2/04/2013

ஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((

திண்ணையில் வந்த இக்கட்டுரையைப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்:

5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை

லாமியா அல் காம்தி என்ற 5 வயது குழந்தை டிசம்பர் 25 ஆம் தேதி 2011இல் பலவிதமான காயங்களுடனும், நசுக்கப்பட்ட தலையுடனும், உடைக்கப்பட்ட நெஞ்செலும்பு, இடது கை, உடலெங்கும் காயங்களும் சூடுகளும் போன்ற பலவிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்குழந்தை அக்டோபர் 22 ஆம் தேதி 2012இல் மரணமடைந்தது.

இந்த குழந்தையின் தந்தை பாயன் அல் காமிதி என்பவர் இஸ்லாமிய பிரச்சாரகர். இவர் முஸ்லீம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி வந்து இஸ்லாமை விளக்குபவர். இவர் கம்பிகளாலும், குச்சிகளாலும் இந்த குழந்தையை சித்ரவதை செய்ததை ஒப்புகொண்டிருக்கிறார் என்று Women to Drive என்ற சவுதி பெண்கள் குழு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த தந்தை லாமியாவின் கன்னித்தன்மையை சந்தேகித்தார் என்றும், அந்த குழந்தையை ஒரு மருத்துவர் மூலம் பரிசோதித்தார் என்றும் தெரிவித்திருக்கிறது இந்த குழு.

ராண்டா அல் கலீப் என்ற மருத்துவமனை சமூகசேவகி இந்த மருத்துவமனையில் வேலை செய்பவர். அந்த குழந்தையின் முதுகு உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த குழந்தை உடலெங்கும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தது என்றும் கூறியிருக்கிறார்.

”அந்த குழந்தையின் மலத்துவாரம் கிழிக்கப்பட்டு பிறகு அதனை சூடு வைத்து மூட முயற்சிக்கப்பட்டிருக்கிறது” என்றும் அந்த குழந்தையின் தாயார் அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

தந்தை இதுவரை சிறையில் இருந்த காலமே அவருக்கு தகுந்த தண்டனை என்றும், அவர் அந்த குழந்தைக்காக ரத்தப்பணத்தை அந்த குழந்தையின் தாயிடம் கொடுக்க வேண்டும் என்றும் அதுவே இஸ்லாமிய நீதி என்றும் நீதிபதி  தீர்ப்பு அளித்திருப்பதை பெண்கள் உரிமை குழு எதிர்க்கிறது.

மனல் அல் ஷரிப் உட்பட மூன்று சவுதி பெண்கள் உரிமை போராட்டக்காரர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்திருக்கிறார்கள்.  
ஒரு தந்தை தன் குழந்தைகளை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்க முடியாது, ஒரு கணவன் தன் மனைவியை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்கமுடியாது என்ற இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இந்த போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.
நன்றி: திண்ணை

இச்செய்திக்கு சுவனப்பிரியர்கள் என்ன சப்பைக் கட்டு கட்டப் போகிறார்கள்? இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியும் இசுலாமிய மதச்சட்டத்தின்படித்தான் செய்ததாகக் கூறிக் கொள்வார்.

பதிவர் நந்தவனத்தான் அவர்களது பின்னூட்டம் இதே விஷயம் பற்றிய இன்னொரு பதிவில் இதோ. அது எனது கருத்துமாக இருப்பதாலேயே அதையும் இங்கே இடுகிறேன்.

குழந்தையை வன்கொடுமை செய்யபவர்களை கொன்றுவிட வேண்டும் என்பதுதான் எமது கருத்து. அல்லது குறைந்த பட்சம் ஆயுட்சிறை அளிக்கவேண்டும். ஏனெனில் இக்குற்றவாளிகள் மனநோயாளிகள். இவர்களை சில வருடம் சிறையில் வைத்துவிட்டால் வெளியில் வந்து அதையே திரும்ப செய்வார்கள். இவர்களை திருத்தவே இயலாது.

ஆனால் அப்படிப்பட்ட குற்றவாளி, அதிலும் சொந்த மகளை வன்புணர்வு செய்ததோடு மட்டுமல்லாது அவளை சித்திரவதை செய்த ஒருவனை தண்டிக்காமல் விட ஆண்டவன் ஒரு சட்டம் போட்டிருக்கிறான் என்றால் திருவள்ளுவர் மாதிரி 'கெடுக உலகு இயற்றியான்' எனத் தோன்றுகிறது (அவன் இருந்தால்).

இதை பீ மாதிரியான மதத்தலைவனுக ஆதரிப்பானுக அடத்தூ! பிறரின் அப்பா மகள் உறவை ஏன் கொச்சைப்படுத்துகிறார்கள், அந்த சிந்தனை எங்கிருந்து வருகிறது என்பது இப்போதுதானே புரிகிறது. இவனுகளுக்கு பிள்ளையாக பிறந்த பெண்களை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது
.

ஒரு 17 வயதுப் பெண் குழந்தைக்கு உணவளிக்கும் தவற்றைச் செய்ததற்காக அவள் தலையை வெட்டிய சவுதி அரசு இப்போது பல்லிளித்துக் க்ண்டு நிற்கிறது.

கொலைகாரப் பாவி


கொலையுண்ட மலர் பிணமாகவும் உயிரோடு இருந்த் போதும்


அதே திண்ணைக் கட்டுரையில் வந்த இன்னொரு செய்தி:

பெண்மகவைக் கொல்லும் தந்தைகளுக்கு எதிரான குரானின் போதனைக்கும் எதிராக இந்த தீர்ப்பு செல்கிறது. ஹதிஸ் “குழந்தையின் சாவுக்கு தந்தைக்கு  மரண தண்டனை கிடையாது” என்ற ஹதீஸின் அடிப்படையில் இந்த தீர்ப்பு சொல்லப்படுகிறது. இந்த தீர்ப்பின் நீண்டகால விளைவை கணக்கில் எடுத்துகொள்ளாமல், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுஹைலியா ஜைனுலபிதின் என்ற மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர் கூறுவதன் படி, தன் மகளை சித்ரவதை செய்து கொன்ற ஒரே ஒரு தந்தைக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். இதே போல, தன் மனைவியை கொன்ற கணவன்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்கிறார்.  இதற்கு இரண்டு உதாரணங்களை தருகிறார்.  தன் குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவனுக்கு ஐந்து ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது. இன்னொரு வழக்கில் தன் மனைவியை தன் காரின் பின்புறத்திக் கட்டி அவள் சாகும் வரை வண்டி யோட்டி கொன்ற கணவனுக்கு 12 வருட தண்டனை வழங்கப்பட்டது.

ஆண் கார்டியன்களுக்கு தங்கள் பாதுகாப்பில் உள்ளவர்களை கொல்வதற்கு இந்த தண்டனைகள்தான் கிடைத்தால், ஏன் இப்படிப்பட்ட தீச்செயல்கள் தொடராது? இந்த ஆண் கார்டியன்கள் தங்களது பாதுகாப்பில் உள்ள  பெண் குழந்தைகளை  சட்டப்பூர்வமாக விற்க அனுமதி பெறுகிறார்கள். குழந்தைகளை முக்கியமாக பெண் குழந்தைகளை காப்பாற்ற சட்டங்களே இல்லை.  ஷூரா கவுன்ஸிலில் குழந்தை பாதுகாப்பு சட்டம் என்று பிரேரணை செய்யப்பட்டபோது, குழந்தை என்று யாரை வரையறுப்பது என்று சிக்கல் வந்ததால், குழந்தை திருமணத்தை கூட தடை செய்யமுடியவில்லை.  தன் பெண் குழந்தைகளுக்கான கஸ்டடியை பெற முடியாததால், தந்தைகளால் அவலத்துக்கு உள்ளாக்கப்படும் பெண்குழந்தைகளின் கதைகள் ஏராளமாக இருக்கின்றன.

கணவனால் அடிக்கப்பட்ட பெண் போலீசுக்கு போனால் என்ன நடக்கும் என்று  ஒரு பெண் சமூக சேவகி விவரித்தார்.  அந்த போலீஸ் உடனே  Commission for the Promotion of Virtue and Prevention of Vice (CPVPV) அமைப்பையும், அந்த பெண்ணின் ஆண் கார்டியனையும் கூப்பிடும். பெரும்பாலான நேரங்களில் அந்த ஆண்கார்டியனே அந்த பெண்ணை அவலத்துக்கு ஆளாக்குபவர். ஆகவே அந்த பெண்ணை சுற்றி, மத குருக்களும், போலீஸும், அந்த பெண்ணை அடிப்பவரும் சுற்றி நிற்பார்கள். அந்த பெண்ணையும் அந்த ஆண்கார்டியனையும் சேர்த்து வைப்பதுதான் அங்கிருப்பவர்களின் பணி.  நான்கு மணி நேரம் அந்த பெண்ணை அந்த ஆணுக்கு அடங்கிப்போக வற்புறுத்துவார்கள். அதன் பின்னரும் அந்த பெண் பிடிவாதமாக இருந்தால்தான் பாதுகாப்பு வழங்கப்படும்.

தன் மகளையும் தன் மனைவியையும் வன்முறைக்குள்ளாக்கிய ஆணுக்கு தண்டனை வழங்கப்பட்ட வரலாறே இல்லை.  சில நேரங்களில் சிலமணிநேரம் சிறை தண்டனை, இல்லையென்றால், இனி செய்யமாட்டேன் என்று எழுதித்தர வேண்டும். அவ்வளவுதான்.

இந்த ஆண் கார்டியன் அமைப்பு பெண்களை ராணிகளாக வைத்திருக்கிறது என்று இதற்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள் கூறுகிறார்கள். 
http://saudiwoman.me/2013/01/31/rest-in-peace-lama/

அடத்தூ, ஈனப்பிறவிகளா!

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

22 comments:

Bucker said...

சார்,

இஸ்லாத்தில் விபச்சாரத்திற்கு கல்லெறி தண்டனை. அவன் செய்தது விபச்சாரம். சவூதி செய்தது பாரபச்சம். நியாயமாக அவன் கொல்லப்பட்டிருக்க வேண்டும்

dondu(#11168674346665545885) said...

@Bucker
அப்படியெல்லாம் இல்லையாமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பெண்ணுரிமை இயக்கங்கள் எதிர்ப்பது பற்றிய செய்தி ஒரு ஆறுதல்.எந்த நாடாயினும் எதிர் கருத்து இல்லையெனில்,மனங்கள் தாம் தற்போது செய்வதை நியாயப்படுத்திக்கொண்டே தொடர்ந்து கொண்டிருக்கும்.

தண்டனையை மதம் தடுக்கிறது என்கிறபோது மாற்றம் வர வெகுகாலமாகும்.ஏன் நூற்றாண்டுகள் கூட பின்தங்கிப்போகலாம்... மதம்,கம்யூனிஸ்ட்கள்,நாத்திகர்கள்,பெண்ணுரிமை இயங்கங்கள்,சமூக ஆர்வலர்கள் என்ற பலநோக்கில்தான் நாகரிகம் வளர முடியும்.இதில் ஏதாவது ஒன்று ஆதிக்கம் செலுத்த தொடங்கினாலும் சமூகம் பின்தங்கிப்போகிறது...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

Mr.Dondu,

Don't do wrong propaganda in such a way, taking a bitter chance to slam islam, as if it supports such a brutal crime, please.

That culprit who accepted his crime must get death sentence as per islmic law and also as per Saudi law.

சிலநேரம்,
நம் நாட்டிலும் கூட,
பாபர் மசூதி இட வழக்கு,
சேது சமுத்திர திட்டம்,
அப்சல் குரு வழக்கு ஆகியவற்றில் 'சட்டத்துக்கு புறம்பாக தீர்ப்பளித்து விட்டார்கள்' என்று நம் நாட்டில் பெரும்பான்மையினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது போலவே...

சவூதியிலும் சட்டப்பட்டி தீர்ப்பு சொல்லாமல் தம் இஷ்டப்பட்டி தீர்ப்பு சொல்வோர் இருக்கலாம். இருக்கிறார்கள் என்று இப்போது தெரிந்து விட்டது.

இந்த சவூதி (அ)நீதிபதிக்கும் அந்த கேவலமான குற்றவாளிக்கும் எனது வன்மையான கடும் கண்டனங்கள்.

இன்ஷாஅல்லாஹ், மேல் முறையீட்டில் இவரின் தலை கொய்யப்படும் என்ற தீர்ப்பு வரும்போது தயவு செய்து யாரும் இதை 'சவூதியின் காட்டுமிராண்டி தீர்ப்பு' என்று மரண தண்டனையை எதிர்ப்போம் என்று எழுதி அந்தர் பல்டி அடித்து அசிங்கப்பட்டு விடாதீர்கள்.

இந்த அநீதிக்கு நானும் நீங்களும் மட்டும் கண்டனம் தெரிவிக்க வில்லை, மொத்த சவூதியே கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

The Saudi Islamic Affairs Ministry had said in November that Al Ghamdi was not an officially sanctioned Islamic preacher. “He is not registered with the ministry and we have no relationship with him in any way,” Shaikh Saleh Bin Abdul Aziz Al Shaikh, the minister, said. “He had committed a heinous crime and he cannot be a preacher. No-one can ever justify his crime.”

The mother used her right to legal counsel to lodge the appeal against the sentence, reports in Saudi Arabia said.

Saudi bloggers have expressed anger and outrage at the lenient sentence for Al Ghamdi, who was found guilty of torturing his daughter Luma to death when she visited him and his new wife at their home.

மேலும் படிக்க...


Tougher sentence sought for preacher in rape case

Mother of slain girl lodges appeal highlighting ex-husband’s violent nature



http://gulfnews.com/news/gulf/saudi-arabia/tougher-sentence-sought-for-preacher-in-rape-case-1.1141634

Unknown said...

what more can we expect from the f**ked up religion of the barbarians??? Screw Allah on whose name this criminal has been absolved..

Saha, Chennai said...

//திண்ணையில் வந்த இக்கட்டுரையைப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. //

கோத்ரா கலவரத்தில் 9 மாத கர்ப்பிணியான கவுசர் பீவி என்ற பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியே இழுத்து கொடூரமாக வெட்டிக் கொன்றவர்களை கண்டால் மட்டும் மனம் குளிருமோ?

dondu(#11168674346665545885) said...

// கோத்ரா கலவரத்தில் 9 மாத கர்ப்பிணியான கவுசர் பீவி என்ற பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியே இழுத்து கொடூரமாக வெட்டிக் கொன்றவர்களை கண்டால் மட்டும் மனம் குளிருமோ?//
அம்மாதிரி செய்வது மனுநீதிப்படி சரி என நீதிபதி குற்றவாளியை விடுவித்து விடுவார் என்னும் ரேஞ்சில் பேசுகிறீர்களே.

முதலில் சவுதி அநீதிபதி கூறியதற்கு ஜவாப் தாருங்கள். அதுவும் இசுலாமியச் சட்டத்தை கோட் செய்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

k.rahman said...

i am hanging my head in shame. unable to digest this.

சரியான ஆதாரம் இல்லாமல் ஒரு 17 வயது பெண்ணை 7 வருடம் ஜெயிலில் அடைத்த பிறகு தூக்கில் இட்டார்கள். இந்த மாதிரி காட்டு மிராண்டிதனதுக்கு தண்டனையே குடுக்காமல் தப்பிக்க விட்டு இருகிறார்கள். இவர்கள் எல்லாம் மிருக இனத்தில் குட சேர்த்தி இல்லை.
சர்வதேச மனித உரிமை ஆணையம் இதற்க்கு சரியான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம்.

சவூதியை ஒரு பத்து வருடங்களாவது அணைத்து உலக நாடுகளும் ஒதுக்கி வைக்க வேண்டும்.

Bucker said...

//அப்படியெல்லாம் இல்லையாமே.//

அப்படி இல்லை என்பதை எப்படி சொல்கிறீர்கள்.

dondu(#11168674346665545885) said...

//அப்படி இல்லை என்பதை எப்படி சொல்கிறீர்கள்.//
அவனை விடுதலை செய்த அநீதிபதி இசுலாமியச் சட்டத்தைக் கோட் செய்துதானே அவ்வாறு செய்தார்.

அன்புடன்,
டொண்டு ராகவன்

? said...

கருத்துக்கு நன்றி ஸார்.

இசுலாமியர்கள் இதை கண்டிப்பதை விடுத்து குஜராத் கலவரம் பற்றி பேசி திசை திருப்புவது ஏனோ?

விசுவரூம் மாதிரியான மொக்கை தமிழ் படங்கள் அல்ல, இந்த மாதிரியான செய்திகளே அவர்களை கேவலப்படுத்துகின்றன என்பதை அவர்கள் உணர்வது அவசியம் (உடனே செய்தி ஊடகத்துக்கு தடை என சொன்னாலும் சொல்லுவார்கள்!).

குஜராத் கலவரத்தை பல இந்துக்கள் கண்டித்துக்கொண்டுதான் உள்ளார்கள். ஆனால் இந்த மாதிரியான ஷரியா விடயங்களை காபிர்கள்தான் தோண்டி எடுக்க வேண்டியுள்ளது. இதை சவுதியை கவனித்துவரும் எந்த முசுலிம் பதிவரும் இதற்கு முன் கண்டிக்கவே இல்லையே?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//அவனை விடுதலை செய்த அநீதிபதி இசுலாமியச் சட்டத்தைக் கோட் செய்துதானே அவ்வாறு செய்தார்//

---------அய்யா தோண்டு,

தாங்களே 'அநீதிபதி' என்று சரியாக ஒப்புக்கொண்டு விட்டு அவர் சொன்னது சரியான இஸ்லாமிய சட்டம்தான் என்றும் சொன்னால்... சகிக்கலை..!

இதுதாங்க இரட்டை வேஷம்..!
உங்கள் பதிவின் நோக்கம் பல் இளிக்கிறது.

மேலே ஒரு சகோதரர் கெட்டு இருக்காரே... குஜராத் கொடும் சம்பவத்தில் உங்கள் மனம் ஏன் பதை பதைக்க வில்லை என்று..!

நானும் கேட்கிறேன்...

தொடர்ச்சியாக ஹரியானாவில் பதினான்கு தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டபோது... இதற்கெல்லாம் அந்த பெண்கள்தான் காரணம் என்று ஒரு காங்கிரஸ் தலைவர் சொன்ன போது... உங்கள் உள்ளம் பதை பதைத்ததா..?

உலகில் எப்போதாவது எங்காவது முஸ்லிம் பெண்கள் முஸ்லிம்களால் பாதிக்கப்படும்போது உங்கள் உள்ளம் பதை பதைப்பது(?) போலவே... நம் நாட்டில் முஸ்லிம் பெண்கள் ஹிந்துத்துவா வெறியர்களிடம் பாதிக்கப்படும் போதும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நாடுகளில் முஸ்லிம் பெண்கள் ஏகாதிபத்திய ராணுவ வெறியர்களிடம் பாதிக்கப்படும் போதும், ஹரியானா மற்றும் ஏனைய மாநில தலித் பெண்கள் ஆதிக்க சாதி வெறியர்களால் பாதிக்கப்படும் போதும்... அதில் ஒரு பகுதி அளவேனும் பதை பதைப்பு வரட்டுமே..! உங்கள் பதை பதைப்பில் ஓர் உண்மை இருக்க வேண்டாமா..?

Kannan said...

//கோத்ரா கலவரத்தில் 9 மாத கர்ப்பிணியான கவுசர் பீவி என்ற பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியே இழுத்து கொடூரமாக வெட்டிக் கொன்றவர்களை கண்டால் மட்டும் மனம் குளிருமோ?//

ஹிந்து வரலாற்றில் குழந்தையை சமைத்து படைத்த நிகழ்வுகள் உண்டு. அது உண்மையோ கற்பனையோ, அதையே இப்போது செய்தால் தூக்கில் ஏற்றி விடுவார்கள். ஆனால் இன்றும் பழைய புத்தகங்களை படித்து அதுதான் உச்சம் அதை மீறி வேறில்லை என்று செயல்படும் சமூகத்தை என்னவென்று அழைப்பது? முசல்மான் என்றா அல்லது முட்டாள்கள் என்றா? அனைத்து சமூகத்திலும் முட்டாள்கள் உண்டு. சில நாடுகளே அவ்வாறு இருப்பதும், அதை நியாயபடுத்துவதும் உச்ச கட்ட முட்டாள் தனம் தானே?

Saha, Chennai said...

//அம்மாதிரி செய்வது மனுநீதிப்படி சரி என நீதிபதி குற்றவாளியை விடுவித்து விடுவார் என்னும் ரேஞ்சில் பேசுகிறீர்களே.//

அதுதான் ஏற்கனவே பாபர் மசூதி வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி ஒத்திகை பார்த்தாச்சே. இன்னும் ஏன் கண்கட்டு?

//முதலில் சவுதி அநீதிபதி கூறியதற்கு ஜவாப் தாருங்கள். அதுவும் இசுலாமியச் சட்டத்தை கோட் செய்கிறார்.//

தனியொரு நீதிபதி செய்த தவறுக்கு முழு இஸ்லாமிய சமுதாயமும் பொறுப்பேற்க வேண்டுமா? உங்கள் பதிவில் சகோ.ஆஷிக் அந்த நீதிபதி செய்தது தவறென்று சொல்லியுள்ளார், நானும் இந்த தளத்தில் அதே கருத்தை பதிந்துள்ளேன். சமுதாய அரங்கம் என்ற தளத்தில் சகோ.அதிரை இக்பால் இது குறித்து தனி பதிவாகவே கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

இதே போன்று மோடி கோத்ரா கலவரத்தில் செய்த தவறை தவறென்று உங்களால் சொல்ல முடியுமா?
இறுதியாக ஒன்று, உங்களுக்காக ஒரு பழமொழி (ம்ஹும், பாதி பழமொழி) "ஆடு நனைகிறதே என்று........"

Unknown said...

சஹா,
//கோத்ரா கலவரத்தில் 9 மாத கர்ப்பிணியான கவுசர் பீவி என்ற பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியே இழுத்து கொடூரமாக வெட்டிக் கொன்றவர்களை கண்டால் மட்டும் மனம் குளிருமோ?//

கவுசர் பீவியை திரும்ப திரும்ப இப்படி குரூரமாக சிந்திக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

கவுசர் பீவி கலவரத்தில் இறந்தது உண்மை. ஆனால், நீங்கள் ரொம்ப குரூரமான ஆசையுடன் விவரிப்பது போலவெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

http://timesofindia.indiatimes.com/india/Docs-testimony-nails-lie-in-Naroda-Patia-fetus-story/articleshow/5696161.cms

Dr J S Kanoria, who conducted post-mortem on the woman's body on March 2, told the special court on Wednesday, supported by documents, that he found the fetus intact. He said he was posted at Nadiad but called to the Civil Hospital following the emergency when he conducted the autopsy on an unidentified body, which was later identified as Kausar Bano.

http://www.hindu.com/2010/03/18/stories/2010031863801300.htm

http://www.gujaratriots.com/index.php/2010/05/myth-16-a-pregnant-womans-womb-was-ripped-open/

இந்த பொய்யை திரும்ப திரும்ப சொல்வது ஏன்? பரிதாபம் தேடிக்கொள்ளவா?

Unknown said...

//அதுதான் ஏற்கனவே பாபர் மசூதி வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி ஒத்திகை பார்த்தாச்சே. //
ஆதாரங்கள் அடிப்படையில் இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு. நம்பிக்கையையும் காரணமாக சொல்லி ஒருத்தர். அவர் முஸ்லீம் நீதிபதி.

ஆதாரங்கள் ஏராளம். ஆதாரம் கொடுத்தால் மட்டும் கோவில்கள் மீது கட்டிய மசூதிகளை நீங்களாக திருப்பி தந்துவிடப்போகிறீர்களா?

அப்படி தரப்போவதில்லை என்றால், உங்களுக்கு எதற்கு ஆதாரம்?

Unknown said...

//தனியொரு நீதிபதி செய்த தவறுக்கு முழு இஸ்லாமிய சமுதாயமும் பொறுப்பேற்க வேண்டுமா? உங்கள் பதிவில் சகோ.ஆஷிக் அந்த நீதிபதி செய்தது தவறென்று சொல்லியுள்ளார், நானும் இந்த தளத்தில் அதே கருத்தை பதிந்துள்ளேன். //

நீங்கள் தவறு என்று சொன்னால் என்ன சரி என்று சொன்னால் என்ன? அதனால் என்ன பயன்?

நீதிபதி, சவுதி அரேபிய சட்டத்தில் அதற்கு முன்னால் இருக்கும் சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பு தந்திருக்கிறார். ஒரு ஹதீஸில்
It was narrated that the Prophet (peace and blessings be upon him) said, “No father should be killed (executed) for killing his son.” (At-Tirmidhi)
இன்னும்
The following are not subject to retaliation:

-1- a child or insane person, under any circumstances (O: whether Muslim or non-Muslim.

-2- a Muslim for killing a non-Muslim;

-3- a Jewish or Christian subject of the Islamic state for killing an apostate from Islam (O: because a subject of the state is under its protection, while killing an apostate from Islam is without consequences);

-4- a father or mother (or their fathers or mothers) for killing their offspring, or offspring's offspring;

-5- nor is retaliation permissible to a descendant for (A: his ancestor's) killing someone whose death would otherwise entitle the descendant to retaliate, such as when his father kills his mother. [back to top]
இந்த சட்டங்கள் இவ்வாறு முகம்மது சொன்னதை வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.

அதனை மாற்ற உங்களுக்கோ அல்லது உங்கள் மன்னர்களுக்கோ அதிகாரம் இல்லை என்று நீங்களே சொல்லும்போது அதனை தவறு என்று நீங்கள் சொல்லுவதால் என்ன பிரயோசனம்?

இன்னும்
ஒரு காபிரை கொன்றதற்காக முஸ்லீமை கொல்லக்கூடாது என்று முகம்மது சொன்னதாக ஹதீஸ் இருக்கிறது. பிறகு என்ன?

Unknown said...

//நம் நாட்டில் முஸ்லிம் பெண்கள் ஹிந்துத்துவா வெறியர்களிடம் பாதிக்கப்படும் போதும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நாடுகளில் முஸ்லிம் பெண்கள் ஏகாதிபத்திய ராணுவ வெறியர்களிடம் பாதிக்கப்படும் போதும், ஹரியானா மற்றும் ஏனைய மாநில தலித் பெண்கள் ஆதிக்க சாதி வெறியர்களால் பாதிக்கப்படும் போதும்..//

அவர்கள் முஸ்லீமா இல்லையா என்றெல்லாம் பார்த்து எந்த இந்துவும் பதைப்பதில்லை. ஒரு அநியாயம் நடந்தால் பதைக்காதவன் மனிதனில்லை. அதனால்தான் முஸ்லீம்களுக்கெதிரான கலவரங்களுக்குக்கூட இந்துக்கள் எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள்.

நீங்கள் இதுவரை எத்தனை முறை பாதிக்கப்பட்ட இந்துக்களுக்காக குரல் கொடுத்திருக்கிறீர்கள்?

டைரக்ட் ஆக்‌ஷன் டே அன்று ஜின்னாவாலும் சுஹ்ராவர்தியாலும் கொல்லப்ப்ட்ட லட்சக்கணக்கான இந்துக்களுக்காக் குரல் கொடுத்திருக்கிறீர்களா? எந்த முஸ்லீம் தலைவராவது குரல் கொடுத்திருக்கிறாரா?


பங்களாதேஷ் போரின்போது கொல்லப்ப்ட்ட கோடிக்கணக்கான இந்து பெண்களுக்காக நீங்களோ அல்லது எந்த முஸ்லீம் தலைவருமோ குரல் கொடுத்திருக்கிறார்களா?

காஷ்மீரிலிருந்து துரத்தப்பட்ட இந்துக்களுக்காக எப்போதாவது முஸ்லீம் தலைவர்களாவது நீங்களாவது குரல் கொடுத்திருக்கிறீர்களா?

அவர்களை காபிர்கள் என்று பார்க்காமல் மனிதர்களாக பார்த்து அவர்களுக்காக குரல் கொடுங்கள்.

பிறகு மற்றவர்களிடம் கேளுங்கள்.

Saha, Chennai said...

@nila nilavan..
//கவுசர் பீவி கலவரத்தில் இறந்தது உண்மை. ஆனால், நீங்கள் ரொம்ப குரூரமான ஆசையுடன் விவரிப்பது போலவெல்லாம் எதுவும் நடக்கவில்லை. //

ஆமா, கவுசர் பீவி தற்கொலை செய்துகொண்டார்(?), அப்படித்தானே?

இங்கே, தெகல்கா வீடியோவில் பாபு பஜ்ரங்கி ரொம்ப குரூரமான ஆசையுடன் விவரிப்பதை பார்ப்போமா?

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=mfnTl_Fwvbo#!

என்ன ஒரு கொடூர மனம்.. சொல்கிறான் "After Killing Them, I Felt Like Maharana Pratap"..

இப்போது சொல்லுங்கள் nila nilavan, யார் ரொம்ப குரூரமான ஆசையுடன் விவரிப்பது??

மு மாலிக் said...

சவுதி புகழ் பாடும் பாஸ்டர்ட்ஸை நினைச்சா வேதனையா இருக்கு.

முன்பு, ஒரு ஷியா பிரிவு பெண்ணை கூட்டுக்கற்பழித்த சவுதி அரபுகளுக்கு 6 மாத சிறைத்தண்டனையும், கற்பழிக்கப்பட்டவருக்கு (அந்த சம்பவத்திற்க்கு முன்பு தனது காதலனுடன் இருந்த காரணத்திற்காக) 90 கசையடிகளையும் கொடுத்த நாடு சவுதி பாஸ்டர்ட்ஸ் நாடு. இந்த தீர்ப்புகளுக்கு சவுதி பொறுப்பாகாது என்று வாதிடுபவர்கள், அந்த நீதிபதிகளுக்கு என்ன தண்டனைக் கிடைத்தது என்று சொன்னால் தேவலை.

இப்போ இந்த கேசில், நீதிபதிகளுக்கு என்ன தண்டனை என்று அந்த பாஸ்டர்டுகள் சொன்னால் தேவலை

dondu(#11168674346665545885) said...

பாபு பஜ்ரங்கிக்கு தண்டனை கொடுத்தார்கள் அலலவா, அதுவும் ஆயுள் முழுக்க சிறை தண்டனை?

சவுதி நாதாரிகள் இசுலாமிய குரானைக் காட்டியது போல மனுநீதியைக் காட்டி விட்டு விட்டார்களா என்ன?

டோண்டு ராகவன்

Anonymous said...

ஒன்றரை வயது சிறுமியை சீரழித்த கார் டிரைவர்... அவமானத்தில் டிரைவரின் தாயார் தற்கொலை

சென்னை: சென்னையில் ஒன்றரை வயதே ஆன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் ஒரு கார் டிரைவர்.
இந்த செய்தி அறிந்ததும் டிரைவரின் தாயார் அதிர்ச்சியும், அவமானமும் அடைந்து தனது மகனின் செயலுக்காக வேதனைப்பட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி சுசிலா. தனியார் வங்கியில் துப்புரவு பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 8 வயதிலும், ஒன்றரை வயதிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டு முன்பு ஒன்றரை வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

சுசீலா வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் குமரன் என்பவர் குழந்தையை தூக்கி கொஞ்சிக் கொண்டு இருந்தார்.
திடீரென அவர் குழந்தையுடன் மாயமாகி விட்டார். அவர் குழந்தையை கடைக்கு அழைத்துச் சென்று இருப்பார் என்று சுசிலா கருதினார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வராததால் அதிர்ச்சி அடைந்த சுசிலா குழந்தையை தேடினார். அப்போது பக்கத்து தெருவில் குழந்தை அழுதபடி கிடந்தது. குமரன் குழந்தையை ரோட்டில் போட்டு விட்டு ஓடியது தெரிய வந்தது.

குழந்தையின் உடல் முழுவதும் காயத்துடன் வீக்கம் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சுசிலாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அலறியடித்தபடி அங்கு வந்து குழந்தையை பார்த்து கதறினார்.

குமரன் குழந்தையை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியிருந்தது தெரிய வந்தது. இந்தநிலையில், டிரைவரின் தாய் கஸ்தூரியை பொதுமக்கள் அழைத்து வந்து சிறுமியை டிரைவர் சித்ரவதை செய்தது பற்றி தெரிவித்தனர்.
உடனே அவர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம்.

குழந்தையின் சிகிச்சை செலவை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் சுசிலா இதை ஏற்கவில்லை. இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விரைந்து வந்து கஸ்தூரியிடம் விசாரணை நடத்தினார்கள். குமரன் எங்கு இருக்கிறார் என்று அவரிடம் துருவி துருவி விசாரித்தார்கள். அதற்கு அவர், தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி விட்டார். டிரைவர் பற்றி தகவல் தெரிந்தால் போலீசுக்கு சொல்ல வேண்டும் என்று எச்சரித்தனர்.

அவரது 2 மகன்கள் சதீஷ், ஆனந்தனை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் அவமானமடைந்த கஸ்தூரி மன வேதனை அடைந்தார். இதையடுத்து இன்று காலை தனது வீட்டில்தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. கஸ்தூரியின் கணவர் சீனிவாசன் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறாராம்.
இவர் தனது மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிந்து இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். கஸ்தூரி தனியாகப் போராடி தனது பிள்ளைகளை வளர்த்தார். அப்பகுதியினர் மத்தியில் நல்ல பெயரையும் சம்பாதித்து வைத்திருந்தார். ஆனால் அவரது மகனின் செயலால் இப்போது பரிதாபமாக உயிரை விட்டுள்ளார்.

http://tamil.oneindia.in/news/2013/02/05/tamilnadu-car-driver-s-mother-commits-suicide-169215.html

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது