சமீபத்தில் ஐம்பதுகளில் சென்னை திருவலிக்கேணியில் முரளி கபேக்கு முன்னால் பிறாமணாள் ஹோட்டல் பெயர் அகலவைக்கும் போராட்டாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தலைமையில் நடந்த போது எனக்கு 10 வயது.
நாயக்கர் தார்சட்டியுடன் ஏணிமேல் ஏற, முரளி கபே ஓனர் மேலே வென்னீர் நிறைந்த பாத்திரத்துடன், “ஐயா நாயக்கரே, மேலே வென்னீர் ஊற்றுவேன்” என்று கூற மரியாதையாக நாயக்கர் கீழே இறங்கினார். பிறகு நீண்ட கோல் உதவியால் தார் பூச, செதுக்கிய கல்லில் பிறாமணாள் பெயர் இன்னும் பிரகாசிக்க ஆரம்பித்தது.
பிறகு காஞ்சிப் பெரியவா சொன்னதன் பேரில் முரளியாகவே அதை செதுக்கி வெளியே எடுத்தார். இதைப்போய் த்மது வெற்றியாக திராவிட குஞ்சுகள் பறை சாற்றிக் கொண்டது வேறு கதை.
ஸ்ரீராங்கத்தில் இது ரிபீட் ஆகியியுள்ளது. பிராமணாள் பெயர் வைத்த ஹோட்டல் வாடகை கட்டடத்தில் இருந்ததாலும், மீதி வாடிக்கையாளர்க்ளுக்கு பிரச்சினை வந்ததாலும், திகவின்ர் ரௌடி செயல்களில் ஈடுபட்டதாலுமேயே இச்சமயம் அது நீக்கப்பட்டது.
இப்போது தேவை முரளி ஐயர் போன்று துணிச்சல் உள்ள பேர்வழியும், சொந்த கட்டிடமும்தான். பிறகு பார்க்கலாம், எவன் என்ன சொல்லுகிறான் என்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இரா.முருகன், சுஜாதா- ஒரு விவாதம்
-
விழா படங்கள். மோகன் தனிஷ்க் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு முதன் முறையாக
‘விஷ்ணுபுரம்‘ விருது விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன் எழுதுவது. ஒரு
இலக்கிய விழாவை இவ...
10 hours ago
95 comments:
Well said.
//பிறகு காஞ்சிப் பெரியவா சொன்னதன் பேரில் முரளியாகவே அதை செதுக்கி வெளியே எடுத்தார். இதைப்போய் த்மது வெற்றியாக திராவிட குஞ்சுகள் பறை சாற்றிக் கொண்டது வேறு கதை.
ஸ்ரீராங்கத்தில் இது ரிபீட் ஆகியியுள்ளது. பிராமணாள் பெயர் வைத்த ஹோட்டல் வாடகை கட்டடத்தில் இருந்ததாலும், மீதி வாடிக்கையாளர்க்ளுக்கு பிரச்சினை வந்ததாலும், திகவின்ர் ரௌடி செயல்களில் ஈடுபட்டதாலுமேயே இச்சமயம் அது நீக்கப்பட்டது.//
so ரெண்டுமே தி.க./திராவிடக்குஜ்சுகளின் வெற்றி இல்லை; ஆரியர்களின் வெற்றி என்கிறீர்கள்.
***இப்போது தேவை முரளி ஐயர் போன்று துணிச்சல் உள்ள பேர்வழியும், சொந்த கட்டிடமும்தான். பிறகு பார்க்கலாம், எவன் என்ன சொல்லுகிறான் என்று. ****
ஏன் நீங்கள்லாம் இல்லையா என்ன???
இந்த தளத்தைக்கூட நீங்க அர்த்தமா "பிராமனாள் கஃபே"னு பேரு வச்சி இருக்கலாம். எதுக்கு இப்படி "டோண்டு" அது இதுனு தமிங்இலிஷ்ல அர்த்தமில்லாமல்???
10 வயதிலேயே ரொம்பத்தான் பாதிக்கப்பட்டு இருக்கீங்க! :(
ஐயா, வீம்புக்கு ஊ.... ம்ரவன் திக லேயும் சரி, திமுக லேயும் சரி நிறைய இருக்குது. கடவுள் ன்னு சொன்னா கேக்கமாட்டான் இயற்கை-ன்னு சொல்லுங்க சரின்னு சொல்லுவான். மத்த ஜாதி பேரு அல்லது மற்ற மத பெயரை அழிக்க சொல்லுங்க!, வீட்டுல நிறைய வேலை இருக்குதுன்னு வாலை கவுத்திக்கிட்டு போயிருவான். ஒரு போஸ்ட் வேஸ்ட் ஆகிடுச்சே!
வணக்கம் அய்யா,
பிராமணாள் மெஸ் என பெயர் இப்போது வைப்பதில் நமக்கு ஆட்சேபம் இல்லை.செட்டிநாடு மெஸ் இருக்கும் போது பிராமணாள் மெஸ் தவறில்லை .
அனைத்து சாதிப் பெயர்களும்,சாதியும் அழிந்தால் நல்லது என்றாலும் இன்னும் வெகு காலம் ஆகலாம்.
எனினும் ஒரு கேள்வி.நீங்கள் சொல்லும் கால் கட்டத்தில் பிராமணால் மெஸ் உண்வகத்தில் அனைத்து சாதியினரும் பார்பட்சமின்றி அனுமதிக்கப் பட்டார்களா
என அறிய விரும்புகிறேன்.
விரும்பினால் சொல்ல்லாம்
நன்றி!!!
அய்யர் மெஸ் அய்யங்கார் மெஸ் என்று தமிழகம் எங்கும் இருக்கிறதே ? அங்கெல்லாம் யாரும் எதிர்க்கவில்லையே ? பிராமணாள் என்பது வருணத்தை வலியுறுத்துவதாலே அவ்வாறு செய்கிறார்கள். உங்கள் பதில் ?
@செந்தழல் ர்வி
திராவிட பழரசக்கடை என்றெல்லாம் பெயர் வைக்கலாம், ஆரிய பவன் என்றும் வைக்கலாம் என்னும்போது பிராமாணாள் ஹோட்டல் என ஏன் வைக்கக் கூடாது?நா
ங்கள் எங்கள் விருப்பபடி பிராமனாள்/பாப்பான்/ஐயர்/ஐயங்கார் என எப்படி வேண்டுமானாலும் வைப்போம்.
அதைக் கேட்க மற்றவர்கள் யார்?
@சார்வாகன்
யார் வேண்டுமானாலும் வந்து சாபிடலாம் என்றுதான் இருந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பல விஷயங்கள் மறக்கப்படுகின்றன...
அந்த கால கட்டங்களில் என் சித்தப்பா கூறுவார்...நாம் எந்த ஜாதியில் பிறந்தாலும்[ உயர்ந்த ஜாதியாக இருந்தாலும்] ஹோட்டல்களில் சாப்பிடும் இடம் தனி. நம் இலையை நாமே தான் எடுக்கவேண்டும்.
அதே சமயம், பிராமணர்கள் சாப்பிடும் இடம் தனி; அவர்கள் இலையை சூத்திதிரர்கள் தான் எடுக்கவேண்டும்.
நம் இலையை நாமே எடுப்பது சரி (விவாதம் திசை திரும்பவேண்டாம்). இதை இங்கு காட்டியது பிராமணர்கள் சாப்பிட்ட எச்சை இலையைக் கூட சூத்திரன் தான் எடுக்கவேண்டும் என்று காட்டவே...
மிக சரியான பதிவு டோண்டு சார். ஒரு ஜனநாயக நாட்டில் தனது உணவகத்துக்கு என்ன பெயர் வைப்பது என்ற உரிமை கூட அதன் உரிமையாளருக்கு, கும்பல் பலத்தை காட்டி மிரட்டி, மறுக்கப்படுமானால் அது அபாயகரமான போக்கு அல்லவா ?
இது தொடர்பான மதிமாறன் அவர்களது பதிவில் (தலையில் பிறந்தவர்களா தந்தை பெரியாரா ?) பின்னூட்டமிட்டிருந்தேன், "இதுவே 'தேவர் கபே' என்றோ 'நாடார் கபே' என்றோ இருந்திருந்தால் தி.க வீரப்புலிகளின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது" என்று. எதிர்பார்த்தபடியே பின்பக்கத்தில் பதுக்கிவிட்டார் :)
// அந்த கால கட்டங்களில் என் சித்தப்பா கூறுவார்...நாம் எந்த ஜாதியில் பிறந்தாலும்[ உயர்ந்த ஜாதியாக இருந்தாலும்] ஹோட்டல்களில் சாப்பிடும் இடம் தனி. நம் இலையை நாமே தான் எடுக்கவேண்டும்.
அதே சமயம், பிராமணர்கள் சாப்பிடும் இடம் தனி; அவர்கள் இலையை சூத்திதிரர்கள் தான் எடுக்கவேண்டும். //
இப்போது அப்படி எங்கேனும் நிகழ்ந்தால் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதும் எதிர்க்கப்பட வேண்டியதும் இதுவே. வெறும் பெயரை மாற்றுவது அல்ல.
//ங்கள் எங்கள் விருப்பபடி பிராமனாள்/பாப்பான்/ஐயர்/ஐயங்கார் என எப்படி வேண்டுமானாலும் வைப்போம்.
அதைக் கேட்க மற்றவர்கள் யார்?//
இந்தத் தோரணையில் எழுதுவதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்? பொதுவிடத்தில் உணவு விடுதி. அதன் பெயர்ப்பலகை என்பது தனிநபர் விஷயமன்று. எனவே மற்றவர்கள் யார் என்று கேட்க ? என்ற் கேள்விக்கு இடமில்லை.
அவர்கள் கேட்பது தவறு என்றும் ஏன் தவறு என்றும் விளக்கம் மட்டுமே சொல்லலாம்.
1. தேவர் கபே. செட்டியார் கபே, முதலியார் கபே என்னவெல்லாம் வருணாசிரமத்தையடியொட்டி, அல்லது அதை நினைவுபடுத்தும் பெயர்களல்ல என்றும், பிராமாணாள் என்றாலே அப்படியென்றும், அப்பெயரிருந்தால் சூத்திரன் என்று வருமென்றும், அப்படி சூத்திரன் என்றால், பிராமணனின் வைப்பாட்டிக்குப் பிறந்தவன் என்று இந்து மறையொன்று சொல்லியதாகவும், எனவே இப்பெயரை வைப்பது பலரை மனநோக வைப்பதாகவும்தான் பலர் எழுதியிருக்கிறார்கள். போராட்டம் நடத்தியவர் கூறியதாகவும் செய்தித்தாள்கள் வெளியிட்டன. பார்ப்ப்னர் என்றாலோ அந்தணர் என்றாலோ ஐயர் ஐயங்கார் என்றாலோ சரி. பிராமணாள் என்றால் மட்டுமே எங்களுக்குப் பிரச்சினை என்கிறார்கள்.
2. பிராமணர் என்று எவருமே இன்றில்லை. அப்போதும் இல்லை. இந்து மதம் அதை ஒரு ஜாதியார் வைத்துக்கொள்ளும்படி சொல்லவில்லை.
நிலைமை இப்படியிருக்க எப்படி நீங்கள் உங்களைப்பிராமணாள் என்றழைத்து பலகையிலும் இடலாம்.
நாங்கள் என்னவேனாலும் பண்ணுவோம் அதைக்கேட்க நீங்கள் யார் என்று தர்மபுரியில் 160 குடிசைகளை எரித்த வன்னியர்களும் கேட்கலாமே?
பதில் சொல்லுங்கள்.
சரவணபவனை, நாடார் ஹோட்டல்னு வைத்திருந்தால் நஷ்டம் அந்த ஓனருக்குத்தான்.
அதேபோல் பிராமணாள் கஃபேனு வைத்தால் நஷ்டம் அந்தக் கடை நடத்துபவருக்குத்தான்.
Forget about caste hierarchy here.
They both are minorities and so they need to attract more customers (vegetarian eaters) who belongs to other communities as well. Remember, hotel is run for making money. It is business!
வியாபாரி, எல்லா சமூகத்தினரையும் கஸ்டமாரகப் பெருவதே புத்திசாலித்தனம். பிராமணாள் மட்டும் வெஜிடேரியன் சாப்பிடுறதில்லை. Remember that!
அதேபோல், உங்க தளத்தையும் "பிராமனாள் தளம்" இல்லைனா "அம்பிகள் அரங்கம்"னு வச்சுண்டா நஷ்டம் நோக்குத்தான், டோண்டுவால். சாதிச்சாயத்தால் பலர் உங்க தளத்தை புறக்கணிப்பார்கள். When you are defending brahmins as innocent EVERYWHERE, your message needs to go to "others" as well.
In that way, EVR has helped that Muralivaal to get more customers, imho :)
//காஞ்சிப் பெரியவா சொன்னதன் பேரில் முரளியாகவே அதை செதுக்கி வெளியே எடுத்தார். //
இந்தப்பிரச்சினை பார்ப்பன ஜாதியாளர்களின் பிரச்சினை. இதில் ஏன் காஞ்சிச் சங்கராச்சாரியார் தலையிட்டார்? அவரென்ன தாம்பிராஸ் சங்கத்தலைவர? இல்லை மடத்தலைவரா?
passerby..இவர்கள் சொல்வது போல ரமாசாமி ஒரு பயந்தங்க கொள்ளி அல்ல; நீங்களும் நானும் சேலத்தில் ராமனை செருப்பால் அடித்திருந்தால், இந்நேரம் காஞ்சிபுரம் கடவுள் சங்கர்ராமனுடன் பெசிக் கொண்டிருப்போம்...
அதானே, இவர் பிராமணாள் மடத் தலைவாரா? இல்லை இந்து மதத் தலைவாரா?
இவர் பிராமணாள் மடத் தலைவரே தான்..!
[[passerby said...
//காஞ்சிப் பெரியவா சொன்னதன் பேரில் முரளியாகவே அதை செதுக்கி வெளியே எடுத்தார். //
இந்தப்பிரச்சினை பார்ப்பன ஜாதியாளர்களின் பிரச்சினை. இதில் ஏன் காஞ்சிச் சங்கராச்சாரியார் தலையிட்டார்? அவரென்ன தாம்பிராஸ் சங்கத்தலைவர? இல்லை மடத்தலைவரா?]]
// இந்தத் தோரணையில் எழுதுவதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்? பொதுவிடத்தில் உணவு விடுதி. அதன் பெயர்ப்பலகை என்பது தனிநபர் விஷயமன்று. எனவே மற்றவர்கள் யார் என்று கேட்க ? என்ற் கேள்விக்கு இடமில்லை.//
நிச்சயமாக கேட்கலாம் நண்பரே. பொதுவிடத்தில் உணவு விடுதி என்பதாலேயே அதை எப்படி கட்ட வேண்டும், என்ன பெயர் வைக்கவேண்டும், என்ன அங்கே பரிமாற்ற வேண்டும் என்பதற்கெல்லாம் யாரும் எந்த நிபந்தனையும் விதித்துவிட இயலாது. இதில் எந்த இடத்திலாவது விதிகளை மீறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசை சேர்ந்தது. வேறு யாருக்கும் இதில் எதிர்ப்பு தெரிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை. பிடிக்காதவர்கள் புறக்கணிக்கலாம். அவர்களது உரிமையும் எல்லையும் அவ்வளவே. குண்டாந்தடியோடு வருவதற்கல்ல.
// பிராமாணாள் என்றாலே அப்படியென்றும், அப்பெயரிருந்தால் சூத்திரன் என்று வருமென்றும், அப்படி சூத்திரன் என்றால், பிராமணனின் வைப்பாட்டிக்குப் பிறந்தவன் என்று இந்து மறையொன்று சொல்லியதாகவும், எனவே இப்பெயரை வைப்பது பலரை மனநோக வைப்பதாகவும்தான் பலர் எழுதியிருக்கிறார்கள். //
எந்த இந்து மறையும் இந்து மதத்தை முழு முற்றாக சொந்தம் கொண்டாட இயலாது. அதற்கான ஆதாரிட்டி-யும் எந்த இந்து மறைக்கும் இல்லை. எனவே ரூம்பு போட்டு யோசிப்பவர்களுக்கு இந்நிகழ்வு மனம் நோக வைப்பது புரிந்துகொள்ளக்கூடியதே. மனம் நோகவைக்கும் எல்லா நிகழ்வுகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்த தில் உண்ட இவர்களிடம் ?
// பார்ப்ப்னர் என்றாலோ அந்தணர் என்றாலோ ஐயர் ஐயங்கார் என்றாலோ சரி. பிராமணாள் என்றால் மட்டுமே எங்களுக்குப் பிரச்சினை என்கிறார்கள்.//
இவர்களுக்கு பிரச்சினை என்றால் அரசை அணுகலாம், நீதி மன்றத்தை நாடலாம். அதை விடுத்து கும்பலை காட்டி மிரட்டுதல் கேவலமான காரியம்.
// பிராமணர் என்று எவருமே இன்றில்லை. அப்போதும் இல்லை. இந்து மதம் அதை ஒரு ஜாதியார் வைத்துக்கொள்ளும்படி சொல்லவில்லை.//
அப்புறம் எதற்கு போராட்டம், மண்ணாங்கட்டி, தெருப்புழுதி எல்லாம் ? இல்லாத ஒரு பெயரை தனது உணவு விடுதிக்கு சூட்டும் பைத்தியக்காரர்கள் என்று இடக்கையால் புறக்கணித்து விட்டுப்போகவேண்டியதுதானே
// நிலைமை இப்படியிருக்க எப்படி நீங்கள் உங்களைப்பிராமணாள் என்றழைத்து பலகையிலும் இடலாம்.//
யார் யாரெல்லாம் தம்மை எப்படியெல்லாம் அழைத்துக்கொள்ளவேண்டுமென்று தீர்மானிக்க இவர்கள் யார் ? யார் தந்தார்கள் அந்த அதிகாரத்தை இந்த கும்பலுக்கு ?
// நாங்கள் என்னவேனாலும் பண்ணுவோம் அதைக்கேட்க நீங்கள் யார் என்று தர்மபுரியில் 160 குடிசைகளை எரித்த வன்னியர்களும் கேட்கலாமே? //
இவ்வளவு அசட்டுத்தனமாகக்கூட கேட்க இயலுமா ? தர்மபுரியில் நிகழ்ந்தது கொலை. சாதியை முன்னிட்டு தனிமனித ஈகோவினால் நிகழ்ந்த கொலை. கொலை என்பது தண்டனைக்குரிய குற்றம் என்பது சட்டம்.
ஆனால் தனது உணவு விடுதிக்கு பிராமணாள் கபே என்று பெயரிடுதல் தண்டனைக்குரிய குற்றம் என்று நமது சட்டம் சொல்கிறதா என்ன ?
ஒரு பெயர்ப்பலகைக்கு பிராமணாள் கபே என்று பெயர் வைப்பதும் தர்மபுரியில் 160 குடிசைகளை எரிப்பதும் ஒன்றே என்று கருதும் அளவுக்கா கீழிறங்கிவிட்டோம் ?
அன்புடன்
பொன்.முத்துக்குமார்
//நிச்சயமாக கேட்கலாம் நண்பரே. பொதுவிடத்தில் உணவு விடுதி என்பதாலேயே அதை எப்படி கட்ட வேண்டும், என்ன பெயர் வைக்கவேண்டும், என்ன அங்கே பரிமாற்ற வேண்டும் என்பதற்கெல்லாம் யாரும் எந்த நிபந்தனையும் விதித்துவிட இயலாது. இதில் எந்த இடத்திலாவது விதிகளை மீறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசை சேர்ந்தது. வேறு யாருக்கும் இதில் எதிர்ப்பு தெரிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை. பிடிக்காதவர்கள் புறக்கணிக்கலாம். அவர்களது உரிமையும் எல்லையும் அவ்வளவே. குண்டாந்தடியோடு வருவதற்கல்ல.
//
கடைசி வாக்கியம் மட்டுமே சரி. அதுவும் முழுமையாகன்று. குண்டாந்தடியோடு வரக்கூடாது. எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
என்ன பரிமாறவேண்டும்? எப்படிக்கட்ட வேண்டும்? என்று விதிகள் உள. எடுத்துக்காட்டாக, இரயில்வே ஸ்டேஷன் எல்லைக்குள் முன் நீங்கள் ஓட்டல் கட்டமுடியாது. அனுமதிபெற்றுக் கட்டுபவர்கள் என்ன விற்கிறார்கள்? என்ன விலைக்கு? என்பதை இரயில்வேயே முடிவு செய்யும். அதைப்போல மற்ற பொதுவிடங்களில்.
உள்ளே விற்கும் பொருள்களை தரம் சோதிக்க அரசு உணவு அதிகாரிகளை நியமித்துள்ளது. அவ்வுணவில் தரமில்லையென்றால், சாப்பிடுபவர்கள் அவர்களிடம் சென்று புகார் கொடுக்கலாம். எங்கே உணவு சமைக்கப்படவேண்டும்? எப்படி சமைக்க வேண்டும்?. சிக்கன் பிரியாணியென்று காக்காவை வெட்டிப்போட முடியாது. மட்டன் கறியென்று மட்டனோடு மாட்டுக்கறியைச் சேர்த்து ஏமாற்ற முடியாது. சாப்பிடுவர் இதில் கலப்பு என்றால் அரசு அதிகாரிக்கு மொபைலிலேயே சொன்னால் அவர் வருவார். ஓட்டல் காரர் தவிப்பார்.
பெயர்ப்பலகை பொதுமக்களுக்கு. ஓட்டல்காரருக்கன்று. எப்பெயரும் வைத்துக் கொள்ளமுடியாது. அதற்கும் எல்லையுண்டு. எ.கா. பொதுமக்களின் ஒருசாராரை இழிவுபடுத்தும் பெயர்கள் வைக்ககூடாது. அரசு நிறுத்தும். பாதிக்கப்பட்டோ அரசிடம் புகாரளிப்பர். ஒரு சினிமாவுக்கு தெயவத்திருமகன் என்று பெயர் வைத்ததை எதிர்த்தார்கள். எனவே தெய்வத்திருமகள் என்று மாற்றினார்கள். கீதை என்ற பெயர் வைத்ததை எதிர்த்தனால், புதிய கீதை என்று மாற்றினார்கள். துப்பாக்கி படம் இசுலாமியர்கள் அனைவரையும் டெரரிஸ்டுகள் என்று பார்வையாளர்கள் உணரும்படி செய்கிறது என்று எதிர்ப்பு தெரிவித்தபடியால், அதில் பல காட்சிகள் வெட்டப்பட்டன.
சமூகவாழ்வில், தனிநபராக அனைத்துச் சுதந்திரங்களை அனுபவிக்க விழைவோர், வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. வந்தால் அச்சுதந்திரங்களுக்கு ஓரெல்லையை புறச்சமூகம் வைக்கும். கடைபிடித்தே தீரவேண்டும்.
//இவர்களுக்கு பிரச்சினை என்றால் அரசை அணுகலாம், நீதி மன்றத்தை நாடலாம். அதை விடுத்து கும்பலை காட்டி மிரட்டுதல் கேவலமான காரியம்.
//
மிரட்டினால் தவறு. ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கலாம். பொதுப்பிரச்சினை எல்லாவற்றையும் முதலிலேயே அரசிடம் தெரிவிக்க மாட்டார்கள். முதலில் தாங்களாகவே போராடுவார்கள். அவ்வெதிர்ப்பு தோல்வியடைந்தால் அரசிடம் போவார்கள்; அல்லது நீதிமன்றத்துக்குப்போவார்கள்.
//// பிராமணர் என்று எவருமே இன்றில்லை. அப்போதும் இல்லை. இந்து மதம் அதை ஒரு ஜாதியார் வைத்துக்கொள்ளும்படி சொல்லவில்லை.//
அப்புறம் எதற்கு போராட்டம், மண்ணாங்கட்டி, தெருப்புழுதி எல்லாம் ? இல்லாத ஒரு பெயரை தனது உணவு விடுதிக்கு சூட்டும் பைத்தியக்காரர்கள் என்று இடக்கையால் புறக்கணித்து விட்டுப்போகவேண்டியதுதானே
//
அதை அவர்கள் சொல்லவில்லை. நான் சொல்கிறேன். இடக்கையால் புறக்கணிக்க இந்துமதம் பார்ப்ப்னர்களின் தனிப்பட்ட சொத்தாக இருக்கவேண்டும். இந்துமதத்தில் பார்ப்
பனர்கள் இருந்தால் அதை இழிவுபடுத்தக்கூடாது. மதித்து நடக்க வேண்டும். தங்களைப் பிராமணர்கள் என்று அழைத்துக்கொள்வது இந்துமதத்தை இழிவுபடுத்துவதாகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இம்மதத்தின் பிரச்சினையே இதுதான். இதற்காகவே பலர் இம்மத்தைவிட்டார்கள். இன்னும் தொடர்கிறது. பிராமணர் என்ற சொல்லை தமக்காக வைத்துக்கொள்வது உள்ளோக்கம் கொண்டது. கிருஸ்ண அய்யர் என்ன சொன்னார் தெரியுமா? என் பள்ளிச்சான்றிதழ் என்னை 'இந்து பிராமணர்' என்று சொல்கிறதே நான் என்ன செய்வேன்? என்று. அதாவது பேபியாக இருக்கும்போதே இவர் பிராமணர் ஆகிவிட்டாராம்? அரசு இதைத்தடை செய்தால் பார்ப்ப்னரக்ள் இந்து இயக்கங்களை ஏவிவிடுவார்கள் எனவே அரசு தடைசெய்யப்பயப்படுகிறது. பிராமணாள் கஃபே என்ற பெயர் எங்கிருந்து வருகிறது? துர்பிரயோகத்திலிருந்து. பார்ப்ப்னரகள் கஃபே என்றாலே போதுமே. வெஜிட்டேரியன் என்று.
//யார் யாரெல்லாம் தம்மை எப்படியெல்லாம் அழைத்துக்கொள்ளவேண்டுமென்று தீர்மானிக்க இவர்கள் யார் ? யார் தந்தார்கள் அந்த அதிகாரத்தை இந்த கும்பலுக்கு //
அதிகாரமெல்லாம் எவரும் எவரிடமும் கேட்டுப்பெறத் தேவையில்லை. எல்லாருடைய உணர்வுகளை ஒரு குறிப்பிட்டக்கும்பல் பிரதிபலிக்கலாம். தமிழகத்தில் உள்ள எல்லாரும் பிராமணாள் கஃபேயைப்பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை. எனவெ சரி என்பது எப்படி? பார்ப்பனர்கள் செய்யும் ஜாதீயத்தை மக்கள் எதிர்க்கவில்லையென்றால், ஏற்றுக்கொண்டார்கள் என்றாகுமா? வன்னியர்கள் செய்ததை பத்திரிக்கைகளும் கம்யூனிஸ்டுகளும்தான் எதிர்த்தன. எல்லாரும் சரியென்று சொன்னதாக ஆகிவிடுமா? பிள்ளைகள் உத்தபுரத்தில் செய்ததை பொதுமக்கள் ஒன்றும் பேசவில்லையென்றால் சரியென்றனர் என்று சொல்வீர்களா?
***எந்த இந்து மறையும் இந்து மதத்தை முழு முற்றாக சொந்தம் கொண்டாட இயலாது. அதற்கான ஆதாரிட்டி-யும் எந்த இந்து மறைக்கும் இல்லை.***
ஆக, அப்படிக் கேவலமாகச் சொல்வது உண்மைதான் என்று இங்கே பூசி மறைக்கபடுகிறது..
அதாவது அபபடி ஒரு மறை சொல்வது உண்மைதான் என்பதை இங்கே மூடி மறைக்க முன்படுகிறாரா இந்த விஷமி???
இல்லை அதனாலென்ன என்கிறாரா??
***எனவே ரூம்பு போட்டு யோசிப்பவர்களுக்கு இந்நிகழ்வு மனம் நோக வைப்பது புரிந்துகொள்ளக்கூடியதே. ***
ஆக அவன் மனம் நோகுவது உமக்குப் பிரச்சினையில்லை. அவன் பிரச்சினை அவன் அவமானத்துக்காக அவன் போராடுறான். நீர் வாயை மூடிக்கிட்டு இருந்தால் என்ன? பிராமனாளுக்கும் அவன் வப்பாட்டி மகன்களும் பிரச்சினை. இடையில் நீர் யாரு பஞ்சாயத்து வைக்க?
**மனம் நோகவைக்கும் எல்லா நிகழ்வுகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்த தில் உண்ட இவர்களிடம் ?***
அட அட அட அட!!!
என்ன ஒரு கேவலமான ஒரு லாஜிக். என் மனம் நோகுதுனு, என் கண்ணில் படும் ஒரு விடயத்தை நான் எதிர்க்கிறேன் என்றால், நீ உலகத்தில் உள்ள எல்லா மனம்நோகும் விசயங்களையும் எதிர்க்கனும் என்கிறார் ஒரு விஷமி.
என்ன ஒரு வியாக்யாணம்!!!
*** "இதுவே 'தேவர் கபே' என்றோ 'நாடார் கபே' என்றோ இருந்திருந்தால் தி.க வீரப்புலிகளின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது" என்று. எதிர்பார்த்தபடியே பின்பக்கத்தில் பதுக்கிவிட்டார் :)****
Where did you find, 'தேவர் கபே' and 'நாடார் கபே' ???
You are making your own STORY now using your imagination, HUH??
இல்லாத ஒரு விடயத்தை/கடையை நீர் ஏன் கேள்வியாத் தொடுத்து நீரே பதில் சொல்லிக்கிட்டு??
உமக்கு எங்கேயோ கிடைத்த "வீரப் பதக்கத்தையும்" இங்கே வந்து பிதற்றிக்கொண்டு..
இவரு இல்லாத ஒண்ணு இருந்தால் எப்படி இருக்கும்னு கேட்டாராம். உடனே இவரு கேட்ட கேள்வியப் பார்த்து இவரைப் பார்த்து பயந்து ஓடிட்டாங்களாம்..சுத்தமான பேத்தல்!!
அதாவது தேவர் கபே, நாடார் கபே என்று அன்றும் சரி, இன்றும் சரி கடைகள் எதுவும் இல்லை!
அதனால் நீர் பேசுவது வெட்டிப் பேச்சு இல்லைனா சுத்தமான உளறல்.
Don't make up stories of your own. Let us talk about what is really happening. WAKE UP!!!
****/ பிராமாணாள் என்றாலே அப்படியென்றும், அப்பெயரிருந்தால் சூத்திரன் என்று வருமென்றும், அப்படி சூத்திரன் என்றால், பிராமணனின் வைப்பாட்டிக்குப் பிறந்தவன் என்று இந்து மறையொன்று சொல்லியதாகவும், எனவே இப்பெயரை வைப்பது பலரை மனநோக வைப்பதாகவும்தான் பலர் எழுதியிருக்கிறார்கள். //
எந்த இந்து மறையும் இந்து மதத்தை முழு முற்றாக சொந்தம் கொண்டாட இயலாது. அதற்கான ஆதாரிட்டி-யும் எந்த இந்து மறைக்கும் இல்லை. ****
நீர் என்ன சொல்றீர்???
அதாவது அப்படி ஒரு இந்து மறை சொல்வது உண்மைதான் என்பதை ஒத்துக்கொண்டு.. அதனால் என்ன???னு பிதற்றுகிறீரா??
இதையே பூசி மொழுகி சொல்கிறீர்???
அப்படித்தானே???
ஆக, இங்கே நீர் யாரு?? பாதிக்கப்பட்ட அவன் மனம் நோகும் விடயத்தை அவன் எதிர்க்கக்கூடாதுனு சொல்ல நீர் யாரு??
உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போக வேண்டியதுதானே???
------
***எனவே ரூம்பு போட்டு யோசிப்பவர்களுக்கு இந்நிகழ்வு மனம் நோக வைப்பது புரிந்துகொள்ளக்கூடியதே. ?***
ஆக, அவன் மனம் நோகும்படி நடக்கும் ஒரு விடயத்தை அவன் எதிர்ப்பதை நீர் புரிந்து கொள்றீராக்கும்.
மூளை எப்போவாது கொஞ்சம் வேலை செய்யும்போல!
***மனம் நோகவைக்கும் எல்லா நிகழ்வுகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்த தில் உண்ட இவர்களிடம் ***
என்ன ஒரே பிதற்றலா இருக்கு???
அவன் மனம் நோகும் விடயத்தை அவன் பெரிது படுத்துறான். அது அவன் உரிமை.. நீர் என்ன சொல்ல வர்ரீர்??
உலகில் உள்ள எல்லா மனம் நோகும் பிரச்சினையையும் அவன் கேட்டுவிட்டு இதை கேக்கனும். இல்லைனா கேக்கக்கூடாதானா?
மன ஊனமா உமக்கு?? இல்லைனா ஏன் இப்படி பிதற்றுகிறீர்..
"தில்", "ரூம்பு போட்டு" மண்ணாங்கட்டினு வார்த்தை ஜாலங்களுடன் சுத்தமான உளறல்!!!
// என்ன பரிமாறவேண்டும்? எப்படிக்கட்ட வேண்டும்? என்று விதிகள் உள. .... ஓட்டல் காரர் தவிப்பார்.
//
இதைத்தான் சுருக்கமாக இப்படிசொன்னேன்.
"இதில் எந்த இடத்திலாவது விதிகளை மீறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசை சேர்ந்தது."
அதை விரித்துப் பொருள் விளக்கம் கொண்டமைக்கு நன்றி :)
// பெயர்ப்பலகை பொதுமக்களுக்கு. ஓட்டல்காரருக்கன்று. எப்பெயரும் வைத்துக் கொள்ளமுடியாது. அதற்கும் எல்லையுண்டு. எ.கா. பொதுமக்களின் ஒருசாராரை இழிவுபடுத்தும் பெயர்கள் வைக்ககூடாது. அரசு நிறுத்தும். பாதிக்கப்பட்டோ அரசிடம் புகாரளிப்பர். //
ஒரு வணிக நிறுவனத்தின் பெயர்ப்பலகை என்பது பொதுமக்களுக்கு அது என்னவிதமான நிறுவனம் என்பதை தெரிவிக்கவே. ஆனால் அதை இன்னவிதமாகத்தான் தெரிவிக்கவேண்டும் என்று அரசைத்தவிர வேறு எவரும் கட்டாயப்படுத்த முடியாது. கூடாது. சட்டத்துக்கு உட்பட்ட பெயராக இருக்கும்போது மூன்றாம் நபர் வந்து 'என் மனம் புண்படுகிறது' என்றால் அவர் அதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லலே ஆரோக்கியமான நடைமுறை. இந்த 'மனம் புண்படுகிறது', 'இழிவுபடுத்திகிரார்கள்' என்பதெல்லாம் சார்புத்தன்மை கொண்டது.
பிராமணர் என்பது மற்றவர்களை சூத்திரர் என்று மறைமுகமாக கூறி இழிவுபடுத்துவதாக குற்றம் சாட்டினால் அதே வாதத்தை வைத்து 'தேவர்' என்ற பதம் மற்றவர்களை 'அசுரர்' என்று மறைமுகமாக இழிவுபடுத்துகிறது என்று கூறி மனம் புன்படுபவர்களும் இருக்கலாம். உடனே தேவர் வகுப்பினரை எதிர்த்து கும்பல் கூட்டலாமா ?
அறிவழகன் என்ற பெயர் மற்றவர்களை முட்டாள் என்று மறைமுகமாக சுட்டுவதாக மனம் புண்பட்டு அந்த பெயர் கொண்டோரை எல்லாம் பெயர் மாற்ற சொல்லி நிற்பந்திக்கலாமா ?
இதோ கரூர் வைஸ்யா வங்கி உள்ளதே ! பிராமணன் என்பது வர்ணாஸ்ரமத்தை நினைவுபடுத்தும் என்றால் வைஸ்யன் என்ற பதமும் வர்ணாசிரமத்தை நினைவுபடுத்தும்தானே ? அப்போது அந்த வங்கியின் முன்னாள் சென்று போராடலாமே ?
// ஒரு சினிமாவுக்கு தெயவத்திருமகன் என்று பெயர் வைத்ததை எதிர்த்தார்கள். எனவே தெய்வத்திருமகள் என்று மாற்றினார்கள். கீதை என்ற பெயர் வைத்ததை எதிர்த்தனால், புதிய கீதை என்று மாற்றினார்கள். துப்பாக்கி படம் இசுலாமியர்கள் அனைவரையும் டெரரிஸ்டுகள் என்று பார்வையாளர்கள் உணரும்படி செய்கிறது என்று எதிர்ப்பு தெரிவித்தபடியால், அதில் பல காட்சிகள் வெட்டப்பட்டன.//
இதெல்லாமே அர்த்தமற்ற மிக அபத்தமான போராட்டங்கள். திரைத்துறையினர் வணிகரீதயாய் பாதிக்கப்படுவோம் என்ற பயத்தில் உடனடியாக பணிந்து போவது இயல்பே. அதில் ஒன்றும் பெரிய விஷயமில்லை.
// சமூகவாழ்வில், தனிநபராக அனைத்துச் சுதந்திரங்களை அனுபவிக்க விழைவோர், வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. வந்தால் அச்சுதந்திரங்களுக்கு ஓரெல்லையை புறச்சமூகம் வைக்கும். கடைபிடித்தே தீரவேண்டும். //
சட்டத்துக்குட்பட்டு எவரையும் பாதிக்காத வகையில் பொதுவெளியில் புழங்கும் ஒருவரை கும்பல் பலத்தை காட்டி பணிந்துபோகச்செய்வது காட்டுமிராண்டித்தனம். தி.க.காரர்களைவிட பெரும் கும்பல் பலமும் தசை பலமும் பிராமணர்களுக்கும் இருந்தால் அப்போது இதே போராட்டம் நடந்திருக்குமா என்று எண்ணிப்பார்ப்பது நலம் பயக்கும்.
// தங்களைப் பிராமணர்கள் என்று அழைத்துக்கொள்வது இந்துமதத்தை இழிவுபடுத்துவதாகும். ... பிராமணர் என்ற சொல்லை தமக்காக வைத்துக்கொள்வது உள்ளோக்கம் கொண்டது.//
இதில் எந்த இழிவுபடுத்தலும் இல்லை. 'எவன் பிரம்மத்தை அறிந்தவனோ அவன் பிராமணன்' என்ற சுருக்கமான வரையறை இந்துமதத்தில் சொல்லப்பட்ட விஷயம்தான். இதில் என்ன இழிவுபடுத்தல் இருக்கிறது ? பிரம்மத்தை அறிந்த எந்த வகுப்பினரும் பிராமணனே என்பது எப்படி இழிவுபடுத்தலாகும் ? என்னவிதமான புரிதல் இது ?
'தலையில் இருந்து தோன்றியவன்' என்றெல்லாம் சொல்லப்பட்டது ஒரு குறிப்பிட்ட ஸ்மிருதி நிலவிய காலகட்டத்தில். அதைவிட மேம்பட்ட நாராயண, யாக்ஞவல்கிய போன்ற - எல்லோரையும் சமமாக பாவித்த, அனைவருக்கும் சம உரிமைகள் உண்டென சொன்ன - ஸ்மிருதிகள் நிலவிய காலகட்டங்களும் உண்டு.
நான் அறிந்தவரையில் என்னால் இயன்றவரையில் மிக விளக்கமாக என் தரப்பை சொல்லிவிட்டேன்.
****Sri Krishna Iyer (Parambariya Bramanal Cafe)****
This is the name of the Restaurant written on the board.
It is a "Sri Krishna Cafe". A "Srikrishna vegetarian Cafe" would be fine!
Other than that, I dont understand why he needs to provide "his caste certificate" on the board instead of putting the "food menu"!
Why does he provide his case certificate there?
He attracts people and customer NOT based on the quality of the food he sells/provides there. He, rather wants to sell any "garbage" using his "caste certificate".
It is RIDICULOUS!
Of course he has the right to do whatever he wants to put on the board. He can also write "closed-minded moron muthu" is not allowed here as well! That is his right!
I am asking WHY he DOES what he does???
Not every brahmin is a great cook. There are good/bad/ugly cooks in every community or NOT?
//இதில் எந்த இழிவுபடுத்தலும் இல்லை. 'எவன் பிரம்மத்தை அறிந்தவனோ அவன் பிராமணன்' என்ற சுருக்கமான வரையறை இந்துமதத்தில் சொல்லப்பட்ட விஷயம்தான். இதில் என்ன இழிவுபடுத்தல் இருக்கிறது ? பிரம்மத்தை அறிந்த எந்த வகுப்பினரும் பிராமணனே என்பது எப்படி இழிவுபடுத்தலாகும் ? என்னவிதமான புரிதல் இது ?//
பிரம்மத்தை அறிந்த ஜாதியார் என்று எவருமில்லை. கண்டிப்பாக அந்த ஓட்டலை நடத்தியவர் இருப்பாரா? எனவே பிராமணன் என்று எவர் தன்னை அழைத்தாலும் அது ஒரு பொய்.
பிராமாணாள் கஃபே என்ற பெயர் இந்த ஓட்டலை நடத்துபவர் பிரம்மத்தை அறிந்தவர் என்று தெரிவிப்பதற்கன்று. இது ஒரு வெஜிட்டேரியன் ஒன்லி ஓட்டல் என்பதை அறிவிக்கமட்டுமே. அதை பார்ப்ப்னர் ஓட்டல் என்றோ, அந்தணர் ஓட்டல் என்றோ தெரிவித்துக்கொள்ளலாம்.
பிராமணன் என்பது ஒரு தத்துவம். அதை ஒரு ஜாதிக்கு இந்து மதம் கொடுக்கவில்லை. ஒட்டு மொத்தமாக லடசக்கணக்கான பேர் அடங்கிய ஒரு ஜாதியில் அனைவரும் பிரம்மத்தை அறிந்தவர்கள் என்று சொல்வது ஏமாற்று வேலை. அதைச்செய்தால் இந்துமத இழிபடுத்தலே.
ஓட்டல் நடத்துபவன் எப்படி பிராமணன் ஆவான்? அவன் என்ன பசித்தோருக்கா உணவளித்தான்? தொழிலாக இலாபத்திற்காகத்தானே கடை? எப்படி பிராமணன் ஆவான்?
பெரியார் தாசன் என்ற முன்னால் தி க வாதி , தன் பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றி கொண்டு முஸ்லிம ஹாய் மாறிவிட்டது எல்லோருக்கும் தெரியும் . மதம் மாறியது அவர் இஷ்டம் . youtube வீடியோவில் அவர் மதம் மாறிய பின் ஹிந்து களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் ஹிந்துக்களை மிகவும் கேவலமாய் பேசுகிறார். இதை கேட்டு பல முஸ்லிம் மக்கள் சிரிக்கின்றனர். ஒரு முஸ்லிம் கூட்டத்தில் பேசும் பொது இஸ்லாம் மதத்தில் உள்ள நல்ல கருத்துகளை பேசுவதை விட்டு, ஹிந்துக்களை தாக்கி பேச வேண்டிய அவசியம் என்ன என்று கேட்க யாரும் இல்லாதது வருத்தமாய் இருக்கின்றது.
இந்த தி க சப்போர்ட் செய்பவர்களின் profile போட்டோவை கவனித்தீர்களா ? குழந்தையின் போட்டோ ஒன்று இருக்கும். . உதாரணம், தமிழ் ஓவியா , காவ்யா ?. குழந்தை போட்டோவை போட்டால் அவர்களை யாரும் திட்ட மாட்டார்கள் என்று அவர்களுக்கு எண்ணம் ?
// பிரம்மத்தை அறிந்த ஜாதியார் என்று எவருமில்லை. கண்டிப்பாக அந்த ஓட்டலை நடத்தியவர் இருப்பாரா? எனவே பிராமணன் என்று எவர் தன்னை அழைத்தாலும் அது ஒரு பொய். //
மறுபடி மறுபடி தவறாகவே புரிந்துகொள்கிறீர்கள் அல்லது உங்களது வார்த்தைகளை என் வாயில் திணிக்கிறீர்கள். நான் அந்த உணவு விடுதி நடத்துபவர் பிரம்மத்தை அறிந்தவர் என்று சொல்லவில்லை. 'பிராமணன் என்ற பதம் மற்றவர்களை இழிவு படுத்திகிறது' என்று சொள்ளப்பட்டமைக்கு எதிராக அந்த சொல் தரும் பொருள் எவரையும் இழிவுபடுத்தவில்லை என்பதற்காக சொன்னது. அப்படி அழைத்துக்கொள்வது பொய்யாக இருக்கலாம். அது அவரது விருப்பம். சட்ட விரோதமாக இருக்கிறதா என்பதே நாம் பார்க்கவேண்டியது.
// பிராமாணாள் கஃபே என்ற பெயர் இந்த ஓட்டலை நடத்துபவர் பிரம்மத்தை அறிந்தவர் என்று தெரிவிப்பதற்கன்று. இது ஒரு வெஜிட்டேரியன் ஒன்லி ஓட்டல் என்பதை அறிவிக்கமட்டுமே. அதை பார்ப்ப்னர் ஓட்டல் என்றோ, அந்தணர் ஓட்டல் என்றோ தெரிவித்துக்கொள்ளலாம். //
பார்ப்பனர் விடுதி என்றோ அந்தணர் விடுதி என்றோ ஐயர் விடுதி என்றோ அழைத்துக்கொள்ளலாம்தான். ஆனால் அந்த முடிவை அவரிடமே விட்டுவிடலாமே. அதை தீர்மானிக்கும் உரிமை நமக்கு இருப்பதாக நமக்கு நாமே கிரீடம் சூட்டிக்கொள்ளவேண்டாமே. மக்களாட்சி நடக்கும் தேசம்தானே இது ?
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
//இந்த தி க சப்போர்ட் செய்பவர்களின் profile போட்டோவை கவனித்தீர்களா ? குழந்தையின் போட்டோ ஒன்று இருக்கும். . உதாரணம், தமிழ் ஓவியா , காவ்யா ?. குழந்தை போட்டோவை போட்டால் அவர்களை யாரும் திட்ட மாட்டார்கள் என்று அவர்களுக்கு எண்ணம் ?//
நல்ல நகைச்சுவை. நன்றி. ஃபோட்டோவை மாற்றி விடுகிறேன் ஒரு இந்துக்கோயிலையே போட்டுவிடுகிறேன். மகிழ்ச்சியா?
சரி, ஏன் காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு ஜாதியாருக்குப் பரிந்து வந்தார்? அதாவது அவர்கள் எதிர்க்கப்படும்போதுமட்டும் ஏன் அவருக்கு கரிசனை? அக்காலத்திலும் பல ஜாதியார்களுக்கும் பல பிரச்சினைகள் வந்தனவே? ஒட்டலில் பிராமணாள் என்று போடப்பட்டது இந்துமதத்துக்கு இழிவு என்று அவர் கருதி எடுக்கச் சொன்னாரா? அப்படி அவர் செய்திருந்தால் நான் சொன்னவை சரியென்றுதானே வரும்? பொ மு குமார் சொல்லுங்கள்?
Dear Iyan Yaar
யு ட்யுபிலும் இணைய தளங்களிலும் பலர் பலவிதமாகத்தான் பேசுவார்கள். நீங்கள் ஏன் அதைப்பார்க்கிறீர்கள்? நீங்கள் சொன்னாலும் நான் பார்க்கப்போவதில்லை. உங்களுக்கேன் என்னைப்போல வைராக்கியமில்லை.
I had heard him before his conversion. He talked about Periyar. But he began his speech reciting Thiruppaavai melodiously and passionately.
I sat up in expectation of a bombardment on Andaal. Nothing of the sort. He only finsihed saying that how a God could come and marry a human being?
This is not a profane qn. A common and ordinary qn.
I left the auditorium after the speech fully of jealous of Periyaardaasan for having learnt Thiruppaavai by heart, which I am still unable. Oh my God. I am what I am. He is what he is. Great!
It happened in Delhi Tamil Sangam many years ago.
Next time when you meet him, and if he is alone, boldly ask him: Cd u recite paasurams Sir?
யார் என்ன சொன்னாலும் பிராமணர்களின் மீது தமிழகத்தில் பச்சையாக ஜாதிக் கொடுமை நடந்து தான் வருகிறது. இன்னும் படியுங்கள்..!
http://hayyram.blogspot.in/2012/10/blog-post_21.html
/*"
It is a "Sri Krishna Cafe". A "Srikrishna vegetarian Cafe" would be fine!
Other than that, I dont understand why he needs to provide his caste certificate on the board instead of putting the "food menu!
"*/
naming a business is the owner's prerogative. Ambani's naming their group 'Reliance' does not imply that other businesses are 'unreliable' - nor any one can question Ambani on this ground that it is derogatory for others.
If you do not understand why the business was named like that, boycott providing business to the unit. Arguing in this manner (against the name) makes you all look defensive for no reason at all.
Interpreting religion, philosophy, culture and heritage to your convenience serves no good or purpose to anyone. Be objective.
*****If you do not understand why the business was named like that, boycott providing business to the unit.*****
If I don't understand, I will bring it up and try to get an answer.
This is how I educate people to boycott such worthless restaurants so that he will go out of business soon.
***Interpreting religion, philosophy, culture and heritage to your convenience serves no good or purpose to anyone. Be objective. ****
Are we talking about food or religion here?
Restaurant or TEMPLE here???
Get that first!
What is it sold at that restaurant?
I thought he sells idly, dosai, vadai and pongal.
I did not know that he sells religion, philosophy and culture there!
aa: You dont seem to understand what is being discussed here.
// சரி, ஏன் காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு ஜாதியாருக்குப் பரிந்து வந்தார்? அதாவது அவர்கள் எதிர்க்கப்படும்போதுமட்டும் ஏன் அவருக்கு கரிசனை? அக்காலத்திலும் பல ஜாதியார்களுக்கும் பல பிரச்சினைகள் வந்தனவே? ஒட்டலில் பிராமணாள் என்று போடப்பட்டது இந்துமதத்துக்கு இழிவு என்று அவர் கருதி எடுக்கச் சொன்னாரா? அப்படி அவர் செய்திருந்தால் நான் சொன்னவை சரியென்றுதானே வரும்? பொ மு குமார் சொல்லுங்கள்? //
காஞ்சி சங்கராச்சாரியார் ஏன் ஒரு ஜாதியாருக்கு பரிந்து வந்தார் என்பதற்கோ அவர்கள் எதிர்க்கப்படும்போதுதான் அவருக்கு கரிசனம் ஏற்படுகிறதா என்பதற்கோ ஓட்டலில் பிராமணாள் என்று போட்டால் இந்து மதத்திற்கு இழிவு என்று கருதி எடுக்கசொன்னாரா என்பதற்கோ என்னிடம் மட்டுமல்ல, யாரிடமும் பதிலில்லை - அவர் இப்போது இல்லை என்னும்போது.
என்னுடைய தனிப்பட்ட யூகத்தின் அடிப்படையில் தேவை இல்லாமல் ஒரு சர்ச்சையை உருவாக்கவேண்டாமே என்ற எண்ணத்தால்கூட இருக்கலாம்.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்
// பெரியார் தாசன் என்ற முன்னால் தி க வாதி , தன் பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றி கொண்டு முஸ்லிம ஹாய் மாறிவிட்டது எல்லோருக்கும் தெரியும் . மதம் மாறியது அவர் இஷ்டம் . youtube வீடியோவில் அவர் மதம் மாறிய பின் ஹிந்து களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் ஹிந்துக்களை மிகவும் கேவலமாய் பேசுகிறார். இதை கேட்டு பல முஸ்லிம் மக்கள் சிரிக்கின்றனர். ஒரு முஸ்லிம் கூட்டத்தில் பேசும் பொது இஸ்லாம் மதத்தில் உள்ள நல்ல கருத்துகளை பேசுவதை விட்டு, ஹிந்துக்களை தாக்கி பேச வேண்டிய அவசியம் என்ன என்று கேட்க யாரும் இல்லாதது வருத்தமாய் இருக்கின்றது //
இதில் வருத்தப்படவோ வேதனைப்படவோ எதுவுமில்லை. அவர் செய்வது விமர்சனம். நீங்கள் சொல்வதை பார்த்தால் ஒருவேளை தானிருந்த மேடையின் இயல்பு கருதி சற்று எல்லை மீறி இருந்திருக்கலாம். இதெல்லாம் ஒன்றுமே இல்லை. எவ்வளவோ எதிர்ப்புகளையும் தடைகளையும் சவால்களையும் தாண்டித்தான் வந்திருக்கிறது இந்து மதம்.
அவர் ஹிந்துக்களுக்கு எதிராய் பிரச்சாரம் செய்வதாலோ, ஹிந்துக்களை கேவலமாய் தாக்கி பேசுவதாலோ அவர் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடுமா என்ன ? உங்களுக்கு அவர் பேசுவது பிடிக்கவில்லைஎன்றால் புறக்கணியுங்கள், அவ்வளவே.
மட்டுமன்றி விமர்சனத்துக்கு உட்படாதது எதுவுமே இல்லை என்பதால், அவருடைய விமர்சனத்தைக்கூட நேர்மறையாக நாம் எடுத்துக்கொண்டு அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் சுயபரிசோதனை செய்துகொள்ளலாம். அதிலொன்றும் பிழையில்லைதானே ?
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
அய்யா ஒரு சேதி தெரியுமா....
வினவு தளத்தில் இருக்கிறது...அதே திருச்சியில் இரண்டு கிறிஸ்த்துவ அமைப்பு சுடுகாட்டில் சுவர் எழுப்பி அது கோர்டில் வழக்காகவிட்டதாம்... அங்கு சமூக நீதி பாதிக்கப் படவில்லையாக்கும்... என்ன நீதியோ....?
//என்னுடைய தனிப்பட்ட யூகத்தின் அடிப்படையில் தேவை இல்லாமல் ஒரு சர்ச்சையை உருவாக்கவேண்டாமே என்ற எண்ணத்தால்கூட இருக்கலாம்.
//
மஹா பெரியவா எடுக்கச்சொன்னார் என்று எழுதியவர் டோண்டு இராகவன். அவர் சொன்னதிலிருந்துதான் எனக்குத் தெரியவந்தது. இராகவன் யூகத்திலா எழுதினார்? அவர்தான் சொல்லவேண்டும். அப்படி யூகத்தை வைத்து பெரிய ஆட்களை இழுத்துப் பேசுவது நல்லதன்று. யூகமாயிருப்பின். டோண்டு இராகவன் மே பிளீஸ் கிலாரிஃபை. யூகமா உண்மையா? உண்மையென்றால் பொ மு குமார் பதில் சொல்லலாம்.
சரி பொ மு குமார்...மஹா பெரியவா 'பிராமாணாள்' எனவழைத்துக்கொள்ளக்கூடாதென்று சொன்னாரா? சொல்லவில்லையா? சொல்லவில்லையென்றால் ஏன்? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும்.
வினவுவின் கட்டுரை உணர்ச்சிக்குவியல். அவர் சிந்தனை செய்யவில்லை. அவர்களைப்பற்றி இங்கு விவாதம் தேவையில்லை. சமூக நீதியை சமூகம்தான் முதலில் கொடுக்க வேண்டும். அதைச்செய்ததா சமூகம்? செய்யவில்லையென்றால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் தலித் கிருத்துவர்தானே? அவர்கள் வெளியேறி வேறுமதத்துக்குப் போய்விட வேண்டியதுதானே? இந்து மதத்தில் தனக்கு சமூக நீதிகிடைக்கவில்லையென்று அம்பேத்கர் புத்தமத்ததுக்குத் தாவவில்லையா? அதைப்போல இவர்கள் செய்தாலென்ன?
//naming a business is the owner's prerogative. Ambani's naming their group 'Reliance' does not imply that other businesses are 'unreliable' - nor any one can question Ambani on this ground that it is derogatory for others.
//
Not agree. Naming a business too shd be responsible and if social concern is ridden rough shod, the name will be called into question. There are upteen examples to show that names caused riots.
I cant name my business: PaarppnarkaaL allaathavarukku mattum.
It is racism. I cant argue that I can name as I like.
//இராகவன் யூகத்திலா எழுதினார்? அவர்தான் சொல்லவேண்டும்.//
யூகமே இல்லை. உண்மை. சங்கர மடம் ஸ்மார்த்தர்களுக்கு ஆனது. அதன் சீடர் முரளி ஐயர். அவர் காஞ்சி பெரியவாளைப் பார்த்து ஆலோசனை கேட்க, அவரும் தந்தார், சண்டையை விலக்குமாறு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெயர் வைப்பது என் உரிமை.அதில் காஞ்சி சங்கராச்சாரியார் தவிர யாரும் தலையிட முடியாது.
சரி
பாரம்பரிய பிராமணாள் மாட்டு கறி கடை என்று நான் மாட்டு கறி கடை துவங்கி அதற்கு பெயர் வைத்தால் சரி என்பீர்களா
இது சரி என்றால் அதுவும் சரி
இது தவறு முடியாது,கூடாது என்றால்
//ஆலோசனை கேட்க, அவரும் தந்தார், சண்டையை விலக்குமாறு.//
சண்டையை விலக்கச்சொல்வது ஒரு சாமியாரின் கடமை. அதை ஆலோசனை சொன்னாரென்பது சரியன்று. அவர் கடமையை அவர் செய்தார்.
நிற்க. ஏன் அச்சண்டை என்று விசாரித்தாரா? விசாரித்திருந்தால் அவருக்குத் தெரியவரும் பிராமணாள் கஃபே என்னும்பெயர் இந்து மதத்தை இழிவுபடுத்தலேயென்று. ஒரு ஓட்டலுக்கு ஏன் அப்பெயர்?
மற்றவர்கள் இம்மதத்தை இழிபடுத்தினால் அவர்களுக்கொரு காரணம் இருக்கும். ஒரு பார்ப்ப்னர், அதிலும் காஞ்சி மடத்துச்சீடர், பண்ணக் காரணமென்ன? By birth, by becoming a follower of a Mutt, by just knowing and reciting Gayatri Mantra and doing sandhya vanthanam, etc. no one can become a Brahmanan. The concept is not so cheap as to be used for the signboard of a hotel set up to earn profits.
ஒருவேளை அப்படி செயதால் இழிவு நமக்குத்தான். நீ உண்மையான இந்துவென்றால் அப்பெயரை விடு என்று சொல்லியிருப்பாரென என் யூகம். அவரின் தெயத்தின் குரல் என்ற பனுவலில் பிராமணன் என்பவன் எவன் என்று சொல்லியிருப்பார். அதன் படி கண்டிப்பாக ஒரு ஓட்டல் நடத்துபவன் கிடையாது. Running a hotel is for profit. It is no public service. To run it one requires to make a lot of compromises.
/*
Get that first!
What is it sold at that restaurant?
I thought he sells idly, dosai, vadai and pongal.
I did not know that he sells religion, philosophy and culture there!
*/
You are correct - he sells idli and vadai - not his name/brand. Name is an identifier for his business. If you do not like it, boycott - simple.
I like your concept of educating the world; but you keep shut when discrimination pops up or such controversies pop up in other religion. If you are true to your argument, do not do this selectively - i saw another comment that the commentor will only oppose what he does not like. In the same mode, the owner chooses the name to his will. If you do not like it boycott, or go through legal means to challenge it. You guys can only bully - cannot face the law in a lawful manner - such is the fate of our Dravida Nadu.
Dondu is right - all we need is a business owner with his own business in his own building.
***you keep shut when discrimination pops up or such controversies pop up in other religion
If you are true to your argument, do not do this selectively - i saw another comment that the commentor will only oppose what he does not like.***
aa: I dont remember meeting you in any other debate. Let us talk what is being discussed here! Dont jump here and there. OK???
***In the same mode, the owner chooses the name to his will. If you do not like it boycott, or go through legal means to challenge it.****
I dont have time to go and boycott if some moron is trying to sell his ஊசிப்போன வடை using his caste label! But I will certainly discuss about it in an open forum. I will try educate ignorant people how cheap he is in his thoughts! That is my right and it is my freedom of speech. That is what I am doing here!
***Dondu is right - all we need is a business owner with his own business in his own building.***
You need to help the poor brahmanan to get his own building. Do work on it instead of wasting your time with me!
____________
I wonder Jeyalaitha can contest in an election, asking for votes..
* I am Jeyaraman Jeyalalitha Iyengar- traditional orthodox brahmin!
Please vote for me!
I suggest her to do that in her next election! You don't need to worry, aa. Keep your mouth closed tight and keep off from this now as it is between me and her!
I think she would not dare to do that. Because here she needs that so-called shudra votes! Without them she will be out of business! LOL
// மஹா பெரியவா எடுக்கச்சொன்னார் என்று எழுதியவர் டோண்டு இராகவன். அவர் சொன்னதிலிருந்துதான் எனக்குத் தெரியவந்தது. இராகவன் யூகத்திலா எழுதினார்? அவர்தான் சொல்லவேண்டும். அப்படி யூகத்தை வைத்து பெரிய ஆட்களை இழுத்துப் பேசுவது நல்லதன்று. யூகமாயிருப்பின். டோண்டு இராகவன் மே பிளீஸ் கிலாரிஃபை. யூகமா உண்மையா? உண்மையென்றால் பொ மு குமார் பதில் சொல்லலாம்.
//
திண்ணை-யில் பின்னூட்டமிடும் அதே காவ்யாதானா நீங்கள் ? உங்கள் பின்னூட்டத்தில் நீங்கள் நிறைய வாசிப்பவர் என்று தெரிகிறது. 'ஆனால் யோசிப்பதிலும் பின்னூட்டமிடுவதிலும் மிகுந்த அவசரப்படுகிறீர்கள், கொஞ்சம் நிதானமாக இருக்கலாம்' என்று சொன்னால் கோவிக்கமாட்டீர்களே ? :)
பெயர்ப்பலகையை சங்கராச்சாரியார் எடுக்கச்சொன்னார் என்பதை நான் யூகமாக சொல்லவில்லை. அவர் ஏன் அப்படி சொன்னார் என்று சில கேள்விகளை அடுக்கியுள்ளீர்கள் அல்லவா ? ("சரி, ஏன் காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு ஜாதியாருக்குப் பரிந்து வந்தார்? அதாவது அவர்கள் எதிர்க்கப்படும்போதுமட்டும் ஏன் அவருக்கு கரிசனை? அக்காலத்திலும் பல ஜாதியார்களுக்கும் பல பிரச்சினைகள் வந்தனவே? ஒட்டலில் பிராமணாள் என்று போடப்பட்டது இந்துமதத்துக்கு இழிவு என்று அவர் கருதி எடுக்கச் சொன்னாரா?") அதற்குத்தான், 'அவர் இப்போது இல்லாதபோது என்னால் மட்டுமல்ல, எவராலும் இந்த கேள்விக்கு விடையளிக்க முடியாது. எனது தனிப்பட்ட யூகத்தில் ஒருவேளை தேவை இல்லாமல் ஒரு சர்ச்சை-யை கிளப்ப வேண்டாமே என்ற எண்ணத்தால் கூட அந்த பெயர்ப்பலகையை அகற்ற சொல்லி இருக்கலாம்' என்று சொன்னேன்.
என்னுடைய விளக்கம் அந்த அளவுக்கு போதாமல், குழப்பமாக, தவறாக பொருள் கொள்ளுமளவுக்கா இருக்கிறது ? :))
//
சரி பொ மு குமார்...மஹா பெரியவா 'பிராமாணாள்' எனவழைத்துக்கொள்ளக்கூடாதென்று சொன்னாரா? சொல்லவில்லையா? சொல்லவில்லையென்றால் ஏன்? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும். //
மறுபடியும் சொல்கிறேன், சங்கராச்சாரியார் ஏன் அப்படி சொன்னார், இப்படி சொன்னார் என்பதற்கெல்லாம் அவர் ஒருவர்தான் பதிலிறுக்க முடியும். அல்லது சம்பந்தப்பட்ட திரு முரளி அவர்களை கேட்டுப்பார்க்கலாம், ஏன் அந்த பெயர் பலகையை அகற்ற சொன்னார் என்று.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
***யூகமே இல்லை. உண்மை. சங்கர மடம் ஸ்மார்த்தர்களுக்கு ஆனது. அதன் சீடர் முரளி ஐயர். அவர் காஞ்சி பெரியவாளைப் பார்த்து ஆலோசனை கேட்க, அவரும் தந்தார், சண்டையை விலக்குமாறு.**
அவர் சண்டையை நிறுத்துவதற்காக செய்தாரோ, இல்லைனா அவருக்கும் இது தேவையில்லாத ஒண்ணுனு தோணுச்சோ???
" முரளிவால்! "பிராமனாளை" அகற்றினால் ஒண்ணும் குடிமுழுகிப் போகப்போவதில்லை, சாப்பாட்டை சுவையா சுத்தமா சமைத்து கஸ்டமரை அதிகமாக்குவோய்! நம்ம இந்துக்கள் அனைவரும் ஒண்ணு சேர நீரே இப்படி நம்மவாவப் பிரிச்சு தடையா இருக்கீரே அபிஷ்ட்டு" னு சொல்லியிருப்பா "பெரியவா.. அதுகூட பெரியவாவுடைய சுயநலமாகவும் இருக்கலாம்!
ஆக, முரளிவாலைப்போயி ஆலோசனை கேக்கத்த்தூண்டியது நம்ம "நாயக்கர்"தான். :-)
* தீண்டாமை மற்றும் இளம் விதவைகளுக்கு மொட்டையடிச்சு அநியாயம் செய்தது (மரப்பசு படிச்சுப்பாரும்) போன்றவைகூட சரினுதான் பாரம்பரிய பிராமனாள் நம்பிண்டு இருந்தா.."நாலு பேர்" தப்புனு சொன்னால்தான அவளாக்குப் புரியும்?. இல்லைனா அதையும் சரினு நெனச்சுண்டு, இன்னும் சொல்லிண்டே, செதுண்டே இருப்பா, பாரம்பரிய பிராமணாள்! :)))
Dear Dondu Sir
I remember there was a Joe malam, who vomit all the time. Now he comes in the name of Gavya. Like last time, I wish you don't give room for other than Hindus. They just want to live on other people troubles.
Anbudan
Samy N
I remember there was a Joe malam, who vomit all the time. Now he comes in the name of Gavya. Like last time, I wish you don't give room for other than Hindus. They just want to live on other people troubles.
//
I remember one malam who used to write in various forums. That malam is after other malams.
I think it is good to consider this person's suggestion. You may bar all except persons like him to comment in your blog.
இங்கே பக்கிரிசாமி எந்த விவாதமும் செய்யாமல் விவாதத்தில் உள்ள ஒரு பதிவரை அசிங்கமாக தனிநபர் தாக்குதல் செய்கிறார்..
கருத்தை சொல்லி சண்டை வந்து ஒருவரை ஒருவர் திட்டுவதாது பரவாயில்லை.
இந்தாளு என்ன செய்றான்??? இந்தத் தலைப்பு பத்தி ஒண்ணுமே சொல்லவில்லை. மாறாக சில பதிவர்களை வஞ்சம் தீர்க்கவே "அவதாரம்" எடுத்து வந்துள்ளான்.
காவ்யா எனக்குத் தோழர் எல்லாம் கெடையாது. We always have had opinion differences! பக்கிரிசாமிக்கு எதுக்காக பேச்சுரிமை கொடுக்கப் படனும்?
/**
aa: I dont remember meeting you in any other debate. Let us talk what is being discussed here! Dont jump here and there. OK???
**/
You do not have to know me for me to post in Dondu's blog. The posting is relevent to the context. If you do not understand, please read again ( I have included your statements as well in my comment)
/**
You need to help the poor brahmanan to get his own building. Do work on it instead of wasting your time with me!
**/
So you agree that you can only victimize a poor brahmin. Once he gets his property to run his business - you can do ***** about it - what a cowardly act.. well it is foolish to expect anything better from your kind of people. My mistake - I will stop commenting.
BRAHMNAAL.COM என்ற தளம் பதிவு செய்து இருக்கிறேன். அதை விரிவு செய்து பல்வேறு மக்களை சென்றடைய ' பிராமணாள்' மற்றும் ' பிராமணாள்' அல்லாதவர்களிடம் இருந்து கருத்துக்கள் வரவேற்க படுகின்றன. இருங்க. அவசர பட்டு ' பிராமணாள்' கிட்ட போகாதீங்க. it is not hosted yet!
Thanks Varun. At least I did not try to interfere in other religion. I did attacked a person who wanted to create hatred among religions. He belong s to my religion. I also said the facts. It is very stupid of people to have doctorate in Theology to attack other religion, in pseudo names.
// BRAHMNAAL.COM என்ற தளம் பதிவு செய்து இருக்கிறேன். அதை விரிவு செய்து பல்வேறு மக்களை சென்றடைய ' பிராமணாள்' மற்றும் ' பிராமணாள்' அல்லாதவர்களிடம் இருந்து கருத்துக்கள் வரவேற்க படுகின்றன. இருங்க. அவசர பட்டு ' பிராமணாள்' கிட்ட போகாதீங்க. it is not hosted yet! //
'பிராமணாள்' அல்லாத ஒருவனிடமிருந்து :
வாழ்த்துக்கள். பத்தோடு பதினொன்று என்றல்லாமல் சிறப்பாக, ஆழமாக, வாசிப்பின்பம் மட்டுமன்றி சிந்திக்கவும் வைக்கும்படியாக உள்ளடக்கம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். தொடங்குவது பெரிதில்லை தொடர்ந்து வலுவாக இயங்குவதே முக்கியம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
// I cant name my business: PaarppnarkaaL allaathavarukku mattum.
It is racism. I cant argue that I can name as I like. //
Agreed, it amounts to racism when you say "பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு மட்டும்".
But as long as it's not the case and as long as it's not against the rule of law, one can name one's business as one likes.
It may affect the business financially, but if the owner of the business doesn't care about it, why should the others ?
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
மாட்டு தோலை வைத்து எல்லா சாதிக்காரரும் வணிகம் செய்யலாம்.பயன்படுத்தலாம் என்றால் எந்த சாதிபெயரை யார் வேண்டுமானாலும் எந்த தொழிலுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அல்லவா
கடவுளால் உயர்வாக படைக்கப்பட்டவர்களால் நடத்தபடுவது என்று ஒரு கடைக்கு பெயர் வைத்தால்,விளம்பரம் செய்தால் மற்றவர்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்க உரிமை இல்லையா
இந்தியன் ஹோட்டல் என்று உலகம் முழுவதும் பல வங்காள தேசத்தவர் நடத்துகிறார்கள்,சைனீஸ் உணவு விடுதிகள் எல்லாரும் நடத்துவதில்லையா.அங்கும் இட்லி,கல் தோசை,சுறா புட்டு எல்லாம் கிடைக்கிறதே .அது சீனாவின் உணவா
மாட்டு கறி உண்ணும் பாரம்பரிய பிராமணர் குடும்பங்களை பட்டியல் போட முடியுமே .
குறிப்பிட்ட பாரம்பரிய வர்ணத்தினர் மாட்டு தோலை வைத்து வணிகம் செய்வது போல,மாட்டு கறியை ஏற்றுமதி செய்வது கூட நடைமுறையில் உள்ள விஷயம் தானே
சொந்த கட்டிடம் வந்தால் எதிரிலேயே பாரம்பரிய பிராமணாள் பீப் பிரியாணி சென்டர் என்று பிராமணரையே பார்ட்னெர் ஆக வைத்து கொண்டு துவங்கினால் போயிற்று
அப்போது இதற்கு ஆதரவாக நிற்பவர்கள் இழிவு படுத்துகிறார்கள் என்று போராட மாட்டார்கள் அல்லவா
Packirisamy!
Which is ur religion? Does ur religion permit u to call ppl malam? Who is the person whom u r attacking here? In which way is he against ur religion?
What s ur comment on my pt that no one can use the title Brahamanan. A person, if at all, is called by others a Brahmanan. He doesnot call himself so. Further, on individual by individual basis only. How come lakhs of ppl in TN r calling themselves Brahmins?
My Email id as kavya has been pilfered. Henceforth, only in this id. Pl note.
இன்டர்னெட் ஒரு பிரச்சினையேயில்லை. அது ரொம்பவும் கெட்டுக்கிடக்கு. எவர் எப்படியும் போட்டுவிட்டுப் போகலாம். அதனால் பிராமணாள் டாட் காம் ஒரு பெரிய தீரச்செயலன்று. ஜாதிவாரியாக, மத வாரியாக இன்டர்னெட் மக்களைப்பிரிக்கத்தான். அதை சமூக வெளியிலும் செய்யவேண்டுமா என்ற கேள்வி கண்ணனுக்கு.
So, kavya = sundara pandian, now???
Whatever!
------------
Packirisamy: I dont know whose religion is what and who is really who. It is hard to judge anybody in internet.
Joe amalan is NOT HERE! Why are you insulting him NOW??? I dont understand.
Here, the discussion is, Is this necessary to have a "caste label" in a restaurant?
Honestly I don't respect anyone who is using his caste label where it is so unnecessary. The reason he does it is because he does not believe in the quality of the food he is making.
Now, you are talking about religion here? The people who are concerned about it and protest against it are HINDUS only! So, there is no point in bringing up "other religion" issue here.
When it comes to a Muslim issue or Christian issue, Brahmins (who isolate themselves now) will accommodate the "same hindus" (who are nonbrahmins) in order to show that brahmins belong to majaority (hindus).
Now the same brahmins throw away the other hindus. LOL
// மாட்டு தோலை வைத்து எல்லா சாதிக்காரரும் வணிகம் செய்யலாம்.பயன்படுத்தலாம் என்றால் எந்த சாதிபெயரை யார் வேண்டுமானாலும் எந்த தொழிலுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அல்லவா //
படுத்தலாம் :) ஆனால் மாட்டுதோலை வைத்து அனைத்து சாதியினரும் வணிகம் செய்வது எந்த சாதிப்பெயரையும் தொழிலுக்கு பயன்படுத்துவதை நியாயம் செய்யாது. ஏனெனில் சாதி பெயர் தனிப்பட்ட குழுவினர் சார்ந்தது. ஆனால் இதில் சட்டரீதியான தடை எதுவும் இருக்காது என்பதே எனது புரிதில்.
// கடவுளால் உயர்வாக படைக்கப்பட்டவர்களால் நடத்தபடுவது என்று ஒரு கடைக்கு பெயர் வைத்தால்,விளம்பரம் செய்தால் மற்றவர்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்க உரிமை இல்லையா //
'பிராமணாள்' என்பது கடவுளால் உயர்வாக படைக்கப்பட்டவர்கள் என்று மட்டும்தான் பொருள் தருகிறதா என்ன ? ஒருவேளை நீங்கள் 'தலையிலிருந்து பிறந்தவன்' என்ற வரையறையை சுட்டுகிறீர்கள் என்றால், 'அது ஒரு ஸ்மிருதி-யின் வரையறை மட்டுமே, எனவே அது ஒரு குறிப்பிட்ட காலம் சார்ந்தது, எந்நாளுக்கும் பொருந்தாத வரையறை' என்பதே எனது புரிதல். தவறெனில் விளக்கவும்.
அந்த விடுதியின் உரிமையாளர் தான் இன்ன சாதியை சேர்ந்தவர் என்பதை உரக்க சொல்லுகிறார், அவ்வளவே. அதில் சட்ட ரீதியான தவறெதுவும் இல்லையெனில், ஆட்சேபம் தெரிவிக்க விரும்புபவர்கள் நாடவேண்டிய இடம் நீதிமன்றம். கும்பல் கூட்டி தசை வலிமை காட்டி மிரட்டி அடக்குவது என்ன தனம் என்று உங்களுக்கு சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன்.
// எதிரிலேயே பாரம்பரிய பிராமணாள் பீப் பிரியாணி சென்டர் என்று பிராமணரையே பார்ட்னெர் ஆக வைத்து கொண்டு துவங்கினால் போயிற்று
அப்போது இதற்கு ஆதரவாக நிற்பவர்கள் இழிவு படுத்துகிறார்கள் என்று போராட மாட்டார்கள் அல்லவா //
மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். :) 'பார்ப்பானை முதலில் அடி' போன்ற வாசகங்களுக்கே போராட இயலாதவர்களால் இதற்கா போராட முடிந்துவிடப்போகிறது ? :)
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
எல்லாஞ்சரி இதே ஐயர், குல்பி ஐயராக வும், கணபதி ஐயர் பேக்கரி முதலாளியாகவும் கூடத்தான் கான்பிக்கபட்டார் அப்போது எங்கே போனது இந்த வாதப்பிரதிவாதங்கள்?!
அவர் எப்படித்தான் பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னாலும் அது அவரது உரிமையில் தலையீடு செய்வதாகவே முடியும்.
இந்த போராட்ட / ஆர்ப்பாட்ட வாதிகளின் விளக்கவுரையின் படி பிராமணர் = பார்ப்பனர். பார்பனர் = ஐயர் / ஐயங்கார். மேலும் (உயர் சாதியம்) பிராமணியம் = பார்ப்பனீயம். இவைகள் ஒன்றுக்கொன்று இணையாகவே கொள்ளப்பட்டது. ஆனால் இப்போது பிராமணர் கூடாது பார்ப்பனர் என்றால் பரவாயில்லை மற்றும் ஐயர் / ஐயங்கார் என்றால் பரவாயில்லை. நாளை ஐயர் / ஐயங்கார் என்ற பெயருக்கும் எதாவது காழ்ப்பு காரணம் கூறலாம்!!!.
பிராமணன் என்று யாரும் இல்லை என்பதால் அவ்வாறு பெயர் வைக்க முடியாது என்பது என்ன விதமான கருத்து என்று புரியவில்லை?
பீனிக்ஸ் என்றும் கூடத்தான், அன்னம் என்றும் கூடத்தான் ஏதும் பறவை இப்போதில்லை, எனவே அவ்வாறு பெயரிட முடியாதா?
//Buddhaghosa in his Digha[19] says that the "Tathagata (Buddha) is dhammakaya brahmakaya dhammabhuta brahmabhuta."[20]//
// Brahmin (also called Brahmana; from the Sanskrit brāhmaṇa ब्राह्मण) is a term in the traditional Hindu societies of Nepal and India. Brahman, Brahmin, and Brahma have different meanings. Brahman refers to the Supreme Self. Brahmin (or Brahmana) refers to an individual, while the word Brahma refers to the creative aspect of the universal consciousness. The English word brahmin is an anglicised form of the Sanskrit word Brāhmana //
பிரஹ்மன் என்பதும் பிராஹ்மின் என்பதும் குழப்பிக்கொள்ளப்படுகிறது. மேலும், பிராமணர் என்பது இந்தியா முழுதும் ஜாதிப் பெயராகத்தான் பார்க்கப்படுகிறது.
சமஸ்க்ருத மூலம் ப்ராஹ்மணா அதன் தமிழ்ப்படுத்தல் பிராமணாள்.
இதை விட காமெடி இந்த இரண்டு சுட்டிகளில் காணப்படக்கூடும் :
American Brahman Breeders Association / Welcome !
www.brahman.org/
Organized in 1924, the ABBA celebrates the American Brahman, the first beef cattle breed developed in the United States.
The Brahman Society of South Africa
www.brahman.co.za/
South African society of Brahman breeders. Includes mission statement, Brahman breed information, upcoming event details, and online journal.
மேலும், திரு. ஈ. வெ. ரா. அவர்களுக்கு ஏற்கனவே ஆழ்வார் பட்டம் வழங்கப்பட்டு விட்டது - ஹிந்து மத மேன்மைக்கு பாடுபட்டதற்காக!!
எனக்கென்னவோ இந்த திரு. டோண்டு மாமா அவர்கள் ஒரு திட்டத்தோடுதான் தோண்டிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் நாத்திகம் ஏன் வளரவில்லை என்பதற்கு இந்தப் பதிவுப் பின்னூட்டங்களை ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
பிராமணாள் கபேயை பெயரை எதிர்ப்பதால் நாத்திகம் வளர்ப்பதாக நினைக்கும் திகவினரை எண்ணி வருந்துகிறேன்.
அவர்கள் செய்வது வயிற்றுப்பிழைப்பு நாத்திகம். அதை நாமும் பின்பற்ற வேண்டுமா?
யார் வேண்டுமானாலும் பிராமணாள் கபே என்று பெயர் வைக்கலாம். எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. அப்படி அது போல் பெயர் வைப்பது நிற்க வேண்டுமானால்.. பிராமணாள் கபே என்ற பெயரை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக, பிராமணாள் கபே என்று பக்கத்திலேயே இன்னொரு ஓட்டல் தொடங்கி ஏன் சிக்கன் மட்டன் மீன் முட்டை என்றுப் பரிமாறக்கூடாது?
அறியாமையை அறியாமையால் வெல்ல முடியாது.
வருண் சொல்வது போல் ஓட்டல் நடத்துவது வியாபாரத்துக்காக. வாடிக்கையாளரை தலை மேல் வைத்துக் கொண்டாடக் கூடிய எந்த வியாபாரியும் தன் வியாபாரத்தை ஒரு வட்டத்துக்குள் வைக்க மாட்டார். அதுவும் இந்தக் காலத்தில்.
நானறிந்தவரை 'பிராமணாள்' என்று பெயர் வைத்ததன் காரணம் சாதியை ஒட்டியல்ல - முழுச்சைவ சமையல் என்ற காரணத்தினால்.
உண்மையில் பிராமணாள் கபே என்று இன்னாளில் பெயர் வைத்து நடத்துவோர் ஏழைகள். கண்மூடிகள். mostly ஏழைகள். இவர்களை வம்புக்கிழுப்பது அனாகரீகம்.
poovannan ஏற்கனவே சொன்னதைக் கவனிக்கவில்லை. சரியான கருத்தே!
முத்து சார்
இந்த பதிவே நீங்க யார்ரா சொல்வதற்கு ,சொந்த கட்டிடம் வரட்டும் உங்க முகத்தில் கரி தான் எனபது தானே
பாரம்பரிய பிராமணாள் என்று உணவு விடுதிக்கோ ,shoe கடைக்கோ பெயர் வைத்து விளம்பரம் செய்வதன் நோக்கம் என்ன
பிராமணர் சங்கம் என்று கூட தான் தமிழ்நாடு முழுவதும் கிளைகளோடு சங்கம் இருக்கிறது.
சாதியை காட்டி இங்கு பொருள்கள் உயர்ந்தவையாக இருக்கும் என்று விளம்பரம் செய்தல் பிசினஸ் எதிக்ஸ் கீழும் தவறு தானே
பெயர்களுக்கு பதில் பதிவு எண்கள் வந்த பிறகு எழுத்து,நேர்முக தேர்வு இரண்டிலும் பாகுபாடுகள் பெருமளவு குறையவில்லையா
என் விடைத்தாளில் ,நேர்முக தேர்வில் நான் முதலியார்,ஐயங்கார் என்று எழுதுவேன்,கூறுவேன் என்றால் அவர்கள் தேர்வு ரத்து செய்யபடாதா
கடைகளுக்கு சாதியை வைத்து விளம்பரம் செய்வது குற்றம் தான்.
அனைத்து சாதியினரும் உணவு விடுதி நடத்தும் போது குறிப்பிட்ட சாதியினர் நடத்தும் விடுதி என்று கூறுவதை அனுமதித்தல்.ஆதரித்தல் சரியா
பாரமபரிய பிராமணாள் என்றால் கணவனை இழந்த பெண்கள் மொட்டை போட்டு இருப்பர்.
அவர்கள் ஆசாரத்தோடு உணவு செய்வர்,பரிமாறுவர் என்று அர்த்தமா
அப்படி செய்தால் ,யாராவது தலைமழிக்கப்பட்ட பெண்களை வைத்து விடுதி நடத்தினால் பெண்கள் இயக்கங்கள் போராடாமல் இருக்குமா
விதவைகள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று யாராவது பேசினால் அதை எதிர்த்து போராடுவது தவறா
அதே தானே இதுவும்
குறிப்பிட்ட மக்கள் மட்டும் தான் வர வேண்டும்,இன்னோருக்கு அவர்கள் சாதியால் அனுமதி இல்லை என்று எந்த உணவு விடுதிகாரராவது சொல்ல முடியுமா
அதை குறிப்பால் உணர்த்துவது தானே இந்த பெயர்
ஆனால் பொதுவாக யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற இடத்தில,நிறுவனத்தில்,விடுதியில் சாதியை காட்டுவது தவறு தானே
பிராமணர் என்பது ஜாதிப்பெயராகவே இருக்கிறது என்பதற்கு நேபாலுக்குப்போக வேண்டாம். தமிழக அரசே அப்படித்தான் சர்டிபிகேட் கொடுக்கிறது அன்றிலிருந்து. இப்போது கேள்வி அது ஜாதிப்பெயரா என்பது கிடையாது. அப்பெயரை வைக்கும் நோக்கமே. இரண்டாவது அப்பெயரை இந்துமதம் ஒரு ஜாதிக்கு வைக்கச் சொல்லவில்லை. பிராமின், பிராமணா என்றெல்லாம் பேசுவது டபாய்க்கும் வழி. இரண்டும் ஒரு சொல்லின் திரிபே. இச்சொல்லை ஒருவன் தனக்கு வைத்துக்கொண்டால் இச்சொல் இழிவுபடுத்தப்படுகிறது. இந்துமதம் இழிவுபடுத்தப்படுகிறது. இப்படி பலசொற்கள் மொழி வரலாற்றில் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. தேவரடியாள் என்ற கோயில் ஊழியர்கள் இன்று தேவடியாக்கள் ஆனது போல.
ஒரு நல்ல சொல், ஒரு மதம் ஒரு தனிப்பட்ட நபருக்கு அளித்தச்சொல், அந்நபர் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கையை வாழ்ந்தபடியால் பிறரால் அவருக்கு அம்மதம் அளித்த சொல்; ஒரு ஜாதிக்காரர்கள் எடுத்துக்கொண்டு, அச்சொல்லின் அடிக்கருத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அதன்படி டோண்டு இராகவன் (ஒரு எடுத்துக்காட்டுக்குத்தான் கோவிக்க வேணடா) தன்னைப்பிராமணன் எனலாம். மாட்டுக்கறி பிரியாணி தின்னும் ஏகப்பட்ட பார்ப்ப்னர்கள் தங்களைப்பிராமணாள் எனவழைத்துக்கொள்கிறார்கள். The allegation against you that there is a clear motive of calling yourselves Brahmins with the aim to exalt yourselves in the religious estimate of other Hindus – rings true.
இதனால் எவருக்கும் பாதிப்பில்லை. அதுதான் ஜாதிப்பெயராகி விட்டதே. ஆனால் மதம் பாதிக்கப்பட்டுவிட்டது.
பொ.மு.குமார், தலையிலிருந்து வந்ததாக கீதைதான் சொல்லியது என்ற ஞாபகம். Cd u verify it?
அப்பாத்துரை: தி கவினர் நடத்தியதால் உங்களுக்குப் பிரச்சினை. இப்போராட்டம் எல்லா மக்களும் சேர்ந்து நடாத்தவேண்டும். அவர்களோடு எவரெல்லாம் இந்துமதத்தின் அக்கறை கொண்டாரோ அவர்களும் சேர்ந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் மாற்றம் வரும். இல்லாவிட்டால் தி கவினரைக்காட்டி நீங்கள் பிராமணர்களாகிவிடுவீர்கள்; மற்றவர்கள் சாமியென உங்களையழைக்க வேணடும். Please tell me: Are you a Bramanan ?
By calling yourself so, aren’t u insulting the word? Don’t argue it is a caste name. My point why do you want it to be the name for your caste unless you have the motive as told above.
அவர்களைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எந்தக்கொம்பனாலும் எங்களை அசைக்கமுடியாதென்றால், அதைத்தான் வன்னியர்கள் தருமபுரியில் சொல்கிறார்கள். உடனே மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவதா எனாதீர்கள். சமூகத்தில் தனித்த வாழமுடியாது. பிறமக்களை உங்கள் வாழ்க்கை எப்படித்தாக்குகிறது எனப்து சமூக நல்லிணக்கத்துக்கு முக்கியம். Man is not an island. He is part of the main land.
- KAVYA
நானறிந்தவரை 'பிராமணாள்' என்று பெயர் வைத்ததன் காரணம் சாதியை ஒட்டியல்ல - முழுச்சைவ சமையல் என்ற காரணத்தினால்.
உண்மையில் பிராமணாள் கபே என்று இன்னாளில் பெயர் வைத்து நடத்துவோர் ஏழைகள். கண்மூடிகள். mostly ஏழைகள். இவர்களை வம்புக்கிழுப்பது அனாகரீகம்.//
முழுச்சைவ சமையல் ஓட்டல் எல்லாச்சாதிக்காரகளும் நடத்துகிறார்கள். உடுப்பி இல்லையா? முன்னால் உடுப்பி என்று இருக்கும். இன்னாள் வசந்த் ஓட்டல் போன்று பிராண்டு பெயர்களை வைத்து, ப்யூர் வெஜிட்டேரியன், அல்லது சிம்பிளா சைவம் என்று போர்டில் எழுதப்பட்டிருக்கும். எவருமே பிராமணாள் கஃபே என்று எழுதினால்தான் சைவம் என்று இன்று கருதமாட்டார்கள். அதன் ஓனர் ஒரு பார்ப்ப்னர் என்று தெரியப்படுத்தவே பிராமணாள் ஓட்டல். கிருஸ்ண ஐயர் 'சைவம்'என்று போட்டாலே போதுமே?
ஏழைகள்தான் பிராமணாள் ஓட்டல் போட்டுக்கொள்கிறார்கள் என்பது ஒரு திருப்திக்காக அப்பாத்துரைச் சொல்லிக்கொள்கிறார்.
- KAVYA
//பிராமின், பிராமணா//....... //இரண்டும் ஒரு சொல்லின் திரிபே//
இதற்கும் நான் முன்னர் சொன்னதற்கும் என்ன வேறுபாடு?!!
(இங்கே ஒரு பக்கக்குறிப்பு : ஆனால், இந்த ஆதி கால மிஷனரி ஆராய்ச்சியாளர்களின் வீச்சே தனிதான் போல : பிராமின் என்பது ப்ராஹ்மணா என்பதன் ஆங்கில வடிவம் என்பது மறந்து அதுவே முன்னுரிமை பெரும் அதிசயம்.)
//இச்சொல்லை ஒருவன் தனக்கு வைத்துக்கொண்டால் இச்சொல் இழிவுபடுத்தப்படுகிறது// எப்படி?
(உங்களுக்காக இங்கே மற்றொரு பக்கக்குறிப்பு - நகைச்சுவை : http://www.christianbrahmins.org/ - )
இதற்க்கு அடுத்த வரியிலுள்ள எடுத்துக்காட்டு இங்கு தொடர்புள்ளதாக தோன்றவில்லை.
//My point why do you want it to be the name for your caste unless you have the motive as told above.// இதில் தாங்கள் மேலும் குறிப்பாக சுட்ட வேண்டுமென தோன்றுகிறது. "above" வார்த்தை குழப்பமான பொருள் தருகிறது இங்கு.
எத்தனை முறை எழுதினாலும் என் கருத்து ஒன்றே.
ஆதிகாலத்திலிருந்து இந்துமதத்தில் உள்ள பிரச்சினையே இந்துக்களில் ஒருசாராரானா உங்களாலேயே. தமிழ்ப்பார்ப்ப்னர்களுள் ஆர்தோடாக்ஸ் ஆசாமிகளே இந்துமதத்திலுள்ள பெரிய தலைவலி.
இந்துமதப்புனிதர்கள் (ஆச்சாரியர்கள்) என்னதான் எழுதினாலும் சில புல்லுருவிகள் மதததில் பலவற்றைத் தம்ஜாதியாருக்கு வசதியாகப் பண்ணிக் கொண்டார்கள். அதிலொன்று இப்பெயராகும். அதை மாற்று என்றால், கோபம் கொள்கிறீர்கள். அதை தி கவினர் சொன்னால், நாத்திகர்கள் அவர்களுக்கு எங்களைக்கண்டால் வயிற்றெரிச்சல் என்கிறீர்கள். மற்றவர்கள் சொல்லவில்லையென்றால், நீங்கள் செய்வது சரியென்றாகாது.
இப்பிரச்சினையிருக்கும் வரை இந்துமதத்தில் உட்பகை இருந்து கொண்டேயிருக்கும். ஜாதியா மதமா? என்ற கேள்வியில் ஜாதியே என்ற பிரிவு இருக்கிறது. இருபிரிவுக்கும் பூசல்தான். இரண்டுக்கும் இடைவெளி உள்ளது என்பதை ஒத்துக்கொண்டு அவற்றைப்பிரித்தே பார்க்காதவரை பிரச்சினதான்.
என் தேர்ந்த கருத்து: ஒருவன் இந்து மதத்திலிருந்து விலகினால், கண்டிப்பாக பிராமணன் என்ற பேச்சுக்கே இடமில்லை. பிராமணத்துவப்ப்படி வாழ்க்கை பிறரிடம் இருக்கலாம். அதாவது கிருத்துவரிடமோ இசுலாமியரிடமோ. ஆயினும் அவர் இந்துக்கடவுளையும் அம்மதத்திலுள்ள பிற தத்துவங்களையும் ஏற்காதவரை அவர் எப்படி பிராமணன் ஆவார்?
எனவே கிருத்துவ பிராமணன் என்பது ஏற்க முடியாது. இராபர்டோ டி நோபிலி பக்கா பிராமண வாழ்க்கைதான் வாழ்ந்தார். ஆயினும் அவர் பிராமணர் கிடையாது. ஏனெனில் அவர் தெய்வம் இயேசு. அதே போல இணையதளத்தில் பதிவெழுதும் சில்சம் கிடையாது. செல்லப்பா இன்னொரு இவர்கள் பிராமண வேடம் போடுவது மதமாற்றத்தைச் செய்ய. இயேசுவை ஏற்றுக்கொண்டவன் பிராமணனா? என்ன கதை பேசுகிறீர்கள்?
என் கருத்து இந்து இல்லாவிட்டால் பிராமணன் என்ற பேச்சுக்கே இடமில்லை. "கிருத்துவ பிராமணன்', 'இசுலாமிய பிராமணன்' என்பனவெல்லாம் நகைமுரண்கள்.
வாதமே தேவையில்லை. இந்துவிலும் பிராமணன் என்னும் பெயர் இன்று எவருக்குமே கிடையாது.
// தமிழ்நாட்டில் நாத்திகம் ஏன் வளரவில்லை என்பதற்கு இந்தப் பதிவுப் பின்னூட்டங்களை ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். //
தமிழகத்தில் நாத்திகம் வளராமைக்கு பல காரணங்கள். பற்பல ஆண்டுகளாக பக்தி இயக்கம் தழைத்தோங்கிய தமிழகம் போன்ற இடத்தில் நாத்திகம் அவ்வளவு வேகமாக வளர்தல் கடினம்.
மட்டுமல்லாது இன்னொரு முக்கியமான காரணம் என நான் நினைப்பது நாத்திகம் பேசிய தலைவர்களின் லட்சணம். அவர்களது மற்றும் நாத்திகத்தை முன்வைத்து அவர்கள் வளர்த்த இயக்கம் அடைந்த சீரழிவு மக்கள் நாத்திகம் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்துவிட்டது.
அதுமட்டும் ஒரு அறிவியக்கமாக - வலுவானதொரு மாற்றுத்தரப்பாக வளர்த்தெடுக்கப்படிருந்தால் ... ஹ்ம்ம்ம்.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
// முத்து சார்
இந்த பதிவே நீங்க யார்ரா சொல்வதற்கு ,சொந்த கட்டிடம் வரட்டும் உங்க முகத்தில் கரி தான் எனபது தானே //
வாடகை கட்டடத்தில் இருப்பதால் ஓரளவுக்கு மேல் (முரளி ஐயர் போல) போராட இயலாதென்பதால் மிரட்டி பெயர்ப்பலகையை அகற்றவைத்தால் எதிர்வினை இப்படி வருவது இயல்பே. :)
// பாரம்பரிய பிராமணாள் என்று உணவு விடுதிக்கோ ,shoe கடைக்கோ பெயர் வைத்து விளம்பரம் செய்வதன் நோக்கம் என்ன
பிராமணர் சங்கம் என்று கூட தான் தமிழ்நாடு முழுவதும் கிளைகளோடு சங்கம் இருக்கிறது.
சாதியை காட்டி இங்கு பொருள்கள் உயர்ந்தவையாக இருக்கும் என்று விளம்பரம் செய்தல் பிசினஸ் எதிக்ஸ் கீழும் தவறு தானே //
நான் அப்படி நினைக்கவில்லை. 'இது பிராமண வகுப்பை சேர்ந்த ஒருவரால் நடத்தப்படும் உணவு விடுதி' என விளம்பரப்படுத்துவதே முதன்மை நோக்கமாக இருந்திருக்கும். இதிலிருந்து ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தோன்றிய வகையில் பொருள் தருவித்துக்கொள்ளலாம். ஆனால் அவையெல்லாம் உணமையாகவே இருக்கவேண்டும் என்று அவசியமல்ல.
மேலும் ஒருவேளை அந்த காலத்தில் பிராமணர்கள் (வெளியில் உணவு அருந்தும் பிராமணர்கள் என்று கொள்க), பிராமணர்களால் நடத்தப்படும் விடுதியில் மட்டுமே உண்பார்களாக இருக்கும். அந்த பட்சத்தில் அவர்களையும் ஈர்க்கவே அந்த பெயர் விளம்பரம் என்றே நான் நினைக்கிறேன்.
// என் விடைத்தாளில் ,நேர்முக தேர்வில் நான் முதலியார்,ஐயங்கார் என்று எழுதுவேன்,கூறுவேன் என்றால் அவர்கள் தேர்வு ரத்து செய்யபடாதா //
சம்பந்தப்பட்ட நிறுவனம் அப்படி எந்த விதிமுறைகளையும் கொண்டிராத பட்சத்தில் சாதிப்பெயர் குறிப்பிட்ட காரணத்தால் "மட்டுமே" சம்பந்தப்பட்ட நபரது தேர்வு "வெளிப்படையாக" ரத்து செய்யப்பட முடியாது என்பதே எனது புரிதல்.
// கடைகளுக்கு சாதியை வைத்து விளம்பரம் செய்வது குற்றம் தான்.
அனைத்து சாதியினரும் உணவு விடுதி நடத்தும் போது குறிப்பிட்ட சாதியினர் நடத்தும் விடுதி என்று கூறுவதை அனுமதித்தல். ஆதரித்தல் சரியா //
தவறெனில் நாயுடு ஹால் இத்தனை ஆண்டுகளாக எப்படி செயல்பட அனுமதிக்கப்பட்டது ? சங்கரன்கோவில் நாடார் மெஸ்ஸின் பெயர் ஏன் முடக்கப்படவில்லை ? தேவர் மெஸ் பெயர்ப்பலகையில் இருந்து 'தேவர்' பெயரை நீக்கச்சொல்லி ஏன் போராட்டம் நடக்கவில்லை ?
அவ்வளவு ஏன், பள்ளிப்பருவத்தில் 'கோனார் தமிழ் உரை' படிக்காத தமிழ் வழி பயின்ற மாணவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் ? [ புகழ்பெற்ற 'வள்ளுவரும் மாணவராய் ஆனார்' லிமெரிக் நினைவுக்கு வருகிறது. இன்று காலை அலுவலகம் வரும்போது சம்பந்தமே இல்லாமல் இந்த லிமெரிக் நினைவுக்கு வந்தது. அதை இங்கே குறிப்பிட நேர்ந்தது விந்தையே :) ] அந்த பெயரும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் திரு.ஐயம்பெருமாள் கோனார் அவர்களது பெயரும் வெற்றிகரமான வணிக பிம்பம் ஆனது எப்படி ? சொல்லுங்கள் பூவண்ணன் சார் ! :)
சரி தவறை அளக்கும் அளவுகோல் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு மாதிரி வளைந்து கொடுக்குமா - கொடுக்கலாமா என்ன ?
மேலும் ...
நான் இது சட்டப்படி குற்றமா இல்லையா என்பதையே பார்ப்பேன். சட்டப்படி அது குற்றமில்லை எனில் அது அவர்களது உரிமை. அந்த தனி மனித உரிமையை நான் ஆதரிக்கிறேன். எனக்கு பிடித்தமில்லை என்றால் எளிதாக புறக்கணித்துவிட்டு செல்வேன்.
// பாரமபரிய பிராமணாள் என்றால் கணவனை இழந்த பெண்கள் மொட்டை போட்டு இருப்பர்.
அவர்கள் ஆசாரத்தோடு உணவு செய்வர்,பரிமாறுவர் என்று அர்த்தமா //
இது உங்களது கற்பனை. அப்படி அவர்கள் சொன்னார்களா என்ன ?
// அப்படி செய்தால் ,யாராவது தலைமழிக்கப்பட்ட பெண்களை வைத்து விடுதி நடத்தினால் பெண்கள் இயக்கங்கள் போராடாமல் இருக்குமா //
மறுபடி இது கற்பனையான கேள்வி. இதற்கும் தர்க்க ரீதியாகவே பதில் தரலாம். இந்த விவாதம் - உரையாடல் திசைமாறிப்போகும். வேண்டுமெனில் வேறெங்கேனும் விவாதிக்கலாம்.
// விதவைகள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று யாராவது பேசினால் அதை எதிர்த்து போராடுவது தவறா அதே தானே இதுவும் //
அப்படி யாரும் சொன்னால் சம்பந்தப்பட்ட பெண்ணே உதைக்க வரும் காலம் வந்துவிட்டது பூவண்ணன் சார் :) எல்லா பெண்களும் முற்றிலும் மாறிவிடவில்லை என்றாலும் வெளிப்படையாக யாரும் அவ்வளவு எளிதாக நிர்பந்தப்படுத்த இயலாது என்பதே உண்மை. எங்களது கிராமத்திலேயேகூட இதெல்லாம் அவ்வளவு சுலபமில்லை.
// குறிப்பிட்ட மக்கள் மட்டும் தான் வர வேண்டும்,இன்னோருக்கு அவர்கள் சாதியால் அனுமதி இல்லை என்று எந்த உணவு விடுதிகாரராவது சொல்ல முடியுமா
அதை குறிப்பால் உணர்த்துவது தானே இந்த பெயர் //
இதுவும் உங்களது எதிர்நீட்டலே. அப்படி எல்லாம் அவர்கள் எந்த குறிப்பிட்ட சாதியினரையும் தடுக்கவோ புறக்கணிக்கவோ இல்லை என்றே டோண்டு சார் திரு.சார்வாகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்படி எதுவும் குறிப்பாலோ விருப்பாலோ வெறுப்பாலோ உணர்த்துவதில்லை இந்த பெயர்.
ஒருவேளை அப்படி பிராமணாள் தவிர பிற வகுப்பாரை உள்ளே விடாமல் தடுத்தால் அது தீண்டாமை. சட்டப்படி உள்ளே தள்ளலாம். அதில் எந்த பிழையும் இல்லை.
// ஆனால் பொதுவாக யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற இடத்தில,நிறுவனத்தில்,விடுதியில் சாதியை காட்டுவது தவறு தானே //
மறுபடியும் சொல்கிறேன், இந்த பெயர் 'பிராமண வகுப்பை சேர்ந்த ஒருவரால் நடத்தப்படும் உணவு விடுதி (சைவ உணவு விடுதி என்பது உள்ளுறை)' என்பதையே சுட்டுகிறது. மனுவிலிருந்து ஆரம்பித்து வெவ்வேறு பொருள் தருவிப்பது அவரவர் விருப்பு, வெறுப்பு, அரசியல் நிலைபாடு சார்ந்தது.
அப்படி வணிக நிறுவனத்தில் சாதி காட்டுவது தவறெனில் அதை அனைவருக்கும் பொதுவில் வைப்போம்.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
// இச்சொல்லை ஒருவன் தனக்கு வைத்துக்கொண்டால் இச்சொல் இழிவுபடுத்தப்படுகிறது. இந்துமதம் இழிவுபடுத்தப்படுகிறது. இப்படி பலசொற்கள் மொழி வரலாற்றில் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. தேவரடியாள் என்ற கோயில் ஊழியர்கள் இன்று தேவடியாக்கள் ஆனது போல. //
காவ்யா, அந்த சொல் ஏன் உங்களை இப்படி துன்புறுத்துகிறது என்று தெரியவில்லை ! :) எப்படி அது இந்து மதத்தை இழிவு படுத்துகிறது என்று சொல்கிறீர்கள் ?
நீங்கள் சொல்லும் பிராமணன் என்ற சொல்லுக்கான வரையறை - அது பொருந்தும் மனிதர்களின் குணங்கள் எல்லாம் சரிதான். ஆனால் அந்த பொருத்தப்பாடு மாறிப்போய் பல்லாண்டுகள் ஆகிவிட்டன. இது தொழிலடிப்படையில் சாதிகளாய் பிரிந்த குழுவினர் இப்போது தொழிலடிப்படையில் அல்லாமல் பெயரளவில் மட்டும் சாதிகளை தாங்கி நிற்கும் சற்றேறக்குறைய எல்லா சாதிக்குமே இது பொருந்தும்.
உதாரணம் சொல்லப்போனால் வேளாளர் சாதி சேர்ந்த ஒருவர் வேளாண் தொழிலின் அரிசுவடி கூட தெரியாமல் வேறு தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிடுக்கலாம். உடனே அவர் வேளாளருக்கான எந்த குணமும் இல்லாமல் அப்படி கூறிக்கொள்வது இந்து மதத்தை இழிவுபடுத்துகிறது என்பீர்களா ?
நீங்கள் இதற்காக கூறியுள்ள தேவரடியாள் - தேவடியாள் ஒப்புமை பொருந்துவதாக தெரியவில்லை. இதில் இழிவுபட்டது சொல் அல்ல. மானுடனை அல்லாது இறைவனையே கணவனாக வரித்து இறை தொண்டு செய்வதே வாழ்வென்று கொண்ட - அதற்கு தேவையாக இசை, நடனம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்த - பாலுறவுகள் விஷயத்தில் கட்டுப்பாடுகள் அற்ற நெகிழ்ச்சியான போக்குகள் ஒரு பிரிவினர், காலப்போக்கில் இறைபணியுமில்லாது, கலைத்திறமைகளும் அற்றுப்போய் பிழைப்புக்காய் விளைமகளிராய் போனதால் அந்த மகளிரே அவ்வாறு இழித்துரைக்கப்பட்டனர். இதில் அந்த சொல் என்ன பாவம் செய்தது ? :)
// பொ.மு.குமார், தலையிலிருந்து வந்ததாக கீதைதான் சொல்லியது என்ற ஞாபகம். Cd u verify it? //
கீதாச்சார்யன் 'நான்கு வர்ணத்தையும் குணநலன்கள் அடிப்படையில் நானே படித்தேன்' என்ற பொருள் தரும் வகையில் "சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ" என்றுதான் எங்கோ எப்போதோ படித்தது. வேறு எந்த இடத்திலாவது கீதையில் 'தலையிலிருந்து பிறந்தவன் பிராமணன்' என்று கூறியிருக்கிறதா என்று எனக்கு தெரியாது. நான் கீதை படித்தவனில்லை. மன்னிக்கவும் :)
அதே போல மனுதர்மத்தில்-தான் வர்ணாஸ்ரமப்பகுப்பும் ஒவ்வொரு வர்ணத்தின் வரையறையும் சொல்லி இருப்பதாக கீற்று இணைய தளத்தில் முன்பொருமுறை படித்த நினைவு. அதில் அவர்கள் அத்தியாய எண், சுலோக எண் என்றெல்லாம் கொடுத்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். தேடிபார்க்கிறேன்.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
முத்து சார்
முத்து ஐயர் ,முத்து படையாச்சி உணவு விடுதி,முத்து தேவர் உணவு விடுதி என்று எழுதுவதற்கும்
கீழே ஐநூறு ஆண்டு ஆண்ட சாதி ,பாரம்பரிய க்ஷத்ரிய உணவு விடுதி என்று சேர்ப்பதற்கும் வித்தியாசம் இல்லையா
சாதி பெயர் என்பதே அவசியம் இல்லாத ஒன்று தான் .அதன் பயன்பாடு தொண்ணூறு சதவீதம் பொது வாழ்வில் ,பொதுவில் தமிழ்நாட்டில் குறைந்து வருகிறதே
ஆனால் அதன் கீழே பாரம்பரிய பிராமணாள்,பாரம்பரிய தேவதாசி நடத்தும் நடன பள்ளி எனபது வெறுப்பை,வேற்றுமையை,தூண்டும் ஒன்று இல்லையா
குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் இருக்கும் மடங்கள்,தங்கும் விடுதிகள் என்றாலும் கூட ஏற்று கொள்ளலாம்.
அப்படி பல முக்கிய கோவில்களின் அருகே இன்றும் உண்டு
தனியார் தன இடத்தை இலவசமாக யாருக்கு கொடுப்பது என்பதில் அடுத்தவர் தலையிட முடியாது.ஆனால் பணம் வாங்கி கொண்டு வணிகம் செய்யும் இடத்தில குறிப்பிட்ட வர்ணத்தவருக்கு மட்டும் தான்,மற்றவருக்கு இல்லை என்று கூறுவது சட்டப்படி ,தார்மீகபடி தவறு தானே
ஆனால் அனைவருக்கும் பொது என்று இருக்கும் உணவு விடுதிக்கு வர்ண பெருமை,பெயர் அவசியமில்லாத ஒன்று தானே
Brahmins = CEO, CIO, MD = President, Prime Minister, Chief Ministers, etc.,
Kshathriyar = Army , Navy, Air Force, & Police Officers
Vaisyar = IAS officers = Ministers, = Business Corporate, Business Analyst
Soothra = Workers, Laboruers = Software Developers, Testers = Govt Servants.
எல்லாமே தொழில் சம்பந்தபட்டதே! வர்ணம் என்பதை ஒழிக்க முடியாது. அன்றும் இருந்தது, இன்றும் வேறு முறையில் இருக்கிறது. என்றும் இருக்கும். இதை தான் இந்து மதம் கூறுகிறது.
// முத்து ஐயர் ,முத்து படையாச்சி உணவு விடுதி,முத்து தேவர் உணவு விடுதி என்று எழுதுவதற்கும்
கீழே ஐநூறு ஆண்டு ஆண்ட சாதி ,பாரம்பரிய க்ஷத்ரிய உணவு விடுதி என்று சேர்ப்பதற்கும் வித்தியாசம் இல்லையா //
கடைசீயில் இங்குதான் வருவீர்கள் என்று தெரியும் :) இங்கு பிராமணாள் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். இந்த வர்ணம் - சாதி வித்தியாசங்கள் செல்லுபடியாகக்கூடிய கால கட்டத்தை தாண்டி வந்துவிட்டோம் பூவண்ணன் சார். எத்தனை பேரால் இந்த இரண்டுக்கும் வித்தியாசம் சொல்ல முடியும் (இந்த பதிவுக்கு பின்னூட்டம் இட்டவர்களிலேயே-கூட) என்று நினைக்கிறீர்கள் ?
எனவே பிராமணாள் கபே என்பது முத்து ஐயர் கபே, முத்து நாடார் கபே, முத்து படையாச்சி கபே, முத்து தேவர் கபே, முத்து நாயக்கர் கபே இன்னபிறவுக்கு இணையானதுதான் இந்த காலகட்டத்தில்.
// சாதி பெயர் என்பதே அவசியம் இல்லாத ஒன்று தான் .அதன் பயன்பாடு தொண்ணூறு சதவீதம் பொது வாழ்வில் ,பொதுவில் தமிழ்நாட்டில் குறைந்து வருகிறதே
ஆனால் அதன் கீழே பாரம்பரிய பிராமணாள்,பாரம்பரிய தேவதாசி நடத்தும் நடன பள்ளி எனபது வெறுப்பை,வேற்றுமையை,தூண்டும் ஒன்று இல்லையா //
தேவை இல்லைதான். ஆனால் எல்லோரும் அப்படி நினைப்பதில்லையே. முரளி ஐயருக்கு அது தேவை என்று பட்டிருக்கிறது. சட்டப்படி குற்றமில்லாதவரை அது அனுமதிக்கப்படக்கூடியதே.
தேவை இல்லாத, ஒரு பிரிவினருக்கு வெறுப்பை தரக்கூடிய இன்னொரு பிரிவினரின் பழக்க வழக்கங்கள் என நமது சமூகத்தில் இல்லையா என்ன ?
// ஆனால் பணம் வாங்கி கொண்டு வணிகம் செய்யும் இடத்தில குறிப்பிட்ட வர்ணத்தவருக்கு மட்டும் தான்,மற்றவருக்கு இல்லை என்று கூறுவது சட்டப்படி ,தார்மீகபடி தவறு தானே //
அப்படி கூறவில்லை என்றுதான் டோண்டு சார் சொல்லிவிட்டாரே. அப்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை ஒதுக்கினால் தீண்டாமை சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாதா என்ன ?
// ஆனால் அனைவருக்கும் பொது என்று இருக்கும் உணவு விடுதிக்கு வர்ண பெருமை,பெயர் அவசியமில்லாத ஒன்று தானே //
அவர் அலட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார், கொள்ளட்டுமே ? அந்த அலட்டல் எல்லை மீறி குற்றம் என்ற அளவுக்குப் போகும்போது சட்டத்தின் துணை கொண்டு அதை அடக்கி வைக்கலாம்.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
பிரம்மத்தை அறிந்தவனே பிராம்மணன் என்பது மறை கூறுவது .
அதற்காக பிராம்மணன் என்ற பெயர் பிரம்மத்தை அறிந்தவன் மட்டுமே வைக்க வேண்டும் என்பது
ஆரோகியம் இருப்பவன்தான் ஆரோகியதாஸ் என்று பெயர் வைக்க வேண்டும் என்றும்
அறிவு இருப்பவன்தான் அறிவழகன் , மதியழகன் என்று பெயர் வைக்கவேண்டும் என்றும்
வீரம் இருப்பவன்தான் வீரமணி என்று பெயர் வைக்கவேண்டும் என்று கூறுவது போலாகும்
Dear Arunachalam
U hav a very valid point.
A sick person can b named Arokiya Das.
All of us hve names after a variety of gods and goddesses and gurus, like urs.
But they r just names.
To call oneself a Brahmananan s not simply a name. It s more than that.
U can call urself Arunachalam Iyer which u may be.
Can u call yourself Prof Arunachalam Brahmanan?
Clearly u will now know it is not a name, nor even a caste name.
Chettiiar, Nadar, Mudhaliyar, Chettiiar, Reddiyar Iyer, Iyengar r caste names. Brahmanan s not.
Dondu Ragavan s Dondu Ragavan Iyengar. No objection at all. But he cant name himself or named as Dondu Ragavan Brahmanan.
If he does, it is an insult to the religion.
திரு. குலசேகரன் அவர்களுக்கு ,
உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன் .
பிராமணாள் என்பது பெயர் மட்டுமே அன்று அது அதற்கும் மேல் .
அது நம் எல்லோரும் அறிந்தது.. அனால் இவ்விஷயத்தில் நாத்திகர்களின் நிலை வேறு ஆத்திகர்களின் நிலை வேறு ....
நாத்திகர்கள் நீ பிராமிணன் என்றால்.. . நான் தாழ்ந்தவனா என்று கேட்கின்றனர்.
ஆனால் ஆத்திகர்கள் நீ பிராமிணன் என்றால் பிரம்மத்தை அறிந்தவனா ? அறிந்தவன் தானே ஆப்படி போட்டுகொள்ளலாம் என்று கேட்கின்றனர்.
அதனால் இருவரின் நிலையும் வேறு. அதனால் இருவரையும் ஒரே தட்டில் வைக்காதிர்கள் .
பிராமணன் என்று தன்னை ஒருவர் அழைத்து கொள்வதினால் இந்து மதத்திற்கு அவமானமா ?
இல்லவே இல்லை ....
ஒருவன் அப்படி அழைக்கப் படுவதினாலேயே அவனை யாரும் பிரம்மத்தை அறிந்தவன் என்று நம்பிவிட போவதில்லை ...
ஒருவர் தன்னை "பரமஹம்ச ..." என்று அழைத்து கொண்டார் உடனே எல்லோரும் அவரை பரமஹம்சர் என்று நம்பிவிட்டனரா ?
ஒரு சிலர் அப்படி நம்பியதால் அது இந்து மதத்திற்கு இழிவா?
அடுத்து
மாட்டு கறி சாப்பிடுபவன் பிராம்மணன் என்று அழைத்து கொள்கிறானே ?
அழைத்து கொள்ளட்டுமே ....
மாட்டு கறி உண்பவனுக்கு பிரம்ம ஞானம் எட்டாது என்று வேதம் சொல்லவில்லை ....
(இதனால் எல்லோரும் மாட்டுக்கறி சாப்பிடலாம் என்று நான் சொல்லவில்லை )
இயேசுவை வணங்குபவன் பிராமணனா?
ஆம்.. அவனும் பிரம்ம ஞானம் அடையலாம் என்று இந்து மதம் கூறுகிறது....
எந்த வடிவத்தில் வழி பட்டாலும் என்னையே அடைகிறான் ...என்று பகவத் கீதை சொல்கிறது.....
யார் வேண்டுமானாலும் பிராமணன் ஆகமுடியும் ......
சரி எல்லோரும் பிராமணனாக முடியும் என்றால் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை மட்டும் ஏன் அவ்வாறு அழைக்க வேண்டும்....
வேண்டாம்.. என்பதே என் கருத்தாயினும்... அவ்வாறு அழைப்பதில் தவறு இல்லை என்பதை சுட்டிக்காட்டவே மேற் சொன்ன வாதங்களெல்லாம் .....
பிராமிணன் என்றால் உயர்ந்தவன் அதனால் அய்யர் என்று அழைத்து கொள்ளுங்கள் என்றால்...
தவறு...
பிராமிணன் என்றால் உயர்ந்தவன் என்ற பொருள் இல்லை... அவன் பிரம்மத்தை அறிந்ததனால் அந்நிலை அடைகிறான் ...
ஆனால் அய்யர் என்றால் உயர்ந்தவன் என்று பொருள்...
அதனால் தான் பாரதியார் .....பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே ... என்று பாடினார் ......
ஆகவே அய்யர் என்று யாரையும் அழைக்க கூடாது ....மரியாதையை குறிப்பிட அச்சொல்லை யாருக்கு வேண்டுமாலும் பயன் படுத்தலாம்
நன்றி ....
திரு. குருபிரசாத் / அருணாச்சலம் (பெயர், தமிழில் ஒற்றுடன் எழுதுதல் ஒலியமைப்பில் சரியாக இருப்பதாக தோன்றியதால் - தவறாகிவிட்டிருந்தால் மன்னிக்கவும்).
தங்களுடைய வாதங்களை எடுத்து வைத்த முறை நன்று. வாருங்கள் அனைவரும் பிராமணாள் ஆவதற்கு என்று அறைகூவல் விடாத ஒன்றுதான் மீதம்.
இந்த பிராமணாள் v/s ஐயர்/ ஐயங்கார் நகைச்சுவையில் என் நினைவுக்கு வரும் மற்ற சில.
so called ஆரிய பிராமண (ஐயர்!!) ராவணன் so called திராவிட கதாநாயகர் ஆனதும்.
க்ஷத்ரிய (அரசர்) அர்ஜுனரால் போரில் கொல்லப்பட்ட துரோணர் (துரோணாச்சாரியார்!) எதிராக கட்டமைக்கப்படுதல் - ஏகலைவர் கட்டை விரலினை காணிக்கையாக பெற்றதால்.
இவைதாம் ஆரிய திராவிட போர் நடந்ததற்கான சான்றாக முன்வைக்கப்படுதல்.
மத்திய கிழக்கிலிருந்து குதிரை ஓட்டி வந்த so called ஆரியர் மதமானதற்கு மாற்றாக வைக்கப்படும் அதே மத்திய கிழக்கில் தோன்றிய மதங்கள்.
அந்த வரிசையில் இன்னொன்றாக இருக்க முழு தகுதி கொண்டது இதுவும்.(எனக்கு)விளங்கா விநோதங்களின் விசித்திர கூட்டணி.
ஆரியன்-திராவிடன், ஆரிய மதம் - மத்தியகிழக்கு மதங்கள்; அவர் குதிரையில் வந்தார் - இவர் கழுதையில் வந்தார்; இவை வரலாற்று சர்ச்சைகள்;
ஏகலைவன் - துரோணச்சாரியார்; பிராமண இராவணன் - திராவிட இராமன் - இவை புராணத்தைப்புரட்டல் செய்துவந்த சர்ச்சைகள்.
பிராமணன் என்பது இரண்டிலுமே வராது. பிராமணன் என்பது ஒரு மதத்தின்வழி வரும் தத்துவம். அ கான்ஸெப்ட். அதன்படி இன்று எவரும் பிராமணன் ஆகவியலாது. அப்படியெவரும் இல்லை. அன்றும் அப்படித்தான் என்பதை மத வரலாறு காட்டும். எபபடியென்றால், பிராமணன் என்று சொல்லிக்கொண்டலைந்தோரை மதவரலாறு பகடி பண்ணியதைப்படிக்கலாம். ராமதாசுக்கும் ஒரு பிராமணனுக்கும் கங்கைக்கரையில் நடந்த ஒரு சம்பவம். அதன் பிறகே அவர் ஒரு சீக்கிய குர்வானார். நம்பிள்ளை ஒரு பிராமணனைப்பார்த்துச் சொன்னது. திருக்குருங்குடி ஸ்தல புராணம். இப்படி பலபல.
இக்கான்சப்ட்டை எப்படி ஒரு சமூக மக்கள் தாங்களாகவே எடுத்துக்கொண்டு பிறரை நம்ப வைக்க முயற்சி செய்யலாம் என்பதுதான் கேள்வி. இதை விளங்கும் முன் அதை விளங்கி அறிய ஆர்வமுங்களுக்கு வேண்டும். மனமிருந்தால் மார்க்கமுண்டு. மனமேயில்லையே! விளங்கவில்லையென்றால் எப்படி?
இப்படி இவர்கள் செய்கின்றபடியாலே, செய்தபடியாலே இந்துமதம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்பிரச்சினையில் மாட்டித்தவிக்கிறது. இதனாலேயே பலர் இம்மதத்தைவிட்டு விலகினர். அவர்கள் இப்பிரச்சினை ஒரு சமூகத்தின் ஆதிக்கசக்தியாக (மதத்தை வைத்து) பார்த்தனர். தீண்டாமையை எதிர்நோக்கி வெற்றிகண்ட மதம், இச்சமூக மக்களிடம் தோற்றுப்போனது!
தமிழ்ப்ப்பார்ப்பனர்களாகவே முன்வந்து தமிழக அரசிடம் எங்கள் ஜாதிப்பெயர் பிராமணன் அன்று, தயவு செய்து அப்படி சான்றிதழ் தரவேண்டாம். பதிலாக வேறொரு பெயரை போடச்சொல்லலாம்.
மற்றவர்கள் முன்வரக்கூடாது. வந்தால் சுப்பிரமணியம் சுவாமி சுப்ரீம் கோர்ட்டு போவார். சோ இராமசாமி அனல் பறக்கும் பகடி நெருடும் கட்டுரைகள் வரைவார். பார்ப்பனச்சார்புடைய இந்து இயக்கங்கள், அரசு ஒரு சாதி மக்களுக்கெதிராக செயல்பட்டு எங்கள் மதததை நசுக்கப்பார்க்கிறது என்பார்கள்.
@குலசேகரன்,
வாருங்கள் ஐயா வாருங்கள். சுற்றி சுற்றி இங்குதான் வருவீர்கள் என்று தெரியும். என்ன..... ஏன் இவ்வளவு சீக்கிரம் (13th Dec 2012) இந்த இடத்துக்கு வந்து விட்டீர்கள் என்பதுதான் சற்று புதிர்.
//பிராமணன் என்பது இரண்டிலுமே வராது. பிராமணன் என்பது ஒரு மதத்தின்வழி வரும் தத்துவம். அ கான்ஸெப்ட். அதன்படி இன்று எவரும் பிராமணன் ஆகவியலாது. ..................................தமிழ்ப்ப்பார்ப்பனர்களாகவே முன்வந்து தமிழக அரசிடம் எங்கள் ஜாதிப்பெயர் பிராமணன் அன்று, தயவு செய்து அப்படி சான்றிதழ் தரவேண்டாம். பதிலாக வேறொரு பெயரை போடச்சொல்லலாம்.//
கீழ்க்கண்டது, நான் இட்ட முதல் பின்னூட்டத்தின் (25th Nov 2012) ஒரு பகுதி
//அவர் எப்படித்தான் பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னாலும் அது அவரது உரிமையில் தலையீடு செய்வதாகவே முடியும்.
இந்த போராட்ட / ஆர்ப்பாட்ட வாதிகளின் விளக்கவுரையின் படி பிராமணர் = பார்ப்பனர். பார்பனர் = ஐயர் / ஐயங்கார். மேலும் (உயர் சாதியம்) பிராமணியம் = பார்ப்பனீயம். இவைகள் ஒன்றுக்கொன்று இணையாகவே கொள்ளப்பட்டது. ஆனால் இப்போது பிராமணர் கூடாது பார்ப்பனர் என்றால் பரவாயில்லை மற்றும் ஐயர் / ஐயங்கார் என்றால் பரவாயில்லை. நாளை ஐயர் / ஐயங்கார் என்ற பெயருக்கும் எதாவது காழ்ப்பு காரணம் கூறலாம்!!!.
பிராமணன் என்று யாரும் இல்லை என்பதால் அவ்வாறு பெயர் வைக்க முடியாது என்பது என்ன விதமான கருத்து என்று புரியவில்லை?
பீனிக்ஸ் என்றும் கூடத்தான், அன்னம் என்றும் கூடத்தான் ஏதும் பறவை இப்போதில்லை, எனவே அவ்வாறு பெயரிட முடியாதா?//
பெயர் வைப்பது அவரவர் உரிமையென்று ஒரேயடியாகச் சொல்லமுடியாது. சமூக உணர்ச்சிகளோடு பிணைந்தது.
இது சமூகம். பலமக்கள் சேர்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம். பெயர்களும் பிரச்சினையை உருவாக்கி சமூக நல்லிணக்கத்துக்கு இடையூறு செய்யும்.
ஹிட்லர் என்பது ஒரு ஜெர்மானியப்பெயர். இன்று எவரும் குழந்தைகளுக்கு அப்பெயர் வைப்பதில்லை. அவருக்கு உரிமை இருக்கிறது; வைக்கலாமெனலாம். அவரே வைப்பதில்லை. சமூகத்தின் உணர்ச்சிகளை மதிக்கும் குணமது.
இராவணன் என்பது ஒரு வில்லனின் பெயர். அதைக்குழந்தைகளுக்கு வைக்கமாட்டார். ஆயினும் பலர் வீம்புக்காக வைப்பர். இந்துக்களின் மனங்களைப்புண்படுத்தும். அவரும் உங்களைப்போல வாதிடலாம்: எங்களுரிமை! சரிதான். இல்லையா?
சமீபத்தில் அமெரிக்காவில் ஒருவர் தன் குழந்தைக்கு ஹிட்லர் எனப்பெயரிட்டார். அவர் ஒரு ஜெர்மானிய அமெரிக்கர்; அவர் மூதாதையருக்கு அப்பெயரிந்ததால் வைத்தார். அவரிடந்த இடத்திலும் பள்ளியிலும் வேறுமாதிரி சொல்ல, அவர் அப்பெயரை எடுத்துவிட்டார்.
அவரும் உங்களைப்போல இலகுவாக வாதிட்டிருக்கலாம். அரசும் சட்டமும் தடுக்கா.
தெய்வத்திருமகன் என்பது எளிய தமிழ்ப்பெயர்தான். ஆனால் அதை நீங்களோ மற்றவரோ வைத்துக்கொண்டு எங்களுரிமையென்று சொல்லமுடியவில்லையே? ஒரு சினிமாவுக்கு அப்பெயர் வைத்ததை எதிர்த்து மிரட்டல் வந்ததால், தெய்வத்திருமகள் என்றல்லாவா மாற்றினார்கள்? உரிமை என்று வாதிடலாமே?
ஆக, உரிமை என்பது இங்கு பூரண உரிமைதான். இல்லெயென்று சொல்லவில்லை. ஆனால், அவ்வுரிமையை எப்படிப் பயன்படுத்துவது என்பது அவரவர் விருப்பம். அவ்விருப்பம் உங்களை உலகுக்குக்காட்டும். சமூகத்தின் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். எவ்வளவு காலம் அவர்களெல்லாம் போக்கத்தவர்கள் என்று ஒரு இரும்புக்கோட்டை கட்டிக்கொண்டு வாழ்வீர்கள்?
பிராமாணாள் என்பது மதவழி வந்தது என்பதில் ஐயமேயில்லை. அதை வைத்துக்கொண்டு பேசியது பல பிணக்குகளுக்கு வழிவகுத்தது என்பது வரலாறு. இதைத்தான் சொன்னேன்.
"டோண்டு இராகவன் பிராமணன்" சவுக்கியமா? என்று கேட்டால் அவர் என்ன சொல்லுவார்?
வீம்புக்காக 'எனக்கென்ன ராஜாதான். அப்படியே கூப்பிடேன்' என்பார்.
அந்த வீம்பை எப்படி ஏற்பது? நணபர் சொல்கிறார்: "வயசான மனுசனை விட்டுவிடப்பா? அவங்க அப்படித்தான் இருப்பார்கள்"
நண்பர் சொன்னதை ஏற்று விடுவதைப்போல எவரெல்லாம் தங்களை பிராமணாள் எனவழைத்தார்களோ அவர்களை, அவங்க அப்படித்தான் என விட்டுவிடுவதுதான் நன்று
//நம்பிள்ளை ஒரு பிராமணனைப்பார்த்துச் சொன்னது.//
முகத்தைத் திருப்பிக்கொண்டது என வாசிக்கவும். அதற்கு காரணம் அப்பிராமணன் தன்னை உயர்வாக கோயிலுக்குள்ளேயே நினைத்து செயல்பட்டதால். உயர்வும் தாழ்வும் இல்லையென்னும் மதமே நம்பிள்ளைகண்ட நல்மதம். எனவே.
தன் ஒழுக்கத்திலிருந்து தவறிய ஒரு பிராமணன் அதற்காக, கடும்பசி கொண்டு வருவோரையும் போவோரையும் அடித்துப்புசிக்கும்படி சாபமிடப்பட்டான் என்பதும் அப்படி ஒருநாள் அவன் அலையும்போது எதிரே வந்த பன்னிரு ஆழ்வார்களுக்கும் முந்திய ஆழ்வாரை (நம்பாடுவான் என்பது அவரின் திருநாமம்) கடித்துப்புசிக்கவந்தான் என்பதும் எப்படி அந்த ஆழ்வாரால் தடுத்தாட்கொள்ளப்பட்டானென்பதும் திருக்குறுங்குடி ஸ்தலபுராணம்.
திரு. குலசேகரன் அவர்களே,
நன்றாக இரண்டு மூன்று முறை தாங்களே தாங்கள் கீழ்க்கண்டவற்றில் கூறியுள்ள உதாரணங்களை ஊன்றி படித்துப்பாருங்கள்.
எதைக்கொண்டு எதை நிறுவுகிறீர்கள் என்றும் சொல்லுங்கள். அல்லது உங்களுடைய உள்மன வெறுப்பு விருப்பு இந்த ஒப்புமைப்படுத்தல் மூலமாக தெரியவருகிறது என எடுத்துக்கொள்ளலாமா.
//ஹிட்லர் என்பது ஒரு ஜெர்மானியப்பெயர். இன்று எவரும் குழந்தைகளுக்கு அப்பெயர் வைப்பதில்லை. அவருக்கு உரிமை இருக்கிறது; வைக்கலாமெனலாம். அவரே வைப்பதில்லை. சமூகத்தின் உணர்ச்சிகளை மதிக்கும் குணமது.
இராவணன் என்பது ஒரு வில்லனின் பெயர். அதைக்குழந்தைகளுக்கு வைக்கமாட்டார். ஆயினும் பலர் வீம்புக்காக வைப்பர். இந்துக்களின் மனங்களைப்புண்படுத்தும். அவரும் உங்களைப்போல வாதிடலாம்: எங்களுரிமை! சரிதான். இல்லையா?
சமீபத்தில் அமெரிக்காவில் ஒருவர் தன் குழந்தைக்கு ஹிட்லர் எனப்பெயரிட்டார். அவர் ஒரு ஜெர்மானிய அமெரிக்கர்; அவர் மூதாதையருக்கு அப்பெயரிந்ததால் வைத்தார். அவரிடந்த இடத்திலும் பள்ளியிலும் வேறுமாதிரி சொல்ல, அவர் அப்பெயரை எடுத்துவிட்டார்.//
மேற்கண்டவை எதிர்மறை நாயகர்கள் - தனிப்பட்ட ஒரு நபரின் பெயர் - எவ்வாறு ஒரு நல்ல சொல்லாடலானதற்கு மாற்றாக முடியும்.
இன்னுமே சொல்லப்போனால், கோட்சே என்பது / என்ற பெயரை நீங்கள் எந்த வகையில் எல்லாம் அறிந்துள்ளீர்கள்? தங்களின் பெயரில் கூட காழ்ப்பெதிர்ப்பரசையல் செய்யலாம்.!!!
//தன் ஒழுக்கத்திலிருந்து தவறிய ஒரு பிராமணன்//
இதற்க்கு என்ன அர்த்தம்?
//தெய்வத்திருமகன் என்பது எளிய தமிழ்ப்பெயர்தான். ஆனால் அதை நீங்களோ மற்றவரோ வைத்துக்கொண்டு எங்களுரிமையென்று சொல்லமுடியவில்லையே? ஒரு சினிமாவுக்கு அப்பெயர் வைத்ததை எதிர்த்து மிரட்டல் வந்ததால், தெய்வத்திருமகள் என்றல்லாவா மாற்றினார்கள்? உரிமை என்று வாதிடலாமே?//
முதலில் இந்த திரைப்பட / வணிக உத்தி உதாரணங்கள் வலுவில்லாதவை - சண்டியர் எதிர்ப்பு - தேவர் மகன்??!!.
மேலும் உதாரணத்தில் அடிப்படை புரிதல்தவறு உள்ளது. மீண்டும், தங்களின் பெயரில் கூட காழ்ப்பெதிர்ப்பரசையல் செய்யலாம்.
//வீம்புக்காக 'எனக்கென்ன ராஜாதான். அப்படியே கூப்பிடேன்' என்பார்.
அந்த வீம்பை எப்படி ஏற்பது? நணபர் சொல்கிறார்: "வயசான மனுசனை விட்டுவிடப்பா? அவங்க அப்படித்தான் இருப்பார்கள்" நண்பர் சொன்னதை ஏற்று விடுவதைப்போல எவரெல்லாம் தங்களை பிராமணாள் எனவழைத்தார்களோ அவர்களை, அவங்க அப்படித்தான் என விட்டுவிடுவதுதான் நன்று//
ஹி ஹி என்னவோ பிழைத்துபோங்கப்பா என்று விடுவது போல. இங்குதான் / இதில்தான் திரு. டோண்டு அவர்கள் கூறிய //''இப்போது தேவை முரளி ஐயர் போன்று துணிச்சல் உள்ள பேர்வழியும், சொந்த கட்டிடமும்தான். பிறகு பார்க்கலாம்''// உறுதிப்படுகிறது.
பெயர் சூட்டலிலும் உணர்ச்சிகள் இருக்கின்றன என்பதுதான் என் வாதம். தனிநபர் பெயரே பிரச்சினையாக இருக்கும்போது ஒரு கூட்டம்; அல்லது பொதுவிடம் (ஓட்டல்) இவைகளுக்கு கண்டிப்பாக இருக்கும்.
என் எடுத்துக்காட்டுகளை வைத்தே நீங்கள் பேசுகிறீர்கள் இல்லையா? அவ்வெடுத்துக்காட்டுகளையும் தாண்டி மற்றபிற உங்களுக்குப் பிடித்த எடுத்துக்காட்டுகளும் இருக்கும் அவை காட்டப்பட்டால் என்ன சொல்வீர்கள்?
உள்மன காழ்ப்பு இருக்கிறதென்றால், அஃது எப்படி ஒரு ஜாதியினர் 'மதத்தில் வழிவந்த' பெயரைச்சூட்டுவதைத் தவறென்பது என்பதில் காட்டப்படும்? I am surprised.
காழ்ப்புணர்ச்சி எப்போது வருமென்றால், ஒருவன் நன்றாக வாழ தன்னால் முடியவில்லையே என்று நினைப்பவரே காழ்ப்புணர்ச்சி கொள்வர். உங்கள் ஜாதிப்பெயரை வைத்து எப்படி காழ்ப்புணர்ச்சி வரும்?
டோண்டு ராகவன் என்ன சொன்னார்? சங்கராச்சாரியார் இச்சர்ச்சை வேண்டாமே என நினைத்து தடுத்திருக்கலாம் முரளி ஐயரை என்றார்.
ஏன் சர்ச்சை வேண்டாமென அவர் நினைத்தார் எனபதையும் ஆராயவேண்டும்! ராகவன், மற்றும் உங்களைப்போன்றோர் நாங்கள் பிராமணாள் என்ற பெயரை வைத்துக்கொள்வோம்; எவன் என்ன சொன்னாலும் எங்களுக்கு சட்டையில்லை!! என்றால், சங்கராச்சாரியாரும் முரளி ஐயரிடம் அதையே ஏன் சொல்லவில்லை? ‘’ஏன்டா அபிஸ்டு, எவ என்ன சொல்லானென்னடா பிராமணாள் என உன்னைக்கூப்பிட்டுக்கோ; ஓட்டலுக்கும் போட்டுக்கோ. நாமெல்லாம் பிராமணாதானேடா?”’ என்று சொன்னாரா?
இப்படி நான் கேட்பதில் ஒரு உட்பொருள் உண்டு; என்னவென்றால், இந்து மதப்பெரியார்கள், அதாவது சங்கராச்சாரியார்கள்; ஜீயர்கள் என்ன சொன்னார்கள்? இப்படி பிராமணாள் என்ற பெயரை வைத்துக்கொள்ளுங்கள் தமிழ்ப்பார்ப்ப்னர்கள் அனைவரும் என்று சொன்னார்களா? சொல்வார்களா ?
இதற்கு எனக்குப்பதில் தெரியாது. ஒரு யூகத்தின்படி, அப்படிச் சொல்லமாட்டார்கள்; சொன்னால் இந்துமதம் பார்ப்பன மதமாகிவிடும்.
ஆக, இங்கு இரு தளங்கள்: 1) இந்துமதப்பெரியோர்கள்; 2) உங்களைப்போன்ற ஒரு ஜாதி ஜனம்.
இருசாராரின் கருத்து வெவ்வேறு.
My view comes from the first, I am sure. By saying I bear malice towards ur caste, u r attempting to whitewash the wrong act.
நம்ம டோண்டு ராகவராவது சொல்றதை கூச்சப்படாமப் "பச்சையா சொல்லிடுவாரு.
ஆனா இந்த iTTiAM னு ஏதோ பேரை வச்சுண்டு அலையிறாரே... இவரு இழவையும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு தெளிவா சொல்ல மாட்டாரு.
***இதில்தான் திரு. டோண்டு அவர்கள் கூறிய //''இப்போது தேவை முரளி ஐயர் போன்று துணிச்சல் உள்ள பேர்வழியும், சொந்த கட்டிடமும்தான். பிறகு பார்க்கலாம்''// உறுதிப்படுகிறது.****
இதையே சும்மா திரும்பத் திரும்ப சொல்லிண்டு இருக்கப்படாது! நம்மள்ல எத்தனை பிராமணாள் கோடி கோடியா சம்பாரிக்கிறா? ஒரு ஏழை பிராமணனுக்கு, ஸ்ரீரங்கத்துல ஒரு சுமார் கோடி செலவுல ஒரு கடை கட்டிக்கொடுக்காம வாயிலேயே கடை கட்டினா எப்படி? ஆக வேண்டியதை கவனிங்காணும்! :)
திரு. குலசேகரன் அவர்களே,
//காழ்ப்புணர்ச்சி எப்போது வருமென்றால், ஒருவன் நன்றாக வாழ தன்னால் முடியவில்லையே என்று நினைப்பவரே காழ்ப்புணர்ச்சி கொள்வர். உங்கள் ஜாதிப்பெயரை வைத்து எப்படி காழ்ப்புணர்ச்சி வரும்?//
// அவ்வெடுத்துக்காட்டுகளையும் // ஒரு பகுதியினை மட்டும் சுட்டிக்காட்டும்போது தனி மனித விருப்பு / வெறுப்பு என்றுதானே வரும்.
//தன் ஒழுக்கத்திலிருந்து தவறிய ஒரு பிராமணன்//
இதற்க்கு என்ன அர்த்தம்?
// //நம்பிள்ளை ஒரு பிராமணனைப்பார்த்துச் சொன்னது.//
முகத்தைத் திருப்பிக்கொண்டது என வாசிக்கவும். அதற்கு காரணம் அப்பிராமணன் தன்னை உயர்வாக கோயிலுக்குள்ளேயே நினைத்து செயல்பட்டதால். உயர்வும் தாழ்வும் இல்லையென்னும் மதமே நம்பிள்ளைகண்ட நல்மதம். எனவே.//
ஆக, அப்போதும் அவர் தன்னை மட்டும் உயர்வாக எண்ணிக்கொண்ட, தலைக்கனம் பிடித்த ஒரு பிராமணனை பார்த்து சொன்னார்.
திரு. வருண் அவர்களே,
//இதையே சும்மா திரும்பத் திரும்ப சொல்லிண்டு இருக்கப்படாது! நம்மள்ல எத்தனை பிராமணாள் கோடி கோடியா சம்பாரிக்கிறா? ஒரு ஏழை பிராமணனுக்கு, ஸ்ரீரங்கத்துல ஒரு சுமார் கோடி செலவுல ஒரு கடை கட்டிக்கொடுக்காம வாயிலேயே கடை கட்டினா எப்படி? ஆக வேண்டியதை கவனிங்காணும்! :)//
நல்ல சரியான யோசனை!!:-) இதை செய்யாமல் சும்மா உஞ்சவிருத்தி பஜனை கால திண்ணைப்பேச்சு முத்துகளை உதிர்த்து கொண்டிருந்தால் வேலைக்காகாது.
யப்பா, மொத்தத்துல brahmanaal.com ஆரம்பிக்கலாமா இல்ல வேணாமா?
சோ ரொம்ப விவரமா "துக்ளக்"-ன்னு பேரு வைச்சுகிட்டு ஜாலியா இருக்கார். ரொம்ப பயலுவ அது ஒரு முஸ்லிம் பத்திரிகையா நினைச்சு, எதுக்கு வம்புன்னு சும்மா இருக்கானுக. அட கலைஞர் கூட அப்படிதான் அடக்க ஒடுக்கமா இருக்காரு.
அச்சச்சோ! www.brahmin.com அப்படின்னு ஒரு site வச்சு வியாபாரம் பண்ணறாளே! திராவிட குஞ்சுகள் என்ன பண்ணுவார்களோ? பயமா இருக்கே!
திராவிடக்குஞ்சுகளுக்கு அந்த கடமையைக்கொடுக்காமல் நீங்களே எடுத்துக்கொண்டு செய்ய வேண்டுமென்று நான் எழுதியிருக்கிறேன். அதை எதிர்கொண்டு பதில் போடவும் கண்ணன் மற்றும் அடியான்!
எதற்கெடுத்தாலும் திராவிடதறுதலைகளிடம் ஓடுவது எஸ்கேபிசம்.
பிராமணன் என்பது ஒரு இந்துமத தத்துவம். அதற்கென்று ஆயிரக்கணக்கான வழிமுறைகள் உள்ளன. அன்றே அவ்வழிமுறைகளைக் க்டைபிடிக்க முடியவில்லை.
பலர் ஏமாற்றத்தான் செய்தார்கள். இன்று எப்படி சாத்தியமாகும்? எப்படி ஒரு சாரார்
மட்டும் தங்களை அப்படி அழைத்துக்கொள்ளலாம்?
இவை கேள்விகள். எழுப்பினால் பார்ப்பன வெறுப்பு என்கிறீர்கள். திராவிடக்குஞ்சுகள் என்று சொல்லி மழுப்புகிறீர்கள். ஏன் தமிழ்நாடு பிராமணர் சங்கம்? ஏன் இவர்கள் மட்டும் பிராமணர்கள்? யார் இவர்களுக்கு இந்த பட்டத்தைக் கொடுத்தது? வேதங்கள் சொல்லியினவா? உபநிடதுகள் தமிழ்நாட்டில் ஒரு ஜாதியார் மட்டும் பிராமணர்கள் என்றனவ? எந்த அதிகாரத்தில் உங்களை அப்படி அழைத்துக்கொள்கிறீர்கள்?
கேள்விகளை நேரடியாக எதிர்நோக்காமல் பகடி பண்ணி இன்புறுவது சரியா?
இந்துமதம் வாழவேண்டுமா? அல்லது அதே சர்ச்சைகளில் மூழ்கிக்கொண்டேயிருக்க வேண்டுமா?
***adiyaarkku adiyavan said...
அச்சச்சோ! www.brahmin.com அப்படின்னு ஒரு site வச்சு வியாபாரம் பண்ணறாளே! திராவிட குஞ்சுகள் என்ன பண்ணுவார்களோ? பயமா இருக்கே!***
உமக்கு புத்தியே கிடையாதுண்ணா! பிராம்ணாளா ஒண்ணு சேர்ந்து ஒற்றுமையா கிழிக்கப் போறேளாக்கும்?
அப்போ பிராமணாள் சங்கர் ராமனுக்கும், பிராமணாள் சங்கராச்சார்யாருக்கு இடையில் கருத்து வேறுபாடு வந்து அடிச்சுட்டு நாறியது ஏன்? அவா ரெண்டு பேருமே பிராமணாள் தானே? மூளையிருந்தால் கொஞ்சம் யோசியும்.
பிராமனாள் தளத்தில் உங்களுக்குள்ளே எவன் பெரியவன், எவ அழகி, எவ தரங்கெட்டவ, எவன் மட்டமான பிராமணன்னு அடிச்சுண்ண்டு நாறுவேள்! அதுதான் நடக்கும்!
திராவிடகுஞ்சுகள்தான் உங்க ஒற்றுமைக்கு வழி வகுக்குறா. பிராமனாளா இருந்தா ஒண்ணும் ஒற்றுமையா இருந்து நீர் கிழிக்கப் போவதில்லை!
You guys are finding hard to understand some simple facts. Why do you think of yourself so great? Beats me!
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசவதில் (எழுதுவதில்) வருணுக்கு நிகர் இந்த லோகம் கண்டதில்லை போலிருக்கு www.brahmin.com பத்தி நான் எழுதினதுக்கும் இவர் உளறலுக்கும் யாராவது (ப்ராமணாள் அல்லாதவாள் உள்பட) கண்டு பிடித்து சொல்லுங்களேன். எழுதுவதற்கு முன் குறைந்த பக்ஷம் அந்த site யாவது பார்த்து இருக்கலாம். DK(திராவிட குஞ்சு) அறிவு, பகுத்தறிவு, வகையறாக்கள் அவ்வளவுதான் - உள்ளங்கை நெல்லிக்கனி.
வானம் எனக்கொரு போதி மரம்
சாதியின் மதிப்பு அவரவர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாறாக ஒருவரின பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உயர்வு தாழ்வை மட்டுமே அறிவிப்பதும் விளம்பரப்படுத்துவதும் கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.
சாதியைச் வெறும் அடையாளத்துக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது எனக் கருதிவிட முடியாது. பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம். ஏன் என்றால் பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்டாலும் பிரபாகரன் அம்பட்டன் என்றோ பிரபாகரன் நளவன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.
தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விரும்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விளம்பரப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் காரணம் . ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.
பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக சில்பா செட்டி, முகேஸ் சர்மா, ரேணுகா ஐயர் போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த சாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.
இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு சென்னையிலோ அல்லது மதுரையிலோ வாடகைக்கு எடுக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் ஐயர் என்றோ, மீரா சர்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குலுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?
அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது?
நல்லையா தயாபரன்
Post a Comment