Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

1/19/2013

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 19.01.2013

சிலுக்கு சிலுக்கு காலை நல்லா அமுக்கு, அமுக்கு
சிலுக்கு செயலாக இருந்தபோது நான் படித்தது, இங்கு இற்றைப்படுத்தப்படுகிறது..

பாற்கடலில் எம்பெருமான் பள்ளி கொண்டுள்ளார் பாம்பணையின் மேல். அவர் காலை பிடித்தவாறு லக்ஷ்மி. பிரும்மதேவன் சூழ தேவர்கள் வருகின்றனர்.

தேவர்கள்: பிரபோ அபயம் நாடி இங்கு நாங்கள் வந்தோம்.

மகாவிஷ்ணு: வாருங்கள் தேவர்களே, என்ன விஷயம்?

தே: பூலோகத்தில் கலி ரொம்பவும் முற்றியாகி விட்டது பிரபோ. நீங்கள் சொன்ன சம்பவாமி யுகே யுகே கான்சப்ட் படி நீங்கள் இன்னொரு அவதாரம் எடுக்கும் நேரம் வந்து விட்டது.

ம: (திடுக்கிட்டு): என்ன பூலோகமா, அது இன்னுமா இருக்கிறது?

தே: இப்படிச் சொன்னால் எப்படி பிரபோ, நீங்கள் அறியாததா?

ம: ஓக்கே, ஓக்கே டென்ஷன் வேண்டாம். எனது முகநூலில் ஸ்டேடஸ் பார்க்க மிஸ் ஆகிவிட்டது. இப்போ கொஞ்சம் பிசியாக இருக்கிறேன், பிறகு பார்க்கலாமே

தேவர்கள் இதை எதிர்த்து கோஷம் போட ஆரம்பிக்கிறார்கள்.

- மகாவிஷ்ணு அண்ணாச்சி, உங்க வாக்குறுதி என்னாச்சி?
- தூங்கியது போதும் அண்ணாச்சி, காரியம் வேணும் அண்ணாச்சி!
- சம்பவாமி யுகே, யுகே, பூலோகத்துள் நீங்கள் புகே, புகே.

இவ்வாறாக பலர் பல கோஷங்கள் போட, ஒருவர் மட்டும் “சிலுக்கு, சிலுக்கு, சிலுக்கு! வராட்டா ஆகும் பொடுகு பொடுகு, பொடுகு!” என கத்திக் கொண்டே நடனமாடுகிறார்.

பிறகு மகாவிஷ்ணு வாக்களிக்கிறார் என வைத்துக் கொளுவோம். ஆனால் அவருக்கு கடைசி கோஷம் குறித்து மண்டை காய்கிறது. அச்சமயம் அப்பக்கம் “நாராயண, நாராயண” எனக் கூறிக்கொண்டே வ்ரும் நாரதர் விஷ்ணுவுக்கு விளக்குகிறார். ”பிரபோ, இதுதான் இப்போ பூலோகத்தில் ஃபேஷன். எல்லாத்திலேயும் சிலுக்கை இழுப்பதுதான் அது”. சிலுக்கு பற்றி மேலும் கூற, மகாவிஷ்ணு சிந்தையில் ஆழ்கிறார்.

அப்போது லக்ஷ்மிதேவி கேட்கிறார், “பிரபோ என்ன யோசனை”?

மகாவிஷ்ணு கூறுகிறார், ”சிலுக்கு சிலுக்கு காலை நல்லா அமுக்கு, அமுக்கு”.

“யூ டூ”? என கோபிக்கிறார் மகாலட்சுமி.

பிறகு மகாவிஷ்ணு அவதாரம் எடுத்து, எல்லோரையும் நல்லவர்களாக்கிவிட, நாட்டில் இனிஷியேட்டிவ் எடுப்பவர்கள் இல்லாமல் போகிறார்கள், எல்லாமே பக்தி பஜனை கூடங்களாகின்றன என்றெல்லாம் கதை போகிறது..

கதையின் நீதி யாது எனக் கேட்டால் கெட்டதும் முக்கியம் என்றே வருகிறது. நீங்களே சொல்லுங்கள், வில்லன், வில்லி இல்லாமல் கதை போகுமா?

சோ அவர்கள் அதிமுக பக்கமே அதிகமாகச் சாய்கிறார் 
இப்போதிருக்கும் நிலைமையில் வேறு என்ன செய்ய முடியும்? நான்கு பிள்ளைகளில் நல்லவன் யாரென ஒரு தகப்பனைக் கேட்க அவனோ, கூரைமேல் தீப்பந்தத்துடன் நிற்பவனே நல்லவன் எனக் கூறுவதாக ஒரு கதையும் உண்டு.

நான் ஏற்கனவேயே கூறியது போல, ”மோதி மாதிரி எல்லோரும் இருப்பதில்லையே, ஆகவே அவர் மாதிரி ஒருவர் நமக்கு முதல்வராக கிடைக்காதவரை ஜெயலலிதாவா, கருணாநிதியா என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.

ஒருவரும் தேறவில்லை எனக்கூற ஐந்து நிமிட்ங்கள் கூட ஆகாது. ஆனால் அவ்வாறு இருப்பது காரியத்துக்காகாது.

இதைத்தான் சோ பல முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறி வருகிறார். அவரது செயல்பாடுகளும் இம்மாதிரித்தான்.

மேலும் ஜெவுக்கு செம்பு அடிப்பதால் அவருக்கு என்ன லாபம்? தன் சுய தேவைகளுக்காக சோ அவர்கள் யாரிடமும் இதுவரை கையேந்தியதில்லையே. அதை நாம் மறக்கக் கூடாது”.

Form 26 AS:
வரவர இந்த வருமானவரித்துறையின் லொள்ளுக்கு அளவில்லாமல் போயிற்று. சில பணவரவுகளுக்கு முதலிலேயே வரி பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்த வேண்டியது பணம் தருபவரது கடமை. இதை TDS (Tax deduction at source) என்பார்கள். நமக்கும் ஒரு ஸ்டேட்மெண்ட் தருவார்கள். அதுதான் படிவம் 16 ஏ. பல கம்பெனிகள் இங்குதான் அழும்பு செய்யும். வரியை பிடிப்பார்கள், ஆனால் கருவூலத்தில் அதை செலுத்த சரியான நேரத்தில் மாட்டார்கள். படிவம் எண் 16 ஏ தராமல் நம்மைத் தொங்கலில் விடுவார்கள். அதை வாங்குவதற்குள் நமது தாலி அறுந்து போகும்.

அதற்குத்தான் அரசு படிவம் 26 ஏஎஸ் கொண்டு வந்தது. அதை நாம் இணையத்தில் பார்த்துக் கொள்ளலாம். அதற்கென் பல வழிமுறைகள் உண்டு. திடீரென அதிலும் குழப்பம் வந்தது. அக்டோபர் 31, 2012-க்கு பிறகு இப்படிவத்தில் இற்றைப்படுத்தலே இல்லை. முட்டி மோதி விசாரித்ததில் அப்படிவத்தின் தளம் மாற்றப்பட்டது எனத் தெரிகிறது. (சொல்லவே இல்லை!)  புதிய தளத்தில் மறுபடி பதிய வேண்டும். நேற்று கிட்டத்தட்ட 3 மணி நேரம் மன்றாடிய பின்னர்தான் அதுவும் நடந்தது.

எனது கேள்வி இதுதான். படிப்பறிவு பெற்ற நாமே இப்பாடுபடும்போது, மற்றவர்கள் என்ன செய்வார்கள்? எல்லோருமே வரி ஆலோசகர்களை நியமித்துக் கொள்ள இயலுமா?

மானிய விலையில் வருடத்துக்கு 9 கேஸ் சிலிண்டர்கள் எனச் சலுகை உயர்வு:
நிலைமையில் தெளிவு இல்லை. ஒரே கெடுபிடிதான். இத்தனைக்கும் காரணம் என்னவென்று பார்த்தால், சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் சப்சிடிதான். தற்சமயம் வீடுகளுக்கு கொடுக்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை 398 ரூபாய்கள். ஆனால் உண்மையாகவே அதன் விலை சுமார் 890 ரூபாய்கள்.

என்ன நடக்கிறதென்னவென்றால், துண்டு விழும் ரூபாய்கள் சப்சிடி ஆகும். அவ்வாறு சப்சிடி பெறுபவர்கள் எல்லோருமே தினக்கூலிகள் அல்ல. இது முற்றிலுமே ஓட்டு பொறுக்கும் பிரச்சினை.

இண்டேனுக்கு அரசு அளிக்கும் த்கையும் திருப்திகரமாக இல்லை.ஆகவே இந்த சிலிண்டர்களை நிரப்புவதில் இண்டேனுக்கும் அக்கறை இல்லாமலிருப்பது புரிந்து கொள்ள்ளக் கூடியதே. சுதந்திரச் சந்தையில் உள்ளே புகுந்து அரசு குளறுபடி செய்வதற்கான உதாரணமாகவே இதை எடுத்து கொள்ளலாம்.

இதற்கு என்ன வழி? எனக்குத் தோன்றுவதை கூறுகிறேன். பேசாமல் இந்த சப்சிடியை மொத்தமாக ஒழியுங்கள், அல்லது கணிசமாகக் குறையுங்கள். இண்டேன் கம்பெனிக்கு அரசு தரும் விலையும் யதார்த்தத்தை ஒட்டியிருக்க வேண்டும். பிறகு பாருங்கள், இந்த கோட்டா முறையெல்லாம் ஒழிந்து மக்களும் தேவையின்றி பதுக்க மாட்டார்கள்.

1949-ல் ஜெர்மன் ஃபெடெரல் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு, Reichmark விலக்கப்பட்டு Deutschmark வந்து, ரேஷன் முறையும் ஒழிக்கப்பட்டது. அதுவரை காலியாக இருந்த கடைகளில் எங்கிருந்தோ பொருட்கள் வந்து ஷெல்ஃப்களை அலங்கரித்தன. அதுவரை அரசு சப்சிடி சார்ந்த குறைந்த விலையால் பொருட்களை விற்பவருக்கு ஊக்கம் இல்லாமல் இருந்ததே முந்தைய நிலைக்கு காரணம் என்பது பின்னால் புலப்பட்டது.

இவ்விஷயத்தில் இந்திய உதாரணங்களுக்கும் பஞ்சமில்லை  மோதி பதவிக்கு வந்த சமயத்தில் குஜராத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தமிழக அரசு வழ்ங்கும் மின்சாரம் போல எப்போதாவதுதான் வந்தது.

மோதி ஒரே ஒரு ப்ரபோசலை வைத்தார், பணம் கட்டுங்கள் 24 மணிநேர மின்சாரம் என்று. அவர்களும் ஒத்து கொண்டனர். குஜராத் இப்போது விவசாயத் துறையில் அமோகமாக முன்னேறியுள்ளது என்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

அதே மாதிரி சமீபத்தில் 1952-ல் சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற ராஜாஜி அவர்கள் செய்த முதல் காரியம் ரேஷன் முறையை விலக்கிக் கொண்டதே. அதனால் பல பொருள் விரயங்கள் தடுக்கப்பட்டு, நாடு முழுவதிலும் அது அமுலுக்கு வந்தது. 1964 வரை ரேஷன் முறை இல்லாமல்தான் இருந்தது. அவ்வாண்டு ரேஷன் மீண்டும் வந்ததிலிருந்து இன்றுவரை நிலைமை விரயங்களுடன் அப்படியே உள்ளது. நமக்கெல்லாம் இன்னொரு ராஜாஜி அல்லது மோதி தேவை.

ஆக, சப்சிடி சிலிண்டர்களது எண்ணிக்கை வருடத்துக்கு 6 என கட்டுப்படுத்தியது நல்ல, சரியான ஸ்டெப்தான். ஆனால் வழமையான ஓட்டுப் பொறுக்கும் அரசியலால் இப்போது அது ஆண்டுக்கு 9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழப்பங்கள் தொடர்கின்றன..  இப்போதைய நிலவரப்படி சப்சிடி சிலிண்டர்களை வினியோகிப்பது 6/9 குழப்பத்தால் நிறுத்தப்பட்டுள்ளது என அறிகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்



.


-

12/28/2012

தந்தி போவுது தபால் போவுது

இப்படி ஒரு விளையாட்டாம்.

இந்த விளையாட்டைச் சிறுவர் சிறுமியர் வட்டமாக உட்கார்ந்து ஆடுவர். ஒருவர் பட்டவர். அவருக்குத் தெரியாமல் ஒரு மணியாங்கல் வட்டத்தில் உள்ளவரிடையே கைமாறும். ஒருவர் கையில் கல் தங்கிவிட்டாலும், அவர் அடுத்தவரிடம் கல்லைக் கொடுத்துவிட்டது போல் நடிப்பார். இதனால் மணியாங்கல் யாரிடம் உள்ளது என்பது கல் வைத்திருப்பவரைத் தவிர யாருக்கும் தெரியாது. மூன்று சுற்று கைமாற்றம் நிகழ்வதற்கு முன் பட்டவர் யாரிடம் கல் உள்ளது என்று சொல்லிவிட வேண்டும். சொல்லாவிட்டால் பட்டவரைக் குனியவைத்து அவர் முதுகில் ஆளுக்கொரு தட்டு தட்டுவர். சொல்லிவிட்டால் கல் வைத்திருந்தவர் முதுகில் அனைவரும் தட்டுவர்.

இப்படி ஆட்டம் முடிந்தபின் மீண்டும் புதிதாகப் பட்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த ஆட்டம் தொடரும். கல்லைக் கடத்தும்போது எல்லாரும் சேர்ந்து பாட்டுப் பாடுவர். தந்தி போவுது தபால் போவுது திரும்பத் திரும்ப இசையுடன் பாடுவர். 

இப்போ எதுக்கு இது பத்தி பேசறே என்னும் முரளி மனோகருக்கான பதில்தான் இப்பதிவு.

சமீபத்தில் 1969-ல் வெளியான படம் தர்தீ கஹே புகார் கே (நிலம் என்னும் நல்லாள் அழைக்கிறாள்) என்ற படத்தில் ஒரு சீன். ஜீதேந்திரா வயலில் இருக்க, அவன் அண்ணன் மகன் வந்து வீட்டுக்கு தந்தி வந்திருக்கிறது, அதை வைத்துக் கொண்டு அம்மா அழுகிறாள் என பதட்ய்டத்துடன் கூற, ஜீத்தேந்திராவும் அங்கு சென்று கூடவே ஒப்பாரி வைப்பார். தந்தியில் என்ன விஷயம் என யாருக்கும் தெரியாது, ஏனெனில் யாருமே படித்தவர்கள் இல்லை. கிராம ஆசிரியர் அபீ பட்டாசார்யா வந்து நல்ல விஷயம்தான் எனக் கூறும்வரை அமர்க்களம் நீடிக்கும்.

இங்கு நான் சொல்ல வந்தது தந்தி என்றால் சராசரி இந்தியர்கள் பதறுவது பற்றியே. ஆனால் தற்சமயம் தந்திகளை யாராவது அனுப்புகிறார்களா? நன் கடைசியாக 2003-ஆம் ஆண்டில் ராமேஸ்வரத்துக்கு ஒரு தந்தி அனுப்பினேன், ஏனெனில் விலாசதாரரிடம் ஃபோன் இல்லை. அதன் பிற்கு லேது. ஆண்டு துவக்கத்தில் தபால் ஊழியர்கள் தீபாவளி இனாம் கேட்டு வருவார்கள், அவர்களுள் தந்தி ஊழியர்கள் அதிகம். ஆனால் தற்சமயம் அதுவும் இல்லை. கூரியர் வந்து விட்ட இக்காலத்தில் ஆர்டினரி தபாலே இல்லை என ஆகிவிட்டது. சில அரசு சார் கடிதங்கள் மட்டும்தான் தந்தியில் அனுப்பப்படுகின்றன என நினைக்கிறேன்.

ராஜேஷ் கன்னாவின் இப்பாடல் காட்சிகள் இப்போது காணக்கிடைக்காது என்றே சொல்ல வேண்டும்.



ஒரு வேளை கிராமங்களில் இன்னும் இதெல்லாம் நடக்கிறதா எனத் தெரியவில்லை.? யாராவது சொல்லுங்கப்பூ.

இப்பல்லாம் தந்தி பற்றிய விளையாட்டுகளில் மட்டுமே அது பற்றி பேசுவார்கள் போல.

இத்துடன் தொடர்பு உள்ள எனது இன்னொரு பதிவு இதோ.

ஸ்ரீலங்காவில் தந்திக்கு மங்களம் பாடிவிட்டார்கள் போல தெரிகிறதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்சேர்க்கை: நணபர் நாகராஜன் அன்புடன் அனுப்பிய கௌரி கல்யாணம் பாட்டின் வீடீயோ இதோ:

3/10/2012

கணினி கடவுச்சொற்களை பாதுகாப்பது எப்படி?

இதற்காகவெல்லாம் மெனக்கெட்டு நான் ஏதாவது மென்பொருளை உபயோகிப்பேன் என்றால் சாரி. இல்லை. ஆனாலும் இது சம்பந்தமாக பல பதிவுகள் வந்து விட்டன. அவற்றை மேலோட்டமாக ஆய்வதே எனது இப்பதிவின் நோக்கம்.

1. ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் பிரத்தியேகக் கடவுச்சொல்லை வைத்துக் கொள்ளவும்.
நடக்கிற காரியமா அப்பு? எந்தக் கடவுச்சொல்லை எந்த அப்ளிகேஷனுக்கு வைத்துக் கொண்டோம் என எவ்வாறு நினைவில் வைத்திருப்பதாம், ஏனெனில் அவற்றை எல்லாம் எங்கும் எழுதி வைத்துக் கொள்ளக் கூடாது என வேறு பயமுறுத்துகிறார்கள்.

2. கடவுச்சொற்கள் குறைந்த பட்சம் 15 கேரக்டர்கள் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவும் @, \, %, # என்றெல்லாம் நடுவில் இருக்கவேணுமாம். அடப்போடாங், @#$%^&* @#$%^&* @#$%^&*

3. சில அப்ளிகேஷன்களில் அவர்களாகவே நம்மை கடவுச்சொல்லை மாற்றும்படி வாரத்துக்கு ஒரு முறை கழுத்தில் துண்டு போட்டு இருக்குகின்றனர். ஏதோ அவர்களுக்காக இரு கடவுச்சொற்களை மாற்றி மாற்றி பாவிக்கலாம் என்றால் அதுவும் கூடாதாம். புதிதாக வரும் கடவுச்சொல் முந்தைய மூன்று அல்லது நான்கு கடவுச்சொற்களிலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டுமாம். படுத்துகிறார்கள் சாமி.

4. கடவுச்சொல்லை மாற்றுவது நமது முடிவாக இருக்க வேண்டும். கண்ட சும்பன்கள் இதில் உள்ளே நுழையலாகாது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல அப்ளிகேஷன்களுக்கு கடவுச் சொற்களை பாவிக்கும் நான் கண்டறிந்தது என்னவென்றால், ரொம்பவெல்லாம் மெனக்கெட்டு காம்ப்ளிகேட்டடாக கடவுச்சொற்கள் அமைத்துக் கொண்டு சந்தியில் நிற்கலாகாது என்பதே.

நாம் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் நலம்.

நமது கடவுச் சொற்கள் நமக்கு மட்டுமே தேரியும் என்ற நிலையில்தான் அவை உபயோகமானவை. வேறு யாருக்கும் தெரியலாகாது. இந்த எளிமையான விதியை ஃபாலோ செய்யாது பல பதிவர்கள் சந்தியில் நின்றது பற்றி நான் அறிவேன்.

ஃபிஷிங் மின்னஞ்சல்களை கண்டதுமே அழிக்க வேண்டும்.

எனது ஜிமெயிலை ஹேக் செய்ய முயன்றான் ஒரு இழிபிறவி. அது பற்றி நான் இட்ட பதிவு இதோ.

அதே போல அவனது அல்லக்கை ஒருவன் என்னை தனது ஜீ டாக்கில் கொண்டுவர முயற்சித்தான். அதையெல்லாம் புறம் தள்ளியதால் நான் காப்பாறப்பட்டேன்.

பதிவை முடிக்கும் முன்னால் நான் கேட்ட ஒரு அசைவ ஜோக் இங்கே.

மலை வாசஸ்தலத்துக்கு பாய்பிரெண்டுடன் வந்த அப்பெண்ணுக்கு ஒரு பிரச்சினை. கருத்தடை மாத்திரைகளை கொண்டு வர மறந்து விட்டாள். கடைகள் ஏதும் சமீபத்தில் இல்லை. ஹோட்டல் மருத்துவரிடம் அன்றைய இரவை சமாளிக்க அவரிடம் மாத்திரை இருக்குமா எனக்கேட்க, அவரோ கருத்தடை மாத்திரை இல்லை, ஆஆனால் தலைவலி மாத்திரை தருவதாகக் கூறினார். அதை எவ்வாறு பயன்படுத்துவது இந்தத் தேவைக்கு என அப்பெண் மயங்க, அவர் கூறினார்.

கால் நீட்டி படுத்துக் கொள். தலைவலி மாத்திரையை இரண்டு முழங்காலுக்கு நடுவில் நிறுத்தி வைக்கவும். இரவு முழுவதும் அது கீழே விழாமல் பார்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/27/2012

சில சொற்களின் சிதைவு

பஞ்சதந்திரம் படத்தில் எல்லாமே அமர்க்களமான சீன்கள்தான். அவற்றில் சிறந்தது வண்டியை போலீஸ் சோதனையிடும் காட்சி. “பின்னாடி, முன்னாடி என்ன இருந்தது என தெளிவாக இன்ஸ்பெக்டர் வாசு விக்ரம் கேட்க ஆரம்பிக்கும் குழப்படி சீனைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

அதில் பின்னாடி டிக்கி, ஸ்டெப்னி, மாகி என ஒவ்வொருவராக உளற, ஐஸ் காப்பி என நினைத்து போதை பொருளை உட்கொண்ட நாகேஷ் மாகி ஸ்டெப்னியில்லை, மனைவி என உளற மேலே செல்கிறது அந்த சீன். நமக்கு இங்கு வேண்டியது ஸ்டெப்னி என்னும் சொல்தான். சரியோ தவறோ ஸ்டெப்னி என்பது சின்ன வீட்டைக் குறித்துச் சொல்லப்படும் சொல்லாகி விட்டது. அதே சின்ன வீடு வைப்பாட்டியைக் குறிக்கும் சொல்லாக மாறியது நான் கூற வருவதற்கு வலு சேர்க்கிறது என்றால் மிகையாகாது.

இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். ஹிட்லர் காலத்தில் Endlösung (கடைசி தீர்வு என்னும் சொல் 60 லட்சம் யூத மரணத்தில் முடிந்தது எல்லோருக்கும் தெரிந்தது. இப்போது ஜெர்மனியில் வேறு எந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பேசும்போதும் போதும் அதே Endlösung வார்த்தையை பிரயோகிக்கும்போது டிஸ்கியெல்லாம் போட நேர்ந்தாலும் ஆசசரியப்படுவதற்கு இல்லை.

அதே போல அந்த கால கட்டத்தில் ஒரு ஊரிலுள்ள யூதர்களை ஓரிடத்தில் திரட்டி அவர்களை ஒரு வதைமுகாமுக்கு அனுப்புவதும் வழக்கம். அவ்வாறு எல்ல்லோரையும் வரச்சொல்லும் இடத்துக்கு Umschlageplatz (எல்லோரையும் திரட்டி வழி அனுப்பும் இடம்) என்று அழைத்தார்கள். அந்த சாதாரண ஜெர்மன் வார்த்தையை இப்போதும் உபயோகித்தாலும் கேட்பவர் மனதை என்னவோ செய்வதைத் தடுக்க முடிவதில்லை.

முதலிரவு முடிந்ததும் பெண்ணின் தாயார் பெண்ணிடம் சந்தோஷமாக இருந்தீர்களா என கேட்பது வழக்கம். அதற்கு தூய தமிழில் உவத்தல் எனப்பெயர். அதுவே ஓத்தாவாயிற்று. அது பலரது தினசரி வார்த்தையாடல்களில் அனாயாசமாக புகுந்து செல்லும்போது வேறும் ஓசையாகி விட்டது. தன் கையிலிருந்து தங்கை தனது பேனாவை பறித்துக்கொண்டு ஓடுவதை குறிக்க பையன் “அம்மா தங்கச்சி என் கிட்டேயிருந்து பேனாவை ஓத்துட்டு போயிடுத்தும்மா என சொல்லும் அள்விற்குக் கூட சென்று விட்டது.

பல வசை சொற்கள் இவ்வாறு தினசரி வார்த்தையாடல்களில் வருவது குறித்து ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்.

உதாரணமாக கேரளத்தில் மயிர் என்றால் கெட்ட வார்த்தை. அந்தரங்கமயிரை இது குறிக்கும். முடி என்றால் நல்ல வார்த்தை. ஆக, உடலில் ஒருபகுதியை வெளியே காட்டக்கூடாது, அதைப்பற்றிப் பேசக்கூடாது என்ற சமூகச் சீராக்கத்தின் விதிக்கு எதிரான ஒரு மீறலே இங்கே கெட்டவார்த்தையாக ஆகிறது.

நூற்றுக்கு தொண்ணூறு கெட்டவார்த்தைகள் வரைமீறிய பாலுறவைச் சார்ந்தவை. நம் சமூகசீராக்கத்தின் மிகமுக்கியமான, மிகக் கடுமையான விதி என்பது தாயுடனான பாலுறவை தடைசெய்தல்தான். ஆகவே கெட்டவார்த்தைகளில் தாயோளி போன்ற வார்த்தைகள் பெரிதும் புழங்குகின்றன. இதற்கு அடுத்தபடியாக அக்கா தொடர்பானவை. தாயின் அந்தரங்க உறுப்புகள் தொடர்பான சொற்கள் கெட்டவார்த்தையாக ஆவது அவற்றை எண்ணவும் பேசவும் சமூகத்தடை இருக்கிறது என்பதனாலேயே.

///////////////////////////////////////////////////////////////////////////////////////////

மேலும் கெட்டவார்த்தைகள் எல்லா சமூகங்களிலும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நிபந்தனையுடன் — சொல்லிச்சொல்லி அவை தேய்ந்துபோயிருக்க வேண்டும்! கேட்டால் அது கெட்டவார்த்தையாகவே காதுக்குப் படக்கூடாது. பலவருடங்கள் முன்பு நானும் நண்பரும் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த ஒரு படம் பார்த்தோம். அதில் ஸ்டாலோன் ‘·பக்‘ என்ற வார்த்தையை தவிர்த்து நாலைந்து வார்த்தைகள் மட்டுமே சொல்கிறார். ”ஹாலிவுட் படமுல்லா மச்சான்..உலகம் முழுக்க போகணுமில்லா…அதனாலதான் உலகம் முழுக்க தெரிஞ்ச டைலாக்க மட்டும் வச்சிருக்கான்”என்றார் நண்பர்.

///////////////////////////////////////////////////////////////////////////////////////////

எங்களூர் இயக்குநர் ஒருவர் உண்டு. அவருக்கு கமா என்ற எழுத்துக்கான ஒலி தாயளி தான். அது மருவி தாளி. ”எங்கப்பா என்னமாதிரி மேடையிலே பேசுவார்னு நெனைக்கிறீங்க…சைவசித்தாந்தம் பத்தி பேசினா தாளி கொன்னு எடுத்திருவார்” கெட்டவார்த்தைகள் அர்த்தபூர்வமாக அமரும் இடங்களும் உண்டு


மீண்டும் டோண்டு ராகவன். அடப்பாவி என கருணாநிதி எம்ஜிஆரை ஒரு சமயம் குறிப்பிட, எம்ஜீஆரோ பாவி என்றால் சாது எனவும் பொருள் உண்டு எனக்கூறி நிகண்டு ஆதாரம் காட்டியதில் கருணாநிதி அசடு வழிந்ததும் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

சொற்கள் சிதைவு என்னளவிலும் நடந்துள்ளது. இப்போதெல்லாம் பல பிளாக்கர்கள் சமீபத்தில் என்று குறிப்பிட நேரும்போது டோண்டு ராகவனின் சமீபம் அல்ல என டிஸ்கி போடுவதும் சமீபகாலமாக புழங்கி வருகிறது’

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/16/2012

ஒரு கன்னத்தில் அடித்தால் அடிப்பவனின் இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி அடி

ஒருவர் உன்னை சீண்டினால் அதற்கு ரியேக்ட் செய்யும் சிறந்த முறையை இப்பதிவில் பார்க்கலாம்.

உறங்கிக் கிடக்கும் கிருஷ்ண சர்ப்பத்தை தூண்டும் விதமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்த விளம்பரத்தை வெளியிட்டது.



ஹிந்து பத்திரிகை சும்மா இருக்குமா? அதன் விளம்பரங்களை பாருங்கள்.







இதே மாதிரி கோக்கோ கோலாவுக்கும் பெப்சிக்கும் இடையே நடந்த விளம்பர யுத்தங்கள் அமெரிக்காவில் பிரபலமானவை.

இங்கே தமிழ்நாட்டில் நாற்பதுகளில் விகடனுக்கும் கல்கிக்கும் இடையே கூட இம்மாதிரி சொற்போர்கள் நடந்துள்ளன.

ஒரு முறை விகடன் ராஜாஜிக்கு வார்ணிங் கொடுக்க, கல்கி அதை ஒரு கார்ட்டூனாக்கினார். சிங்கத்துக்கு (ராஜாஜி) எலி (விகடன்) வார்ணிங் கொடுப்பது போல இருந்தது அது.

அதே கார்ட்டூனை விகடன் மேற்கொண்டு, சிங்கத்தின் வாலில் ஒரு ஈயை வரைந்து அதற்கு கல்கீஈஈஈ என பெயரிட்டது.

கல்கி இவ்வாறு எழுதினார்.

“இதில் ஒன்று நிச்சயமாகி விட்டது. ராஜாஜி சிங்கம்தான், விகடன் எலிதான், மற்றப்படி அப்படிப்பட்ட சிங்கத்தின் வாலில் ஈயாக இருப்பதில் எமக்கு ஆட்சேபணை இல்லை”

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/22/2012

ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு பிறகு ஔவையாரையே கடிச்சுட்டாங்களே

டிஸ்கி: பவுடர் ஸ்டாரின் என்னது ஔவையார் மலையாளியா என்னும் பதிவுதான் எனது இப்பதிவுக்கு தூண்டுதல்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் விகடனில்(?) ஒரு தொடர்கதை வந்திருந்தது. அது பற்றி கூறும் முன்னால் இன்னொரு விஷயத்தையும் கூறிவிடுகிறேன். கிடைப்பதற்கரிய நெல்லிக்கனியை தமிழ்புலவர் ஔவையாருக்கு அளித்து மகிழ்ந்தான் வல்ளல் அதியமான். காரணம் என்னவென்றால், சாதாரண மன்னனான தன்னைவிட தமிழே மூச்சாக வாழும் ஔவையாரே தமிழகத்துக்கு அதிகம் தேவை என்று அவன் நினைத்ததுதான்.

இதைத் தவிர வேறு ஏதேனும் காரணம் உண்டா என ஆராயப்புகுந்ததுதான் நான் மேலே சொன்ன தொடர்கதை.

கதை அதியமான் இளைஞனாக இருந்தபோது துவங்குகிறது. அவனுக்கு ஒரு காதலி உண்டு (பெயர் முக்கியமில்லை). அதியமானின் விரோதிகள் அவனைக் கொல்ல நஞ்சு பூசிய பாணத்தை விட அவன் காதலி அப்பாணத்தை தன் உடலில் ஏற்று அவனைக் காப்பாற்றுகிறாள். ஆனால் அவளும் சாகவில்லை. என்ன, அவள் முதுகு வளைந்து, சிறுவயதிலேயே முதுமைத் தோற்றம் வந்து விட்டது. அமிதாப் நடித்த பாஆஆஆஆஆ என்னும் படம் நினைவுக்கு வருகிறதல்லவா?

அக்காதலியே பிற்காலத்தில் பெரிய கவியாகி ஔவையார் என அழைக்கப்பெற்றாள் என்று அந்த தொடர்கதை தோற்றம் கொண்டது. ஆக, அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்தது தனது காதலி அவர் என்ற ஹோதாவிலேயே என்ற துணிபுதான் முன்னுக்கு வந்து நிற்கிறது.

இதே ஔவையார் (சில பாடங்களில் கம்பர் என்றும் கூறுவர்) தெலுங்கு பேசும் பிரதேசத்துக்கு சென்று பாஷை புரியாது கஷ்டப்பட்டார் என்றும் படித்திருக்கிறேன். அதை குறித்து அவர் “ஏமிரா வோரி யென்பாள் எந்துண்டி வஸ்தியென்பாள்” என்று துவங்கும் பாடலையும் பார்த்தேன்.

மேலே சொன்ன தொடர்கதையின் தலைப்பையும், பாடலின் முழு வடிவத்தையும் தெரிந்திருந்தால் யாரேனும் சொல்லுங்கப்பூ.

இதைத்தான் ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு பிறகு ஔவையாரையே கடிச்சுட்டாங்களே என்று கூற வேண்டுமோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/21/2012

சீன் போடுவது என்பது உலகெல்லாம் ஒரே மாதிரித்தான் போல

கீழே உள்ள வீடியோவில் ஃபிரெஞ்சு தெரியாமலேயே எவ்வாறு அம்மொழியை பேசுபவர்களுடன் எல்லாம் தெரிந்தவர் போல பேசுவது என்பதைப் பார்க்கலாம்.



நம் தமிழ் சினிமாவில் கூட பல படங்களில் வடிவேலு ஆங்கிலம் பேசுவது போல பாவலா காட்டுவார். உதாரணத்துக்கு மருதமலையில் ஒரு காட்சி கீழே.



சங்கீதக் கச்சேரிக்கு போய் எல்லாம் புரிந்தது போல பொய்த்தாளம் போட்டு பாடகரை டரியல் ஆக்கி தனது தாளத்தை அவர் தவறவிடச் செய்வது, தியாகையர் ஆராதனைக்கு திருவையாறு போய் கேமராவுக்கு எதிரில் வெறுமனே வாயசைப்பது ஆகிய விஷயங்களும் அடங்கும். (நிஜமாகவே குன்னக்குடி வைத்தியநாதன் டைரக்ட் செய்த ஒரு படத்தில் அவர் நடிகை சுகன்யாவை ஆராதனை கச்சேரியில் வாயசைக்க வைத்து வாங்கிக் கட்டிக் கொண்டார்)

ஆக, சீன் போடுவது என்பது உலகெல்லாம் ஒரே மாதிரித்தான் போல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/13/2012

பெயர் குழப்பங்கள்

ஜெயமோகனின் இப்பதிவுதான் எனது இந்த இடுகையை தூண்டியது. அதில் எஸ்ரா அவர்கள் ஜெயமோகனை ஜெய்சங்கர், மலையாள நடிகர் ஜெயன், மேலும் தமிழ் நடிகர் மோகன் ஆகியோருடன் பல வெவ்வேறு காலகட்டங்களில் குழப்பிக் கொண்டது பற்றி சுவைபட எழுதியுள்ளார். போதாக்குறைக்கு அவரது மாமா வேறு ஜெயமோகன் எம்.எல்.ஏ. என அவரை தவறாகப் புரிந்து கொண்டு மாலை எல்லாம் வாங்கும் அளவுக்கு போனது இன்னும் நகைப்பை வரவழைத்தது.

இம்மாதிரி பல முறை நடந்துள்ளது. சுந்தரகாண்டம் உரை நடை புத்தகத்தை நான் எட்டு வயதில் பார்க்க நேர்ந்தது. அதில் ஜனகன் மகள் ராவணேஸ்வரனிடம் “ராகவனைத் தவிர வேறு எவரையும் நான் நிமிர்ந்து பார்க்க மாட்டேன்” என சூளுரைக்க, எனக்கு ஒரே ஆச்சரியம். நம்மைப் பற்றி இவ்வளவு அன்புடன் குறிப்பிடும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன் என்ற திகைப்பு ஒரு புறம், ஜானகி இப்போது எங்கே என்ற ஆவல் ஒரு புறம். திடீரென என் பெரியப்பா மகன் அம்பிக்கும் ராகவன் என பெயர் என்பது நினைவுக்கு வர, எங்களில் யாரை சீதை குறிப்பிடுகிறாள் என்ற மயக்கம் வேறு பிறகு சேர்ந்து கொண்டது. பிறகு தெளிந்து கொண்டேன் என வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சமயம் என் தந்தை, பெரியப்பா ஆகியோரது ஒன்று விட்ட சித்தப்பாவின் மகன் வெங்கடேசன் சிறிய வயதில் ஜுரம் வந்து இறந்து போனான். என் பெரியப்பா அம்பியை அழைத்து வெங்கட வரதய்யங்காரிடம் போய் இம்மாதிரி நிலையில் நமக்கு எத்தனை நாள் தீட்டு என கேட்டு வா என் அனுப்பிக்க அவனும் ஒரே ஓட்டமாக ஓடி எதிர்வீட்டில் இருந்த அவனது பள்ளி ஆசிரியர் வெங்கட வரதைய்யாங்கரிடம் சென்று கோரிக்கை வைக்க அவரும் அலுப்புடன் பல புத்தகங்களை தேடி விடை கூறினார். சில மாதங்கள் கழித்து எங்கள் தாத்தாவின் திவசம் வர அதற்கு வெங்கட வரதையங்கரிடம் பிராமணார்த்தம் சம்பந்தமாக கேட்டு வர அதே அம்பி என் பெரியப்பாவால் அனுப்பப்பட்டான். அவன் அங்கு சென்று பார்த்தபோது ஆசிரியர் வீட்டில் இல்லை. அவரது மனைவியிடம் கூற அவரும், “இதென்ன கூத்து, எங்காத்து மாமா எப்போதிலிருந்து இந்த வேலையெல்லாம் ஆரம்பித்தார், நேக்கு தெரியவே தெரியாதே” என ஆச்சரியத்துடன் கூற, அவனும் திகைப்புடன் வீட்டுக்கு வந்து பெரியப்பாவிடம் அதை சொன்னான்.

அவர் திடீரென அவனிடம் அவன் எங்கு சென்றான் என கேட்க, அவனும் எதிர்வீட்டுக்கு சென்று கேட்டதாகக் கூற, அவர் சிரிக்க ஆரம்பித்தார். “அடே நான் சொன்னது நம்மாத்துக்கு உபாத்தியாயம் செய்ய வரும் வெங்கட வரதையங்கார் அவர் ராமேஸ்வரம் தெருவில் இருப்பவர்” என்று கூறியதுதான் குழப்பம் விலகியது. இந்த நிகழ்ச்சி எங்கள் குடும்பத்தின் பிரைவேட் ஜோக் கலெக்‌ஷனில் சேர்ந்து கொண்டது. அம்பியே அதை பலமுறை கூறி சிரித்திருக்கிறான்.

இதே போல எங்கள் ஆசிரியர் வி.என் ராகவாச்சாரியார் இன்னொரு ஆசிரியர் ரங்கராஜன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, அதை என் வகுப்பில் இருந்த டி.எஸ். ராகவனிடம் கொடுத்து ரங்கராஜனிடம் சேர்ப்பிக்குமாறு கூற, அவனும் கர்ம சிரத்தையாக இன்னொரு செக்‌ஷனில் இருந்த தன் தோழன் ரங்கராஜனிடம் போய் அதை ஒப்படைத்தான். குழம்பிப் போன ரங்கராஜன் எங்கள் வகுப்புக்கு வந்து ஆசிரியருடன் பேச, அவரும் ராகவனைப் பார்த்து என்ன விஷயம் என கேட்க, :இவந்தான் சார் ரங்கராஜன்” என அவன் அழுத்தம் திருத்தமாகக் கூறினானே பார்க்கணும்.

இப்பதிவை பின்னாலிருந்து படித்த என் வீட்டம்மா ராகவன் என பெயர் வைத்தாலே இம்மாதிரித்தான் ஏதாவது ஏடாகூடம் செய்வார்கள் போல என நொடித்து விட்டு திரும்பியது வேறு கதை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/07/2012

Why this kolaveri kolaveridi

நான் சற்றே லேட் என நினைக்கிறேன். “3” படத்தில் வரும் பாட்டான வை திஸ் கொலவெறி கொலவெறிடி பாடலை இன்றுதான் சரியாகக் கேட்டேன் என்றும் கூட கூற இயலாது, அதன் பல வெர்ஷன்களைத்தான் கேட்டேன்.

முதலில் உண்மைத் தமிழனின் இப்பதிவில் அதன் யாழ்ப்பாண ஆக்கத்தைக் கண்டு கேட்டேன். பிறகு ஒரிஜினலை வீடியோவுடன் கேட்போம் என பார்த்து யூ ட்யூபுக்கு சென்றதும்தான் தெரிந்தது இப்பாடலுக்கு உலகளாவிய வகையில் வெர்ஷன்கள் இருக்கின்றன என. கீழே பாகிஸ்தானின் வெர்ஷன்.



ஹிட்லர் இப்போது உயிருடனுன் ஆட்சியிலும் இருந்தால் அவன் எவ்வாறு ரியேக்ட் செய்திருப்பான்? அதையும் கற்பனை செய்து பார்த்து விட்டனர், கீழே பார்க்கவும். இப்பாடலை பார்த்தாக வேண்டுமா என யூ ட்யூப் கேட்கும் ஆம் என செக் செய்து விடுங்கள்.



முதலில் சீறும் ஹிட்லர் பிறகு சரெண்டர் ஆகிறான். பாருங்கள் தமாஷாக இருக்கும். சீக்கிரமே ஹிட்லர் பற்றிய வீடியோவை தூக்கினாலும் தூக்கி விடுவார்கள். ஆகவே ஹரி அப்.

இன்னும் ஒரிஜினல் தனுஷின் ”3” படத்தின் வீடியோ காணக் கிடைக்கவில்லை. சுட்டி யாராவது தாருங்களப்பூ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஒரிஜினல் பாடலுக்கான சுட்டி தந்த மாதவன் ஸ்ரீனிவாசகோபாலனுக்கும் ஹாஜாஸ்ரீக்கும் நன்றி. ஒரிஜினலை கீழே பார்க்கலாம்.



இப்போது படத்தின் சவுண்ட் டிராக்கிலிருந்தே

1/01/2012

அவங்க பிராமின்ஸ், அப்படித்தான்

சமீபத்தில் 1963-ஜூன் 27-ஆம் தேதி எனக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இஞ்ஜினியரிங் அட்மிஷன் கிடைத்த சந்தோஷத்தை அது சற்றே பாதித்தது. ஆனால் இப்பதிவு அது பற்றியல்ல.

பிராக்சருகான பிளாஸ்டர் கட்டைப் போட எனக்கு மயக்க மருந்து தரவேண்டியிருந்தது. அப்போது பிற்பகல் மணி இரண்டரை. டாக்டர் என்னிடம் நான் எப்போது பகல் உண்வு உண்டேன் எனக்கேட்க. நான் காலை ஒன்பதரை என பதில் சொன்னேன். அவர் முகத்தில் திகைப்பு. அருகில் இருந்த நர்ஸ் அவங்க பிராமின்ஸ் அப்படித்தான் காலையில் சீக்கிரமே உணவு எடுத்துக் கொள்வார்கள் எனக் கூறினார்.

அது சாதாரணமாக உண்மைதான். விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. ஆனால் நான் பள்ளியில் படிக்கும்போது என் அபிராமண நண்பர்களுக்கு பகல் உணவாக முழு சாப்பாடு வரும். என் போன்ற சிலர் மட்டும் வெறுமனே ஓரடுக்கு டிபன் பாக்ஸில் டிபன் அல்லது தயிர் சாதம் கொண்டு போவோம். அப்போதெல்லாம் இந்த வேறுபாடு குறித்து நான் அக்கறை கொண்ட்தில்லை. ஆனால் இப்போது இது பற்றி யோசிக்கும் போது இந்த் வேறுபட்டிற்கான (எனக்குத் தோன்றும்) சமூகக் காரணத்தை ஆராய விரும்புவேன்.

19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை எல்லோருமே அவ்வாறுதான் காலையில் நாஸ்தா, பிறகு மதிய உணவு என்றுதான் இருந்துள்ளனர். ஆனால் சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து ஒரு மாறுதல் ஆரம்பித்தது. பிராமணர்கள் வெள்ளைக்காரன் அரசில் உத்தியோகம் பார்க்க ஆரம்பித்ததில், காலை பத்து மணிக்கே ஆஃபீஸ் என்றாக. அவர்களில் சிலர் மெதுவாக காலை நாஸ்தாவையும் பகல் உணவையும் காலை 9 மணிக்கான சாப்பாடாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர். அதுவே அவர்களில் அதிகமாக பரவியது.

ஆனால் ஏனோ தெரியவில்லை, பிந்தைய கால கட்டங்களில் அபிராமணர்களும் உத்தியோகஸ்தர்களானாலும் அவர்கள் மட்டும் பழைய வழக்கப்படியே இருந்துள்ளனர். அது ஒன்றுதான் புதிராக உள்ளது.

ஆகவே இப்பதிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/13/2011

மன்னிக்கவும் இது politically correct பதிவு இல்லை

மொழிபெயர்ப்பு தலைவாசலாம் ப்ரோஸ்.காம்-ல் நான் எனது பழைய மன்ற இடுகைகளை புரட்டிக் கொண்டிருந்தபோது இந்த இடுகை கண்ணில் பட்டது. அதன் தமிழாக்கம் இங்கே.

இதை நான் எதேச்சையாகக் கண்டேன். ரஷ்ய மன்றங்களை ஸ்க்ரால் செய்தபோது இது ஆங்கிலத்தில் இருந்தது. அந்த மன்ற இடுகைக்கு 220-க்கும் மேல் பின்னூட்டங்கள். (ரஷ்ய இடுகையின் சுட்டியை மறந்து விட்டேன், மன்னிக்கவும்). உங்களுடன் இதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ழ்சி அடைகிறேன்.

சந்தைப்படுத்தல் என்றால் என்ன? (நீங்கள் ஒரு பெண்).
ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை நேரடியாகவே அணுகி, "என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்" என்கிறீர்கள், இது நேரடி சந்தைப்படுத்தல்.

ஒரு பார்ட்டியில் உங்கள் நண்பர்களுடன் கலந்து கொள்கிறீர்கள். அப்போது ஒரு அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை உங்கள் நண்பர்களில் ஒருவர் அணுகி உங்களைக் காண்பித்து, "அவளுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்" என்கிறார். இது விளம்பரம்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை அணுகி அவனது தொலைபேசி எண்ணைப் பெறுகிறீர்கள். அடுத்த நாள் அவனை ஃபோனில் கூப்பிட்டு, "என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்" என்கிறீர்கள், இது டெலிமார்க்கெட்டிங்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். உங்கள் புடவைத் தலைப்பை சரி செய்து கொண்டு, அவனிடம் செல்கிறீர்கள். அவனுக்காக கூல்ட்ரிங்க் வாங்கி கொடுக்கிறீர்கள். அவன் டையை அட்ஜஸ்ட் செய்யும்போது “தற்செயலாக” உங்கள் மார்பகம் அவன் முழங்கையில் உரசுகிறது. பிறகு, "அட சொல்ல மறந்து விட்டேன், என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்” என்கிறீர்கள். இது பப்ளிக் ரிலேஷன்ஸ்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனே உங்களிடம் வந்து, “உன்னோடு படுத்தால் சந்தோஷம் நிச்சயம்னு எல்லோரும் சொல்லறாங்களே” ன்னு சொல்லறான். இது பிராண்ட் அங்கீகாரம்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை உங்கள் தோழியுடன் செல்லுமாறு அவனுக்கு கூறுகிறீர்கள். நீங்கள் ஒரு விற்பனை பிரதிநிதி.

உங்கள் தோழியால் அவனுக்கு மகிழ்ச்சி இல்லை. அவன் உங்களை அழைக்கிறான். இதுதான் டெக்னிக்கல் சப்போர்ட்.

நீங்கள் ஒரு பார்ட்டிக்கு செல்கிறீர்கள். திடீரென அங்கு பல அழகான வாலிபர்கள் இருக்கக் கூடும் என உங்களுக்குத் தோன்றுகிறது. ஆகவே ஒரு உயரமான மேஜை மீது ஏறிக் கொண்டு, “என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்” என்று உரக்கக் கூவுகிறீர்கள். அது ஸ்பாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/07/2011

ஜெயா டிவி ஜாக்பாட்டில் டோண்டு ராகவன் பங்கேற்றால் வெற்றி வாய்ப்பு அதிகம்

டிஸ்கி: தலைப்பை பிறகு நிரூபிக்கிறேன்.

எங்கள் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலாம் ப்ரோஸ்.காம்-ல் அவ்வப்போது ஓட்டெடுப்புகள் நடைபெறும். உதாரணத்துக்கு, Have you ever found any (new) clients on Facebook? என்று கேள்வி கேட்டு விடைகள் சாய்ஸாக (No), (I'm not on Facebook), (Yes), (Other) தந்திருந்தார்கள்.

இம்மாதிரி பல கருத்து கணிப்பு ஓட்டெடுப்புகள் நடக்கும். உதாரணத்துக்கு, உங்களுக்கு இந்த ஆண்டு எத்தனை புது வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்? சாய்ஸ்கள் (0-2), (3-5), (> 5). இது ஒரு நல்ல கேள்வி. என்னைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் ஏதேனும் ஒரே ஒரு வாடிக்கையாளரை பிடித்துக் கொண்டு தொங்குவது ஆரோக்கியமானதல்ல. திடீரென அந்த வாடிக்கையாளர் ஏதேனும் காரணத்துக்காக வேலை தரவியலவில்லையென்றால், (திவாலாவது, அவரது தேவைகள் மாறுவது முதலிய காரணங்கள்), எனது கதை கந்தலாகி விடும். அந்த வகையில் நான் ரொம்பவுமே துடியாக செயல்பட்டு புது வாடிக்கையாளர்களை தேடும் முயற்சியில் இருப்பேன்.

எனது 36 ஆண்டுகால மொழிபெயர்ப்பாளர் வாழ்க்கையில் 19 ஆண்டுகளுக்கு ஒரு வாடிக்கையாளர் தொடர்ந்திருக்கிறார். அது ஒரு ரிகார்ட். இன்ஸ்டாக் எனப்படும் அந்த அமைப்பு மத்திய அரசின் கீழ் இயங்குகிறது. அவர்களது வெளி மொழிபெயர்ப்பாளர்களின் பட்டியலில் நான் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளுக்காக இருந்திருக்கிறேன்.

ஐந்து ஆண்டுகள் மட்டுமே இருந்த ஒரு வாடிக்கையாளர் தயவால்தான் சென்னைக்கு வந்து பல மாதங்களுக்கு கௌரவமாக தாக்கு பிடித்து சென்னை வாடிக்கையாளருடன் வலிமையான நிலையில் இருந்து பேரம் பேச முடிந்தது.

இப்போதைய பெரிய வாடிக்கையாளர் நான்கு ஆண்டுகளாக இருந்து வருகிறார், ரெகுலரான வேலை. இம்மாதிரி கூறிக் கொண்டே போகலாம். ஆனால் புது வாடிக்கையாளர்களை பிடிப்பது காலத்தின் கட்டாயமே.

இப்போது மேலே குறிப்பிட்டுள்ள கருத்து கணிப்புகளுக்கு வருகிறேன். நான் ஒவ்வொரு முறையும் எனது கருத்தை பதிவு செய்கிறேன். 90% எனது விடையே டாப்பாக இருந்திருக்கிறது. அதாவது என்னைப் போன்றே கருத்து கொண்டவர்கள் அதிகமே. இதை நான் கடந்த நூற்றுக்கும் மேலான கருத்து கணிப்பில் கண்டுகொண்டேன்.

இப்போது ஜெயா டிவி ஜாக்பாட்டுக்கு செல்வோம். கேள்விகளுக்கு விடை அளிப்பது அவ்வளவு முக்கியமல்ல. அதே விடையை மக்களில் எவ்வளவு பேர் கூறியுள்ளனர் என்பதுதான் முக்கியம். “மக்கள் என்ன சொல்லறாங்கன்னு பாப்போம்” என கூறி ரிசல்டுகளை காண்பிக்கும்போது எல்லோருமே ஆவலுடன் பார்ப்போம்.

ஆகவேதான் கூறுகிறேன், ப்ரோஸ்-ன் கருத்து கணிப்புகள் விஷயத்தில் எனது பதில்கள் கிட்டத்தட்ட எப்போதுமே டாப்பில் வருகின்றன எனக் கூறிவிட்டேன். அதே போல ஜெயா டிவி நிகழ்ச்சியில் நான் தரும் விடைகளும் மெஜாரிட்டி மக்களாலும் கூறப்படும்.

ஆகவேதான் கூறுகிறேன், ஜெயா டிவி ஜாக்பாட்டில் டோண்டு ராகவன் பங்கேற்றால் வெற்றி வாய்ப்பு அதிகம். :)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/18/2011

எனக்கும் வயசாயிடுத்தோல்லியோ, வேகமா பார்க்க முடியல்லே

அமெரிக்காவில் எல்லாம் பலர் தாங்களாகவே வீடு கட்டுவார்கள் என படித்துள்ளேன், எப்போது? சமீபத்தில் 1950-களில் “அமெரிக்கா அழைக்கிறது” என்னும் புத்தகத்தில் காந்திமதி என்னும் ஆசிரியை எழுதியுள்ளதை படித்ததைத்தான் இப்போது நினைவிலிருந்து கூறுகிறேன்.

அதே கால கட்டத்தில் ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த ஒரு ஜோக்கும் எனக்கு நினைவுக்கு வருகிறது. இம்மாதிரித்தான் ஒரு பெரிசு தனது அண்டை அயலார் தாங்களாகவே வீடு கட்டுவதை பார்க்கும் பழக்கம் வைத்து கொண்டிருந்ததாம். ஒரு முறை மிகுந்த தயக்கத்துடன் ஒரு இளைஞன் தன் பகுதியில் அஸ்திவாரத்துக்காக தோண்ட ஆரம்பிக்க இந்தப் பெரிசும், குடை, சாய்வு நாற்காலி, பக்கத்து ஸ்டூலில் லெமன் ஜூஸ் எல்லாம் வைத்துக் கொண்டு இவன் வேலை செய்ய ஆரம்பிப்பத்தை பார்க்க ஆரம்பிக்க, அந்த இளைஞனின் டென்ஷன் அதிகமானது.

“சார் நான் ரொம்ப மெதுவாகத்தான் வேலை செய்வேன், உங்களுக்கு போர் அடிக்குமே” என சொல்லிப் பார்த்திருக்கிறான். அதனால் என்னப்பா, எனக்கும் வயசாயிடுத்தோல்லியோ, நான் மெதுவாகத்தான் பார்ப்பேன், எனக் கூறியதாம் அப்பெரிசு.

ஆனால் இப்போதெல்லாம் அமெரிக்காவில் அவ்வாறெல்லாம் நடக்கிறதா என்றால் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் பிரிட்டனில் செய்கிறார்கள் போல இருக்கிறது.

ஆனால் இது முடியவில்லையென்றால் சாவகாசமாக மற்றவர் போடும் சண்டையை பார்ப்பதும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. என்ன, கட்சியெல்லாம் எடுக்கக் கூடாது. அதுவும் இரு தரப்பிலும் பார்வையாளருக்கு பிடிக்காதவர்கள் இருக்கும்போது யார் எங்கு அடி வாங்குகிறார்கள்/தருகிறார்கள் எனப் பார்ப்பதும் ஒரு பொழுது போக்குத்தானே. (உதாரணம்: பாமக, திமுக சண்டை, காங்கிரசார் பார்வையில்).

டிஸ்கி: திருவல்லிக்கேணி பிளாட்பாரம் கடையில் போன ஞாயிறு மாலை பழைய புத்தகங்கள் கடை வரிசையில் இந்த ரீடர்ஸ் டைஜஸ்டை பார்த்ததுதான் இப்பதிவுக்கு உந்துதல் தந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/14/2011

ஆடாம தோத்தோமடா

எனது கணினி குரு அனுப்பிய சில படங்கள் கீழே. அவை பலருக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களாக, இங்கும் இருந்து விட்டு போகட்டுமே. கீதாசார்யன் (மற்றும் நான் ஏற்கனவேயே) சொன்ன மாதிரி, பலனை எதிர்பாராது அதை இங்கே இடும் கடமையை நிறைவேற்றுகிறேன்.


























சென்னை சூப்பர் கிங்ஸை ஜெயிக்க வைத்த நடிகர் விஜய் இங்கு மட்டும் உதவாமல் போனதேன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/29/2011

தும்மல் சம்பந்தமாக தும்மித் தும்மியவாறு ஒரு பதிவு

திருக்குறள் பற்றிய எனது இப்பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்:
ஊடல் பற்றிய அதிகாரங்களில் வரும் தலைவியிடம் தலைவன் படும்பாடு இருக்கிறதே, அதைச் சொல்ல வேண்டும்.

திடீரென தலைவன் தும்ம தலைவி தன்னையறியாது "நீடூழி வாழி" என்று வாழ்த்துகிறாள். திடீரென நினைத்து கொண்டு "எந்தச் சிறுக்கி உன்னை நினைத்தாள்? இவ்வாறு திடீரென ஏன் தும்மினாய்" எனக் கேட்டு டார்ச்சர் செய்கிறாள்.
"வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று"

தும்மலை அடக்கினால் "யாரை என்னிடமிருந்து மறைக்கிறாய்"? என்ற கேள்வி அம்பாக வருகிறது.
"தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று"

அவள் அழகையே கூர்ந்து பார்த்தால் கூறுகிறாள் வேறு எந்த பொம்பளையோட என்னை ஒப்பிடுகிறீர் என்று
"நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினர் என்று


இப்பதிவு மேலே உள்ள வரிகளிலிருந்து தும்மலை மட்டும் எடுத்துக் கொள்கிறது. தும்மினால் நீடூழி வாழி எனக்கூறுவது தமிழகத்துக்கு மட்டும் உரித்ததன்று. எல்லா கலாச்சாரங்களிலும் உண்டு என்பதை அறிகிறேன். ஜெர்மனியில் தும்மினால் Gesundheit என்பார்கள், ஆரோகியமாக இரும் என்பது அதன் பொருள். பிரெஞ்சுக்காரர்களோ santé எனக்கூறுவார்கள், அதே பொருள்தான் அங்கும்.

ஒற்றைத் தும்மல் அபசகுனம், இரட்டைத் தும்மல் நல்ல சகுனம் எனக் கூறுவோரும் உளர். திருமணத்தில் தாலி கட்டும்போதும் சரி, மற்ற மங்கள தருணங்களிலும் சரி, கெட்டி மேளாம் கெட்டி மேளம் எனக் கத்தி மேள, நாதஸ்வர சத்தத்தை அதிகரிப்பதன் ஒரு முக்கிய நோக்கமே யாராவது அச்சமயத்தில் (வேண்டுமென்றே) தும்மினால் அத்தும்மல் காதில் விழாதிருக்கும் பொருட்டே, என எனது தமக்கையாரின் மாமனார் காலம் சென்ற புருஷோத்தமாச்சாரியார் என்னிடம் தும்மிக் கொண்டே கூறியுள்ளார்.

எனது பெரியப்பாவின் மூத்த மாப்பிள்ளை கையில் காப்பி கொடுத்தவுடனேயே அதன் வாசனை அவருக்கு அடுக்கடுக்காக தும்மலை வரவழைத்து விடும். பூனை அலர்ஜி உள்ளவர்களது அடையாளமே அவர்கள் பூனை அருகாமையில் போடும் அடுக்குத் தும்மல்களே. சிலருக்கு பூக்களின் மகரந்தத் துகள்கள் தும்மல்களை வரவழைக்கும்.

அது சரி, இச்சமயம் திடீரென ஏன் இப்பதிவு என தும்மிக் கொண்டே கேட்கிறான் முரளி மனோகர். அதாகப்பட்டது, அக்சூ என்னும் தலைப்பில் வந்த இந்த ஜெர்மானிய இடுகைதான் எனது இப்பதிவுக்கு காரணம்.

இப்பதிவர் சூரியனை நேரில் பார்த்தாலே தும்ம ஆரம்பித்து விடுவாராம். அவர் எழுதுகிறார், Es heißt sinnigerweise ACHOO syndrome (dt: „Hatschi-Syndrom“), das Akronym steht für Autosomal Dominant Compelling Helio-Ophthalmic Outbursts of Sneezing. Ich kann mir richtig vorstellen, wie die (amerikanischen?) Wissenschaftler in feuchtfröhlicher Runde zusammensaßen und so lange tüftelten, bis sie beim fünften Bier tatsächlich jedem Buchstaben von Achoo ein sinnvolles Wort zugeordnet hatten. Auf Deutsch heißt das Phänomen übrigens ganz trocken „Photischer Niesreflex“.

இந்த ACHOO-வுக்காக பல நிபுணர்கள் ரூம் போட்டு யோசித்து Autosomal Dominant Compelling Helio-Ophthalmic Outbursts என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும் என அவர் கிண்டலுடன் கூறுகிறார். தான் குழந்தையாக இருக்கும்போது உலகத்தில் எல்லோருக்குமே அப்படித்தான் என அவர் நினைத்திருந்தாராம். பிறகுதான் அப்படியெல்லாம் இல்லை என விஷயம் தெரிந்ததாம்.

இது எப்படி வந்தது என்பது தனக்குத் தெரியாது என்றும், ஆனால் இது பரம்பரையாக தொடரும் நிலை என்றும் கூறும் அவர், தனது இரு பையன்களில் மூத்தவனுக்கும் இது இருக்கிறது ஆனால் இளையவனிடம் இன்னும் அதை பார்க்கவில்லை என்று கூறுகிறார். அதற்குள் அவர் கணவர் இளையவனுக்கும் அது இருப்பதை தான் கண்டுணர்ந்ததாகக் கூறினார் என்பதையும் சேர்க்கிறார்.

சமீபத்தில் 1976-ல் வந்த மன்மத லீலை என்னும் படத்தில், கமலஹாசனின் மாமனார் ஒய்.ஜி. பார்த்தசாரதிக்கு அவர் வீட்டு சமையல்காரியுடன் சினேகம் என்றும், அவர் ஒரு காரியம் செய்யலாமா எனக் கேட்கும்போது சமையற்காரி ஒரு தும்மல் போட்டால் செய்ய வேண்டாம் என்றும், இரட்டைத் தும்மல் போட்டால் செய்யலாம் என்றும் பொருள் என படத்தில் காட்டியிருப்பார்கள். படத்தில் ஓரிடத்தில் மகேந்திரனின் கழுத்தை நெறிக்க அவர் முயலும்போது, சமையற்காரி ஒற்றைத் தும்மல் போட அவர் நிராசையுடன் முயற்சியை கைவிடுகிறார். அதனால் மகேந்திரன் ஓவராக மகிழ்ச்சியடைய, சமையற்காரி இரட்டைத் தும்மல் போட, கழுத்து நெறிப்பு குதூகலத்துடன் தொடர்கிறது.

இதற்கு மேல் எழுதினால் கழுத்தை நெறிப்பதாக முரளிமனோகர் கூறுவதால் இத்துடனேயே நிப்பாட்டிக்கிறேன்.

தும்மலுடன்,
டோண்டு ராகவன்



12/20/2010

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம்

நான் சமீபத்தில் 1955-56 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு தேர்வில் மகாத்மா காந்தியைக் கொன்றது யார் என்ற ஒரு வார்த்தையில் பதிலளிக்க வேண்டிய கேள்வி வந்தது. அதன் விடையை பாடத்தில் படித்திருந்தாலும் உப்பிலிக்கு காந்தியைக் கொன்றவரின் பெயர் அச்சமயம் பார்த்து மறந்து தொலைத்தது.

ஆனால் வேறு விஷயம் அரைகுறையாக நினைவுக்கு வரவே, மகாத்மா காந்தியைக் கொன்றது ஒரு வயதான நபர் என எழுதித் தொலைத்தான். மதிப்பிடப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களுக்கு வினியோகிக்கும் சமயம் ஆசிரியர் ரங்காராவ் அன்றைக்கென்று மழமழவென சவரம் செய்து வந்திருந்தார். ஆகவே அவர் கோபத்துடனேயே இருப்பார் என்பது மாணவர்களது சரியான அனுமானம்.

அப்படிப்பட்டவர் “உப்பிலி எழுந்திரு” என கர்ஜிக்க, உப்பிலிக்கு சர்வநாடியும் ஒடுங்கிற்று. “மகாத்மா காந்தியைக் கொன்றது யார்” என அவனிடம் முழு வகுப்பில் எல்லோருக்கும் முன்னால் கேள்வி கேட்க, தலைக்குமேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன என தெளிந்த உப்பிலி, அசட்டுத் துணிச்சலுடன் “கோட்ஸே சார்” என்று கூற, “பின்னே ஏன் காந்தியைக் கொன்றவர் ஒரு வயதானவ்ர் என எழுதினாய்” என ரங்காராவ் கர்ஜித்தார்.

உப்பிலி பவ்யமாகக் கைகளைக் கட்டிக் கொண்டு, “அப்படித்தான் புத்தகத்தில் போட்டிருக்கு” என்று கூற, எல்லா மாணவர்களுக்கும் ஒரே திகைப்பு. உப்பிலி மேலும் பவ்யமாகக் கூறலானான். “சார் புத்தகத்தில் போட்டிருக்கு சார், ‘மகாத்மா காந்தியை 1948, ஜனவரி 30-ஆம் தேதி மாலை கோட்ஸே என்கிற கயவன் சுட்டுக் கொன்றான்’ என்று” கூறினான்.

அடுத்த நிமிடம் ரங்காராவ் சார் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தார். “அடே அசடு கயவன்னாக்க கிழவன்னு அர்த்தம் இல்லை, சரி உட்கார்” எனக்கூறிவிட்டு, கயவன் என்றால் கெட்டவன், தீயவன் என்றெல்லாம் விளக்கம் அளித்தார்.

இப்போது எனது பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். கிழவனை சரியாக உச்சரிக்காமல் ஒரு பெரிய கோஷ்டியே கெயவன் என்றும், கியவன் என்றும், கிளவன் என்றும் கூறிவரும் நிலையில் அப்பாவி உப்பிலி மட்டும் கயவனும் கிழவனே என முடிவுக்கு வந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

இதுவாவது பரவாயில்லை, ஹாஸ்யமாக போயிற்று. இருப்பினும் தவறான உச்சரிப்பால் உயிருக்கே கேடு வந்ததும் நடந்திருக்கிறது.

எங்கே பிராமணன் சீரியல் பகுதி-2, ஆறாம் எபிசோடில் சோ அவர்கள் இதை சுவையாக விளக்குகிறார். இது பற்றி நான் இட்ட பதிவிலிருந்து சில வரிகள்:

“உமாவுக்கு பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் பண்ணிப் பார்த்தார்களா என வேம்பு சாஸ்திரிகள் கேட்க, அவ்வாறு செய்வது சட்ட விரோதம் என நீலகண்டனும் அவர் சம்பந்தியும் கூறுகின்றனர். ஆணோ பெண்ணோ நல்லபடியாக பிறந்தால் போதும் என பர்வதம் கூறுகிறாள்.

நுணலும் தன் வாயால் கெடும் என்னும் கணக்காக வேம்பு சாஸ்திரிகள் எல்லாம் தெரிந்த சிரோன்மணி அசோக் உமாவுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை கூறலாமே எனக் கிண்டலாகக் கேட்டு, சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறார். அவர் முறைப்படி மந்திரங்கள் உச்சரித்திருந்தால், அவற்றின் அதிர்வுகளை உமாவின் கருவிலுள்ள குழந்தை பெற்றிருக்கும், அதையும் இவர் உணர்ந்திருந்தால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என வேம்பு சாஸ்திரிகளே கூறிடலாமே தான் எதற்கு என அசோக் வினயமாக பதிலளிக்கிறான். வேம்பு சாஸ்திரி திடுக்கிடுகிறார். தான் சொன்ன மந்திரங்களில் என்ன குறைவு என அவர் துணுக்குற்று கேட்க, எல்லோர் எதிரிலும் வேண்டாம், அவரிடம் தான் தனியாக கூறுவதாக அவன் தயங்க வேம்பு சாஸ்திரிகள் அவன் இப்போதே கூற வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். அவரது மந்திரங்களில் ஸ்வரப்பிழை இருந்ததாக அசோக் கூறுகிறான்.

“ஸ்வரப்பிழையா, இது என்ன கச்சேரியா” என சோவின் நண்பர் வியக்க, கச்சேரியாக அமையக்கூடாது என்பதுதான் சரி என சோ விளக்குகிறார். வேதத்தின் ஸ்வரத்தை மாற்றல், அவசரப்படல், உணர்ச்சியின்றி அதை உச்சரித்தல், சொல் மாற்றிக் கூறுதல், அனாவசியமாக தலையெல்லாம் ஆட்டி சேஷ்டைகள் செய்தல் முதலியவை அடங்கிய ஆறு குறைகளை சோ அவர்கள் பட்டியலிடுகிறார். இந்திரனைக் கொல்லும் ஆற்றல் பெற்ற பிள்ளை பெறும் வரம் வேண்டி தவம் இருந்த ஸ்வஷ்டா என்னும் தேவத்தச்சன், தனது கோரிக்கையை ஸ்வரப்பிழையுடன் கூறியதில் இந்திரனால் கொல்லப்படும் மகன் என உருமாறி, அவனுக்கு பிறக்கும் மகனை இந்திரன் கையால் சாவதாக வரும் கதையையும் சோ கூறுகிறார். தினசரி வாழ்க்கையிலும் இம்மாதிரி தொனி மாறிய வரவேற்புரைகள் விபரீத பொருளை தருவதையும் உதாரணத்துடன் விளக்குகிறார்”.


அந்த எபிசோடின் வீடியோவுக்கான சுட்டி இதோ. (இந்த எபிசோடே இரண்டு வீடியோக்களில் உள்ளன. முதல் வீடியோ சுமார் 11 நிமிடங்கள், இரண்டாவது வீடியோ சுமார் 10 நிமிடங்கள். அதன் லொகேஷன் திரைக்கு கீழ் பகுதியில் வருகிறது. இரண்டையும் பார்த்தல் நலம்).

அதே போல “தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளாய்” என்னும் பாடலை பல பாடகர்கள் தாயே யசோதா உந்தன் நாயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் என்றெல்லாம் சிதைத்துப் பாடியதில் ஒரு குழந்தை கிருஷ்ணர் ஒரு நாயர் என்று முடிவுக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லைதான்.

அம்மாதிரியான பிழைகள் வரலாகாது என்பதற்காகவே வடமொழி சுலோகங்களை தமிழில் எழுத முயலும்போது சரியான உச்சரிப்புக்காக கிரந்த எழுத்துக்களை பாவிக்கிறேன் என ஒருவர் கூறினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?

விருப்பம் உள்ளவர்கள் பாவியுங்கள், மற்றவர்கள் விட்டுத் தொலையுங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/14/2010

ராஜலச்சுமியை டீச்சர் கூப்பய்யா

மாம்பலத்தில் இருந்த அப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் அந்த 8 வயது சுட்டிப்பெண்ணுக்கு அன்று காலையிலிருந்தே ஏதோ இனம் புரியாத அச்சம். காரணம் அவளது 6 வயது தம்பி. அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் அவன் முக லட்சணம் முந்தைய நாள் மாலையிலிருந்தே சரியாக இல்லாமல் திருட்டு முழி விழித்துக் கொண்டிருந்தான். அக்காவுடன் ஒன்றாக செல்வதையே அவமானம் என சாதாரணமாகக் கருதி, அவளிடமிருந்து பல அடிகள் தள்ளியே வீட்டுக்கு செல்பவன், அன்று என்னவோ சமத்தாக அவள் அருகிலேயே நடந்தான்.

என்னவோ சரியில்லையே, எலி ஏன் அம்மணமா போறதுன்னு அப்பெண் அப்போதே யோசித்தாள். ஆனால் கல்லுளி மங்கனான அவள் தம்பி அவள் கேள்வி எதற்கும் பதில் சொல்லவில்லை. தி.நகர் ராமனாதன் சாலை முக்கில் இருக்கும் பள்ளியில் இருந்து வெளியே வந்து அதே சாரியிலேயே நடந்து டாக்டர் அன்னங்கராச்சாரியார் நர்சிங் ஹோமுக்கு எதிரில் தெருவை கடந்து ராமசாமி தெரு வழியாக தண்டபாணி தெருவில் உள்ள வீட்டுக்கு செல்லும் வழமையான முறைக்கு மாறாக, உஸ்மான் சாலை வந்ததுமே அப்படியே அத்தெருவை குறுக்கே கடந்து சரோஜினி சாலை வழியாக செல்லலாம் என்று மட்டும் கூறிவிட்டு, 12-ஆம் நம்பர் பஸ் வருவதைக் கூட கவனிக்காது குடுகுடுவென ஓடி உஸ்மான் சாலையைக் கடந்து சரோஜினி சாலையில் நுழைந்து சென்றான். இவளும் வேறு வழியின்றி அவன் பின்னாலேயே செல்ல வேண்டியதாயிற்று.

அன்று மாலையும் இரவிலும் அவள் அருகே வந்து அவனிடம் என்ன விஷயம் எனக் கேட்க முயன்றதையும் தவிர்த்து சமத்தாக அம்மாவின் அருகில் போய் நின்று கொண்டான் (அவன் அம்மா செல்லம்). அவள் மட்டும் என்ன அப்பா செல்லம்தானே, இருந்தாலும் அப்பாவிடம் தம்பியை போட்டுக் கொடுக்க விடாமல் அவளது தம்பிப் பாசம் தடுத்தது.

இதையெல்லாம் எண்ணியவாறே வகுப்பில் அமர்ந்திருந்த அச்சுட்டிப் பெண் கிளாசுக்கு வெளியே இருந்த விளையாட்டு மைதானத்தின் மறுபுறத்தில் இருந்த தன் தம்பியின் வகுப்பை ஒரு பார்வையிட்டாள். இரண்டாம் வகுப்பு டீச்சர் நெட்டைக் கமலா வகுப்பிலிருந்து வெளிவருவதை சுவாரசியமின்றி பார்த்த அப்பெண் அடுத்து நடந்ததைப் பார்த்து நடுங்கிப் போனாள். இரண்டாம் வகுப்பு மாணவியான மூக்குஒழுகி மைதிலி (ஆறு வயது), டீச்சரால் அனுப்பப்பட்டு மைதானத்தை கடந்து நான்காம் வகுப்பை நோக்கி வரலானாள்.

இரண்டே எட்டுகளில் நான்காம் வகுப்புக்கு வந்த அப்பெண், நான்காம் வகுப்பு டீச்சர் சாவித்திரியைப் பார்த்து, “ராஜலச்சுமியை டீச்சர் கூப்பய்யா” என மழலை மறையாத குரலில் கத்தி விட்டு வேகமாக இரண்டாம் வகுப்புக்கு திரும்பினாள். “ராஜி, போய்ப் பாரம்மா, வழக்கம் போல உன் தம்பி வம்பை இழுத்து விட்டுண்டுட்டான் போல இருக்கு” என அனுதாபத்துடன் அச்சுட்டிப் பெண்ணிடம் கூற, அவளும் விதியை நொந்து கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தனக்கு கிளாஸ் டீச்சராக இருந்த அதே நெட்டைக் கமலாவிடம் போய் நின்றாள்.

“ராஜி, நீயே பாரு. நீ எவ்வளவு சமத்து. இங்கே படிச்ச ஒவ்வொரு வகுப்பிலும் காண்டக்டுல முதல் பரிசு வாங்கியிருக்கே. உன் தம்பி எப்படி இவ்வளவு துஷ்டனானான்? அவன் என்ன பண்ணியிருக்கான் பாரு” எனக்கூறி டாக்டர் அன்னங்கராச்சாரியாரின் பேரன் டி. ஏ. ரங்கநாதனைக் காட்டினாள். சிவந்திருந்த அவன் முகம் கண்ணீரால் நிரம்பியிருந்தது. வலது கன்னத்தில் சந்திரப்பிரபை போன்ற வடிவத்தில் நகத்தால் கிள்ளிய அடையாளம். “நேத்து மத்தியானமே உன் தம்பி இதை பண்ணியிருக்கான். ரங்கநாதனும் உடனேயே அழுதுக் கொண்டே வீட்டுக்கு போய் விட்டான். இப்போத்தான் விஷயம் வெளியே வந்திருக்கு” என டீச்சர் கூறினாள்.

அப்பெண்ணின் தம்பியோ இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்னும் முகபாவத்துடன் நின்று கொண்டிருந்தான். அச்சுட்டிப் பெண்ணுக்கு இப்போதுதான் தன் தம்பி முந்தைய நாள் மாலை அன்னங்கராச்சாரியாரின் நர்சிங் ஹோம் அருகே செல்வதைத் தவிர்த்ததின் காரணம் புலப்பட்டது. என்ன செய்வது, தம்பி சார்பில் எல்லோரிடமும் அவள் மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று. என்னதான் படுத்தினாலும் நெட்டைக் கமலாவின் ஃபேவரைட் மாணவனானதால் அவள் தம்பி ஓரிரு ஸ்கேல் அடிகளுடன் தப்பித்தான் (டீச்சர் கையிலிருந்த ஸ்கேல் வேகமாக அவன் அருகில் வந்ததுமே அதன் ஃபோர்ஸ் குறைக்கப்படுவது அவனுக்கு மட்டும்தான் தெரியும்)

இதெல்லாம் நடந்து 58 ஆண்டுகள் ஆனாலும் இப்போதும் அந்தச் சுட்டிப் பெண் “இம்மாதிரியெல்லாம் என்னைப் படுத்தினாயேடா டோண்டு” எனப் பெண்களுக்கே உரித்தான ஞாபகசக்தியுடன் தன் தம்பியிடம் கூறுவது வழக்கமாகப் போயிற்று.

என்னை மன்னித்துவிடு அக்கா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/13/2010

சில அரதல் பழசான மொக்கைக் கதைகள்

நான் பல இடங்களில் பல தருணங்களில் படித்த கதைகளை வைத்து இங்கே மொக்கை போட ஒரு முக்கியமான காரணம் உண்டு. அது என்னவென்பதைக் கடைசியில் கூறுகிறேனே.

கதை-1: தவளை உருவில் வந்த ராஜகுமாரி
அந்த சோல்ஜருக்கு அன்று காலையிலிருந்தே ஒன்றும் சரியாக அமையவில்லை. யார் முகத்தில் விழித்தோம் என்று பார்த்தால், அடச்சே அவன் தன் முகத்தைத்தான் கண்ணாடியில் பார்த்து தொலைத்திருக்கிறான்.

நொந்து போன அவனுக்கு ஒரே ஆறுதல் ராணுவ முகாமில் தங்கியிருந்த அவனுக்கு அன்று விடுமுறை. சரி சினிமாவுக்குப் போகலாம் என வெளியில் வந்து முயற்சித்தான். அவன் அதிர்ஷ்டம் அன்றைக்கென்று பார்த்து விஜய் நடித்த வில்லு, குருவி, அழகிய தமிழ்மகன் போன்ற படங்களுமே ஹவுஸ்ஃபுல். பிறகுதான் அவனுக்கு அன்று காணும் பொங்கல் என்பது நினைவுக்கு வந்தது.

சரி கடற்கரைக்கு போய் அடையாரின் முகத்துவாரத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கலாம் என நினைத்தான். அவ்வாறே சென்று, புழுவை முள்ளில் பொருத்தி, தக்கையை நதியின் கரையிலிருந்து தண்ணீருக்குள் வீசினான். சில மணி நேரங்கள் கழிந்தன. ஒன்றும் சிக்கவில்லை. அடச்சே என முயற்சியை கைவிட நினைத்தபோது திடீரென தக்கை தண்ணீருக்குள் இழுக்கப்பட்டு மறைந்தது. விறுவிறென தூண்டில் கயிற்றை சுற்ற அவன் கையில் கடைசியில் ஒரு குண்டு மீன் கிடைத்தது என்றுதான் எழுத ஆசை. ஆனால் கிடைத்ததோ தவளை ஒன்று.

இது வேற எனச் சொல்லிக் கொண்டே அதை கையில் பிடித்து தரையில் வீசி அடித்துக் கொல்ல அவன் முயன்றான். அப்போது அத்தவளை, “மானிடனே நில், நான் ஒரு ராஜகுமாரி. என்னை ஒரு சூனியக்கார கிழவி சபித்து தவளையாக்கி விட்டாள்” என்றது. இது என்ன புதுக்கதை என வியந்த அவனிடம் அது மேலும் கூறியதாவது. தான் மிக மிக அழுது சூனியக்காரியிடம் தன்னை மீண்டும் அரச குமாரியாக்க வேண்டும் எனக் கேட்க, அவளோ அதை உடனே செய்ய முடியாது என்றும், ஓரிரு நூற்றண்டுகளுக்கு பிறகு, ஒரு போர் வீரன் கையில் ராஜகுமாரி மாட்டுவாள் என்றும், அவன் அவளை தன் இருப்பிடத்துக்கு அழைத்து சென்று, தன் கட்டிலில் தலையணை மேல் படுக்க வைத்து, இரு சொட்டு அடையாறு நதி நீரை விட்டால், இரவு 12 மணிக்கு தான் ராஜகுமாரியாக மாறமுடியும் எனக் கூறியதாகக் கூறினாள்.

அத்தவளை மேல் இரக்கம் வந்தது போர்வீரனுக்கு. ஆகவே ஒரு பாட்டிலில் அதை தண்ணீர் நிரப்பி, அதற்குள் அத்தவளையை போட்டு தன் பேரக்சுக்கு வந்தான். மற்ற சோல்ஜர்கள் கண்ணில் படாமல் நைட் விசில் அடிக்கும்வரை காப்பாற்றினான். எல்லோரும் விளக்கை அணைத்ததும், அவன் தவளை சொன்ன மாதிரி செய்தான்.

என்ன ஆச்சரியம், சரியாக இரவு 12 மணிக்கு அவனருகே ஒரு பேரழகி படுத்திருந்தாள்.

மேலே நடந்ததை அப்படியே அந்த போர் வீரன் பின்னால் கோர்ட் மார்ஷல்காரர்களிடம் சொல்ல, யாருமே அவனை நம்பவில்லை. அதான் நான் எற்கனவேயே சொன்னேனே, அந்த சோல்ஜருக்கு அன்று காலையிலிருந்தே ஒன்றும் சரியாக அமையவில்லைதான்.


கதை-2: ஒன்றுமே மாறவில்லை
தான் படித்து, தேர்வு பெற்று சென்ற அந்த மிலிட்டரி அகாடெமிக்கு அந்த படை தளபதி 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விசிட்டுக்கு வந்திருந்தார். தனது பழைய அகாடெமியைப் பார்த்தது அவருக்குள் பல ஆட்டோகிராஃப் நினைப்புகளை தூண்டி விட்டது. “அதே அகாடெமி, மாறவேயில்லை” என்றார். பிறகு தான் படித்த வகுப்பறைக்கு சென்றார். அதே வகுப்பறை என இன்னொரு முறை ஃபீலிங்ஸ் ஆனார். அப்படியே தான் இருந்த ஹாஸ்டலுக்கு சென்றார். அதே ஹாஸ்டல் என்றார். காரிடாரில் நடந்தார் (அதே காரிடார்). அறை 208 அவர் அங்கு படித்தபோது தங்கியிருந்த அறை. அதே 208-ஆம் எண் அறை எனக் கூறியவாறு சட்டென கதவைத் திறந்து உள்ளே சென்றால், அங்கு இரு கட்டிலகள். இரண்டு மாணவர்கள் இவரைப் பார்த்து பேந்தப்பேந்த விழித்தனர். அதே கட்டில்கள், அதே மாணவர்கள் என்றவாறே அறைக்குள் பார்த்தால், அந்த ஆளுயர கப்போர்ட் கண்ணில் பட்டது. அதே கப்போர்ட் என விதந்தோதியவாறு அதைத் திறந்தால், உள்ளே அரைகுறை ஆடைகளுடன் ஒரு ஃபிகர் நின்று கொண்டிருந்தது. அதே ஃபிகர் என இவர் வியப்புடன் கூற, மாணவர்களில் ஒருவன், “சார் அது எனது சகோதரி” எனக்கூற, “அதே பொய்” எனக்கூறி இன்னமும் அதிகமாகவே ஆச்சரியப்பட்டார் அந்தப் படை அதிகாரி.

இப்போ மெனக்கெட்டு ஏன் இந்த பழைய மொக்கைகளைப் போடணும் எனச் சீறுகிறான் முரளி மனோகர்.

என்ன செய்வது, முரளி? மொக்கை போட்டு கொஞ்ச நாளாச்சில்லையா? அதனால்தான். லூஸ்ல விடு மாமு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/03/2010

பத்துக் கட்டளைகள், கற்காலம், ரோமானியப் பேரரசு ஆகியவை பற்றிய சரித்திர மொக்கைகள்

சமீபத்தில் 1981-ல் வெளியான மெல் ப்ரூக்ஸின் திரைப்படம் History of the World Part I.

மெல் ப்ரூக்ஸ் சொல்கிறார், கடவுள் மோசஸுக்கு பதினைந்து கட்டளைகள் கொடுத்தார் என்று. ஆனால் மோசஸோ பத்துக் கட்டளைகள்தான் கொண்டு வந்தார். மீதி ஐந்து கட்டளைகள் என்னவாயின? கீழே பார்க்கவும்.



உலக முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் வாய் விட்டுச் சிரித்த காட்சி அது.

அதே போல கற்காலத்தில் நெருப்பைக் கண்டுபிடித்தல், சித்திரம் வரையும் கலை, கலை விமரிசகர், மரண சடங்குகள், காமெடி ஷோ, முதல் ஆயுதப் பரிசோதனை, இசையின் பிறப்பு, கோரஸ் இசை ஆகியவற்றையும் அவர் காட்டுகிறார்.



மெல் ப்ரூக்சுக்கு பயங்கர கற்பனை. உலகச் சரித்திரம் பகுதி -1-ன் ஐந்து க்ளிப்பிங்ஸில் முதலாவது க்ளிப்பிங் கீழே. அடுத்ததற்கான சுட்டி இதை ப்ளே செய்யும்போது வரும். அங்கிருந்து பார்த்துக் கொள்ளவும்.



ஆங்கில சொல்விளையாட்டுகள் இந்தப் படத்தில் அதிகம். யூதரான மெல்ப்ரூக்ஸ் தனது மதத்தவரையே கிண்டல் செய்வார். நீங்களே பார்க்கலாமே. ரோமின் வாழ்க்கை முறை தற்கால அமெரிக்காவை நினைவுபடுத்துவது எதேச்சை அல்ல. பல எழுத்தாளர்கள் இந்த ஒற்றுமையை தத்தம் நாவல்களில் காட்டியுள்ளனர். எனது அபிமான ஆசிரியையான Taylor Caldwell அதை வெளிப்படையாகவே சொல்லியுள்ளார் முக்கியமாக தனது A pillar of iron என்னும் நாவலில்.

அந்த வகை புத்தகங்கள் படித்தே எனக்கு ரோம வரலாறு சற்றே குன்சாகத் தெரிய வந்தது என்றால் மிகையாகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/01/2010

மனம் போன போக்கில் மொக்கை எண்ணங்கள்

விக்கிலீக்ஸ் பற்றி பதிவுகள் போடும்போதும் (இந்தச் சோதனையில் நீங்க மட்டும் தேருவீங்கன்னு நினைக்கிறீங்களா மேடம், ஊரே சிரிச்சா கல்யாணம்னு சொல்லுவாங்க), அதன் பிறகும் எனது மனம் ஓவர்டைமில் வேலை பார்க்க ஆரம்பித்தது.

தாம் எழுதுவது வெளியில் தெரிய முப்பது ஆண்டுகளாவது குறைந்த பட்சமாக என்னும் எண்ணத்தில் தூதரக அதிகாரிகள் அந்தரங்க ரிப்போர்டுகள் எழுதும்போது தாங்கள் போஸ்டிங்கில் இருக்கும் தேசங்களின் முக்கிய நபர்கள பற்றி தங்களது எண்ணங்களை வெளிப்படையாகவே எழுதுவார்கள் (பலான தேசத்தின் பிரதம மந்திரி கையாலாகாதவர் என்ற ரேஞ்சில் கூட இருக்கலாம்). ராஜரீக நாசுக்குகள் எல்லாம் அங்கே செல்லாது (diplomatic niceties)’

ஆனால் விக்கிலீக்ஸ் வெளியீடுகள் அவர்களை ஒரு மோசமான நிலைக்குத் தள்ளி விட்டன. இப்போது என்ன செய்வது என முழிக்கும் அமெரிக்கா முதலிலிருந்தே மற்ற அரசுகளை இந்த விஷயத்தில் ரொம்ப அலட்டிக் கொள்ள வேண்டாம் எனக் கூறி டேமேஜ் லிமிட்டிங் செயல்பாட்டில் இறங்கியது. சம்பந்தப்பட்ட அரசுகளுக்கும் வேறு வழியில்லை, அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அந்த அரசுகளின் தூதர்களும் தத்தம் அரசுக்கு இம்மாதிரித்தான் அமெரிக்கத் தலைவர்களை பற்றி எழுதியிருப்பார்கள் [க்ளிண்டன் மோனிகா விவகாரம் பலான விவரங்களுடன்:)))]. அது எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம், விக்கிலீக்ஸ் இல்லாவிட்டால், வேறு ஏதாவது லீக்ஸ். அதை விட முக்கியமான காரணம் அமெரிக்கர்களை விரோதித்துக் கொள்ள யாரும் தயாராக இல்லை, பிறகு உதவிக்கு எங்கு போவதாம்.

ஆனால் எனது மனது ஓவர்டைம் போட்டு வேலை செய்தது வேறு விஷயம். மேலே சொன்ன விவரங்கள் தெரிவது மற்றவர் மனதை படிக்கும் அளவுக்கு சீரியசானது. அது மட்டும் முடிந்தால் என்ற கற்பனை ஒவ்வொருவருக்கும் பல சமயங்களில் வந்திருக்கும். எனக்கே அக்கற்பனை வந்திருக்க்கிறது.

அப்படி நிஜமாகவே நடந்தால் விளைவுகள் என்னவாக இருக்கும்? கீழே சந்திரமுகி படத்தில் வந்த க்ளிப்பிங் போல இருக்கலாம்.



அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஒரு படத்தில் விவேக்குக்கு மின்சார ஷாக் அடித்து அவருக்கு அந்த சக்தி வருவதை ஒரு படத்தில் காமெடியாகக் காட்டியிருப்பார்கள். ஆனால் சீக்கிரமே மனிதர் நொந்து விடுவார். அவரது பாட்டியே தாத்தாவுக்கு பாயசத்தில் விஷம் வைத்துக் கொன்றது தெரியவரும். பேரனுக்கு தெரிந்தாயிற்றே, சரி அவனுக்கும் பாயாசம் போட வேண்டியதுதான் என பாட்டி நினைக்க விவேக் பதறியடித்து அங்கிருந்து ஓடுவார். படத்தின் பெயரை யாராவது சொல்லுங்கப்பூ.

சினிமா அத்தாரிட்டி கேபிள் சங்கரைக் கேட்டால் அவருக்கும் நினைவில்லை ஆனால் மெல் கிப்சன் நடித்த What women want என்னும் ஆங்கிலப் படத்திலிருந்துதான் இந்த விவேக் காமெடி டிராக் வந்தது என்று மட்டும் கூறினார்.

இன்னொரு படத்தில் சோ தான் மற்றவர் பார்வையிலிருந்து மறைந்து அவர்களை வேவு பார்க்க வேண்டும் என ஆசைப்படுவார். அது பலித்து விடும். அவரது மனைவி நீலுவுடன் காதல் டூயட் பாடுவதைக் கண்டு பதைபதைப்பார். அவரால் பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. ஆக இந்த சக்தி வருவது 100% நல்லது எனக்கூற முடியாது.

அதே மாதிரித்தான் பூர்வ ஜன்ம நினைவுகளும். பூர்வ ஜன்மம் என்று உண்டா இல்லையா என்னும் கேள்விக்குள் போக நான் விரும்பவில்லை. அதே சமயம் அது உண்டு என்றால் அதன் நினைவுகள் வராமல் போவதே நலம். பகவத் கீதையில் கண்ணன் கூறுகிறான், “ஹே அர்ஜுனா, நீயும் நானும் சேர்ந்து எண்ணற்ற பிறவிகள் இதற்கு முன்னால் எடுத்துள்ளோம். நமக்குள் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் அவை ஒன்றும் உனக்கு நினைவிலில்லை. ஆனால் அவற்றில் ஒன்றையும் நான் மறக்கவில்லை”. கண்ணன் கடவுள், அது அவருக்கு கட்டிவரும். ஆனால் ஒரு மனிதனுக்கு அவை நினைவிலிருந்தால் ரொம்ப போராக இருக்கும் இல்லை?

இப்போதே இணைய இணைப்பு சில சமயம் கிடைக்காது அழும்பு செய்யும்போது அதன் ஒரு காரணம் முந்தைய அமர்வின் நினைவுகள் கணினியில் உள்ளன என்பதே. ஆகவே மீண்டும் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் புதிதாக டைப் அடித்து மேன்யுவலாக லாகின் செய்யச் சொல்வார்கள். ஜிமெயிலிலும் முந்தைய அமர்வுகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளனவா எனப் பார்த்து அவற்றை சைன் அவுட் செய்வது முக்கியமாகிறது.

இதற்கே அப்படியென்றால் மனித வாழ்க்கை எத்தனை முக்கியம்?

அதே போல எல்லா துயரங்களும் காலப்போக்கில் மறதி என்னும் போர்வையால் மூடப்பட்டு மனிதன் மேலும் வாழ்க்கையை தொடருகிறான். அதைத்தான் கவியரசு கண்ணதாசன் நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா என்று பாட்டாகப் பாடினார்.

இப்போது முரளி மனோகர் ஒரு கேள்வி கேட்கிறான். அதாகப்பட்டது நான் ஏன் சமீபத்தில் 1952-ல் இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது நடந்த நிகழ்ச்சியையெல்லாம் எழுதி எல்லோரையும் டென்ஷனாக்க வேண்டும் என்று. அதற்கு முன்னால் எழுத்தாளர் கடுகு அவர்கள் அதே கேள்வியைக் கேட்டார். அதாவது எல்லா விஷயங்களுமே நினைவில் இருந்தால் பல துன்பகரமான நிக்ழ்வுகள் மன அமைதியைக் கெடுக்குமே என்று அவர் வினவினார். நான் அதற்கு அந்த நிகழ்வுகள் பின்னோக்கி பார்க்கும் போது ஒரு பெர்ஸ்பெக்டிவ் கிடைத்து விடுகிறது, அவை மாற்றப்பட முடியாதவை என்பதை நான் உணர்வதால் துன்பம் ஏதும் இல்லை என்றும் கூறினேன்.

அதே சமயம் நான் செய்த தவறுகளையும் மறப்பதில்லை. ஆகவே அவற்றைத் மீண்டும் செய்யாமல் தவிர்க்க இயலுகிறது. நல்ல நினைவுகள் எப்போதுமே இன்பம் தருவன. ஆகவே என்னைப் பொருத்தவரை இந்த நினைவுத்திறன் ஒரு வரப்பிரசாதமே.

இப்போது பிறர் மனதை படிக்கவியலும் சக்தி பற்றி கடைசியாக ஒரு வார்த்தை. அப்படியே அது வந்து விடுகிறது என வைத்துக் கொள்வோம். என்னைப் பொருத்தவரை அச்சக்தி எனக்கு இருப்பதை யாரிடமும் மூச்சுக் கூட விடமாட்டேன். மேலும் அதே சமயம் என்னைப் பற்றி மற்றவர்களது உள் மனதில் உள்ள விருப்பு வெறுப்புகள் என்னை பாதித்தாலும் அவற்றையும் அறிந்ததாகக் காட்டிக் கொள்ள மாட்டேன். அப்போதுதான் மன அமைதியுடன் இருக்கவியலும்.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது