உலகில் பல விஷயங்கள் யதேச்சையாகவே நடக்கின்றன. அப்படித்தான் நான் இம்மாதம் 24ஆம் தேதி வலைப்பதிவர் சந்திப்புக்கு போனபோதும் நடந்தது. இந்த அழகில் நான் அங்கு போவதே கடைசி தினத்தன்றுதான் நிச்சயம் ஆயிற்று. சந்திப்பு நடந்த வித்லோகா புத்தகக் கடையில் சிறிது நேரம் சுற்றிப் பார்த்தேன். சிவஞானம்ஜி அவர்கள் திடீரென என் கவனத்தை நம்ம ஜோசஃப் சார் எழுதிய புத்தகத்தின் மேல் திருப்பினார். அவருக்கு என் நன்றி. புத்தகத்தின் விவரங்கள்:
புத்தகத்தின் தலைப்பு: சந்தோஷமா கடன் வாங்குங்க, ISBN 978-81-8368-319-7
எழுதியது: டி.பி.ஆர். ஜோசஃப் அவர்கள்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், Website: www.nhm.in, email: support@nhm.in
பக்கங்கள்: 160
விலை: ரூ. 70
வெளிநாடுகளில் இருப்பவர்கள் புத்தகத்தைப் பெறுவதற்காக விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சரி புத்தகத்துக்கு வருவோம். போன ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜோசஃப் சார் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் "கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று கம்பர் பாடியது ராமாயணத்தில் எந்தக் கட்டத்தில் வருகிறது என்று என்னைக் கேட்டிருந்தார். நானும் அதற்காக சிலரைக் கேட்டு விவரம் அளித்து, என் தரப்பில் ஒரு பதிவும் இட்டேன். அதற்கு வந்த பின்னூட்டங்களில் ஒரு முக்கிய உண்மை புலப்பட்டது. அது என்னவென்றால், கடன்பட்டார் நெஞ்சம்போல என எழுதியது கம்பன் இல்லையாம். இதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அது பற்றி பிறகு பார்ப்போம். இப்போது புத்தகத்துக்கு திரும்புவோம்.
முன்னுரையை ஆசிரியர் அப்பாடலுடனேயே துவக்குகிறார். பலர் (நான், ஜோசஃப் சார் உள்பட) இத்தனை நாளாக கொண்ட கருத்துப் பிழை இதிலும் வந்து விட்டது. இதில் எனக்கும் ஒரு சிறிய பங்கு இருப்பது விசனத்துக்குரியது. மன்னித்து விடுங்கள் ஜோசஃப் சார். அடுத்த பதிப்பில் நீங்கள் அதை திருத்துவீர்கள் என நம்புகிறேன்.
"கடன் வாங்குவது தவறு என்று சொல்கிறவர்கள், பணத்தின் மதிப்பை சரியாக உணர்ந்த புத்திசாலிகளாக இருக்கமுடியாது. காரணம், கடனாக வாங்கும் பணத்தை ஆக்கபூர்வமாகச் செலவழிப்பது எப்படி, வருமானத்தைப் பெருக்குவது எப்படி என்கிற தெளிவு உங்களுக்கிருந்தால், கடன் ஒரு தடை அல்ல; வரப்பிரசாதமே", என்று ஆணித்தரமாக கூறி புத்தகத்தை ஆரம்பிக்கிறார் ஆசிரியர். அதுவும் இரண்டாம் வரி ரொம்ப முக்கியம். ஆக்கபூர்வமாக செலவழிப்பது மட்டும் இருந்து விட்டால் அதற்கு ஈடு இல்லைதான். அவரே இப்புதகத்தின் நடுப்பகுதியில் ஒரு லட்சம் ரூபாய் பெர்சனல் கடனைக் கேட்டு வருபவர்களை விட தொழில் அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபாய் கேட்டு வருபவர்கள் அதிக வரவேற்பை பெறுகின்றனர் என்று கூறி இருப்பதையும் இதே லாஜிக்கால் புரிந்து கொள்ள முடிகிறது.
இத்தருணத்தில் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. சமீபத்தில் 1982-ல் ஆசிய விளையாட்டு போட்டிகள் தில்லியில் நடந்த போது இந்திய அரசு ஐ.எம்.எஃப். இடமிருந்து வாங்கிய 5 பில்லியன் டாலர் கடன்களின் பெரும்பகுதி ஆசிய விளையாட்டை ஆடம்பரமாக நடத்தவே உபயோகப்படுத்தப்பட்டதால், இந்தியாவின் கடன் பளுதான் அதிகமாயிற்று. ஆக, கடனை வாங்கி அதன் மூலமாக அதிகப் பொருள் ஈட்டி, கடனையும் உரிய காலத்தில் அடைத்து, முன்னேற்றமும் பெறுவது என்பது எவ்வளவு முக்கியம் என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இம்மாதிரி புத்தகங்களில் ஒரு உள்ளடங்கிய பலவீனம் உண்டு. அவை வெகு சீக்கிரம் வழக்கற்று (obsolete) போய் விடுகின்றன. ஆனால் அது ஆசிரியர் கட்டுப்பாட்டை மீறியது. முக்கியக் காரணம் அரசின் இடைவிடாது மாறும் நிதிக் கொள்கைகள்தான். இப்போதைய அரசு கொள்கைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட இப்புத்தகமும் இதற்கு விதி விலக்கல்ல. உதாரணத்துக்கு இந்த வடிவில் இப்புத்தகத்தை அறுபதுகளிலோ, எழுபதுகளிலோ எழுதியிருக்கவே முடியாது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இவற்றில் தரப்படும் தகவல்கள் பல காணாமல் போகலாம், புதுத்தகவல்கள் அவற்றின் இடத்தை பிடித்து கொள்ளலாம். ஆனால் சில விஷயங்கள் அப்படியே இருக்கும், ஏனெனில் மனித இயற்கையுடன் சம்பந்தப்பட்டவை அவை. இவற்றில் அடங்குவன முன்னுரையும் முதல் இரு அத்தியாயங்களும்.
மற்ற அத்தியாயங்களில் ஆசிரியர் மேற்கோள் காட்டியிருக்கும் எண் உதாரணங்கள்தான் முதலில் இம்மாற்றங்களில் அடிபடும். அதற்காக அவற்றைக் கூறாமல் இருக்க முடியாது. மிக அழகாக ஆசிரியர் அவற்றை அடுக்கியிருக்கிறார். என்ன இருந்தாலும் அவரது வங்கியின் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர் அல்லவா? இப்போதும் கணினி பிரிவின் தலைவராக இருந்து வங்கியின் எல்லா மட்டத்திலும் உள்ள அதிகாரிகளின் கணினி பிரச்சினைகளை தீர்த்து வைப்பவரும் கூட. ஆகவே பலருக்கு விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. அந்த பயிற்சி எல்லாம் வீணாகப் போகுமா என்ன? ஆகவே புத்தகத்தில் போர் என்று கருதும் புள்ளிவிவரங்களையும் அழகுபட அடுக்கியுள்ளார் அவர். அதையும் அழகான, அதே சமயம் எளிமையான தமிழில் செய்தது பாராட்டுக்குரியது. சில ஆங்கிலச் சொற்களின் தமிழாக்கம் மிக உபயோகமானது என்று கூறுவது மொழிபெயர்ப்பாளன் டோண்டு ராகவன்.
தனி நபர் கடன் என்பதிலிருந்து ஆரம்பித்து, பெருந்தொழில் கடன் வரை படிப்படியாக செல்வது மிக அருமையாக உள்ளது. புத்தகத்தை படிக்கும்போது, அதிலும் தொழில் கடன்களைப் பற்றிப் பேசும்போது, அவருடைய 'என்னுலகம்' வலைப்பூவில் வந்த "திரும்பிப் பார்க்கிறேன்" பதிவுகளின் பல பகுதிகள் நினைவுக்கு வருகின்றன. முக்கியமாக ஒரு குடும்பம் பரம்பரையாக செய்து வந்த வியாபாரத்தில் இளைய தலைமுறையில் சகோதரர்கள் ஒத்துப் போகாததால் அந்த வியாபாரமே எப்படி நொடித்துப் போனது என்பதும் ஞாபகத்துக்கு வந்தது. கடன்களுக்கு பல விதிமுறைகள் இருந்தாலும் எப்படி மேலிட நிர்ப்பந்தங்கள் குறுக்கிடுகின்றன என்பதையும் அவர் முதலில் கிளை மேலாளராக பதவியேற்று திறந்த கிளையில் பெற்ற அனுபவங்களும் நினைவுக்கு வந்தன. இன்னும் கூறிக் கொண்டே போகலாம், ஆனாலும் நான் கூறுவதை விட புத்தகத்தை விலைக்கு வாங்கி படிப்பதே அதிகப் பலனைக் கொடுக்கும்.
குறைபாடுகள்? என் மனதுக்கு பட்டவற்றைக் கூறுவேன். எல்லோருக்குமே அவை குறைகளாகத் தெரியவேண்டும் என்பதும் அவசியமில்லை.
இம்மாதிரி புத்தகங்களில் இண்டெக்ஸ் ரொம்ப முக்கியம். அது இல்லை என்பது குறையாகவே படுகிறது. அடுத்தப் பதிவுகளில் இதை சரி செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.
நான் இப்பதிவில் குறிப்பிட்டது போல இப்போதெல்லாம் டெலிமார்கெட்டிங்கில் போன் போட்டு கடன் வாங்குமாறு தொந்திரவு செய்கிறார்கள். ஆனால் அவர்களிடம் மாட்டிக் கொண்டால் கந்து வட்டியையே நாணச் செய்யும் அளவுக்கு செயல்பாடுகள் உள்ளன. அவற்றையெல்லாம் குறிப்பிட்டு வாசகர்களை உஷார்படுத்தியிருக்கலாம் என எனக்கு படுகிறது. (இப்பதிவு ஜோசஃப் சாருடன் பேசியதன் ஒரு விளைவு என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்).
இன்னும் சில வங்கிகளில் கடனை தவணைக்கு முன்னமே செலுத்த (preclosing) விடுவதில்லை. அப்படியே விட்டாலும் அபராதம் போல போடுகிறார்கள். இது சரியா? இதன் லாஜிக் என்ன? இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. டிபாசிட்டுகளுக்கு வட்டி தரும்போது, உதாரணத்துக்கு 3 வருட டிபாசிட் 10 % என்றால் மூன்று வருடங்களுக்கு மேல் உள்ள டிபாசிட்டுகளுக்கு வட்டி 9 % என்று கூறுவதன் தாத்பர்யம் புரிந்ததே இல்லை.
இன்னும் ஒரு கடன் ஊழியர்களுக்கு தரும் பண்டிகை கடன்கள். இதற்கு வட்டியில்லை என அறிகிறேன். ஆனால் அதை வாங்குவதற்கும் ஜாமீன் கையெழுத்து கேட்கிறார்கள். யாராவது சக ஊழியர் போட வேண்டும். நான் கேட்கிறேன், நிறுவனத்தில் வேலை செய்பவர் மேல் ஏன் இந்த நம்பிக்கையின்மை? அதற்கு இன்னொரு ஊழியர் ஏன் பலிகடாவாக வேண்டும்? நடைமுறையில் நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் பார்த்தது என்னவென்றால், ராமு கோவிந்தனுக்காக கையெழுத்திடுவான், கோவிந்தன் ராமுவுக்காகக் கையெழுத்திடுவான். இது என்ன கூத்து? என்னைப் பொருத்தவரை நான் ஒரு பைசா கூட பண்டிகைக் கடன் வாங்கியதில்லை. அப்படி வாங்கி தங்களுக்கு கடனாகக் கொடுக்குமாறு பலர் தொல்லையும் செய்தனர். அது நடக்கவில்லை என்பது வேறு விஷயம். இருப்பினும் இது சம்பந்தமான எரிச்சல் அப்படியே உள்ளது.
கடன் தராதவர்களின் பெயர், பெயர், போட்டோ எல்லாம் இப்போதுதான் ரெகுலராகப் போடுகிறார்கள் என அறிகிறேன். அதுவும் தொழிலாளர்கள் யூனியன் ரொம்பப் போராடி இதை நடைமுறைக்கு கொண்டு வந்தது என்பதையும் அறிகிறேன்.
ஆங்கிலத்தில் spanner in the works என்று கூறுவார்கள். அதற்கு உதாரணமாக நான் குறிப்பிட நினைப்பது கடன் வழங்கும் விழாக்கள், அதிலும் மந்திரிகள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் என்னவோ தன் அப்பன் வீட்டுப் பணம் போல வங்கிப் பணங்களை தங்கள் ஜால்ராக்களுக்கு கடனாக வழங்கச் செய்வது. கடன் எப்படித் தரக்கூடாது என்பதற்கு உதாரணங்கள் இந்த நிகழ்ச்சிகள். அவ்வாறு பொது பணத்தை ரூட் விட்ட ஒரு மந்திரியால் தண்டனை மாற்றம் பெற்ற இந்த ஆசிரியர் இம்மாதிரி விஷயங்களை குறைந்தபட்சம் எதிர்மறை உதரணங்களாகக் காண்பித்திருக்கலாம். அதே போல ஓட்டு அரசியலுக்காக சகட்டு மேனிக்கு கடனை ரத்து செய்வதால், அவற்றை முதலில் நாணயமாகத் திருப்பித் தந்தவர்கள் முட்டாள் ஆக்கப்படுதலையும், அது எப்படி வங்கிகளின் செயல்பாட்டை பாதிக்கின்றன என்பதைப் பற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கலாம்.
யார் கண்டது, இவையெல்லாம் வேறொரு புத்தகத்தில் வருமோ என்னவோ.
இம்மாதிரி புத்தக மதிப்புரையை பதிவாகப் போடுவதில் ஒரு சௌகரியம் என்னவென்றால், பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக மதிப்புரையை நீட்டிக் கொண்டே போகலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
16 hours ago
28 comments:
இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
கிழக்குப் பதிப்பகத்தின் வெற்றிக்கு இதுதான் காரணம்.
புத்தகம் நன்றாகவே போகும்
டி.பி.ஆர். ஜோசஃப் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
நன்றி தீவு அவர்களே. பலரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். பாடப் புத்தகமாகக் கூட வைக்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மதிப்புரையாக பத்திரிக்கையில் வெளியிடும் அளவுக்கு சிறப்பான விமர்சனம் அளித்துள்ளீர்கள் டோண்டு அவர்களே
நன்றி நாட்டாமை அவர்களே. புத்தகம் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கு பதிப்பகத்துக்கும் பாராட்டுகள். அதை மதிப்புரையில் கூற மறந்து விட்டேன்.
இப்போதுதான் பத்ரி அவர்களிடம் பேசி சிறந்த தயாரிபுக்கான பாராட்டை தெரிவித்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜோசப் சாருக்கு வாழ்த்துக்கள்.பத்ரிக்கும் வாழ்த்துக்கள்
கார் வாங்க வேண்டாம், தேவையில்லா கடன் வேண்டாம் என்பதுக்கெல்லாம் பதிவுகள் போட்டு வரும் உங்களுக்கு, "சந்தோஷமா கடன் வாங்குங்க"ங்கற புத்தகத்தை எப்படி புகழ மனசு வந்தது? நண்பரோட புத்தகங்கறதுதான் அதுக்கு காரணமா?
ஷம்சுத்தீன்
குறை கண்டுபிடிக்கணும்னே கடைசீல பட்டியல் போட்டாப்புல இருக்கு?
திருவொத்தியூர் திருவள்ளுவன்
Dear Raghavan Sir,
Since I had to leave the City on an urgent work on Friday evening I could not read your post till you called me yesterday.
I'll post my reply to some of your queriers on my return. Thanks for your review.
Regards,
tbrjoseph
<--- இப்போதெல்லாம் டெலிமார்கெட்டிங்கில் போன் போட்டு கடன் வாங்குமாறு தொந்திரவு செய்கிறார்கள். ஆனால் அவர்களிடம் மாட்டிக் கொண்டால் கந்து வட்டியையே நாணச் செய்யும் அளவுக்கு செயல்பாடுகள் உள்ளன. அவற்றையெல்லாம் குறிப்பிட்டு வாசகர்களை உஷார்படுத்தியிருக்கலாம் என எனக்கு படுகிறது --->
athellam TBR bank-la kodukkathathunala avar aarvam kaattamal irunthirukkalam.
//இப்போதுதான் பத்ரி அவர்களிடம் பேசி சிறந்த தயாரிபுக்கான பாராட்டை தெரிவித்தேன்.//
idhu ippo romba mukkiyamo. badriyaiyum avan asinga asingamaa thittanumaa?
//idhu ippo romba mukkiyamo. badriyaiyum avan asinga asingamaa thittanumaa?//
எவன் திட்டுவான் என்கிறீர்கள்? எதற்கு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கார் வாங்க வேண்டாம், தேவையில்லா கடன் வேண்டாம் என்பதுக்கெல்லாம் பதிவுகள் போட்டு வரும் உங்களுக்கு, "சந்தோஷமா கடன் வாங்குங்க"ங்கற புத்தகத்தை எப்படி புகழ மனசு வந்தது? நண்பரோட புத்தகங்கறதுதான் அதுக்கு காரணமா?
ஷம்சுத்தீன்
ஜோசஃப் சார் எனது அருமை நண்பர் என்பது உண்மையே. அது அவருடைய புத்தகத்தை பார்த்ததுமே வாங்க வைத்ததின் முக்கியக் காரணங்களில் ஒன்று. ஏற்கனவே ஜோசஃப் சாரின் எழுத்து எனக்கு பரிச்சயம், ஆகவே அதுவும் இன்னொரு காரணம். மற்றப்படி, அவர் புத்தகத்தை புகழக் காரணம் அப்புத்தகம் நிஜமாகவே அருமையானதாக இருப்பதுதான்.
_________________________________
//குறை கண்டுபிடிக்கணும்னே கடைசீல பட்டியல் போட்டாப்புல இருக்கு?//
கேட்பதற்கு தமாஷா இருக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எவன் திட்டுவான் என்கிறீர்கள்? எதற்கு?//
vera yaru thittuvanga? ungaloda malaysian pangali dhaan
"நாட்டாமை said...
மதிப்புரையாக பத்திரிக்கையில் வெளியிடும் அளவுக்கு சிறப்பான விமர்சனம் அளித்துள்ளீர்கள் டோண்டு அவர்களே"
இது நீங்களே போட்டுக்கொண்ட பின்னூட்டமா?
கடைசியாக வந்த நாட்டாமை பின்னூட்டம் போலியானது.
Very good review Mr Dondu.
continue your service to tamil blog world .
http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_02.html
Senthazal Ravi Rocks :)
ஜோசப் சாருக்கு வாழ்த்துக்கள்.பத்ரிக்கும் வாழ்த்துக்கள்
சமயம் கிடைத்தால் வாங்கிப் படிக்கிறேன் சார்.
-ஜோசஃப் சார் எனது அருமை நண்பர் என்பது உண்மையே. -
ஜோசப் மட்டுமல்ல விடாது கருப்பைக்கூட நீங்கள் அருமை நண்பராகத்தான் நினைக்கிறீர்கள்.
ஆனால், ஜோசப் உங்களை அப்படி நினைக்கிறாரா என்பது ...... ஹி ஹி ஹி
ஜோசஃப் அவர்கள் எனது இந்த விமரிசனத்துக்கு பதிலாக தனது பதிவு ஒன்றையே இட்டுள்ளார். அது இதோ:
முதலில் என்னுடைய 'சந்தோஷமா கடன் வாங்குங்க' புத்தகத்திற்கு மதிப்புரை எழுதிய நண்பர் ராகவன் அவர்களுக்கு மிக்க நன்றி.
இனி அவர் தன்னுடைய மதிப்புரையில் எழுப்பியிருந்த சில கேள்விகளுக்கு என்னாலான விளக்கங்கள்:
'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான்....' இதை கம்பர் எழுதியதாகத்தான் பலரும் கருதுகிறார்கள் என்பது உங்களுடைய பதிவில் வந்த பின்னூட்டங்களில் ஒருவரைத் தவிர யாரும் மறுக்காமல் விட்டதிலிருந்தே தெரிகிறது. இருப்பினும் தவற்றை அடுத்த பதிவில் திருத்திவிடுகிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
இத்தகைய புத்தகங்களில் காணப்படும் பலவீனங்கள் என்று நீங்கள் கூறியிருப்பது சரிதான். ஆனால் அடுத்துவரும் பதிப்புகளில் (editions) அன்றைய வழக்கத்திலிருப்பவற்றை அளிப்பதன் மூலம் சரிசெய்துவிட முடியும் என்று கருதுகிறேன்.
அதேபோன்று அவற்றில் அளிக்கப்படும் புள்ளி விவரங்களும், மாதிரிகளும் கூட சம்பந்தப்பட்ட வாசகர்களை மட்டுமே ஈர்க்கும். கடன் வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இப்புத்தகத்தை அணுகுபவர்களுக்கு இது நிச்சயம் பயனளிக்கும் என்பது என் கருத்து. மற்றபடி பொழுதுபோக்குக்காக படிப்பவர்களை இது அவ்வளவாக ஈர்க்காது.
என்னுடைய வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராக இருந்த காலத்தில் இத்தகைய வழிமுறைகளை விரிவாக பாடமாக எடுத்த பயிற்சி இந்த புத்தகத்தை எழுத மிகவும் உதவியது என்றால் மிகையாகாது. ஆனால் அப்போதும், 'போரடிக்குது சார்.' என்று முணுமுணுத்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். இப்போதும் இப்புத்தகத்தை படிக்கும் சில வாசகர்களுக்கு இப்படி தோன்றலாம்.
ஆனால் கடன் வாங்குபவர்கள் flat rate மற்றும் Interest on reducing balances என்ற இருவகை வட்டி வசூலிக்கும் முறைகளில் உள்ள வேறுபாடுகளை தெளிவாக உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அளிக்கப்பட்ட மாதிரிகள் அவை. ஆனால் புதிய தலைமுறை வங்கிகள் சிலவற்றில் பணியாற்றும் சில நண்பர்கள் இப்படி generalise செய்தது சரியா என்று கேட்டதென்னவோ உண்மை. என்னுடைய மாதிரிகள் அவர்கள் கடைபிடிக்கும் முறையை குறைகூறும் முயற்சியல்ல என்று பதிலளித்தேன். கடன் வாங்கும் சாதாரணியர்கள் (laymen) இந்த பாகுபாட்டை நிச்சயம் உணர்ந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்ததால் அவற்றை அளிப்பது என முடிவெடுத்தேன்.
குறைபாடுகள்:
Index: புத்தகத்தின் இறுதியில் அளித்திருக்கலாம். இதற்கு தேவையான மென்பொருள் என்னிடம் இல்லை. பதிப்பகத்தாரின் உதவியுடன் அடுத்த பதிவில் தர முயல்கிறேன்.
Telemarketing: இதற்கென தனி அத்தியாயம் வேண்டும் என்பது உண்மைதான். அடுத்த பதிவில் தருவதற்கு முயல்கிறேன்.
Preclosure: இதையும் விரிவாக கூறுவதற்கு ஒரு தனி அத்தியாயம் தேவை. சுருக்கமாக கூற வேண்டுமென்றால் இது வங்கிகள் கடைபிடிக்கும் Asset- Liability Management (ALM) Policyஐ பொறுத்து அமைந்திருக்கும் எனலாம். வங்கிகள் தங்களுடைய சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களுக்கு நிர்ணயிக்கும் வட்டி விகிதம் அதனதன் காலத்தைப் பொறுத்தும் வங்கியின் ALM கொள்கைக்கு ஏற்றவாறும் அமைந்திருக்கும். நீங்கள் மூன்று வருடங்கள் கழித்து கடனைத் திருப்பித் தருவதற்காகத்தான் இந்த வட்டி விகிதத்தை நாங்கள் நிர்ணயித்தோம். இப்போது திடீர் என்று முன்கூட்டியே கடனை திருப்பி செலுத்தினால் அந்த வட்டி இழப்பை மீண்டும் வேறொருவருக்கு கடன் வழங்கித்தானே ஈடுகட்ட வேண்டும்? அந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் இழப்பை ஈடுகட்டத்தான் ஒரு சதவிகித அபராத வட்டி வசூலிக்கப்படுகிறது என்கின்றன வங்கிகள்.
Interest on deposits: இதுவும் ஒரு ALM exerciseதான். வங்கிகள் எப்போதுமே நீண்ட கால சேமிப்பை விரும்புவதில்லை. இதற்கு முக்கிய காரணம் அன்றாடம் மாறி வரும் நாட்டின் பொருளாதார கொள்கைதான். நம்முடைய நாட்டின் பொருளாதரம் உலக சந்தையுடன் இணைக்கப்பட்டதிலிருந்து (இது ஒரு தாராள பொருளாதார கொள்கையின் விளைவு என்றும் கூறலாம்) உலக சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதும் ஒரு காரணம். இன்றிலிருந்து மூன்று வருடங்களில் பணச் சந்தையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்று முன்கூட்டியே கணிக்கவியலாத அளவிற்கு பொருளாதாரம் ஒரு நிச்சயமற்றதன்மையைக் கொண்டுள்ளது. ஆகவேதான் குறுகியக் கால சேமிப்புகளுக்கு அதிக வட்டியும் நீண்டகால சேமிப்புகளுக்கு குறைந்த வட்டியும் அளிக்கப்படுகின்றது. நீண்டகால கடன் திட்டங்களுக்கு குறைந்த வட்டி விகிதம் விதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
கடன் பெற்றவர்களின் புகைப்படங்கள் வெளியிடுவது: இதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. எங்களுடைய வங்கி ஒருபோதும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. இதை சற்று கூர்ந்து கவனியுங்கள். நடுத்தர மக்களுடைய அதுவும் பெரும்பாலும் சிறு வணிகம் செய்வோர், குடியிருக்க வீடு வாங்க கடன் பெற்றவர்களுடைய புகைப்படங்களே வெளியிடப்படுகின்றன. நடுத்தர மற்றும் பெரு வணிகர்கள், தொழிலதிபர்களுடைய புகைப்படங்களை வெளியிடட்டும் பார்க்கலாம்.
கடன் விழாக்கள்: எனக்கு இன்னும் முப்பது மாத காலம் பணிக்காலம் உள்ளதே:-)
மேலும் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை புத்தகமாக வெளியிடுவதற்கு எந்த பதிப்பகத்தாரும் முன்வர தயங்குவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவேளை எழுத்தாளரே அவருடைய சொந்த செலவில் புத்தகத்தை வெளியிட்டு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை சந்திக்க தயார் என்றால், இது சாத்தியமாகலாம். அந்த அளவுக்கு நெஞ்சுறுதி எனக்கு இல்லை.. பணவசதியைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
கடன்களை ரத்து செய்வதால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பைப் பற்றி அறியாதவர்களா நம் தலைவர்கள்? அதுதான் இன்றைய நிர்பந்தம். ஆகவேதான் இதை அரசியல் என்று கூறி தள்ளிவிடுகிறோம்.
இந்த நீண்ட விளக்கத்தை பின்னூட்டமாக இடுவது சிரமம் என்பதால்தான் தனிப்பதிவாக வெளியிட முன்வந்தேன் டூண்டுக்கு பயந்து அல்ல:-)
மீண்டும் மதிப்புரை எழுதிய சீனியர் ராகவன் அவர்களுக்கு நன்றி.
அன்புடன்,
டிபிஆர். ஜோசஃப்
அதற்கான எனது எதிர்வினைகள் பின்வருமாறு:
//ஆகவேதான் குறுகியக் கால சேமிப்புகளுக்கு அதிக வட்டியும் நீண்டகால சேமிப்புகளுக்கு குறைந்த வட்டியும் அளிக்கப்படுகின்றது.//
அதற்கு பேசாமல் இத்தனை ஆண்டுகளுக்கு மேல் டிபாசிட் ஏற்பதற்கு இல்லை என்றே விகிதங்களை போட்டு விடலாமே. நான் இதைக் கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது. ஒருவர் யதார்த்தமாக 5 ஆண்டுகள் என பழைய ஞாபகத்தில் கடன் புதுப்பித்தலுக்கான படிவத்தில் குறிப்பிட, பேங்கும் அப்படியே ஏற்றுக் கொண்டு குறைந்த வட்டிக்கு போட்டு விட்டது. அவ்வாறு செய்யாது இந்த சூட்சுமத்தை விளக்குவது மேலாளரின் தார்மீகக் கடமையில்லையா? மேலும் எதற்கு இந்த சனியன் பிடித்த குறைந்த வட்டி காலங்களை அனுமதிக்க வேண்டும்? ஏமாறுபவர் ஏமாறட்டும் என்று விட்டு விடுவதைப் போல அல்லவா இது உள்ளது?
//என்னுடைய வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராக இருந்த காலத்தில் இத்தகைய வழிமுறைகளை விரிவாக பாடமாக எடுத்த பயிற்சி இந்த புத்தகத்தை எழுத மிகவும் உதவியது என்றால் மிகையாகாது. ஆனால் அப்போதும், 'போரடிக்குது சார்.' என்று முணுமுணுத்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். இப்போதும் இப்புத்தகத்தை படிக்கும் சில வாசகர்களுக்கு இப்படி தோன்றலாம்.//
எனக்கு நிச்சயம் போரடிக்கவில்லை. நான் ஏற்கனவே உங்கள் திரும்பிப் பார்க்கிறேன் பதிவில் வேறு கோணத்திலிருந்து பார்த்தவன் என்பதால் போர் அடிக்கவில்லை என்பது நிஜம்.
//நீங்கள் மூன்று வருடங்கள் கழித்து கடனைத் திருப்பித் தருவதற்காகத்தான் இந்த வட்டி விகிதத்தை நாங்கள் நிர்ணயித்தோம். இப்போது திடீர் என்று முன்கூட்டியே கடனை திருப்பி செலுத்தினால் அந்த வட்டி இழப்பை மீண்டும் வேறொருவருக்கு கடன் வழங்கித்தானே ஈடுகட்ட வேண்டும்? அந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் இழப்பை ஈடுகட்டத்தான் ஒரு சதவிகித அபராத வட்டி வசூலிக்கப்படுகிறது என்கின்றன வங்கிகள்//
இது போங்குத்தனமான வாதமாகத்தான் படுகிறது. அரசு வங்கிகள் preclosure-ஐ அனுமதிக்கும் போது தனியார் வங்கிகளுக்கு ஏன் இந்த வேலை? வாடிக்கையாளர் கடனிலேயே இருக்க வேண்டும் என விரும்புவது போல இல்லை?
மற்றப்படி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு நிறுவனத்தால் பண்டிகை கடன்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தேனே? தொகை அல்பமானதாக இருக்கலாம், ஆனால் விதி முறைகள் கேலிக் கூத்தாக உள்ளன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நீங்கள் மூன்று வருடங்கள் கழித்து கடனைத் திருப்பித் தருவதற்காகத்தான் இந்த வட்டி விகிதத்தை நாங்கள் நிர்ணயித்தோம். இப்போது திடீர் என்று முன்கூட்டியே கடனை திருப்பி செலுத்தினால் அந்த வட்டி இழப்பை மீண்டும் வேறொருவருக்கு கடன் வழங்கித்தானே ஈடுகட்ட வேண்டும்? அந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் இழப்பை ஈடுகட்டத்தான் ஒரு சதவிகித அபராத வட்டி வசூலிக்கப்படுகிறது என்கின்றன வங்கிகள்//
இது முல்லா நசிருத்தீனை ஞாபகப்படுத்துகிறது. ஒரு சமயம் அவரது நண்பன் ஒருவன் அவரிடம் ஐந்து பொற்காசுகள் கடனாகக் கேட்டானாம். அவன் யோக்கியமானவன் இல்லை. ஆகவே கடனைத் திருப்பித் தருவானா என்பதும் நிச்சயமில்லை. இருந்தாலும் முல்லா கடன் தந்தார்.
என்ன ஆச்சரியம்? குறித்த காலத்தில் பணம் ஒழுங்காக வந்தது. முல்லா சிந்தனையில் ஆழ்ந்தார்.
அடுத்த முறை அதே போல நண்பன் வந்தான். இம்முறை 30 பொற்காசுகள் கேட்டான். முல்லா மறுத்து விட்டார். காரணம் கேட்டதற்கு "நீ என்னை ஏமாற்றி விட்டாய்" என்றார். நண்பன் வியப்புடன் என்ன ஏமாற்றினேன் என்று கேட்க, முல்லாவின் பதில்:
"நீ பணத்தைத் திருப்பித் தர மாட்டாய் என எண்ணினேன். ஆனால் திருப்பித் தந்து என் நம்பிக்கையில் மண்ணையள்ளிப் போட்டாய்".
இது எப்படி இருக்கு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனக்கு கடன் வாங்கனும். எனக்கு ஜாமீன் கையெழுத்து போடுறியா நோண்டு மாமா?
//எனக்கு கடன் வாங்கனும். எனக்கு ஜாமீன் கையெழுத்து போடுறியா நோண்டு மாமா?//
எதிரியை அவ்வளவு மடையனாக நினைப்பது போர் யுக்திக்கு ஒத்து வராது சிறுவனே.
டோண்டு ராகவன்
//எதிரியை அவ்வளவு மடையனாக நினைப்பது போர் யுக்திக்கு ஒத்து வராது சிறுவனே.
//
அடச்சீ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா ரொம்பதான்!!!
சும்மா கிட அற்பப் பதரே. நீயே ஓசி தண்ணி, சிகரெட், கோழி பார்ட்டி. உன்கிட்ட எவனாச்சும் ஜாமீன் கையெழுத்து கேப்பானா? வேனாம் வேனாம்.
//எதிரியை அவ்வளவு மடையனாக நினைப்பது போர் யுக்திக்கு ஒத்து வராது சிறுவனே.
டோண்டு ராகவன்//
சிறப்பான விமர்சனம் அளித்துள்ளீர்கள் டோண்டு அவர்களே
//அடச்சீ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா ரொம்பதான்!!!
சும்மா கிட அற்பப் பதரே. நீயே ஓசி தண்ணி, சிகரெட், கோழி பார்ட்டி. உன்கிட்ட எவனாச்சும் ஜாமீன் கையெழுத்து கேப்பானா? வேனாம் வேனாம்.//
கேட்டாலும் கிடைக்காதுங்கறது வேற விஷயம். இருந்தாலும் என்ன ஆச்சரியம்! இப்போதுதான் நான் மொழிபெயர்ப்பு சரிபார்த்த திருக்குறளை இங்கு பதிலாக அளிக்கிறேன்.
"உடுப்பதூம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்" - குறள் எண் 1079
திருவள்ளுவர் பதிவர் சந்திப்புக்கு வந்திருப்பாரோ? குறளுக்கு பொருள்?
யாராவது முத்தமிழ் வித்தகரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
டோண்டு ராகவன்
//குறளுக்கு பொருள்?
யாராவது முத்தமிழ் வித்தகரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.//
செகா ஃபைட்டா!
டோண்டு ரைட்டா!
வாடா வாடா
சூடா வாங்கிக்கடா!
இணைய்த்திலிருந்து சுட்டது. நன்றி கூகிள்!
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்
- பொருட்பால், அதிகாரம்: 108. கயமை, குறள்: 1079
பிறர் நண்றாக உடுப்பதையும் உண்பதையும் கண்டால், பொறாமை கொண்டு அவர்மீது குற்றம் காணத்துடிப்பான் கீழ்மகன்.
Post a Comment