Showing posts with label வாடிக்கையாளரை அணுகும் முறைகள். Show all posts
Showing posts with label வாடிக்கையாளரை அணுகும் முறைகள். Show all posts

3/30/2012

பணமே எல்லாம் இல்லைதான், ஆனால் பணம் ஒன்றுமேயில்லை என்றும் கூற முடியாதல்லவா?

தியாகம் என்பது உயர்ந்த தத்துவமே, அதுவும் அந்தத் தியாகத்தை நாம் நமக்காக மற்றவரிடமிருந்து எதிர்பார்க்கும்போது,விளக்குகிறேன்.

மொழிபெயர்ப்பாளர் தலைவாசலாம் ப்ரோஸ்.காம்-ல் நடந்த மன்ற விவாதம் பற்றி நான் ஒரு பதிவு இட்டேன். நடந்தது இதுதான். ப்ரோஸ்.காம்-க்கு மட்டுறுத்துனர்கள் தேவைப்பட்டனர். மட்டுறுத்துனர்கள் இலவசமாக செயல்பட வேண்டும் என்பதுதான் ப்ரோஸ்-ன் எதிர்பார்ப்பு. ஆனால் பலர் ஒத்துக் கொள்ளவில்லை. அந்த இழை சீக்கிரமே மூடப்பட்டது.

பிரச்சினை என்னவென்றால் நான் எனது லாபநோக்கில் செயல்படுவேன் ஆனால் நீ எனக்காக தியாகம் செய்ய வேண்டும் என்னும் எண்ணமே. அதுவும் மொழிபெயர்ப்பாளர்கள் என்றால் அவர்கள் தம்படிகளுக்கு வேலை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மற்றவர்களிடம் அதிகம் பரவி உள்ளது. அதுவும் இந்த ப்ரோஸுக்கு அந்த எண்ணம் அதிகமாகவே உள்ளது. அது பற்றி நான் எனது ஆங்கில பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.

But then, why should a member be a moderator? And as I understand it, only platinum members can become moderators, who pay quite a sum of money already.

Way back in 2003, I saw wonderful moderators such as Ralf Lemster, Kim Metzger and others. These two have ceased to be one and I wonder why. A spate of well known moderators left the scene likewise. At that time there was much talk about it in the proz fora.

On seeing the conditions being imposed on a moderator and the benefits he is likely to get, I am not enamored of becoming one. Which is now beside the point as I am no longer a platinum member.

But yet:

The forum cited above has been locked. A few posts have been made invisible. I am not able to make my points there. Hence this blog post.

The benefits a moderator is supposed to get is expressed in the following words:
Moderators are volunteer members and are not paid for their work. However, there are a number of benefits to participating in the program: 

First, serving as a moderator provides an enhanced opportunity to help others benefit from the mission. For a person who has achieved success as a translator or interpreter, or in a translation company, and who has derived benefit from ProZ.com, the moderator program provides an opportunity to give something back by sharing what you have learned with others. 

Secondly, as it turns out, helping others to benefit from the mission also allows one to experience the benefits of the mission in a deeper way oneself. For example, because each class of moderators consists of a group of about 100 professionals from around the world, the program provides a great opportunity for personal networking. The camaraderie, and resulting friendships, cross linguistic and geographical boundaries. Also, because of the high profile nature of the role, moderators gain exposure that in some cases may lead to new business opportunities. Finally, as is the case with any professional challenge, the moderator role provides opportunities to advance as a professional and have fun at the same time.

Hope this explains.



No, this does not explain it, I am sorry to say. This can then be claimed for any free work. Surely the recipient of such pro bono work will think along those lines. But why should one consider becoming a moderator? 


In the Gotranslators portal. articles are solicited from members and in the event of giving one, they are offered 2 months of gomembership (equivalent to proz's platinum) free of cost. In that way I was a gomember for a period exceeding one year. 


Proz can consider such a gesture for moderators. This incentive will surely attract good talent. And by the way this gesture is not exactly new for proz. I was a platinum member of proz for 4 years and I did not spend a single cent for the same. It came about in the following manner. 


There was a move to localize proz into Tamil, my mother tongue. Three of us worked on that and a lot of browneys were given to us. It was in this connection that I wanted a platinum membership in exchange of the browneys. I initiated a forum post for this. There were lively discussions on this point. But if you now see that forum post, you will have no inkling of what actually happened. 


One fine day in July 2007, I was admitted to the platinum membership for one year against 20000 browney points. Come 2008, there was call for me to renew membership through payment with offer for 1/3 discount against 4000 browney points. I had more than 60000 browney points at that time and I remained adamant about getting platinum membership in the same way. 


In July 2008, I was given platinum membership for 3 more years and it lapsed this month. Not much browney points remained and I let the matter go.


My localization into Tamil was considered as valuable contribution and I got the membership. But then moderators too do a valuable service and they should be given at least browney poitns generously and if some of them convert it to platinum membership renewals, why not? 


There is precedence for this and I am that precedence.

கடைசியில் நான் சொன்னதுதான் நடந்தது. இப்போது ப்ரோஸ்-ல் பல வகை செயல்பாடுகளுக்கு பிளாட்டினம் அங்கத்தினர் ஸ்டேட்டஸ் தருகிறார்கள். நான் கூறியதால் வந்ததா அல்லது வேறு யாரும் சொன்னதால் வந்ததா என்பது தெரியவில்லை. ஏதோ நல்லது நடந்தால் சரிதான். பை தி வே எனக்கும் பிளாட்டினம் ஸ்டேடஸ் நீடிப்பு செய்த்துள்ளார்கள்.

மொழிபெயர்ப்பாளராக வருவது முக்கால்வாசி நேரங்களில் விருப்பத்தால் மட்டுமே. இத்தொழிலில் தொழில் மேல் பாசம் உள்ளவர்கள் அதிகமே. ஆனால் அதையே வாடிக்கையாளர்கள் பலகீனமாகக் கருதி ரேட்டைக் குறைக்கச் செய்யும் முயற்சிகளும் நடக்கின்றன. அதைத் தவிர்க்க வேண்டியது மிக முக்கியம்.

பணமா முக்கியம் என்றெல்லாம் சீன் காட்டுபவர்களை நான் எப்போதுமே ஸ்பேர் செய்ததில்லை. அந்த பப்பு என்னிடம் வேகாது என்பதை பல வகைகளில் சொற்களிலும் உடல் மொழியிலும் காட்டிவிடுவேன். ஆகவே என்னிடம் அதை அதிகமாக பயன்படுத்துவதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/01/2011

மொழிபெயர்ப்பாளர்கள் பற்றி மற்றவர் வைத்திருக்கும் சில வேடிக்கையான எண்ணங்கள்

எனது இந்தப் பதிவில் இது பற்றி பின்னால் தனிப் பதிவு போடப்போவதாக கூறியிருந்தேன். ஆகவே இப்பதிவு.

முதலில் அந்த ஸ்ரீலங்கா வாடிக்கையாளரையே எடுத்துக் கொள்வோம்.

1. துபாஷி வேலை விட்டு விட்டு நடந்தது. எனது குழுவினருடன் காரில் சென்று பல சப்ளையர்களை கண்டு அவர்கள் பேசுவதற்கு துணையாக துபாஷி செய்ய வேண்டியிருந்தது. அப்போதுதான் அந்த வாடிக்கையாளர் கூறினார், “நடுவில் சும்மாத்தானே இருக்கிறீர்கள். அந்த நேரத்துக்கு நீங்கள் சார்ஜ் செய்யக் கூடாது” என்றார். என் சக மொழிபெயர்ப்பாளர் என்னைப் பார்க்க, நான் புன்முறுவலுடன் கூறினேன், “அப்படியானால் அவ்வாறு சும்மா இருக்கும் நேரத்தில் நாங்கள் வீடுவரைக்கும் சென்று வருகிறோம். நீங்கள் கார் ஏற்பாடு செய்யுங்கள்” எனக் கூற அவர் அமைதியானார். நாங்கள் வந்து விட்டோம், எங்க்ளை பயன் படுத்திக் கொள்வது மகனே உன் சமத்து. என்பதுதான் அதற்கு பொருள்.

2. ரெசிடன்சி டவர்ஸில் நல்ல 5-ஸ்டார் டின்னர் தருவதற்காகவாவது நாங்க்ள் ரேட்டைக் குறைக்க வேண்டும் எனக்கூற, “வேலை நேரத்தில் சாப்பாடு போடுவது ஒப்பந்தத்தில் ஒரு பாகம். ஆகவே அதையெல்லாம் இங்கு கொண்டு வரலாகாது. மேலும் இந்தியக் குடியரசு தலைவர் மாளிகையில் டின்னர் சாப்பிட்ட டோண்டு ராகவனுக்கு ரெசிடன்சி டவர்ஸ் எல்லாம் ஜுஜூபியே என்று ஒரு போடு போட்டதும்தான் அவர் அடங்கினார்.

3. அடிமாட்டு விலைக்கு கறவை மாட்டை எதிர்பார்ப்பவர்கள் பற்றி நான் எழுதியதை சுட்டி மூலம் பார்த்து கொள்ளுங்கள்.

4. இரு மொழிகளையும் பேசத் தெரிந்தவர்களுக்கு அவற்றிடையே மொழி பெயர்ப்புக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது. இது மிகப் பரவலாக இருக்கும் தவறான நம்பிக்கை. பேசுவது வேறு, எழுத்து மூலம் மொழி பெயர்ப்பது வேறு. இது தெரியாமல் சந்தியில் நிற்பவர்கள் அனேகம்.

5. கணினி மூலம் மொழிபெயர்க்க மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அவை கண்றாவி மொழி பெயர்ப்புகள் என்பதை யார் கூறுவது.

6. இந்த அழகில் அவ்வாறு மெஷின் டிரான்ஸ்லேஷனை நாங்கள் பிழை திருத்த வேண்டும் எனக் கேட்பார்கள். நான் உடனே எகிறி குதித்து அங்கிருந்து ஓடி விடுவேன்.

7. ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பவர் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கும் மொழி பெயர்க்கவியலும். இன்னொரு லூசுத்தனமான நம்பிக்கை. உலக் அளவில் மொழி பெயர்ப்பு என்பது அன்னிய மொழியிலிருந்து தாய் மொழிக்குத்தான் செய்ய வேண்டும் என்பது ஒரு கோல்டன் விதி. விதி விலக்குகள் உண்டு என்றாலும் சாதாரணமாக அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்தான்.

8. முதல் டிராஃப்டிலேயே நல்ல மொழிபெயர்ப்பு வர வேண்டும். வரவே வராது. பல முறை ரிவைஸ் செய்ய வேண்டியிருக்கும்.

9. அதிக பக்கங்கள் கொண்ட வேலைக்கு டிஸ்கவுண்ட் தரவேண்டும். இதை நான் ஒப்புக் கொண்டதே இல்லை. எவ்வளவு பக்கங்கள் இருந்தால் என்ன, கடைசி பக்கத்துக்கும் முதல் பக்கம் போலவே முழு கவனம் தேவைப்படும். Economy of scale இங்கு செல்லாது.

10. ஒரு பெரிய மேன்யுவலை பத்து பேர் சேர்ந்து பல நாட்கள் வேலை செய்து உருவாக்கியிருப்பார்கள். ஆனால் அதன் மொழிபெயர்ப்பு மட்டும் நேற்றைக்கே வேண்டும் என்பார்கள். நான் இதற்கு இடம் அளிக்க மாட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம். இப்போதைக்கு போதும் என நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/21/2011

துபாஷி வேலையில் எதிர் கொண்ட பிரச்சினை

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது. ஸ்ரீலங்காவிலிருந்து ஒரு தொழிலதிபருக்கு பிரெஞ்சு துபாஷி தேவைப்பட்டது. அவர் இது சம்பந்தமாக சென்னையிலுள்ள தனது க்ரூப் கம்பெனியை அணுகியிருக்கிறார். அந்த கம்பெனிக்காக நான் ஏற்கனவேயே பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் செய்துள்ளேன்.

அக்கம்பெனி என்னை சிபாரிசு செய்ய, இவர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். நானும் சென்றேன். அவர் என்னிடம் கொட்டேஷன் கேட்க அதையும் தந்தேன். சற்று பேரம் பேசிப் பார்த்தார், நான் அதற்கு இடம் கொடுக்கவில்லை. சரி என ஒத்துக் கொண்டார். பிறகுதான் தமாஷ். தன்னுடன் இன்னும் பலர் வந்திருப்பதாகவும், எல்லோரும் இரு குழுக்களாக பிரிந்திருப்பார்கள் என்றும், ஆகவே இன்னொரு துபாஷியும் வேண்டுமெனக் கேட்டார். நான் ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் கேட்டார்.

நான் யோசித்துச் சொல்கிறேன் என ஒரு நாள் டைம் கேட்டு வந்தேன். முடியாது என்று சொன்னால் அவர்கள் யாரேனும் இன்னொருவரை கூப்பிட்டு, அவருடன் நெகோஷியேட் செய்து அவரையே இன்னொருவரையும் கொண்டுவரச் செய்து என்னைக் கழட்டிவிடும் அபாயம் இருந்தது.

நான் தேர்ந்தெடுத்தது ஒரு பெண் துபாஷியை. ஒருவரை ஒருவர் பார்த்திருக்காவிட்டாலும் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் அவருடன் பரிச்சயம் உண்டு. அவருக்கு ஃபோன் செய்தேன். அவருக்கு துபாஷியாக வர விருப்பமா எனக் கேட்டேன். அவரும் சரி எனச் சொல்ல, அவருக்கு சில கண்டிஷன்கள் போட்டேன்.

1. நான் ஒத்துக் கொண்ட ரேட்டைத்தான் அவரும் கேட்க வேண்டும். அதற்குக் குறையக் கூடாது (இது ரொம்ப முக்கியம்). பிற்காலத்தில் அதே வாடிக்கையாளர் அவரை மட்டும் வேறு அசைன்மெண்டுக்கு கூப்பிட்டால், தாராளமாக தனது ரேட்டை என்ன வேண்டுமானால் கூறிக் கொண்டு செய்யட்டும். ஆனால் இம்முறை மட்டும் எனது ரேட்டைத்தான் கேட்க வேண்டும்.

2. வாடிக்கையாளர் அவருடன் தனியாகப் பேசி, அவர் மனதைக் கலைக்க முயற்சி செய்யலாம். ஆனால் அதற்கு இவர் இடமே தரலாகாது. ரேட்டை ராகவன் மட்டுமே நிர்ணயிப்பார் எனக் கூற வேண்டும்.

3. அவருடைய பணத்திலிருந்து நான் ஒரு பைசா கூட கமிஷனாகக் கேட்க மாட்டேன். அதே சமயம் தனது பில்களை சப்மிட் செய்து பணம் வாங்குவது அவரது பொறுப்பேதான். அவரது நிலையும் எனது நிலையும் இந்த அசைன்மெண்டில் ஒன்றுதான் எனவும் தெளிவுபடுத்தினேன்.

இந்த கண்டிஷன்களை அப்பெண்மணி தனது கணவரிடம் தெரிவிக்க, மறுபேச்சு பேசாமல் அவரை ஒத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்.

மூன்று நாட்கள் எங்கள் இருவருக்கும் வேலை இருந்தது. ஆக்சுவலாக அப்பெண்மணியின் குழுவினர் அவரை அதிக நேரம் ரீடைன் செய்ததில் அவரது பில் என்னுடையதை விட அதிகமே. அதில் எனக்கு பிரச்சினையில்லை, அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இருவருக்குமே பணம் கிடைத்தது.

இதில் என்ன வேடிக்கை என்றால், நான் அந்த தொழிலதிபர் இவ்வாறு செய்வார் என அனுமானித்தது அப்படியே நடந்தது. அப்பெண் ரேட் விஷயம் ராகவன் சொற்படி எனக்கூறி தப்பித்துக் கொண்டார்.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இரு குழுவினருமாக சேர்ந்து கடைசியில் ஒரு பார்ட்டி வைத்திருக்கின்றனர். என்னைக் கூப்பிடவில்லை, அப்பெண்மணிக்கு மட்டும் அழைப்பு போயிருக்கிறது. அப்பெண்மணியின் கணவர் ஒரு விஷயம்தான் அவரிடம் கூறினார், “ராகவன் சாரும் வருவதாக இருந்தால் தாராளமாகச் செல்”. அப்பெண் என்னிடம் இது பற்றிக் கேட்க, எனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை என நான் தெளிவுபடுத்த, அவரும் பார்ட்டிக்கு செல்ல மறுத்து விட்டார். இது பற்றி பிறகுதான் அறிந்தேன்.

துபாஷி வேலையில், அதுவும் பெண்களுக்கு, இம்மாதிரி சங்கடங்கள் வரலாம். இந்த விஷயத்தில் அப்பெண்ணின் கணவர் சரியான முறையில் தன் மனைவியை வார்ண் செய்து அச்சங்கடத்தைத் தவிர்த்திருக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/27/2010

வாடிக்கையாளரை மூக்கில் குத்தத் தோன்றும் பத்து தருணங்கள்

1. அக்டோபர் 1981 முதல் ஜூலை 2001 வரை நான் தில்லியில் இருந்த காலகட்டத்தில் இணையம் எல்லாம் எனக்கு பரிச்சயம் இல்லை. நான் வாடிக்கையாளரை அடையாளம் காணும் முறையே தமாஷானது. ஒரு அக்கவுண்டண்ட் வேலைக்கு விண்ணப்பம் கோரி விளம்பரம் வந்திருக்கும். அது எனக்கு வேலைக்காகாது. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட கம்பெனி ஜெர்மானிய அல்லது ஃபிரெஞ்சு நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்ற ஒரு வாக்கியம் வந்தால் அதன் தலைமை நிர்வாகிக்கு நான் எனது மொழிபெயர்ப்பு சேவைகளை அவருக்கு கடிதம் எழுதி ஆஃபர் செய்வேன். அதில் நான் பொறியாளரும் கூட என்பதை குறிப்பிட்டு, ஆகவே நான் தொழில்நுட்ப சம்பந்தமான கட்டுரைகளை நன்கு மொழிபெயர்ப்பேன் என்றும் குறிப்பிட்டிருப்பேன். பல முறைகள் இதனால் பலன் ஏற்பட்டு மொழிபெயர்ப்பு வேலைகள் கிடைத்துள்ளன. அக்கடித்தத்தில் நான் ஃப்ரீலேன்சாகத்தான் வேலை செய்கிறேன் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாலும், சில பிரகஸ்பதிகள் எனக்கு இவ்வாறு கடிதம் அனுப்புவர்:

அ) பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் வேலைக்கு உங்கள் விண்ணப்பம் வந்து சேர்ந்தது. எங்களிடம் அம்மாதிரியான வேலை காலி இல்லை.

ஆ) மின்பொறியாளராக வேலை கேட்டு உங்கள் விண்ணப்பம் கிடைக்கப் பெற்றோம், உடனே நேர்காணலுக்கு வருக (இது எப்படியிருக்கு).

முதல் வகை கடிதமாவது பரவாயில்லை. ஆனால் இரண்டாம் வகை கடிதத்துக்கு? சான்சே இல்லை. அந்த நிறுவனத்துக்கு முதலில் நன்கு ஆங்கிலம் தெரிந்த ஒருவரே முதற்கண் தேவை. அதற்கு முன்னால் அவர் மூக்கில் குத்துவிட ஆசை. ஆனால் அவ்வாறு வெளிப்படையாக நடந்து கொள்ள முடியாதே!

2. நேர்காணலின்போது நான் முழுநேர வேலையாக எங்கே வேலை செய்கிறேன் என்பதை அறிவதில் பலர் அதீத ஆவலுடன் இருப்பர். அதற்காக அவர்கள் விடாது கேள்வி கேட்கும் போது மூக்கில் ஒரு குத்து விட ஓர் ஆசை!

3. கையில் ஒரே ஒரு வேலையை வைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதாக உதார் விடும்போது பசக்கென ஒரு குத்து மூக்கில்.

4. ஒரு பெண்மணி என்னிடம் வந்து ரொம்ப அலட்டினாள், அவளது அத்தை பிள்ளை மட்டும் இருந்திருந்தால் இலவசமாகவே மொழிபெயர்த்து கொடுத்திருப்பான் என. அவனோ வெளிநாட்டில். அப்புறம் இங்கு வந்து என்ன பந்தா? மூக்கில் பசக் என ஒரு குத்து (அத்தைப்பிள்ளைக்கு அவள் தரக்கூடிய ‘சலுகைகளை’ எனக்கும் தருவதாக இருந்திருந்தாலாவது ஏதாவது யோசிக்கலாம்).

5. வாடிக்கையாளர் தனது நிறுவனம் லாபநோக்கற்ற அமைப்பு என புருடா விடும்போது மூக்கில் பசக்கென ஒரு குத்து.

6. பில்லுக்கான பணம் கொடுக்காது காக்கா நரி கதைகளை வாடிக்கையாளர் கூறும்போது அவர் மூக்கில்....

7. கோப்புகளில் பல வாக்கியங்கள் திரும்பத் திரும்ப வரும் என்பதால் அவற்றுக்கு ஒரு முறைக்கு மேல் சார்ஜ் செய்யக்கூடாது என கருத்து கந்தசாமிகளாக வாடிக்கையாளர் மாறும்போது ஒரு குத்து பசக்கென மூக்கில்.

8. தேவையே இன்றி மிக அர்ஜண்ட் என்று சாதாரண வேலைகளுக்கும் பந்தா செய்பவர்கள் சில வாடிக்கையாளர்கள். அப்படியே அர்ஜண்டாக வேலை செய்து மின்னஞ்சலில் அனுப்பித்தால் அவரது செட் செய்யப்பட்ட ஆட்டமேட்டிக் பதில் வரும், அதில் அவர் வெளிநாடு சென்றுள்ளார் என்றும் பத்து நாள் கழித்துத்தான் வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். வேண்டுமென்றே டென்ஷன் செய்த அந்த மனிதரின் மூக்கு மேலே ஒரு கராட்டே அடி.

9. வேலைக்கு வரச்சொல்லிவிட்டு அங்கு சென்று காத்திருக்கும்போது திடீரென கேன்சல் செய்து காலணா கொடுக்காது அனுப்ப நிறுவனம் முயலும்போது, என்ன மூக்கில் குத்து விடவேண்டியதுதானே?

10. நமக்காக நிறுவனம் தெரிவு செய்துள்ள தொடர்புக்கான நபர் (contact person) தனது தவறுகளையும் நம் மேல் திசைதிருப்ப நினைக்கும்போது அந்தாளை சும்மா விட்டுவிட முடியுமா என்ன?

ஆனால் இமாதிரியான ஒரு தருணத்திலும் நான் அதை செயல்படுத்தியிருந்தால் இப்பதிவை போட்டுக் கொண்டிருக்க முடியாது. திகாரிலோ அல்லது புழலிலோதான் இருந்திருப்பேன். ஆகவே நான் அவற்றை சமாளிக்க வேண்டியிருந்தது. அவற்றை நான் கையாண்ட விஷயங்களே எனது வாடிக்கையாளரை அணுகும் முறையில் வருகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/23/2010

இலாப நோக்கமற்ற அமைப்புகள்

தில்லியில் இருந்தபோது ஒரு வாடிக்கையாளர் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வேலைக்கு கூப்பிட்டனுப்பியிருந்தார். தினசரி 3 மணி நேரம் வந்து மொழிபெயர்ப்பு வேலைகளை செய்ய வேண்டும் என்றார். இப்போதைய நிலையில் நான் அன்றிருந்திருந்தால் பிரச்சினையே இருந்திராது. மேலே செல்லும் முன்னால் அதுபற்றி ஒரு சிறு டைவர்ஷன்.

இங்கு சென்னையில் ஒரு நிறுவனத்துக்கு ஜெர்மனில் மின்னஞ்சல்கள் வரும், அவற்றை நான் ஆன்லைனில் மொழி பெயர்க்க எனக்கு ஃபார்வோர்ட் செய்வார்கள். நான் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பை மின்னஞ்சலாக சென்னை நிறுவனத்துக்கே அனுப்ப, அவர்கள் அதற்கான பதிலை ஆங்கிலத்தில் எனக்கு அனுப்ப, நான் அவற்றை ஜெர்மனுக்கு மொழிமாற்றி அவர்களுக்கு திருப்பியனுப்ப, அவர்களும் அதை ஜெர்மன் வாடிக்கையாளருக்கு அனுப்புவார்கள். ஒரு சுற்று முடிய ஓரிரு மணி நேரங்களே பிடிக்கும். அதில் எனது மொழிபெயர்ப்புக்கான நேரமோ சில நிமிடங்களே பிடிக்கும்.

இதில் எல்லோருக்குமே லாபம். ஜெர்மானியரை பொருத்தவரை அவர்கள் வேலை ஜெர்மன் மொழியிலேயே நடந்து விடுகிறது. அவர்களது இந்தியப் பிரதிநிதிக்கும் அவரது தகவல் தொடர்பு வேலை சுளுவாக முடிந்து விடுகிறது. எனக்கோ ரெகுலராக மொழிபெயர்ப்பு வேலைகள் அதுவும் சுலபமான வேலைகள் வருவதால் நானும் பணம் ஈட்டுகிறேன்.

இந்த ஏற்பாட்டுக்கு என்ன மாற்று இருக்கவியலும்? இந்திய நிறுவனம் ஒரு முழு நேர மொழிபெயர்ப்பாளரை தனது இடத்தில் வேலை செய்யுமாறு வைத்து கொள்ளலாம். ஜெர்மானியருக்கோ அதை நினைத்துக்கூட பார்க்கவியலாது, ஏனெனில் அந்த ஊர் சம்பளங்கள் மிக மிக அதிகம். அதே சமயம் இந்தியாவிலும் முழுநேர பணியாளருக்கு சம்பளம், டி.ஏ., விடுமுறை சம்பளம், வார விடுமுறைகள், மருத்துவ படிகள், எல்.டி.சி. ஆகிய செலவுகள் எல்லாம் வரும்.

எனக்கோ வீட்டிலிருந்தவாறே விளையாட்டாக வேலை செய்யலாம், இணையத்தில் மேயலாம், ஒரு கொம்பனும் என்னை கேள்வி கேட்க முடியாது.

டைவர்ஷன் முடிந்தது. மேலே சொன்னதெல்லாம் பின்னால் வரப்போகும் விஷயங்கள். அவற்றை நான் அச்சமயம் அறிந்திருக்கக்கூட முடியாது. அப்போது கணினியை எப்படி இயக்குவது என்று கூட நான் அறியேன் (அது தொண்ணூறுகளின் இறுதி காலம்). ஆகவே நேரிலே நிறுவனத்துக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை. நேர்காணலுக்கு என்னைத் தவிர வேறு பலரும் வந்திருந்தனர். எல்லோருக்கும் ஒரு டெஸ்ட் வைத்தனர். ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பு. என்னுடன் போட்டி போட்ட பலர் இளைஞர்கள். அப்போதுதான் ஜே.என்.யூ.வில் எம்.ஏ. பிரெஞ்சு முடித்திருந்தனர்.

டெஸ்ட் பேப்பர்களை ஒரு ஜே.என்.யூ. பேராசிரியர் திருத்தியிருக்கிறார். எனது பேப்பரை மட்டும் தனியாக எடுத்துக்காட்டி, இவரது தரம் மிக உயர்ந்தது, மற்றவர்கள் பரவாயில்லை ரகமே எனக் கூறியிருக்கிறார். (இதை சம்பந்தப்பட்ட அந்த பேராசிரியரே பிற்காலத்தில் என்னை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்த்தபோது கூறினார்).

இப்போது நெகோசியேஷன். தினசரி 3 மணி நேரம் வருவதெல்லாம் கட்டுப்படியாகாது, ஏனெனில் நிறுவனம் எங்கள் வீட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது, போக வரவே 4 மணி நேரம் பிடிக்கும். ஆகவே வாரத்துக்கு 3 நாட்கள் வருகிறேன் என்றேன். அவர்களும் சரி என்றார்கள். சராசரியாக மாதத்துக்கு 13 நாட்கள் நிச்சயமாக வேலை தரவேண்டும், இல்லாவிட்டால் அதற்கான தொகை தரவேண்டும். 13 நாட்களுக்கு மேல் ஒரு மாதத்தில் வேலை செய்தால் ஒரு நாளைக்கு இவ்வளவு என்னும் கணக்கில் எக்ஸ்ட்ரா தரவேண்டும் எனக் கூறி விட்டு, ஒரு மாதத்துக்கு 20,000 ரூபாய், எக்ஸ்ட்ரா நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் என கோட் செய்தேன்.

இப்போதுதான் தமாஷ் நடந்தது. நான் சொன்னதை கேட்டு திடுக்கிட்ட தலைமை அதிகாரி தங்கள் நிறுவனம் இலாப நோக்கற்ற அமைப்பு என்றும் ஆகவே நான் எனது டிமாண்டை குறைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். நானா அசருவேன். அவர்கள் என்னவாக இருந்தாலும் எனது வேலையின் சுமை அப்படியேதான் இருக்கும். நான் இலாப நோக்குடையவன் எனக் கூறினேன். தன்னால் அவ்வளவு பெரிய தொகையை சேங்ஷன் செய்யவியலாது எனக் கூற, அது அவர் பிரச்சினை என உறுதியாகக் கூறினேன்.

பிறகு ஒரே ஒரு கேள்வி கேட்டேன். டெஸ்ட் நடந்து இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டதே, ஏன் இந்த தாமதம் என்று. அதற்கு அவர் முந்தைய நாளன்றுதான் தான் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கு வேலை சம்பந்தமாக சென்றிருந்த டூரிலிருந்து திரும்பியதாக கூறினார்.

அவர் தனது சொந்த செலவிலா அங்கெல்லாம் சென்றார் எனக் கேட்க, அதெப்படி சாத்தியம் என அவர் கேட்டார். இலாப நோக்கமற்ற அமைப்பால் அவரது ஐரோப்பிய டூரை தாங்க முடியுமா என கேட்க, அவற்றுக்கான பட்ஜெட் உண்டு என அவர் விடை கூறினார். அதே மாதிரி எனது சேவை வேண்டுமானால் நான் கேட்ட தொகைக்காக பட்ஜெட் போட்டுக் கொள்ளுமாறு கூறிவிட்டு விடை பெற்று வந்தேன்.

பிறகு அதே நிறுவனத்துக்கு வேலைகளை பீஸ் ரேட்டில் செய்தேன் (எனது சேவையை அவர்கள் இழக்கத் தயாராக இல்லை). அவை ஒரு வார்த்தைக்கு இவ்வளவு என்னும் கணக்கில், அது வேறு விஷயம்.

எனக்கு முதலிலிருந்தே இலாப நோக்கற்ற நிறுவனங்கள் பற்றி நல்ல அபிப்பிராயம் கிடையாது. அவற்றில் பலவற்றின் வரி ஏய்ப்புகள், கருப்புப் பணத்தை வெளுப்பாக்குவது ஆகிய விஷயங்களை பெர்ரி மேசன் நாவல்கள், மற்றும் ஏனைய பிற புத்தகங்களில் அறுபதுகளில் படித்ததின் பாதிப்பாகத்தான் அவற்றைப் பற்றிய எனது ஆடிட்ட்யூட் இருக்கிறது. என்னை பொருத்தவரை இம்மாதிரி இலாப நோக்கற்ற நிறுவனங்கள் are presumed guilty unless proven innocent beyond all reasonable doubt.

ப்ரோஸ்.காம் தலைவாசலில் பல வேலைக்கான விளம்பரங்களில் கொட்டேஷன்களை ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம் கேட்கிறது என்று பார்த்தாலே அவற்றைத் தவிர்த்து விடுவேன். அவற்றில் பெரும்பான்மையான கேஸ்களில் அதில் நிர்வாகியாக வேலை செய்பவர்கள் கொழுத்த சம்பளம் எல்லாம் பெறுவார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் கொத்தடிமைகளாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தாங்கள் இலாப நோக்கமற்றவர்கள் என்பதற்கு அவர்கள் செய்யும் அலம்பல்கள் பார்க்க சகிக்காது.

அறுபதுகளில் இந்தியாவில் குறைந்த பட்ச போனஸ் 4 % என ரூல் வந்தபோது, அரசு நிறுவனங்களுக்கு மட்டும் முதலில் விலக்களித்திருக்கிறார்கள். காரணம்? அரசு நிறுவனஙகள் சமூக மேம்பாட்டு நோக்குடையவையாம், இலாப நோக்கு இல்லாதவையாம். அது சம்பந்தமாக கேஸ் கோர்ட்டுக்கு வந்தபோது ஜட்ஜ் அரசின் வாதத்தை ஏற்க மறுத்தார். இலாப நோக்கு என்பது ஒரு கமெர்ஷியல் நிறுவனத்துக்கு அவசியம், அது இல்லை என்று கூறுவது பொறுப்பற்றத்தனம் என்பதுதான் அதற்கு அவர் சொன்ன காரணம்.

ஆக நான் கூறவருவது இதுதான். எனது புது வாடிக்கையாளர் யாராவது தான் இலாப நோக்கற்ற நிறுவனம் என கூறினால், அவர்களுக்கு வேண்டுமென்றே அதிகமாக கோட் செய்வேன்.

இந்த அழகில், “Biggest comedy of IPL is... it's a "Taxfree charity organization" according to the Govt, despite there are thousands of Crores involved” என்று இட்லிவடை பதிவு ஒன்றில் ஒரு பின்னூட்டம் கூறுகிறது. ஏண்டாப்பா மயிராண்டிமார்களே, நீங்களா வரி விலக்கு பெற்ற அறக்கட்டளை அமைப்பு?

They are all presumed guilty, unless proven innocent!!!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/02/2010

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 1

நான் ஏற்கனவே யாழ்தேவி தளமேலாளருக்கு சொன்னபடி, வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள் என நான் கடந்த 35 ஆண்டுகளாக கண்டறிந்தவற்றை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன். அந்த 10 பதிவுகள் வந்த சமயம் யாழ்தேவியே இல்லை. ஆகவே அதன் பயனாளர்களுக்காக இந்த மீள்பதிப்புகள். முதலில் பகுதி- 1.

1975-லிருந்து நான் மொழி பெயர்ப்பு வேலைகளைச் செய்து வருகிறேன். விடாமல் நாம் வேலைகள் பெற நம்மிடம் வாடிக்கையாளரை எப்படி அணுகுவது என்பது பற்றியத் தெளிவான கருத்துகள் இருக்க வேண்டும். அவை இருந்தாலே பாதி காரியம் முடிந்த மாதிரித்தான்.

1. எல்லாவற்றையும் விட முக்கியமானது புது வாடிக்கையாளரைப் பிடிப்பது. எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்? யாருக்கு எழுத வேண்டும் என்றெல்லாம் பார்க்கலாம். இதற்கு மட்டும் பின்னால் ஒரு தனிப் பதிவு தேவைப் படும்.

2. உங்களை நீங்கள் அறிய வேண்டும். அதாவது உங்களால் எது முடியும் எது முடியாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேவையில்லாது வாக்குறுதிகள் அளித்து விட்டு அவற்றை நிறைவேற்றாது போனால் உங்கள் நம்பகத்தன்மை அடிபட்டு விடும். உதாரணத்துக்கு வேலை எப்போது முடித்துத் தரவேண்டும் என்று வாடிக்கையாளர் கூறும்போது அது உங்களுக்குத் தோதுப்படுமா என்று பார்த்தே ஒத்துக் கொள்ள வேண்டும். பத்துக்கு ஒன்பதுத தருணங்களில் அவசரம் என்று வாடிக்கையாளர் கூறுவது உதாராகத்தான் இருக்கும். அவசரமான வேலை என்றால் ஒன்றரை மடங்கு விலை என்றுக கூறிப் பாருங்கள் அவசரம் என்பது அவசரமாகவே மறைந்து விடும். இது பற்றிப் பின்னால் மேலும் விவரமாகக் கூறுகிறேன்.

3. உங்கள் விலை என்ன என்பதில் தெளிவாக இருங்கள். மொழி பெயர்ப்பாளர்கள் பலர் இதில்தான் கோட்டை விடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை வேலை சுலபமாகவே இருக்கலாம். அவர்களுக்கு மிகவும் பிடித்ததாகவே கூட இருக்கலாம். அதை எல்லாம் வாடிக்கையாளரிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. பிறகு அவர் உங்களுக்கு ஏதோ சலுகை காட்டுவது போலத் தோற்றம் வந்து விடும். இது பற்றியும் அடுத்த பதிவுகளில் மேலும் கூறுவேன்.

4. வாடிக்கையாளர்களின் வாக்குறுதிகளை அப்படியே நம்பி விடாதீர்கள். தங்களிடம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதாகவும் நிறைய வேலை கொடுக்க முடியும் என்றும் ஆசை காட்டுவார்கள். இதுவும் மேலே கூறியதை போன்று அனேகமாக ஒரு பீலாவாகத்தான் இருக்கும். அவர்களிடம் ஒரே ஒரு வேலை இருந்தாலும் அவ்வாறுதான் கூறுவார்கள். அவர்கள் அக்கறை முடிந்த அளவுக்கு விலையைக் குறைப்பதே ஆகும். இதை நான் என்னளவில் எவ்வாறு கையாண்டேன் என்பதையும் பின்னொரு பதிவில் கூறுவேன்.

5. தேவையில்லாத விவரங்கள் கொடுக்காதீர்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு முழு நேர வேலை வைத்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு என்பது பகுதிநேரவேலை. அவ்வேலைக்கான வாடிக்கையாளரிடம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை ஒரு போதும் கூறக்கூடாது. அவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை அடிக்கடி கேட்பார்கள். மரியாதையுடன் அதே நேரத்தில் உறுதியுடன் தகவல் தர மறுத்து விடவும். இது பற்றி நான் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பிறகு கூறுகிறேன்.

6. எப்போதும் உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக உங்கள் தகவல் வழிகளைத் திறந்து வைக்கவும். தொலைபேசி வைத்திருப்பது மிக முக்கியம். தொலைபேசி அழைப்புகளை நீங்களே கையாளுவது முக்கியம். குழந்தைகளைத் தொலைபேசியை எடுக்க விடாதீர்கள். அது முடியாது என்றால் உங்களுக்கென்றுத் தனியாக செல்பேசி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் மட்டும் இருக்க வேண்டும். செல்பேசி "யூனிவர்செல்"பேசியாக மாறக் கூடாது. இதில் பல சாத்திய கூறுகள் உள்ளன. அவை பற்றிப் பிறகு.

7. உங்கள் அப்போதைய நிலை எதுவாக இருப்பினும் அதன் சாதகமான அம்சங்களையே வலியுறுத்தவும். 2002 வரை என்னிடம் கணினி இல்லை. இப்போது உண்டு. இரண்டு நிலைகளையும் நான் எனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டேன். அது பற்றிப் பிறகு.

8. வேலை செய்தால் மட்டும் போதாது. வரவேண்டிய தொகைகளையும் வசூலிக்கத் தெரிய வேண்டும். இது சம்பந்தமாக பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் குறித்துப் பிறகு விரிவாகப் பேசுவேன்.

மேலே கூறியவற்றையும், மேலும் கூறப் போவதைப் பற்றியும் பேச என்னுடைய யோக்கியதாம்சங்கள் என்ன? சமீபத்தில் 1975-லிருந்து நானே உணர்ந்துக் கடைபிடித்ததைப் பற்றித்தான் கூறப்போகிறேன். நான் சென்னையில் வெற்றிகரமாகச் செயல் புரியும் ஒரு மொழி பெயர்ப்பாளன் என்றுக் கூறுவதைத் தடுக்க என்னிடம் பொய்யடக்கம் இல்லை. தில்லியில் இருந்தபோதும் எனக்கு வெற்றி கிடைத்து வந்தது.

இஃது எத்தனை பகுதிகளாக வரும் என்பதோ, விடாமல் ஒன்றன் பின் ஒன்றாக வருமோ அல்லது விட்டு விட்டு வருமோ என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. சோ, சுஜாதா, பெரியார், பார்ப்பனீயம், இஸ்ரேல், ஹைப்பர் லிங்குகள் ஆகியவையுங்கூட நடுவில் தேவைக்கேற்ப வரலாம் என்பதையும் கூறி விடுகிறேன். (அவ்வாறே வந்தும் விட்டன).

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/07/2009

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 11

வாடிக்கையாளர்களை அணுகும் முறை
ரொம்ப நாளைக்கப்புறம் இந்த வாடிக்கையாளரை அணுகும் முறைகள் லேபலில் இன்னொரு பதிவு. முதலில் அதை தூண்டிய நிகழ்ச்சியை பார்ப்போம்.

சாரு நிவேதிதா தான் விஜய் டிவி-யில் ஒளிபரப்பிய நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாகவும் அதற்காக பணம் எதுவும் தராமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தது பற்றி இட்லிவடையார் ஆனந்த விகடனை மேற்கோள் காட்டி இட்டிருந்த இடுகையிலிருந்துசாரு நிவேதிதா சொன்ன சில வரிகளை முதலில் பார்ப்போம்.

“விஜய் டி.வி-யின் 'நீயா நானா' நிகழ்ச்சியில் பல முறை விருந்தினராகக் கலந்து கொண்டு இருக்கிறேன். பொதுவாக, நான் டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பது இல்லை என்றாலும், சமூக அக்கறையுடன் கூடிய விஷயங்களை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதால் 'நீயா நானா' நிகழ்ச்சியைப் பிடிக்கும். ஆனாலும், அதில் கலந்து கொள்வதில் எனக்கு ஒரு பிரச்னை இருந்தது. பிரதான விருந்தினராக வரவழைத்துவிட்டு, கடைசியில் காசு எதுவும் கொடுக்க மாட் டார்கள். ஒருவேளை அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கோபிநாத்தும் இலவச சேவையே செய்கிறார் போலிருக்கிறது என்று அதை விட்டுவிட்டேன்.

ஆனால், ஒருமுறை 'நீயா நானா'வில் கலந்துகொள்ள அழைத்தபோது, அதே தேதியில் கேரளாவின் கொச்சியிலும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டு இருந்தேன். (தமிழ்நாட்டைவிட அடியேனை கேரள மக்களுக்கு அதிகம் தெரியும்). அதனால் என் இயலாமையை 'நீயா நானா' குழுவுக்குத் தெரிவித்தபோது, அவர்கள் கொச்சிக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுப்பதாகச் சொன்னார்கள். அப்போதுதான் எனக்கே தெரியும் விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் அளவுக்கு அவர்களால் செலவு செய்ய முடிகிறது என்று!

இன்னொரு சமயம், விஜய் டி.வி-யின் இன்னொரு நிகழ்ச்சிக்காக நளினி ஜமீலாவுடன் நானும் கலந்துகொண்டேன். அதில் கலந்து கொள்ள நளினி ஜமீலாவுக்கும், அவருடைய உதவியாளருக்கும் திருவனந்தபுரத்திலிருந்து வரவும் திரும்பவும் விமான டிக்கெட், அவர்கள் சென்னையில் இரண்டு நாட்கள் தங்க ஹோட்டல் செலவு, விலை உயர்ந்த பட்டுப் புடவை என்று மொத்தம் 30,000 ரூபாய் செலவு செய்தார்கள். ஆனால் எனக்கு என்ன என்று கேட்டபோது, 'நாளை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறோம்!' என்றார்கள்.

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். விஜய் டி.வி-க்கும் எனக்கும் இடையே மீடியேட்டராகச் செயல்பட்டார் ஒரு நபர். அவர் சொன்னபடி அந்த 'நாளை' என்ற நாள் இன்னும் வரவே இல்லை. நானும் ஒரு போன் செய்து பார்த்தேன். 'இதோ ஒன் அவர்ல அனுப்பிவைக்கிறேன் சார்!' என்றார் எந்தப் பதற்றமும் இல்லாமல். ஆனால், அந்த 'ஒன் அவரு'ம் இன்னும் வரவில்லை. சரி, போ என்று நானும் விட்டுவிட்டேன்.

அதற்குப் பிறகும் 'நீயா நானா'வுக்காக போன் வரும். நானும் போவேன்... வருவேன். ஆனால், பைசா மட்டும் கிடையாது. 'எங்கே என் பணம்' என்று நான் கேட்பதும், 'நாளை அனுப்பிவைக்கிறேன் சார்' என்று அந்த நபர் சொல்வதும், அந்த 'நாளை' என்பது வராமலே போவதும் ஒரு சடங்காகவே நடந்துகொண்டு இருந்தது. சரி, போகாமல் இருந்துவிடலாம் என்று பார்த்தாலோ டி.வி-யில் மூஞ்சியைக் காண்பிக்கும் ஆசை அந்த எண்ணத்தைத் தடுக்கிறது. இதற்கிடையில் 'நீயா நானா' நிகழ்ச்சியின் மூளை யாகச் செயல்படும் ஆண்டனியும் எனக்கு நண்பராகிவிட்டார். அவர்தான் அந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர்.

இந்த நிலையில் ஜூலை 17-ம் தேதி 'நீயா நானா' சூட்டிங்கில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார் அந்த மீடியேட்டர். இரண்டு காரணங்களைச் சொல்லி, அழைப்பை மறுத்தேன். ஒன்று, இலவச சேவை. அதையும் பகலில் செய்தால் பரவாயில்லை. இரவு 12 மணிக்கு மேல்தான் படப்பிடிப்பை ஆரம்பித்து இரண்டு மணிக்குத்தான் முடிப்பார்கள். அது வேறு பெரும் தொல்லையாக இருந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களில் பலர் இளம் பெண்கள். கல்லூரி மாணவி கள். அவர்களை எல்லாம் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு, கடைசியாக என் வீடு வந்து சேர மூன்று மணிக்கு மேல் ஆகி விடும்.

'இந்த முறை அப்படி நடக்காது. 10 மணிக்கே சூட்டிங் ஆரம்பம். 12 மணிக்கு அனுப்பிவிடுவேன்!' மீடியேட்டரின் வாக்குறுதி. 'பணம்?'

'எப்போதும் கொடுப்பது போல் நிகழ்ச்சி முடிந்ததும் கை மேல் பணம்!'

'என்னது... எப்போதும் கொடுப்பது போலா? எப்போதய்யா அப்படிக் கொடுத்தீர்கள்?'

'ஐயோ சார்! நீங்கள் கேட்டு வாங்கிக்கொள்ளவில்லையா? இந்த முறை அப்படி நடக்காது. நிகழ்ச்சி முடிந்ததும் கொடுத்துவிடுவார்கள்! எட்டு மணிக்கே வண்டி வந்து விடும். கூடவே, மேடத்தையும் அழைத்து வாருங்கள்' என்றார். காரணம், நிகழ்ச்சி அப்படி. திருமணம், மறுமணம் என்பது தலைப்பு. நானும் அவந்திகாவும் மறுமணம் செய்துகொண்டவர்கள்.

சொன்ன நேரத்துக்கு வண்டி வரவில்லை. அவந்திகாவுக்கு டி.வி. என்றாலே அலர்ஜி. 'அடப் போய்யா, நீயும் உன் டி.வி-யும்!' என்று சொல்லிவிட்டு அவள் படுத்துத் தூங்கிவிட்டாள். ஒருவழியாக வண்டி வந்து சேர்ந்தது. ''12 மணிக்கு மேலதான் சார் சூட்டிங். அதனாலதான் மெதுவா கிளம்பி வந்தேன்!'' என்றார் டிரைவர்.

போய்ப் பார்த்தால் கோபிநாத் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். பாவம், காலையிலிருந்து இரண்டு சூட்டிங்கில் கலந்துகொண்ட களைப்பு. 'நீயா நானா' சூட்டிங் ஆரம்பித்தபோது மணி நடுநிசி ஒன்றரை. பாவம், அத்தனை பார்வையாளர்களும் 10 மணியில்இருந்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். சூட்டிங் முடியும்போது சரியாக அதிகாலை 3.45 மணி. வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது சுமார் நான்கரை மணி. தூக்கக் கலக்கத்தில் பணம் பற்றிக் கேட்கவில்லை. மறுநாள் கேட்டபோது அதே ஸ்டீரியோ டைப் பதில். 'நாளை கொடுத்து அனுப்புகிறேன்!' ஆனால், இந்த முறை நான் முன்பு போல் சும்மா இல்லை. மறுநாளும் மறுநாளும் போன் செய்தேன். இப்போது மீடியேட்டர் என் போனை எடுப்பதில்லை. வேறு போனிலிருந்து பேசினால் வைத்துவிடுகிறார். அவந்திகாவை விட்டுப் பேசச் சொன்னால் 'அவரோட மச்சான் பேசுகிறேன், மாமா பேசுகிறேன்' என்கிறார்.

இத்தனை அனுபவங்களுக்குப் பிறகு என் மனதில் எழும் கேள்விகள்:

பிரதான கெஸ்டாக ஒருவரை வரவழைத்துவிட்டு இப்படித்தான் நடத்துவீர்களா?

காலை நான்கு மணி வரை ஒருவரிடம் வேலை வாங்கிவிட்டு, அதற்கான சம்பளத்தைக் கொடுக்க வேண்டாமா? இதுதான் சமுதாய மறுமலர்ச்சியைப்பற்றி விவாதிக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு அடையாளமா?

இப்படி நடுநிசி வரை இளம் பெண்களையும் கல்லூரி மாணவிகளையும் சூட்டிங்கை முன்வைத்து காக்கச் செய்வது சித்ரவதை இல்லையா”?

மேலும் சில வரிகள்.

“சாருநிவேதிதாவின் கடிதம் கிடைக்கப் பெற்றதும் 'நீயா? நானா?' நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆண்டனியிடம் கடித விவரம் குறித்துக் கேட்டோம்...

''பணம் கொடுத்துப் பேச வைத்தால் செட் செய்த நாடகம் போன்றாகிவிடும் என்பதால், எங்களுடைய டாக் ஷோக்களில் கலந்துகொள்பவர்கள் யாருக்கும் நாங்கள் பணம் தருவது இல்லை. என்.டி.டி.வி. உள்ளிட்ட சேனல்களில்கூட அந்த மரபு இல்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களை அழைத்துவரும் பொறுப்பை சுந்தர்ராஜன் என்ற நபரிடம் ஒப்படைத்து இருந்தோம். அவர் எங்கள் ஊழியர் கிடையாது. பணப் பட்டுவாடா அவர் மூலமாகவே நடந்தது. இந்த விவகாரத்தில் நான் சாருவையே சப்போர்ட் செய்வேன். அவருடைய எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால், அவரைப் போன்ற சிறு பத்திரிகையாளர்கள், நல்ல எழுத்தாளர்களின் கருத்துக்கள் மக்களிடையே சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் எங்கள் நிகழ்ச்சியில் அவர்களைப் போன்றவர்களுக்குத் தொடர்ந்து ஒரு தளம் அமைத்துக் கொடுக்கிறோம்.

நளினி ஜமீலா கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கான மொத்த பட்ஜெட் 35 ஆயிரம் ரூபாய்தான். ஆனால், சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட நல்ல உள்ளம்கொண்ட நளினிக்கு என் சொந்தப் பணத்தில் இருந்துதான் அந்தச் செலவுகளைச் செய்தேன். படப்பிடிப்பு நடக்கும் நேரம், காலம் குறித்து சாருவிடம் சரிவரத் தெரிவிக்காததும் அந்த மீடியேட்டரின் தவறே. இனி, எங்கள் நிகழ்ச்சிக்குப் பிரபலங்களை அழைத்து வரும் பொறுப்பில் இருந்து அவரை விடுவிக்க முடிவு செய்துள்ளேன். எது எப்படியோ நடந்த சம்பவங்கள் வருத்தத்தையே தருகின்றன!'' என்கிறார் ஆண்டனி வருத்தம் தோய்ந்த குரலில்.

ஆண்டனியிடம் நாம் பேசிய சிறிது நேரத்துக்குப் பிறகு நம்மைத் தொடர்புகொண்டார் சாரு நிவேதிதா. ''இப்போதான் ஆண்டனி என்கிட்ட பேசினார். நிகழ்ந்த தவறுகளுக்கும் சிரமங்களுக்கும் வருத்தம் தெரிவித்துக்கொண்டார். இதுவரை வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டு, வழங்கப்படாமல் இருந்த தொகையையும் இரண்டொரு நாட்களில் சேர்ப்பிக்கப்படும்னு சொன்னார். அந்த மீடியேட்டருடன் இனி தொடர்புகொள்ள வேண்டாம்னும் சொன்னார்!'' என்று தெரிவித்தார்.
(நன்றி: விகடன்)”

இதெல்லாம் ஏன் நடந்தன. என்ன ஏது என்பதை முதலில் பேசிக் கொள்ளாது நிகழ்ச்சிக்கு சென்றது சாருவின் தவறு.

//ஒருவேளை அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கோபிநாத்தும் இலவச சேவையே செய்கிறார் போலிருக்கிறது என்று அதை விட்டுவிட்டேன்.//
கோபிநாத்தையும் சாரு தன்னை மாதிரி இளிச்சவாயராக நினைத்து கொண்டது முதல் தவறு. சரி, பிறகு ஏன் போனாராம்? டி.வி.யில் முகம் காட்டும் ஆசைதான் வேறென்ன? அப்ப்டியானால் அதுதான் உனக்கு கூலி என்று விஜய் டிவியினர் சொல்லாமல் சொல்லி செயலில் கட்டியுள்ளனர் என்பதே நிஜம். அப்படியே அந்த நிகழ்ச்சிக்கு போகாமல் இருந்திருந்தால் வேறு ஏதாவது படைப்புகள் செய்திருப்பாரா? இக்கேள்விக்கு சாருதான் பதில் சொல்ல வேண்டும். எனது ஊகம் முழுதும் சரியானதாக இருக்கலாம் என்றாலும் அதை நான் இங்கே கூறுவது முறையல்ல. :))

மீடியேட்டரை விடுங்கள். அவரை எல்லோருமே விட்டுக் கொடுத்து விட்டனர். அவரைக் கேட்டால் வேறு ஏதாவது கதை சொல்வாராக இருக்கும்.

தயாரிப்பாளர் ஆண்டனி கூறுவதை பார்ப்போம்.

முதலில் கூறுகிறார், பணம் தருவது இல்லை என்று. பிறகு கூறுகிறார் பணப்பட்டுவாடா சுந்தரராஜன் மூலம் நடப்பதாக. என்ன முரணான பேச்சு, ஒரே பாராவில். பிறகு கூறுகிறார் நளினி ஜமீலாவுக்கு தன் சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்ததாக. ஐயோ உள்ளமே உருகி விட்டது, இந்த கேழ்வரகிலிருந்து நெய் வடியும் பேச்சைக் கேட்டு. சரி ஒரு வாதத்துக்கே வைத்து கொள்வோமே, மீடியேட்டர் ஏமாற்றினார் என்று. அவரை நியமித்து, பிறகு என்ன நடக்கிறது என்ற கண்ட்ரோல் இல்லாமல் இந்த மனிதர் இருந்திருக்கிறார். இவரெல்லாம் தயாரிப்பாளராம். யார் காதில் ஐயா பூ சுற்றுகிறார் இவர்?

ஆக, மேலே உள்ள விஷயத்தில் எல்லோருமே முழு உண்மையைக் கூறவில்லை. இப்போது சாருவுக்கு பணம் வருமா என்பது என் கவலையில்லை. அது அவர் பாடு, விஜய் டி.வி.யின் பாடு. இதெல்லாம் ஏன் நடந்தன என்பதை இப்போது பார்ப்போம்.

நான் இட்ட வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 10-லிருந்து சில வரிகளை முதலில் பார்ப்போம்:

“இதுதான் பிழைப்பு என்று வந்தாயிற்று. இந்த பணம் வந்துதான் உலை கொதிக்க வேண்டும் என்ற நிலையும் வந்தாயிற்று. பிறகு வர வேண்டிய தொகைகளை வசூலிப்பதில் என்ன தயக்கம்? இருந்தாலும் பலருக்கு இதில்தான் பிரச்சினை. வேலையை சூரத்தனமாக முடித்து விடுவார்கள். பில்லையும் அனுப்பி விடுவார்கள். பிறகு வசூல் செய்ய வாடிக்கையாளரிடம் தொங்க வேண்டிய நிலை.

அவ்வாறு இல்லாது கறாராக வசூல் செய்தால்தான் பிழைக்க முடியும்.

முதல் விதி: புதிய வாடிக்கையாளராக இருந்தால் முதலில் முன்பணம் பெற முயற்சிக்க வேண்டும். சில வாடிக்கையாளர்கள் மிகப் பெரிய அளவில் வேலை வைத்திருப்பதாக புருடா விட்டு ரேட்டை குறைக்க முயற்சி செய்வதைப் பற்றி ஏற்கனவே என் முந்தைய பதிவுகளில் எழுதியுள்ளேன்.

இப்போது குறிப்பிடும் வாடிக்கையாளர்கள் நிஜமாகவே பெரிய அளவில் வேலை வைத்திருப்பவர்கள். இதற்கு நான் கொடுக்கும் உதாரணம் தில்லியருகில் காஸியாபாத்தில் இருக்கும் ஸ்ரீராம் பிஸ்டன்ஸ். அவர்களிடம் நான் தினசரி வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது. 8 மணி நேரம் கொண்ட ஒரு நாளைக்கு இவ்வளவு ரூபாய் என்று பேச்சு. இங்கு நான் என்ன செய்தேன் என்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை பில் கொடுத்து விடுவேன். அதுவே ஒரு கணிசமான தொகை. பிறகு தொடர்ந்து வேலை செய்வேன். அவ்வப்போது இன்டெர்காம் வழியாக சம்பந்தப்பட்ட நிர்வாகப் பிரிவுகள் தலைவர்களுடன் பேசி பில்லை நகர்த்துவேன். இதற்குள் இன்னொரு 10 நாட்கள் கடந்திருக்கும். இன்னொரு பில். அதே மாதிரி செயல் முறைகள். செக்குகளை நேரடியாகவே பெற்று விடுவேன். அதிலும் தில்லி செக்குகளாகப் பெற வேண்டும். காஸியாபாத் செக்குகளுக்கு வங்கிக் கட்டணங்கள் உண்டு.

இவ்வாறு செய்யும்போது எல்லோருடனும் நல்ல நட்புறவு வைத்து கொள்வது முக்கியம். எல்லோருடனும் சுமுகமாகப் பேச வேண்டும். செக் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். இது மிக முக்கியம். காரியம் ஆனதும் நீ யாரோ நான் யாரோ என்று சென்று விடக்கூடாது. யார் எப்போது முக்கியம் என்று இப்போதே தெரியாது.

சென்னையில் நிறுவனங்கள் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். புது வாடிக்கையாளர் என்றால் நான் ஏற்கனவே கூறியபடி முன்பணம் கேட்டு பெறுவேன். கேட்கும் முறையில் கேட்டால் கிடைக்கும். நிறுவனம் என்றால் மொழிபெயர்ப்பை மின்னஞ்சலில் இணைப்பாக அனுப்புவேன். பிறகு பில்லை கூரியர் மூலம் அனுப்புவேன். தனியாராக இருக்கும் பட்சத்தில் பணம் பெற்று கொண்டுதான் மின்னஞ்சல் அனுப்புவேன். அதற்கு சம்பந்தப்பட்டவர் என் வீட்டிற்கு வருவார். பணம் கொடுத்ததும் அவர்கள் முன்னாலேயே அவர்களுக்கு இணைப்புடன் கூடிய மின்னஞ்சலை அனுப்புவேன். பிறகு அவர்கள் என் கணியிலேயே தங்கள் முகவரிக்கு மின்னஞ்சல் வந்து சேர்ந்து விட்டதா என்பதை சரிபார்க்கச் செய்வேன். பிறகு என்ன, அவர் தன்னிடத்திற்கு சென்று ப்ரின்ட் அவுட் எடுத்து கொள்ள வேண்டியதுதான்.

அவரால் நான் இருக்கும் இடத்துக்கு வர இயலவில்லையா? அதனால் என்ன. என் பெயருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிக் கொள்வேன். பிறகு வாடிக்கையாளர் இருக்கும் இடத்திற்கு சென்று பணம் பெற்றுக் கொண்டதும் அவர் கணினியிலேயே என் மின்னஞ்சலைத் திறந்து இணைப்பாகக் கொடுத்துள்ளக் கோப்பை அவருடைய வன்தகட்டில் இறக்கி விடுவேன்.

மறுபடியும் நிறுவனங்கள் பக்கம் வருவோம். பில்லை கூரியரில் அனுப்பிய பிறகு, அது வந்து சேர்ந்ததா என்பதை தொலைபேசியில் பேசி உறுதி செய்து கொள்ள வேண்டும். எப்போது பணம் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டும். இவை எல்லாவற்றையும் சுமுகமான தோரணையில் செய்ய வேண்டும். செக் கூரியரில் வந்தவுடன் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தொலைபேசி மூலம் நன்றி கூற வேண்டும்.

அவ்வளவுதான் விஷயம். நான் செயல்படும் கடந்த 30 வருடங்களாக ஓரிரு முறைகள்தான் பணம் வசூல் செய்வதில் பின்னடைவு.

இன்னொரு விஷயம். வருடம் 20,000 ரூபாய்களுக்கு மேல் பில் தொகை சென்றால், வாடிக்கையாளர் எனக்கு தரும் தொகையிலிருந்து வருமானவரி பிடித்தம் செய்யவேண்டும் என்பது சட்டம். அவ்வாறே செய்தும் விடுவார்கள். அதற்கான சான்றிதழ் படிவம் 16-ஏவில் பெற்று, அதையும் நாம் வருமான வரி அதிகாரிகளிடம் நம் ரிடர்ன்ஸுடன் சமர்ப்பிக்க வேண்டும். பிடித்தம் செய்துவிடும் நிறுவனங்கள் சான்றிதழ் கொடுக்க அழும்பு செய்வார்கள். அவர்களிடம் விடாது அதைப் பெற வேண்டியதும் முக்கியம். அப்போது கூட சுமுகமாக நடந்து கொள்ள வேண்டும்.

பில் தொகையை கொடுப்பதில் சுணக்கம் காட்டும் வாடிக்கையாளர்கள் அவிழ்த்துவிடும் கதைகளைப் பற்றி இப்போது பார்ப்போமா?

மார்ச் 2001-ல் செய்த வேலைக்கு செக் நவம்பர் 2001-ல் தான் கிடைத்தது. வாடிக்கையாளர் சொன்ன காரணம்: அமெரிக்காவில் 9/11-ல் நடந்த குண்டு வீச்சினால் அவருக்கு அமெரிக்காவிலிருந்து வரும் செக்குகள் தாமதமாயினவாம், இது எப்படி இருக்கு? அதே வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு நான் போன் செய்து முதலாளியுடன் பேச வேண்டும் எனக் கேட்க, அவர் பாங்குக்குப் போயிருப்பதாகக் கூறப்பட்டது. அவர் மனைவி? அவரும் பாங்குக்குத்தான் அவருடன் சென்றிருக்கிறார் எனக் கூறப்பட்டது. அக்கௌண்டன்ட்? பாங்குக்குத்தான். அக்கௌண்ட்ஸ் க்ளர்க்? பாங்குக்கே. பாவம் பாங்க் மானேஜர். இத்தனை பேர் ஒன்றாக வந்தால் அவர் என்ன செய்வார்?

இம்மாதிரி புருடாக்கள் சர்வ சாதாரணம். இதையெல்லாம் மீறித்தான் நாம் குப்பை கொட்ட வேண்டும். என்ன செய்வது? அதுதான் வாழ்க்கை”.

இப்போது சாருவுக்கு பழைய பாக்கி எல்லாம் கிடைக்கும் என எண்ணுகிறீர்கள்? அந்த மீடியேட்டரை நிஜமாகவே தூக்கியிருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? அப்படியெல்லாம் தூக்கிவிட்டால் பின்னால் விஷயம் அம்பலமாகும்போது தயாரிப்பாளரே அல்லவா பழி ஏற்க வேண்டும். இதெல்லாம் ஒரு ட்ரிக்தான். நம்மெதிரில் வேலையாளியை திட்டுவது போல நடிப்பது, பிறகுஅவரை திட்டியதற்காக அவருக்கு அதிக போனஸ் தருவது. மற்றப்படி மீடியேட்டர் உண்மையாகவே ஏமாற்றினார் என்றால் சாருவுக்கு தர வேண்டிய பணத்தை தயாரிப்பாளரிடமிருந்து பெற்று தானே அதை ஏப்பம் விட்டிருக்க வேண்டும். போலீசிடம் போக வேண்டிய மோசடி வழக்கு இது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/20/2006

வாடிகையாளரை அணுகும் முறைகள் - 10

இது ஒரு மீள்பதிவு. புது தமிழ்மணத்தில் பழையப் பதிவுகளை அப்படியே இற்றைப்படுத்த இயலாததால் அவ்வப்போது நான் முக்கியம் எனக் கருதும் பதிவுகளை மீள் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. இதில் நான் தற்சமயம் ஒரு குறுக்கு வழியை பாவித்திருக்கிறேன். வாடிக்கையாளர்களை அணுகும் பதிவுகள் போட்டது பத்து. அதில் இந்த பத்தாம் பதிவில் முந்தைய ஒன்பதின் சுட்டிகள் வந்து விட்டதால் இதை மட்டும் இற்றைப்படுத்தினால் போதும்.

பத்தாம் பதிவு
வேலை செய்தால் மட்டும் போதாது. வரவேண்டிய தொகைகளையும் வசூலிக்கத் தெரிய வேண்டும். இது சம்பந்தமாக பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் குறித்துப் இப்போது விரிவாகப் பேசுவேன்.

இதுதான் பிழைப்பு என்று வந்தாயிற்று. இந்தப் பணம் வந்துதான் உலை கொதிக்க வேண்டும் என்ற நிலையும் வந்தாயிற்று. பிறகு வர வேண்டிய தொகைகளை வசூலிப்பதில் என்ன தயக்கம்? இருந்தாலும் பலருக்கு இதில்தான் பிரச்சினை. வேலையை சூரத்தனமாக முடித்து விடுவார்கள். பில்லையும் அனுப்பி விடுவார்கள். பிறகு வசூல் செய்ய வாடிக்கையாளரிடம் தொங்க வேண்டிய நிலை.

அவ்வாறு இல்லாது கறாராக வசூல் செய்தால்தான் பிழைக்க முடியும்.

முதல் விதி: புதிய வாடிக்கையாளராக இருந்தால் முதலில் முன்பணம் பெற முயற்சிக்க வேண்டும். சில வாடிக்கையாளர்கள் மிகப் பெரிய அளவில் வேலை வைத்திருப்பதாக புருடா விட்டு ரேட்டை குறைக்க முயற்சி செய்வதைப் பற்றி ஏற்கனவே என் முந்தைய பதிவுகளில் எழுதியுள்ளேன்.

இப்போது குறிப்பிடும் வாடிக்கையாளர்கள் நிஜமாகவே பெரிய அளவில் வேலை வைத்திருப்பவர்கள். இதற்கு நான் கொடுக்கும் உதாரணம் தில்லியருகில் காஸியாபாத்தில் இருக்கும் ஸ்ரீராம் பிஸ்டன்ஸ். அவர்களிடம் நான் தினசரி வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது. 8 மணி நேரம் கொண்ட ஒரு நாளைக்கு இவ்வளவு ரூபாய் என்று பேச்சு. இங்கு நான் என்ன செய்தேன் என்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை பில் கொடுத்து விடுவேன். அதுவே ஒரு கணிசமான தொகை. பிறகு தொடர்ந்து வேலை செய்வேன். அவ்வப்போது இன்டெர்காம் வழியாக சம்பந்தப்பட்ட நிர்வாகப் பிரிவுகள் தலைவர்களுடன் பேசி பில்லை நகர்த்துவேன். இதற்குள் இன்னொரு 10 நாட்கள் கடந்திருக்கும். இன்னொரு பில். அதே மாதிரி செயல் முறைகள். செக்குகளை நேரடியாகவே பெற்று விடுவேன். அதிலும் தில்லி செக்குகளாகப் பெற வேண்டும். காஸியாபாத் செக்குகளுக்கு வங்கிக் கட்டணங்கள் உண்டு.

இவ்வாறு செய்யும்போது எல்லோருடனும் நல்ல நட்புறவு வைத்து கொள்வது முக்கியம். எல்லோருடனும் சுமுகமாகப் பேச வேண்டும். செக் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். இது மிக முக்கியம். காரியம் ஆனதும் நீ யாரோ நான் யாரோ என்று சென்று விடக்கூடாது. யார் எப்போது முக்கியம் என்று இப்போதே தெரியாது.

சென்னையில் நிறுவனங்கள் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். புது வாடிக்கையாளர் என்றால் நான் ஏற்கனவே கூறியபடி முன்பணம் கேட்டு பெறுவேன். கேட்கும் முறையில் கேட்டால் கிடைக்கும். நிறுவனம் என்றால் மொழிபெயர்ப்பை மின்னஞ்சலில் இணைப்பாக அனுப்புவேன். பிறகு பில்லை கூரியர் மூலம் அனுப்புவேன். தனியாராக இருக்கும் பட்சத்தில் பணம் பெற்று கொண்டுதான் மின்னஞ்சல் அனுப்புவேன். அதற்கு சம்பந்தப்பட்டவர் என் வீட்டிற்கு வருவர். பணம் கொடுத்ததும் அவர்கள் முன்னாலேயே அவர்களுக்கு இணைப்புடன் கூடிய மின்னஞ்சலை அனுப்புவேன். பிறகு அவர்கள் என் கணியிலேயே தங்கள் முகவரிக்கு மின்னஞ்சல் வந்து சேர்ந்து விட்டதா என்பதை சரிபார்க்கச் செய்வேன். பிறகு என்ன, அவர் தன்னிடத்திற்கு சென்று ப்ரின்ட் அவுட் எடுத்து கொள்ள வேண்டியதுதான்.

அவரால் நான் இருக்கும் இடத்துக்கு வர இயலவில்லையா? அதனால் என்ன. என் பெயருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிக் கொள்வேன். பிறகு வாடிக்கையாளர் இருக்கும் இடத்திற்கு சென்று பணம் பெற்றுக் கொண்டதும் அவர் கணினியிலேயே என் மின்னஞ்சலைத் திறந்து இணைப்பாகக் கொடுத்துள்ளக் கோப்பை அவருடைய வன்தகட்டில் இறக்கி விடுவேன்.

மறுபடியும் நிறுவனங்கள் பக்கம் வருவோம். பில்லை கூரியரில் அனுப்பிய பிறகு, அது வந்து சேர்ந்ததா என்பதை தொலைபேசியில் பேசி உறுதி செய்து கொள்ள வேண்டும். எப்போது பணம் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டும். இவை எல்லாவற்றையும் சுமுகமான தோரணையில் செய்ய வேண்டும். செக் கூரியரில் வந்தவுடன் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தொலைபேசி மூலம் நன்றி கூற வேண்டும்.

அவ்வளவுதான் விஷயம். நான் செயல்படும் கடந்த 30 வருடங்களாக ஓரிரு முறைகள்தான் பணம் வசூல் செய்வதில் பின்னடைவு.

இன்னொரு விஷயம். வருடம் 20,000 ரூபாய்களுக்கு மேல் பில் தொகை சென்றால், வாடிக்கையாளர் எனக்கு தரும் தொகையிலிருந்து வருமானவரி பிடித்தம் செய்யவேண்டும் என்பது சட்டம். அவ்வாறே செய்தும் விடுவார்கள். அதற்கான சான்றிதழ் படிவம் 16-ல் பெற்று, அதையும் நாம் வருமான வரி அதிகாரிகளிடம் நம் ரிடர்ன்ஸுடன் சமர்ப்பிக்க வேண்டும். பிடித்தம் செய்துவிடும் நிறுவனங்கள் சான்றிதழ் கொடுக்க அழும்பு செய்வார்கள். அவர்களிடம் விடாது அதைப் பெற வேண்டியதும் முக்கியம். அப்போது கூட சுமுகமாக நடந்து கொள்ள வேண்டும்.

பில் தொகையை கொடுப்பதில் சுணக்கம் காட்டும் வாடிக்கையாளர்கள் அவிழ்த்துவிடும் கதைகளைப் பற்றி இப்போது பார்ப்போமா?

மார்ச் 2001-ல் செய்த வேலைக்கு செக் நவம்பர் 2001-ல் தான் கிடைத்தது. வாடிக்கையாளர் சொன்ன காரணம்: அமெரிக்காவில் 9/11-ல் நடந்த குண்டு வீச்சினால் அவருக்கு அமெரிக்காவிலிருந்து வரும் செக்குகள் தாமதமாயினவாம், இது எப்படி இருக்கு? அதே வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு நான் போன் செய்து முதலாளியுடன் பேச வேண்டும் எனக் கேட்க, அவர் பாங்குக்குப் போயிருப்பதாகக் கூறப்பட்டது. அவர் மனைவி? அவரும் பாங்குக்குத்தான் அவருடன் சென்றிருக்கிறார் எனக் கூறப்பட்டது. அக்கௌண்டன்ட்? பாங்குக்குத்தான். அக்கௌண்ட்ஸ் க்ளர்க்? பாங்குக்கே. பாவம் பாங்க் மானேஜர். இத்தனை பேர் ஒன்றாக வந்தால் அவர் என்ன செய்வார்?

இம்மாதிரி புருடாக்கள் சர்வ சாதாரணம். இதையெல்லாம் மீறித்தான் நாம் குப்பை கொட்ட வேண்டும். என்ன செய்வது? அதுதான் வாழ்க்கை.

இத்துடன் இத்தொடர் முடிவுக்கு வருகிறது. இதுவரை இந்த விஷயத்தில் நான் இப்பதிவையும் சேர்த்து பத்து பதிவுகள் போட்டுள்ளேன். மீதி ஒன்பது பதிவுகளின் சுட்டி மற்றும் ஒவ்வொன்றுக்குமான சுருக்கமும் முதல் பகுதியில் கொடுக்கப்பட்டது. அவற்றில் கொடுக்கப்பட்ட வரிசை எண்கள் சுமாராக மற்றப் பகுதி எண்களுடன் ஒரு எண் வித்தியாசத்தில் ஒத்துப் போகின்றன. அவை இதோ:

1. எல்லாவற்றையும் விட முக்கியமானது புது வாடிக்கையாளரைப் பிடிப்பது. எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்? யாருக்கு எழுத வேண்டும் என்றெல்லாம் பார்க்கலாம். இதற்கு மட்டும் பின்னால் ஒரு தனிப் பதிவு தேவைப் படும்.

2. உங்களை நீங்கள் அறிய வேண்டும். அதாவது உங்களால் எது முடியும் எது முடியாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேவையில்லாது வாக்குறுதிகள் அளித்து விட்டு அவற்றை நிறைவேற்றாது போனால் உங்கள் நம்பகத்தன்மை அடிபட்டு விடும். உதாரணத்துக்கு வேலை எப்போது முடித்துத் தரவேண்டும் அன்று வாடிக்கையாளர் கூறும்போது அது உங்களுக்குத் தோதுப்படுமா என்று பார்த்தே ஒத்துக் கொள்ள வேண்டும். பத்துக்கு ஒன்பதுத தருணங்களில் அவசரம் என்று வாடிக்கையாளர் கூறுவது உதாராகத்தான் இருக்கும். அவசரமான வேலை என்றால் ஒன்றரை மடங்கு விலை என்றுக கூறிப் பாருங்கள் அவசரம் என்பது அவசரமாகவே மறைந்து விடும். இது பற்றிப் பின்னால் மேலும் விவரமாகக் கூறுகிறேன்.

3. உங்கள் விலை என்ன என்பதில் தெளிவாக இருங்கள். மொழி பெயர்ப்பாளர்கள் பலர் இதில்தான் கோட்டை விடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை வேலை சுலபமாகவே இருக்கலாம். அவர்களுக்கு மிகவும் பிடித்ததாகவே கூட இருக்கலாம். அதை எல்லாம் வாடிக்கையாளரிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. பிறகு அவர் உங்களுக்கு ஏதோ சலுகை காட்டுவது போலத் தோற்றம் வந்து விடும். இது பற்றியும் அடுத்த பதிவுகளில் மேலும் கூறுவேன்.

4. வாடிக்கையாளர்களின் வாக்குறுதிகளை அப்படியே நம்பி விடாதீர்கள். தங்களிடம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதாகவும் நிறைய வேலை கொடுக்க முடியும் என்றும் ஆசை காட்டுவார்கள். இதுவும் மேலே கூறியதை போன்று அனேகமாக ஒரு உதாராகத்தான் இருக்கும். அவர்களிடம் ஒரே ஒரு வேலை இருந்தாலும் அவ்வாறுதான் கூறுவார்கள். அவர்கள் அக்கறை முடிந்த அளவுக்கு விலையைக் குறைப்பதே ஆகும். இதை நான் என்னளவில் எவ்வாறு கையாண்டேன் என்பதையும் பின்னொருப் பதிவில் கூறுவேன்.

5. தேவையில்லாத விவரங்கள் கொடுக்காதீர்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு முழு நேர வேலை வைத்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு என்பது பகுதிநேரவேலை. அவ்வேலைக்கான வாடிக்கையாளரிடம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை ஒரு போதும் கூறக்கூடாது. அவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை அடிக்கடி கேட்பார்கள். மரியாதையுடன் அதே நேரத்தில் உறுதியுடன் தகவல் தர மறுத்து விடவும். இது பற்றி நான் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பிறகு கூறுகிறேன்.

6. எப்போதும் உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக உங்கள் தகவல் வழிகளைத் திறந்து வைக்கவும். தொலைபேசி வைத்திருப்பது மிக முக்கியம். தொலைபேசி அழைப்புகளை நீங்களே கையாளுவது முக்கியம். குழந்தைகளைத் தொலைபேசியை எடுக்க விடாதீர்கள். அது முடியாது என்றால் உங்களுக்கென்றுத் தனியாக செல்பேசி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் மட்டும் இருக்க வேண்டும். செல்பேசி "யூனிவர்செல்"பேசியாக மாறக் கூடாது. இதில் பல சாத்திய கூறுகள் உள்ளன. அவை பற்றிப் பிறகு.

7. உங்கள் அப்போதைய நிலை எதுவாக இருப்பினும் அதன் சாதகமான அம்சங்களையே வலியுறுத்தவும். 2002 வரை என்னிடம் கணினி இல்லை. இப்போது உண்டு. இரண்டு நிலைகளையும் நான் எனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டேன். அது பற்றிப் பிறகு.

8. வேலை செய்தால் மட்டும் போதாது. வரவேண்டிய தொகைகளையும் வசூலிக்கத் தெரிய வேண்டும். இது சம்பந்தமாக பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் குறித்துப் பிறகு விரிவாகப் பேசுவேன்.

மேலே கூறியவற்றையும், மேலும் கூறப் போவதைப் பற்றியும் பேச என்னுடைய யோக்கியதாம்சங்கள் என்ன? சமீபத்தில் 1975-லிருந்து நானே உணர்ந்துக் கடைபிடித்ததைப் பற்றித்தான் கூறப்போகிறேன். நான் சென்னையில் வெற்றிகரமாகச் செயல் புரியும் ஒரு மொழி பெயர்ப்பாளன் என்றுக் கூறுவதைத் தடுக்க என்னிடம் பொய்யடக்கம் இல்லை.

இஃது எத்தனை பகுதிகளாக வரும் என்பதோ, விடாமல் ஒன்றன் பின் ஒன்றாக வருமோ அல்லது விட்டு விட்டு வருமோ என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. சோ, சுஜாதா, பெரியார், பார்ப்பனீயம், இஸ்ரேல், ஹைப்பர் லிங்குகள் ஆகியவையுங்கூட நடுவில் தேவைக்கேற்ப வரலாம் என்பதையும் கூறி விடுகிறேன்.

அதே போல வரவும் செய்தன என்று நான் இப்பதிவை இற்றைபடுத்தும்போது கூறுகிறேன்.


பகுதி - 9
பகுதி - 8
பகுதி - 7
பகுதி - 6
பகுதி - 5
பகுதி - 4
பகுதி - 3
பகுதி - 2
பகுதி - 1

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/16/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 9

உங்கள் அப்போதைய நிலை எதுவாக இருப்பினும் அதன் சாதகமான அம்சங்களையே வலியுறுத்தவும். 2002 வரை என்னிடம் கணினி இல்லை. இப்போது உண்டு. இரண்டு நிலைகளையும் நான் எனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டேன். அது பற்றிப் இப்போது பேசுவோம்.

என் மொழிபெயர்ப்பு வேலைகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 1975 முதல் 1981 வரை சென்னையில் செயல்பாடு, பிறகு 2001 வரை தில்லி வாசம், தற்சமயம் திரும்ப சென்னையில். முதல் ஆறு வருடங்களுக்கு வேலை மந்தகதியிலேயே சென்றது. மத்தியப் பொதுப்பணி துறையில் இளநிலைப் பொறியாளராகவும் இருந்தேன். வேலை பளு மிக அதிகம். தினமும் நங்கநல்லூரிலிருந்து ஆவடிக்கு செல்ல வேண்டும். ஒரு வழிப்பயண நேரமே கிட்டத்தட்ட இரண்டு மணிகள். சென்ட்ரலிலிருந்து ஆவடி வரையானப் பயணம் மட்டும் ஒரு மணிநேரம் எடுக்கும். மின்ரயில் இன்னும் புழக்கத்துக்கு வரவில்லை. வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் மொழிபெயர்ப்பு வேலையைத் துவங்கி விடுவேன். அலுவலகத்திலும் மதிய உணவு நேரத்தில் மொழிபெயர்ப்பு வேலைதான். எங்கள் அலுவலக குமாஸ்தாவே தட்டச்சு செய்து கொடுத்து விடுவார். அவருடைய தொகையை உடனுக்குடன் செட்டில் செய்துவிடுவேன்.

1981-ல் தில்லி சென்றேன். உதவிப் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் வேலை ஐ.டி.பி.எல்லில். இந்த அனுபவத்தைப் பற்றி ஏற்கனவே முந்தையப் பதிவில் எழுதி விட்டேன். இப்போது, இருக்கும் நிலையை எவ்வாறு தனக்கு சாதகமானதாக மாற்றிக் கொண்டு மற்றவர்களையும் அவ்வாறே கருத வைப்பது என்பதைப் பார்ப்போம்.

தில்லியில்தான் என்னுடைய இந்த சைட் பிஸினஸ் மிக விரிவடைந்தது. அப்போதெல்லாம் இம்மாதிரி வேலைகள் தில்லி மற்றும் பம்பாயில்தான் மிக அதிகமாக தேவைப்பட்டன. தில்லியில் வேலைகளைத் தட்டச்சு செய்து தரவேண்டும் அதை சமாளித்ததை ஏற்கனவே கூறிவிட்டேன். 1995-க்குப் பிறகு கணினி உபயோகம் அதிகரிக்க ஆரம்பித்தது. வாடிக்கையாளர்கள் என்னிடம் கணினியில் தட்டச்சு செய்து பிளாப்பியில் மொழிபெயர்ப்புகளைத் தருமாறு கேட்டனர். அப்போதைய நிலையில் என்னால் அது முடியாத காரியம். சொல்லப்போனால் சென்னைக்கு 2001-ல் திரும்ப வந்தவுடன்தான் 2002-ல் கணினியை வாங்கவே முடிந்தது. அது வரை என்ன செய்தேன்? அதுதான் தமாஷ்.

வாடிக்கையாளரின் கண்ணைப் பார்த்து சீரியஸாகப் பேச வேண்டும். "ஐயா, த்ங்கள் வேலைகளின் ரகசியம் காப்பாற்றப்பட வேண்டாமா?" என்று கேட்க, எந்த வாடிக்கையாளர்தான் அதை இல்லை என்று மறுப்பார்? ஆகவே அவரிடம் கூறுவேன்: "உங்கள் அலுவலகத்துக்கு வந்து நேரடியாகவே மொழிபெயர்ப்பை கையெழுத்தில் தொடங்கி விடுகிறேன். நான் வேலையை ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் தட்டச்சளரிடம் நான் எழுதிய காகிதங்களை சேர்ப்பித்து கொண்டேயிருங்கள். மாலை 4.30 மணிவாக்கில், தட்டச்சுகளின் ப்ரின்ட்-அவுட்டுகள் என்னிடம் வந்தால் அவற்றை நான் பிழைதிருத்தி விடுகிறேன். அன்றைய வேலை உங்கள் வன்தகட்டில் ஏறி விடும். வேறு யாருடையக் கணினியிலும் இருக்காது." சொல்லும் விதத்தில் சொன்னால் வாடிக்கையாளர் நிச்சயம் ஒத்துக் கொள்வார். நானும் ஏற்கனவே 1993-ல்விருப்ப ஓய்வு ஐ.டி.பி.எல்லிலிருந்து பெற்று கொண்டு விட்டதால் வாடிக்கையாளரின் அலுவலகம் செல்ல ஒரு தடையும் எனக்கு இருந்ததில்லை. என் மாதிரி வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு நேராக வந்து வேலை செய்யும் அளவுக்கு அப்போது தில்லியில் ஒரு ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்கள் கிடையாது. பிறகு என்ன, என் காட்டில் மழைதான்.

சென்னைக்கு திரும்பி கிட்டத்தட்ட ஒரு வருடம் கயித்துத்தான் கணினி வாங்கினேன். அது வரைக்கும் தில்லியில் உள்ள என் வாடிக்கையாளருக்கு வேலைகளைத் தட்டச்சு செய்வித்து மின்னஞ்சல் இணைப்பாக கோப்புகளை அனுப்ப வேண்டியிருந்தது. நல்ல வேளையாக சென்னையில் தட்டச்சு செய்ய ஆட்களுக்குப் பஞ்சம் இல்லை. கணினி வாங்கிய பிறகு நிலமையில் மறுபடி மாற்றம். எல்லாவற்றையும் மின்னஞ்சல் மூலம் அனுப்ப முடிந்தது. பிளாப்பி கூட கிடையாது. என்னைப் பொருத்தவரை தொழில் நுட்பத்தில் ஒரு பெரிய தாவல் என்று கூற வேண்டும். ஆகவே இப்போதெல்லாம் வாடிக்கையாளர்களிடம் பேசும் விஷயத்தின் ரேஞ்சே தனி. வாடிக்கையாளர்கள் தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும் அல்லது பிளாப்பியில் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறினால், அவரிடம் நான் அதை விட சிறந்தமுறையில் சேவை தர முடியும் என்று கூறிவிடுகிறேன்.

சரி, இப்போது ஒரு வாடிக்கையாளர் தன் ஆவணங்களின் ரகசியம் பாதுக்காப்பதைப் பற்றிக் கூறினால் அதை எப்படி எதிர்கொள்வது? ரொம்ப சிம்பிள் ஜென்டில்மென். இப்போதும் வாடிக்கையாளர் அலுவலகத்துக்கே செல்வேன். நான் கேட்பதெல்லாம் ஒரு கணினி, அகலப்பட்டை இணையத் தொடர்பு ஆகியவை மட்டுமே. விருவிருவென்று வேலையைத் துவங்க வேண்டியதுதான். வாடிக்கையாளர் ஆனந்தக் கண்ணீர் விடாத குறைதான். சம்பந்தப்பட்ட மொழிக்கான ஆன்லைன் அகராதி, கூக்ளே ஒரு சாளரத்தில். தூள் கிளப்ப வேண்டியதுதான். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் சென்னையில் என்னளவுக்கு வேகமாக ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் வாடிக்கையாளர் அலுவலகத்துக்கே வந்து செய்பவர்கள் இல்லை என்று உறுதியாகக் கூறுவேன். கூடவே பொறியாளராக 23 வருடங்கள் வேலை செய்த அனுபவம் வேறு.

இன்னும் கணினி சம்பந்தமாக புது அனுபவங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றையும் தொழிலில் பிரயோகிப்பதால் புது வாடிக்கையாளர்களைப் பிடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலே கூறிய நேர்மறை விஷயங்கள் என்னை வாடிக்கையாளர்களுடன் தைரியமாகப் பேரம் பேசுவதில் எல்லா வகையிலும் துணையாக உள்ளன.

என்னுடைய அனுபவங்களைக் கூறும்போதும் அவற்றை இவ்வாறு வெளியிடுவேன். பொறியாளராக 23 வருடம் அனுபவம், பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக 27 வருடம் அனுபவம், ஜெர்மன் மொழிபெயர்ப்பாளராக 30 வருட அனுபவம் ஆக 80 வருடங்கள் கூட்டு அனுபவம், ஆனால் வயதோ 59 என்பேன். எப்படி என்று வாடிக்கையாளர் கேட்க, ஓவர்டைம் என்பேன் சிரிக்காமல்.

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதையே வலியுறுத்துங்கள். என்ன செய்ய முடியாது என்பதை வெறுமனே ஒரு முறை கூறி அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கவும். அது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போல நடந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/09/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 8

எப்போதும் உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக உங்கள் தகவல் வழிகளைத் திறந்து வைக்கவும். தொலைபேசி வைத்திருப்பது மிக முக்கியம். தொலைபேசி அழைப்புகளை நீங்களே கையாளுவது முக்கியம். குழந்தைகளைத் தொலைபேசியை எடுக்க விடாதீர்கள். அது முடியாது என்றால் உங்களுக்கென்றுத் தனியாக செல்பேசி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் மட்டும் இருக்க வேண்டும். செல்பேசி "யூனிவர்செல்"பேசியாக மாறக் கூடாது. இதில் பல சாத்திய கூறுகள் உள்ளன.

இது மிகவும் முக்கியமான தேவையாகும். சந்தை உலகில் இப்போதெல்லாம் அவசரம் அதிகமாகி விட்டது. வாடிக்கையாளர்கள் உங்களை எப்போதும் தொடர்பு கொள்ள ஏதுவாக நீங்கள் ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். நல்லவேளையாக இப்போதெல்லாம் தொலைபேசி இணைப்புகள் உடனுக்குடன் கிடைத்து விடுகின்றன. நான் தொழில் ஆரம்பித்தபோது அதற்கு வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் அப்போதெல்லாம் மொழிபெயர்ப்பு வேலைகள் இன்ஸ்டாக் எனப்படும் அரசுசார் அமைப்பின் மூலமாகத்தான் கிடைத்தன. அவர்கள் பதிவுத் தபாலில் வேலை அனுப்புவார்கள். அவற்றை மொழிபெயர்த்து தட்டச்சு செய்து இரண்டு காப்பிகள் தர வேண்டும். அது ஒரு காலம். கணினியில் தட்டச்சு செய்வது பற்றியெல்லாம் கனவிலும் நினைத்ததில்லை.

சரி, நிகழ்காலத்துக்கு வருவோம். நான் கூறப்போவது எவ்வளவு பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் எதற்கும் கூறிவிடுகிறேன். வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை எதிர்க்கொள்ளுதல் மிகவும் முக்கியம். இதற்கெல்லாம் தனி ஆளா வைக்க முடியும்? மனைவி இருக்கிறார்தான். இருந்தாலும் அவர் எங்காவது வெளியில் செல்ல நேரிடலாம். அப்போது அழைப்புகள் யாரும் ஏறுக்கொள்ள இல்லாததால் வீணாகலாம். அதனால் வரும் நட்டம் கணக்கிட முடியாது. இதற்கு நான் மேற்கொள்ளும் முறை இதோ.

நான் எப்போது வெளியில் கிளம்பினாலும் என்னுடையத் தொலைபேசியில் கால் ட்ரான்ஸ்பரை செயலாக்கி விடுவேன். என் தொலைபேசிக்கு வரும் அழைப்புகள் என் செல்பேசிக்கு திருப்பப்படும். நான் இந்தியாவில் எங்கிருந்தாலும் அவை எனக்கு வந்து விடும். என்ன, நான் எங்கிருக்கிறேனோ அந்த இடத்தில் சிக்னல் இருக்க வேண்டும் அவ்வளவுதான். அது சாதாரணமாக எல்லா இடத்திலும் கிடைக்கும். ஆகவே வாடிக்கையாளரின் அழைப்புகளை நான் தவற விட்டேன் என்பதெல்லாம் இப்போதில்லை. இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள தொலைபேசி அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். டாடா இண்டிகாம் தொலை பேசிகளில் இது ஏற்கனவே உள்ளது. ஆகவே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்கள் தொலைபேசியில் 114 டயல் செய்து கூடவே நீங்கள் எந்த என்ணுக்கு அழைப்புகளை திசைதிருப்ப வேண்டுமோ அந்த என்ணை விடாது டயல் செய்யவும். அதாவது 13 எண்கள் ஒரேயடியாக டயல் செய்ய வேண்டும். ஒரு நீண்ட ஒலி கேட்கும். அப்போது உங்கள் கால் ட்ரான்ஸ்பர் ஏற்கப்பட்டது என்று பொருள். தொலைபேசியை ஒரு தடவை கீழே வைத்துவிட்டு மறுபடி எடுத்து கேட்டால், ஒரு வித்தியாசமான டயல் டோன் கேட்கும். இந்த நிலையிலும் நீங்கள் உங்கள் த்ப்லைபேசியிலிருந்து மற்ற இடங்களுக்கு டயல் செய்து பேசலாம். கால் ட்ரான்ஸ்பரை எடுக்க 115 டயல் செய்தால் போதும். நான் குடும்பத்துடன் தமிழ்நாடு டூர் செல்லும்போது வீட்டில் இருக்கும் இரண்டு தொலைபேசிகளுக்கும் கால் ட்ரன்ஸ்பர் செய்து விடுவேன். நிற்க.

உங்கள் செல்பேசி உங்களிடம்தான் இருக்கவேண்டும், யாரிடமும் தரக்கூடாது. இதில் நான் மிக கடுமையாக இருப்பேன். இல்லாவிட்டால் முக்கிய அழைப்புகள் வரும்போது யாராவது தேவையில்லாமல் உங்கள் செல்பேசியில் பேசிக் கொண்டிருப்பார்கள். இதில் முகதாட்சண்யத்துக்கு இடமில்லை. செல்பேசி செல்பேசியாக இருக்கட்டும் யூனிவெர்செல்பேசியாக வேண்டாம். அதே போல உங்கள் தொலைபேசிக்கு வரும் அழைப்புகளை நீங்கள்தான் எதிர்கொள்ள வெண்டும். கண்டிப்பாக குழந்தைகள் எடுக்கக் கூடாது. தொலைபேசியில் பேசும்போது மனதை லேசாக்கி பேசவேண்டும். மிருதுவாகப் பேசுதல் முக்கியம். கோபம் கூடவே கூடாது.

மீதியை அடுத்தப் பதிவில் பர்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/05/2005

வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள் - 7

நான் முதல் பதிவில் கூறிய அடுத்த விஷயத்தை இப்போது பார்ப்போம். நான் கூறியது:

"தேவையில்லாத விவரங்கள் கொடுக்காதீர்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு முழு நேர வேலை வைத்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு என்பது பகுதிநேரவேலை. அவ்வேலைக்கான வாடிக்கையாளரிடம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை ஒரு போதும் கூறக்கூடாது. அவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை அடிக்கடி கேட்பார்கள். மரியாதையுடன் அதே நேரத்தில் உறுதியுடன் தகவல் தர மறுத்து விடவும். இது பற்றி நான் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பிறகு கூறுகிறேன்."

ஐ.எஸ்.ஓ. 9001 பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே. அதில் கூறப்பட்ட முக்கிய விஷயங்களில் ஒன்று தகவல் மேலாண்மை ஆகும். கம்பெனியில் ஒருவரிடமோ அல்லது ஒரு குழுவிடமோ வேலை கொடுக்கும்போது அவ்வேலைக்குத் தேவையான எல்லா தகவல்களையும் தர் வேண்டும் ஆனால் தேவைப்படாத தகவல்கள்? மூச், தரவே கூடாது. இது என்னப் புதுக் கதை என்று வியப்பவர்களுக்கு: தகவல் என்பது சக்தி. தேவையற்றவருக்கு கொடுத்தால் கெட்டது குடி. இதில் மொழிபெயர்ப்பாளர் எங்கு வருகிறார் என்று கேட்கிறீர்களா? மேலே கூறிய சினேரியோவைப் பாருங்கள்.

உங்களிடம் உள்ளத் தகவல்கள் என்னென்ன?

நீங்கள் பொறியாளர். எவ்வளவு வருட அனுபவம்? உங்களுக்குத் தெரிந்த மொழிகள் என்னென்ன? ஒவ்வொன்றிலும் எவ்வளவு ஆண்டுகள் அனுபவம்? எவ்வளவு வேகமாக மொழிபெயர்க்க இயலும். ஒரு குறிப்பிட்ட வேலையை எப்போது முடித்துக் கொடுக்கத் தோதுப்படும்.

இவையெல்லாம் வாடிக்கையாளரிடம் கொடுக்க வேண்டுமா? கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். அவையும் உண்மையானத் தகவல்களாக இருக்க வேண்டும்?

கொடுக்கக் கூடாதத் தகவல்கள் என்ன என்பதைப் பார்ப்போம். நான் மேலே கூறியபடி நீங்கள் முழுநேர வேலையிலும் இருக்கிறீர்கள். எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ள பல வாடிக்கையாளர்கள் முயலுவர். இதைத் தெரிந்து என்ன நல்லது ஆகப் போகிறது? ஒன்றுமேயில்லை என்பதுதான் பதில்.

என்ன கெட்டது ஆகப் போகிறது என்றக் கேள்விக்கோ அனேக பதில்கள் உள்ளன. ஒரு தகவலைக் கொடுத்தப் பிறகு அது உங்கள் கட்டுப்பாட்டில் இனிமேல் இருக்காது. அதற்கு மாறாக உங்கள் தலை மேல் தொங்கும் கத்தியாகிவிடும். வாடிக்கையாளர் உங்களை பயமுறுத்த ஓர் ஆயுதத்தைத் தேவையில்லாமல் நீங்களே அவர் கையில் கொடுக்கிறீர்கள். வேண்டுமென்றோ அல்லது எதேச்சையாகவோ கூட உங்கள் முழுநேர வேலை கொடுத்த முதலாளிக்கு நீங்கள் செய்யும் சைட் பிசினெஸ் தெரிய வந்தால் வீட்டிற்கு அனுப்புமளவுக்கு அது போய் விடலாம். அப்படித்தான் என் கம்பெனியில் ஒரு ஆடிட்டருக்கு வேலை போயிற்று.

என் விஷயம்? இருவருக்கே என் கம்பெனியில் தெரியும். ஒருவர் டைப்பிஸ்ட், இன்னொருவர் அந்த டைப்பிஸ்டின் அடுத்த மேல்நிலையில் உள்ள அதிகாரி. அவர்களுக்குக் கூட நான் வெளிவேலை செய்கிறேன் என்பதுதான் தெரியுமே ஒழிய, எங்கிருந்து அவற்றைக் கொண்டு வருகிறேன் என்பது தெரியாது. ஏனெனில் அது அவர்களுக்குத் தேவையற்றத் தகவல். டைப்பிஸ்ட் இதில் எங்கு வந்தார்? என் மொழிபெயர்ப்புகளைத் தட்டச்சு செய்வது அவரே. அவருக்கு ஒரு பக்கத்துக்கு இத்தனை ரூபாய் என்று ஏற்கனவே பேசி வைத்துக் கொண்ட விலையில் எவ்வளவு பக்கங்கள் தட்டச்சு ஆகிறதோ அதற்கான முழுதொகையையும் உடனுக்குடனே செட்டில் செய்துவிடுவேன். ஆகவே அவர் நான் செய்யும் வேலை குறித்து வாய் திறக்கப் போவதில்லை. அந்த டைப்பிஸ்டின் மேலதிகாரி? இது சுவாரஸ்யமானது. முதலில் அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அதை விட டைப்பிஸ்டுக்கு வேலை கொடுக்குமுன் அவரிடம் நான் கம்பெனி வேலையில் ஒரு பாக்கியும் இருக்கக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டேன். ஒரு தற்பாதுகாப்பு என்று வைத்து கொள்ளுங்களேன். ஆக நடந்தது என்ன? மேலதிகாரி கொடுக்கும் காகிதங்கள் கடகடவென்றுத் தட்டச்சுச் செய்யப்பட்டு, அவர் மேஜைக்குத் திரும்பச் சென்றன. அவருக்கு அதில் மிக்க மகிழ்ச்சி. என் வேலையைச் செய்வதால் அவர் வேலை தாமதமின்றி நடந்தது. அவரும் என்னைப் பற்றி ஒன்றும் கூறப் போவதில்லை. உண்மையைக் கூறப்போனால் நான் 10 நாள் விடுமுறைக்குப் பிறகு வேலைக்குச் சென்ற போது என்னை உற்சாகமாக வரவேற்றது அந்த டைப்பிஸ்டும் அவர் மேலதிகாரி மட்டும்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆக ஐ.டி.பி.எல்லில் இருந்த 12 வருடங்களும் கனவுபோலக் கடந்தன.

டில்லிக்கருகில் இருந்த நோய்டாவில் ஒரு வாடிக்கையாளர். முதலாளியே என்னை நான் எங்கே வேலை செய்கிறேன் என்பதையெல்லாம் ஒன்றுமே கேட்கவில்லை. கீழ்மட்டத்தில் இருக்கும் பொறியாளர் ஒருவர் ரொம்பவும் தொந்திரவு கொடுத்தார். நான் எங்கெ வேலை செய்கிறேன் என்பதை அடிக்கடி என்னிடம் கேட்டு வந்தார். நானும் பொறுமையாக அவருக்கு தகவல் எதையும் கொடுக்க மறுத்தேன் "ராகவன், நான் உங்கள் நண்பன், என்னிடம் கூறக் கூடாதா?" என்று கேட்டார். எனக்கு கோபம் வந்தது. இருந்தாலும் அதை வெளியில் காண்பிக்காமல் அவரிடம் கூறினேன். "ஐயா, நீங்கள் என் நண்பனல்ல விரோதி" என்று. "என்ன அப்படிக் கூறிவிட்டீர்கள்" என்று கேட்டதற்கு "அப்படித்தான்" என்று பதில் கூறி இடத்தைக் காலி செய்தேன் விருப்ப ஓய்வு பெர்று கொண்டப் பிறகு அந்த அலுவலகம் சென்றேன். அப்போது அவர் மறுபடியும் நான் வேலை செய்யும் இடத்தைப் பற்றிக் கேட்டபோது உண்மையைக் கூறினேன். நான் அந்த வேலையில் இல்லை என்பதையும் கூறினேன். அப்போது அவர் கூறியது என்னை வியப்பிலாழ்த்தியது. "அடேடே ஐ.டி.பி.எல்லா? அங்கேதானே என் மனைவியின் தம்பி வேலை செய்கிறான் என்று அவன் பெயரைக் கூற அவன் எனக்கும் தெரிந்தவன்! முன்னாலேயே உண்மையைக் கூறியிருந்தால் அதோகதிதான் என்று நினைத்துக் கொண்டேன்.

தெரிவிக்க வேண்டியத் தகவல்கள், தெரிவிக்கக் கூடாதத் தகவல்கள் ஆகியவை அதே கேடகரியில் இருப்பதில்லை; அவை மாறக்கூடியவை. இப்போதெல்லாம் ஐ.டி.பி.எல்லில் முழுநேர மொழிபெயர்ப்பாளராக இருந்ததைச் சொல்வது மிக முக்கியம். புது வாடிக்கையாளருக்கு நம் மேல் அதிக நம்பிக்கை வரும்.

அடுத்த விஷயம் அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/27/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 6

மற்றத் தொழில் நிபுணர்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால் மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு பிரச்சினை உண்டு. தங்கள் விலை என்ன என்றுக் கூறுவதில் சற்றே கூச்சம் அவர்களுக்கு உண்டு. இதனால் பல வாடிக்கையாளர்கள் அவர்களைக் குறைந்தவிலைக்கு ஒப்பந்தம் செய்து விடுகிறார்கள். முழு நேர வேலைகளில் கூட மொழிபெயர்ப்பாளர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். மேலும் ஒரு நிறுவனத்தில் ஆட் குறைப்பு வரும்போது சீட்டுக் கிழிவது அவர்களுக்கே முதலில் நடந்து விடுகிறது. முக்கியமாக, புதிதாக இத்தொழிலுக்கு வருபவனின் மனதில் மிகுந்த கலக்கம் ஏற்படுகிறது. இவை எல்லாம் சேர்ந்து அவன் அகப்பட்ட விலைக்கு ஒத்துக் கொண்டுவிடுகிறான். சாதாரணமாகவே பிறருடன் சேர்ந்து பழகாது அவன் படிப்பதிலேயே காலம் கழிப்பதும் ஒரு முக்கியக் காரணமே. இதையெல்லாம் மீறி ஒருவன் வரும்போதுதான் வெற்றிபெற முடியும். அப்போது எதிர்க்கொள்ளவேண்டியவை வாடிக்கையாளர்களின் சவடால் வாக்குறுதிகளே.

அவற்றை அப்படியே நம்பி விடாதீர்கள். தங்களிடம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதாகவும் நிறைய வேலை கொடுக்க முடியும் என்றும் ஆசை காட்டுவார்கள். ஆகவே குறைந்தவிலைக்கு ஒத்துக் கொள்ளச் சொல்வார்கள். இது அனேகமாக ஒரு உதாராகத்தான் இருக்கும். அவர்களிடம் ஒரே ஒரு வேலை இருந்தாலும் அவ்வாறுதான் கூறுவார்கள். அவர்கள் அக்கறை முடிந்த அளவுக்கு விலையைக் குறைப்பதே ஆகும். இதை நான் என்னளவில் எவ்வாறு கையாண்டேன் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஆயிரக்கணக்கானப் பக்கங்கள் என்றால் ஒரு முழுநேர மொழிபெயர்ப்பாளனுக்கு ஏற்ற வேலை. ஆனால் எனக்கு முழுநேர வேலையில் நாட்டம் இல்லை. ஆகவே வாடிக்கையாளரிடம் வாரத்துக்கு மூன்று நாட்கள் தினம் 8 மணிநெரம் வாடிக்கையாளர் அலுவலகத்துக்கே வந்து வேலை செய்வதாகவும், மணிக்கு இவ்வளவு ரூபாய் கொடுத்துவிடவேண்டியது என்று நான் முதலில் அடியெடுத்துக் கொடுப்பேன். ஒரு வருட ஒப்பந்தம் போடலாம் என்றும், ஒரு வருடத்துக்கு 156 நாள் அதாவது மாதத்துக்கு 13 நாள் என்று கணக்கு வரும் என்பேன். திடுக்கிடும் வாடிக்கையாளர் உடனே அவ்வளவு நாட்களுக்கு வேலை இல்லை என்று மழுப்புவார். உடனே வாரத்துக்கு இரு நாட்கள், அதுவும் இல்லையென்றால் வாரத்துக்கு ஒரு நாள் என இறங்கி வருவேன். வாடிக்கையாளரால் அதுவும் முடியாது போனால் அவரிடம் மரியாதையாக விலையைக் குறைக்க மறுத்து விடுவேன். பிறகு என்ன, பேரம் வேறு தளத்தில் தொடரும்.

ஒரு வாடிக்கையாளர் என்னிடம் தான் கேட்ட விலைக்கு வேலை செய்ய மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் தயாராக இருக்கும்போது எனக்கு ஏன் அதிக விலை கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அவருக்கெல்லாம் அதே தொனியில்தான் பதிலளிக்க வேண்டும். ஆகவே கூறினேன்: "என்னுடைய விலைக்கு என் மற்ற வாடிக்கையாளர்கள் வேலை கொடுக்கும்போது, உங்களுக்கு ஏன் நான் குறைந்த விலையில் வேலை செய்ய வேண்டும்?" வேலை கொடுத்தார்.

நான் மேலும் கூறுவேன். ஒரு முறை ஒரு வாடிக்கையாளருக்குக் குறைந்த விலைக்கு ஒத்துக் கொண்டு விட்டால், அவரிடம் பிறகு விலையை அதிகரிப்பது மிகக் கடினமே. ஒரு வாடிக்கையாளர் நம்மிடம் திரும்ப வருவதற்கானக் காரணம் நம் வேலை சுத்தம் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும். விலை குறைவு என்பதற்காக அல்ல என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

மேலும் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/22/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 5

நான் பகுதி - 1-ல் ஏற்கனவே கூறியது:"உங்கள் விலை என்ன என்பதில் தெளிவாக இருங்கள். மொழி பெயர்ப்பாளர்கள் பலர் இதில்தான் கோட்டை விடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை வேலை சுலபமாகவே இருக்கலாம். அவர்களுக்கு மிகவும் பிடித்ததாகவே கூட இருக்கலாம். அதை எல்லாம் வாடிக்கையாளரிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. பிறகு அவர் உங்களுக்கு ஏதோ சலுகை காட்டுவது போலத் தோற்றம் வந்து விடும். இது பற்றிப் பின்னால் மேலும் விவரமாகக் கூறுகிறேன்"

உங்களிடம் ஒரு திறமை உள்ளது, அதாவது மொழிபெயர்ப்பு. வாடிக்கையாளரிடம் அது இல்லை அல்லது இருப்பினும் நேரம் இல்லை. ஆகவே உங்களைக் கூப்பிட்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை நிலை. இப்போது அதற்கான விலை நிர்ணயிப்பதுதான் செய்ய வேண்டும். சில வாடிக்கையாளர்கள் கூறலாம்: "உங்களுக்கு பிடித்த வேலையிது. ஆகவே இதைச் செய்வதற்காக அதிகப் பணம் கேட்பது இக்கலையைக் கொச்சைப்படுத்துவதாக அமையும் அல்லவா?" அதற்கெல்லாம் அசரக் கூடாது. வாடிக்கையாளருக்கு அவர் பணச்செலவைக் குறைப்பதே நோக்கம். இதை நான் மரியாதையாகப் பேசியே ஒரே வாதத்தில் தகர்த்து விடுவேன்: "ஐயா நீங்கள் கலையை ஆராதிப்பவராகவே இருங்கள். நான் ஒரு வியாபாரி, அவ்வளவுதான்." அதற்கு மேல் இந்தத் தடத்தில் எந்த வாடிக்கையாளரும் மேலே செல்ல மாட்டார்கள். ஏனெனில் அவரும் உண்மையில் ஒரு வியாபாரிதானே!

வாடிக்கையாளரின் அடுத்தத் தாக்குதலுக்கு வருவோம். ஒரு 10 பக்கக் கட்டுரையில் சில வாக்கியங்கள் திரும்பத் திரும்ப வரும். முக்கியமாக பேட்டன்டுகளில் பார்க்கலாம். ஒரு விஷ்யத்தையே பல உதாரணங்களுடன் விளக்குவார்கள். மூக்கியமாக பேட்டன்ட் க்ளைம்ஸில் முதலில் சொன்னவை அனைத்தும் வார்த்தை பிசகாமல் அப்படியே வரும். இதை வாடிக்கையாளர் அறிந்து கொண்டால் உடனே திரும்ப வரும் வாக்கியங்களுக்கு பணம் கேட்கக் கூடாது என்பார்கள். ஏனெனில் அவை நமக்கு சுலபமாம். இந்தக் கதை என்னிடம் நடக்காது. ஒரேயடியாக இக்கோரிக்கையை மறுத்து விடுவேன். திரும்ப வரும் வாக்கியங்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு கட்டுரையாக வந்ததை மொழிபெயர்க்க அதற்கான மொத்த விலையும் வேண்டும் என்று கூறி விடுவேன். நான் குறிப்பிடும் விலை ஒரு வார்த்தைக்கு இவ்வளவு என்ற அடிப்படையில்தான். வார்த்தைகளை எண்ண என்றே தனி மென் பொருட்கள் உள்ளன. அதைத்தான் நான் அடிப்படையாக எடுத்துக் கொள்வது. இதிலும் நிலைமைக்கேற்ப மாறுதல்கள் வரும், அவையெல்லாம் இப்போதைய பதிவின் வீச்சுக்கு அப்பாற்பட்டவை. ஆக வாடிக்கையாளரின் இந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்படவேண்டியதே.

அதைச் செய்யும் போதும் வார்த்தைகளில் கடுமையிருக்கக்கூடாது. சிரித்துக் கொண்டே உறுதியாகக் கூறிவிடலாம். அவர் ஒத்துக்கொள்ளவிடினும் சுமுகமாகவே அவ்விடத்தை விட்டு அகலுதல் நலம். அப்போதைக்கில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்?

வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப விலைகளை கோட் செய்வது முக்கியம். உதாரணத்துக்கு ஒரு வாடிக்கையாளர் என்னிடம் 100 பக்கம், மற்றும் 30,000 வார்த்தைகள் உள்ள ஒரு கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதை அவருக்கு வாய்மொழியாகக் கூற வேண்டும் என்றார். இதற்கு வார்த்தை சார்ந்த விலை சொல்ல இயலாது. அவரிடம் நான் இதற்கு ஒரு மணிக்கு இவ்வளவு ரூபாய்கள் என்ற அளவில்தான் பேச முடியும். இம்மாதிரியான நிலைக்கு நான் கோட் செய்வது, மணிக்கு ---- ரூபாய்கள் + போக வர கால் டாக்ஸி கட்டணம் + காப்பி, டீ மற்றும் சாப்பாடு அந்தந்த நேரத்துக்கு, மற்றும் முக்கியமாக குறைந்தப் பட்சமாக இரண்டு மணிநேரத்துக்கு சார்ஜ். வாடிக்கையாளருக்கும் சுமாராக எத்தனை குறைந்தபட்ச செலவு என்பது புரிந்து விடும். எவ்வளவு நேரத்தில் 100 பக்கத்தையும் கவர் செய்ய முடியும் என்பதை முதலிலேயே கூற இயலாது, ஏனெனில் வாடிக்கையாளரின் புரிதலும் நேரம் எடுத்துக் கொள்ளும், அது என் கட்டுப்பாட்டில் இல்லை.

உங்களில் ஒரு சிலர் நினைக்கலாம், இது என்ன இவன் சாப்பாட்டைப் பற்றியெல்லாம் பேசுகிறான் என்று. அதுவும் முக்கியமே. என் நண்பன் ஒருவன் அது பற்றிப் பேசாததால் ரொம்ப லோல் பட்டான். திருச்சிக்கு அழைதுச் சென்றனர் அவனை. வாடிக்கையாளருடன் சேர்ந்து ஒரு ஹோட்டலில் தங்கும்படியாயிற்று. அவனுடைய பில்லை அவனே செட்டில் செய்ய நேர்ந்ததில் அவனுக்கு நிகர நட்டம் ரூ. 200. (இது 1981-ல்). மணிசார்ந்த விலையும் ஒரு அடிப்படையில்தான் கூறவேண்டும். ஒரு மணிக்கு என்னால் எவ்வளவு வார்த்தைகள் எழுத முடியும் என்று பார்த்து அத்துடன் வார்த்தையின் விலையைப் பெருக்கினால் தீர்ந்தது விஷயம்.

மற்றவை அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/18/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 4

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 4
மேலே செல்வதற்கு முன்னாலேயே ஒன்றைக் கூறி விடுகிறேன். நான் கூறியவை, கூறவிருப்பவை எல்லாமே எல்லோருக்கும் பொருந்தும். நான் என்னுடைய அனுபவத்திலிருந்துக் கூறுவதால் மொழி பெயர்ப்பு வேலை முன்னிறுத்தப்படுகிறது, அவ்வளவுதான். படிப்பவர்கள் தங்கள் தேவைக்கேற்ப அவற்றை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

நிறுவனத்துக்கு கடிதம் எழுதி அவர்களும் உங்களை அழைத்துள்ளனர். இப்போது நிறுவனத்தினுள்ளே இருக்கிறீர்கள். சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்கள். காத்திருத்தலும் ஒரு கலையே. சிலர் தேவையில்லாது டென்ஷன் அடைகிறார்கள். நகத்தைக் கடிப்பது, அடிக்கடி கடிகாரத்தைப் பார்ப்பது போன்ற சேஷ்டைகள் இருக்கும். அவற்றையெல்லாம் தவிர்க்கவும்.

நான் அவ்வாறு காத்திருக்கும் நேரத்துக்காகவே கையில் ஒரு குண்டு புத்தகம் எடுத்துச் செல்வேன். நான் பாட்டுக்கு படித்துக் கொண்டிருப்பேன். நேரம் போவதே தெரியாது. அவ்வாறு படித்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் என்னப் பேச வேண்டும் என்பதை மனத்துக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பேன். நிர்வாகி எம்மாதிரியெல்லாம் கேள்விகள் கேட்பார், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்றும் யோசிப்பேன். நானே சில ஓபனிங்குகளைக் கொடுத்துப் பேச்சுவார்த்தையை ஒரு மாதிரி என் கட்டுக்குக் கீழே கொண்டு வர ஏற்பாடு செய்வேன்.

நிறுவனத்தில் இருக்கும் சூழ்நிலையையும் பார்க்க வேண்டும். யாரைப் பார்த்துப் பேச நேரினும் ஒரு புன்னகையுடன் பேச்சைத் துவங்கல் நலம். அது ரிஷப்ஷனிஸ்டாகக் கூட இருக்கலாம். நிறுவனத்துடன் வேலைத் தொடர்பைப் பெற்றப் பிறகு, எல்லார் தயவும் தேவைப்படும். ஆகவே சுமுகமாக இருப்பதை முதலிலேயே துவங்கல் நலம்.

இப்போது அலுவகங்களில் புகை பிடிப்பது அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் எண்பதுகளில் நிலை வேறு. நிர்வாகி சிகரெட்டை ஆஃபர் செய்தால் முதல் தடவை நான் மறுப்பதில்லை. இதற்காகவே என்னுடைய சிகரெட் கோட்டா 12 - ஒரு வருஷத்துக்கு. அவர் சிகரெட்டை நீட்ட அதை ஏற்றுக் கொண்டாலே ஒரு சுமுக உறவு ஏற்படுகிறது. இதில் ஒரு சூட்சுமம் உள்ளது. சாதாரணமாக சிகரெட் புகைப்பவர்கள் அதை எப்படியாவது விட வேண்டும் என்ற அழுத்தத்தில் இருப்பார்கள். அப்போது நான் சிகரெட்டே பிடிப்பதில்லை என்று கூறினால் தேவையில்லாது அவரை நான் மட்டம் தட்டுவதாகத் தோன்றலாம். அதனால் எதற்கு வம்பு? இப்போதெல்லாம் அவ்வாறு நிர்ப்பந்தம் வருவதில்லை என்பதில் சந்தோஷம்.

நிர்வாகி சொலவதை கவனமாகக் காது கொடுத்துக் கேளுங்கள். நிறுவனத்தின் தேவை என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் அளிக்க வேண்டிய சேவைகளைப் பற்றி நம்பிக்கையுடன் பேச முடியும்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டப்படி பல நேரத்தில் தலைமை நிர்வாகி எப்படி ஒருவன் பொறியாளனாக வேலை செய்து கொண்டே மொழிபெயர்ப்பாளனாகவும் செயல்படுகிறான் என்பதை அறிய ஆவலாக இருப்பார். பொறியாளனின் மொழி அறிவைப் பற்றி எங்குமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. தவறானக் கண்ணோட்டம்தான், ஆனால் பலருக்கு இந்த அபிப்பிராயம் உண்டு என்று நான் கூறினால் நீங்கள் நம்புவதை தவிர வேறு வழியே இல்லை. ஆகவே தவறின்றி ஆங்கிலத்தில் உரையாட வேண்டும். சிறு விஷயம் என்று எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது. எல்லாம் சேர்ந்துதான் உங்களுக்கு ஆதரவான நிலை உருவாக வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

வேலையை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலநேரத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். வாடிக்கையாளருக்கு எப்போதுமே அவசரம்தான். எப்போது வேலையை முடிக்க வேண்டும் "நேற்றைக்கு" என்று பதில் வரும். உங்களால் முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே ஒத்துக் கொண்ட மற்ற வேலைகளை மறக்கக் கூடாது. அதற்காக இப்போது முரட்டுத்தனமாகப் பேசக்கூடாது. மறுப்பை நாசூக்காக்த் தெரிவிக்க வேண்டும். நான் செய்வது என்ன? எப்போதுமே சற்று முன்சாக்கிரதையுடனேதான் செயல் படுவேன். ஆகவே தேவையானால் அட்ஜஸ்ட் செய்ய முடியும். ஒரு முறை இவ்வாறு அவசரம் என்று கூறியவரிடம் "ஐயா, என்னால் 10 நாட்களில் வேலையை முடிக்க முடியும். நீங்கள் ஒரு வாரத்திலேயே கேட்கிறீர்கள். ஆகவே அதிக நேரம் உழைக்க நேரிடும். உங்களுக்கான விலை 50% அதிகரிக்க வேண்டியிருக்கும், பரவாயில்லையா?" என்று கேட்க, அவரோ அவசரமாக "10 நாட்களே எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார். அவ்வளவுதான் விஷயம். ஆனால் ஒன்று. ஒத்துக்கொண்ட நேரத்துக்குள் வேலையை முடித்துத் தரவேண்டும். இதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.

புது வாடிக்கையாளருடன் ரேட் பேசும்போது மிகக் கவனம் தேவை. இதைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/17/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 3

எதை எழுத வேண்டும் அல்லது கூடாது, எப்படி எழுத வேண்டும் அல்லது கூடாது என்பவை மிக முக்கியம். நான் முதலில் கூறியபடியே அனேகமாக எப்போதும் எழுதுவேன். இருந்தாலும் மாறுதலுக்காகச் அவ்வப்போது சிறிதே மாற்றியிருக்கிறேன்.

உதாரணத்துக்கு ஒரு கடிதத்தில் நான் முதலில் பொறியாளன் என்பதைக் குறிப்பிட்டுப் பிறகு மொழிபெயர்ப்பாளர் என்பதை எழுதினேன். பின் நடந்தது என்ன? எனக்கு வந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

"ஐயா, எங்கள் நிறுவனத்தில் விற்பனைப் பொறியாளராகச் சேர நீங்கள் அனுப்பியக் கடிதம் சம்பந்தமாக" என்று இருந்தது. இது என்னடா கஷ்டம் என்றுதான் முதலில் நினைத்தேன். இருந்தாலும் தலைமை நிர்வாகியைச் சந்தித்தேன். அவரிடம் விஷயத்தை எடுத்துக் கூற அவர் சிரித்தார். மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது பற்றி ஒரு தெளிவு நிலை அடைந்தேன்.

சுருக்கமாகக் கடிதம் எழுத வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் சொல்ல நினைப்பது அத்தனையும் கடிதத்தில் இருக்க வேண்டும். அவையும் பெறுநரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். அவர்தம் தேவைகளைப் பற்றி எழுத வேண்டும். தலைமை நிர்வாகிக்கே எழுத வேண்டும். தட்டச்சிடவில்லை நான். என் கடிதங்கள் அதனால் ஒரு தனித்தன்மை பெற்றன. தில்லியில் 2001 ஜூலை வரை இருந்தேன். எல்லா மொழிபெயர்ர்ப்புகளும் கையாலேயே எழுதப் பட்டன. அங்கிருந்த கடைசி கட்டத்தில் மொழி பெயர்ப்புகள் கையெழுத்திலேயே கொடுக்கப்பட்டன. இம்மாதிரி ஆயிரக்கணக்கானப் பக்கங்கள். ஆகவே என் கையெழுத்து நல்லத் தோற்றம் பெற்றது.

நல்லது. உள்ளே நுழைந்து விட்டீர்கள். தலைமை நிர்வாகி எதிரில் உள்ளீர்கள். மேலே? அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/15/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 2

நான் கூறும் ஆலோசனைகள் யாவையும் சொந்த முறையில் தொழில் செய்பவருக்கே. நீங்கள் ஒரு நிறுவனத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்தால் வேலை உங்களை நாடி வரும். நான் ஐ.டி.பி.எல்லில் முழுநேர பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளராக இருந்ததைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

வாடிக்கையாளர்களை எங்கெல்லாம் பிடிக்கலாம்? எங்கிருந்து வேண்டுமானாலும் என்பதே என் பதில்.

1982. ஹிந்துஸ்தான் டைம்ஸைப் புரட்டிக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்புகள் பகுதியை மேய்ந்து கொண்டிருந்தேன். அதில் ஒரு நிறுவனத்துக்கு அக்கௌண்டன்ட் வேலைக்கு ஆள் கேட்டு விளம்பரம். அதில் நான் பார்த்தது என்ன? அது ஒரு ஜெர்மானிய ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்துக்கானது என்பதே. ஷ்யாம் ஆன்டென்னா என்பது நிறுவனத்தின் பெயர். ஒரு இன்லேண்ட் லெட்டரை எடுத்தேன். அதில் தலைமை நிர்வாக அதிகாரி என்று விலாசமிட்டு ஒரு கடிதம் கையால் எழுதினேன். தட்டச்சிடவில்லை. என்ன ஆச்சரியம். உடனே பதில் வந்தது. போய் பார்த்தேன். வேலை கொடுக்கப்பட்டது. திரும்பத் திரும்ப வேலை கொடுத்தார்கள்.

இந்திய அரசு அனுமதிக்கும் வெளிநாடுகளுடனான கூட்டு முயற்சிகள் ஒரு அரசு மாதப்பதிப்பில் வரும். அதிலிருந்து ஜெர்மன், ஃபிரெஞ்சு மொழி பேசும் நாடுகளுடன் கூட்டு முயற்சி அனுமதிக்கப்பட்ட, தில்லியில் உள்ள நிறுவனங்களின் பெயரை எடுக்க வேண்டியது. சம்பந்தப்பட்டத் தலைமை நிர்வாகிகளுக்கு எழுதுவது, போய் பேசுவது, வேலை கிடைத்தால் ஒழுங்காகச் செய்வது எல்லாம் கனவு போலவே நடந்தன.

இன்னொரு முறை, கண்ணையும் காதையும் தீட்டி வைத்துக் கொள்வது. யாராவது அறிமுகமானால் அவர்கள் வேலை செய்யும் கம்பெனியைப் பற்றி விசாரிப்பேன். அந்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளுடன் கூட்டு முயற்சிகள் உண்டா என்றுத் தெரிந்துக் கொள்ள முயற்சிப்பேன். தேவையானால் ஒரு கடிதத்தை அனுப்புவேன். பிறகு எல்லாம் வழக்கம் போல. இந்தோ-ஜெர்மானிய மற்றும் இந்தோ-ஃபிரெஞ்சு வணிக அமைப்புகளுக்குப் போய் தில்லியில் நிலைகொண்டிருக்கும் அவற்றின் உறுப்பினர்கள் பட்டியலைத் தயாரிப்பது கூட இவ்வேலையில் அடக்கம்.

எல்லாம் சரி, புது வாடிக்கையாளருக்கு அனுப்பும் முதல் கடிதத்தில் என்ன எழுதுவது? கடவுள் அருள் என்றுதான் கூற வேண்டும். நான் 1982-ல் எழுதிய முதல் கடிததின் உள்ளடக்கமே இப்போது நான் எழுதும் கடிதங்களிலும் ஏறக்குறைய அப்படியே உள்ளது. சிறிய மாற்றங்கள் வேண்டுமானால் உண்டு, அவ்வளவுதான். ஒரு மாதிரிக் கடிதத்தைப் பார்ப்போமா? இது 1982-ல் ஷ்யாம் ஆன்டென்னாவிற்கு எழுதப்பட்டது.

ஐயா,
பொருள்: ஜெர்மானிய, பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வேலைகள்
நான் சொந்த முறையில் தொழில் புரியும் ஒரு ஜெர்மானிய/பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளன் மற்றும் துபாஷி. இம்மொழிகளில் எனக்கு 7/4 வருடங்கள் அனுபவம் உண்டு. நான் கடந்த 11 வருடங்களாக ஒரு மின்பொறியாளனாகவும் பணி புரிகிறேன். ஆகவே நான் தொழில்நுட்பக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன்.

ஜெர்மானியக் கம்பெனியுடன் கூட்டு முயற்சி வைத்திருக்கும் உங்களுக்கு என் சேவை அடிக்கடித் தேவைப்படும் என்று நான் உறுதியாக எண்ணுகிறேன். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். நாம் மேற்கொண்டு பேசலாம்.

அன்புடன்,
ராகவன்.

ஒரு விஷயம். அப்போது என்னிடம் தொலை பேசி கிடையாது. ஆகவே எல்லாமே கடிதம் மூலம்தான். தொலைபேசி தொடர்பு கிடைத்ததும் அதையும் கடிதத்தில் குறிப்பிட ஆரம்பித்தேன்.

1982 விஷயத்துக்கு மறுபடி வருவோம். என்னைக் கூப்பிட்ட அந்த நிறுவனத்தின் தலைவர் என்னுடன் பேசும்போது நான் எழுதியக் கடிதத்தில் அவரை எது கவர்ந்தது என்பதைக் குறிப்பிட்டார். "பொறியாளராகத் தொழில் புரியும் ஒரு நபர் மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதில் அவர் மிக வியப்பை அடைந்தார். அப்படிப்பட்ட ஒருவரை நேரில் காணவே என்னை முக்கியமாக அழைத்ததாகக் கூறினார். எந்தக் காரணமாக இருந்தால் என்ன? போனதில் வேலை கிடைத்தது. நான் தில்லியில் இருந்தவரை அவர் பல முறை வேலை கொடுத்தார்.

என்ன எழுதக் கூடாது என்பதையும் பார்க்க வேண்டும். அதையும் என் அனுபவத்திலிருந்தே அடுத்தப் பதிவில் கூறுவேன். வாடிக்கையாளரிடம் முதலில் என்ன பேசுவது, என்ன பேசாக்கூடாது என்பதையும் அதில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது