நிரந்தர பக்கங்கள்

11/22/2005

ஜயராமன் அவர்களுக்கு என் பதில்

என்னுடைய "துணைவியின் பிரிவு" என்ற பதிவுக்கு திரு ஜயராமன் அவர்கள் இட்டப் பின்னூட்டத்திற்கான பதில் பெரிதாகி விட்டதால் இங்கு தனியாக இடுகிறேன்.

ஜயராமன் அவர்கள் கூறுவது:
"டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப் படுகிறேன்" என்று அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் blog ல் இது சம்பந்தமாக ஒன்றையும் காணோம்."

ஜயராமன் அவர்களே, நீங்கள் என்னுடைய பதிவுகளை சரியாகப் படித்தது போல் தெரியவில்லை.

வாடிக்கையாளர்களை அணுகுவது எப்படி என்று 10 பதிவுகள் போட்டுள்ளேனே. பத்தாவது பதிவுக்கான சுட்டி இதோ. இதில் மற்ற ஒன்பது பதிவுகளுக்கான சுட்டிகளும் உண்டு.

ஜெர்மன்/பிரெஞ்சு மொழிகளை பற்றி எழுதவில்லை என்று எப்படி கூறுகிறீர்கள். பார்க்க:
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)
11)
12)
13)
14)
15)
16)

"குருவி, நங்கநல்லூரில் மழை, என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்."
குருவியின் துயரம் உங்களை பாதிக்கவில்லையா? என்னை மிகவும் பாதித்தது. வீட்டின் உள்ளே உங்கள் கண்ணெதிரில் வெள்ளம் மெதுவாக நுழைந்ததை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்தேன், எழுதினேன் என்ன தவறு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

31 comments:

  1. அன்புள்ள டோண்டு,

    இதுக்கெல்லாம் எதுக்கு ஒரு தனிப்பதிவு.

    குற்றம் சொல்றவங்க சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க.

    வலை பதியறதே நாம் 'நினைக்கிறதை' எழுதறதுக்காகன்னு நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. நன்றி துளசி அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. ஐயா,
    நான் தற்போது அலையான்ஸ் பிரான்ஸே யில் பிரென்ச் ப்ரி-டிப்லோம் படித்து வருகிறேன். தாங்களக்கு கிடைத்த ஆசிரியைப் போல் எனக்குப் ஒரு ஆசிரியை அமைந்துள்ளார். உங்களது பதிவுகளைப் படித்தவுடன் நானும் அடுத்த அடுத்த லெவல்களை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேம்படுகிறது. நானும் ஒரு பொறியியற் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  4. " என்னால் எழுதாமல் இருக்க முடியாமல் இருப்பதால், எழுதுகிறேன்" - நகுலன்.

    ReplyDelete
  5. வினையூக்கி அவர்களே,
    தாங்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்களுக்கு சில டிப்ஸ்.
    1. பாடத்தை ஆசிரியை எடுக்கும் வரை காத்திருக்காதீர்கள். நீங்களே அதை முதலில் படித்து பயிற்சிகளையெல்லாம் எழுதுவது மூலம் செய்யவும். இதே போல முழு புத்தகத்தையும் முடித்து விடவும். பிறகு வகுப்பு என்பது உங்கள் சந்தேகங்களை நீக்கும் இடம் மட்டுமே என்று ஆகிவிடும்.
    2. டிக்டேஷனில் கவனம் செலுத்தவும். 3. ஒரு சொல்லை கற்றுக் கொள்ளும்போது அது ஆண் பாலா அல்லது பெண்பாலா, அதன் பன்மை எவ்வாறு இருக்கும் என்பதையெல்லாம் தெளிவாக மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
    4. அதே போல வினைச் சொற்களின் காஞ்சுகேஷனிலும் கவனமாக இருக்க வேண்டும்.
    5. நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து படிக்க வேண்டும். எளிமையாக்கப்பட்ட பிரெஞ்சு புத்தகங்களைத் தவிர்க்கவும். ஆல்பற் காம்யூவின் பிரெஞ்சு எளிமையானது. அவரை போன்ற எழுத்தாளர்களை படிக்கவும்.
    6. பிரெஞ்சில் பேசுவதில் கூச்சமே இருக்கக் கூடாது. ஆசிரியையுடன் பேசும்போது மற்ற மொழிகளைத் தவிர்க்கவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. "" என்னால் எழுதாமல் இருக்க முடியாமல் இருப்பதால், எழுதுகிறேன்" - நகுலன்."

    I think, therefore I am - Descartes

    I want to climb Mount Everest because it is there. - a mountaineer

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. டோண்டு சார்,

    துளசி சொல்றாப்பல இந்த blogங்குறதே நாம நெனச்சத எழுதறதுக்குத்தானே.

    மத்தவங்க படிச்சி பின்னூட்டம் இட்டா அதுவும் நம்ம கருத்துகளோட ஒத்துப்போறதா இருந்தா சந்தோஷம். இல்லாட்டி பின்னூட்டத்தையே எடுத்து போட்டுட்டு நம்ம வேலைய பாக்கறதுன்னு போய்ட்டா டென்ஷனே இல்ல..

    என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  8. "இல்லாட்டி பின்னூட்டத்தையே எடுத்து போட்டுட்டு நம்ம வேலைய பாக்கறதுன்னு போய்ட்டா டென்ஷனே இல்ல..
    என்ன சொல்றீங்க?"

    நான் அவ்வாறு நினைக்கவிலை ஜோசஃப் அவர்களே. ஜயராமன் அவர்கள் இட்டப் பின்னூட்டம் என்னை திரும்ப பார்க்க வைத்தது. சுட்டிகளை அடுக்கினால் அவற்றின் எண்ணிக்கை 26 வந்தது. எனக்கே ஆச்சரியம், இவற்றைப் பார்த்து. இன்னும் சில சுட்டிகள் சேர்க்கப்படவில்லை. காரணம் அவற்றுக்கு ஹைப்பர் லிங் கொடுக்க சோம்பலாகி விட்டது.

    வினையூக்கி அவர்கள் என்னுடைய பிரெஞ்சு அனுபவத்தை உபயோகித்து தன்னுடைய முயற்சியில் வெற்றி பெறுவார் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது.

    என்ன, எல்லா சுட்டிகளையும் படிக்க நேரம் செலவாகும் அவ்வளவே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. ரொம்ப உணர்ச்சிவசப்படுகிறீர்களே! எதற்கு, பதிலுக்கு பதில், கேள்விக்கு கேள்வி இதெல்லாம் கொஞ்சும் வயசில செஞ்சா சரி, கொஞ்சம் வயசாயி செஞ்சா, எப்படி? விடுங்க கிடக்குது கழுதைன்னு தொடர்ந்து உங்க காரியங்களை செஞ்சுகிட்டு இருங்க, என்ன நான் சொல்றது?

    ReplyDelete
  10. என் விமர்சனத்திற்கு மதிப்பு கொடுத்து பதில் எழுதியதற்கு மிக்க நன்றி. தங்கள் blog பதிவுகளில் உபயோகமான விஷயங்கள் அறவேயில்லை என்று நான் கூறவில்லை. அம்மாதிரி அபிப்ராயம் வந்திருந்தால் திருத்திக்கொள்ளவும்.
    தங்கள் blog பதிவுகளில் உபயோகமான விஷயங்களும் உண்டு. மற்ற (ஊர்வம்பு, சுயபுராணம், பழைய ஞாபக அசைபோடுவது என்றெல்லாம் சொன்னால் சண்டையாகி விடுமோ?) விஷயங்களும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

    எதை வேண்டுமானாலும் நீங்கள் எழுத முழு உரிமை உண்டு. அதை நான் யார் கேட்க? ஆனால், தங்கள் blog முகப்பு வரிகளிலிருந்து அவை விலகியவை என்பதைத்தான் கூற முற்பட்டேன். அதை திருத்திக்கொள்வதும், அல்லாததும் தங்கள் இஷ்டம்.

    இது குற்றம் கூறுவதில்லை. விமர்சிப்பது. “குற்றம் சொல்றவங்க சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க” என்பதற்கு தாங்கள் “ஆமாம்” போட்டிருப்பதை பார்த்து வருத்தப்படுகிறேன். விமர்சனம் வேண்டாம். பாராட்டு மட்டும் வரட்டும் என்ற தங்களின் மனப்பான்மை சரியில்லை.

    தங்களிடம் இருக்கும் அளவிற்கு என்னிடம் நேரமில்லாததால் இதை மேலும் தொடர விழையவில்லை. தங்களி்ன் பதிவு தொடரட்டும். உபயோகமாயிருந்தால் படிக்கிறேன். பாராட்ட வாய்ப்பிருந்தால் பதிகிறேன்.

    வணக்கம்.

    ReplyDelete
  11. நன்றி ஐயா!!! தங்களது வாழ்த்துக்களுக்கு

    ReplyDelete
  12. ஜயராமன் அவர்களே, துளசி அவர்களுக்கு நன்றி கூறியது பின்னூட்டமிட்டதற்கு மட்டுமே. ஜோசஃப் அவர்கள் எழுதியதையும் அவருக்குக் கொடுத்த பதிலையும் பார்க்கவும்.
    '"இல்லாட்டி பின்னூட்டத்தையே எடுத்து போட்டுட்டு நம்ம வேலைய பாக்கறதுன்னு போய்ட்டா டென்ஷனே இல்ல..
    என்ன சொல்றீங்க?"
    "நான் அவ்வாறு நினைக்கவிலை ஜோசஃப் அவர்களே."

    "தங்கள் blog பதிவுகளில் உபயோகமான விஷயங்கள் அறவேயில்லை என்று நான் கூறவில்லை. அம்மாதிரி அபிப்ராயம் வந்திருந்தால் திருத்திக்கொள்ளவும்."

    அப்படீங்கறீங்க? ஆனால் நீங்கள் இதையும் எழுதினீர்களே?
    "டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப் படுகிறேன்" என்று அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

    ஆனால், உங்கள் blog ல் இது சம்பந்தமாக ஒன்றையும் காணோம்.
    உதாரணத்திற்கு, நீங்கள் French / german பாஷையைப் பற்றி எழுதலாமே? ஏன், சிறிய பாடங்கள் கூட குடுக்கலாம்."

    "ஒன்றையும் காணோம்" என்பதற்கு வேறு எவ்வாறு பொருள் கொள்வது? பிரெஞ்சு/ஜெர்மன் பாஷைகளைப் பற்றி போட்ட 16 பதிவுகள், மொழிபெயர்ப்பாளராக வாடிக்கையாளர்களை எதிர்க்கொள்வது பற்றி 10 பதிவுகள் எல்லாவற்றையும் "ஒன்றையும் காணோம்" என்ற சொல்லாடல் மூடி மறைத்து விட்டதே. நான் கூறாமல் விட்டது என்னுடைய ஹைப்பர் லிங்குகள்.

    அவற்றை பார்க்க:

    1)
    2)
    3)
    4)
    5)
    6)
    7)
    and so on.

    இருப்பினும் உங்கள் பின்னூட்டத்தை வரவேற்றுதான் நான் இப்பதிவை இட்டேன்.
    இப்போது நான் புதிதாகக் கற்றுக் கொண்டது இதுதான். எப்போதும் எல்லா கருத்துக்களுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதே அது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. வெளிகண்டநாதர் அவர்களே,
    அப்படி எனக்கு என்ன வயசாகி விட்டது? இப்போதுதானே சமீபத்தில் 1946-ல் பிறந்தேன்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. “உங்களுடைய blog ல்” என்று ஒருமையாக சொன்னது இந்த குருவி blog பற்றி மட்டும்தான். அதனால் நான் “ஒன்றையும் காணோம்” என்றது சரிதான்.

    “துபாஷி வேலையில் தமாஷ்” முதலான அபத்தமான (வார்த்தைப்பிரயோகத்திற்கு மன்னிக்கவும்) blog களை தாங்கள் உபயோகமான பதிவுகளாக முன்னிறுத்துவது நல்ல தமாஷ்.

    நகைச்சுவைக்கு நன்றி.

    ReplyDelete
  15. "உங்களுடைய blog ல்" என்று ஒருமையாக சொன்னது இந்த குருவி blog பற்றி மட்டும்தான். அதனால் நான் "ஒன்றையும் காணோம்" என்றது சரிதான்."

    குருவி பற்றி எழுதியது பதிவு அல்லது post ஆகும். கண்டிப்பாக blog என்று கூற முடியாது. Blog எனப்படுவது எல்லா பதிவுகளும் சேர்ந்தது.

    அப்படியே உங்கள் ஆட்டத்திற்கே வந்தாலும், எல்லாவற்றிலும் விஷயஞானம் சம்பந்தமாகவே எழுதிக் கொண்டிருக்க முடியுமா?

    அதிலும் குருவியின் துயரத்தைப் பற்றிய இப்பதிவு ஒரு வித மொழிபெயர்ப்பே ஆகும். இது பற்றி எங்கள் மொழிபெயர்ப்பாளர் போர்டலில் எழுதியதைப் பார்க்க: http://www.proz.com/topic/39221

    "துபாஷி வேலையில் தமாஷ் முதலான அபத்தமான (வார்த்தைப்பிரயோகத்திற்கு மன்னிக்கவும்) blog களை தாங்கள் உபயோகமான பதிவுகளாக முன்னிறுத்துவது நல்ல தமாஷ்."

    அது எவ்வளவு ஸ்பான்டேனியஸாக வந்தது என்பதை உணர நீங்கள் அங்கே இருந்திருக்க வேண்டும். அதிலும் "பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்வது" என்ற ஒரே விதமான வாக்கியப் பிரயோகம் எனக்குத் தெரிந்து 6 மொழிகளில் ஒரே விஷயத்தைக் கூறுவது என்பது அடிக்கடி காணக் கிடைக்காது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. Blog அல்ல post என்று கூற வேண்டும் என அறிந்து கொண்டேன். நன்றி. Blog என்ற வார்த்தையை post என்கிற பொருளிலேயே உபயோகப்படுத்தியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். (இது என் வாழ்நாளில் முதல் பின்னூட்டமானதால் இக்குழப்பம் நேர்ந்தது) blog கள் என்ற வார்த்தை நான் உபயோகித்திருப்பதும் இத்தவறான அடிப்படையை சுட்டிக்காட்டும்.

    நன்றி. வணக்கம்.

    ReplyDelete
  17. "Blog என்ற வார்த்தையை post என்கிற பொருளிலேயே உபயோகப்படுத்தியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்."
    பரவாயில்லை ஜயராமன் அவர்களே. உங்கள் முதல் பின்னூட்டத்தை வரவேற்றேன். அதற்கு பதில் கூறும் முயற்சியில் என்னுடைய பழைய பதிவுகளை வகைபடுத்த முடிந்தது. அதற்கு நான் உங்களுக்கு நன்றிதான் கூற வேண்டும்.

    அது இருக்கட்டும், என்னுடைய ஹைப்பர் லிங்குகளைப் பாருங்கள். அதிலும் சம்பந்தப்பட்ட பின்னூட்டங்களைப் பார்க்கத் தவறக்கூடாது. உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. டோண்டு சார்,

    நான் உங்களுக்கு வருகிற பின்னூட்டங்களை கண்டுகொள்ளாமல் போய்விடுங்கள் என்று சொல்லவில்லை.

    விளக்கம் கேட்டு வருகின்ற பின்னூட்டங்களுக்கு விளக்கம் தரவேண்டும். அதனால் பதிவின் தரமே உயர வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

    ஆனால் ஜயராமன் அவர்களின் பின்னூட்டத்திலிருந்த சில வார்த்தைகள் நீங்கள் அல்ல யாராயிருந்தாலும் மனதை தைப்பதாக நான் உணர்ந்தேன். அதனால்தான் அப்படிப்பட்ட பின்னூட்டங்களை நீக்கிவ்விட்டு போய்விடுங்கள் என்றேன்.

    ஆனால் இப்போது ஜயராமன் அவர்களே அவருடைய பின்னூட்டத்துக்கு விளக்கமளித்துவிட்டதால் 'மறப்போம் மன்னிப்போம்' என்று விட்டுவிடுவதுதான் நல்லது.

    சர்ச்சைகளிலும், வாக்குவாதங்களிலும் நல்லது நடந்தால் சரிதான். நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது என்பார்களே அது போல..

    ReplyDelete
  19. இது ஜயராமனுக்கு,


    மிஸ்டர் ஜயராமன்..

    நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தேன். நாம் எழுதுவதெல்லாம் சமுதாயத்தில் ஒரு மாற்றம் கொண்டுவரும் என்று எதிர்பார்க்க முடியாது.

    வலைப்பூக்களின் சிறப்பம்சமே நாம் நினைத்ததை அப்படியே எழுத்தில் வடித்து பிறருடைய பார்வைக்கு வைக்க முடியும் என்பதுதான். அதில் இதைத்தான் எழுத வேண்டும்,எழுதக் கூடாது என்றில்லை..

    அது ஊர் வம்பானாலும், நான் தொடராக எழுதிக்கொண்டிருக்கும் என்னுடைய கடந்த கால நினைவுகளாயிருந்தாலும், அரசியலானாலும் சரி,எல்லாம் நம்முடைய எண்ணங்களின் வடிகால்தானே..

    துளசி கோபால் நியூஜிலாந்தைப் பற்றி எழுதுகின்ற தொடர் உங்களுக்கு அவசியமோ இல்லையோ எனக்கு அவசியமாய் படுகிறது. ரசிக்கின்றேன். அதுபோல் தமிழ்மண திரட்டியில் எத்தனை, எத்தனையோ Colourfulஆன வலைப்பூக்கள் இருக்கின்றன..எல்லாமே ஒவ்வொருவிதத்தில் அவசியமானவைதான்.

    Just go and enjoy. Don't worry whether it is useful to you or not.

    ReplyDelete
  20. நீங்கள் கூற வந்ததை புரிந்து கொண்டேன் ஜோசஃப் அவர்களே. ஜயராமன் அவர்களும் என் மனதைப் புண்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டார் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

    ஜயராமன் அவர்களின் இப்பதிவு நன்றாக உள்ளது. பார்க்க: http://ramakatha.blogspot.com/2005/03/man-or-god.html

    அவரிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. சார் எப்பவுமே காமெடி உங்கள் பொழுது போக்கா? :)

    ReplyDelete
  22. "சார் எப்பவுமே காமெடி உங்கள் பொழுது போக்கா? :)"

    துபாஷி தமாஷை குறிக்கிறீர்களா அல்லது எனது மாறா இளமையை பற்றி பேசுகிறார்களா?

    துபாஷி தமாஷை தூக்கியடிக்கும் விஷயங்கள் என்னிடம் உள்ளன.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  23. //மாறா இளமையை //
    அட பார்றா இவரை...மறுபடியும்!

    ReplyDelete
  24. நன்றி நாட்டாமை அவர்களே. மனம் பிறழ்ந்தவர்கள் எழுதுவதையெல்லாம் அலட்சியப்படுத்துவதே நன்று.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  25. திரு. டோண்டு அவர்களுக்கு,

    திரு. போலியன் அவர்களின் தரக்குறைவான வார்த்தைகளுக்கு நான் ஒருவிதத்தில் காரணம் என்று நினைத்து வேதனைப்படுகிறேன்.

    தாங்கள், வலைப்பூக்களில் என்னைவிட அனுபவஸ்தர். தாங்கள் திரு. போலியனின் விமர்சனங்களுக்கு பதில் எழுதுவது வியப்பாக இருக்கிறது.

    தாங்களை இம்மாதிரி விமர்சனங்களை விலக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி.

    ஜயராமன்.

    ReplyDelete
  26. ஜயராமன் அவர்களே,

    உங்கள் மேல் தவறேதும் இல்லை. ஒன்றை கவனிக்கவும். மனம் பிறழ்ந்தவர்கள் கொடுக்கும் பின்னூட்டங்களை நான் இங்கு லட்சியமே செய்யவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட நண்பர்களுக்குத்தான் பதிலளிக்கிறேன்.

    மனம் பிறழ்ந்தவனைப் பற்றி நான் போட்ட பதிவுகள் பின்வருமாறு.
    1)
    2)
    3)

    அதெல்லாம் இருக்கட்டும், எல்லாவற்றுக்கும் ஆரம்பம் என்று இருக்க வேண்டுமே என்று கேட்கிறீர்களா? அது இப்பதிவில்தான்.

    எல்லா பதிவுகளுக்கும் எக்கச்சக்கப் பின்னூட்டங்கள். எல்லாவற்றையும் பார்த்தால் மனம் பிறழ்ந்தவனைப் பற்றி புரிந்து கொள்ளலாம். நான் எப்போதெல்லாம் மற்றத் தமிழ்பதிவுகளில் எல்லாம் பின்னூட்டமிடுகிறேனோ, அதன் நகல் என் இப்பதிவில் வரும். நான் இதை உங்களுக்கு கூறுவதன் நோக்கமே உங்கள் பதிவுகளிலும் போலி டோண்டு என் பெயரில் வந்து பின்னூட்டமிடுவான். என் போட்டோவுடன் என் டிஸ்ப்ளே பெயரையும் போடுவான். எலிக்குட்டியை பெயர் மேல் வைத்தால் கீழே சரியான ப்ளாக்கர் எண் தெரியும். நீங்கள் அதர் ஆப்ஷ்ன் வைத்திருக்கும் பட்சத்தில் என் ப்ளாக்கர் எண்ணையும் எலிக்குட்டி வைத்தால் தெரியச் செய்வான் ஆனால் அப்பின்னூட்டத்தில் என் புகைப்படம் இருக்காது.

    நிற்க, உங்கள் ராமர் பற்றிய பதிவில் நான் இட்டப் பின்னூட்டத்தை பார்த்தீர்களா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. Dear Dondu,

    Thanks for your email.

    I appreciate your clarifications.

    I suggest that you simply delete such abusive mails without giving prominence to these (which is what they want).

    Today, I have written to Blog Support (support@blogspot.com) and got a confirmation. I wrote to them about this profile spamming abusive and vulgar comments.

    I request you to kindly also write to them.

    My belief is that if about 10 guys write to them, it will definitely have an impact.

    If this continues, I plan to write to the police commissionaire, Chennai also.

    This will stop this nuisance forever, I am sure.

    Thanks

    Jay

    ReplyDelete
  28. உங்களுக்கு நேரமே சரியில்லை நாட்டாமை அவர்களே. போலி டோண்டு இதற்கு மேலும் மோசமாகப் பேசக் கூடியவன். ஜாக்கிரதை, அவ்வளவுதான் கூற முடியும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. //அப்பா சாமி
    நீ யாரோ,ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். யாரா வேணும்னா இருந்துட்டுபோ.உன்னை பத்தி நான் எழுதலை.எனக்கு எதுக்கு பொல்லாப்பு?ஆளவிடு ராசா//
    நல்ல முடிவு நாட்டாமை அவர்களே. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது தெரிந்ததுதானே.

    "கட்டைல போறவன் என்னென்ன எழுதுறான் பாருங்க???"
    ஆமா, இவர் மட்டும் மெத்தையில் போவாராமா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  30. வினையூக்கி அவர்கள் பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://vinaiooki.blogspot.com/2006/03/blog-post.html
    Maintenant est-ce que vous pouvez parler francais couramment? Je vous souhaite un tres bon avenir.

    Je posterais une copie de ce commentaire dans mon poste http://dondu.blogspot.com/2005/11/blog-post_22.html

    Cordialement,
    Dondu N.Raghavan

    ReplyDelete