நிரந்தர பக்கங்கள்

12/22/2008

சூடான இடுகைகள் பற்றிய சில வெளிப்படையான எண்ணங்கள்

நண்பர்கள் கோவி கண்ணன் மற்றும் லக்கிலுக் ஆகியோர் இது சம்பந்தமாக பதிவுகள் போட்டு விட்டனர். இப்போது டோண்டு ராகவனுடைய முறை என்று கூறி முரளி மனோஹர் ரொம்பவுமே படுத்துகிறான். ஆகவே நானும் உங்களைப் படுத்த வந்தேன், தன்னானா தன்னானா (பக்க வாத்தியம் உருமி மேளம்).

கோவி கண்ணன் தனது பதிவில் சொன்னது:
“கடந்த ஒரு வார காலத்தில் "பிரபல" பதிவர்கள் எழுதும் பதிவுகள் எதுவும் தமிழ்மணம் சூடான இடுகையில் வருவதில்லை, பதிவு திரட்டப்படுகிறது, ஆனால் சூடான இடுகையில் காட்டப்படவில்லை, கட்டம் கட்டப்பட்டதாக தெரிகிறது. எந்த அறிவிப்பும் இன்றிய நடவடிக்கையாக புரிகிறது”. பின்னாலேயே ஒரு பின்னூட்டத்தில் அவரே கூறினார், “அதிர்ஷ்டப் பார்வை எது எழுதினாலும் சூடாகும், அப்பறம் நம்ம அவதூறு ஆறுமுகம் பதிவும், வெள்ளிக்கிழமை கேள்வி பதில்கள் பதிவர் பதிவுகளும் காணும்”.

அதில் நான் இட்டப் பின்னூட்டம்:
“எக்ஸ்யூஸ் மீ, இங்கே என்ன நடக்குது?
உங்க பதிவின் விஷயம் பற்றி. நானும் கவனித்தேன். நீங்கள் சொல்வதுபோலத்தான் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஃபில்டர் செய்ய மென்பொருள் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
சமீபத்தில் 1960-களில் பேசும்படம் என்ற மாதப் பத்திரிகை வந்தது. அதில் ஆண்டுதோறும் சிறந்த நடிகர், நடிகையர், நகைச்சுவை நடிகர் என்றெல்லாம் தெரிவு செய்வார்கள். எல்லா ஆண்டும் சிவாஜி கணேசனே விடாது வந்ததால் மற்றவர்களுக்கும் சான்ஸ் தரவேண்டும் என்ற ரேஞ்சில் யோசித்து அவரை இது சம்பந்தமான பார்வையிலிருந்து விலக்கி வைத்தனர்”.

ஆக சந்தடி சாக்கில் நால்வரை (அடியேனையும் சேர்த்து) சிவாஜின் கணேசன் ரேஞ்சுக்கு உயர்த்தி விட்டதாக குற்றம் சாட்டும் முரளி மனோஹரை தற்போதைக்கு அலட்சியம் செய்கிறேன்.

முதலில் எனக்கு இது சம்பந்தமாக ஒரு க்யூரியாசிடி மட்டும் இருந்தது, அதாவது இம்மாதிரி செய்ய மென்பொருள் உண்டா என்பது பற்றி. அவ்வாறு செய்ய இயலும், வெறும் கோடிங் போதும் என்று கோவி அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார். இத்தருணத்தில் இன்னொரு விஷயஞானமும் பெற்றேன். அதாவது பின்னூட்டங்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பக்கங்களிலும் வரும் என்பதை. அது தெரிய நான் சில பைத்தியக்காரத்தனமான பின்னூட்டங்கள் போட வேண்டியிருந்தது. கோவியும் பொறுமையாக அதை எனக்கு விளக்கினார். ஆக, இந்த நிகழ்ச்சி எனக்கு புதிய தகவலைத் தந்தது.

இப்போது லக்கிலுக்கின் பதிவுக்கு வருவோம். அவருக்கே உரித்தான கிண்டல் நடையில் அவர் எழுதுகிறார்:

“முன்னணி திரட்டியில் முக்கியப் பதிவர்களின் பதிவுகள் சூடான இடுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருப்பதாக கோவி.கண்ணன் பதிவிட்டிருக்கிறார். அந்த திரட்டியின் நிர்வாகி அண்ணையோடு பிரச்சினை வந்தபோதே இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்பார்த்தவன் என்பதால் எனக்கு ஏமாற்றம் எதுவுமில்லை. சில பேரை முற்போக்கானவர்கள் என்று நினைத்து ஏற்கனவே ஏமாந்துப் போனதாலும் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான, பிற்போக்கான, அல்பத்தனமான விஷயங்கள் எதுவும் இப்போது பெரியதாக பாதித்துவிடுவதில்லை.

திரட்டி அவ்வாறு செய்யாது என்று வாதிடுபவர்களை பாவம், பரிதாபம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மாயவரத்தான் என்பவருக்காக ஸ்பெஷல் கோடிங் உருவாக்கப்பட்டது ஏற்கனவே ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மாயவரத்தானுக்கு தனியாக புரோகிராமிங் செய்தவர்கள் கோவிக்கோ, செந்தழலுக்கோ, டோண்டுக்கோ, லக்கிக்கோ செய்யமாட்டார்கள் என நம்புவது மடத்தனம். சூடான இடுகைகள் தவறான நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுகிறது என்று தோன்றினால் சம்பந்தப்பட்ட பதிவை, தகுந்த காரணம் கூறி முடக்குவதில் தவறேதுமில்லை. என் பதிவை அவ்வாறு முடக்கி இருப்பார்களேயானால் அவர்களால் தகுந்த காரணம் கூறமுடியாது என்று உறுதியாக நம்புகிறேன். இப்போது நான் ஜட்டிக்கதைகள் எதுவும் எழுதுவதில்லை.

இந்த விஷயம் பொய்யென்று மறுக்க அவ்வப்போது ஒன்றிரண்டு பதிவுகளை சூடான இடுகைகளில் காட்டுவார்கள் என்று நினைக்கிறேன். தினமும் சூடான இடுகைகளாக கோழி முட்டை போடுவதைப் போல போட்டுத் தள்ளிய தோழர் அதிஷாவின் பதிவுகள் வாரத்துக்கு ஒன்றுதான் இப்போது சூடாகிறது என்பது இதற்கு தகுந்த உதாரணம். என் பதிவுக்கான ஹிட்ஸ் என்னவென்று எனக்கு மட்டுமல்ல, என் வலைப்பதிவின் முகப்பில் இருக்கும் கவுண்டரை பார்ப்பவர்கள் எல்லோருக்குமே தெரியும். அதுபோலவே சூடான இடுகைகளில் தற்போது இடம்பிடிக்கும் பதிவுகளின் ஹிட்ஸ் என்னவென்றும் எல்லோருக்கும் தெரியும் என்பதாலும், சூடான இடுகைகளில் இடம்பெறுவது பல்கலைக்கழகங்களில் கொடுக்கப்படும் டாக்டர் பட்டத்துக்கு இணையானது அல்ல என்பாதலும் சும்மா விட்டுத் தள்ளு மச்சி என்று விட்டுத் தள்ள வேண்டியது தான்.

இப்பதிவு சூடான இடுகைகளில் வரவே வராது என நம்புவதால் பதிவுக்கு தலைப்பூ சூடான இடுகை என்று வைத்திருக்கிறேன்”. பல்கலைக் கழகங்களில் நன்கு படித்து பரீட்சை பாஸ் செய்தபிறகு தரும் பட்டம் என அவர் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன். மற்றப்படி அரசியல் வியாதிகளுக்கு பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களது மன அரிப்புக்கு சொரிந்து விட ஏற்ற வகையில் தரும் டாக்டர் பட்டம் ரொம்பவுமே கேவலமானது, சில சிறந்த விதிவிலக்கு தருணங்கள் தவிர.

“வாங்கய்யா வாங்க, கோவி கண்ணன், லக்கிலுக் அருமையா எழுதிட்டாங்க, நீ என்ன சொல்லப் போறே”? என்று சாலமன் பாப்பையா குரலில் கேட்கிறான் முரளி மனோஹர். என்ன சொல்வதற்கு இருக்கிறது? அவ்விருவரும் நான் கூற நினைத்ததை கூறிவிட்டனர். ஆகவே அவற்றை நானும் கூறியதாக எடுத்து கொண்டு மேலும் சில பார்வைகளைத் தரும் எண்ணத்தில் உள்ளேன்.

எனது நாகரிகத்தைத் தொலைத்த பெயரிலி என்னும் பதிவும் இந்த டெவலப்மெண்டுக்கு ஒரு காரணம் என நினைக்கிறேன். இது சம்பந்தமான சில விளக்கங்கள் அளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். நான் இப்பதிவே போட்டிருக்கக் கூடாது என்ற ரேஞ்சுக்கு பலர் எனக்கு அட்வைஸ் செய்தனர். எங்கோ மூலையில் ஒரு மாதத்துக்கும் மேலாக யாருமே பார்க்காத பெயரிலியின் பின்னூட்டத்தை நான் எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியதாக, அப்பின்னூட்டத்தை கண்டுகொள்ளாது அசால்ட்டாக விட்டிருந்த சம்பந்தப்பட்ட பதிவரும் கூறினார். என்ன செய்வது, என் கண்களில் பட்டு தொலைத்து விட்டது. ஓசைப்படாமல் விஷம் இட்டு விட்டு எஸ்கேப் ஆனவரை நாமும் அவ்வாறே விட்டு விடவேண்டுமா? ஆகவேதான் பரவாயில்லை என நான் அதை வெளிக்கொணர்ந்தேன். முக்காடு போட்டு கொண்டு அப்பின்னூட்டத்தை இட்ட மகானுபாவர் வெளியே வர வேண்டியதாயிற்று. அவர் யார் எப்படிப்பட்டவர் என்பதும் வெளியில் தெரிந்தது. இப்போது எல்லாமே ஓப்ப்னாக வந்து விட்டது, அதுவும் நல்லதற்கே. மற்றப்படி தீவிர ராம பக்தையான எனது மகளுக்கு ஒரு கெடுதலும் வராது என்பதில் நான் உறுதியாகவே இருக்கிறேன். ஆகவே அந்த சாபம் என்னை பாதிக்கவில்லை. ஏன் இந்த விபரீத ஆசை இந்த மனிதருக்கு என்று மட்டும்தான் எழுதினேன். ஆக அப்பதிவை போட்டதில் வருத்தமில்லை. இந்தத் தருணத்தில் எனது கருத்துக்களை பல இடங்களில் தீவிரமாக மறுத்து எழுதிய/இன்னும் எழுதும் லக்கிலுக் தனது ஒரு பதிவின் மூலம் எனக்கு நல்ல சப்போர்ட் தந்ததற்கு அவருக்கு ஒரு சல்யூட். அவரது அப்பதிவுதான் அவரும் கட்டம் கட்டப்பட்டதற்கு காரணம் என நினைக்கும்போது எனக்கு சற்று வருத்தமே.

சரித்திரம் திரும்பும் என்று சொல்வார்கள். ஆனால் அவ்வாறு திரும்பும்போது சற்றே அபத்தமாக் இருக்கும் என்றும் கூறுவார்கள். அதாவது, “History repeats itself, first as tragedy, second as farce.” (Karl Marx). போலி விஷயத்திலும் அப்படித்தான் சாதாரண கருத்து வேறுபாடு ஆரம்பித்து மூன்றாண்டுகள் சூறாவளியாக நீடித்தது. அப்போதும் நான் அதை இக்னோர் செய்திருக்க வேண்டும் எனக் கூறியவர்கள் பலர் இருந்தனர். அத்தருணத்திலும் விடாது நான் சண்டை போட்டேன். அதனாலும், மற்ற நண்பர்கள் உதவியாலும் போலி முழுமையாக அடையாளம் காணப்பட்டு இடத்தை காலி செய்தான். இக்னோர் செய்திருந்தால் இன்னும் ஒரு புரையோடிய புண்ணாகத்தான் இருந்திருப்பான். இப்போதும் ஒரு கருத்து வேற்றுமைதான் ஒரு மூத்த பதிவரை என் மகளை சம்பந்தப்படுத்தி பின்னூட்டம் போட வைத்தது. ஆனால் போன முறை மாதிரி டெவலப் ஆகாது என நம்புகிறேன். பை தி வே, செந்தழல் ரவியை கட்டம் கட்டியதற்கு காரணம் தெரியவில்லை. யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள்.

இம்மாதிரியான கட்டம் கட்டுவது புதுக்கோட்டுக்கு ஜூட்டுக்கு இன்னொரு நல்ல உதாரணம்.

இம்மாதிரி ஒவ்வொருவராக கட்டம் கட்டப்பட்டதை பார்த்ததும் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தில் ஒரு சீன் எனக்கு ஞாபகம் வந்தது. அது என்னவாக இருக்கும் என யாரேனும் ஊகிக்க இயலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

45 comments:

  1. நான் தெரிந்தால் சொல்லுகிறேன் :))

    நீங்கள் மூவரும் பதிவு போட்டுவிட்டதால் நானும் போடவேண்டும் என்று இல்லையே ? :))

    அதனால் வழக்கம்போல பதிவுகள் போடப்போகிறேன்...

    இதுபற்றி கண்டுகொள்ளாமல்..!!!

    ReplyDelete
  2. மீ த பர்ஸ்ட்டாக இருக்கக்கூடுமோ ? அப்படி இருந்த me the first.

    ReplyDelete
  3. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
    ஆதவன் மறைவதில்லை
    ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
    அலைகடல் ஓய்வதில்லை

    மயிலாட வான்கோழி தடை செய்வதோ
    மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
    முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ

    புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
    மக்கள் தீர்ப்புக்கு எதிராக .........

    ReplyDelete
  4. ஊருக்காக உழைக்கும் கைகள்
    உயர்ந்திட வேண்டாமோ
    அவை உய‌ரும் போது
    இம‌ய‌ம் போலத் தெரிந்திட‌ வேண்டாமோ

    ReplyDelete
  5. நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
    இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
    புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
    நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
    இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
    கடமை செய்வோம் கலங்காமலே
    உரிமை கேட்போம் தயங்காமலே
    கடமை செய்வோம் கலங்காமலே
    உரிமை கேட்போம் தயங்காமலே
    வாருங்கள் தோழர்களே
    ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

    ReplyDelete
  6. ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
    தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
    கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
    கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
    கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
    கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
    புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்

    கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
    களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
    நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
    நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே

    ReplyDelete
  7. உண்மையாக சொல்ல வேண்டுமானால், உங்களின் உப்பு, சப்பில்லாத சூடான் பதிவுகளை விட கடந்த வாரம் நான் விரும்பி படித்த சூடான இடுகைகள் ஏராளம்.

    ReplyDelete
  8. //நான் தெரிந்தால் சொல்லுகிறேன் :))

    நீங்கள் மூவரும் பதிவு போட்டுவிட்டதால் நானும் போடவேண்டும் என்று இல்லையே ? :))

    அதனால் வழக்கம்போல பதிவுகள் போடப்போகிறேன்...

    இதுபற்றி கண்டுகொள்ளாமல்..!!!//

    மிக நல்ல முடிவு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. ஏமாற்றாதே ஏமாற்றாதே

    அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
    எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
    அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
    எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
    சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
    சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
    தக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்

    ReplyDelete
  10. தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
    மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
    மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
    மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு

    ReplyDelete
  11. அய்யா,

    என்னுடைய 'உங்களையெல்லாம் திருத்தவே முடியாது' என்ற பதிவில்

    நான்: என்னோட பதிவு எதுவும் சூடான இடுகை ஆக மாட்டேங்குதே

    நலம் விரும்பி: தோசக்கல்லுல வச்சு இடுகையப் போடுங்க !


    == என்று போட்டிருக்கிறேன்.

    நடுவில் சில நாள் சூடான இடுகைகளை எடுத்துவிட்டிருந்தனர். இப்போது மீண்டும் சூடான இடுகை வந்துவிட்டது. கூடவே ....

    ஆனால் ஒன்று. எனக்கு இந்தக் கவலை இல்லை. நம் பதிவுதான் சூடாகாதே:)))

    ReplyDelete
  12. புலியை பார் நடையிலே
    புயலை பார் செயலிலே
    புரியும் பார் முடிவிலே
    விரட்டினால் முடியுமா
    மிரட்டினால் படியுமா

    ReplyDelete
  13. சத்தியம் தோற்றதுண்டா


    உலகில் தர்மம் அழிந்ததுண்டா?


    இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்


    சஞ்சலம் வருகின்றதா?


    சஞ்சலம் வருகின்றதா?

    ReplyDelete
  14. நீதி தெருவினில் இருக்காது!


    தேடியும் கிடைக்காது


    நீதி தெருவினில் இருக்காது!


    சாட்டைக்கு அடங்காது


    நீதி சட்டத்தில் மயங்காது!


    காலத்தில் தோன்றி கைகளை நீட்டி


    காக்கவும் தயங்காது!


    காக்கவும் தயங்காது!

    ReplyDelete
  15. கால மகள் கண் திறப்பாள் சின்னையா

    நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா

    அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா

    ReplyDelete
  16. கண்ணதாசன் பாடல்கள் போடும் அளவுக்கு இது பெரிய விஷயமே இல்லை. வெறும் சுண்டைக்காய் மேட்டர்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. //dondu(#11168674346665545885) said...
    கண்ணதாசன் பாடல்கள் போடும் அளவுக்கு இது பெரிய விஷயமே இல்லை. வெறும் சுண்டைக்காய் மேட்டர்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்//


    கோவியாரின் இதே மேட்டரைப் பற்றிய பதிவில் அவரது நண்பர்கள் 250 பின்னூட்டத்திற்கு மேல் போட்டு
    ஒரு புதிய சாதனை செய்தது போல்

    இன்று பாட்டு வரிகளாலே ஒரு 100 பின்னூட்டம் போடவேண்டும் என்று
    இருந்த எனக்கு
    இந்த சூடான மேட்டரை
    சுண்டைக்காய் மேட்டர்
    என்று சொல்லி விட்டீர்களே.

    ReplyDelete
  18. //இன்று பாட்டு வரிகளாலே ஒரு 100 பின்னூட்டம் போடவேண்டும் என்று
    இருந்த எனக்கு
    இந்த சூடான மேட்டரை
    சுண்டைக்காய் மேட்டர்
    என்று சொல்லி விட்டீர்களே.//

    ஓ அப்படியா, நடத்துங்கள். கும்மிகள் எப்போதுமே வெல்கம்தான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. உண்மையிலே ஒரு சூடான மேட்டர்


    நெருப்பில்லாமல் புகையுமா என்பது போலா!


    இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல துறைகளில் முன்னேற்றம் உள்ளதாய் சொல்லப் படும் ஒரு மாநிலத்தை தன் கட்டுப் பாட்டில் வைத்துள்ள ஒரு கட்சியை,சாணக்கியத் தந்திரம் செய்து அதன் அடிப்படை கொள்கைக்கு, மூல காரணமாய் உள்ள பகுதியை சேர்ந்தவர்,
    தனாதாக்கி கொள்ள முயற்சி செய்தார் என,பலவகைகளில் மோதல்கள் நடந்து,பின் சமாதானம் ஆகிவிட்ட நிலையில்,அவர் இடைபட்ட காலத்தில் தனது தொழிலுக்கு போட்டியாய் நடத்திய,சித்தியின் கணவரின் பேரை தனாதாக்கி கொண்டவரை, அவரது, திருவிளையாடலுக்கு நியாயம் கேட்கச் சென்ற இடத்தில் வார்த்தை முற்றி சிறு கைகலப்பாம்.கடைசியில் குடும்பத்தில் மூத்தவர் தலையிட்டு ,மன்னிப்பு -சமரசம் ஆகிள்ளதாய் ஊரெங்கும் பேச்சு.

    அதிர்ஸ்டப் பார்வையாளரும்,ஆங்கிலப் பத்திரிக்கையும் இதைச் சொலவதால்


    நெருப்பில்லாமல் புகையுமா என்பது போலா


    சின்ன அம்பானிகள்-புல்டோசர் நடவடிக்கைகள்-அர்த்த சாஸ்திரம்-விதி வலியதாம்.

    ReplyDelete
  20. மிக மிக அனாவசியமான பதிவு, எதற்கு முடிந்து போன விசயத்தை இப்படி கிளறுகிறீர்கள் என்று புரியவில்லை ??? உங்கள் பதிவுகள் "சூடான இடுகைகளில்" வராதபடி தமிழ்மணம் செய்து விட்டது என்பது உறுதியாகத் தெரியுமா ?

    I dont understand this rumour mongering, Sorry to say this :-(

    ReplyDelete
  21. @என்றென்றும் அன்புடன் பாலா

    முடிந்து போன விஷயம் என்றுதான் நானும் நினைத்தேன். ஆகவே இரண்டு நாட்கள் நிலையை ஆராய்ந்து, பிறகுதான் பதிவு போட்டேன். நடந்த விஷயம் அவலை நினைத்து உரலை இடித்த கதை, குழந்தைத்தனமானது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  22. //dondu(#11168674346665545885) said...
    @என்றென்றும் அன்புடன் பாலா

    முடிந்து போன விஷயம் என்றுதான் நானும் நினைத்தேன். ஆகவே இரண்டு நாட்கள் நிலையை ஆராய்ந்து, பிறகுதான் பதிவு போட்டேன். நடந்த விஷயம் அவலை நினைத்து உரலை இடித்த கதை, குழந்தைத்தனமானது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்//


    அப்போம்
    இதுவும்
    சும்மா
    லுலாயிதானா?

    நம்ம
    பதிவுலக
    வாசிப்பு
    ஜனங்களெல்லாம்
    என்னவோ
    எதோன்னு

    பாசக் கார பயலுவளை
    இப்படி பதற வைக்கணுமா?

    தமிழ்நாடு பூரா மறியல்,கதவடைப்பு,ஊர்வலம்,சாகும் வரை உண்ணாவிரதம்,ஆர்பாட்டம் இப்படி புதுசு புதுசா யோசிச்சு
    பண்ண இருந்தாங்க.

    பெரிய பெரிய பிளக்ஸ் பேனர்
    கொடிகள் எல்லாம் கூட தயார்.

    கடைசியாக கிடைத்த தகவல்:
    லக்கிலுக்கார்,கோவியார்,செந்தழலார்,ராகவனார்
    நால்வரின் மெகா கூட்டணியை பார்த்து ......




    முக்கிய வேண்டுகோள்:

    பெரியவங்க
    வித்தியாசமாய்
    எண்ணாதிங்க
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .

    எல்லோர்
    கண்களூம்
    இனி
    பனித்து
    சிறக்கட்டும்
    எல்லோர்
    நெஞ்சங்களும்
    இனித்து
    மகிழட்டும்

    ReplyDelete
  23. //இரண்டு நாட்கள் நிலையை ஆராய்ந்து, பிறகுதான் பதிவு போட்டேன். நடந்த விஷயம் அவலை நினைத்து உரலை இடித்த கதை, குழந்தைத்தனமானது.
    //

    நான் நான்கு நாட்கள் நிலையை ஆராய்ந்தேன், முதலில் என்னுடையது மட்டும் தான் என்று நினைத்தேன், அதன் பிறகு தான் வழக்கமாக சூடான இடுகைப் பதிவர்களை காணும் என்பதே தெரிந்தது. ஏன் எடுத்தார்கள் என்ற காரணம் சொல்லாவிட்டாலும், இவர்களையெல்லாம் எடுத்திருக்கிறோம் என்றாவது சொல்லி இருக்கலாம். :)

    ReplyDelete
  24. இது பற்றி ஜ்யோய்ராம் சுந்தரின் பதிவில் இட்ட பின்னூட்டதை இங்கேயும் தருகிறேன்..

    கோவிகண்ணன், செந்தழல் ரவியின் குடுமிபிடி சண்டை தமிழ்மணம் அறிந்ததே!
    இருப்பினும் இதற்க்காக அவர்களை சூடான இடுக்கையில் இருந்து தூக்கியது தவறு. நாகரிகமான முறையில் தனிமனித தாக்குதலை தவிருங்கள் என்று சொல்லியிருக்கலாம்.

    டோண்டு மற்றும் லக்கியின் நிலைப்பாடு நியாயமானது, தமிழ்மணம் அட்மின்களில் ஒருவர் என கருதப்படும் பெயிரிலியின் பொறுப்பற்ற பேச்சுகளை கண்டித்தது மட்டுமே அவர்களது செயல்,

    இந்த சூழ்நிலையில் ரவி டோண்டு மற்றும் லக்கிக்கு பகிரங்க ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கதக்கது,

    ஆக இந்த செயல் டோண்டு மற்றும் லக்கிக்கு எதிராக எடுக்கபட்டது என்றால், கோவிகண்ணன் மற்றும் செந்தழல் ரவி பலிகடா ஆக்கபட்டுள்ளார்கள்.

    குறைந்த பட்சம் அதற்கு என காரணம் என்று கூட அறிவிக்காமல் இருப்பது எதேச்சதிகாரம் அல்ல சர்வாதிகராம் என்றே சொல்லலாம்!

    விளம்பரரீதியாக அல்லது தனக்கு தேவைப்படும் பதிவர்களை மட்டும் தமிழ்மணம் வடிகட்டுவதாக தெரிகிறது.

    இதற்கு தமிழ்மணம் பதில் அளித்தே ஆகவேண்டும்.

    ReplyDelete
  25. //ஒவ்வொருவராக கட்டம் கட்டப்பட்டதை பார்த்ததும் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தில் ஒரு சீன் எனக்கு ஞாபகம் வந்தது. அது என்னவாக இருக்கும் என யாரேனும் ஊகிக்க இயலுமா?//

    சஸ்பென்ஸ் தாங்கல!
    நீங்களே சொல்லிருங்க

    ReplyDelete
  26. //சஸ்பென்ஸ் தாங்கல!
    நீங்களே சொல்லிருங்க//
    ஊர்வசி தன் தோழர்களுடன் சேர்ந்து அடாவடி செய்து பாக்கியராஜ் கையால் தாலி வாங்கிக் கொண்ட அடுத்த நாள் பாக்கியராஜ் தனது கிளாசில் அட்டெண்டன்ஸ் எடுக்கும் காட்சி ஞாபகம் இருக்கிறதா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. //வால்பையன் said...
    இது பற்றி ஜ்யோய்ராம் சுந்தரின் பதிவில் இட்ட பின்னூட்டதை இங்கேயும் தருகிறேன்..

    கோவிகண்ணன், செந்தழல் ரவியின் குடுமிபிடி சண்டை தமிழ்மணம் அறிந்ததே!
    இருப்பினும் இதற்க்காக அவர்களை சூடான இடுக்கையில் இருந்து தூக்கியது தவறு. நாகரிகமான முறையில் தனிமனித தாக்குதலை தவிருங்கள் என்று சொல்லியிருக்கலாம்.

    டோண்டு மற்றும் லக்கியின் நிலைப்பாடு நியாயமானது, தமிழ்மணம் அட்மின்களில் ஒருவர் என கருதப்படும் பெயிரிலியின் பொறுப்பற்ற பேச்சுகளை கண்டித்தது மட்டுமே அவர்களது செயல்,

    இந்த சூழ்நிலையில் ரவி டோண்டு மற்றும் லக்கிக்கு பகிரங்க ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கதக்கது,

    ஆக இந்த செயல் டோண்டு மற்றும் லக்கிக்கு எதிராக எடுக்கபட்டது என்றால், கோவிகண்ணன் மற்றும் செந்தழல் ரவி பலிகடா ஆக்கபட்டுள்ளார்கள்.

    குறைந்த பட்சம் அதற்கு என காரணம் என்று கூட அறிவிக்காமல் இருப்பது எதேச்சதிகாரம் அல்ல சர்வாதிகராம் என்றே சொல்லலாம்!

    விளம்பரரீதியாக அல்லது தனக்கு தேவைப்படும் பதிவர்களை மட்டும் தமிழ்மணம் வடிகட்டுவதாக தெரிகிறது.

    இதற்கு தமிழ்மணம் பதில் அளித்தே ஆகவேண்டும்.//


    vaalpaiyan kelvi niyaamthaane?

    ReplyDelete
  28. மழைவிட்டும் தூவானம் இன்னும் விடவில்லை போலிருக்கு!

    ReplyDelete
  29. தமிழ்மணத்தின் இது சம்பந்தமான பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://blog.thamizmanam.com/archives/158#comment-4735

    //அது தவிர தமிழ்மணத்தின் சேர்க்கை விதிகளுக்கு முரண்பட்ட சில பதிவுகளும் சூடாக்கும் பரபரப்புக்காக மட்டுமே தலைப்பிடும் சில பதிவர்களின் பதிவுகளும் தற்போது சூடான இடுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றன.//

    அப்படியா, நன்று. அந்த சில பதிவர்கள் யார்?

    எனது சமீபத்திய பதிவுகளின் ஒரு பகுதி லிஸ்ட் கீழே தந்திருக்கிறேன். மேலே நீங்கள் சொன்னது எனது எந்தப் பதிவுக்குப் பொருந்தும் என கூற இயலுமா?

    1. நன்றி தமிழ் ஓவியா மற்றும் விடுதலை!
    2. டோண்டு பதில்கள் 19.12.2008
    3. புதுக்கோட்டுக்கு ஜூட் - 3
    4. புதுக்கோட்டுக்கு ஜூட் - 2
    5. புதுக் கோட்டுக்கு ஜூட்!
    6. போகட்டும் விடு நண்பா, சண்டை வேண்டாம்
    7. சோ அவர்கள் எழுதிய அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - 4
    8. டோண்டு பதில்கள் 12.12.2008
    9. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது
    10. நாகரீகத்தைத் தொலைத்த பெயரிலி
    11. ஒவ்வொரு பேச்சுக்கும் ஒரு டெம்பிளேட் இருக்கும் போல
    12. ஜென் கதை தூண்டிய எண்ணங்கள்
    13. ஒரு தவறு இன்னொரு தவற்றை நியாயப்படுத்தாது
    14. எனக்கொரு மகன் பிறப்பான்

    இப்பின்னூட்டத்தை நிஜமாகவே டோண்டு ராகவன்தான் இட்டான் என்பதை குறிக்க இதன் நகலை எனது இபதிவிலும் பின்னூட்டமாக வரும். பார்க்க: http://dondu.blogspot.com/2008/12/blog-post_22.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  30. தத்தம் சொந்தப் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்படும் பதிவுகளுக்கு, பொது மன்றமான தமிழ்மணம் திரட்டிதான் கிடைத்ததா? இக்குறும்பை இத்திரட்டி முன்வந்து தடுக்கவேண்டுமா, கூடாதா?

    சொந்த விஷயங்களை வைத்துப் பதிவுகள் போடுபவர்களுக்குப் புரிந்தால் சரி.

    அது சரி!!

    ReplyDelete
  31. //Anonymous said...
    தத்தம் சொந்தப் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்படும் பதிவுகளுக்கு, பொது மன்றமான தமிழ்மணம் திரட்டிதான் கிடைத்ததா? இக்குறும்பை இத்திரட்டி முன்வந்து தடுக்கவேண்டுமா, கூடாதா?

    சொந்த விஷயங்களை வைத்துப் பதிவுகள் போடுபவர்களுக்குப் புரிந்தால் சரி.

    அது சரி//


    டோண்டு ஐயா அவர்கள் தனது பதிவில் சொந்த கதை மட்டும் சொல்வதில்லை.

    அவரது அனுபவங்கள் பற்றிய பதிவுகள்
    தரும் படிப்பினைகள் பலப் பல.

    அவர் பிராமண வகுப்பை சார்ந்தவர் என்றாலும் ஈரோடு பெரியார் பற்றிய பதிவுகளில் எந்த ஒரு காழ்ப்பு உணர்வு இல்லாமல் அவரது மேன்மைகளை தைரியாமாய் பதிந்துள்ளார்.

    அதே போல் தாழ்த்த பட்ட வகுப்பினர் , முன் உள்ள தடைகளை அவர்கள், உடைத்து முன்னேற வேண்டும் என உளப் பூர்வமாய் சொல்லும் பண்பாளர்.

    ஆண்,பெண் கற்பு நிலை பற்றி நல்ல முற்போக்கு எண்ணம் உள்ளவர்.

    கம்யூனிசம் பேசுவதுதான் பேஷன் என எண்ணும் உலகில் தனியார் மயத்தை தைரியமாய் ஆதரித்து அவர் பேஷாய் எழுதிய பதிவகள் பல .

    கொண்ட கொள்கையை மாற்றாத குணவான்.

    பார்ப்பனரை பிறர் தாக்கும் போது ,பிற பிராமணப் பதிவர்கள் ஒதுங்கும் போது தைரியமாய் பிராமண துவேஷத்தை எதிர்க்கும் போராளி.

    சோ,ராஜாஜி,மோடி இவர்களது திறமைகளை பாராட்டி எழுதுவதால் வரும் தனி மனிதத் தாக்குதல்களை ஆண்மையோடு சந்தித்து வெற்றி வாகை சூடும் பெரியவர்.

    தன்னை திட்டி வரும் பின்னூட்டங்களையும் ,தாராளமாய் அனுமதித்து, நற் பண்பு காப்பவர்.

    இறை பக்தி வேறு ,மூட நம்பிக்கை வேறு எனபதில் தீர்க்கமான முடிவு உள்ள பகுத்தறிவுச் செம்மல்.

    தினம் அவரது பதிவுகள் சராசரியாய் 500 முதல் 600 பார்வையாளர்களால் பார்க்கபடுவதற்கு இன்றைய ஹிட் கவுண்டரே சாட்சி.

    முன்பு போலி டோண்டுவை வெற்றி கொண்டார்.

    சதி வலைகள் சாமர்த்திய சாலியின் முன்னால் சூசுபி

    இந்தப் அறப் போரிலும் ஜெயிப்பார்.

    தென்திருப்பேரையில் சேவை சாதிக்கும் மகர நெடுங்குழைக்காதர்,துணை நின்று, டோண்டு ராகவப் பெரியவாளை,
    என்றும் ஆசிர்வாதித்து காப்பார்.
    இது வாஸ்தவமான சத்யம்.


    போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித்
    தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
    ஏற்றதோர் கருத்தைஎன துள்ளம் என்றால்
    எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்

    ReplyDelete
  32. This is too much Sriram. Dondu will be just embarrassed.

    Murali Manohar

    ReplyDelete
  33. //dondu(#11168674346665545885) said...
    This is too much Sriram. Dondu will be just embarrassed.

    Murali Manohar//

    டோண்டு ஐயா ,
    உங்கள் பதிவுகளில் பெரும் பகுதி படித்து விட்டுதான் இதை சொல்லியுள்ளேன்.
    அது உங்களுக்கு மிகையாய் தெரியலாம்.
    சொல்ல வேண்டியவற்றை, சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்ல வேண்டிய இடத்தில்,சொல்ல வேண்டியவர்களிடம் ,சொல்லத் தவறுவதால் பல விசயங்கள் வெளியுலகுக்கு தெரியாமலே போய்விடுகிறது.


    தங்களை பற்றி எழுதியவை, தங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியதாய்,மனம் திறந்து , சொல்வதே தங்களின் பண்பு கலந்த அடக்கத்தை காட்டுகிறதே.
    இதை பார்த்த பின்னராவது பெரியவரைப் பற்றிய விமர்சனங்கள் நாகரிகம் கலந்ததாய் வரட்டுமே.
    எழுதப் படும் வாசகங்கள் என்றும் அருமை காக்கட்டுமே!

    பெரியவரின் அனுபவத்திலிருந்து இளையவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம்,ஏராளம்.

    ReplyDelete
  34. //டோண்டு ஐயா அவர்கள் தனது பதிவில் சொந்த கதை மட்டும் சொல்வதில்லை.//

    படு ஜோக்கா கீது

    ReplyDelete
  35. //அவரது அனுபவங்கள் பற்றிய பதிவுகள்
    தரும் படிப்பினைகள் பலப் பல.//

    எசமான் துரை எம்மாம் பெரிய ஆளு

    ReplyDelete
  36. //அவர் பிராமண வகுப்பை சார்ந்தவர் என்றாலும் ஈரோடு பெரியார் பற்றிய பதிவுகளில் எந்த ஒரு காழ்ப்பு உணர்வு இல்லாமல் அவரது மேன்மைகளை தைரியாமாய் பதிந்துள்ளார்//

    ஆங் மெய்யாலும்

    ReplyDelete
  37. //அதே போல் தாழ்த்த பட்ட வகுப்பினர் , முன் உள்ள தடைகளை அவர்கள், உடைத்து முன்னேற வேண்டும் என உளப் பூர்வமாய் சொல்லும் பண்பாளர்//

    அம்பேத்காரு அண்ணாத்தையோட தம்பி

    ReplyDelete
  38. //தென்திருப்பேரையில் சேவை சாதிக்கும் மகர நெடுங்குழைக்காதர்,துணை நின்று, டோண்டு ராகவப் பெரியவாளை,
    என்றும் ஆசிர்வாதித்து காப்பார்.
    இது வாஸ்தவமான சத்யம்.//

    எங் குலச் சாமி காப்பாத்தும்

    ReplyDelete
  39. //தினம் அவரது பதிவுகள் சராசரியாய் 500 முதல் 600 பார்வையாளர்களால் பார்க்கபடுவதற்கு இன்றைய ஹிட் கவுண்டரே சாட்சி.//

    சபாசு சபாசு சபாசு

    ReplyDelete
  40. //கொண்ட கொள்கையை மாற்றாத குணவான்//

    படு ஸ்ட்ராங்கு தலைவரு

    ReplyDelete
  41. //சோ,ராஜாஜி,மோடி இவர்களது திறமைகளை பாராட்டி எழுதுவதால் வரும் தனி மனிதத் தாக்குதல்களை ஆண்மையோடு சந்தித்து வெற்றி வாகை சூடும் பெரியவர்//

    இதுலே அவரு கில்லிங்கோ

    ReplyDelete
  42. //பார்ப்பனரை பிறர் தாக்கும் போது ,பிற பிராமணப் பதிவர்கள் ஒதுங்கும் போது தைரியமாய் பிராமண துவேஷத்தை எதிர்க்கும் போராளி.//


    எதிரி டாப்பா எகிறிடுமில்லே

    ReplyDelete
  43. //முன்பு போலி டோண்டுவை வெற்றி கொண்டார்.

    சதி வலைகள் சாமர்த்திய சாலியின் முன்னால் சூசுபி//


    அப்படி போடு அருவாளை

    ReplyDelete
  44. //dondu(#11168674346665545885) said...
    This is too much Sriram. Dondu will be just embarrassed.

    Murali Manohar//

    நூறு ,ஆயிரம் சொல்லுவிக சாதி சனங்களே

    பெரிய மனுஷன்
    பெரிய மனுஷன் தானுங்கோ.

    ReplyDelete
  45. any change of state, in respect of your post


    "சூடான இடுகைகள் பற்றிய சில வெளிப்படையான எண்ணங்கள்"


    in tamilmanam 's rating

    ReplyDelete