நான் படித்து ரசித்த ஒரு ஜெர்மன் நாவலைப் பற்றிப் பேச ஆசை. இது மொழி பெயர்ப்புடன் சம்பந்தப்பட்டது என்பதால் டபுள் ஓக்கே.
1946- ஜெர்மனி. இரண்டாம் உலக யுத்த அழிவுகள் இன்னும் நேர் செய்யபடவில்லை. எங்கும் இடிபாடுகள். ஜெர்மனி நான்கு நேசப் படை நாடுகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
அலெக்ஸாண்டர் ஸ்பொரெல் என்ற எழுத்தாளர் எழுதியக் கதைப் பற்றித்தான் நான் இங்குப் பேசப் போகிறேன்.
அதன் கதாநாயகன் அமெரிக்கத் தலைமை அலுவலகத்தில் மொழி பெயர்ப்பாளனாகப் பணி புரிபவன்.
ஒரு நாள் ஒரு ஜெர்மானியன் மிகுந்த ஆவேசத்துடன் அலுவலகத்துக்கு வருகிறான். அவ்னுக்கு ஆங்கிலம் தெரியாது. அமெரிக்கனுக்கோ ஆங்கிலம் தவிர வேறு ஒன்றும் தெரியாது. ஆகவே வந்தான் நம் கதாநாயகன் மொழி பெயர்க்க.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சம்பாஷணை நடுவில் கதாநாயகன் மொழி பெயர்த்தது தேனீரில் கலந்தச் சர்க்கரையாக இருக்கும்.
ஜெர்மானியன்: "ஐயா என் பக்கத்து வீட்டுக்காரனுடம் இருக்கும் அவன் அத்தைகள் எனக்கு மிகவும் தொல்லைத் தருகிறார்கள்."
அமெரிக்க அதிகாரி: "என்ன செய்வது ஐயா. என் அத்தைகளை நீ பார்த்ததில்லை என நினைக்கிறேன். ஒவ்வொருத்தியும் ஒரு ராட்சசி தெரியுமா?"
ஜெர்மானியன்:" நாள் முழுவதும் கத்திக் கூச்சல் போடுகிறார்கள்."
அமெரிக்க அதிகாரி: "இது கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது. அமெரிக்க அத்தைகள் ஜெர்மன் அத்தைகளை விட எவ்வளவோ தேவலை."
ஜெர்மானியன்: "இதை விட மோசம் ஒன்றுண்டு. தினமும் விடியற்காலை என் வீட்டு வாசலில் எச்சம் இட்டுச் செல்கின்றனர்."
அமெரிக்க அதிகாரி (துள்ளிக் குதித்து): "ஜெர்மன் அத்தைகள் கூட அவ்வாறு செய்ய மாட்டார்கள். நான் நம்ப மாட்டேன்.
(கதாநாயகன் பக்கம் திரும்பி): "அத்தை"?
கதாநாயகன் பாவம் மென்று விழுங்குகிறார்.
நடந்தது இதுதான்:
ஜெர்மானியன் புகார் கூறியது பக்கத்து வீட்டுக்காரனின் வாத்துக்களைப் பற்றி. வாத்துக்கு ஜெர்மனில் "என்டெ" என்றுக் குறிப்பிடுவார்கள். கதாநாயகன் அதை ஆன்ட் என்றுக் கூறியதால் வந்த சிறு குழப்பம்தான் அது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
23 hours ago
6 comments:
சிறு வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கிஷ்முவும் விசுவும் இது போன்ற உரையாடலை நிகழ்த்தினார்கள். கிஷ்மு ஆங்கிலத்தில் பேசுவதை விசு தமிழில் மொழிபெயர்ப்பார். நாலைந்து தடவை மறு ஒளிபரப்பு ஆனாலும், மகிழ்ந்து விழுந்து ரசித்த நகைச்சுவை.
உதாரணமாக, 'பீஸ்' என்பதற்கு 'பட்டாணி' என்று அதே ஏற்ற இறக்கத்துடன் விசு சொல்வார். பார்த்தது உண்டா!?
இப்போது சொன்னதும் விசு கிஷ்மு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது. இப்போது மறு ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் சிரித்து ரசிக்கலாம். இதே போல "சின்ன மாப்பிள்ளை, பெரிய மாப்பிள்ளை" நாடகத்தில் எஸ்.வி. சேகர் அமர்க்களம் செய்வார். ராமாயணத்தை எழுதியது ஸ்டிக்கராம். அதாவது ஸ்டிக் என்றால் கம்பு, அதையே மரியாதையாகச் சொன்னால் ஸ்டிக்கராம்! இவர் செய்த தமிழாக்கத்தைக் கெட்டப் பழக்க வேந்தரும் (vice chancelor) ஒத்துக் கொண்டாராம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்பு ராகவன்,
இதுபோல் நீங்கள் படித்த மற்ற ஜெர்மனி இலக்கிய படைப்புகளையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி சுரேஷ் கண்ணன் அவர்களே. அவ்வாறே செய்வேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பாட்டியும் partyயும்
நல்ல பதிவு இட்டுள்ளீர்கள் சந்திரவதனா அவர்களே. மிகவும் ரசித்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment