நிரந்தர பக்கங்கள்

10/22/2009

டோண்டு பதில்கள் - 22.10.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

அனானி (09.10.2009 மாலை 07.16-க்கு கேட்டவர்)
1. What will be the reaction of dinamalar after the arrest of the editor lenin in connection with actress issue?(actress Bhuvaneswari arrest affair)
பதில்: என்ன ரியேக்ஷன் புடலங்காய்? துக்ளக் போன்ற வெகு சில பத்திரிகைகளைத் தவிர்த்து ஆர்த்தால், எல்லா இந்தியப் பத்திரிகைகளுமே அரசு விளம்பரங்களை நம்பியே இருக்கின்றன. காம்ப்ரமைஸ்தான் நடக்கும்.

2. Thaanaith thalaivar Karunanidthi has once again proved his unconditional support to thirai ulagam. your comment please?
பதில்: திரையுலகில்தானே குத்தாட்டம் போடும் நடிகையர் உள்ளனர். பத்திரிகை ஆசிரியர்கள் குத்தாட்டம் போட்டால் அதை பார்ப்பது யாராம்?

3. Suppose the press publish thirai ulaga rakasiyangkal with valid proof. what the sangam will react?
பதில்: முக்கிய திரையுலகப் புள்ளிகளுக்கு எதிராக எத்தனை சான்றுகள் தந்தாலும், உண்மை செய்தி வெளியிடுபவர் பாடு திண்டாட்டம்தான்.

4. It is reported in some journals that some actress who have acted in one or two films are able to build big houses with costly car? is it true or false news by the press to increase circulation?
பதில்: சில சமயம் உண்மை, சில சமயம் பொய் கலந்த உண்மை மற்ற சமயங்களில் உண்மை கலந்த பொய்.

5. Can you cite one senior Tamil actress who was very popular and termed as fire by the senior male actors?( not at all involved like this)
பதில்: பி. பானுமதி அவர்கள். ஆனால் அவர்களைப் பற்றியும் அக்காலகட்டத்தில் கிசுகிசு செய்திகள் வந்துள்ளன. என்ன, அவர் அதற்கெல்லாம் கவலைப்படாது போடா ஜாட்டான் என்ற ரேஞ்சில் தன் செயல்பாட்டை வைத்து கொண்டார்.


அனானி (11.10.2009 காலை 05.34-க்கு கேட்டவர்)
1. இவர் நல்ல நகைச்சுவை நடிகர். பாடவும் தெரியும்.ஆனால் வாய் கொழுப்பால் சினிமா வாய்ப்பை இழந்து, சினிமா தயாரித்து வறுமையில் இறந்தார் யார் இவர்?
பதில்: ஜே.பி. சந்திரபாபு. அவருக்கு திருநாவுக்கரசர் என்ற பட்டப் பெயரும் இருந்ததாக படித்துள்ளேன்.

2. இவர் நல்ல நகைச்சுவை நடிகர். ஆடவும் தெரியும். தன் பையன் திரையுலகில் பிரகாசிக்க முடியாமல் போன வருத்ததிலும், பையனின் குடி பழக்கத்தாலும் நொந்து இறந்தார் யார் இவர்?
பதில்: நீங்கள் நாகேஷை சொல்கிறீர்களா?

3. இவர் நல்ல நகைச்சுவை நடிகர்.ஆனால் பஞ்ச் டயலாக் விட்டு இப்போது பஞ்சரய் உள்ளார். யார் இவர்?
பதில்: விவேக்?

4. இவர் நல்ல நகைச்சுவை நடிகர். ஒரு பெரிய நட்ச‌த்திரத்தோடு மோதி ஒரு வழி ஆனார் யார் இவர்?
பதில்: வடிவேலு?

5. இவர் நல்ல நகைச்சுவை நடிகர்.பிறருக்கு உதவி செய்து நலிந்தார்.தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் என்பது புரியாத இவர் யார்?
பதில்: என்.எஸ். கிருஷ்ணன்

6. புகழின் உச்சியில் இருந்தபோது குடியால் அழிந்த நகைச்சுவை நடிகர் யார்?
பதில்: சுருளிராஜன்

7. எம்ஜிஆரின் காலில் அரசியல் பொதுக்கூட்டங்களில் விழுந்தே பேர் பெற்ற நகைச்சுவை நடிகர் யார்?
பதில்: ஐசரி வேலன்.

8. திற‌மை இருக்கு ஆனால் விருத்தி இல்லா நகை. நடிகர் யார்?
பதில்: தெரியவில்லை.

9. 60 வருடங்களுக்கு முன்னால் திரைப்பட நகைச்சுவைக்கும் இன்றையதற்கும் என்ன வேறுபாடு?
பதில்: ஒன்றும் அதிக வித்தியாசம் இல்லை. ஒரு திரைப்படத்தில் காமெடி ட்ராக்கை ஓட்டுவது அப்படியே மாறாமல் உள்ளது.

10. மேலே சொல்லப்ப‌ட்டவர்கள் தவிர நகைச்சுவையில் பிற பிரபலமானவார்களாய் யார் யார் உங்கள் நினைவில் நிழலாடுகின்றனர்?
பதில்: டணால் தங்கவேலு, எஸ்.வி.சேகர், கிரேசி மோகன் இன்னும் பலர்.

குப்புக்குட்டி
1. பின்னூட்டத்தில் அண்டா அண்டாவா "கட் அண்ட் பேஸ்ட்" செய்தே கலவரப் படுத்தும் பதிவர்(?!) யார்?

பதில்: தமிழ் ஓவியா. அவரது பதிவுகள் கூட பெரும்பாலும் கட் அண்ட் பேஸ்ட்தான்.

2. அப்படியிருந்தும் அவரை விடாமல் சீண்டுவதேன்? நிஜமாவே அந்த பின்னூட்டங்களை வெளியிடுவதற்கு முன் படிப்பீர்களா?
பதில்: எல்லா பதிவுக்கும் வரமாட்டார். பெரியார் பற்றிய அசௌகரியமான உண்மைகளைக் கூறினால் சப்பைக்கட்டு கட்ட வருவார். என்ன எழுதியிருப்பார் என்பது தெரியும், ஆகவே கூர்ந்தெல்லாம் படிப்பதில்லை.

3. ஆம் எனில் பொறுமைக்கு ஏதேனும் நோபல் பரிசு இருந்தால் அதை தங்களுக்குத் தர பரிந்துரைக்கலாமா?
பதில்: கட் அண்ட் பேஸ்ட் பொறுமையாக செய்யும் அவருக்குத்தான் ஏதேனும் பரிசு தர வேண்டும் என நினைக்கிறேன்.

4. சாதி மதம் பத்தி எந்த சந்திலாவது யாரவது பேசினால் உடனே டார்ஜான் போல ஆங்கே பிரசன்னமாகி கருத்து மழை பொழியும் பதிவர் யார்? தேவை இருக்கோ இல்லையோ அடிக்கடி நான் நாத்திகவாதி என்று கூறவும் செய்வார்? அப்பப்ப சரக்கு கவிதை எல்லாம் போடுவாரு, யார் அவர்?
பதில்: வால் பையன். நமக்கு தோஸ்த். இக்கேள்விக்கான அவரது பதில் உங்களுக்கு இருக்கிறது மண்டகப்படி. பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்.

5. அடுத்த தரப்பு நியாங்களை கேட்காமல் கருத்து சொல்லாத நாட்டாமை யார்?
பதில்: யார், தெரியவில்லையே!

6. தமிழ் தேசிய உணவின் பெயரில் குழுவா கும்மியடிக்கும் பதிவு எது ?
பதில்: இட்டிலிவடை

7. சிரங்கூன் ரோடு என்.ஆர்.ஐ பதிவரின் கருத்துக்களை பிடிக்குமா ? (இந்த தொழில் அதிபருங்கோ தொல்லை தாங்கலைப்பா)
பதில்: யாரைக் கூறுகிறீர்கள் என புரியவில்லை.

8. உங்க பதில்களை இப்படி விடுகதை ரேஞ்சுக்கு வாசகர்கள் இட்டு செல்வார்கள் என்று நினைத்தீர்களா?
பதில்: குறிப்பாக இதுதான் வரும் என எதிர்பார்த்திருக்க இயலாதுதான். ஆனால் ஏடாகூடமான கேள்விகள் வரும் என பொதுவாக எதிர்பார்த்தது உண்மையே.


ரமணா
1.தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலர் சொந்தக் காசு செலவழித்து இலங்கை சென்றது உங்களுக்கு எப்படி படுகிறது?
பதில்: தணல் வலைப்பூவில் வந்துள்ள இலுப்பைப்பூ என்னும் இப்பதிவில் உங்களுக்கு வேண்டிய விஷயம் கிடைக்கலாம்.

2. இதற்கு முதல்வர் கருணாநிதி அவ்ர்களின் வழக்கமான சமாளிப்பு எப்படி?
பதில்: சமாளிப்பு திலகம் என அவருக்கு பட்டம் தரலாம்.

3. இதுக்கு ஜெ.ன் ரியாக்ஷன் என்ன?
பதில்: எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து என்ன எதிர்பார்க்க இயலும்?

4. நெல்லையில் துணை(மிகச் சிறிய எழுத்துகளில் -நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற விளம்பரம் போல) முதல்வர்( மெகா சைஸ் எழுத்துகளில்)சாலையில் இருமருங்கும் 5 அல்லது 10 அடிக்கு இடை வெளிவிட்டு -ஸ்டாலின் புகழாரம் கலர் பேனர்கள்-நாம் எங்கே போகிறோம்?
பதில்: நெல்லைக்கு போகிறோம்.

5. ஸ்டாலினை கருணாநிதியால் திட்டம் போட்டு திமுகவில் திணிக்கபட்ட தலைவர் என்று சொல்லி (மாவட்டம் முழுவதும் அன்று வை கோபால் சாமியோடு எதிர்த்த பெருந்தலைகள் இன்று ஸ்டாலின் துதிபாடும் செயல் பார்த்து அண்ணா (அவருக்கு பாவம் ஒரே ஒரு பேனர்)வின் ஆத்மா என்ன நினைக்கும்?
பதில்: அவருக்குத்தான் எதையும் தாங்கும் இதயம் ஆயிற்றே.

6. இந்த வரலாறு காணாத(கருணாநிதியை மிஞ்சிய)வரவேற்பிக்குபின்னால் தென்மண்டலச் செயலர் அழகிரியின் நடவடிக்கை மாறுமா?
பதில்: அது பற்றி ஸ்டாலின் அல்லவா கவலைப்பட வேண்டும்?

7. மீண்டும் அரசியல் சாணக்கியர் தில்லை அரசர் ஜெ யுடனா?
பதில்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

8. இலங்கை வாழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை சட்டம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா?
பதில்: அபத்தமான கோரிக்கை. எந்தக் கட்சியாக இருந்தாலும் ஏற்கக் கூடாது.

9. சுவிஸ் பண விவகாரம் என்னவாச்சு?
பதில்: ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் ரகசிய பாதுகாப்பில் அரசியல்வாதிகளுக்கு மிகவும் அக்கறை உண்டு.

10. வடஇந்தியாவில் ஒரு சில பகுதிகளில் கொடுரமான தீவிரவாதச் செயல்கள் மீண்டும். எதிரி நாடுகளின் சித்து விளையாட்டா?
பதில்: அதுவும் முக்கியக் காரணமே. வேறு காரணங்களும் உள்ளன.

கேப்டன் விஜயகாந்த் நாயுடு
1. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் மொத்தம் ஏழு பேர். அவற்றில் தமிழர்கள் மொத்தம் மூன்று பேர். அந்த மூன்று பேருமே பிராமணர்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: தமிழர்கள், அதிலும் பிராமணர்கள் என்பதில் மகிழ்ச்சிதான். ராமனின் சகோதரர் மகன் சந்திரசேகர்.


அனானி (15.10.2009 மாலை 05.56-க்கு கேட்டவர்)
1) ஒபாமா கொண்டாடிய தீபாவளியிலும் ஐயங்கார் புரோகிதர்? ஐயங்கார் கொடி வொயிடவுஸ் வரைக்கும் பறக்க ஆரம்பித்துவிட்டதே ?
பதில்: இது என்ன கூத்து? செய்திக்கான சுட்டி ஏதேனும்?

2) மைசூர் மகாராஜாவின் ஒட்டியாணம்? கருணாநிதி ஜெயலலிதாவைப் பற்றி சொன்னதற்கு என்ன பின்புலம்?
பதில்: அசிங்கமான எண்ணங்கள்.

3) புவனேஸ்வரியை சிக்க வைத்து பிடித்த மாதிரி ஃபிஷ் நடிகையையும், நட்பு நடிகையையும் பல சமயங்களில் போலீஸ் ஏடாகூட நிலையில் பிடித்த போதும் கேஸ் போடாமல் விட்டது ஏன் ? பெரிய இடத்து கனெக்ஷனா?
பதில்: நீங்கள் குறிப்பிட்டுள்ள நடிகையர்கள் பற்றி இவ்வகையில் நான் செய்தி படித்ததாக நினைவு இல்லை.


வஜ்ரா
1. இந்திய ஊடகங்களில் பெரும்பாலும் பேசப்படாமல் போன Goldstone report பற்றியது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக தனது வாக்கைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவுடன் சேர்ந்து, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பஹ்ரின், கத்தார், சவுதி அரேபியா, போன்ற ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாடுகள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளது. குறைந்த பட்சம், இங்கிலாந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளைப்போல் வாக்களிக்காமல் இருந்து நடுநிலமையை நாட்டிக்கொண்டிருக்கலாம் அல்லவா? இந்தியா இப்படி இஸ்ரேலுக்கு விரோதமாகச் செல்வதனால் diplomatic recourse ஆக, இஸ்ரேல் நமக்குக் கொடுக்க வேண்டிய தளவாடங்களில் விளையாண்டால், நாம் என்ன செய்ய முடியும்?
பதில்: என்ன செய்வது, அது இஸ்ரேலின் விதியாகவே அமைந்து விட்டது. இந்த அரேபியர்கள் என்ன அட்டூழியம் செய்தாலும் அவர்களிடம் இருக்கும் எண்ணெய்க்காக இந்தியா போன்ற நாடுகள் அவர்களுக்கு சாதகமாக பேச வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும் இந்தியா பாகிஸ்தான் விவகாரம் என்றால் அரேபியர்கள் பாகிஸ்தானுக்குத்தான் ஜால்ரா அடிப்பார்கள்.

இஸ்ரேலுக்கும் இதெல்லாம் தெரியும். ஆகவே அது நமக்கு தரவிருக்கும் தளவாடங்களில் விளையாடாது. அம்மாதிரியெல்லாம் அல்பத்தனமாக செய்வது அரேபியர்களுக்கே உரித்தானது.


மீண்டும் அடுத்த வாரம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

39 comments:

  1. அந்தக் காலத்தில் அண்ணா-பானுமதி கிசுகிசுச் செய்திபற்றி அண்ணாவின் பேச்சு:
    “அவர் படிதாண்டாப் பத்தினியும் அல்ல; நான் முற்றும் துறந்த முனிவரும் அல்ல.”
    உங்கள் பதிலைச் சிறிது மாற்றிக் கொள்ள நேரிடும்.
    அ. நாமதேயன்

    ReplyDelete
  2. @அனானி
    ஏன்? அதுதான் பானுமதி அவர்களே அது பற்றி கவலைப்படவில்லை என்று கூறிவிட்டேனே.

    மேலும் இது விஷயமாக அண்ணா இன்னொரு நடிகையை குறிப்பிட்டதாக அக்காலத்தில் கேள்விப்பட்டுள்ளேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. //Thaanaith thalaivar Karunanidthi has once again proved his unconditional support to thirai ulagam. your comment please?//

    சந்தேகமில்லாமல் இன்றைய அரசியல் திரைத்துறையை நம்பி இருக்கிறது!

    ReplyDelete
  4. // 60 வருடங்களுக்கு முன்னால் திரைப்பட நகைச்சுவைக்கும் இன்றையதற்கும் என்ன வேறுபாடு?//

    அப்போ கருப்பு-வெள்ளை
    இப்போ கலர்

    ReplyDelete
  5. //சாதி மதம் பத்தி எந்த சந்திலாவது யாரவது பேசினால் உடனே டார்ஜான் போல ஆங்கே பிரசன்னமாகி கருத்து மழை பொழியும் பதிவர் யார்? தேவை இருக்கோ இல்லையோ அடிக்கடி நான் நாத்திகவாதி என்று கூறவும் செய்வார்? அப்பப்ப சரக்கு கவிதை எல்லாம் போடுவாரு, யார் அவர்?
    பதில்: வால் பையன். நமக்கு தோஸ்த். இக்கேள்விக்கான அவரது பதில் உங்களுக்கு இருக்கிறது மண்டகப்படி. பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்.//


    இதற்கு எதுக்கு சார் மண்டகப்படி!,
    அவருக்கு தோணுனதை கேட்டுபுட்டாரு, பாவம் விட்றுங்க!

    ReplyDelete
  6. //அடுத்த தரப்பு நியாங்களை கேட்காமல் கருத்து சொல்லாத நாட்டாமை யார்?
    பதில்: யார், தெரியவில்லையே!//

    தெரியாம சொல்லிட்டாரு!

    அவரு தான் இவரோட பங்காளி!
    முழுக்கை, அரைக்கை, முழங்கைன்னு பல நல்ல பேர்கள் வாங்கியவர்!

    பிரபலம்னு சொன்னா கேரளாவுல இருக்குற ஆடு, மாடுக்கு கூட தெரியும்!

    ReplyDelete
  7. //.தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலர் சொந்தக் காசு செலவழித்து இலங்கை சென்றது உங்களுக்கு எப்படி படுகிறது?//

    இன்பச்சுற்றுலா போன மாதிரி இருக்குது!

    ReplyDelete
  8. //இதுக்கு ஜெ.ன் ரியாக்ஷன் என்ன?//

    சென்னை ரொம்ப சூடுன்னு கொடநாடு திரும்பப்போறார்!

    ReplyDelete
  9. //இந்த வரலாறு காணாத(கருணாநிதியை மிஞ்சிய)வரவேற்பிக்குபின்னால் தென்மண்டலச் செயலர் அழகிரியின் நடவடிக்கை மாறுமா?//


    ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையை அழகிரியால் தொடக்கூட முடியாது!
    அழகிரியெல்லாம் பணத்தால் அரசியலுக்கு வந்தவர், ஸ்டாலின் மிசாவில் தொண்டனுடன் உள்ளே கழி தின்னவர்! தி.மு.க வுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின் தான்!

    ஆனா கட்சி உடைஞ்சிரும்!

    ReplyDelete
  10. //மீண்டும் அரசியல் சாணக்கியர் தில்லை அரசர் ஜெ யுடனா?//

    இந்த காமெடிக்கு தகுந்த சன்மானம் கொடுத்தே ஆகவேண்டும்!

    ReplyDelete
  11. //சுவிஸ் பண விவகாரம் என்னவாச்சு?//

    இதை மட்டும் மக்கள் ஞாபகத்துல வச்சிருக்காங்களே!

    வழக்கமா மக்களுக்கு எதையும் மறப்பது தானே குணம்!

    ReplyDelete
  12. நல்ல பதில்கள்

    ReplyDelete
  13. // நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் மொத்தம் ஏழு பேர். அவற்றில் தமிழர்கள் மொத்தம் மூன்று பேர். அந்த மூன்று பேருமே பிராமணர்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன? //

    மாதவராஜின் பதிவில் ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார்!

    இடஒதுக்கீடு என்ற பெயரில் பார்பனர்களை எல்லாம் வெளிநாட்டுக்கு துரத்திவிட்டுட்டோம்! இந்தியாவிற்கு வர வேண்டிய வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் வெளிநாட்டுக்கு போய்விட்டது!,

    இடஒதுக்கீட்டில் மாற்றம் கண்டிப்பாக தேவை, உயிரை கொடுத்து படிக்கும் மாணவர்கள் சாதிய அடிப்பையில் சீட் கிடைக்காமல் நிறிகும் போது அவனுக்கு மொத்த இந்தியாவின் மீதே கோபம் வரும்!

    தாழ்த்தபட்டவர்களும் உயர வேண்டியது அவசியம் தான், அதே வேலையில் திறைமையானவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்! இல்லையென்றால் நாட்டின் மனிதவளம் நாசமாய் போய்விடும்.

    சாதிய அடிப்படையில் சீட்டு வாங்குவதும், லஞ்சம் கொடுத்து சீட்டு வாங்குவதும் என்னை பொறுத்தவர ஒண்ணு தான்!

    ReplyDelete
  14. என்ன வால் அண்ணா, இன்னா இது பொசுக்குன்னு விட்டுடீங்க ?

    எதற்கு கடவுள், ஏன் நான் கடவுளை கும்பிடனும் என்ற கேள்விக்கு இதுவரை யாரும் சரியான பதில் சொல்லாததாலும், இதுவரை நடந்த உலக நிகழ்வுகளுக்கு எள்ளளவும் கடவுளின் தேவையோ, பங்கோ இல்லாததாலும் கடவுள் இல்லை என்ற மனநிலைக்கு நான் வருகிறேன்!

    கடவுள் நம்பிக்கை உங்களது தொட்டில் பழக்கம் போல, கொஞ்சம் கொஞ்சமாக தான் புரிய வைக்க வேண்டும்!

    அதற்காகவே யாம் படுபட்டோம் இனிமேலும் படுபடுவோம்.

    மதம் சாதி இவற்றை ஒழிக்காது விடமாட்டேன், ஓட ஓட விரட்டுவேன்.

    இப்படி பதில் வரும் என்றல்லவா நினத்திருந்தேன் !! இப்படி ஏமாத்திடீங்களே ??

    குப்புக் குட்டி

    ReplyDelete
  15. //அவரு தான் இவரோட பங்காளி!
    முழுக்கை, அரைக்கை, முழங்கைன்னு பல நல்ல பேர்கள் வாங்கியவர்!

    பிரபலம்னு சொன்னா கேரளாவுல இருக்குற ஆடு, மாடுக்கு கூட தெரியும்!//

    சார் நான் வலைக்கு புச்சு, இப்படி எல்லாம் சொன்ன புரியாது

    குப்புக் குட்டி

    ReplyDelete
  16. //எதற்கு கடவுள், ஏன் நான் கடவுளை கும்பிடனும் என்ற கேள்விக்கு இதுவரை யாரும் சரியான பதில் சொல்லாததாலும், இதுவரை நடந்த உலக நிகழ்வுகளுக்கு எள்ளளவும் கடவுளின் தேவையோ, பங்கோ இல்லாததாலும் கடவுள் இல்லை என்ற மனநிலைக்கு நான் வருகிறேன்!

    கடவுள் நம்பிக்கை உங்களது தொட்டில் பழக்கம் போல, கொஞ்சம் கொஞ்சமாக தான் புரிய வைக்க வேண்டும்!

    அதற்காகவே யாம் படுபட்டோம் இனிமேலும் படுபடுவோம்.

    மதம் சாதி இவற்றை ஒழிக்காது விடமாட்டேன், ஓட ஓட விரட்டுவேன்.

    இப்படி பதில் வரும் என்றல்லவா நினத்திருந்தேன் !! இப்படி ஏமாத்திடீங்களே ??//


    நான் இதை தான் சொல்லுவேன் என்று சரியாக புரிந்து வைத்துள்ளீர்க்ளே அதுவே என் வெற்றி தான்!,

    நீங்கள் சொல்வது சும்மா சும்மா நான் நாத்திகவதின்னு சொல்றது அரசியல்வாதிக்கு சமமா இருக்கு! அதனால் நான் இனிமே சுயசொறிதல்களை குறைச்சுக்கிறேன்!

    ஆனாலும் நான், நான் தான்!

    ReplyDelete
  17. வால் அண்ணா
    பின்னூட்டங்களில் உங்கள் நகைச்சுவைகளை நான் வெகுவாக ரசிப்பதுண்டு.

    //நீங்கள் சொல்வது சும்மா சும்மா நான் நாத்திகவதின்னு சொல்றது அரசியல்வாதிக்கு சமமா இருக்கு! அதனால் நான் இனிமே சுயசொறிதல்களை குறைச்சுக்கிறேன்!//

    அத மட்டும் செஞ்சுராதீக நீங்க சீரியஸா பேசறதே "நாத்திகத்தைப்" பத்தி பேசறப்ப தான்.

    "டபுள் கொட்டு" மாதிரி நாத்திகத்துக்கு நாத்திகம் நகைசுவைக்கு நகைசுவையா இருக்கும்.

    விமர்சனங்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாது அதுதானே அண்ணா நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம்

    குப்புக் குட்டி

    ReplyDelete
  18. //வால் அண்ணா//

    வால் என்று அழைத்தாலே போதுமானது நண்பரே!

    முன்பை போல சூடான உரையாடல்களுக்கு சரியான ஆட்கள் வாய்ப்பதில்லை!

    ReplyDelete
  19. //
    ஆம் எனில் பொறுமைக்கு ஏதேனும் நோபல் பரிசு இருந்தால் அதை தங்களுக்குத் தர பரிந்துரைக்கலாமா?
    பதில்: கட் அண்ட் பேஸ்ட் பொறுமையாக செய்யும் அவருக்குத்தான் ஏதேனும் பரிசு தர வேண்டும் என நினைக்கிறேன்.

    //

    அடுத்த முறை அவரை நேரில் பார்க்கும் போது, ஒரு கத்தரிக்கோலு, ஒரு கேமல் கோந்து பாட்டிலும் கொடுத்துவிடுங்கள்.

    அவர் செய்வதை சிம்பாலிக்காக சொல்லிக்காட்டவே இந்த பரிசு.

    ReplyDelete
  20. வால்ஸ் சொன்னது:
    /ஆனாலும் நான், நான் தான்!/

    இதே டயலாகை வேறொரு பக்கத்திலும் கூட 'நா அப்பிடித்தான்!' என்று பார்த்த மாதிரி இருக்கிறதே:-))

    வால்ஸ், பார்த்து! அப்புறம் "அருள்" வந்து விடப்போகிறது!

    ReplyDelete
  21. வால்பையன் said...
    // 60 வருடங்களுக்கு முன்னால் திரைப்பட நகைச்சுவைக்கும் இன்றையதற்கும் என்ன வேறுபாடு?//

    அப்போ கருப்பு-வெள்ளை
    இப்போ கலர் //

    அப்போ நகைச்சுவை,
    இப்போ நகைச்சு "வை".

    ReplyDelete
  22. டி.வி.யில் நிகழ்ச்சி வரும் போது இருக்கிற ஒலியின் அளவு விளம்பரம் வரும் போது தானகவே கூடி அலறுகிறதே ஏன் ?

    இந்த அக்கிரமத்தை அரசு கண்டுகொள்ளாது இருப்பதேன் ?

    ReplyDelete
  23. தமிழுக்கு மாநாடு நடப்பது போல் வேறு எதேனும் மொழிக்கு நடக்கிறதா ? ( இந்திய மொழிகள் தவிர)

    விவேக் சாதியைச் சாடி இனியும் காமெடி பன்னுவது சாத்தியமா.(சாதி சங்க ஆலோசனை கூட்டத்தில் எல்லாம் கலந்து கொள்கிறார். இந்தவார கழுகு ஜீ.வி பார்க்கவும்)

    ReplyDelete
  24. //இடஒதுக்கீடு என்ற பெயரில் பார்பனர்களை எல்லாம் வெளிநாட்டுக்கு துரத்திவிட்டுட்டோம்!//
    அறிவு உள்ளவன் எங்கு போயும் பிழைச்சுக்குவான்னு சொல்லுறிங்க. அறிவு கொறஞ்ச கீழ் சாதி மக்கள் எப்படி பிழைப்பார்கள்

    //தாழ்த்தபட்டவர்களும் உயர வேண்டியது அவசியம் தான்,//
    தாழ்த்தப் பட்ட சமுகத்தை முன்னேற்ற தம்பி எதாவது யோசனை சொன்னீங்கனா உங்க சமத்துவ நோக்கம் என்ன என்பதை எல்லாரும் புரிஞ்சுக்குவோம்

    ReplyDelete
  25. //சாதி மதம் பத்தி எந்த சந்திலாவது யாரவது பேசினால் உடனே டார்ஜான் போல ஆங்கே பிரசன்னமாகி கருத்து மழை பொழியும் பதிவர் யார்? தேவை இருக்கோ இல்லையோ அடிக்கடி நான் நாத்திகவாதி என்று கூறவும் செய்வார்? அப்பப்ப சரக்கு கவிதை எல்லாம் போடுவாரு, யார் அவர்?
    பதில்: வால் பையன். நமக்கு தோஸ்த். இக்கேள்விக்கான அவரது பதில் உங்களுக்கு இருக்கிறது மண்டகப்படி. பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்.//


    இதற்கு எதுக்கு சார் மண்டகப்படி!,
    அவருக்கு தோணுனதை கேட்டுபுட்டாரு, பாவம் விட்றுங்க!

    உண்மையை தானே சொல்லுறாரு / கேட்குறாரு

    ReplyDelete
  26. //அறிவு கொறஞ்ச கீழ் சாதி//

    இந்த சொல்லில் எனக்கு நம்ப்பிக்கை இல்லை!

    பத்து பார்ப்பனர்களுடன் நான் தர்க்கம் செய்ய தயார்!, பார்ப்பனர்களுக்கு இருப்பது மூளையா, கொழுப்பா என நானும் தெரிஞ்சிகனும்!

    தாழ்த்தபட்டவர்களை உயர்த்த ஒரே வழி! சாதியை ஒழிப்பதே!
    சாதியையே ஒழித்துவிட்டால் ஏது தாழ்த்தபட்ட, உயர்த்தபட்ட!

    ReplyDelete
  27. //உண்மையை தானே சொல்லுறாரு / கேட்குறாரு //

    நான் அதுக்கு ஒன்னும் சொல்லலையே!

    அவருக்கு தோன்றுவது உண்மையா, பொய்யா என அளவிட என்னிடம் மீட்டர் ஸ்கேலா இருக்குது!

    உங்களது கருத்தை சொல்ல உங்களுக்கு முழு உரிமையுண்டு! அது உண்மையா, பொய்யா என்பது இங்கே பிரச்சனையில்லை!

    ReplyDelete
  28. @வால்பையன்
    அறிவு குறைந்த சாதின்னு சொல்லறவங்க கிட்டேதான் உங்க வாதத்தை வச்சுக்கணும்? பாப்பான்கிட்டே ஏன்? இங்கே பாப்பான யாரும் அறிவு குறைஞ்ச சாதின்னு ஏதேனும் சாதியை குறிச்சு சொன்னானா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. //இங்கே பாப்பான யாரும் அறிவு குறைஞ்ச சாதின்னு ஏதேனும் சாதியை குறிச்சு சொன்னானா?//

    வாதம் அப்படி சொல்பவர்களீடம் மட்டுமே! எல்லோரிடமும் அல்ல!

    ஊர் சிரித்தது என்றால் ஊர் சிரித்தது அல்ல, ஊரிலுள்ள மக்கள் சிரித்தார்கள்!
    ஆகா முட்டாப்பாப்பான் என்றால் நீங்கள் கோபப்படகூடாது, முட்டாளாக இருக்கும் பாப்பான் தான் கோபப்படனும்!

    ReplyDelete
  30. //இடஒதுக்கீடு என்ற பெயரில் பார்பனர்களை எல்லாம் வெளிநாட்டுக்கு துரத்திவிட்டுட்டோம்! இந்தியாவிற்கு வர வேண்டிய வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் வெளிநாட்டுக்கு
    போய்விட்டது!,//

    //பத்து பார்ப்பனர்களுடன் நான் தர்க்கம் செய்ய தயார்!, பார்ப்பனர்களுக்கு இருப்பது மூளையா, கொழுப்பா என நானும் தெரிஞ்சிகனும்//

    முதலில் பார்பனர்களால் வளர்ச்சி போச்சி ன்னு சொன்னேங்க. அப்புறம் அவர்களுக்கு இருப்பது இருப்பது மூளையா, கொழுப்பா கேட்கிறிர்கள். முதலில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவு படுத்தவும்.

    ReplyDelete
  31. //இடஒதுக்கீட்டில் மாற்றம் கண்டிப்பாக தேவை, உயிரை கொடுத்து படிக்கும் மாணவர்கள் சாதிய அடிப்பையில் சீட் கிடைக்காமல் நிறிகும் போது அவனுக்கு மொத்த இந்தியாவின் மீதே கோபம் வரும்!//

    //தாழ்த்தபட்டவர்களை உயர்த்த ஒரே வழி! சாதியை ஒழிப்பதே!//

    இதையும் கொஞ்சம் புரியும் படி சொல்லவும், சாதியை ஒழிக்க இட ஒதுக்கீட்டை நீக்கணும் ன்னு சொல்லுறிங்க. ஆனால்
    தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்ற தான் அரசாங்கம் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தது.
    ஏன்னெனில் பெரும்பாலான மைனோரிட்டி மாணவர்கள் கல்லுரிக்குள் வருவது முதல் தலைமுறையாகவோ அல்லது இரண்டாம் தலைமுறையாகவோ தான் இருக்கும். அவர் எடுத்த குறைந்த மதிப்பெண்களே அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் பெரிய மதிப்பெண்ணா இருக்கும். அதேசமயம் பிராமிண மாணவர்களை எடுத்துக்கொண்டால் 80-90% மதிப்பெண்ணை சர்வ சாதரணமாக வாங்குவர். இப்படி பட்ட நிலையில் தாத்தப்பட்டவர்க்கு இட ஒதுக்கீட்டை கொடுத்து உயர்த்துவது சிறந்ததா அல்லது மதிப்பெண் அடிப்படையில் உயர் வகுப்பினற்கே இடங்களை கொடுத்து நிரப்புவது சிறந்ததா?

    ReplyDelete
  32. நான் படித்ததும் ஒரு பிரமிண பள்ளி, கல்லூரியில் தான். 1050 மார்க் எடுத்தும் B.com சீட் கிடைக்காமல் போன தோழிகளையும் பார்த்தேன் 780௦௦ மார்க் எடுத்து எங்களுடன் படித்த தோழிகளையும் பெற்றேன். நீங்க சொன்ன மாதிரி இட ஒடுகீட்டை நீக்கினால் கண்டிப்பா எங்களுடன் தாழ்த்தப்பட்ட பிரிவு தோழிகள் யாரும் படித்திருக்க மாட்டார்கள்

    கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்
    இட ஒதுக்கீட்டை எடுத்துவிட்டால்
    பிரமிண மாணவர்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் 80% இருப்பார்கள்
    இதனால் இந்தியா 50 வருடங்கள் பின்னோகியே போகும்.

    ReplyDelete
  33. //முதலில் பார்பனர்களால் வளர்ச்சி போச்சி ன்னு சொன்னேங்க. அப்புறம் அவர்களுக்கு இருப்பது இருப்பது மூளையா, கொழுப்பா கேட்கிறிர்கள். முதலில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவு படுத்தவும்.//

    எதாவது ஒரு துறையில் திறம்பட வளர்த்து கொள்ளுதல் வேறு! தன்னை மட்டுமே புத்திசாலி என நினைத்து கொள்ளுதல் வேறு!

    சண்டை போடுவது இரண்டாவது வகையுடன்! ஆதரிப்பது முதல் வகையை! தெளிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
  34. தாழ்த்தபட்டவர்களுக்கு சலுகை கொடுத்தது ஆரம்பத்தில் நல்லதுக்கு தான்! ஆமால் இப்பொழுது குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் சீட் கிடைக்கும்னு ரொம்ப தெனாவட்டா திருயிறாங்க!

    முழுமையான திறைமையில்லாதவர்களிடம் எதிர்கால இந்தியாவை ஒப்படைக்க எனக்கு பயமாக இருக்கிறது!

    ReplyDelete
  35. //கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்
    இட ஒதுக்கீட்டை எடுத்துவிட்டால்
    பிரமிண மாணவர்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் 80% இருப்பார்கள்
    இதனால் இந்தியா 50 வருடங்கள் பின்னோகியே போகும். //

    பார்ப்பனர் அல்லாதவர்களை குறைவாக மதிப்பிடுதல் சரியாக படவில்லை!
    இடஒதுக்கீட்டுக்கு முன்னரே அம்பேத்கார் வக்கிலுக்கு படித்தவர்!, இன்னும் பலர் சொல்லலாம், ஒரு காலத்தில் வர்ணாசிரம் தலைதூக்கி கொண்டிருந்த நேரத்தில் இடஒதுக்கீடு நிச்சயமாக தேவைப்பட்டது உண்மை தான்!

    ஏன் இப்போதும் கூட இருக்கலாம்! ஆனால் திறமை உள்ளவர்களை உயர்சாதி என்ற அடிப்படையில் ஒதுக்காமல் அவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் வாய்ப்பு அளிக்கலாம்!

    வருங்கால இந்தியாவை செதுக்க வேண்டியவர்கள் அதை வெளிநாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள்!, நாட்டில் தேச பற்று என்ன விலை என்று கேட்கும் நிலை வந்துவிட்டது!

    ReplyDelete
  36. //சண்டை போடுவது இரண்டாவது வகையுடன்! ஆதரிப்பது முதல் வகையை! தெளிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!//
    தெளிவா குழப்பிகிட்டேன்

    ReplyDelete
  37. //பார்ப்பனர் அல்லாதவர்களை குறைவாக மதிப்பிடுதல் சரியாக படவில்லை!
    இடஒதுக்கீட்டுக்கு முன்னரே அம்பேத்கார் வக்கிலுக்கு படித்தவர்!, இன்னும் பலர் சொல்லலாம், //
    விரல் விட்டும் என்னும் அளவே இருந்தனர். அதனால் தான் பிராமின்ஸ் க்கு 100% சொல்லலை

    ReplyDelete
  38. //ஆமால் இப்பொழுது குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் சீட் கிடைக்கும்னு ரொம்ப தெனாவட்டா திருயிறாங்க!//

    உண்மை தான்.

    //ஏன் இப்போதும் கூட இருக்கலாம்! ஆனால் திறமை உள்ளவர்களை உயர்சாதி என்ற அடிப்படையில் ஒதுக்காமல் அவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் வாய்ப்பு அளிக்கலாம்!//

    ஆமாம்

    //முழுமையான திறைமையில்லாதவர்களிடம் எதிர்கால இந்தியாவை ஒப்படைக்க எனக்கு பயமாக இருக்கிறது!//
    //வருங்கால இந்தியாவை செதுக்க வேண்டியவர்கள் அதை வெளிநாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள்!, நாட்டில் தேச பற்று என்ன விலை என்று கேட்கும் நிலை வந்துவிட்டது!//

    எனக்கும் இந்த பயம் கொஞ்சம் இருக்கு

    ReplyDelete
  39. 1.ராமதாஸ் எப்படியிருக்கிறார்?
    2.2010ல் தமிழக அரசியல்?
    3.காங்கிரஸின் முயற்சி சூரியாவிடம் பலிக்கவில்லையா?
    4.ஆதவன் -பேராண்மை ஒரு ஒப்பீடு?
    5.சென்னையில் தண்ணீர் தண்ணீர் சொல்ல வேண்டுமா?
    6.ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்குகள் ?
    7.பா.ம.க. விலகலால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு?
    8.சீனா மறுபடி வாலாட்டத் தொடங்கிவிட்டதா?
    9.‘வெங்கி’ ராமகிருஷ்ணன் அவ்ர்களின் நோபல் பரிசுக்குப் பின் பேச்சுகள்-உங்கள் விமர்சனம்?
    10.இலங்கைக்கு இந்தியப் பாராளுமன்றக் குழு திக் விஜயம் பற்றி?
    11.இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை-திமுக தலைவரின் கோரிக்கை-காங்கிரசுக்கு எச்சரிக்கையா?
    12.சீனா, காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு விசா கொடுப்பது-விஷமம் அல்லவா?
    13.டாஸ்மார்க் சரக்குகள் தீபாவளி விற்பனை 220 கோடியாமே?குடிமகனே போற்றி போற்றி?
    14.கிரிக்கெட் சூதாட்டம் தொடர்கிறதா?
    15.ஐஐடி 80 % மார்க் விவகாரம் மந்திரியின் அந்தர் பல்டி?
    16.வாரணம் ஆயிரம் சூர்யா- ஆதவன் சூர்யா?
    .

    ReplyDelete