நிரந்தர பக்கங்கள்

1/01/2011

டோண்டு பதில்கள் 01.01.2011

2011-ஆண்டின் முதல் பதிவுக்கு முரளி மனோகரின் அறிமுக உரை:
“டோண்டு பெரிசு நியாயஸ்தர். மீண்டும் கேள்வி பதில்கள் பதிவு வந்த போதே சொன்ன விஷயம்தான். பதிவுகள் ஒவ்வொரு வியாழனன்றும், அல்லது ஒவ்வொரு இருபது கேள்விகளுக்கும் (எது முதலில் வருகிறதோ) வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் ஒரே ஒருத்தர் 20 கேள்விகளை கேட்டு வைத்தார். சுதாரித்துக் கொள்வதற்குள் மேலும் இருவர் மேலதிகமாக பத்துக் கேள்விகள் கேட்க, இப்போதே ரிலீஸ் செய்ய வேண்டியதாயிற்று”.

நக்கீரன் பாண்டியன்
கடந்த 2010 ஆண்டில்: (1.1.2010 to 31.12.2010):
கேள்வி-1. உங்களை கவர்ந்த பிற பதிவாளரின் பதிவு,காரணம்?
பதில்: ஜெயமோகனின் பதிவு, மபொசி, காமராஜ், ராஜாஜி

அரைவேக்காட்டு திராவிட அரசியல்வாதிகள் இவர்களைப் பற்றி - அதிலும் ராஜாஜி சம்பந்தமாக - கூறிய பல அவதூறுகளுக்கு ஆணித்தரமான பதில் ஜெயமோகன் தனக்கே உரித்தான அழகுதமிழில் தந்துள்ளார்.

கேள்வி-2. உங்களுக்கு மிகவும் பிடித்த உங்கள் பதிவு?
பதில்: இஸ்ரேலிய சிங்கங்களான மொசாத்தின் தீரச்செயலைப் பாராட்டுகிறேன்.

கேள்வி-3. வெகுவாய் விமர்சனத்துக்குள்ளான உங்கள் பதிவு?
பதில்: பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுத்த விஷயம்

கேள்வி-4. அதிக பின்னூட்டங்கள்/பாரட்டுக்கள் பெற்ற உங்கள் பதிவு?
பதில்: அதிக பின்னூட்டங்கள் பெற்றதும் பார்வதி அம்மாள் பற்றிய பதிவுதான். ஆனால் வரலாறு காணாத வகையில் நெகடிவ் பின்னூட்டங்கள்.

கேள்வி-5. யாரும் கண்டு கொள்ளாத பதிவு?
பதில்: சோவின் எங்கே பிராமணன் சம்பந்தமான பல பதிவுகள்

கேள்வி-6. அடுத்த ஆண்டில் பதிவுகளில் என்ன மாற்றம் செய்ய்லாம் என் தீர்மானித்துள்ளீர்கள்?
பதில்: ஏற்கனவேயே செய்து விட்டது, ஹிட் கவுண்டரை தூக்கியதுதான். ஒரு லட்சம் ஹிட்கள் வருவதற்கான கால அவகாசம் மிகவும் குறைந்து கொண்டே போனதால், நண்பர்களுக்கு நன்றி என்று அடிக்கடி பதிவு போடுவது போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. ஆகவே கவுண்டரை தூக்கி விட்டேன்.

கேள்வி-7. நீங்கள் பார்த்த திரைப் படங்களில் உங்களுக்கு பிடித்தது?
பதில்: போன ஆண்டு ஒரே ஒரு படம்தான் தியேட்டரில் பார்த்தேன் என நினைக்கிறேன். அதுதான் நண்பேண்டா புகழ் பாஸ் என்னும் பாஸ்கரன்.

யூ ட்யூப்பில் பார்த்த படம் ஆடும் கூத்து மனதைக் கவர்ந்தது.

கேள்வி-8. அய்யையோ இந்த படத்தை பார்க்காமால் விட்டோமே என உள்ள படம்?
பதில்: அப்படி ஒரு படமுமே இல்லை. எங்கள் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடையில் இருக்கும் வேலன், வெற்றிவேல் காம்ப்ளக்சுக்கு போகக் கூட அவ்வளவாக விருப்பம் இல்லை.

கேள்வி-9. வசூலில் பெரும் சாதனை படைத்த படம் உங்கள் மதிப்பீட்டில்?
பதில்: Harry Potter and the deathly hallows-part-1

கேள்வி-10. அன்பின் ஆழத்தை இயல்பாய் கவிதையாய் வடித்தெடுத்த மிஸ்கின் அவர்களின் நந்தலா போல் இனியொரு படம் வருமா?
பதில்: இப்படத்தை நான் பார்க்கவேயில்லை. ஆகவே கருத்து ஏதுமில்லை. பார்க்க விரும்பவும் இல்லை, ஏனெனில் அதன் கதை நான் கேட்டவரை சங்கடப்படுத்தியது என் மனதை.

கேள்வி-11. உங்களை பாதித்த மிகவும் சோகமான நிகழ்ச்சி?
பதில்: சாலை விபத்தில் எனது பெரியப்பாவின் பேத்தி அகால மரணமடைந்தது.

கேள்வி-12. உங்களை அதிக குஷிபடுத்திய நிகழ்வு?
பதில்: அயோத்யா பற்றிய நியாயமான தீர்ப்பு

கேள்வி-13. ஆன்மீக சூற்றுலா சென்ற தலங்களில் மிகவும் பிடித்த திருத்தலம்?
பதில்: தென்திருப்பேரை

கேள்வி-14. எந்த அரசியல் தலைவரின் செயல்பாடு சிறப்பாயிருந்தது?
பதில்: நரேந்திர மோதி

கேள்வி-15. புத்தாண்டில் உங்களின் புதிய தீர்மானம்?
பதில்: வழக்கம்போல புதியனவற்றைக் கற்றுக் கொண்டே போவதுதான். அப்போதுதானே மனது இளமையாக இருக்கும்!

கேள்வி-16. உங்களுக்கென தனியாய் வெப் தளம் அமைக்கும் எண்ணம் உண்டா?
பதில்: ஏற்கனவே இரண்டு தளங்கள் உள்ளனவே, 1 மற்றும் 2

கேள்வி-17. பேஸ்புக்கில் இணையும் உத்தேசம் உண்டா?
பதில்: ஏற்கனவே அதில் இணைந்துள்ளேன், ஆனால் செயலாக இல்லை. ட்விட்டருக்கு மட்டும் அவ்வப்போது வருவதுண்டு.

கேள்வி-18. 2ஜி விவகாரம் என்னவாகும்?
பதில்: மேல் மட்டம் வரைக்கும் எல்லோருக்கும் பங்கு போனதால் ராசா காப்பாற்றப்படுவார் என்றுதான் தோன்றுகிறது.

கேள்வி-19. கல்மாடியின் அரசியல் எதிர்காலம்?
பதில்: ராசா மாதிரி மேலே பங்குகள் செல்லாமலிருந்தால் ரயில்வே அமைச்சர் எல். என். மிஷ்ரா என்பவருக்கு சமஸ்திபூரில் நேர்ந்த கதிதான் அவருக்கும்.

கேள்வி-20. mobile number portability -உங்கள் கருத்து?
பதில்: வேண்டாத வேலை என்பது எனது கருத்து. வேறு சேவை அளிப்பாளரிடம் சென்றால் என்ன, அந்த நம்பரை முக்கியமானவர்களுக்கெல்லாம் கூற வேண்டியதுதானே.


pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-21. ஓயாமல் இசையமைத்தது போதும்… வரும் 2011-ம் ஆண்டில் முழு ரெஸ்ட் எடுப்பதென்ற முடிவுக்கு வந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்.
பதில்: அவருக்கு அது கட்டுப்படியாகுமா? தூங்கும்போது கூட காலை ஆட்டிக் கொண்டு தூங்க வேண்டும். இல்லாவிட்டால் செத்தான் என மற்றவர்கள் மலர் வளையம் எல்லாம் வைத்து உத்திரக் கிரியைகள் செய்து விடுவார்கள்.

என்னைப் பொருத்தவரை எனது தொழிலில் ஓய்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

கேள்வி-22. செல்வராகவன், யுவன், தனுஷ் வெற்றிக்கூட்டணி மீண்டும் கைகோர்க்க இருக்கிறது. இவர்களின் முந்தைய படஙகள் எல்லாமே ஹிட் என்பதால் இதையும் வெற்றிப்படமாக எதிர்ப்பார்க்கலாம்.
பதில்: ஆம், எதிர்ப்பார்க்கலாம். முதலில் தனுஷ் எனக்கு பிடிக்காது. இப்போது என்னவோ பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதுவும் காமெடியிலும் பின்னுகிறார்.

கேள்வி-23. தமிழ்த் திரையுலகில் கோலாகலங்களுக்கு இணையாக கலாட்டாக்களுக்கும் பஞ்சமிருக்காது. 2010ல் பல முக்கியத் திருமண வைபவங்களை தமிழ்த் திரையுலகம் சந்தித்தது. அதேபோல சில கலாட்டா கல்யாணங்களையும் கண்டது.
பதில்: நயனதாரா, பிரபுதேவா?

கேள்வி-24. நீரில் ஓடும் கார் என்ற ரத்தன் டாடாவின் கனவு நனவாகும் நாள் ‌வெகுதொலைவில் இல்லை என்று பிரபல விஞ்ஞானி சி என் ஆர் ராவ் தெரிவித்துள்ளார்.
பதில்: அது சீக்கிரம் நடக்கட்டும். எங்கே குஜராத்திலா? இரட்டிப்பு மகிழ்ச்சி.

கேள்வி-25. இணையதள ஜாம்பவனான கூகுள் சர்ச் இஞ்ஜினை முந்தி முதன்முறையாக பேஸ்புக் சாதனை படைத்துள்ளது.
பதில்: கருத்து ஏதுமில்லை.

ரமணா
கீழ்கண்டோரின் செயல்களை பார்க்கும் போது உங்கள் மனசாட்சி என்ன சொல்லும்?
ஒட்டுமொத்த பதில்: முதற்கண் கேள்விகளின் சொற்களே தவறு. நான் ஏதேனும் தவறாகச் செய்தால் என்னை வந்து கேட்க வேண்டியது என மனசாட்சி. அதே போல ஒரு புது முடிவு எடுக்கும்போது எது நியாயம் என எனது மனசாட்சி கூறுகிறதோ அதன்படி முடிவு எடுக்க வேண்டும். அதை விடுத்து கீழே உள்ள சினோரியோக்களுக்கெல்லாம் எனது மன்சாட்சி என்ன கூறவியலும்?

எனது கருத்து என்ன என்றுதான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன், ஆகவே அவற்றை கூறுகிறேன்
கேள்வி-26. பாதசாரிகளிடம் வழிப்பறி செய்யும் வழிப்பறி திருடர்கள்
பதில்: மோட்டார்களில் செல்வோரை மட்டும் வழிப்பறி செய்யலாம் என்றா கூறுவீர்கள்?

கேள்வி-27. நள்ளிரவில் வீடு புகுந்து பிறர் சொத்தை அபகரிக்கும் கொள்ளையர்கள்
பதில்: நைட் ட்யூட்டிக்காக சார்ஜ் செய்யாமல் இருந்தால் போதாதா?

கேள்வி-28. அநியாய வட்டிக்கு (மீட்டர் வட்டி) கடன் கொடுத்து ஏழை எளியோரை வஞ்சிக்கும் லேவா தேவிக்காரர்கள்
பதில்: பல கடன்கள் தேவையற்ற செலவுகளுக்குக்காகத்தான் ஏற்படுகின்றன. சமீபத்தில் ஐம்பதுகளில் வெளியான மதர் இந்தியா என்னும் ஹிந்திப் படம் அதை விளக்குகிறது. தனது கல்யாணத்தை நடத்த ஒருவன் கடன் வாங்கி நாசமாகப் போகிறான்.

வெறுமனே கோவிலுக்கு போய் தாலி கட்டியிருந்தாலோ, அல்லது ரெஜிஸ்த்ரார் அலுவலகத்துக்கு போய் சில ரூபாய்களில் முடிந்திருக்க வேண்டிய விஷயம் இவ்வளவு சீரியசாகப் போய் அவனது உயிரையே எடுத்து விடுகிறது.

அதே சமயம் பல கடன்காரர்களும் லேசுபட்டவர்கள் அல்ல. அவர்களுக்கு கடன் கொடுத்தா நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற ரேஞ்சுக்கு கடன் தந்தவர்களை பரிதவிக்க வைப்பவர்கள்.

கேள்வி-29. உணவுப் பொருட்களை பதுக்கி கொள்ளை லாபம் பார்ப்போர்
பதில்: பல நேரங்களில் தட்டுப்பாட்டையே இவர்கள் போன்ற சமூக விரோதிகள்தான் உருவாக்கி பதுக்கல் வேலைகளைச் செய்கின்றனர். தூக்கு தண்டனை என்பது கூட அவர்களுக்கு போதாது.

கேள்வி-30. வியாபரத்துக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் (பொருளே இல்லாமல் -பார்க்காமால்- மார்ஜின் பணத்தை மட்டும் வைத்து)) ஆன்லைன் எனும் தந்திரம் கொண்டும திடீர் பணக்காரராய் மாறிவரும் நவீனர்கள்( தங்கம், வெள்ளி, வெள்ளைப் பூண்டின் விலை உச்சத்தில் -உதாரணம்)
பதில்: ஆன்லைன் வர்த்தகம் பற்றி போன பதிவில் கூறியதைத் தவிர வேறு என்ன புதிதாகக் கூறிவிடப் போகிறேன்?

மேலும் கேள்விகள் வந்தால் பிறகு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

32 comments:

  1. ஹலோ டோண்டு சார்,
    எங்கே பிராமணன் பதிவை யாரும் கண்டு கொள்ளவில்லை என சொல்கிறீர்கள். ஆனால், அது தொடர்பான என்னுடைய கேள்வியை இப்படி உதாசீனம் செய்கிறீர்களே! despite of my reminders!

    Essex சிவா

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.....

    // திறமை மிக்கவர்களை தேர்ந்தெடுக்கும்போது அவர்களில் சிலர் பார்ப்பனர்களாக இருக்கலாம். அது மிகவும் தற்செயலான விஷயம். ஏனெனில் திறமை என்பது எந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்கும் உரியது அல்ல//
    உங்களது நேர்மையான நிலைப்பாட்டுக்கு அப்புறம் இந்த கேள்வி...

    வன்மத்தோடு ஜாதீயம் பேசும் நிலையிலிருந்து தமிழ் வலைப்பூவுலகம் மாறுவதற்கு வழியேயில்லையா ?

    ( இந்த குண்டுச்சட்டியை தாண்டினால் , ஜாதியம் சுத்தமாக கிடையாது. எனது அனுபவம்..... நான் பணி புரியும் இடத்தில் நிறைய தமிழர்கள் கூடியுள்ளோம் யாருக்கும் யார் சாதியும் தெரியாது ..தெரிந்துக் கொள்ளவும் விரும்புவதில்லை .. வலைப்பூக்களில் தான் கட்டுப் பாடில்லாமல் தராதரமில்லாத வார்த்தைகள் ..சுதந்திரமும் தமிழும் மிகத்தவறாக பயன்படுத்தப் படுகிறது )

    ReplyDelete
  3. @Essex சிவா
    தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    எங்கே பிராமணன் பகுதி 1-ன் கடைசி எபிசோடிலேயே எழுதினேனே இவ்வாறு:

    சோவின் நண்பர் அசோக் யாருமே பிராமணன் இல்லைன்னு சம்பந்தப்பட்டவாளையே சொல்ல வைத்தது பற்றி அங்கலாய்க்கிறார். சோவோ கண்களை உருட்டியபடி அதுதானே உண்மை என்பதுதான் இந்த சீரியலின் முக்கிய விஷயம்னு சொல்கிறார். அசோக் தேடுவது வர்ணரீதியான பிராமணனை. ஆனால் தறசமயம் இருப்பவர்களோ சாதி ரீதியான பிராமணர்கள் என்கிறார் அவர். பிறகு நான்கு வர்ணங்களையும் அவர் ஒரிஜினலாக கொடுத்த விளக்கங்கள் பிரகாரம் வர்ணிக்கிறார். அவற்றில் பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன். க்ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன். வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன். சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன். ஆக, பழைய முறையில் வகுக்கப்பட்ட வர்ணங்கள் ஒன்றும் அப்படியே நிற்கவில்லை. காலத்தின் கட்டாயத்தில் அவை மாறி விட்டன. ஒன்று வேண்டுமானால் கூறலாம். இப்போது இருக்கும் நிலையில் எல்லோருமே ஒரு விதத்தில் வைசியர்களே. பிராமணன் புரோகிதம் செய்து பொருள் ஈட்டுகிறான். போர் வீரர்களும் தங்கள் சேவைகளை விற்கிறார்கள். சூத்திரர்களும் அவ்வாறே. ஆக, எல்லோருமே வைசியர்கள் ஆகிவிட்டார்கள்.

    சாதி என்பது பிறப்பால் மட்டுமே என ஆகிவிட்ட பிறகு. சாதியை மாற்றிக் கொள்ள இயலாதுதான். ஆனால் வர்ண ரீதியாக மாறவியலும் என்பது பல முறை பார்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் பிராமண சாதி மட்டும் அதே வர்ணப் பெயரில் அறியப்படுவதற்கான காரணமே அவர்களில் பலர் இன்னும் பழைய கொள்கைகளை ஓரளவுக்கு கடைபிடிப்பதே ஆகும்.

    இந்த சீரியல் ஜெயா டிவிக்கு பெரிய வரப்பிரசாதம். சோ அவர்கள் தான் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் அதை முடித்து வைத்தார். அதில் எல்லோருக்கும் குறை இருந்தது, ஆகவே இரண்டாம் பகுதி.

    ஆனால் அதில் கடைசி எபிசோடைத்தான் சொதப்பி விட்டார். திடீரென அந்த எபிசோட்டுடன் சீரியலையே அவர் முடித்து விடுவார் என்பதை நான் எதிர்பார்க்கவேயில்லை. அப்போது நான் எழுதிய வரிகள்:
    “எங்கே பிராமணன் முதல் பகுதியில் கடைசி எபிசோட் என்பதை நான் முதலிலிருந்தே கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் இம்முறை நான் அவ்வாறு காண இயலவில்லை. ஆகவே இந்த சீரியல் இம்மாதிரி முடிந்தது என்னையும் ஆச்சரியத்திலும் ஏமார்றத்திலும் ஆழ்த்தி விட்டது. காரணம் கதையில் இன்னும் பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளன.

    எல்லாவற்றையும் விடுங்கள். காதம்பரி என்னும் அப்பெண்ணை இப்படி அம்போ என விட்டுப்போனது எந்த விதத்தில் நியாயம் என்பதே புரியவில்லை. மெனக்கெட்டு அவளை அசோக்கின் தர்மபத்தினியாக்கினார்கள். இப்போது அவள் கதி? அசோக் திடீரென மறைந்து போனதால் அவனது பெற்றோருக்கு வரும் மன உளைச்சல்கள், சட்ட சிக்கல்கள், போலீஸ் கெடுபிடிகள் ஆகியவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

    எனக்கு வரும் கோபத்துக்கு பார்ட் -2 ஆரம்ப எபிசோடில் வந்தது போல நாதன், வசுமதி, நீலகண்டன், சாம்பு ஆகிய பாத்திரங்கள் காதம்பரியுடன் கூட வந்து சோ அவர்களை ஒரு மொத்து மொத்தினால்தான் என் மனம் ஆறும். சிங்காரம் ஒருவன் போதாதா, வந்து வீடுகட்டி உதைக்க?

    அது சரி நீ எப்படி பெரிசு இந்தக் கதையை முடிச்சுருப்பே என முரளி மனோகர் நக்கலாகக் கேட்கிறான். அதையும் சொல்லிவிடுகிறேன்.

    நாரதர் அசோக்கிடம் சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் அவன் தனது பூலோகக் கடமையையும் முடித்தாக வேண்டும், பீஷ்மரைப் போல. வக்கீலின் உதவியோடு உண்மை குற்றவாளியை பிடிப்பது பெரிய காரியமாக இருக்க முடியாது. பிறகு முழுவர்ண ரீதியான பிராமணனாக வாழமுடியவில்லை என்றாலும், கலியுக தர்மங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளுக்கும் ஏற்ப ஒருவன் எவ்வாறு பிராமணனாக வாழமுடியும் என்பதையும் அசோக் எடுத்துக் காட்டியதாக நான் கதையை கொண்டு சென்றிருப்பேன்.

    அத்தனைக் காட்சிகளையுக் காண்பிக்க முடியாவிட்டால், காதம்பரி உண்மையிலேயே வசிஷ்டரின் மனைவி அருந்ததியே என கதையின் போக்கை மாற்றி அவளும் அதை உணர்ந்து அசோக்குடன் வாழ்வதையே சூசகமாக ஒரு எபிசோடில் காட்டியிருப்பேன். இத்தனை விஷயங்களையும் மேலும் ஒரே ஒரு எபிசோடில் காட்டியிருக்க இயலும்.

    எது எப்படியோ நான் இம்மாதிரி சோ அவர்களை இம்மாதிரி முழுமையாகக் கண்டித்து இப்பதிவை போடுவேன் எனக்கனவிலும் நினைக்கவில்லை”.

    இதற்கு மேல் கூற என்ன இருக்கிறது. ஆனால் இந்த சீரியல் மிக அருமையாக எடுக்கப்பட்ட ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. ஆகவேதான் அது திடுதிப்பென முடிந்தது அவ்வளுக்கள்ளவு அதிக ஏமாற்றமாக அமைந்தது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. பிரெஞ்சு|ஜெர்மன் டு இங்கிலீஷ் மொழி பெயர்ப்பை கூகிள் செய்யும் பொது உங்கள் மொழி பெயர்ப்பின் தனிச் சிறப்பென்ன அல்லது கூகுளால் உங்கள் தொழில் பாதிக்கப்படுகிறதா?

    ReplyDelete
  5. பத்மநாபன் said...

    // //இந்த குண்டுச்சட்டியை தாண்டினால் , ஜாதியம் சுத்தமாக கிடையாது. எனது அனுபவம்..... நான் பணி புரியும் இடத்தில் நிறைய தமிழர்கள் கூடியுள்ளோம் யாருக்கும் யார் சாதியும் தெரியாது ..தெரிந்துக் கொள்ளவும் விரும்புவதில்லை// //

    மிகவும் மகிழ்ச்சி.

    சாதியே இல்லாத, சாதி குறித்து எவரும் கவலைப்படாத, யாருக்கும் யார் சாதியும் தெரியாத "வேறொரு உலகத்தில்" வாழும் உங்களை நினைத்து பொறாமையாக இருக்கிறது.

    அது ஒருபக்கம் இருக்கட்டும்.

    "பணி புரியும் இடத்தில் நிறைய தமிழர்கள் கூடியுள்ளோம்" என்று கூறியுள்ளீர்கள். அவர்களில் எத்தனைப்பேர் சாதி பார்க்காமல் மாற்று சாதியில் திருமணம் செய்துள்ளாகள், தங்களின் வாரிசுகளுக்கு எத்தனைபேர் மாற்று சாதியில் திருமணம் முடித்துள்ளனர் - என்கிற விவரத்தையும் கேட்டு சொன்னால் - இன்னும் பெருமையாக இருக்கும்.

    (பாவம் இன்னும் ஆங்கில பத்திரிகைகள் MATRIMONIAL பகுதியில் சாதி வாரியாகத்தான் வரண்களை வகைப்படுத்தி வருகின்றன. சாதி ஒழிந்தது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை போலும்!)

    http://www.thehindu.com/classifieds/matrimonial/?list1=brides&pageNo=1

    ReplyDelete
  6. @பத்மநாபன்
    அப்படியே அவர்களில் எவ்வளவு பேர் தத்தம் உறவினர்கள் திருமணங்களை பார்ப்பனரை அழைத்து, அக்கினி வளர்த்து, சப்தபதி மந்திர கோஷங்களுடன் முப்பத்து முக்கோடி தேவர்களது ஆசியுடன் செய்வித்தனர் என்பதையும் கேட்டு வைக்கவும்.

    அவர்களில் ஏதேனும் முற்போக்கு லேபலை வைத்துள்ள கருப்பு ஆடுகள் சிக்கக் கூடும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. @ அருள்
    //எத்தனைப்பேர் சாதி பார்க்காமல் மாற்று சாதியில் திருமணம் செய்துள்ளாகள், தங்களின் வாரிசுகளுக்கு எத்தனைபேர் மாற்று சாதியில் திருமணம் முடித்துள்ளனர் //
    இந்த புள்ளியியல் எடுக்கும் புள்ளியில் தான் தொப்பென்று விழுகிறோம்.. கட்டி புரண்டு சண்டை போடுகிறோம் ... அவரவர் கடவுளை தங்கள் பூஜை அறை அளவுக்கு வைப்பது போல் சாதியையும் விட்டளவில் வைத்து கொண்டால் பிரச்சினையில்லை .
    எங்கள் கூட்டத்தை பொறுத்த வரை நாட்டளவில் விட்டுவிட்டு வந்துள்ளார்கள் .. நான் சொல்லவந்த விஷயம் , வலைப்பூ போன்ற அற்புதமான நட்புக் கருவியை வன்மத்தில் பாழ் படுத்துவது எதற்கு?

    ReplyDelete
  8. @ அருள்:

    //பாவம் இன்னும் ஆங்கில பத்திரிகைகள் MATRIMONIAL பகுதியில் சாதி வாரியாகத்தான் வரண்களை வகைப்படுத்தி வருகின்றன. சாதி ஒழிந்தது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை போலும்!//

    இன்னொன்று தெரியுமா? கிறிஸ்தவ மேட்ரிமோனியில் பிற சாதிகள் பரவாயில்லை, SC/ST மட்டும் வேண்டாம் என்கிறார்கள் சாதிகளற்ற சமுதாயம் கொண்ட கிறிஸ்தவ மக்கள்.
    http://maattru.blogspot.com/2010/12/blog-post_28.html
    மதம் மாறினாலும் சாதியை விடாதவர்களை என்னென்பது? மென்பொருள் குற்றம், நிறுவனத்தின் குற்றம் என்பதெல்லாம் சப்பை வாதம். மக்கள் கேட்கப் போய்த்தானே option வைக்கிறார்கள் நிறுவனத்தினர்? இவர்கள் தரவில்லை என்றால் தருவது யார் என்று பார்த்துப் போகிறார்கள் மக்கள். உடனே இது பார்ப்பன சதி என்று ஆர்ப்பரித்துக் கிளம்பும் முன் தெளிவு பெறுக. சம்பந்தப்பட்ட பையனோ பெண்ணோ அந்தணக் குலத்தார் அல்ல.சமந்தப்பட்ட நிறுவனமும் அந்தணரால் நடத்தப்படுவதல்ல.

    ReplyDelete
  9. பத்மநாபன் said...

    // //அவரவர் கடவுளை தங்கள் பூஜை அறை அளவுக்கு வைப்பது போல் சாதியையும் விட்டளவில் வைத்து கொண்டால் பிரச்சினையில்லை// //

    அவரவர் கடவுளை தங்கள் பூசை அறை அளவில் வைத்திருந்தால் - இராமனுக்கு கோவில் கட்டுகிறேன் பேர்விழி என்று மதவெறியர்கள் கிளம்பி பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றொழித்த நிகழ்வு நடந்திருக்குமா?

    சாதி வீட்டுக்குள் இருக்கிறதா? வெளியே இருக்கிறதா? என்பது இருக்கட்டும். சாதி நடைமுறையில் இருக்கிறதா? இல்லையா? ஏற்றத்தாழ்வுக்கும் இழிநிலைக்கும் சாதி ஒரு காரணமாக இருந்ததா? இல்லையா?

    ஆம், என்றால் - அப்புறம் 'நாங்கள் சாதி பார்ப்பது இல்லை' என்கிற பம்மாத்து எதற்கு?

    தனக்கு, தன் பிள்ளைகளுக்கு, தனது உறவினர்களுக்கு மணமுடிக்கும்போது சாதி பார்க்காத மாவீரர்கள் எத்தனை பேர்?

    ReplyDelete
  10. hmsjr said...

    // //மக்கள் கேட்கப் போய்த்தானே option வைக்கிறார்கள் நிறுவனத்தினர்? இவர்கள் தரவில்லை என்றால் தருவது யார் என்று பார்த்துப் போகிறார்கள் மக்கள். உடனே இது பார்ப்பன சதி என்று ஆர்ப்பரித்துக் கிளம்பும் முன் தெளிவு பெறுக.// //

    மக்கள் சாதி பார்க்கிறார்கள் என்றுதான் நானும் கூறுகிறேன். இதில் நிறுவனங்களின் குற்றம் எதுவும் இல்லை. 'சாதி இல்லை, சாதி பார்க்கமாட்டேன், நான் சாதிக்கு எதிரி' என்றெல்லாம் பேசுவது "பெரும்பாலும்" வெளிவேடமாகத்தான் இருக்கிறது.

    சாதி ஒழியவேண்டும் என்று உண்மையான அக்கறை இருந்தால் - அது சமூகநீதியை நிலைநாட்டுவதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். பார்ப்பன - ஆதிக்கசாதி சிறுபான்மைக்கூட்டத்தினர் சமூக நீதிக்கு எதிராக இருக்கிறார்கள். எனவேதான், அவர்கள் "கருத்தளவில்" எதிர்க்கப்பட வேண்டியவர்களாகிறார்கள்.

    ReplyDelete
  11. //சாலை விபத்தில் எனது பெரியப்பாவின் பேத்தி அகால மரணமடைந்தது.//

    வருந்துகிறேன்!

    ReplyDelete
  12. //அதிக பின்னூட்டங்கள் பெற்றதும் பார்வதி அம்மாள் பற்றிய பதிவுதான். ஆனால் வரலாறு காணாத வகையில் நெகடிவ் பின்னூட்டங்கள்.//
    தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் இலங்கை தமிழர்கள் எப்படிபட்ட நிலையில் எல்லாம் இருக்கிறார்கள்!ஆனால் பிரபாகரன் என்ற பயங்கரவாதியின் தாய் திருப்பி அனுப்பபட்டதிற்க்கு தமிழ் நாட்டு பதிவர்கள் பெரும்பாலோர் அடித்த கூத்தை இங்கு கண்டோம்.

    ReplyDelete
  13. //பிரபாகரன் என்ற பயங்கரவாதியின் தாய்//


    பிரபாகரன் பயங்கரவாதியா இல்லையா என்பது அடுத்த பிரச்சனை!
    ஆனால் ஒருவன் தப்பு செய்தால் அவனது குடும்பத்திற்கே தண்டனை உண்டு என்பது போல இருக்கே உங்க கருத்து!

    இது வேதத்துல இருக்கா என்ன? ஏன் கேக்குறேன்னா பார்பனீயத்தை தவிர மனிதநேயத்தை கேவலபடுத்தும் வேறொன்று உலகில் இல்லை!

    ReplyDelete
  14. ஒரு பயங்கரவாதியின் தாயிடம் எந்தவிதமான அவசியமும், தேவையும் இல்லாமல் காட்டும் அக்கறையை, மனிதநேயத்தை சாதாரண அகதிகளிடம் காட்டியிருக்கலாம். பார்வதி அம்மாள் இலங்கையில் நல்ல பராமரிப்பில் இப்போ இருக்கிறார். அப்போ எதற்காக என்ன நோக்கத்திற்க்காக தமிழ்நாட்டிற்க்கு கொண்டுவரபட்டார்!

    ReplyDelete
  15. //மனிதநேயத்தை சாதாரண அகதிகளிடம் காட்டியிருக்கலாம். பார்வதி அம்மாள் இலங்கையில் நல்ல பராமரிப்பில் இப்போ இருக்கிறார். அப்போ எதற்காக என்ன நோக்கத்திற்க்காக தமிழ்நாட்டிற்க்கு கொண்டுவரபட்டார்! //


    இலங்கையில் பார்வதி அம்மாள் நன்றாக பராமரிக்கப்படுகிறார் என்ற சொல் எந்த அளவுக்கு நம்பகதன்மை வாய்ந்ததோ அதே அளவு தான், இலங்கையில் தமிழர்களுக்கு எந்த சலுகையும் மறுக்கப்படவில்லை என்ற சொல்லும்!

    பார்வதி அம்மாள் மருத்துவம் பார்க்கத்தான் சென்னை வந்தார், உள்நோக்கம் கற்ப்பிப்பது நமது வேலையில்லையே!

    ReplyDelete
  16. ஆமாங்க நல்லா சமுக நீதிய நிலை நாட்டறோம்.....
    ரெண்டாயிரம் ருபாய் கொடுத்தா ரீடெய்லா எந்த சாதிக்கு வேணா மாத்திக்கொடுக்கிற அரசாங்கஅலுவலகங்கள்..

    கூட்டத்தை காட்டி மிரட்டுனா மொத்தமா பிற்படுத்தவகுப்பிலிருந்து மிகவும் பிற்படுத்த வகுப்புக்கு மாத்திக் கொடுக்கிற ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள்....

    எங்கே நியாயமான சமுக நீதி.... இது தான் பம்மாத்து.....
    நடைமுறையில்
    உண்மையா படிச்சு முன்னேறியவர்களாவது சாதியை கிளறிக் கொண்டிருக்க வேண்டாம் என்பது தான் நான் சொல்ல வந்தது...
    அதை விட்டுவிட்டு தொழில்முறையாக வன்மம் பாராட்டிகொண்டிருப்பேன் என்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது

    ReplyDelete
  17. பத்மநாபன் said...

    // //நடைமுறையில் உண்மையா படிச்சு முன்னேறியவர்களாவது சாதியை கிளறிக் கொண்டிருக்க வேண்டாம் என்பது தான் நான் சொல்ல வந்தது// //

    இது சுத்த கேணத்தனமான பேச்சு.

    இடஒதுக்கீட்டில் படிப்பதெல்லாம் 'உண்மையா படிப்பது' இல்லையா? அப்போ, தேர்வுகளில் தேர்ச்சியடைய - BC/MBC'க்கு 40 மதிப்பெண், பார்ப்பானுக்கு 80 மதிப்பெண் என்றா இருக்கிறது?

    ReplyDelete
  18. baleno said...

    // //ஒரு பயங்கரவாதியின் தாயிடம் எந்தவிதமான அவசியமும், தேவையும் இல்லாமல் காட்டும் அக்கறையை, மனிதநேயத்தை சாதாரண அகதிகளிடம் காட்டியிருக்கலாம்.// //

    தாய் என்பவள் தாய்தான். பயங்கரவாதியின் தாய் என்று எவரும் இல்லை.

    சாதாரண தமிழீழ அகதிகளை மனிதத்தன்மையின்றி நடத்திவருவது - இந்தியப்பேரரசில் கோலோச்சும் மலையாள - பார்ப்பனக் கூட்டம்தான். இதற்காக தமிழகத் தமிழர்களைத் தூற்ற முடியாது.

    பாலசுத்தீன அகதிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வசதிகள், திபத்திய அகதிகளுக்கு மலைவாசத்தலங்களில் சொந்த நிலம், வீடு - ஆனால், தமிழீழ அகதிகளிடம் மட்டும் பாராமுகம் என்பதற்கு ஒரே காரணம் - அவர்கள் தமிழர்கள் என்பதுதான்.

    ஆரிய இனவெறிக்கூட்டம் எப்போதும் தமிழினத்தை பழிவாங்கத் துடிக்கும் என்பது இயல்பானதுதான்.

    ReplyDelete
  19. //உண்மையா படிச்சு முன்னேறியவர்களாவது சாதியை கிளறிக் கொண்டிருக்க வேண்டாம் என்பது தான் நான் சொல்ல வந்தது...//

    @ அருள்..

    திருப்பி படிச்சுப்பாருங்க ..உங்களையும் படிச்சவங்க லிஸ்ட்ல வச்சு பொதுவா சொன்ன வார்த்தை...இப்ப எது கேணத்தணம் புரிஞ்சுதா... எதுக்கெடுத்தாலும் ஒழுங்கா படிக்காமா , பாப்பான் பாப்பான்ட்டு...ஏன் இப்படி கிலி பிடிச்சு அலையறிங்க..... தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளிய வாங்க முதல்ல..

    ReplyDelete
  20. @பத்மநாபன்

    அப்போ... உண்மையா படிக்காதவங்க யாரு? அதுக்கு என்ன விளக்கம்?

    பார்ப்பான இனவெறிக்கு எதிராக பேசினா அது தாழ்வு மனப்பான்மையா? அப்போ தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களா?

    ReplyDelete
  21. திருவாளர் அருளாரே...

    இப்படி ஜாதி வெறி புடிச்சு பைத்தியம் மாதிரி அலைய ச்சொல்லி பெரியாரும் அண்ணலும் நிச்சயம் சொல்லியிருக்க மாட்டாங்க..

    வேலை இல்லைன்னா இங்க வாங்க ..சாதி பேசாத தமிழ் பேசலாம் இங்கே..என்ன உங்க பழக்க தோஷத்துக்கு வெட்ட ஒரு மரம் கூட இங்க இல்லை...

    ReplyDelete
  22. //சாதாரண தமிழீழ அகதிகளை மனிதத்தன்மையின்றி நடத்திவருவது - இந்தியப்பேரரசில் கோலோச்சும் மலையாள - பார்ப்பனக் கூட்டம்தான்.//
    12 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியப்பேரரசின் மைய அரசில் அங்கம் வகித்துவரும் திமுகவின் தானைத்தலைவர், தமிழக முதல்வர் ஏன் இந்தப் பிரச்சினையிலும் கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்தது என்றிருக்கிறார்? மருத்துவர் மாலடிமை ஏன் அப்படிப்பட்டவரிடம் சென்று மகனுக்கு பா.மா.உ பதவி கேட்டுக் குழைகிறார்? அவர்கள் மலையாளியும் இல்லை, பார்ப்பானும் இல்லையே? காசேதான் கடவுளடா!! அடச்சீ வெங்காயம்... காசேதான் பகுத்தறிவடா!!!

    ReplyDelete
  23. பார்வதியம்மாள் விஷயத்தில் தேவையற்ற ச்ச்சர்ச்சையை தமிழக அரசு உருவாக்கிவிட்டது. மத்திய அரசு விசா வழங்கிய பிறகு, பார்வதியம்மாள் வந்தது குற்றம் என்று கிளம்பியது முறையற்றது. பார்வதியம்மாள் போன்ற சர்ர்சைக்குரிய பின்புலம் உள்ளவர்களுக்கு விசா அவ்வளவு சுலபாமாக எடுத்தேன் குத்தினேன் என்று கொடுப்பதில்லை. உளவு அமைப்புகள் எந்தப் பிரச்சினையுமில்லை என்று கூறிய பிறகு தான் விசா தருவார்க்ள். தமிழக அரசும் க்ளியரன்ஸ் தரவேண்டும். தமிழக அரசுக்கு அவரைத் தடுக்கக் காரணம் இருந்திருந்தால் அதைச் சொல்லி அவருக்கு விசா தரவிடாமல் தடுத்திருக்கலாம். வரவிட்டு பிறகு வந்தது குற்றம் என்பது வரவேற்று இலை போட்டு பரிமாறிவிட்டு, சாப்பிட உட்கார்ந்ததும் தீனிக்கு அலைகிறாயே என்று திட்டுவது போன்ற செயல்பாடு.

    இப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நெடுமாறன், வைகோ போன்றோர் limelightஐ hog செய்வதற்கு முன் தான் பேரெடுக்க வேண்டும் என்ற அரசியல் கட்டாயத்தில் மு.க. வழக்கம் போல அதிகாரிகளிடம் "நீ தடு, நான் விடுறேன்!" என்றும், அடிப்பொடிகளிடம் "விட்டபின் தாயைக் காத்தனயனே! என்று என்னைப் பாராட்டித் தட்டி எழுதி வை" என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால் executionல் சொதப்பிவிட்டார்கள்.

    ReplyDelete
  24. மூன்று அல்லது நான்கு முறை பின்னூட்டம் வந்திருக்கலாம். technical issue. too long Error 3 முறை வந்தபின் பின்னூட்டத்தை இரண்டாகப் பிரித்து இட்டேன்.

    ReplyDelete
  25. //இலங்கையில் பார்வதி அம்மாள் நன்றாக பராமரிக்கப்படுகிறார் என்ற சொல் எந்த அளவுக்கு நம்பகதன்மை வாய்ந்ததோ..//
    முன்பு தீவிரபுலி ஆதரவு கட்சியான இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இந்தியா வந்து (2008-2009)பாரதிய ஜனதாக் கட்சி தலைவர் அத்வானிக்கு மாலையிட்டு இலங்கையில் போர் நிறுத்தம் செய்து புலிகளை காப்பாற்றும் படி கேட்டார். பா.ஜ.கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் செய்தார். அதே சிவாஜிலிங்கம் தான் பார்வதியம்மாளை பார்க்கும் பொறுப்பை செய்கிறார். உங்கள் நம்பிக்கைக்குரிய நெடுமாறனின் தூதுவர் ஒருவர் வந்து பார்த்து சென்றுள்ளார்.

    ReplyDelete
  26. //technical issue. too long Error 3//

    இது வெறுமனே பிளாக்கர் விடும் உதார் மெசேஜ். ஆனால் அதே சமயம் பின்னூட்டம் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்று விடும்.

    எனக்கே பலமுறை என்னுடைய வலைப்பூவில் பதில் பின்னூட்ட்ங்கள் இடும்போது இந்த மெசேஜ் வந்துள்ளது. ஆனால் back பட்டனை அழுத்தி திரும்பச் சென்று, ரிஃப்ரெஷ் செய்து பார்த்தால் அந்த கமெண்ட் வந்திருக்கும்.

    நீங்களே இதை இம்மாதிரி சோதிக்கலாம்.

    மற்ற வலைப்பூக்களில் இடும் கமெண்டை முதற்கண் சேவ் செய்யவும். பிறகு பப்ளிஷ் பட்டனை அழுத்தவும்.

    அப்போது மேலே சொன்ன எர்ரர் மெசேஜ் வந்தால், அதே பின்னூட்டத்தை உங்களது சொந்தப் பதிவு ஒன்றில் பின்னூட்டமாக இடவும். உங்கள் பதிவில் நான் சொன்னபடி எர்ரர் மெசேஜ்ஜுக்கும் பின்னால் அந்த பின்னூட்டம் வந்திருக்கும். அப்போது அதுவே மற்றவர் பதிவிலும் வெளியாகி இருந்திருக்கும்.

    இப்போது கூட எனக்கு எர்ரர் மெசேஜ் வரலாம், ஆகவே சேவ் செய்து வெளியிடுகிறேன். பார்ப்போம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. //பார்வதியம்மாள் விஷயத்தில் தேவையற்ற சர்ச்சையை தமிழக அரசு உருவாக்கிவிட்டது.
    அந்த அம்மாவிற்கு விசா கொடுக்காமல் இருந்திருக்காலாம்
    இதைசெய்யாமல் வந்தவரை திருப்பி அனுப்புவது முட்டாள்தனம்//.

    அதே சமயம், விசா கொடுத்து விட்டார்களே என்பதற்காகவே சங்கடப்பட்டுக் கொண்டு உள்ளே அனுப்பியிருந்தால் அதைவிட அதிக முட்டாள்தனமாக இருந்திருக்கும்.

    வேண்டுமென்றே தமிழக அரசை சங்கடப்படுத்த வேண்டும் என்றே காய்களை புலி ஆதரவாளர்கள் நகர்த்தியிருக்கிறார்கள் என்பது க்ளியராக தெரிகிறது.

    ராஜீவை தண்டிக்கிற்ரேன் பேர்வழி என அவரை கொலை செய்தார்கள். அதற்கு முன்னால் சரியப்பா போய்த் தொலையுங்கள் என இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டு புலிகள் இந்திய அரசு ஈழப் பிரச்சினையிலிருந்து கைககழுவும்படியும் செய்தார்கள்.

    இவ்வளவு நடந்த பிறகும் வெட்கமில்லாமல் பாலசிங்கத்துக்கு சிகிச்சை என்னும் பெயரில் அவரை உள்ளே நுழைக்க முயன்றார்கள். இம்முறை பார்வதி அம்மாள் அவர்களது பகடைக் காய் ஆனார்.

    பார்வதியம்மாள் பிரச்சினை பற்றி நான் இட்டப் பதிவு http://dondu.blogspot.com/2010/04/blog-post_19.html

    அதை இட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அதில் நான் சொன்ன கருத்துக்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதே சமயம் அப்போது என்னைச் சாடிய பலர் பின்னால் மனம் மாறி, என்னுடைய நிலைக்கே வந்தனர் என்பதையும் அறிவேன்.

    ஆனால், அவ்வாறு வந்தவர்களில் பார்ப்பனரை திட்ட வேண்டும் என்ற ஒரு சிங்கிள் அஜெண்டாவில் செயல்படும் பதிவர்கள் யாருமே இல்லை என்பதையும் இத்தருணத்தில் சொல்லி வைக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. "சாதி ஒழியவேண்டும் என்று உண்மையான அக்கறை இருந்தால் - அது சமூகநீதியை நிலைநாட்டுவதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். "

    அருள், சமூக நீதின்னா என்னாங்க? அடிக்கடி அடிச்சு விடறீங்க?

    ReplyDelete
  29. வணக்கம் டோண்டு சார்,
    தங்கள் பதிலுக்கு நன்றி, especially pointing your past comments!
    நான் முக்கியமாக கேட்க வந்தது, இந்த பிறப்பினால் மட்டுமே பிராமணன் ஆகி விடாது என்ற message எப்படி பிராமண சமூகத்தில் பார்க்கப்பட்டது? (நீங்கள் அறிந்த வரை).
    சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்றா அல்லது அறைகுறையாக உளருகிறார் என்றா (அந்த வெள்ளைகாரர் கடைசி அத்தியாயத்தில் சொல்லும் போது சிலரின் comments போல- அதாவது முதல் பாகத்தில்).
    எனக்கு, ஒரு non-பிராமண சமூகத்தில் இருந்து வரும் எனக்கு (அதாவது, பிறப்பாலும்!) இந்த message ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது!
    இந்த மாதிரி சொல்லிவிட்டு அந்த சமூகத்தை face செய்ய சோ அவர்களுக்கு அபார துணிச்சல் வேண்டும்!
    இவர் மாதிரி இன்னும் சிலர் நமது நாட்டில் இருந்தால் நாடு உருப்பட்டு விடும் (இப்போது உருப்படாததிற்க்கு காரணம், இவர் ஒருத்தர்தான் இருக்கிறார்!).
    மற்றபடி, புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    Essex சிவா

    ReplyDelete
  30. // //சமூக நீதின்னா என்னாங்க? அடிக்கடி அடிச்சு விடறீங்க?// //

    Assurance of social and economic rights: How fair? How fast? How equal?

    http://lawmin.nic.in/ncrwc/finalreport/v2b1-4.htm

    ReplyDelete
  31. சமூகநீதி என்பது சோசியல் ஜஸ்டிஸ் தானே அருள் அவர்களே.

    அது என்னமோ இன்சூரன்ஸ் பாலிசி மாதிரி சொல்கிறீர்களே...ஏன் ?

    சமூக நீதி என்பதே மதவாத, கிருத்துவ பாதிரிகள் கொண்டுவந்த சமூகப்பார்வை. சமூக நீதி என்பதை எந்தக் காலத்திலும் வரையறை படுத்தவே முடியாது, சுருக்கமாக கறிக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய்.

    ஆனால் அதை வைத்துக்கொண்டு என்.ஜீ.ஓ ஆரம்பித்து காசு பண்ணலாம்.

    ReplyDelete
  32. //ஆனால் அதே சமயம் அப்போது என்னைச் சாடிய பலர் பின்னால் மனம் மாறி, என்னுடைய நிலைக்கே வந்தனர் என்பதையும் அறிவேன்.//

    அரசாங்கத் தலைமை சற்றே கண்டிப்பானதாக இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. நம் தானைத்தலைவர் முனா கானா 2009 இறுதியில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு ஓட்டுரிமை தரலாமா என்று யோசித்தவர். பார்வதியம்மாளை வைத்து அரசியல் ஆதாயம் தேட தன்னைத் தவிர யாருக்கும் எண்ணமே வரக்கூடாது என்பதில் உறுதியானவர். அவரே பிரஸ்மீட் வைத்து "என்னை மூத்த மகனே என்று பார்வதியம்மாள் உச்சிமோந்தார்" என்று பீலா விட்டிருப்பார்.

    But still, அரசியல் ஆதாயங்களைத் தவிர்க்க ஒருவருக்குச் சிகிச்சை தராமல் திருப்பி அனுப்பியது திமுக அரசுக்கு ஆளக் கையாலாகவில்லை என்பதையே காட்டுகிறது.
    சிகிச்சை வேண்டுமென்றால் ஆசுபத்திரியில் படுத்துக் கொள், உடம்பு சரியானதும் எழுந்து போ. ஊரைக்கூட்டி ஒப்பாரி வைப்பது எல்லாம் கூடாது என்று சொல்லி, கண்டிப்பாய்க் கண்காணித்துச் சிகிச்சை அளித்திருக்கலாம்.

    வைகோ, நெடுமாறன் போன்றோரைச் சமாளிப்பது பெரிய வித்தையில்லை. ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால் அப்படித்தான் நடந்திருக்கும். (Assumption, though)

    Yet, மு.க கண்டிப்புக் காட்டி பழக்கப்படாதவர். "மழைக் காலத்தில் பள்ளமான சாலையில் தேங்கிய தண்ணீரைக் கூடக் குழப்பிப்பார், மீன் கிடைத்தால் லாபம் தானே" எனும் வகையைச் சார்ந்தவர். ஆகவே உங்கள் கருத்து நடைமுறை அடிப்படையில் சரி.

    ReplyDelete