நிரந்தர பக்கங்கள்

8/07/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 07.08.2009

பெரியாரின் எழுத்துகளுக்கான உரிமை சண்டை
பார்க்கவே தமாஷாக இருக்கிறது. சமயசந்தர்ப்பத்துக்கேற்ப, தனது அவ்வப்போதைய அரசியல் நிலைமையை வைத்து பெரியார் அவர்கள் எழுதியதை வெளியிட வீரமணி அவர்களுக்கு மட்டும்தான் உரிமையாம் என்ற நோக்கத்தில் அவர் கோர்ட் தடை வாங்கியது குறித்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. பெரியாரின் எழுத்துக்களை போட்டியாளர் வெளியிட்டால் அவர் அதிக பணம் சம்பாதித்து விடுவார், தனக்கு பண நஷ்டம் வரும் என தனது கோரிக்கையில் வீரமணி அவர்கள் கூறியிருப்பதாக படித்தேன்.

இப்போதுதான் தமிழ் ஓவியா பெரியாரின் கருத்துகளை எல்லாம் இம்மாதிரி சகட்டு மேனிக்கு காப்பி பேஸ்ட் செய்து போடுகிறாரே, ஆனால் அவற்றை படிக்கத்தான் மக்கள் தயாராக இல்லை. அவரோ என் கடமை காப்பி பேஸ்ட் செய்து கிடப்பதே என்று இருக்கிறார். நிற்க.

இந்த அழகில் போட்டியாளர்கள் வெளியிட்டு, அதனால் பணம் சம்பாதித்து என ஓவர்டைம் போட்டு கவலைப்படுகிறார்கள். அதை என்னவென்று கூறுவது? எனக்கு என்ன படுகிறதென்றால், பெரியார் அவர்களது முழு எழுத்துக்களும் வெளியே வந்தால், அவற்றையும் யாரேனும் படிக்க நேர்ந்தால் துணியை கிழித்து கொண்டு ஓடப்போவது உறுதி. சும்மா சொல்லப்படாது. மனிதர் மனதுக்கு தோன்றியவாறெல்லாம் பேசியுள்ளார். தான் ஏற்கனவே கூறிக் கொண்டதற்கு முரணாக வந்தாலும் அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆக, அவற்றை வெளியிட அனுமதி தராது வீரமணி அவர்கள் பெரியார் பெயரை மேலும் டேமேஜ் ஆகவிடாமல்தான் தடுக்கிறார் என்றுதான் எனக்கு படுகிறது. இது அவரது நோக்கம் எனக் கூற மாட்டேன். ஆனால் விளைவு என்னவோ நான் சொன்னதுதான்.

எஸ்.வி. சேகர்
எஸ்.வி. சேகர் அதிமுகவில் சேர்ந்தபோது நான் மிகவும் வியப்படைந்தேன். தொண்ணூறுகளில் அவரது நாடகம் “தத்துப்பிள்ளை” வந்தது. அதில் வரும் வில்லி பாத்திரம் ஜெயலலிதாவை நினைவுறுத்துவதாக அமைந்தது. அதை ஜெயலலிதா பார்க்கவில்லை போலும். அதனால்தான் சேகரை சேர்த்து கொண்டார் என நினைக்கிறேன். அந்த நாடகம் பற்றி சில வரிகள்.

முக்கியப் பாத்திரமே ஒரு பெண் அரசியல்வாதிதான். அவரது செயல்பாடுகளில் முக்கியமானது கண்ணில் கண்ட சொத்துக்களையெல்லாம் வளைத்து போடுவது. அவரது தம்பியாக எஸ்.வி.சேகர் வருகிறார். அவருக்கு எல்லா விதத்திலும் உதவியாக இருக்கிறார். ஆனாலும் நல்லவர் என கதை அமைந்திருக்கிறது. அப்பெண்மணி அடிக்கடி ஒரு போலி சாமியாரிடம் ஆலோசனை கேட்கிறார். ஒரு நல்ல இடத்தை தான் பார்த்ததாகவும் ஆனால் தனது தம்பி அதை தனக்கு முடித்து தரவில்லை என்றும் சாமியாரிடம் குறையாக கூறுகிறார். எஸ்.வி.சேகரோ அக்கா குறிப்பிட்ட இடம் மெரீனா பீச் என்றும் அதையெல்லாம் வளைத்து போட முடியாது என்றும், வேண்டுமானால் அந்த இடத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் வைக்கும் காண்ட்ராக்ட் முயற்சிக்கலாம் எனக்கூற நாடகம் கலகலப்பாக செல்கிறது.

இதனால் எல்லாம் அப்பெண்மணி ஜெயை நினைவுபடுத்திவிடுவாரா என்பவர்க்கு இந்த டயலாக் தருகிறேன். அப்பெண்மணியின் கணவர் சரியாக சமையல் செய்யவில்லை என அப்பெண் சலிப்புடன் பேச, அதென்ன விவரம் என சேகர் கேட்க, தான் காலையில் செய்த சிற்றுண்டிதான் அவளுக்கு பிடிக்கவில்லை என கணவர் கூறுகிறார். அப்படியென்ன டிபன் செய்தார் எனக் கேட்க, “சென்னா, ரொட்டி” என கணவர் கூற, சென்னாரொட்டிதான் அக்காவுக்கு பிடிக்கவே பிடிக்காதே என எஸ்.வி. சேகர் கூற, நாடகத்தை பார்ப்பவர் மத்தியில் இன்னொரு குபீர் சிரிப்பு. இந்த ஜோக் புரியாதவர்களுக்கு நான் அதை விளக்கிக் கொண்டிருக்கப் போவதில்லை.

எது எப்படியோ, சேகர் அதிமுகவில் சேர்ந்தது ஒரு விபத்து என்றுதான் எனக்கு படுகிறது. அவருடைய மனோபாவத்துக்கும் அதிமுக அடிப்பொடிகளுக்குத் தேவையான காலில் விழும் கலாச்சாரத்துக்கும் ஸ்நான பிராப்தி கூட கிடையாது என்றுதான் கூறவேண்டும்.

ஐ.டி.ஐ. புத்தகங்களின் மொழிபெயர்ப்பு
இன்று ஒரு மத்திய அரசு அமைப்பின் டெபுடி டைரக்டருடனும் அவர் கீழ் வேலை செய்யும் துணை டைரக்டருடனும் இது சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்களுக்கு ஹிந்தி மொழிபெயர்ப்பு தேவை என என்னிடம் கூறினார்கள். அது நம்மால் ஆகாது என மரியாதையாக கூறிவிட்டேன். ஏனெனில் அந்த வேலைக்கு முக்கியத் தேவையே ஹிந்தி அருங்கலைச்சொல் அகரமுதலி. அது என் வசம் இல்லை. அதுவும் ஐ.டி.ஐ. புத்தகங்களின் பாடங்கள் வெவ்வேறு தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டவை. தமிழிலும் வேண்டுமென என்னிடம் கேட்க, அது வேண்டுமானால் செய்து தருகிறேன் என்றேன். எப்போது ஆரம்பிப்பீர்கள் என என்னை கேட்க, முதலில் அவர்கள் தரும் ரேட் என்ன என கேட்டேன். டெபுடி டைரக்டர் பெருமையுடன் அப்போதுதான் ரேட்டை ரிவைஸ் செய்தார்கள் எனக் கூறிவிட்டு, அதை கூறினார். நான் வழக்கமாக வாங்கும் ரேட்டில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. இது எனக்கு கட்டுப்படியாகாது எனக் கூறிவிட்டு வந்தேன்.

அரசின் சாபக்கேடு என்றுதான் இதை கூறவேண்டும். அரசு முழுநேர ஊழியர்கள் சம்பளம் என்னவோ மிக அதிகம். ஆனால் இம்மாதிரி அவுட்சோர்ஸ் செய்து தரப்படும் வேலைகளுக்கு என்னவோ அடிமாட்டு ரேட்தான். மத்திய அரசில் CSIR கீழ் செயல்படும் Insdoc இம்மாதிரி தொழில்நுட்ப கட்டுரைகளை மொழிபெயர்க்கும் வேலைகளை எடுத்து செய்கிறது. அதனிடம் முழுநேர மொழிபெயர்ப்பாளர்கள் உண்டு. அவர்கள் சம்பளம் மிகவும் அதிகம். ஆனால் ஓபி அடித்து கொண்டிருப்பார்கள். எங்களை மாதிரி பேனல் மொழிபெயர்ப்பாளர்கள்தான் பெரும்பாலான வேலையெல்லாம் செய்வோம். எங்களுக்கு தரும் ரேட்களோ மிகவும் குறைவே. ஆனால் எண்பதுகளில் என்ன நிலை என்றால் மொழிபெயர்ப்பு வேலைகள் கிட்டத்தட்ட எல்லாமே அரசு வாரியங்களுக்குத்தான் வரும். அவையும் இன்ஸ்டாக்குத்தான் தரப்படும். தனியார் நிறுவனங்களின் தேவை அவ்வளவாக இருக்காது. ஆகவே நான் தில்லியில் இருந்தபோது 1981-முதல் 1991 வரை இன்ஸ்டாக்தான் எனது வேலைகளில் பாதிக்கு மேல் கொடுத்தது. 1991-க்கு பிறகு உலகமயமாக்கல் ஆரம்பித்ததும் நிலைமை மெதுவாக மாறத் துவங்கியது. இப்போது என்ன நிலை என்றால் இன்ஸ்டாக்கில் உள்ள முழுநேர மொழிபெயர்ப்பாளர்கள் இப்போது பழைய அளவுக்கு இல்லை என்றுதான் கூறவேண்டும்.

ஆனால் ஒன்று இன்ஸ்டாக் ஒரு சிறந்த ஐடியா. நடத்த வேண்டியபடி நடத்தியிருந்தால் அது இப்போதும் செயல்பட்டு கொண்டிருக்க வேண்டும். ஆனால் பொதுவான அலட்சியத்தால் அவ்வாறு நடக்கவில்லை. என்னை பொருத்தவரை அடிமாட்டு விலைக்கு நான் வேலை செய்தது குறித்து வருந்தவில்லை. ஏனெனில் அது எனக்கு அற்புதமான அனுபவத்தை கொடுத்தது. அதுவும் மொழிபெயர்ப்புக்காக வரும் கட்டுரைகள் பல்வேறு துறைகளை சார்ந்தவை. ஆகவே எனது மொழிபெயர்ப்பின் வீச்சும் அதிகமாயிற்று. இப்போது தைரியமாக தேவையான ரேட்டுக்காக பேரம் பேச முடிகிறது. ஆகவே தனிப்பட்ட முறையில் நான் கூற விரும்புவது, “Hats off Insdoc"!

தகவல் திருட்டு
சர்வதேச மொழிபெயர்ப்பாளர் தலைவாசலாம் ப்ரோஸ்.காம்-ல் இப்போது ஒரு பிரச்சினை கடந்த சில வாரங்களாக சூடுபறக்க விவாதிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. பயனர்களின் தகவல்கள் இன்னொரு தளத்தால் ஹேக் செய்யப்பட்டு அவர்கள் பெயரில் போலி ப்ரொஃபைல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவரவர் இப்போது லபோ லபோ என அடித்து கொள்கின்றனர். தலைவாசலின் அதிபர் பேய்முழி முழிக்கிறார். பார்க்க பாவமாக இருக்கிறது. அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும். என்னதான் இருந்தாலும் எனக்கு பணம் வாங்காமல் பிளேட்டினம் மெம்பர்ஷிப் தந்தவரல்லவா? ஆனாலும் என்ன செய்வது, அதுதான் வாழ்க்கை. இப்பிரச்சினையிலிருந்து அத்தலைவாசல் இழப்பின்றி மீண்டு வரவேண்டும் என இறைவனை வேண்டி கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

34 comments:

  1. பின்னால கலந்துகிறேன் விவாதத்தில்!

    ReplyDelete
  2. பெரியப்பா என்று ஒரு நாடகம் எழுதினார் அதில் முழுக்க அரசியலை கிண்டல அடித்திருப்பார்.

    அரசு ஒப்பந்த முறையில் வேலைக்கு அமர்த்தியிருக்கும் தபால்காரருக்கு ஒருநாள் சம்பளம் 65 ரூ.

    ReplyDelete
  3. திரு. டோண்டு. நீங்க பெரியாரை எதிர்ப்பது ஏன்?

    ReplyDelete
  4. மீ தி first...அதுவும் டோண்டு சாரின் ப்ளாகில். தன்யானேன்..

    ReplyDelete
  5. டோண்டு சார்...இந்த கான்டெக்ஸ்டில் கேட்கிறேன். பாடகி சின்மயி ப்ளூ எலிபன்ட் என்ற பெயரில் translation services-ஐ பெரிய லெவலில் நடத்துகிறாரே. இதை பற்றி உங்கள் கருத்தென்ன? உங்களுக்கு அது மாத்ரி எண்ணம் வந்துள்ளதா?
    மேலதிக தகவல்களுக்கு chinmayisripada.blogspot.com பார்க்கவும்.

    ReplyDelete
  6. @Slogger
    பெரியாரை எதிர்ப்பதன் முக்கிய காரணமே அவரது அளவற்ற பிராமண துவேஷம்தான். எல்லா சாதி பிரச்சினைக்கும் காரணமே பார்ப்பனர்கள்தான் என்ற ஒரு குருட்டு கொள்கையை கடைபிடித்தவர். பார்ப்பனர் அல்லாத உயர் சாதி, பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆகியோரது நலம்தான் அவருக்கு முக்கியம். தலித்துகள் மேல் வன்கொடுமை செய்வது மேலே நான் குறிப்பிட்ட சாதியினர்தான். அது கூட பார்ப்பனர் சொல்லித்தான் நடக்கிறது என்று அடாவடியாக பேசி, எழுதியவர். கீழ்வெண்மணி விஷயம் ஒன்றே போதுமே. கோபாலகிருஷ்ண நாயுடு 54 தலித்துகளை உயிருடன் எரித்தபோது அவன் பார்ப்பனன் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக அவனை பெயர் சொல்லி சாடாது வெறுமனே கூலித்தகராறு, கம்யூனிஸ்டுகளால் நிகழ்ந்தது என பசப்பினார். கூடவே பார்ப்பனீயத்தையும் குற்றம் சாட்டினார்.

    ஆகவே அவரை நான் எதிர்ப்பதில் என்ன தவறு?

    @நடராஜ்
    ஏஜென்சி எல்லாம் நடத்துவது சள்ளை பிடித்த வேலை. இப்போதைய தனி செயல்பாட்டிலேயே திருப்தியாக உள்ளேன்.

    @வால்பையன் & others
    இன்று காலை ஒரு முக்கிய வேலையாக வெளியில் போகிறேன். திரும்பியதும் பின்னூட்டங்களை மட்டுறுத்துகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. இந்தத் தடவ பஞ்சாமிர்தம் பரவால்ல சார்.

    ReplyDelete
  8. //அதில் வரும் வில்லி பாத்திரம் ஜெயலலிதாவை நினைவுறுத்துவதாக அமைந்தது. அதை ஜெயலலிதா பார்க்கவில்லை போலும். அதனால்தான் சேகரை சேர்த்து கொண்டார் என நினைக்கிறேன்.//

    உங்களுக்கு அரசியல் பற்றி ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறேன். தீப்பொறி ஆறுமுகம்னு ஒருத்தர் அவர் ஜெயலலிதாவை திட்டாத திட்டா? அதை தமிழ்நாடே கேட்டதே? அவரை எப்படி அதிமுகவில்?. அதெல்லாம் ஒரு நம்பிக்கைதான். இனிமேலாவது ஒழுங்காக இருப்பார்கள் என்ற நப்பாசதான். ஆனால் எஸ்.வி.சேகர் போன்ற நன்றி இல்லாத ஜாதி போலிகளுக்கு வாழ்க்கை மே பூச்சிகளின் வாழ்க்கை போலதான். சீக்கிரம் முடிந்துவிடும்.

    ReplyDelete
  9. //54 தலித்துகளை உயிருடன் எரித்தபோது//

    44 or 54..

    ReplyDelete
  10. 44 ஓ அல்லது 54 ஓ கொலை கொலைதான்.

    @எவனோ ஒருவன்
    நன்றி

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. //
    பார்க்கவே தமாஷாக இருக்கிறது. சமயசந்தர்ப்பத்துக்கேற்ப, தனது அவ்வப்போதைய அரசியல் நிலைமையை வைத்து பெரியார் அவர்கள் எழுதியதை வெளியிட வீரமணி அவர்களுக்கு மட்டும்தான் உரிமையாம் என்ற நோக்கத்தில் அவர் கோர்ட் தடை வாங்கியது குறித்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை.
    //

    அது தான் தமாஷ் என்று சொல்லிவிட்டீரே. பிறகு என்ன அழுவதா, சிரிப்பதா என்று கேள்வி.

    சிரியுங்கள் ஐயா. கைகொட்டி சிரியுங்கள். நாடே சிரிக்கட்டும் இந்த மடத் தலைவரின் பேச்செல்லாம் கேக்குறவனின் கேணை புத்திக்குத்தான்.

    நல்ல புத்தியுள்ளவன் ராமசாமி நாயக்கரின் பேச்செல்லாம் மதிக்கவே மாட்டான். போடா முட்டாள் என்று சொல்லி இந்தியருக்கே உரிய ignore and proceed பாணியை கடைபிடிப்பான்.

    ReplyDelete
  12. // தமிழ் ஓவியா பெரியாரின் கருத்துகளை எல்லாம் இம்மாதிரி சகட்டு மேனிக்கு காப்பி பேஸ்ட் செய்து போடுகிறாரே, ஆனால் அவற்றை படிக்கத்தான் மக்கள் தயாராக இல்லை.//

    மக்கள் படிக்கிறார்களா இல்லையா என்பதை கீழ் கண்ட புள்ளிவிபரங்கள் உண்மையைத் தெரிவிக்கும் என்பதால் அதை அப்படியே "காப்பி பேஸ்ட் " செய்து தருகிறேன்.
    படியுங்கள்.

    Tamilish Service

    Made Popular : அழுக்குருண்டை பிள்ளையாரு ஆண்டவனா சொல்லுங்க!‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'அழுக்குருண்டை …
    ஆக. 7


    Tamilish Service

    Made Popular : கிருஷ்ணன் - அர்ஜுனன் சம்பாஷணை!‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'கிருஷ்ணன் …
    ஆக. 6


    Tamilish Service

    Made Popular : ஜோதிடம் என்பது அர்த்தமற்ற மூடத்தனமே (நான்சென்ஸ்)‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'ஜோதிடம் என்பது …
    ஆக. 6

    Tamilish Service

    Made Popular : இலங்கையில் என்ன நடக்கிறது?‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'இலங்கையில் என்ன …
    ஆக. 6

    Tamilish Service

    Made Popular : நோயாளிக்கு உடல் பலகீனம், பக்தனுக்குப் புத்தி பலகீனம்‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'நோயாளிக்கு உடல் …
    ஆக. 5

    Tamilish Service

    Made Popular : பாவேந்தரின் நகைச்சுவை உணர்வும் - வைணவ உணவும்‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'பாவேந்தரின் …
    ஆக. 1

    Tamilish Service

    Made Popular : 50 ஆண்டுகளுக்குப் பிறகு டார்வின் கூற்று நிரூபணம்‎ - Hi tamiloviya, Congrats! Your story titled '50 ஆண்டுகளுக்குப் …
    ஆக. 1

    Tamilish Service

    Made Popular : ஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்பவர்களைக் கொலை செய்யும் கொடுமை‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'ஜாதி மாறி, மதம் …
    ஜூலை 31


    Tamilish Service

    Made Popular : ஜாதி சாகிறது -மனிதன் பிழைக்கிறான் எப்படி?‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'ஜாதி சாகிறது …
    ஜூலை 30


    Tamilish Service

    Made Popular : இந்துயிசம் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன?‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'இந்துயிசம் பற்றி …
    ஜூலை 28
    நட்சத்திரமிட்டது
    Tamilish Service

    Made Popular : ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவா...‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'ஜகத்குரு காஞ்சி …
    ஜூலை 28

    mujeeb rahman

    [தந்தை பெரியார்] இஸ்லாத்தில் தீண்டாமையா????????‎ - அண்ணல் அம்பேத்கார் (இக்கட்டுரையில் …
    ஜூலை 28

    Tamilish Service

    Made Popular : கைம்மாறு கருதாதற்குப் பெயர்தான் தொண்டு!‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'கைம்மாறு …
    ஜூலை 28

    Tamilish Service

    Made Popular : உலக நாடுகள் -தூரப்பார்வை -செர்பியா‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'உலக நாடுகள் …
    ஜூலை 28

    Tamilish Service

    Made Popular : கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால்...‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'கடவுள் என்று …
    ஜூலை 27

    Tamilish Service

    Made Popular : சீதை பிடித்து வைத்த மணல் லிங்கத்தை சிதைத்த அனுமான் வால் அறுந்து விட்டதாம்!‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'சீதை பிடித்து …
    ஜூலை 27

    Tamilish Service

    Made Popular : சூத்திரர்களுக்கு வேதம் ஒதக் கூடாதாம் என்ன கொடுமை!‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'சூத்திரர்களுக்கு …
    ஜூலை 26

    Tamilish Service

    Made Popular : வேளாண்மை விஞ்ஞானி எனப்படும் பார்ப்பனரின் ஏமாற்று வேலை‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'வேளாண்மை விஞ்ஞானி …
    ஜூலை 26

    Tamilish Service

    Made Popular : சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ...‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'சிருங்கேரி …
    ஜூலை 25

    Tamilish Service

    Made Popular : பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய்விடும்‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'பக்தி வந்தால் …
    ஜூலை 25

    Tamilish Service

    Made Popular : பெரியார் சிலைக்குக் கீழே கடவுள் மறுப்பு வாசகம் ஏன்?‎ - Hi tamiloviya, Congrats! Your story titled 'பெரியார் …
    ஜூலை 24


    என்ன படித்தீர்களா?

    தமிழிஸ் திரட்டி தளத்திலிருந்து எனது பதிவுகளை அதிகமாக பார்வையிட்டுள்ளனர் என்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

    எனது மின்னஞ்சலின் முகப்புப் பக்கத்தான் மேலே கொடுத்துள்ளேன்.
    புளுகறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா? டோண்டு

    ReplyDelete
  13. நிறைய தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  14. //பெரியாரை எதிர்ப்பதன் முக்கிய காரணமே அவரது அளவற்ற பிராமண துவேஷம்தான். //

    1. பார்ப்பன சாதிப்பற்று மிக்கவரான் தொண்டு ராகவன் ஏன், ‘பெரியார் அவர்கள்’ என்று பலமுறைகள் எழுதுகிறார் இங்கே? தன் சாதிசனத்தை வெறுத்தவனை வெறும் ராம சாமி என்றாலே போதும். பார்ப்பனர்கள் குற்றமற்றவர்கள். பெரியார் செய்தது வெறும் துவேசம் என்றால், பொய்யும் புறமும் ஒரு சாதியினரைப்பற்றி ஒருவன் சொல்லித்திரிந்தால் அவனை மூன்றாம் தர அவச்சொற்களால் தாக்கலாமே?

    2. பெரியாருக்கு அந்த அளவற்ற் பார்ப்பனத்துவேஷம் ஏன் எப்படி வந்தது? Motiveless malignity? Why? Can there be a malignity without any motive?

    தோண்டு இராகவன் அந்த அளவற்ற பார்ப்பனத்துவேஷம் பெரியாருக்கு வந்தது என தேடிச்சொன்னால் படிக்கச்சுவையாக இருக்கும்.

    //ஆகவே அவரை நான் எதிர்ப்பதில் என்ன தவறு? //

    அதை ஓப்பனாகச் செய்யுங்கள். பார்ப்பனர்கள் பலரின் வலைப்பூக்கள் இதைச் செய்ய்வே திறக்கப்பட்டிருக்கின்றன.

    ஏன், ‘பெரியார் அவர்கள்’?

    இவண்
    நெருஞ்சி முள்

    ReplyDelete
  15. //உங்களுக்கு அரசியல் பற்றி ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறேன். தீப்பொறி ஆறுமுகம்னு ஒருத்தர் அவர் ஜெயலலிதாவை திட்டாத திட்டா? அதை தமிழ்நாடே கேட்டதே? அவரை எப்படி அதிமுகவில்?. அதெல்லாம் ஒரு நம்பிக்கைதான். இனிமேலாவது ஒழுங்காக இருப்பார்கள் என்ற நப்பாசதான். ஆனால் எஸ்.வி.சேகர் போன்ற நன்றி இல்லாத ஜாதி போலிகளுக்கு வாழ்க்கை மே பூச்சிகளின் வாழ்க்கை போலதான். சீக்கிரம் முடிந்துவிடும்./


    மதிமுக எல்.ஜி,செஞ்சி-இன்பத்தமிழன் நிலை தான் எஸ்.வி சேகருக்கும்.
    கொஞ்ச நாள் கெளரவம்
    அப்புறம் குப்பத்தொட்டியில் வீசப் படுவர் .இது மாதிரிகளுக்கு அது தான் நிதர்சனம்.

    ReplyDelete
  16. //
    ஏன், ‘பெரியார் அவர்கள்’?
    //

    நாய் கடித்தால் நான் என்ன திருப்பியா கடிக்கிறோம் ?

    ReplyDelete
  17. நெருஞ்சிமுள்
    பெரியார் அவர்களுடன் எனக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது என்பது ஒரு பக்கம். அதற்ககாக அவரது வயதுக்கு மரியாதை தராமல் இருக்கலாகாது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. 1.அதிமுகவில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிக்கும் மன்னார்குடி தான் காரணாமா?
    2. ஜெ யின் தேர்தல் புறக்கணிப்பு உங்கள் கருத்து?
    3. பணிவு புகழ் பன்னீர் செல்வமும் மாறிவிடுவார் போலுள்ளதே,தேவரின ஒட்டு வங்கியும் கை நழுவுகிறதா?
    4.ஜெ அதிமுகவை ஒரு வழி பண்ணாமல் ஓய மாட்டார் போலுள்ள்தே?
    5.எம்ஜிஆர் ஆத்மா இதையெல்லாம் பார்த்து?

    ReplyDelete
  19. How come all the comments of that blog say "hi tamilovia - congrats your story titled"..... someone using a rubber stamp?

    ReplyDelete
  20. //தோண்டு இராகவன் அந்த அளவற்ற பார்ப்பனத்துவேஷம் பெரியாருக்கு வந்தது //

    It should have been தொண்டு. I corrected it but, it was clicked before the correction became effective.

    Nerunji Mul

    ReplyDelete
  21. @ந்ருஞ்சி முள்
    என் பெயர் தொண்டு ராகவனோ தோண்டு ராகவனோ அல்ல. என் பெயர் டோண்டு ராகவன்.

    உங்களிடம்தான் பிளாக் இருக்கிறதே, பிளாக்கராக ஏன் லாக் இன் செய்து வரமாட்டேன் என்கிறீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  22. No Mr Sethuraaman.

    As I see today in blogosphere visited and maintained by Tamil-speakers, the periyaarists are equally stronger; and people, who are not periyaarists proper but surrogate lovers of his thoughts, are numerous today.

    This can be partly attributed to the extreme position - a blind love or blind support of everything that brahmins have done or not done - taken by Tamil paarppanars in blogs. According to TPs, their people are impeccable in everything. That means, they are superhumans which can do no wrong.

    The TPs are by instinct conservatives and resistent to change in orthodox position so far as religion is concerned. Some of them are ultra orthodox. Such ultras open blogs and there you see links given for exteme hindutva groups and other religious psychopaths. You can see Bharti picture there with the intention to make him appear as a hindutva loyalist. He is a poet, but for such TPs he is a brahmanan intent on bringing a hindu rashtra!

    A TP may not be religious to the core; may even be an atheist; may claim to be egalitarian; and yet, he will rush in quickly and write passionately against anyone who dare to question the orthodox brahmins of present or past.

    I had no previous encounter with periyaarists, nor was I knowledgeable in periyaar thoughts - what he said or wrote.

    I thought, like anyone else, that his was pure anti-brahminism; and his attacks on brhamins are motiveless malignity. But, on reading in many forums about him which is provoked by the anti-periyaarist chiefly the TPs, and the periyaarists like TO reeling out his thoughts ceaselessly, one is perforce to read both sides; and get au fait with both sides.

    Thus, I came to understand all that is being said against periyaar by TPs are motivated, although they have reason to deplore his thoughts as they are personally affected in Tamil social life. I became curious to know all about Periyaar. I think my curiosity is caused by TPs' virulent attack on Periyaar. Why they attack? What is in him? Like that. Periyaar is being made famous or, you can say, to your heart's desire - not by periyaarist, but by TPs! Irony of ironies!!

    Needless to say, for TPs, the only way to make him unpopular is to ignore him. But they wont. Open a topic on him, and you see only TPs getting worked up and posting many angry and sarcastic messages.

    The positions on both sides are getting hardened day by day. Never getting abated. More young people are getting hooked to both sides.

    As a third party, I will have interesting time to spend watching the tug-of-war!

    I read TO regularly nowadays, Earlier, I just ignored. After visiting Dondu blog, I have made it a habit to read TO as well. Recently I posted a message in his blog post on Pillayar.

    Nerunji Mul

    ReplyDelete
  23. //மதிமுக எல்.ஜி,செஞ்சி-இன்பத்தமிழன் நிலை தான் எஸ்.வி சேகருக்கும்.
    கொஞ்ச நாள் கெளரவம்
    அப்புறம் குப்பத்தொட்டியில் வீசப் படுவர் .இது மாதிரிகளுக்கு அது தான் நிதர்சனம்.//

    Not well thought out observation, I'm afraid.

    S.Ve.Sekar is a prize catch. Inba and Chenji are not. They are also-rans.

    The value of S.Ve.Sekar is more because of his caste. He can be used like a cat set among pigeons.

    Yesterday, the comedian said in Kanchipuam that he would bring 20 lakh votes of TPs to DMK if MUKA accedes to his request of reservations quota for TPs.

    Karunanidhi is watching.

    S.Ve.Sekar will be used properly, not dropped like other non-TPs, as you imagine. MUKA may throw sops to S.Ve.Sekar by helping him personally in different ways so that he would sing for DMK - much to the dismay of all TPs. Remmber, he is having money problems after he took the film with his son as the hero which flopped tremendously.

    As I said here, he may be a fall guy for TPs now because of his closeness to Muka. But future course may veer differently if he succeeds in getting Muka turn round; and SVS may 'use' MUKA in turning on the periyaarsist and other. T

    Wait and watch.

    Nerunji Mul

    ReplyDelete
  24. 1980 இல் ஒரு பக்கத்துக்கு 9 ரூபாய் என்பது (INSDOC) அடிமாட்டு ரேட்டா?!

    ReplyDelete
  25. ”உங்களிடம்தான் பிளாக் இருக்கிறதே, பிளாக்கராக ஏன் லாக் இன் செய்து வரமாட்டேன் என்கிறீர்கள்?”
    That is none of your business. If not like me, reject comments. I will act I want. No unwanted advice from you.

    Nerunji Mul

    ReplyDelete
  26. //திரு. டோண்டு. நீங்க பெரியாரை எதிர்ப்பது ஏன்?//

    because Dondu wants publicity. He always wants to be in lime light.

    Sankar

    ReplyDelete
  27. 1.அதிமுகவில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிக்கும் மன்னார்குடி தான் காரணாமா?
    சமீபத்தில் 1996ல் இதைவிட பெரிய நெருக்கடி ஏற்பட்டது. அப்பொழுது திருநாவுக்கரசு, சாத்தூர் ராமசந்திரன் போன்றோரெல்லாம் தனி அதிமுக கேட்டு போராடினர். அப்பொழுதே அதில் இருந்து வெளியே வந்து ஆட்சியை பிடித்தது வரலாறு. போலிகள் எப்படியும் லாபம் இல்லையென்றால் வெளியேறிவிடுவர். அதனால் இதுவும் கடந்து போகும்.
    2. ஜெ யின் தேர்தல் புறக்கணிப்பு உங்கள் கருத்து?
    இதில் பலவித கணக்குகள் இருப்பதாக் கேள்விபடுகிறேன்.
    3. பணிவு புகழ் பன்னீர் செல்வமும் மாறிவிடுவார் போலுள்ளதே,தேவரின ஒட்டு வங்கியும் கை நழுவுகிறதா?
    அவர் ஜா.அணியில் இருந்த போது தேவர் ஜெ அணிக்கு ஓட்டு போடவில்லையா?
    4.ஜெ அதிமுகவை ஒரு வழி பண்ணாமல் ஓய மாட்டார் போலுள்ள்தே?
    அவர் ஆரோக்கியபற்ற பகுதிகளை அறுவை சிகிச்சை செய்கிறார். அவ்வுளவுதான்.
    5.எம்ஜிஆர் ஆத்மா இதையெல்லாம் பார்த்து?
    நிச்சயமாக வருத்தபடாது.

    ReplyDelete
  28. //1980 இல் ஒரு பக்கத்துக்கு 9 ரூபாய் என்பது (INSDOC) அடிமாட்டு ரேட்டா?!//
    1980-ல் ரேட் ஒரு பக்கத்துக்கு 12 ரூபாய். 1981-ல் 20 ரூபாய் ஆயிற்று. நான் 1995-ல் கடைசியாக இன்ஸ்டாக் வேலையை மறுத்தபோது ரூ. 70.

    ரேட்டுகள் எல்லா சமயத்திலும் சந்தை விலையை விட பல மடங்கு குறைவுதான். இருப்பினும் 1991 வரை இன்ஸ்டாக் பாப்புலர் ஆகவே இருந்தது. பிறகு உலகமயமாக்கம் வந்து எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. > Anonymous said...
    >”உங்களிடம்தான் பிளாக் >இருக்கிறதே, பிளாக்கராக ஏன் லாக் >இன் செய்து வரமாட்டேன் >என்கிறீர்கள்?”
    >That is none of your business. If >not like me, reject comments. I >will act I want. No unwanted >advice from you.

    >Nerunji Mul

    நெரிஞ்சி முள், இந்த மிக அற்ப விஷயமான ப்ளக்கர்கே இவ்வளவு defensive ஆகவும், கோபத்துடனும் பதில் சொல்கிறீர்களே, மற்றவர்கள் மரபை தூக்கி எரிய வேண்டும் உங்களுக்கு எப்படி வாய் வருகிறது. இதைப் போல மூர்கத்தனத்தை பதிவுலகில் காண்பது அரிது. மற்றவர்கள் தன் மரபை தூக்கி எரிய வேண்டும் என எழுதும் போது வெட்கமாக இல்லை?

    ReplyDelete
  30. //44 ஓ அல்லது 54 ஓ கொலை கொலைதான்.//

    5 பேரைக் கொன்ற வழக்கின் முதன்மைக் குற்றவாளியான ஜெயேந்திரன் விடுதலை - என்று எழுதுவது உங்களுக்கு சரியாகப் பட்டால் 44/54 ஒரு பொருட்டில்லைதான்.

    ReplyDelete
  31. //
    மற்றவர்கள் தன் மரபை தூக்கி எரிய வேண்டும் என எழுதும் போது வெட்கமாக இல்லை?
    //

    அட்வைஸ் எல்லாம் அடுத்தவருக்கே...தனக்கு என்று வரும் போது எல்லாம் மாறிவிடும். அப்படி இருப்பவர்கள் எப்பவுமே இப்படி மூர்க்கத்தனமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்துகொள்வார்கள்.

    பெரியாரும் அப்படித்தான் நடந்துகொண்டார். அவரது சிஷ்யகோடிகளும் அப்படித்தான் நடந்துகொள்கின்றனர்.

    ReplyDelete
  32. //
    5 பேரைக் கொன்ற வழக்கின் முதன்மைக் குற்றவாளியான ஜெயேந்திரன் விடுதலை - என்று எழுதுவது உங்களுக்கு சரியாகப் பட்டால் 44/54 ஒரு பொருட்டில்லைதான்.
    //

    என்னதான் பெரியார் மீது விமர்சனம் எழுதினாலும், பார்ப்புகள் பெரியாரை ஒருமையில் பேசுவது மிகவும் அறிது. ஆனால் பெரியாரின் சீடர்கள் ஒரு பார்ப்பான மதகுருவான ஜெயேன்திரரை இதுவரை மரியாதையாகப் பேசியதே இல்லை.

    அது தான் பெரியார் இவர்களுக்குக் கற்றுக்கொடுத்த பகுத்தறிவு.

    ReplyDelete
  33. பெரியார் புரட்சி நடந்த போது நான் பிறக்க கூட இல்லை. ஆனால் அவர் செய்ததாக கூறப்படும் செயல்களுக்கே இந்த மறுப்பு.

    நல்ல சமையல் செய்து, தட்டில் போட்டு சாப்பிடும் சமயத்தில் அதில் தன செருப்பை தூக்கி வைப்பதற்கு இணையானது பெரியாரின் இந்து கடவுள்கள் மீதான செயல்.

    கடவுள் இருக்காரா/இல்லையா என்பது முடிவில்லா விவாதம்.

    கடவுள் இல்லையென்ற நம்பிக்கை இருந்தால் , அதை மக்களுக்கு விளக்க வேண்டுமென்றால் அதை மட்டும் தான் அவர் செய்திருக்கணும் (பேசியிருக்கனும்).

    விநாயகருக்கு செருப்பு மாலை, கோயிலுக்கு வருபவர்களுக்கு அடி உதை. பகுத்தறிவு போர்வையில் அடாவடி. இந்த "பகுத்தறிவு செயல்" தான் அவருக்கு பெயர் வாங்கி தந்தது.

    மற்ற மதங்களில் மூட நம்பிக்கை இல்லையா?

    இந்த பகுத்தறிவ அவர் மற்ற மத கூடங்களில் காமித்திருந்தால் அவருக்கு அங்கேயே சமாதி கட்டி இருப்பார்கள். நல்ல இளிச்சவாய் பயல்கள் (நம்ம தான்) இருக்கும் இடத்தில் தன வீரத்தை காட்டி அவர் மட்டும் "பகுத்தறிவு வாழ்க்கை" வாழ்ந்தார்.

    என்னால் அவரை ஒரு வெறி பிடித்தவராக மட்டுமே பார்க்க முடிகிறது. ஜாதி/மத ஒழிப்பு செய்ய வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருந்ததாக தெரியவில்லை.

    ஆனால் இப்போ பார்பானியம் பேசுவது வெறும் அரசியல். தேவையற்றது.

    எனக்கு தெரியாம தான் கேட்கிறேன்.

    ஒரு மகள் வயதுடைய பெண்ணை திருமணம் செய்து கொள்வது பகுத்தறிவா?

    கோடான கோடி மக்கள் தொழும் கடவுளை அசிங்கபடுதுவது பகுத்தறிவா?

    மூணு பொண்டாட்டி வைசுகிறது தான் பகுத்தறிவா? (மு.க வை சொல்லறேன். எப்படி தான் சமாளிகிராரோ?)

    இல்லை, வாரிசு அரசியல் செய்வது பகுத்தறிவா?
    (பேசாம முதல்வருக்கு பதிலா ராஜாதி ராஜன் கருணாநிதி, சின்ன இளவரசர் ஸ்டாலின், அப்படின்னு சொல்லலாம்)

    இலவசங்கள் பகுத்தறிவா?

    ஜாதி கட்சிகள் பகுத்தறிவா?

    ஜால்ரா அடித்து பொழைப்பு நடத்துவது பகுத்தறிவா? (வீரமணியை தான் சொல்லறேன்)

    கலைஞர் காலில் நமஸ்கரிப்பது பகுத்தறிவா/சுயமரியாதையா ? (நம்ம முன்னாள் மத்திய அமைச்சர் பாலு அடிக்கடி விழுவார்)

    ********************************************************************

    இந்த பகுத்தறிவுவாதிகளுக்கு சில விஷயங்கள் ஏன் கண்ணுக்கு தெரிவதில்லை

    போலிச்சாமியார், அருள்வாக்கு, கடவுளின் கலியுக அவதாரம்... இப்படி ஊரை கொள்ளைஅடிக்கும் கூட்டத்தை பற்றி அவர்களுக்கு தெரியாதா?? தனி நபர் வழிபாடு ??? அதிலும் இப்போ வாரிசு சாமியார்கள். அட்ரா சக்கை.

    காசு கொடுத்து மதம் மாற்றுதல் ??? இதற்க்கு என்ன பகுத்தறிவுவாதிகள் செய்ய போகிறார்கள்.

    "ஊனமுற்றோர்களை நடக்கவைகிறார், குருடர்களை பார்க்கவைகிறார் , செவிடர்களை கேட்க வைக்கிறார். வாரீர். வாரீர். " இந்த கூட்டங்களும் உங்களுக்கு தெரிவதில்லையா?

    இந்த அப்பட்டமான அநியாயங்களை தட்டி கேட்க கருப்பு சட்டைகாரர்கள் ஏன் போகவில்லை. ?

    *****************************************************

    ReplyDelete
  34. செழியன்August 12, 2009 7:24 PM

    தாழ்த்தப்பட்ட பிற்படுத்த பட்ட சமூகத்தின் எழுச்சி கண்டு பொறுக்காமல் பொறமை கொண்டு தந்தை பெரியாரையும் கலைஞரையும் சொல்லெணா கடும் வார்த்தைகளால் விமர்சிப்போரை நாடு அடையாளம் கண்டு வெகுநாடகளாய் விட்டது.
    கலைஞரை அவர்தம் கண்ணென காட்சி தரும் கழகத்தை அழிப்பேன் என சூழுரைத்த சூரர்கள் இன்று முக்காடு போட்டு மூலையில் முடக்கம்.மக்கள் சக்தியால் தூக்கி ஏறியப்பட்டு சீந்துவாராற்று மிகப் பரிதாப நிலையில் உள்ளதை இந்த நாடு அறியும்.

    பகுத்தறிவு பகலவனும்,பண்பாளர் வாழும் தொலகாப்பியராம் கலைஞரும் ஒடுக்க பட்ட மக்களின் நிரந்திரச் சொத்து.

    சமுதாய சிற்பிகள்.
    அவர்கள் புகழை குறைக்க எந்த கொம்பனாலும் முடியாது.

    எந்தனை அந்தர் பல்டி அடித்தாலும்
    இனி உங்கள் ஜம்பம் பலிக்காது
    பருப்பு இனி வேகாது
    தமிழக மக்கள் உங்களை, உங்கள் வெற்றுக் கூச்சலை நமபத் தயாராயில்லை.

    அகில இந்திய அரசியலை இயக்கும் சூத்திரகாரி தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நாடறியும்.
    நல்லோர்கள் எல்லாம் கலைஞர் பக்கம் என்பதை சட்ட மன்ற இடைத்தேர்தல் பறை சாற்றும்.

    ஏழைகள் நலம் காக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம் கண்டு உலகே வியக்கிறது
    ஒரு ரூபாய் அரிசி் திட்டம் சூப்பர் திட்டம்.
    பசிப்பிணி போக்கிய மாமனிதர் 100 ஆண்டுகளுக்கு மேலும் வாழ்ந்து மக்கள் பணியாற்ற இயற்கை அன்னை அருள் புரிய அனைவரும் வேண்டுவோம்

    ReplyDelete