நிரந்தர பக்கங்கள்

10/25/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.10.2009

எந்த மொழியில் பேசுவது என்னும் பிரச்சினை
ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் இந்த வலைப்பூவில் வந்த இப்பதிவே எனது இந்த இடுகைக்கு காரணம்.

அதிலிருந்து சில வரிகள்:

அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்கள் அனைத்தும் பெரும்பான்மையாக ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு கிடைத்த பதில்கள் இங்கு மாதிரிக்கு:

1. அப்ப தான் எல்லோருக்கும் புரிகிறது. 2.
புரிகின்ற மொழியில் பேசுவது ஒன்றும் தப்பு இல்லை. 3. தமிழர்களை தவிர மற்றவர்களும் வரலாம் இல்லையா? 4. நமக்கே தமிழ் ஒண்ணும் வர மாட்டேங்குது ? 5. தமிழ் வளர்ப்பதற்கு ஒன்றும் வர வில்லை. (இந்த இடுகையின் சௌகரியம் கருதி எண்கள் டோண்டு ராகவனால் கொடுக்கப்பட்டன)

இதை நான் விமர்சிப்பதற்குள் உங்களின் விமர்சனங்களையும் கேட்க விரும்புகிறேன்.

அமெரிக்கா என்று மட்டும் இல்லை. தமிழகத்தின் பல அமர்வுகளிலும் இதே நிலைதான். சில மாதங்களுக்கு முன்னால் சென்னை பல்கலைக்கழக வைணவத் துறைக்கு அதன் தலைவரும் எனது நண்பருமாகிய முனைவர் வி.கே.எஸ்.என். ராகவன் அவர்களது அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பணம் செய்தார் ஒரு மாணவி. அதற்கான இறுதி நேர்காணல். அதைக் காணவே என்னையும் அழைத்திருந்தார்கள்.

அதை நடத்தியது ராகவன் அவர்களுக்கு முன்னால் வைணவத்துறையின் தலைவராக இருந்த முனைவர் நரசிம்மாச்சாரி அவர்கள். சமீபத்தில் 1969-ஆம் ஆண்டில் நான் ஜெர்மன் பயில ஆரம்பித்தபோது என்னுடன் கூடப்படித்தவர்.

ஆராய்ச்சிக்கட்டுரை துவங்கியது. கர்மம் என்னும் கோட்பாட்டைப் பற்றித்தான் கட்டுரை. விசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் ஆகிய முறைகளில் அது எவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது என்பது பற்றித்தான் கட்டுரை.

எனக்கு சுருக்கெனப்பட்டது என்னவென்றால் அமர்வு முழுக்க ஆங்கிலத்தில் நடந்ததுதான். கட்டுரையை வாசித்தவர் தமிழர், பார்வையாளர்கள் அனைவரது தாய்மொழியும் தமிழே. விவாதத்துக்குரிய பொருளோ தமிழில் அல்லது மிஞ்சிமிஞ்சிப் போனால் வடமொழியில்தான் பாந்தமாக இருக்கும். அதைப்போய் ஆங்கிலத்தில் கையாளுவதா என்பதுதான் எனது நிலைப்பாடு.

கட்டுரை முடிந்ததும் முனைவர் நரசிம்மாச்சாரி அவர்கள் பார்வையாளர்களிடமிருந்து கேள்விகளை வரவேற்றார். நான் உடனே எழுந்து நின்று முதலில் சொன்னது, “நான் தமிழிலேதான் கேள்விகள் கேட்பேன்”. அவரும் புன்முறுவலுடன் ஒத்து கொண்டார். கட்டுரையாளர் அவரை முகத்தில் கேள்வியுடன் நோக்க, ராகவன் ஜெர்மனில் கேள்வி கேட்கவில்லை என மகிழ்ச்சியடையுமாறு அவரிடம்சிரித்து கொண்டே கூறினார். பிறகு நான் கேள்வி கேட்டேன், பதிலும் வந்தது. அதெல்லாம் இப்பதிவுக்கு அப்பாற்பட்டது. நான் குறிக்க எண்ணுவது என்னவென்றால் எல்லாவற்றையும் ஆங்கிலத்திலேயே நடத்துவது என்னும் நிலையைத்தான்.

ஒடெஸ்ஸா கோப்பு (Odessa file)
இப்படம் எழுபதுகளில் வந்தது. Frederic Forsyth என்பவர் எழுதிய அதே தலைப்புள்ள புதினத்தின் திரையாக்கம் அது. அது சமீபத்தில் 1963 நவம்பர் 22-ஆம்தேதி அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கென்னடியின் கொலை பற்றிய செய்தியுடன் ஆரம்பிக்கிறது. பொழுதுபோக்காக அப்புத்தகத்தை படிக்க ஆரம்பித்த நான் இஸ்ரேல் பற்றியது அது என்றதும் எங்கோ குத்திவிட்டது போல நிமிர்ந்து உட்கார்ந்தேன். Odessa --> Organisation der ehemaligen SS-Angehörigen என்பதன் சுருக்கம். ஆகவே நாஜிகள் காலகட்டம் பற்றி பல ஃப்ளாஷ்பேக்குகள் உண்டு.

இப்படத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஜெர்மனியிலேயே நடந்தன. ஆனால் படம் என்னவோ ஆங்கிலத்தில்தான். இருப்பினும் இதில் வேடிக்கை என்னவென்றால் நாஜிகள் வரும் சீன்கள் மட்டும் ஜெர்மனில் வந்தன, கீழே சப்டைட்டில்கள் ஆங்கிலத்தில். இதில் ஒரு நுண்ணிய விஷயம் உண்டு. திடீரென ஜெர்மன் மொழியை கொண்டு வந்ததில் அந்தந்த காட்சிகளில் வந்தவர்களை நம்மிடமிருந்து அன்னியமாக்கியதுதான் நடந்தது. அதுதான் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் நோக்கமாகவும் இருந்திருக்க வேண்டும்.

நான் ஜெர்மன் கற்றுக்கொள்வதற்கு முந்தைய காலத்தில் எல்லாம் இரண்டாம் உலகப்போர் பற்றிய படங்களில் ஜெர்மானியர் தோற்கும்போது பார்வையாளர்களுடன் சேர்ந்து நானும் மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் அதுவே நான் ஜெர்மன் கற்ற பிறகு அவ்வாறு மகிழ இயலவில்லை. அதே போல பாகிஸ்தானி சீரியல்களை பார்க்கும்போது உருது நன்கு புரிந்ததால் அவை அன்னியமாகத் தோன்றவில்லை. அதுவும் அங்கும் முறைப்பையன்/முறைப்பெண் என்றெல்லாம் வந்தபோது இன்னும் அதிகப் பாந்தமாகவே தெரிந்தது.

சப்டைட்டில்கள் பற்றி சில எண்ணங்கள்
சப்டைட்டில்கள் போடும்போது பலவிஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கும். எழுத்துக்களின் பின்புலனுக்கு தகுந்த முறையில் வண்ணத்துடன் இருக்க வேண்டும். அதை கவனியாது பல ஃபிரெஞ்சு படங்களில் இரண்டும் ஒரே வண்ணத்தில் இருக்க சப்டைட்டில்களை படிக்க இயலாமல் போனதுதான் நடந்தது. அதை விட இன்னொரு கொடுமை நடந்தது. Jean Paul Belmondo என்னும் பிரஞ்சு நடிகர் நடித்த L'heritier என்னும் படத்த்தை ஆங்கில சப்டைட்டில்களுடன் காட்டினார்கள். அதில் ஒரு காட்சியில் இத்தாலிய மொழியில் பேசுவார்கள். அதற்கு ஃபிரெஞ்சு சப்டைட்டில்கள் போட்டிருக்கிறார்கள். ஆங்கில சப்டைட்டில்கள் போட்ட மூதேவி இந்தக் காட்சியில் அவற்றை ஃபிரெஞ்சு சப்டைட்டில்கள் மேலேயே போட்டு படுத்தியது. ஆக பிரெஞ்சையும் பார்க்க இயலவில்லை, ஆங்கிலத்தையும் பார்க்க இயலவில்லை. என்ன, சொதப்பல்கள் எல்லா நாட்டிலும் நடக்கின்றன என்று வேண்டுமானால் அல்ப திருப்தி அடையலாம்.

ரிச்மண்டு தமிழ்சங்க இடுகையில் வந்த ஒரு சமாதானத்தையும் டோண்டு ராகவன் ஒத்துக் கொள்ளவில்லை என்பதைக் கூறவும் வேண்டுமோ?

ரோசா வசந்த் ஜ்யோவ்ராம் கருத்து வேற்றுமை
இரு தரப்பிலிருந்தும் அவரவர் வெர்ஷன்கள் வந்து விட்டன. என்ன கூறுவது? நான்கைந்து பெக்குகள் உள்ளே போய்விட்டால் என்னவெலாம் ஒரு மனித்னுக்குள் மாறிவிடுகிறது? நேற்று மாலை நண்பர் என்றென்றும் பாலாவின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர் சாதாரணமாக பதிவர் சந்திப்புகளுக்கு வரமாட்டார். ஒருவரின் எழுத்துக்களை படிப்பது வேறு, அந்த எழுத்துக்களை எழுதியவரை சந்திப்பது வேறு என்னும் கொள்கையுடையவர் அவர். நான் அதற்கு நேர்மாறானவன்.

இந்த விவகாரம் பற்றி பேசியபோது ஒருவேளை அவரது நிலைப்பாடுதான் சரியாக இருந்திருக்குமா என்ற எனது ஐயப்பாட்டை வார்த்தைகளில் கூறினேன். அவரும் கடந்த காலத்தில் பலமுறை நான் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஈடுபட்டிருந்தாலும் பதிவர் சந்திப்புகளுக்கு சென்றது குறித்து அவரது வியப்பை வெளிப்படுத்தினார். பிறகு எனது வயது காரணமாக பதிவர்கள் மனதில் என்னைப் பற்றிய வன்முறை எண்ணங்கள் வராது தடுத்திருக்கும் என்றும் கூறினார்.

ஆக வயதாவதும் நல்லதுதான் போலிருக்கிறது. பை தி வே அடுத்தப் பதிவர் மீட்டிங் எப்போ?

அன்புடன்,
டோண்டு ராகவன்







54 comments:

  1. தமிழ்ச்சங்கக் கூட்டங்களில் எந்த மொழியில் பேசுவது என்ற டாபிக் கொஞ்சம் சுவாரசியமாக பண்புடன் கூகிள் வலைக் குழுமத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.

    ஐந்தினையைத் தமிழர்கள் அறிவார்களோ இல்லையோ, கலாய்த்தல் திணையை நன்றாகக் கும்மி கொட்டிக் கொண்டிருப்பதைப் படிக்க

    http://groups.google.co.in/group/panbudan/browse_thread/thread/2406191d5ffc4316#

    ReplyDelete
  2. /பை தி வே அடுத்தப் பதிவர் மீட்டிங் எப்போ?/

    அடுத்த மூக்கு ரெடியானதும் சொல்வார்களோ?

    ReplyDelete
  3. தமிழ் நாட்டில் மேல் தட்டில் இருந்து ஆங்கிலம் தான் வருகின்றது.

    உதாரணம், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கூட கல்வி பற்றிய தளம்
    http://www.pallikalvi.in/

    இங்கு 90% விஷயங்களும், விவாதங்களும் ஆங்கிலத்தில் தான். தமிழ் ‘நாம் கே வாஸ்தே’.

    தமிழ், தமிழன்னை, தமிழ் என் மூச்சு என 100 வருடங்கள் மார் தட்டியவர்களே , இந்த நிலைதான்.

    இதன் மூல காரணம் பேச்சுத் தமிழுக்கும், எழுத்து தமிழுக்கும் உள்ள அதள பாதாள இடைவெளி. தமிழர்கள் மொழி என்றால் எழுத்து மொழி, அதுவும் சங்கத்தமிழ், செந்தமிழ் என நம்புபவர்கள். அதனால் பேச்சு தமிழுக்கு மரியாதை தமிழர்கள் மனதில் இல்லை. தமிழ் கலாசாரத்தில் பேச்சுத்தமிழ் இகழப்படுகின்றது.

    அதன் விளைவு, தமிழ் பேச்சை முடியும் வரை கைவிடுகின்றனர்


    விஜயராகவன்

    ReplyDelete
  4. பதிவர் மீட்டிங் எவ்வளவு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எந்த பதிவரா இருந்தாலும் வெச்சிக்குங்க. ஆனா - பிக்னிக் வேண்டாம் - பெக்குகள் வேண்டாம்.

    ReplyDelete
  5. முனைவர் (டாக்டர் என்று தான் பட்டம் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.கல்லூரி மாணவர்களும் சகப் பேராசிரியர்களும் “டாக்டர்”....என்று தான் சொல்லுகிறார்கள்)பட்டம் பெறுவதற்கான ஆய்வுக்கட்டுரைகள் ஆங்கிலத்தில் தருவதற்கு அக்கட்டுரைகள் தமிழை அறிந்த ஆங்கிலப் பேராசிரியர்களின் பார்வைக்கும் மதிப்பீடுக்கும் அனுப்பப் படுகின்றன என்றும் சொல்லுகிறார்கள்.
    இருந்தாலும் தமிழ்ச்சங்க நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் இருப்பது கொஞ்சம் அதிகம்தான்.
    அமெரிக்காவில் பாஸ்டன் அருகில் உள்ள் ஆக்டன் என்ற புறநகர்ப்பகுதிக்கு திரு சுப்ரமணியம் சுவாமி அவர்கள் ஒரு தமிழர்கள் நிறைந்த கூட்டத்தில் பேசியதைக் கேட்க நேர்ந்தது. அவருக்கே உரித்தான் மழலைத் தமிழில்தான் பேசினார். தான் பேசுவது பிறருக்குப் புரியவில்லை என்று அவருக்குத் தோன்றிய போதெல்லாம் ஆங்கிலத்தில் சொன்னார். இயன்றவரை தமிழிலேயே எண்ணுவது, இயன்றவரி தமிழிலேயே பேசுவது என்பதுதான் நாம் பாரதிக்குச் செலுத்தும் காணிக்கை.

    ReplyDelete
  6. பதிவர் சந்திப்புக்கு வருவதற்கு ஏதேனும் வரைமுறை உள்ளதா? என்னை மாதிரி நேற்று முளைத்த காளான்கள் வர தடை இருக்கிறதா? இது குறித்து விளக்கம் தர முடியுமா?

    ReplyDelete
  7. Do's and Don'ts in பதிவர் சந்திப்பு

    கொசுவை அடிங்க பதிவரை விடுங்க
    பீச் -ல சந்திக்க வேணாம்
    பார்க் மொட்டை மாடி ஒ. கே.
    இருட்டான இடத்தில் சந்திப்பு வேணாம்

    சிங்கமா இருந்தாக் கூட சிங்கிளா போயிருந்தா சிங்கிள் டீ அடிக்கிறதோட நிப்பாட்டிக்கிடனும்

    வால் இருப்பவர்கள் அதைச் சுருட்டிக் கொண்டு செல்லவும்.

    அடிதடி ஏற்படுமாயின் குப்புக் குட்டி மாதிரி ஆட்களை "இவன்
    இதுக்கெல்லாம் "ஒர்த்" இல்லப்பா" என்று விட்டுவிடலாம்

    குப்புக் குட்டி

    ReplyDelete
  8. //அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்கள் அனைத்தும் பெரும்பான்மையாக ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//

    வணக்கம் ஐயா! இதில் மட்டும் எனது கருத்தைப் பதிய ஆசைப்படுகிறேன்.

    அனைத்தும் என்பது சரியல்ல; சிலர் தீவிரமாகத் தமிழில் இருக்கிறார்கள். பிறர் ஆங்கிலமே பிரதானம் என்று இருக்கிறார்கள்.

    இரண்டாவது இரகமே பெரும்பான்மை. தீவிரமாய் இருப்பவர்கள், அதிதீவிரமாய் இருப்பதும் உதவாது. பின்னதைப் பற்றி சொல்வதற்கு என்ன உள்ளது?

    பேச்சுத்தமிழில் எழுதுகிறேன் என்று என்னை விமர்சித்ததும் இங்கேதான்!

    ReplyDelete
  9. சென்னை பதிவர் சந்திப்பை சீக்கிரம் ஏற்பாடு செய்யலாம், உலகத் தமிழ் மாநாடு வேறு வருகிறது.

    ReplyDelete
  10. வாலை சுருட்ட முடியாதே!

    ReplyDelete
  11. பெயர் சொல்ல விருப்பமில்லை said

    //பதிவர் சந்திப்புக்கு வருவதற்கு ஏதேனும் வரைமுறை உள்ளதா? என்னை மாதிரி நேற்று முளைத்த காளான்கள் வர தடை இருக்கிறதா? இது குறித்து விளக்கம் தர முடியுமா?//

    எதுனாச்சும் எழுதி அதைப் பதிவுன்னு நாலு பேர் certify பண்ணனும்-கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை. யாரு வேனாலும் வரலாம்

    ஆனா பேரு மட்டும் சொல்லணும், நேரில் பார்க்கும் போதும் சொல்ல மாட்டேன் -ன்னு அடம்பிடிக்கபடாது ஆமா !!!

    குப்புக் குட்டி.

    ReplyDelete
  12. All the tamil brahmins talk with their children in English only.

    The non-brahmin dravidians talk in Tamil only even in USA.

    Tamil brahmins are ashamed of Tamil, the first language of humanity.

    ReplyDelete
  13. எழுத்துக்களின் பின்புலனுக்கு தகுந்த முறையில் வண்ணத்துடன் இருக்க வேண்டும்.
    நம்மூர் சில படங்களிலும் இந்த மாதிரி போட்டு(சிங்கை தொலைக்காட்சியில்) மண்டையை காய வைப்பார்கள்.

    ReplyDelete
  14. //
    All the tamil brahmins talk with their children in English only.

    The non-brahmin dravidians talk in Tamil only even in USA.

    Tamil brahmins are ashamed of Tamil, the first language of humanity.
    //

    ஓஹோ, 2% பேர் தமிழில் பேசாமல் தமிழ் அழிந்துவிட்டது. அதற்கு அந்த 2% பேர் ஆங்கிலத்தில் பேசுவது தான் முழுக்க முழுக்கக் காரணம்.

    சரியா ங்கொண்ணா சாரி, அண்ணாதாசன் ?

    அதுசரி, அதை ஏன் முதல் மொழியான தமிழில் சொல்லாமல் ஆங்கிலத்தில் சொல்கிறீர்கள் ?

    ReplyDelete
  15. Dear Dondu Sir,

    Being in the US and having attended several such programs here, this is my opinion.

    As far as I know/see, majority of the people talk in Tamil.

    Some people do talk in English because - they would have grown up in Calcutta/Bombay (outside TN) and hence they may not be comfortable talking in Tamil or they may have funny Tamil accent hence they may desist from doing so (which is their prerogative, IMO).

    More than anything, the question that need to be posed is, - irrespective of whether the kids grow up in the US, India or Australia, how many in the current generation - get the values that are stated in literary works of people like Auvaiyaar, Valluvar, and Bharathi?

    Guess the values that are mentioned in their literary works are more valuable than just talking in Tamil or whatever....

    Just my opinion for whatever it is worth...

    Thanks

    Venkata Raghavan R

    ReplyDelete
  16. நிறைய பேர் கருத்து சொல்லிட்டாங்க நான் சொல்ல ஒன்னும் இல்லை. ஆனா கேக்க இருக்கு. ஆமா தமிழ்ல பேசுறுதுனா என்ன? இப்ப ஒழுங்கா பேச முதல்ல தமிழ் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கின்றார்களா?. நானும் பதிவர் கூட்டத்தில் தமிழில் பேச முயற்சி பண்ணுகின்றேன். ஆனாலும் தமிங்கலம் வந்து விடுகின்றது. என்னால ரொம்ப எல்லாம் தமிழ், தமிழ் என்று நடிக்க முடியாது. எனக்கு என்ன வருகின்றதே அதை ஒழுங்காக எழுதி, பேசினால் பேதும் என்பது எனது கருத்து.

    ReplyDelete
  17. Annathasan said...
    All the tamil brahmins talk with their children in English only.

    The non-brahmin dravidians talk in Tamil only even in USA.

    Tamil brahmins are ashamed of Tamil, the first language of humanity.///
    இது ஒரு மிகப்பெரிய பொய்

    இங்கே தமிழை வீட்டில் பேசுபவர்கள் பிராமணர்கள்தான் என்பது நானறிந்த உண்மை.

    ReplyDelete
  18. அவர்களை எங்கே பிராமணன் என்ற சோவின் கொள்கையின்படி யாரையும் பிராமணன் என்று அழைக்க எனக்கு விருப்பமில்லை. பார்ப்பணர் என்று அழைக்கவும் விருப்பமில்லை எப்படி அழைப்பது டோண்டு சார்?

    ReplyDelete
  19. @குடுகுடுப்பை
    எங்கே பிராமணன் சீரியலின் கடைசி பகுதியில் (பார்க்க: http://dondu.blogspot.com/2009/06/101-102-103.html) அதே சோ அவர்கள் கூறுவதையே உங்கள் கேள்விக்கு பதிலாக வைக்கிறேன்.

    “சோவின் நண்பர் அசோக் யாருமே பிராமணன் இல்லைன்னு சம்பந்தப்பட்டவாளையே சொல்ல வைத்தது பற்றி அங்கலாய்க்கிறார். சோவோ கண்களை உருட்டியபடி அதுதானே உண்மை என்பதுதான் இந்த சீரியலின் முக்கிய விஷயம்னு சொல்கிறார். அசோக் தேடுவது வர்ணரீதியான பிராமணனை. ஆனால் தறசமயம் இருப்பவர்களோ சாதி ரீதியான பிராமணர்கள் என்கிறார் அவர். பிறகு நான்கு வர்ணங்களையும் அவர் ஒரிஜினலாக கொடுத்த விளக்கங்கள் பிரகாரம் வர்ணிக்கிறார். அவற்றில் பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன். க்ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன். வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன். சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன். ஆக, பழைய முறையில் வகுக்கப்பட்ட வர்ணங்கள் ஒன்றும் அப்படியே நிற்கவில்லை. காலத்தின் கட்டாயத்தில் அவை மாறி விட்டன. ஒன்று வேண்டுமானால் கூறலாம். இப்போது இருக்கும் நிலையில் எல்லோருமே ஒரு விதத்தில் வைசியர்களே. பிராமணன் புரோகிதம் செய்து பொருள் ஈட்டுகிறான். போர் வீரர்களும் தங்கள் சேவைகளை விற்கிறார்கள். சூத்திரர்களும் அவ்வாறே. ஆக, எல்லோருமே வைசியர்கள் ஆகிவிட்டார்கள்.

    சாதி என்பது பிறப்பால் மட்டுமே என ஆகிவிட்ட பிறகு. சாதியை மாற்றிக் கொள்ள இயலாதுதான். ஆனால் வர்ண ரீதியாக மாறவியலும் என்பது பல முறை பார்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் பிராமண சாதி மட்டும் அதே வர்ணப் பெயரில் அறியப்படுவதற்கான காரணமே அவர்களில் பலர் இன்னும் பழைய கொள்கைகளை ஓரளவுக்கு கடைபிடிப்பதே ஆகும்”.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. //இங்கே தமிழை வீட்டில் பேசுபவர்கள் பிராமணர்கள்தான் என்பது நானறிந்த உண்மை.//

    அவர்கள் பெசுவது தமிங்கிலீஷ் மாதிரி,
    தமிழ்ஷ்கிரிட், அதாங்க சமஸ்கிருதத்தையும், தமிழையும் கலந்து கட்டி பேசுவது!

    பார்ப்பனர்களுக்கு மட்டும் சமஸ்கிருதத்தை பேச்சு மொழியாக ஆக்கியிருந்தால் பார்ப்பனர்கள் மற்ற மொழியெல்லாம் நீச மொழி, சமஸ்கிருதம் மட்டுமே தெய்வ மொழின்னு புருடா விட்ருப்பாங்க!
    (இப்பவும் அதை தான் செய்யுறாங்க)

    ReplyDelete
  21. //சாதி என்பது பிறப்பால் மட்டுமே என ஆகிவிட்ட பிறகு. சாதியை மாற்றிக் கொள்ள இயலாதுதான்.//

    பார்ப்பனர்கள் தான் இனிமே ரோடு கூட்டனும், கக்கூஸ் கழுவணும்னு புதுசா ஒரு சட்டம் கொண்டு வரட்டும்,
    பூனூல அத்து போட்டுட்டு எல்லோரும் ஓடி ஒளிஞ்சுக்குவாங்க!

    அப்புறம் எப்படி பிறப்பால வந்த சாதி இருக்குதுன்னு பார்க்கலாம்!

    ReplyDelete
  22. //பார்ப்பனர்கள் தான் இனிமே ரோடு கூட்டனும், கக்கூஸ் கழுவணும்னு புதுசா ஒரு சட்டம் கொண்டு வரட்டும்,
    பூனூல அத்து போட்டுட்டு எல்லோரும் ஓடி ஒளிஞ்சுக்குவாங்க!//

    இந்த மாதிரி கரம் மசாலாவா எழுதுவதினாலயே நான் உங்கள் விசிறி cum விமர்சகனாகி விட்டேன்.

    பழைய வால் பயலா இப்பதான் அடிச்சு ஆட தொடங்கி இருக்கீங்க ! வாழ்த்துக்கள்.

    பதிவர் சந்திப்புக்கு செல்லும் போது சுருட்ட முடியலைன்னாலும் பரவாயில்ல, வாலைப் பத்திரமாப் பார்த்துக்குங்க

    குப்புக் குட்டி

    ReplyDelete
  23. //பதிவர் சந்திப்புக்கு செல்லும் போது சுருட்ட முடியலைன்னாலும் பரவாயில்ல, வாலைப் பத்திரமாப் பார்த்துக்குங்க //

    வாலை, வாளாகவும் பயன்படுத்தும் வித்தை தெரியும்!

    பாக்கத்தான் நான் சாது
    அடிச்சா ஆயிறுவ சேது
    (எப்படி பஞ்ச்)

    ReplyDelete
  24. @வால்பையன்
    அது ஏன் பார்ப்பனர்கள் மட்டும்? கூடவே கவுண்டர்கள், முதலியார்கள், தேவர்கள், நாயுடுக்கள், வெள்ளாளர்கள், பிள்ளைகள், நாடார்கள் ஆகியோரும் கக்கூஸ் கழுவட்டும் எனச் சொல்வதுதானே தைரியம் இருந்தால்?

    சொன்னால் செருப்பால் அடிப்பார்கள் என்ற பயம்தானே? பயம் இல்லையென்றால் அதைச் சொல்லவும் முதலில்.

    நான் சொல்கிறேன், தலித்துகள் தவிர அத்தனை சாதியினருக்கும்ம் கக்கூஸ் கழுவ வேண்டிய முறை என்று.

    தலித்துகளை நேரடியாக வன்கொடுமை செய்யும் சாதியினர்தான் முதலில் அதை செய்ய வேண்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  25. //@வால்பையன்
    அது ஏன் பார்ப்பனர்கள் மட்டும்? கூடவே கவுண்டர்கள், முதலியார்கள், தேவர்கள், நாயுடுக்கள், வெள்ளாளர்கள், பிள்ளைகள், நாடார்கள் ஆகியோரும் கக்கூஸ் கழுவட்டும் எனச் சொல்வதுதானே தைரியம் இருந்தால்?//


    நிச்சயமாக உயர்சாதி திமிரில் இருக்கும் அனைவரும் தான்! ஆனால் அவர்களுகெல்லாம் அடையாளமில்லை, கிராமம் தாண்டி அவர்களது பப்பு வேகவில்லை, பார்ப்பனர்கள் மட்டும் தன்னை உயர்சாதியாக காட்டி கொள்ள பூனூல் அணிந்திருப்பதால், பார்ப்பனர்கள் கழுவினால் மற்றவர்கள் தானாகவே அமுங்கி கொண்டிருப்பார்கள்!

    ReplyDelete
  26. //சொன்னால் செருப்பால் அடிப்பார்கள் என்ற பயம்தானே? பயம் இல்லையென்றால் அதைச் சொல்லவும் முதலில்.//

    எவனுக்கு என்னை செருப்பால் அடிக்க தகுதியிருக்கிறது!, உயர்சாதி என்று தன்னை நினைத்து கொண்டிருப்பவர்கள் பிச்சைகாரர்களை விட கீழே!

    மற்றவரை ஏச்சி பிழைக்கும் பிழைப்புக்கு பிச்சையே எடுக்கலாமே!

    ReplyDelete
  27. //தலித்துகளை நேரடியாக வன்கொடுமை செய்யும் சாதியினர்தான் முதலில் அதை செய்ய வேண்டும்.//

    சரிதான்!
    ஆனால் அவர்களுக்கு நீ உயர்சாதி, அவன் தாழ்ந்த சாதி என்று சொல்லிக்கொடுத்ததே பார்பனீயம் தானே!

    நிலப்புரபுக்களின் சொத்தில் சொகுசு வாழ்க்கை வாழவேண்டி, உனக்காக கடவுளிடம் பேசுகிறேன் என்று ஏமாற்றி பிழைத்தது யாரோ!?

    விஷமரத்தின் கிளை வேர்களை வெட்டுவதை விட ஆணி வேரை சாய்ப்பதே சிறந்தது!

    சாதியியத்தை தூக்கி பிடிக்கும் பார்பனர்கள் அடங்கினால், சாதி தன்னால் ஒழியும்!

    ReplyDelete
  28. என்ன உளறல் வால்பையன்? பூணலை வைத்துத்தான் கொடுமை செய்கிறார்களா?

    மேலும் கிராமங்களில்தான் வன்கொடுமை அதிகம். நகரங்களில் இல்லை. அங்கு இருக்கும் உயர்சாதீயம் பேசுபவனை கவர் செய்ய ஆஷாடப்பூதித்தனமாய்ப் பார்ப்பனீயம் எனக்கூறி அலிபி தேடும் நபும்சகர்கள் எல்லோரையும் நான் செலஞ்ச் செய்கிறேன். வன்கொடுமை நடக்கும் கிராமங்களுக்கு சென்று தலித்துகளுடன் நின்று போராடும் தில் இருக்கா? இல்லாவிட்டால் அவ்வப்போது இம்மாதிரி செண்டிமெண்டலாக பேசிவிட்டு, அவ்வப்ப்போது தண்ணி போட்டு சிக்கன் லெக்பீசை கடித்து கொண்டிருக்க வேண்டியதுதான்.

    இதில் தேவையற்று பார்ப்பனர்களை அலிபையாக பயன்படுத்துபவர்கள் எல்லோருமே என்னைப் பொருத்தவரை நபும்சகர்கள்தான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. //வன்கொடுமை நடக்கும் கிராமங்களுக்கு சென்று தலித்துகளுடன் நின்று போராடும் தில் இருக்கா?//

    நிச்சயமாக இருக்கு! அதற்காக இருக்கும் எல்லா அமைப்புகளுடனும் எனக்கு தொடர்பு உண்டு!

    பூனூல் என்பது மத அடையாளமில்லைன்னு உங்களுக்கே தெரியும், அப்படி மத அடையாளமென்றால் மற்ற இந்துகளுக்கு எங்கே பூனூல்.

    சில ஆசாரிகள் பார்பனர்களை பார்த்து தான் அதையும் செய்திருப்பார்கள் என உலகுக்கே தெரியும்!

    நான் பார்பனர்களுக்கு எதிரியல்ல என்பது தாங்களுக்கு தெரியும்! நான் மொத்த சாதியியத்துக்கும் எதிரி!

    (நாத்திகத்தை விட்டேனே குப்புகுட்டிக்கு மேட்டர் கிடைச்சிருச்சு)

    ReplyDelete
  30. //ஆனால் அவர்களுக்கு நீ உயர்சாதி, அவன் தாழ்ந்த சாதி என்று சொல்லிக்கொடுத்ததே பார்பனீயம் தானே!

    நிலப்புரபுக்களின் சொத்தில் சொகுசு வாழ்க்கை வாழவேண்டி, உனக்காக கடவுளிடம் பேசுகிறேன் என்று ஏமாற்றி பிழைத்தது யாரோ!?//
    தவறான தகவல். முற்றிலும் மறுக்கிறேன். பார்ப்பனர்கள் சொன்னார்கள் என்றீர்கள், அதை கேட்க மற்றவர்கள் இளிச்சவாயர்களா? யாரிடம் இந்தக் கதை? எவ்வளவு நாட்களுக்குத்தான் இம்மாதிரி ஒற்றை பரிமாணத்தில் சிந்திக்க போகிறீர்கள்? அதுவும் தத்தம் சாதியினர் செய்யும் வன்கொடுமைகளை மறைக்கும் முயற்சியாகவே நான் இதை பார்க்கிறேன்.

    மற்றப்படி பார்ப்பனர்களை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர்களை உங்களால் ஒரு முடிகூட எடுக்கவியலாது. வேலையில்லையா போடா வவ்டேகாபால் என்று வேலை கிடைக்கும் இடத்துக்கு செல்வார்கள். நீங்கள் ஒரு முறைகூறியது போல வெளி நாட்டுக்கு சென்று ப்ரைன் ட்ரைன் ஏற்பட்டதுதான் நடக்கும்.

    இங்கு பலர் தத்தம் சாதியை வெளிப்படையாகக் கூறாததற்கு பெரும்பான்மையான காரணமே அவரவர் சாதி வெளியில் கூறவே யோக்கியதை இலாதிருந்திருக்க வேண்டும்.

    அவர்கள் சாதி தெரிய வேண்டுமானால் ஏதாவது கட்சியின் சார்பில் தேர்தலுக்கு நிற்பதற்கு விண்ணப்பித்து பார்க்கட்டும், அவன் மட்டுமல்ல அவன் தாத்தாவும் தன் சாதியை கூற வேண்டும். அப்போது மட்டும் இனிக்கிறதா சாதி?

    அடப்ப்போங்கப்பா இம்மாதிரி ஆஷாடபூதித்தனமா பாப்பானை மட்டும் திட்டறவன் எவனையுமே நான் மதிப்பதில்லை.

    அம்புடன்,
    டோண்டு ராகவையங்கார் (ஸ்பெல்லிங் பிழை இல்லை)

    ReplyDelete
  31. //பார்ப்பனர்கள் சொன்னார்கள் என்றீர்கள், அதை கேட்க மற்றவர்கள் இளிச்சவாயர்களா?//

    பெரியாருக்கு முன்பு வரை அப்படித்தானே இருந்திருக்கிறார்கள்!

    பார்ப்பனர்கள் எங்கு சென்று பிழைத்தால் எனக்கு என்ன வந்தது!, சாதியை ஏன் அதனுடன் சேர்த்து வளர்க்க வேண்டும்!

    இன்னொரு விசயம், நான் ஏன் பார்பனர்கள் மயிரை புடுங்க வேண்டும்!,
    பூசாரி பார்பனர்கள் வேண்டுமானால் எனக்கு வந்து சிரைக்கலாமே!

    இன்னொரு சாதி வெறியரிடம் நடந்த உரையாடல் இந்த பதிவின் பின்னூட்டத்தில் உள்ளது, எனது வேலை சாதியை எதிர்ப்பது தான்

    ReplyDelete
  32. @வால்பையன்
    அதே பெரியார்தான் கீழ்வெண்மனியில் 44 ஹரிஜனங்களை உயிருடன் எரித்தது சகநாயுடு என்றதும் கள்ளமௌனம் சாதித்தார். (பை தி வே அவரது சாதி கன்னட பலீஜார் நாயுடு. நாயக்கர் என்பது அவரது சாதியினர் தங்களைத் தாங்களே அழைத்து கொண்டது). போயும் போயும் பெரியார்தானா கிடைத்தார்? நீங்கள் சுட்டும் தலித்து வன்கொடுமைகளுக்கு எதிராக எந்த தமிழக கிராமங்களில் அவர் கொடிபிடித்தார் என்பதை தேடிப் பாருங்கள்.

    வைக்கம் போராட்டம் கேரளாவில் காங்கிரசில் அவர் இருந்தபோது செய்தது. அதற்கு பிறகு ஏதேனும் ஒரு போராட்டம், இரட்டைகுவளைத் திட்டத்துக்கு எதிராக, 44 தலித்துகளை எதிர்த்ததற்கு எதிராக அவர் தலைமை தாங்கி நடத்தியுள்ளாரா? யோசியுங்கள்? வ்விரமணிக்கு சாப்பாடே அவரது கொள்களை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்வதில் உள்ளது. நீங்கள் என்ன கூறுவீர்கள்?

    மற்ற உயர் சாதியினர் செய்யும் வன்கொடுமைகளுக்கு அலிபையாக அவர் கண்டுபிடித்ததுதான் பார்ப்பனீய எதிர்ப்பு. அது தெரிந்தோ தெரியாமலேயோ அவர் துதி பாடுபவர்கள் ஒன்று அப்பட்ட சந்தர்ப்பவாதி அல்லது அடிமுட்டாள். சாய்ஸ் அவர்களுடையது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  33. கீழவெண்மணியில் பெரியார் செய்தது அப்பட்டமான துரோகம் தலித்துகளுக்கு, அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை!

    நான் பெரியாரின் தொண்டனும் அல்ல, அதே நேரம் பார்ப்பனர்களை எதாவது கேட்டால் பெரியார் ஒழுங்கா என்று கேட்பதும் சரியல்ல,

    பிரச்சனை எங்கே ஆரம்பித்தது!?

    சாதி என்பது பிறப்பால் என்று ஆகிவிட்ட பின்னர் ஒன்றும் செய்ய முடியாது என திருவாய் மலர்ந்தது தாங்கள் தான்!

    பிறக்கும் போதே பூனுலுடன் ஒருவர் பிறந்திருந்தால் நான் ஏன் இதை பற்றி பேசப்போகிறேன்!

    ReplyDelete
  34. சாதியைக் கற்பித்தவன் பார்ப்பான் என்ற கோட்பாட்டை இன்னுமா நம்பிகிட்டு இருக்கானுங்க ?

    இப்பவே வெரும் 2% தான் இருக்கும் ஒரு கூட்டம் வந்து மீதி 98 % இருக்கும் கூட்டத்தைப்பார்த்து, 40% உயர் சாதி, 30% கீழ் சாதி, 18% வேறு சாதி என்று சொல்லியவுடன் எல்லோரும் வாயில் விரலை வைத்துக்கொண்டு கேட்டுகொண்டு இருந்தனரா ?
    அப்புறம், பெரியார் என்ற மாமனிதர் தோன்றினார், அவர் அது எப்படி என்று எதிர்த்துக் கேள்வி கேட்டாரா ?

    இப்படியெல்லாம் சொன்னால் மூளையிருப்பவன் எவனாவது நம்புவானா ?

    அப்படித்தான் நம்பு! இல்லின்னா நீ பார்ப்பானப்பயங்கரப்பாசிசவாதி...என்கிறீர்கள். கேட்டால் பகுத்தறிவு என்று விளக்கம் கூறுகிறீர்கள்.

    என்னமோ போங்க, உங்களை மாதிரி நல்லது தீயதை பகுக்கத் தெரியாத அறிவு எனக்கில்லை.

    ReplyDelete
  35. (நாத்திகத்தை விட்டேனே குப்புகுட்டிக்கு மேட்டர் கிடைச்சிருச்சு)

    இப்படி உங்க கனவுல வருகிற அளவுக்கு ஆயிட்டனே.........

    ஆனாலும் இந்த தடவை அநியாத்துக்கு கேட்ச் கொடுத்து கொடுத்து அவுட் ஆகிக் கிட்டே இருந்துதிட்டிங்களே !!

    சண்டேன்னா இரண்டு ஒன்டேன்னா 50 ஓவர் அதுக்கு மேல ஆடப்படாது. மேட்ச் தான் முடிஞ்ச்சிருச்சேன்னு நான் இங்க வரல, அனுபவமுள்ள பதிவர்கள் கலக்குங்க !!

    ReplyDelete
  36. //நான் பெரியாரின் தொண்டனும் அல்ல, அதே நேரம் பார்ப்பனர்களை எதாவது கேட்டால் பெரியார் ஒழுங்கா என்று கேட்பதும் சரியல்ல,//
    பெரியாரை உங்கள் பின்னூட்டத்தில் நீங்கள்தான் விதந்தோதினீர்கள் (பெரியாருக்கு முன்பு வரை அப்படித்தானே இருந்திருக்கிறார்கள்)!.

    அதற்குத்தான் அந்த மனிதர் தனது மற்றும் பார்ப்பனர் அல்லாத ஏனைய உயர்சாதியினருக்கு பாதுகாப்பாகவே பார்ப்பன எதிர்ப்பை பயன்படுத்தினார் என்று எடுத்து காட்டினேன். மற்றப்படி சுயஜாதி அபிமானி என்றுதான் நிறுவினென். வைக்கத்துக்கு பிறகு வன்கொடுமைக்கு எதிராக அவர் எந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். ஆச்சரியப்படுவீர்கள்.

    மற்றப்படி நான் ஒன்றும் திருவாயெல்லாம் மலரவில்லை, சோவின் எங்கே பிராமணனில் கூறியதைத்தான் கோட் செய்தேன்.

    அப்படியும் பார்ப்பனனாக ஆசைப்பட்டால் பூணலைப் போட்டுக் கொள்ளுங்கள், அருண் ஐயங்கார் என கூறிக்கொள்ளுங்கள்.

    ஏற்கனவே லக்கிலுக் வடகலை ஐயங்கார், கோவி கண்ணன் தென்கலை ஐயங்காரெல்லாம் புதிதாக எங்கள் சாதிக்கு வந்துள்ளார்கள். நீங்களும் வரலாம். உங்களைத் தடுக்க யாருக்குமே உரிமை இல்லை.

    ஆனால் வருவதற்கு முன்னால் ஒன்றை நினைவில் வைக்கவும். பார்ப்பனர்கள் இப்போது அனுபவிக்கும் அரைவேக்காட்டுப் பேர்வழிகளின் வெறுப்பை நீங்களும் சுமக்க நேரிடும். தைரியம் இருந்தால் வாருங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  37. //பார்ப்பனனாக ஆசைப்பட்டால் பூணலைப் போட்டுக் கொள்ளுங்கள், அருண் ஐயங்கார் என கூறிக்கொள்ளுங்கள். //

    என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே!

    சாதியே ஒழியனும்னு சொல்லிகிட்டு இருக்கேன் நான்!

    ReplyDelete
  38. இன்று தமிழ் சங்க விழாவில் ஒருவர் சொன்னார், நம் சங்கப் பதிவில் எழுதியதை வைத்து டோண்டு பதிவில் ஒரு சச்சரவு என்று. வந்து பார்த்தால்தான் தெரிகிறது. :-)

    என்ன தமிழ்/ஆங்கிலம் பேசுவதில் ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டீர்கள் அனைவரும். தங்கவேல் சொல்வதுபோல் - டாபிக்குக்கு வாங்க, டாபிக்குக்கு வாங்க...

    ReplyDelete
  39. //All the tamil brahmins talk with their children in English only.

    The non-brahmin dravidians talk in Tamil only even in USA.//
    இது உண்மையான்னு யாரேனும் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் சொல்லுங்கப்பூ.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  40. இங்கும் அதே நிலைமை தானா. திருந்த மாட்டீங்களே.
    அமெரிக்க சங்கங்களில் ஆங்கிலம் பேசுவதற்கு நம்ம ஊர் அரசியல் வாதிகளும், பார்ப்பனர்களும் என்று சாடுகிறீர்களே. உங்களுக்கு வெட்கமாக இல்லை. பேசுவது நீ தானே. சாதியையும், அரசியலையும் விட்டு விட்டு உன் திறமையை வெளி கொண்டு வா.
    பைபிளில் சொல்லுவது போல் "வறியவனை தன சகோதரனே ஏற்று கொள்ள மறுக்கிறான்" நீ உன் சக தமிழனை ஏன் ஏற்று கொள்ள மறுக்கிறாய்? அவனிடம் ஏன் தமிழ் பேச மறுக்கிறாய். உன்னை நீயே ஏமாற்றுகிறாய். அவனை பார்ப்பனன் என்றோ, வறியவன் என்றோ பார்க்காதே. அவனை மேன்மை அடைய செய், நீ மேன்மை அடைவாய். உன் தமிழ் வளரும்.

    வேதாந்தி

    ReplyDelete
  41. /*
    அதே பெரியார்தான் கீழ்வெண்மனியில் 44 ஹரிஜனங்களை உயிருடன் எரித்தது சகநாயுடு என்றதும் கள்ளமௌனம் சாதித்தார். (பை தி வே அவரது சாதி கன்னட பலீஜார் நாயுடு. நாயக்கர் என்பது அவரது சாதியினர் தங்களைத் தாங்களே அழைத்து கொண்டது). போயும் போயும் பெரியார்தானா கிடைத்தார்? நீங்கள் சுட்டும் தலித்து வன்கொடுமைகளுக்கு எதிராக எந்த தமிழக கிராமங்களில் அவர் கொடிபிடித்தார் என்பதை தேடிப் பாருங்கள்.
    */

    தோழர் டோண்டு அவர்களே,

    முதல்ல கீழ்வெண்மணி பிரச்னை யார் யாருக்கு இடையே நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அதில் பெரியார் கண்டுகொள்ளவில்லை என்று எந்த ஆதாரத்தை வைத்து சொல்லுகீர்கள். பார்பான் புளுகு சமுக்கலத்தில் வடிகட்டிய புளுகு என்பதை நன்றாக நிருபணமாகிறது .

    1968 ஆம் ஆண்டு நடந்த அந்த கொருற சம்பவத்தில் இறந்தவர்கள் அனைவரும் ஆதிதிராவிடர்கள். நிலபிரபுகளின் ஆதரவாளரான பக்கிரிசாமி என்பவர் வெட்டி கொலை செய்யயப்பட்ட தொடர்ந்து காவல்துறை சென்று வழக்கு தொடுப்பதை விட்டு அதற்க்கு மாறாக சட்டத்தை கையில் எடுத்துக்கொண்ட நிலப்பிரபுகள் சிலர் காடுமிரண்டிதனமாக வீடுகளுக்கு தீ வைக்கவே அதனை உயிர்களும் தீக்கிரையான கொடூர சம்பவம் நடந்தேறியது.

    இந்த செயிதி கேட்டு துடித்து போன அண்ணா உடனே அன்றைய பொதுபணிதுறை அமைச்சராக இருந்த கலைஞர் மற்றும் சத்தியவாணிமுத்து,மாதவன் உடனடியாக நாகை அருகே உள்ள வெண்மணிக்கு சென்று சம்பவத்தை பார்த்து உடனே காவல்துறைக்கு கட்டளை பிறப்பித்து நடவடிக்கை எடுத்தார்கள். அதன் பிறகு அண்ணா இறந்து மீண்டும் கலைஞர் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பொழுது காவல்துறை அதிகாரிகளை மாற்றி புதிய அதிகாரிகளிடம் விசாரணை நடதசொல்லி தீ வைத்து கொளுத்திய கொடும்பாவிகளை கண்டறிய உதரவிட்டது.

    எனவே அன்று ஆட்சி பீடத்தில இருந்தவர்கள் பெரியாவா சீடர் இல்லை, பார்பன அடிவருடி இல்லை. அன்று ஆட்சி புரிந்தவர் ஆரிய மாயை எழுதியதற்காக சிறயில் அடைக்கப்பட்ட பேரறிங்கர் அண்ணா அவர்கள். பெரியாரின் தொண்டர். பெரியாரிடம் பயிற்சி எடுத்த ஆயிரம் ஆயிரம் தொடர்கள் தான் அன்று இந்த வெண்மணி பிரச்சனைக்கு எதிராக குரலை எழுப்பினர். பெரியார் சொல்லாமலா அவர் வழி வந்தவர்கள் இதனை செய்தார்கள். சும்மா நீங்க புளுக இது ஒன்னும் உங்க புராணமோ, இதிகாசமோ, வேதமோ , சாஸ்திரமோ இல்லை டோண்டு அவர்களே........இது ஒரு துயர சம்பவம் இதனையும் கூட உங்க பார்பன விசமதொடோ தினமலர் பாணியிலே எப்படி பதில் கூற முடியுது........? பெரியார் சும்மாவா சொன்னார் பார்பான் சுய இன நன்மை ஒன்றே குறிக்கோளாக வச்சு எதையும் செய்வன் என்று...........சட்டம் தப்புன்னு சொல்லுறத உங்க வேதம் சரின்னு சொல்லுதுன்னு சொல்லி எதை வேணும் என்றாலும் செய்யும் கூட்டம் ....இன்னும் எவளவு நாள்தான் இந்த தமிழர்களிடம் புளுகபோகுதோ......................

    ReplyDelete
  42. /*
    வைக்கம் போராட்டம் கேரளாவில் காங்கிரசில் அவர் இருந்தபோது செய்தது. அதற்கு பிறகு ஏதேனும் ஒரு போராட்டம், இரட்டைகுவளைத் திட்டத்துக்கு எதிராக, 44 தலித்துகளை எதிர்த்ததற்கு எதிராக அவர் தலைமை தாங்கி நடத்தியுள்ளாரா? யோசியுங்கள்? வ்விரமணிக்கு சாப்பாடே அவரது கொள்களை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்வதில் உள்ளது. நீங்கள் என்ன கூறுவீர்கள்?
    */

    1957 நடத்திய சாதிஒழிப்பு போராட்டம் என்ன என்ற வரலாறு தெரியும். இந்தியாவில் அது எவளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தெரியுமா.......அவர்னடதிய இந்த சாதிஒழிப்பு போராட்டம் ரெட்டைகுவளை முறைக்கும் சேர்த்துதான் அவர் சட்ட நகலை எரிக்க சொன்னார். சும்மா பார்பன விசமதொடு ரொம்போ ....தலித்து மேல பொறுப்பு உள்ளவர் போல எழுதி உள்ளீர்.......ரொம்ப நீங்க செய்ய வேண்டாம் நங்கநல்லூர்ல இன்னிக்கும் வாடகைக்கு வீடு கேட்டுப்போன...நீ பார்பனனா? இல்ல வீடு கிடையாது .......முதல்ல அத சரிபன்னுக டோண்டு .........அப்புறம் நீங்க தலித்துக்கு யார் யாரெல்லாம் போராட்டம் நடத்தி உரிமை வாங்கி கொடுதங்கன்னு பட்டியல் போடலாம்.....எங்க உரிமைய மீட்க்க எங்களுக்கு பெரியார் காட்டிய வழி இருக்கு.........பார்பனர்கள் யாரும் கவலைப்பட தேவை இல்லை.............

    ReplyDelete
  43. ஐயா சங்கமித்திரன்,

    உளறுவது நீங்கள்தான். கீழ்வெண்மணி நிகழ்வு நடந்தபோது எனக்கு வயது 22. நன்றாக நினைவு இருக்கிறது. நீங்கள் அப்போது பிறக்கக்கூட இல்லை.

    பெரியாரின் அறிக்கையே அது பற்றி இருக்கிறது, சவசவவென்று. கூகளிட்டு பார்த்து புரிந்து கொள்ளவும். வைக்கத்துக்கு பிறகு பெரியார் வன்கொடுமைகளை எதிர்த்து எவ்வளவு ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினார் என்பதை கண்டுபிடிக்க முயலுங்கள். ஏமாற்றம்தான் அடைவீர்கள்.

    அண்ணா பெரியார் சொல்லாமலா செய்திருப்பார் என்பதெல்லாம் உங்கள் ஊகமே. எனக்கு அந்த ஊகமெல்லாம் தேவைப்படவில்லை. நேரிலேயே பார்த்தவன் என்றமுறையில் கூறுகிறேன், பெரியார் பார்ப்பனரல்லாத உயர்சாதியினருக்கு வக்காலத்து வாங்கியவர்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  44. //1957 நடத்திய சாதிஒழிப்பு போராட்டம் என்ன என்ற வரலாறு தெரியும். //
    என்ன புடலங்காய் வரலாறு? அக்காலக்கட்டத்தில் பெரியார் செய்தது பிறாமணாள் ஹோட்டல் என போர்டுகளில் போட்டதை அழிக்கும் போராட்டம். திருவல்லிக்கேணி முரளி கஃபேயில் வைத்து நடக்கும். பெரியார் தார் போட்டு அழித்ததும் செதுக்கிய பிறாமணாள் ஹோட்டல் என்னும் எழுத்துக்கள் இன்னும் ஜொலித்தன என்பதே நிஜம். பெரியார் செய்தது ஒரு கேலிக்கூத்து. போடா ஜாட்டான் என முரளி கஃபே அதிபர் முரளி அய்யர் செயல்பட்டார்.

    பிறகு காஞ்சிப் பெரியவாள் சொல்லி அவராகவே அந்த எழுத்துக்களை செதுக்கி எடுத்தார்.

    மறுபடியும் கூறுகிறேன், பிற்காலத்தில் வீரமணி வகையறாக்கள் எழுதி வைத்த புளுகையெல்லாம் நம்பிக் கொண்டிருந்தால், அவரது மகனுக்கே திகவின் சொத்துக்களை தாரைவார்த்து கொடுப்பதை ஆதரிப்பதைத் தவிர உங்களைப் போன்றவர்களுக்கு வேறு ஆப்ஷன் இராது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  45. நாங்கள் எல்ல போராட்டதும் கற்று தான் வைதிருக்கிறோம். அவளவு போராட்டம் நடத்தவில்லை என்றால் இன்று தமிழ்நாடே நங்கநல்லூர் மாரிதான் இருக்கும்.............

    ReplyDelete
  46. ஐயா சங்கமித்திரன்,

    உங்களுக்கு சிரமம் வைக்கக்கூடாது என பெரியாரின் கீழ்வெண்மணி அறிக்கையை உங்கள் சார்பு கீற்று வலைப்பூவிலிருந்தே தருகிறேன்.

    "தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.

    தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

    நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''

    அந்த வலைப்பூவின் சுட்டி: http://www.keetru.com/kuthiraiveeran/june06/selvam

    இப்போது கூறுங்கள் உயிரிழந்த 42 பேர் யார் என்பதையாவது பெரியார் கூறினாரா? ஒப்புக்காவது வருத்தம் தெரிவித்தாரா?

    போய் ஒழுங்காக சரித்திரம் படித்துவிட்டு வாருங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  47. பெரியாவாலின் வடிகட்டிய புராண புளுகையும் விட யாரும் புளுகி விட முடியாது.................

    ReplyDelete
  48. /*
    பிற்காலத்தில் வீரமணி வகையறாக்கள் எழுதி வைத்த புளுகையெல்லாம் நம்பிக் கொண்டிருந்தால், அவரது மகனுக்கே திகவின் சொத்துக்களை தாரைவார்த்து கொடுப்பதை ஆதரிப்பதைத் தவிர உங்களைப் போன்றவர்களுக்கு வேறு ஆப்ஷன் இராது.
    */


    பார்பனியத்தின் மனுதர்மம் என்ன சொல்லுகிறது....

    சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்

    1 யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
    2 யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன்
    3 பிராமணனிடத்தில் பக்தியால் ஊழியன்ச் செயிகிறவன்
    4 விபச்சாரி மகன்
    5 விலைக்கு வங்க பட்டவன்
    6 ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
    7 தலைமுறை தலைமுறையாக ஊழியம் செயிகிறவன் (அத்.8 . சு.415)

    பிராமணன் உண்டு மிகுந்த உணவு (எச்சில்),உடுத்தி கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம் (பதர்) இவைகளைப் பிராமணன், சூத்திரன் ஜீவனத்திற்கு கொடுக்க வேண்டும். (அத்.10. சு.125)

    சூத்திரனை கூலி கொடுத்தோ , கொடமலோ பிராமணர் வேலை வாங்கலாம். பிராமணனுக்கு தொண்டு செய்யவே சூத்திரனை பிரம்மா படைத்திருக்கிறார் (அத்.8. சு.413)

    சூத்திரன் பிராமணர்களை திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும் (அத்.8. சு.270)

    சூத்திரன், பிராமணன் பெயர் சாதி இவைகளை சொல்லி திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள இரும்பு கம்பியை காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டும் (அத்.8 .சு.271)

    சூத்திரன் தன் தொழிலை விட்டு உயர்குலத்தொனுடைய தொழிலை செயிதால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக்கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திடவேண்டும் (மனு அத்.10. சு.96)

    இதனை தான் பெரியாரும் அவர் வழி வந்தவர்களும் எழுதி உள்ளார்கள்....ஏதும் ஆதாரம் இல்லாமல் எழுதவில்லை...

    ReplyDelete
  49. இத சுட்டி போல் ஆயிரம் எதிர்வினைகள் பெரியாருக்கு இருக்கிறது ....தலித்துக்கு எதிரானவர் என்று.......நீங்கள் கூறிய அந்த மருவினயிலையே ......பதிலும் உள்ளது ....பெரியாரின் கண்டனம்.......

    நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''

    ReplyDelete
  50. ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது.

    காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி(த்தான்) ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது! சட்டம் மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் விட்டார்கள்.

    ‘புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன´ மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக் கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆகவேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.

    எந்த மனிதனும் ‘அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத´ நிலை ஏற்பட்டு விட்டது. ‘சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்தியாகவும் மற்றும் மந்திகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும்´ என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.

    இந்த நிலையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்´ கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால்:

    1.காந்தியார் கொல்லப்பட்டார்.

    2.தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன.

    3.போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர்.

    4.நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன.

    5.கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42-பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42-பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காயங்களாகும்.

    சட்ட விரோதமான, பலாத்காரமான, நாசவேலைகளான காயங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காயங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை; சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.

    சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழிவாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100-க்கு 90-பேர்களாக இருக்கிறார்கள்.

    அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல், அமைச்சர்கள் ‘நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் ‘எங்களுக்கு மேலாக´ இருப்பதால் எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை´ என்கிறார்கள். மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றத்தன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள்.

    அவற்றைக் கண்டுபிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.


    - [கீழ்வெண்மணியில் 42-தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை, ‘விடுதலை´ 28.12.1968.)

    ReplyDelete
  51. அந்த நீண்ட அறிக்கையில்:
    1. கொலை செய்வித்த கோபாலகிருஷ்ண நாயுடுவின் பெயரை கன்னட பலீஜார் நாயுடு இனத்தைச் சேர்ந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏன் குறிப்பிடவில்லை?
    2. 42 தலித்துகள் இறந்ததற்கு எவ்வித வருத்தமும் ஏன் தெரிவிக்கப்படவில்லை?
    3. பண்ணையார் பெயர் கோபால கிருஷ்ண அய்யராக இருந்திருந்தால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்னவெல்லாம் கூறியிருப்பார்?

    பகுத்தறிவை உபயோகியுங்கள். அவர் பலமுறை சொன்னது போல தனது கட்சிக்கு வருபவர்கள் பகுத்தறிவை கழற்றிவிட்டுத்தான் வரவேண்டும் என அவர் கூறியதையே இன்னும் பிடித்து தொங்காமல்தான் இருங்களேன்.

    அவர் அறிக்கை எவ்வளவு சவசவவென்று இருந்தது என்பதை உங்கள் மேற்கோளே காட்டிவிட்டது.

    அதிலும் 3.ல் குறிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் அவரால் ஆக்ரோஷமாக எதிர்க்கப்பட்ட 1965-ஆம் ஆண்டின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்தன. அப்போராட்டத்தை நடத்தியது அவர் 1968-ல் ஆதரித்த அண்ணாதுரைதான். என்ன முரண்பாடு பெரியாரிடம்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  52. முதலில் அறிக்கையே விடவில்லை என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இப்பொழுது அறிக்கை காண்பித்தால் குறிப்பிட்டு வருத்தம் சொல்லவில்லை என்கீரிர்கள். என்ன அய்யா உங்கள் வாதம்.

    கோபாலகிருஷ்ண நாயுடு என்று நீங்கள் கூறுவது அவர் அறிக்கை விட்ட பிறகு பொலிசாரால் கண்ட்பிடிக்கபட்ட ஒன்று. நீங்கள் அவர் அறிக்கை நன்றா படியுங்கள், குற்றம் செய்தவர்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுங்கள் என்பதுதான். எதனையும் தீர விசாரிக்காமல் அவர் பெயரை குறிப்பிட்டு அறிக்கை விடுவது அவளவு நல்லதா?

    இந்த அறிக்கையே அவர் வருந்தியதால் தான் எல்லாம் சேர்த்துதான் எழுதியுள்ளார். இதனை குறிப்பிட்டு வருத்தபடுகிறேன் என்று சொல்ல அவர் ஒன்றும் ஒட்டு பொருக்கி அரசியல் பண்ணவில்லை. மக்கள் விடுதலை இயக்கம் கண்டவர் அய்யா. அவர் தன் வாழ்நாள் முழுதுமே அவர்களுக்கா தான் வருத்தப்பட்டார் பட்டுக்கொண்டே இறந்தார். இதில் என்ன குறிப்பிட்டு வருத்தம் சொல்ல.

    அதே போல் பின்னாளில் கோபாலகிருஷ்ண (நாயுடு) யாரோ ஒருவரால் கொலையுண்டார். அதன் பிறகு விசாரணை வேறு மாதிரியாக போய் விட்டது.

    நாங்கள் பகுத்தறிவை பயன்படுத்திதான் அய்யா பழக்கம். புராணம் சொல்லுது என்றோ வேதம் சொல்லுது என்றோ யாரிடம் வாதம் செய்வதில்லை அய்யா.

    ReplyDelete
  53. //முதலில் அறிக்கையே விடவில்லை என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.//
    உளறலுக்கும் ஓர் அளவு வேண்டும் சங்கமித்திரன். அறிக்கையே விடவில்லை என்று எங்கே சொன்னேன்? சவசவ அறிக்கை விட்டார் என்றுதானே கூறினேன்.

    //கோபாலகிருஷ்ண நாயுடு என்று நீங்கள் கூறுவது அவர் அறிக்கை விட்ட பிறகு பொலிசாரால் கண்ட்பிடிக்கபட்ட ஒன்று.//
    அது ஊருக்கே தெரியும், நாயக்கருக்கு தெரியாது எனக்கூறுவதை நம்ப நாங்கள் என்ன பகுத்தறிவை பேச்சில் மட்டும் வைத்திருக்கும் கழகவீரர்களா?

    அப்படியே நான் பெரியார் திடலுக்கு போன பதிவையும் படியுங்கள். பார்க்க,
    http://dondu.blogspot.com/2009/08/blog-post.html

    //இதனை குறிப்பிட்டு வருத்தபடுகிறேன் என்று சொல்ல அவர் ஒன்றும் ஓட்டு பொறுக்கி அரசியல் பண்ணவில்லை.//
    பேஷ், பேஷ், தலித்துகளின் உயிர் போனது குறித்து வருத்தம்கூடத் தெரிவிக்காத நாகரிகம் அற்றவருக்கு நன்றாகவே கொடிபிடிக்கிறீர்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  54. பெரியார் போட்ட போடுல உங்க பார்பன பாம்பு என்ன ஆட்டம் ஆடுது..........நல்லாத்தான் போட்ட்ருக்கர்........அவரு இல்லேன்னா.......இன்னும் என்ன கோட்டம் போடுவிங்க........அதனால தானே இந்த பெரியாரிய எதிருப்பு.........நன்னா இருக்கு....ஆனா நீங்க என்னாதான் பெரியாருக்கு எதிர்ப்ப எவிவிட்டலும் ஒன்னும் பண்ணமுடியாது...........நான் கேட்ட நங்கநல்லூர் கேள்வி மாதிரிதான்......எல்லாத்தயும் மீறி இறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்...அய்யா இதனை போன்ற பதிவுகள் மூலம்..36 வருடம் ஆகியும் அவர் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதற்கு உங்கள் பார்பனிய பாசிசம் நன்னா காண்பிக்கிறது.....

    ReplyDelete