நிரந்தர பக்கங்கள்

10/25/2010

Yes Minister & Yes Prime Minister - திரைக்குப் பின்னால் நடந்த விஷயங்கள்

டோண்டு ராகவனுக்கு யெஸ் மினிஸ்டர் மற்றும் யெஸ் பிரைம் மினிஸ்டர் பிடிக்கும் என்னும் உண்மையை டைம் வார இதழிலேயே போடுவார்கள் என்றால் மிகையாகாது.

எனது நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 24.10.2010 பதிவில் வந்த வீடியோவை மீண்டும் இப்போது போட்டதில் இந்த அருமையான வீடியோவை எம்பெட் செய்ய முடிந்தது. முதலில் அதை கீழே பார்க்கவும்.


ஆனானப்பட்ட மார்கரெட் தாட்சரே அதில் உள்ளே நுழைய ஆசைப்பட்டுள்ளார். அவரையும் எப்படி சமாளித்தார்கள் என்பதையும் அந்த வீடியோ அழகாகக் காட்டுகிறது.

இசுலாமியர்கள் அளித்த ஒரு பார்ட்டியில் மதுவகைகள் கிடைக்காது என்பதற்காக பிரிட்டிஷ் தூதுக்குழுவினர் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை காட்டும் எபிசோட் நிஜமாகவே நடந்த நிகழ்ச்சி எனக்கூறி நம்மையெல்க்லாம் அசர வைக்கிறார்கள்.

சீரியல் ஆரம்பிக்கும் சமயத்தில் பிரிட்டனில் பொது தேர்தல் நடக்கவிருந்தது (சமீபத்தில் 1979-ல்). அப்போது சீரியலை வெளியிட்டால் அரசியல் பிரச்சினைகள் வரலாம் என்பதால் அதை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இது போன்று பல சுவாரசியமான தகவல்கள் வந்துள்ளன இந்த வீடியோவில்.

போகிற போக்கில் இந்த வீடியோ க்ளிப்பிங்கையும் பார்க்கவும், ஹாக்கர் வெற்றி பெறும் மிககுறைந்த தருணங்களில் இது முக்கிய இடத்தை வகிக்கிறது என டோண்டு ராகவன் கூறுகிறான். அதில் இஸ்ரவேலர்களின் பங்கு கணிசமாக உள்ளது என்பதை போகிற போக்கில் ஒரு தகவலாக சொல்கிறேன்.


அதானே இஸ்ரேல் வருது இல்ல இந்த எபிசோடுல, டோண்டு ராகவனுக்கு பிடிக்காம இருக்குமா எனக்கூறும் முரளி மனோகரை நான் மறுத்துப் பேச மாட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

  1. மார்க்கிரெட் தாட்சரையே காலாய்த்திருக்கிறார்கள்.

    ஆனால் இதெல்லாம் ஓல்டு ஆகிவிட்டதால் பார்த்தது இல்லை.

    தற்போது 45+ க்கு மேல் இருக்கும் தலைமுறையினர் அதுவும் அவர்கள் எல்லாம் பெருநகரங்களில் வாழ்ந்திருந்தால் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு.

    மேலும், இது தூர்தர்ஷனின் சனிக்கிழமை பிரைம் டைமில் (இரவு 9-10) ரீரன் (rerun) செய்தார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete