நிரந்தர பக்கங்கள்

12/01/2010

இந்தச் சோதனையில் நீங்க மட்டும் தேருவீங்கன்னு நினைக்கிறீங்களா மேடம்?

தலைப்பை கடைசியில் ஜஸ்டிஃபை செய்கிறேன்.

மற்றவர்களது ரகசியங்கள், அவர்களைப் பற்றிய வம்புகள் ஆகியவற்றை ஒருவர் அறிய ஆசைப்படுவது மனித மனத்தின் இயற்கை. ஆனால் அதே அந்த ஒருவர் தனது ரகசியங்கள் மற்றும் தன்னைப் பற்றிய வம்புகள் ஆகியவற்றை பிறர் அறிவதையோ, ஏன் அறிய முயல்வதையோ கூட தாங்கிக் கொள்ள முடியாதவரே. இதுவும் அதே மனித மனத்தின் இயற்கை.

நான் இங்கு பேச விரும்புவது விக்கிலீக்ஸ் பற்றித்தான். அது பற்றிய எனது முந்தைய பதிவை ஊரே சிரிச்சால் கல்யாணம்னு சொல்லுவாங்க என்ற தலைப்பில் வெளியிட்டேன். அதன் ஒரு பின்னூட்டத்தில் “அமெரிக்க - இந்திய கூட்டுறவின் பின்னணியை விக்கிலீக்ஸ் வெளியிடப் போவதாக கூறிய உடனேயே நீங்கள் அலறித் துடிப்பதின் மர்மம் என்னவோ?” என்று அப்பின்னூட்டத்தை இட்ட பா.ம.க. ஆதரவாளர் அருளால் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலாக நான் கூறியது என்னவென்றால், “தவறான புரிதல். நான் ஏன் அலறித் துடிக்கப் போகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் என் மாமனா மச்சானா? வெளியிலிருந்து அவதானிக்கிறேன்.

அவரவரின் முறை அவ்வப்போது வரும் வாய்ப்புகள் உண்டு, அதற்குள் ஏதேனும் அப்புறப்படுத்தல்கள் இல்லாவிட்டால் என்பதே எனது பதிவின் அடிநாதம்.

பை தி வே பாமகவின் செயற்குழுவில் ஆஃப் தி ரிகார்டாகப் பேசப்படுவதை ஏதேனும் நிருபர் வெளியில் கொணர்ந்தால் ஐயாவோ சின்ன ஐயாவோ பேசாமல் இருப்பார்களா?

அடிப்படை மனித மனச்செயல்பாடு. மற்றவர்கள் ரகசியங்களை பெறும் ஆவல், தம் ரகசியங்களை மூடி மறைத்தல்.

ராஜரீக கடிதங்களின் ரகசியத் தன்மை உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்டது இந்த tit for tat மனப்பான்மையால் உருவான quid pro quo விளைவுதான்”.

இப்போது நடப்பதைப் பார்த்தால் நான் சொன்னதுதான் சரியென குன்சாகப் புரிகிறது. இப்போது வெளியாகும் அமெரிக்க தூதரக அதிகாரிகளின் ரகசிய கமெண்டுகளால் அப்படி ஒன்றும் அதிக எதிர்வினை வருவதாக தெரியவில்லை. அமெரிக்காவை விடுங்கள், அதன் நலனை அதுவே பார்த்துக் கொள்ளட்டும், அது முடியாவிட்டால் கஷ்டப்படட்டும். கமெண்டுகளில் தாம் இளப்பமாகக் குறிப்பிடப்பட்டுள்ளோம் என பாதிக்கப்பட்டதாகக் கருதிக் கொள்ளும் நாடுகள் ரொம்ப ரியேக்‌ஷன் காட்டினால், அமெரிக்க சங்காத்தமே வேண்டாம் என்றுதான் இருக்க வேண்டும். அது கட்டுப்படியாகாது என்பதால் கண்டுக் கொள்ளாமல்தான் இருந்தாக வேண்டும்.

இவன்களை எவன் கேட்டார்கள், இம்மாதிரியா வர்ஜா வர்ஜமில்லாமல் மறைக்க வேண்டிய விஷயங்களை வெளியிடுவது என்ற எரிச்சல் வேண்டுமானால் காலப் போக்கில் விக்கிலீக்ஸ் பிருகஸ்பதிகளுக்கு எதிராகக் கிளம்பும். இன்னொன்று, என்னதான் சொன்னாலும் whistle blowers-களை யாருக்குமே பிடிக்காது. அடிமனதில் இவனுங்க மட்டும் என்ன ஒழுங்கு என்ற எண்ணம்தான் வரும். பிறகு ஒரு வேளை விக்கிலீக்ஸின் உள்குத்து விவகாரங்கள் இன்னொரு whistle blower-ஆல் வெளியிடப்பட்டால் அதுவே முதுகில் குத்தப்பட்டது குறித்து புலம்பும், ஆனால் வேறு யாருக்கும் அவர்கள் மேல் சிம்பதி வராது.

உதாரணத்துக்கு கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங் விவகாரத்தில் ரகசிய ரிகார்டர் வைத்து அசாருத்தீன், அஜய் ஜடேஜா ஆகியோரிடம் பேச்சு கொடுத்து அவர்கள் வாயாலேயே பல ஒப்புதல்களை பெற்று கிரிக்கெட் போர்டுக்கு தந்த மனோஜ் பிரபாகரும் அவர்களுடன் கூடவே தண்டிக்கப்பட்டப்போது யாரும் அவருக்காக அனுதாபப்படவில்லை. வேணும்டா இவனுக்கு என நானே நினைத்தேன்.

எல்லோரையும் ஏடாகூடமாக பேட்டி எடுத்து டிவியில் அதை வெளியிட்டு மற்றவர்களை சங்கடத்தில் ஆழ்த்திய பர்க்கா தத் மற்றும் வீர் சாங்க்வி ஆகியோரே மாட்டிய விவகாரம் பற்றி கரண் தாப்பர் என்ன கூறுகிறார் என்பதை கீழேயுள்ள வீடியோவில் பாருங்களேன்.

முதல் பாகம் (1/2)


இரண்டாம் பாகம் (2/2)


உங்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை கரண் அவ்விருவரது சங்கடங்களை ரசிப்பதாகவே தோன்றுகிறது.

கடைசியில் ஒரு கதையுடன் பதிவை முடிக்கிறேன்.

கோழி வாங்க வந்தப் பெண்மணி ஒவ்வொரு கோழியாக எடுத்து அதன் இறகுகளை விலக்கி அதன் பின்புறத்தை முகர்ந்து பார்த்து, அதை ரிஜெக்ட் செய்து, பிறகு வேறொரு கோழியை எடுத்து என்று அலம்பல் செய்ய, அவளைப் பார்த்து கடைக்காரன் கேட்கிறான், “இந்தச் சோதனையில் நீங்க மட்டும் தேருவீங்கன்னு நினைக்கிறீங்களா மேடம்”?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

  1. http://technorati.com/politics/article/is-wikileaks-a-foreign-terrorist-organization/

    Is WikiLeaks a Foreign Terrorist Organization?

    இதிலும்....

    ReplyDelete
  2. "The public has a right to know"

    The HINDU Editorial

    http://www.hindu.com/2010/11/30/stories/2010113055461000.htm

    ReplyDelete
  3. congrats dondu sir,u r doing excellant work.alas ,grand father can not make tamil people ignorant of these scam details thanks to u peoples efforts.let more and more detais flow from ur posts.we people will simply forget vigadan,kumudam etc.

    ReplyDelete
  4. ஜோஹரி வின்டோ என்று ஒரு கான்செப்ட். தன்னின் எந்த அளவிற்கு மற்றவர்கள் பார்க்கிறார்கள், தன்னில் எத்தனை
    அளவு மற்றவர்களுக்கு மறைக்கப்பட்டு உள்ளது, தன்னில் தனக்கே எவ்வளவு தெரியவில்லை என்பதையெல்லாம்
    உணர்த்தும் பாடம் இது.

    சாதாரணமாகவே, அண்டை அயலார் பற்றி நாம் என்ன நினைக்கிறோம், நமது வீட்டுக்குள் அவர்களைப்பற்றி என்ன‌
    விவாதிக்கிறோம் என்பதையெல்லாம், அவர்களிடம் பேசும்பொழுது சொல்கிறோமா என்ன ? எதை சொன்னால்
    அவருக்குப் பிடிக்குமோ அதைத் தானே சொல்கிறோம். மற்றவற்றையெல்லாம் மனதுக்குள்ளேயே போட்டு வைத்திருக்கிறோம் . சமயம் வந்தால் போட்டு உடைக்கிறோம்.

    ராஜ தந்திரங்களில் ஒன்று வேண்டுமென்றே, நேரடியாகச் சொல்ல சங்கோசமாக இருப்பவற்றை, இது போன்று லீக்
    செய்வதாகும்.

    ஹிலார் கிளின்டன் இந்தியா, பிரேசில், ஜெர்மனி எல்லாம் ஸெல்ஃப் அப்பாயின்டட் ஃபோர் ரன்னர்ஸ் என்று சொல்லியிருப்பதாக இந்த விக்கிலீக்ஸ் சொல்கிறது. இது எனது சொந்தக்கருத்து என்று கூட அவர் சொன்னாலும்
    ஒன்றும் சொல்வதற்கில்லை.

    உண்மையிலேயே ஒருவர் தம்மைப் பற்றி என்னதான் நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வது ஒரு விதத்தில் சரியே. கீப் யுவர் ஆன்டென்னா வைட் ஓபன், டு லிசன் டு வாட் அதர்ஸ் ஆர் திங்கிங் எபொள்ட் யூ , தட் வில் டு யூ குட்
    இன் த லாங் ரன், என்பது பழங்கால வசனம். இன்றும் இது பொருந்தும்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. @Sury
    நீங்க குறிப்பிடும் அந்த ஆண்டென்னாவை நான் என்னைப் புரட்டிப் போட்ட அந்த ஞாயிற்றுக் கிழமைதான் விரித்தேன், பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_04.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. சாதாரணமாகவே, அண்டை அயலார் பற்றி நாம் என்ன நினைக்கிறோம், நமது வீட்டுக்குள் அவர்களைப்பற்றி என்ன‌
    விவாதிக்கிறோம் என்பதையெல்லாம், அவர்களிடம் பேசும்பொழுது சொல்கிறோமா என்ன ? எதை சொன்னால்
    அவருக்குப் பிடிக்குமோ அதைத் தானே சொல்கிறோம். மற்றவற்றையெல்லாம் மனதுக்குள்ளேயே போட்டு வைத்திருக்கிறோம் . சமயம் வந்தால் போட்டு உடைக்கிறோம்.

    ராஜ தந்திரங்களில் ஒன்று வேண்டுமென்றே, நேரடியாகச் சொல்ல சங்கோசமாக இருப்பவற்றை, இது போன்று லீக்
    செய்வதாகும். //


    Very true... நாகரீகம் கருதியே.

    ReplyDelete
  7. நன்றி வால்பையன். வழக்கம்போல எனது பதில்கள் பதிவில் உங்கள் பதில்களையும் போடுவதுதானே. யார் தடுத்தது?

    என் பேத்திகளின் நலனை விசாரித்ததாகக் கூறவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. கோவையில் உணவகம் ஒன்று துவங்கம் வேலை நடந்து கொண்டிருக்கிறது, தற்பொழுதெல்லாம் ஆன்லைனில் அமருவதே இல்லை! திறப்புவிழா வரை முன்பு போல ப்ளாக்கில் செயல் பட முடியாது!

    நான் மனதில் வைத்து எதையும் செய்யும் ஆளல்ல!

    ReplyDelete