நிரந்தர பக்கங்கள்

1/31/2011

இணையம் நம்மை அடிமைப்படுத்துமாறு விடுவதா?

போன டோண்டு பதில்கள் பதிவில் ராம்ஜி யாஹூ கேட்ட கேள்வியையும் அதற்கான எனது பதிலையும் முதலில் பாருங்கள். பிறகு இப்பதிவின் விஷயத்துக்கு வருகிறேன்.

ராம்ஜி_யாஹூ
கேள்வி-11. டோண்டு அவர்களால் இணையத்தில், பதிவுகளில் நேர ஒழுங்கை கடைபிடிக்க முடிகிறதா அல்லது இணைய அடிமையா? உதாரணத்துக்கு, இன்று ஒரு மணி நேரம் மட்டுமே இணையம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கினால், ஒரு மணி நேரம் முடிந்ததும் கணினியை அணைத்து விடும் பழக்கம்/சுய கட்டுப்பாடு இருக்கிறதா?
பதில்: ஒரு நாளைக்கு 16 மணி நேரத்துக்கு குறையாமல் கணினியில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. கணினி திறந்தால் இணையத்தைத் திறப்பது டீஃபால்ட்டான செயல். எனது வேலை அப்படிப்பட்டது. ஆன்லைன் அகராதிகள் திறந்து வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

கூடவே கூகள் டாக். வேலை செய்து க்ண்டிருக்கும்போது வரும் மின்னஞ்சல்கள் பற்றிய அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆகவே அவ்வப்போது அவற்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே கணினியும் இணையமும் மாறிவிட்ட நிலையில் நீங்கள் சொல்வது போல கணினியை அணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

என்ன, மொழிபெயர்ப்பு வேலைகள் வேணமட்டும் இருக்கும் நிலையில் தமிழ்மணம், வலைப்பூக்கள் ஆகியவற்றை பாவிப்பது தன்னாலேயே கட்டுப்படுகிறது. அவ்வளவே.

உண்மை கூறப்போனால் இடமின்மை மற்றும் நேரமின்மை காரணமாக நான் பதிலை மிகவும் சுருக்கியிருந்தேன். அக்கேள்வி ஒரு தனிப்பதிவாக கையாளப்பட வேண்டியது, அதைத்தான் நான் இப்போது செய்கிறேன்.

என்னைப் பொருத்தவரை ஒரு விஷயம் கூறுவேன். எதிர்ப்புகள் வரவர எனது வைராக்கியம் அதிகரிக்கும். அதிலும் நான் சரி என நினைத்திருப்பதையே கேள்விக்கு உட்படுத்தி என்னை அவநம்பிக்கை கொள்ளச் செய்ய முயல்பவர்களை நான் ஒரு போதும் லட்சியம் செய்ததில்லை. உதாரணத்துக்கு, வகுப்பில் ஆசிரியரிடம் சந்தேகம் கேட்கக்கூட பலர் அஞ்சுவர். எங்காவது ஆசிரியர் நமது அறியாமையை கேலி செய்வாரோ, சக மாணவர்கள் சிரிப்பார்களோ என்றெல்லாம் அச்சம் வெளியாகி பலரை வாய்மூடி மௌனியாக்கி விடுகிறது.

ஆனால் நான் அப்படியில்லை. சந்தேகம் என வந்து விட்டால் கேட்காமல் விடுவதில்லை. ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால் ஆசிரியர்களிடமும் சிலரிடம் சந்தேகத்தை பிடிக்காத குணம் உள்ளதுதான். நான் சமீபத்தில் அறுபதுகளில் பொறியியற் கல்லூரியில் படிக்கும் தருணம் எங்களது இயற்பியல் ஆசிரியர் போண்டா (திரு. சுவாமிநாதன்) அவர்கள் அருவி மாதிரி லெக்சர் தரும்போது நான் நடுவே பொசுக்கென எழுந்து ராபணா என ஒரு சந்தேகம் கேட்டு வைப்பேன். துரதிர்ஷ்டவசமாக அவருக்கே முக்கால்வாசி நேரம் அதே சந்தேகம் இருந்து தொலைத்திருக்கும். யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என நம்பி வந்த அவரை நான் கழுத்தை அறுப்பது போல கேள்வி கேட்க அவருக்கு என்னைப் பிடிக்காமல் போயிற்று.

அக்கல கட்டத்திலும் எனது சக மாணவர்கள் என்னை சந்தேகம் கேட்பதைத் தவிர்க்குமாறு பல முறை ஆலோசனை கூறியுள்ளனர். அதையெல்லாமா நான் கேட்பேன்?

சரி, அதெல்லாம் முடிந்து போன கதை. இப்போது வலைப்பூக்களில் மட்டும் என்ன வாழ்கிறதாம். போலிப் பிரச்சினையின் போது அவனை வெளிப்படையாக எதிர்க்காமல் இருக்குமாறு பலர் நல்லெண்ணத்தினாலே கூட கூறியுள்ளனர். [இதில் போலியின் நாடறிந்த அல்லக்கைகளை நான் சேர்க்கவில்லை]. இருப்பினும் அவன் என்னை இணையத்திலிருந்து துரத்தும் முயற்சி செய்தான் என்பதற்காகவே அவனை எதிர்த்து போராடினேன். வெற்றியும் கிடைத்தது. ஆனால் அது பற்றி வேண மட்டும் எழுதி விட்டதால் அது பற்றி மேலே இங்கு பேச்சு இல்லை.

இருப்பினும் எந்தப் பழக்கமானாலும் அதற்கு இரையாகாமல் இருப்பது முக்கியமே. ஆகவே எனது வலைப்பூ நடவடிக்கைகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் உள்ளேன். முதலில் செய்த காரியம் அனானி பின்னூட்டங்களை மறுக்கும் செட்டிங்ஸை செய்ததுதான். அடுத்தபடியாக எனது ஹிட் கவுண்டரை தாட்சணியம் இன்றி நீக்கினேன். அது இருந்ததால் தேவையின்றி ஹிட்களின் என்ணிக்கையை மெயின்டெயின் செய்வதற்காக பல பதிவுகள் போட வேண்டியிருந்தது, அப்போதுதானே பதிவர்கள் பார்வையில் இருக்கலாம், ஹிட்களும் ஏறும்.

திடீரென ஒரு ஞானோதயம், அவ்வாறு வரும் ஹிட்களை வைத்துக் கொண்டு நாக்கைக் கூட வழிக்க முடியாது என்று. ஆகவே அதைத் தூக்குவதில் ரொம்பத் தயக்கமெல்லாம் இல்லை. தமிழ்மண விருத்துக்குக் கூட 3 பதிவுகளை சப்மிட் செய்திருந்தேன். ஆனால் அவற்றை கேன்வாஸ் செய்து ஒரு சிறு கோடிகூட எங்குமே காட்டவில்லை. இருந்தும் மூன்றுமே முதற் சுற்றைத் தாண்டின. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த மூன்று பதிவுகளில் ஒன்றான பள்ளிகளில் தர்ம ஹிந்தி பற்றி நானே மறந்து விட்டதால் எனது ஓட்டைக் கூட அதற்கு போடவில்லை. திருநங்கைகள் சம்பந்தமான ஒரே ஒரு பதிவு இரண்டாம் சுற்றையும் தாண்டி தமிழ்மண ஜூரியிடம் சென்ற்து. கடைசி தேர்வில் அது வரவில்லை. இருந்தாலும் இவ்வளவு தூரம் சென்றதே அதிகம். பை தி வே மூன்றாம் பதிவு அமிதாப்பின் பாஆஆ படம் குறித்து.

இப்போது எனக்கு நானே வைத்துக் கொண்ட சில சுயக்கட்டுப்பாடுகள் பற்றிக் கூறுவேன்.

பதிவுலகுக்கு வந்ததன் முக்கிய நோக்கமே எனது தமிழை மேம்படுத்தி, தமிழ் மொழிபெயர்ப்பு விஷயங்களில் நல்ல பலன் பெறுவது. அது நிறைவேறி விட்டது. இனிமேல் பதிவுக்காகவே பதிவு என்ற நிலை எனக்கு இல்லை. ஏதாவது கூற வேண்டிய விஷயம் இருந்தால் மட்டும் பதிவிட்டால் போதும். முக்கியமான விஷயங்களாக இருக்க வேண்டும், அதாகப்பட்டது, இஸ்ரேல், சோ, துக்ளக் பத்திரிகை, வலதுசாரி ஆதரவு, ஈவேராவை கட்டுடைத்தல் முதலியன. மொக்கைகளும் அவ்வப்போது வரும்.

இருக்கவே இருக்கின்றன கேள்வி பதில் பதிவுகள். அவற்றிலும் ஒரு சிறிய மாற்றம். அவை வியாழனன்றுதான் வரும், முப்பது கேள்விகளுக்கு மிகாமல் இருக்கும். அதிகப்படியான கேள்விகள் அடுத்த பதிவின் வரைவுக்கு சென்று விடும், ஆகியவையே அந்த மாற்றங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

16 comments:

  1. நன்றி ஆனால் நான் எதிர்பார்த்த விஷயம்/அறிவுரை வேறு ஒன்று

    எனக்குத் தெரிந்த பல நண்பர்களால் இணையப் பயன்பாட்டை கட்டுப் படுத்த முடிய வில்லை. சிலர் பதிவிற்கு, சிலர் த்விட்டேருக்கு, சிலர் முகப் புத்தகம் விளையாட்டு போதையில் இருக்கிறார்கள்.
    அவர்கள் அன்றாட இணையப் பயன்பாடு குறித்து சுயக் கட்டுப்பாடு கொண்டு வர என்ன செய்ய வேண்டும்.
    இனைய அடிமை ஆகாது இருக்க என்ன என்ன வழி முறைகள் கையாள வேண்டும்.

    உங்கள் மகன்/மகள் பேரன் பேத்திகள் இந்த இணையப் பயன்பாடு விசயத்தில் எவ்வாறு உள்ளார்கள்.

    நீங்கள் இணையப் பயன்பாடு குறித்து உங்கள் மனைவி, மகள், பேரன் பேத்திகள், சொந்தக் காரர்களிடம் திட்டு வாங்கியது உண்டா

    ReplyDelete
  2. சிவசங்கரி அவர்கள் எழுதிய ஒரு நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது என்னும் ஒரு புத்தகம் சுவாரசியமானது. அது இணையம் பிரபபலமாகாத எண்பதுகளில் வந்தது (என நினைக்கிறேன்). ஆனால் கருத்து என்னவோ ஒன்றேதான்.

    கெட்ட பழக்கங்கள் லகுவாக படிந்து விடும், ஆனால் அதை நீக்க படாத பாடு பட வேண்டும். அம்மாதிரி பல கெட்ட பழக்கங்களை அவர் அப்போது முன்கூட்டியே அடையாலம் காண வழிகாட்டினார். அப்புத்தகம் கிடைத்தால் பார்க்கவும். என்ன, இணையத்தையும் அம்மாதிரி பழக்கங்களுள் ஒன்றாக சேர்க்க வேண்டியிருக்கும் அவ்வளவே.

    அவ்வப்போது நம்மை நாமே தாட்சணியமின்றி பல சங்கடமான கேள்விகள் கேட்க வேண்டியிருக்கும்.

    நான் ஃபேஸ்புக், ஆர்க்குட், லிங்க்ட் இன் ஆகிய தளங்களுக்கு செல்வதே இல்லை. பல நட்பு அழைப்புகள் அப்படியே டிராஷுக்கு போய் விடுகின்றன.

    ட்விட்டர் மட்டும் நான் புதிதாக பதிவிடும்போது செய்தியறிவிப்புக்காக பயன்படுகிறது.

    நமக்கு இதனால் ஏதேனும் பலன் உண்டா எனப் பார்த்தாலே பல பழக்க வழக்கங்கள் தானாகவே கழன்றுகொள்ளும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. //வியானன்று// note it

    ReplyDelete
  4. அந்த ஹிட் கவுண்டரைத் தூக்கியது ரொம்ப நல்லது சார். பார்க்கவே சகிக்காத "ஹிட் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்" என்று ஒரு தேவையில்லாத பதிவு போட்டு மொக்கை போடுவது இனி இருக்காது என்று நம்புகிறேன்.

    இணையம் கெட்ட பழக்கம் அல்ல. அதில் எதை நாம் பார்க்கவிரும்புகிறோமோ அதைத் தான் நாம் பார்க்கிறோம். கெட்டதை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் அது கெட்டப்பழக்கம் தான். எ.டு., இணையத்தில் விரவிக்கிடக்கும் போர்னோகிராஃபி உடலுக்கு கெடுதி தரும், தமிழ்வலையுலகில் விரவிக்கிடக்கும் மார்க்ஸ்வாத பெரியாரிய கருத்துக்கள் மூளைக்கு கெடுதி தரும்.

    ReplyDelete
  5. பிராமணர்கள் ஓட்டு எல்லாம் திமுகவுக்குத்தான் என்று பிராமணர்கள் முடிவெடுத்தால் கருணாநிதி, தனது பிராமண எதிர்ப் புக் கொள்கையையும், கடவுள் மறுப்புக் கொள்கையையும் மாற்றிக் கொள்வாரா? பதில்: அதோடு மட்டுமல்ல; இலவச பூணூல் திட்டம்கூட கொண்டு வருவார். (துக்ளக் 26.1.2011)

    ReplyDelete
  6. // . ஏதாவது கூற வேண்டிய விஷயம் இருந்தால் மட்டும் பதிவிட்டால் போதும். முக்கியமான விஷயங்களாக இருக்க வேண்டும்,//

    சென்னையின் பல பகுதிகளில் பல வீதிகளில் குப்பைகள், சாக்கடை அடைவுகள்,
    எல்லா வீதிகளிலும் குப்பைகளின் நடுவே கையேந்தி கடைகளின் தின் பண்ட மிச்சங்கள்,
    எங்கு சென்றாலும் இவையின் நாற்றம், குப்பையுடன் கலந்த விஷக்காற்று,
    புது கட்டிடம் எழுப்புவர்கள் மணல், இரும்பு போன்றவற்றை நடுபாதைகளில் போட்டு
    இருக்கும் இடத்தையும் ஆக்ரமிக்கும் செயல், போட்ட ஒரு வருடத்திற்குள்ளாகவே
    உடையும் தார் ரோடுகள், இத்தனைக்கும் நடுவில் கொசுத்தொல்லை, இவற்றையெல்லாம்
    பற்றி எழுதவேண்டும் என்று தோன்றவில்லையா !!

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  7. /thenkasi said...

    பிராமணர்கள் ஓட்டு எல்லாம் திமுகவுக்குத்தான் என்று பிராமணர்கள் முடிவெடுத்தால் கருணாநிதி, தனது பிராமண எதிர்ப் புக் கொள்கையையும், கடவுள் மறுப்புக் கொள்கையையும் மாற்றிக் கொள்வாரா? பதில்: அதோடு மட்டுமல்ல; இலவச பூணூல் திட்டம்கூட கொண்டு வருவார். (துக்ளக் 26.1.2011)/


    தலைவர் கலைஞர் எத்துணை முறை இது பற்றி விளக்கம் கொடுத்த பிறகும் இது தேவை அற்ற பிரச்சாரம்.

    அவர்
    பிராமணர்களுக்கு எதிரானவரில்லை,பிராமணியத்துக்குத் தான் எதிரானவர்.
    அதை புரிந்து கொண்ட நடிகர் எஸ்.வி.சேகர் கூட தலைவரை மனம் திறந்து பாராட்டுவது இதற்குச் சான்று.
    திறமைகள் இருக்கும் இடம் தேடி பரிசுகளும்,பாரட்டுக்களும் வழங்கும் பண்பாளர்.

    ReplyDelete
  8. Dear Sir,
    Some how my postings fail to appear.
    I agree with you when it come to being a maverick. I also faced similar situation in my final year mechanical engineering.When the producton tehnolgy lecurer gave a wrong information about a particular machine, I stood up and corrected him. he did not like it, obviusly. He called me to the staff room and was very sarcastic. I pointed it out to him that he was wrong and he had to agree after some of his colleagues accepted my version. result? I was failed in the pratcals as he was the examine. Moral of the story is yeverybody's conclusion
    Shankar

    ReplyDelete
  9. //Tamil Radio Gadget// எடுங்க ப்ளீஸ்

    ReplyDelete
  10. //Tamil Radio Gadget// எடுங்க ப்ளீஸ்//

    இதில் என்ன பிரச்சினை? அந்த கேட்ஜட்டில் நிறுத்துவதற்கான பட்டன் உண்டு. அதை க்ளிக் செய்தால் அது மௌனமாகி விடும்.

    நான் பதிவு போடும்போது பின்னணியில் பாட்டு கேட்பது எனக்கு பிடித்துள்ளதே, என்ன செய்வது?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. /Blogger ezhil arasu said...

    /thenkasi said...

    பிராமணர்கள் ஓட்டு எல்லாம் திமுகவுக்குத்தான் என்று பிராமணர்கள் முடிவெடுத்தால் கருணாநிதி, தனது பிராமண எதிர்ப் புக் கொள்கையையும், கடவுள் மறுப்புக் கொள்கையையும் மாற்றிக் கொள்வாரா? பதில்: அதோடு மட்டுமல்ல; இலவச பூணூல் திட்டம்கூட கொண்டு வருவார். (துக்ளக் 26.1.2011)/


    தலைவர் கலைஞர் எத்துணை முறை இது பற்றி விளக்கம் கொடுத்த பிறகும் இது தேவை அற்ற பிரச்சாரம்.

    அவர்
    பிராமணர்களுக்கு எதிரானவரில்லை,பிராமணியத்துக்குத் தான் எதிரானவர்.
    அதை புரிந்து கொண்ட நடிகர் எஸ்.வி.சேகர் கூட தலைவரை மனம் திறந்து பாராட்டுவது இதற்குச் சான்று.
    திறமைகள் இருக்கும் இடம் தேடி பரிசுகளும்,பாரட்டுக்களும் வழங்கும் பண்பாளர்./

    .)

    ReplyDelete
  12. ezhil arasu said...
    //
    அறிவுச் சான்றோரே!
    பகுத்தறிவு பகலவன் பெரியார் மிகச் சரியாய் சொல்லியிருக்கார்
    பாம்பையும் ---------------
    கண்டால் பாம்பை விட்டு விடு ஆனல் --------//


    ezhil arasu said...
    //
    தலைவர் கலைஞர் எத்துணை முறை இது பற்றி விளக்கம் கொடுத்த பிறகும் இது தேவை அற்ற பிரச்சாரம்.

    அவர்
    பிராமணர்களுக்கு எதிரானவரில்லை,...//

    இதில் இருந்து என்ன தெரியுதுனா, முட்டாள்களின் தலைவர் பெரியாரையே ஊருகாயா தான் உபயோகிச்சிருக்கிறார்,கொள்கை எல்லாம் வெங்காயம் தான், உரிக்க உரிக்க ஒன்னும் இருக்காது.

    அது சரி சொரணை இல்லாம தான டில்லில 5 மணி நேரம் மணி ஆட்டிக்கிட்டு இருந்தாரு அம்மணி தரிசனத்துக்கு.

    வெங்காயம் உரிய ஆரம்பிச்சிடுச்சு இல்ல இனி தெரியும்.

    ReplyDelete
  13. டோண்டு கேள்வி பதில் பதிவுக்கு
    1.தமிழக அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்தப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்டும் தகவலகள் கோபத்தில் உள்ள ஒரு பகுதி அரசு ஊழியரை சாந்தப்படுத்துமா?
    2.அழகிரியாருக்கு திமுகவில் உயர் பதவி வழங்கப்பட்ட பின்னர் ஸ்டாலின் செயல்பாடு என்னவாகும்?
    3.தினமலரின் செய்தி படி தமிழக அரசின் கடன் 1 லடசம் கோடியாய் விட்டதே,இதை எதிர்கட்சிகள் பிரச்சாரம் பண்ணினால் எடு படுமா?
    4. சன் டீவி வீடியோ புகழ் பெங்களுர் சாமியாரை 100 கோடி கேட்டு மிரட்டிய ஆஆஆஆஆஆஆசாமி யாரயிருக்கும்?
    5. முதல்வரின் சமீபத்திய டெல்லி விஜயம் திமுகவுக்கு சறுக்கலா?

    ReplyDelete
  14. Pl see this link & I feel its a very good analysis as to how ingenious & clever MK is and how he check-mated Porukki Makkal Katchi's founder.

    http://thatstamil.oneindia.in/news/2011/02/02/karunanidhi-once-again-has-shown-his-skill-aid0091.html

    ReplyDelete
  15. /RS said...

    .

    அது சரி சொரணை இல்லாம தான டில்லில 5 மணி நேரம் மணி ஆட்டிக்கிட்டு இருந்தாரு அம்மணி தரிசனத்துக்கு.

    வெங்காயம் உரிய ஆரம்பிச்சிடுச்சு இல்ல இனி தெரியும்.//

    காங்கிரசாரின் மாய்மாலங்கள் தலைவரின் சாணக்கியத்தனத்திற்கு முன்னால் தவிடு பொடியாவதை அவாள் அத்துணை பெரும் பார்க்க போகிறார்கள்.
    வங்கத்தில் மம்தா கொடுக்கும் நெருக்கடி,மஹாராஷ்ட்ராவில் சரத் பவார் கொடுக்கும் நெருக்கடி காங்கிரசுக்கு நன்றாகவே தெரியும்.
    திமுகவின் ஆதரவின்றி மத்திய அரசு செயல் படுவது குதிரைக் கொம்பின் கதைதான்.
    எழுதி வைத்து கொள்ளுங்கள்
    கடைசியில் காங்கிரசாரும் ,மருத்துவரும் தலைவர் கொடுக்கின்ற தொகுதிகளை பெற்று, திமுகவின் தனி ஆட்சிக்கு உறுதுணையாய் இருப்பர்.
    திமுகழகம் 134 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டி போட்டு அனைத்து தொகுதிகளிலும் பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் தலைவரை ஆறாவது முறையாக தமிழக முதல்வராய் கோலோச்ச செய்யும்.
    உலகம் உள்ளவும் திமுகழகத்தின் ஆட்சிதான் தமிழகத்தில்.இதை எந்த கொம்பன் வந்தாலும் மாற்றிட முடியாது.
    இனியொரு தடவை ஏமாற எம் தமிழ் சாதி தயாராயில்லை.
    ஸ்பெக்ட்ரம் விசாரனையில் தவறிழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவ்ர்கள் பற்றிய உண்மை விபரம் நாட்டோருக்கும் நல்லோருக்கும் தெரியவரும் போது
    திமுகழகம் முகிலை கிழித்து வெளி வரும் முழு மதியாய் ஜொலிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
    ஆதவனை கை கொண்டு மறைக்க நினைக்க வேண்டாம்.
    கூட்ட்ணியில் குழப்பம் வருமெனவும்,
    ஆட்சி மாற்றம் வருமெனவும் பகல் கனவு காண வேண்டாம்.

    ReplyDelete
  16. thank you,your message was so beautiful...........
    by saravanan.

    ReplyDelete