மூன்றாம் தேதியன்று மாலை காட்சிக்கு எங்கள் வீட்டருகில் உள்ள வெற்றிவேல்/வேலன் சினிமா காம்ப்ளக்சுக்கு சென்றிருந்தேன். வெற்றிவேல் தியேட்டரில் எந்திரன் படம் போட்டிருந்தார்கள். டிக்கெட்டுகள் 300, 250 மற்றும் 200. கவுண்டரில் டிக்கெட்டு போடுபவர் அமர்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார். அப்படியே வேலன் தியேட்டர் பக்கம் போனால் அங்கு பாஸ் என்னும் பாஸ்கரன் படத்தின் போஸ்டர் ஒட்டியிருந்தார்கள்.
முன்ஜாக்கிரதையாக கவுண்டரில் பாஸ் படம்தானே எனக்கேட்டது நல்லதாகப் போயிற்று. ஏனெனில் அன்றைக்கு அங்கும் எந்திரனே போட்டிருந்தார்கள் (அதே விலையில் டிக்கெட்டுகள் 300, 250 மற்றும் 200). கிழிஞ்சது கிருஷ்ணகிரி என தலையில் அடித்துக் கொண்டு கிளம்பி வீட்டுக்கு திரும்பினேன்.
இன்று காலை 11.30 மணிக்கு போனால் வேற்றிவேலில் எந்திரன் ஆனால் டிக்கெட்டுகள் விலை 150, 120 & 100. அப்போதும் சீந்துவார் இல்லை. இதைப் பார்த்து எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதென்ன, முதல் வாரத்தில் அப்படியா அதிகமாக விலை வைப்பது? பேராசைக்கும் ஓர் அளவு வேண்டாமா? நங்கநல்லூர் மக்கள் பாய்காட் செய்தது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.
வேலனில் பாஸ் என்னும் பாஸ்கரன் காட்டினார்கள். பால்கனி 70 ரூபாய், ஸ்டால் 50 ரூபாய். கவுண்டரை ஓப்பன் செய்த பிறகும் யாரும் அணுகவில்லை. பிறகு “டிக்கெட் வேணுங்கறவங்க வாங, எல்லா டிக்கெட்டும் ஒரே கவுண்டர்தான்” என டிக்கெட் போடுபவர் கூவ வேண்டியிருந்தது. 475 சீட்டுகள் உள்ள வேலனில் இன்று வந்தவர்கள் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டியிருந்தால் அதிசயமே.
தின்பண்ட ஸ்டால்களில் விலைகள் ரீசனபிள்தான். காப்பி 10 ரூபாய் (மிக நன்றாகவே இருக்கிறது, வெஜிடபில் பஃப், வறுவல் பாக்கெட், கோன் ஐஸ் ஆகியவை 10 ரூபாய்கள்தான். இங்கும் வெளியிலிருந்து தின்பண்டங்கள் கொண்டுவரக்கூடாது என்று அறிவிப்பு இருந்தாலும் யாரும் செக் செய்ததாகத் தெரியவில்லை.
என் மனதுக்கு ரொம்ப நாட்களாகவே ரொம்பப் புதிராக இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், வேலன் மற்றும் வெற்றிவேலில் ஹவுஸ்ஃபுல் ஆவதை விடுங்கள். ஒரு ஷோவுக்கு சமயத்தில் 20 பேர் கூடத் தேறுவதில்லை. அதெப்படி அவற்றை நடத்துவது கட்டுப்படியாகிறது? அந்த காம்ப்ளெக்ஸின் முதலாளியிடம் 7 தியேட்டர்கள் மேல் இருக்கின்றனவாம். மனிதர் எப்படி சமாளிக்கிறார்? கேபிள் சங்கர்/உண்மை தமிழன்/லக்கிலுக் போன்ற விஷயமறிந்தவர்கள் யாராவது சொல்லுங்கப்பூ!
பாஸ் படத்துக்கு ரொம்ப எதிர்ப்பார்ப்புகளுடன் போகாமல் இருந்தால் படத்தை ரசிக்கலாம். சந்தானம் பட்டை கிளப்புகிறார். நயனதாரா ஆர்யாவின் அக்கா போல இருக்கிறார். டியூட்டோரியல் காலேஜுக்கு அந்த பார்வையற்றப் பெண் வந்து பாடம் நடத்திய சீன்கள் மனதுக்கு நிறைவைத் தந்தன. ஏனெனில் அவ்வளவு பாசிடிவாக இருந்தன. கடைசியில் வந்த ஜீவா ரொம்பவுமே க்யூட்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
1 hour ago
28 comments:
என்னங்க இது அநியாயம்...எந்திரன் டிக்கெட் இங்க பெங்களூர் ல 400 ரூபா கேக்கறாங்க,..நிதானமா ஒரு மாசம் கழிச்சு பாக்கலாம்..
எந்திரன் படம் பெங்களுர்-பொம்மனள்ளி கிருஷ்னா திரையங்கில் ரூ 100 க்கு பார்க்கலாமே...
////அப்போதும் சீந்துவார் இல்லை. இதைப் பார்த்து எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதென்ன, முதல் வாரத்தில் அப்படியா அதிகமாக விலை வைப்பது? பேராசைக்கும் ஓர் அளவு வேண்டாமா? நங்கநல்லூர் மக்கள் பாய்காட் செய்தது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.////
கெளம்பிட்டாங்கையா .... கெளம்பிட்டாங்க .........
//தின்பண்ட ஸ்டால்களில் விலைகள் ரீசனபிள்தான். காப்பி 10 ரூபாய் (மிக நன்றாகவே இருக்கிறது, வெஜிடபில் பஃப், வறுவல் பாக்கெட், கோன் ஐஸ் ஆகியவை 10 ரூபாய்கள்தான்.//
இதெல்லாம் ஓவராக தெரியவில்லையா? மெஷின் காஃபி. அதுவும் தண்ணீரில். இதை நன்றாக இருப்பதாக வேறு சொல்கிறீர்கள். மற்ற வறுவல்கள் ஆகியவை எல்லாம் மட்டமான தரம். வேலனுக்கும் வெற்றிவேலுக்கும் சென்றால் ஸ்நேக்ஸ் வாங்கிவதே இல்லை.
போதாத குறைக்கு, தியேட்டர் வெளியே உச்சா போனால், வாழிநெடுக சுமார் 20 சிகரெட்டையாவது நீங்கள் புகைக்க வேண்டியிருக்கும்.
இல்லை, காப்பி நிஜமாகவே நன்றாக இருந்தது. அதே காப்பி சிடியில் உள்ள தியேட்டர்களில் ஐம்பது ரூபாய் சார்ஜ் பண்ணுவதாகக் கேள்விப்பட்டேன். உண்மையாக இருக்குமோ?
மொத்தமே 50 பேருக்கு மேல் வந்திருக்க மாட்டார்கள், அவர்களில் பாதிக்கு மேல் பால்கனி டிக்கெட்டுகள். ஸ்டால் சீட்டுகள் பேய் பங்களா போல வெறிச்சோடி கிடந்தன.
தப்பித் தவறி சீழ்க்கை அடித்தல் கூட மாட்டிக் கொள்ளும் அபாயம் உண்டு, ஆகவே அதைத் தவிர்த்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
pondy adlabsil adhigaarapoorva reservation thodanguvadharku munaagavae ticket 1200 ena vitruirukiraargal... adhukum aadipidichu than poraanga... enna solradhu????
neeghal pogathal padam periya nastham agiduchu..... naganalluril ellarum puthisalinga...
Dear Dondu sir,
after 3 years my posting. I went to Enthiran in Singapore last Sunday it was not full. SGD15.00 per ticket. But the point is I found the total movie is revolving around only dream scenes for which 50% of the budget has been used. Except Aish ,every thing sucks. I a fan of shankar and after Shivaji and Enthiran- i would rather watch his old movies or the movies he produces (all top class) than this kind of mirchi masala. Science and Technology should support the script and story otherwise. It will challenge anybody's intelligence. I am sure Sujatha would have been very upset to be part of these kind of film making.
Just because you have budget you cannot put in disproportionate ghee or sugar in the dish- It is simply not a good cooking! Rajini should understand that every thing has time and place-Style, childish antics , trying dances -etc., and keep to doing good movies only. people use his name only to make money from his hardcore fans.
Rgds
Murali
Singapore
இப்பதிவு தியேட்டர்காரர்களின் பேராசையை சாடவும், மற்றும் நங்கநல்லூர் மக்கள் அட போடா போக்கத்தவனே என அதற்கு பதிலளித்ததைப் பாராட்டவுமே போடப்பட்டது.
இது எந்திரன் படத்துக்கான விமரிசனம் அல்ல, அல்ல. படத்தை இன்னும் பார்க்காத நிலையில் எவ்வாறு போடுவது? விலை கழுதை மாதிரி தானே குறையும்போது பார்த்துக் கொள்ளலாம்.
இல்லாவிட்டால் சிவாஜி படம் பார்த்தது போல, “உலகத் தொலைக்காட்சி சரித்திரத்திலேயே முதன்முதலாக வெளியிடப்படும்போது” பார்த்துக் கொண்டால் போகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மாமூல் டிக்கெட் விலை ரூ 30 என்றால் இவர்கள் 10 மடங்கு லாபம் பார்க்க ஆசைப்படறாங்க.அதற்கு உங்க ஊர் மக்கள் உடன் படாமல் எதிர்ப்பை காட்டியது போல் தமிழகம்ம் எங்கும் எதிர்ப்பு காட்டப்பட்டால் உலகம் உருப்படும்
padam "Uyirvani"-la release aayiruchu "boss"
நங்கநல்லூர் மக்கள் பாய்காட் செய்தது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.
------
நல்ல விஷயம்
DVD வந்துருச்சுப்ப பெங்களூருல!. 40 ரூபாய் கொடுத்து வாங்கி வேட்லையே பாருங்கப்பா! பிரிண்ட் நல்லா இருக்கு
எந்திரனில் சுஜாதா’ – ஓர் மறக்கப்பட்ட மாமேதை
எந்திரன்’ நிச்சயம் திரைப்படமாக உருபெறும் என ‘சுஜாதா’ தளராத நம்பிக்கை கொண்டிருந்தார். ஆரம்பம் முதலே ‘எந்திரனுக்கு’ பல வகைகளில் உதவி புரிந்த வந்த இந்த ‘அறிவியல் எழுத்தாளர்’, ‘எந்திரன்’ வெளிவர இருக்கின்ற இந்த நேரத்தில் உயிருடன் இல்லாதது மிகப் பெரிய சோகமே!
‘சுஜாதாவை’ மறந்துவிட்டு, அவரது எந்திரனை மட்டும் திரையுலகம் கொண்டாட இருப்பது வேடிக்கை
http://600024.com/ta/the-forgotten-sujatha-connection-with-endhiran/
Kevalam, kadaisiyil SURA padamae better pola irukku. Indha link poi parrunga makkalae. Sariyana Adi. ENDIRAN - ORU KAYALAANGADAI.
http://indiablogs.searchindia.com/2010/10/05/enthiran-box-office-unimpressive-average-gross/
http://www.boxofficemojo.com/weekend/chart/
//இல்லாவிட்டால் சிவாஜி படம் பார்த்தது போல//
டோண்டுக்கு மட்டும் சிவாஜி படத்த "ஏதோ" ஒரு டிவி-ல "முதல் முறையா" டெலிகாஸ்ட் பண்ணாங்களோ?
@போக்கத்தவன்
ஆமாம், டிவியில்தான் வந்தது போல இருக்கே.
கண்டிப்பாகன் நான் தியேட்டரில் பார்க்கவில்லை. என்னிடம் டிவிடி ப்ளேயரும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வெற்றி வேல் தியேட்டர் எப்படி என்று தெரியவில்லை...எந்திரன் போன்ற படங்களை சென்னையில் சதயம் போன்ற திரையரங்கில் பார்த்தால் தான் முழு பிறவி பயனை அடைய முடியும்..
எந்திரன் டிக்கேட் முதல் 3 நாட்களுக்கு ஏற்கனவே முன் பதிவாகி விட்டது .டிக்கேட் எங்கும் இல்லை. அதான் டிக்கேட் கொடுப்பவர் கொட்டாவி விடுகிறார்.
அரவிந்தன் பொம்மனகள்ளி கிருஷ்ணாவில் பார்பதற்க்கு பதிலாக கேமரா பிரண்ட் திருட்டு டிவிடியில் பார்க்கலாம்
டோண்டு சார், எந்திரன் படம் சூப்பர் ஹிட்..சும்மா லூசு பசங்க வயத்தெரிச்சலை பார்த்து நீங்களும் அதேயே செய்ய நினைக்காதீங்க
@ஹலோ அருண்,
அப்பா அம்மா சௌக்கியமா?
எந்திரனின் விமரிசனம் இப்பதிவின் நோக்கம் அல்ல. தியேட்டர்காரர்களின் பேராசையைத்தான் சாடினேன், கூடவே சன் பிக்சர்சையும்.
மற்றப்படி ரஜனி எனக்கும் பிடிக்கும். அவர் படம் வெற்றியடைந்தால் நானும் மகிழ்வேன்.
வெற்றிப்படம் என நீங்கள் சொல்வதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் இன்னும் பாஸ் படம் பார்க்கலை , தப்பிச்சுட்டேன்
Its a fact that many people in Nanganallur prefer watching movie in Satyam or Mayajall or somewhere else rather than watching in Velan for Rs.300. Atleast i did . I paid the same price and watched in Mayajall. I'm in Nanganallur too. Thalivar Rocks. Sad part is he rocks in the mafia group produced movie.
@Swami
Are you sure you paid the same price only? How about transport cost for going to Mayajal? Did you go by car or two wheeler or by bus?
How about the botheration of going there all the way, apart from the transport cost?
One thing is clear. Vetrivel complex theater cannot imitate luxury theaters in terms of price without the required amenities.
Regards,
Dondu N. Raghavan
எந்திரன் ஏகாதிபத்தியம் என்றும், எந்திரன் படத்துக்கு கூட்டமில்லை என்கிற ரீதியிலும் இந்த இரு பத்திரிகைகளும் எழுதின.
தினமணி, டெக்கன் கிரானிக்கிளுக்கு நோட்டீஸ் அனுப்பியது சன்!!
http://www.envazhi.com/?p=20843
பாஸ் படத்தில் நயன்தார ஓபனிங்/அறிமுக சீனில் விசில் அடிக்கும் எண்ணம் இருந்ததா.
சிவாஜி படம் இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக வந்ததைகூட பார்க்காமல் பின்னூட்டம்.......ஹ்ம்ம்....
எந்திரன் படம் ரிலீஸ் ஆகி 4 நாட்களியே பெங்களூரில் டி.வி.டி.80 ரூபாய்க்கு கிடைத்தது.
Post a Comment