6/23/2008

தாய் மொழி தரும் உற்சாகம் - 3

எனது தாய் மொழி தரும் உற்சாகம் -2 இடுகையில் குறிப்பிட்டிருந்த மகிழ்ச்சி மறுபடியும் கிட்டியது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம், அது ஒன்றுக்கு மூன்று மடங்காகக் கிட்டியது. அப்பதிவில் நான் குறிப்பிட்டிருந்த அதே Proz.com ப்ளாட்டினம் உறுப்பினர் விஷயம்தான். போன ஆண்டு அதை ஒரு வருடத்துக்கு தந்தனர். அது அடுத்த மாதம் 13-ஆம் தேதி முடிவடைகிறது. இம்முறையோ அதை மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து தந்தனர். அதே மாதிரி காலணா செலவில்லாமல் எனது ப்ரௌனீஸ் புள்ளிகள் அடிப்படையில். இதற்காக நான் 60,000 (20000 x 3) புள்ளிகள் தர வேண்டியிருந்தது. அதனால் என்ன பரவாயில்லை. இதை எதிர்பார்த்துத்தானே நான் அவற்றை ஈட்டினேன்.

போன முறை போலவே இம்முறையும் இந்த மொழிபெயர்ப்பு தலைவாசலின் தமிழாக்கத்தில் ஈடுபட்டேன். அதில் கிடைத்தன இப்புள்ளிகள். மே மாதத்திலிருந்து எனக்கு உறுப்பினர் காலம் ஜூலையில் முடிவடையப் போவதை நினைவுறுத்தி, அதை புதுப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டேன். வழமையான சலுகை, அதாவது 4000 ப்ரௌனிஸ் புள்ளிகள் + 80 அமெரிக்க டாலர்கள், தரப்பட்டது. நானா அசருவேன். நானும் எனக்கு 20000 புள்ளிகள் பெற்று முழுச்சலுகை தருமாறு மிகவும் மரியாதையுடன் பதில் எழுதினேன். அவர்கள் முதலில் அதை கண்டு கொள்ளவில்லை. வழக்கம் போலவே அவர்கள் சாதாரணமாக தரும் சலுகையுடன் நினைவுறுத்தல்கள் வர ஆரம்பித்தன. நானும் எனது கடிதத்தையே தேவையான அளவுக்கு மாற்றி மாற்றி அனுப்பலானேன். இம்முறை சில கருத்துக்களை முன்வைத்தேன். அதாவது: 1) இச்சலுகையை நான் ஒரு கௌரவமாகவே பார்க்கிறேன். மற்றப்படி 80 டாலர்கள் என்பது பெரிய தொகையே அல்ல. 2) அப்படியே என் கோரிக்கை ஒத்துக் கொள்ளப்படாவிட்டாலும் எனக்கு இழப்பு அதிகம் இல்லை. என்னிடம் தேவையான புள்ளிகள் (66000-க்கும் மேல்) உள்ளதால் இத்தலைவாசலின் சிறப்பு சேவைகளை தேவையான போது 50 அல்லது 100 புள்ளிகள் தந்து பெற்று கொள்ள முடியும். 3) இன்னொன்றையும் தெளிவுபடுத்தினேன், அதாவது ஓர் ஆண்டுக்கு 20000 புள்ளிகள் என்பது அவர்களாக தீர்மானித்த விஷயம். அதன் அடிப்படையில்தான் நான் 60000 புள்ளிகள் மூன்றாண்டுகளுக்கு தரும் ஆலோசனை தந்தேன். ஆகவே அதற்கு மேல் புள்ளிகள் தர இயலாது. அப்படியே அடுத்த ஓர் ஆண்டுக்கு மட்டும் தந்தாலும் இதே கோரிக்கை மறுபடியும் அந்த ஆண்டு முடிவில் வைக்கப்படும். 4) தமிழ் < > ஆங்கில மொழி ஜோடிக்கு மட்டுறுத்துனர்கள் அவர்களிடம் இல்லை, என்னிடம் அப்பொறுப்பைத் தந்தால் அதை ஏற்று சிறப்பாக செயல்பட இயலும் என்றும் கூறினேன். மூன்றாண்டுகளுக்கு அது இருந்தால் இன்னும் விசேஷம். இந்த விஷயம்தான் அவர்கள் எடுத்த முடிவுக்கு காரணம் என நினைக்கிறேன். ("மூன்று ஆண்டுகளுக்காவது உனது இந்தப் படுத்தலிலிருந்து தப்பிக்கவே அவர்கள் இவ்வாறு செய்திருக்க வேண்டும்" எனக் கூறுவது முரளி மனோஹர்)

இரண்டு நாட்களுக்கு முன்னால் திடீரென எனது Google talk பலூனிலிருந்து இத்தலைவாசலிலிருந்து வந்த மின்னஞ்சல் பற்றிய அறிவிப்பு மேலே எழுந்தது. எனது உறுப்பாண்மை வரும் ஜூலை திங்கள் 13-ஆம் தேதியிலிருந்து அடுத்த மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அச்செய்தி அறிவித்தது. இச்செய்தி வந்ததுமே நான் அதை என் நண்பர் மா.சிவகுமார் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். தொலைபேசியிலேயே அவரது மகிழ்ச்சியை போன முறை போலவே இப்போதும் என்னால் உணர முடிந்தது.

இந்த இடுகையை நான் இங்கு பதிவு செய்வதன் நோக்கம் இன்னும் ஒன்று இருக்கிறது. அதாவது நமக்கு வேண்டியதை நாம்தான் கேட்டு பெற வேண்டும். விடாது முயற்சி செய்ய வேண்டும். அதே சமயம் நாம் யாரிடம் கேட்கிறோமோ அவர்களுக்கு நமது கோரிக்கையை நிறைவேற்றுவதால் அவர்களுக்கு என்ன பலன் என்பதையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என டேல் கார்னகி கூறியது திரும்பத் திரும்ப உறுதிபடுத்தப்படுகிறது. "கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்" என்று நான் சமீபத்தில் அறுபதுகளில் கேட்ட பாடலும் நினைவுக்கு வருகிறது. நம்மில் பலர் கேட்கக் கூச்சப்பட்டுக் கொண்டு பேசாமல் இருக்கிறோம். அது தவறு. நமகு தேவையானால் நாம்தான் கேட்க வேண்டும். ஆனால் எங்கே யாரிடம் எப்படி விஷயத்தைக் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். கடிதம் எழுதும்போது உணர்ச்சி வசப்படாமல், யாரையும் மனம் நோகாமல் நம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். கேட்டால் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். கேட்காவிட்டால் நிச்சயமாகக் கிடைக்காது. அப்படிக் கிடைப்பது எல்லாம் அம்புலிமாமா கதைகளில்தான் சாத்தியம்.

இத்தருணத்தில் தமிழில் நான் எழுத தூண்டுகோலாக இருந்த தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள் உரித்தாகும். தமிழ் வலைப்பூக்கள் மூலம் பல அரிய நண்பர்களை பெற்றுள்ளேன். எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்த அவர்களுக்கும் மிக்க நன்றி. இன்னும் தமிழ்மணத்திலேயே இருந்து படுத்துவேன் என்றும் கூறி வைக்கிறேன். (கிழிஞ்சுது கிருஷ்ணகிரி - முரளி மனோஹர்).

அன்புடன்,
டோண்டு ராகவன்

31 comments:

சரவணன் said...

டோண்டு சார்,

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

என்னடா டிவிக்கு ஒண்ணு, டிவிடிக்கு ஒண்ணு, ம்யூசிக் சிஸ்டத்துக்கு ஒண்ணு, ஏசிக்கு ஒண்ணுன்னு தனி தனியா ரிமோட் வச்சுருக்கானுங்க ஒண்ணா வைக்கமாட்டங்களான்னு சோம்பேறித்தனப்படும் எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு உங்களை போன்றவர்களின் வாழ்வியல் அணுகுமுறை மற்றும் வெற்றி கிடைக்கும்வரை போராடும் குணம் அதில் தங்களின் அனுபவங்கள் மிகவும் தேவை என்று கருதுகிறேன். இது போன்ற பதிவுகள் அடிக்கடி போடுங்க சார்.

தொடரட்டும் உங்கள் பணி

In the confrontation between the stream and the rocks, the stream always wins..not through strength but through persistence


சரவணன்

இராஜராஜன் said...

வணக்கம் டொண்டு அய்யா

தங்களுக்கு 3 ஆண்டுகள் கிடைத்த்தில் மகிழ்சி

நன்றி

Kanchana Radhakrishnan said...

பாராட்டுகள்

டி.பி.ஆர் said...

நமகு தேவையானால் நாம்தான் கேட்க வேண்டும். ஆனால் எங்கே யாரிடம் எப்படி விஷயத்தைக் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.//

இதுதான் முக்கியமான விஷயம். நாம எப்படி கேக்கறோங்கறதுலதான் எல்லாமே இருக்கு. தடாலடியாவும் கேக்கக் கூடாது ஒரேடியா தணிஞ்சும் கேக்கக் கூடாது. உரிமையோட அதே சமயம் பணிவோட கேட்டா நிச்சயம் காரியம் கைகூடும்.

dondu(#11168674346665545885) said...

//தடாலடியாவும் கேக்கக் கூடாது ஒரேடியா தணிஞ்சும் கேக்கக் கூடாது. உரிமையோட அதே சமயம் பணிவோட கேட்டா நிச்சயம் காரியம் கைகூடும்//.
இதைத்தான் நானும் செய்தேன். முதலில் போன ஆண்டு தந்ததையே ஒரு முன்னுதாரணமாகத் வைத்தேன். அவ்வாறு கொடுத்ததால் எனது சேவை அதிகரித்ததையும் சுட்டிக் காட்டினேன். அதே சமயம் அவர்கள் அதற்காக அதிக புள்ளிகளை எடுத்தால் அதை ஏற்பதற்கில்லை என்றும் குறிப்பிட்டேன். போன ஆண்டு போட்ட இடுகையில் சுட்டியிருந்து ப்ரோஸ் மன்றப் பதிவும் ஓர் அடிப்படையாக அமைந்தது.

மேலும், அவர்கள் எனது கோரிக்கையை நிறைவேற்றாது போனாலும் எனக்கு அதிக இழப்பில்லை என்பதையும் தெளிவாகவே கூறினேன்.

ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத சொலவடைகளில் ஒன்று "Yours most obediently/obedient servant" ஆகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சரவணன் said...

அய்யா டோண்டு அவர்களே நீங்கள் ஒரு பாசிச நாட்டினரால் நடத்தப்படும் வலை தளத்தில் 3 ஆண்டுகள் பணம் தராமல் இலவச உறுப்பினராய் ஆனதால் தமிழக ஏழைகளுக்கு எதாவது நன்மை உண்டா. அதற்கு பதில் அந்த 80 டாலரை ஏழைகளுக்கு கொடுத்திர்க்கலாமே, உங்களுக்கு ஏன் அந்த மனம் வரவில்லை என்று இன்னும் காமெடி பின்னூட்டம் தங்கிலீசில் போடாத கோபகிருஷ்ணனை வன்மையாக கண்டிக்கிறேன்.

சீக்கிரம் வாருங்கள் கிருஷ்ணரே, நீங்க இல்லாம அழுகாச்சி இல்லாத சீரியல் மாதிரி ரொம்ப சீரியஸா இருக்கு.

சரவணன்

வெண்பூ said...

டியர் சார்,

பதிவர்களை கேரக்டராக வைத்து ஒரு காமெடி பதிவு போட்டுள்ளேன் படித்துப் பார்த்து கருத்துச் சொல்லவும்.

வலைப்பதிவர்களுடன் விஜயகாந்த்

dondu(#11168674346665545885) said...

வெண்பூ அவர்களே,

உங்களது அப்பதிவில் பின்னூட்டம் இட இயலவில்லை. அங்கு இட நினைத்த பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்.

//கவலையே படாதீங்க. வரலாறுல எல்லாருக்கும் இந்த மாதிரி ஒரு நிலம வரும். இப்படித்தான் 1972ல இஸ்ரேலுக்கு ஒரு பிரச்சின வந்தது, உடனே அவங்க அமெரிக்காகிட்ட ஆலோசனை கேட்டாங்க. அதே மாதிரி நீங்களும் என்கூட வாங்க "சோ" சார்கிட்ட போய் ஆலோசனை கேப்போம். என்ன சொல்றீங்க?//
நல்ல வேளையா விஜயகாந்த் உடனே ஓடிட்டார். இல்லாவிட்டால் நான் அவரை கிண்டல் செய்து போட்ட இப்பதிவை பற்றி தெரிந்து கொண்டிருப்பார். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_22.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் said...

//அதாவது நமக்கு வேண்டியதை நாம்தான் கேட்டு பெற வேண்டும். விடாது முயற்சி செய்ய வேண்டும். அதே சமயம் நாம் யாரிடம் கேட்கிறோமோ அவர்களுக்கு நமது கோரிக்கையை நிறைவேற்றுவதால் அவர்களுக்கு என்ன பலன் என்பதையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும்//

மிகவும் சரிதான்...

ஆனால் ஆனால்....கூழைக் கும்பிடு போடுவது, அதிகமாகவே முகஸ்துதி செய்வது என்று செல்லும் போது தான் சிலர் தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள். அப்படியும் பரவாயில்லை என்று காரியத்தில் கண்ணாக இருப்பவர்களும் உண்டு.

எது எப்படியோ... கேட்டால் கிடைக்கலாம் ஆனால் ஈகோவினால் பலர் கேட்பதற்கு தயங்குவர், அவர்களாகவே புரிந்து கொண்டு செய்தால் என்ன என்றெல்லாம் நினைப்பர். அது எதுவும் நடக்காவிட்டால் தான் முயற்சி செய்யவில்லை என்ற நினைக்க மனமில்லாமல் தன்னை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுவர்.

கிடைக்கிறதோ இல்லையோ... கேட்டுப் பார்கலாம் தவறே இல்லை.

K.R.அதியமான் said...

best wishes and keep going sir.

DFC said...

வாழ்த்துக்கள் டோண்டு சார்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<== "கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்" ==>
உண்மைதான்.

Anonymous said...

1. what will happen to congress govt if left withdraws support ?
2.will mulayam singh join with congress?
3.already farmers are agitated about the non supply of diesel ( ord)? what is your opinion?
4.all are becoming robbers stating the pertrol price hike? is it good?
5. will share market see another harsat metha again?

Anonymous said...

dondu avargale, thamiz ungalukku urchaagam tharukirathu endru solireergal. pin yen thamizukkaaga uzaippavargalai keli
pesukireergal? melum yen german pondra mozhigalai padiththeergal? thamizileye innum theeviramaaga katru arinthu
kavithai, ilakkiyam pondravatrai padaiththirukkalaame??!! yen?

enakku theriyum. thamizil kaasu varaathu? sollungal ayya athuthaane unmai?!

komanakrishnan

dondu(#11168674346665545885) said...

//enakku theriyum. thamizil kaasu varaathu? sollungal ayya athuthaane unmai?!//
அது உண்மையோ பொய்யோ ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் ஏன் ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சுவதில் பிடிவாதம் காட்ட வேண்டும்? அதற்கு ஆங்கில மொழியிலேயே எழுதலாமே. ஏன் அந்த மொழி சரியாக வராதா?

//pin yen thamizukkaaga uzaippavargalai keli
pesukireergal? melum yen german pondra mozhigalai padiththeergal?//

அதனால்தானே நான் படித்த ஆறு மொழிகளிலே தமிழ் மொழிப் போல் இனிதாவது எங்கும் காணோம் என கூற இயலுகிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//அதற்கு ஆங்கில மொழியிலேயே எழுதலாமே. ஏன் அந்த மொழி சரியாக வராதா?
//
dondu avargale, naan oru kurippitta aluvalaga network moolamaaga browse seykiren. thamizil ezutha http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm site use seykiren. intha site-il access denied seythi varukirathu. athanaal naan english-il adikkum ezuththukkal thamizil maaruvathillai. athanaalthaan ippadi.

eppothaavathu en nanbanin veettirku sendru thamizil pathikkiren.

enakku english sariyaaga varaathu.

athu sari, naan ketta kelvikku ungal manasaatchi padi pathil enge?!!

komanakrishnan

சரவணன் said...

வணக்கம் கோபகிருஷ்ணரே.

//
dondu avargale, thamiz ungalukku urchaagam tharukirathu endru solireergal. pin yen thamizukkaaga uzaippavargalai keli pesukireergal?
//

டாக்டர் தலைவிலிச்சா இதை தடவுங்கன்னு அமிர்தாஞ்சன் பாட்டில் கொடுத்தா தலை வலிக்கும்போது அமிர்தாஞ்சன் பாட்டில் எடுத்து அந்த பாட்டிலை தடவி கொடுக்க கூடாது பாட்டிலில் உள்ள மருந்தை எடுத்து நம்ம தலையில் தடவனும் :-).

அது போல இங்க அவர் தாய் மொழி தரும் உற்சாகம் அப்படின்னு சொன்ன்னா, அவர் தமிழாக்க பணிகள் செய்து அதன் மூலம் கிடைத்த புள்ளிகள் மூலமாக அவர் அந்த தளத்தில் இலவசமாக உறுப்பினர் ஆகிறார். அதனால் அவர் தொழில் சார்ந்த சேவைகளை அவரால் இலவசமாய் பெறமுடியும் என்பதே. இதற்கு அவருக்கு அவரது தாய் மொழி உதவியது அதனால் அவர் சந்தோஷமாக நினைக்கிறார் அவ்வளவே. அவர் சொன்னது வேற நீங்க புரிஞ்சுகிட்டது வேற.

உங்களுக்கு எதுவுமே சரியா அர்த்தம் புரியமாட்டங்குது அதனால இனிமேல் தூங்கும்போது தலைக்கு டிக்சனரி வச்சு படுத்துகங்க காலையில் எழுந்து தமிழ்மணம் பார்தீங்கனா எல்லா பதிவுக்கும் மீனிங்க் புரியும், ;-)

சரவணன்

சரவணன் said...

//thamizileye innum theeviramaaga katru arinthu
kavithai, ilakkiyam pondravatrai padaiththirukkalaame??!! yen? //

அப்புறம் பெரியார் கூட கன்னட மொழிகாரர்தானுங்க, ஆனால் அவர்கூட தமிழுக்கு பாடுபட்டு இருக்காருங்க. மனிதனை அவன் நடத்தையால் எடை போடுங்கள் அவன் எந்த இனம், மொழி என குறுக்காதீர்கள் அப்புறம் மனசு இன்னும் குறுகி போய் எங்க தெரு வழியா தண்ணிலாரி உங்க தெருவுக்கு விடமாட்டோம்னு ஆரம்பிச்சுட போறானுங்க.

//enakku theriyum. thamizil kaasu varaathu? //

இங்க ஒருத்தர் தமிழில் கதை வசனம், கட்டுரை, கவிதை, இலக்கியம் எழுதி பல கோடி சம்பாரிச்சு இருக்காருன்னு சொன்னா நீங்க ஏன் ஜெயலலிதாவை திட்டாம ஏழைகளுக்கு பாடுபடும் எங்கள் தலைவரை சொல்லுகிறீர்கள் என்பீர்கள் எதுக்கு வம்பு.


சரவணன்

சரவணன் said...

// thamizil ezutha http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm site use seykiren. intha site-il access denied seythi varukirathu. //

நான் இரண்டு லின்க் கொடுத்துள்ளேன் இதன் மூலம் நீங்கள் தமிழில் தட்டச்சலாம், நீங்கள் இந்த இரண்டையும் முயற்சி செய்து பாருங்கள். கூகிள் நிச்சயம் வேலை செய்யுமென்று நினைக்கிறேன். டோண்டு சாரை கேட்டால் இன்னும் நிறைய லின்க் கொடுப்பார்.

http://www.google.com/transliterate/indic/tamil
http://www.tamil.sg/

அப்புறம் உங்ககூட பேசிகிட்டு இருந்ததுல எதோ சொல்லனும்னு நெனச்சன் மறந்துபோச்சு..ஆங் நியாபகம் வந்துடுச்சு, இந்த பதிவோட இலக்கே அதுதான், கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்

சரவணன்

Anonymous said...

//இந்த பதிவோட இலக்கே அதுதான், கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்

சரவணன//

soooper

Anonymous said...

ந‌ன்றி ச‌ர‌வ‌ண‌ன் அவர்க‌ளே, உங்க‌ள் உத‌விக்கு.

இன்னும் டோணடு அவ‌ர்க‌ள், என‌து கேள்விக‌ட்கு நியாய‌மாக‌ நேரிடையாக‌ ப‌தில‌ளிக்க‌வில்லை!! குற்றமுள்ள‌ நெஞ்ச‌ம் குறுகுறுக்கிற‌தோ?!!

மேலும் நீங்க‌ளே என்னை ப‌ல‌முறை கிண்ட‌ல் செய்தாலும், அதிலுள்ள‌ நியாய‌த்தில் என்ன‌ த‌வ‌று க‌ண்டீர்? டோண்டு அவ‌ர்க‌ள் த‌மிழ் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டே த‌மிழுக்காக‌ உழைப்ப‌வ‌ர்க‌ளை கிண்ட‌ல் செய்கிறார். ஏழைக‌ள் உய‌ர்ந்து ச‌ம‌த்துவ‌ம் பெறுவ‌தை த‌வ‌று என்கிறார். ப‌ன்னாட்டு முத‌லாளிக‌ட்கு இந்தியாவை விற்ப‌தற்கு ஜால்ரா போடுகிறார். இன்னும் ப‌ல‌ உள்ள‌ன‌. இது அத‌ற்கான‌ திரி இல்லையே!!!

டோண்டு அவ‌ர்க‌ள் த‌மிழை ப‌ற்றி சொல்வ‌தெல்லாம் போலி என்ப‌து என் தாழ்மையான‌ க‌ருத்து!!! நான் எங்க‌ள் அய்யா வீர‌ம‌ணி போன்று வெளிப்ப‌டையாக‌ பேசுப‌வ‌ன். ஆக‌வே ம‌ன்னிக்க‌ டோண்டு அவ‌ர்க‌ளே!!!

கோம‌ண‌கிருஷ்ண‌ன்

Anonymous said...

டோணடு அவ‌ர்க‌ளே, என‌து கேள்விக‌ள் இவை...

1) அய்.டி. போன்ற‌வ‌ற்றினால் பெண்க‌ள் அரைகுறை ஆடை அணிவ‌து, ஆண்க‌ளுட‌ன் குடித்து விட்டு கும்மாள‌ம் போடுவ‌து, பாய்பிர‌ண்டு டேட்டிங் என‌ அலைவ‌து என‌ த‌மிழ் க‌லாசார‌ம் சீர‌ழிந்த்துவிட்ட‌தே? உங்க‌ள் ப‌தில் என்ன‌? (ப‌ல‌முறை கேட்டும் நீங்க‌ள் ப‌தில் சொல்ல‌வில்லை!!)

2)ஏழைக‌ள் ச‌ம‌த்துவ‌ம் பெறுவ‌தை எதிர்க்கிறீர்க‌ள். இன்னொரு ப‌திவில் ஏன் நான் எழைக்கு உத‌வ‌ வேண்டும் என்றீர்க‌ள். ஏழைக‌ள் மேல் ஏனிந்த‌ வெறுப்பு?

3)பார்ப்ப‌ன‌ரின் த‌வ‌றுக‌ளை சுட்டிக்காட்டினால் குதிக்கிறீர்க‌ள். ந‌ன்கு யோசித்து பார்க்க‌வும். ப‌குத்த‌றிவாள‌ர்க‌ள் ஏன் ஒரு ச‌மூக‌த்தை ம‌ட்டும் குறிவைத்து விம‌ர்சிக்க‌ வேண்டும்? அவ‌ர்க‌ள் என்ன‌ பைத்திய‌மா? ஏதாவ‌து கார‌ண‌ம் இருக்க‌ வேண்டும‌ல்ல‌வா??!! பார்ப்ப‌ன‌ரிட‌ம் பல‌ த‌வ‌றுக‌ள் இருப்ப‌தானால்தானே?!!!

4)மத‌வெறிய‌ர்க‌ள் சோவுக்கும், மோடிக்கும் இவ்வ‌ள‌வு ஜால்ரா அடிப்ப‌து ஏன்?

கோம‌ண‌கிருஷ்ண‌ன்

dondu(#11168674346665545885) said...

//இன்னும் டோணடு அவ‌ர்க‌ள், என‌து கேள்விக‌ட்கு நியாய‌மாக‌ நேரிடையாக‌ ப‌தில‌ளிக்க‌வில்லை!! குற்றமுள்ள‌ நெஞ்ச‌ம் குறுகுறுக்கிற‌தோ?!!//
ஏன் மற்ற மொழிகள் படிக்கிறேன் எனக் கேட்டிர்கள். அதற்கு நான் நேற்றே பதில் கூறியாகி விட்டது. (நானறிந்த 6 மொழிகளிலே தமிழ்மொழிப் போல் இனிதாவதெங்கும் காணோம் என்று அப்போதுதானே நான் கூற இயலும்?).

தமிழில் காசு வராது என்கிறீர்கள். தவறு, அதை நிர்ர்பிக்கத்தான் இப்பதிவே வந்தது. 4 ஆண்டுக்கான சந்தா தொகை 480 அமெரிக்க டாலர்கள். ஓக்கேயா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சரவணன் said...

வணக்கம் கோபகிருஷ்ணன் அவர்களே,

தமிழில் வந்ததற்கு நன்றி.

நீங்கள் டோண்டு அவர்களை கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வார் மற்றும் இது அதற்கான திரி இல்லை என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

//டோண்டு அவ‌ர்க‌ள் த‌மிழை ப‌ற்றி சொல்வ‌தெல்லாம் போலி என்ப‌து என் தாழ்மையான‌ க‌ருத்து!!! நான் எங்க‌ள் அய்யா வீர‌ம‌ணி போன்று வெளிப்ப‌டையாக‌ பேசுப‌வ‌ன்.//

அடுத்தவர் சார்பா யோசிக்காதீங்க சார் ஏன்னா அது யாரலயும் முடியாது.

டோண்டு அவர்களுடைய கருத்தை உங்கள் கருத்தால் எதிருங்கள் வலியது வெல்லும். ஆனால் நீங்கள் இது போன்ற அரசியல்வாதிகளின் கருத்துகளை உதவியாக கொண்டு டோண்டு சொல்வது தவறு என்று சொன்னால் எனக்கு சிரிப்பு வரும் திருப்பி உங்களை கிண்டல் (உங்கள் கருத்துக்களை அல்லது நீங்கள் நம்பும் அரசியல்வாதிகளின் கருத்துக்களை) செய்வேன். நம்ம அரசியல் வாதிகளுக்கு நிறைய வேலை இருக்கு அவர்களை விட்டுடுங்களேன். நேர்மையாக சாதரண வேலையோ அல்லது தொழிலோ செய்து தன் குடும்பத்தை காப்பாற்றும் ஒரு மனிதனின் கால் செருப்பை துடைக்க கூட ஒரு அரசியல்வாதிக்கு இங்கு அருகதை இல்லை என்பது என் கருத்து.

சரி இப்ப நீங்க சொன்னதுல இருந்து ஒரு காமெடி.

பிராமண ஓட்டல் என்பதால் பெரியார் வீட்டு நாய்க்கு பால் வாங்குவதை ஒருவர் தவிர்த்தார். அவர் யார் தெரியுமா?

ஒரு பிராமண பெண்ணுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை அப்படின்னு பட்டம் கொடுத்தவர்தான் அவர். ஏன் இப்படி ஏறுக்கு மாறா நடக்குறாருன்னு தெரியுமா உங்களுக்கு. என்ன கேட்டா நாய்க்குதான் இந்த நீதி, அறிவுரை, சட்டமெல்லாம் எனக்கில்லை என்பதே அது. பாவம் நாய். ஆனால் ஒன்று உங்களுக்கு தெரியுமா நாய்கள் எசமானர்களை மாற்றுவதில்லை பால் வாங்கி கொடுத்தாலும் இல்லையென்றாலும் அவை வாலை ஆட்டத்தான் செய்கின்றன.

அப்புறம் பாருங்க நான் கேள்வி கேட்டுட்டு பதிலே சொல்லாம போறன், கண்டுகாதீங்க நான் வீரமணி அய்யா மாதிரி வெளிப்படையாக எதையும் சொல்லமாட்டேன். பதில் வேணும்னா டோண்டு சார கேளுங்க அவர் எந்த வார கேள்விபதில்ல இதை சோ சொன்னாருன்னு டிடெய்லா சொல்லுவாரு.

A dog is the only thing on earth that loves you more than he loves himself

சரவணன்

சரவணன் said...

டோண்டு சார்,

கோபகிருஷ்ணன் கேட்ட 4 கேள்விகளில் முதல் கேள்வியான தமிழ் கலாச்சாரம் பற்றி பதில் நானும் எதிர்பார்கிறேன். இதை நீங்கள் தனிப்பதிவாக கூட எழுதலாம். எனென்றால் இதைப்பற்றி நிறைய பொட்டி தட்டர பசங்க ஆதரிச்சும் எதிர்த்தும் எழுதிட்டாங்க. உங்களை போன்ற சென்ற தலைமுறையினர் (நான் இன்னும் இளைஞன் தான் கடந்த தலை முறை இல்லை என்று சொல்லிடாதீங்க :-))இதை எப்படி எடுத்துகொள்கிறீர்கள் என்று அறிய ஆசை.

சரவணன்

dondu(#11168674346665545885) said...

//கோபகிருஷ்ணன் கேட்ட 4 கேள்விகளில் முதல் கேள்வியான தமிழ் கலாச்சாரம் பற்றி பதில் நானும் எதிர்பார்கிறேன்.//
பதில் அடுத்த பதில் பதிவில் அதாவது வெள்ளிக்கிழமை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சரவணன் said...

என்ன கோபகிருஷ்ணரே எங்கே போயிட்டீங்க..

நீங்க வீரமணி அய்யா வெளிப்படையானவர் அப்படின்னு சொன்னதற்கு எவ்வளவு வெளிப்படையானவர்னு சொல்லியிருக்கன் பாருங்க வந்து பதில் சொல்லிட்டு போங்க. இல்லை வழக்கம்போல் எல்லா பதிவுலயும் வந்து காமெடி கேள்வி கேட்டுட்டு அதற்கு பதில் சொன்னபிறகு அந்த பக்கமே வரமாட்டீங்களே அதுபோலா, வாருங்கள் அய்யா வந்து விவாதியுங்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம்.

சரவணன்

Anonymous said...

//ஒரு பிராமண பெண்ணுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை அப்படின்னு பட்டம் கொடுத்தவர்தான் அவர். ஏன் இப்படி ஏறுக்கு மாறா நடக்குறாருன்னு தெரியுமா உங்களுக்கு.//

எந்த‌ சூழ்‍‍‍னிலையில் அம்மாதிரி ந‌ட‌ந்து கொண்டார் என்றும் பார்க்க‌ வேண்டும். அப்போது அவ‌ர் சிறுவ‌ர்.

ஜெ‍வை ஆத‌ரித்த‌து 69% ஒதுக்கீட்டை துணிச்ச‌லாக‌ அம‌ல் ப‌டுத்தி சமூக‌ நீதியை காத்தாரே அத‌னால்தான். பிற்பாடு ஜெ மீண்டும் த‌ன் இன‌ விசுவாச‌த்தை காட்டிய‌தால் அய்யா அவ‌ர்க‌ள் திமுக‌வுக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌ ஆர‌ம்பித்தார்.

ஆக‌வே, த‌வ‌று அய்யா மீத‌ல்ல‌.

//நீங்கள் இது போன்ற அரசியல்வாதிகளின் கருத்துகளை உதவியாக கொண்டு //

அய்யா அவ‌ர்க‌ள் அர‌சிய‌ல்வாதி அல்ல‌!!

கோம‌ண‌கிருஷ்ண‌ன்

சரவணன் said...

//
//ஒரு பிராமண பெண்ணுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை அப்படின்னு பட்டம் கொடுத்தவர்தான் அவர். ஏன் இப்படி ஏறுக்கு மாறா நடக்குறாருன்னு தெரியுமா உங்களுக்கு.//

எந்த‌ சூழ்‍‍‍னிலையில் அம்மாதிரி ந‌ட‌ந்து கொண்டார் என்றும் பார்க்க‌ வேண்டும். அப்போது அவ‌ர் சிறுவ‌ர்.
//

அய்யய்யோ என்ன கொடுமை இது அவர் அப்ப சிறுவரா, அதுக்கு முன்னாடி பல எலக்ஷென்ல ஓட்டுலாம் போட்டிருக்காரேங்க.. என்ன கொடுமை இது.

சரவணன்

சரவணன் said...

ஒருவரை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ என்பதை மட்டும் நாம் முதலில் தீர்மானம் போட்டுக்கொண்டால் அதன் பிறகு நம் நிலைக்கு ஏற்றார்போல அவர்களை புகழ்வதோ அல்லது இகழ்வதோ செய்யலாம் இது ரொம்ப சுலபம். ஏனென்றால் நல்லதும் கெட்டதும் கலந்தவந்தான் மனிதன். நம்ம ஆதரிக்கும்போது அவனோட நல்ல பக்க்த்தை சொல்லி புகழலாம் எதிர்க்கும்போது கெட்டபக்கத்தை சொல்லி திட்டலாம். அதைத்தான் நீங்க இப்ப வீரமணிக்கு சொல்லி சமாளிக்கறீங்க.

இதை நீங்க மட்டும் உபயோகபடுத்தலாம் மற்றவர்கள் செய்யகூடாதுன்னா எப்படிங்க... நீங்க மோடி மேல எவ்வளவு குற்றசாட்டு வைக்கறீங்களோ (எனக்கு தெரிஞ்சு புளிச்சு போன அதே முஸ்லீம் எதிரி தவிர வேற இருக்காதுன்னு நினைக்கிறேன்) அதை போல பலமடங்கு பாராட்டுக்களை டோண்டு சார் சுலபமா சொல்லுவார் அப்புறம் நீங்க உங்களை போல அவருக்கும் மோடி பிடிக்ககூடாதுன்னு எப்படி சொல்லலாம்.

இது பழைய பதிவாயிடுச்சு வாங்க புது பதிவு போட்டுட்டாரு சார் அங்க போய் கும்மி தொடருவோம்.

// எங்கள் அய்யா அரசியல்வாதி இல்லை // :-)))

எப்பவுமே நான் ஜோக் கடைசியா ஜோக் சொன்னா நீங்க இந்த வாட்டி சொல்லிட்டீங்க, நன்றி.

சரவணன்

Anonymous said...

//அய்யய்யோ என்ன கொடுமை இது அவர் அப்ப சிறுவரா, //

when he buy milk for dog. i said about that

komanakrishnan

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது