நிரந்தர பக்கங்கள்

12/01/2011

மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு

வடிவேலு சொல்வது போல சென்ற செவ்வாய் 22.11.2011 அன்று எல்லாம் நல்லபடியகத்தானே போய் கொண்டிருந்தது. காலையில் வீட்டம்மாவுடன் வீட்டெதிரில் இருந்த உழவர் சந்தைக்கு சென்ற போதும், வரவிருக்கும் நிகழ்ச்சிகள் பற்றி ஒரு ஐடியாவும் இல்லைதானே.

வீட்டம்மா காய்கறிகள் வாங்க நான் பணம் பட்டுவாடா செய்யும் வேலையை மற்றும் மேற்கொண்டிருந்தேன். திடீரென உடலில் ஏதோ மாறுதல் வந்தது போன்ற உணர்வு. மயக்கம் வரப்போகிறது என்பதை மட்டும் உணர்ந்து ஜாக்கிரதையாக அருகில் உள்ள காலியான ஒரு ஸ்டாலில் அமர்ந்ததுதான் தெரியும். நினைவுக்கு வரும்போது என்னைச் சுற்றி என் வீட்டம்மாவும் மர்றவர்களௌம் என்னை நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்த வண்ணம் இருந்தனர். யாரோ ஒரு கடைக்கார புண்ணியவான் எனக்கு ஹார்லிக்ஸ் புகட்டிக் கொண்டிருந்தார்.

தினமும் என்னை அப்பாவென்றும், என் வீட்டம்மாவை அம்மா என அழைத்து வரும் அந்த எளிய மக்களின் முகத்தில் உண்மையான தவிப்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன். சும்மா சொல்லக் கூடாது அந்த நிலையிலும் மன உறுதியுடன் என்னை வீட்டுக்கு பத்திரமாக அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்ட என் வீட்டம்மா என் மதிப்பில் இமயமென உயர்ந்தார். சத்தியமாகவே சொல்கிறேன், அவர் நிலையில் நான் இருந்திருந்தால் என் கோழை மனது என்னை உறுதியுடன் செயல்பட விட்டிருக்காது.

வீட்டுக்கு வந்ததுமே, என்னை அவர் அருகில் உள்ள ஹிந்து மிஷன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இசிஜி எடுத்து, ஒரு நாள் அவதானிப்பில் வைத்திருந்தனர். அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியே, எனது இப்பதிவின் தலைப்புக்கு இன்ஸ்பிரேஷன். ஒரே நொடியில் என்னிடமிருந்த செல்பேசி, கடிகாரம், மோதிரம், பணம் ஆகியவை என்னிடமிருந்து எடுக்கப்பட்டு என் வீட்டம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஒரு தருணத்தில் என் மனது எண்ணாதவற்றையெல்ல்ம் எண்ணீயது. மரணத்தின் தருவாயில் இருப்பவன் எந்த வகைச் செல்வனாயினும் ஓட்டாண்டியாகத்தான் இவ்வுலகை விட்டு செல்கிறான்.

இப்போது பின்னால் பார்க்கும் போது நான் கூறுவது மிகைப்படுத்தலாகவே இருக்கட்டும். இருப்பினும், அத்தருணத்தில் அந்த எண்ணமே டாமினேட் செய்தது என்பதுதான் நிஜம். செவ்வாயன்றே ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த நான் மறுபடியும் வியாழனன்று உடல்நலம் சீர்க்கெடவே டாக்டர் சத்தியநாராயணாவின் ஸ்ரீசக்ரா ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன். இம்முறை எனக்கு எம்ஆர்ஐ ஸ்கேன், பல முறை இசிஜி, ஸ்கல் எக்ஸ்ரே, எக்கோ டெஸ்ட் எல்லாம் செய்ய்ப்பட்டன. எல்லாம் நல்லபடியாக முடிந்து இன்றுதான் நல்லபடியாக டிஸ்சார்ஜ் ஆனேன்.

இப்போது எனக்கு வேறுவகை அனுபவம் ஏற்பட்டது. எனது முக்கிய வாடிக்கையாளருக்கு நான் தினசரி அளித்து வந்த மின்னஞ்சல்களின் மொழிபெயர்ப்பு வேலை பிளாக் ஆயிற்று. விஷயம் அறிந்து விரைந்து வந்த எனது வாடிக்கையாளர், கவலை வேண்டாம் எனவும், நான் ஆஸ்பத்திரியில் இருக்கும் வரை, ஜெர்மன் மின்னஞ்சல்களுக்கு தானே கூகள் டிரான்ஸ்லேட் மூலம் கண்டெண்ட் அறிந்து, அவற்றுக்கான பதில்களை ஆங்கிலத்திலேயே போட்டுக் கொள்வதாக அவர் கூறியதும்தான் நானும் நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஆக நாம் இல்லையென்றாலும் உலகம் இயங்கும், நாம் ஒன்றும் நாமே நினைத்துக் கொள்வது போன இன்றியமையாதவர்கள் இல்லை என்பதும் நான் இப்போது நேரடியாக கண்டுணர்ந்த இன்னொரு உண்மை.

எது எப்படியோ, இதை பதிவாக போட்டதும்தான் மனம் நிம்மதி அடைந்துள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

64 comments:

  1. Raghavan Sir...Take care. Get well soon.

    ReplyDelete
  2. உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் டோண்டு சார்!
    மற்றதெல்லாம் கொஞ்சநாளைக்கு ஒதுக்கியே வைத்திருங்கள்.

    இப்போது எந்த மருத்துவ மனைக்கு சென்றாலும், நமக்கு உண்மையாகவே தேவையோ இல்லையோ, அவர்கல்வாங்கிவைத்திருப்பவைகளுக்கு வேலை கொடுப்பதற்காக இந்தமாதிரிப் பரிசோதனைகள் செய்வது வாடிக்கைதான்! இந்த மாதிரி ஆசாமிகள் ஹாஸ்பிடல்களோடு இண்டராக்ட் செய்வதே மரணத்துடனான சந்திப்பு மாதிரித் தெரிந்ததிலும் வியப்பில்லை.

    ReplyDelete
  3. இதுவும் கடந்து போகட்டும்! சகஜ நிலைக்கு விரைவில் திரும்ப வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  4. ஐயா, என்ன தான் சொன்னார்கள், எடுத்த டெஸ்ட் எல்லாம் நார்மல் தானே! அதைப் பற்றி சொல்லவில்லையே! நீங்கள் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் எப்போதும் மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை என்றும் பிரார்திக்கிறேன்.

    ReplyDelete
  5. உடம்பை பத்திரமா பாத்துக்குங்க சார்.

    ReplyDelete
  6. Take care of your health Sir. Pray the Almighty for your speedy recovery.

    ReplyDelete
  7. விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்தனை
    செய்கிறேன்

    ReplyDelete
  8. Please Take Care "DONDU" sir, Always god & misses with us.

    ReplyDelete
  9. dear dondu sir
    nothing to worry
    you are very much alright

    and there is no need for such a caption

    balu vellore

    ReplyDelete
  10. நிறைய ரெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.. உடல் நலம் தேறி வாருங்கள்..

    ReplyDelete
  11. ஐயா. வணக்கமும் மகிழ்ச்சியும். வீட்டம்மாவின் மனவலு எங்களுக்குப் பாடம்.

    ReplyDelete
  12. டோண்டு சார், தும்மினாலே சதாயுசு என்று வாழ்த்துபவர்கள் நாம். சஹஸ்ர ஆயுசோடு வாழ வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. நல்லமுறையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியது கண்டு மகிழ்ச்சி. உடம்பை நல்ல முறையில கவனித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  14. சுவர் இருந்தால்தான் சித்திரம் டோன்டு அவர்களே, உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளவும்.

    //எந்த வகைச் செல்வனாயினும் ஓட்டாண்டியாகத்தா // உடம்பை குழியில் போட்டு முதல் மண்ணை போடும் முன் அரனாக் கயிற்றையும் அறுப்பது தெரியும் தானே?

    ReplyDelete
  15. படிச்சதும் மனசு பதறிப்போச்சு:(

    உடம்பைப் பார்த்துக்குங்க.

    பொதுவா ஆண்களைவிட பெண்களுக்கு மனோதைரியம் கூடுதல் என்பதற்கு இன்னொரு சான்று கிடைச்சுருச்சு.

    டேக் கேர்.

    என்றும் அன்புடன்,
    துளசியும் கோபாலும்.

    ReplyDelete
  16. Get Well soon Raghavan Ji..
    Wish you a long life
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  17. நீங்கள் பூரண‌ நலம் பெற்று நலமோடு பல்லாண்டு வாழ உலகை காக்கும் தெய்வம் பெருமாள் என்றும் அருள் புரிய வேண்டும் என‌ வணங்கும்,


    என்றும் அன்புடன்,
    பாண்டிய நக்கீரன்

    ReplyDelete
  18. பதறிப்போய் நலம் விசாரிக்கும் எல்லா நல்லிதயங்களுக்கும் நன்றி.

    வேடிக்கையாக நினைக்க இதில் எதுவுமே இல்லைதான். ஆனாலும் என்னை முதலில் பரிசோதித்த மருத்துவர்கள் முகத்தில் தெரிந்த திகைப்பு எனக்குள் ஒரு புன்முறுவலை வரவழைத்தது நிஜம். அவர்கள் கேட்ட கேள்விகளும், எனது பதில்களும்:

    1. நீங்கள் ரத்த அழுத்ததிற்காக ஏதேனும் மருந்து எடுத்துக் கொள்கிறீர்களா?

    பதில்: இல்லவே இல்லை. உண்மை கூறப் போனால் அதுவரை எனக்கு பிபி அளவெடுத்த மருத்துவர்கள் எனக்கு ஒரு இளைஞனுக்கான பிபிதான் இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடனேயே தெரிவித்துள்ளனர்.

    2. ஏதேனும் சுகருக்கான மருந்து?
    பதில்: கிடையவே கிடையாது.

    3. இதற்கு முன்னால் இம்மாதிரி மயக்கம் வந்துள்ளதா.
    பதில்: ஆம், சமீபத்தில் 1992-ல், தில்லியில் இருந்தபோது வீட்டுக்காரர் திடீரென காலி செய்ய சொன்ன போது. அப்பதிலில் சமீபத்தில் 1992 என்று நான் கூறியதும் எக்ஸ்ட்ரா திகைப்பு வேறு.

    எடுத்த டெஸ்டுகள் எல்லாமே நார்மல். ஆனால் எல்லாமே பிராசஸ் ஆஃப் எலிமினேஷனுக்கு இன்றியமையாதவை. அதாகப்பட்டது, வெறும் டெங்குவுக்கு என மருந்தை அளித்து விட்டு மற்ற காம்ப்ளிகேஷன்கள் ஏதேனும் இருந்தால், அது அபாயம் இல்லையா?

    எனக்கு சிகிச்சை செய்தவர்தான் எனது ஹெர்னியாவையும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் குணப்படுத்தியவர். பெயர் டாக்டர் சத்திய நாராயணா. மிகுந்த திறமைசாலி. அவர் பி.ஜே.பி. யில் இருப்பது என்னைப் பொருத்தவரை ஒரு பிளஸ் பாயிண்ட்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. //ஒரே நொடியில் என்னிடமிருந்த செல்பேசி, கடிகாரம், மோதிரம், பணம் ஆகியவை என்னிடமிருந்து எடுக்கப்பட்டு என் வீட்டம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டன.//

    இதற்கே ஆடிப்போய்ட்டா எப்படீங்க? இன்னும் எத்தனையோ பார்க்க வேண்டியிருக்குங்க.

    ReplyDelete
  20. நலமடைந்ததற்கு மகிழ்ச்சி, உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  21. மரியாதைக்குரிய திரு. டோண்டு அவர்களுக்கு, மனமும் எண்ணங்களும் எவ்வளவுதான் உறுதியாய் இருப்பினும் நம்மால் முழுமையாக எதிர்க்க முடியாதது வயது! மிகவும் கவனமுடன் உடல் நலத்தைப் பேணுங்கள்.

    ReplyDelete
  22. Dear Dondu Sir, glad to know that you are on the recovery trail...take care.

    ReplyDelete
  23. Dear Mr. Raghavan

    Such incidents remind us to be more careful about our health. Do take care.

    I can relate to your philosophical thoughts at such times. I have gone through a similar experience.

    I note that your wife was strong and composed to see through the situation. It is a natural balance in life. One of my friends told me (when I had a bypass in 1994) that both husband and wife falling ill at the same time rarely happens. Also, it is always the other spouse who manages to take charge. How God gives such strong will power to one of the spouses is a mystery.

    ReplyDelete
  24. DONDU SIR
    WISHING YOU A SPEEDY RECOVERY.

    ReplyDelete
  25. ரொம்ப வேலையா இருக்கீங்கன்னு நினைச்சேன்.. இப்பத்தான் தெரியுது.. உடம்பை பார்த்துக்குங்க ஸார்..

    ReplyDelete
  26. அன்புமிக்க ராகவன்!
    பூரண நலம்பெற பரம்பொருளைப் பிரார்த்திகிறேன்.
    ”நாம் இல்லையென்றாலும் உலகம் இயங்கும், நாம் ஒன்றும் நாமே நினைத்துக் கொள்வது போன இன்றியமையாதவர்கள் இல்லை என்பதும் நான் இப்போது நேரடியாக கண்டுணர்ந்த இன்னொரு உண்மை.”
    உண்மைதான். ஆனால் இதை முற்றிலும் உணரவேண்டியவர்கள் பட்டியல் நீண்டது. அவற்றுள் ஒன்று ந்மது மாநில/மத்திய அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் என்பதும் நான் அறிந்த உண்மை.

    ReplyDelete
  27. Take care of your health.

    Very important message this post carries. Very true.

    ReplyDelete
  28. உடம்பைப் பாத்துக்கோங்க....
    தைரியமா இருங்க...

    ReplyDelete
  29. Take care Sir, Niraiya Nanaganallur Panchaamirtham saappidunga.

    ReplyDelete
  30. //எது எப்படியோ, இதை பதிவாக போட்டதும்தான் மனம் நிம்மதி அடைந்துள்ளது.//

    அண்ணா!
    தலைப்பு ஏதோ நடந்துள்ளது என சற்றுப் பதட்டத்துடன் வாசித்து முடிக்கும் போது, இந்தக் கடைசி வரி எனக்குச் சிரிப்பைத் தந்தது.
    (பதிவுலகத் தாக்கத்தை எண்ணி)
    ஓய்வாக இருங்கள்.

    ReplyDelete
  31. Friends and readers of this blogpost!

    Everyone shoud go into and come out of such experiences. Essential Why? as they will make an old man write as follows:

    அந்த எளிய மக்களின் முகத்தில் உண்மையான தவிப்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன்.

    Everything has crumbled here: the boast of heraldry and pomp of power! Dondu Ragavan Vadagalai Iyengar has realised life.:-)))

    I recall here his another post where he said he went to pay his house tax; and there was confusion in his ac. He was offered chair; and everything was done for him as he had wished and soon he went home happily.

    It becomes clear from the following also:

    ஓட்டாண்டியாகத்தான் இவ்வுலகை விட்டு செல்கிறான் including, inclduing, including... the Vadagalai Iyengar label. :-p

    We must give all credits humbly to Azwaar Thirunagari Lord Magara Nedugkuzhaik kaadar.

    He forgot that Lord u see! But we shdn't: on his behalf we must.

    ReplyDelete
  32. நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  33. நலம் வாழ நல்வாழ்த்துக்கள் சார்...திரு .சத்தியநாராயணாதான் என் மனைவிக்கும் சிகிச்சை அளித்தார்..கைராசியான மருத்துவர்..

    ReplyDelete
  34. உடல் நலத்தை மிக கவனமுடன் பார்த்துகொள்ளுங்கள். அலட்சியபடுத்த வேண்டாம். ஸ்பீடாக ரெகவரி ஆனதை கண்டு சந்தோஷம்.பல்லாண்டு நலமுடன் வாழ எனது வாழ்த்துகளும் + பிரார்த்தனைகளும். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  35. Mr.Ragavan Sir, Take care of your health and pray the almighty to give enough mental strength to overcome your body weakness. Take care.

    ReplyDelete
  36. Dondu Sir
    Pl take care.
    VeettammaviRku enathu vaNakkangaL.

    ReplyDelete
  37. விரைவில் நீங்கள் பூரண நலம் பெறக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
  38. டோண்டுசார்,
    செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.21ம் தேதிக்குப்பின்
    பதிவு இல்லேயே என்று நினைத்துக்கொண்டிதுந்தேன். அன்று
    பதிவில்'' கடைசி பதில் பதிவு'' என்று
    குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
    உங்கள் வீட்டு அம்மாவின் மன தைரியம்
    மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.
    உங்கள் வேலை மிகுதி, இதற்கிடையில்
    பற்பல வீண் பதிவுகளுக்குச் சென்று
    அதனால் ஏற்படும் மனளைச்சல்கள்
    அநீதிகண்டு பொங்குதல் முதலியவற்றால் ஏற்பட்ட அழுத்தம்
    காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். டாக்டர் என்ன காரணம் சொல்கிறார்?இனி சற்றுக்கவனத்துடன் உடல் நலம்
    பேணவும்கடவுளுக்கு நன்றி.

    ReplyDelete
  39. அன்பின் டோண்டு,
    பல்லாண்டு வாழ்ந்து வழக்கம் போல பலநூறு மொக்கை பதிவுகள் போட இறைவனை வேண்டுகிறேன்.

    டிஸ்சார்ஜ் ஆகும்போது பில்லை பார்க்கவேண்டாம் மீண்டும் மயக்கம் வரும்.

    மேலும் உங்கள் கடைசி பதிவின் தலைப்பு:"இதுதான் கடைசி பதில்கள் பதிவு"!!இதுதான் கொஞ்சம் படுத்திவிட்டது போலும்!

    ReplyDelete
  40. //அப்பதிலில் சமீபத்தில் 1992 என்று நான் கூறியதும் எக்ஸ்ட்ரா திகைப்பு வேறு.//

    உங்கள் கடி எங்களுக்கெல்லாம் பல ஆண்டுகளாக பழக்கம்; ஆனால் டாக்டர் பாவம் புதுசுதானே !அலறியிருப்பார்!!

    ReplyDelete
  41. விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனைகள். சென்ற பதிவின் தலைப்பே ஒரு மாதிரியாக 'அறம்' போல இருக்கின்றது. அதை மாற்றுங்கள்.

    ReplyDelete
  42. அன்புசால் டோண்டு சார், நீங்கள் நலம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்,
    அன்புடன்
    ராகவேந்திரன்,தம்மம்பட்டி

    ReplyDelete
  43. நீண்ட ஆயூள் அதிஉன்னத ஆரோக்கியம் முழுமையான மன அமைதி பெற்று சிறக்க என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  44. just now saw your blog and was startled to learn that you got admitted in an emergency.

    Hope you are fine now and your reports were normal also.

    It is quite possible that a minor inner ear problem ( vertigo ) may cause sudden giddiness. Hope you check your ears and also find out whether you have any cervical spondylosis.

    With our best wishes,
    subbu rathinam.
    http://Sury-healthiswealth.blogspot.com
    http://pureaanmeekams.blogspot.com

    ReplyDelete
  45. சில நாட்கள் முன் கடைசி பதில் பதிவுன்னு தலைப்பை பார்த்த போது என்னமோ மாதிரி இருந்தது.

    உடல் நலம் விரைவில் தேற பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  46. Dondu Sir,
    periodical Annual medical check ups are mandatory after 50. Kindly take care of your health.
    If you have a cd player play Indrakshi Stotram and Kanda Sashti Kavacham.
    I was travelling just only saw your posting.
    Regards
    Murali
    Singapore
    +65 9452 9115

    ReplyDelete
  47. டோண்டு ஐயா! வாழ்க நலமுடன். சற்றே அதிர்ச்சி தரும் தகவல் தந்திருக்கிறீர்கள். நான் கடந்த திங்கட்கிழமையில் இருந்து பதிவுலகம் பக்கம் அதிகம் வரவில்லை. செல்பேசியில் மின்னஞ்சல்களைப் பார்ப்பதோடு சரி. இன்று மாலைதான் உங்கள் பதிவு பார்த்தேன். சுகர், பிபி பிரச்சினைகள் இல்லாது இருப்பது ஒரு சாதனையே. தங்கள் உடல் சற்றே ஓய்வு கேட்பதாகப் படுகிறது. மகர நெடுங்குழை காதனை ஒரு முறை கண்டு வாருங்கள். ஓய்வும் அவன் தரிசனமும் நல்ல தெம்பு தருவதாக இருக்கும். தங்கள் உடல் நலனுக்காகப் பிரார்த்திக்கிறேன்.

    அன்புடன்,
    அருண்.

    ReplyDelete
  48. நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  49. அடப்பாவமே....
    கொஞ்ச நாளாவே அமைதியா இருந்ததுக்கு இது தான் காரணமா ... நானும் எப்பவும் போல வேலைப்பழு என்று நினைத்திருந்தேன்.

    வருசவருசம் கண் கண்ணாடிக்கு பவர் செக் செய்து கொள்வது போல் உடலையும் செக்கப் செய்துகொள்வது அவசியம் என்றாகிவிட்டது.

    நலம் பெற வேண்டுகிறேன். நன்றி.

    ReplyDelete
  50. Dear,

    Take care of your health and get well soon.

    vijay

    ReplyDelete
  51. இப்போ தான் பார்த்தேன்..உடம்பை பார்த்துக்கோங்க சார்..

    ReplyDelete
  52. இப்போ தான் பார்த்தேன். உங்களுக்கு எப்பவும் ஒன்னும் ஆகாது. வாழ்க வளமுடன்.

    அன்புடன்
    அதியமான்

    ReplyDelete
  53. 50 thandivittal ovvoru varudamum master chechup pannuvathu avasiyam.nalamaayirukka vaazhththukkal-63.

    ReplyDelete