இப்போதுதான் போலி டோண்டு வந்து கலாட்டா எல்லாம் செய்து போனார். அதே நபர் இப்போது வேறு அவதாரத்தில் வந்திருக்கிறார். அனானிப் பின்னூட்டங்களை அனுமதிக்கும் பதிவுகளில் தன் கைவரிசையைக் காட்டுகிறார்.
அதில் இருக்கும் வசதியைப் பயன்படுத்தி என் பெயரை என் சரியான ப்ளாக்கர் எண்ணின் கீழ் வருமாறு செய்கிறார். பிறகு இழிவானப் பின்னூட்டங்கள் இடுகிறார். என் நண்பர்கள் முகமூடி, எஸ்.கே., வசந்தன் மற்றும் குழலி ஆகியோர் இச்சதியை எளிதில் கண்டு கொண்டனர். எனக்கு அவ்வளவாகப் பழக்கம் இல்லாத உம்மாண்டியும் என் மேல் பாசத்துடன் செயல்பட்டார்.
உண்மையிலேயே என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் மகர நெடுங்குழைகாதன் என்னை இம்முறையும் இம்மாதிரி நண்பர்களை அழைத்து என்னைக் காத்தான். எனக்காக பெடியன்கள் பதிவில் ஆண்டவனிடம் வேண்டிய எஸ்.கே. அவர்களே, மிக்க நன்றி. மற்றவருக்காக வேண்டிய உங்களுக்கு என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் மகர நெடுங்குழைகாதன் ஒரு குறையும் வைக்க மாட்டான்.
என் நண்பர்களுக்கு இன்னொரு வேண்டுகோள். இந்த போலி டோண்டு என் நிம்மதியைக் குலைக்க முடிவு செய்து விட்டார். நானும் அவரை என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் மகர நெடுங்குழைகாதன் துணையுடன் எதிர் கொள்ள முடிவு செய்துள்ளேன்.
இதில் உங்கள் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.
முதலாவதாக உங்கள் பதிவுகளில் அனானி பின்னூட்டங்களைச் செயலிழக்கச் செய்யவும். இது மிக முக்கியம்.
இரண்டாவதாக என் வலைப்பூவில் நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் இந்த உரலின் கீழ் அவற்றைச் சேமிப்பேன்.
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அங்கு வந்து உங்கள் பதிவில் வந்த பின்னூட்டம் இருக்கிறதா என்று பார்க்கவும். அங்கும் அது இருந்தால் ப்ளாக்கர் எண்ணை எலிக்குட்டியின் மூலம் சரிபார்க்கவும்.
இன்னும் ஏதாவது தோன்றினால் அவற்றையும் இப்பதிவின் பின்னூட்டமாக எழுதுகிறேன்.
சிரமத்திற்கு மன்னிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
5 hours ago
24 comments:
I found a comment in your name, but by the ghost at
http://manikoondu.blogspot.com/2005/06/242526.html
நன்றி முகமூடி அவர்களே. மணிக்கூண்டின் அப்பதிவில் மூக்கு சுந்தர் அவர்கள் அது நான் கொடுத்தப் பின்னூட்டம் என நினைத்து பதில் வேறு கொடுத்திருக்கிறார். இதுதான் அந்த போலி நபர் எதிர்பார்ப்பது.
முதலில் கலக்கமடைந்தாலும் நீங்கள், எஸ்.கே. ஆகிய நண்பர்கள் இருக்கும்வரை எனக்கு பெரிய அநீதி நடந்து விடாது என உறுதியாக நம்புகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள ராகவன்,
உங்களை வெறுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி வெறுத்துக் கொண்டிருப்பவர்கள்,
நீங்கள் என்ன தான் சொன்னாலும் கருத்தை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. அவர்களைப்
பொறுத்தவரை, நீங்கள் ஒரு 'ஜாதி வெறி பார்ப்பனன்'..அவ்வளவு தான். உங்களைப் புரிந்து
கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள். நல்லவர்கள் ஜாதி மத பேதங்களற்று எல்லா மாநிலத்திலும்
நாட்டிலும் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை எனக்கு இன்னமும் இருக்கிறது. அவர்களும் புரிந்து
கொள்வார்கள். இந்த எலிக்குட்டி, புலிக்குட்டியை எல்லாம் ஒதுக்கி விட்டு, உங்கள் வேலையை
நீங்கள் பாருங்கள். உங்களது சக்தியை இது போன்று விஷயங்களில் எல்லாம் வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள்.
- அழியா அன்புடன் அருண்
நன்றி அருண் அவர்களே. நீங்கள் கூறுவது உண்மையே. ஆனால் தமிழ் வலைப்பூக்களில் எழுதுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழில் இப்போது நான் வேகமாக தட்டச்சு செய்ய முடிகிறது. தமிழ் எழுத்துருக்கள் வருவதற்கும் என்னுடைய வாடிக்கையாளர்கள் என்னிடம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு வேலைகள் கொடுப்பதற்கும் ஏதோ ஒன்றுக்காகவே இன்னொன்று நடந்தது போல ஆகி விட்டது.
அல்வாசிடி போன்ற நண்பர்களிடம் எவ்வளவு கேட்டு கொண்டாலும் அனானிப் பின்னூட்டங்களைச் செயலிழக்கச் செய்ய மாட்டேன் என்கிறார்கள். அப்படியே செயலிழக்கச் செய்த தளங்களிலும் ப்ளாக்கர் எண்ணைச் சரி பார்க்க மாட்டேன் என்கிறார்கள். என்னதான் செய்வது எனப் புரியவில்லை.
எனக்கு தொல்லை தருபவர் ஒரே ஒரு நபர். அவர் யார் என்பது எனக்கும் இன்னும் பலருக்கும் தெரியும். அந்தப் பேர்வழிக்காக களத்தை விட்டு ஓட நான் விரும்பவில்லை. மீதி கடவுள் விட்ட வழி.
மணிக்கூண்டின் பதிவில் எனக்காக நீங்கள் இட்டப் பின்னூட்டம் மனதுக்கு மிக ஆறுதலாக இருந்தது. நேரம் கிடைத்தால் பெடியன்கள் பதிவில் போய் பாருங்கள். எஸ்.கே. அவர்களும் உம்மாண்டி அவர்களும் எனக்காக எவ்வளவு மெனக்கெட்டார்கள் என்பதைப் பார்க்கலாம்.
See: http://tamizboyz.blogspot.com/2005/06/blog-post_111932098819073099.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அவர்களே பெடியன்கள் பதிவில் உங்கள் பெயரில் இட்ட பின்னூட்டங்களில் ஒன்று நான் இட்டது.உங்களுக்கு விளங்கவேண்டுமென்பதற்காக உங்களின் profile இற்கு இணைப்பைக் கொடுத்திருந்தேன்.இதற்கு என்ன செய்யலாம் என்று தெரியவில்லை
நன்றி ஈழநாதன் அவர்களே. இப்போதைக்கு ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்தது போலவே தோன்றுகிறது. பெடியன்களில் இப்போது அனானிப் பின்னூட்டம் செயலிழக்கப்பட்டு விட்டது. ஆகவே இதையெடுத்து என் பெயரில் பதிவு செய்த போலியை ப்ளாக்கர் எண் மூலம் கண்டுகொள்ள முடிந்தது.
உங்கள் பதிவிலும் அனானிப் பின்னூட்டத்துக்கு வழி இருந்தால் அதை செயலிழக்கச் செய்யவும். அதுதான் நாம் இப்போது செய்யக் கூடியது. சந்தேகம் இருந்தால், நீங்கள் எங்காவது என் பின்னூட்டத்தை பார்த்திருக்கும் பட்சத்தில் இதற்காகவே வைத்திருக்கும் என் பதிவில் அதே பின்னூட்டம் என் ப்ளாக்கர் எண்ணுடன் இருக்கிறதா என்பதைப் பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தங்கள் பெயரில் பின்னூட்டம் இட்டு நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்பவர்கள் யாராக இருப்பினும் கண்டனத்திற்கு உரியவர்கள்.
தங்களின் கருத்துகளுக்கு அவர்கள் உடன்படவில்லையெனில் அவற்றை நேரடியாக உங்களுடன் விவாதிக்கலாம் அல்லது பேசாமலாவது இருக்கலாம். இப்படிச் சேற்றை வாரி இறைப்பதாக நினைத்துக் கொண்டு தங்களையே சிறுமைப்படுத்திக் கொள்கிறார்கள் என்றுகூடத் தெரியாமல் இருக்கிறார்கள். இதற்கு மேலும் ஒன்றும் சொல்லவேண்டியதில்லை.
//அந்தப் பேர்வழிக்காக களத்தை விட்டு ஓட நான் விரும்பவில்லை. // சரியான நிலைப்பாடு.
நன்றி இராதாகிருஷ்ணன் அவர்களே. என்னை சிறுமை செய்வதாக நினைத்துக்கொண்டு தன்னையே சிறுமைபடுத்திக் கொள்கிறார் அவர்.
இச்சமயத்தில் ஒரு கதை என் நினைவுக்கு வருகிறது. ஒரு சிப்பாய் தனக்கு சல்யூட் செய்யவில்லை என்று ஒரு சேனை அதிகாரி கமாண்டரிடம் புகார் செய்தார். வெளிப்படையான பரேட் ஒன்றில் வைத்து அந்த சிப்பாய்க்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று வேறு சிபாரிசு செய்தார் அந்த அதிகாரி.
பரேடில் கமாண்டர் அந்த சிப்பாய் சம்பந்தப்பட்ட சிப்பாய் புகார் கொடுத்த அதிகாரிக்கு 10,000 முறை சல்யூட் அடிக்க வேண்டும், அதுவும் நடு மைதானத்தில் என்று தீர்ப்பு கூறினார். சிப்பாய் சல்யூட் செய்ய ஆரம்பித்தார். அதிகாரிக்கு ஆனந்தம். ஆனால் அந்தோ, ஆனந்தம் நீடிக்கவில்லை. கமாண்டர் இடி போன்ற குரலில் ஒவ்வொரு சல்யூட்டிற்கும் அதிகாரி ச்லய்யுட் மூலம் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். மாலை வரை அதிகாரியும் தண்டனை பெற்ற சிப்பாயும் ஒருவருக்கொருவர் சல்யூட் அடிக்க வேண்டியிருந்தது.
அதே போல என்னை சிறியவனாக காட்டும் முயற்சி அதை செய்விப்பவரையே தோலுரித்து அடையாளம் காட்டுகிறது
அன்புடன்,
டோண்டு ராகவன்
dondu,
உங்கள் புகைப்படக் கோப்பையோ அல்லது ஏதாவதொரு படத்தின் கோப்பையோ உங்கள் blogger profileஇல் சேமியுங்கள். அதன் பிறகு நீங்கள் இடும் பின்னூட்டங்கள் எல்லாவற்றிலும் அந்தப் படமும் சேர்ந்து சேமிக்கப்படும். பின்னூட்டப் பக்கங்களில் உங்கள் பெயரில் வந்த பின்னூட்டங்களில் இந்தப் படம் இருப்பதையும் இல்லாததையும் வைத்து, அது உங்கள் பின்னூட்டமா அல்லது மோசடிப் பின்னூட்டமா எனக் கண்டுபிடித்து விடலாம்.
இந்த உத்தி உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன்.
யோசனைக்கு நன்றி வாய்ஸ் ஆன் விங்ஸ் அவர்களே. படத்தை சேமித்தால் என்ன ஆகும்? அதை நகலெடுத்து போலிப் பதிவில் போட எவ்வளவு நேரமாகும்? வேறு ஏதாவதுதான் யோசிக்க வேண்டும். மூக்கியமாக செய்யக்கூடியது எல்லா வலைப்பதிவர்களும் தங்கள் வலைப்பூக்களில் அனானிப் பின்னூட்டங்களை செயலிழக்கச் செய்வதேயாகும். பலர் செய்ய விரும்பவில்லை. அவர்கள் நண்பர்கள் பலர் வலைப்பதிவர் இல்லாதவர்களாய் இருப்பதாகவும் அவர்கள் பின்னூட்டமிட முடியாது போய் விடும் என்றும் அஞ்சுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை அது சரியாகவுமிருக்கலாம். ஆனால் குறிவைக்கப்பட்ட ஒரே நபராகிய எனக்குத்தான் வேறு என்ன செய்வது என்று புரியவில்லை.
உதாரணத்துக்கு மணிக்கூண்டு சிவா பதிவில் என் பெயரில் அந்த போலி நபர் தாறுமாறாகப் பதிக்க அதை மூக்கு சுந்தர் அவர்கள் நம்பி எனக்கு சூடாக எழுத, அப்பின்னூட்டம் 10 மணி நேரத்துக்கு அப்படியே இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் எவ்வளவு பேர் அதைப் படித்தார்களோ தெரியாது. கடவுள் விட்ட வழி.
இதில் வேடிக்கை என்னவென்றால் வலைப்பதிவராகப் பதிவது இலவசம், இரண்டே நொடிகளில் பெறலாம் என்பத்கு யாருக்கும் புரிய மாட்டேன் என்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
dondu,
//படத்தை சேமித்தால் என்ன ஆகும்? அதை நகலெடுத்து போலிப் பதிவில் போட எவ்வளவு நேரமாகும்? //
படத்தையும் நகலெடுத்துப் போடவேண்டுமென்றால் வேறு blogger கணக்கில்தான் போட முடியும். அதன் blogger எண் வேறுபாட்டிலிருந்து கண்டுபிடித்து விடுவோம் போலிப் பின்னூட்டங்களை. உங்கள் blogger எண்தான் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டதே :)
தற்போது போலிப் பின்னூட்டங்களை இடும் ஆசாமி blogger கணக்கெதுவும் பயன்படுத்துவதில்லை எனபதே என் ஊகம்.
"தற்போது போலிப் பின்னூட்டங்களை இடும் ஆசாமி ப்லொக்கெர் கணக்கெதுவும் பயன்படுத்துவதில்லை எனபதே என் ஊகம்."
அனானிப் பின்னூட்டங்களை அனுமதிக்கும் பதிவுகளில் அவர் அவ்வாறுதான் செய்கிறார். அதை செயலிழக்கச் செய்த பதிவுகளில் போலி ப்ளாக்கர் எண்ணை உபயோகிக்கிறார். இன்னும் பலர் அதைப் பர்த்தே என்னைத் தவறாக எண்ணி விடுகின்றனர். அதில் வேறு போட்டோ வேறு சேர்ந்து விட்டால் அதே பழைய கதைதான்.
நிற்க. இப்போதைக்கு அனானிப் பதிவை செயலிழக்கச் செய்தாலே பாதிக்கு மேல் வெற்றிதான். அதைத்தான் செய்ய மாட்டேன் என்கிறார்களே, என்ன செய்வது? அவரவர் கவலை அவரவருக்கு. அவர்களுக்கு வரும் பின்னூட்டங்களும் போய்விடுமே என்ற கவலை, எனக்கு பெயர் பாழாகிறதே என்றக் கவலை.
இன்னொரு விஷயம். ஏதோ படத்தைப் போட்டோமா இல்லையா என்றில்லாதபடி ஏதோ ஹெல்லோவாம் அதை இறக்கிக் கொள் என்றெல்லாம் கூறுகின்றனர். போட்டோவைப் பதிப்பது சிக்கலாகத் தோன்றுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
I've sent you an email. Thx.
Voice on wings சொல்வதுதான் சரியான வழி. உங்கள் புகைப்படத்தை வலையேற்றுங்கள் (உங்கள் படம் போடப் பிடிக்கவில்லையானால் ஷாருக் கான் அல்லது ராஹுல் டிராவிட் படத்தைப் போட்டுக்கொள்ளலாம் - அவர்கள் அனுமதித்தால் :)). கூகிளின் பிகாஸா+ஹெல்லோ என்ற நிரலியின்மூலம் சுலபமாக Bloggerbot செய்யலாம். பிறகு நீங்கள் Blogspot பாவிக்கும் எந்த வலைப் பதிவுக்கும் சென்று பின்னூட்டமிட்டால் உங்கள் படமும் சேர்ந்து தெரியும். இன்னொருவர் அந்தப் படத்தை அந்த இடத்தில் வரச்செய்ய ஏலாது.
முயற்சி செய்துபாருங்கள்.
அடடா, inline comments பகுதியில் படம் தெரியவில்லையே!
இதற்கு வேறு ஏதாவது உபாயம்தான் செயவேண்டும்.
பார்க்கலாம்.
There is always a solution to every problem. It can't elude us for long.
I published my photo to my profile. I changed the display name too to dondu(#4800161). Can I get the same in my comments now? Let me see.
Regards,
Dondu Raghavan
Hooray, I got it. Dear S.K. and Voice on Wings, I thank both of you with all my heart. I guess I am older than you two and my sincere blessings to you.
Thanks and regards,
Dondu Raghavan
//அல்வாசிடி போன்ற நண்பர்களிடம் எவ்வளவு கேட்டு கொண்டாலும் அனானிப் பின்னூட்டங்களைச் செயலிழக்கச் செய்ய மாட்டேன் என்கிறார்கள். அப்படியே செயலிழக்கச் செய்த தளங்களிலும் ப்ளாக்கர் எண்ணைச் சரி பார்க்க மாட்டேன் என்கிறார்கள். என்னதான் செய்வது எனப் புரியவில்லை.//
டோண்டு சார், சனி,ஞாயிறு வலைப்பக்கம் அதிக நேரம் செலவழிக்க முடிவதில்லை. இப்போது தான் உங்கள் பின்னூட்டமும் இந்த பதிவையும் பார்த்தேன். என்னுடைய சிறிய சுயதேவைக்காக நான் இன்னும் அனானிமஸ் பின்னூட்டத்தை வைத்திருக்கிறேன். எத்தனையோ கெட்ட வார்த்தை வசவுகள் அதில் வந்து விழுந்தாலும் சிறிதுகாலத்திற்கு பிறகு தான் என்னால் அனானிமஸ் பின்னூட்டத்தை தூக்க முடியுமென நினைக்கிறேன்.இன்னும் எனக்கு கூட பிடிக்காமல் ஒரு சின்ன தேவைக்காக அதை வைத்திருக்கிறேன்.
முதலில் உங்கள் பின்னூட்டத்தை என் பதிவில் பார்த்ததும், எலிக்குட்டியை பிளாக்கர் ஐடியில் வைத்து பார்த்த போது எண் சரியாக வந்ததால் உண்மையிலேயே நீங்கள் தான் பின்னூட்டம் விட்டுவிட்டீர்கள் என நினைத்தேன். மன்னிக்கவும். பிறகு என்னுடைய மின்னஞ்சலில் சரி பார்க்கும் போது முதலில் பின்னூட்டமிட்டதாக வந்த கோழையின் மின்னஞ்சலில் உங்கள் இ-மெயில் ஐடி இல்லை. நீங்கள் விட்ட பின்னூட்டத்தில் வந்த இ-மெயிலில் உங்கள் ஐடி இருந்தது. அதை வைத்து தான் நான் உறுதிப்படுத்தினேன்.
நன்றி விஜய் அவர்களே. இப்போது நிலைமை சற்று பரவாயில்லை. என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். என் ப்ளாக்கர் எண்ணும் என் டிஸ்ப்ளே பெயருடன் சேர்ந்தே வரும். என்ன, புகைப்படம் பின்னூட்டங்களை இடும் பக்கத்தில் மட்டும் வரும். மேலும் என் பின்னூட்டங்கள் என் தனிப்பட்டப் பதிவிலும் நகலிடப்படும்.
ஒரு வேளை போலி நபர் என் புகைபடத்தையும் ப்ளாக்கர் எண்ணையும் ஒட்டி நகலெடுத்தால் அவற்றை அவர் ஒரு புது ப்ளாக்கர் பெயரில்தான் போட முடியும். அப்போது எலிக்குட்டி அவ்ர் புது ப்ளாக்கர் எண்ணைக் காட்டிக் கொடுக்கும். இருப்பினும் அந்த மனம் பிறழ்ந்தவன் ஏதாவது செய்து வைப்பான் என்ற பயமும் இருக்கிறது. பார்க்கலாம், எல்லாம் கடவுள் விட்ட வழி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உண்மையில் இந்த புகைப்படம் 'நச்' ஐடியா. நிலைமை கட்டுக்குள் வரும்.
போலி டோண்டுவுக்கு(கண்டிப்பாய் இதைப் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்),
இதுவரை நீங்கள் செய்து வந்தது என்ன? அவை ஏன் வெற்றி பெறவில்லை என அலசுவோம்.
1) டோண்டு அவர்களின் பெயரில் போலிப் பின்னூட்டம் இடுகிறீர்கள்
2) அனானிமஸ் பின்னூட்டம் அனுமதிக்கப்பட்ட இடத்தில் டோண்டு அவர்களின் ப்ளாக்கர் எண்ணைப் பயன்படுத்துகிறீர்கள்.
3) மெடா ரீடைரக்ஷன் பயன்படுத்துகிறீர்கள்.
4) பல பல ப்ளாக்கர் எண்களைப் பயன்படுத்தி டோண்டு அவர்களின் பெயரில் பின்னூட்டம் இடுகிறீர்கள்.
5) இன்னும் பல யுக்திகளைப் பயன்படுத்தி பின்னூட்டம் இட்டது டோண்டு தான் எனச் சிலரை நம்பவும் வைத்துவிடுகிறீர்கள்.
ஆனால் பெரும்பாலானோர் (அதிலும் என் போன்ற பாமரர்கள் கூட) பின்னூட்டத்தில் சில வரிகளைப் படிக்கும் போதே அது போலி என அறிந்து கொள்கிறார்கள்.
ஏனென்றால்,
நீங்கள்:
1) அவர் பயன்படுத்தும் மொழி நடையைப் பயன்படுத்துவதில்லை.
2) அவர் பயன்படுத்தாத (அல்லது யாருமே பயன்படுத்த யோசிக்கும்) தரக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.
3) ஒவ்வொரு முறையும் உங்களின் மொழி நடை மாறுகிறது.
இக்குறைகளைக் களைந்தால் நீங்கள் உண்மையான டோண்டு என அனைவரும் நம்பக் கூடும். ஆனால் அப்படிச் செய்தால் உங்களின் நோக்கமான "டோண்டுவை இழிவுபடுத்துதல்" நிறைவேறாது.
அவர் உயர்சாதி ஆதிக்க வெறியர் அவரை அடக்க இவ்வாறு செய்கிறேன் என்கிறீர்கள். சரி, உங்கள் கூற்றுப் படி அவர் உயர்சாதி வெறியர் என்றே ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். இவ்வளவு தொழில்நுட்ப அறிவு பெற்ற நீங்கள், ஒரு (உங்களின் பார்வையில்) ஆதிக்க வெறியரைஇவ்வளவு கேவலமான குறுக்கு வழிகளில் எதிர்ப்பதா?
என்ன செய்யலாம் நீங்கள் ? உங்கள் தொழில்நுட்ப அறிவை தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு பயன்படுத்திக் காட்டி, நீங்கள் அனைவராலும் போற்றப் படும் போது "நான் உயர்சாதி வெறிக்கு எதிரானவன்" என்று பேசலாம் அப்போது உங்கள் சொல் அம்பலம் ஏறும்.
நேரம் கிடைத்தால் ஒரு முறை Men of Honor என்ற ஆங்கிலப் படத்தைப் பாருங்கள்.
இனியாவது நேரான வழியில் சிந்திப்பீர் என்ற நம்பிக்கையில்,
ப்ரியமுடன்,
கோபி
மிக்க நன்றி கோபி அவர்களே. நீங்களோ நானோ சொல்லித் திருந்த மாட்டார் போலி டோண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்... அந்த பொறம்போக்குக்கு இப்படியெல்லாம் நீங்கள் பயப்பட வேண்டுமா என்ன?! நீங்கள் இப்படியெல்லாம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்வதினால் தான் உங்களை அவன் பாடாய்ப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறான். எனவே.. கண்டுக்காதீங்க..! நீங்கள் எங்கேயாவது பின்னூட்டம் இட்டால் அதன் பதிவு இங்கேயும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே! எனவே இதற்கும் மேலும் ஒவ்வொரு பதிவாக போய், இது நான் இட்ட பின்னூட்டமில்லை என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்க வேண்டாம். விட்டுத் தள்ளுங்கள். இதற்கும் மேலும் அந்த போலியின் பின்னூட்டத்தை நீங்கள் எழுதியதாக எவரும் நினைத்தார்கள் என்றால் அவர்களைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்.
மாயவரத்தான் அவர்களே நீங்கள் கூறுவதை நான் புரிந்து கொள்ள முடிகிறது. என்னை முழுதும் அறிந்த நீங்களோ, எஸ்.கே. அவர்களோ அல்லது திருமலை அவர்களோ என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்பதை நான் முழுமையாக அறிவேன். இருப்பினும் என் பெயரில் என் நண்பர்களைப் பற்றி இழிவாக ஒன்றும் வந்து விடக் கூடாது என்பதிலும் எனக்கு மிகுந்த அக்கறை உண்டு. அதனால்தன் சிறீரங்கன் அவர்களுக்கு கீழ்க்கண்ட பதிலைக் கொடுத்தேன்.
சிறீரங்கன்: "என்பெயரில் கேவலமானவற்றை எழுதுவதாலும்-அறிவிலித்தனமான விவாதங்களை முன்வைப்பதாலும் நான் கொதிக்கவோ அன்றி டோண்டு அவர்களைப்போல் பதறியடிக்கவோ முயற்சிக்கமாட்டேன்."
நான்: "சிறீரங்கன் அவர்களே, நீங்கள் கூறுவதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் இப்பிரச்சினையை இன்னொரு கோணத்திலிருந்து பார்க்கிறேன். நட்பின் மரணம் என்பதுதான் அது. என் பெயரில் தவறானப் பின்னூட்டம் வர, அதைப் படிக்கும் என் நண்பர்கள் சிலர் என்னைத் தப்பாகப் புரிந்துகொள்ளலாம், ஆனால் என்னிடம் அதைப் பற்றி விளக்கம் கேட்க முடியாத நிலைமையும் உருவாகலாம். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் என் மீதுள்ள நல்லெண்ணம் மறைய அவர்கள் என் பால் கொண்ட நட்பும் மரணிக்கலாம். "எதிர்நீச்சல்" படத்தில் நாகேஷ் முத்துராமனிடம் கூறுவார்: "நண்பனின் மரணத்தைக் கூட சகித்து கொள்ளலாம், ஆனால் நட்பின் மரணத்தை அல்ல" என்று. அதே நிலைதான் எனக்கும்.
மேலும் "அஞ்சுவதற்கஞ்சாமை பேதமை" என்பது பொய்யாமொழி அல்லவா?"
ஆகவேதான் இவ்வளவு முன்னேற்பாடுகள். என்னால் முடிவதைச் செய்வேன், பாக்கியை என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் மகரநெடுங்குழைகாதன் பார்த்து கொள்வான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment