நிரந்தர பக்கங்கள்

8/19/2010

ஜாபாலி, சார்வாகரை விடவா இப்போதைய நாத்திகர்கள் அதிகம் பேசிவிட்டனர்?

நாத்திகமும் ஆத்திகமும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். வாழ்நாள் முழுக்க ஒரு சராசரி மனித ஆத்திகனாகவோ நாத்திகனாகவோ இருந்தது மிக மிக அரிதே. நாத்திகர்கள் கடவுளை திட்டிக் கொண்டே இருப்பதாலேயே அவர்கள் கடவுளை அதிகம் நினைப்பதாகவும் அவர்களுக்கே மோட்சம் நிச்சயம் என்றும் கூட சில கோஷ்டிகள் கூறிவருகின்றன.

அப்படியானால் நம்ம ஈ.வே.ராமசாமி நாயக்கர் அவர்கள் சொர்க்கத்தில்தான் இருக்க வேண்டும். இப்போது அவரது சிலை வேறு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அருகேயே பெருமாளின் நிலையான பார்வையின் கீழேயே வந்து விட்டது. நிச்சயம் அவரை இப்போது ராமசாமி ஆழ்வார் என்று கூட கூறலாம்.

முரளி மனோஹரின் கேள்வி, அது என்ன ஆழ்வார் என்று? அதாகப்பட்டது பெருமாளுக்கு பின்புறம் காட்டியபடி சிலை இருந்தால் அது துவாரபாலகாளை குறிக்குமாம். பெருமாளை நோக்கிய வண்ணம் இருந்தால் அது ஆழ்வாராம், ஆகவேதான் ராமசாமி ஆழ்வார் என்றேன்.

இப்போதைக்கு ராமசாமி ஆழ்வாரை விட்டுவிடுவோம். ஜாபாலி பற்றி பேசுவோம். அவரைப் பற்றி இந்தப் பதிவிலிருந்து சில வரிகள்: (சமயம், ராமரை அயோத்திக்கு அழைத்துச் செல்ல பரதன் காட்டுக்கே வந்துள்ளான்).

“அங்கே அயோத்தியில் இருந்து வந்திருந்த பல முனிவர்களில் ஒருவரான ஜாபாலி என்பவர் ராமரைப் பார்த்துக் கூறுகின்றார். ஜாபாலி பேசுவது நாத்திக வாதம். முன் காலத்தில் நாத்திகமே இல்லை, என்றும், வேதங்களில் கூடச் சொல்லப் படவில்லை என்றும் பலரும் நினைக்கலாம். இறைவன் என்ற தத்துவம் ஏற்பட்ட நாளில் இருந்தே நாத்திகம் என்ற தத்துவமும் இருந்தே வருகின்றது. எவ்வாறு இறை ஏற்பு இருக்கின்றதோ, அவ்வாறே இறை மறுப்பும் இருந்தே வந்திருக்கின்றது. இன்று புதியதாய் எதுவும் வரவில்லை.

ஜாபாலி ஸ்ரீராமனிடம் சொல்கின்றார்: “ஏ, ராமா, நீ என்ன பாமரத்தனமாய்ப் பேசுகின்றாய்? சிந்திக்கின்றாய்? யார் யாருக்கு உறவு? ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு என்ன செய்ய முடியும்? அனைவருமே தனித்தனியாய்த் தானே பிறக்கின்றார்கள். பயணம் செய்யும் மனிதன் ஒரு நாள் ஒரு ஊரைக் கடப்பது போலவும், இரவு தங்குவது போலவும் உள்ள இந்த வாழ்க்கையில் யார் தந்தை? யார் மகன்? தசரதன் உனக்குத் தந்தை என்பதற்கு அவன் ஒரு கருவி மட்டுமே!

நீ கற்பனையாக உணர்வுகளை வளர்த்துக் கொண்டு வீணில் வருந்தாதே! நீ இப்போது உன் தந்தைக்குச் செய்த ஈமக் கடன்களினால் என்ன பயன்? உன் தந்தையோ இறந்துவிட்டான். அவனால் எதை உண்ண முடியும்? இந்த உணவை இப்போது நீ இங்கே படைத்தது வெறும் வீணே! பயணம் செய்யும் நமக்குக் கையில் தானே உணவு எடுத்துச் செல்கின்றோம்? அப்படி இருக்க இறந்தவனுக்கு இங்கே உணவு படைத்தால் அது அவனுக்குப் போய்ச் சேருமா என்ன? இவை எல்லாம் தான, தர்மங்களை எதிர்பார்ப்பவர்களால் சாமர்த்தியமாக விதிக்கப் பட்ட வழிமுறைகள். நீ இப்போது ராஜ்யத்தைத் துறப்பது என்பதும் உன் குலத்தில் யாரும் செய்யாத ஒரு காரியம். ராஜ்யத்தை ஏற்று அதனுடன் கூடி வரும் சுகங்களை அனுபவிப்பாயாக!” என்று கூற...”


மேலே குறிப்பிட்ட அப்பதிவில் இந்த இரு மனமுருக்கும் பாடல்களையும் எதுக்கும் இருக்கட்டும்னு போட்டுக் கொள்கிறேனே. பதிவர் கீதா சாம்பசிவத்துக்கு நன்றி.

““விம்மினன் பரதனும் வேறு செய்வது ஒன்று
இன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான்
செம்மையின் திருவடித் தலம் தந்தீக என
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்.

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்
முடித்தலம் இவை என முறையின் சூடினான்
படித்தலத்து இறைஞ்சினான் பரதன் போயினான்
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்.

வால் பையன் ராஜன் வகையறாக்களுக்கு ஜாபாலியை பிடிக்கும் நிச்சயமாக என்கிறான் முரளி மனோகர். இருக்கட்டுமே, சார்வாகரையும் அவர்களுக்கு பிடிக்க வேண்டுமே.

இப்போது சார்வாகர் முறை. அவர் கூறுகிறார்:
''உடலானது இந்திரியங்கள் மூலமாக இயங்குகிறது.உலகும் அதில் உள்ள அனைத்தும் இயற்கையாய்த் தோன்றுகின்றன.அவற்றைப் படைக்க ஒரு இறைவன் தேவையில்லை.நன்றாக சாப்பிட்டு,தூங்கி முடிந்த வரை வாழ்வின் அத்தனை இன்பங்களையும் அடைந்து விடவேண்டும்.கடவுள் வழிபாடு, சடங்குகள்,ஒழுக்கங்கள் அவசியம் இல்லாதவை. தீ சுடுவதும்,நீர் குளிர்ந்திருப்பதும் இயற்கைத் தன்மையால்;கடவுளால் அல்ல.மோட்சம், சொர்க்கம், ஆன்மா, பரலோகம் என்பவை கட்டுக் கதைகள்.வேதங்கள் வேள்வி கற்றவரின் வயிற்றுப்பாட்டிற்காக ஏற்பட்டவை.''

பதிவர் ஹரிஹரனின் ஒரு வலைப்பதிவிலிருந்து மேலும் சில வரிகள்:
“"Runam Krithva Ghritham piba"
ருணம் கிரித்வா கிரிதம் பிபா
"கடன் வாங்கியாவது நெய் குடி"

இது சார்வாக வாழ்வியலில் ஒரு சுலோகம். உடலை மட்டுமே பிரதானமாகக் கொண்டாடும் வாழ்வியல் தத்துவம் சார்வாக தத்துவம். கடனை வாங்கியாவது நெய் பருகி உடலைப் பேணச்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் என்பது மாதிரி மனிதன் பிறந்ததே புலன் இன்பங்களை அனுபவிப்பதற்கே என்கிற ஆரம்பநிலை வாழ்வியல் தத்துவம்.

இப்படி உடலை மட்டுமே பிரதானம் என்கிற புள்ளியினும் சிறிய சிந்தனையாகிய சார்வாக தத்துவம் எப்படி எதனால் என்பது மாதிரியான கேள்விகளை கேட்கச் சொல்வதில்லை. சார்வாகத்தில் எல்லாமே ஏன் கேள்விகள்தான். ஏன் என்பது இருப்பதிலேயே எளிதாக எந்தப் புரிதலும் இல்லாத அளவிலேயே எவராலும் ஏராளமாக எழுப்ப முடிகிற எளிதான கேள்வி!

ஆக உடலை மட்டும் பேணும், ஏன் என்று மட்டும் கேள்வி கேட்பது இருப்பதிலேயே எளிதான ஆரம்ப நிலை வாழ்வியல் முறை. இதில் சிந்தனைக்கு இடம் எங்கே இருக்கிறது? "ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை" என்பது மாதிரி சார்வாக வாழ்வியல் இருந்தது.

மனிதனுக்கு வேதநெறி வாழ்வியல் என்கிற சர்க்கரை கிடைத்தால் இனிப்புச் சுவைக்கு இலுப்பைப் பூவுக்கு ஏன் செல்லப்போகிறான். எனவே சார்வாக வாழ்வியல் முறை காலஓட்டத்தில் மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சி என்கிற மியூஸியப் பொருளாக ஆனது. புள்ளி அளவில் சிந்தனை, உடலே அல்டிமேட் என்கிற வாழ்வியல் முறையின் அருகே பெரிய ஹைவேஸ் மாதிரி வேதநெறி வாழ்வியல் பல்விதமான எதனால், எப்படி என்கிற subjective inquiry களுக்கு அறிவியல் விளக்கங்கள் தந்தபடி நான்கு வேதங்கள்,கல்வி, கலைகள்,மருத்துவம், போர்கருவிகள், ஆன்மீக உயர்தத்துவ உபநிடங்கள், வழிபாட்டுமுறைகள், என்று பரிணாம வளர்ச்சி அடைந்தது கடந்த 10,000 ஆண்டுகளில்.

எது நேர்மையானதோ எது மனிதனின் பரிணாம வளர்ச்சியோடு சிந்தனைகளுக்கு வழிகாட்டுகிறதோ அதுவே மனிதனின் வாழ்வியல் முறையாக தினசரி வாழ்வில் நீடிக்கும். வலிந்து திணிப்பதால் தத்துவங்கள், வாழ்வியல் நெறி என எதுவும் காலத்தினை வென்று நெடுங்காலம் நீடித்து நின்றிடாது.

Anything and everything is subjected to evolution. Time changes anything and everything. The one that fails to cope up to face the challenges and upgrade / evolve to the legitimate requirements will diminish because of the builtin deficiency.

சார்வாக வாழ்வியல் தத்துவத்தினை இந்து வேதநெறி தின்று உள்வாங்கியதாகச் சொல்வதெல்லாம் பரிணாம வளர்ச்சியினை முன்னேற்றத்தினை இல்லை என்று மறுப்பதற்கொப்பானது”.


பை தி வே சார்வாகர் என தட்டச்சிட்டு எனது வலைப்பூவிலேயே தேடிய போது எனது இந்த நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் பதிவில் கிடைத்த வரிகள்:

“hayyram said...
///வால்பையன் has left a new comment on your post "சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்":

மற்ற மதத்துகாரர்கள் இதை கொண்டாட மாட்டாங்களே, அவுங்களுக்கு அம்பா அருள் புரிய மாட்டாளா?
அதென்ன வருஷத்துக்கு ஒருக்கா மட்டும் அம்பாளுக்கு சொறிஞ்சி கொடுக்குறது?!
Posted by வால்பையன் to பகுத்தறிவு at September 25, 2009 9:47:00 PM IST ///
சார், இந்துக் கடவுளை அவமதிக்கும் விதமான வால்பையனின் இந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால் என்ன சொல்வீர்கள்?

September 26, 2009 11:03 AM
dondu(#11168674346665545885) said...
@ hayyram
வால்பையன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர் ஒரு ஹிந்துதான். இம்மதத்தில்தான் நாத்திகர்களும் இருக்கவியலும். சார்வாக மகரிஷி, ஜாபாலி ஆகியோர் பேசியதை/எழுதியதைக் கருதும்போது வால்பையன் ஜுஜூபி.

இதே மாதிரி பேசிய கண்ணதாசன் பிறகு இரட்டிப்பு வேகத்தோடு கண்ணன் காட்டிய வழியினுள் வந்தார், அர்த்தமுள்ள இந்து மதம் எழுதினார். அதே போல வால்பையனுக்கும் பிராப்தம் இருந்தால் அப்படியே நடக்கட்டுமே, என்ன போச்சு”?


கடைசியாக ஒரு வார்த்தை. நாத்திகர்களும் ஹிந்துக்கள்தான்.

மேலும் அரசு தரும் இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்களில் பல தலித்துகள் மதம் மாறினால் பிசி-ஆகி விடுவதைத் தவிர்க்கவே ஹிந்து மதத்திலேயே இருப்பவர்களும், மற்ற ஓபிசி/எம்பிசி-க்களும் ஹிந்துக்கள்தான். அவர்கள் அனுபவிக்கும் சலுகைகள் அவர்கள் ஹிந்து மதத்தின் சாதிகள் என்பதாலேயே வருகிறது. ஆக நாங்கள் விரும்பாமலேயே எங்களை ஹிந்துக்களாக்குகிறார்கள் என யாரும் மருள் வந்து சாமியாடவெல்லாம் வேண்டாம். தாராளமாக வேறு மதம் என கோஷித்துக் கொள்ளுங்கள் இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுத்து விட்டு. ஹிந்து என்றால் திருடன் என பாரசீக அகராதி கூறியதாகக் கூறிக்கொள்பவரும் அதை செய்ய மாட்டாரே. ஏனெனில் அவர் குடும்பத்தாருக்கு சலுகை போய் விடுமே. புரிகிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

68 comments:

  1. All in all Arul, Arul, Arul come and take the comedy show stage please.

    ReplyDelete
  2. ஸ்ரீதர்August 19, 2010 9:10 PM

    //All in all Arul, Arul, Arul come and take the comedy show stage please.//

    நீங்க சொல்லிட்டீங்கனு, மானம், ரோசம் பொத்துக்கிட்டு, வராம இருப்பரா என்ன... இருங்க வருவாரு, கூடவே ஒரு கூஜாவையும் கூட்டிக்கிட்டு வருவாரு

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. மண்டோதரி ராவணனிடம் ராமன் தான் நல்லவன் போல் தெரிகிறதே தவறு உங்கள் பக்கம் தானே. இப்போதவாது திருந்துங்களேன் என்கிறாள். அதற்கு ராவணன், ராமன் என்னை மன்னிப்பான் என்று தெரியும். பிறகு என்னைக் கொல்லாமல் விட்டு விடுவான். எனக்கு மோட்சம் கிடைக்காமலே போய் விடும். நான் அவன் கையால் சாவதுதான் என் மோட்சத்திற்கு வழி வகுக்கும் என்கிறான்.

    இந்தக் கதையின் நம்பகத்தன்மை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கம்சன், சிசுபாலன், ஹிரண்ய கசிபு ஆகியோரையும் நாம் இங்கு நினைவு கூரலாம். அவர்கள் கூடப் பிளான் பண்ணித்தான் விரோதப் போக்கைக் கடைபிடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. ஜோ மலம் பன்னாடை எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். ஓட்டை இங்கிலீசில் உரையாற்ற்வும்.

    இதே வந்துட்டேன்.

    டோண்டு ராகவன்!

    ராமசாமி நாயக்கரை, முதன்முதலில் ஆழ்வார் என அழைத்தவர் நீங்கள் இல்லை. That credit goes to Rajai.

    மற்றபடி பதிவு நன்றாக இருக்கிற்து. கடைசிப்பத்தி மட்டும் not so fitting. அப்ப்த்திக்கு முன்பேயே முடித்திருக்கலாம்.

    ReplyDelete
  6. @ஆர்.கோபி
    ஏதோ உள்ளுணர்விலே சரியாக எழுதி விட்டீர்கள்.

    வைகுண்டத்தில் துவாரபாலகர்களாக இருந்த ஜயனும் விஜயனும் முனிவர்களால் சபிக்கப்பட்டு பல முறை (7?)அரக்கர்களாக பிறக்க நேரிடுகிறது.

    அவர்கள் ஒவ்வொரு முறையும் விஷ்ணுவின் கையாலேயே மரணமடைய வேண்டுமென பிரார்த்தித்து அவ்வாறே நடந்தது. அவர்கள்தான்:

    - ஹிரண்யாட்சன், ஹிரண்யகசிபு,
    - ராவண்ன், கும்பகருணன்,
    - கம்சன், சிசுபாலன்
    ஆகியோர்.

    நீங்கள் சொன்ன கதையின் வேறொரு ஆக்கம் உண்டு.

    ராவணனின் மனைவிகளில் ஒருத்தி அவனிடம், “உங்களுக்குத்தான் எல்லார் மாதிரியும் வேடம்போடத் தெரியுமே, நீங்கள் ஏன் ராமனைப் போல வேடம் போட்டு சீதையை ஏமாற்றக்கூடாது?” எனக்கேட்டாளாம்.

    அதற்கு ராவணன் சொன்னானாம், “அது எனக்குத் தோன்றாமல் இருக்குமா? அதையும் செய்தேனே, ஆனால் என்ன அக்கிரமம், ராமனின் வேடம் தரித்ததுமே மாற்றான் மனைவி மேல் ஆசை எல்லாம் ஒழியத் தொடங்கியதே. அவசர அவசரமாக வேடத்தைக் கலைத்தேன்” என்றானாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. அய்யா தந்தை பெரியாரின் பார்ப்பனிய வேரருப்பினால் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் குய்யோ முறையோ என்று அந்தகாலம் தொட்டு இந்தக்காலம் வரை அய்யாவை நினைவில் வைத்துகொண்டுள்ளர்கள். அது முதல் மகிழ்ச்சி. தமிழ் நாட்டில் பிறந்த பார்ப்பனர் வீட்டில் பெரியார் படம் இருக்கோ இல்லையோ அவர்கள் உள் மனதில் அவர் நினைவு நீண்டுகொண்டுதான் இருக்கிறது என்பது மட்டும் நன்கு விளங்குகிறது.அவர்கள் மூச்சுக்கு 32 தடவை ராமசாமி..ராமசாமி என்று கூறும்போதே..அய்யாவின் தாக்கத்தை நன்கு உணரமுடிகிறது. அய்யாவை என்றும் நினைவில் வைத்திருக்கும் பார்ப்பனர்களுக்கு பாராட்டுகள்....அறிவு ஆசானின் அடி எப்பேர்பட்ட அடி....அய்யாவை மறக்ககூடாது பார்பனர்கள்.... சரி ஆஸ்திகம் நாஸ்திகம் பற்றி அண்ணா என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்....


    1. ஆஸ்திகம் என்று உண்டானதோ, அன்றே நாஸ்தீகமும் உண்டாயிற்று.


    2. ஆஸ்திகம் அறியாமை, பயம், சுயநலம் இவற்றில் முளைத்து; நாஸ்திகம் அறிவின் விசாரணைகளில் முளைத்தது.


    3. ஆஸ்திகம் அறிவைப் பாழ்படுத்துகிறது. நாஸ்திகம் அறிவை ஓங்கச் செய்கிறது.


    4. ஆஸ்திகம் உலகை மிருகநிலைக்கு அழைத்துச் செல்கிறது; நாஸ்திகம் அதை நாகரிக நிலைக்கு அழைத்துச் செல்கிறது.


    5. ஆஸ்திகம் மக்களை அவமதிக்கிறது. நாஸ்திகம் மக்களை மேன்மைப்படுத்துகிறது.


    6. ஆஸ்திகம் மக்களை அழியவைக்கும் நாஸ்திகம் மக்களை வாழவைக்கும்.


    7. ஆஸ்திகத்தால் வறுமை, பிணி முதலியன ஓங்கும் நாஸ்திகத்தால் அவை அழியும்.


    8. ஆஸ்திகமும நாஸ்திகமும் என்றும் தீராப்பகை கொண்டன.


    9. ஆஸ்திகத்திற்கு அறியாமையும் அரசாங்கமும், முதலாளித்வமும் துணை. நாஸ்திகத்திற்குப் பகுத்தறிவே (விஞ்ஞானம்) துணை.


    10. ஆஸ்திகம் அழியக் கூடியது நாஸ்திகம் என்றும் அழியாதது.


    11. ஆஸ்திகம் சில சமயம் சாஸ்திகத்தைப் புறம்பே அழிக்கும் ஆனால், நாஸ்திகமோ ஆஸ்திகத்தை உள்ளும் புறமும் அழிக்கவல்லது.


    12. ஆஸ்திகத்தின் வெற்றி தற்காலிக வெற்றியாகும் நாஸ்திகத்தின் வெற்றியோ நிலைபெற்ற வெற்றியாகும்.


    13. ஆஸ்திக நாஸ்திகப் போராட்டத்தின் லாப நஷ்டக் கணக்கு. ஆஸ்திகத்திற்குத் தோல்வியும், நாஸ்திகத்திற்கு வெற்றியும் சரித்திர முறைப்படி இதுவரை உண்டு, இனியும் உண்டு.


    14. ஒரு மதத்தின்படி அதனை நம்பாத மற்ற மதங்கள் நாஸ்திகமானபடியால், எல்லா மதத்தையும் நம்பாத முழு நாஸ்திகமோ நன்மையளிக்கும் பெருமையளிக்கும், ஆகையால், அம்முழு நாஸ்திகமே எங்கும் பரவுக! ஓங்குக!! (--------அறிஞர் அண்ணா, திராவிட நாடு 31.10.1943)

    ReplyDelete
  8. அய்யா தந்தை பெரியாரின் பார்ப்பனிய வேரருப்பினால் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் குய்யோ முறையோ என்று அந்தகாலம் தொட்டு இந்தக்காலம் வரை அய்யாவை நினைவில் வைத்துகொண்டுள்ளர்கள். அது முதல் மகிழ்ச்சி. தமிழ் நாட்டில் பிறந்த பார்ப்பனர் வீட்டில் பெரியார் படம் இருக்கோ இல்லையோ அவர்கள் உள் மனதில் அவர் நினைவு நீண்டுகொண்டுதான் இருக்கிறது என்பது மட்டும் நன்கு விளங்குகிறது.அவர்கள் மூச்சுக்கு 32 தடவை ராமசாமி..ராமசாமி என்று கூறும்போதே..அய்யாவின் தாக்கத்தை நன்கு உணரமுடிகிறது. அய்யாவை என்றும் நினைவில் வைத்திருக்கும் பார்ப்பனர்களுக்கு பாராட்டுகள்....அறிவு ஆசானின் அடி எப்பேர்பட்ட அடி....அய்யாவை மறக்ககூடாது பார்பனர்கள்.... சரி ஆஸ்திகம் நாஸ்திகம் பற்றி அண்ணா என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்.... .மேலும் படிக்க http://paraneetharan-myweb.blogspot.com/2010/08/blog-post_3509.html

    ReplyDelete
  9. ராவணனின் மனைவிகளில் ஒருத்தி அவனிடம், “உங்களுக்குத்தான் எல்லார் மாதிரியும் வேடம்போடத் தெரியுமே, நீங்கள் ஏன் ராமனைப் போல வேடம் போட்டு சீதையை ஏமாற்றக்கூடாது?” எனக்கேட்டாளாம்.

    அதற்கு ராவணன் சொன்னானாம், “அது எனக்குத் தோன்றாமல் இருக்குமா? அதையும் செய்தேனே, ஆனால் என்ன அக்கிரமம், ராமனின் வேடம் தரித்ததுமே மாற்றான் மனைவி மேல் ஆசை எல்லாம் ஒழியத் தொடங்கியதே. அவசர அவசரமாக வேடத்தைக் கலைத்தேன்” என்றானாம்.

    தயவு செய்து யாரும் தப்பாகநினக்காதீர்கள் தெரிந்து கொள்வதர்க்காக கேட்கிறேன்

    கடத்திச்சென்ற சீதையை ராவணன் தீண்டினானா இல்லையா?

    தீண்டியிருந்தால் சீதைப்பத்தினியில்லை
    இல்லை என்றால் ராவணன் கெட்டவன்
    இல்லை என்று யாரோ சொல்லிக்கேள்வி!

    ReplyDelete
  10. ஓ, இப்போதுதான் ஞாபகம் வருகிறது. சனத் குமாரர்களின் சாபம். துவாரபாலகர்கள் சீக்கிரம் சாபம் நீங்க ஒவ்வொரு பிறவியும் சீக்கிரம் முடிவதற்காக விஷ்ணுவை விரோதித்துக் கொள்ளுதல். நன்றி சார்.

    ReplyDelete
  11. வாங்க கட் அண்ட் பேஸ்ட் சங்கமித்திரன். நாஸ்திகம் அறிவு வளருமாம். இவங்க அறிவு வளர்ந்து என்ன கண்டு புடிச்சாங்கன்னு சொல்லுங்க. டாஸ்மாக்ல சரக்கு அடிச்சு மைக் புடிச்சு பேசுவாங்க. அவ்ளோ தான்

    ReplyDelete
  12. \\ஆஸ்திகம்//

    சங்கமித்திரா என்ன மசுத்துக்கு ஆஸ்திகம்னு சொல்லுற? உனக்குத்தான் வட மொழி புடிக்காதே?

    ReplyDelete
  13. வணக்கம், வாழ்த்துக்கள். சதமடிப்பதற்கு தகுந்த களம் அமைத்து விட்டீர்கள்.
    பந்து வீச்சாளர்களும் லூஸ் பவுலிங் ஆரம்பித்துவிட்டார்கள்.
    என்னால் முடிந்த ஒரு லூஸ் பால் (லூஸ்த்தனமான அல்ல என்று நினைக்கிறேன் ) இது முழுக்க முழுக்க தமிழார்வ கேள்வி..

    நாத்திகம் எனும் வார்த்தை நாஸ்த்திகத்திலிருந்து வந்ததா? நாஸ்தி என்றால் அழிவு / அழிக்கும் எனும் பொருள் வருகிறதே. முட நம்பிக்கைகளை அழிக்கும், கடவுள் கோட்பாட்டை அழிக்கும் என்று கொஞ்சம் `ரன்` கள் கிடைக்கும் - நான் எதிர்பார்ப்பது உண்மை பொருள் பொதிந்த பதில். கிடைக்குமா?

    உலக நாயகன் (என் இஷ்ட நாயகனும் ஆன ) கமல் கூட அவரது 50ஆவது திரைவருட விழாவில் , தன்னை ஏன் நாத்திகன் என்று அழைக்கிறிர்கள், பகுத்தறிவு வாதி என்று அழையுங்கள் என்றார். ( கடவுள் இருந்தால் நல்லா இருக்குமே என்ற ஏக்கம் –தனி விஷயம்)

    ReplyDelete
  14. தோடா கூ"ஜோ" முதலில் வந்துவிட்டது. எங்கே இன்னும் அருலைக் காணோம் ?

    ReplyDelete
  15. இராமாயணம் போன்ற இதிகாசங்கள் உண்மை நிகழ்வு என்று நம்புகிறீர்களா?

    ReplyDelete
  16. வால் மற்றும் நீங்கள் மதம் மாறுவதாக சொன்னால் பெரிய சன்மானம் கிடைக்கும்----:)

    ReplyDelete
  17. @குகுடுப்பை
    இதிஹாசம் என்றால் இப்படி நடந்தது என்னும் பொருள் என நான் படித்துள்ளேன். சில நிகழ்வுகள் நடந்திருக்க வேண்டும். அதை பின்னால் ஜோடித்து கூறியும் இருக்கலாம், தெரியாது.

    வாலிவதம் போன்ற தர்ம சங்கடத்தை விளைவிக்கும் நிகழ்வுகள் நடந்திருக்கக் கூடும். பிறகு அதை பலவாதங்களால் சரிக்கட்டுவதும் நடந்திருக்கலாம்.

    ஆனால் ஒன்று. எவ்வளவு அற்புதமான கதையையும் ஓரிரு முறை படித்தாலே அலுப்பு தட்டும்போது ராமாயணம் மகாபாரதம் மட்டுமே எவ்வளவு முறை படித்தாலும் அலுப்பு தட்டுவதில்லையே அது ஏன்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. அப்ப சங்கமித்திரன் கூற்றுப்படி அவர் கோஷ்டியினர் சதாசர்வகாலமும் பார்ப்பனர்கள் என்று புலம்புவதற்கு காரணம் பார்ப்பனர்கள் இன்னமும் அவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் மரண அடி தானோ?

    ReplyDelete
  19. ராஜவம்சம்,

    உங்கள் கேள்விக்கான விடை தான் : ராமாயணம்.

    ராமாயணம் என்பது, ராமனின் மனைவி சீதையை ராவணன் கடத்திச் சென்றான். ராமன் போரிட்டு மீட்டான் என்று சிம்பிளாக சொல்லி விட்டு போகும் கதையல்ல.

    ஒவ்வொரு கேரக்டருக்கும் பல கிளைக் கதைகள் உண்டு ராமாயணத்தில். ஒவ்வொரு கிளைக்கதையும் எதாவது ஒரு ரீதியில் பிண்ணிப் பிணைந்திருக்கும்.

    ஒவ்வொரு காட்சிக்கும், செயலுக்கும் பின்னால் பல காரணங்கள் சொல்லப்பட்டிருக்கும்.

    சமீபத்தில் 1992-ல் ஒரு பத்திரிகையில் (மங்கையர் மலர் என்று நினைவு) இது குறித்து சுவாரசியமான ஒரு 5 பக்க கட்டுரை வந்திருந்தது.

    ReplyDelete
  20. குடுகுடுப்பை..

    ஒண்ணுமே செய்யாதவனையெல்லாம் ‘பெரிய’ ஆளு மாதிரி ஒரு ஜால்ரா கும்பல் இன்றைக்கும் ஜல்லியடிக்கலையா? அதையே நம்பும் போது ராமாயணம் எல்லாம் உண்மையிலேயே நடந்திருக்கும்னு நம்புங்க சார்.

    ReplyDelete
  21. ///நாத்திகர்கள் கடவுளை திட்டிக் கொண்டே இருப்பதாலேயே அவர்கள் கடவுளை அதிகம் நினைப்பதாகவும் அவர்களுக்கே மோட்சம் நிச்சயம் என்றும் கூட சில கோஷ்டிகள் கூறிவருகின்றன///

    By the same token or similarly, தமிழில் கூற வேண்டுமானால், அதே மாதிரி எப்பொழுதும் பெரியாரை, நீங்கள், உங்களது வகையறாக்கள் மூச்சுக்கு முன்னூறு முறை பெரியார் நாமத்தை சொல்லிக் கொண்டு இருப்பதால் உங்களுக்கு இப்போ இந்த ஜன்மத்தில் எல்லா நலமும் கிடைக்கும் பெரியார் ஆசீர்வாததால்.

    நீங்களும் இல்லாதா சொர்கத்திற்கு போகப் போவது இல்லை. இப்போ, இப்போ இருக்கிற சொர்க்கத்தை விட்டு விட்டு (உங்கள் மனைவியுடன், மகளுடன் மகிழ்ச்சியாக வாழும் நாட்கள் தான் உண்மையான சொர்க்கம்) இல்லாத சொர்க்கத்திற்கு எதற்கு ஏங்குகீறீர்கள்? இப்போ நீங்கள் நன்றாக வாழுங்கள். இருக்கும் சொர்கத்தை நன்றாக குடுமப்த்துடன் அனுபவியுங்கள். அதை விட்டு விட்டு...

    [நாத்திகர்களை விட] நாத்திகர்கள் மறந்தாலும் மூச்சுக்கு முன்னூறு முறை பெரியார் நாமத்தை சொல்லிக் கொண்டு இருக்கும் உங்களுக்கு (பெரியார் பேரை நீங்கள் எப்பொழுதும் மறப்பதில்லை) உங்களது குடும்பத்தினர்க்கும் பெரியார் அனுக்கிரகம் உண்டு.

    நீங்கள் உங்களது குடுமப்தினருடன் நீடுடி வாழ்வீர்கள்...பெரியார் அனுக்கிரகதினால்...

    ReplyDelete
  22. Thanks to Periar.

    His arguments were like vaccination to our society. To some the vaccination worked very good , they could able to sustain future attacks. To some people the vaccination was to too strong, they got the disease.

    Those who got the disease, they still spread the disease. Instead of considering it as a vaccination, they considered it as a supplements. They just cut and paste. This corrupts our society.

    Hope, it will change.

    Sridhar

    ReplyDelete
  23. //பெருமாளுக்கு பின்புறம் காட்டியபடி சிலை இருந்தால் அது துவாரபாலகாளை குறிக்குமாம். //

    பெருமாள், சிவனுக்கு பின்புறம் காட்டித்தான் ஐயப்பன் பிறந்தானாமே!
    அது எதை குறிக்கும்!?

    ReplyDelete
  24. //வால் பையன் ராஜன் வகையறாக்களுக்கு ஜாபாலியை பிடிக்கும் நிச்சயமாக என்கிறான் முரளி மனோகர். இருக்கட்டுமே, சார்வாகரையும் அவர்களுக்கு பிடிக்க வேண்டுமே.//


    பிராக்டிக்கலா யார் இருந்தாலும் பிடிக்கத்தான் செய்யும்!

    ReplyDelete
  25. //நாத்திகர்களும் ஹிந்துக்கள்தான்.//


    அது என்ன அடையாளம்!?

    என் தாய் தந்தையர் பின்பற்றிய்தை நானும் பின் பற்ற வேண்டுமென்றோ அல்லது அது தான் என் அடையாளமென்றோ எதாவது சட்டம் இருக்கா?

    பெற்றோர்கள் வைத்த பெயரையே கெஜட்டில் மாற்றி கொள்கிறார்கள், ஒன்னுக்கும் பெறாத ஜுஜுபி மதத்தையும், சாதியையும் நான் உதறக்கூடாதா?

    ReplyDelete
  26. //ஓபிசி/எம்பிசி-க்களும் ஹிந்துக்கள்தான். அவர்கள் அனுபவிக்கும் சலுகைகள் அவர்கள் ஹிந்து மதத்தின் சாதிகள் என்பதாலேயே வருகிறது. ஆக நாங்கள் விரும்பாமலேயே எங்களை ஹிந்துக்களாக்குகிறார்கள்//


    சலுகைக்கு சலாம் போடுறவனை தான் அப்படி சொல்லனும்!, இங்கே எவன் கேட்டான் சலுகை! என் சோத்துக்கு என்னால் உழைக்க முடியாதா என்ன?

    ReplyDelete
  27. "வாங்க கட் அண்ட் பேஸ்ட் சங்கமித்திரன். நாஸ்திகம் அறிவு வளருமாம். இவங்க அறிவு வளர்ந்து என்ன கண்டு புடிச்சாங்கன்னு சொல்லுங்க. டாஸ்மாக்ல சரக்கு அடிச்சு மைக் புடிச்சு பேசுவாங்க. அவ்ளோ தான்
    '

    குமார்

    நாத்திகர்கள் என்றால் தமிழ்நாடு நாத்திகர்களைச் சொன்னதாக பொருள் எடுக்கக்கூடாது. உலகெங்கும் வாழும், வாழ்ந்த நாத்திகர்களையே பொதுவாகக்குறிப்பிடப்படும்.

    அப்படிப்பார்க்கும்போது சாதனைகள் புரிந்த விஞ்ஞானிகளில் கிட்டத்த்ட்ட 90 விகிதாச்சரத்துக்கு மேல், கடவுள் நம்பிக்கையற்றவர்களே என்பது ஒரு சர்வே.

    அவர்களின் சாதனிகளை நீங்கள் அனுபவித்து வாழ்கிறீர்கள்.

    நாத்திகம் எப்படி அறிவு வளர்க்கிறதென்றால், அது வேண்டாவெட்டி நினைவுகளை அகற்றி, ஒரு விஞ்ஞானியின் எண்ணத்தை ஒரு முகப்படுத்துகிறது.

    He is able to free his intellect from all unwanted thinking about God and Godly matters created by man. If you are a believer and have a religion, it requires you to do and not to do many many things even if you boast you are a Hindu and do anything you like.

    Not only that. Belief in God prevents people to explore many things. In Europe, the Church burnt Galeleo for saying his well known scientific truth. In Netherlands, Spinoza was excommunicated from the Church for his thoughts.

    So, people are afraid to explore. Scientists for centuries did not venture into areas which may come in conflict with the thinking of believers.

    Religions and belief have an overpowering effect on imagination and intellect whereas non-belief frees him from all this.

    So, Anna sounds reasonable.

    ReplyDelete
  28. //குடுகுடுப்பை said...
    வால் மற்றும் நீங்கள் மதம் மாறுவதாக சொன்னால் பெரிய சன்மானம் கிடைக்கும்----:)
    //


    அதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்!

    ReplyDelete
  29. ஆனால் ஒன்று. எவ்வளவு அற்புதமான கதையையும் ஓரிரு முறை படித்தாலே அலுப்பு தட்டும்போது ராமாயணம் மகாபாரதம் மட்டுமே எவ்வளவு முறை படித்தாலும் அலுப்பு தட்டுவதில்லையே அது ஏன்?

    ---

    இதற்கு காரணம் அவைகள் எடுத்துக்கொண்ட themes.

    ஒருவன் மனைவிக்கு இன்னொருவன் ஆசைப்படுதல் என்ற தீமைப்பார்ப்போம்.

    அது எக்காலத்தும் நடக்கும். பொண்டாட்டியை பறிகொடுத்தவனை, அல்லது தாற்காலிகமாக பறிகொடுத்தவனை, பின்னர் அவளை மீட்பதற்காக அவன் செல்லும்போது, அவன் நம் அனுதாபத்தைப்பெறுதல், கடைசியில் அவன் வெற்றிபெற்று பொண்டாட்டியை வீட்டுக்குக்கொண்டுவருதல் - நாம் மகிழ்கிறோம்.

    These are universal themes. Further, in stories within stories, the epic talks about such themes; crimes and punishments; forgiveness etc. So, people could identify with them as if their own lives are analysed; and solutions given.

    That is why, the epics are welcome always.

    I ahve not added with it the way it is being told. That is an also important reason for its attraction.

    ReplyDelete
  30. "...அப்ப சங்கமித்திரன் கூற்றுப்படி அவர் கோஷ்டியினர் சதாசர்வகாலமும் பார்ப்பனர்கள் என்று புலம்புவதற்கு காரணம் பார்ப்பனர்கள் இன்னமும் அவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் மரண அடி தானோ?"

    I look it in a different way.

    A brahmin in TN is a symbol for strong belief in God and practice of such a belief in a coded way.

    The way and the belief are against the way and the non-belief of others.

    எப்போதும் பார்ப்ப்னார் இவர்களால் தாக்கப்படுவதன் காரணம், பார்ப்பனர்களை அவர்கள் போக்கில் விட்டால் ஊர் முழுக்க கோயிலாகக் கட்டிவிடுவார்கள். பூஜைகள். புனஸ்காரங்கள் என மக்கள்பணமும் நேரமும் வீணடிக்கப்படும்.

    இப்போது கூட அரசு 400 கோடி போட்டு கும்பாசபிசேகங்களுக்காக் தள்ளி வைத்திருக்கிறது. இத்தனைக்கும் இது நாத்திகவாதியின் அரசு.

    ஆத்திகவாதியின் அரசு வந்தால்?

    பார்ப்ப்னர்கள் தமிழ்நாட்டையே ஆத்திகர்களின் சொர்க்கமாக்கி விடுவார்கள்.

    அவர்கள் கருத்தின்படி, எல்லாரும் எல்லாவேளையும் சாமி, பூஜை என்றிருந்தால், மக்கள் எல்லாருக்கும் எல்லாமே கிடைத்துவிடும். பசி, பஞ்சம் பட்டினி என்று எதுவே கிடையாது.

    இது அப்பட்டமான மூடநம்பிக்கை. இதுவே பார்ப்பனரின் கொள்கை.

    மற்றவர்களால் இந்தத் தொல்லை இல்லை. எனவேதான் பார்ப்ப்னர் மீது எப்போதும் பாய்ச்ச்சல் இருக்கும். இருக்கவேண்டும்.

    ReplyDelete
  31. பதிவு பிரமாதம்.
    கடைசி பத்தியில் இருக்கும் கருத்தைத் தான் நானும் இங்கே பல பதிவுகளில் வேறு வேறு மாதிரி சொல்லிப் பார்த்தேன். அது வரை சாமி ஆடிக் கொண்டு இருப்பவர்கள் உடனே மலை எறிடுவாங்க. வேப்பிலை அடிக்க பூசாரி வேறு கிடைச்சா அதை மட்டும் தவிர்த்து சுத்தி சுத்தி சாமி ஆடுவாங்க.
    அதான் எல்லோரும் சாமியாடி முடிக்கட்டும்னு காத்துகிட்டு இருந்தேன்.
    சாமி உள்ள வந்தப்பவே மலை எறிடிச்சோ?

    கிட்டத் தட்ட இதேக் கருத்தை இதிகாச உதாரணம் இல்லாமல் இன்றைய சூழல் மூலம் நான் பதிவிட்டு இருப்பது http://www.virutcham.com/?p=1412

    ReplyDelete
  32. @வால்பையன்
    ஐயப்பன் அவதாரத்துக்கு பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து நிஜமான பென்ணாகவே மாறினார். கடவுள் அல்லவா, எந்த உருவமும் எடுக்கலாமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  33. //கடவுளை அதிகம் நினைப்பதாகவும் அவர்களுக்கே மோட்சம் நிச்சயம் என்றும் கூட சில கோஷ்டிகள் கூறிவருகின்றன.

    அப்படியானால் நம்ம ஈ.வே.ராமசாமி நாயக்கர் அவர்கள் சொர்க்கத்தில்தான் இருக்க வேண்டும். இப்போது அவரது சிலை வேறு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அருகேயே பெருமாளின் நிலையான பார்வையின் கீழேயே வந்து விட்டது. நிச்சயம் அவரை இப்போது ராமசாமி ஆழ்வார் என்று கூட கூறலாம். //

    What you say could be true.But then the bearded cutlet was going on bad mouthing India particularly North India.Does it mean therefore that north Indians should erect a statue for this thug in NewDelhi right inside the parliament campus?

    You never know.Congress which can sleep with any whore,even the filthiest,despicable whore called DMK, can stoop to any level and can indeed put up a statue.

    ReplyDelete
  34. //@வால்பையன்
    ஐயப்பன் அவதாரத்துக்கு பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து நிஜமான பென்ணாகவே மாறினார். கடவுள் அல்லவா, எந்த உருவமும் எடுக்கலாமே.//

    ஒரு கடவுளால் காமத்தை கட்டுபடுத்த முடியவில்லை, ஒரு கடவுளால் அதை அடக்க முடியவில்லை, மோகினியா மாறி புள்ள பெத்துகிட்டாராம்!

    இவனுங்க தான் உலகத்த காப்பாத்த போறானுங்களாக்கும், விளங்கிடும்!

    ReplyDelete
  35. கடவுள் இல்லை என்று சொன்னாலும் சரி அப்படியும் இருக்காலாம் நீயும் என் மதத்தின் ஒரு அங்கம் தான் என இந்து மதம் ஏற்றுக் கொள்வதாகப் படித்திருக்கிறேன்.

    இது போல மற்ற மதங்களில் சாத்தியமா ....தெரியலை

    ReplyDelete
  36. ராமாயணம் மகாபாரதம் கதையா கற்பனையா?
    எதுவாவேணா இருந்து விட்டுப் போகட்டுமே. அதில் விவரிக்கப்பட்டு இருக்கும் விஷயங்களை ஒரு கதையாகவேனும் அணுகிப் பார்ப்பதில் தவறு என்ன? பிரமிக்க வைக்கும் களம், சிக்கலான கதாபாத்திரங்கள், முடிச்சுகள், வித விதமான மனிதர்கள், பிற உயிரினங்கள், இயற்கை, கீழ் நிலை குணங்கள் முதற்கொண்டு தெய்வீக நிலை, தெய்வத்தையே பக்தியில் கட்டிவிடும் சாதாரண உயிர்கள், எல்லாம் பிண்ணிப் பிணைந்து, கால மாற்றம், இயற்கை மாற்றம் , வரலாறு, பூகோளம், உளவியல், அறிவியல், வான சாஸ்திரம், கட்டடவியல், விளையாட்டு என்று 64 கலைகளும் ஆய கலைகள், பூமிக்கு வெளியிலான உலகங்கள், அதில் வாழும் உயிர்கள், கோள்கள், ,பிறப்பு, இறப்பு, இறப்பு தாண்டி யோசித்தால், பிறப்புக்கு முந்தைய நிலையை சிந்தித்தல், உடற் கூறு இயக்கங்களை அவதானித்தல், பஞ்ச பூதங்களை கையாளுதல், வான ஊர்தியை கண்டுபிடித்தல் , நீரில் பயணித்தல், இரு கரைக்கு கடலிலும் பாலம் அமைத்தல் என்று அழகாக இயற்கை அழிவுகளுக்குப் பின் மறுபடி ஒரு புதிய உயிர் இயக்கம், அதன் வாழ்வாதாரம் என்று இயற்கையும் உயிரினங்களும் தோன்றி அழிந்து தோன்றி என்று விஞ்ஞானம் சொல்ல பல ஆராய்சிகள் பல கால அவகாசம் எடுத்துக் கொள்வதை இங்கே கதையில் களத்தில் உள்ளடக்கி செல்லுதல் என்று எத்தனை இருக்கிறது? வெறும் கற்பனை என்று புறந் தள்ளுவதற்கு முன் இதை எல்லாம் தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

    புத்த, சமண மதத்துக்குக் கூட இவை எல்லாம் பொதுவாக ( சில மாற்றங்களுடன் ) இருந்திருக்கும் வரலாறையும் யோசிக்க வேண்டும்.

    ReplyDelete
  37. //ராஜவம்சம் said...
    // தீண்டியிருந்தால் சீதைப்பத்தினியில்லை
    இல்லை என்றால் ராவணன் கெட்டவன்
    இல்லை என்று யாரோ சொல்லிக்கேள்வி! //

    இது நல்ல கேள்வி. ஆனால் ராமாயணம் என்ன சொல்கிறது தெரியுமா? ராவணனுக்கு ஒரு சாபம் இருக்கிறது, அதன்படி அவன் விருப்பமில்லாத பெண்ணைத் தீண்டினால் சாம்பலாகிவிடுவான். எனவே தான், சீதையைக் கடத்தும்போது கூட, பர்ணசாலையோடு தூக்கி வந்தான். மற்றபடி அவன் யோக்கிய சிகாமணி என்பதால் ஒன்றும் சீதையைத் தொடாமல்இல்லை.

    ReplyDelete
  38. //
    இவனுங்க தான் உலகத்த காப்பாத்த போறானுங்களாக்கும், விளங்கிடும்!
    //

    இந்த டயலாக்கை நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்து முகமதைப் பார்த்துச் சொல்லியிருந்தால் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள முடியாது.

    பதிவின் சப்ஜெக்டும் அதுவே.

    ReplyDelete
  39. நான் இந்துவே இல்லை என்று ஒரு இந்து சொல்லலாம்! ஆனால் அதற்க்கு எந்த அர்த்தமும் கிடையாது!

    ஒரு கிருத்துவரை பொறுத்தவரையில் இயேசுவை நம்பாமல் இருந்தால் அவர் கிருத்துவன் இல்லை.
    ஒரு இஸ்லாமியருக்கு அல்லாவை மற்றும் முகமதுவை நம்பாமல் இருந்தால் அவர் இஸ்லாமியனே இல்லை!

    ஆனால் ஒரு இந்துவிற்கோ எதை நம்பாமல் இருந்தால் அவன் இந்து அல்ல என்று சொல்லமுடியும்?

    கடவுள் இல்லை என்று தெளிவாக சொல்லுகிறது சம்க்ஹயம்! சம்க்ஹயம் இந்து மதத்தின் ஆறு அடித்தளங்களில் ஒன்று!
    மற்றொரு அடித்தளமான வேதாந்தா எனப்படும் பண்டைய வேதாந்தம் இதுதான் கடவுள் என்பதை எங்கும் சொல்ல விழையவில்லை! மாயையின் ஒரு வடிவமே கடவுள் என்பதைதான் அது உணர்த்துகிறது!
    அது அத்வைத்தமாகவும் விசிஷ்டாத்வைதமாகவும் மருவியது வேறு கதை!

    மேதைகளான ராபர்ட் ஒபென்ஹெய்மார், எர்வின் ஸ்க்ரோடின்கர் போன்ற பலர் தங்களை வேதாந்தின் என்றே சொல்லிக்கொண்டனர்! இவர்கள் யார் என்றால், நம்ம ஊரு பகுத்தறிவு டுபாகூர்களை போன்ற "அறிவாளிகள்"
    கிடையாது. அதாவது சினமாவில் வசனம் எழுதுபவர்கள், பிரச்சார பிட் நோடிசில் இருக்கும் கசடுகளின்
    "கருத்தாழத்துடன்" கடவுள் மறுப்பு செய்பவர்கள் போன்ற வகைறாக்கள் அன்று! நோபெல் பரிசு வென்ற விஞ்ஞானிகள்! அறிவியலில் மாபெரும் கண்டுபிடிப்புகளையும் சாதனைகளையும் செய்தவர்கள்! கடவுள் மறுப்பாளர்கள் கூட!

    இப்படி கடவுள் இல்லாமையையும் தன்னுடன் சேர்ந்து வைத்துக்கொண்டிருக்கும் philosophical system தான் இந்து மதம்! இந்து மதத்தை ஆபிரஹாமிய கண்ணாடி மாட்டிக்கொண்டு பார்ப்பதுதான் பிரச்சனை! அவைகள் வேறு, இந்து மதம் (ஒரு வகையில், பௌத்தம் சமணம் போன்றவையும் சேர்த்து) வேறு!

    இங்கே பலர் பேசும் நாத்தீகம் மற்றும் இந்து மத எதிர்ப்பு, இல்லாத எதிரியை துப்பாக்கியால் சுடுவதை போன்றதுதான்!

    தோட்டாதான் வேஸ்டு!

    ReplyDelete
  40. //அவர்கள் கருத்தின்படி, எல்லாரும் எல்லாவேளையும் சாமி, பூஜை என்றிருந்தால், மக்கள் எல்லாருக்கும் எல்லாமே கிடைத்துவிடும். பசி, பஞ்சம் பட்டினி என்று எதுவே கிடையாது.
    இது அப்பட்டமான மூடநம்பிக்கை. இதுவே பார்ப்பனரின் கொள்கை.//

    suttha petthal....

    ReplyDelete
  41. What was Sri Rama's Reply to Jabali?

    ReplyDelete
  42. @பிரவீண்

    கோபத்துடன் ராமர் கூறுகின்றார்.
    “ராஜ்யத்தை நான் ஏற்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத் தாங்கள் இவ்வாறு பேசுவது முறையன்று. ஒரு அரசனுக்கு உண்மை தான் முக்கியம். சத்திய பரிபாலனம் செய்வதே அவன் கடமை. உலகின் ஆதாரமும் சத்தியமே ஆகும். அந்தச் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு என் தந்தை என்னைக் காட்டுக்குப் போகச் சொல்ல, அவருக்கு நானும் சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றேன். என்னால் அதை மீற முடியாது. எனக்கு முற்றிலும் கேடு விளைவிக்கக் கூடிய ஒன்றை நீங்கள் சொல்கின்றீர்களே? என் தந்தை உங்களை எப்படி ஏற்றார் என்று எனக்கு ஆச்சரியமாய் உள்ளது. நாத்திக வாதம் பேசும் நீங்கள் இந்த முனிவர்கள் கூட்டத்தில் எப்படி இருக்க முடிகின்றது?” என்று கூறவும், வசிஷ்டர் ராமனிடம் ஜாபாலி அவ்வாறு பேசியது தர்ம, நியாயத்தை அறிந்தே தான் என்றும், அவருக்கு ஏற்கெனவேயே இதன் முடிவு தெரியும் என்றும், அவர் பேசிய வார்த்தைகளினால் அவரைப் பற்றிய தவறான முடிவுக்கு வரவேண்டாம் எனவும் கூறிவிட்டு ராமனிடம் அயோத்தி திரும்பும் யோசனையை வற்புறுத்துகின்றார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  43. பெயர் சொல்ல விருப்பமில்லை said..
    ;/;/இது நல்ல கேள்வி. ஆனால் ராமாயணம் என்ன சொல்கிறது தெரியுமா? ராவணனுக்கு ஒரு சாபம் இருக்கிறது, அதன்படி அவன் விருப்பமில்லாத பெண்ணைத் தீண்டினால் சாம்பலாகிவிடுவான். எனவே தான், சீதையைக் கடத்தும்போது கூட, பர்ணசாலையோடு தூக்கி வந்தான். மற்றபடி அவன் யோக்கிய சிகாமணி என்பதால் ஒன்றும் சீதையைத் தொடாமல்இல்லை//

    சாம்பலாகிவிடுவோம் என்று தெரிந்தும் ஏன் கடத்தவேண்டும்.

    ReplyDelete
  44. //

    சாம்பலாகிவிடுவோம் என்று தெரிந்தும் ஏன் கடத்தவேண்டும்.
    //

    institutionalize செய்யலாம் என்ற நப்பாசை தான்.

    Stockholm syndrome கேள்விப்பட்டதில்லையா. அதுமாதிரி ஏதாவது ஆகச் சான்ஸ் இருக்குல்ல. அதுக்குத் தான்.

    மற்றப்படி. ரேப் தான் செய்யணும் என்றால் அதை கடத்திக்கொண்டு போய் செய்யவேண்டிய அவசியமே இல்லை.

    ReplyDelete
  45. aasthi means ' to be' or 'present'.

    naasthi is the opposite.

    தமிழில் 'நாஸ்தி ஆயிடுவ'- என்று சொல்வதை வைத்து அழிவு என்று அர்த்தபடுத்த கூடாது.


    ஒரு விதத்தில் அதுவும் சரி தான். இல்லாமல் போய் விடுவாய் என்று பொருள் கொள்ளலாம்.

    ReplyDelete
  46. பார்ப்பனர்கள் இந்திய நிலத்தின் மீது படையெடுத்து வந்த போது, அவர்கள் வசம் இருந்தது இந்திரனும் ரிக் வேதமும்தான். மற்ற எல்லா கதைகளும் இங்கிருந்த மக்களிடமிருந்து சுட்டவைதான். (இந்து/இந்தியா என்றாலே சிந்து நதிக்கு அப்பால் உள்ள இடம் என்பது மட்டும்தான் உண்மையான பொருள்)

    எங்களது கத்தியை வைத்து எங்களது கழுத்தை அறுப்பதுபோல - எங்களது நம்பிக்கைகளையே ஆயுதமாக்கி, எமது மக்களை அடிமைகளாகவும் ஆக்கிவிட்டீர்கள். "கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிவந்த" கதைதான். நாங்கள் கட்டிய கோயிலில் நீங்கள் தண்ணீர் மட்டும் தெளித்து, தீட்டுபோக்கி, உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது போன்றுதான் எல்லாம்.

    இந்து மதம் என்பது எமது மக்களை காலகாலத்திற்கும் அடிமைப் படுத்தி, சுரண்டுவதற்கான ஆயுதம்

    ReplyDelete
  47. ஆஸ்திகன் X நாஸ்திகன் இரண்டுமே generic வார்த்தைகள். அதையே நாராயணன் குறிப்பிடுகிறார்.

    அது கடவுள் விசயத்தில் இருக்கு என்பவன் ஆஸ்திகன், இல்லை என்பவன் நாஸ்திகன்.

    நம்மூர் நாஸ்திகர்களுக்கு அல்லா, ஏசு என்று வந்தால் அவர்கள் ஆஸ்திகர்கள், ராமன், சிவன் என்று வந்தால் அவர்கள் நாஸ்திகர்கள்.

    இவர்களது இந்த inherent dilemma வைத்தான் செகுலரிசம் என்று போர்வையில் போர்த்திவைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    @அருள்

    கஜினி முகம்மது, பாபர், தைமூர், துருக்கியர்கள், ஆஃப்கானியர்கள், மங்கோலிய செங்கிஸ் கான், கிழக்கிந்தியக் கம்பெனி, போர்துகீசியர்கள் பற்றியெல்லாம் எப்போது கவலைப்படப் போகிறீர்கள் ?

    பார்ப்பானர்கள் படையெடுத்து வந்தார்கள் என்ற ஆரிய படையெடுப்பு காலணிய கன்றாவியை எவ்வளவு நாளைக்கு கக்கிக்கொண்டிருக்கப் போகிறீர்களோ.

    நீங்கள் ஒரு சுக்கிராச்சார்யார் சீடர் போலும்...கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்கிறீர்.

    சுக என்றால் சமஸ்கிருதத்தில் கிளி என்று அர்தமாம்.

    ReplyDelete
  48. virutcham said...

    // //கடைசி பத்தியில் இருக்கும் கருத்தைத் தான் நானும் இங்கே பல பதிவுகளில் வேறு வேறு மாதிரி சொல்லிப் பார்த்தேன். அது வரை சாமி ஆடிக் கொண்டு இருப்பவர்கள் உடனே மலை எறிடுவாங்க. வேப்பிலை அடிக்க பூசாரி வேறு கிடைச்சா அதை மட்டும் தவிர்த்து சுத்தி சுத்தி சாமி ஆடுவாங்க.
    அதான் எல்லோரும் சாமியாடி முடிக்கட்டும்னு காத்துகிட்டு இருந்தேன்.
    சாமி உள்ள வந்தப்பவே மலை எறிடிச்சோ?// //

    டோண்டு ராகவன் கடைசி பத்தி:

    // //அரசு தரும் இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்களில் பல தலித்துகள் மதம் மாறினால் பிசி-ஆகி விடுவதைத் தவிர்க்கவே ஹிந்து மதத்திலேயே இருப்பவர்களும், மற்ற ஓபிசி/எம்பிசி-க்களும் ஹிந்துக்கள்தான். அவர்கள் அனுபவிக்கும் சலுகைகள் அவர்கள் ஹிந்து மதத்தின் சாதிகள் என்பதாலேயே வருகிறது. ஆக நாங்கள் விரும்பாமலேயே எங்களை ஹிந்துக்களாக்குகிறார்கள் என யாரும் மருள் வந்து சாமியாடவெல்லாம் வேண்டாம். தாராளமாக வேறு மதம் என கோஷித்துக் கொள்ளுங்கள் இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுத்து விட்டு. ஹிந்து என்றால் திருடன் என பாரசீக அகராதி கூறியதாகக் கூறிக்கொள்பவரும் அதை செய்ய மாட்டாரே. ஏனெனில் அவர் குடும்பத்தாருக்கு சலுகை போய் விடுமே. புரிகிறதா?// //

    இந்துமதத்தைக் காட்டிக்கொடுத்த உங்கள் இருவருக்கும் நன்றி.

    கடவுள் நம்பிக்கை/மத நமிக்கை - இதற்கும் இட ஒதுக்கீட்டிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஆனாலும், BC/MBC/SC/ST பிரிவினரில் பலரும் இட ஒதுக்கீட்டிற்கு ஆசைப்பட்டுதான் இந்துமதத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதாகக் கூறுகிறீர்கள்.

    இட ஓதுக்கீட்டிற்காக மதத்தில் இருப்பது என்பது - ஓட்டுப்போட பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதைவிட கேவலமான செயல் இல்லையா?

    இட ஒதுக்கீடுதான் உங்களது மதத்தின் அச்சாணி என்பது போலப் பேசுவது உங்களுக்கு ஒரு வெட்கக்கேடான விஷயமாகத் தோன்றவில்லையா?

    மற்ற மதத்திற்கு போகிறவர்கள் - பணத்திற்காக போகிறார்கள் என்று அடிக்கடி பேசுகிறீர்களே - இங்குமட்டும் என்ன வாழ்கிறது?

    (என்னைப் பொருத்தவரை - இந்துக்கள் எனப்படுவோரில் பலர், தாம் ஒரு இந்து என்றெல்லாம் உணர்ந்தோ, தெரிந்தோ, விரும்பியோ அப்படி இல்லை. நாம் சூரியனை சூரியன் என்று அழைக்கிறொம் - அவ்வாறு அழைக்கப்படுவது அந்த சூரியனுக்கு தெரியுமா என்ன? அதுபோலத்தான் இந்து மக்களும்.

    நல்லவேளையாக, ஆப்பிரிக்க கண்டம் இந்தியாவில் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. இருந்திருந்தால் அங்குள்ள எல்லோரும் இந்துக்கள் என்று பெயர் சூட்டியிருப்பீர்கள்)

    இந்திய அரசியல் அமைப்பின் 25 ஆம் பிரிவு - மதம் குறித்து மனசாட்சிப்படி செயல்பட, மற்றும் தமது மதத்தைத் தழுவ மேற்கொள்ள, பரப்பவதற்கு உரிமை உண்டு - என்கிறது. மதம் மாறினால், இடஒதுக்கீடு இல்லை என்பது இதற்கு எதிரானது.

    எது எப்படியோ - மதம் மாறியவர்களுக்கும் இட ஒதுக்கீடு என்ற நிலைவந்தால் - எல்லோரும் மற்ற மதங்களுக்கு ஓடிவிடுவார்கள் என்றால்: அவ்வளவு கேவலமாகவா "இந்துமதம்" இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறிர்களா?

    ReplyDelete
  49. @arul
    தப்பு தப்பா புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் அல்லது அப்படி காட்டிக் கொள்கிறீர்கள் என்பதை காட்டிக் கொடுத்ததற்கு நன்றி .
    இட ஒதுக்கீடு அரசாங்கம் வைத்த என்பது உங்களுக்கு தெரியாதா?
    சும்மா சப்பை கட்டு கட்டாதீங்க.
    நேரடியா பதில் சொல்லுங்க. மதம் மோசமா இல்லையா என்பதா கேள்வி?

    ReplyDelete
  50. ஆஸ்தி, நாஸ்தி விளக்கத்திற்கு நாரயணன், வஜ்ரா அவர்களுக்கு நன்றி .. வைட் பால் யும் இரண்டு ரன்..இன்னமும் கமல் அந்த வார்த்தைக்கு மிரண்டது ஏன் என்று புரியவில்லை.

    ReplyDelete
  51. இட ஒதுக்கீட்டுக்காகவே இந்துக்களாக இருக்கிறார்கள் என்று சொல்வது தவறு. அடித்தட்டில் இருக்கும் ஜாதிகள் கூட இந்து வாழ்வியல் முறையைத் தான் பயன்படுத்துகின்றன. இன்று தாழ்ந்த ஜாதி என்று சொல்லும் சில ஜாதிகள் நேற்றைய அரச பரம்பரை தந்த ஜாதிகள். ஜாதிகள் மேலெழுவதும், கீழே விழுவதும் இந்திய சமூகத்தில் தொன்று தொட்டு நடந்துவரும் சமாச்சாரம்.

    சிலர் நீங்கள் சொல்வது போல் கிருத்தவனாக வாழ்ந்துகொண்டு ஞான ஸ்தானம் செய்யாமல், கெஜட்டில் பெயரை மாற்றாமல் இந்துப் பெயரை வைத்துக்கொண்டு இடஒதுக்கீட்டை அனுபவிக்கவும் செய்கின்றனர்.
    --

    7ம் நூற்றாண்டிலிருந்து சுரண்டப்பட்டு வரும் ஒரு தேசத்தில் அடித்தட்டு மக்கள் அதிகமாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

    @அருள்.
    இப்படிப்பட்ட ஒரு தேசத்தில் அடித்தட்டு மக்களை காசுக்காகவோ, பொருளுக்காகவோ, வேலைவாப்பு கொடுத்தோ மதச்சுதந்திரம் என்ற பெயரில் மதம் மாற்றிவிடுவது எரிகிற வீட்டில் கொள்ளி பிடுங்கும் வேலையாகாதா ?

    அப்படிச் செய்பவரிடன் காசுவாங்கிக்கொண்டு இணையத்தில் அவர்களுக்காகப் பரிந்து பேசுவது மாமா வேலை பார்ப்பது போன்றது தானே ?

    ReplyDelete
  52. மிகச் சாதாரணமான கேள்வி:

    இந்து வாழ்வியல் முறை என்பது என்ன? விளக்கம் தருக.

    ReplyDelete
  53. @arul

    இந்து வாழ்வியல் முறை என்னவா வேணா இருக்கட்டுமே. அதைப் பற்றிய முன்முடிவுகள் உங்களுக்கு ஏற்கனவே இருக்கிறது. அதில் உங்களுக்கு உடன்பாடும் இல்லை. அப்படி இருக்க அதில் ஏன் இருக்கிறீர்கள் என்பது கேள்வி. அதற்கு பதில் சொல்ல உங்களால் முடியாது. இந்தக் கேள்வியும் அதற்கான பதிலும் கூட சாதாரணம் தான். சொல்ல மட்டும் உங்களால் முடியாது.

    //
    பெற்றோர்கள் வைத்த பெயரையே கெஜட்டில் மாற்றி கொள்கிறார்கள், ஒன்னுக்கும் பெறாத ஜுஜுபி மதத்தையும், சாதியையும் நான் உதறக்கூடாதா?
    சலுகைக்கு சலாம் போடுறவனை தான் அப்படி சொல்லனும்!, இங்கே எவன் கேட்டான் சலுகை! என் சோத்துக்கு என்னால் உழைக்க முடியாதா என்ன?
    //

    இது 'வால்' இங்கே சொன்னது.
    அவர் சலுகையை அனுபவிக்கவும் இல்லை ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்று இதில் இருந்து புரிந்து கொள்ளக் கூடிய செய்தி. இவரது முடிவில் தெளிவும் உண்மையும்இருக்கிறது.

    நீங்கள் அனுபவித்தும் ஏற்றுக் கொண்டும் இருப்பதால் உங்களால் பதில் சொல்ல இயலவில்லை.
    நாளை இந்த அரசு மத/சாதி சார்பற்ற ஒரு சான்றிதழை அமுலுக்கு கொண்டு வந்து, விருப்பமுள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். அனால் சலுகை எதுவும் கிடையாது என்றால் நீங்கள் எடுத்துக் கொள்ள தயாரா?

    ReplyDelete
  54. @அருள்


    உங்களுக்கு எப்படிப்பட்ட விளக்கம் வேண்டும் ?

    இந்து மதம், கிருத்தவம் இஸ்லாம் போன்ற மதம் அல்ல. ஒரு கடவுள், ஒரு மேசியா, ஒரு புத்தகம் என்று இல்லை.

    ஒரு ஆட்டு மந்தையை மேய்க்கத் தான் மேய்ப்பாளன் (மேசியா) வேண்டும். மனிதர்கள் ஆட்டு மந்தைகள் அல்ல. ஆகவே நீங்கள் எதிர் பார்க்கும்படி இந்து மதம் இல்லாது போனதற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    உங்களுக்கு ஆட்டு மந்தையாக இருக்கவே விருப்பம் என்றால் நம்மண்ணில் தோன்றிய புத்தமதம் போன்ற மேசிய மதத்திற்கு மாறிக்கொள்ளுங்கள். அங்கு சென்றாலும் இட ஒதுக்கீடு உண்டு.

    ReplyDelete
  55. இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, அது உரிமை. அரசுப் பணியிடங்கள், கல்வி இடங்கள் எல்லாம் பார்ப்பனர்களின் முப்பாட்டனார் சொத்தா? என்ன?

    அரசாங்கம், நாடு என்பவை எல்லாம், எல்லோருக்கும் பொதுவானவை. பொதுவானவற்றில் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப பங்கு கேட்டால் அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களுக்கு எதற்கு வலிக்கிறது?

    இதில் உண்மை, தெளிவு, புண்ணாக்கிற்கு எல்லாம் என்ன தேவை இருக்கிறது?

    ReplyDelete
  56. இட ஒதுக்கீடு உரிமை என்பது இந்திய அரசியல் சட்டப்படி செல்லாது. நீங்கள் எவ்வளவு தான் கூவிக்கொண்டிருதாலும் உங்கள் இனம் (இடஒதுக்கீட்டு உரிமை கோரும் இனம்) அழிந்துகொண்டிருக்கும் இனம்.

    பதிவின் சப்ஜெக்ட் ஆஸ்திகம், நாஸ்திகம் பற்றியது. அதைப் பற்றி எந்த விசயத்தையும் காணோமே.

    ReplyDelete
  57. //Arul - இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, அது உரிமை.//


    Hope you don't demand reservation outside India.

    Also, can you tell me many of your own blood line will enjoy reservation. Because already you are educated and should be reasonably in a better position in the society. So will you give up your reservation to a more deserving one?

    Sridhar

    ReplyDelete
  58. Sridhar said...

    // //Because already you are educated and should be reasonably in a better position in the society. So will you give up your reservation to a more deserving one?// //

    இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.

    ஒருசாதிக்கு உள்ளே, ஏழைகளுக்கும் கல்லாதவர்களுக்கும் தான் அந்த சாதியின் ஒதுக்கீட்டில் 100 %-மும் கொடுக்கப்பட வேண்டும் என்றால் கூட, அதை நாங்கள் வரவேற்போம்.

    எடுத்துக்காட்டாக, வன்னியர்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப தனி இடஒதுக்கீடு அளித்து - வேலையிலோ, கல்வியிலோ இடம் அளிக்கும் போது, அதற்கான மதிப்பெண்களில் கல்லாமை மற்றும் ஏழ்மைக்கு கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கலாம்.

    அதாவது, முதல் தலைமுறையாக வருவோருக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள், வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வோருக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள் கொடுக்கலாம். இப்படிசெய்தால் - எல்லா வேலைகளும், கல்வி இடங்களும் "more deserving one" க்குதான் கிடைக்கும். இதை நீங்கள் ஏற்பீர்களா?

    அதாவது - மக்கள்தொகைக்கு ஏற்ப விகிதாச்சார இடஒதுக்கீடு அளித்து - அதில் முன்னுரிமையை "more deserving one" க்கு அளிக்க வேண்டும். மாறாக - ஒருசாதியில் முன்னுக்கு வந்தவர்கள் என்று சிலரை தனியாகப் பிரித்து, அவர்களை பொதுப்பட்டியலில் சேர்க்கும் சதியை ஏற்க முடியாது.

    ReplyDelete
  59. //VArul - மாறாக - ஒருசாதியில் முன்னுக்கு வந்தவர்கள் என்று சிலரை தனியாகப் பிரித்து, அவர்களை பொதுப்பட்டியலில் சேர்க்கும் சதியை ஏற்க முடியாது//

    If you really understand the meaning of this , you want to be the one to enjoy the benefit of quota all along your generation. You will never give up to the true suffering people in vanniar.


    You want to be like a vannia bramin in vanniar.(here tha bramin uses your definition of bramin).

    This is the most selfish act. You are incorrigible.
    Wish you good luck.

    Sridhar.

    ReplyDelete
  60. எல்லோருக்கும் இட ஒதுக்கீடு என்ற நிலை வந்தால், இந்த பிரச்சினை எதற்குமே தேவை இருக்காது. பெரியார் கேட்ட விகிதாச்சார பங்கீடு என்பதே எல்லோருக்கும் சம பங்கு என்பதுதான்.

    இதனடிப்படையில்தான் நான் பேசுகிறேன். இதில் என்ன தவறு?

    இப்போது நீங்கள் சொல்லும் "you want to be the one to enjoy the benefit of quota all along your generation. You will never give up to the true suffering people in vanniar." என்பதைக் கொஞ்சம் விளக்குங்களேன், ப்ளீஸ்....

    ReplyDelete
  61. //Arul -you will never give up to the true suffering people in vanniar." என்பதைக் கொஞ்சம் விளக்குங்களேன், ப்ளீஸ். //


    I do not know you really do not understand or pretend. Anyway I give you the benefit of doubt and explain.

    For example, a country’s total vanniar population is 10000 on year 2020. Out of this already 2000 people already benefitted from the quota system as well as on merit.
    So these people are better equipped than the remaining 8000 vanniar, who still struggle for better education.

    In year 2021 the vanniar population becomes say 10120. The number of government education seats available is 200. Out of this, the vanniar quota available is 40 vacancies only.

    Tell me now, who will get the benefit of these 40 vacancies? Whether the family of 2000 better educated vanniars or those 8000, those who really in need of quota system?

    It is really the educated vanniars children are the one going to enjoy these benefits. They will be reaping off the benefit. The one who really in need, will be pushed to a lower level.

    Now a new group of vanniar bramin will be born. Then you can write a book on them "Vanakkathukkuria Vannairhal"

    Wish you understand, but don't hope you understand.

    Sridhar

    ReplyDelete
  62. உங்கள் கணக்குப்படி "2000 better educated vanniars" ஒரு வேலையில் சேர 80 % மதிப்பெண்கள் பெருகிறார்கள் என்றால் - "those 8000, those who really in need of quota system" 60 % மதிப்பெண்கள் எடுத்திருப்பார்கள், என்று தோராயமாக கருத முடியும்.

    இப்போது முதல் தலைமுறையாக இருந்தால் அதற்கு 10 மதிப்பெண், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்தால் இருந்தால் அதற்கு 10 மதிப்பெண், கிராமப்புறத்தில் வசித்தால் அதற்கு 10 மதிப்பெண் - என கூடுதல் மதிப்பெண்கள் கொடுத்து "those who really in need of quota system", என்போரின் மதிப்பெண்களை 80 % க்கு இணையாக்க முடியும்- இரண்டுக்கும் இடையே ஒரு "level playing field" -அய் உருவாக்க முடியும்.

    இது ஒருபக்கம் இருக்கட்டும் - உங்களது கருத்துப்படி தனி இடஒதுக்கீட்டால் "The one who really in need, will be pushed to a lower level" என்றால் - அந்த தனி இடஒதுக்கீடு இல்லாததால் மட்டும் என்ன பெரிதாக மாற்றம் வந்துவிடும்?

    "வசதிபடைத்த வன்னியர்களுக்கு" கிடைக்கும் பலன்கள் அதற்குப் பதிலாக - "பார்ப்பனர்களுக்கும் உயர்சாதிக் கூட்டத்திற்கும்" கிடைக்கும்.

    அப்போதும் -"The one who really in need, will be pushed to a lower level".

    ReplyDelete
  63. //Arul - "வசதிபடைத்த வன்னியர்களுக்கு" கிடைக்கும் பலன்கள் அதற்குப் பதிலாக - "பார்ப்பனர்களுக்கும் உயர்சாதிக் கூட்டத்திற்கும்" கிடைக்கும்.//

    I do not know, what you mean here. Still the quota is there. Instead of you repeating, some other vanniar will get that place. You are bound to compete with open quota, which you are not willing. May be you wish to compete with the under privileged vannair, which is easier.

    Good. The future generation will speak about your deeds, as you do now.

    Sridhar.

    ReplyDelete
  64. @ அருள்

    இதில் உண்மை, தெளிவு, புண்ணாக்கிற்கு எல்லாம் என்ன தேவை இருக்கிறது? //


    உண்மையும் தெளிவும் எனக்கு, புண்ணாக்கு நீங்க சாப்பிட!

    :)

    ReplyDelete
  65. Anonymous said...

    // //
    //Arul - "வசதிபடைத்த வன்னியர்களுக்கு" கிடைக்கும் பலன்கள் அதற்குப் பதிலாக - "பார்ப்பனர்களுக்கும் உயர்சாதிக் கூட்டத்திற்கும்" கிடைக்கும்.//

    I do not know, what you mean here.// //

    வசதி படைத்த வன்னியர்களால் எந்த "under privileged vanniyar"களுக்கு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதோ, அதே "under privileged vanniyar"களுக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் போனாலும்கூட இடம் கிடைக்காது.

    ஒரே வேறுபாடு - இடஒதுக்கீடு இருந்தால் வசதி படைத்த வன்னியர், இடஒதுக்கீடு இல்லாமல் போனால் பார்ப்பன-உயர்சாதியினரே பயனடைவர்.

    இதில் "under privileged vanniyar"களுக்கு என்ன பயன்?

    ReplyDelete
  66. Anonymous said...

    // //Still the quota is there. Instead of you repeating, some other vanniar will get that place. You are bound to compete with open quota, which you are not willing. May be you wish to compete with the under privileged vannair, which is easier.// //

    நீங்கள் சில அடிப்படைகளை புரிந்துகொள்ள முன்வர வேண்டும்.

    1. இடஒதுக்கீடு என்பதே சாதி அடிப்படையிலானது. பொருளாதார அடிப்படையிலானது அல்ல. எனவே, சாதியை இருபிரிவாகப் பிரிப்பதே தவறு.

    2. இடஒதுக்கீடு என்பது "group discrimination"-னை சரிசெய்யவே கொண்டுவரப்பட்டது,"individual discrimination"-னுக்கு எதிராக அல்ல. எனவே, சாதி அடிப்படையில் மக்களைக் கூட்டமாகத்தான் பார்க்க முடியும். தனித்தனியாக அல்ல.

    3. ஒருசாதிக்குள் பின்தங்கியவர்களுக்கு, மிக எளிதாக முன்னுரிமை அளிக்க முடியும். முதல் தலைமுறையாக இருந்தால் அதற்கு 10 மதிப்பெண், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்தால் இருந்தால் அதற்கு 10 மதிப்பெண், கிராமப்புறத்தில் வசித்தால் அதற்கு 10 மதிப்பெண் - என கூடுதல் மதிப்பெண்கள் கொடுத்து பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியும்.

    4. இடஒதுக்கீடு என்பது "வேலை வாய்ப்பு அல்ல". அது அதிகார இடங்களில் அனவருக்கும் பங்களிப்பது. மிக உயர்ந்த இடங்களில் சிலர் மட்டும் கோலோச்சாமல், அனைத்து பிரிவினரும் இடம்பெரும் வகையில் பன்முகத்தன்மையை ஏற்படுத்துவது.

    உயர்ந்த பதவி என்று வரும்போது, ஒரு சாதியிலிருந்து ஏழைகள் மட்டுமே அதற்கு தகுதியானோர் கிடைப்பது கடினம். எனவே, அந்த சாதியின் வசதி படைத்தோர் அதற்கு தேர்வாவது இயல்பு. இப்படி தகுதியானோரை அப்புறப்படுத்தும் சதிதான் நீங்கள் சொல்லும் திட்டம்.

    ReplyDelete
  67. //Arul - இப்படி தகுதியானோரை அப்புறப்படுத்தும் சதிதான் நீங்கள் சொல்லும் திட்டம்.//

    In a nutshell, you agree, you are automatically out on merit, even you have equal footage. Good attitude. For you to keep enjoying the benefit, definitely you need your people, below your standard. Keep them, just right there.



    Sridhar.

    ReplyDelete
  68. Anonymous said...

    // //For you to keep enjoying the benefit, definitely you need your people, below your standard. Keep them, just right there.// //

    ஒருசாதிக்குள் பின்தங்கியவர்களுக்கு, மிக எளிதாக முன்னுரிமை அளிக்க முடியும் - என்பதை நான் தெளிவாக விளக்கியுள்ளேன். ஆனாலும், நீங்கள் கண்களை மூடிக்கொண்டு நடிக்கிறீர்.

    பொதுப்பட்டியல் (OC) என்பதை ஒழித்துக்கட்டி, 100 % இடஒதுக்கீட்டின் மூலம் எல்லா பிரிவினருக்கும், அவரவர் மக்கள் தொகைக்கேற்ப சரிசமமான வாய்ப்பு கொடுக்கும்போது - வன்னியரில் ஏழைகளுக்கும், பார்ப்பனரில் ஏழைகளுக்கும் அவரவர் வகுப்பு ஒதுக்கீட்டிற்குள் முன்னுரிமை அளித்தால், எல்லா ஏழைகளுமே முன்னுக்குவர முடியும்.

    இந்த முறையில் எல்லா வாய்ப்புகளையுமே - அந்தந்த சாதிகளின் ஏழைகள், கிராமப்புறத்தினர், முதல்தலைமுறை என "வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு" மட்டுமே கொடுத்தால் கூட எங்களுக்கு OK'தான்.

    இதில் என்ன தவறு என்று கூறுங்கள்?

    ReplyDelete