வியாபார நாணயம் என்று ஒன்று இருக்கிறது. அது ஏதோ பெரிய பிரம்ம வித்தை இல்லை. ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால் அதன்படி நடப்பது முக்கியம் என்பது போன்ற கோட்பாடுகளை உள்ளடக்கியதே அது. சில உதாரணங்களுடன் விளக்குவேன்.
ஜஸ்ட் டயல் என்று ஒரு நிறுவனம் இருக்கிறது. அதன் சேவை நம்பரில் போன் செய்து கேட்டால் உங்களுக்குத் தேவையானத் தகவல்கள் தருவார்கள். உதாரணத்துக்கு பிளம்பர் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் இல்லத்தருகில் இருக்கும் பிளம்பர்கள் பற்றிய விவரம் கேட்கலாம். அதே போல அன்னிய மொழியில் இருக்கும் ஒரு ஆவணத்தின் மொழிபெயர்ப்பு வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட மொழி பெயர்ப்பாளர்களின் போன் நம்பர்கள் தரப்படும். இந்த சேவை தகவல் பெற விரும்புபவர்களுக்கு இலவசம். சேவை பற்றிய விவரம் கேளுங்கள், உங்கள் பெயர், நிறுவனத்தின் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொடுங்கள், விவரம் பெறுங்கள் தீர்ந்தது விஷயம்.
இதில் நிறுவனத்துக்கென்ன லாபம்? எங்களைப் போன்ற சேவை அளிப்பாளர்கள் இந்த நிறுவனத்தில் பணம் கட்டிப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எங்கள் சேவை சம்பந்தமான கால் வரும்போது எங்கள் பெயரைத் தருவார்கள், வாடிக்கையாளர்களும் எங்களைத் தொடர்பு கொள்வார்கள். அதே சமயம் எங்கள் பெயரை ஒரு வாடிக்கையாளருக்குத் தந்திருந்தால் அதன் விவரத்தை எங்களுக்கும் தருவார்கள். தேவையானால் நாங்கள் கூட அவர்களைத் தொடர்பு கொள்ளுவோம். ரொம்ப நல்ல ஏற்பாடு, சரியாக நடத்தினால். அதில்தான் பிரச்சினையே.
2003-ல் நான் ஜஸ்ட் டயலில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதிவு செய்து கொண்டேன். அப்போது என்னிடம் என்ன கூறப்பட்டதென்றால் என்னைப் போன்றவர்களது லிஸ்டிலிருந்து வரிசைக் கிரமப்படி பெயர்களை அவ்வப்போது எங்கள் சேவை பற்றித் தகவல் கேட்பவர்களுக்குத் தருவதாகக் கூறினார்கள். உதாரணத்துக்கு எங்கள் பிரிவில் 7 பெயர்கள் உள்ளன. ஒவ்வொரு enquiry போதும் மூன்றிலிருந்து நான்கு பெயர்களைத் தருவார்கள். சுழற்சி முறையில் எல்லார் பெயரும் அவ்வாறு ஒரு மாத காலத்தில் பல முறை கூறப்படும்.
ஆனால் திடீரென இதில் ஒரு மாற்றம் கொண்டு வந்தார்கள். ஒரு குறிப்பிட்ட பிரீமியம் தொகை கட்டினால் ஒவ்வொரு முறையும் உங்கள் பெயரைக் கூறுவார்களாம். அதற்கு அதிகப்படிக் கட்டணம் கட்ட வேண்டும். இது முதலில் போட்ட ஒப்பந்தத்தை ஒரு தலை பட்சமாக மீறுகிறது என்று நான் சுட்டிக் காட்டியும் பிரயோசனம் இல்லை. ஒரு பேச்சுக்கு எல்லோரும் பிரீமியம் தொகை கட்டி விட்டால் என்ன ஆகும்? மறுபடியும் பழைய சுழற்சி முறைதானே? ஆக, அதே சேவைக்கு எல்லோரையும் ஏய்த்து அதிகப் பணம் பெற்றாகி விட்டதாகி விடும் அல்லவா. ஆகவே இப்பணம் நான் கட்டவில்லை.
இதில் எரிச்சல் தரும் விஷயம் என்னவென்றால் அவ்வப்போது என்னிடம் அந்த அதிகத் தொகை பெறுவதற்கு முயற்சி அதுபாட்டுக்கு நடக்கிறது. நான் 2008-ல் புதுப்பித்துக் கொள்வது அவர்கள் எனக்கு அளிக்கும் சேவையை பொருத்தது என்று கடுமையாகக் கூறிவிட ஏதோ அவ்வப்போது வேண்டாவெறுப்பாக என் பெயரைக் கூறுகிறார்கள். எனக்கு பிரச்சினை இல்லை, ஏனெனில் அவ்வாறு பிரீமியம் தொகை கட்டியவர்கள் ஏஜென்ஸீக்களே. அவர்கள் சேவை பிடித்தம் இன்றி எனது வெப்சைட் மூலம் நேரிடையாக என்னை அணுகும் வாடிக்கையாளர்கள் அதிகமாகி வருவதால் எனக்குக் கவலை இல்லை.
அதே போல Business Today என்னும் பத்திரிகை India Today குழுமத்தைச் சார்ந்தது. 2001-ல் அதன் ஒரு பிரதி விலை 20 ரூபாய். இரண்டு வாரத்துக்கொரு முறை வெளிவரும் பத்திரிகை அது. அதில் 5 ஆண்டுகளுக்கான சந்தா அப்போது அறிவித்தார்கள். ஒரு கிஃப்டும் தந்தார்கள். அந்தப் பிரதியின் அப்போதைய விலைக்கு அது நல்ல் லாபமே. சரி என்று எடுத்தேன். எண்ணி இரண்டே வாரத்தில் பிரதியின் விலையை 10 ரூபாயாகக் குறைத்தார்கள். இப்போது எனக்கு அந்த 5 ஆண்டு சந்தா கணக்கு நட்டமே. அதை விடுங்கள். 20 ரூபாயிலிருந்து 10 ரூபாய்க்கு குறைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? கண்டிப்பாக அந்த முடிவு எடுக்க பல காலம் பிடித்திருக்கும். ஆக, அறிவிப்பு வந்த நேரத்தில் அவர்களுக்கு அது சீக்கிரம் வரப்போவது நிச்சயம் தெரிந்திருக்கும். ஆகவே ஏமாந்தவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிடித்திருக்கிறார்கள். கேட்டால் இதுதான் பிசினஸாம். நான் 2006-ல் சந்தாவை புதுப்பிக்கவில்லை. நான் பார்க்கும் எல்லோரிடமும் எனது அனுபவத்தை வேறு கூறிவருகிறேன்.
டிஷ்னெட் டி.எஸ்.எல் வருவதற்கு முன்னால் 2002-ல் நான் வி.எஸ்.என்.எல்லில் டயல் அப் தொடர்பு 3 ஆண்டுகளுக்கு அல்லது 100 மணிநேரத்துக்கு எடுத்திருந்தேன். பிறகு டிஷ்னெட் அகலப்பட்டை எடுத்ததும் வி.எஸ்.என்.எல். உபயோகம் குறைந்து போனது. பிறகு டிஷ்னெட்டை வி.எஸ்.என்.எல். எடுத்துக் கொள்ள பிறகு டாட்டா இண்டிகாம் வி.எஸ்.என்.எல்லை எடுத்துக் கொண்டது. இப்போது தமாஷ் என்னவென்றால் 2005-ல் வி.எஸ்.என்.எல்லில் இருந்து என்னிடம் டயல் அப் தொடர்பை புதுப்பித்துக் கொள்ள ஃபோன் மேல் ஃபோன் கால்கள். என்னிடம் அகலப்பட்டை இருக்கிறது, எனக்கு அதிலேயே டயல் அப் தொடர்பும் இருக்கிறது என்று கூறினால் ஒத்துக் கொள்ளவே இல்லை. பிறகு நான் பொறுமை இழந்து நான் இதை புதிப்பிப்பதால் பெறப்போகும் நன்மையைக் கூறுமாறு சவால் விட்டேன். அதற்கு அந்த டெலிமார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் சற்றுநேரம் மென்று முழுங்கிவிட்டு, நான் எனது வி.எஸ்.என்.எல். மின்னஞ்சல் முகவரியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று கூற நான் அவர்களிடம் அதை வைத்துக் கொண்டு என்னென்ன செய்து கொள்ளலாம் என்பதற்கான எனது மேலான ஆலோசனையைக் கூறியதும்தான் என்னைத் தொந்தரவு செய்வதை விட்டார்கள்.
இதுதான் உலகம். ஏமாறாமல் இருப்பது நம் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது. விழிப்பாக இருக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
1 day ago
22 comments:
How about the "small print", Dondu sir? That too is an indication of pulling the wool over the eyes of the consumer. They rightly say, "Caveat emptor" (buyer beware)
Krishnan
நன்றே சொன்னீர்கள் செர்வாண்டஸ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று பெரும்பாலான கம்பெனிகளில் ethics என்பது ஏட்டளவே உள்ளது. சில கம்பெனிகளில் இதை பணியாளர்களை வேலையை விட்டு துரத்த மட்டுமே உபயோகப்படுது என்ன சொல்ல. மேலை நாடுகளில் பெரும்பாலான இடங்களில் business ethics(atleast towards customer services.) பின்பற்றப்படுவதே இவர்களின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.
மேல் நாடுகளில் சுதந்திரப் போட்டி நிலை. ஒரு கம்பெனி சுணங்கினால் அது சில மாதங்களிலேயே படுத்துவிடும் அபாயம் உண்டு.
இப்போது இங்கேயே பாருங்கள். பி.எஸ்.என்.எல்.-ன் பந்தா எவ்வளவு குறைந்துள்ளது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஹாமில்டன் அவர்களே,
விகடனில் சமீபத்தில் 1961-ல் வந்த துணுக்கு ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. அப்பா பையனிடம் மனசாட்சி என்றால் என்ன என்று கேட்க, பையன், தான் செய்த தவறு தங்கச்சிக்குத் தெரியவர, அவள் அதை அப்பாவிடம் போட்டுக் கொடுக்கும் முன்னாலேயே தானே அப்பாவிடம் அதைக் கூறச் செய்வதுதான் மனசாட்சி என்கிறான்.
நான் கூறவந்தது இதுதான். வாடிக்கையாளர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இப்போதுதான் கன்ஸ்யூமர் கோர்ட்டுகள் வந்துள்ளனவே, தேவையானால் அதற்கும் போகலாம். அதற்கு முன்னாலும் பல வழிகள் உள்ளன. என்னுடைய இந்தப் பதிவைப் பாருங்கள். பலர் அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் எதிக்ஸுடன் நடந்து கொள்வதே லாபகரமானது என்ற முடிவுக்கு வந்து விடும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Consience is what makes a boy tell his mother before his sister does.
Evan Esar (1899 - 1995)
http://www.quotationspage.com/qotd/2006-10-02.html
கூகுள் மெயில்ல வர்ற, quotes of the day ல, அக்டோபர் இரண்டாம் தேதி வந்தத படிச்சிட்டு, அதையே, சமீபத்தில, 1961 ல, விகடன்ல வந்த துணுக்குன்னு சொல்லி, உங்க அபார ஞாபக சக்திய பறைசாற்றிக் கொள்ளுவது....
"Consience is what makes a boy tell his mother before his sister does.
Evan Esar (1899 - 1995)"
"அதையே, சமீபத்தில, 1961 ல, விகடன்ல வந்த துணுக்குன்னு சொல்லி, உங்க அபார ஞாபக சக்திய பறைசாற்றிக் கொள்ளுவது...."
:))))))))))
ஒரு விஷயம் கிருஷ்ணா அவர்களே. சம்பந்தப்பட்ட அந்த மனிதர் (1899 - 1995) அந்த விஷயத்தை எப்போது சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் அந்த விஷயம் கடந்த அக்டோபர் 2-ல்தான் முதல் முறையாக வெளியாகியிருக்கும் என்பது உங்கள் துணிபா?
இந்தத் துணுக்கை நான் முதலில் பார்த்தது சமீபத்தில் 1961-ல் தான். அதற்கு முன்பே அந்த மனிதர் சொன்னது பிரசித்தமாகியிருக்கலாம். இன்னொரு விஷயம், அந்த மனிதரும் அதை வேறு எங்காவது படித்திருக்கலாம் அல்லது கேட்டிருக்கலாம்.
ஒரு விஷயம் தெரியுமா? ஷேக்ஸ்பியரின் அத்தனை நாடகங்களும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த கதைகளே. அவற்றுக்கு அவர் நாடக ரூபம் கொடுத்தார் அவ்வளவே. அதிலும் ஹேம்லட் கதை கி.பி. 70-லியே பிரசித்தி பெற்றது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
gmail-ஐ, மெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டிருப்பவர், தினம் தினம் கூகுள் ஹோம்பேஜை பலமுறை பார்ப்பவர், எப்பொழுதோ 2006 ஆம் ஆண்டு, அக்டோபர் இரண்டாம் தேதி வந்ததை படித்திருப்பார் என்பதற்கான வாய்ப்பு குறைவுதான், அவர் சமீபத்தில் 1961 ல் விகடனில் வந்ததைத்தான் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க இயலும்....
நேர்மைக்குறைவு பற்றிய பதிவில் வந்த நேர்மைக் குறைவைக் கண்ட ஆதங்கத்தால் வந்த பின்னூட்டமது....
அமெரிக்காவில் Better Business Bureau அப்படிங்கற அமைப்பு இருக்கு.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சேவையில் குறையிருந்தால் இந்த அமைப்பிடம் முறையிடலாம். அவர்கள் அந்தந்த நிறுவங்களிடம் விசாரித்து நஷ்ட ஈடு பெற்றுத்தருவார்கள்.
விகடனில் படித்த என்று சொல்லியிருந்தால் கேள்வி எழுந்திருக்காது. 1961 ல் படித்ததாக எழுதியதால்....துணுக்கு, 1961 -ல், ம்ம்ம், சாதாரண வலைப்பதிவில் இவ்வளவு என்றால் அரசியல்வாதிகளோ, கம்பெனிகளோ செய்வது, இமேஜ் உண்டாக்குவது ஒன்றுமேயில்லை போலிருக்கிறது.
நான் உண்மையாகவே கூறுகிறேன், கிருஷ்ணா அவர்களே. இந்த விஷயத்தைப் பற்றி நான் முதன்முதலில் 1961-ல் படித்தேன். அதைப் பொய், நேர்மைக்குறைவு என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
"ஜீமெயில்-ஐ, மெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டிருப்பவர், தினம் தினம் கூகுள் ஹோம்பேஜை பலமுறை பார்ப்பவர், எப்பொழுதோ 2006 ஆம் ஆண்டு, அக்டோபர் இரண்டாம் தேதி வந்ததை படித்திருப்பார் என்பதற்கான வாய்ப்பு குறைவுதான், அவர் சமீபத்தில் 1961 ல் விகடனில் வந்ததைத்தான் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க இயலும்.... "
இம்மாதிரி வாய்ப்பு, சாத்தியக்கூறு என்றெல்லாம் பேசுவது ஒரு விஷயம் நடக்கும் முன்புதான். நடந்து முடிந்த விஷயத்தை நடந்ததுபோலத்தான் கூற முடியும். நம்புவதும் நம்பாததும் படிப்பவர் விருப்பம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் மேலே சொன்னபடி, விகடனில் படித்திருக்கிறேன் என்று எழுதியிருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஒரு துணுக்கு, பழமொழி, ஒரு பத்திரிக்கையில் வந்தது, 45 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது...ஞாபகப்படுத்தி எழுதுவது என்பது... (ஆண்டைச் சொன்னதை குறிப்பிடுகிறேன், துணுக்கை ஞாபகம் வைத்திருப்பதோ, பத்திரிக்கை பெயரை ஞாபகம் வைத்திருப்பதையோ அல்ல), ஒரே ஒரு சாத்தியமுண்டு. அந்த ஒரு வருடம் மட்டும் விகடன் படித்து, அதன் பின்னர், விகடனையே படிக்காமலிருந்தால் அது சாத்தியமே. அவ்வாறில்லையென்றால், சமீபத்திய அஷ்டாவதானியென்று பட்டம் தரலாம்.
"அமெரிக்காவில் Better Business Bureau அப்படிங்கற அமைப்பு இருக்கு."
நமக்கும் கன்ஸ்யூமர் கோர்ட்டெல்லாம் இருக்கு. எவ்வளவு பேர் போகின்றனர் என்பதுதான் கேள்வி.
மக்களுக்கு தங்கள் உரிமைகள் என்னென்ன என்பது பற்றி சரியாகத் தெரிவதில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"விகடனில் படித்த என்று சொல்லியிருந்தால் கேள்வி எழுந்திருக்காது. 1961 ல் படித்ததாக எழுதியதால்...."
கிருஷ்ணா அவர்களே, இப்போது எனது அடுத்தப் பதிவைப் பார்த்துவிட்டுப் பேசுங்கள்.
ஒரு விஷயம் தெரியுமா, வாழ்க்கையில் உண்மையிலேயே பல நம்ப முடியாத விஷயங்கள் நடக்கின்றன.
Truth is stranger than fiction.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு பின்னூட்டம் மடக்கப்பட்டுள்ளதோ...
மடக்கப்பட்டது, விடுவிக்கப்பட்டது. நன்றி.
வேண்டுமென்றே மடக்கவில்லை. ஜீ மெயிலில் வராது கண்ணாமூச்சி காட்டியது. ப்ளாக்கரில் எதேச்சையாக மட்டுறுத்தல் பக்கத்துக்கு வேறு பதிவு சம்பந்தமாகப் போன போது இது அங்கேயிருந்தது. உடனே பப்ளிஷ் செய்து விட்டேன். பிறகு சாவகாசமாக ஜீ மெயில் புது பின்னூட்டம் மற்றும் அனுமதிக்கப்பட்டப் பின்னூட்டத்தை ஒன்றாக எடுத்துப் போடுகிறது.:)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
கிருஷ்ணா அவர்களே,
ஆக, 1961-ல் நான் ஏற்கனவே அதை படித்திருக்கிறேன் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. அப்படியே இருக்கட்டும், பதிவின் முக்கிய இழைக்கு வாருங்கள். அது பற்றி ஏதேனும் கருத்து?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சரி, பதிவுக்கு வருவோம். பத்திரிக்கை உதாரணம்தான் கொஞ்சம் இடிக்கிறது. அதே பத்திரிக்கை, விலையை உயர்த்தினால், உயர்த்தப்பட்ட தொகையைக் கட்டுவீர்களா?
ஆனால், மொத்தத்தில் நேர்மைக்குறைவு பரவலாகிக் கொண்டிருக்கிறது. அண்ணா, ராஜ்யசபாவில் மேற்கோள் காட்டியதுதான் ஞாபகத்தில் வருகிறது. மன்னர் எவ்வழியோ, பிரஜைகளும் அவ்வழி. பிரஜைகள் எப்படியோ, அப்படியே மன்னரும்...
"அதே பத்திரிகை, விலையை உயர்த்தினால், உயர்த்தப்பட்ட தொகையைக் கட்டுவீர்களா?"
ஒரு விஷயம் தெரியுமா, பத்திரிகை அவ்வாறு விலையை உயர்த்தப் போகிறது என்றால் அவர்களே அதை விளம்பரப்படுத்துவார்கள். இப்போதே சந்தா எடுத்துக் கொண்டால் உயரும் விலையிலிருந்து தப்பிக்கலாம் என்று பல முறை கூறுவார்கள்.
ஆனால் இங்கே நடந்தது முற்றிலும் வேறு. சந்தா எடுத்ததும் எண்ணி இரண்டே வாரத்தில் பிரதியின் விலையை 10 ரூபாயாகக் குறைத்தார்கள். அதைத்தான் நான் குறை கூறினேன். அதிலும் பாதிக்குப் பாதியாகக் குறைத்ததுதான் இடித்தது. அதனால் என்ன ஆயிற்று என்றால் அப்பத்திரிகை க்ரெடிபிலிடியை இழந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment