தில்லியில் இருக்கும்போதே கேபிள் டீவி வந்ததும் தூர்தர்ஷனுக்கு குட்பை கிட்டத்தட்டச் சொல்லிவிட்டேன், டிடி-5 தமிழ் சேவைகள் தவிர. இங்கு சென்னைக்கு வந்ததும் அதுவும் போயிந்தி. எல்லாமே கேபிள் சேனல்தான்.
அதே போல முழுநீள ஹிந்திப் படங்கள் பார்ப்பதும் கிட்டத்தட்ட போயே போயிந்தி. ஆகவே தேசீய தூர்தர்ஷனில் இந்த முழுநீள ஹிந்திப் படத்தைப் பார்த்தது ரொம்பவுமே தற்செயலான நிகழ்வுதான். விஷயம் என்னவென்றால் எங்கள் கேபிள் கனெக்ஷனில் கோளாறு, வெறுமனே தூர்தர்ஷன் தேசீய சேனல் மட்டுமே வந்தது. ஏதோ கேஷுவலாக சேனலைப்போட, அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் நடித்தா பாஆஆஆஆ படம் என்று பார்த்ததும் சரி அதில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என ஒரு ஆர்வத்தில் பார்க்க அம்ர்ந்தேன்.
இப்படம் பற்றி நான் கேள்விப்பட்ட விஷயங்கள் என்னை இதற்கு முன்னால் பார்க்க விடவில்லை. Progeria ennum நோயின் பாதிப்பால் 12 வயது கூட நிரம்பாத வோரோ என்னும் சிறுவன் 90 வயது கிழவனின் வளர்ச்சி மற்றும் சிதைவுகளைப் பெறுவது என்பது கொடுமையான செயலே. ஆகவே முதலிலேயே இது மனதை பாதிக்கும் படம் என்பது தெரிந்ததால் இதை நான் பார்க்காமலேயே தவிர்த்தேன். அம்மாதிரி தவிர்த்த படங்கள் பல, உதாரணத்துக்கு அங்காடித்தெரு, சுப்பிரமணியபுரம், பருத்திவீரன், விருமாண்டி ஆகியவை.
ஆனால் இன்று என்னவாயிற்று எனத் தெரியவில்லை. முதல் சீனில் படம் பார்க்க ஆரம்பித்த நான் அப்படியே ஆழ்ந்து அமர்ந்து விட்டேன். அப்படியே கேபிள் கனெக்ஷன் சரியானாலும் இப்படத்தை முடித்தபிறகுதான் மீதி சேனல்கள் என்பதையும் என் வீட்டம்மாவிடம் ஸ்ட்ரிக்டாகக் கூறிவிட்டு அமர்ந்தேன்.
தந்தையும் தாயும் திருமணமாகாமலே பிரிய, மகன் பிறந்ததையே தந்தை அறியாது பிற்காலத்தில் அவனைக் கண்டு ஏதோ ஒரு பாசத்தில் அவனுடன் இணைவது போன்ற கதைகள் சாகுந்தல காலத்திலிருந்தே வந்து விட்டது. இந்த பிளாட்டில் எண்ணற்றத் திரைப்படங்கள் பல மொழிகளில் வந்து விட்டன. அதற்கென்றே ஒரு தனி அப்பீலும் இருக்கிறது. ஆனால் பிறந்த மகன் இவ்வளவு பெரிய ஊனத்துடன் பிறப்பது அதிகம் முறை வந்ததில்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட குழந்தையாக வருவது நமது ஒன் அண்ட் ஒன்லி அமிதாப்தான்.
ப்ரொஜேரியா நோயால் பீடிக்கப்பட்ட இக்குழந்தை வோரோ முதலிலிருந்தே இளம் அரசியல்வாதியான அமோலைக் கவர்ந்து விடுகிறான். ஆனால் அவன்தான் தனது சொந்த மகன் என்பதை அவன் அப்போது அறியவில்லை. அக்குழந்தையின் அன்னை வித்யாவுக்குத் தெரியும் ஆனால் அவளோ அவனிடம் தன் பிள்ளையைக் காட்டுவதாக இல்லை. மற்றப்படி கதை சாதாரணமாக இம்மாதிரி பிளாட்டுகளில் உள்ளபடியே செல்கிறது. இருப்பினும் எங்குமே தேவையற்ற மெலோட்ராமாக்கள் இல்லை.
ஓரோதான் தன் மகன் என்பதை அமொல்ல் அறிந்து காட்சி ஒரு கவிதை என்றால், கடைசிக் காட்சியில் தன் அன்னை தந்தையை வோரோ சப்தபதி செய்ய வைக்கும் காட்சி ஒரு காவியம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படம் முடிந்து டைட்டில்ஸ்கள் ஓடி முடிந்தவரை பிரமித்துப் போய் அமர்ந்திருந்த நான் சற்று நேரத்துக்கு வேறு எந்தக் காட்சிகளையும் காண விரும்பாமல் டிவியை ஆஃப் செய்து விட்டு இப்பதிவை ஒரே மூச்சில் போட்டு முடித்தேன்.
இந்த வேஷத்துக்கான மேக்கப் போட்டுக் கொள்ள அமிதாப் பட்ட கஷ்டங்களைக்காண
இந்த வீடியோவைப் பார்க்கலாம். இம்மாதிரி ஒரு படத்துக்காக உயிரைக் கொடுத்து மேக்கப்புகள் போட்டு நடிக்கும் அமிதாப், கமல் (ஔவை ஷண்முகி), விக்ரம் (சேது), சூர்யா (பேரழகன்) ஆகிய கலைஞர்கள் இருக்கும்போது இந்தியத் திரைப்படத்துக்கு ஏது குறை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
8 comments:
பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.
பொதிகை அலைவரிசையில் சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு ஒழி பரப்பாகும் விளையாட்டு தொலைபேசி வினாடி வினா பார்த்து இருக்கிறீர்களா.
பார்த்து உங்கள் அபிப்ராயத்தை எழுதுங்கள்
dear dondu
THAARE JAMEEN PAR paarthathu unda
atha patriyum ezhudungalen
balasubramanyan vellore
உங்களைப் பற்றி மிக மிக உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருந்தேன். எல்லா விஷயங்களும் அறிந்தவர் என நினைத்துக் கொண்டிருந்தேன். என் எண்ணத்தில் மண் விழுந்தது. நீங்களும் ஒரு சராசரி கூடூர்/அரக்கோணம் தாண்டாத கிணற்றுத் தவளை என அறிந்து வியப்பும் வேதனையும் அடைகிறேன்.
பாஆஆ வந்து, பல சானல்களில் பல முறை ஒளிபரப்பான படம். அதற்கு இப்போது விமரிசனம் !!!!
மக்களே,
நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு அளிக்கும் / பகிரவும் முடிவெடுத்துவிட்டேன். இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs ௨௦௦௯ என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:
வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா
Nalla pakirvu. Thare zammeen par paarungal - manam innum kanakkum.
//Anonymous said...
உங்களைப் பற்றி மிக மிக உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருந்தேன். எல்லா விஷயங்களும் அறிந்தவர் என நினைத்துக் கொண்டிருந்தேன். என் எண்ணத்தில் மண் விழுந்தது. நீங்களும் ஒரு சராசரி கூடூர்/அரக்கோணம் தாண்டாத கிணற்றுத் தவளை என அறிந்து வியப்பும் வேதனையும் அடைகிறேன்.
பாஆஆ வந்து, பல சானல்களில் பல முறை ஒளிபரப்பான படம். அதற்கு இப்போது விமரிசனம் !!!!//
*********
டோண்டு சார் தான் பார்த்து ரசித்த ஒரு படத்தை பற்றி விமர்சனம் எழுதி உள்ளார்... இதில் நீங்கள் இவ்வளவு கோபப்படும் அளவுக்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை..
“பா” ஒன்றும் அவ்வளவு பழைய படமும் அல்ல.. பின் டோண்டு அவர்கள் மேல் ஏனிந்த கோபம் அனானி அவர்களே!!
//அம்மாதிரி தவிர்த்த படங்கள் பல, உதாரணத்துக்கு அங்காடித்தெரு, சுப்பிரமணியபுரம், பருத்திவீரன், விருமாண்டி ஆகியவை.//
இதெல்லாம் தான் தமிழனை தலை நிமிர வைக்கும் படங்கள் சார்.
அவற்றுக்கும் நேரம் ஒதுக்குங்கள்
//அம்மாதிரி தவிர்த்த படங்கள் பல, உதாரணத்துக்கு அங்காடித்தெரு, சுப்பிரமணியபுரம், பருத்திவீரன், விருமாண்டி ஆகியவை.//
இதெல்லாம் தான் தமிழனை தலை நிமிர வைக்கும் படங்கள் சார்.//
அங்காடி தெருவை தவிர்த்து, மற்ற படங்கள் தமிழனின் வன்முறை கலாச்சாரத்தை பறைசாற்றுவதாகவே அமைந்த படங்கள். இதில் என்ன பெருமை வாழுகிறது என்று நீங்கள் தலையை நிமிர்த்துகிறீர்களோ புரியவில்லை. பார்த்து, தமிழன் தலையை ஒரேயடியாக நிமிர்த்தி விடாதீர்கள்; அவனுக்கு கழுத்து சுளுக்கி கொள்ள போகிறது.
Post a Comment