11/28/2010

ஊரே சிரிச்சா கல்யாணம்னு சொல்லுவாங்க

இப்போது அமெரிக்காவின் முறை. சம்பந்தப்படாத மற்றவர்கள் சந்தோஷப்படலாம். ஆனால் மற்றவர்களது முறை வரும்போது சந்தோஷப்படுவார்களா கேள்விக்கு மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லா மேற்பூச்சுகளையும் எடுத்துப் பார்த்தல் இந்த விக்கிலீக்ஸ் அமைப்பு உண்மையை காப்பாற்றவே அவதாரம் எடுத்திருப்பதாக நான் நம்பவில்ல்லை. அதற்கும் ஒரு மறைக்கப்பட்ட அஜெண்டா உண்டு என்றே நான் உறுதியாகவே நினைக்கிறேன். ஆகவே இன்று நான் நாளை நீ என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஆகவே அதன் பொறுப்பாளர்கள் ஒன்று மௌனமாக்கப்படுவார்கள் அல்லது அப்புறப்படுத்தப்படுவார்கள். நான் இட்ட ஊழல் பற்றிய மேக்ரோ பார்வை தேவை, மனச்சோர்வுகளைத் தவிர்க்க பதிவில் கூறப்பட்ட சில வரிகள் இங்கும் பொருந்தும்.

ஓர் அரசு என்பது இடைவிடாத அதிகாரப் போட்டிகளாலும், பேரம் பேசல்களாலும், பேச்சு வார்த்தைகளாலும், சமரசங்களாலும் ஆனதாகவே இருக்க முடியும். அதிகாரத் தரகர்கள், அதிகாரத் தூதர்கள், அதிகாரப் பிரதிநிதிகள் எப்போதும் அந்த மையத்தில் செயல்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு வன்முறை பலத்தாலும் பணபலத்தாலும் ஆனது. ஜனநாயகத்தில் எண்ணிக்கை பலத்தாலும்.

அந்த அதிகாரச் சமநிலை குலையும்போது, சமரசம் மூலம் அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லாமல் ஆகும்போது, அதிக அதிகாரம் கொண்ட தரப்புகள் குறைவான அதிகாரம் கொண்ட தரப்புகளை வன்முறை மூலம் அடக்குகின்றன. முன்பெல்லாம் நேரடி ஆயுத வன்முறை. இப்போது பொருளியல் வன்முறை. சமரசத்துக்கான நிபந்தனையாக வன்முறை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.


உள்ளூர் விஷயங்களுக்கே இது பொருந்தும்போது வெளிவிவகார விஷயங்களில் அது இன்னும் அதிகமாகவே பொருந்தும். எழுபதுக்ளில் அப்போதைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஃபோர்ட் கிஸிங்கருடன் இந்தியா வ்ந்தபோது தாங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பியதும் அதற்கு கண்டிப்பான, கடுமையான தொனியில் கடிதம் அனுப்ப வேண்டியதுதான் என கிசிங்கரிடம் கூறினார். அவரது மைக்ரோஃபோன் ஆன் செய்யப்பட்டிருப்பதை அவர் கவனிக்கத் தவறியதால் அது தெளிவாக வெளியில் கேட்டுவிட்டது. அமெரிக்காவுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது.ஆனால் அதையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ளலாகாது என்றும், அவ்வாறு செய்தால் அமெரிக்க உதவிக்கு சங்குதான் என்பதை உணர்ந்த இந்தியா அதை பூசி மெழுகிவிட்டது.

இன்று ஹிந்துவில் வெளியான விக்கிலீக்ஸ் பற்றிய செய்தியே இப்பதிவுக்கு தூண்டுதல். அதிலிருந்து சில வரிகள்.

Indian embassy in Washington alerted
NEW DELHI: American diplomats have warned India to prepare itself for potential embarrassment from the expected release by WikiLeaks of three million confidential U.S. diplomatic cables. The message was conveyed to the Indian embassy in Washington after a senior State Department official tried unsuccessfully to reach Foreign Secretary Nirupama Rao, who is travelling in Sri Lanka.

India is not the only country the U.S. has alerted. The documents, which will go live on the Internet beginning in the next 24 to 48 hours, consist of cables sent by American embassies around the world — especially in India, Israel, Russia, Turkey, Canada and Britain — to the State Department in Washington. Since such cables are meant to be confidential, it is a standard practice for the diplomats writing them to be candid and blunt in their assessments and sometimes even disrespectful to officials and leaders in their host countries. It is this aspect of the forthcoming leak which is particularly worrying U.S. diplomats. Some cables could also contain information about surreptitious activity by U.S. missions.

It is not clear what time period the cables cover but previous WikiLeaks disclosures tended to range over the past five or six years. This is a period when the U.S. and India were locked in detailed and sometimes testy negotiations over nuclear commerce and defence cooperation.

அதாகப்பட்டது, இப்போ அமெரிக்கா என்ன சொல்லறதுன்னா, “அய்யா சாமியோவ், எங்க ஆளுங்க தங்களோட ரிப்போர்ட்டுகளிலே உங்களைப் பத்தியெல்லாம் வண்டை வண்டையாக திட்டியிருக்காங்க (உதாரணத்துக்கு பலரைக் குறித்த உறவுமுறை சந்தேகங்கள்). அதையெல்லாம் கண்டுக்காதீங்கோ, தந்தானா, தந்தானா” இந்தத் தோரணையில் சில சொற்களே.

கூடவே இந்தியத் தரப்பில் ஏதாவது மேல் வருமானம் பற்றி பேச்சு வந்து, அதுவும் அந்தரங்க ரிப்போர்ட்டில் இடம் பெற்றிருந்தால் உங்களுக்கும் சங்குதாண்டீன்னும் சொல்லாம சொல்லறாங்க.

ஆனால் எந்த தேசமுமே இம்மாதிரி பல ரிப்போர்ட்டுகளை அவ்வப்போது தயாரித்து உள்ளுக்குள் சர்குலேட் பண்ணிக் கொள்ளாமல் இருந்திருக்காது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கும் அமெரிக்க அரசு தளங்களையே பிளந்தவர்கள், மற்ற அரசு தளங்களையும் விட்டு வைப்பார்களா என்ன?

உதாரணத்துக்கு நம்மிடமே பாகிஸ்தான், சீனா, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளைத் தாக்கும் சினோரியோக்கள் டெவலப் செய்யப்பட்டு ஆர்கைவ்சில் உறங்கிக் கொண்டிருக்கும். அதே போல இந்தியாவைத் தாக்குவது பற்றியும் அந்தந்த நாடுகள் சினேரியோ தயார் செய்து வைத்திருக்கும். இதில் எல்லாமே எல்லோருக்கும் தெரிஞ்சால் என்ன ஆகும்? யாரும் யாரையும் விரல் நீட்டிப் பேச முடியாது. இதைத்தான் ஊரே சிரிச்சா கல்யாணம்ங்கறாங்க.

எனது ஷ்டாஸி பற்றிய பதிவில் இது பற்றி நான் எழுதிய வரிகள்:

கிழக்கு ஜெர்மனியின் ஷ்டாஸிதான் இப்பதிவுக்கான விஷயம். அதிலும் முக்கியமாக அதன் ஆவணங்களில் வெளியான பல ரகசியங்கள். இவ்வமைப்பு ஒரு பெரிய தகவல் மையத்தையே தன்னுள் வைத்துக் கொண்டிருந்திருக்கிறது. அதற்கு செய்தி அளித்தவர்கள் நாட்டின் குடிமக்களில் கணிசமான பகுதியினர். பெற்றோரைப் பற்றி பிள்ளைகள் தத்தம் வீடுகளில் பெற்றோர் எந்த டிவி சேனலை பார்க்கின்றனர், என்னென்ன ரேடியோ நிகழ்ச்சிகள் கேட்கின்றனர். வீட்டில் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றனர், இத்யாதி, இத்யாதி என்றெல்லாம் கூறினர். அதே போல பக்கத்து வீட்டு மாமா, எதிர்வீட்டு சித்தப்பா என்ன செய்தார் என்பதும் கூறப்பட்டன. நண்பன் மேற்கு ஜெர்மனி பேப்பர்களுக்கு தனது பின்னூட்டத்தை மாற்றுப் பெயரில் கடிதங்களாகப் போட்டதும் இந்த உளவு விஷயங்களிலிருந்து தப்பவில்லை. வெளிநாட்டுகாரர்கள் கிழக்கு ஜெர்மனிக்காக உளவு செய்ததும் வெளிவந்தன.

சோவியத் யூனியன் மறைந்து கே.ஜி.பி. கலைக்கப்பட்ட போது கூட கேரள கம்யூனிஸ்டு தலைவர்கள் சோவியத் யூனியனிடமிருந்து பணம் பெற்றதும் வெளியில் வந்ததையும், அதை அக்காலக் கட்டங்களில் ஹிந்துஸ்தான் டைம்ஸில் படித்ததையும் இங்கு போகிறபோக்கில் குறிப்பிட்டு விட்டுப் போகிறேன்.

இப்பதிவின் முக்கியக் கருப்பொருளுக்கு வருகிறேன். ஷ்டாஸி ரகசியங்கள் வெளியானதும் பல குடும்பங்கள், நண்பர்கள் வட்டாரங்களில் பூகம்பங்கள் ஏற்பட்டன. யாரைத்தான் நம்புவதோ எனத்துவண்டான் ஒருவன், அவன் பெயரும் இன்னொரு ஷ்டாஸி ஆவணத்திலிருந்து வெளிவரும் வரை. பிறகு அசடு வழிந்தான். ஓரளவுக்கு மேல் எதுவும் பழகிப் போகும், ஊரே சிரித்தால் கல்யாணம் என்ற கோட்பாட்டில் மறப்போம் (ரொம்ப கஷ்டம்) மன்னிப்போம் (சற்றே சுலபம்) என மனதைத் தேற்றிக் கொண்டனர்.


நாசர் பதவிக்கு வந்ததும் தனது நாட்டில் இருந்த முந்தைய அரசின் தலைவர்களது ஸ்விஸ் வங்கிக் கணக்கின் விவரங்களை தருமாறு நெருக்கினார். ஆனால் அவையோ தாங்கள் அவற்றைத் தருவதற்கு தயார் ஆனால் எகிப்து பற்றிய முழுவிவரங்களையும் பகிரங்கமாக வெளியிடுவதாகக் கூற எகிப்து தனது கோரிக்கையை அவசரம் அவசரமாக வாபஸ் வாங்கியது. ஏன் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

ஊரே சிரிச்சா கல்யாணங்கறதை ஒத்துக்கிறீங்களா?

சில விஷயங்களைத் தெளியப்படுத்துகிறேன்.

1. அமெரிக்கர்களுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. அவர்களுக்கு அது தேவை இல்லை.

2. விக்கிலீக்ஸ் அமைப்பிலும் பல ரகசியங்கள் இருக்கும். அவர்கள அடிப்படையில் ஹாக்கர்கள். அவர்கள் எவ்வாறு ஹாக் செய்கிறார்கள் என்பதும் பலரால் அறிய விரும்பப்படும் ரகசியமே. அவ்வாறு பெறப்படும் போது அந்த அமைப்பின் சமரசங்களும் வெளியில் வரும் வாய்ப்பு உண்டு. அப்போது அந்த அமைப்பின் பொறுப்பாளர்களும் தாங்கள் முதுகில் குத்தப்பட்டதாக ஊளையிடுவார்கள்.

3. இன்று நீ, நாளை நான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

20 comments:

அருள் said...

அமெரிக்க - இந்திய கூட்டுறவின் பின்னணியை விக்கிலீக்ஸ் வெளியிடப் போவதாக கூறிய உடனேயே நீங்கள் அலறித் துடிப்பதின் மர்மம் என்னவோ?

dondu(#11168674346665545885) said...

@அருள்
தவறான புரிதல். நான் ஏன் அலறித் துடிக்கப் போகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் என் மாமனா மச்சானா? வெளியிலிருந்து அவதானிக்கிறேன்.

அவரவரின் முறை அவ்வப்போது வரும் வாய்ப்புகள் உண்டு, அதற்குள் ஏதேனும் அப்புறப்படுத்தல்கள் இல்லாவிட்டால் என்பதே எனது பதிவின் அடிநாதம்.

பை தி வே பாமகவின் செயற்குழுவில் ஆஃப் தி ரிகார்டாகப் பேசப்படுவதை ஏதேனும் நிருபர் வெளியில் கொணர்ந்தால் ஐயாவோ சின்ன ஐயாவோ பேசாமல் இருப்பார்களா?

அடிப்படை மனித மனச்செயல்பாடு. மற்றவர்கள் ரகசியங்களை பெறும் ஆவல், தம் ரகசியங்களை மூடி மறைத்தல்.

ராஜரீக கடிதங்களின் ரகசியத் தன்மை உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்டது இந்த tit for tat மனப்பான்மையால் உருவான quid pro quo விளைவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

periyar said...

டோண்டு,

ஊரே சிரிச்சா கல்யாணம்னு சொல்லுவாங்க சரி.ஆனா ஊரே அழுதா என்னன்னு சொல்லுவாங்க?
எதுக்கு கேக்கறேன்னா ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்து கின்னஸ் ரெகார்ட் சாதனை செய்தது நம்ம திராவிட கும்பல் அல்லவா?இந்தியா பூரா இதை சொல்லித் தானே இப்போ அழறாங்க?

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //பாமகவின் செயற்குழுவில் ஆஃப் தி ரிகார்டாகப் பேசப்படுவதை ஏதேனும் நிருபர் வெளியில் கொணர்ந்தால் ஐயாவோ சின்ன ஐயாவோ பேசாமல் இருப்பார்களா?// //

பா.ம.க'வின் உள் விஷயங்கள் அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தெரிந்தாக வேண்டும். ஏனெனில், ஒரு கட்சி என்பது அதன் உறுப்பினர்களுக்கு கட்டுப்பட்டது. அது தனிமனித உடைமை அல்ல.

அவ்வாறே, இந்திய - அமெரிக்க உறவின் அத்தனை அம்சங்களும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், ஒரு நாட்டின் அரசாங்கம் அதன் மக்களுக்கு கட்டுப்பட்டது. அது தனிமனித உடைமை அல்ல.

dondu(#11168674346665545885) said...

//பா.ம.க'வின் உள் விஷயங்கள் அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தெரிந்தாக வேண்டும். ஏனெனில், ஒரு கட்சி என்பது அதன் உறுப்பினர்களுக்கு கட்டுப்பட்டது. அது தனிமனித உடைமை அல்ல.//
வெளியில் கொணர்வது என்பது நிஜமாகவே கட்சி சாரா மக்களும் பார்க்க்ம் வண்ணம் செய்வதே.

அது சரி, பாமக செயற்குழு செய்வதெல்லாம், பேசுவதெல்லாம் கட்சித் தொண்டர்கள் அத்தனை பேருக்கும் தெரியும் என உண்மையாகவே நம்புகிறீர்களா?

ஆம் என்றால் நீங்கள் நிஜமாகவே அப்பாவி, கூடவே கூமுட்டை.

இல்லையென்றால், நீங்கள் உங்கள் கட்சியின் உண்மையான கொள்கை பரப்புச் செயலாளர்/கூட்டுக் களவானி.

கடுமையான வார்த்தைகள்தான். வேறு வழியில்லை.

இது பாமகவுக்கு மட்டுமல்ல எந்தக் கட்சிகளுக்குமே ஏன் அமைப்புக்களுக்கும் கூடப் பொருந்தும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

@டோண்டு ராகவன்

பொது நலன் கருதி எந்த ஒரு தகவலையும் வெளியில் கொண்டுவர பத்திரிகைகளுக்கு உரிமை உண்டு. நீரா ராடியாவுடன் டாட்டா, பர்கா தத், வீர் சிங்வி பேச்சுகள் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு ஒரு உதாரணம்.

அந்த வகையில் விக்கிலீக்ஸ் செய்வதை எவரும் கேள்வி கேட்க முடியாது.

கட்சியின் செயற்குழு - நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்போர், முறையே கட்சி உறுப்பினர், நாட்டு மக்களின் பிரதிநிதிகள். இவர்களுக்கு தெரிந்தது எல்லாம், மக்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ தெரியவேண்டிய அவசியம் இல்லை. அது சாத்தியமும் இல்லை.

அதேசமயம் - ஒரு நிகழ்வு நடக்கும் முன்போ நடந்த பின்போ பிரதிநிதிகளுக்கு அதன் விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

இருநாடுகளுக்கிடையேயான உடன்படிக்கைகளில், நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாத - தெரிவிக்க முடியாத விடயங்கள் இருக்கும் என்பது சனநாயக பண்புகளுக்கு எதிரானது.

தகவல் உரிமைச் சட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதை மறந்து விடாதீர்.

periyar said...

டோண்டு ,

அமெரிக்கன் டிப்ளமேட்ஸ், நம்ம ஊர் பா ம க,தி மு க மூஞ்சிகளைப் ப்ற்றி எவ்வளவு கேவலமாக, கேலியாக நோட் போட்டிருப்பார்கள் என்று விக்கிலீக்ஸ் போட்டு உடைக்குமா?

bala said...

டோண்டு அய்யா,
கூமுட்டை என்றால் என்ன?கமுட்டை என்றாலாவது கழுதை முட்டை என்று சொல்லி விடலாம்.ஆனால் கூமுட்டை?

பாலா

dondu(#11168674346665545885) said...

//கட்சியின் செயற்குழு - நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்போர், முறையே கட்சி உறுப்பினர், நாட்டு மக்களின் பிரதிநிதிகள். இவர்களுக்கு தெரிந்தது எல்லாம், மக்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ தெரியவேண்டிய அவசியம் இல்லை. அது சாத்தியமும் இல்லை.//
அதையேத்தான் இப்பதிவிலும் நான் இம்ப்ளை செய்கிறேன்.

பை தி வே, எந்தெந்த விஷயங்கள் தெரிய வேண்டும், எவை தெரிய வேண்டாம்/தெரியக்கூடாது என்பதையெல்லாம் நிர்ணயிப்பது யார்? அவர்களும் அவற்றை தங்கள் சுய வெறுப்பு விருப்புகளுக்கு ஏற்பத்தான் செய்வார்கள். வெளியில் தெரிந்தால் சங்கடமே.

அது பற்றித்தான் பதிவு.

நான் உங்களிடம் ஏற்கனவேயே சொன்னது போல, ராஜரீக கடிதங்களின் ரகசியத் தன்மை உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்டது இந்த tit for tat மனப்பான்மையால் உருவான quid pro quo விளைவுதான்.

அதை மீறினால் எதிராளியும் அதை செய்வான். கொஞ்ச நாளைக்கு கன்ஃப்யூஷன், பிறகு tit for tat மனப்பான்மையால் உருவாகும் quid pro quo, சில காலம் கழித்து மீண்டும் விக்கிலீக்ஸ் போன்ற அமைப்பு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

@டோண்டு ராகவன்

ராணுவ செலவுகள், விவசாயம், அணுசக்தி குறித்து அமெரிக்கா - இந்தியா இடையே என்ன 'ரகசிய உடன்பாடு' என்பது குறித்து வெளியில் தெரிந்தால் இந்திய மக்களுக்கு நல்லதே!

அப்படியே, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள 'ரகசிய உடன்பாடு' தெரிந்தால் தமிழர்களுக்கு புண்ணியமா போகும்!

1. A Game as Old as Empire: the Secret World of Economic Hit Men and the Web of Global Corruption - by Steven Hiatt

2. Confessions of an Economic Hit Man - by John Perkins

ஆகிய நூலகளைப் படியுங்கள்.

dondu(#11168674346665545885) said...

//ராணுவச் செலவுகள், விவசாயம், அணுசக்தி குறித்து அமெரிக்கா - இந்தியா இடையே என்ன 'ரகசிய உடன்பாடு' என்பது குறித்து வெளியில் தெரிந்தால் இந்திய மக்களுக்கு நல்லதே!//
இப்பதிவின் நோக்கம் அவை வெளியாவது நல்லதா இல்லையா என்பது பற்றி அல்ல. அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடும் மோட்டிவேஷன்கள் என்ன என்பதே. அவை தொடர்ந்து வெளியாவதன் சாத்தியக்கூறுகள் கம்மி.

அதைத்தான் பதிவு விவரிக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

hayyram said...

//கடுமையான வார்த்தைகள்தான். வேறு வழியில்லை// களவானிப்பயல்களைத் திட்டும்போது அதுக்கு டிக்ளரேஷன் வேறையாக்கும். சும்மா போட்டு தாக்குங்க.

அருள் said...

டோண்டு ராகவன் said...

// //நீங்கள் நிஜமாகவே அப்பாவி, கூடவே கூமுட்டை..... கூட்டுக் களவானி.// //

hayyram said...

// //களவானிப்பயல்களைத் திட்டும்போது அதுக்கு டிக்ளரேஷன் வேறையாக்கும். சும்மா போட்டு தாக்குங்க.// //

சாதி வெறிபிடித்த பார்ப்பனர்களால் பாராட்டப்பட்டால்தான் ஆபத்து. திட்டினால் அதுவே நல் நடத்தைக்கு நற்சான்று.

சமூகநீதிக்காக பாடுபடும் எந்த தலைவராவது - சோ மற்று சுப்ரமணியசாமி ஆகியோரிடம் பாராட்டை எதிர்பார்ப்பார்களா?

அருள் said...

""This document release reveals the contradictions between the US’s public persona and what it says behind closed doors – and shows that if citizens in a democracy want their governments to reflect their wishes, they should ask to see what’s going on behind the scenes.""

Secret US Embassy Cables

http://cablegate.wikileaks.org/

hayyram said...

//சாதி வெறிபிடித்த பார்ப்பனர்களால் பாராட்டப்பட்டால்தான் ஆபத்து. திட்டினால் அதுவே நல் நடத்தைக்கு நற்சான்று.//

எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு... அவ்வ்....

வஜ்ரா said...

விக்கி லீக் விசயத்தில் இந்தியாவின் உண்மையான நண்பர்கள் எந்த இசுலாமிய நாடுகள் என்பது தெரிந்திருக்கிறது. துருக்கி, அரபு எமிரீட்டுகள் எல்லாம் எப்படி அமேரிக்கவை பாகிஸ்தானுக்கு உதவச்சொல்லி கட்டயப்படுத்தின என்பதுகூடத் தெரிந்திருக்கிறதாம்.

¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

"டிச.1,2010: ஸ்வீடனின் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக, விக்கிலீக்ஸ் புலனாய்வு வலைத்தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை, இன்டர்போல் போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆப்கான், ஈராக் போர் தொடர்பான ஆவணங்களைத் தொடர்ந்து, அமெரிக்க தூதரகங்களின் ரகசியங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

இந்தச் சூழலில், பாலியல் பலாத்கார வழக்கில் விக்கிலீக்ஸ்சின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பெயர், இன்டர்போல் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஸ்வீடன் நீதிமன்றம் ஏற்கெனவே சர்வதேச கைது வாரன்ட்டை பிறப்பித்து இருந்ததன் தொடர்ச்சியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்ச் மீது ஸ்வீடனில் இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக அவரை விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்தனர்.

அந்த நிலையில், அசாஞ்சை கைது செய்ய ஸ்வீடன் நீதிமன்றம் நவம்பர் 18 ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது.

இதே போன்ற கைது உத்தரவை ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த ஸ்வீடன் நீதிமன்றம், மறுநாளே அந்த ஆணையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தன் மீது சேறுபூசும் நடவடிக்கையின் ஒரு பகுதி என்று அசாஞ்ச் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தார்".

dondu(#11168674346665545885) said...

சவுக்கு பதிவில் நான் இட்ட பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்துள்ளது, பார்க்க: http://www.savukku.net/home1/1350-2011-11-07-17-31-51.html

அப்பின்னூட்டம் இதோ.

ஒரு அரசு என வந்துவிட்டால் அதற்கென ரகசியங்களும் வந்து விடும். இதற்கு விதிவிலக்கே கிடையாது. நீங்கள் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் உதாரணங்களை மட்டும் தருகிறீர்கள்.

ஸ்டாலின் செய்யாத அடக்கு முறையா, மாவோ செய்யாததா, காஸ்ட்ரோ செய்யாததா?

அதென்ன அசாஞ்ச் எப்போதும் மேற்கத்திய நாடுகளை மட்டும் குறிவைக்கிறார்? அவற்றின் இணையங்களை ஹேக் செய்யத் தெரிந்தவருக்கு கம்யூனிஸ்டு அரசுகளின் இணைய இணைப்புகள் ஜுஜூபிதானே? ஏன் அவர் அதையும் செய்யவில்லை?

அப்படி செய்திருந்தால் ஓசைப்படாமல் அவர் இருக்குமிடத்திலேயே கம்யூனிஸ்டுகள் அவரை தீர்த்துக் கட்டியிருப்பார்கள்.

ட்ராட்ஸ்கியை ஸ்டாலின் கொலை செய்வித்ததை மரந்தீர்ர்களா?

நான் மேற்கத்திய நாடுகளுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் உங்கள்/அசாஞ்சின் அணுகுமுறையில் இருக்கும் ஒட்டையைத்தான் சுட்டிக் காட்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மேலே நான் குறிப்பிட்ட பின்னூட்டம் சவுக்கு தளத்தில் இதுவரை வரவில்லை. குற்றமுள்ள நெஞ்சு என இதைக் கூறுவார்கள். கள்ள மௌனம் என்றும் கூறலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சவுக்கு பதிவில் பின்னூட்டம் வந்து விட்டது. ஆனால் பதில் லேது. இதுவும் கல்ள மௌனமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது