நிரந்தர பக்கங்கள்

10/08/2009

பெரியாரின் பொருந்தாத் திருமணம்

இது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்:

“ஜூலை 1949 திராவிடக் கட்சிகளின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்றால் மிகையாகாது. அம்மாதம்தான் ஈ.வே.ரா. அவர்கள் மணியம்மையாரைப் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டார். அதை எதிர்த்தனர் அண்ணாத்துரை, ஈ.வி.கே. சம்பத் ஆகியோர். அதன் விளைவாக தி.மு. க. பிறந்தது என்பது மேலோட்டமாகப் பார்க்கப்படும் செய்தி.

அறுபதுகளிலும் இத்திருமணம் விவாதிக்கப் பட்டு வந்தது. 1964-ல் வெளியானப் படம் "பணக்காரக் குடும்பம்". எம்.ஜி.ஆர். நடித்தது. அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடி விட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். அதைப் பற்றி எழுதும் போது குமுதம் தி.மு.க. வினர் இன்னும் பெரியார் திருமணத்தால் தங்களுக்கு ஏற்பட்டப் பாதிப்பிலிருந்துத் திரும்பவில்லை என்று விமரிசனம் செய்தது. அதே படத்தில் கடைசிக் காட்சியில் கதாநாயகனின் தந்தை அவனுடன் வந்து சேர்ந்துக் கொள்ளும் போது, குமுதம் அதே விமரிசனத்தில் "திருந்தி வந்தப் பெரியார்" என்று ஒரு உப-தலைப்பைக் கொடுத்தது. இது நான் நேரடியாகப் படித்தது”.


“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்புக் கொடுத்து அண்ணாதுரை 1940-ல் விடுதலையில் இவ்வாறு எழுதுகிறார்:

“தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்தமனைய உடலே” படைத்த 72 வயதான ஒரு பார்ப்பனக் கிழவர், ”துள்ளுமத வேட்கைக் கணையாலே” தாக்கப்பட்டு கலியாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.

வயது 72! ஏற்கெனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டியும் பேரன் பேத்தியும் பெற்றவர். இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்தியாவில், எத்தனை முறை வேண்டுமானாலுந்தான் ஆண்மகன் கலியாணம் செய்து கொள்ளலாமே!

பெண்தானே, பருவ மங்கையாயினும் பட்டாடை உடுத்திக் கொண்டு பல்லாங்குழி ஆடி விளையாடும் சின்னஞ்சிறு சிறுமியாயினும், மணமாகிப் பின்னர் கணவன் பிணமானால் விதவையாகிவிடவேண்டும்.

இளமை இருக்கலாம். ஆனால் இன்பவாழ்வுக்கு அவள் அனுமதி பெற அந்தக் கூட்டம் அனுமதிப்பதில்லை. அவளது விழி, உலகில் உள்ள வனப்பான வாழ்க்கைச் சித்திரங்கள் மீது பாயலாம்.

ஆனால் என்ன பயன்? விம்மி விம்மி வாழலாம் விதவைக்கோலத்துடன். இல்லையேல் விபச்சாரியாகலாம். மறுமணத்துக்கு மார்க்கம் மலர் தூவியதாக இல்லை. கல்லும் மண்ணும் முள்ளும், குருட்டுக் கொள்கையினரின் முரட்டுப் போக்கும், சாத்திரமெனும் சேறும் நிரம்பியதாகவன்றோ இருக்கிறது.

அவள் பதினெட்டு ஆண்டுள்ள பாவையாக இருக்கலாம். மலர்ந்த மலராக இருக்கலாம். வாடை சுற்றுப்பக்கம் எங்கும் வீசலாம். அவளது தகப்பனார் மூன்றாம் மனைவியுடன் கொஞ்சிக் குலாவும் காட்சி அவளது கண்களில் படலாம்.

ஆனால் பூவிழந்த பூவை புத்தி கெட்டவர்களின் போக்கிரித்தனமான பொறியாகிய வைதிகத்தால் வாட்டப்பட்டு, நீலநிற வானத்திலே நின்றுலவும் நிலவைக்கண்டும், பாதி இராத்திரி வேளையிலே பலப்பல எண்ணியும், பாழான வாழ்வு வாழ வேண்டும். இல்லையேல் தொட்டிலில் கிடத்திச் சீராட்டிப் பாலூட்டி வளர்க்க வேண்டிய குழந்தையை, பாழும் கிணற்றில், கழுத்தை நெரித்து வீசவேண்டும்!

பேதைப் பெண், ஏன் இவ்வளவு துடுக்கு? இவ்வளவு பதைப்பா? என்று ”பெரிய பெரிய” மனிதர்களெல்லாம் கேட்பர் கோபத்துடன். எனவே பசித்தபாவை, பஞ்சத்தில் அடிபட்டு நசித்துவிடுவாள்.

ஆண் மகனுக்கென்ன; எத்தனை முறை வேண்டுமாயினும் மணம் செய்து கொள்ளலாம். காசநோய் இருக்கலாம். ஆனால் இதற்காக வேண்டி மணம் செய்து கொள்ளாதிருப்பானா? ஊரார், உனக்குக் காசம் இருக்கிறது. மணம் ஏன்? என்றா கேட்பர்! இல்லை! காசநோயால் கஷ்டப்படும் இவனுக்குக் காலமறிந்து கனிவுடன் ‘மருந்துதர’ ஒரு மங்கை நல்லாள் தேவை என்றுதான் கூறுவர். சட்டம் குறுக்கே நிற்காது. சமுதாயம் ஏனென்று கேட்காது. கொட்டு முழக்குடன் மங்கல ஒலியுடன் மணம் நடக்கும். மூன்றாம் முறையாயினுஞ் சரி, ஐந்தாம் ஆறாம் முறையாயினுஞ் சரி ஆண் மகனுக்கு அந்த உரிமை உண்டு! அக்ரமம்! என்று கூறுவர் அறிவாளிகள்.

ஆம்! அக்கிரமந்தான். ஆனால் கேட்பவர் யார்? கேட்டனர். ஒரு ஊரில்! கேட்டது மட்டுமல்ல, குறுக்கே நின்று இத்தகைய கூடா மணத்தைத் தடுத்தும் விட்டனர். தடுத்ததோடு நிற்கவில்லை. மணமகளை அதே நேரத்தில் தக்க மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். அத்தகைய சீரிய செயல் புரிந்த சீலர்களை நாம் பாராட்டுகிறோம்.

கல்கத்தா அருகேயுள்ள மைமன்சிங் என்ற ஊரில், 72 வயதுள்ள பார்ப்பனக் கிழவனொருவன் இளமங்கை யொருத்தியை மணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தான்.

பொன் அவிர் மேனியளைக் கிழவன், தன் பிண உடல் காட்டி எங்ஙனம் மணத்துக்குச் சம்மதிக்கச் செய்ய முடியும்! வாலிபம் இல்லை அவனுக்கு. ஆனால் பணம் இருக்கிறது. பெண்ணின் பெற்றோர் பணத்தைக் கண்டனர். கிழவனின் பெண்டாகப் போயினும், கை நிறையப் பொருள் இருக்குமல்லவா! மணத்துக்கு ஒப்பினர். சகல ஏற்பாடுகளும் நடைபெற்றன.

அந்த ஊரில் இந்தக் கிழவரின் கூடாத் திருமணத்தைத் தடுக்க வேண்டிப் பலரும் சென்று பலப்பல கூறினர்; கிழவர் கேட்டாரில்லை. திருமண நாள் குறித்துவிட்டார். மணப்பந்தல் அமைத்துவிட்டார். மங்கல ஸ்நானம் செய்தார். பட்டுடுத்திப் பணிபூண்டு, பரிமளம் பூசிப் பார்ப்பனக் கிழவர் பரிதாபத்துக்குரிய பாவையை மணமுடித்துக் கொள்ளப் பக்குவமானார்!

மைமன் சிங் ஊர்வாசிகள் கண்டனர். இந்த அக்ரமத்தை எப்படியேனும் தடுத்தே தீர வேண்டும் என உறுதி கொண்டனர். மயிலே மயிலே இறகுபோடு என்றால் போடுமா! எனவே ஊரில் உறுதி கொண்டவர்கள் உள்ளே நுழைந்தனர். மணக்கோலத்திலிருந்த பெண்ணைத் தூக்கிச் சென்றனர்.

இந்தத் திவ்வியமான திடுக்கிடும் செயல்புரிந்ததில் மூஸ்லீம்களும் இந்துக்களும் ஒன்றுபட்டே உழைத்தனர்.

கிழவர் கல்யாண மண்டபம் வந்தார். காலி இடத்தைத் தான் கண்டார். கடுகடுத்தார். முகம் சுளித்தார். கா, கூவெனக் கூவினார்.

இடையே அந்த இளமங்கையைத் தக்கவனொருவனுக்கு ஊராரே மணஞ்செய்து வைத்தனர்.

கண்டார் கிழவர் காரியம் மிஞ்சி விட்டதை. காரிகை போனால் போகட்டும். கைக்கு ஏதேனும் பொருளாவது வரட்டும் என்று கருதி, தனக்கு நேரிட்ட அவமானத்துக்கு, நஷ்ட ஈடாகப் பணம் கேட்டார்.

இந்தக் கூடாமணத்தைத் தடுக்க குணசீலர்கள், தமக்குள்ளாகவே பணமும் வசூலித்து விருந்தும் நடத்தினர்.

பாராட்டுகிறோம்.

பெண்ணாசைப் பித்துக்கொண்டு அலைந்து அந்தப் பார்ப்பனக்கிழவன் பணப்பேராசை தீர்ந்ததும் போதுமென்று இருந்துவிட்டான். பாவை தக்கனொருவனை மணந்தாள். ”தாத்தா” கட்ட இருந்த தாலியைத் தவிர்த்த, அந்த மைமன்சிங்வாசிகளை நாம் மனமாரப் பாராட்டுகிறோம்.

ஆனால் மைமன்சிங்கில் தடுக்கப்பட்டது போன்ற மணங்களை எத்தனை எத்தனையோ தடுக்கப்படாமல் நடந்தேறித்தான் வருகின்றன! தடுப்பாரில்லையே! அறிவு வளரவில்லையே!

ஏன் இத்தகைய கூடாமணங்களைக் கண்காணித்துத் தடுத்துச் சர்க்கார் முன்வரக்கூடாது என்று கேட்கிறோம். எத்தனை முறை ஊரில் உறுதி கொண்டவர்களால் தடுக்க முடியும்? இத்தகைய மணங்கள் நடக்கவொட்டாமல், நாகரிக சர்க்கார் மாதர் வாழ்வு கெடும் விதத்தில் நடைபெறும் இத்தகைய மூடத்தனத்தை தடுக்க, ஏதாவது வழி செய்ய வேண்டும். ஊருக்கு ஊர் பிரபலஸ்தர்கள், பகுத்தறிவாளர்கள் கொண்ட கமிட்டிகளை சர்க்கார் நிறுவி, இவ்விதமான கூடா மணங்கள் நடைபெற ஒட்டாது தடுக்க அக்கமிட்டிகளுக்கு அதிகாரம் அளிக்கலாம். குடித்துக் கெடுவதை, சூதாடிக் கெடுவதை, விபசாரம் செய்து கெடுவதை, தடுக்க சர்க்கார் சட்டம் செய்து சமுதாயக் கோளாறுகளை நீக்குவது போலவே, இவ்விதமான மணவினைகள் மூலம் மங்கையர் வாழ்வு மிதித்துத் துவைக்கப்படுவதையும் தடுக்கச் சட்டமியற்ற வேண்டும்.

துருக்கியில் கலியாணம் நடப்பதென்றால் மணமகனும், மணமகளும் நோய் ஏதுமின்றி இருக்கின்றனர் என முதலில் டாக்டர் சர்ட்டிபிக்கேட் வாங்கி சர்க்காருக்கு அனுப்ப வேண்டும்.

இந்தூர் சமஸ்தானத்தில் வயதில் அதிக வித்தியாசமுள்ள ஆண் மணந்துகொள்ளக் கூடாது என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. சில சமஸ்தானங்களில் இத்தகைய சட்டமும் இருக்கிறது.

பம்பாய் மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ. அம்மையாரொருவர் 45 வயதுக்கு மேற்பட்ட ஆடவன் 18 வயதுக்குக் குறைவான பாவையை மணப்பதைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டுமென்றம், சிந்து மாகாண சட்டசபையில் பேராசிரியர் கன்ஷாயம், பெண்ணின் வயதுக்கு மேல் 20 வயது அதிகமாக உள்ள ஆடவன் பெண்ணை மணக்கக் கூடாது என்றும் பேசி சட்டங்கள் இயற்ற முற்பட்டனர்.

இத்தகைய சட்டத்தின் அவசியத்தைத்தான் மைமன் சிங் மணவினை எடுத்துக்காட்டுகிறது.

சர்க்கார் கவனிப்பார்களா? சர்க்கார் கவனிக்கும்படி சமூகம் கேட்குமா?
(திராவிட நாடு 10.07-49)


இப்படி அதிக வயதுள்ள ஆண் மிகக் குறைந்த வயதுள்ள பெண்களை மணக்கக்கூடாது என்று பல கட்டுரைகள் - பல பிரசாரத்தின் மூலம் திராவிடர் கழகம் சொன்னது. இதை ஈ.வே. ராமசாமி நாயக்கரும் ஆதரித்தார்.

ஆனால் அதே பெரியார்தான் தானே ஒரு பொருந்தாத் திருமணம் செய்து தனது சீடர்களின் மூக்கை உடைத்தார். அத்தருணத்தில் தான் செய்ததை இராம. அரங்கண்ணல் இவ்வாறு கூறுகிறார் :-

”பழைய குடியரசு ஏட்டில் இருந்து பெரியாரின் பழைய பேச்சுகளை அடிக்கடி விடுதலையில் மறுபிரசுரம் செய்வேன். அதற்காக ஏடுகளை புரட்டிக் கொண்டிருந்தபோது பொருந்தாத திருமணம் பற்றிய பேச்சு கண்ணில் பட்டது. ஒரு இளம் பெண்ணை வயதானவர் கட்டிக்கொள்வது சரியல்ல என்கிற பேச்சு. அதை அப்படியே வெட்டி எடுத்து, ‘ தக்க வயதும் பொருத்தமே திருமணத்தின் இலட்சியங்கள்”- பெரியாரின் பேருரை என்று கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு கம்போசிங்குக்கு கொடுத்தேன். அதுவும் வெளிவந்தது. பிறகு நான் வேலையில் ராஜினாமா செய்துவிட்டு பாக்கிப் பணத்தைப் பெறுவதற்காக சென்றபோது, ‘பெரியார் என்னைப் பார்த்து, “பெருமாள் வீட்டு சோத்தையே தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க” என்று கூறினார்.
(நூல்:- நினைவுகள்)

26 வயது பெண்மணியை திருமணம் செய்து கொண்ட 72 வயது கிழவர் மனைவிக்கு என்ன உடல் சுகம் கொடுத்திருக்க முடியும்? மனைவியுடைய வாழ்நாள் முழுதும் பாழ் ஆகவில்லையா? மணியம்மையாரை யாரும் கட்டாயப்படுத்தவில்லைதான். இருப்பினும் பெரியாருக்கு என்று ஒரு பொறுப்புணர்ச்சி வேண்டாமா? அம்மாதிரி சொந்த விருப்பின்படி தியாக வாழ்க்கை வாழ்ந்தக் கண்ணகியைப் பற்றி மட்டும் பெரியார் ஏன் கடுமையாகப் பேச வேண்டும்?

அவருடைய இச்செயலை புத்தியுள்ளவர்களால் ஒத்துக் கொள்ள முடியாது. ஆகவேதான் அவர் தனக்கு புத்திசாலிகள் தேவையில்லை, முட்டாள்களே போதும் என்றும் கூறினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

47 comments:

  1. \\26 வயது பெண்மணியை திருமணம் செய்து கொண்ட 72 வயது கிழவர் மனைவிக்கு என்ன உடல் சுகம் கொடுத்திருக்க முடியும்? மனைவியுடைய வாழ்நாள் முழுதும் பாழ் ஆகவில்லையா?//

    தமிழ் ஓவியா வாங்க வந்து பதில் சொல்லுங்க. விளக்கெண்ணெய் கிடைக்கலீன்ன சொல்லுங்க, 10 லிட்டர் இனாமா அனுப்பிச்சு வக்கிறேன்.

    ReplyDelete
  2. தமிழ் ஓவியா இந்தப் பொர்ச்சிக் கண்ணாலம் பத்தி நீங்க எதுனா சொல்ல விரும்புறீங்களா? இல்ல சொம்ம உதார் விட்டுனு போவீங்களா? முடிஞ்சா ஒங்க மானமிகு (அப்போ தமிழ் நாட்டுல இவரத் தவுட அல்லாரும் மானமில்லாம திரியுதாங்களா? வி கீரமணி கிட்ட கேட்டு சொல்லுங்க.

    ReplyDelete
  3. \\அவருடைய இச்செயலை புத்தியுள்ளவர்களால் ஒத்துக் கொள்ள முடியாது. ஆகவேதான் அவர் தனக்கு புத்திசாலிகள் தேவையில்லை, முட்டாள்களே போதும் என்றும் கூறினார்.//

    இப்டீல்லாம் தமிழ் ஓவியாவப் பாத்து சொல்லப் படாது.

    ReplyDelete
  4. தமிழ் ஒவியாவிற்குப் பதில் சொல்வதற்காக இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  5. இது பெரியாருக்கும் மணியம்மைக்கும் நடுவில் உள்ள சொந்த விஷயம். மணியம்மைக்கு அப்போது 30 வயது இருக்குமா? அவரை யாரும் வலியுறுத்தவில்லை, அப்பா அம்மா குடும்பம் அவரை ஒரு கிழவனிடம் தள்ளிவிடவில்லை. கிழவனே கேட்டார், இளைஞி ஒத்துக்கொண்டார். இளைஞிக்கு உடல் சுகம் பற்றி நமக்கென்ன கவலை? அது அந்த இளைஞியின் சொந்த விஷயம்.

    அண்ணாவும் மற்றவர்களும் எதிர்த்தது குடும்பத்தார் டீனேஜ் பெண்களை பணத்துக்காக கிழவனை கட்டி வைப்பதை. இங்கே பணம், "சிறுபெண்", குடும்பத்தார் பிரஷர் இருப்பதாக தெரியவில்லை. நிச்சயமாக அது உறுத்தி இருக்கும். ஊரில் கேள்வி கேட்டால் பதில் சொல்வது அன்றைக்கு கஷ்டமகா இருந்திருக்கும். ஆனால் இன்றைக்கு உள்ள பெண் தன விருப்பப்படி மனம் செய்து கொள்ள உரிமை உள்ளவள் என்ற விழுமியத்தை வைத்து பார்த்தால் இது சொந்த விஷயமாக மட்டுமே தெரிகிறது.

    ReplyDelete
  6. பகுத்தறிந்த முட்டாள்October 09, 2009 12:43 AM

    //அவருடைய இச்செயலை புத்தியுள்ளவர்களால் ஒத்துக் கொள்ள முடியாது. ஆகவேதான் அவர் தனக்கு புத்திசாலிகள் தேவையில்லை, முட்டாள்களே போதும் என்றும் கூறினார்.//

    நீங்க என்னதான் பெரியார் அத சொன்னாரு; இத பண்ணாருன்னு பழைய செய்திகள தந்துகிட்டு இருந்தாலும், ஒரு உண்மைய நீங்க கண்டிப்பா உணரனும். இன்னிக்கும் பெரியாருக்கு நிறைய முட்டாளுங்க சிஷ்ய கேடிங்களா இருக்கானுங்க என்பதுதான் அது.

    ReplyDelete
  7. @RV
    கண்டிப்பாக அது பெரியார் மற்றும் மணியம்மையாரின் தனிப்பட்ட விவகாரம்தான். ஆனால் அதே சமயம் தன்னிச்சையாக கணவனுடன் துணை நின்ற கண்ணகி கதாபாத்திரத்தை அதே பெரியார் ஆத்திரத்துடன் விமரிசனம் செய்ததை மறக்கலாகாது.

    கற்பனையாகக் கூட பெண்ணடிமைத்தனம் இருக்கக் கூடாது என்பவர் இங்கு அவ்வாறு செயல்பட்டதுதான் நெருடுகிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. 1.தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனினை, போலீசார் கைது செய்ததற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு. தானும் ஒரு பத்திரிக்கையாளர் எனச் சொல்லி பெருமைப்படும் கலைஞரின் அடுத்த மூவ்?
    2.முல்லைப் பெரியாறில் புதிய அணை விவகாரத்தில் ஜெ.ன் சப்போர்ட் கலைஞருக்கு,இது எப்படி இருக்கு?
    3.தீவிரவாதம் மற்றும் தீவிரவாதிகளை ஒழிக்க ராணுவ உதவி என்கிற பெயரில் அமெரிக்கா அளித்த கோடிக்கணக்கான பணத்தை பாகிஸ்தான் மிஸ்யூஸ் பண்ணியது கண்டு இனி அமெரிக்கா என்ன செய்ய்யும்?
    4.காந்தியின் விடுதலை இயக்கம், பெரியாரின் தன்மான இயக்கம், அண்ணாவின் தமிழியக்கம், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் எதேச்சாதிகார எதிர்ப்பு இயக்கம், லோகியா, கிருபளானிகளின் சோஷலிச இயக்கம் பற்றி?
    5.இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை:திமுகவின் ஆதரவு பற்றி?
    6.இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை:ஜெ.ன் எதிர்ப்பு?
    7.தமிழ்குடிதாங்கிகளின் நிலை
    இதில்?
    8.காங்கிரசுடன் உறவில் சிக்கல் வருமா திமுகவுக்கு?
    9.அமைச்சர் சிதம்பரம் இந்த விசயத்தில் ?
    10.பொருளாதாரச் சரிவு, வேலைவாய்ப்பின்மை, சாமானியனுக்கு மருத்துவக் காப்பீடு கிடைப்பதில் கூடச் சிரமம் எனச் சொல்லப்பட்ட அமெரிக்காவின் இன்றைய நிலை?
    11. அமெரிக்காவின் பணக்காரர்கள் பாடு இப்போது எப்படி?
    12.முல்லைப்பெரியாறு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் வழக்கு .இது காலம் கடந்த ஒன்றா?
    13.இந்த விசயத்தில் கலைஞரின் அடுத்த கடிதம் என்ன சொல்லும்?
    14.மத்திய அரசுக்கு எப்போதும் கேரளா மேல் ஒரு எக்ஸ்ட்ரா பாசம்?ஏன்?
    15.ஹோகனேக்கல் தண்ணிர் வருமா வராதா?
    16. தளபதி துணைமுதல்வர்-மாவீரன் அண்னன் மத்திய இராசயன அமைச்சர்- 3 மாத செயல் பாடு -ஒரு ஒப்பீடு ?
    17.புவனேஸ்வரி பேட்டி பற்றிய கசமுசா பற்றி உங்கள் விமர்சனம்?
    18.ரஜினிகூட ?
    19.இந்த விசயத்தில் தினகரன் சம்பந்தப்பட்டிருந்தால் தலைவர் என்ன செய்திருப்பார்?
    20.நடிகர் சங்கம் இந்த அளவுக்கு பெரிது பண்ணியிருக்குமா?
    21.பொதுவாய் நடிகை என்றாலே ஏன் இப்படி கிசு கிசு?
    22.உங்கள் அனுபவத்தில் இது மாதிரி காயப்படாத இந்தி நடிகைகள் யார் யார்?
    23.தமிழ் நடிகைகள் ?
    24.ஆந்திர, கர்நாடக வெள்ளச்சேதம் உலக வெப்பமயமாதலின் எச்சரிக்கையா?
    25.நதிநீர் இணைப்பு இதற்கு ஒரு தீர்வாகுமா?
    26. ராஜகுமரன் ராகுல்ஜி இனியாவது இதற்கு எதிர்ப்பு செய்வதை நிறுத்துவாரா?
    27.அவரின் தலித் பாசம் ? உண்மையா?
    28.தமிழ் நாட்டில் ,அடைமழை,கணமழை,புயல்மழை எனக் கொட்டும் இலவசங்களில் மூழ்கியிருக்கும் பாமர மக்களை,காங்கிரஸ் பக்கம் மாற்ற அவரால் முடியாது போலுள்ளதே?

    29. ராஜீவ் காந்தி படுகொலை கேஸ் நளினி,
    இப்போது?

    30.அ.தி.மு.க., வுடன் இனி உறவு இல்லை! பா.ம.க.வின் திடீர் அறிவிப்பு ஏன்? எதற்கு அச்சாரம்?
    31.டெல்லி மேல்சபை உறுப்பினர் பதவி நஷ்டமா டாக்டருக்கு? ( அதிமுகவின் ஒப்பந்தம் இனி )
    32.திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம்,அடுத்து மதுரையில் அழகிரியாரின் கோரிக்கை பற்றி?

    -பாண்டியன்

    ReplyDelete
  9. ஜெமினி கணேசன் கூடத்தான் தல்ளாத வயதில் திருமணம் செய்து கொண்டார்!

    பொருந்துதா இல்லையான்னு நாம் பக்கத்துல இருந்தா பார்க்க முடியும்!

    எனக்கு அந்த வயசானப்ப எதாவது ஃபிகர் கிடைச்சாலும் நான் ஓரங்கட்ட தான் பார்ப்பேன்!

    அதானே மனித இயல்பு!
    கண்ணகி பற்றி பெரியார் சொல்ல வந்தது, அம்மாதிரி கதைகளை சொல்லி பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என கதை கட்டாதீர்கள் என்பதற்காக இருக்கலாம்!

    கற்பு என்னும் கருமாந்திரம் இரண்டு பேருக்கும் சமம், ஆணுக்கு ரெண்டு தேவைப்பட்டால் பெண்ணுக்கு தேவைபடாதா!?

    ReplyDelete
  10. //கற்பனையாகக் கூட பெண்ணடிமைத்தனம் இருக்கக் கூடாது என்பவர் இங்கு அவ்வாறு செயல்பட்டதுதான் நெருடுகிறது.//


    அய்யா டோண்டு அவர்களே

    பெரியார் -மணியம்மை திருமணம் என்பது இயக்க நலனுக்காக பெரியாரின்
    தொண்டரான மணியம்மாரின் ஒப்புதலுடன் நடந்ததே தவிர, யாருடைய
    வற்புறுத்தலாலும் அல்ல.
    மணியம்மையாரே விரும்பி இவ்வேற்பாட்டுக்கு உடன் பட்டார்.
    அப்படியிருக்கையில் மணியம்மையார் விருப்பத்துக்கு மாறாக யார் என்ன
    செய்துவிட முடியும். அது மணியம்மையார் எடுக்க வேண்டிய முடிவே தவிர
    மற்ரவர்கள் அல்ல.
    இதில் பெண்ணடிமைத்தனம் எங்கிருந்து வந்தது. மணியம்மையாருக்கு விருப்பம் இல்லாமல் செய்திருந்தால் உங்கள் வாதத்தில் பொருள் இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளலாம். ஆனால் இவ்விசயத்தில் மணியம்மையாரின் முழு ஒப்புதலுடன் நடந்தது இத்திருமணம்.



    விரிவான விளக்கங்களுக்கு "பெரியார் -மணியம்மையார் திருமணம்" என்ற நூலைப்
    படிக்க வேண்டுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  11. பிற்காலத்தில் அண்ணா அவர்கள் மணியம்மையாரைப் பற்றி எழுதிய கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

    அன்னை மணியம்மையார் பற்றி அண்ணா

    "அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, இப்போது எனக்கு என்ன வயதோ, அதே
    வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள்
    உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த
    அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல்
    நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும்."

    நூல்: “அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் சிந்தனை முத்துகள் –பக்கம் 284

    ReplyDelete
  12. பெரியார் அவர்கள் உடல் சுகத்துக்காக திருமணம் செய்ய வில்லை. இயக்க நலனுக்காக ஒரு ஏற்பாடு செய்தார். அப்போதைய காலகட்டத்தில் ஆண் பிள்ளையை மட்டுமே தத்தெடுக்கமுடியும். பெண்பிள்ளையை தத்தெடுக்க முடியாது என்பது சட்டம்.அதனால்தான் திருமணம் என்ற பெயரில் ஒரு ஏற்பாட்டைச் செய்தார் பெரியார்.

    மணியம்மையார் பற்றி புரட்சிக்கவிஞர் அவர்கள் எழுதிய கருத்தை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். படியுங்கள். உண்மையை உணருங்கள்.


    "தாம் போகும் வழிகளை மறித்துக் கொண்டிருந்த ஒருகுன்றத்தைக் குத்தி
    உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம்.தம்மை நோக்கிச்
    சீறிவருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு
    உதடுகளைக் கண்டோம்.தமிழ்நெறி காப்பேன் – தமிழரைக் காப்பேன் – ஆரிய நெறியை
    அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல – மலைமேல் நின்று மெல்ல
    அல்ல,தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக்
    கண்டோம்.

    அதுமட்டுமல்ல

    குன்றூடைக்கும் தோளும், நெருப்புமழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய
    உள்ளமும் ஒரே இடத்தில் காண்போம். – இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார்
    என்பது கண்டோம்.
    யாரைப் புகழ்ந்து எழுதினோம்,புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ – நம்
    பாட இன்னும் மேலான பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
    பெரியார் செத்துக் கொண்டிருந்தார்.தமிழர் அழுது கொண்டிருந்தார்கள்.
    ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்துபோக மூட்டை முடிச்சுகளுடன்
    காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக்
    கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு;மக்களின் மீது
    வைத்திருக்கும் அருள் மற்றொன்று.

    ஆயினும்

    காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால்
    ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றி பெருகும் சிறுநீரை
    உடனிருந்து கலன் ஏந்திக்காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால்
    முடியாது;அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது.பெரியார்
    வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு
    பொடிப்பெண்ணை,
    அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?

    பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின்
    தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய
    மணப்பொருளாலும் அழகு பெறக்கட்டிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார்
    எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.
    அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட
    வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து
    சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.
    ஒரே ஒரு மாலையை எந் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது
    சொன்னதில்லை எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை
    கட்டுவதன்றி – அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து
    முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளிக் தம் தலையில் வைத்தார்
    என்பதுமில்லை.

    ----------புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் - 10-4-1960 – “குயில்”
    இதழில் எழுதிய கட்டுரை.

    ReplyDelete
  13. //கண்டிப்பாக அது பெரியார் மற்றும் மணியம்மையாரின் தனிப்பட்ட விவகாரம்தான். ஆனால் அதே சமயம் தன்னிச்சையாக கணவனுடன் துணை நின்ற கண்ணகி கதாபாத்திரத்தை அதே பெரியார் ஆத்திரத்துடன் விமரிசனம் செய்ததை மறக்கலாகாது.

    கற்பனையாகக் கூட பெண்ணடிமைத்தனம் இருக்கக் கூடாது என்பவர் இங்கு அவ்வாறு செயல்பட்டதுதான் நெருடுகிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்//

    பெரியார் மணியம்மை திருமணம் அவர்களின் தனிப்பட்ட விவகாரம் என்ரு ஒத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி டோண்டு அய்யா.

    ReplyDelete
  14. கண்ணகியின் கதாபாத்திரத்தை பெரியார் ஏன்/ எதற்காக விமர்சித்தார் என்பது பற்றி கீழ் காணும் கட்டுரை உங்களுக்கு தெளிவு ஏற்படுத்தும் என்பதால் அக்கட்டுரையை அப்படியே தருகிறேன்.

    சிலப்பதிகாரம் கண்ணகியின் கதையைக் கூறும் நூலா? அல்லது மனுநீதியான வருணாசிரமத் தர்மத்தை விவரிக்க வந்த நூலா?”

    சிலப்பதிகாரத்து வஞ்சினமாலை கூறும் செய்திகளில் பெரும்பாலானவை பகுத்தறிவிற்கு மாறானவையாகவும், நம்ப முடியாதனவாகவும், ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளாகவும், பார்ப்பனர்களுக்குப் பாதுகாப்பளிப்பனவாகவும் உள்ளதைப் பெரியார் எடுத்துக் காட்டுகிறார்.

    கருணையில்லாத கதாநாயகி “யானோ அரசன் யானே கள்வன்” எனக் கூறித்தான் நீதி தவறியதை நினைந்து வருந்தி மயங்கி இருக்கையிலிருந்து கீழே விழ்ந்து உயிர் துறந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் பாதங்களைத் தொழுத பாண்டி மாதேவியை நோக்கிய கண்ணகி, “பெருந்தேவியே, பிறனுக்கு முற்பகலில் கேடு செய்தான் ஒருவன் தன் கேட்டினை அன்றைப் பிற்பகலே காணுவான்” என்று கூறுகிறாள்.

    “இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு”

    - என்ற திருக்குறளுக்கு ஏற்ப கண்ணகி நடந்து கொள்ளவில்லை. பாண்டியன் தன் தவற்றை உணர்ந்து மயங்கி விழுந்து உயிர் துறந்தான் என்பதைக் கண்ணகி எண்ணிப் பார்த்து அவனை மன்னித்திருக்க வேண்டும். பாண்டியனின் பாதங்களில் வீழ்ந்த பாண்டிமாதேவி என்னானாள் என்பதைக்கூட கண்ணகி பார்க்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு பெண்ணைச் சால்புடையவளாக எப்படிக் கூற முடியும்! சான்றாண்மை இல்லாதவனை எவ்வாறு பெருமைமிக்கவளாகக் கருத முடியும் என்பதே பெரியாரின் சிந்தனை.

    மேலும், நடுங்கி வீழ்ந்த கோப்பெருந்தேவியை விளித்து, ‘யான் ஒப்பற்ற கற்புடை மகளிர் பலர் பிறந்த பதியின்கண் பிறந்தேன்; யானும் ஒரு பத்தினியாயின் அரசோடு மதுரையையும் ஒழிப்பேன்’ என்று கண்ணகி கூறுகிறாள்.

    கண்ணகி கூறும் பத்தினிப் பெண்களின் கதைகள் கூட மூடநம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தனவாகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாதனவாகவும் ஆணாதிக்கத் தன்மையையும், பெண்ணடிமைத்தனத்தையும் அறிவுறுத்து வனவாகவுமே அமைந்துள்ளன.

    சினத்திலும் பார்ப்பனர்க்குப் பாதுகாப்பு மதுரையை ஒழிப்பேன் என்று சூளுரைத்த கண்ணகி, “கூடல் மாநகர மகளிரே, மைந்தரே, வானக் கடவுளரே, மாதவம் செய்வோரே நான் சொல்வதைக் கேளுங்கள்: என் கணவனுக்குத் தவறிழைத்த கோநகரைச் சீறினேன்; குற்றமிலேன்யான்” என்று கூறுகிறாள். தனக்குத் தானே நீதிபதியாக ஆகித்தான் குற்றமற்றவள் என்று தீர்ப்பளித்துக் கொள்கிறாள் கண்ணகி. பின்னர் தன் இடமுலையைக் கையால் திருகி எடுத்து, மதுரையை வலம்வந்து வட்டித்து எறிந்தாள்.

    அப்பொழுது தீக்கடவுள் பார்ப்பன வடிவில் தோன்றுகின்றான். அவன் கண்ணகியை நோக்கி, “உனக்குத் தவறிழைத்த அந்த நாளிலேயே இவ்வூரை எரியூட்டும் ஏவலைப் பெற்றுள்ளேன். எரியும்போது பிழைக்க வேண்டியவர்கள் யார் யார் என்பதை மட்டும் கூறுக” என்று கேட்கிறான். அப்பொழுது, “பார்ப்பனர், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழந்தை ஆகிய இவர்களைத் தவிர மற்றவர்கள் அழியட்டும்” என்று கண்ணகி கூறுகிறாள். கண்ணகி ஏவலால் மதுரை மாநகர் தீப்பற்றி எரிந்தது.

    சிலப்பதிகாரக் கதையைத் திறனாய்ந்த பெரியார், கண்ணகி மதுரையை எரித்த செயலைக் கண்டிக்கிறார். “தேவடியாள் வீட்டிற்குக் கணவன் போனதை அறிந்தபோது, அந்தத் தேவடியாளை ஏதாவது செய்திருக்க வேண்டும்” என்கிறார் பெரியார். அப்போதே கோவலனைக் கண்டித்து மாதவியைத் தண்டித்திருந்தால், இத்தகைய வேதனைகளே வந்திராது என்பது பெரியார் கருத்துப் போலும்.



    --------தொடரும்

    --------------முனைவர் இரா. மணியன் அவர்கள் எழுதிய ‘பெரியாரின் இலக்கியச் சிந்தனை’ நூலிலிருந்து

    ReplyDelete
  15. “கோவலனை அரசன் தண்டித்த மாதிரியானது, நம்நாட்டு இராஜாக்களுக்கே ரொம்பவும் அவமானம் தருவதாகும்” என்று பெரியார் கருதுகிறார். அப்படி அவர் கருதினாலும், கண்ணகி மதுரையை எரித்து நிரபராதிகளைச் சுட்டு சாம்பலாக்கிய செயலையும் கண்டித்துள்ளார். இப்படி எரித்தால்தான் இவள் கற்புடையவள் என்று சமுதாயம் கருதுமா! “அகலிகை, சீதை, துரோபதை, தாரை எல்லாம் கற்புக்கரசிகளாய் இருக்கும்போது, கண்ணகி கற்புக்கு மாத்திரம் முட்டாள் தனம் வேண்டுமா!” எனறு பெரியார் கேட்கிறார்.

    மதுரையை எரிப்பதற்குக் கண்ணகி கையாண்ட முறை பகுத்தறிவுக்கு ஒத்து வருமா? அரசனின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கண்ணகியிடத்து அனுதாபம் கொண்ட பொது மக்கள் அங்கங்கே அரசனுக்குச் சொந்தமான மாளிகைகளை எரித்தார்கள் என்று சொல்லியிருந்தாலாவது யதார்த்தமாக இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு, கண்ணகி மார்பைத் திருகி எறிவதற்கு அது என்ன நட்டு போட்டா முடிக்கி வைத்துள்ளது! திருகியதும் கைக்கு வந்துவிட. அப்படியே எறிந்தாலும் அது என்ன பாஸ்பரசா தீ மூட்டுவதற்கு! இப்படிப்பட்ட சிந்தனைகளைக் கொண்ட பெரியார், சிலப்பதிகாரம் பற்றிய ஒரு சொற்பொழிவில், “இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி! மார்பைக் கையால் திருகினால் அது வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும் அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பு (முலை) வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் ‘பாஸ்பரஸ்’ இருக்குமா? இந்த மூட நம்பிக்கைக் கற்பனையானது, என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் கூற முடியுமா?” என்று கேட்கிறார்.

    பார்ப்பனர்க்கு மட்டும் விதிவிலக்கு ஏன்?

    மதுரையை எரிக்கச் செய்த கண்ணகி பார்ப்பனர்கள் மீது ஏன் பரிதாபம் கொள்ள வேண்டும் என்பது பெரியார் கேள்வியாகும். இவ்வாறு பரிதாபம் கொள்ளச் செய்தது பார்ப்பனர்களின் வருணாசிரமத் தர்மந்தானே! அரச இனத்தைச் சார்ந்தவர்களும், வணிகர்களும், சூத்திரர்களும் மட்டும் ஏன் சாக வேண்டும்? இப்படிச் செய்தது கண்ணகியின் முட்டாள்தனமா? அல்லது வருணாசிரமத் தர்மத்தை அவள் மூலம் நிலை நாட்ட முயன்றவர்களின் அயோக்கியத்தனமா? இப்படியெல்லாம் எண்ணிய பெரியார், “அக்கினி பகவானுக்குக் கண்ணகி, ‘பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களைச் சுடு’ என்று கட்டளை இட்டாளாம். அதுபோல் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் சாம்பலானார்களாம். மதுரை நகரம் சாம்பலாயிற்றாம்.

    இதுதான் கண்ணகியின் கற்பின் பெருமையா? அவள் புத்தியின் பெருமையா? அக்கினி பகவானுக்குப் புத்தி வேண்டாமா? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால் நிரபராதிகளைச் சுடலாமா? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா என்கிற அறிவு வேண்டாமா? பார்ப்பனர்களை எதற்காக மீதம் விட வேண்டும்? ஆகவே, வருணாசிரம; தர்ம மனுநூல், இராமாயணம், பாரதத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?” என்று வினவுகிறார்.

    கண்ணகியின் அநீதி பாண்டியன் நெடுஞ்செழியன் முழுமையான விசாரணையை மேற்கொள்ளாமல் தீயவனை நம்பி நீதி தவறும் செயலைச் செய்தான். அவன் செய்தது குற்றம் தான். அதைவிடப் பெரிய குற்றத்தைக் கண்ணகி செய்யலாமா? கண்ணகி யாரை விசாரித்தாள்? பாண்டியன் நீதி தவறியதற்கும் பார்ப்பனர்களைத் தவிர மற்ற சமுதாயத்தினர்க்கும் என்ன சம்பந்தம்? சூத்திரர்களை எரிக்குமாறு ஏன் சொல்ல வேண்டும்? அரசனை நீதி வழுவுமாறு செய்த அந்த பொற் கொல்லனை மட்டும் அவள் தண்டித்திருந்தால் அவளை அறிவுடையவள் என்று கூறியிருக்கலாம். இப்படியெல்லாம் சிந்தித்த பெரியார், “இராமன் பார்ப்பான் - ஆகவே சூத்திரனைக் கொன்றான் என்பது இராமாயணம். பார்ப்பனனை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்பது சிலப்பதிகாரம்! எவ்வளவு முட்டாள்தனமான கொடுமை செய்தாலும் பார்ப்பனர்களைக் காப்பாற்றினால் அவள் பதிவிரதை ஆகிவிடுவாள் என்பது சிலப்பதிகாரம்! பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மை மீது கோவலனுக்குத் தண்டனை விதித்தான்.

    ஆனால், கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல் ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். அவள் கற்புக்கரசி; வணங்கத் தக்கவள்; தெய்வமானவள்! பாண்டியன் ‘குற்றவாளி’ - இது தானே சிலப்பதிகாரக் கதை. இதுதான் தமிழர் பண்பாம்! எவ்வளவு முட்டாள்தனம் - இந்த மாதிரியான ஆபாசமும் அநீதியும் நிறைந்து இருக்கும் கதைகளை நாம் வைத்துக் கொண்டு நமக்குச் சொந்தம் என்றா சொல்வது? இவைகளைத்தான் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறோம். நெருப்பு வைக்க வேண்டும் என்று சொல்லுகிறோம். சமுதாயத்திற்கு உதவாக்கரை என்று ஒதுக்கி வைக்கிறோம்!” என்று கடுமையாகச் சாடுகிறார்.



    ----------தொடரும்

    முனைவர் இரா. மணியன் அவர்கள் எழுதிய ‘பெரியாரின் இலக்கியச் சிந்தனை’ நூலிலிருந்து

    ReplyDelete
  16. சிலப்பதிகாரத்தின் இருபத்திரண்டாவது பகுதியான அழற்படு காதை யுள்ளும் நால்வகை வருணங்கள் கூறப்படுகின்றன. ஒவ்வொரு வருணத்துக்கும் ஒவ்வொரு பூதம் தெய்வமாக உள்ளது என்றுரைத்து வருணபூதர் நால்வருடைய இயல்புகளும் விவரிக்கப்பட்டுள்ளன. இவையன்றி இந்திரன், இயமன், வருணன், சோமன் என்னும் நான்கு தெய்வங்கள் கோட்டை வாயில்களைக் காத்துக் கொண்டு இருந்தன என்றும், அவை நகர் காக்கும் தெய்வங்கள் என்று கூறப்படும் என்றும் பாண்டியன் இறந்த பின் அவை நகரைவிட்டு நீங்கின என்றும் அழற்படுகாதையின் தொடக்கத்திலேயே கூறப்பட்டுள்ளது. ஏவல் தெய்வத்து எரிமுகம் திறந்தது, காவல் தெய்வம் கடைமுகம் அடைந்தன என்ற அழற்படு காதையின் முதல் இரண்டு அடிகளுக்கு உரைகூறப் போந்த நாவலர் ந.மு.வே. நாட்டார் அவர்கள் “கண்ணகியின் ஏவல் பெற்ற தீக்கடவுளின் எரியின் கூறு வெளிப்பட்டது. நகர் காக்கும் தெய்வங்கள் கோட்டை வாயில்களை காவாதொழிந்தன என்று கூறிக் காவல்தெய்வம் இந்திரன், இயமன், வருணன், சோமன் என்னும் நான்கு தெய்வங்களுமாம்” என்று விளக்கமும் அளித்துள்ளார்.

    வருணப் பூதங்கள் காவல் தெய்வங்கள் பற்றிக் கூறும் ஒரு நூலை தமிழ் மக்களுக்குரிய நூல் என்று கூறலாமா? என்பதுதான் பெரியாரின் ஐயமாகும். “மனிதனுக்குக் கடவுள் உணர்ச்சி தோன்றிய காலந்தொட்டே இந்த நாட்டில் மேல் சாதி - கீழ்ச் சாதி உணர்ச்சி தோன்றிவிட்டது” என்பதுதான் பெரியாரின் கருத்தாக உள்ளது. சாதியமைப்பே இல்லாத தமிழ்ச் சமுதாயம் இருந்த போது கடவுள் பற்றிய எண்ணமே இல்லாமல் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதே பெரியார் கருத்தாகும். அப்படிப்பட்ட சமுதாயத்தைக் கொண்ட தமிழ்நாட்டில் மனுதர்ம சாஸ்திரம் கூறும் வருணாசிரமத் தர்மத்தை - நால் வருணக் கோட்பாட்டை நிலை நிறுத்துவதற்காகவே ஆரியர்கள் தெய்வங்களைக் கூறித் தமிழர்களிடையே மூட நம்பிக்கையை வளர்த்துத் தங்களது மேன்மைக்காகப் பாடுபட்டிருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், தமிழ்நாட்டு மூவேந்தர்க்கும் உரிய கதை என்று சொல்லி, அழகிய இனிய தமிழ்ச்சொற்களில் ஆரியர்களின் வஞ்சக எண்ணங்களை அறியாமல் இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் கதையில் வருணபூதம் நால்வருடைய இயல்புகளைக் கூறியுள்ளார் என்பது பெரியாரின் குற்றச்சாட்டு.

    அழற்படு காதையுள் கூறப் பெறும் நால்வகை வருணப் பூதங்களைப் பற்றிய செய்திகள் மனுநீதி சாஸ்திரத்தில் கூறப் பெற்ற பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர சாதிப் பிரிவுகளை நினைவூட்டுகின்றன. முதலில் ஆதிப்பூதம் கூறப்படுகிறது. ‘பசுமை முத்துவடமணிந்த நிலவு போல் விளங்கும் ஒளியினை உடைய, நான்முகன் யாகத்துக்கென உரைத்த உறுப்புக்களோடே முத்தீ வாழ்க்கையின் இயல்பினின்றும் பிழையாத தலைமை அமைந்த ஆதிப் பூதமாகிய கடவுளும்” என்று பூதக் கடவுளை விவரித்துள்ளனர். இப்பூதக் கடவுளைப் பிராமணப் பூதம் என்று கூறுகிறார் அரும்பதவுரையாசிரியர். இதுபோலவே அரச பூதம், வணிக பூதம், வேளாண் பூதம் என்று கூறுகின்றபோது அவற்றையும் கடவுள் என்றே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “சிலப்பதிகாரம் கண்ணகியின் கதையைக் கூறும் நூலா? அல்லது மனுநீதியான வருணாசிரமத் தர்மத்தை விவரிக்க வந்த நூலா?” என்று பெரியார் வினவுகிறார்.

    --------------முனைவர் இரா. மணியன் அவர்கள் எழுதிய ‘பெரியாரின் இலக்கியச் சிந்தனை’ நூலிலிருந்து

    முழுமையாக கட்டுரையை வாசிக்க

    http://thamizhoviya.blogspot.com/2008/06/blog-post_9082.html சுட்டியை சுட்டவும்

    ReplyDelete
  17. @தமிழ் ஓவியா
    நாகம்மை இறந்ததும் பெரியாரே எழுதியது,
    “பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

    ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்”.
    இது பற்றி நான் போட்ட பதிவை பார்க்க http://dondu.blogspot.com/2007/03/blog-post_27.html

    நீங்கள் என்னதான் கூறினாலும் மணியம்மையை திருமணம் செய்து கொண்டு அந்த இளம் பெண்ணின் வாழ்க்கை பாழாகத்தான் போனது. மணியம்மையே விரும்பி வந்தாலும் இவர் அவருக்கு நல்ல புத்திமதி கூறி தடுத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதேனும் தன் சமவயதுப் பெண்மணியை வாழ்க்கைத் துணையாக ஏற்றிருக்க வேண்டும்.

    அரங்கண்ணல் அவரது கட்டுரையை மேற்கோள் காட்டியபோது “பெருமாள் சோத்தை தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்யறாங்க” என்ற ரேஞ்சில் பேசுவது மிகவும் அல்பத்தனமாகவே படுகிறது.

    ஒரு கேள்வி, மணியம்மைக்கு உடல் சுகம் தேவைப்பட்டிருந்தால் பெரியார் அதை அவர் வெளியில் பெற்றுக் கொள்ள இசைந்திருப்பாரா? மனதைத் தொட்டு சொல்லுங்கள். மணீயம்மைக்குத் தேவைப்படவில்லை என்றெல்லாம் ஜல்லி வேண்டாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. பெரியார் மணியம்மையை மணந்ததை இளம்தலைவர்கள் தம் எதிர்கால பாதுகாப்பு/வளர்ச்சி கருதி எதிர்த்திருக்கலாம். ஆனால் சைக்காலஜிப்படி ஒரு ஆண் தன் மகள் வயது பெண் அ தாய் வயது பெண்ணுடன் இணைவதே நல்லது.
    பெரியார் திருமணத்தை தமிழினம் அங்கீகரிக்கவில்லை. ஆனால் என்.டி.ஆரின் திருமணத்தை ஆந்திரம் அங்கீகரித்தது. எங்களை போய் கொல்ட்டிங்கறிங்களேன்னா !

    ReplyDelete
  19. //பெரியார் திருமணத்தை தமிழினம் அங்கீகரிக்கவில்லை.//
    அதற்கு முக்கியக் காரணமே தானே முழுமூச்சாக எதிர்த்த பொருந்தா திருமணத்தை பெரியாரே செய்து கொண்டதுதான். அக்காலப் பத்திரிகைகளை படித்தால் அந்த மனவோட்டம் புரியும்.

    பெரியார் மணியம்மையாரை மணம் செய்து கொள்ளாது வெறுமனே வைத்துக் கொண்டிருக்கலாம் என்ற ரேஞ்சில் அண்ணா சொன்னதைக் கூட, “அவரது ஜாதி புத்தி தெரிகிறது” என பெரியார் கடுப்படித்தார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. //பெரியார் மணியம்மையாரை மணம் செய்து கொள்ளாது வெறுமனே வைத்துக் கொண்டிருக்கலாம் என்ற ரேஞ்சில் அண்ணா சொன்னதைக் கூட, “அவரது ஜாதி புத்தி தெரிகிறது” என பெரியார் கடுப்படித்தார்//

    ?

    ReplyDelete
  21. ///பெரியார் -மணியம்மை திருமணம் என்பது இயக்க நலனுக்காக பெரியாரின்
    தொண்டரான மணியம்மாரின் ஒப்புதலுடன் நடந்ததே தவிர, யாருடைய
    வற்புறுத்தலாலும் அல்ல///

    இயக்க நலனுக்காக திருமணம் செய்து கொண்டாராம், பெரியார் இயங்கவேண்டிய நலனுக்காகவா, அல்லது அவர்களின் கும்பல் நடத்தும் தி க இயக்க நலனுக்காகவா?

    தி க இயக்க நலனுக்குத்தான் என்றால் மனியம்மையை தங்கச்சியாக நினைத்திருந்தால் கூட இயக்கம் நலனுடன் இருந்திருக்குமே! அது தான் உண்மையான பகுத்தறிவாக இருந்திருக்கும்.

    அதை விட்டு விட்டு சப்பை கட்டு கட்டுகிறார்கள்.

    ReplyDelete
  22. //
    ஜெமினி கணேசன் கூடத்தான் தல்ளாத வயதில் திருமணம் செய்து கொண்டார்!
    //

    nobody is justifying பொருந்தாத் திருமணம் here.

    The fundamental hypocrisy of "periyar" is what is questioned.

    ReplyDelete
  23. //மணியம்மைக்கு உடல் சுகம் தேவைப்பட்டிருந்தால் பெரியார் அதை அவர் வெளியில் பெற்றுக் கொள்ள இசைந்திருப்பாரா? மனதைத் தொட்டு சொல்லுங்கள். மணீயம்மைக்குத் தேவைப்படவில்லை என்றெல்லாம் ஜல்லி வேண்டாம்.//

    டோண்டு அய்யா

    மணியம்மையார் உடல் தேவையை எப்படித் தீர்த்துக் கொண்டால் என்ன? அது பெரியாருக்கும் மணியம்மையாருக்கும் உள்ள அந்தரங்கப் பிரச்சினை அதில் தலையிடலாமா?

    அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டியவர்கள் பெரியாரும் மணியம்மையாரும்.

    பெரியார் பற்றி பேச எவ்வளவோ விசயமிருக்க உங்களுக்குத்தான் இந்த விசயத்தில் எவ்வளவு அக்கரை. அடடா...

    ReplyDelete
  24. டோண்டு உங்களின் உடல் தேவை ஆராய்ச்சிக்கு பெரியாரின் இந்த கருத்து பதிலடியாக இருக்கும் என்பதால் அதை அப்படியே தருகிறேன்




    "வெற்றி பெற்று விட்டேன்

    தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் இராமசாமிக் கழுதைக்குச் செருப்படி என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழவில்லை. இங்கும் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்றும், இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் எழுதி இருந்தது.

    இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால், இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே, இராமசாமி மனைவி கற்புக்கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம் மும்மாரி மழைவரச் செய்து பயன் பெற்று இருந்தால், இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்பட வேண்டும்.
    ஆகவே, அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், இவற்றிலிருந்து ஓர் அளவுக்கு நான் வெற்றி பெற்று விட்டேன் என்பதை மாத்திரம் உணருகிறேன்."

    --------------- தந்தைபெரியார், "குடிஅரசு", 11.10.1931

    ReplyDelete
  25. \\பெரியார் -மணியம்மை திருமணம் என்பது இயக்க நலனுக்காக பெரியாரின்
    தொண்டரான மணியம்மாரின் ஒப்புதலுடன் நடந்ததே தவிர, யாருடைய
    வற்புறுத்தலாலும் அல்ல.//

    இவ்வளவு வியாக்யானம் பேசும் நீங்களும் உங்கள் பொர்ச்சித் தலைவரும் ஒரு இளம் பெண்ணின் இல்லற வாழ்க்கையைப் பாழ் செய்கிறோம் என்று ஏன் நினைக்கவில்லை? அப்படி என்ன இயக்கத்தைக் கட்டிக் காத்தார்கள்? சொத்து தான் இயக்கமா? சொத்தைப் பாதுகாக்கத் தானே அந்தப் பொருந்தாத் திருமணம்?

    ReplyDelete
  26. \\ஆனால் சைக்காலஜிப்படி ஒரு ஆண் தன் மகள் வயது பெண் அ தாய் வயது பெண்ணுடன் இணைவதே நல்லது.//

    வந்துட்டாருடா அடுத்த சொம்பு. அப்படிப் பார்த்தால் நீங்கள் தாய் வயதுப் பெண்ணைத் தான் மணம் முடித்தீர்களா சோசியர் சித்தூர் முருகேசன்?

    ReplyDelete
  27. பெரியார் மணியம்மை திருமணம் பற்றி பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் தரும் விளக்கம் இது:-

    தஞ்சை (22.2.2009), மதுரை (23.2.2009) ஆகிய ஊர்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூலைப் பற்றி பேராசிரியர் நம்.சீனிவாசன் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

    பெரியார் மணியம்மை திருமணம்

    பெரியார் - மணியம்மை திருமணம் தமிழக அரசியலில் ஒரு பெரிய புயலை உருவாக்கியது. அந்தத் திருமணத்தைப் பற்றி - பெரியாரின் நியாயத்தைப் பற்றி இந்நூல் தெளிவுபட உரைக் கிறது. பெரியாரின் திருமணம் குறித்து, தலைவர் வீரமணியிடம் பயிற்சி முகாம்களில் இளைஞர்கள் கேள்வி கேட்பார்கள். வரலாற்றில் நாம் வாசிக்கின்ற காரண காரியங்கள் 1949-லே வீரமணிக்கு மனப் பாடமாக மனதிலே பதிந்திருக்கிறது. 1949 ஜூன் 1, 19, 25 அய்யாவின் அறிக்கைகள், சாமி கைவல்யத்தின் ரத்தினச் சுருக்க விளக்கங்கள், மேட்டூர் தோழர் டி.கே.இராமச்சந்திரன் அவர்களின் அதியற்புதமான வாதங்கள் அடங்கிய கட்டுரைகள், திருச்சி ஆளவந்தார் எழுதிய கட்டுரை, நகரதூதன் என்ற தமிழ் வார ஏட்டின் பேனா நர்த்தனம் தலைப்பில் கேசரி என்ற பெயரில் மணவை ரெ.திருமலைசாமி எழுதிய ஆணித்தரமான எழுத்துக்கள் அடங்கிய பெரியார் மீது துவேஷப் புயல் என்னும் நூல் அனைத்தையும் இந்நூலில் சாறாகப் பிழிந்து தந்திருக்கிறார்.

    ராஜாஜி தனி ரயிலில் வந்தபொழுது

    கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரியர் திருவண்ணாமலைக்கு லிங்கேஸ்வரர் கோயிலைத் திறக்க தனி ரயிலில் வந்தபோது தந்தை பெரியார் சந்தித்துப் பேசினார். ராஜாஜி - பெரியார் என்ன பேசினார்கள் என்பது பற்றிய பெரிய சர்ச்சை கிளப்பப்பட்டது. மணியம்மையாரைத் திருமணம் செய்து கொள்ளும்படி ஆச்சாரியார்தான் இப்படி ஒரு யோசனையைச் சொன்னார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. திருமணம் செய்ய வேண்டாம் என்று தான் ராஜாஜி கூறினார். திருமணப் பதிவுக்கு அவரை சாட்சியாகக் கையொப்பம் போட வர இயலுமா என்றும் அய்யா கேட்டுள்ளார். தான் வகிக்கும் கவர்னர் ஜெனரல் பதவியில் அப்படிச் செய்வது மரபு அல்ல என்பதை எழுத்துமூலமாக அந்தரங்கம் என்று தலைப்பிட்டு கடிதம் எழுதினார் ராஜாஜி.

    அந்தரங்கமாகவே வைத்திருந்தார்

    இயக்கத்தை உடைப்பதற்கு ஆச்சாரியார் திட்டமிட்டு, பெரியாருக்குத் தவறான யோசனை கூறிவிட்டார் என்றும், ஆரியத்திடம் ஆலோசனை கேட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார் என்றும், அய்யா சரணாகதி அடைந்து விட்டார் என்றும் அவதூறுச் சேறு வீசப்பட்டது. ராஜாஜி திருமணத்திற்கு எதிராக யோசனை கூறினார் என்பதை அவர் எழுதிய கடிதம் மூலம் பெரியார் நிரூபித்திருக்க முடியும். ஆனால் எதை ராஜாஜி அந்தரங்கம் என்ற கருத்தில் கூறினார்களோ அதை பெரியார் தமது மூச்சு அடங்கும் வரை அந்தரங்கமாகவே வைத்திருந்தார். வரலாற்றுப் பெருமை வாய்ந்த அந்தக் கடிதத்தை 47 ஆண்டு களுக்குப் பின் முதன்முதலாக இந்த நூல் மூலம் தலைவர் வீரமணி அவர்கள் வெளி உலகிற்கு தெரியப்படுத்தினார்கள். ஸ்கேன் இந்த நூலின் விலை ரூ.125 போல் என்று போட்டிருக்கிறார்களே தவிர, இந்த நூலுக்கு விலை இல்லை.
    ---"விடுதலை" 4-3-2009

    ReplyDelete
  28. \\என்.டி.ஆரின் திருமணத்தை ஆந்திரம் அங்கீகரித்தது.//

    என் டி ஆர் ஊருக்கு உபதேசம் செய்யவில்லை. சோசியர் முருகேசு, நல்லா யோசிச்சு எழுதுங்க.

    ReplyDelete
  29. \பெரியார் மணியம்மையாரை மணம் செய்து கொள்ளாது வெறுமனே வைத்துக் கொண்டிருக்கலாம் என்ற ரேஞ்சில் அண்ணா சொன்னதைக் கூட, “அவரது ஜாதி புத்தி தெரிகிறது” என பெரியார் கடுப்படித்தார்.//

    டோண்டு சார், ஈரோட்டு நாயக்கர், அவர் சொன்னது எல்லாம் மக்கள் மறந்து நாளாச்சு. மானமிகு ஐயா வி. கீரமணி மட்டும் தான் இன்னும் புடுச்சுத் தொங்கிட்டிருக்கார். இனிமே காசு வாராதுனு தெரிஞ்சு போச்சுன்னா இவரத் தூக்கிப் போட்டுட்டு ஐயாவுக்கு வேட்டி தொவைக்கவோ அம்மாவுக்கு பொடவ தொவைக்கவோ போயிருவார் நம்ம மானமிகு வி. கீரமணி.

    ReplyDelete
  30. 1What will be the reaction of dinamalar after the arrest of the editor lenin in connection with actress issue?(actress Bhuvaneswari arrest affair)
    2.Thaanaith thalaivar Karunanidthi has once again proved his unconditional support to thirai ulagam .your comment please?
    3.Suppose the press publish thirai ulaga rakasiyangkal with valid proff.what the sangam will react?
    4.It is reported in some journals that some actress who have acted in one or two films are able to build big houses with costly car? is it true or false news by the press to increase circulation?
    5.Can you say one old tamil actress who was very popular and termed as fire by the senior male acters?( not at all involved like this )

    ReplyDelete
  31. இது பெரியாரின் சிந்தனைகளைப் பரப்பும் பதிவா? இல்லை, பெரியாரைப்பற்றி வெறுப்பைப் பரப்பும் ப்திவா?

    புரியவில்லை.

    ReplyDelete
  32. http://www.periyar.org/html/ap_bios_eng1.asp

    ReplyDelete
  33. \\ஆனால் சைக்காலஜிப்படி ஒரு ஆண் தன் மகள் வயது பெண் அ தாய் வயது பெண்ணுடன் இணைவதே நல்லது.//

    நல்லவேளை அவரு வூட்டு சைக்காலஜியில் இடையில் ”வயது” வந்தது இல்லைனா என்னாயிருக்கும்!

    அது சைகாலஜி இல்ல, ”சைக்கோ லாஜிக்”

    ReplyDelete
  34. //பெரியார் பற்றி பேச எவ்வளவோ விசயமிருக்க உங்களுக்குத்தான் இந்த விசயத்தில் எவ்வளவு அக்கரை. //

    நீங்களும் கொஞ்சம் யோசிங்க!
    நாட்டுல பெரியாரிஷம் தாண்டி பேச நிறைய விசயங்கள் இருக்கு! ஆனா நீங்க பண்றது இயந்திர தனமான வேலையாயிருக்கு!

    நீங்க இப்படி இருக்குறது பெரியாருக்கே பிடிக்காது!

    ReplyDelete
  35. //அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டியவர்கள் பெரியாரும் மணியம்மையாரும்.//
    கலைமகள் ஒருவன் நாவில் குடியிருந்தால் அவள் எங்கே டாய்லட் போவாள் என்று கேள்வி கேட்டவரிடம் இப்படித்தான் கேட்க இயலும்.

    நாகம்மையாரின் கற்பில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்ததாலேயே தைரியமாக அவர் பொதுக்கூட்டத்தில் கேள்வி கேட்டவருக்கு அவ்வாறு பதில் கூற இயலும் எனக் கூறும்போதே பெரியாருக்கு இந்த விஷயத்தில் ஆணாதிக்க சிந்தனைதான் என்பது தெரிய வருகிறது.

    அவருக்கே அம்மாதிரி மனைவியின் துரோகம் வந்திருந்தால் தாங்கிக் கொண்டிருக்க மாட்டார் என்பதை பகுத்தறிவு உள்ள எவரும் ஒப்புக் கொள்வார்கள்.

    அவர் தேவையின்றி மற்றவர் நம்பிக்கை பற்றி கொச்சையாகவெல்லாம் பேசினால் அப்படித்தான் அவரைப் பற்றி மற்றவர்களும் தத்தம் சந்தேகங்களை எழுப்புவார்கள்.

    இது இரட்டை வழி; ஒருவழிப் பாதையல்ல.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  36. //டோண்டு உங்களின் உடல் தேவை ஆராய்ச்சிக்கு பெரியாரின் இந்த கருத்து பதிலடியாக இருக்கும் என்பதால் அதை அப்படியே தருகிறேன்//


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பெரியார் செத்து போயிட்டாருங்க!
    உங்க கருத்தை சொல்லுங்க!

    ReplyDelete
  37. //கலைமகள் ஒருவன் நாவில் குடியிருந்தால் அவள் எங்கே டாய்லட் போவாள் என்று கேள்வி கேட்டவரிடம் இப்படித்தான் கேட்க இயலும். //

    எனக்கும் அந்த சந்தேகம் உண்டு!
    எங்கே டாய்லெட் போவாள்?
    எம்புட்டு நேரம் தான் அடிக்கிகிட்டே இருக்குறது!?

    ReplyDelete
  38. //அவருக்கே அம்மாதிரி மனைவியின் துரோகம் வந்திருந்தால் தாங்கிக் கொண்டிருக்க மாட்டார் என்பதை பகுத்தறிவு உள்ள எவரும் ஒப்புக் கொள்வார்கள்.//

    துரோகம் என்ற வார்த்தையை கண்டிக்கிறேன்!

    அம்மையாருக்கு தைரியம் வந்திருந்தால் என்று சொல்லலாம்!

    இதுல என்ன புண்ணாக்கு துரோகம் கிடக்கு!

    ReplyDelete
  39. //1. What will be the reaction of dinamalar after the arrest of the editor lenin in connection with actress issue?(actress Bhuvaneswari arrest affair)//
    உங்கள் 5 கேள்விகளும் 22-ஆம் தேதிக்கான பதிவின் வரைவுக்கு சென்றுல்ளன.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  40. //26 வயது பெண்மணியை திருமணம் செய்து கொண்ட 72 வயது கிழவர் மனைவிக்கு என்ன உடல் சுகம் கொடுத்திருக்க முடியும்? மனைவியுடைய வாழ்நாள் முழுதும் பாழ் ஆகவில்லையா? மணியம்மையாரை யாரும் கட்டாயப்படுத்தவில்லைதான். இருப்பினும் பெரியாருக்கு என்று ஒரு பொறுப்புணர்ச்சி வேண்டாமா? அம்மாதிரி சொந்த விருப்பின்படி தியாக வாழ்க்கை வாழ்ந்தக் கண்ணகியைப் பற்றி மட்டும் பெரியார் ஏன் கடுமையாகப் பேச வேண்டும்?///
    இப்பொழுது எங்கு போனது பகுத்தறிவு ..............ஊருக்கு தான் உபதேசம் .......நல்ல ஆய்வு நண்பரே

    ReplyDelete
  41. தோழர் டோண்டு!

    தொடர்ந்து பாப்பானை திட்டி கொண்டு இருப்பதால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு இல்லை! தமிழ் ஓவியா அவர்களும் தொடர்ந்து பார்பனர்களை திட்டி கொண்டே உள்ளார்..
    இன்னும் சிலர் பார்பானர்களுக்கு மூளை அதிகம் என்று சிலாகின்றனர்..சரி ஒகே அவர்களை ஏன் நமது நாட்டிற்காக உழைக்க வைக்க முடியாதா? இங்கே நான் சொல்லவது புது டில்லி ஏகாதிபத்தியம் அல்ல!! இங்கே சிக்கல்கள் உள்ளன ..சாதி என்றால் இனம் என்று புரிந்து கொள்ள கூடிய அறியாமையில் சிலர் உள்ளார்கள். அதை ஒழிக்க ஒரே வழி..வர்ணாசிரம அடிப்படைகொள்கைகளை மாற்றுவது.. பார்பனர்கள் மற்ற அனைவரும் செய்யும் தொழில்களையும் செய்யவேண்டும்.. ஏர் பிடித்து உழவும் தெரிந்து இருக்க வேண்டும்..அதில் உமது நிலைப்பாடு என்ன?
    இன்று தமிழினத்திற்கு ஏகபட்ட பிரச்சனைகள் உள்ளன..ஈழ தமிழர் முதற்கொண்டு சொல்லில் அடங்காது.. இவை அனைத்தையும் உங்கள் சொந்த பிரச்சனை போல் உணர்கிறீர்களா? நீங்கள் சாப்பிடும் உணவு ஒரு சக தமிழ் தொழிலாளியினால் விளைந்தது என்று உணர்கிறீர்களா?

    அப்படியாயின் உங்கள் தோழர்களை ஒன்றிணைய சொல்லுங்கள் நாம் ஆயுதம் ஏந்தி சேகுவரா போல் போராடுவோம்! தெரு முக்கில் கத்திவிட்டு இழுத்து போர்த்தி கொண்டு தூங்குவதுதான் போராட்டமன்று! அதற்கு இந்த நாட்டில் மரியாதை இல்லை என்று கத்தி கத்தி பார்த்து தெரிந்தாகிவிட்டது.டில்லி வாலாக்கலை சுளுக்கு எடுக்க வேண்டும்!

    ReplyDelete
  42. good document to give good idea about this issue.

    i am asking lot of people why anna is against this marriage, because i don't have idea about this age difference.

    thanks for the details.

    Joseph
    www.tamilcomedyworld.com

    ReplyDelete
  43. //
    //அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டியவர்கள் பெரியாரும் மணியம்மையாரும்.//
    கலைமகள் ஒருவன் நாவில் குடியிருந்தால் அவள் எங்கே டாய்லட் போவாள் என்று கேள்வி கேட்டவரிடம் இப்படித்தான் கேட்க இயலும்.
    //

    கழகக்கண்மணிகளின் இதயத்தில் பெரியார் இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்களே...
    இதயத்தில் கக்கூஸ் இருக்கா ? என்றும் கேட்கலாம்.


    -நன்றி ஜெயமோகன்.

    ReplyDelete
  44. //நீங்களும் கொஞ்சம் யோசிங்க!
    நாட்டுல பெரியாரிஷம் தாண்டி பேச நிறைய விசயங்கள் இருக்கு! ஆனா நீங்க பண்றது இயந்திர தனமான வேலையாயிருக்கு!

    நீங்க இப்படி இருக்குறது பெரியாருக்கே பிடிக்காது!//

    பெரியாரியல் தாண்டி நிறைய விசயமிருக்கு, ஆனா நீங்க பெரியாரியலையே தாண்டலையே வால் பையன்.

    கூரை ஏறி கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்
    எங்க ஊரில் இப்படி ஒரு பழமொழி இருக்குங்க.

    ஆமா நீங்க இதுவரைக்கும் பெரியாரியல் தாண்டி என்ன சாதிச்சிருக்கீங்க வால் பையன்.

    உதாரணத்திற்கு மக்கள் சமத்துவமாக வாழ ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காக நான் ஜாதியை ஒழிக்கும் நோக்கில் நான் பிறந்த ஜாதியில் திருமணம் செய்வதில்லை என்று உறுதி ஏற்றுக்கொண்டு (படிக்கும் காலத்திலிருந்து ) அதன் படி வேறு ஜாதியில் திருமணம் அதாவது ஜாதி ஒழிந்த திருமணம் செய்து கொண்டேன்.

    அது போல் எங்க அப்பா அம்மா இறந்த போது எந்தச் சடங்கும் இன்றி (சடங்கின் உண்மைத்தன்மை என்ன என்பதை அறிவுறுத்தி இதனால் சடங்கு செய்ய மாட்டேன் என்று ஊரார் முன்னால் கூறி)அவர்களின் இறுதி நிகழ்ச்சியை நடத்தினேன்.

    சுய சிந்தனை இல்லாத நானே இது போன்ற காரியங்கள் செய்துள்ளேன்.

    நீங்களோ மிகப் பெரிய சுய சிந்தனையாளன்,பெரியாரியலையெல்லாம் தாண்டி பேசுபவர் உலக அறிவாளியான நீங்கள் செய்த காரியங்கள் (மக்களுக்காக) ஏதாவது
    இருந்தால் எடுத்துவிடுங்கள். அப்போதாவது உங்கள் சுயசிந்தனை இன்னும் சுடர் விட ஏதுவாக இருக்கும் செய்வீர்களா? வால் பையன்

    ReplyDelete
  45. தமிழ் ஓவியா -வின் பாபர் மசூதியை இடித்த இந்து முஸ்லீமாக மாறிய விநோதம் என்ற இடுகைக்கு நான் இந்த பின்னுட்டம் இட்டிருந்தேன். ஆனால் அது பதிவாகவில்லை....

    தமிழச்சி என்பவரது தளத்தில் படித்தது.

    ஒரு வயதான ஹிந்து மனிதர் பெரியாரிடத்தில் இவ்வாறு கேட்கிறார் - நீங்கள் நாத்திகர். முஸ்லீம்கள் ஆத்திகர்கள். அவர்களை மட்டும் ஆதரிக்கும் நோக்கம் என்ன?

    அதற்கு பெரியார் - அவர்கள் கடவுள் யோக்கியர். உங்கள் கடவுள் வைப்பாட்டி வைத்திருக்கிறார் என்றாராம்.

    ஆகா, என்ன ஒரு தீர்க்க சிந்தனை பெரியாருக்கு. ஆம். முஸ்லீம் கடவுள் வைப்பாட்டி வைத்துக்கொள்வதில்லை. முஸ்லீம்கள் வைப்பாட்டி வைத்துக்கொள்கிறார்கள். இதுவல்லவோ பகுத்தறிவு. - பயபுள்ள.

    ReplyDelete
  46. //அவர்கள் கடவுள் யோக்கியர். உங்கள் கடவுள் வைப்பாட்டி வைத்திருக்கிறார் என்றாராம்.//

    முஸ்லீம்களின் கடவுள் ஆணுமில்லாதவர்,
    பெண்ணுமில்லாதவர்!

    வேறு எதாவது அர்த்தம் எடுத்துகிட்டா நான் பொறுப்பில்ல, ஆனா நான் சொன்னது உண்மை தான்!

    ReplyDelete
  47. //கழகக்கண்மணிகளின் இதயத்தில் பெரியார் இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்களே...
    இதயத்தில் கக்கூஸ் இருக்கா ? என்றும் கேட்கலாம்//

    வஜரா,

    கழகக் கண்மணிகளுக்கு இதயமும் கிடையாது,மூளையும் கிடையாது;இருந்தால் இப்படி சகுனி தாத்தாவுக்கும்,மஞ்ச துண்டுக்கும் ஜால்ரா அடிப்பார்களா.

    மூளை இருக்க வேண்டிய இடத்தில் யூரினல்,இதயம் இருக்க வேண்டிய இடத்தில் டபிள்யூ சி இருப்பதால் இவர்களின் இதயத்திலும்,மூளையிலும் குடி கொண்டிருப்பது சகுனியும்,மஞ்ச துண்டும்.

    இவர்களின் பேச்சும் செயல்களும் துர்நாற்ற்மடிப்பதன் காரணம் இன்னவென இப்போது புரிகிறதா?

    ReplyDelete