நான் சற்றே லேட் என நினைக்கிறேன். “3” படத்தில் வரும் பாட்டான வை திஸ் கொலவெறி கொலவெறிடி பாடலை இன்றுதான் சரியாகக் கேட்டேன் என்றும் கூட கூற இயலாது, அதன் பல வெர்ஷன்களைத்தான் கேட்டேன்.
முதலில் உண்மைத் தமிழனின் இப்பதிவில் அதன் யாழ்ப்பாண ஆக்கத்தைக் கண்டு கேட்டேன். பிறகு ஒரிஜினலை வீடியோவுடன் கேட்போம் என பார்த்து யூ ட்யூபுக்கு சென்றதும்தான் தெரிந்தது இப்பாடலுக்கு உலகளாவிய வகையில் வெர்ஷன்கள் இருக்கின்றன என. கீழே பாகிஸ்தானின் வெர்ஷன்.
ஹிட்லர் இப்போது உயிருடனுன் ஆட்சியிலும் இருந்தால் அவன் எவ்வாறு ரியேக்ட் செய்திருப்பான்? அதையும் கற்பனை செய்து பார்த்து விட்டனர், கீழே பார்க்கவும். இப்பாடலை பார்த்தாக வேண்டுமா என யூ ட்யூப் கேட்கும் ஆம் என செக் செய்து விடுங்கள்.
முதலில் சீறும் ஹிட்லர் பிறகு சரெண்டர் ஆகிறான். பாருங்கள் தமாஷாக இருக்கும். சீக்கிரமே ஹிட்லர் பற்றிய வீடியோவை தூக்கினாலும் தூக்கி விடுவார்கள். ஆகவே ஹரி அப்.
இன்னும் ஒரிஜினல் தனுஷின் ”3” படத்தின் வீடியோ காணக் கிடைக்கவில்லை. சுட்டி யாராவது தாருங்களப்பூ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரிஜினல் பாடலுக்கான சுட்டி தந்த மாதவன் ஸ்ரீனிவாசகோபாலனுக்கும் ஹாஜாஸ்ரீக்கும் நன்றி. ஒரிஜினலை கீழே பார்க்கலாம்.
இப்போது படத்தின் சவுண்ட் டிராக்கிலிருந்தே
Link for why this kolaveri, kolaveri di
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=YR12Z8f1Dh8&feature=related
ReplyDeleteவெத்தல பாக்கு கொளஞ்சி வெத்தல என்ற சினி பாடலை கேட்டிருக்கிறீர்களா ?
ReplyDeleteபல வருடங்கட்கு முன் வந்தது, அதை ஒரு தரம் நிதானமாக கேட்டுவிட்டு, இந்த கொலவெறி டி ட்யூனைக்கேளுங்கள்.
எங்கேயோ இரண்டுமே ஒன்றாக தொனிக்கிறது போல் இல்லை ?
சுப்பு தாத்தா.
@சூரி
ReplyDeleteஎனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்! மூணு படத்தின் பாடல்கள் தான் ரிலீசாகி இருக்கிறது. படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை, படத்தின் சுட்டியைத் தேடி இளைக்கவேண்டாம்! உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்!
ReplyDeleteஇதையும் பார்த்து விடுங்கள்
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=r3v43Lx8qdY
எனக்கு விளங்காத விடயம் இந்த பாட்டுக்கு இசையமைத்தவர் ஒருவர் இருக்க பாடிய தனுசை ஏன் புகழ்கிறார்கள்!
ReplyDelete