எல்லோருமே சுதாரிப்பாகத்தான் இருக்காங்கடீ!
எங்கள் உள்ளூர் கடை பார்வதி ஸ்டோர்ஸிலிருந்து அரசன் பிராண்ட் திருநெல்வேலி அல்வா பாக்கெட் ஒன்று வாங்கினேன். அழகாக pack செய்யப்பட்ட அட்டைப் பெட்டியின் முகப்பில் ஒரு படம். ஒரு அழகான கிண்ணத்தில் அல்வா பரத்தி வைக்கப்பட்டிருந்தது. அக்கிண்ணம் வைக்கப்பட்டிருந்த தட்டில் கிண்ணத்தைச் சுற்றி முந்திரிப் பருப்புகள், சில வாசனை விஷயங்கள் ஆகியவை பரப்பப் பட்டிருந்தன. அப்படத்தைப் பார்ப்பவர்கள் ஆவலுடன் அந்த அல்வா பேக்கட்டை வாங்க அப்படமும் ஒரு தூண்டுகோலாகத்தான் இருக்கும். ஆனால் இங்கே அது பற்றிக் கூற வரவில்லை.
பேக்கட்டின் மேல் ஒரு டிஸ்கி இருக்கிறது. அது பற்றித்தான் கூறப் புகுந்தேன். இவ்வாறு எழுதியுள்ளனர்: "Picture shown on the pack is only serving suggestion. Not the contents of the packet". இதை சிரித்துக் கொண்டே கடை முதலாளியிடம் காட்ட, அண்ணாச்சி சீரியசாகவே கூறியதாவது என்னவென்றால் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு வாடிக்கையாளர் வீட்டுக்குப் போய் பேக்கட்டைத் திறந்து பார்த்துவிட்டு கடைக்கு வந்து கிண்ணம் இல்லையே என சண்டை போட்டாராம். இவரும் கம்பெனிக்கு அதை எழுத இப்போது இந்த வார்ணிங் வந்திருக்கறது என்றார்.
அதான் சொல்றேன், “எல்லோருமே சுதாரிப்பாகத்தான் இருக்காங்கடீ”!
அட்டெஸ்டட் உண்மை நகல்
மேலே குறிப்பிட்டுள்ள இன்று நடந்த நிகழ்ச்சி என் நினைவுகளை சமீபத்தில் 1970-க்கு கொண்டு சென்றது. அப்போதெல்லாம் இந்த ஜெரோக்ஸ் காப்பிகள் புழக்கத்தில் இல்லை. பல ஆவணங்களை தட்டச்சு செய்து நகலெடுக்க வேண்டும். பிறகு அதையும் ஒரிஜினலையும் ஒரு கெஜட்டட் அதிகாரியிடம் கொண்டு சென்று இது உண்மையான நகல் எனச் சான்றை பதிப்பித்து அவரது கையெழுத்தைப் பெற வேண்டும். இதைத்தான் அட்டெஸ்டட் உண்மை நகல் என்பார்கள். பல விஷயங்களுக்கு மனுபோடும்போது தேவையான ஆவணங்களை ஒரிஜினலாக அனுப்பக் கூடாது எனக் கூறப்பட்டிருக்கும். அது நமக்கும் நல்லதுதானே. பல இடங்களுக்கு வேலைக்காக மனுபோடும்போது எல்லோருக்கும் ஒரிஜினலை அனுப்பவியலாதுதானே.
1970-ல் நான் மின்வாரியத்தில் ஜூனியர் இஞ்சினியர் வேலைக்கு மனு போட்டேன். அதில் இவ்வாறு இன்ஸ்ட்ரக்ஷன் தரப்பட்டது. “கீழ்க்கண்ட ஆவணங்களின் அட்டெஸ்டட் உண்மை நகல்களை மட்டும் அனுப்பவும். 1) எஸ்.எஸ்.எல்.சி. (வயதுக்கான நிரூபணம்), 2) பொறியியல் டிகிரி சான்றிதழ், 3) அனுபவச் சான்றிதழ்(கள்) 4) விளையாட்டுகளில் பஙேற்றமைக்கான சான்றிதழ்கள், 5) நன்னடத்தைச் சான்றிதழகள் மற்றும் 6) 10 ரூபாய்க்கான போஸ்டல் ஆர்டர் (ஒரிஜினல்)”.
விஷயம் என்னவேன்றால் 1962 வரை இந்த (ஒரிஜினல்) என்ற சேர்க்கை இல்லையாம். அந்த ஆண்டு P.R.V.G. கிருஷ்ணமாச்சாரி என்னும் விண்ணப்பதாரர் போஸ்டல் ஆர்டருக்கும் அட்டெஸ்டட் உண்மை நகலை வைத்து லொள்ளு செய்தாராம். அதிலிருந்து (ஒரிஜினல்) என்பதையும் சேர்த்தார்கள்.
இதை எனக்கு அந்த P.R.V.G. கிருஷ்ணமாச்சாரியே பிற்பாடு கூறினார். அவர் எனது மாமா தாத்தாவின் பிள்ளை (என் அம்மாவின் அல்லது அப்பாவின் மாமா எனக்கு மாமா தாத்தா).
குட்னைட் காயில் விவகாரம்
புகார் கடிதங்கள் எழுதுவது எப்படி -2 என்னும் தலைப்பில் நான் இட்ட இந்த இடுகையில் குறிப்பிட்டுள்ளதை பார்க்கவும். சில நாட்களுக்கு முன்னால் நான் குட்நைட் காயில் தயாரிப்பாளருக்கு அனுப்பிய மின்னஞ்சல் இதோ:
from Narasimhan Raghavan
to customercare@godrejsaralee.com
date Wed, Sep 23, 2009 at 10:40 PM
Sub: Manufacturing defect in Batch No. 002 , manufacturing date 05/2009, Reg. No CIR-29,047/98/Prallethrin(HH)-7 of GoodKnight Advanced low smoke coil
Dear Sir,
All the ten coils of the above batch had a manufacturing defect. The hole for inserting on the stand was not properly done and was also incomplete. In spite of our careful effort to complete the hole with some sharp instrument, five of them broke exactly around the hole and the whole coil became unusable.
By the way this is another unsatisfactory design of the coil, where the fixing hole is in only one place. If there is a breakage around that place, the entire coil becomes useless.
Kindly get this investigated please. This detracts from an otherwise good product.
Regards,
N. Raghavan
மேலே குறிப்பிட்டுள்ள அந்த மின்னஞ்சலில் எனது முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் தந்திருந்தேன். அடுத்த நாளே, அதாவது நேற்று (24.09.2009) எனக்கு மும்பையிலிருந்து காலை 11 மணிக்கு போன் வந்தது. கஸ்டமர் கேர் அதிகாரி ஒருவர்தான் ஃபோன் செய்தார். ஃபோனிலும் அவரிடம் நான் நடந்ததைக் கூற, அவர் அந்த batch-ன் சரியான எண் அட்டைப் பெட்டியின் மூடியின் உட்புறம் இருக்கும், அதைத் தரவியலுமா எனக் கேட்க, தனியாக எடுத்து வைத்திருந்த அப்பெட்டியின் உள்மூடியிலிருந்து அந்த எண்ணையும் பார்த்துக் கூறினேன்.
அவர் என்ன சென்னார் என்றால், அப்படியே அந்த பொருத்தும் ஓட்டை உடைந்தாலும் அதே ஸ்டேண்டில் வேறு விதமாக பொருத்தலாம் என்றும், ஸ்டேண்டில் அதற்கான ஓட்டை இருக்கிறது என்றும் கூற, உடனே முயற்சித்துப் பார்த்து விட்டு அந்த ஓட்டை போதுமான அளவுக்கு இல்லை எனக் கண்டறிந்து அவரிடம் கூறினேன். அதையும் பார்ப்பதாக உறுதி கூறினார். காயிலில் இன்னும் சில இடங்களில் ஓட்டை வைக்கும் சாத்தியக் கூறையும் விவாதித்தோம் கடைசியாக எனது முகவரிக்கு இரண்டு பேக்கெட்டுகள் இலவசமாக அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இம்மாதிரி புகார் செய்யும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவற்றை இங்கு பார்ப்போம்.
நாம் எங்காவது சேவை குறைபாடுகளைக் கண்டால் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவேண்டும் என்பதே. புகார் கடிதங்களுக்கு வலு உள்ளன. முறையாக, காழ்ப்பில்லாமல் எழுதப்பட்ட புகார் கடிதங்கள் மேல் நிச்சயம் நடவடிக்கை எடுக்கின்றனர். அவற்றை எழுதுவதும் ஒரு கலையே.
1. புகார் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைக் குறித்தே இருக்க வேண்டும். அப்படியின்றி பொதுவாக எழுதினால் யாரும் கவனிப்பதில்லை. இடம், பொருள், காலம் எல்லாவற்றிலும் தெளிவாக இருத்தல் வேண்டும்.
2. எவ்வளவு கோபம் இருந்தாலும் அதை கடிதத்தில் வெளியே காட்டலாகாது. மரியாதையான தொனியில் எழுதவேண்டும். திட்டினால் நம் காரியம்தான் கெடும்.
3. சம்பந்தப்பட்டவர் பெயர், பதவியின் பெயர் எல்லாம் தெளிவாக குறிக்கவேண்டும். புகார் கடிதம் பெறுபவர் அம்மாதிரி பல கடிதங்களைப் பார்த்திருப்பார். ஆகவே ரத்தினசுருக்கமாக எழுத வேண்டும்.
4. நாம் எழுதுவதால் என்ன நடந்துவிடப் போகிறது என்னும் தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.
5. சில சமயங்களில் பொதுவாகவும் எழுத வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு பம்பாயில் வி.டி.ஸ்டேஷன் எதிரில் காபிடல் என்னும் சினிமா தியேட்டர் இருந்தது. அதன் அருகில் வண்டிகளுக்கு இடது பக்கம் திரும்பும் சிக்னல் பச்சை நிறத்தில் இருக்கும்போது தெரு நடுவில் உள்ள பாதசாரிகள் சிக்னலும் பச்சை நிறத்தில் வந்தது. இதை பற்றி நான் போக்குவரத்துக்கு பொறுப்பான போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதுகையில் இடத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டு அவரே நான் சொன்னதை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன். இரண்டே நாட்களில் பதில் வந்தது. அந்தத் திருப்பத்தில் இடது பக்கம் திரும்புவதையே ரத்து செய்திருந்தனர். அதுதான் நானும் வேண்டியது. இந்த இடத்தில் புகார் தெளிவாக இருப்பது முக்கியம்.
6. ஒரு புகாரில் ஒரு விஷயம்தான் இருக்கவேண்டும். வசவசவென்று பல புகார்களை அடுக்கலாகாது. தேவையானால் ஒவ்வொரு புகாருக்கும் ஒரு தனிக் கடிதம் எழுத வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு புகாரும் தனிப்பட்ட அலுவலகரிடம் செல்லும். தனித்தனி கடிதங்கள் இருப்பதுதான் சம்பந்தப்பட்ட கோப்புகளில் இடுவதற்கு தோதாக இருக்கும். இல்லாவிட்டால் ஒரு புகார் மட்டும் கவனிக்கப்பட்டு கடிதம் அதற்கான கோப்பில் சென்றுவிடும். நாமே தனித்தனியாகக் கொடுத்தால் மேற்பார்வை அதிகாரி சம்பந்தப்ப்ட்ட அலுவலகர்களுக்கு அல்லாட் செய்ய சௌகரியமாக இருக்கும்.
இப்படித்தான் சமீபத்தில் 1971-ல் பம்பாயில் இருந்தபோது மேக்ஸ் ம்யுல்லர் பவனில் சிலரால் மட்டும் உபயோகிக்க முடிந்த நூலகத்தை பொது மக்களுக்குத் திறந்து வைக்க முடிந்ததை பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன். அதில் கூறியதுபோல எதுவும் முயற்சி செய்தால் நடக்கக் கூடியதே. கேட்டால் கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம் ஆனால் கேட்காவிட்டால் நிச்சயமாகக் கிடைக்காது என்றுதான் கூற வேண்டும். இதைத்தான் கேளுங்கள் தரப்படும் என்று கூறுகிறார்கள் போலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
9 hours ago
20 comments:
எல்லாம் சொல்லிவிட்டு "This detracts from an otherwise good product." என்றீர்களே..அங்கு தெரிகிறது உங்கள் அனுபவம்/பக்குவம். In my opinion, that had prompted the seller to respond.
டோண்டு சார்,
இந்த நுகர்வோர் மேட்டர் சூப்பர் சார்.
very educative.
நல்லது!
தெரிந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள்! ;)
ஒரு கம்ப்ளையண்ட் மெயிலுக்கு ரெண்டு பாக்கெட் குட்நைட் காயிலா!?
//Blogger வால்பையன் said..ஒரு கம்ப்ளையண்ட் மெயிலுக்கு ரெண்டு பாக்கெட் குட்நைட் காயிலா!?//
புகார் தெரிவித்ததற்கு எனக்கு கூட ஒரு பெரிய பாக்கெட் பிரிட்டானியா பிஸ்கெட் வந்தது.
வால்பையன் கேட்டது:
/ஒரு கம்ப்ளையண்ட் மெயிலுக்கு ரெண்டு பாக்கெட் குட்நைட் காயிலா!?/
அமெரிக்க பாணி வாடிக்கையாளர் சேவையைக் காப்பியடிப்பதில், இப்படி சில நல்ல விஷயங்களும் நடப்பது உண்டு வால்ஸ்!
புண்பட்ட வாடிக்கையாளரை இப்படி சலுகைகளுடன் தடவிக் கொடுத்துப் புண்ணை ஆற்றுகிறார்களாம்!
இது நிறையத் தனியார் நிறுவனங்களில் நடைமுறையில் இருப்பது தான்!
டோண்டு சார்! முக்கியமான ஒண்ணு சொல்லவே இல்லையே! ரெண்டு பாக்கெட் காயில் பிரீன்னதும் ரெண்டுபங்கு கொசுத்தொல்லையும் வந்திருக்கணுமே:-))
//புகார் தெரிவித்ததற்கு எனக்கு கூட ஒரு பெரிய பாக்கெட் பிரிட்டானியா பிஸ்கெட் வந்தது. //
”காண்டம்”(condom) உடைந்து போனதற்கு கம்ப்ளையண்ட் கொடுத்தால் அதற்கு என்ன தருவார்கள்!?
அப்புறம் கொஞ்சம் யோசிச்சுப்பாத்தா, இது அமெரிக்காவுல இருந்து கூட இறக்குமதி ஆனதில்லே! நம்மூரில இத சூப்பராப் பண்ணிட்டிருக்காங்க!
ரோடு சரியில்ல, தண்ணி வரல, விலை கூடிப்போச்சு, பஸ் சரியில்ல, கூடக் காசு கேக்கறான், ரேஷன் கார்ட் தரலை, ரேஷன்ல அலையவுடறான், இப்படி ஏகப்பட்ட கம்ப்ளைண்டோட, மவனே தேர்தல் வரட்டும், பாத்துக்கறோம்னு கறுவிக்கிட்டிருக்கும் வாக்காளப் பெரு மக்கள், தேர்தல் நேரம் வந்தவுடனேயே அள்ளிவிடற இலவசங்கள், வாக்குறுதிகள் இதெல்லாம் பாத்து அப்படியே மயங்கி மறுபடியும் எவன்கிட்ட ஏமாந்தமோ அதே அரசியல் வியாதிக்கே ஓட்டுக் குத்தறதில்லை! அதே மாதிரித்தான்!
ரெண்டு காயில் ப்ரீ கொடுத்த கம்பனி தயாரிப்புத் தான இன்னமும் வாங்கறீங்க டோண்டு சார்?
கம்ப்ளைண்ட் தந்தாலும், தராவிட்டாலும் குழந்தை பத்து மாதத்தில் வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வால்பையனுக்கு வந்த சந்தேகம்?
/”காண்டம்”(condom) உடைந்து போனதற்கு கம்ப்ளையண்ட் கொடுத்தால் அதற்கு என்ன தருவார்கள்!?/
தொட்டில் குழந்தை அல்லது கட்டில் குழந்தை இலவசமாக!
//கம்ப்ளைண்ட் தந்தாலும், தராவிட்டாலும் குழந்தை பத்து மாதத்தில் வரும்//
கம்பெனியிலிருந்து ஒன்னும் வராதா?
ஒரு பத்து பாக்கெட் காண்டெம்மும் யூஸ் பண்ணி பார்க்க!.......
புகார் கடிதம் பற்றிய தகவல்கள் அருமை.
---
உங்களுக்குப் பரவாயில்லை சார், ரெண்டு பாக்கெட் கிடைத்தது.
இப்படித்தான் சமீபத்தில், 2008ல், சென்னையில் பெரும்பாலும் ஏசி பார்களில் கிங்பிஷர் பீர் ஒரிஜினல் சரக்காக இல்லை, விலை மட்டும் 100க்கு மேல் என்று கிங்பிஷர் நிறுவனத்திற்கு ஒரு மின்னஞ்சல் செய்தேன். அதில் எக்மோர் அருகிலிருக்கும் இரண்டு பார்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை அலுவலத்திலிருந்து போன் வந்தது. போன் செய்தவருக்கும் எனக்கும் ஒரு நீண்ட பேச்சே நடந்தது. அவர் தங்களது தயாரிப்பில் குறை இல்லை என்று வாதாடினார், நானோ எதிர் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவரால் சரியாக எனது கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியவில்லை. கடைசியாக ’வேண்டுமானால் எங்களது தொழிற்சாலைக்கே வந்து பாருங்கள், ஏற்பாடு செய்கிறேன்’ என்றார். எதை ஏற்பாடு செய்வார் எனத் தெரியவில்லை. ‘அதெல்லாம் வேண்டாம், தயாரிப்பில் சந்தேகம் இல்லை, வினியோகத்தைக் கொஞ்சம் சரிபாருங்கள்’ எனச் சொல்லி வைத்துவிட்டேன்.
உங்களுக்கு அனுப்பிய மாதிரி ரெண்டு பீர் பாட்டில் அனுப்பி வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.
அல்லது போயிருந்தால் ரெண்டு டின் பீர் கிடைத்திருக்குமோ? டின்னு கட்டியிருக்கவும் வாய்ப்பிருப்பதால் மறுத்துவிட்டேன்.
//கேட்டால் கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம் ஆனால் கேட்காவிட்டால் நிச்சயமாகக் கிடைக்காது என்றுதான் கூற வேண்டும். இதைத்தான் கேளுங்கள் தரப்படும் என்று கூறுகிறார்கள் போலும்.//
இதற்கெல்லாம் யாருக்கு புகார் அனுப்பினால் சரியாகும் சொல்லுங்கோ!
1.தண்ணிர் கட்டணம் கட்டுறோம் ஆனால் குழயில் குடி தண்ணிர் வரவில்லையே?
2.குளத்தை,கால்வாயை தூர் வாறியதாய் செய்தி போட்டு விழாவும் எடுகிறார்கள் ஆனால் மழைகாலத்தில் அவை யெல்லாம் பல்லிளிக்குதே?
3.பட்டவர்த்தனமாய் பகல் கொள்ளையாய் லஞ்சம் வாங்கும் தமிழக அரசு( அரசு கொள்ளை கொள்ளையாய் 6 வது ஊதியக் குழுவில் கொட்டிக் கொடுத்தபிறகும்)பத்திரப்பதிவுத்துறை,போக்குவரத்துத்துறை,ரெவினியு துறை,நெடுஞ்சாலைய்த்துறை,மின் பகிர்மானத்துறை,ரேசன் கடைகள்)ஊழியர்களில் ஒரு பகுதியினர்
4. பேட்டை தாதாக்கள் போல் கப்பம் வாங்கும் ஒரு சில அரசுத்துறைகள்
5.எதுவும் செய்யாமல் தன் வயிறு வளர்க்கும் அரசியல் சுரண்டல் பெருச்சாளிகள்?
6.உணவுப் பொருட்களை பதுக்கி விற்கும்,பகாசுரக் கொள்ளையர்கள்
7.நச்சு கலந்த வேதியப் பொருட்களை குடி தண்ணிரில் கலக்கும் கயவர்கள்?
8.காற்றினை மாசுபடுத்தும் கல்நெஞ்சக் காரர்கள்?
9.மரபுஅணு மாற்றத்தோடு இந்திய விவசயத்தை குழி தோண்டி புதைக்க நினைக்கும் அறிவு ஜீவிகள்?
10.பொய்யான போலி விளம்பரம் தந்து தன் சொத்தை பெருக்கும் போரசைக்காரர்கள்?
/
ல மாதங்களுக்கு முன்னால் ஒரு வாடிக்கையாளர் வீட்டுக்குப் போய் பேக்கட்டைத் திறந்து பார்த்துவிட்டு கடைக்கு வந்து கிண்ணம் இல்லையே என சண்டை போட்டாராம்
/
:)))))))))))
///வால்பையன் has left a new comment on your post "சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்":
மற்ற மதத்துகாரர்கள் இதை கொண்டாட மாட்டாங்களே, அவுங்களுக்கு அம்பா அருள் புரிய மாட்டாளா?
அதென்ன வருஷத்துக்கு ஒருக்கா மட்டும் அம்பாளுக்கு சொறிஞ்சி கொடுக்குறது?!
Posted by வால்பையன் to பகுத்தறிவு at September 25, 2009 9:47:00 PM IST ///
சார், இந்துக் கடவுளை அவமதிக்கும் விதமான வால்பையனின் இந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால் என்ன சொல்வீர்கள்?
@ hayyram
வால்பையன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர் ஒரு ஹிந்துதான். இம்மதத்தில்தான் நாத்திகர்களும் இருக்கவியலும். சார்வாக மகரிஷி, ஜாபாலி ஆகியோர் பேசியதை/எழுதியதைக் கருதும்போது வால்பையன் ஜுஜூபி.
இதே மாதிரி பேசிய கண்ணதாசன் பிறகு இரட்டிப்பு வேகத்தோடு கண்ணன் காட்டிய வழியினுள் வந்தார், அர்த்தமுள்ள இந்து மதம் எழுதினார். அதே போல வால்பையனுக்கும் பிராப்தம் இருந்தால் அப்படியே நடக்கட்டுமே, என்ன போச்சு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இற்றைப்டுத்தல்:
கூரியர் மூலம் காயில் பாக்கெட் ஒன்று நேற்று (26.09.2009) கிடைக்கப் பெற்றேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கேள்வி:
மாலன், லக்கிலுக் நடத்தும் புதிய தலைமுறை இதழின் லோகோ கூகிள் க்ரோம் லோகோவை சுட்டது போல இருக்கே ? யாரும் கவனிக்கவில்லையா ? யார் பத்திரிக்கையின் ஓனர்? தமிழ் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் தூள் கிளப்புகிறார்களே ?
1.முதல்வர் கருணாநிதி ,"என் கருத்தால் பிறர் மனதை புண்படுத்த விரும்பவில்லை"-உங்கள் விமர்சனம்?
2.ரஜினி, கமலுக்கு சிறந்த நடிகர் விருது-விருதுகள் பகிர்வின் உள்நோக்கம் ?
3. கோவை 9 வது உலகத் தமிழ் மாநாடு-கலைஞரின் திடீர் முடிவு -இலங்கை அரசியல் பிண்ணனி-ராகுல் விசிட்-திசைதிருப்பும் திருப்பணி-இதில் எது சரி?
4.இலங்கைத் தமிழர் படும் இன்னல்கள் பற்றி வரும் தகவல்கள்?
5.புஸ்வானமாய் போன நடிகர் விஜய்யின் அரசியல் விஜயம்- காரணகர்த்தா யார்?
6.தமிழக தென்பகுதி காவலர் மாவீரனுக்கு டெல்லி கசக்குதாமே-இனி ?
7.இந்தியாவின் கண்டுபிடிப்பு -நிலவில் நீர் -உங்கள் பாராட்டு விமர்சனம்?
8.ராஜராஜ சோழன் புகழ் பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி பற்றி?
9.சீன ராணுவ உதவியுடன் இலங்கை ராணுவத்தின் தொந்திரவு தமிழக மீனவ்ர்களுக்கு-இது எதில் கொண்டு போய் விடும்?
10.சமீபத்தில் சிவபத அடைந்த பிரபல எழுத்தாளர் தென்கச்சி கோ சுவாமிநாதனை சந்தித்து உள்ளீர்களா?
11.கறுப்புபண முதலைகள் பற்றிய விக்ரமின்‘கந்தசாமி’ படம் எப்படி?
12.தொலை தொடர்புத்துறை சாதணையாளர் தயாநிதிமாறன் ஜவுளித்துறையிலும் சாதிப்பாரா?
13.சன் டீவி-கலிஞ்ர் டீவி போட்டி தொடர்வது போலுள்ளதே?
14.முதலில் ஜஸ்வந்த் சிங் , பின் அருண்ஷோரி - அடுத்து?
15.எல்லா டீவிகளும் கமலின் ஐம்பது வருடத் திரையுலகச் சேவை பற்றித் கலக்குகின்றனவே?
16.ஒரு கலக்கு கல்க்கிய பன்றிக் காய்ச்சல்-அமெரிக்காவின் சதியா?
17.மு.க. அழகிரி-ஸ்டாலின் -தமிழரசு இவர்களின் சகோதர உறவு ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளதா?
18. 2 வழிகள் கோபத்தை அடக்க?
19. 2 வழிகள் ஆனந்தத்தை அதிகரிக்க?
20. 2 வழிகள் வாழ்வில் வெற்றி அடைய?
21. 2 வழிகள் எதிரிகளை சமாளிக்க?
22. 2 வழிகள் துரோகிகளை எதிர் கொள்ள?
23.விலைவாசி ஏற்றத்தால் அல்லல்படும் சாதரண மக்களின் நிலை?
24.வாக்குபதிவு எந்திரம் பற்றிய எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு என்னாச்சு?
25.நல்ல செயல்களுக்கும் செய்த நன்றிகளுக்கும் மதிப்பு குறைகிறதே?
26.விஜய தசமி அன்று ஒரு கரும்பு விலை 50 ரூபாய்-இனிப்பும் கசக்குமோ?
27.அதிமுகவை வி.காந்த் கட்சி முந்துகிறதா?
28.கமலின் அரசியல் பிரவேசம் நடைபெற வாய்ப்புள்ளதா?(அவர் அறிவு ஜீவி)
29.கமல் இயக்கத்தில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் -இதற்கு உவமையாய் எதைச் சொல்வீர்கள்?
30.இயக்குனர் இமயம் என்ன செய்கிறார்?
31.உங்களை கவர்ந்த இளம் திரைப்பட இயக்குனர் யார்?
32.இதுவரை மொத்தம் எத்தனை கேள்விகள் உங்கள் பதிவில் கேட்கப்படுள்ளது?
-மீண்டும் 32 கேள்விகள்
(டோண்டுவிடம் கேட்கப் படுபவை)
@அனானி
01.10.2009-க்கான பதில்கள் பதிவு திங்களன்றே சீல் செய்யப்பட்டு விட்டது. இன்று நான் ஒரு பெரிய துபாஷி வேலைக்கு செல்கிறேன். ஆகவே உங்கள் 32 கேள்விகளை அடுத்த பதிவின் வரைவுக்கு கொண்டு செல்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment