ஒரு வீட்டில் இரண்டு குட்டி எலிகள் வசித்து வந்தன. அம்மா எலிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு இரண்டும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தன.
அப்போது ஒரு கடுவன் பூனை அந்த எலிகளைத் துரத்த ஆரம்பித்தது.
இரண்டும் உயிரைக் கையில் பிடித்து ஓடின.
அப்போது அந்தப் பக்கம் வந்த அம்மா எலி ஒரு ஓரமாகப் போய் ஒளிந்துக் கொண்டு "வள், வள்" என்றுக் குலைத்தது.
பூனை நடு நடுங்கிப் போய் "மியாவ்" என்றுக் கத்திக் கொண்டே ஓடி விட்டது.
அம்மா எலி தன் குட்டிகளிடம் வந்துப் பெருமையுடன் கூறியது:
"அன்னிய மொழியைக் கற்பதனால் என்ன நன்மை என்பதைப் பார்த்தீர்களா?"
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
7 comments:
Excellent !
BTW,
பூனை ஒரு ஓரமாய் ஒளிந்து கொண்டு - " ஏய் டாமி, கீப் கொயட். " என்று கத்தி விட்டு மெல்ல எட்டிப் பார்த்தது. - பழக்க தோஷத்தில் எனக்கு இப்படி ஒரு ஆன்ட்டி க்ளைமாக்ஸ் தோன்றியது :-)
:-))
uruvagagkathai nanrayullathu.
ராகவன்,
நல்ல எளிமையான உதாரணம்.
சத்யராஜ்குமார்:
// பூனை ஒரு ஓரமாய் ஒளிந்து கொண்டு - " ஏய் டாமி, கீப் கொயட். " என்று கத்தி விட்டு மெல்ல எட்டிப் பார்த்தது. - பழக்க தோஷத்தில் எனக்கு இப்படி ஒரு ஆன்ட்டி க்ளைமாக்ஸ் தோன்றியது :-)//
அதென்ன பழக்க தோஷம், முகமூடீஈஈஈ?
:P
பழக்க தோஷம் என்பதில் என்ன சந்தேகம் காசிலிங்கம் அவர்களே? சத்யராஜ்குமார் அவர்களின் கதைகளைப் படித்ததில்லையா? ஒவ்வொரு திருப்பத்துக்கும் ஒன்றுக்கு மேல் சாத்தியக்கூறுகள் வைத்து எழுதுவதில் நிபுணர் ஆயிற்றே. அவர் கதைகளை மிகவும் ரசித்துப் படிப்பவன் நான். 12-B படக்கதையில் வருவது போல இணையாக ஒடும் கதைகளை எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே. அன்புடன்,
ராகவன்
dondu iya,
vanakkam.nalla kathai.short and sweet.
i will pass this story to my friends with your blog name
nanri
sivendran
ஒரு புது மொழியை கற்க விழைபவர் எம்மாதிரியான அணுகுமுறையை மேற்கொள்வது? அந்த அணுகுமுறை மொழிக்கு மொழி மாறுபடுமா??
Post a Comment