எந்தப் பெரிய விஷயமாயினும் அதன் ஆரம்பம் அனேக சமயங்களில் ஒரு சாதாரணமான விஷயமாகத்தான் இருக்கும். அதற்கு உதாரணமாக என்னுடைய மொழிபெயர்ப்பு வேலையையே சொல்லலாம். தற்சமயம் நான் சென்னையில் உள்ள ரொம்ப தீவிர அளவில் பணிபுரியும் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் எந்த போலி அடக்கமும் என்னைத் தடுக்கவில்லை. ஆனால் அதன் ஆரம்பம் ரொம்ப எளிமையானது.
1975 மார்ச்-ல் ஜெர்மன் மொழி பெயர்ப்பு செய்ய ஆரம்பித்தேன். சென்னை வாடிக்கையாளர்கள்தான் முதலில் எனக்குக் கிடைத்தனர். அதிலும் முக்கியமாக மேக்ஸ் ம்யுல்லர் பவனின் நிர்வாக அதிகாரி காலம் சென்ற தேசிகன் அவர்கள்தான் எனக்கு முதல் வேலையை கொடுத்தார். பேப்பர்களில் விளம்பரம் கொடுத்ததில் ரொம்பப் பலன் இல்லை. ஏதோ அவ்வப்போது வேலைகள் கிடைத்து வந்தன. மொழிபெயர்ப்பு செய்வதில் எனக்கு இருந்த விருப்பமே என்னை விடாது முயற்சி செய்ய வைத்தது.
1976-ல் ஹிந்துவில் இன்ஸ்டாக் (Insdoc-Indian National Scientific Documentation Centre) பற்றி ஒரு கட்டுரை வந்தது. அதன் டைரக்டர் திரு. பார்த்தசாரதி அவர்களின் பேட்டி அந்தக் கட்டுரையில் வந்திருந்தது. அதில் இன்ஸ்டாக்கின் மொழி பெயர்ப்புப் பிரிவைப் பற்றி எழுதப் பட்டிருந்தது. அதில் வேலை செய்யும் முழு நேர மொழி பெயர்ப்பாளர்கள் தவிர ப்ரீ லான்ஸ் மொழி பெயர்ப்பாளர்கள் சேவையையும் பயன் படுத்திக் கொள்வதாக எழுதப் பட்டிருந்தது.
உடனே ஒரு இன்லேண்ட் லெட்டரை எடுத்து இன்ஸ்டாக்குக்கு ஒரு லெட்டர் என் கைப்பட எழுதி அனுப்பினேன் (தட்டச்சு கூடச் செய்யவில்லை). ஒரே வாரத்தில் இன்ஸ்டாக்கிலிருந்து ஸ்வாமி என்பவர் எழுதியக் கடிதமும், மொழி பெயர்ப்பு சோதனைக்காக ஒரு சிறிய டெக்ஸ்டும் கிடைக்கப் பெற்றன.
மொழி பெயர்ப்பு செய்து அனுப்பியப் பிறகு சில நாட்கள் கழித்து என் சேவை ஏற்கப் பட்டதாகத் தகவல் கிடைத்தது. அதன் பிறகு அவ்வப்போது தபால் மூலம் வேலை வரும். தபால் மூலம் மொழி பெயர்ப்பு அனுப்பப்படும்.
நடுவில் ஃபிரெஞ்சு டிப்ளோம் சுபேரியர் முடிந்து 1978 முதல் சில பிரஞ்சு வேலைகளும் பெற ஆரம்பித்தேன். அதனால்தான் எனக்கு ஐ.டி.பி.எல்லில் மொழிபெயர்ப்பாளராக மட்டுமின்றி பொறியியல் நிபுணராகவும் வேலை கிடைத்தது.
1981-ல் ஐ.டி.பி.எல்லில் பணி செய்வதற்காக டில்லிக்கு குடி புகுந்தேன். அதன் பிறகு சுமார் 13 வருடம் இன்ஸ்டாக்குக்காக பல மொழி பெயர்ப்பு வேலைகள் ஏற்றுக் கொண்டேன். தன்னுடைய ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்களில் இன்ஸ்டாக் எனக்குத்தான் அதிக வேலை கொடுத்தது. இன்ஸ்டாக்கின் முழு நேர மொழிபெயர்ப்பாளர்கள் கூட என்னளவுக்கு இன்ஸ்டாக் வேலைகளை செய்யவில்லை என்பதை நான் இப்போது கூறினால் உங்களால் நம்ப முடியாதுதான். ஆனால் அதுதான் உண்மை.
இவை எல்லாம் ஒரு சாதாரண 20 பைசா இன்லேன்ட் லெட்டரிலிருந்து ஆரம்பித்தது என்பதை நினைத்து இப்போதும் வியக்கிறேன். பின்னொரு நாள் ஸ்வாமியுடன் பேசும்போது இது பற்றிக் கூறினேன். அவர் அதற்கு ஹிந்துவில் வெளியானக் கட்டுரை சம்பந்தமாக என் கடிதத்தை டாக்டர் பார்த்தசாரதியிடம் அவர் காட்டிய போது அவர் மிக மகிழ்ந்து ஒரு கோப்பில் இம்மாதிரிக் கடிதங்களை இடச் சொன்னார் என்று கூறினார். ஒரு மாதம் கழித்து ரிவ்யூ செய்த போது என் கடிதம் மட்டும்தான் கோப்பில் இருந்ததாம். ஏதோ இன்ஸ்டாக்குக்கும் எனக்கும் விட்ட குறை தொட்ட குறை போல இல்லை?
இன்ஸ்டாகின் உதவியால் என்னால் ஒரு வெற்றிகரமான மொழிப் பெயர்ப்பாளனாக மாற முடிந்தது. அதாவது டில்லியில் கால் ஊன்றிக் கொள்ள ஒரு இடம் கிடைத்து, ஐ.டி.பி.எல்லில் நல்ல வேலை கிடைத்து, அனுபவம் பல பெற்று, என்றெல்லாம் கூறிக் கொண்டே போகலாம். சென்னையிலேயே இருந்திருந்தால் இன்ஸ்டாக் தபால் மூலம் இவ்வளவு வேலைகள் கொடுத்திராது. இதையும் இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
3 hours ago
10 comments:
எனது மொழி ஆர்வத்தை மேலும் தூண்டும் விதமாக இந்தக் கட்டுரை அமைந்துள்ளது. நன்றி
வெற்றி பெற வாழ்த்துக்கள் வினையூக்கி அவர்களே. அதே நேரத்தில் உங்களுக்கு ஒன்று கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இடுவதோ இடாததோ உங்கள் விருப்பமாயிருக்க வேண்டும். அதை விடுத்து போலி டோண்டு என்ற ஒரு இழிபிறவி என்ன கூறுவானோ என்று பயந்து அவன் ஆதரவைக் கோரி பதிவு போடுவதும் அவன் பிழைத்துப் போ என்ற ரேஞ்சில் உங்களுக்கு பின்னூட்டமிடுவதும் என்ன இதெல்லாம்?
மொழிகள் கற்பதில் மட்டும் என்னை பின்பற்றினால் போதாது. தைரியமாக ந்டவடிக்கை எடுப்பதிலும் என்னைப் பின்பற்றவும்.
அதன்றி இந்த ஜாட்டான் கோபித்துக் கொள்வானோ வேறு யாரேனும் ஏதாவது கூறுவார்களோ என்றெல்லாம் இருந்தால் சத்தியமாக வாழ்க்கையில் முன்னேற முடியாது.
25 வயதே ஆகும் உங்கள் முன்னால் நீண்ட வாழ்க்கை இன்னும் வாழ்வதற்காக இருக்கிறது. தைரியம் அதில் முக்கியம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல அறிவுரை திரு டோண்டு அவர்களே,
வாழ்க்கையில் மனிதன் உணவு,தண்ணீர் ஆகியவை இல்லாமல் சிறிது நாட்கள் வாழ்ந்து விடலாம் ஆனால் தைரியமும் நம்பிக்கையும் இல்லாமல் சில விநாடிகள் கூட வாழமுடியாது
Dear Sir,
A way to organize all your articles into categories has been found and the necessary template changes are listed in my blog
http://bunksparty.blogspot.com
Will be glad if you can use it and organize your blog.
நன்றி கால்கரி சிவா அவர்களே,
அடாவடிக்காரர்கள் வெறுக்கத் தகுந்தவர்கள். எரிச்சலை அதிகம் கிளப்புபவர்கள். ஆனால் அவர்களுக்கு பயப்படுபவர்களைப் பார்த்தால் என்ன சொல்வதென்றே புரியவில்லை.
இப்போது போலி டோண்டு விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். அவன் என்ன பெரிய பிஸ்தாவா? எல்லோரையும் திட்டும் ஒரு மன நோயாளி அவன். முன் ஜாக்கிரதை நடவடிக்கைகள்தான் எடுத்தாகி விட்டதல்லவா? உண்மையைக் கூறப் போனால் எனக்குத்தான் அவனால் அதிக அபாயம் அவனால்.
என் அடையாளத்தைத் திருடி அவன் மற்றவர்களைத் திட்டியதுதான் எல்லோருக்கும் தெரியுமே. அதையே சமாளித்தாகி விட்டது. திட்டி மெயில் அனுப்புகிறான். அவ்வளவே. அதை டெலீட் செய்து போய்க் கொண்டே இருந்தால் தீர்ந்தது காரியம். அதை விடுத்து அவனிடம் நல்ல பெயர் எல்லாம் ஏன் சம்பாதிக்க வேண்டும்?
அதே நேரத்தில் அபாயத்தை உணர்ந்து தற்பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதும் முக்கியம். அதுதான் இந்த விஷயத்தில் கமெண்ட் மாடரேஷனாக வந்து விட்டதல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி.
போலி டோண்டுவைப் பற்றி அரசல் புரசலாக கேள்விப்பட்டிருந்தாலும், நான் பிரென்சு பாஸான விசயத்தை உங்கள் பேரைப் போட்டே தெரிவித்தேன். (டோண்டு சார் நான் பிரென்ச் பாஸாயிட்டேன்). எனக்கு என்ன ஆச்சர்யமளித்தது என்றால் "போலி டோண்டு" என்னைத்திட்டவில்லை.அந்த ஆச்ச்ரயத்தைத் தான் பதிவாகப் போட்டேன். தாங்கள் நினைப்பது போல் "போலி அனுமதித்தப் பின்பு" நான் உங்களுக்குப் பின்னூட்டமோ/பதிவோ இடவில்லை. பொதுவாக நான் பின்னூட்டங்கள் அதிகமாகவும் இடுவதில்லை.(எல்லாம் சோம்பேறித்தனம் தான்). நான் நிச்சயமாக தைரியசாலி என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வினையூக்கி அவர்களே,
நீங்கள் எழுதினீர்கள்: "(தப்பித்தேன், திரு.போலி டோண்டு அவர்களே என்னை விட்டு விடுங்கள்).
அனேகமாக உண்மையான டோண்டுவை விட போலிக்கு அதிக ரசிகர்கள் போலும்.
ஆபாச எழுத்துக்களை தவிர்த்து விட்டால் "உண்மையான போலிக்கு" எழுத்தில் நயம் இருக்கிறது. பயந்து பயந்து இப்பதிவை பதிக்கின்றேன்."
இழிபிறவி போலி டோண்டு இட்டப் பின்னூட்டம்: "முதலில் நீங்கள் அந்த வெறியனுக்கு வாழ்த்து சொன்ன அன்றே நான் படித்துவிட்டேன். ஆனாலும் நான் உங்களைத் திட்டவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் தரமான பின்னூட்டங்களையோ இடுகின்றோம். காரணம் இரண்டு, ஒரு நல்ல நோக்கத்துக்காக தாங்கள் படித்த மொழியறிவுக்காக அவருக்கு நன்றி சொல்லி இருக்கிறீர்கள். ஜாதிக்காக நன்றி சொல்லவில்லை!!!"
நீங்கள் மொழி வல்லுனர். வார்த்தைகளை பார்த்து இடவேண்டும். மேலே போலியின் வார்த்தைகள் உங்களை condescending ஆகப் பார்க்கின்றன. அதுவே என் வருத்தத்துக்குக் காரணம். வயதில் இளையவர் நீங்கள். வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறீர்கள். நான் அறுபது வயது நிரம்பியவன். நிறைய அடிப்பட்டவன். அடாவடி பேர்வழிகளுக்கு ஒரு லிஃடும் தரலாகாது என்பது உங்கள் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். ஆகவே சற்று ஷார்ப்பாக எழுதினேன். மன்னிக்கவும்.
மற்றப்படி நீங்கள் தைரியசாலிதான் என்று தன்னம்பிக்கையுடன் கூறுவது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் நிச்சயம் உங்களுக்கு துணையிருப்பான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆசிர்வாதத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
நன்றி நல்லான் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment