப்பெரிய கேள்வி, அதற்கான பதிலும் பெரிதுதான். இதற்கென்றே தனிப்பதிவு போடுவேன். அதுவும் கூடிய சீக்கிரமே. இன்னும் இரண்டு மணி நேரத்தில் எனது ஷட்டகரின் கார் வந்து விடும். அதற்குள் போட இயலும்தான். ஆனால் வேண்டாம், சாவகாசமாக யோசித்து போட வேண்டிய பதிவு. உங்களுக்கு என் நன்றி.

    ஆகவே வெள்ளிக்கிழமை பதில்களில் இதை சேர்க்கவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  43. //dondu(#11168674346665545885) said...
    @நக்கீரன் பாண்டியன்
    மிகப்பெரிய கேள்வி, அதற்கான பதிலும் பெரிதுதான். இதற்கென்றே தனிப்பதிவு போடுவேன். அதுவும் கூடிய சீக்கிரமே. இன்னும் இரண்டு மணி நேரத்தில் எனது ஷட்டகரின் கார் வந்து விடும். அதற்குள் போட இயலும்தான். ஆனால் வேண்டாம், சாவகாசமாக யோசித்து போட வேண்டிய பதிவு. உங்களுக்கு என் நன்றி.

    ஆகவே வெள்ளிக்கிழமை பதில்களில் இதை சேர்க்கவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்//


    அன்பான பதிலுக்கு நன்றி.

    சென்னை வாழ் பெரியவர் Sethuraman Venkataraman அவர்கள் தங்களின் பெங்களூர் வருகை பற்றிய தகவலை மின் அஞ்சல் மூலம் அங்குள்ளோருக்கு (www.prabhukrish.net),
    தந்துள்ளார்களாம்.


    கையில் "லேப்டாப்" + "broadband " - (இண்டெர்நெட் வசதியுடன்) கொண்டு செல்கிறீர்கள?

    ReplyDelete
  44. @நக்கீரன் பாண்டியன்
    மடிக்கணினி எல்லாம் இல்லை. அதனால் என்ன. பெங்களூரில் மைத்துனன் வீட்டில் கணினி உண்டு. அவன் பிள்ளை காலேஜுக்கு செல்லும் சமயம் அதை இயக்க அனுமதி அவனிடம் வாங்கி விட்டேன். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றன சைபர் கஃபேக்கள்.

    இப்போது ஒரு மொழிபெயர்ப்பு வேலை (ஜெர்மன் > ஆங்கிலம்) செய்து கொண்டிருக்கிறேன். கணினையை இன்று மூடுவதற்கு முன்னால் இது வரை செய்த மொழிபெயர்ப்பு கோப்பை எனது ஜிமெயிலுக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டியது. மூல மொழி கோப்பு பேப்பர் காப்பிதான். அதை எடுத்து செல்ல வேண்டியது. கூடவே அகராதிகள் இரண்டு. இணைய அகராதிகளை எங்கும் திறந்து கொள்ளலாம்.

    அவ்வளவுதான். பிரச்சினை ஏதும் இல்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  45. //நல்ல யோசனைதான். ஆகவே செய்ய வேண்டியதுதான். எப்போது? எப்போதோ என்ன இப்போதே ஆரம்பித்து விடுகிறேன். பதிவர்கள் என்றில்லை நான் அனுபவிக்கும் எல்லா நிகழ்வுகளுமே இங்கு பரிசீலனைக்கு வைக்கப்பட்டு அவற்றிலிருந்து சுவாரசியமானவை தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவுகளாக வரும். முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற யோசனைக்கே இடமில்லை. தமிழ் பதிவுகளில் நான் படித்த முதல் பதிவரிலிருந்தே ஆரம்பிக்கிறேன். அவர்தான் நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா. அவரேதான், இந்த டோண்டு ராகவன் பதிவு போட காரணமாக இருந்தவர். “ஐயோ பாவம், அவர் செஞ்சதை எத்தனைவாட்டி சொல்லி அவரை போட்டு கொடுப்பே” என்று கத்துகிறான் முரளி மனோஹர்//

    அறத்துக்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்துக்கும் அஃதே துணை

    தங்களை கவர்ந்த பதிவு -இரண்டா அல்லது வழக்கமாய் போடும் பதிவுதானா?

    தாங்கள் கொடுத்த லிங்கில் போய்ப் பார்த்தால் "ஜெய மொகனின் "எழுத்துக்கள் , அவரின் சரள நடை ,பொதிந்துள்ள ஆழமான
    கருத்துக்கள் அத்துணையும் அற்புதம்.

    ஆனால் ஒன்று படித்துக் கொண்டெ இருந்தால் படித்துக் கொண்டே இருக்கலாம்.எதைப் படிக்க எதை விட குழப்பமே மிஞ்சுகிறது.

    24 மணி நேரமும் போதாது போல் இருக்கிறது.


    உங்களின் மொழி பெயர்ப்புப் பணிகளை இடையே தாங்கள் போடும் பதிவுகளின் வேகம், அவை தரும் செய்திகள். அற்புதம்.

    மொக்கை பின்னூட்டங்களுக்கும்/கும்மிகளுக்கும் பதில் அளிக்காமல் தவிர்ப்பது ஓ.கே.

    ஆனால் பிற அர்த்தம் உள்ள விளக்கம் கேட்கும் சில பின்னூட்டங்களும்,தாங்களின் பதிலை பெறாமாலே சென்று விடுகிறதே?.

    ReplyDelete
  46. //உங்களின் மொழி பெயர்ப்புப் பணிகளை இடையே தாங்கள் போடும் பதிவுகளின் வேகம், அவை தரும் செய்திகள். அற்புதம்.//


    congrats to dondu aiya

    ReplyDelete