12/28/2012

தந்தி போவுது தபால் போவுது

இப்படி ஒரு விளையாட்டாம்.

இந்த விளையாட்டைச் சிறுவர் சிறுமியர் வட்டமாக உட்கார்ந்து ஆடுவர். ஒருவர் பட்டவர். அவருக்குத் தெரியாமல் ஒரு மணியாங்கல் வட்டத்தில் உள்ளவரிடையே கைமாறும். ஒருவர் கையில் கல் தங்கிவிட்டாலும், அவர் அடுத்தவரிடம் கல்லைக் கொடுத்துவிட்டது போல் நடிப்பார். இதனால் மணியாங்கல் யாரிடம் உள்ளது என்பது கல் வைத்திருப்பவரைத் தவிர யாருக்கும் தெரியாது. மூன்று சுற்று கைமாற்றம் நிகழ்வதற்கு முன் பட்டவர் யாரிடம் கல் உள்ளது என்று சொல்லிவிட வேண்டும். சொல்லாவிட்டால் பட்டவரைக் குனியவைத்து அவர் முதுகில் ஆளுக்கொரு தட்டு தட்டுவர். சொல்லிவிட்டால் கல் வைத்திருந்தவர் முதுகில் அனைவரும் தட்டுவர்.

இப்படி ஆட்டம் முடிந்தபின் மீண்டும் புதிதாகப் பட்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த ஆட்டம் தொடரும். கல்லைக் கடத்தும்போது எல்லாரும் சேர்ந்து பாட்டுப் பாடுவர். தந்தி போவுது தபால் போவுது திரும்பத் திரும்ப இசையுடன் பாடுவர். 

இப்போ எதுக்கு இது பத்தி பேசறே என்னும் முரளி மனோகருக்கான பதில்தான் இப்பதிவு.

சமீபத்தில் 1969-ல் வெளியான படம் தர்தீ கஹே புகார் கே (நிலம் என்னும் நல்லாள் அழைக்கிறாள்) என்ற படத்தில் ஒரு சீன். ஜீதேந்திரா வயலில் இருக்க, அவன் அண்ணன் மகன் வந்து வீட்டுக்கு தந்தி வந்திருக்கிறது, அதை வைத்துக் கொண்டு அம்மா அழுகிறாள் என பதட்ய்டத்துடன் கூற, ஜீத்தேந்திராவும் அங்கு சென்று கூடவே ஒப்பாரி வைப்பார். தந்தியில் என்ன விஷயம் என யாருக்கும் தெரியாது, ஏனெனில் யாருமே படித்தவர்கள் இல்லை. கிராம ஆசிரியர் அபீ பட்டாசார்யா வந்து நல்ல விஷயம்தான் எனக் கூறும்வரை அமர்க்களம் நீடிக்கும்.

இங்கு நான் சொல்ல வந்தது தந்தி என்றால் சராசரி இந்தியர்கள் பதறுவது பற்றியே. ஆனால் தற்சமயம் தந்திகளை யாராவது அனுப்புகிறார்களா? நன் கடைசியாக 2003-ஆம் ஆண்டில் ராமேஸ்வரத்துக்கு ஒரு தந்தி அனுப்பினேன், ஏனெனில் விலாசதாரரிடம் ஃபோன் இல்லை. அதன் பிற்கு லேது. ஆண்டு துவக்கத்தில் தபால் ஊழியர்கள் தீபாவளி இனாம் கேட்டு வருவார்கள், அவர்களுள் தந்தி ஊழியர்கள் அதிகம். ஆனால் தற்சமயம் அதுவும் இல்லை. கூரியர் வந்து விட்ட இக்காலத்தில் ஆர்டினரி தபாலே இல்லை என ஆகிவிட்டது. சில அரசு சார் கடிதங்கள் மட்டும்தான் தந்தியில் அனுப்பப்படுகின்றன என நினைக்கிறேன்.

ராஜேஷ் கன்னாவின் இப்பாடல் காட்சிகள் இப்போது காணக்கிடைக்காது என்றே சொல்ல வேண்டும்.



ஒரு வேளை கிராமங்களில் இன்னும் இதெல்லாம் நடக்கிறதா எனத் தெரியவில்லை.? யாராவது சொல்லுங்கப்பூ.

இப்பல்லாம் தந்தி பற்றிய விளையாட்டுகளில் மட்டுமே அது பற்றி பேசுவார்கள் போல.

இத்துடன் தொடர்பு உள்ள எனது இன்னொரு பதிவு இதோ.

ஸ்ரீலங்காவில் தந்திக்கு மங்களம் பாடிவிட்டார்கள் போல தெரிகிறதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்சேர்க்கை: நணபர் நாகராஜன் அன்புடன் அனுப்பிய கௌரி கல்யாணம் பாட்டின் வீடீயோ இதோ:

12/23/2012

குஜராத்துக்கும் பிற மாநிலங்களுக்கிடையில் உள்ள முக்கிய வேறுபாடுகள்

குஜராத்தில்கூட மோதிக்கு முன்னால் அவர் வந்த பிற்கு என பார்க்க வேண்டியுள்ளது.

முதலில் குஜராத்தில் மோதிக்கு முன்னால் எப்படி இருந்தது, அதை அவர் எவ்வாறு சரி செய்தார் என்பதை பார்ப்போமா.

1. மோதி பொறுப்பை ஏற்ற சமயம்கல்வி விஷயத்தில் அதுவும் பெண்குழந்தைகள் கல்வி விஷயத்தில் குஜராத் 20-ஆம் இடத்தில்தான் இருந்தது. அதுவும் பாதியில் படிப்பை விடுபவர்கள் 49 விழுக்காட்டில் இருந்தனர்.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று மோதி முடிவு செய்தார். எல்லா பின் தங்கிய பகுதிகளுக்கும் விசிட் செய்தார். முக்கியமாக பெண்கள் கல்வியறிவு பெறுவதற்கு முன்னுரிமை அளித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பாதியில் படிப்பை விடுபவர்களது விழுக்காடு  2008-ல் 49-லிருந்து 4-க்கு வந்துள்ளது. (2011-ல் படிப்பாளிகள் 80%, அரசின் விடாமுயற்சியால்).

மேலும், பிரசவத்தில் பெண் மரணம் என்பது குஜராத்திலும் மற்ற இடங்களைப் போலவே துவக்கத்தில் இருந்திருக்கிறது.
மோதி அவர்கள் ஒரு காரியம் செய்தார். ஒவ்வொரு வெற்றிகரமான பிரசவத்துக்கு பிறகும் வைத்தியம் பார்த்த மருத்துவருக்கு ரூபாய் இரண்டாயிரம் ஊக்கத் தொகை அறிவித்தார். பிரசவத்துக்கு வரும் ஏழை பெண்களுக்கும் நல்ல மருத்துவ மற்றும் பண உதவி அளிக்கப்பட்டது. (ஒரு நாளைக்கு ரூபாய் 200, கூட வரும் அட்டெண்டண்டுக்கும் அதே தொகை). இதன் மூலம் 1,58,000 கர்ப்பிணிகள் பயன் அடைந்தனர். இதெல்லாம் இல்லாத நிலையில் பிரசவ மரணம் 6000 என்ற நிலையிலிருந்து ஒரே ஒரு மரணம் என்ற அளவில் பிரமிக்கத்தக்க முறையில் இறங்கியுள்ளது என அவர் துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் கூறினார்.அதே கூட்டத்தில் அவர் கூறிய பிற விஷயங்கள் இன்வருமாறு:.


2. தமிழகத்தில் மின்சாரம் வந்தால் அது செய்தி. குஜராத்திலும் முதலில் அதே நிலைமைதான் மோடி அவர்கள் பதவிக்கு வந்த போது இருந்தது.
நிலைமையில் முன்னேற்றம் காண்பது கடினம் என்பது அதிகாரிகளின் கூற்று. மோடி அவர்கள் சளைக்காது நடவடிக்கை எடுத்தார். பகுதி பகுதியாக எடுத்து காரியமாற்றினார். முதல் 1000 நாட்களில் 45 விழுக்காடு கிராமங்களுக்கு முழு மின்சாரம் வழங்கப்பட்டது. இப்போது அதே திட்டம் குஜராத் முழுக்க விஸ்தரிக்கப்பட்டு 100 விழுக்காடு கிராமங்களுக்கு 24 மணி நேரமும் 3-phase மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக மோடி அவர்கள் முதல் 1000 நாட்களில் செய்த விஷயங்கள் பின்வருமாறு. 23 லட்சம் மின்கம்பங்கள், 56,000 ட்ரான்ஸ்ஃபார்மர்கள், 75000 எலெக்ட்ரிக் மீட்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டன. ஒரு அரசு மனது வைத்தால் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு இதை விட நல்ல உதாரணம் வேறு ஏது?

 ”500 நாட்களில் 700 கிலோமீட்டர் நீளத்துக்கு நர்மதா திட்டத்தில் பைப்புகள் இடப்பட்டன” என்று சோ கூறியதை குறிப்பிட்டு அதை அப்டேட் செய்தார். தற்போது அதே புள்ளிவிவரம் 700 நாட்களில் 1400 கிலோமீட்டர் பைப்லைன்கள் போடப்பட்டன என்று கூறினார். அந்த பைப்பில் கருணாநிதி அவர்கள் தன்னுடைய குடும்பத்தாருடன் காரில் செல்ல இயலும் என்று பைப்லைனின் விட்டத்தை பற்றி கூறுவதற்காக அவர் தமாஷாக மேற்கோள் காட்டினார். (ஜெயும் சசிகலா கூட அவ்வாறு செய்யலாம்). ஒரே சிரிப்பு அரங்கில். தனக்கு எதிராக ஒரு ஊழல் புகாரும் இல்லை என்பது ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது என்றார். 

3. அரசு மனம் வைத்தால் வருவாயையும் பெருக்க இயலும் என்கிறார் மோதி. ஆனால் அது லஞ்சத்தை ஒழித்தால்தான் முடியும். உதாரணத்துக்கு மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது ஒரு நிதியாண்டில் மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம். சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான் நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

4. மேலும் சில குஜராத் புள்ளி விவரங்கள். மோடி முதலில் ஆட்சிக்கு வந்தபோது நிதி பற்றாக்குறை 6700 கோடி ரூபாய், தற்சமயம் (2008-ல்) 1000 கோடி ரூபாய் உபரியாக கையில் உள்ளது. ஆண்டுக்கு 2500 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் வரி உயர்வு ஏதும் இன்றி 400கோடி ரூபாய் உபரி பட்ஜெட்டாக உயர்ந்துள்ளது. முக்கிய காரணம் லஞ்சம் எல்லா தளங்களிலும் ஒழிக்கப்பட்டு வரி வசூல் சரியாக நடந்ததே.

5. 2007 தேர்த்ல் சமயத்தில் காங்கிரஸ் கலர் டிவி தருவதாக வாக்களித்தபோது அவரிடம் பத்திரிகைக்காரர்கள் இது பற்றி கேட்டுள்ளனர். கலர் டிவி தர இயலாது ஆனால் தான் பதவிக்கு வந்தால் வரி கொடுக்காதவர்களை தேடி கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுக்கப் போவதாக தயக்கமின்றி கூறியுள்ளார். மக்கள் தங்கள் நலனை அறிந்தவர்கள். ஆகவே வரி வசூல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக சொன்ன தனக்கு ஓட்டு போட்டு ஜயிக்க வைத்தனர் என்பதில் மோடிக்கு ஐயமேயில்லை. (இப்போது 2012-ல் மட்டும் என்ன வாழுகிறதாம்).

சரி குஜராத்தை பார்த்தாயிற்று. மர்ற்ற மாநிலங்களைப் பார்ப்போமா. தமிழகத்தையே எடுத்து கொள்வோம்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழலை ஊக்குவிப்பவையே. ஜெயலலிதா தேவலை என நான் முன்னால் கூறியதற்கு காரணமே கருணாநிதி worse என்பதால்தான். மற்றப்படி இருவரையும் மோதியுடன் ஒப்பிட்டால் நமக்கு டிப்ரஷன்தான் வரும்.

ஜெயும் சரி கேயும் சரி தாம் பதவியில் இருக்கும்போது மற்றவர் அடுத்த தேர்தலில் வெற்றி எற ஏதுவாகவே உழைக்கின்றனர். ஜெ பதவியில் இருப்பதால் முதலில் அவரது சொதப்பகளை பார்ப்போம்.

சமச்சீர் கல்வி, அரசு தலைமைச் செயலகம், அண்ணா நூல்நிலையம், சாலைப் பணியாளர் ஆகிய விஷயங்களில் அவர் தேவையின்றி அவசரமாக செயலாற்றி நேர விரயம் செய்துள்ளார்.  மின்வெட்டு விஷயமோ இன்னும் சரியாகவில்லை. முயற்சி செய்வதக அவர் கூறினாலும் அது பலனடையும்போதுதான் தெரியும்.

கே அவர்களோ சுத்தம். மானாட மயிலாட நிகழ்ச்சிக, தனக்கு அளித்த பாராட்டு நிகழ்ச்சிகள் ஆகியவர்றுக்கு நேரம் ஒதுக்கியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவரது குடும்பத்தினரோ ஐயையோ என்றுதான் கூற வேண்டும்.

இருப்பினும் எரியும்  கொள்ளியில் எது நல்ல கொள்ளி என பார்த்து ஜெக்கு ஆதரவு தர வேண்டியிருக்கிறது.

தமிழகம் போலவே  மற்ற மானிலங்களும் (குஜராத் தவிர).  குஜராத்திலோ காங்கிரஸால் ஒறும் செய்ய இயலவில்லை. வெறுமனே பொரும வேண்டியதுதான்.

சரி, மோதி பிரதமராகலாமா? என்னைக் கேட்டால் அவர் இப்போதைக்கு குஜராத்திலேயே இருக்க வேண்டும் என்பேன். இன்னும் ஓர் ஐந்தாண்டு போகட்டும். அப்போதாவது குஜராத்தின் உதாரணம் மற்ற மானிலங்களுக்கு இன்னும் நன்றாக உரைக்கட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்சேர்க்கை: நண்பர் அருண்பிரபு அவர்களது பதிவு அருமையாக உள்ளது. கண்டிப்பாக படிக்கவும். 

12/20/2012

மனம் நிறையச்செய்த மோதியின் வெற்றி-2

இந்தத் தலைப்பில் போட்ட முந்தையப் பதிவு 5-ஆண்டுகளூக்கு முந்தையது. அப்போதே சொன்னது இப்போதும் அப்ப்ளை ஆகிறது என்றாலும் இந்த வெற்றி இன்னும் பெருமை வாய்ந்ததே.

மோதிக்கு எதிராக நின்ற காங்கிரஸ் வேட்பாளர் டிபாசிட் இழந்தாரா எனத் தெரியவில்லை. ஆமாம் என்றால் இரட்டிப்பு சந்தோஷமே.

இம்முறை மோதிக்கு உள்ளிருந்து எதிரிகள் அதிகம். அதில் கேஷுபாய் ,முக்கிய்மானவர். அவர் வெற்றி பெற்றாலும் அவரது கட்சிக்கு அமோகத் தோல்வி. அக்கட்சிக்காரர்கள் எத்தனை பேருக்கு டிபாசிட் போயிற்று என்பது நாளைக்குத்தான் தெரியும். அப்போது பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்..

இப்போதைக்கு மோதியின் வெற்றியை பதிவு செய்வோமாக.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது