நிரந்தர பக்கங்கள்

6/18/2009

டோண்டு பதில்கள் - 18.06.2009

எவனோ ஒருவன்:
1. மயிரு என்பது கெட்ட வார்த்தையா? சினிமாக்களில் எல்லாம் இந்த வார்த்தை வரும்போது சென்சார் செய்யப்படுகிறதே?
பதில்: அது எந்த இடத்தின் மயிரை குறிக்கிறது என்பதில் ஐயமில்லாததால்தான் அப்படி. பல காண்டக்ஸ்டுகளில் வெறுமனே ஒருவனது பெண் உறவினரின் உறவு முறையை கூறி நிறுத்தினாலே, வெட்டு குத்துக்கு வழிவகுக்குமே. உதாரணத்துக்கு ரன் படத்தில் விவேக் வெறுமனே கையேந்தி பவனில் மினரல் வாட்டர் இருக்கிறதா எனக் கேட்பதற்காக அக்வா ஃபினா என யதார்த்தமாக கேட்க, அக்கா பேரையெல்லாம் சொன்னால் வெட்டிடுவேன் என கடைக்காரர் கூறும் சீன் நினைவிருக்கிறதா?

2. பல நாடுகளில், அந்த நாடு முழுவதும் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்.... எனுமாறு இருக்கிறது. ஆனால் நமது இந்தியாவைப் பார்த்து மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இத்தனை வேறுபட்ட மக்கள் இருந்தும் ஓரே நாடாக இருப்பது அரிது அல்லவா? இதே போல பல மொழி, பல கலாச்சாரம் உள்ள நாடுகள் ஏதும் உள்ளனவா?
பதில்: எனக்குத் தெரிந்து சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா இருந்தன. அவை பிளவுபட்டது கூட பெரும்பாலும் பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டுமே.


வால்பையன்:
1. குமுதத்தில் பிராமணர்களை பற்றி எழுதிவிட்டார்களா!
பதில்: இல்லை

2. அப்படி எழுதினால் யாரை பாராட்டி எழுதுவார்கள்!
பதில்: அப்படி எழுத ஆரம்பித்தால் அதற்கெனவே பல பக்கங்கள் போட வேண்டியிருக்கும்.

3. மற்ற சாதியினர் சமூகத்துக்காக பாடுபடும் போது ஏன் பிராமணர்கள் அவர்களது சாதிக்கு மட்டும் பாடுபடுகிறார்கள்!
பதில்: மற்ற எல்லா சாதியினரும் அவர்கள் மேல் காரணமற்ற வெறுப்பைக் காட்டும்போது வேறு எந்த எதிர்வினை எதிர்பார்க்கிறீர்கள்? அதே சமயம் எனக்கு தெரிந்து நாடார் சங்கமோ, வன்னியர் சங்கமோ வேறு எந்த ஜாதி சங்கமோ எதுவாக இருந்தாலும், தத்தம் ஜாதிக்காகத்தான் பாடுபடுகின்றன என்பதுதான் நிஜம்.

4. பிறக்கும் போதே பார்பனன் புத்திசாலி என்ற எண்ணம் உங்களுக்கு உண்டா?
பதில்: புத்திசாலிகள் எல்லா சாதியிலும் உண்டு, முட்டாள்கள் இருப்பது போலவே. இதை ஒத்துக் கொள்வதில் என்ன பிரச்சினை?

5. கடவுளுக்கு சேவை செய்வதும், பிச்சை எடுத்து வாழ்வதும் ஒன்றா! சிலர் அந்த பேரில் இதை செய்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்!
பதில்: செல்வந்தர்கள் கூட திருப்பதிக்கு செல்லும்போது பிச்சை எடுத்து பணம் சேர்த்து வருவதாக வேண்டி கொள்வார்கள். அது ஒரு உயர்ந்த தத்துவத்தை போதிக்கிறது. அதாவது அடக்கத்தை கற்று கொடுக்கிறது. அதை செய்பவர்கள் தன்னையே அறிகின்றனர். தெய்வ நிலைக்கு உயர இதுவும் ஒரு வழியே.

6. திராவிட சொம்பு தூக்கிகள் ஒரு சில பார்பனரை தாக்குவது போல் மொத்த பார்பனரையும் தாக்கும் போது என்ன தோன்றும்!
பதில்: சம்பந்தப்பட்ட சொம்புதூக்கிகள் தங்களுக்கு கீழ்நிலையில் உள்ள மற்ற சாதியினரை மட்டமாக நடத்துவதில் ஒரு குறைவும் வைக்க மாட்டார்கள். அதை மறைக்கவே இந்த பார்ப்பன தாக்குதல்கள் என்பதிலும் ஒரு ஐயமுமில்லை. உதாரணத்துக்கு, பார்ப்பனர்களை சாடிய பெரியார் தலித்துகளுக்கு வன்கொடுமை செய்த பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் குறித்து கள்ள மௌனம் சாதித்துள்ளார்.

7. இந்து மதம் ஆரியர்கள் கொண்டு வந்தது என ஒப்பு கொள்கிறீகளா?
பதில்: தெரியாது, நான் கூட இருந்து பார்த்ததாக நினைவில்லை.

8. கடவுளின் பிரதிநிதியாக பார்பனனும், சமஸ்கிருதமும் இருப்பது ஏன்?
பதில்: அப்படி என்று யார் சொன்னது?

9. கடவுள் நம்பிக்கை இல்லாதவனை விட, கடவுள் நம்பிகையாளர்கள் நாகரிகமற்று நடந்து கொள்கிறார்களே! இது தான் மதம் கற்று கொடுத்ததா?
பதில்: ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை இல்லாதவன், போல் பாட்டும் அவ்வாறே. . அவர்கள் என்ன நாகரிகமாக நடந்து கொண்டனர்? முதலில் நீங்கள் கேட்ட கேள்வியின் செய்தியை உதாரணங்களுடன் நிலைநிறுத்துங்கள், பார்க்கலாம்.

10. இதுவரை கடவுள் என்ற சொல்லால் ஏமாற்றுகாரர்களை தவிர யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை ஒப்புகொள்கிறீர்களா?
பதில்: கடவுள் பெயரால் சொர்க்கம் நரகம் பற்றி பேசியதில் அதர்மம் செய்ய பயப்படுபவர்கள் உள்ளனர். அதுவே லாபம்தானே.


அனானி (12.06.2009, மாலை 06.15-க்கு கேட்டவர்)
1. தலைவர் கலைஞரின் காலத்திற்கு பின்னால் திமுக இரண்டு அல்லது மூன்றாய் உடையுமா?
பதில்: உடையும். எது எப்படியானாலும், தனக்கு பிறகு எது வேண்டுமானாலும் நாசமாகட்டும் என்ற மனநிலைக்கு கலைஞர் வந்திருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன். அவ்வாறு இருந்தால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்பதையும் கூறிவிடுகிறேன்.

2. அழகிரி/தயாநிதி/ஸ்டாலின்/கனிமொழி யார் கை ஓங்கும்?
பதில்: அழகிரி

3. ராகுலின் சாணக்கியம் தமிழ்நாட்டில் செல்லுமா?
பதில்: திராவிடக் கட்சிகளின் தோள்களில் சவாரி இருக்கும் வரை என்ன சாதுர்யம் இருந்து என்ன பயன்?

4. ஜெ க்கு எதிர்காலம்?
பதில்: கலைஞர் செய்யவிருக்கும் தவறுகளைப் பொருத்தது.

5. பெரியவர் சிவகங்கை சிதம்பரத்தின் நூலிழை வெற்றி பற்றி?
பதில்: நூலிழையானால் என்ன, மயிரிழையானால் என்ன வெற்றி வெற்றிதானே?


அனானி (13.06.2009, இரவு 08.33-க்கு கேட்டவர்)
1. அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு விட்டதா?
பதில்: கஷ்டம்தான். கடைசியாக முப்பதுகளில் வந்த கிரேட் டிப்ரஷன் கூட சீக்கிரமே போய்விடும் என்றுதான் நினைத்தார்கள். இரண்டாம் உலக மகாயுத்தம் வரை நிலைமை மோசமாக இருந்ததாகத்தான் அறிகிறேன். அதாவது ஏழு ஆண்டுகள். இப்போது என்னாகுமோ யார் அறிவார்?

2. பின் எப்படி ஜெனரல் மோட்டார் போன்ற பெரிய நிறுவனம் கூட?
பதில்: அமெரிக்கா இன்னும் பொருளாதாரச் சரிவிலிருந்து மீளவில்லை என்பதால்தான் இது நடக்கிறது.

3. உங்கள் பாஜகவில் என்ன புதுக் குழப்பம்?
பதில்: என்ன முன்னுரிமைகள் தருவது என்பதில் தெளிவில்லாததே காரணம். பொருளாதார சீர்திருத்தம்தான் முதன்மையான தேவை. ராமர் கோவில் அல்ல. மோடியைத் தவிர யாரும் இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

4. இனி காங்கிரசுக்கு ஒரே ஆனந்தக் கொண்டாட்டம்தானா?
பதில்: காசுக்கு மூணு பொடவை வித்தாலும் நாயின் சூத்து அம்மணம்தான் என்ற ஒரு சொலவடை உண்டு. விநோதரச மஞ்சரி என்னும் புத்தகத்தில் படித்துள்ளேன். அது போல காங்கிரஸ் நிலைஅமை தமிழ்நாட்டைப் பொருத்தவரை பாவம்தான். ஆனந்தப்பட ஒன்றும் இல்லை.

5. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் போலுள்ளதே?
பதில்: எனக்கு அப்படித் தோன்றவில்லை.

அனானி (14.06.2009 காலை 05.35-க்கு கேட்டவர்):
1. கொங்கு மண்டலத்தில் கள் இறக்குவோர் போராட்டம் பற்றி?
பதில்: அதற்கு எனது ஆதரவு உண்டு. (என் ஆதரவால் என்ன பயன் எனக் கேட்டால் ஒன்றும் இல்லை என்பதுதான் பதில் என்பது வேறுவிஷயம்)

2. மது ஆறாய் ஓடும் போது கள்ளுக்கு மட்டும் தடை ஏன்?
பதில்: அதானே, வெப்பமான சீதோஷ்ணத்துக்கு கள் நல்லது என கேள்விப்பட்டுள்ளேன். உண்மையா?

3. கள்ளச் சாராயம் கலாச்சாராம் குறைந்துள்ளாதா?
பதில்: கள்ளச் சாராயத்தில் கிக் அதிகம் என நினைப்பவர்கள் இருக்கும் வரை அதற்கு குறைவே வராது.

4. தேர்தலில் திமுகவை எதிர்த்து வேலை செய்த திரைப் படத்துறையினரை தண்டிக்கப் போவதாய் பேசினார்களே?
பதில்: ஈழப்பிரச்சினை காரணமாக அவ்வாறு செய்தவர்கள் அறியாத ஒரு விஷயம் என்னவென்றால் அப்பிரச்சினை நமது தேர்தலில் பங்கு ஏதும் வகிக்கவில்லை என்பதே. ஆகவே புத்தியென்று ஏதேனும் இருந்தால் அரசு அவர்களை அலட்சியம் செய்வதே சரியாக இருக்கும்.

5. நடிகர் விஜய்காந்த் கட்சி அதிமுகவுக்கு(பாமக) ஆப்பு, நடிகர் விஜய் கட்சி யாருக்கு?
பதில்: விஜயகாந்த் கட்சிக்கு இருக்குமென்றால் சந்தோஷமே.


அனானி (14.06.2009 காலை 09.18-க்கு கேட்டவர்)
1. தலைக்கனம் பிடித்து அலைபவர்களின் இறுதி முடிவு?
பதில்: ஒருவன் தலைகுப்புற வீழ்வதற்கு முன்னால் அவன் அனுபவிக்கும் உணர்ச்சி தலைக்கனம் என்பதை பார்த்தால் உங்கள் கேள்விக்கு விடை வெள்ளிடைமலை.

2. கிராமத்து மக்களின் நல்ல ஆரோக்கியம் தொடர்கிறதா?
பதில்: மருத்துவ வசதிகள் இல்லாத கிராமத்தில் நோஞ்சான்கள் சீக்கிரமே மரணமடைய, நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்களின் சதவிகிதம் அதிகம். அதனாலேயே கிராமத்து மக்கள் அதிக வலிமையுடன் இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது என்பது எனது கருத்து.

3. இக்கால அரசியலில் அதிகமாய் பொறுமை காக்கும் அரசியல்வாதி யார்?
பதில்: ஸ்டாலின். இவ்வளவு ஆண்டுகள் பொறுமைக்கு கிட்டிய பலன் உதவி முதல்வர் பதவி.

4. சிலருக்கு (எந்தத் தகுதியும் இல்லாமல்) மட்டும் தொடர் வெற்றி எப்படி சாத்தியமாகிறது?
பதில்: இதையெல்லாம் பார்க்கும்போது முற்பிறவி பற்றிய இந்து மதக் கோட்பாட்டுக்கு வலு சேருகிறது.

5. கடைசியில் கோவை ஈசா யோக மைய நிறுவனரும் (ஜக்கி வாசுதேவ்) அரசியல் பிரவேசம்?
பதில்: அவர் அரசியலுக்கு வந்துள்ளதாக நான் எங்கும் இதுவரை கேள்விப்படவேயில்லையே. அப்படியே வந்தால்தான் என்ன? அது அவரது தனிப்பட்ட உரிமை/விஷயம்.


அனானி (15.06.2009, காலை 05.56-க்கு கேட்டவர்)
1. இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்று தருவோம், எனும் ப. சிதம்பரம் அவ்ர்களின் கூற்று 2011 தமிழக தேர்தலை மனதில் வைத்தா?
பதில்: நான் அப்படி நினைக்கவில்லை ஏனெனில் இலங்கைப் பிரச்சினை இந்தியத் தேர்தல்களில் ஒரு காரணியாக இல்லை எனத் தெரிந்து விட்டதே.

2. தமிழக சிறைகளில் நடநத நிகழ்ச்சிகளை பார்த்தால் சினிமாவையும் மிஞ்சிவிடும் போலுள்ளதே?
பதில்: இந்த மட்டில் வெல்டிங் குமார் போன்ற தாதாக்கள் ஒழிந்தார்கள் அல்லவா. அதுவே திருப்தி அளிக்கிறது. கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பதும் நிஜமே.

3. ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஸ்டாலினின் திறமைக்கு ஒரு அச்சாரமா?
பதில்: அதை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதைப் பார்த்த பிறகுதான் கூறவியலும்.

4. பெரும் லாபம் சம்பாதிக்க மாம்பழங்களைப் பழுக்க வைக்கப் கார்பைடு கல்லை பயன்படுத்தும் வியாபாரிகளை (என்ன செய்யலாம்)?
பதில்: Godown-ல் அதே மாம்பழங்கள் மற்றும் கார்பைட் கல்களுடன் அவர்களையும் போட்டு வைக்கலாம்.

5. சென்னையில் ஹோட்டல் பண்டங்கள் விலை உச்சத்துக்கு போய் விட்டதே அரசின் கட்டுப்பாடு எங்கே போச்சு (20 ரூபாய் அள்வு சாப்பாடு உட்பட)
பதில்: அளவுச் சாப்பாடு போடச் சொன்னார்கள் சரி, ஆனால் அந்த உணவை தயாரிக்கும் செலவுகளை கட்டுப்படுத்த ஏதுவாக மூலப் பொருட்களை சலுகை விலைக்கு அரசு தந்ததாமா? வெறுமனே ஓட்டு பொறுக்கும் வேலைதான் இது. இந்த அரசியல்வியாதிகள் ஓட்டு பொறுக்குவதற்காக எல்லோர் தலையிலும் கை வைப்பார்கள். அதுவே டாஸ்மாக்கில் என்ன விலை வைத்து விற்றாலும் காசு கொடுத்து ஊற்றிக் கொள்கிறார்களே. தேர்தல் முடிந்தது, அளவுச் சாப்பாடும் போச்சு.


அனானி (15.06.2009 காலை 05.55-க்கு கேட்டவர்):
1. தென்மேற்கு பருவ மழை ஏமாற்றுகிறதா?
பதில்: ஆம், நினைக்கவே பயமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை என படிக்கிறோம், ஆனால் நங்கநல்லூரில் மழை என்பதே இல்லை. நிலத்தடி நீர் வேறு வேகமாக இறங்கி வருகிறது.

2. நாற்கரசாலை வேலைகள் முடிய இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்,இந்த தாமதத்திற்கு டி.ஆர்.பாலு கல்லாகட்டியதுதான் காரணமா?
பதில்: அரசியல் காரணங்களால் தாமதம் ஏற்படுகிறது. கல்லா கட்டுவது எல்லாம் சகஜம்தானே, இதில் டி.ஆர். பாலு என்ன, வேறு எந்த சராசரி அரசியல்வாதியும் விலக்கல்ல. எல்லோரும் மோடி ஆக முடியுமா?

3. இந்த தடவை ம்ன்மோஹன் சிங் லகானை(பணம் கொட்டும் துறைகளின் மந்திரிகளை) இழுத்து பிடிப்பார் போலுள்ளதே, மெகா ஊழலுக்கு வாய்ப்பிருக்காதாம், நம்பலாமா?
பதில்: ஊழல் பணத்தில் பங்கு கேட்கும் பலமான நிலையில் காங்கிரஸ் உள்ளது என வேண்டுமானால் கூறலாம்.

4.காங்கிரஸுக்கு இந்த தடவை திமுக தேவை இல்லாதபோதும் இவ்வளவு கரிசனம் ஏன்?(பார்முலா கசமுசா)
பதில்: தேவை இல்லை என எப்படி கூற இயலும்? தனி மெஜாரிட்டியாக இருந்திருந்தால் நிலைமையே வேறுதான். ஆனால் அதுதான் கிடைக்கவில்லையே.

5. 2011 ல் காங்கிரஸ் ஆட்சி கோஷம் கலைஞரை கடுப்பேத்தவா?இல்லை ஆட்சியில் பங்கு பெறவா?
பதில்: கலைஞர் அப்படியே மந்திரி பதவிகள் காங்கிரசுக்கு தந்தாலும், அங்குள்ள கோஷ்டி சண்டைகள் அதிகமாவதுதான் மிச்சம், அந்த அசிங்கம் அரங்கேற வேண்டாம் என காங்கிரஸ் நினைக்கிறது போலுள்ளது. எது எப்படியானாலும் இப்போதைக்கு ஆட்சியில் பங்கு கேட்காதிருப்பதே புத்திசாலித்தனம். இல்லாவிட்டால் மாநில அரசின் குற்றங்களுக்கும் காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.


சிவகுமார்:
1. துக்ளக்கின் சமீபத்திய ஐந்து இதழ்கள் தவிர்த்து பிற பழைய இதழ்கள் ஆன்லைனில் இலவசமாக கிடைக்கிறதே?
பதில்: அப்படியா, நல்ல செய்திதான். சுட்டி தர இயலுமா?

2. 20-20ல் இந்தியா இப்படி சொதப்பி விட்டதே?
பதில்: மூன்று ரன்களில் கோட்டை விட்டார்கள். கிரிக்கெட்டில் எதுவுமே சாஸ்வதம் இல்லை என்பதுதான் நிஜம்.

3. பகைவனுக்கருள்வாய் என்ற பதம் சோனியாவிற்கு பொருந்தும் போலிருக்கிறதே? (சங்மாவின் மகளுக்கு மந்திரி பதவி அளித்ததின் மூலம்)
பதில்: ஒரு வேளை ஆடு பகை குட்டி உறவு கான்சப்ட் பிரகாரம் சோனியா செயல்படுகிறாரோ என்னவோ, யாரோ அறிவார்?

4. மீண்டும் மாநில சுயாட்சி என்கிறாறே கருணாநிதி!! (காங்கிரசை வெறுப்பேற்றவா?)
பதில்: இல்லை, தனது அல்லக்கைகளை வெறுப்பேற்ற. இப்ப எப்படி கருணாநிதிக்கு சப்பைக்கட்டு கட்டுவாங்களாம்?

5. கத்திப்பாரா மேம்பாலம் வந்ததால் விரைவாக உங்கள் பகுதிக்கு செல்ல முடிகிறதாமே?
பதில்: சத்தியமான உண்மை. அதுவும் பட் ரோட் தரப்பிலிருந்து ஜி.எஸ்.டி. ரோடுக்கு வரும் இணைப்பு ஏதோ திருப்பதி மலைசாலை வளைவு ரேஞ்சில் இருந்து இம்ப்ரெஸ் செய்கிறது.

6. சென்னையில் இவ்வளவு மரங்கள் இருந்தும் ஏன் வெப்பம் அதிகம்?
பதில்: இன்னும் அதிக மரங்கள் தேவை. இருப்பது போதாது என்பதால்தான் நீங்கள் சொல்வது போல வெப்பம் அதிகமாகவே உள்ளது.

7. மளிகை பொருட்கள் பாக்கெட்டில் - பாக்கெட் கலாச்சாரம் நம்மை சீரழித்து விடும் போலிருக்கிறதே?
பதில்: எவ்வாறு இவ்விதம் கூறுகிறீர்கள்?

8. பேப்பர் உபயோகத்தைக் குறையுங்கள் என்பவர்கள் கம்ப்யூட்டரை அதிகம் உபயோகித்து மின்சார உபயோகத்தை கூட்டுகின்றனரே?
பதில்: கம்ப்யூட்டர் வைத்திருந்தும் சகட்டுமேனிக்கு பிரிண்ட் அவுட் எடுக்கிறார்கள். பேப்பர் மட்டும் எங்கே மிச்சம் ஆகிறதாம்?

9. "எங்கே பிராமணன்" நேற்றைய (15-6-2009) பகுதி மிகவும் நன்றாக இருந்தது. இதே போன்ற வேகத்தில் சென்றால் தொடர் எப்போது முடிவடையும்?
பதில்: அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்? சொல்லிவைத்தாற்போல பவர் கட் அந்த நேரம் பார்த்து. நொந்து விட்டேன். அடுத்த நாள் பிற்பகல் வரை வீடியோ சுட்டியும் கிடைக்கவில்லை. பிறகு லேட்டாக மாலை ஐந்து மணியளவில் மூன்று துண்டுகளாக போடப்பட்டுள்ளது. அது பற்றி பதிவு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் மேலும் எழுதுகிறேன்.

10. சமீபத்தில் நீங்கள் மிகவும் ரசித்துப் படித்த சினிமா தொடர்பான கிசுகிசு!!
பதில்: சினிமா விஷயங்கள் எல்லாம் படிப்பதில்லை. கடைசியாக நான் ரசித்த கிசு கிசு மூக்குத்தி என்னும் பத்திரிகையில் சமீபத்தில் 1978-ல் வந்தது. அதை வேண்டுமானால் சொல்லட்டுமா?

அதில் “வந்த வதந்தியும் விசாரித்த உண்மையும்” என்று சுவையான வம்புகள் வரும். உதாரணம்: வதந்தி என்னவென்றால் வியட்னாம் வீடு சுந்தரத்துக்கு வலது உள்ளங்கையில் அம்மன் அருள் என்பதே. விசாரித்த உண்மை: அம்மன் அருள் எல்லாம் இல்லை. சுந்தரத்துக்கு அவரது தங்கமணியுடன் ஏற்பட்ட சண்டையில் அம்மணி மேற்படி சுந்தரததை சமையலறையில் வைத்து தள்ளி விட, அதே நேரே அடுப்பின் மேல் சூடாக இருந்த தோசைக்கல்லின் மேல் வலது உள்ளங்கையை பதித்து அடுப்பின் மேல் விழ, அந்த சூட்டைத்தான் அம்மன் அருள் என்று கூறுவதாக செய்தி வந்தது.

11. சிதம்பரம் மீண்டும் தனது கடும் கண்டனத்தை தெரிவிக்க ஆரம்பித்து விட்டாரே?
பதில்: யாருக்கு? எந்த செய்தியை குறிப்பிடுகிறீர்கள்?

12. என்ன இருந்தாலும் மன்மோகன்சிங் பொம்மைதானே?
பதில்: ஆமாம்

13. பாரதிய ஜனதாவில் நடக்கும் உட்கட்சிப் பூசல் மிகவும் கீழ்த்தரமாகவும் சகிக்க முடியாததாகவும் உள்ளதே?
பதில்: பா.ஜ.க, தானும் ஒரு அரசியல் கட்சி மட்டுமே என்பதை தேவைக்கதிக அளவில் காட்டி வருகிறது. அக்கட்சிக்கு இது நல்லதல்ல.

14. இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்திய வேகம் ஒகேனெக்கல் விவகாரத்தில் காட்டுவாரா ஸ்டாலின்?
பதில்: கட்ட விடுவாரா மு.க.?

15. சென்னையில் வீட்டு வாடகை அதிகரித்துக் கொண்டே போகிறதே?
பதில்: அப்படியா? ஐ.டி.காரர்கள்தான் இப்போதும் காரணம் என்கிறீர்களா?

16. தமிழ்நாடு கடலால் அழிந்த லெமுரிய கண்டம் போல் அழியும் போலுள்ளதே? குமரி கடல் 1 1/2 கிலோ மீட்டர் உள்வாங்கி விட்டதாமே?
பதில்: கடல் உள்வாங்குவது கவலையளிக்கும் விஷயம். அதே சமயம் இயற்ககிக்கு முன்னால் மனிதன் இன்னும் சுண்டைக்காய்தான்.

17. பன்னாட்டு நிறுவனங்களில் பிளாஸ்டிக், பேப்பர் கப், டிஸ்யூ பேப்பர் முதலியவற்றின் குப்பைகள் அதிக அளவில் சேர்க்கின்றனரே!! ரீசைக்கிளிங் செய்வரா?
பதில்: பகல் கனவு எல்லாம் காணலாகாது.

18. உண்மையிலேயே நயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்து விட்டாரா?
பதில்: அது அவர்களது சொந்த விஷயம்.

19. தூக்கம் மனிதனுக்கு நல்லதா? கெட்டதா?
பதில்: தேவைக்கேற்ற அளவு தூக்கம் அவசியமே. அதே சமயம் கும்பகருண தூக்கமும் தவறான விளைவுகளை ஏற்படுத்தும்.

20. சமீபத்தில் நீங்கள் மிகவும் ரசித்த அரசியல் தொடர்பான கிசுகிசு!!
பதில்: இங்கு போய் பாருங்கள்.

அனானி (17.06.2009 காலை 06.17-க்கு கேட்டவர்) (அது என்ன சொல்லி வச்சாப் போல 32 கேள்விகள்)?
1. தமிழக சட்டப் பேரவையில் காங்கிரஸ் செயல்பாடு எப்படி இருக்கும் என எண்ணுகிறீர்கள்?
பதில்: ஒரு நாள் சூரத்தனமாக பேசுவார்கள், மறு நாள் சோனியாவிடம் டோஸ் வாங்கி அமைதி காப்பார்கள். எது எப்படியானாலும் இப்போதைய நிலைமையில் மாநில மந்திரி சபையில் பங்கு கேட்காமல் இருப்பதே நல்லது. ஒரு பேச்சுக்கு கருணாநிதி அவர்கள் நான்கு கேபினட் மந்திரி பதவி காங்கிரசுக்கு தருவதாக வைத்து கொள்ளுங்கள். அங்கு உள்ள 40 கோஷ்டிகளுக்குள் சண்டை மண்டை உடையும். பல வேட்டிகள் அவிழ்க்கப்படும். இதெல்லாம் தேவையா?

2. பா.ம.க மீண்டும் பல்டி அடித்து திமுக பக்கம் போனால் ஜெ என்ன பேசுவார்?
பதில்: முன்னமேயே அவ்வாறு நடந்த போது பேசியதற்கு ஒரு மாற்று கூட குறையாமலே பேசுவார். இதில் என்ன ஐயம் உங்களுக்கு?

3. கம்யூனிஸ்டுகள் கலைஞர் பக்கம் தாவத் தயாரயிருப்பது எதில் சேர்த்தி?
பதில்: அரசு ஆதரவு தரும் சுகங்களுக்கு அவர்கள் அடிமை ஆனதைத்தான் இது குறிக்கிறது.

4. கொடநாட்டு அரசியின் சகாப்தம் அவ்வளவுதானா?
பதில்: கருணாநிதி அவர்கள் ஏதேனும் சொதப்பல் செய்யாமல் போய்விடுவாரா என்ன?

5. திமுகவின் வெற்றிக்கு வி.காந்த் கட்சியின் எம்ஜிஆர் ஓட்டுவங்கி பிளப்பும் ஒரு காரணமா?
பதில்: ஆம், அதில் என்ன சந்தேகம்? அதற்காகவே விஜயகாந்த் லம்ப் ஆக பணம் வாங்கியதாகக் கூட கூறப்பட்டதே.

6. ராகிங் கொடுமை தீரவே தீராதா?
பதில்: இன்று ராகிங் செய்பவர்கள் முன்னால் ராகிங் செய்யப்பட்டவர்களே. இன்று செய்யப்படுபவர்கள் நாளை அசெய்யப் போகிறவர்களே. மனித இயற்கை அது.

7. தயாநிதியின் ஆரமப செயல்பாடுகள் கனஜோராய்?
பதில்: சாதாரணமாகவே அவர் திறமைசாலிதானே, இதில் என்ன சந்தேகம்?

8. ரஷ்யாவுக்கு இந்தியாவின் பொருளாதார உதவி?
பதில்: அப்படி எங்கும் செய்தி ஏதும் பார்க்கவில்லையே. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் சுட்டி தாருங்களேன்.

9. மத்திய பட்ஜெட் மத்தியதர வர்க்கத்திற்கு இனிக்குமா/கசக்குமா?
பதில்: இப்போதுதானே தேர்தல் முடிந்துள்ளது? அடுத்த தேர்தல் வரும் முன்னால் மேலும் 4 பட்ஜெட்டுகள் வரும். நான்காம் பட்ஜெட்டில்தான் மத்தியதர வர்க்கத்தினருக்கு இனிய ஆச்சரியங்கள் இருக்கும். இப்போது அப்படி ஏதும் இருக்காது என நம்பலாம்.

10.பெட்ரோல் விலை ஏறினால் யாருக்கு கொண்டாட்டம்/திண்டாட்டம்?
பதில்: முறையே பெட்ரோல் கம்பெனிகள், மக்களுக்கு கொண்டாட்டம் மற்றும் திண்டாட்டம்.

11. தொழில் போட்டியில் கொலைகள் பற்றிய செய்திகள்?
பதில்: தொழில் போட்டி என்பது ரொம்ப சீரியஸான விவகாரம். மாட்டிக் கொள்ளாமல் கொலை செய்ய முடிந்தால் கண்டிப்பாக செய்வார்கள்.

12. கல்லூரிகள்/பள்ளிகள் அடிக்கும் பகல் கொள்ளை (கட்டண்ங்கள் அதீத உயர்வு)?
பதில்: அவ்வளவு காசு கொடுத்தும் அதற்கேற்ப பலன்கள் இல்லையே. அப்படி இருந்தால் அவை கொள்ளைகள் அல்ல. ஆனால் இப்போதைய நிஜத்தில் அவை கொள்ளைகளே.

13. கேரளா, தமிழக குமரி மாவட்ட கிராமத்தை கபளிகரம் பண்ண முயலுவது?
பதில்: கேள்வியின் பின்புலன் புரியவில்லை.

14. மகாத்மாவை விமர்சித்த மாயாவதி?
பதில்: மகாத்மாவை போகிறவர் வருகிறவர் எல்லாம் விமரிசனம் செய்தாகி விட்டது. அவர்கள் வரிசையில் மாயாவதி. அதுக்க என்ன செய்வது.

15.மும்பை தாக்குதல் விசாரணை-ராஜிவ் கேசு மாதிரிதானா?
பதில்: முழுக்க முழுக்க தீவிரவாதச் செயலை விசாரித்தால் சிறுபான்மையினர் கோபிப்பார்களே என அடக்கி வாசித்தால் நாடு எப்படி உருப்படும்?

16. இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தமிழக மீனவர் மீது?
பதில்: கண்டிக்கத் தக்கது.

17. பெரியாறு அணையில் கேரளா அரசின் பிடிவாதம், அடக்குமா மத்திய அரசு? அடங்குமா கேரளா?
பதில்: எது எப்படியிருந்தாலும் நதி நீர் விஷயத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு இருந்தாலும் இம்மாதிரி சண்டை வரத்தான் வரும். அதிலும் கேரளாவில் காங்கிரஸ் சார்பு அரசு. ஆகவே இரண்டுமே சந்தேகம்தான்.

18. ஆஸ்திரேலியாவிலும் நமக்கு(மாணவ்ர்க்கு) அடியா?
பதில்: ஆஸ்திரேலியர் கொழுப்பெடுத்து அலைகின்றனர். அவர்களௌக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். அங்கு உள்ள இந்தியர்களும் ஒரே குரலில் பேசுவது அவசியம்.

19. பிசாசு பர்மூடா முக்கோணம் உண்மையா?
பதில்: அது பற்றி இணையத்தில் எண்ணற்ற பக்கங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவறில் ஒன்றை இங்கே பாருங்கள். கதை கதையாக சொல்கிறார்கள்.

20. சேது சமுத்திரத் திட்டம் வருமா?
பதில்: வரும் ஆனால் வராது (நன்றி என்னத்த கன்னையா)

21. கனிமொழியின் அடுத்த திட்டம் என்னவாய் இருக்கும்?
பதில்: இது வரைக்கும் போட்ட திட்டம் ஏன் வற்றியடையவில்லை என்பதை ஆராயவே நேரம் இருக்காது போகிருக்கே.

22. மம்தாவின் செயல்பாடு லல்லுவை பின்னுக்கு தள்ளுமா?
பதில்: முதலில் லாலு அளவுக்கு சாதனை புரியட்டும். பிறகு மற்றதை பார்க்கலாம்.

23. ரயில்வேயில் மலிவு விலை சாப்பாடு திட்டம் வெற்றி பெறுமா?
பதில்: ரயில்வேயில் தேவை நல்ல சாப்பாடு. அதை கொடுக்கச் சொல்லுங்கள். விலை இரண்டாம் பட்சமே.

24. சென்னையில் பன்றிக்காய்ச்சல் உண்டா?
பதில்: ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு பன்றிக் காய்ச்சல் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டு அவர்கள் சென்னை விமான நிலையத்திலலிருந்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்தி வந்தது. சரியான பதிலுக்கு ஓவர் டு ப்ரூனோ.

25. சென்னையில் போக்குவரத்து நெரிசல் இப்போது குறைந்துள்ளதா?
பதில்: என்ன தமாஷான கேள்வி?

26. சமத்துவபுரங்களின் உண்மையான நிலை என்ன?
பதில்: இந்த செய்தியை பாருங்கள். நீங்களே முடிவு செய்யுங்கள்.

27. உழவர் சந்தைகளுக்கு பழைய மெளசு இருக்கா?
பதில்: திமுக அரசு இருந்தால் மௌசு, அதிமுக அரசு இருந்தால் சங்கு. இங்கே கூறப்படுவதை கவனிக்கவும்.

28. சென்னையில் ஹெல்மட் கட்டாயமா?
பதில்: உயிரை காக்க அது கட்டாயமே. அது போதாதா.

29. அமெரிக்காவில் வங்கிகளின் தொடர் திவால்?
பதில்: வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் ரெண்டணா, கடைசியில் துந்தனா என்பதை பெரிய அளவீட்டில் பார்த்தால் வங்கிகளின் தொடர் திவால் நிலை புரியும்.

30. அரசு பென்ஷன் பெறுபவ்ர்கள் நிம்மதியாய் உள்ளனரா?
பதில்: ஆட்டமேடிக்காக பஞ்சப்படி உயர்வு விலைவாசிகளுக்கு ஏற்ப வருகிறதே. நான் சமீபத்தில் 1981-ல் சி.பி.டபிள்யூ.டி. யை விட்ட போது சம்பளம் 1190 ரூபாய்கள். இப்போது பென்ஷன் 4060 ரூபாய்கள்.

31.அது என்ன பாம்புக் கடி சிக்கன்?
பதில்: பாம்பை விட்டு சிக்கனை கடிக்கச் செய்து, பிறகு சிக்கனை சமைக்கின்றனர். இதனால் மனித உடலில் எதிர்ப்பு சக்தி கூடுமாம். இங்கே எழுதியுள்ளனர்.

32. மருத்துவ காப்பீடு திட்டம் தரும் கம்பெனிகளில் (சொந்த அனுபவம்) எது பரவாயில்லை?
பதில்: எனக்கு இதில் சொந்த அனுபவம் இல்லை. ஆகவே பதிலளிக்க என்னிடம் விஷயம் இல்லை.


சேதுராமன்:
1. அதென்ன - முப்பத்தி இரண்டு கேள்விகள் - சாமுத்திரிகா இலட்சணமா?
பதில்: 64 கேள்விகள் இல்லையே என அல்ப திருப்தி கொள்ள வேண்டியதுதான். அப்போது ஒரு வேளை ஆய கலைகள் 64 என்பார்களோ? இப்படியும் இருக்கலாம், ஒவ்வொரு கேள்வியும் பல்லை உடைக்கும் என எண்ணீ 32 பற்கள் எண்ணீக்கை அளவுக்கு நிறுத்தி கொண்டிருப்பார்களோ?

2. ஆற்காட்டாருக்கும், துரைமுருகனுக்கும் கிடைக்காத ஷொட்டு, துணை முதல்வருக்கு எத்தனை சீக்கிரம் கிடைத்தது பார்த்தீர்களா?
பதில்: இதானே போங்கு வாணாங்கறது? ஆற்காட்டாரும் துரைமுருகனும் மகனாகி விடமுடியுமா?

3. பா.ஜ.க. ரேழிக் கேஸ்தானா?
பதில்: அவர்கள் சீக்கிரம் சுதாரித்து கொள்வது கட்சிக்கும் நல்லது, ஜனநாயகத்துக்கும் நல்லது.

4. லால்கார் (Lalgarh) விஷயத்தில், ப.சி.யின் அணுகுமுறை சரிதானா? மானில அரசையும், மாவோயிஸ்டுக்களையும் மோத விட்டு வேடிக்கை பார்ப்பது போல் இல்லை?
பதில்: அதாவது கள்ளா வா புலியை குத்து என்பது போல இருக்கிறது என்கிறீர்களா? சரி, சரி. சுவாரசியமான பார்வை கோணம்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

53 comments:

  1. //தென்மேற்கு பருவ மழை ஏமாற்றுகிறதா?

    நங்கநல்லூரில் தென்மேற்கு மழை பெய்கிறது என்றால் அது அரிதாக‌ பெய்யும் கோடை மழை போலத்தான்.தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறிப்பிடதக்க அளவு பொழியும் பகுதிகள் மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டம்.

    துக்ளக் முழுவதும் கட்டணப் பத்திரிகை அல்ல , நடப்பு வாரம், அதற்கு முந்தைய நான்கு வாரப்பத்திரிகையை இணையத்தில் படிக்க மட்டுமே சந்தா தேவை , அதற்கும் பழைய இதழ்களை இலவசமாக படித்துக்கொள்ளலாம்.

    நன்றி,
    ராம்குமரன்

    ReplyDelete
  2. ஆமாம் அல்லது இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லக் கூடிய கேள்விகள் உங்களுக்குப் பிடிக்காதுதானே?

    ReplyDelete
  3. 32. மருத்துவ காப்பீடு திட்டம் தரும் கம்பெனிகளில் (சொந்த அனுபவம்) எது பரவாயில்லை?
    பதில்: எனக்கு இதில் சொந்த அனுபவம் இல்லை. ஆகவே பதிலளிக்க என்னிடம் விஷயம் இல்லை.

    http://bimadeals.net/health-insurance/health-insurance.php?Camp=Goog_Jan_Content&adw=news_ind&Keyw=Live%20news%20india

    ReplyDelete
  4. @நாமக்கல் சிபி
    உங்கள் கேள்வி அடுத்த பதிவில் முதல் கேள்வியாக அதன் வரைவுக்கு சென்று விட்டது. நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. துக்ளக்கின் சுட்டி
    http://www.thuglak.com/thuglak/
    subscribe செய்து பின் username, password மூலம் login ஆனபின்,
    கீழே Archieve-யை கிளிக் செய்தால் அடுத்த ஸ்கிரீன்
    வரும். அதில் பழைய இதழ்களின் அட்டைப்படங்களுடன்
    வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். முதல் ஐந்து இதழ்கள்
    50% opacityயில் மங்கலாகத் தெரியும். மற்றவை மிகத்
    தெளிவாக 100% opacityயில் தெரியும். அவற்றை கிளிக்கின-
    ரல் அந்தந்த இதழ்களைப் படிக்கலாம்.

    பிளாஸ்டிக்-ல் மளிகை பொருட்கள் மூலம் பிளாஸ்டிக் மாசு
    அதிகரிப்பதால் அவ்வாறு கேட்டேன்.

    சினிமா தொடர்பான கிசு கிசு கேட்டால் நீங்கள் உங்கள்
    காலத்தில் வந்த 'வதந்தி'யைப் போய் கூறியிருக்கிறீர்களே!!
    ஆனாலும் நன்றாகத்தான் இருந்தது.

    சென்ற ஆண்டு நெருக்கடியான வேளையில் உள்துறை
    அமைச்சராக பொறுப்பேற்ற உடன் சிதம்பரம்
    நாட்டில் எங்கே தீவிரவாத தாக்குதல் நடந்தாலும்
    தீவிரவாதகளுக்கும் அதனை ஆதரிப்பவர்களுக்கும்
    கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டே இருந்தார்.
    இப்போது பாகிஸ்தான் மும்பை தாக்குதலில்
    தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் வீட்டுக்காவலில்
    இருந்து விடுதலை செய்ததை இந்தியா சார்பாக சிதம்பரமும்
    எஸ்.எம்.கிரு ்ணாவும் கண்டனங்களை பாகிஸ்தானுக்குத்
    தெரிவித்ததால் இவ்வாறு கேட்டேன்.

    அரசியல் தொடர்பான கிசுகிசு தெரிந்த செய்திதான்
    என்றாலும் லக்கிலுக் தனது பாணியில் சிறப்பாக எழுதியி-
    ருந்தார்.

    ReplyDelete
  6. முதலில் லாலு என்ன சாதனை செய்தார் என்பது புரிந்தால்
    தேவலை.

    என்னைப் பொறுத்தவரை லாலு மக்களுக்கு வேதனையையேத்
    தந்துள்ளார்.
    1. முன்பதிவு செய்வதை 2 மாதங்களில் இருந்து 3 மாதங்களாக
    உயர்த்தினார். இதனால் ஒரு அனுமானமாகத் தான் இந்த
    நாளில் செல்லப் போகிறோம் என்று முன்பதிவு செய்ய முடிந்தது.
    பலர் குருட்டாம் போக்கில் புக் செய்து விட்டு பயணம் தொடர
    ஒரு வாரம் இருக்கும் போது கேன்சல் செய்வது அதிகரித்தது.

    2. டட்கால் என்பது முன்பு தனியாக ஒரு கோச்சாக இருந்தது.
    இப்போது இருக்கும் இருக்கை அல்லது படுக்கைகளில் 1/3
    டட்கால் என்று மாற்றி விட்டார். மேலும் டட்கால் பயண
    சீட்டை ரத்து செய்ய முடியாது.

    3. இதெல்லாம் மீறிய ஒரு திருட்டு - இதை திருட்டு என்றே
    வைத்துக் கொள்ளலாம். முன்பதிவு செய்ய அந்தந்த
    நிலையத்திற்குச் செல்லாமல் நாட்டின் எங்கோ மூலையில்
    இருந்து செய்தால் அதிகப்படியாக 10 ரூபாய் பிடுங்கிக்
    கொள்வது தான். உதாரணமாக, நான் சென்னையில் இருந்-
    து திருநெல்வேலி செல்வதற்காக எழும்பூர் சென்று இருவழி
    பயணச் சீட்டை வாங்குகிறேன் என்றால் return டிக்கெட்டி-
    ல் 10 ரூபாய் அதிகமாக வசூலித்திருப்பார்கள்.

    இவை எல்லாம் நமக்குத் தெரிந்து நிகழ்ந்த மாற்றங்கள்.
    நம் கவனத்திற்கு வராதது இன்னும் என்னவெல்லாம் இருக்-
    கிறதோ?

    21 ரூபாய்-க்கு தரம் குறைந்த தயிர் சாதம் தருகிறார்கள்.

    போக்குவரத்து நெரிசல் என்பது மற்ற பெருநகரங்களை
    ஒப்பிட்டால் சென்னையில் குறைவு என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  7. //மற்ற சாதியினர் சமூகத்துக்காக பாடுபடும் போது//
    எந்த ஊரில் இருக்கிறார் கேள்வி கேட்டவர்?

    //தலைவர் கலைஞரின் காலத்திற்கு பின்னால் திமுக இரண்டு அல்லது மூன்றாய் உடையுமா?//
    எனெக்கென்னவோ, அதற்குள் ராகுலை வைத்து காங்கிரஸை தமிழ்நாட்டில் பலப்படுத்திவிடுவார்கள் என்று தோன்றுகிறது!

    ReplyDelete
  8. //எந்த ஊரில் இருக்கிறார் கேள்வி கேட்டவர்?//
    ஈரோடில் இருக்கிறார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. 1) ’வரதட்சனை வாங்குவது சரியில்லைதான், கேக்கலைனா மாப்பிள்ளைக்கு குறை இருக்குனு நெனப்பாங்க’ - இதைப் பற்றி தங்களின் கருத்து என்ன?

    மற்ற கேள்விகளை, தோனும்போது, எண்களுடன் கேட்கிறேன்.

    ReplyDelete
  10. //மயிரு என்பது கெட்ட வார்த்தையா? சினிமாக்களில் எல்லாம் இந்த வார்த்தை வரும்போது சென்சார் செய்யப்படுகிறதே?//

    தற்காலத்தில் ஏற்பட்ட மாற்றம் தான்!
    நாயகன் தலைமயிரை பிடுங்கி ஊதிகொண்டு என் உசுரு என்று சொல்லுவார், மயிருக்கு சமம்ன்னு குறிப்பால் உணர்த்துவதை பலர் சொல்லகூடாத வார்த்தை போலன்னு நினைக்கிறாங்க!

    ஆச்சர்யம் பல காலேஜ் பெண்கள் மயிர் என்பது கெட்ட வார்த்தைன்னு நம்புறாங்க!
    (நம்புங்க எல்லாம் என்னுடய கேர்ள் ப்ரெண்ட்ஸ்)

    ReplyDelete
  11. //அப்படி எழுதினால் யாரை பாராட்டி எழுதுவார்கள்!
    பதில்: அப்படி எழுத ஆரம்பித்தால் அதற்கெனவே பல பக்கங்கள் போட வேண்டியிருக்கும்.//

    எதில் போட வேண்டியிருக்கும்?

    ReplyDelete
  12. //எனக்கு தெரிந்து நாடார் சங்கமோ, வன்னியர் சங்கமோ வேறு எந்த ஜாதி சங்கமோ எதுவாக இருந்தாலும், தத்தம் ஜாதிக்காகத்தான் பாடுபடுகின்றன என்பதுதான் நிஜம்.//

    இப்போதய சாதி சங்கங்கள் அவ்வாறு இருக்கலாம், ஆனால் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது நாடார் குழந்தைகளுக்காக மட்டுமல்ல!
    ஆனால் கிறுக்கு புடிச்ச சாதி வெறியர்கள் அவரது சிலையில் காமாரஜ் நாடார் என்று பெயரிட்டு அவரை கேவலபடுத்திவிட்டனர்.

    சாதிய அரசியல் சமதர்ம சமுதாயத்தை குழைக்கும், அதை ஆதரிப்பது தற்கொலைக்கு சமம்!

    ராமதாஸ் தோற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி!

    ReplyDelete
  13. //இந்து மதம் ஆரியர்கள் கொண்டு வந்தது என ஒப்பு கொள்கிறீகளா?
    பதில்: தெரியாது, நான் கூட இருந்து பார்த்ததாக நினைவில்லை.//

    கீதை பற்றியோ, ராமாயனத்தை பற்றியோ இனிமேல் பேசமாட்டீர்கள் தானே! அதான் கூட இருந்து பார்க்கலையே!

    ReplyDelete
  14. //நீங்கள் கேட்ட கேள்வியின் செய்தியை உதாரணங்களுடன் நிலைநிறுத்துங்கள், பார்க்கலாம்.//

    மதம் என்பது தனிமனிதனை குறிப்பதல்ல!
    அது ஒரு நம்பிக்கை மட்டுமே!
    உதாரணமாக ஒரு பேருந்து பஸ்நிலையம் செல்லும் என்று நம்புபவர்கள் மத்தியில்ம் அது ஒரு ஓட்ட பஸ்ஸு பாதியில் நின்றுவிடும் என்று நான் சொல்லும் போது தண்ணிஅடித்து விட்டு இங்கே வந்து வாந்தி எடுக்காதே என்று என்னை தாக்கியது யார்?

    தர்க்கம் செய்ய முடியாவிட்டால் நீ ஒரு மெண்டல் உன்னுடன் பேச முடியாது என்று ஜகா வாங்குபவர்கள் யார்?

    ReplyDelete
  15. //கடவுள் பெயரால் சொர்க்கம் நரகம் பற்றி பேசியதில் அதர்மம் செய்ய பயப்படுபவர்கள் உள்ளனர். அதுவே லாபம்தானே.//

    அதெல்லாம் எல்லா தப்பும் பண்ணிபொட்டு உண்டியல்ல காசு போட்டு சரியாச்சு சிரிச்சிகிட்டே போயிருவானுங்க!

    லஞ்சம் வாங்கும் பழக்கத்தை ஒருவேளை கடவுள் தான் உருவாக்கினாரோ!

    ஒருவன் செய்யும் செயலுக்கு எதிவினை உண்டென்றால் அவன் கடவுளை கும்பிட வேண்டியதில்லை, காரணம் கும்பிட்டாலும் நடப்பது நடக்கும். ஒருவேளை தண்டனை குறையுமென்றால் அதுவும் லஞ்சம் தான். எனக்கு நீ சோப்பு போடு உனக்கு நான் அவுல் தர்றேன் ரகம்.

    கடவுள் கருணையேமயமானவர்னு உயிர் பிழைத்தவன் மட்டும் சொல்லி கொள்ளலாம், சுனாமி வரும் போது கருணைகடலேன்னு கடற்கரையில கத்திகிட்டே நில்லுங்கடா சொன்னா புத்தி வரும்!

    ReplyDelete
  16. //அழகிரி/தயாநிதி/ஸ்டாலின்/கனிமொழி யார் கை ஓங்கும்?
    பதில்: அழகிரி//

    தமிழகத்தை பொறுத்தவரை மேல்மட்ட அரசியல் தலைகளுக்கு ஸ்டாலின் மேல் தான் மரியாதை, தென்தமிழ்கத்தை மட்டும் கணக்கில் கொண்டு சொல்லக்கூடாது.

    தி.மு.க.வை பொறுத்தவரை அடுத்த தலைவர் ஸ்டாலின் தான்!

    ReplyDelete
  17. //ஜெ க்கு எதிர்காலம்?//

    குளிர்காலத்தில் வெளியே வருவார்
    (கொடாநாட்டிலிருந்து)

    ReplyDelete
  18. //தர்க்கம் செய்ய முடியாவிட்டால் நீ ஒரு மெண்டல் உன்னுடன் பேச முடியாது என்று ஜகா வாங்குபவர்கள் யார்?//
    கண்டிப்பாக நான் இல்லை.

    //எதில் போட வேண்டியிருக்கும்?//
    குமுதத்தில்தான்.

    காமராஜ் அவர்கள் மதிய உணவு கொண்டு வந்தது முதலமைச்சர் என்னும் ஹோதாவில். அவர் கைக்காசையோ நாடார் சங்கத்திடமிருந்து நிதி உதவி பெர்றோ செய்யவில்லை. அவரே நாடார் சங்கம் நிறுவிய பள்ளியில்தான் படித்தார். அப்போது நாடார்கள் அவ்வாறு செய்தது காலத்தின் கட்டாயம். அதற்காக நான் அவர்களை பார்ராட்டத்தான் செய்வேன் என்பதை எனது நாடார்கள் பற்றிய பதிவில் பார்க்கலாம். அதே காமராஜ் அவர்கள் வேட்பாளர்களை நிறுத்தும்போது சம்பந்தப்பட்ட தொகுதியின் ஜாதி மேட்டர்களை பார்த்தே செயல்பட்டுள்ளார். அதுவும் காலத்தின் கட்டாயமே. ஆக, நான் சொன்னது போல எல்லா ஜாதிகளுமே தத்தம் ஜாதியின் முன்னேற்றத்துக்குத்தான் பாடுபடுகின்றன.

    //கீதை பற்றியோ, ராமாயனத்தை பற்றியோ இனிமேல் பேசமாட்டீர்கள் தானே! அதான் கூட இருந்து பார்க்கலையே!//
    அது எனது நம்பிக்கையின் அடிப்படையில் வருகிறது. விளைவுகள் அதனால் தவறாக வந்தால் மாற்றிக் கொண்டு விட்டு போகிறேன். அதில் பிரச்சினையில்லை. ஆனால் எதையாவது நம்பித்தான் ஆகவேண்டும், அது மனித இயற்கை. தலித்துகளுக்காக பெரியார் பாடுபட்டார் என்பதை நீங்கள் இன்னும் நம்புவதையும் அதில் சேர்க்கலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. //சிலருக்கு (எந்தத் தகுதியும் இல்லாமல்) மட்டும் தொடர் வெற்றி எப்படி சாத்தியமாகிறது?
    பதில்: இதையெல்லாம் பார்க்கும்போது முற்பிறவி பற்றிய இந்து மதக் கோட்பாட்டுக்கு வலு சேருகிறது. //

    வெளியே நின்னு எட்டிபார்த்துகிட்டே வீட்டுகுள்ள தங்கமும், வைரமும் இருக்குன்னு சொன்ன கதையா இருக்கு!
    எந்த தகுதியும் இல்லைன்னு எதை வைத்து முடிவு செய்கிறீர்கள், அவ்வாறு மற்றவர்களை நினைப்பதே தலைகணம் தானே! உங்களின் மற்றொரு கேள்விக்கு பதிலில் தலைகணத்துக்கு என்ன கிடைக்குமோ அதே தான் இங்கேயும்.

    யாரையும் குறைவாக மதிப்பிடல் நல்ல பழக்கமல்ல!

    ReplyDelete
  20. // தமிழக சிறைகளில் நடநத நிகழ்ச்சிகளை பார்த்தால் சினிமாவையும் மிஞ்சிவிடும் போலுள்ளதே?
    பதில்: இந்த மட்டில் வெல்டிங் குமார் போன்ற தாதாக்கள் ஒழிந்தார்கள் அல்லவா. //

    இப்படியெல்லாம் ரவுடிஷத்தை ஒழிக்க முடியாது,
    வெல்டிங்குமார் போனால் இன்னொரு பல்டிகுமார்.

    அரசியல்வாதிகளுக்கு ரவுடிகள் தேவைபடும் வரை அவர்கள் உருவாக்கி கொண்டே இருப்பார்கள்!

    ReplyDelete
  21. Sir, What is your email ID? Would you mind sharing it? I have a nice article which you should read.

    ReplyDelete
  22. @அருண்
    இன்னொரு பின்னூட்டம் உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் இடவும். அதை நான் பப்ளிஷ் செய்ய மாட்டேன். நானே உங்களுக்கு பிறகு மின்னஞ்சல் செய்கிறேன்.

    அன்புஅட்ன்
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  23. //சென்னையில் இவ்வளவு மரங்கள் இருந்தும் ஏன் வெப்பம் அதிகம்?//

    மரங்களை விட மக்கட்தொகையும், வாகனதொகையும் அதிகம்!

    ReplyDelete
  24. //மளிகை பொருட்கள் பாக்கெட்டில் - பாக்கெட் கலாச்சாரம் நம்மை சீரழித்து விடும் போலிருக்கிறதே?
    பதில்: எவ்வாறு இவ்விதம் கூறுகிறீர்கள்?//

    பாக்கெட் சாராயத்தை நிப்பாட்டியதிலிருந்து!

    ReplyDelete
  25. உங்கள் இமெயில் முகவரியை வெளிப்படையாக காட்டாததற்கு காரணம் என்ன எனத் தெரிந்துகொள்ளலாமா?

    ReplyDelete
  26. @எவனோ ஒருவன்
    ஒரு முன்ஜாக்கிரதைதான். என்னை முகவரி கேட்டவர் தனது முகவரியை தராது கேட்டதும் அதே காரணத்துக்குத்தான். ஆகவேதான் அவரை இன்னொரு பின்னூட்டம் இடச் சொன்னேன். அவரும் இட்டார், மின்னஞ்சல் அனுப்பியாயிற்று. அந்த பின்னூட்டத்தை பப்ளிஷ் செய்யாததால் அவரது முகவரியும் மறைக்கப்பட்டு விட்டது. This is called a win-win situation.

    Regards,
    N. Raghavan

    ReplyDelete
  27. கேள்வி 2)
    இமெயிலை ஓபனாக காட்டுவதால் என்னென்ன தொல்லைகள் வரலாம்?

    ReplyDelete
  28. //ஆஸ்திரேலியர் கொழுப்பெடுத்து அலைகின்றனர். அவர்களௌக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். அங்கு உள்ள இந்தியர்களும் ஒரே குரலில் பேசுவது அவசியம்.//

    அங்கேயுள்ள இந்தியர் ஒற்றுமையாக தான் உள்ளனர், இங்கே தான் குரல் கொடுக்க யாருமில்லை.

    சசிதரூர் என்ற கம்முனாட்டி அதை ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு விவகாரம் என்று சொல்லியுள்ளது, நாமும் வரும் வெளீநாட்டு விருந்தினர்களை அடித்து துவைத்து விட்டு எங்கள் உள்நாட்டு விவகாரம் என்று சொல்லிவிடலாமா

    ReplyDelete
  29. //கேள்வி 2)
    இமெயிலை ஓபனாக காட்டுவதால் என்னென்ன தொல்லைகள் வரலாம்?//

    Spam mails. I spend lot of time (nearly 1 hr) to delete spam in Inbox :(

    ReplyDelete
  30. //காமராஜ் அவர்கள் மதிய உணவு கொண்டு வந்தது முதலமைச்சர் என்னும் ஹோதாவில். அவர் கைக்காசையோ நாடார் சங்கத்திடமிருந்து நிதி உதவி பெர்றோ செய்யவில்லை.//

    அதற்கு முன் இருந்த மக்கள் விசுவாசிகள் ஏன் அதை செய்யவில்லை!
    ஒட்டுமொத்த தமிழ்க மக்களுக்கு ஏன் சாதி சங்கத்தில் பணம் எடுத்து செய்ய வேண்டும். இப்போது வரும் இலவச தொலைகாட்சி என்ன கருணாநிதி சொந்த காசிலா வருகிறது!

    //எதையாவது நம்பித்தான் ஆகவேண்டும், அது மனித இயற்கை. தலித்துகளுக்காக பெரியார் பாடுபட்டார் என்பதை நீங்கள் இன்னும் நம்புவதையும் அதில் சேர்க்கலாம்.//

    பெரியாருடய பெண் விடுதலை, சமத்துவம் பொன்ற கொள்கைகள் எனக்கு பிடித்திருக்கிறதே தவிர உங்களை மோடியும், சோவும் ”பிடித்துள்ளது” போல் என்னை யாரும் பிடித்ததில்லை, பெரியார் பற்றிய என்னுடய விமர்சனங்களை என்னுடய பதிவிலேயே பார்க்கலாம்!

    ReplyDelete
  31. //அதற்கு முன் இருந்த மக்கள் விசுவாசிகள் ஏன் அதை செய்யவில்லை!//
    எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் என வரவேண்டும். ராஜாஜி காலத்தில் முதற்கண் அவருக்கு கட்சியில் முழு ஆதரவு இருந்ததென கூறவியலாது. இரண்டு ஆந்திரா பிரிந்து சென்ற நேரத்தில் சென்னை நகரை தமிழ்நாட்டுக்கு நிறுத்திக் கொள்ள பல வேல்லைகள் செய்ய வேண்டியிருந்தது. ஏமாந்தால் அது ஆந்திராவுக்கு போயிருக்கும் அல்லது இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகரமாக இருந்திருக்கும். பெரிய தலைவலிகளும் வந்திருக்கும்.

    நிதி நிலைமை ரொம்பவும் மோசம். ரேஷன் குளறுபடிகள் வேறு. அவர் எல்லாவற்றையும் சரி செய்து விட்டு போனார். அடுத்து வந்த காமராஜர் மேலே செயலாற்ற போதிய இடம் கிடைத்தது.

    //ஒட்டுமொத்த தமிழ்க மக்களுக்கு ஏன் சாதி சங்கத்தில் பணம் எடுத்து செய்ய வேண்டும்//.
    மதிய உணவு திட்டத்தை நீங்கள் எதற்கு உதாரணமாக காட்டினீர்கள் என்பதை போய் பாருங்கள். அப்போது நான் ஏன் அவ்வாறு எழுதினேன் என்பது தெரியவரும்.

    // உங்களை மோடியும், சோவும் ”பிடித்துள்ளது” போல்..//
    எனக்கும் அவர்கள் செயல்பாடு பிடித்திருக்கிறது அவ்வளவுதான். பெண்விடுதலையை பேசிய அதே பெரியார் தன் முதல் மனைவி நாகம்மையிடம் முழு ஆணாதிக்க திமிருடன் நடந்து கொண்டதை அவரே ஒத்து கொண்டுள்ளார். பார்க்க: http://dondu.blogspot.com/2007/03/blog-post_27.html

    சமத்துவம் கூட தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமை செய்த பார்ப்பனரல்லாத உயர் சாதிரியினர், பிற்படுத்தப்பட்டவர் ஆகியோரை எதிர்த்து ஒன்றும் சொல்லியதாகத் தெரியவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. //எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் என வரவேண்டும்.//

    மிக எளிய பதில்!

    அப்படியானால்

    ஏன் ஒஹேனக்கல் பிரச்சனையை கருணாநிதி முடிக்கவில்லை?

    எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் என வரவேண்டும்.
    **

    ஏன் மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை?

    எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் என வரவேண்டும்.

    **

    ஏன் குஜராத் போல் தமிழ்கம் இல்லை?

    எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் என வரவேண்டும்.

    **

    இப்படி அடிக்கிகிட்டே போகலாம்!

    ஆந்திராவுடன் நமக்கு வாய்க்கா தகராறு மட்டுமே, அதற்கு அனைத்து மந்திரிகள் தலைமையில் யாரும் போர் செய்யவில்லை, வெளியரவு அதை பார்த்தால் உள்துறை இதை பார்க்க வேண்டியது தானே!

    ஒருவேளை சென்னை போயிருந்தாலோ! திருப்பதி வந்துரிந்தாலோ இதுதான் நடக்கும் என சொல்வதற்கு முனிகள் யாராவது இருந்தார்களா என்ன?

    எல்லா காலத்திலும் அரசியல் நடத்த எதாவது பிரச்சனை வேண்டும், அது மட்டுமே மக்களை கேள்விகளிலிருந்து திசை திருப்பும்!

    ReplyDelete
  33. //நிதி நிலைமை ரொம்பவும் மோசம். ரேஷன் குளறுபடிகள் வேறு. அவர் எல்லாவற்றையும் சரி செய்து விட்டு போனார். அடுத்து வந்த காமராஜர் மேலே செயலாற்ற போதிய இடம் கிடைத்தது.//

    சொம்பு தூக்கலாம்!
    பக்கெட் தூக்குவது அதிகம்!

    கருணாநிதி வண்ணதொலைகாட்சி கொடுப்பதற்கு ஜெயலலிதா கஜானாவை நொப்பி வைத்தது தான் காரணமா?

    லாலு ரயில்வேயை சீபடுத்தியது அதற்கு முன் இருந்த ரயில்வே அமைச்சர் செய்தது தான் காரணமா!

    இது நல்லது நடந்தாலும் அது உங்களாலே நடந்தது! எது தீயது நடந்தாலும் அது உங்கள் எதிராளிகளாலே நடந்தது!

    உங்களது ஒருபக்க வாதமாகவே இருக்கிறதே!

    (யாராவது துணைக்கு வாங்கப்பா)

    ReplyDelete
  34. //ஏன் ஒஹேனக்கல் பிரச்சனையை கருணாநிதி முடிக்கவில்லை?//
    இது ஒரு உல்ட்டா விவகாரம். ஹொகனேக்கலோட கர்நாடகாவுல ஒரு தண்ணீர் திட்டமும் இருந்தது. ரெண்டுக்கும் சேர்த்துத்தான் இரு மாநில அரசுகளும் ஒப்பந்தம் போட்டன. அப்போதே நிறைவேற்றியிருந்தால் யாரும் கர்நாடகாவிலிருந்து கேட்டிருக்க போறதில்லை, ஏனெனில் அவங்க தங்களோட திட்டத்தை நிறைவேத்தறதுலே இருந்தாங்க. நம்மாளுங்க சில ஆண்டுகள் தூங்கிட்டாங்க. இப்போ வந்த கர்நாடக அரசு தொல்லை கொடுக்கிறது. ஆக நேரம் வரும்போது அதை நிறைவேற்றாததும் குற்றமே. நான் மொத்தமாக தமிழக அரசைத்தான் சாடுகிறேன். அதிமுக திமுக இரு கட்சிகளுமே தவறிழைத்தன.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  35. ////ஒட்டுமொத்த தமிழ்க மக்களுக்கு ஏன் சாதி சங்கத்தில் பணம் எடுத்து செய்ய வேண்டும்//.
    மதிய உணவு திட்டத்தை நீங்கள் எதற்கு உதாரணமாக காட்டினீர்கள் என்பதை போய் பாருங்கள். அப்போது நான் ஏன் அவ்வாறு எழுதினேன் என்பது தெரியவரும்.//


    சாதிய சங்கங்கள் தமது (சாதி)சமூக வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடிகிறது என்ற கேள்விக்கு தான் அது.

    சில சாதி வெறியர்களால் நல்ல அரசியல்தலைவர்கள் சாதி அடையாளப்படுத்தி கேவலப்படுத்தப்பட்டனர், ராஜாஜியும் நல்ல அரசியல்வாதி தான் ஆனால் நீங்கள் அவருக்கு மட்டும் சொபு தூக்கி அவருக்கு சாதிய முத்திரை பதிக்கிறீர்கள்

    ReplyDelete
  36. //பெண்விடுதலையை பேசிய அதே பெரியார் தன் முதல் மனைவி நாகம்மையிடம் முழு ஆணாதிக்க திமிருடன் நடந்து கொண்டதை அவரே ஒத்து கொண்டுள்ளார்//

    ஒத்து கொண்ட நேர்மைக்காவது பாராட்டும் நாகரீகம் நமக்கு வேண்டும், இன்று வெளியே பெண்ணியம் பேசும் எத்தனை சொம்பைகள் மனைவியை மரியாதையுடன் நடத்துகிறார்கள்!

    பெண்ணுக்கு மரியாதை தர வேண்டும்மென்பதை பெரியார் சொல்லி தமிழன் தெரிந்து கொண்டது நமக்கு தான் அவமானம், நாம் அதை முதலிலேயே செய்திருக்க வேண்டுமல்லவா, முடியாமல் தடுத்தது மதமும், கடவுளும் தானே!

    ReplyDelete
  37. //உங்களது ஒருபக்க வாதமாகவே இருக்கிறதே!//
    நான் காமராஜ் ஒன்றுமே செய்யவில்லை என எங்குமே செய்யவில்லையே. ராஜாஜியும் சரி காமராஜும் சரி அவரவர் ஆட்சியின் போது என்னவெல்லாம் நல்லது செய்ய நினைத்தார்களோ செய்தார்கள்.

    எது எப்படியானாலும் சப்ஜெக்டுக்கு வாங்க வால்பையன். நீங்கள் கேட்ட கேள்வி இது:
    //3. மற்ற சாதியினர் சமூகத்துக்காக பாடுபடும் போது ஏன் பிராமணர்கள் அவர்களது சாதிக்கு மட்டும் பாடுபடுகிறார்கள்!//
    அதுக்கான பதில் பற்றித்தான் பேசறோம். மற்ற சாதிகள் மட்டும் ஒட்டு மொத்த சமூகத்துக்கு என்ன செய்தது என்ற எனது எதிர் கேள்விக்கு நீங்கள் அளித்த விடைதான் மதிய உணவுத் திட்டம்.

    ஆரம்பத்தை நாம் மறக்கலாகாது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  38. //சமத்துவம் கூட தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமை செய்த பார்ப்பனரல்லாத உயர் சாதிரியினர், பிற்படுத்தப்பட்டவர் ஆகியோரை எதிர்த்து ஒன்றும் சொல்லியதாகத் தெரியவில்லை.//

    அதை நான் வன்மையாக கண்டிக்கிறேனே தவிர ஆதரிக்கவில்லையே, இன்று நான் திராவிட சொம்புதூக்கிகளை சாடுவதற்கு காரணமும் அதே தான்! உத்தாபுர விசயத்தில் மென்மை தன்மை காட்டியது கண்டிக்கதக்க ஒன்று!

    சாதிய வன்முறைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் இரும்புகரத்தால் ஒடுக்கப்பட வேண்டும்.

    மனிதனில் மேல் என்ன கீழ் என்ன!

    ReplyDelete
  39. ராஜாஜி பார்ப்பனர் என்பதற்காக நான் அவருக்கு சொம்பு தூக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  40. //மற்ற சாதியினர் சமூகத்துக்காக பாடுபடும் போது ஏன் பிராமணர்கள் அவர்களது சாதிக்கு மட்டும் பாடுபடுகிறார்கள்!//
    அதுக்கான பதில் பற்றித்தான் பேசறோம். மற்ற சாதிகள் மட்டும் ஒட்டு மொத்த சமூகத்துக்கு என்ன செய்தது என்ற எனது எதிர் கேள்விக்கு நீங்கள் அளித்த விடைதான் மதிய உணவுத் திட்டம்.//


    குமுதத்தில் பிராமணர்களை பற்றி எழுதினால் யாரை பற்றி எழுதுவ்தில் ஆரம்பித்தது அது! நான் கேட்ட கேள்வியும் அந்த காலகட்டத்தை சார்ந்தே அதனால் தான் காமராஜை இழுத்தேன்!

    ராஜாஜியை தவிர உருப்படியா யார் என்ன செய்தார்கள் என தெரிந்து கொள்ளவே அந்த கேள்வி!

    ReplyDelete
  41. //ராஜாஜியை தவிர உருப்படியா யார் என்ன செய்தார்கள் என தெரிந்து கொள்ளவே அந்த கேள்வி!//
    ஓ அப்படி போகிறதா விஷயம். சோ அவர்கள் எழுதிய வெறுக்கத் தக்கதா பார்ப்பனீயம் என்னும் புத்தகத்தில் பார்த்தால் தெரிகிறது. இல்லையானால் இருக்கவே இருக்கிறது, குமுதத்தில் கட்டுரை. அது வரும்போது அதில் பார்த்து கொள்ளலாம். எனக்கு அந்த அஸைன்மெண்ட் இப்போது முறைப்படி தராததால் எனக்கு அதைப் பற்றி எழுத எந்த உந்துதலும் இல்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  42. கேள்வி 3)
    ’வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ - இன்னும் அப்படி இருக்கிறது என நினைக்கிறீர்களா?

    ReplyDelete
  43. கேள்வி 4)
    பாடிகாட் முனீஸ்வரன் என்கிறார்களே... பாடிகாட் என்றால் என்ன? இதற்கும் Bodyguard க்கும் சம்பந்தம் உண்டா?

    ReplyDelete
  44. 1.who will be next super star in tamil cinema field (1. mgr 2.rajini 3.?)
    2. who will be the next prime minister after manmohan ?
    3.who will be the successor to karunanithi( chanakkiya arasiyal)?
    4.will it be possible to see honest leaders like kamaraj/rajaji/anna in the coming days?
    5.what will be the next reaction by t.r balu

    ReplyDelete
  45. திருடன் என்றால் எல்லாருமே தான். நல்லவன் என்றாலும் எல்லாருமே தான். இதில் என்ன பிரச்சனை என்றால், பிராமணர் அல்லாதவர்களுக்கு பிராமணரை போல இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதோ, ஆனால் இருக்க முடியாது, சரி திட்டி யாவது தொலைவோம் என்று செய்வது போல தோன்றுகிறது. இதை சொல்வதால் நான் நானும் பிராமணனோ என்ற நீங்கள் நினைத்தால் நினையுங்கள். நான் பிராமணன் தான், என்னுடைய நடத்தையால், குணத்தால்...

    அப்படி இல்லை என்றால் விட்டு தொலையுங்கள். பிராமணன் என்ன செய்தால் என்ன...xxx எ போச்சு..அவ்ளோ தான்

    ReplyDelete
  46. Dondu Sir,

    Here's the link for Thuglak.

    http://www.thuglak.com/thuglak/login.php

    Wish they advertise this better. I never knew they had Thuglak online till I came across a post in Orkut with this link.

    Regards.
    Partha.

    Regards.
    Partha.

    ReplyDelete
  47. கலைஞரின் லட்சியக் கனவாம் கழக வாரீசு அறிவிப்புடன் ,ஸ்டாலினுக்கு முடிசூட்டி (துணைமுதல்வர் கிரீடம் சூட்டுதல்)அழகு பார்த்ததை, அம்மா ஜெ. வுக்கு பயப்படமால் மனம் திறந்து , சட்ட மன்றத்தில் பாராட்டிய மயிலை எஸ்.வி.சேகரின் நல்லெணத்தை பாராட்டி,அவர் ஆரம்பித்துள்ள பிராமணர் நலம் காக்கும் கட்சியின் அடிப்படை கோரிக்கையை ( 7 % job reservation to brahmins in tamilnadu, based on the numerical strength,considering the poor economical condition ( social condition to some extent )
    , தமிழ் க முதல்வர் ஏற்று,

    தமிழகத்தில் வாழும் அனத்து பிராமணர்களுக்கும்(without any restriction) கல்வி,வேலைவாய்ப்பு,வீட்டுவசதிவாரியய வீடு ( பெரியார் சமத்துவபுரங்களில் உள்ளது போல்) ஒதுக்கீடு -ஆகியவைகளில் 7 விழுக்காடு ஒதுக்கீடும் அதில் ஐயங்கார்களுக்கு உள் 2.5 விழுக்காடும் வழங்கி அரசாணை பிறப்பித்தால்

    இவர்களின் கருத்து/விமர்சனம் என்னவாயிருக்கும்
    1.காஞ்சி பெரியவாள்
    2.துகளக் ஆசிரியர் சோ
    3.அதிமுக தலைவி ஜெ
    4.தி.க தலைவர் வீரமணி
    5.தமிழக பாஜக கட்சி
    6.தயாநிதி மாறன்
    7.ஹிண்டு ராம்
    8.தினமணி வைத்தியநாதன்
    9.சாதீய உணர்வுகளை நாளும் சாடும் ஈரோட்டு தங்கம் வால் பையன்
    10.டோண்டு ராகவன்

    ReplyDelete
  48. நான் கேட்டக் கேள்வியே காணவில்லையே ?


    தமிழில் அனைத்து எழுத்துக்களும் வரும் விதத்தில் ஒரு சிறு பத்தி இருக்குமா ?

    என்பது தான் என் கேள்வி.

    ReplyDelete
  49. @வஜ்ரா
    மன்னிக்கவும் வஜ்ரா அவர்களே. எப்படியோ மிஸ் ஆகி விட்டது. அடுத பதிவின் வரைவுக்கு இப்போதே கொண்டு சென்று விட்டேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  50. //ரமணா said...

    கலைஞரின் லட்சியக் கனவாம் கழக வாரீசு அறிவிப்புடன் ,ஸ்டாலினுக்கு முடிசூட்டி (துணைமுதல்வர் கிரீடம் சூட்டுதல்)அழகு பார்த்ததை, அம்மா ஜெ. வுக்கு பயப்படமால் மனம் திறந்து , சட்ட மன்றத்தில் பாராட்டிய மயிலை எஸ்.வி.சேகரின் நல்லெணத்தை பாராட்டி,அவர் ஆரம்பித்துள்ள பிராமணர் நலம் காக்கும் கட்சியின் அடிப்படை கோரிக்கையை ( 7 % job reservation to brahmins in tamilnadu, based on the numerical strength,considering the poor economical condition ( social condition to some extent )
    , தமிழ் க முதல்வர் ஏற்று,

    தமிழகத்தில் வாழும் அனத்து பிராமணர்களுக்கும்(without any restriction) கல்வி,வேலைவாய்ப்பு,வீட்டுவசதிவாரியய வீடு ( பெரியார் சமத்துவபுரங்களில் உள்ளது போல்) ஒதுக்கீடு -ஆகியவைகளில் 7 விழுக்காடு ஒதுக்கீடும் அதில் ஐயங்கார்களுக்கு உள் 2.5 விழுக்காடும் வழங்கி அரசாணை பிறப்பித்தால்

    இவர்களின் கருத்து/விமர்சனம் என்னவாயிருக்கும்
    1.காஞ்சி பெரியவாள்
    2.துகளக் ஆசிரியர் சோ
    3.அதிமுக தலைவி ஜெ
    4.தி.க தலைவர் வீரமணி
    5.தமிழக பாஜக கட்சி
    6.தயாநிதி மாறன்
    7.ஹிண்டு ராம்
    8.தினமணி வைத்தியநாதன்
    9.சாதீய உணர்வுகளை நாளும் சாடும் ஈரோட்டு தங்கம் வால் பையன்
    10.டோண்டு ராகவன்//


    இவர்களையும் சேர்த்துக் கொள்ளவும்

    அண்ணல் காந்தியின் ஆத்மா
    சட்ட் மேதை அம்பேத்காரின் ஆத்மா
    மூதறிஞர் ராஜாஜியின் ஆத்மா
    பெரியவர் காமராஜின் ஆத்மா
    தந்தை பெரியாரின் ஆத்மா
    அறிஞர் அண்ணாவின் ஆத்மா

    திரு மண்டலின் ஆத்மா
    மண்டல் வீரர் விபிசிங்கின் ஆத்மா

    இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஆதரித்தும்,எதிர்த்தும் உயிரைத் துறந்த வட இந்திய,தென் இந்திய மனிதர்களின் ஆத்மாக்கள்

    ReplyDelete
  51. சார். நீங்கள் என் பதிவுகளை ஒரு முறையாவது படித்ததுண்டா?

    ReplyDelete
  52. //நீங்கள் என் பதிவுகளை ஒரு முறையாவது படித்ததுண்டா?//
    இன்றுதான் பார்த்தேன். சுவாரசியமான பதிவுகள். பிளாக் ரோலில் உங்கள் வலைப்பூவை சேர்த்த் விட்டேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  53. //சுவாரசியமான பதிவுகள். பிளாக் ரோலில் உங்கள் வலைப்பூவை சேர்த்து விட்டேன்.//

    உங்கள் பெரிய மனசுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete