நிரந்தர பக்கங்கள்

4/25/2008

டோண்டு பதில்கள் 25.04.2008

கிஷோர்:
1) மோடி போன்ற ஒரு மதவாதி என்னதான் ஒரு சிறந்த நிர்வாகி(எனக்கு இதில் ஆட்சேபணை இல்லை) என்றாலும். அவர் சார்ந்திருக்கும் மத அமைப்பின் சாயல் இருக்கும் வரை அவரை எப்படி ஒரு உதாரணபுருஷன் அளவிற்கு உயர்த்த முடியும்? (குஜராத்தில் பெற்ற வெற்றியை கூறாதீர்கள். அரசியல் வேறு நிர்வாகம் வேறு).
பதில்: நீங்கள் கூறுவதாலோ அல்லது பத்திரிகைகள் கூறுவதாலோ மோடி அவர்கள் மதவாதி ஆகி விடப்போவதில்லை. நீங்களாக ஒன்றை அனுமானமாகக் கொண்டு அதன் மேல் கேள்விகள் கிளப்புவது என்ன நியாயம்? மோடி மதவாதி என்றால், ராஜீவ் காந்தி சீக்கியக் கொலைகளை செய்தவர்களுக்கு மந்திரி பதவி தந்து அழகு பார்த்தவர். அவரை அவ்வாறு கூறுவீர்களா? சீக்கிய இனம் என்றாலே இந்தியாவை பிரதிநிதிப்படுத்துவதாக இருந்த நிலையை மாற்றி அவர்களை இந்திய நீரோட்டத்திலிருந்தே ஒதுக்கிவைத்தவர் அன்னை மாதா தாயார் இந்திரா காந்தி. அவர் மகன் ராஜீவோ சீக்கியக் கொலைகளை ஒரு ஆலமரம் வீழ்ந்தால் நஷ்டமாகும் பல சிறு செடிகளுக்கு ஒப்பிட்டு பேசியவர். மோடியைப் பற்றி கூறினால் அவரும் கவனத்தில் எடுத்து கொள்ளப்படவேண்டும். மோடி மதவாதி என்பதை 2002 தேர்தலிலேயே கூறித்தான் பிரசாரம் செய்தனர். அப்படியும் அவர் வெற்றி பெற்று விட்டார். பிறகு அடுத்த 5 ஆண்டுகளில் நல்ல நிர்வாகம். ஏதேனும் ஒரு மதக்கலவரமோ அல்லது தீவிரவாதத் தாக்குதலோ நடந்ததா குஜராத்தில்? 2007 தேர்தலின்போது இந்தியச் சரித்திரத்திலேயே முதல்முதலாக ஒரு பதவியில் உள்ள மந்திரி மீது ஒரு சிறிய ஊழல் புகார் கூடக் கூறமுடியாமல் போனது. மோடி மதவாதி என்பது ஒரு பிதற்றலாகவே இப்போது எனக்கு படுகிறது. என்ன, எல்லா மக்களையுமே அவர் சமமாகப் பாவிக்கிறார். இசுலாமியர் என்பதற்காக அவர்கள் ஓட்டைப் பெற அவர்களுக்கு அசட்டு சலுகைகள் தர மறுக்கிறார். எல்லோருக்குமே நல்ல நிர்வாகம். அதுதான் அவரது தாரக மந்திரம்.
2) அப்படி அவரை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ஏன் பின்லேடனை மோடியை விட சிறந்த நிர்வாகியாக எடுத்துக்கொள்ளக்கூடாது? அவ்வளவு பெரிய நெட்வொர்க்கை தலைமறைவில் இருந்து கொண்டே கவனித்துக்கொள்கிறானே! நிர்வாகம் பற்றி மட்டுமே நான் பேசுகிறேன். அவனுடைய தீவிரவாதத்தை அல்ல.
பதில்: பின்லேடனை மோடியுடன் ஒப்பிடுதல் அபத்தமானது. ஹிட்லராக இந்திரா காந்தியே அவசர நிலை கொண்டு வந்து நாட்டைக் குட்டிச்சுவராக்கினாலும் அவரை அன்னை இந்திரா என்றும், அவரது மருமகள் மற்றும் ராஜீவ் காந்தியின் விதவை என்பதற்காக மட்டுமே இத்தாலியக்காரரை எல்லாம் அன்னை என்று அழைக்கும் நமக்கும் வெட்கமே இல்லை.
3) ஒரு இந்து அமைப்பு ஒரு முஸ்லீம் அமைப்பு இரண்டுமே ஒரே பஞ்சாயத்திற்கு மோடியிடம் சென்றால் அவரின் தீர்ப்பு என்னவாக இருக்கும்?
பதில்: அவரது தீர்ப்புக்கு ஏன் வரப்போகிறது? தீர்ப்பு என்பதை அளிப்பது கோர்ட் நீதிபதிகள், முதன் மந்திரிகள் அல்ல. அவர் என்ன கட்டை பஞ்சாயத்தா செய்கிறார்? அப்படியே செய்தாலும் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினையை உணர்ந்துதான் நடவடிக்கை எடுப்பார் என்பதை இசுலாமியரும் அவருக்கு கணிசமாக ஓட்டு போட்டதிலிருந்தே தெரியவில்லையா?

கோமணகிருஷ்ணன்:
1. பிரியங்கா சிறையில் போய் நளினியை சந்தித்தது,விடுதலைப் புலிகளை 'அப்பீஸ்' செய்யவே என்ற ஒரு கருத்து நிலவுகிறதே,அது பற்றி? (இந்திய அரசு இலங்கை அரசுக்கு தார்மீக ரீதியாக தரும் பல ஆதரவு உதவிகள்,புலிகளை கோபமடையச் செய்திருக்கும் இந்தச் சூழலில்,இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது).
பதில்: இதில் பல உள்குத்துக்கள் அடங்கியுள்ளன. நிலைமை தெளிவாக இல்லை. ஆயினும் சோனியா காந்தி என்னமோ தான் தியாகபிம்பமாக விளங்க வேண்டும் என்பதற்காக காய் நகர்த்துகிறார் என்பது மட்டும் புலனாகிறது. ராஜீவ் கூடவே இறந்தவர்களது குடும்பங்களை பற்றி காங்கிரசின் ஓட்டு பொறுக்கும் அரசியலுக்கு என்ன கவலை? இது பற்றி நேற்று (24.01.2008) விற்பனைக்கு வந்த 30.04.2008 தேதியிட்ட துக்ளக் கூறியுள்ளவை கவனத்துக்குரியது. அதன் சுருக்கம்: 1.சிறைச்சாலை விதிகள் பல மீறப்பட்டு அரசின் துணையுடன் இது நடந்துள்ளது என்பது கவலைக்குரியது. 2. ராஜிவ் கொலை என்பது பிரியங்காவை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல. நாட்டின் முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதும், அப்போதைய தமிழகத்தில் அதற்கு சாதகமான நிலை இருந்ததும், இப்போது கூட அந்த கொலை கும்பலைச் சேர்ந்த பலர் தமிழகத்தில் உலவி வருவதும், அவர்களுக்கு இங்குள்ள சிலர் ஆதரவு தெரிவிப்பதும் பொதுப் பிரச்சினைகள். 3. ராஜீவ் கொலையில் உயிரிழந்தது இன்னும் பலர். அவர்கள் சார்பில் கருணை காட்ட சோனியா காந்திக்கு என்ன உரிமை இருக்கிறது என்று அப்போதே (நளினிக்கு மன்னிப்பு வழங்கியபோதே) துக்ளக் கேள்வி எழுப்பியது. இப்போது மகளின் முறையா, அவர் என்ன நீதி தேவதையா? 4. இத்தனை ஆண்டுகள் கழித்து பிரியங்கா இம்மாதிரி செய்வதற்கு மனிதாபிமானம் ஒரு போர்வையே தவிர உண்மைக் காரணம் அல்ல எனத் தோன்றுகிறது. நளினியின் கணவர் முருகன் ஒரு புத்தகம் எழுதுவதாகவும், அது பிரசுரமானால் சிலர் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்னும் அவசியம் வரும் என்று வேறு செய்தி வருகிறது.
2. வாங்கும் சக்தி உயர்ந்தால் மக்களுக்கு விலைவாசி பிரச்னை தெரியாது என்று 'கருத்து' உதிர்த்திருக்கும் மு.க.பற்றி?
பதில்: வெறுமனே அவர் குடும்பத்துக்குத்தானே வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது போலத் தோன்றுகிறது. மக்களுக்கு ரொட்டி கிடைக்காவிட்டால் அவர்கள் கேக்குகளை உண்ணட்டும் என்று திருவாய் மலர்ந்தருளின ஃபிரெஞ்சு ராணி ஆன்ட்வானெட் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்.

திண்டுக்கல் சர்தார்:
1. நேற்று(17.4.2008)ந்தேதி சட்டசபையில் பேசும்போது காந்தியைக் கொன்ற பாவிகளின் ஆட்சி வந்துவிடக்கூடாது.மீண்டுமொரு ராம ரதம்,அதவானியின் சுற்றுப் பயணம் எல்லாம் நடந்தால் நாடு காடாகி விடும்"என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளரே! இது தொடர்பாக நீதிமன்றத்தில் விரிவாக விவாதம் நடந்து காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்.க்குப் பங்கு இல்லை என்று தீர்ப்பு வந்தபின்னரும் கூட கருணாநிதி இவ்வாறு கூறுவதன் பொருள் என்னவாக இருக்கும்?
பதில்: இப்போதைக்கு திமுக பாஜக கூட்டு இல்லை. கருணாநிதி அவர்களுக்காக காங்கிரசே அவர்தம் உறவினருக்கு பதவி அளிக்கிறது. ஆகவே பாஜகவின் தயவு தற்சமயம் அவருக்கு தேவையில்லை. அதுதான் விஷயம்.
3. "இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் கிரீமி லேயருக்கான தற்போதுள்ள இரண்டரை லட்ச ரூபாய் உச்சவரம்பைத் தளர்த்திப் பத்து லட்சமாக்க வேண்டும்"என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பாலு பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.உண்மையிலேயே இவ்வாறு நடந்துவிட்டால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பே கேலிக்குள்ளாகி விடாதா? (உண்மையில் இவ்வாறு தளர்த்தப்பட்டாலும் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,எம்.எல்.ஏ.,உட்பட பஞ்சாயத்துக் கவுன்சிலர்கள் வரை யாருமே இந்த வரம்புக்குள் வர மாட்டார்களே.அவர்கள் வருமானம் இதை விட அதிகமல்லவா!)
பதில்: ஏதாவது செய்து பின்வாசல் வழியாக கிரீமி லேயர் வந்துவிடுமோ என அஞ்சுகிறேன்.

கூடுதுறை:
1) படிக்காத மேதை காமராஜர் ஆட்சியை விடவா மோடி சிறந்த முதல்வர் ஆகிவிட்டார்?
பதில்: காமராசர் ஆட்சியைப் பற்றி கூட 1957/1962/1967 தேர்தல்களில் ஊழல் புகார்கள் கூறப்பட்டன. 1962-ல் பக்தவத்சலனார் தான் தேர்வடைவதற்காக ஓட்டு பெறுவதில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார். 1967 தேர்தல் சமயத்தில் ரேஷன் கடைகளில் பொருள் கிடைக்கவில்லை. அந்த வகையில் மோதியின் ஆட்சி பற்றி 2007 தேர்தலில் ஒரு ஊழல் புகாரும் இல்லை.ஆகவே, .... .... (வாக்கியத்தை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளவும்).
2) உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்காதா? உங்கள் பதிவுகளில் அதன் வாடையே தென்படுவதில்லையே?
பதில்: கிரிக்கெட்டா? ஹா ஹா ஹா. டெண்டுல்கர் பத்து கோல்களாவது போட மாட்டாரா எனக் கேட்டு நண்பர் என்றென்றும் அன்புடன் பாலாவை டென்ஷன் ஆக்கியவன் நான். மேலும், சாரணர் இயக்கத்தில் இருந்தபோது டயரி எழுதும் பழக்கம் இருந்தது. இன்று ரன் எதுவும் எடுக்கவில்லை என்றே தினமும் எழுதிவர, ரன் ஏதாவது எடுத்தால் மட்டுமே அதை டயரியில் குறிப்பிடுமாறு எனது அன்னையால் அன்புடன் தலையில் குட்டப்பட்டு அறிவுறுத்தப்பட்டவன். இருப்பினும் கிரிக்கெட் பற்றியும் பதிவுகள் போட்டுள்ளேனே. பார்க்க: 1.
2.

அனானி (21.04.2008, 00.37 மணிக்கு கேட்டவர்)
1. Have you started buying Times of India - Chennai Edition
பதில்: முதல் நாள் மட்டும் வாங்கினேன். பிறகு வாங்கவில்லை. தில்லியில் இருந்தபோது கூட ஹிந்துஸ்தான் டைம்ஸ்தான் வாங்கினேன்.
2. What Newspapers, Magazines do you read regularly. Do you plan to subscribe to Times of India..
பதில்: ஹிந்து, விகடன், கல்கி, ஜூ.வி., குமுதம், குமுதம் ரிப்போர்டர் ஏல்லாவற்றையும் விட முக்கியமாக துக்ளக். டைஸ் ஆஃப் இந்தியாவுக்கெல்லாம் சந்தா கட்டும் எண்ணம் கிடையாது. அப்படி பார்க்கப் போனால் எல்லாவற்றையும் நேரடியாக கடைகளில் அன்றன்று வாங்குவதுதான் வழக்கம். சந்தாவெல்லாம் எதற்குமே கட்டுவதில்லை, ரீடர்ஸ் டைஜஸ்ட், பிசினஸ் டுடே மற்றும் டைம் ஆகிய மூன்று பத்திரிகைகள் தவிர. அதுவும் தற்சமயம் இல்லை.

சங்குமாமா:
1. பிரியங்கா நான் சொல்லித்தான் நளினியை சிறையில் சந்தித்தார் என்று மொக்கை போடும்..டி ஆர் மாதிரி லூசு அரசியல் செய்பவர்களை பற்றி டோண்டு சார் என்ன நினைக்கிறார்?
பதில்: தமாசு. இதற்கு பேசாமல் டி.ஆர். காமெடி டயலாக் போட்டு சண்டைக் காட்சிகளை அமைக்கலாம். ஒரு படத்தில் "வாடா என் மச்சி, வாழைக்கா பஜ்ஜி" என்று பாடியபடியே சண்டை போடுவதன் காவியத்தன்மையை கூறவும் இயலுமோ! :))) இன்னொரு காவியத்தன்மை வாய்ந்த டயலாக் ஒன்று சண்டைக் காட்சியில், "தாசு நீ க்ளோசு".

ஜாம்பஜார் ஜக்கு:
1. ஸாரே, இந்த மெட்ராஸ் பாஷைல இருக்கிற ஒரு இஸ்பீடு வேற தமிழ்ல ஏன் தலீவா வரமாட்டேன்னுது?
பதில்: இந்த மெட்ராஸ் பாசைலே இருக்கற கிக்கே தனிப்பா. அதாவது பாஷையோட கிராம்மர் எல்லாம் தாரவாந்துப் பூடுது. இன்னா நெனிக்கிறியோ அத்த அப்படியே பால்மாறாம பேசிக்கினே போகணும் அவ்ளோத்தான். இதுக்கெல்லம் டூஷன் அப்புசாமி சார் கிட்ட எடுத்துக்க வோணும் சொல்லிப்பிட்டேன். எந்த அப்புசாமியா? எந்த ஊர்ல கண்ணு இருக்கே. நம்ம சீதே கெயவியோட புருசனத்தாம்பா சொல்றேன்.

சாத்தப்பன்
Why do you waste your energy in fighting 'bramanical' things instead of accepting 'stone age fact of braminical' and take different topics for discussion , like......
1-Untold story of kushbu

பதில்: அவரைப் பற்றி எல்லோரும் பல தருணங்களில் பலான பலானது கூறிவிட்ட பிறகு அவருக்கு ஒன்றும் Untold story இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் முயற்சிக்கிறேன். சமீபத்தில் 1986-ல் மேரி ஜங் என்ற ஹிந்தி திரைப்படத்தில் அனில் கபூரின் தங்கையாக அவர் வந்து நன்றாக நடித்தார். அதற்கும் முன்னால் சுனில் தத்தின் தர்த் கா ரிஷ்தா படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்தார்.
2-What is your beauty rating of current TV actressss and which one do you like most.
எனக்கு பிடித்தவர் காயத்ரி (மெட்டி ஒலி சரோ) மற்றும் காவேரி
3-Have you seen Dr.Cockney's sex surveys?
இல்லை, இதுவரை பார்த்ததில்லை. நம்ம டாக்டர் மாத்ருபூதம் மாதிரித்தான் அவர் என கூகளிட்டு அறிந்தேன். பாலியல் அறிவீனம் மேல்நாடுகளிலும் உள்ளது என்பதைக் காண ஒரு அல்ப திருப்தி.

கண்ணன், பாங்காக்
1. தமிழகத்தைச் சேர்ந்த தற்போதுள்ள மத்திய அமைச்சர்களில் யார் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்? உங்கள் அளவில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு மார்க் போடுவீர்கள் (Out of 10) இந்தியா டுடே பாணியில்).
அப்படியெல்லாம் மதிப்பெண் தர எனக்கு ஒரு தகுதியும் இல்லைதான். இருப்பினும் ப.சிதம்பரமும் டி.ஆர். பாலுவும் அன்புமணியும் மனதைக் கவர்கின்றனர்.
2. மகர நெடுங்குழைக்காதன் இவ்வளவு ஃபேமஸ் ஆவார் இணையத்தில் (உங்கள் மற்றும் லக்கி பதிவுகளால்) என எதிர்பார்த்ததுண்டா?
பதில்: நானோ அல்லது வேறு யாரோ சொல்லியா என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் புகழடையப் போகிறான்? அவனால் நான்தான் பெருமை பெறுகிறேன். அதே போல என்னை கேலி செய்வதாக நினைத்து அவனை அசிங்கமாக எழுதும் அரைகுறைகளைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அதே சமயம் அவனுக்கும் எனது பாதுகாப்பு தேவையில்லை.
3. பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்கும் நீங்கள், ஐடி கம்பெனிகள் ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் (அவர்கள் பணியாளர்களுக்கு) சொல்லித்தர கூப்பிட்டால் செல்வீர்களா ? சென்னையில் உள்ள காக்னிசாண்ட் (CTS), இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற கம்பெனிகளிடம் இந்த மாதிரி ஒரு கன்சல்டன்ஸி வேலையை ஏற்றுகொள்வீர்களா? அவர்களை தொடர்பு கொண்டதுண்டா?
டி.எஸ்.க்யூ. (இப்போது அது இல்லை. "எப்படியிருக்கும் நீ வேலை செய்தால் என கெக்கலி கொட்டுகிறான் முரளி மனோஹர்)), குமரன் சிஸ்டம்ஸ், எச்.சி.எல். ஆகிய கம்பெனிகள் எனது வாடிக்கையாளர்கள் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு. பிர்லா சாஃப்ட் கம்பெனிக்கு ஃபிரெஞ்சு தெரிந்தவர்களை இண்டர்வ்யூ செய்து பரிந்துரைகள் தர பல முறை அழைக்கப்பட்டு அவ்வேலையை செய்துள்ளேன். மற்றப்படி மொழி கற்றுக்கொடுக்க நான் ஆள் இல்லை. முக்கியமாக அதிக துட்டு அதில் இல்லை. துபாஷியாக வந்தோமா வேலை செய்து பணம் பார்ப்போமா என்று இருக்கும் நிலையில் சொல்லி கொடுக்கும் ஆப்ஷன் கவர்ச்சிகரமாக இல்லைதான்.
4. ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
தீவிரவாதிகளுக்கு எதிராக அதிக நடவடிக்கைகள் இருக்கும். மற்றப்படி அதிமுகவும் திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.
5. இந்தக் கோடையின் உக்கிரத்தை தணித்துக்கொள்ள என்னென்ன உத்திகளில் இறங்கியுள்ளீர்கள் ? ஊட்டி, கோடை டிரிப் உண்டா? இல்லை நங்கநல்லூர் மட்டுமேதானா?
பதில்: நான் விரும்பி தங்குவது நங்கநல்லூரில் மட்டுமே. மேலும் எனக்கெல்லாம் ஏது விடுமுறை? வாரத்துக்கு ஏழு நாட்களும் வேலைதான். எனது கணினி முன்னால் அமர்ந்து வேலை செய்வதைத்தான் விரும்புகிறேன்.
6. இந்தியாவின் மின்சார பற்றாக்குறையை தீர்க்க உடனடியாகவும், நீண்ட கால நோக்கிலும் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்?
பதில்: உடனடி தேர்வாக முதற்கண் மின்சாரத் திருட்டை ஒழிக்க வேண்டும். அவ்வாறு திருடுபவர்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும். என்ன, அதற்கு அரசியல் ரீதியான தைரியம் தேவை. அது செய்துதான் குஜராத்தில் ஜோதிகிராம் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. முக்கியமாக கட்சி மகாநாடுகளுக்கு கொக்கி போட்டு நேரடியாக லைனிலிருந்தே மின்சாரம் திருடுவதை நிறுத்த வேண்டும். நீண்ட கால நோக்கில் கரியோ எண்ணையோ நிரந்தரமாக இருக்க இயலாது என்பதை உணர வேண்டும். சூரிய ஒளியிலிருந்து, அலைகளிலிருந்து மின்சாரம் எடுக்கும் தொழில் நுட்பத்தை ஊக்குவிக்க வேண்டும்.

அடுத்த பதிவில் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

35 comments:

  1. /////பதில்: நான் விரும்பி தங்குவது நங்கநல்லூரில் மட்டுமே. மேலும் எனக்கெல்லாம் ஏது விடுமுறை? வாரத்துக்கு ஏழு நாட்களும் வேலைதான். எனது கணினி முன்னால் அமர்ந்து வேலை செய்வதைத்தான் விரும்புகிறேன்.////

    கரெக்ட்.விடுமுறை யாருக்கு வேண்டும்?
    இருக்கும் இடம்தான் சொர்க்கம்.அதைவிட சிறந்த சுற்றுலாத்தளம் இல்லை!

    ReplyDelete
  2. உறலோ.. நான் ஒரு கேள்வி கேட்டு 3 வாரத்திற்கும் மேலாகது இன்னும் பதிலக் காணோம், இதிலேயும் இட ஓதுக்கீடு ஏதும் கடைபிடிக்கீறிங்களா.?

    ReplyDelete
  3. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த வாரம் என்னால் கேள்விகள் அனுப்ப முடியவில்லை,
    அடுத்தவாரம் பதில்களுக்கு சேர்த்து அனுப்பி விடுகிறேன்.

    வால்பையன்

    ReplyDelete
  4. துரை தியாகராஜ் அவர்களே,

    அப்படியொன்றும் நீங்கள் கேள்விகள் அனுப்பியதாகத் தெரியவில்லையே. வேறு ஏதாவது பெயரில் அனுப்பினீர்களா? சாதாரணமாக கேள்விகளை நான் உடனே பப்ளிஷ் செய்து விடுவேன்.

    சிரமம் பார்க்காது மறுபடியும் அனுப்பவும். அதே சமயம் அது சக பதிவர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காது இருக்கட்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. 1) what do you think the root causes of dirtyness, poverty, corruption, caste/religion fights, terrorism etc in India? What solutions you suggest?

    2) what will be the future of DMK after Karunanidhi and ADMK after Jayalalitha?

    3) what is the basic reason for the never-ending Brahnmin Vs (so-called) Dravidians especially in the net?

    Vikram

    ReplyDelete
  6. அடுத்த பதிவின் வரைவுக்கு முதல் 3 கேள்விகளை அனுப்பியதற்கு நன்றி விக்ரம் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. உடல்நிலை பத்திரம் வால்பையன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. விவேகானந்தர் இல்லம் பிரச்சினை பற்றி. சட்டப்படி உத்தரவு போடாததால், நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்கிறார் கருணாநிதி அவர்கள். வாய்மொழி உத்தரவு இல்லாமலா அரசாங்க அதிகாரிகள் நேரடியாகச் சென்று மடத்து நிர்வாகிகளிடம் மூன்றே நாளில் காலி செய்யவேண்டும் என கேட்டார்கள்? தொழிலதிபர் ஒருவர் தொலைபேசியில் முதலில் இடத்தை காலி செய்துவிட்டு அப்புறம் சந்திக்க வேண்டியவர்களை சந்தியுங்கள் என்கிறார். ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகக் கருதுகிறீர்களா? இந்த அல்லல்கள் அகல தமிழர்கள் என்ன செய்யவேண்டும்?

    ReplyDelete
  9. என்னதான் கோபம் இருந்தாலும் வயதுக்காவது மரியாதை தாருங்கள் அனானி அவர்களே. ஆகவே உங்கள் கேள்வியை சற்றே திருத்த நேரிட்டது. மன்னிக்கவும்.

    விடை அடுத்த வாரம் டோண்டு பதில்களில்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. //அல்லல்கள் அகல தமிழர்கள் என்ன செய்யவேண்டும்?//

    அவாள்கள் எல்லாம் இந்துத்துவா மோதி புரத்துக்குக் கூண்டோடு இடம்பெயர்ந்தால் அல்லல்கள் அகலும் என்கிறது ஒரு பட்சி ஒரு பதிவில்.

    ReplyDelete
  11. எனது கேள்விகள்:
    1. நயன் தாரா ,திரிஷா ,அஸின், ஸ்ரேயா இவர்களில் யார் டாப்பு? விளக்கத்துடன் பதில் தேவை(உடனே சமீபத்தில் என்று பத்மினி ராகினி என்ற கதை எல்லாம் வேண்டாம்)

    2.அடுத்தவரை மதிக்கும் போக்கு கலைஞர் ஜெயலலிதா ஓப்பிடுக

    3.சென்னை கடற்கரை - தாம்பரம் மின் தொடர் வண்டியில் பயணம் செயதது போது கிடைத்த ஏதாவது மறக்க முடியாத அனுபவம்..
    4.ஒரு நம்பர் லாட்டரிக்கும் சேர் மார்கேட்டில் முதலிட்டிக்கும் வித்யாசம் என்ன?
    5. தசாவதாரம் முதல் நாள் முதல் காட்சி டிக்கட் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

    மணிவண்ணன்

    ReplyDelete
  12. குறிப்பு
    கேள்விகள் பதில்கள் மட்டும் தான் தற்போது வருகின்றது.. நீங்கள் வழக்கமாக போடும் பதிவுகள் வருவதில்லை என்ன காரணம்

    ReplyDelete
  13. டோண்டு பதில்களுக்கு கேள்விகள் அனுப்புபவர்களின் மோட்டிவேஷன் என்ன என்று நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
  14. பா.ஜ.க ஆட்சியில் விலைவாசி குறைவாகவே இருந்தது.
    2001 ம் ஆண்டில் இருந்து நான் சம்பாதிக்க ஆரம்பித்தில் இருந்து வரவு செலவு நான் பார்த்துக் கொள்வதால் என்னால் ஒப்பிட முடிகிறது.
    எனக்குத் தெரிந்த நேரடி உதாரணங்கள்.
    1.பா.ஜ.க ஆட்சியில் சமையல் எரிவாயு தடையில்லாமல் கிடைத்தது.
    அக்கால கட்டத்தில் மூன்று சக்கர வண்டிகளில் வந்து கூவி விற்றது எனக்குத் தெரியும்.
    இப்போது பதிந்து ஒருவார காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.

    2. வங்கிகளில் கடன் வட்டி விகிதம் குறைவாக இருந்தது. வீட்டுக்கடன் சுமார் 6.5 முதல் 9 சதவீதம் வரை.

    ஐந்து ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே துறை தவிற வேறு எதிலும் முன்னேற்றம் இல்லை.

    வாங்கும் திறன் அதிகரித்திருப்பதால் விலைவாசி பற்றிக் அச்சப்படத் தெவையில்ல என்று கூறுபவர்கள் விவசாயிகளுக்கு நெல்லுக்கு விலை அதிகம் கொடுக்க முன்வராதது ஏன்?

    ப.சிதம்பரம், மன்மோகன் சிங் படித்த மக்குக்கள். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவவில்லை.

    ReplyDelete
  15. //வாங்கும் திறன் அதிகரித்திருப்பதால் விலைவாசி பற்றிக் அச்சப்படத் தெவையில்ல என்று கூறுபவர்கள் விவசாயிகளுக்கு நெல்லுக்கு விலை அதிகம் கொடுக்க முன்வராதது ஏன்?//
    இதை அடுத்த பதிவுக்கான கேள்வியாக எடுத்துள்ளேன்.

    எரிவாயு விஷயம் எனக்கும் ஞாபகம் இருக்கிறது. வீட்டுக் கடன் விஷயம் எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். பாஜக காங்கிரஸ் அளவுக்கு கூட்டணிக் கட்சிகளால் பீடிக்கப்படவில்லை. முக்கியமாக கம்யூனிஸ்டுகள் தொல்லை அவர்களுக்கு இல்லை.

    மேலும், சமீபத்தில் 1975-77 ஜனதா ஆட்சிக்கு போனால் சர்க்கரை விலை ரொம்ப கம்மி. சுலபமாக தடையின்றி கிடைத்தது. அப்போதும் ஜனதா கட்சி அரசை நடத்த யாருடைய தயவிலும் இல்லை.

    ஆனால் தற்சமயம் மன்மோகன் சிங்கும் சரி, ப. சிதம்பரமும் சரி இம்மாதிரி கம்யூனிஸ்டுகள் பின்னிருக்கையில் அமர்ந்த வண்ணம் கார் ஓட்டும் முயற்சியில் இருக்கும்வரை (backseat driving) ஒன்றும் செய்யும் நிலையில் இல்லை. இது நிஜமாகவே துரதிர்ஷ்டமான விஷயம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. //டோண்டு பதில்களுக்கு கேள்விகள் அனுப்புபவர்களின் மோட்டிவேஷன் என்ன என்று நினைக்கிறீர்கள்?//

    இதற்கான பதிலை அடுத்த டோண்டு பதில்கள் பதிவில் கணினித் திரையில் காண்க (வியங்கோள் வினைமுற்று).

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. Dontdo sir,
    I also felt bad on my earlier qtn. # 2.
    Please remove from your blog and sincere apology for the same.

    My new Questions.
    1.French kiss? –Explain, have any Tamil kiss?
    2.Have you used ‘ipot’ unit?
    3.Still you believe ‘Manu discrimination’?
    4.You have any ‘Sarojadevi’stories in PDF?
    5.Have you visited “Sriparumamthur’and darsan Ramanujer?
    6.Can you find my age based on my qtns?

    ReplyDelete
  18. சாத்தப்பன் அவர்களே,

    நீங்கள் கேட்டு கொண்டதற்கிணங்க ஆட்சேபத்துக்குரிய இரண்டாம் கேள்வி முழுமையாக நீக்கப்பட்டது. இப்போது கேட்டுள்ள கேள்விகள் அடுத்த கேள்வி பதில்கள் வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. டோண்டு அய்யா,

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதாக நம்ம மஞ்ச துண்டு அய்யா சொல்றாரே?அந்தா அய்யயவோட சிரிப்பில் நீங்க எதைப் பார்க்கறீங்க?

    பாலா

    ReplyDelete
  20. அய்யா பாலா !

    Aappu அய்யா Aappu!

    ReplyDelete
  21. 1.தமிழக கோயில்களில்,கேரள கோயில்களில் கடைபிடிகப்படும் ஆசாரமுறைகள் கடை பிடிக்கப்படுவதில்லை.இதை சரி செய்வது எப்படி?
    2.திடிரென்று தமிழக கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதே,கடவுளை ஏற்றுக் கொள்ளும் தன்மை அதிகரித்து விட்டதா?
    3.சாதரண சோதிடர் கூட தினம் ரூபாய் 300 (கிராமத்தில்)வருமானம் ஈட்டுவதகா சொல்கிறார்கள்,இது நல்லதற்கா?
    4.பக்தி மற்றும் சோதிடப் வார,மாத பத்திரிக்கைகள் விற்பனை படு அமர்களப்படுகிறதே?
    5.கடவுள் மறுப்பு கொள்கையில் மிகத் தீவிரம் காட்டியவர்கள் கூட (50 வயதுக்கு மேல்)பக்தி மானாகி விடுவதன் காரணம் யாது.
    6.இந்து இதிகாசங்களில் கடுமையாக கூறப்பட்டுள்ள தண்டனைகள் தவறு செய்பவர்களுக்கு இப் பூலோகத்தில் வாழும் போது தரப் பட்டால் மக்களின் ஆன்மீகம்(கடவுள் பக்தி)வளருமல்லவா
    7.பொதுவாக எல்லாச் சாமியார்களுமே எதாவது தப்பு செய்து கடைசியில் மாட்டிகொள்கிறார்களே(அவர்களது கட்டுப் பாடற்ற உனவுப் பழக்கம் காரணாமா?)

    ReplyDelete
  22. Dear dontdo sir

    I accidentally read about so called ‘CHO’ in one of the Blog.
    I Feeeeeeeeeeeeeeel the content/arguments are near truth about CHO.
    After reading I only conclude - CHO is cheating everybody, including his Fanatic follower’s ☺
    Please read the sample:-
    ””தனக்கு முன் ஏதாவது கேள்வி வைக்கப்பட்டு விட்டால் சோவிற்கு, தலைகால் புரியாது. (தலையும் முழங்காலும் ஒரே மாதிரி வழவழப்பாக இருப்பதனாலோ என்னவோ). ஆரம்பித்து விடுவார். தொடர்ந்து உளறுவதில் ஏதாவது சரியான கருத்து வந்து விட்டால், தான் புத்திசாலி என்கிற பொன்னாடையையும், பேத்தலான விஷயங்களுக்கு நகைச்சுவை நையாண்டி என்கிற போர்வையையும் போர்த்துக் கொள்வது இவருடைய நீண்டகால வாழ்நாள் சரித்திரம்.”””
    Please read the balance here and let us have your un-biased answer
    http://rathnesh.blogspot.com/2007/10/blog-post_7697.html

    ReplyDelete
  23. //6.Can you find my age based on my qtns?
    //

    Dear Saathappan,

    I can't guess your age ;I can guess your IQ though.It is infact in the negative zone ;about -10 ,correct?

    bala

    ReplyDelete
  24. கேள்வி: நீங்கள் கொடுக்கும் தைரியத்தில் இந்து கடவுள்களை இழிவு படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக 'துக்ளக்' இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறதே?

    பதில்: 'துக்ளக்' இதழுக்கு, இன்றைய 'தினமணி' இதழ் புகைப்படத்தோடு பொருத்தமான விடை அளித்திருக்கின்றதே?. திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் நீலோத்பலாம்பாள் அம்மனுக்கு ரூ. 30 லட்சத்தில் புதிதாக செய்யப்பட்ட தேர் கடந்த 27ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

    மேலும் அந்தச் செய்தியில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மனுக்கு என தனியாக தேர் இல்லை என்றும், பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை புதிய தேர் கட்டுமானத் திருப்பணிக்கு ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்தது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

    இது மாத்திரமல்ல, கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் தி.மு. கழக அரசின் சார்பில் 2190 திருக்கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு, குட முழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

    திருக்கோயில்களில் திருப்பணி செய்வதற்காக ஆண்டுதோறும் அரசு வழங்கும் மானியத் தொகை ரூ. 75 லட்சமாக இருந்தது, மூன்று கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.

    கிராம கோயில் பூசாரிகள் நலனுக்கென நல வாரியம் அமைக்கப்பட்டு, இதுவரை 15,000 பூசாரிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

    வரலாற்றுச் சிறப்பு மிக்க 48 திருக்கோயில்களில் திருப்பணி செய்து குட முழுக்கு நடத்துவதற்காக புராதன சின்னங்கள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 9.87 கோடி அரசு நிதி ஒதுக்கப்பட்டது.

    240 திருக்கோயில்களுக்குச் சொந்தமான தேர்கள் புதுப்பிக்கப்படும் திட்டம் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

    அரசின் சார்பில் செய்யப்படுபவைகளில் சிலவற்றை மட்டும் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். நேற்றைய தினமணி நாளிதழில் வந்துள்ள மற்றுமோர் செய்தி- சிதம்பரம் அருகே ரூ. 13 லட்சம் செலவில் முஸ்லீம் பிரமுகர் ஒருவர் மாரியம்மன் கோவில் கட்டி, நேற்றைய தினம் அங்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

    இவற்றிலிருந்து துக்ளக் எழுதியிருப்பதைப் போல - இந்து கடவுள்கள் இழிவுபடுத்தச் சொல்லி நான் யாருக்கும் தைரியமளிக்கவில்லை என்பதையும் துக்ளக் ஆசிரியரைப் போல மறைமுகமாக யாரையும் தூண்டி விடவும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

    -தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் இந்த அதிரடி பதிலுக்கு(புள்ளி விபரங்களுடன்-சான்றுகளுடன்-சோவின் துக்ளக்கிற்கு -நடுநிலை நாளிதழ் தினமணி மூலம்), தங்கள் விரிவான விளக்கம் என்ன?

    நடுநிலையுடன்,
    நேரடியான பதிலை
    தங்களின்
    அடுத்த பதிவில்(பதிலில்)
    எதிர்பார்க்கிறேன்
    ஐயா.

    ReplyDelete
  25. //நடுநிலையுடன், நேரடியான பதிலை
    தங்களின் அடுத்த பதிவில்(பதிலில்)
    எதிர்பார்க்கிறேன்//

    கருணாநிதி அவர்கள் இந்து மதத்தை மட்டம் தட்டி வருவதை தமிழகமே அறியுமே. வெறுமனே அறநிலைத்துறையில் நிர்வாக ரீதியாக நடக்கும் செயல்களை வைத்து அவர் மட்டம் தட்டவில்லை என்று கூறுவதை நான் ஒப்பு கொள்ளவில்லை. அவற்றில் கூட இந்து கோவில்களுக்கு வசூலான உண்டியல்களிலிருந்து எத்தனை மற்றத் துறைகளுக்கு மாற்றப்பட்டனவோ யார் அறிவார்.

    இந்து மதத்தை பழித்தல், இசுலாமிய மற்றும் கிறித்துவ மதங்களுக்கு ஜால்ரா அடித்தல் அவரது விருப்பச் செயல்.

    இந்து என்றால் திருடன் என்பவர் பேசாமல் மதம் மாறுவதுதானே. ஆனால் செய்ய மாட்டார். இட ஒதுக்கீடு சலுகைகள் அவர் குடும்பத்திற்கு கிட்டாமல் போகுமே. ஒரு வேளை கிரீமி லேயருக்கு நிச்சயம் கிடைக்காது என்றால் மதம் மாற வழியுண்டு என நினைக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. //இந்து என்றால் திருடன் என்பவர் பேசாமல் மதம் மாறுவதுதானே. ஆனால் செய்ய மாட்டார். இட ஒதுக்கீடு சலுகைகள் அவர் குடும்பத்திற்கு கிட்டாமல் போகுமே. ஒரு வேளை கிரீமி லேயருக்கு நிச்சயம் கிடைக்காது என்றால் மதம் மாற வழியுண்டு என நினைக்கிறேன்//

    இந்து மதம் என்பது ஒரு வாழுகின்ற முறை.
    இந்து மதத்தில்
    அ) கடவுளை நம்புகிறவர்கள்(ஒருவனே தேவன்)
    ஆ)கடவுளை வணங்குகிறவர்கள்(பக்த கோடிகள்)
    இ)கடவுளை மறுத்து நாத்திகம் மட்டும் பேசுபவர்(இளைஞர்கள்)
    ஈ)கடவுளை கேலி பேசி வாழும் பகுத்தறிவு வாதிகள்
    உ)கடவுளை மற ,மனிதனை நினை என கூறி கடவுள் விக்கிரகங்களையும்,படங்களையும்(குறிப்பாக ஸ்ரீஇராமசந்திரமூர்த்தியை)
    பகதர்களின் மனம் புண்படவேண்டும் என்ற எண்ணத்துடன் வரம்பு மீறிய அவமரியாதை,துவேஷம் பண்ணும் அதி தீவிர (தந்தை பெரியாரின் பக்தர்கள்)முற்போக்கு வாதிகள்.

    (கோபித்து கொள்ளாதீர்கள் ஐயா)
    சுருக்கமா சொன்னா
    பிள்ளையாரை கும்பிடுகிறவர்களும்,பிள்ளையார்(lord ganesh) சிலையை உடைக்கிறவர்களும்,
    பிள்ளையார் சிலையை அவமரியாதை செய்பவரும்,பிளையார் கோவிலுக்கு சொந்தமான சொத்தை தவறானமுறையில் அனுபவிக்கும் மக்கள்

    எல்லோரையும் இந்து மதம் சகித்து கொள்ளும் இதை தாங்கள் அறியாததல்ல.

    உங்கள் பதில் கொஞ்சம் நெருடலைதருகிறது.

    தமிழினத் தலைவரின் (கடவுள் மறுப்புக் கொள்கை- kOvai ஈசா யோகா மையத்தின் பசுமைகரங்கள் திட்டத்திற்கு பொருள் உதவி-வேலூர் தங்க கோவில் விழாவில் (மக்கள் நலத் திட்டங்களில்)பங்கேற்பு- bangalaore சுவாமி பாபாஜி யின் சென்னை விஜயம்-இந்து அறநிலைய பணியாளர்கள் வாழ்வு நலத் திட்டங்கள் )அனுபவ முதிர்ச்சியால் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளாதது போல்).

    இதைவிட நல்ல பதிலை(பதிவை)தங்களிடம்
    எதிர்பார்த்தேன்

    ReplyDelete
  27. //சுருக்கமா சொன்னா பிள்ளையாரை கும்பிடுகிறவர்களும்,பிள்ளையார்(lord ganesh) சிலையை உடைக்கிறவர்களும்,
    பிள்ளையார் சிலையை அவமரியாதை செய்பவரும்,பிளையார் கோவிலுக்கு சொந்தமான சொத்தை தவறான முறையில் அனுபவிக்கும் மக்கள்
    எல்லோரையும் இந்து மதம் சகித்து கொள்ளும் இதை தாங்கள் அறியாததல்ல.//

    அவ்வாறு சகித்து கொள்வதை மனம் ஏற்காத என்னைப் போன்றவர்களையும் இந்து மதம் சகித்து கொள்ளட்டுமே.

    முதல்வர் மனம் எல்லாம் மாறிவிட்டதாக என்னால் நம்ப இயலவில்லை. அதே சமயம் அவர் நிஜமாகவே மனம் மாறியுள்ளார் என்பதை பிற்கால நிகழ்ச்சிகள் காட்டி, நான் தவறகக் கூறினேன் என்பதை காட்டினால் என்னை விட சந்தோஷப்படுபவர்களும் இல்லை. என்ன தேவையின்றி நம்பி ஏமாறத் தயாராக இல்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. //முதல்வர் மனம் எல்லாம் மாறிவிட்டதாக என்னால் நம்ப இயலவில்லை. அதே சமயம் அவர் நிஜமாகவே மனம் மாறியுள்ளார் என்பதை பிற்கால நிகழ்ச்சிகள் காட்டி, நான் தவறகக் கூறினேன் என்பதை காட்டினால் என்னை விட சந்தோஷப்படுபவர்களும் இல்லை. என்ன தேவையின்றி நம்பி ஏமாறத் தயாராக இல்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்//

    தங்களின் கருத்தை நான் மனப் பூர்வமாக ஏற்கிறேன்.தாங்கள் உண்மையான முழுமையான ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள் என நம்புகிறேன்.

    ஆனால் கலைஞர் அவர்களது அணுகுமுறை
    அ)அரசியல் எதிரிகளின் மேல் கூறும் குற்றச்சாட்டுகளில் உபயோகப் படுத்தும் மென்மையான பதங்கள்(1967 களில் அவரது கனல் தெரிக்கும் பேச்சு)
    ஆ)தனது கட்சிகாரர்களின் தவறுகளுக்கு
    தரப் படும் தண்டனைகள்
    இ) உறவினரே ஆனாலும் தூக்கி எறிய தயங்கா நீதி மேலாண்மை
    ஈ)துரோகச் சிந்தனை யுடன் கட்சிக்கும்,ஆட்சிக்கும் இடையூறு இழைத்து,பின் மனம் வருந்தி திரும்பி வருவோரை ஏற்கும் தயாளா குணம்
    உ)1996 களில் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களின் மேல் அரசு சம்பந்த மான(சொத்து குவிப்பு,பிற சட்ட மிறல்கள்) வழக்குகளில் காட்டப்பட்ட தீவிரம் தற்சமயம்(2006)
    குறைக்கப்பட்டுள்லது.(மறப்போம்,மன்னிப்போம்)
    முதலியவற்றில்
    சமீப காலங்களில் நல்ல மாற்றம்
    ஏற்பட்டுள்ளதை இந்த நாடறியும்(ஆனந்த விகடன்,தினமணி,hindu,காட்சி ஊடகங்கள்,திரை யுலகம்,நடுவன் அரசில் பங்கெடுத்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் புகழாரங்கள்,பன்ணாட்டு நிறுவனகங்களின் ஒருமுக பாரட்டுக்கள்-)(1996-2001 சூழ்நிலை வேறு).

    "நல்லது நடக்கும்
    இது நான்குமுறை தீர்ப்பு"

    வெகு விரைவில் "கலைஞர் கருணாநிதி அவர்களை"
    தமிழர்கள் அனவரும் மதம்,ஜாதி,இனம்,கட்சி,வயது, வித்தியாசமில்லாமால் ''ஒப்பற்ற தமிழினத் தலைவர்" என போற்றி கொண்டடுவர்.இது உறுதி.

    ReplyDelete
  29. "போற்றுவோர்
    போற்றட்டும்
    புழுதி வாரி
    தூற்றுவோர்
    தூற்றட்டும்
    என் கடன்
    பணி செய்து கிடப்பதே"

    என வாழும் தமிழக முதலவர்
    கலைஞர் அவர்களின் பகைவனுக்கும்(தீஞ்சொற்களால் வசை பாடியவர்வகள்)அருள்வாய் எனும் சீரிய குணம் பற்றி
    திருமிகு மயிலாடுதுறை சிவா அவர்களின் பதிவின் நகல்.
    (courtesy -மயிலாடுதுறை சிவா)
    *********************************
    (நன்றி : தினமலர் புகைப்படத்திற்கு)
    வாழும் எங்களின் தமிழின் முகவரியை பலமுறை தவறாக பேசிய, மற்றும் திராவிட அரசியலை பலமுறை தவறாக பேசிய ஜெயகாந்தனுக்கு உதவிய தலைவர் கலைஞர் வாழ்க பல்லாண்டு! சென்ற ஆண்டு அவரின் மகனுக்கு அரசு வேலை கொடுத்ததிற்கும் உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை!
    குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
    எந்நலத் துள்ளதூஉ மன்று. (99, சான்றாண்மை)
    நற்பண்பு ஒன்றே சான்றோருக்கு அழகாம்.
    வேறு எந்த அழகும் அழகல்ல.
    நன்றி
    *******************************
    (courtesy-ஜெயகாந்தனுக்கு உதவிய கலைஞர்! (1) :மயிலாடுதுறை சிவா-

    ReplyDelete
  30. //அ)அரசியல் எதிரிகளின் மேல் கூறும் குற்றச்சாட்டுகளில் உபயோகப் படுத்தும் மென்மையான பதங்கள்(1967 களில் அவரது கனல் தெரிக்கும் பேச்சு)//
    அழகிரியைப் பற்றி கேள்வி கேட்ட எதிர்க்கட்சி சார்பு நிருபரிடம் 'நீதாண்டா கொலைக்காரன்' என மென்மையாகக் கூறியது?
    //ஆ)தனது கட்சிகாரர்களின் தவறுகளுக்கு தரப்படும் தண்டனைகள்
    இ) உறவினரே ஆனாலும் தூக்கி எறிய தயங்கா நீதி மேலாண்மை//
    என்ன, அழகிரியை தினகரன் எரிப்பு மற்றும் மூன்று ஊழியர்கள் கொலைக்காக கைது செய்தாகி விட்டதா?
    //ஈ)துரோகச் சிந்தனையுடன் கட்சிக்கும்,ஆட்சிக்கும் இடையூறு இழைத்து,பின் மனம் வருந்தி திரும்பி வருவோரை ஏற்கும் தயாள குணம்//
    அம்மாதிரியிருப்பவர்களிடம் காட்டப்படும் ஜாக்கிரதை உணர்ச்சியை காட்டாவிட்டால் இது தயாள குணம் இல்லை ஏமாளி குணம்.
    //உ)1996 களில் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களின் மேல் அரசு சம்பந்தமான(சொத்து குவிப்பு,பிற சட்ட மிறல்கள்) வழக்குகளில் காட்டப்பட்ட தீவிரம் தற்சமயம்(2006)
    குறைக்கப்பட்டுள்ளது.(மறப்போம்,மன்னிப்போம்)//
    ஜெயலலிதா செய்தது மோசமான குற்றங்கள். அதற்கு ஒழுங்கான தண்டனை பெற்று தந்திருக்க வேண்டும். இதில் யார் யாரை மன்னிப்பது? நீங்கள் கூறுவது போல இருந்தால் முதல்வர் கடமை தவறியவராகிறார். நான் என்ன நினைக்கிறேன் என்றால், இந்த வழக்குகளில் காலதாமதம் ஆவதே ஜெயலலிதாவின் தாமதப்படுத்தும் முயற்சிகள் காரணமாகத்தான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  31. //இந்து மதம் என்பது ஒரு வாழுகின்ற முறை.//

    இந்தியாவில் பல சமயத்தவர் அவரவர் கடவுள்களை வணங்கி வாழ, அனைவரையும் இந்து என முத்திரை குத்தும் பித்தலாட்டத்தை என்றுதான் நிறுத்துவீர்கள்? கொடுமைடா சாமி.

    இந்த பித்தலாட்டத்தை அடிப்படையாக வைத்து மிக சீரியசான பதில்கள் வேறு!!!

    அய்யோ... அய்யோ...

    ReplyDelete
  32. I can't guess your age ;I can guess your IQ though.It is infact in the negative zone ;about -10 ,correct? -bala

    Wow ..what an reply ..
    ""Aappu அய்யா Aappu"""

    Iam soory i understand your feeeeeeeeelings.

    ReplyDelete
  33. உங்கள் பதிவின் தமிழ்மண பட்டையில் எப்போதும் மைனஸ் குத்துவே அதிகமாக குத்தப்படுகிறதே? யார் குத்துகிறார்கள்? ஏன் குத்துகிறார்கள்?

    ReplyDelete
  34. //ஏன் குத்துகிறார்கள்?//
    பிடிக்கவில்லை குத்துகிறார்கள். இதெல்லாம் கேள்வியா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  35. டோண்டு அய்யா,

    நம்ம மஞ்சத் துண்டு மாமன்னன் சமீபத்தில் நடந்த "தசாவதாரம் பாடல் வெளியீடு" என்ற நாட்டுக்கு மிகவும் அவசியமான நிகழ்ச்சியில் பல மணி நேரம் கலந்து கொண்டது மட்டுலல்லாமல்,ஜாக்கி சான்,மல்லிகா ஷெராவத் போன்றவர்களைப் பற்றி பல விஷயங்களை கற்றறிந்து,அவர்களைப் பற்றி, அவர்களுக்கே தெரியாத விஷயங்களையெல்லாம் சொல்லி உலகத்தையே வியக்க வைத்தார்."ஆஹா, என்ன கடுமையான உழைப்பு இது "என்று வழக்கம் போல், ஓசி பிரியாணி உடன்பிறப்பு குஞ்சுகள், குருட்டுப் பார்வையோடு, ஜாலியா ஜம்ப் அடித்து ஆர்கஸம் அடைந்தன.இதைப் பற்றி சில கேள்விகள்.

    1)இப்படி, சினிமா கும்பல் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும்,குத்தாட்டத்துக்கும் முனைந்து முனைந்து ஆரய்ச்சி பண்ணி, உழைப்பதால் மஞ்ச துண்டு மாமன்னனுக்கு, (சினி)மாமுனைவர் என்ற ,பட்டம் தரலாமா?
    2)மஞ்ச துண்டின் சினிமா மோகத்தைக் கண்டு மகிழும் குஞ்சுகளின் IQ சுமார் எந்த லெவலில் இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?
    3)மஞ்ச துண்டுக்கு கேவலமாக ஜல்லி அடிக்கும் சினிமா கலைஞர்களில் கமல்ஹாசன் முதல் இடத்தில் இருப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

    பாலா

    ReplyDelete