நிரந்தர பக்கங்கள்

9/30/2011

தேவை இல்லாமல் சீன் போட்ட பலன்

அடேங்கப்பா எத்தனை பதிவுகள், எத்தனை கிண்டல்கள்!!!

ஆனால் சும்மா சொல்லக் கூடாது, கிண்டலுக்கு ஆளானவர்கள் வாயே திறக்காமல் வடிவேலு மாதிரி நல்லவர்கள் ஆனார்கள்.

நான் குறிப்பிடுவது எனது இப்பதிவைத்தான்.

இப்போதுதான் பலமுறை நானும் மற்றவர்களும் துருவித் துருவி கேட்ட பிறகு தமிழ் மணம் சாவகாசமாகக் கூறுகிறது, “அவை கட்டணப் பதிவுகள்” என. ஓக்கே இருக்கட்டுமே, கட்டணப் பதிவு என இரு வார்த்தைகளை சம்பந்தப்பட்ட பதிவின் மேல் வைத்தால் அதை கேள்வி கேட்க எங்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?

இது பற்றி தமிழ் மணம் அளித்த பதில்கள்.

//கேள்வி :சில பதிவர்கள் தமது மென்பொருள் அறிவை தவறாகப் பயன்படுத்தி, தமது இடுகைகள் மட்டும் பல நாட்களாகத் தொடர்ந்து தமிழ்மண முதல் பக்கத்தில் வருமாறு செய்து விடுகிறார்கள்
பதில் : நீங்கள் குறிப்பிடும் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் தொடர்ந்து இருக்க விளம்பரம் செய்யப்பட்ட பதிவுகள். தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்தில் எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே தமிழ்மணம் முகப்பில் தெரியும். அதனை யாரும் தவறாக பயன்படுத்துவதாக தெரியவில்லை//

டோண்டு ராகவன் on September 30th, 2011 6:10 am
அப்படி கட்டணச்சேவை என்றால் அது ஒருவித வர்ணப்பட்டையுடன் இருக்க வேண்டாமா? ஆனால் நான் சுட்டிய பதிவுகள் அவ்வாறு இல்லையே?
அன்புடன்,
டோண்டு ராகவன்//

//தமிழ்மணம் பல விதங்களில் விளம்பரங்கள் வழங்குகிறது. வர்ணப்பட்டையுடன் கூடிய விளம்பரங்களுக்கு கூடுதல் கட்டணம். வர்ணப்பட்டை இல்லாத விளம்பரங்களுக்கு குறைவான கட்டணம். சிலர் அதனைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்மணம் விளம்பரப் பக்கங்களில் அது குறித்த விபரங்கள் உள்ளன
http://www.tamilmanam.net/purchase_ads.php
http://tamilmanam.net/tamilmanam_paid_service.php//


விளம்பரங்களுக்கு குறைவான கட்டணம் செலுத்துபவர்களாகவே இருக்கட்டுமே, அதனால் என்ன? பதிவின் மேல் விளம்பரப் பதிவு என தமிழ்மண முகப்புப் பக்கத்தில் போட உங்களுக்கு என்ன தயக்கம்?

சம்பந்தப்பட்ட பதிவர்கள் தேவையின்றி அவதூறுக்கு ஆளானார்கள். ஆனால் அதிலும் தவறு அவர்கள் மீதுதான். தங்களது விளம்பரச் சேவை பதிவு என பதில் அளித்திருந்தால் தீர்ந்திருக்கும் விஷயம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அமுக்குனியாக இருந்து தாங்கள் என்னவோ மென்பொருள் நிபுணர்கள் என்ற ரேஞ்சில் சீன் போட்டால் இதுதான் நடக்கும்.

சரி சரி, ஆளை விடுங்கள். இதற்குத்தான் “நியாயமாக நடந்தால் போதாது, நியாயமாக இருப்பது வெளிப்படையாகவும் தெரிய வேண்டும்” எனக் கூறுகிறார்கள் போலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

19 comments:

  1. ஆமா, இவரு கேள்விக்கு பதில் சொல்லுறதுதான் அவங்க வேல பாரு, இப்ப கூட அவதூறுக்கு வருத்தம் தெரிவிக்காம அவங்களைத்தான் குற்றம் சொல்றீர்...

    ReplyDelete
  2. ***விளம்பரங்களுக்கு குறைவான கட்டணம் செலுத்துபவர்களாகவே இருக்கட்டுமே, அதனால் என்ன? பதிவின் மேல் விளம்பரப் பதிவு என தமிழ்மண முகப்புப் பக்கத்தில் போட உங்களுக்கு என்ன தயக்கம்?***

    I dont think TM needs to do what you EXPECT them to do. They did offer you an explanation of what it is. It does not matter whether you buy it or not. And obviously those bloggers whom you accused of "bugging" are NOT GUILTY or may be INNOCENT!

    So, now that TamilmaNam has offered an explanation and it is obvious that it is not the fault of the particular blog or blogger and it is a misunderstanding between TM and the "accusers" like Kavya and dondu!

    Why dont you two (Kaavya and dondo) sincerely apologize for your bullshit of accusing some innocent bloggers with your own "THEORY" which failed already?

    TM never said it is those bloggers fault. May be it is their fault. I mean may be. But you two were accusing the blog owners as if you knew those blog owners did something (bugged? ) really wrong or they were guilty.

    So, now..Are you going to eat what you throw-up or going to apologize to them?? Choose wisely!

    ReplyDelete
  3. நீங்கள் தெரிந்து கொள்வதற்காக.
    http://news.nationalpost.com/2011/09/29/drop-tigers-jailed-arms-broker-urges/

    ReplyDelete
  4. //I dont think TM needs to do what you EXPECT them to do.//
    உங்களுக்கு ஒரு விஷயம் புரியவில்லை. சில பொருட்களின் விளம்பரங்களை செய்தி போல வெளியிடுவார்கள். அவற்றைப் படிப்பவர்கள் அவை உண்மை என நம்ப வாய்ப்பு உண்டு. ஆகவே அம்மாதிரியான “செய்திகளுக்கு” மேலேயோ கீழேயோ “விளம்பரம்” என்ற வார்த்தை இருந்தாக வேண்டும். அதுதான் சட்டம்.

    தற்போதைய விஷயத்தில் நடந்ததை மீண்டும் பார்ப்போம்:.

    1. சில பதிவுகள் பார்ப்பதற்கு மற்றப் பதிவுகளைப் போலவே இருக்கின்றன.
    2. ஆனால் அவை பத்து நாட்களுக்கு மேல் முகப்புப் பக்கத்திலேயே வருகின்றன
    3. இது பற்றி காவ்யாவும் நானும் பதிவுகள் போடுகிறோம்.
    4. சம்பந்தப்பட்ட பதிவர்களும் சரி, தமிழ்மணமும் சரி மௌனம் சாதிக்கின்றன.
    5. நான் விடாமல் வெவ்வேறு இடங்களில் கேள்வி கேட்பதால் தமிழ்மணம் அவை விளம்பர பதிவு என்கிறது.

    இதில் பல விஷயங்கள் சொல்லப்படாமல் தொக்கி நிற்கின்றன.

    எது எப்படியானாலும் விளம்பரத்தை விளம்பரம் என தெளிவாகத் தெரிவிக்க வேண்டியது தமிழ்மணத்தின் கடமை.

    இப்போதாவது அதை செய்தார்களே என அல்ப திருப்தி பட்டுக் கொள்ளலாம்.

    இதில் நானோ காவ்யாவோ மன்னிப்பு கேட்க ஒரு பிரமேயமும் இல்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. நீங்க எப்படி கூட்டிக்கழிச்சுப் பபார்த்தாலும் உங்க "தர்க்கம்" அர்த்தமில்லாமல்தான் தெரியுது.

    * அந்தப் பதிவர்கள் ஏதோ விஷமத்தனம் செய்து அவர்கள் பதிவுகளை 7-10 நாட்கள் முகப்பில் தெரிய வைத்ததாக சொல்லுகிறீர்கள். குற்றம் சாட்டினீர்கள்!

    * தமிழ்மணம் அவர்கள் மேலே தவறேதும் இல்லை என்கிறார்கள்.

    நீங்க தமிழ்மணமும் அந்தப் பதிவர்களும் சேர்ந்து ஒருவரை ஒருவர் "கவர்" பண்ணுவதாக குற்றம் சாட்டுறீங்க?

    1) தமிழ்மணம் இதுபோல் விஷமிகளை எதற்காக "கவர்" ப்ண்ணனும்???

    2) அதனால் தமிழ் மணத்திற்கு என்ன இலாபம்???

    என்பதை சொல்லவும். காவியாவும் நீங்களும் ஒன்று கலந்து பேசி.

    The logic SUCKS here!!! நீங்க தப்பே செய்ய மாட்டீங்ளா என்ன? இல்லை எதையாவது சொல்லி இப்படி மழுப்புவீங்களா? இல்லை உங்க லாஜிக் உங்களுக்கே புரியலையா??

    ReplyDelete
  6. //நீங்க எப்படி கூட்டிக்கழிச்சுப் பபார்த்தாலும் உங்க "தர்க்கம்" அர்த்தமில்லாமல்தான் தெரியுது.//
    அது உங்க பிரச்சினை. நானும் காவ்யாவும் வெளிப்படையாகவேதான் இருக்கிறோம்.

    தமிழ்மணத்தில் முன்பு சகட்டு மேனிக்கு பதிவுகளுக்கு ஓட்டு போட்டு அந்த சிச்டத்தையே கேலிக் கூத்தாக்கினதை நீங்கள் மறக்கவில்லை என நான் நினைக்கிறேன். அதையும் பலர் எடுத்து காட்டிய பிறகு தமிழ்மணம் ஓட்டு போடும் முறையில் மாற்றம் கொண்டு வரும் கட்டாயத்துக்கு ஆளானது.

    அதே போல மேலோட்டமாக பார்க்கும்போது ஒரு தில்லாலங்கடி வேலை போல காட்சியளித்ததும் நாங்கள் குரல் கொடுத்தோம். தமிழ்மணம் பதிலளித்தது, தாமதமாக.

    அவ்வாறு தாமதமாக பதில் வந்ததால் ஆன விளைவைத்தான் எனது இப்பதிவு சுட்டிக் காட்டுகிறது. அவ்வளவே.

    //நீங்க தமிழ்மணமும் அந்தப் பதிவர்களும் சேர்ந்து ஒருவரை ஒருவர் "கவர்" பண்ணுவதாக குற்றம் சாட்டுறீங்க?//
    அப்படியா எங்கே நான் அவ்வாறு சொன்னேன்? வெளிப்படையாக விளம்பர பதிவு என்று இரு சொற்கள் போட்டிருந்தாலே போதுமே என்றுதான் சொன்னேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. அடுத்தவர்களை குறை சொல்லாதீர்கள்..

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  8. //Are you going to eat what you throw-up //

    Dondu...?
    NEVER....!!

    ReplyDelete
  9. //உங்களுக்கு ஒரு விஷயம் புரியவில்லை. சில பொருட்களின் விளம்பரங்களை செய்தி போல வெளியிடுவார்கள். அவற்றைப் படிப்பவர்கள் அவை உண்மை என நம்ப வாய்ப்பு உண்டு. ஆகவே அம்மாதிரியான “செய்திகளுக்கு” மேலேயோ கீழேயோ “விளம்பரம்” என்ற வார்த்தை இருந்தாக வேண்டும். அதுதான் சட்டம்.//

    அது பணம் கொடுத்து சேவையை/பொருளை வாங்கும் வணிகத்துக்கு பொருந்தும்.

    இலவசமா தமிழ்மணத்த பயன்படுத்திகிட்டு ஏன் சும்மா அவங்களப் போட்டு பிராண்டறீங்க?

    ReplyDelete
  10. **நானும் காவ்யாவும் வெளிப்படையாகவேதான் இருக்கிறோம்.**

    காவ்யா உங்க ஆல்டர் ஈகோவா சார்?

    ReplyDelete
  11. @குஜால்
    ஒரு வேடிக்கையை பாத்தீங்களா? சம்பந்தப்பட்ட பதிவர்களே ஒண்ணூம் சொல்லலை.

    மத்தவங்க வந்து மேலும் மேலும் சீன் போடறீங்க. ம்ம்ம் நடத்துங்க.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. ஏதாச்சும் சொன்னாலும் தப்பு, சொல்லலைன்னாலும் தப்பு, தாமதமாச் சொன்னாலும் தப்பு.

    வேடிக்கைதான் போங்க.

    இன்னொரு வேடிக்கைய கவனிச்சீங்களா?

    சைக்கிள் கேப்புல நம்ம கேள்விகள கண்டுக்காம நழுவிட்டீங்க. இந்த சாமார்த்தியம் எல்லோருக்கும் வராதுங்க.

    ReplyDelete
  13. //சைக்கிள் கேப்புல நம்ம கேள்விகள கண்டுக்காம நழுவிட்டீங்க. இந்த சாமார்த்தியம் எல்லோருக்கும் வராதுங்க.//
    உங்க் விளக்கென்ணை கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. போங்க சார் பதிவு ஏதாவது போடுங்க. வெறுமனே வெத்து ப்ரொஃபைலை மட்டும் பின்னூட்டம் போடணுங்கறதுக்காகவே வச்சுண்டு இங்கே வந்து குதிக்காதீங்க.

    சம்பந்த பதிவர் விட்டலன் (அல்லது அம்மாதிரி விளம்பர பதிவு வைத்திருக்கும் மற்றவர்) வந்து கேட்கட்டும்.

    ஒரு வேளை நீங்கள்தான் அவரோ?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. //உங்க் விளக்கென்ணை கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. //

    இதையேதான் தமிழ்மணமும், விட்டலனும் நினைச்சிருக்கலாம்.

    //ஒரு வேளை நீங்கள்தான் அவரோ?//

    இல்லை.

    PS: நான் வருணும் இல்லை.

    ReplyDelete
  15. //PS: நான் வருணும் இல்லை.//
    என் அப்பன் குதிருக்குள் இல்லை.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. //என் அப்பன் குதிருக்குள் இல்லை.
    //

    அப்படியிருந்தா வருணிடம் நான் உங்களுக்காக வக்காலத்து வாங்கியிருக்கத் தேவையில்லையே அங்கிள்.

    ReplyDelete
  17. ஐயா ராகவரே! நான் சொல்ல வந்ததை வருணாவே வந்து சொல்ற அளவுக்கு எனக்கு தைரியம் இருக்கு. நம்ம ராமபகவான் மாதிரி மறைஞ்சிருந்து அம்பு எறிவதெல்லாம் எனக்கு என்னைக்குமே பிடிக்காதுங்க. என்னை குற்றம்சாட்டுறதுக்காக இங்கே உங்களை ஒரு அடியடிக்கனும்! அதே நேரத்தில் உங்களைக்குழப்புகிற குஜாலை ரெண்டடி அடிக்கனும்! தயவு செய்து என்னை விட்டுடுங்கப்பா!

    ReplyDelete
  18. சபாஷ் சரியான போட்டி வரூண் மற்றும் குஜால், தேவையில்லாம சீன் போடறதிலே.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?

    1.என்னை மயக்கவும் முடியாது.... யாருக்கும் விலை போகவும் மாட்டேன் :பாளையில் விஜயகாந்த் ஆவேசம்
    2.மகாத்மா பட்டத்தை ஏற்க ஹசாரே மறுப்பு
    3.ஆக்கப்பூர்வ பாதையில் செல்ல கருணாநிதி யோசனை
    4.ஊழல் அமைச்சர்களை காக்கும் மத்திய அரசு : அத்வானி
    5."ஐ.ஐ.டி., மாணவர்களின் தரம் குறைகிறது' : "இன்போசிஸ்' நாராயண மூர்த்தி வருத்தம்

    ReplyDelete