சாதாரணமாக தமிழ் மணத்தில் ஒரு பதிவை இணைத்து அதைத் தமிழ்மணமும் ஏற்றுக்கொண்டால் அதன் முகப்பில் அப்பதிவின் விவரம் சுட்டியுடன் வரும். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அது பின்னால் வந்து கொண்டேயிருக்கும் புதிய பதிவுகளால் முகப்பிலிருந்து காணாமல் போகும்.
அதே சமயம் அப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் வர வர அவையும் இற்றைப்படுத்தப்படும் ஆனால் மறுமொழிகள் என்னும் தலைப்பில் வரும்.
இப்போது நான் குறிப்பிடுவது இப்பதிவை. இது மட்டும் இம்மாதம் 6-ஆம் தேதியிலிருந்து தினமும் முதல் பக்கத்தில் வந்து கொண்டேயிருக்கிறது. இது ஒன்றும் அப்படியெல்லாம் கட்டணச் சேவையில் வருவதாகவும் தெரியவில்லை. பின்னூட்டம் எனப் பார்த்தாலும் நான் இட்ட ஒரே பின்னூட்டம் மட்டுமே காணப்படுகிறது. அது இதோ:
“dondu(#11168674346665545885) said...
அதென்ன உங்களது இந்தப் பதிவு மட்டும் விடாது தமிழ்மணத்தில் முதல் பக்கத்தில் இவ்வளவு நாட்களாக வருகிறது?
என்ன மந்திரம் போட்டீர்கள்”?
பதிவருக்கே விடை தெரியவில்லை என நினைக்கிறேன் அல்லது அது எப்படி எனக்கூறிவிட்டால் ஏல்லோரும் அவ்வாறே செய்கிறார்கள் என நினைக்கிறாரோ எனத் தெரியவில்லை.
சந்தடி சாக்கில் தமிழ்மணத்தில் காணும் இக்குறையையும் கூறிவிடுகிறேன். மறுமொழிகளை இற்றைப்படுத்துவதில் சில சமயம் லாஜிக் ஏதும் இல்லாமல் இருக்கிறது. எல்லா மறுமொழிக்களுமே உடனுக்குடன் இற்றைப்படுத்தப்பட்டது என்று கூறிட இயலாது. அதே சமயம் சிறிது சம்பந்தமே இன்றி பல நாட்களுக்கு முன்னால் இட்ட பின்னூட்டம் இற்றை படுத்தப்படுகிறது. இது பற்றி நான் தமிழ்மண நிர்வாகி ஒருவரிடமே கேள்வி வைத்தேன், பதில் கிடைக்கவில்லை.
அப்பதிவில் நான் இவ்வாறு குறிப்பிட்டேன், “பின்னூட்ட உயரெல்லை மீண்டும் வேண்டும் என லக்கிலுக் கூறினார். தற்காலிகமாகத்தான் அது நீக்கப்பட்டிருப்பதாக பதில் கூறப்பட்டது. ஏனெனில் 40 ப்ளஸ், 40 வரை என்றெல்லாம் வைப்பதால் தமிழ்மணப் பக்கம் திறக்க நேரமாகிறது என்று கூறப்பட்டது. இம்மாதிரி உயரெல்லையெல்லாம் காரியத்துக்காகாது என்று நான் கருத்து தெரிவித்தேன். மறுமொழியப்பட்ட பதிவுகள் இற்றைப்படுவது ஒரு ரெகுலரான செய்கையாக இல்லை என்றும், சில சமயம் எனது மறுமொழியப்பட்ட ஆக்கங்கள் சம்பந்தமேயின்றி சில நாட்களுக்கு பிறகு இற்றைப்படுவதை நானே கண்டதையும் கூறினேன். அதையும் கவனிப்பதாகக் கூறப்பட்டது”.
இன்னும் அதை கவனித்ததாகத் தெரியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
18 hours ago
7 comments:
நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி .ஆனால் எனக்கு தமிழ் இன்லி ,தமிழ்வெளி,தமிழ் 10கை கொடுக்கும் அளவுக்கு தமிழ்மணம் கை கொடுப்பதை இல்லை .நான் நுணுக்கங்களை அறியவில்லை போல.
தேவராஜ் விட்டலனின் பதிவு. நீங்கள் சுட்டிக்காட்டிய இப்பதிவு மட்டுமல்ல. அவரின் முந்தைய பதிவுகளும் இப்படி பல நாட்கள் தொடர்ந்து முகவில் நின்று கொண்டேயிருந்தது. அவருடன் இன்னும் சில பதிவர்களின் பதிவுகளும் இப்படித்தான் நின்று கொண்டேயிருந்தன. நானும் இதை தமிழ்மணத்திற்குத் தனிமடலில் சுட்டிக்காட்டி சரி செய்யச் சொல்லியிருந்தேன். பதில் வராததால், ஒரு பதிவும் இட்டு அது தமிழ்மணத்தில் வந்தது.
இது பதிவர்கள் செய்யும் சில செயல்கள் என்று தெரிகிறது. ஒருவேளை அவர்கள் விரும்பாமலே நடந்திருக்கலாம்.
அல்லது தமிழ்மணத்தில் டெக்னிக்கல் பிரச்சினயாக இருக்கலாம். எது எப்படியிருப்பினும் தமிழ்மணம்தான் இதைச் சரி செய்ய வேண்டும்
சம்பந்தப்பட்டப் பதிவர்தான் ஏதோ செய்திருக்க வேண்டும், இல்லாவிடில் இன்னேரத்துக்கு எதிர்வினை தந்திருப்பார்.
நான் அறிந்தவரை ஒரே ஒரு பதிவரால்தான் மற்றவர் பதிவுகளில் தான் இட்டப் பின்னூட்டங்களை அடையாளம் தெரியாது அழிக்க முடிந்தது. எல்லோராலும் அது இயலாது.
தேவராஜ் விட்டலன் எனக்கு அப்பதிவரான போலி டோண்டு மூர்த்தியை நினைவுபடுத்துகிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திமுகவின் தலைவரின் தற்கால நிலையை ஒப்பிட்டு உலாவரும் ஒரு செய்தி:
"குடைநிழல் அமர்ந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர்........."
"ஆற்றங்கரை மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே ...." என்றெல்லாம் சின்ன வகுப்பில் பள்ளியில் படித்த நீதி வெண்பாக்கள் நினைவுக்கு வருகின்றன.
இதையெல்லாம் கருணாநிதி தம் வாழ்நாளிலேயே காண நேர்ந்தது அவரது விதி என்றே சொல்லவேண்டும். லட்சக்கணக்கான தொண்டர்களின் வியர்வையிலும் உழைப்பிலும் கிடைத்த நிதியில் கட்டப்பட்ட கட்சிச் சொத்தை அடகு வைத்துத் துவங்கப்பட்ட சன் டிவி, பேரன்களின் அராஜகத்தால் முடங்கப் போவதை அவர் பார்க்கப் போகிறார். தாம் ஆட்சியை இழந்த உடன் 'ஜெ டிவி' முடக்கப்பட்டதை மறவாத ஜெயலலிதாவும் சன் டிவியின் முடக்கத்தை எதிர்பார்த்துள்ளார்.
ஆட்சியை இழந்து, மனைவி மீது குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு, பாசமகள் சிறையிலடைக்கப் பட்டு, அணுக்கத் தொண்டன் அமைச்சர் பதவியிழந்து சிறையில் வாட, பேரனும் அமைச்சர் பதவியிழந்து அடுத்ததாகச் சிறைக்குப் போக இருக்கும் சூழ்நிலையில் கருணாநிதியைப் பார்த்தால்
ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
தள்ளவொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள்வந்து தட்சணைகள் கொடு என்றாரே!
எனும் பாடல் நினைவுக்கு வருகிறது; இன்றைய நிலையில் அது அவருக்குப் பொருத்தமாகவும் அமைகிறது.
நீங்கள் சொல்லுவது சரி தான்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
பெரியார் தளம் போட்டிருக்கும் பதிவு “விசாரணை ஆணையங்களை முடக்கிய காங்கிரஸ்”
The above post is standing for more than a week.
Ur post (i.e the current one I am writing) appeared, crossed both Vittalan's and Periyaar thlam's, went down and disappeared in a whimper. Pity!
புதிய தென்றல் என்னும் பெயரில் வலைப்பூவில் இப்பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டம் இதோ, பார்க்க: http://www.sinthikkavum.net/2011/09/blog-post_21.html
உஙளை மாதிரி பிராடுகள் ஓத்லா வேலை பண்ணித்தான் தமிழ்மணத்தின் முதல் பக்கத்திலேயே அசிங்கமாக நின்றுவருகிறீர்கள்.
ஆனால் மோதி அவர்கள் குஜராத் மக்களின் மனதில் நிலைத்து நிற்பது குறித்து உங்களால் ஒரு மயிரும் பிடுங்க முடியாது.
இந்தப்பின்னூட்டம் எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக வரும், பார்க்க: http://dondu.blogspot.com/2011/09/bugs.html
டோண்டு ராகவன்
Post a Comment