ஆனால் ப்ரூட்டஸ் நெம்பவுமே நியாயஸ்தர்
ஜூலியஸ் சீசரை ப்ரூட்டஸ் கூட்டாளிகள் கொன்றாயிற்று. “நீயுமா ப்ரூட்டஸ்” என நொந்த வண்ணம் சீசரும் பிராணனை விட்டாயிற்று. பிறகு மக்களுடன் ப்ரூட்டஸ் பேசி, தன்னிலை விளக்கம் கொடுத்தாயிற்று.
ஆனால் பின்னால் வரும் ஆண்டனி வேறொரு பிரசங்கம் ஆற்றி, மக்களை ப்ருட்டஸ் % கூட்டாளிகளுக்கு எதிராக மாற்றுவான். அவ்வாறு செய்யும் போது, “ப்ரூட்டஸ் நெம்பவுமே நியாயஸ்தன்” என்பதைத் திரும்பத் திரும்பக் கூறுவான். முதலில் சாதாரணமாக புகழ்ச்சியாகத் தோன்றும் இதே வாக்கியம் பிற்பாடு அதுவே குற்றச்சாட்டாக மாறும். ஷேக்ஸ்பியரின் மாஸ்டர்பீசான ஜூலியஸ் சீசர் நாடகத்தின் முக்கியத் தருணம் இது.
காங்கிரஸ் கூட்டங்களில் இம்மாதிரி பொடி வைத்து பேசுவதில் சத்தியமூர்த்தி தேர்ந்தவர். ஜஸ்டிஸ் கட்சியின் ஒரு வேட்பாளரை அவர் முதலில் மகானுபாவர் என சித்தரித்தார். பிறகு அந்த வேட்பாளருக்கு எதிராக ஒவ்வொரு விஷயமாகக் கூறி, “இப்படித்தான் அவர், அந்த மகானுபாவர்” எனக்கூறி முத்தாய்ப்பு வைப்பார். பிறகு ஒரு தருணத்தில், புது விஷயம் கூறி, “இப்படித்தான் அவர்...” எனக் கூறிக் கொண்டே சோடா எடுத்து குடிக்க, கூட்டத்தினர் “அந்த மகானுபாவர்” என முடிப்பார்கள்.
பால் எட்டிங்க்டன் நடித்த யெஸ் மினிஸ்டர் சீரியலில் வரும் ஒரு எபிசோடின் கடைசி காட்சி கீழே தரப்பட்டுள்ளது. அதில் பிபிசி-யை பயங்கரமாகவே கலாய்த்திருப்பார்கள். அதில் பிபிசியின் தலைவர் பிபிசி அரசால் கட்டுப்படுத்தப்படலாகாது எனக் கூறிக் கொண்டே உண்மையிலேயே மினிஸ்டரும் அவர் செக்ரட்டரியும் தரும் அழுத்தத்துக்கு பணிந்து போதல் மேலே சொன்ன ப்ரூட்டஸ்/சத்திய மூர்த்தி உதாரணங்களுக்கு இன்னொரு எடுத்துக் காட்டாகும். எஞ்சாய்!
குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜகாவின் தொடர்ந்த வெற்றி மழை
இது சம்பந்தமாக நான் போட்ட முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
பிஜேபியை குறை கூறுவதையே வேலையாக வைத்திருக்கும் ஹிந்துவும் வேண்டாவெறுப்பாக இதை ஒத்துக் கொள்ள வேண்டி வந்தது. இம்முறை காங்கிரசாலும் ஓட்டுப் பதிவில் தில்லுமுல்லு என்ற பல்லவியைக் கூட பாட முடியவில்லை என ஹிண்டு மேலும் கூறுகிறது. இப்போ என்ன செய்யலாம்? இத்தாலிய சோனியா காந்திக்கு தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறார் காங்கிரஸ் தலைவர் பட்டேல் அவர்கள். வேறு வழியில்லை அவருக்கு. தேர்தல் கமிஷனரே காங்கிரஸ் மாவட்ட கட்சித் தலைவர் ரேஞ்சுக்கு செயல்படும் சினோரியோவில் இந்தக் குற்றச்சாட்டை வெட்கமேயில்லாமல் முன்னால் வைக்க காங்கிரசால்தான் முடியும்.
தினத்தந்தியில் சிந்துபாத் கதை
அதற்கு முன்னால் ஒரு சிறு டைவர்ஷன். ஒரு தொழிலதிபர் ஒரு கூட்டத்தில் பேச வேண்டிய கட்டாயம். அவர் தனது செக்ரட்டரியிடம் தனது பேச்சை எழுதித் தரச் சொல்கிறார். ஐந்து நிமிடத்துக்கான பேச்சு என்று வேறு கூறுகிறார். அவ்வாறே பேச்சு எழுதப்பட்டு தரப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் தொழிலதிபர் தனது செக்ரட்டரியை கூப்பிட்டு திட்டுகிறார், “என்னய்யா சொதப்பிட்டே. ஐந்து நிமிடத்துக்கு உரை எழுதித் தரச்சொன்னால் 15 நிமிடத்துக்கான உரை எழுதினாய்” என்று. செக்ரட்டரி பணிவுடன் கூறுகிறார், “சார் நான் ஐந்து நிமிடத்துக்குத்தான் உரை எழுதினேன், அதை 1+2 என தட்டச்சிட்டேன், அதாவது ஒரு ஒரிஜினல், இரண்டு கார்பன் காப்பிகள். பியூன் தவறுதலாக எல்லாவற்றையும் சேர்த்து பின் போட்டு விட்டான் போல. நீங்கள் அந்த பேச்சை மூன்று முறை படித்து விட்டீர்கள்”.
இது வெறும் கற்பனை எனக் கூறுபவர்கள் மேலே படிக்கவும். சமீபத்தில் 1997-ஆம் ஆண்டு நான் தில்லியில் ஒரு வாடிக்கையாளர் அலுவலகத்தில் பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்காக சென்றேன். என்னிடம் ஒரு பெரிய கோப்பைத் தந்தார்கள் (காகிதக் கோப்பு, மென் கோப்பு அல்ல). நானும் அதை வேகமாக புரட்டிப் பார்த்து, எத்தனை பக்கங்கள் உள்ளன என்பதை துரிதமாக எண்ணி ஒரு டிபிகல் பக்கத்தில் எவ்வளவு வரிகள் என்பதெல்லாம் அவதானித்து, அது இரண்டு நாட்களுக்கான வேலை, கிட்டத்தட்ட 16 மணி நேரம் பிடிக்கும், எனது ஒரு மணிக்கான சேவை 375 என்னும் கணக்கில் 16 மணி நேரத்துக்கு 6000 ரூபாய்கள் பிடிக்கும் என்றேன்.
வாடிக்கையாளர் என்னிடம் மொத்தம் 3000 ரூபாய்தான் தருவேன், இஷ்டமிருந்தால் செய், முடிந்தால், சீக்கிரமே ஒரு நாளைக்குள்ளேயே அதை முடித்து பணம் பெறலாம் என்றும் அதில் தனக்கு ஆட்சேபம் இல்லை என்றும் கூறினார். நானும் சரி எனக்கூறி அடுத்த நாள் அவரது அலுவலகம் சென்றேன். விறுவிறென பக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. மதியம் இரண்டு மணியளவில் உணவு கொடுத்தார்கள். அதன் பிறகு பக்கங்களை புரட்டினால் ஆரம்பப் பக்கமே மீண்டும் வந்தது. மேலும் சோதித்ததில் மொத்த கோப்பே அவ்வளவுத்தான். ஒரிஜினல் மற்றும் டூப்ளிகேட் இரண்டு என்னும் கணக்கில் எல்லாமே சேர்ந்து பைண்ட் செய்யப்பட்டிருந்தன.
இப்போதுதான் தமாஷ் ஆரம்பித்தது. இது பற்றி எந்த ஐடியாவும் இல்லாதிருந்த வாடிக்கையாளர் நான் அடுத்த நாள் எத்தனை மணிக்கு வேலையை முடிப்பேன் எனக் கேட்க, நான் புத்தர் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வேலை முடிந்தது எனக்கூறி நடந்ததை விளக்க, அவரின் முகத்தைப் பார்க்க வேண்டுமே. ஆனால் என்ன செய்வது அவரே ஒத்துக் கொண்டபடி எனக்கு 3000 தர வேண்டியிருந்தது. இதை ஏன் நான் நேற்றே கூறவில்லை என அவர் கவுண்டமணி பாணியில் கேட்க, நான் செந்தில் மாதிரி, “அண்ணே நேற்றைக்கு நான் வெறுமனே பேப்பர்களைத்தான் எண்ணினேன், படித்துப் பார்க்க நேரமெல்லாம் இல்லை” என்று கூற அவ்ர் மேலும் மெர்சலானார்.
இதெல்லாம் இங்கே ஏன் பெரிசு என முரளி மனோகர் கேட்கிறான். அதுதான் கன்னித்தீவின் மகிமை. சில நாட்களுக்கு முன்னால் எதேச்சையாக பார்த்தேன். அதில் அரசகுமாரி லைலாவை முதலில் சிறையெடுப்பது காட்டப்படுகிறது. இந்தக் காட்சியை சமீபத்தில் 1960-லிருந்து பல முறை பார்த்த ஞாபகம் வேறு வந்தது. ஆகவே என்ன நடக்கிறதென்றால், அதே கதையை திரும்பத் திரும்பப் போடுகிறார்கள். வாசகர்கள் யார் பார்ப்பார்கள் என்ற தெனாவெட்டுதான், வேறென்ன?
நீங்களே நெஞ்சைத் தொட்டு கூறுங்கள்? பொறுமையாக படிப்பீர்களா அத்தொடரை. இருப்பினும் அது வருகிறது என்றால், தினத்தந்தி வாசகர்கள் தத்திகள்தான் என நிர்வாகமே நினைக்கிறது. உதாரணத்துக்கு ஒரு அத்தொடரில் நாளைக்கான வாசகங்கள்.
1. சிந்துபாத் நிமிர்ந்து பார்க்கிறான்.
2. மந்திரவாதி நிற்கிறான், சிரித்துக் கொண்டு.
3. ஆ, நீயா என்கிறான் சிந்துபாத்
(தொடரும்).
ஆகவே லைலா சிறைபிடிக்கப்படும் காட்சி திரும்பவும் வர கண்டிப்பாக 10 ஆண்டுகள் பிடிக்கும். அதுவரை எந்த வாசகர் தொடர்ச்சியாக படிப்பார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
1 hour ago
10 comments:
nice
அப்போ மீள்பதிவுகளுக்கு தினத்தந்தி தான் முன்னோடியா?
அருமை, பஞ்சாமிர்தம்.
\\பெயர் சொல்ல விருப்பமில்லை said...
அப்போ மீள்பதிவுகளுக்கு தினத்தந்தி தான் முன்னோடியா?\\
ரிப்பீட்டு
ம்ம்
sindbad -- chiranjeevi, ever lasting.
மிக சுவாரஸ்யமாக இருந்தது
தந்தியில் அவ்வப்போது செய்திகளே ஓரிரு நாட்களில் மறுசுழற்சி ஆவதைக் கண்டிருக்கிறேன்.
Thiru Dondu
Look at this article and see how low our "secular" media has gone. They cannot simply digest Modi sweeping election after election.
http://timesofindia.indiatimes.com/india/Modi-used-UPA-funds-conned-Congress-/articleshow/6806286.cms
Regards
-Venkat
வால்பையனின் ஒரு பதிவில் அவர் வெளியிட்ட ஒரு விளம்பரம்:
//பெண்ணிடம் எதிர்பார்ப்பது : சொந்தக்காலில் நிற்க வேண்டும், தாலி, மத சடங்குகளின்றி (குறிப்பாக இந்து மத சடங்குகள்) சாதி மறுப்பு திருமணத்திற்க்கு சம்மதிப்பவராக இருக்கவேண்டும்.
பெண் எந்த சாதி, எந்த மதத்தை சேர்தவராகவும் இருக்கலாம்.//
சுட்டி: http://valpaiyan.blogspot.com/2010/09/blog-post.html
வால் பையன் என்ன சொல்லறார்னா:
http://profile.tamilmatrimony.com/profiledetail/viewprofile.php?id=M2043536
//இவரது மேட்ரிமோனியல் ஐடி! அதில் கூட சாதி, மதம் முக்கியமில்லை என்றே தெரிவித்திருக்கிறார்!, அவரது புரோபைலை முதன் முதல் வெளியிடுவதில் பெருமையடைகிறேன்!//
குருவி படத்துல ஒரு தர்ம அடி சீனுக்கு முன்னாலே விஜய் சொல்லறது:
//சரோஜா சாமான் நிகாலோ//
விஜய் ரசிகன்
Post a Comment