நிரந்தர பக்கங்கள்

12/30/2010

டோண்டு பதில்கள் 30.12.2010

நக்கீரன் பாண்டியன்
கேள்வி- 1. பலர் எதிர்பார்த்தபடி திமுக-காங் கூட்டணி முறிந்து விடும் போல் அறிகுறி தெரிகிறதே?
பதில்: எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நடந்தால் தமிழக மக்களுக்கு நல்லதுதானே.

கேள்வி- 2. அம்மாவுக்கு பிடிக்கும் தலைமை மகனுக்கு வேப்பங்காய் என்ன காரணம்?
பதில்: அம்மாவுக்கு தன் சகோதரிகள் மேல் இருக்கும் பாசம் மகனுக்கு தனது சித்திகள் மேல் இல்லையோ என்னவோ.

கேள்வி- 3. ஜெ.யின் லாவக அணுகுமுறை மாற்றம் தேர்தல் வரை தொடருமா?
பதில்: தொடர வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். சாதாரணமாக தமிழக அரசியல் அரங்கில் 1990கள் முதல் நான் காணும் போக்கு என்னவென்றால், ஜெயலலிதாவும் சரி கருணாநிதியும் சரி பல முறை சொதப்பல்கள் செய்து எதிராளிக்கு வெற்றியளித்ததே அதிகம் நடந்துள்ளது. இம்முறை சொதப்ப வேண்டியது மஞ்சள் துண்டின் முறை என எண்ணுகிறேன்.

கேள்வி- 4. ஆன்லைன் டிரெடிங் தான் இந்த விஷ விலையேற்றத்திற்கு காரணம் என்று தெரிந்த பிறகும்?
பதில்: எப்படித் தெரியும் உங்களுக்கு? தகவலுக்குத்தான் கேட்கிறேன்.

நான் என்ன நினைக்கிறேன் என்றால் இது தொழில் நுட்பம் சமபந்தப்பட்ட விஷயம். எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லை. ஆகவே இக்கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்து அதற்கான எதிர்வினைகளிலிருந்து மேலும் கற்கலாம் என எண்ணம்.

ஆன்லைன் டிரேடிங் சில வகைகளில் சூதாட்டத்தத்தை நினைவுபடுத்துகிறது. சூதாட்டம் தவறு என்றாலும் மனிதர்களால் அதைத் தவிர்க்க இயலாது. அதைத் தடை செய்தால் பல வழிகளில் அது நடந்தே தீரும் என்பது எனது கருத்து.

சமீபத்தில் 1971-ல் வெளியான “சூதாட்டம்” என்னும் படம் நினைவுக்கு வருகிறது. ஜயசங்கர், முத்துராமன் மற்றும் தேங்காய் சீனுவாசன் மூணு சீட்டு ஆடிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு போலீஸ் ஜீப்பில் செல்கின்றனர். பொழுது போவதற்காக அவர்கள் சென்ற வண்டியின் பதிவு எண்ணில் உள்ள தனி நம்பர்களை கூட்டினால், [உதாரணத்துக்கு 3331 --> 3+3+3+1 = 10 --> ரெட்டைப்படை எண்] விடையாக வருவது ஒற்றைப்படையா ரெட்டைப்படையா என மூவரும் பந்தயம் கட்டுகின்றனர் (அதற்கு முன்னால் யாருமே வண்டி என்ணைப் பார்க்கவில்லை என்பதை ஜெண்டில்மேன் அக்ரீமெண்டாக உறுதி செய்து கொள்கின்றனர்). பந்தயங்கள் எல்லாம் போட்ட பின்னால் போலீஸ்காரரிடமே வண்டியின் எண்ணைக் கேட்டறிந்து விடை தெரிந்து கொண்டு பிறகு பெட்டை செட்டில் செய்கின்றனர்.

ஆக, ஆன்லைன் டிரேடிங் சரியோ தவறோ எனப்து ஒரு பக்கம் இருக்கட்டும், அதை அழிக்க முடியும் என நம்புகிறீர்கள்?

கேள்வி - 5. பெரிய கார்பரேட் நிறுவனத் தலைவர்கள் தான் இந்தியா ஆட்சி அதிகாரத்தை முடிவு செய்கிறார்கள் என்ற செய்தி நல்லதற்கா?
பதில்: இது ஒன்றும் புதிதில்லையே. எல்லா தேசங்களிலுமே நடப்பதுதானே. உதாரணத்துக்கு, எந்த யுத்தங்களைப் பார்த்தாலும் அவற்றுக்கு முக்கால்வாசி பொருளாதாரக் காரணங்கள்தான் அதிகமிருக்கும். அதிலும் சம்பந்தப்பட்ட தேசங்களின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள் நடக்கும் போட்டியாகவே இருக்கும்.

பல கோடிக்கணக்கான மக்கள் கொலையாகும் விஷயங்களிலேயே அப்படி என்றால் ஆட்சி அதிகாரம் மட்டும் எப்படித் தப்ப முடியும்? என்ன, இதெல்லாம் இலை மறைவு காய் மறைவாக நடந்தபோது பொது மக்களுக்கு அது பற்றி அதிகமாகப் பிரக்ஞை இல்லை. இப்போது இருக்கிறது, அவ்வளவே. இதுவும் கடந்து போகும்

மிளகாய் பொடி
கேள்வி - 6. வரும் தேர்தலில் திமுக என்ன பொருள் இலவசமாக கொடுப்பதாக இருக்கிறார்கள்?
பதில்: ஆளுக்கொரு ஆப்பு, அவரவரே வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளுடன்?

கேள்வி - 7. சச்சினின் சமீபத்திய சாதனை பற்றி...?
பதில்: இந்தியாவின் பிராட்மேன் அல்லவா அவர். உதாரணத்துக்கு இங்கே போய் பாருங்களேன்.

கேள்வி - 8. சென்னையில் தற்பொழுது குளிர் ஜாஸ்தியாக தெரிகிறதே? உலகம் வெப்பம ஆவதாலா?
பதில்: ரமணனைத்தான் கேட்க வேண்டும். அவர்தான் கடந்த நூறாண்டுகளில் சென்னையின் குளிர்கால டெம்பரேச்சர்களை ஒரு எக்செல் தாளில் கொடுத்து அதிகாரபூர்வமாக பேச இயலும்.

அவரே இப்போது கூறுகிறார். மழைகாலத்தில் வளி மண்டலத்தில் நீரின் அடர்த்தி அதிகமாகி, ஒன்று மழையாகப் பொழியும் அல்லது பனி இருக்கும். இந்த ஆண்டு மழையும் அதிகம், கூடவே பனிபொழிவும்.


pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி - 9. நடிகர் ரஜினியின் வீரம் சினிமாவில்தான். அரசியல் என்றால் அவருக்கு பயம்- சுப்பிரமணிய சாமி.
பதில்: ரஜனி கன்னட ராஜ்குமார் போன்று ஒரு நடிகர் அவ்வளவே. கன்னட வீரராகக் கருதப்பட்ட அந்த ராஜ்குமாரும் வீரப்பனிடம் பிணைக்கைதியாக இருந்தபோது அஞ்சி அடக்க ஒடுக்கமாகத்தான் இருக்க வேண்டியிருந்தது.

மேலும் அரசியலுக்கு தான் வருவது பற்றி ரஜனி என்றுமே சீரியசாகப் பேசியதாகத் தெரியவில்லையே. எனது கருத்து என்னவென்றால் 1996-ல் அவருக்கு நல்ல வாய்ப்பு இருந்தது ஆனாலும் உள்ளே இறங்கவில்லை. அதுவும் நல்லதுக்குத்தான்.

கேள்வி - 10. ஊரெல்லாம் பற்றி எரியும் நானோகார், ஒரு லட்சம் விலை சொல்லிட்டு 2 லட்சத்துக்கு விற்கும் நானோ கார், விற்பனையே ஆகாத நானோ கார்.. இதுக்கு விருதாம்..
பதில்: நானோவின் விற்பனை சொதப்புகிறது போலிருக்கே.

அதே நேரத்தில் அதற்கு அவார்ட் கொடுத்தவர்களும் விஷயம் தெரிந்தவர்கள்தான் போலிருக்கே.

இப்போதாவது சரியாக விற்பனை போகிறதா என்பதை பார்ப்போம்.

கேள்வி - 11. தம்பி விஜய் மாசற்ற தமிழன்-உரக்கச்சொன்ன சீமான்!
பதில்: அப்படியாங்ணா. அப்படியாவது விஜயின் மார்க்கெட் நிமிர்ந்தால் சந்திரசேகர் வாணாம்னா சொல்லப் போறார்? இது சம்பந்தமான மேலதிக தமாஷ் விவரங்களை இங்கும் காணலாம்.

கேள்வி - 12. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் மற்றும் முத்து திரைப்படங்களை அகமதாபாத்தின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் (IIM) மாணவர்களுக்கு தனி பாடமாகவே வைத்திருக்கிறார்கள்.
பதில்: அந்த மாணவர்கள் என்ன தப்பு செஞ்சாங்க?

கேள்வி - 13. வங்காளதேசத்தில் 4 முறை திருமணம் செய்த ஒருவரை, அவரது 4 மனைவிகளும் ஒன்றாக சேர்ந்து சரமாரியாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பதில்: ஐந்தாவதாக மாட்டிக் கொள்ளக்கூடிய பெண் காப்பாற்றப்பட்டார்.


பார்வையாளன்
கேள்வி - 14 என்னை போன்றோருக்கு பிராமணர்கள் மீது துவேஷமும் இல்லை. அதீத அன்பும் இல்லை. ஆனால் முழு நேரமாக பிராமணர்களை எதிர்ப்பவர்கள் மனதில் பிராமணர்கள் மேல் அதீத மரியாதை இருக்கிறது என நினைக்கிறேன். உங்கள் கருத்து? (முக்கிய வேலைகளுக்கு பிராமணர்களை அமர்த்துததல், ஆலோசனை கேட்டல் போன்றவை சில உதாரணங்கள்)
பதில்: இது வெறும் தற்செயல். யாருமே தங்களுக்கு ஆலோசகர்களாக தங்களால் சிறந்தவர்களாகக் கருதுபவர்களையே வைப்பார்கள், காரணம் அவர்களது திறமைதான். அவ்வாறு அமர்த்தப்படுபவர்களில் பார்ப்பனரும் இருக்கலாம். ஆனால் இந்த இடத்தில் அவ்வாறு நடப்பது திறமைக்காகத்தானே தவிர பார்ப்பனர் என்பதற்காக என்றெல்லாம் இல்லை.

கண்டிப்பாக தாங்கள் வலியுறுத்தும் சாதி ரீதியான இட ஒதுக்கீடு எல்லாம் தங்களுக்கு காரியம் ஆகவேண்டிய இடங்களில் பார்க்க மாட்டார்கள் அவ்வளவே.

கேள்வி - 15. இத்தகையத் திறனை பிராமணர்கள் பெற என்ன காரணம்? (பிராமணர்கள் அபார அறிவு திறன் கொண்டுள்ளதாக நான் நினைக்கவில்லை. பிராமண துவேஷம் செய்பவர்கள் நினைக்கிறார்கள்).
பதில்: இக்கேள்வியை பிராமண துவேஷம் செய்பவர்களிடம்தான் கேட்க வேண்டும். திருமணச் சடங்குகளுக்கு பார்ப்பனர்கள் வேண்டாம் என கொடி பிடிப்பவர்களே தத்தம் வீட்டு திருமணங்களில் பார்ப்பனர்களை வைத்து, ஹோமம் வளர்த்து, தாலி கட்டி, அம்மி மிதித்து, சப்தபதி மந்திர கோஷங்கள் முழங்க திருமணம் நடத்துகிறார்கள். கேட்டால் வீட்டுப் பெரியவர்கள் சொன்னார்கள் எனக் கூறுவது.

கேள்வி - 16. நாம் ஆங்கிலம் கலந்து எழுதுவதுபோல, ஜெர்மன் பிரெஞ்ச் மொழிகளில் நடக்கிறதா ?
பதில்: தாராளமாக நடக்கிறது. ஆங்கில பாதிப்பு உடைய ஜெர்மன் டெக்ஸ்ட் DEnglisch என்றும் அதே போல ஆங்கிலக் கலப்பு பிரெஞ்ச் franglais என்றும் அழைக்கப்படும். அதுவும் அமெரிக்க ஆங்கில்மதான் இங்கு சுட்டப்படுகிறது.

கேள்வி - 17. உங்கள் பார்வையில், ஜெயமோகன் சாருநிவேதிதா . ஒப்பிடுக
பதில்: சுய மரியாதை பற்றிய எனது இப்பதிவில் நான் சாருவை பற்றி குறிப்பிட்ட சில வரிகள்:

சாரு நிவேதிதாவின் பல எழுத்துக்கள் அவர் ஏற்கனவேயே பல முறை சொன்னதாகத்தான் இருக்கும். தன்னை ஒண்ணுமே தெரியாத பாப்பா ரேஞ்சுக்கு வைத்துக் கொண்டு உதார் விடுவதும், மற்றவர்கள் அதை நம்புவார்கள் என நம்புவது போல காட்டிக் கொள்வதும் பல முறை நகைச்சுவையாகவே இருக்கும்.

உதாரணத்து அவரது இந்த லேட்டஸ்ட் பதிவையே எடுத்துக் கொள்வோம். அதில் தன்னை லயோலா கல்லூரிக்கு பேச அழைத்துவிட்டு வெறுமனே சாம்பார் சாதம் கொடுத்து அனுப்பி விட்டார்கள் என பிரலாபித்திருக்கிறார்.

உப்பு புளி செலவுகளுக்கும் நண்பர்கள் கையை எதிர்பார்க்கும் நிலையில் தன்னை வைத்திருப்பவர் சாரு நிவேதிதா. எனது கேள்வி பதில் பதிவு ஒன்றில் வந்த ஒரு கேள்வியும் அதன் பதிலும் கீழே:

எம். கண்ணன்
9. ஜெயமோகன் ஆஸ்திரேலியா சென்றாலும் சரி, கனடா சென்றாலும் சரி, அமெரிக்கா சென்றாலும் சரி - நாடு முழுவதும் சுற்றிக் காட்ட, விருந்தோம்பல் செய்ய பல வாசகர்கள், நண்பர்கள் செய்கிறார்கள். ஆனால் பலமுறை கேட்டு, வேண்டுகோள் விடுத்தும் சாருவை யாரும் எங்கும் கூப்பிட்டு (வெளிநாடுகளில் வசிப்பவர்கள், தமிழகத்துக்குள்ளேயே வசிப்பவர்கள் கூட) விருந்தோம்புவது இல்லையே? ஏன் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்: மடிப்பாக்கத்தில் வசிக்கும் எனது எழுத்தாளர் நண்பர் வீட்டுக்கு அமெரிக்கவாழ் பதிவர் ஒருவருடன் சென்றிருந்தேன். அப்போது அவர் சாரு பற்றி பேசும்போது, அவருடன் ஒரு அளவுக்குள் பழக வேண்டும் என கூறினார். கடன் கேட்டுவிடுவார் என்றார்.

அவருடைய வலைத்தளத்திலேயே பார்க்கலாமே, தனது வங்கிக் கணக்கு எண்ணைக் குறிப்பிட்டு அதற்கு பணம் அனுப்புமாறு கேட்டு கொள்கிறார். அப்படி பெறும் பணத்தை ரொம்ப காஸ்ட்லி பார்களில் குடிக்கத்தான் பயன்படுத்துகிறார் என்பதையும் அவ்வப்போது எழுதி வருகிறார். இந்த விஷயங்களெல்லாம் படிப்பவர் மனதில் ஓர் அவெர்ஷனை உருவாக்கிவிடுகிறது.

இவையெல்லாம் ஜெயமோகன் விஷயத்தில் மிஸ்ஸிங். தனது தினசரி தேவைகளுக்கு அவர் யாரிடமும் கையேந்துவதில்லை, அவரது புத்தகங்கள் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவரது எழுத்துக்களில் சுய இரக்கம் கிடையாது. ஆகவேதான் அவரை அழைக்க ஆட்கள் அனேகம் உண்டு. நன்றாக வேறு அவர் எழுதுகிறார் என்பது கூடுதல் போனஸ்.


ஆகவே இவ்விருவரிடையே என்ன ஒப்பீடு இருக்க இயலும்? ஜெயமோகன் மலை, சாரு மடு என்று கூறுவதைத் தவிர.


hayyram
கேள்வி - 18. கருணாநிதியும் ஜெயலலிதாவும் கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்தவர்களுக்கு சர்ச் கட்ட பட்டா வழங்குவது முதல் சலுகைகள் பல வாரி வழங்குவதாக மண்டியிட்டு முழங்கியிருப்பதை பற்றி தங்கள் கருத்து?
பதில்: நன்றாகவே மண்டியிடுகிறார்கள் என்றுதான் கூற வேண்டும். சபாஷ் சரியான போட்டி எனக் கூறுவது பி.எஸ். வீரப்பாவை மிமிக்ரி செய்யும் விவேக் குரலில்


thenkasi
கேள்வி - 19. பிராமணர்கள் அனேகமாக அனைத்து துறைகளிலும் பணியில் இல்லையென்றே ( இருந்தாலும் மிக குறைந்த எண்ணிக்கயே) இருக்கும் போது இன்னும் ஏன் இந்த பிராமண துவேசம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம்?
பதில்: தேவையற்ற அச்சம். சுய மரியாதை இல்லாதவர்கள்தான் இவ்வாறு தூற்றுபவர்கள்.

கேள்வி - 20. கலப்புத் திருமணம் செய்யும் போது (குறிப்பாய் மென்பொருள் பொறியாளர்) பிராமண பெண்களையே தேர்ந்தெடுக்கும் இவர்கள் பிராமண குலத்தை ஏளனம் செய்வது ஏன்?
பதில்: ஆஷாடபூதிகள்.

கேள்வி - 21. பொதுவாய் பிராமணர்கள் (தற்காலத்தில்) யாருக்கும் பிரச்ச்சனை பண்ணாமல் இருக்கும் போது ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாய் சொல்லபடும் ஒரு சில செயல்களுக்கு இந்தத் தலைமுறையை வாய்க்கு வந்தபடி பேசுவதும்,எழுதுவதும் சரியா?
பதில்: குருட்டுத்தனமான வெறுப்பு பார்ப்பனர்கள் மேல். இதற்கு வெறுப்பாளர்களின் வளர்ப்பே காரணம்.

கேள்வி - 22. மருத்துவம் பார்க்க அனுபவமிக்க பிராமண மருத்துவர் வேண்டும்,வழக்குகளை திறமையுடன் வாதிட பிராமண வக்கீல் வேண்டும்,புகழ்பாடும் நிகழச்சிகளை தொகுத்தளிக்க பிராமண நிகழ்ச்சி தொகுப்பாளர் வேண்டும் ஆனால்?
பதில்: திறமை மிக்கவர்களை தேர்ந்தெடுக்கும்போது அவர்களில் சிலர் பார்ப்பனர்களாக இருக்கலாம். அது மிகவும் தற்செயலான விஷயம். ஏனெனில் திறமை என்பது எந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்கும் உரியது அல்ல.

கேள்வி - 23. ஊடகம், செய்தித்தாள்கள், வானொலி, திரைப்படம் (தமிழகத்தில்) ஆகியவற்றில் தனி ஆட்சி செய்த போதும் இன்னும் பிராமணரை துவேஷிப்பது நியாயமா?
பதில்: சூரியனை பார்த்து நாய் குரைத்தால் அதற்குத்தான் வலிக்கும். கிடக்கிறான்கள் ஜாட்டான்கள்.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

32 comments:

  1. கடந்த 2010 ஆண்டில்:
    1.1.2010 to 31.12.2010)

    1.உங்களை கவர்ந்த பிற பதிவாளரின் பதிவு,காரணம்?

    2.உங்களை மிகவும் பிடித்த உங்கள் பதிவு?

    3.வெகுவாய் விமர்சனத்துக்குள்ளான உங்கள் பதிவு?

    4.அதிக பின்னூட்டங்கள்/பாரட்டுக்கள் பெற்ற உங்கள் பதிவு?

    5.யாரும் கண்டு கொள்ளாத பதிவு?

    6.அடுத்த ஆண்டில் பதிவுகளில் என்ன மற்றம் செய்ய்லாம் என் தீர்மானித்துள்ளீர்கள்?

    7.நீங்கள் பார்த்த திரைப் படங்களில் உங்களுக்கு பிடித்தது?

    8.அய்யையோ இந்த படத்தை பார்க்காமால் விட்டோமே என உள்ள படம்?

    9. வசூலில் பெரும் சாதனை படைத்த படம் உங்கள் மதிப்பீட்டில்?

    10. அன்பின் ஆழத்தை இயல்பாய் கவிதையாய் வடித்தெடுத்த மிஸ்கின் அவர்களின் நந்தலா போல் இனியொரு படம் வருமா?


    11.உங்களை பாதித்த மிகவும் சோகமான நிகழ்ச்சி?

    12.உங்களை அதிக குஷிபடுத்திய நிகழ்வு?

    13.ஆன்மீக சூற்றுலா சென்ற தலங்களில் மிகவும் பிடித்த திருத்தலம்?

    14. எந்த அரசியல் தலைவரின் செயல் பாடு சிறப்பாயிருந்தது?

    15.புத்தாண்டில் உங்களின் புதிய தீர்மானம்?

    16.உங்களுக்கென தனியாய் வெப் தளம் அமைக்கும் எண்ணம் உண்டா?

    17.பேஸ்புக்கில் இணையும் உத்தேசம் உண்டா?

    18.2ஜி விவகாரம் என்ன வாகும்?

    19.கல்மாடியின் அரசியல் எதிர்காலம்?

    20.mobile number portability -உங்கள் கருத்து?

    ReplyDelete
  2. டொண்டு சார்,

    http://svs-trust.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81

    மேலே உள்ள தளத்தில் எனது கட்டுரைகள் யாவும் அதிலிருக்கும் ஜெ பி ஜீ படத்துடன் அப்படியே காப்பியடிக்கப்பட்டிருக்கிறது. குறைந்த பட்சம் இந்த தளத்திலிருந்து எடுத்தது என்று கூட அறிவிக்க வில்லை. மணிக்கணக்கில் டைப் செய்து உழைத்த உழைப்பு இப்படி திருடப்படுவதை தடுக்க என்ன செய்வது.. இவர்களது மெயில் ஐடிக்கு குறைந்த பட்சம் எனது தளத்திலிருந்து எடுத்தது என்று வெளியிடுங்கள் அல்லது நீங்கள் உழைப்புத் திருடர்கள் என்று மெயில் அனுப்பி உள்ளேன். இது போன்ற உழைப்புத் திருட்டை தடுக்க வழி என்ன? (இது கேள்வி பதிலுக்காக அல்ல)

    ReplyDelete
  3. //பதில்: ஆளுக்கொரு ஆப்பு, அவரவரே வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளுடன்?//

    Fully conforming to Tamil blog standards!( I meant the language style)

    ReplyDelete
  4. Qn 1: It is bad for Congress also. It will be wiped out.

    Qn 15: The anwswer does not cover those belonging to other religions like Christians and Muslims among whom you find a large number of brahmin haters. Why do they do that?

    Qn 19 to 23: A good lash at the Questioners who assume superiority of brahmins. Your consistent position that superior intellect is not based on caste births should enter their maramandais of these Questioners. Well done ! Congrats !!

    Dear Questioners! As long as you call yourself brahmins, there will be criticism. Because it is not possible to be a brahmin in today world. Vallyourself parppanars, just as DR is calling you.

    ReplyDelete
  5. //கேள்வி - 12. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் மற்றும் முத்து திரைப்படங்களை அகமதாபாத்தின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் (IIM) மாணவர்களுக்கு தனி பாடமாகவே வைத்திருக்கிறார்கள்.
    பதில்: அந்த மாணவர்கள் என்ன தப்பு செஞ்சாங்க?
    //
    IIM-A இவ்விரு படங்களைப் பார்த்து மாணவர்களைப் பாடம் படிக்கச் சொல்லவில்லை. இவ்விரு படங்களின் வணிகம் அப்படி நடந்தது, என்னென்ன யுக்திகள் கையாளப்பட்டன, நுகர்வோர் நடத்தை எப்படிக் கணிக்கப்பட்டு இலாபம் அதிகரிக்கப்பட்டது என்பனவே பாடங்கள். முக்கியத்துவம் முத்து படத்துக்குத் தான் எந்திரனுக்கல்ல. எந்திரன் பாடத்திட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. விவாதங்களில் சேர்த்திருக்கலாம். முத்து இந்தியாவில் மட்டுமன்றி ஜப்பான் நாட்டிலும் வெற்றி பெற்றதன் வணிகப்பின்னணி அங்கு விவாதிக்கப்பட்டு Case Study செய்யப்படும்.
    மற்றபடி ஏதோ சூப்பர் ஸ்டார் படம் பார்த்து IIMல் வணிகம் சொல்லித்தருவது போலப் படம் காட்டுவது எப்படி இருக்கிறது தெரியுமா? விடுங்க, அதான் படம் காட்டுறதுன்னு சொல்லிட்டேனே!!!

    ReplyDelete
  6. //இவ்விரு படங்களின் வணிகம் அப்படி நடந்தது, என்னென்ன யுக்திகள் கையாளப்பட்டன, நுகர்வோர் நடத்தை எப்படிக் கணிக்கப்பட்டு இலாபம் அதிகரிக்கப்பட்டது என்பனவே பாடங்கள். முக்கியத்துவம் முத்து படத்துக்குத் தான் எந்திரனுக்கல்ல.//
    நானும் அதை அறிவேன். சும்மா தமாஷுக்குத்தான் என் பதிலை அவ்வாறு அளித்தேன்.

    ஆனால் ஒரு விஷயம். ரஜனிக்காவது கமல் அளவுக்கு இல்லாவிட்டாலும் நல்ல நடிப்பு இருக்கிறது. ஆனால் அவ்வாறு ஒன்றுமே இல்லாமல் எம்ஜிஆர் பாப்புலர் ஆனதுதான் இன்னும் பெரிய சாதனை. அதற்கான பப்ளிக் ரிலேஷன்ஸ் செயல்பாடுகள் எல்லோரும் அவதானிக்க வேண்டும்.

    அவருக்கு என குடிக்காத இமேஜ், தாயை மதிக்கும் பண்பு, வில்லன்களிடமிருந்து கதாநாயகியை காப்பாற்றும் சாகசம் (பிறகு வில்லன் செய்ய நினைத்ததை கதாநாயகியின் ஒத்துழைப்போடு நிறைவேற்றுவதை சைடில் கூறாமல் விட்டுவிடுவார்கள்), தர்ம காரியங்கள் செய்பர் ஆகியவற்றை வைத்தே பஜனை செய்தனர், வெற்றிகரமாக.

    பிராண்டுகளின் இமேஜை உயர்த்த நினைப்பவர்கள் அவரது டெக்னிக்கை அவதானிக்க வேண்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. @hayyram
    அங்குள்ள பதிவுகளில் பின்னூட்டம் தருவதுதானே என்று கூட கேட்க முடியாதபடி செய்திருக்கிறார்கள் அந்த நாதாரிகள்.

    இதற்கு அவர்கள் பேசாமல் பிச்சை எடுக்கலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. //The anwswer does not cover those belonging to other religions like Christians and Muslims among whom you find a large number of brahmin haters. Why do they do that?//
    மற்ற மதங்களைச் சார்ந்த பிராமண வெறுப்பாளர்கள் அடிப்படையில் இந்து மதத்தை வெறுப்பவர்கள்.

    பிராமணர்களை அவர்கள் ஹிந்து மதத்தின் பிரதிநிதிகளாக பார்க்கிறார்கள்.

    அதே சமயம் ஹிந்துக்களிலேயே பார்ப்பனர்களை வெறுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதையும் காண்கிறார்கள்.

    2+2=4

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. மற்ற மதங்களைச் சார்ந்த பிராமண வெறுப்பாளர்கள் அடிப்படையில் இந்து மதத்தை வெறுப்பவர்கள்.

    பிராமணர்களை அவர்கள் ஹிந்து மதத்தின் பிரதிநிதிகளாக பார்க்கிறார்கள்.

    அதே சமயம் ஹிந்துக்களிலேயே பார்ப்பனர்களை வெறுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதையும் காண்கிறார்கள்.//

    Brahmins are looked upon as the guardians of the religion, so hated.

    What about Saiva Pillais who take Saiva Sithantham as their own and consider themselves as its guardians; and use Tamil brahmins only as the preists for the propogation of the religion. Pl remember all aatheenams are Pillais. Do the brahmin haters among the muslims and christians hate them too? If not, why so?

    Like Pillais, there are other communities who are strong in Hindu belief and show it to in open society, for e.g Naidus as Vaishnavites. They are more seen with Namam and pray only to Perumal. Do the above muslims and christians hate them too based on the religion?

    Among the Hindus, the brahmin haters comprise the Naidus too, a fact you youself have recorded in your blog.

    Why the non-brahmins Hindus hate the brahmin hindus, some of such NBHs led the dravidian hate campaign also, as you know? Nair community in Kerala are stunch protectors of Hindu religion there today. But in the unified Madras Provinces, it was Dr Nair who led the anti brahmin movement, as you well know.

    If you read Saiva Pillais like Maraimalai and Kaa.Su.Pillais, you can trace the hatred of Vaideega brahmins in their writings.

    I think, the hatred of brahmins may not all go to the root of the religion as you say. They are hated not so because they are followers of Hindu religion as because they are taken to be in the line of fire along with the Sanatana Vadi Brahmins who need to be attacked by the haters.

    The other brahmins are not all practising or propogating Sanatana vadis but they accept the sanatana principles as valid and need to be passed on.

    I wait for your commments though.

    ReplyDelete
  10. //நானும் அதை அறிவேன். சும்மா தமாஷுக்குத்தான் என் பதிலை அவ்வாறு அளித்தேன்.//
    இதை நானும் அறிவேன் டோண்டு சார்! இது பற்றி ஒரு பதிவு போடலாம் என்று விவரம் IIM பாடத்திட்ட விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் போது இந்த கேள்வி பதில் வந்தது! டக்கென்று ஒரு பின்னூட்டம் போட்டேன். அம்ம்புட்டுத்தேன். (IIM மாணவர்களின் ஆதர்ச நாயகன் சூப்பர் ஸ்டார் என்று சன் டிவியில் நிகழ்ச்சி போட்டாலும் போட்டு விடுவார்கள். அதையும் சில பேக்குக்க்கள் நம்பித் திரியும்.)

    ReplyDelete
  11. @heyram

    http://lksthoughts.blogspot.com/2010/12/blog-post_08.html
    http://lksthoughts.blogspot.com/2010/12/blog-post_09.html

    இந்த இரண்டுப் பதிவுகளை பார்க்கவும். ஆனால், இதை முற்றிலுமாய் தடை செய்யும் தொழில் நுட்பம் இன்னும் வரவில்லை.

    ReplyDelete
  12. @L.K.

    இல்லையே காப்பி பேஸ்ட் செய்ய முடிகிறதே.

    மேலும், அப்படியே பதிவை காப்பி செய்ய முடியாவிட்டாலும், கமெண்ட் போடுவதற்காக இருக்கும் பக்கத்தில் ஒரிஜினல் போஸ்டை வரவழைத்து ஜாம் ஜாம் என காப்பி செய்யலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. இப்பொழுது அந்த கோடை(code ) எடுத்துவிட்டேன். நான் பதிவிலே சொன்னவாறு முழுவதும் தடுக்க இயலாது

    ReplyDelete
  14. வணக்கம் டோண்டு சார்,
    என்ன ஆச்சு?
    என்னுடைய இந்த கடிதத்திற்கு பதிலை ஆவலாய் கேள்வி பதில் பகுதியிலோ, தனிப்பதிவாகவோ எதிர்பார்த்தேன்...கொட்டும் கடித மழையில் இதை மறந்து விட்டீர்களோ?

    Essex சிவா

    "
    வணக்கம் டோண்டு சார்,
    சமீபத்தில் தான் சோ அவர்களின் 'எங்கே பிராமணன்' முதல் பாகத்தை முடித்தேன்; சுத்தம்! என சொல்லாதீர்கள்! துக்ளக்கில் இது தொடராய் வந்தபோதே படித்திருந்தேன் (90களின் தொடக்கத்தில், இல்லை?).
    இதன் சாரம் மட்டும் நினைவில் இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு புத்தக வடிவில் இப்போதுதான் படித்தேன்.
    Well, திரு சோ அவர்களின் நேர்மை, துணிவு, நகைச்சுவை பற்றி இந்த கடிதம் இல்லை - That is just Obvious Truth.

    நான் கேட்க வந்தது, இந்த சாரம் -
    'பிராமணன்' என்பது ஒரு உயரிய status, பிறப்பில் இல்லை, அது நடத்தையில் தான் இருக்கிறது. It's kind of Elite status, it's not birth right, should be earned -
    நீங்கள் இதை ஏற்று கொண்டு இருப்பீர்கள் என உறுதியாய் நம்புகிறேன் ("யார் சொன்னது" என்று குண்டைப்போடாதீர்கள்!)
    ஆனால் பிராமண சமுதாயத்தில் இந்த சோவின் கருத்திற்கு பொதுவாக வரவேற்பு எப்படி இருந்தது என ஆவலாய் இருக்கிறது.
    சலசலப்பு அலை, முணுமுணுப்பு அலை அல்லது நிறைய எதிர்ப்பு அலை?
    ஏனெனில் அவர் கால காலமாய் நம்பப்பட்டு வந்தவைகளை போட்டு உடைத்திருக்கிறார் - Definition of வர்ணம், பிராமணப்பெற்றோர்களுக்கு பிறந்தாலேயே பிராமணன் என்றாகிவிடாது, etc.,

    நீங்கள் இதைப்பற்றி பதிவுகள் முன்னரே எழுதி இருந்தால் மன்னிக்க (உங்கள் archive-ல் நான் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை).

    எனது இந்த கேள்வியை நீங்கள் தனிப்பதிவாயும் போடலாம், உங்கள் கேள்வி பதில் பகுதியிலும் போடலாம், உங்கள் இஷ்டம் உங்கள் வலைப்பதிவு!

    உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி!

    Essex சிவா
    "

    ReplyDelete
  15. Also, put up a reply to me.

    ReplyDelete
  16. //பலர் எதிர்பார்த்தபடி திமுக-காங் கூட்டணி முறிந்து விடும் போல் அறிகுறி தெரிகிறதே?
    பதில்: எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நடந்தால் தமிழக மக்களுக்கு நல்லதுதானே.//

    பிரிந்தால் நல்லது என்று மொட்டையா சொன்னா எப்படி?
    அடுத்த வரும் பாஜக சிறுபான்மையினருக்கு குண்டு வைக்குமே அது மட்டும் நல்லதா!?

    ReplyDelete
  17. //அம்மாவுக்கு பிடிக்கும் தலைமை மகனுக்கு வேப்பங்காய் என்ன காரணம்?
    பதில்: அம்மாவுக்கு தன் சகோதரிகள் மேல் இருக்கும் பாசம் மகனுக்கு தனது சித்திகள் மேல் இல்லையோ என்னவோ.//


    ஒன்னுமே புரியல!

    ReplyDelete
  18. //ஆன்லைன் டிரெடிங் தான் இந்த விஷ விலையேற்றத்திற்கு காரணம் என்று தெரிந்த பிறகும்?//

    இல்லாத பொருளுக்கு நடக்கும் ஆன்லைன் ட்ரேடிங் சூதாட்டம்!

    ஒரு விவசாயி தனது நிலத்தில் விளையும் மஞ்சளை முன்கூட்டியே அதுவாது அன்சீசனிம் நல்ல விலைக்கு விற்கிறார்!, அதை வாங்கியவர் மேலும் விலை ஏறும் போது மார்க்கெட்டில் விற்கிறார்!

    ஆன்லைன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விலையேற்றத்தை தவிர்க்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  19. //வரும் தேர்தலில் திமுக என்ன பொருள் இலவசமாக கொடுப்பதாக இருக்கிறார்கள்?//


    ரேஷன்கார்டுக்கு ஒரு கிரவுண்ட் இடமாம்!

    ReplyDelete
  20. //வங்காளதேசத்தில் 4 முறை திருமணம் செய்த ஒருவரை, அவரது 4 மனைவிகளும் ஒன்றாக சேர்ந்து சரமாரியாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது//


    தெரியாம பண்ணியிருப்பார்!

    ReplyDelete
  21. //கேள்வி - 14 //


    தற்போதைய திரவிட கட்சிகள் செய்யும் பார்பனிய எதிர்ப்பு, பெரியார் என்ற ஐக்கானை பயன்படுத்த போடும் வேஷம்! உண்மையில் பார்பனீயத்தின் விசத்தன்மையை உணராமல் செய்வது அது!

    அதிலும் முக்கியமாக தி.மு.க நீங்கள் சொல்வதற்கு பொருந்தும்!

    ReplyDelete
  22. //இத்தகையத் திறனை பிராமணர்கள் பெற என்ன காரணம்?//


    ஏமாற்றி பிழைப்பது திறன் என்று சொன்னால் உண்மையில் பார்ப்பனர்கள் திறமைசாலிகள் தான்!

    ஊருக்கு தெரியமல் பாப்பானை வைத்து கல்யாணம் பண்ணால் தான், வேஷம் போடுகிறார் என்று அர்த்தம், அதை ஊரிறய செய்தால் எதோ காரணம் இருக்கிறது என்று அர்த்தம்!

    ReplyDelete
  23. //கருணாநிதியும் ஜெயலலிதாவும் கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்தவர்களுக்கு சர்ச் கட்ட பட்டா வழங்குவது முதல் சலுகைகள் பல வாரி வழங்குவதாக மண்டியிட்டு முழங்கியிருப்பதை பற்றி தங்கள் கருத்து?//


    தீபாவளி, பொங்கலுக்கு பொந்துக்களுக்கு செய்வது கண்களுக்கு தெரியாது, கிரிஸ்துமஸுக்கு செஞ்சிட்டா அரசு ஒருதலை பட்சமா நடக்குதுன்னு புகார்!

    இதுக்கு பேர் தான் பார்பனீயபுத்தின்னு சொல்றது!

    ReplyDelete
  24. // பிராமணர்கள் அனேகமாக அனைத்து துறைகளிலும் பணியில் இல்லையென்றே ( இருந்தாலும் மிக குறைந்த எண்ணிக்கயே) இருக்கும் போது இன்னும் ஏன் இந்த பிராமண துவேசம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம்?
    பதில்: தேவையற்ற அச்சம். சுய மரியாதை இல்லாதவர்கள்தான் இவ்வாறு தூற்றுபவர்கள்.//


    துறைகளின் மேலதிகாரியாக மட்டுமே இருக்க நினைப்பது தான் அதற்கு காரணம், துப்புரவு பணியாளர்கள் வேலையில் பாப்பானை சேரச்சொல்லுங்கள், யாருக்கு பயம் என்று அப்பொழுது விளங்கும்!

    ReplyDelete
  25. //கலப்புத் திருமணம் செய்யும் போது (குறிப்பாய் மென்பொருள் பொறியாளர்) பிராமண பெண்களையே தேர்ந்தெடுக்கும் இவர்கள் பிராமண குலத்தை ஏளனம் செய்வது ஏன்?//

    ஆண்களுக்கு கூட பூனூல் இருக்கு, பெண்களுக்கு என்னய்யா இருக்கு, நீ என்ன சாதின்னு கேட்டா லவ் பண்ணுவானுங்க!

    //ஆஷாடபூதிகள்.//

    இதுக்கு என்ன அர்த்தம், எதாவது கெட்ட வார்த்தையா!?

    ReplyDelete
  26. //பொதுவாய் பிராமணர்கள் (தற்காலத்தில்) யாருக்கும் பிரச்ச்சனை பண்ணாமல் இருக்கும் போது ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாய் சொல்லபடும் ஒரு சில செயல்களுக்கு இந்தத் தலைமுறையை வாய்க்கு வந்தபடி பேசுவதும்,எழுதுவதும் சரியா?//

    பிரச்சனை எப்போது நடந்தாலும் அதன் ஆணிவேர் என்ன?

    சாதி என்ற வர்ணாசிர கோட்பாட்டை இன்னும் காப்பாற்றி கொண்டிருப்பது யார்!

    அவாளை தொட்டால் தீட்டு என அடுத்தவனையும் உசுப்பேத்துவது யார்!?

    ReplyDelete
  27. //மருத்துவம் பார்க்க அனுபவமிக்க பிராமண மருத்துவர் வேண்டும்,வழக்குகளை திறமையுடன் வாதிட பிராமண வக்கீல் வேண்டும்,புகழ்பாடும் நிகழச்சிகளை தொகுத்தளிக்க பிராமண நிகழ்ச்சி தொகுப்பாளர் வேண்டும் ஆனால்?//

    பிராமண பெண்கள் அதில் கெட்டிகாரர்கள்லாம், எனக்குக்கூட

















    சமையலுக்கு ஒரு பிராமணப்பெண் வேண்டும்!

    ReplyDelete
  28. //சமையலுக்கு ஒரு பிராமணப்பெண் வேண்டும்!// பிராமணர்களை தாக்கிப் பேச வேண்டுமானால் உச்ச பட்சமாக பிராமணர்கள் வீட்டுப் பெண்களை வக்கிரமாக சித்தரித்து அசிங்கப்படுத்தி பேசிவிட வேண்டும் என்பது பிராமண துவேஷிகளின் உச்ச கட்ட அவமதிப்பு வழக்கம். இங்கே பிராமணர்களை ஏசிப்பேசுபவர்கள் தயவு செய்து அவரவர் ஜாதிகளை வெளிப்படையாகவும் உண்மையாகவும் சொல்லி விட்டு பேசவும். நாங்களும் பதிலுக்கு உங்கள் ஜாதிப்பெண்களை சமையல் 'செய்ய', வீட்டு பெருக்கி துடைக்க மற்றும் இத்தியாதிகளுக்கு அழைக்க வசதியாக இருக்கும். நண்பன் வால்பையனின் மனைவி கூட நன்றாக சமைப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  29. /// நண்பன் வால்பையனின் மனைவி கூட நன்றாக சமைப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.//

    எங்களையெல்லாம் தொடுவிங்களா பாப்பரசாமி!?

    ReplyDelete
  30. //எங்களையெல்லாம் தொடுவிங்களா பாப்பரசாமி!?// நீங்கள் வெறுப்பில்லாமலும் நான் பார்ப்பனன் என்பதால் முன்னாடி சிரித்து பேசி பின்னாடி முதுகில் குத்தாமலும் பழகும் உண்மையான நண்பனாக இருந்தால் நட்போடு தழுவிக்கொள்ளவும் தயார்...திரை உங்கள் மனதில் தான் இருக்கிறது நண்பா..!

    ReplyDelete
  31. //நான் பார்ப்பனன் என்பதால் முன்னாடி சிரித்து பேசி பின்னாடி முதுகில் குத்தாமலும் பழகும்//

    அது தானே பார்பனியபுத்தி, எங்களை மாதிரியான ஆட்களுக்கு அது எப்படி இருக்கும்!?

    பிறப்பால் எவனும் பார்ப்பான் இல்லை தானே! அவனது பார்பனீய குணத்திற்கு தான் எனது எதிர்ப்பு!

    ReplyDelete
  32. கீழ்கண்டோரின் செயல்களை பார்க்கும் போது உங்கள் மனசாட்சி என்ன சொல்லும்?

    1. பாத சாரிகளிடம் வழிப்பறி செய்யும் வழிப்பறி திருடர்கள்

    2.நள்ளிரவில் வீடு புகுந்து பிறர் சொத்தை அபகரிக்கும் கொள்ளையர்கள்

    3.அநியாய வட்டிக்கு( மிட்டர் வட்டி)கடன் கொடுத்து ஏழை எளியோறை வஞ்சிக்கும் லேவாதேவிக்காரர்கள்

    4.உணவுப் பொருட்களை பதுக்கி கொள்ளை லாபம் பார்ப்போர்

    5.வியாபரத்துக்கு சம்பந்தமே இல்லதாவர்கள் ( பொருளே இல்லாமல் -பார்க்காமால்- மார்ஜின் பணத்தை மட்டும் வைத்து)) ஆன்லயின் எனும் தந்திரம் கொண்டும திடீர் பணக்காரராய் மாறிவரும் நவீனர்கள்( தங்கம்,வெள்ளி,வெள்ளப் பூட்டின் விலை உச்சத்தில் -உதாரணம்)

    ReplyDelete