9/15/2007

கள்ளா வா புலியைக் குத்து

இப்பதிவில் என்னைத் தமிழ் தாத்தா என்று ஒருவர் அழைக்க, நான் அதற்கு, "தமிழ்த்தாத்தா ஒருவர்தான், அவர்தான் உ.வே. சாமினாத ஐயர். என்னைப் போன்ற துரும்புக்கெல்லாம் அந்த பெயரைத் தராதீர்கள்" என்று உறுதியாக மறுத்துவிட்டேன். பிறகு அவர்கள் என்னை தமிழ் தாதா என்று அழைத்ததெல்லாம் இப்பதிவுக்கு வேண்டாம். ஏனெனில் இது உ.வே.சா. அவர்களைப் பற்றியது. அந்தக் கிழவர் மட்டும் விடாமுயற்சியுடன் பழந்தமிழ்நூல்களை சேமித்திராவிட்டால் இங்குள்ள பல தமிழ்ப் பேச்சாளர்களுக்கு வேலையே இல்லாது போயிருக்கும்.

ஐயரவர்களால் பதிப்பிக்கப் பெற்ற நூல்களில் ஒன்றுதான் சீவக சிந்தாமணி. அதில் ஒரு காட்சி வருகிறது. அது பின்வருமாறு.

யாழ் மீட்டுதலில் தன் ஆர்வத்தைக் காட்டுவோருக்கு, தன் மகள் காந்தர்வதத்தையை மணம் புரிந்து தருவதாக அவளது தந்தை ஸ்ரீதத்தன் அறிவித்தான். காப்பியத்தலைவனான சீவகன் திறம்பட யாழிசைத்துப் போட்டியில் வென்றான். ஏற்கனவே சீவகன் மீது பொறாமை கொண்டிருந்த மன்னனான கட்டியங்காரன் மனம் புழுங்கி, சீவகனுடன் போரிட்டு வெல்பவர்களே காந்தர்வதத்தையை மணம் புரியத் தக்கவர் என்று யாழிசைப் போட்டிக்கு வந்திருந்த மன்னர்களிடம் அறிவித்தான். அவ்வறிப்பைக் கேட்ட மன்னர்கள் ஒன்று திரண்டு சீவகனுடன் போரிட்டனர். அவர்களைப் போரில் வென்று காந்தர்வதத்தையை சீவகன் மணம் புரிந்தான்.
பிற மன்னர்களை சீவகனுக்கு எதிராகத் தூண்டிய கட்டியங்காரனின் செயலை, "கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன்" என்று சிந்தாமணி குறிப்பிடுகிறது. இத்தொடர் இடம்பெறும் செய்யுளுக்கு நச்சினார்க்கினியர் "சீவகன், தத்தையை யாழும் பாட்டும் வென்றான், நல்லனென்று மாந்தர் ஆர்ப்ப அது பொறாதே கட்டியங்காரன் மனம் புழுங்கி அரசரைக் கொண்டு சீவகனைப் போர் காண வேண்டி, அரசர்க்கெல்லாம் சில தீமொழிகளைக் கூறினானென்க" என்று உரை எழுதியுள்ளார்.

உரை தெளிவாக இருப்பினும், "கள்ளரால் புலியை வேறு காணிய" என்னும் தொடருக்கு விளக்கம் ஏதும் இல்லை. உவேசா அவர்களும் எவ்வளவோ யோசித்துப் பார்த்தார். சீவகன் புலிதான். அதில் பிரச்சினையில்லை. அவனால் தோற்கடிக்கப்பட்ட அரசர்களை பசுக்கூட்டங்களோடு ஒப்பிடுவதுதானே முறை என்ற ரீதியில் அவர் கருத்து சென்றது. இருப்பினும் காலத் தட்டுப்பாடு வேறு. ஆகவே இத்தொடருக்கு விளக்கம் காண இயலாத நிலையில் உ.வே.சா சீவக சிந்தாமணி முதல் பதிப்பை வெளியிட்டார். பிறகு வேறு வேலைகள், வேறு பதிப்புகள் என்று அவரது கவனம் சென்றது.

ஒரு நாள் அவர் வீட்டுக்கு சாமப்பா என்னும் பெயருடைய ஒரு கிழவர் மிகுந்த கோபத்துடன வந்தார். வந்தவரது கோபம் இன்னொரு கிழவர் மேல். அவரைப் பற்றி கோபமாக உவேசாவிடம் பேச இவருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. வந்தவரிடமே விஷயம் என்ன என்று கேட்டார்.

தமக்கு வேண்டாத ஒருவர், தமக்கும் மற்றொருவருக்கும் இடையே சண்டை மூட்டிவிட்ட நிகழ்வைக் கும்பகோணத்தில் வசித்துவந்த உ.வே.சாவிடம் சாமப்பா என்னும் அந்தக் கிழவர் பின்வருமாறு குறிப்பிட்டார். "எப்படியாவது நாங்கள் முட்டி மோதிக்கொண்டு சாகட்டுமே என்பது அவன் அபிப்பிராயம். நாங்கள் இரண்டு பேரும் அவனுக்கு வேண்டாதவர்களே, அதற்குத்தான், கள்ளா வா, புலியைக் குத்து என்கிறான். நானா ஏமாந்து போவேன்"

அதுவரை ரொம்ப ரியேக்ஷன் இல்லாமல் கேட்டுவந்த உவேசாவோ தேள் கொட்டியது போல துள்ளி குதித்தார். "என்ன, என்ன, என்ன சொன்னீர்கள்" என்று பரபரப்பாகக் கேட்டார். சாமப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன சொன்னேன்" என்று அவரிடமே திருப்பி கேட்டார். "ஏதோ கள்ளன், புலின்னு சொன்னீர்களே" என்று உவேசா கேட்க, அவர் சாவகாசமாக, "ஓ அதுவா இது ஒரு பழமொழியாச்சே" என்று "கள்ளா வா, புலியைக் குத்து" என்று திரும்பச் சொன்னார். இப்பழமொழி ஒரு கதையை உள்ளடக்கியிருந்தது. அக்கதையை உ.வே.சா விடம் அக்கிழவர் பின்வருமாறு விளக்கினார்.

"ஒரு மனுஷ்யன் பண மூட்டையோடு சுடுகாட்டு வழிகாக போய்க் கொண்டிருந்தான். அப்போது ஒரு திருடன் அவனைக் கண்டு துரத்தினான். எதிரில் ஒரு புலி உறுமிக் கொண்டு வந்தது. இந்த இரண்டு அபாயங்களிலிருந்தும் தப்புவதற்கு அந்த வழிப்போக்கன் ஒரு தந்திரம் பண்ணினான். திருடனைப் பார்த்து "அதோ பார், அந்த புலியைக் குத்தி கொன்றுவிடு; நான் உனக்கே பண மூட்டையைத் தந்துவிடுகிறேன்" என்றான். திருடன் அப்படியே புலியை எதிர்த்தான். புலி அவனை அடித்து தின்று பசி தீர்ந்தது. அதற்குள் வழிப்போக்கன் தப்பி பிழைத்து ஓடிபோய்விட்டான். அவன் தனக்குப் பகையாக வந்த புலியையும் கள்ளனையும் முட்டவிட்டுத் தான் தப்பினான்.

இக்கதையைக் கேட்டதும் உ.வே.சாவிற்கு ஒரே மகிழ்ச்சி. அக்கிழவரிடம் அவர் தன் வீட்டிற்கு எப்போது வேண்டுமானால் அமுதுன்ண வரலாம் என பொது அழைப்பை விடுத்தார். பிறகு "கள்ளரால் வேறு காணிய" என்னும் சீவக சிந்தாமணி அடிக்கு "கள்ளர்களாகிய அரசர்களால் புலியாகிய சீவகனை வெற்றி கொள்ளுதலைக் காணும் பொருட்டு" என்று பொருள் விளங்கிக்கொண்டார். பின்னர் சீவக சிந்தாமணியின் இரண்டாம் பதிப்பில் மேற்கூறிய செய்யுளின் கீழ் "கள்ளா வா, புலியைக் குத்து என்பது பழமொழி" என்னும் குறிப்பைச் சேர்த்தார்.

இவ்வாறாக உ.வே.சா. அவர்கள் 91 நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்..... அவருடைய "என் சரிதம்' என்ற சுய சத்திர நூல் பழமைக்கும், புதுமைக்கும் ஒரு பாலமாக உள்ளது என்றால் மிகையாகாது. அவருக்கு சென்னை அரசு 1906-ல் அளித்த பட்டமாகிய "மஹாமஹோபாத்யாய'' அவரால் பெருமை பெற்றது; 1932-ல் சென்னைப் பல்கலைக் கழகமும் டாக்டர் பட்டம் அளித்து கௌரவம் அடைந்தது. இப்போதும் திருவல்லிக்கேணி மாநிலக்கல்லூரி முன்பு அன்னாருடைய சிலை உள்ளது. அவருடைய நினைவை நன்றியுடன் போற்றுவது தமிழ் கூறும் நல்லுலகத்தின் கடமை.

அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி:

1. நிலாச்சாரல்

2. காலச்சுவடு மார்ச் 2005 இதழ், திரு ஆ.சிவசுப்பிரமணியனின் "உ வே சா வும் நாட்டார் வழக்காறுகளும்" கட்டுரை பற்றி இங்கு வந்த குறிப்புகள்.

18 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

உவேசா வின் தொண்டு தமிழுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம்...
நீங்கள் எழுதிய செய்தி சுவாரசியமானது..

dondu(#11168674346665545885) said...

நன்றி அறிவன் அவர்களே,

உங்கள் ப்ரொஃபைலில் ஏதாவது படம் போட்டு கொள்ளவும். இல்லாவிட்டால் உங்கள் பெயர் மற்றும் பிளாக்கர் எண்ணை அதர் ஆப்ஷன் மூலமாக யாராவது நீங்கள் போடுவது போல பின்னூட்டம் இடும் அபாயம் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வன்பாக்கம் விஜயராகவன் said...

'அரசு "மஹா மஹோத் பாயாய'' 1906-ல் அளித்த பட்டம் ' என்று எழுதினீர்கள்.உண்மையில் அது மஹாமஹோபாத்யாய ஆகும்.
சமஸ்கிருத சந்தி ரூல் படி 'மஹா + மஹா + உபாத்யாயர்' அப்படி ஆகிவிடுகிரது

Anonymous said...

kazhagathinar thamizh valartha azhagu epdi theriuma..u.v.s iyer avargalai indraya manavargaluku theriyadhu. Melum U.V.S pondravargal amaidhiyaga irundhu vittu poga, vairamuthu pondravargal thamizh thaiku soru poduvathaga solli kolvadhai ennavendru solvadhu.

dondu(#11168674346665545885) said...

//'அரசு "மஹா மஹோத் பாயாய'' 1906-ல் அளித்த பட்டம் ' என்று எழுதினீர்கள்.உண்மையில் அது மஹாமஹோபாத்யாய ஆகும்.//

மிக்க நன்றி V அவர்களே. திருத்தி விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வைரமுத்துவின் செயல்தளம் வேறு, உவேசாவுடையது வேறு. பிந்தையவரை பெருமைப்படுத்துவதற்காக முந்தையவரை குறை கூறுதல் தகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Dondu,

Ithu enna? unga policy-a velipadaiya sollitingale?

dondu(#11168674346665545885) said...

//Ithu enna? unga policy-a velipadaiya sollitingale?//

இதில் என்ன ஒளிவு மறைவு? உவேசா அவர்களது புகழைப் பரப்புவதுதானே என் பாலிசி?
:)))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Expatguru said...

Extremely well-researched and informative article.

dondu(#11168674346665545885) said...

நன்றி Expatguru அவர்களே.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி உவேசா அவர்களே எழுதியதை நான் 45 ஆண்டுகள் முன்னர் படித்துள்ளேன். ஆனால் தற்சமயம் கைவசம் இல்லை. ஆகவே கூகளாண்டவர் துணை தேட வேண்டியதாயிற்று. இருப்பினும் அவற்றைப் படிக்கும்போது சில வாக்கியங்கள் தமிழ் தாத்தா எழுதியது அப்படியே நினைவுக்கு வந்தது. இதில் என் பங்கு வெறுமனே ஞாபகம் வைத்து வெளிக் கொணர்ந்ததே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

K.R.அதியமான் said...

Sir,

I am re-reading U.Ve.Saa's auto biography Enathu Saithiram. it is a classic and should be read by all. his portrayal of life in the 19 cent Tanjore dt is graphic and vivid.

dondu(#11168674346665545885) said...

அதியமான அவர்களே,

ஆஹா உங்களிடம் அப்புத்தகம் உள்ளதா. பிறகு படிக்கத் தாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

vairamuthu patri naan sonnadhai sariyaga sollavillai. Vaiyiramuthu thaan thamizhuku soru podubavar endru oru murai sonnar. Appozhudhu ninaithen, UVS pondravargal kooda appidi solli kollavillai. ondrume seiyamal, etho mettuku pattezhudhi kondrupavar ipdi pesi kolgirar endru.

dondu(#11168674346665545885) said...

//Vaiyiramuthu thaan thamizhuku soru podubavar endru oru murai sonnar. Appozhudhu ninaithen, UVS pondravargal kooda appidi solli kollavillai. ondrume seiyamal, etho mettuku pattezhudhi kondrupavar ipdi pesi kolgirar endru.//
அவ்வாறு வைரமுத்து அவர்கள் கூறியிருந்தால் அது கண்டிக்கத் தக்கதே. ஒரு வேளை அது அவரது தன்னம்பிக்கையின் எதிரொலி எனச் சிலர் கூறலாம். நான் அவ்வாறு நினைக்கவில்லை.

மற்றப்படி நான் ஏற்கனவே கூறியபடி உவேசா மற்றும் வைரமுத்து செயல்படும் தளங்கள் வேறுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

மேலும், உவேசா பார்ப்பனர் என்பதால் காழ்ப்புணர்ச்சியுடன் சில கேசுகள் பேசக்கூடும். ஏற்கனவே இறைநேசன் என்ற ஒரு மென்டல் கேசு மிகத்தரக்குறைவாக, கீழ்த்தரமான தி.க. வார்த்தைகளால் தங்களைப்பற்றியும் பார்ப்பனர் பற்றியும் சாக்கடை பதிவுகள் போட்டு வருகிறது!!!

dondu(#11168674346665545885) said...

தன்னை இசுலாமியராகக் கூறிக் கொள்ளும் இறைநேசன் நிச்சயமாக விடாது கருப்பு போலி டோண்டு மூர்த்தியேதான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

அப்பதிவரை அலட்சியம் செய்கிறேன். பதில் கூறக்கூட லாயக்கில்லாதவர் அவர்.

விடுங்கள் எனக்கு ஆயிரம் வேலைகள் காத்திருக்கின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எல் கே said...

@ragavan

anna, கருப்பு போலி டோண்டு மூர்த்தியேதான் mattum alla, innoruthar irkar mathimaran endru, avar bharatiyaraye kurai kooruvar. avar wordpressla elutharar

Anonymous said...

பதிவு மிக நன்றாக இருக்கிறது. உ.வே.சா. போன்றவர்களின் உண்மையான தேடலை அருமையாக சொல்லி இருக்கிறார்/இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது