1/15/2011

துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங் - 14.01.2011

எனது கார் ம்யூசிக் அகாடெமியை அடைந்தபோது மணி மாலை 04.30. ஆறரைக்குத்தான் மீட்டிங் ஆரம்பிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் பழைய அனுபவத்தால் 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே சென்றேன். இருப்பினும் அரங்கம் நிரம்பியிருந்தது. பிற்பகல் இரண்டரை மணிக்கே ஃபுல் ஆகிவிட்டது என பிறகு கேள்விப்பட்டேன். காலை 11.30 மணியிலிருந்தே மக்கள் வர ஆரம்பித்து விட்டனர் என்பதையும் அறிந்தேன்மேலும், நான் சென்ற சமயம் மினி ஹாலை திறந்தனர். ந்ல்ல வேளையாக உள்ளே இருக்கை கிடைத்தது.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் லைவ் ஒளிபரப்பில் வீடியோ மக்கர் செய்ய ஆடியோ மட்டும் நன்றாகக் கேட்டது. அதுவே போதும் என அமர்ந்து விட்டேன். வெளியே கார் பார்க்கிங்கில் கார்களை நிறுத்த அனுமதிக்கவில்லை. அதற்கென அருகே இருந்த பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மீட்டிங் ஆரம்பிக்கும் முன்னால் இணையத்தில் அதன் லைவ் கவரேஜுக்கான சுட்டியை அறிவித்தனர். அது முன்னமேயே தெரிந்திருந்தால் வீட்டிலேயே இருந்திருக்கலாமே எனத் தோன்றியது. இருப்பினும் இந்த விஷயத்தை குறுஞ்செய்தியாக 20 பேருக்கும் மேல் அனுப்பினேன். ஆனால் நடுவில் அந்த ரிலே நின்று விட்டதாக பதிவர் Hayyram எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். இப்போது அப்பக்கத்துக்கு போய் பார்த்தால் மீட்டிங்கின் சுருக்கம் என ஒரு வீடியோ இருக்கிறது, ஆனால் இப்போதைக்கு அது வேலை செய்யவில்லை.

சரி மீட்டிங் விஷயத்துக்கு வருகிறேன். சரியாக ஆறரை மணிக்கு சோ மைக்குக்கு வந்து ஆரம்பித்து வைத்தார். எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள், சித்திரையில் வரவிருக்கும் புத்தாண்டுக்கான முன்கூட்டியே வாழ்த்துக்கள் எனக்கூறி கலகலப்பூட்டினார்.

வழக்கம்போல துக்ளக்கில் வேலை செய்பவர்களை ஒவ்வொருவராக வரவழைத்து அறிமுகம் செய்வித்தார். அவ்வப்போது கிண்டல்களும் அதில் இருந்தன.அது லேட்டஸ்ட் ஹிந்து மகா சமுத்திரம் எடிஷன் ரிலீஸ் செய்யப்பட்டு, அவரது பேத்தி அதை பெற்றுக் கொண்டார்.

பிறகு பேசுவதற்காக பெயர் அளித்த சில வாசகர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வந்தனர்.

அவர்கள் வைத்த கேள்விகளும் அவற்றுக்கான சோவின் எதிர்வினைகளும் கீழே. (சாரம் மட்டும் தரப்பட்டுள்ளது)

1. 2010 நிகழ்வுகள் பல மக்களை உலுக்கி விட்டன. அவற்றின் விளைவுகளிலிருந்து நாட்டை மீட்க சாதாரண மக்கள் என்ன செய்யலாம்?
சோ: ஒழுங்காக ஓட்டுப் போட்டு நல்ல அரசை தேர்ந்த்டுக்கலாம். வேறு என்ன செய்ய முடியும்?

2. ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டுள்ள நம்மவர்களின் கருப்புப் பணத்தைக் கொணர முடியுமா?
சோ: முடியும் அரசு முயன்றால். ஆனால் இப்போதைய மத்திய அரசு முயலாது.

3. விவசாயத்தை சிறப்பிக்க எந்த அரசுமே தயாராக இல்லையே (மோதியைத் தவிர).
சோ: விவசாயம் செய்தால் பிழைப்பு இல்லை என்பதை பல விவசாயிகள் கண்டுவிட்டதால் அவர்கள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயருகின்றனர். அவர்களுக்கு தர வேண்டிய விலைகளை அவர்களது செலவைப் பொருட்படுத்தாமல் அரசே நிர்ணயிக்கிறது. ஆகவே பலருக்கு அது கட்டுப்படியாவதில்லை.
மேலும் விவசாயத்துக்கு ஏற்ப நீர்நிலைகளும் சரியாக இல்லை. அரசு மனது வைத்தால் செய்யலாம்.

4. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி?
சோ: குருமூர்த்தி அது பற்றி பேச இருக்கிறார். பிறகு நானும் பேசுவேன்.

5. தமிழகத்தில் கூட்டணி சாத்தியங்கள் (கேள்வி கேட்டவர் பல காம்பினேஷன்களை அடுக்கினார்)
சோ: பேச்சுக்கள் நடக்கின்றன, பார்ப்போம்.

6. இடதுசாரி சிந்தனையுடைய பல மீடியா கவரேஜ்கள் பற்றி?
சோ: அவ்வாறு பலர் எழுதுகிறார்கள். ஆனல் அவற்றால் சாதாரண மக்கள் பாதிக்கப்படவில்லை.

7. துணை முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடு பற்றி கேள்வி கேட்டார் (அவர் இரண்டு மணி நேரம் மேடையில் அமராமல் நின்றாரே)
சோ: நான் கூடத்தான் இந்த மீட்டிங்கில் 3 மணி நேரமாக நிற்கிறேன். ஸ்டாலின் என்ன செய்வார் பாவம், அழகிரியை சமாளிக்கவே நேரம் போதவில்லையே.

8. குஜராத்தில் மோதி வந்தது போல இங்கே நல்ல ஆட்சி அமைக்க யாராவது வருவார்களா?
சோ: அதற்கு தமிழக மக்கள் குஜராத்தியரின் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். 2007 தேர்த்தலில் காங்கிரஸ் பல இனாம்களை வாக்காளர்களுக்காக வாக்குறுதி அளித்தது. மோதியோ தான் பதவிக்கு வந்தால் மின்சாரக் கட்டணம் செலுத்தாதவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், அதே சமயம் மின்வெட்டின்றி நாள் முழுவதும் மின்சாரம் தருவதாகவும் கூற, அவரையே தேர்ந்தெடுத்தனர் குஜராத்தியர். ஆனால் அந்த மன்நிலை இங்கு வருமா? வந்தால் அம்மாதிரி ஆட்சி கிடைக்கும்.

9. தொலைக்காட்சி சேனல்கள் செய்திகளை அளிப்பதில் பரபரப்புக்கே முக்கியத்துவம் தருவது பற்றி?
சோ: என்ன செய்வது இது போட்டிகள் நிறைந்த இடமாகி விட்டது. ஆனால் அதே சமயம் தமிழகம் தவிர்த்த இடங்களில் டெலிவிஷன் போட்ட சத்தத்தால்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலே வெளியில் வந்தது என்பதையும் மறக்கக் கூடாது.

10. ஸ்டாலினுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி சரியாகத் தெரியவில்லை என தோன்றுகிறது. அவர் பூசி மெழுகி பேசுகிறார். அவர் எல்லாம் எப்படி துணை முதல்வரானார்? அவர் கலைஞர் டிவியை பார்ப்பதை விட்டு விட்டு ஜெயா டிவியை பார்த்தல் நலம், கலைஞரும் அவ்வாறே செய்ய வேண்டும்.
சோ: (கிண்டலுடன்) இப்போது கூட அவர்கள் துக்ளக் படிக்க வேண்டும் எனக்கூற உங்களுக்குத் தோன்றவில்லையே.

12. நீதிபதிகளின் பெயரும் கெடுவது பற்றி?
சோ: நான் பிராக்டீஸ் செய்த சமயத்தில் நீதிபதிகள் தவறு செய்வது விதிவிலக்காகவே இருந்தது. இப்போது நிலைமை மோசம் ஆகிவிட்டது. இருப்பினும் இன்னும் பல நல்ல நீதிபதிகள் உள்ளனர்.

13. நீரா ராடியா பற்றி?
சோ: இந்த அம்மையாரிடம் நிஜமாகவே பவர் இருந்திருக்கிறது. பிரதமரையே கிள்ளுக்கீரையாக மதித்துள்ளார்.

14. ஜெயலலிதாவை நெருங்க முடியவில்லை, ஆனால் கருணாநிதியை நெருங்க முடிகிறது.
சோ: கருணாநிதியை நெருங்க வேண்டுமானால் அவருக்கு ஜால்ரா போடுபவர்களால்தான் முடியும். அப்படி புகழுக்கு அலைகிறார் மனிதர். மாற்றுக் கருத்துக்களை கேட்கும் மனோபாவத்தில் இல்லை அவர். ஆனால் ஜெயலலிதாவிடம் எதிர்க் கருத்துக்களைக் கூறலாம். பொறுமையாகக் கேட்பார். அவற்றை ஏற்பாரோ மாட்டாரோ அது வேறு விஷயம்.

15. ரஜனிகாந்த், விஜயகாந்த் ஆகியோரை ஒன்றுதிரட்டி இந்த ஆட்சியை மாற்ற வழி சோ அவ்ர்கள் வழி செய்ய வேண்டும்?
சோ: நான் சொல்லிக் கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை.

16. தமிழர்களைக் கொன்ற ராஜபட்சேவுக்கான ஆதரவு பற்றி.
சோ: அவர் அடக்கியது புலிகளை. புலிகள் மட்டுமே தமிழர்கள் என்று இருப்பதாலேயே இக்கேள்வி வருகிறது. அவர் புலிகளை ஒடுக்கியது பெரிய விஷயம். இப்போது கேம்புகளில் இருக்கும் தமிழருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் நடந்து வருகிறது. ஆனால் புலிகளை இங்கும் வடிக்கட்ட வேண்டியிருக்கிறது.

17. கலைஞர் அடிக்கடி கடிதம் எழுதுவது பற்றி?
சோ: கடிதம் எழுதுவது எப்படி என லிஃப்கோ வெளியிட்டு வரும் நூல்களுக்கு அவர் சரியான போட்டி. தம் குடும்பத்தவருக்கு பதவி தேவை என்றால் நேராகவே தில்லியில் முகாம் போடுவார். மற்ற விஷயங்களுக்கெல்லாம் கடிதம் மட்டுமே.

18. பாமக எப்பக்கம் செல்லும்?
சோ: தெரியாது (டோண்டு ராகவன்: அது பாமகாவுக்கே இன்னும் தெரியாது)

மேலும் கேள்விகள் வந்தன, ஆனால் அவை எல்லாமே மேலே கூறப்பட்டுள்ளவற்றை பல காம்பினேஷன்களில் ரிபீட் செய்தன.

இப்போது குருமூர்த்தி பேச அரம்பித்தார். ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி ஒரு பொதுப்பார்வை அளித்தார். 1,76,000 கோடி ரூபாய் என்னும் தொகை எவ்வாறு சுட்டப்பட்டது என்பதற்கு துரிதமான கால்குலேஷன்கள் தந்தார். ஜயராம் ரமேஷ், கபில் சிபல் ஆகியோர் முழுச்சோற்றில் பூசனிக்காயை மறைக்க முயற்சி செய்வது பற்றியும் குறிப்பிட்டார்.

மன்மோகன் சிங் வெறுமனே வேடிக்கை பார்த்ததையும் குறிப்பிட்டார். ராசாவுக்கு சோனியாவின் பக்கபலம் இன்றி இது நடந்திருக்காது என்ற இம்ப்ளிகேஷனும் அவர் கூறியதில் இருந்து புலப்பட்டது.

கருப்புப்பணம் உலகளாவிய பிரச்சினை. வரிகள் பிரச்சினை இல்லாத பனாமா, லீஷ்டன்ஸ்டெஇன் போன்ற நாடுகளில் அவை குவிக்கப்பட்டு பல நாடுகளின் பொருளாதாரமே ஆட்டம் கண்டதில் பல நாடுகள் அம்மாதிரியான நாடுகளை நெருக்க அவையும் தம்மிடம் உள்ள கணக்குகளுக்கு யார் சொந்தக்காரர்கள் என்னும் லிஸ்ட் தரத் தயாராக இருக்கும் நிலையில் இந்திய அரசோ அதைப் பெற எந்த முயற்ச்சியையும் எடுக்கவில்லை.

ராஜீவ் காந்தியின் பெயரிலேயே 2.2 பில்லியன் டாலர்கள் இருக்க, அது பற்றிய செய்திகள் அவர் இறந்ததும் அமுக்கப்பட்டன. இறந்தவர் பர்றித் தவறாகப் பேசலாகாது என்ற நமது பொதுபுத்தியே இதற்குக் காரணம். ஆனால் தற்சமயம் மீண்டும் அவை வெளியே வந்துள்ளன. கேஜீபியிடமிருந்து அவர் பெற்றத் தொகையே ஸ்விஸ் வங்கியில் இப்போது ராகுல் காந்தியின் பெயரில் உள்ளது என்ற விஷயமும் பல இடங்களிலிருந்து வெளியாக, அவ்வாறு வெளியிட்டவர்கள் மேல் இதுவரை சோனியா காந்தி ஒரு அவதூறு வழக்கும் போடவில்லை எனபதையும் குருமூர்த்தி சுட்டிக் காட்டினார்.

வெளி நாடுகளில் முடங்கியிருக்கும் நம்மவர்களின் கருப்புப் பணத்தில் 25% சதவிகிதம் வந்தால் கூட நாட்டின் பொருளாதார முன்னேற்றம் 14 அல்லது 15% அபிவிருத்தியை எட்டும் என குருமூர்த்தி கூறினார்.

பிறகு சோ பேச ஆரம்பித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட ராசாவே தவறு நடக்கவில்லை எனக்கூறியதாலேயே தவறு ஒன்றும் நடக்கவில்லை என மன்மோகன் சிங் கிளிப்பிள்ளை மாதிரி கூறியதை அவர் சாடினார். அவ்வாறு எல்லா வழக்குகளிலும் கோர்ட்டுகள் நடக்க ஆரம்பித்தால் வழக்குகள் தேங்கும் நிலையே வராது என கிண்டலாகக் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகைகளைக் கணிப்பதில் சிஏஜி தவறு செய்துள்ளது எனக் கூறும் கபில் நட்டமே இல்லை என எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று அவர் திருப்பிக் கேட்டார். சிஏஜி அளித்த கணிப்பீடுகளை அவர் ரிப்பிட் செய்து, ராசாவோ கருணாநிதியோ தமது சொத்துக்களை த்ற்சமயம் 1991 விலைக்கு விற்பார்களா என்றும் கேட்டார்.

சீனாவின் அச்சுறுத்தல்கள், நக்சலைட்/மாவோயிஸ்ட் பிரச்சினைகளில் அரசு விட்டேத்தியாக நடந்து கொள்வதையும் அவர் சாடினார். போஃபோர்ஸ் விவகாரத்தில் வருமான வரித்துறை கமிஷன் பெறப்பட்டது உண்மைதான் எனக்க்கூற இன்னும் இல்லவே இல்லை என மத்திய அரசு மறுத்துவரும் கூத்தையும் எடுத்துரைத்தார்.

பிறகு பேச்சு திமுக நோக்கித் திரும்பியது. துளிக்கூட சமரசத்துக்கு இடம் தராமல் அக்கட்சியின் அடாவடிச் செயல்கலை விமரிசனம் செய்தார். இப்போதைக்கு மாற்றாகத் தெரிவது ஜெயலலிதா மட்டுமே. அவரது வாக்கு வங்கி 34 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. கூட்டணிகளைச் சரியாக அமைத்தால் அவர் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் விஜயகாந்தின் ஓட்டு வங்கி 8 சதவிகிதம் மட்டுமே. ஆகவே அவர் இத்தேர்தலில் ஜெயுடன் கூட்டு சேர்வதே நலம் என எடுத்துரைத்தார்.

திமுக செய்யும் குளறுபடிகள், கலைஞர் குடும்பத்தின் எல்லா கிளைகளிலிருந்தும் ஆட்கள் அரசியலுக்கு வந்ததால் பெரியவர் படும் கஷ்டங்கள், நாடு அடையும் துயரங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டார்.

அதே சமயம் ஜெயலலிதாவின் மழைநீர் சேமிப்புத் திட்டம், அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக்கை உறுதியாகக் கையாண்டது ஆகியவர்றையும் எடுத்துக் கூறினார்.

இந்த திமுக ஆட்சி இப்போது போக வேண்டியதன் கட்டாயத்தை பல உதாரணங்களுடன் எடுத்துக் கூறினார்.

பிறகு தேசீய கீதத்துடன் மீட்டிங் நிறைவு பெற்றது.

இப்போது மிகப்பெரிய, மற்றும் அவசரமான பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் உள்ளதால் சுருக்கமாகத்தான் வெளிட முடிந்தது. மன்னிக்கவும்.

இட்லிவடை பதிவில் ஆடியோவைக் கேட்கலாம் என எனது நண்பர் varadhaganesh இப்போதுதான் எனக்கு சேட்டில் தெரிவித்தார், அவருக்கும் என் நன்றி.

இந்த மீட்டிங்குக்கான ஒரு சுருக்க வீடியோ கிடைத்து, அதை கீழே தருகிறேன்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

63 comments:

பத்மநாபன் said...

''துக்ளக் ஆண்டு விழா - சோ --- இந்த தடவை வழக்கத்தை விட சற்று கூடவே சிரிப்புக்கும் சிந்தனைக்கும் விருந்து .... நீங்கள் சென்றிர்களா ''
இட்லி வடையில் பார்த்து இப்படி பின்னுட்டம் போட வந்தேன் ....தயாராக உங்கள் பதிவு ..நன்றி

radhakrishnan said...

thank u for the immedite and hot thuglag post.it covers well though brief.

Ganpat said...

டோண்டுவிற்கும் மற்ற நண்பர்களுக்கும்
என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

உங்கள் அரிய நேரத்தை செலவழித்து இட்ட இந்த பதிவு அருமை மிக நன்றி டோண்டு அவர்களே!

கடந்த 40 ஆண்டுகளாக கருமமே கண்ணாக தன் பணியை செவ்வனே செய்து வரும் சோ அவர்களுக்கு என் வணக்கம்

இந்த ஆண்டு நம் மாநிலத்தில் இரண்டு சைத்தான்களும் நீங்கி ஒரு ஊழலற்ற நல்லாட்சி மலர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

Prakash said...

ஏழை வாக்காளனும் ஸ்பெக்ட்ரமும்
From : http://sganeshmurugan.blogspot.com/2011/01/blog-post.html#comment-form

Part 1:
எலெக்சன் வந்துகொண்டே இருக்கிறது. தினசரிகளும், வாராந்தரிகளும் எல்லாம் தெரிந்த கடவுள்களாக கதைவிட்டு காசு பார்க்கின்றனர். நிரம்பப் படித்தவர்கள் செய்திகளுக்குள் தலையைவிட்டுக்கொண்டு கருத்து சொல்லவும் காசு கேட்கிறார்கள். கொஞ்சம் நஞ்சம் படித்தவர்கள் தெரியாததையும் தெரிந்தது போல கெட்டுகெதரில் பேசிக்கொண்டோ, இணையத்தில் அரட்டிக்கொண்டோ இருக்கிறார்கள். வெளிநாட்டில் வேலை செய்யும் வீரதீர இளைஞர்களோ சுட்டும் சுடாமலும் மேதாவித்தனமாக தனிராஜ்யமாக கருத்துகளை அள்ளித்தெளிக்கிறார்கள். விசயம் தெரிந்த சில வேகமான இளைஞர்களோ அவனும் கொள்ளையன், இவனும் கொள்ளையன், அதோ அவளும் கொள்ளைக்கார்யென அனைவரையும் முச்சந்தியில் நிறுத்த முனையச் செய்து, எந்த ஒரு யோக்கியவானையும் காட்ட மறுக்கிறார்கள்.

மேலே சொன்ன இவர்களுக்கும் எலக்சனுக்கும் என்ன சம்மந்தம். ஒரு மண்ணும் இல்லை. மண் சாலையில் வாகனம் போகும்பொழுது புறப்படும் தூசு போன்றவர்கள். வாகனம் சென்றதும் அடங்கிவிடும். அதாவது, இவர்கள் மாடு ஒன்னுக்குப்போவது போல் பேசிக்கொண்டு இருப்பார்களேயொழிய ஓட்டுப்போட போகமாட்டார்கள்.

ஆனால் இந்த ஏழை வாக்காளன் இருக்கானே அதாங்க, எங்கும் நிறைந்து இருக்கும் தினக்கூலிகள், அவர்களுக்கு ஸ்பெக்ட்ரமும் தெரியாது ஃபோர்பர்சும் தெரியாது.

ஆனாக் கண்டிப்பா ஓட்டு மட்டும் போட்றுவாங்க. யாருக்கு? அதான் இப்போதைய முக்கியக் கேள்வி. பதிரிக்கைகள் ஆயிரம் கணித்தாலும், அதையெல்லாம் மண்ணாக்கிவிட்டு மகுடம் ஏற்ற வைக்கப்போவது இந்த ஏழை வாக்காளந்தான். விழும் ஓட்டில் 90 சதவீதம் படிக்காத, இல்லை படித்த ஆனால் பத்திரிக்கை படிக்காத ஏழை வாக்காளனுடையது.

Prakash said...

Part 2:
அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும்? ஒரு மண்ணும் இல்லை. இன்று வேலைக்கு சென்றால் மூன்று வேலை சாப்பாடு. அது மட்டும்ந்தான். அதுவும் அந்த ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாயில் வாங்கி, ஓசி ஸ்டவ்வில், ஈசி கேசில் சமைத்துவிட்டு, ஆறமர்ந்து 14 இஞ்ச் கலர் டிவியில் மானாட மயிலாட பாக்கும்போது கடவுளே கருணாநிதின்னு சொல்லாம இருப்பாங்களான்னு தெரியல. கண்டிப்பா சொல்லுவாங்க. ஆமாம், பசி அவ்வளவு வலிமையானது. அந்த வலி பெரியளவுக்கு குறைஞ்சு இருக்கிறத, கிராமங்களப் பாக்கும்போது தெளிவாத் தெரியுது.

நான் சிறுவனாக இருந்தபோது இருந்த ஏழைத்தோற்றம் இப்பொழுது இல்லை. கோவனத்துடன் ஒரு ஏழையப் பார்ப்பது அருகிவிட்டது. கிட்டத்தட்ட எல்லோரும் நல்லுடை உடுத்தி, மூவேளை உண்டு, மொபைலோடு வலம் வருவது கண்ணுக்கு குளிர்ச்சி. தானா உருவான வளர்ச்சின்னு சொன்னாலும், கடவுள் கருணாநிதி கொடுத்தார்ன்னு ஒருவேள சொல்லிக்கொள்ளலாம்.அது ஓட்டாவும் மாறலாம்.

கொஞ்சம் நஞ்சம் ஏழை விவசாயிகள் இன்னும் கடனவுடன வாங்கி, இன்னும் விவசாயம் செய்யுறான்னா, கண்டிப்பா போனமுறை போல இம்முறையும் கலைஞர் தள்ளுபடி செய்வாருன்னு நம்பிக்கையா இருக்கலாம்.அதுபோக பயிர் இன்ஸ்சூரன்ஸ் கொடுத்து விளையாமப் போனாலும் காசுடான்னு சொல்ல வெச்ச கலஞருன்னு நினைக்கலாம். ஆக, விவசாயும் கலைஞருக்கு ஓட்டு போடலாம்.

இதுவரைக்கும் செருப்பு தச்சுகிட்டு எம்ஜியார் பின்னாடி ஓடிகிட்டு இருந்த அருந்ததியருக்கு உள் ஒதுக்கீட்ல ஒளியேத்தி, செருப்பு பிஞ்சா தூக்கிதான் போடனுமுன்னு நிலமைக்கு கொண்டுவந்த கலைஞருக்கு அவங்களும் ஓட்ட ஓங்கிப்போடலாம்.

காய்ச்சல் வந்தாலும், ஹார்ட் அட்டாக் வந்தாலும் கிராமத்து அனுபவ வைத்தியர்கிட்ட போனது நின்னு, தூக்குடா அப்பல்லோவுக்கு, கலைஞர் காப்பீடு இருக்குன்னு சொல்லவெச்ச கலைஞருக்கு ஏழைபாளைகள் ஓட்டுப்போடலாம்.

கூப்பிட்ட உடனே ஓடோடிவர்ற 108, மத்ய சர்க்காரு தந்ததாதா, இல்ல மாநில சர்க்கார் தந்ததான்னு யோசிக்க எல்லாம் நேரமில்லாம, கடவுள் கருணாநிதிதான் அனுப்பிச்சாருன்னு ஓட்டப்போடலாம்.

ரெண்டு ஏக்கர் நெலம் எல்லாருக்கும் கெடச்சதாங்றது முக்கியமில்ல, அதில இருக்கிற ஊழலும் முக்கியமில்ல. கெடச்சதா? ஆமா கெடச்சது. அப்ப கலைஞருக்கு ஓங்கிக் குத்துன்னு சொல்லலாம்.

கூரைவீடெல்லாம் காரை வீடாச்சு. இன்னும் ஆகும். கெடச்சவங்க கலைஞருக்கு ஓட்டப்போடலாம். அதுல கவுன்சிலருக்கு கொடுத்த முவ்வாயிரத்தப்பத்திக் கவலையில்லை.

வீட்ல சும்மா இருந்த பெண்களுக்கு குழுமம் அமைச்சு, உதவித் தொகை கொடுத்து பாக்குற கிராமங்களெல்லாம் பெண்கள் சுய உதவிக்குழுன்னு சொல்ல வெச்சதுக்கு தாய்க்குலங்களும் ஓட்டுகள அள்ளி வீசலாம்.

இந்த ஏழை வாக்காளனத் தவிர, அரசாங்க ஊழியர் கதையை சொல்லவும் செய்யனுமா? அவங்களுக்கு எப்பவுமே கலைஞர்தான் தோஸ்த். போக்குவரத்து சங்கத் தேர்தல பார்த்தது ஞாபகம் இல்லன்னா, கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்.

இப்படி இண்டு இடுக்கு இல்லாம கலைஞர் நுழைஞ்சுட்டார்ன்னுதான் தோனுது.

இந்த கண்டிப்பா ஓட்டுப்போடும் ஏழைகளுக்கு, ஸ்பெக்ட்ரமும் தேவையில்ல. ஈழமும் தேவையில்ல. ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணத்தின் வரலாறும் தேவையில்லை.

ஆனா ஓட்டு மட்டும் போட நிச்சயமா வரிசையில நிப்பான்.

ஆனால் அதுல ஊழல், இதுல ஊழல்ன்னு மாஞ்சு மாஞ்சு பேசியும் எழுதியும் திரியும் மேதாவிகளுக்கு, தேர்தல் தினம் ஒரு அரசாங்க விடுமுறை,அவ்வளவே.

Vijay said...

புண்ணியவான் சார் நீங்கள் :)
நான் வீட்டிலிருந்து www.kalakendra.com’ல் தான் கேட்டேன். கொஞ்சம் மக்கர் இருந்தது. ஆனாலும் பெரும்பாலும் முழு நிகழ்ச்சியையும் காட்டினார்கள்.
நேரில் இவ்வளவு மக்களோடு சேர்ந்து பார்ப்பதற்கும் வீட்டில் தனியாக உட்கார்ந்து கொண்டு பார்ப்பது கொஞ்சம் போர் :(

hayyram said...

சிறுபிசுறுகள், சில வேளையில் வீடியோ இல்லாமல் ஆடியோ மட்டும் என அவ்வபோது தடங்கல்கள் வந்தாலும் முழுமையாக ஒலி(ளி)பரப்பினார்கள். almamater.com என்ற வலைத்தளம் கூட சிலரது ஆன்மீக பேச்சுக்களை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கி நேரடி ஒளிபரப்புகளை செய்கிறது. அழகர் ஆற்றில் இறங்கும் காட்சிகளை தினமலர் தனது தளத்திலேயே நேரடி ஒளிபரப்பு செய்ததும் நினைவிருக்கலாம். தொலைக் காட்சிகளை விட இனி இணையம் இது போன்ற பல வசதிகளை எளிமையாக கொடுத்து விடும் என நம்பலாம். நல்ல அப்டேஷன். சரியான நேரத்தில் தகவல் பகிர்ந்தமைக்கு டோண்டு சாருக்கு நன்றி.

எல் கே said...

நன்றி சார்.

pt said...

டோண்டு சாரின் விமர்சனம்?
1.விஜய்க்கு எதிராக பின்னப்பட்டிருக்கும் இந்த வலை அரசியல் சார்ந்தது என்றாலும், அதை கடன் பிரச்சனையாக்கி விட்ட சூட்சுமத்தை நன்றாகவே உணர்ந்தாராம் அவர். இனிமேலும் பொறுத்திருப்பதில் அர்த்தமில்லை என்கிற அளவுக்கு சூடாகிக் கிடக்கிறாராம்.
2.காவலன் – உங்களுக்கு ஜண்டுபாம்
3.குடும்பத்தோடு பார்க்கக் கூடிய , அழகான காதலைக் கொண்ட, உணர்ச்சிகரமான கதையைக் கொண்ட, ஒரு வித்தியாசமான கிராமத்துக் கதை ஆடுகளம்! தனுஷும் வெற்றி மாறனும் நின்று ஆடும் வெற்றிக்களம்!
4.விஜய்க்கு உதவ வந்த விஜயகாந்த்
5.படித்தவர்களுக்காக மட்டுமே படமெடுப்பவர் என மனைவி சுகாசினியால் பாராட்டப்பட்ட மணிரத்னம், இப்போது தமிழ் இலக்கியத்தின் பெருமைகளுள் ஒன்றான பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கும் முயற்சியில் உள்ளார்.

ஞாஞளஙலாழன் said...

தி.மு.க, அ.தி.மு.க இரண்டு பேரிடமும் எனக்கு நம்பிக்கை இல்லை. இருவரையும் விட்டால் வேறு வழியும் இல்லை...இருவரில் யார் நல்லவர் என்றும் சொல்ல முடியவில்லை. சோ யாருக்கு ஆதரவு தருவார் என்பதும் நமக்கு தெரிந்த விஷயம் எனபதால் அதில் ஒன்றும் புதுமை இல்லை. மொத்தத்தில் இப்போதைய அரசியல் சூழ்நிலையில் மாறி மாறி வாக்களிப்பதே அழிவுகளை ஓரளவுக்காவது கட்டுப் படுத்த உதவும் என்று தோன்றுகிறது.

அருள் said...

நல்ல தொண்டர் கூட்டம், நல்ல வழிகாட்டி (வேற யாரு? சோ தான்).

அப்படியே மொத்த கூட்டத்தையும் - மியூசிக் அகாதமியோடு சேர்த்து - மத்திய ஆசிய பகுதிக்கு நாடு கடத்தியிருந்தா...தமிழ் நாடும் தமிழனும் தப்பித்திருக்கலாம். (தை பிறந்ததும் மெய்யாகவே வழி பிறந்திருக்கும்!)

ரமணா said...

கலைஞர் தொலைக்காட்சி கவிஞர் விஜய் நடித்த “இளைஞன்” திரைப்படத்தை ஆஹா ஒஹோ( பராசக்தி இரண்டு)என புகழ்ந்து தள்ளி பரபரப்பு விளம்பரம் செய்கிறது.சன் டீவியோ தான் வாங்கிய “ஆடுகளம்” சூப்பர் ஹிட் என ரசிகர்களின் பால் அபிஷேகம் ,ரசிகர் களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆர்பாட்ட விளம்பரம்.( எந்திரன் வெற்றிப் பாணி)

பாவம் இளைய தளபதியின் காவலன் திண்டாட்டத்தில்.(அவரை சப்போர்ட் பண்ண சொந்த டீவி இல்லையே)

மீடியாவை வைத்து கொண்டு இவர்கள் செய்யும் ஜெஹஜால வித்தைகளை


யார் வருவார் இதை யெல்லாம் சரி செய்ய?
(பாமர மக்களெல்லாம் இலவச போதையில்.)

நடக்கும் அரசியல் கூட்டணி சூழ்நிலையை (திமுக+காங்+பாமக)பார்த்தால் 2011 ல் மாற்றம் வருவதற்கான வாய்ப்புகளின் பிரகாசம் கேள்விக்குறி?
திமுகவும் -கலைஞரும் ஸ்திரத்தன்மை பெற்று விட்டனரா?

இனி எல்லாம் கடவுள் கையிலா?

வஜ்ரா said...

தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடவேண்டும் என்கின்ற பலர், அதற்கு கூறும் முக்கியக் காரணங்களில் ஒன்று சித்திரை முதல் நாள் இந்து புத்தாண்டு, அது ஒரு இந்துப் பண்டிகை என்கின்றனர்.

சரி, வாதத்துக்காக அது சரியே, அது ஒரு மதப்பண்டிகை என்றே வைத்துக்கொண்டாலும். சனவரி 14 தான் தை முதல் நாள் என்று எப்படி கணித்தனர் ? ஏதாவது பஞ்சாங்கம் இருக்கணுமே.

இன்றளவும் இந்துப் பஞ்சாங்கம் வைத்துத்தான் கணிக்கின்றனர் என்பது நிலவரம்.

ezhil arasu said...

//நடக்கும் அரசியல் கூட்டணி சூழ்நிலையை (திமுக+காங்+பாமக)பார்த்தால் 2011 ல் மாற்றம் வருவதற்கான வாய்ப்புகளின் பிரகாசம் கேள்விக்குறி?
திமுகவும் -கலைஞரும் ஸ்திரத்தன்மை பெற்று விட்டனரா?

இனி எல்லாம் கடவுள் கையிலா?//

கடவுளும் கலைஞர் பக்கமே !
தலைவர் கலைஞரின் சாதனை சரித்திரம் தொடரும்.
2011 ல் தலைவர்
2016 ல் தளபதி(தலைவரின் அனுமதியுடன்)
2036 ல் உதயநிதி

இதுதான் நடக்கப் போகிறது
உங்கள் நாட்குறிப்பில் எழுதி வைத்து கொள்ளுஙகள்.
ராஜராஜ சோழனுக்கு பின்னால் ராஜேந்திர சோழன் போல
தலைவருக்குப் பின்னால் தளபதியின் ஆட்சிதான்.

கழக ஆட்சியின் சலுகைகள்,சாதனைகள்,நலத் திட்ட உதவிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதை நாடே அறியும்.
அவை எல்லாம் வாக்குகளாய் மாறி சரித்திரம் படைக்கும்.

thenkasi said...

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு
பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு
இன்றோடு போகட்டும் திருந்தி விடு
இன்றோடு போகட்டும் திருந்தி விடு
உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு
அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு
நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு
அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு
நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்
நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்
இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

Anonymous said...

1.மு. க. அழகிரியின் நடவடிக்கை.....?
2.ஆட்சியில் பங்கு கேட்கும் காங்.தலைவர் இளங்கோவன் வெற்றி பெறுவாரா?
3.பெட்ரோல் லிட்டர் ரூ100 க்கு வந்து விடும் போலுள்ளதே?
4.நீதித் துறையிலும் புகார்ப் புயல், என்னவாகும்?
5. 2010-2011 துக்ளக் ஆண்டுவிழா ஒப்பிடுக->அரங்க மாற்றம்-வாசகர் எழுச்சி-சோவின் நகை சுவை மிளிரும் அரசியல் கிண்டல் - துக்ளக் வாசகர்கள் பேச்சு-நடை பெற்ற மாற்றங்கள்-மக்களின் அரசியல் விழிப்புணர்வு-திமுகவின் ரியாக்‌ஷன்-ஜெயா டீவியின் கவரேஜ்?

Arun Ambie said...

ezhil arasu said...
//தலைவர் கலைஞரின் சாதனை சரித்திரம் தொடரும்.
2011 ல் தலைவர்
2016 ல் தளபதி(தலைவரின் அனுமதியுடன்)
2036 ல் உதயநிதி//

ஏம்ப்பு எளிலரசு! ஒரு சந்தேகம்...
கலஞருக்கு அளகிரின்னு ஒரு மகன் இருக்காரு. அந்த மகனுக்கு தயாநிதின்னு ஒரு மகன் இருக்காரு. அவரும் ஒதயநிதி இசுடாலினு மாதிரியே சினிமா படமெல்லாம் வாங்கி விக்காரு!! அவுகள்ளாம் மருதையில வைகையாத்துல குப்புறடிச்சு படுத்துக் கெடப்பாகளா? இங்கனக்குள்ள இசுடாலினு, ஒதயநிதி, அவரு மகன், அவரு பேரன்னு போயிக்கேருந்தா ஆனா அண்ணன் பரம்பர வாளப்பளத்த வெச்சுக்கிட்டு யாவாரமா செய்யும்??

பொறவு அந்தாக்குல சிஐடி நகரத்துல கனிமொளி நாடாரு.... அந்தப்புள்ளக்கி ஒரு புருசன் புள்ளக்குட்டி எல்லாம் இருக்குல்ல....

இம்புட்டுக்கும் மேல மனசாச்சி மாறன் மகங்க....இவுகள எல்லாம் விட்டுபுட்டு... இசுடாலினு, ஒதயநிதி, இன்பன்னு பட்டியலப் போட்டுக்கிட்டு....

அமாங்........வீராபாண்டி ஆறுமொகம் வேற பிச்சிக்கிட்டு போறதுக்கு ரெடியா இருக்காரம்ல.... தெரியுமா???

பத்மநாபன் said...

//அப்படியே மொத்த கூட்டத்தையும் - மியூசிக் அகாதமியோடு சேர்த்து - மத்திய ஆசிய பகுதிக்கு நாடு கடத்தியிருந்தா..//

காமெடி பண்ணறதுல அருளண்ணன் சோ வை மிஞ்சிருவாரு ..அது சரி வெட்டறதுல இருந்து எப்ப கடத்தலுக்கு மாறினிங்க... அதுதான் ஐயாவும் அம்மாவும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகூட கொடுக்காம இழு இழு இழுக்கிறாங்க....

ezhil arasu said...

/ Arun Ambie said...

ezhil arasu said...
//தலைவர் கலைஞரின் சாதனை சரித்திரம் தொடரும்.
2011 ல் தலைவர்
2016 ல் தளபதி(தலைவரின் அனுமதியுடன்)
2036 ல் உதயநிதி//

ஏம்ப்பு எளிலரசு! ஒரு சந்தேகம்...
கலஞருக்கு அளகிரின்னு ஒரு மகன் இருக்காரு. அந்த மகனுக்கு தயாநிதின்னு ஒரு மகன் இருக்காரு. அவரும் ஒதயநிதி இசுடாலினு மாதிரியே சினிமா படமெல்லாம் வாங்கி விக்காரு!! அவுகள்ளாம் மருதையில வைகையாத்துல குப்புறடிச்சு படுத்துக் கெடப்பாகளா? இங்கனக்குள்ள இசுடாலினு, ஒதயநிதி, அவரு மகன், அவரு பேரன்னு போயிக்கேருந்தா ஆனா அண்ணன் பரம்பர வாளப்பளத்த வெச்சுக்கிட்டு யாவாரமா செய்யும்??

பொறவு அந்தாக்குல சிஐடி நகரத்துல கனிமொளி நாடாரு.... அந்தப்புள்ளக்கி ஒரு புருசன் புள்ளக்குட்டி எல்லாம் இருக்குல்ல....

இம்புட்டுக்கும் மேல மனசாச்சி மாறன் மகங்க....இவுகள எல்லாம் விட்டுபுட்டு... இசுடாலினு, ஒதயநிதி, இன்பன்னு பட்டியலப் போட்டுக்கிட்டு....

அமாங்........வீராபாண்டி ஆறுமொகம் வேற பிச்சிக்கிட்டு போறதுக்கு ரெடியா இருக்காரம்ல.... தெரியுமா???//

அப்பாவி ஆடுகளை மோத விட்டு வழியும் குருதியை ருசிபார்க்கத் துடிக்கும் குள்ள நரியின் குறுமதி படைத்த ஆதிக்க சக்திகளின் கனவு இனி பலிக்காது.
ஆயிரம் ஆறுமுகம் போனால் என்ன? பத்தாயிரம் அம்பிகள் வந்தால் என்ன?

ezhil arasu said...

தந்தை பெரியாரின் வாரீசாய்,அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாய், வாழும் வள்ளுவன் ,ராஜராஜ சோழனின் மறு பிறப்பு,நேர்மைக்கே நேர்மையை கற்றுகொடுக்கும் தமிழ் சமுதாயத்தின் விடிவெள்ளி தலைவர் கலைஞர் தன் சாணக்கியத்தந்திரத்தால்
அத்துணை சிரமங்களையும் தடைகளையும்
சமாளித்து
அனைத்து தரப்பினரின் பேரதரவுடன் ராஜேந்திர சோழனாய் வெற்றிப் புன்னகையுடன் வீர வலம் வரும் தளபதியின் பட்டாபிஷேகத்தை விரைவில் நடத்துவார்.அதில் மதுரையாரின் செல்வமகன் தயாநிதியின் திருமண வைபோகத்தில் நாட்டோரும் நல்லோரும் பார்த்து மகிழ்ந்த தலைவரின் குடும்ப ஒற்றுமை மீண்டும் வலுப்படும்.

இனி வரும் 1000 ஆண்டுகளுக்கு தானைத் தலைவர் கருணாநிதி அவர்களின் சோழ சாம்ராஜ்யம் தரணி போற்ற வெல்லட்டும்
மீண்டும் சரித்திரம் படைக்கட்டும்.
தமிழ்ச் சாதிக்கு இனி எப்போதும் பொற்காலம் தான்

Arun Ambie said...

//அப்பாவி ஆடுகளை மோத விட்டு வழியும் குருதியை ருசிபார்க்கத் துடிக்கும் குள்ள நரியின் குறுமதி படைத்த ஆதிக்க சக்திகளின் கனவு இனி பலிக்காது.//
ஆ...ஹாங்! குடும்பத்துக்காரவுகள தவுத்து கட்சில இருக்க மத்தவுகள்ளாம் ஆடு. கலஞரு மந்தயா வெச்சு இம்புட்டு நாளும் வளத்துக்கிருந்துருக்காரு! இம்புட்டு நாளா இது தெரியாமப் போச்சாய்யா?? சொல்பேச்சு கேக்கலன்னா கடா வெட்டி பொங்க வெச்சுருவாகங்குறீய!!
சொறதக் கேக்கவே நடுக்கமா இருகேய்யா... அப்பறம்யா..... கலஞரு கொள்ளுப் பேரப்புள்ளக்கி பேரப்புள்ள கீரப்புள்ள பொறக்காமயா பொயிறும்..... அதுவுந்தான் தமிளகத்துக்கு விடிபிளாட்டினம் (ஒசந்த பொருளாச் சொல்லுவம்ன்னு ஒரு ஆருவம்) அந்தப்புள்ளத் தலவரும் வாளுக!
(சொத்தா பத்தா... சொல்லுதானப்பூ.... களுத சொல்லீட்டுப் போவம்? வீட்டுக்கு ஆட்டோ கீட்டோ வந்துருச்சுன்னா? உசுர கலஞரு தலயிலருந்து கொட்டிப் போனதா மதிக்க நாம என்ன சங்ககாலத் தமிளு வீரனா?)

//தந்தை பெரியாரின் வாரீசாய்//
பெரியாருக்கு கலஞரு வாரிசா! அப்ப வீரமணி என்னண்ணே செய்வாரு?? பெரியார் திடலுக்கு வெளிய பொரட்டா கட வெப்பாரோ!!

அவரு கெடக்கட்டும்....

ஆகக்கூடி நீங்க கனிமொளி நாடார மொதலமச்சர் ஆக்க மாட்டீய? சேலலிதாம்மாவயும் எதுத்துக்கிருகீக! பொம்பளயாளுக மேல ஏய்யா இம்புட்டு கடுப்பு ஒங்களுக்கு... அங்கனக்குள்ள மெட்ராசுல சோ சோன்னு ஒரு ஆளு இருக்காரே... (துக்குளக்குக்காரரு) அவருகிட்ட சிசிய்ப்புள்ள கிசியப்புள்ளயா சேந்துட்டீகளோ!!! அவருதான் 33% கூடாதுன்னு சொறாராம்ல!!

அருள் said...

வஜ்ரா said...

// //சனவரி 14 தான் தை முதல் நாள் என்று எப்படி கணித்தனர் ? ஏதாவது பஞ்சாங்கம் இருக்கணுமே.// //

தமிழர்களின் வானியல் ஆரியர்களின் அறிவுக்கும் முந்தையது.

கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலைப் பின்பற்றியும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் தை முதல்நாளை தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.

கதிரவன் வடதிசை நோக்கி பயணிக்கும் முதல் நாளே, தை முதல் நாளாகும். இதுவே ஆண்டின் முதல் நாள் என்பதற்கு ஏற்பவே, "பழையன கழிதலும் புதியன புகுதலும்" “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்கிற கருத்துக்கள் நடைமுறையில் உள்ளன்.

வீடுகளைப் புதுப்பித்தல், புது வண்ணம் பூசுதல், புது அரிசி, புதுப்பானையில் பொங்கலிடுதல் என எல்லாமும் புதிய ஆண்டை வரவேற்கின்றன.

பொங்கல் இந்து மதத்தை சாராதது என்பதற்கு எடுத்துக்காட்டு - குடும்பத்தில் எவராவது இறந்து துக்கம் நடந்திருந்தாலும் கூட பொங்கல் அந்த ஆண்டில் கைவிடப்படுவதில்லை. மேலும், சேனை, சேம்பு, கருணை, சிறு கிழங்கு, பனங்கிழங்கு போன்ற பார்ப்பனர்களாலும் இந்து மத பெருந்தெய்வங்களாலும் விலக்கப்பட்ட கிழங்கு வகைகள் பொங்கல் நாளில் படையல் இடப்படுகின்றன.

அதேசமயம். பார்ப்பனர்களின் சித்திரை முதல் நாள் என்பது கேவலமான பின்னணி உடையது:

""அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:

“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.""

வஜ்ரா said...

தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் கேவலமான ஆரியப்புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள் என்றால் மலேசியா, இலங்கை, போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் கூட ஏன் தை முதல் நாளைப்புத்தாண்டாகக் கொண்டாடுவதில்லை ?

அது போகட்டும்.

தமிழர்களின் வானியல் ஆய்வுக்கு சான்று உளதா ?

எதன் அடிப்படையில் சூரியன் சனவரி 14 தான் வட திசை நோக்கி நகர்கிறான் என்று கணக்கிடுகிறீர்கள். எந்தெந்த வானியல் சாத்திரங்கள் தமிழில் உள்ளன ? அதன் ஆசிரியர்கள் யார் யார் ?

தமிழ் சங்க இலக்கியங்களில் தை முதல் நாள் தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது என்று ஏதாவது சான்றுகள் உள்ளதா ? சித்திரை முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடினர் என்பதற்கு சான்றுகள் உள்ளன. இவ்வளவு ஏன் ஒரு 100 ஆண்டுகள் முன்பு தமிழ்நாடாகவே கருதப்பட்ட கேரளத்திலும் சித்திரை முதல் நாளே விஷு என்ற புத்தாண்டு.

ஆந்திரா, கர்னாடகா போன்ற உங்கள் திராவிட நாடுகளில் கூட சித்திரை முதல் நாளே புத்தாண்டு. ஆக அது ஒன்றும் திராவிடப் புத்தாண்டும் அல்ல.

அந்தக் "கேவலமான" ஆரியப்புத்தாண்டை தமிழர்கள் சீரோடும் சிறப்போடும் மஞ்சள் துண்டு மங்குனி மண்டையனின் சட்டத்தையும் மீறி கொண்டாடிவருகின்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் அருள் அவர்களே ? பார்ப்பானர்களின் சதியா ?

hayyram said...

தமிழ் வருடப்பிறப்பு உருவானது எப்படி?

http://hayyram.blogspot.com/2008/12/blog-post.html

hayyram said...

///தமிழர்களின் வானியல் ஆய்வுக்கு சான்று உளதா ?

எதன் அடிப்படையில் சூரியன் சனவரி 14 தான் வட திசை நோக்கி நகர்கிறான் என்று கணக்கிடுகிறீர்கள். எந்தெந்த வானியல் சாத்திரங்கள் தமிழில் உள்ளன ? அதன் ஆசிரியர்கள் யார் யார் ?

தமிழ் சங்க இலக்கியங்களில் தை முதல் நாள் தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது என்று ஏதாவது சான்றுகள் உள்ளதா ? சித்திரை முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடினர் என்பதற்கு சான்றுகள் உள்ளன. இவ்வளவு ஏன் ஒரு 100 ஆண்டுகள் முன்பு தமிழ்நாடாகவே கருதப்பட்ட கேரளத்திலும் சித்திரை முதல் நாளே விஷு என்ற புத்தாண்டு./// super.

Unknown said...

\\சோ: அதற்கு தமிழக மக்கள் குஜராத்தியரின் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும்//

எப்படி பாக்குற சிறுபான்மை மக்களை எல்லாம் கர்பிணி என்று பாராமல் வயிற்ரை கிழித்து சிசுவை கொளுத்தும் மனநிலையை கொண்டு இருக்க வேண்டுமா.?

Unknown said...

\\“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.""//

அருள்
ஓஒ ஓ இப்படி தான் இவனுங்க வருசத்த கணக்கு இட்டு இருக்காங்களா எனக்கு இது தெரியாம போச்சு அருள். வஜ்ரா இதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்லையே.

வஜ்ரா said...

JJ,

விடுதலை, கம்யூனிஸ்டு தருதலை போன்ற பத்திரிக்கையிலிருந்து வரும் துண்டுச் செய்தியின் அடிப்படையில் எழுதியிருக்கும் கன்றாவிக்கெல்லாம் பதில் என்று ஒன்று சொல்லி மேன்மைப்படுத்த முடியாது.

இது உமக்கு,
http://www.answeringmuslims.com/2010/08/pregnant-woman-whipped-200-times-then.html

Unknown said...

\\விடுதலை, கம்யூனிஸ்டு தருதலை போன்ற பத்திரிக்கையிலிருந்து வரும் துண்டுச் செய்தியின் அடிப்படையில் எழுதியிருக்கும் கன்றாவிக்கெல்லாம் பதில் என்று ஒன்று சொல்லி மேன்மைப்படுத்த முடியாது.

இது உமக்கு,
http://www.answeringmuslims.com/2010/08/pregnant-woman-whipped-200-times-then.html //

யூதன், கிருத்தவன், தமிழ் ஹிந்து போன்ற கன்றாவி தளங்களில் இருந்து வரும் துண்டுச் செய்தியின் அடிப்படையில் எழுதியிருக்கும் கன்றாவிக்கெல்லாம் பதில் என்று ஒன்று சொல்லி மேன்மைப்படுத்த முடியாது

NO said...

அன்பான நண்பர் திரு டோண்டு,

//அப்படியே மொத்த கூட்டத்தையும் - மியூசிக் அகாதமியோடு சேர்த்து - மத்திய ஆசிய பகுதிக்கு நாடு கடத்தியிருந்தா...தமிழ் நாடும் தமிழனும் தப்பித்திருக்கலாம். (தை பிறந்ததும் மெய்யாகவே வழி பிறந்திருக்கும்!)//

திரு அருள் என்பவர் வெறும் வெறுப்பு வியாபாரி மட்டுமே. ஒரு நாஜி மனதில் குடிகொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சி எண்ணங்களுக்கும் இவரின் எண்ணங்களுக்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றும் இல்லை. தங்களின் எல்லாவிதமான குறைகளுக்கும், தாழ்வு மனப்பான்மைகளுக்கும், இயலாமைகளுக்கும் காரணம் தேடி அலைந்ததில், ஒரு சமூகத்தை ஒழித்து கட்டுவதில்தான் அதன் தீர்வு உள்ளது என்ற முடிவுக்கு வந்தவர்கள்! விசாலமான பார்வையோ, அறிவுபூர்வமான
தர்கங்களோ ஒரு ஹிட்லர் பக்தனிடம் எப்படி எடுபடாதோ, இவர்களை போன்றவர்களிடமும் சுத்தமாக எடுபடாது! ஹிட்லர் வாழ்ந்த காலத்தில் நடந்தது போல நடக்கும் இந்த காலங்களில் எந்த ஒரு பிரிவினரையும் யாரும் ஒழித்துகட்ட முடியாது என்பதானால் இவரை போன்றவர்களின் வன்மம் அடங்காத ஒன்றாக
அவரின் மனதிற்குள்ளும் இதயத்திற்குள்ளும் சுற்றிக்கொண்டிருக்கிறது! அதற்க்கு வடிகாலாகத்தான் அவர் உங்களின் பிளாகில் வந்து தன்னின் வெறுப்பினை அவிழ்த்து விடுகிறார். ! தன்னின் அறிவின்மைக்கும் தோல்விக்கும் காரணம் புரியாமல் சக மனிதர்களே அதற்க்கு காரணமென நம்புபவர்கள்! இவரை போன்றவர்கள் genocide போன்றவைகள்தான் ஒரு இறுதி முடிவை தரும் என்று திட்டவட்டமாக முடிவெடுத்தவர்கள்!

இவர் கூடிய சீக்கிரம் ஒரு நல்ல மன நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றால் அவருக்கு நலம். இல்லையேல், இதை போன்ற வெறுப்பு அவர் வாழ்க்கையை மெதுவாக அரித்துவிடும்!

ஆதலால் அவருக்கு உதவியாக நீங்கள் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று அவரின் பதில்களை இங்கே பிரசுரிக்காமல் இருப்பதே! அது நடக்காவிடில்,
வடிகாலில்லாத அவரின் வெறுப்பு இன்னுமும் வன்மைமடைந்து, சீக்கிரமே மருத்துவரிடம் செல்லத்தூண்டும்! உலகிற்கு மற்றொரு நாஜியின் பங்களிப்பு அப்பொழுதுதான் குறையும் வாய்ப்பு உள்ளது!! பாவம்.......

Arun Ambie said...

அபிதான சிந்தாமணி ஒரு இந்து மதப் புத்தகம் அல்ல. அறுபது வருடக் கணக்கைக் காட்டும் சோதிடப் புத்தகமும் அல்ல, அல்லது புராணப் புத்தகமும் அல்ல. அது ஹேமச்சந்திர சூரி என்னும் சமணரால் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நிகண்டு வகையிலான அகராதி.

சமணர் இந்து தர்ம வழக்கங்களை கேவலப்படுத்தி எழுதியதில் வியப்பேதும் இல்லை. அதை 'மர'மண்டைகள் மேற்கோள் காட்டி "ஹெஹ்ஹெஹ்ஹே.... ஹிந்து மதம் கேவலமானது" என்று கொக்கரிப்பதும் வியப்பதற்கில்லை.

60 ஆண்டுகள் குறித்த தெளிவான மேலதிக விவரம் http://www.tamilhindu.net/t919-topic இங்கே இருக்க்கிறது.

pt said...

JEYA TV IS TELECASATING THUGLAK MEETING HELD ON 14.1.2011 at CNI-
DATE:17.1.2011
TIME: 0800 p.m

dondu(#11168674346665545885) said...

@NO
அருள் என்பவர் ஒரு பக்கா காமெடி பீஸ். அவரது பின்னூட்டங்களால் எனது தமிழ்மண பேஜ் ரேங்க் மேம்படுகிறது என்பதைத் தவிர அவரால் எனக்கு காலணாவுக்கு பிரயோசனமில்லை.

என்ன, தமாஷாக எங்களுக்கெல்லாம் பொழுது போகிறது. இவரது வன்னிய சாதி செய்யும் வன்கொடுமையைப் போலவா பார்ப்பனர்கள் செய்கிறார்கள்? அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என இருப்பவர்களை இம்மாதிரியான காமெடி பீசுகள் என்ன பாதிக்க முடியும்?

அவ்வப்போது ஹா ஹா ஹோ ஹோ என அவுட்டுச் சிரிப்பை உதிர்ப்பார். சும்மா சொல்லப்படாது அதுவும் கேட்க தமாஷாகத்தான் உள்ளது. அவரது பதிவுகளை பார்த்திருக்கிறீர்களா? அவரது வலைப்பூவில் சுயமாக ஏதும் எழுத துப்பில்லை. வந்து விடுகிறார் மணியாட்டிக் கொண்டு மற்ற வலைப்பூக்களுக்கு.

என்ன செய்வார் பாவம், அவரது தலைவரும் தலைவரின் மகனும் ராஜ்யசபா சீட்டுக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஜெயலலிதா என்னும் பார்ப்பனர், தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட இசை வேளாள சாதியைச் சார்ந்த கருணாநிதி என மாறி மாறி ஜாலரா அடிப்பவர்கள்தானே. அவர்களது தொண்டரான இவர் மட்டும் எவ்வாறு இருப்பார்?

ஆகவே அருளின் பின்னூட்டங்கள் கிசுகிசு மூட்டுகின்றன என்று மட்டும் சொல்லிக் கொள்வேன்.

மற்றப்படி எனக்கே அலுத்துவிட்டால் அவரது பின்னூட்டங்கலை தடை செய்தால் போயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

வஜ்ரா said...

// //தமிழ் சங்க இலக்கியங்களில் தை முதல் நாள் தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது என்று ஏதாவது சான்றுகள் உள்ளதா ? சித்திரை முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடினர் என்பதற்கு சான்றுகள் உள்ளன.// //

அந்த சான்றுகளை கொஞ்சம் எடுத்து விடுங்களேன்

hayyram said...

//அவ்வப்போது ஹா ஹா ஹோ ஹோ என அவுட்டுச் சிரிப்பை உதிர்ப்பார். சும்மா சொல்லப்படாது அதுவும் கேட்க தமாஷாகத்தான் உள்ளது// நல்ல சிரிப்பு. //மற்றப்படி எனக்கே அலுத்துவிட்டால் அவரது பின்னூட்டங்கலை தடை செய்தால் போயிற்று// அப்பாடி, இப்பவாவது செய்யறதா முடிவெடுத்தீங்களே. அதுவே பெரியவிஷயம். ஆனாலும் உங்களுக்கு ரொம்பதான் பொறுமை சார்.

dondu(#11168674346665545885) said...

//அப்பாடி, இப்பவாவது செய்யறதா முடிவெடுத்தீங்களே//
இன்னும் அதற்கான காலம் வரவில்லை. அப்படி வந்தால் ஓசைப்படாமல் செயல்படுத்தி விடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

வஜ்ரா said...

// //ஆந்திரா, கர்னாடகா போன்ற உங்கள் திராவிட நாடுகளில் கூட சித்திரை முதல் நாளே புத்தாண்டு. ஆக அது ஒன்றும் திராவிடப் புத்தாண்டும் அல்ல.// //

நீங்கள் குறிப்பிடுகிற சித்திரை முதல் நாளும் தமிழ் நாட்டின் சித்திரை முதல் நாளும் "ஒரே நாள்" அல்ல. ஆந்திரா, கருநாடக மாநிலங்களின் உகாதி வேறு, தமிழ் நாட்டின் சித்திரை முதல் நாள் வேறு.

Shanker Shyam Sundhar said...

Arul: Pongal is not da day on which sun starts to travel apparently towards south.... Its dec 21st. (One of the two longest days...) Can u just go and study from NASA Site b4 putting any comments...??

அருள் said...

NO said...

// //திரு அருள் என்பவர் வெறும் வெறுப்பு வியாபாரி மட்டுமே.// //

இந்துத்வ பயங்கரவாதக் கூட்டம், சோ, தினமலர், தி இந்து'வின் ஈழ எதிர்ப்பு, தமிழ் இந்து இணையதளம், திரு. டோண்டு'வின் பாலத்தீனம் மற்றும் பார்வதி அம்மாள் கட்டுரைகள் - இவையெல்லாம் உங்கள் கண்களுக்கு வெறுப்பு வியாபாரமாகத் தெரியவில்லையா?

வஜ்ரா said...

puthandu என்ற விக்கியிலேயே உள்ளது. படித்துக்கொள்ளவும்.

இன்றளவும் நம் மூதாதயர் செய்தது போல் சித்திரையில் தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தையில் நம் மூதாதயரி புத்தாண்டு கொண்டாடினார்கள் என்பதற்கு சான்றுகள் நீங்கள் தான் காட்டவேண்டும்.

மேலும், தை மாதம் முதல் நாள் இந்த நாள் என்று எதன் அடிப்படையில், எந்த "தனித்தமிழ்" வானியல் சாத்திரத்தால் "தனித்தமிழ்"அறிஞர்கள் கண்டுபிடித்துச் சொன்னார்கள் என்பதையும் நீங்கள் காட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.

ஒன்று சொல்லட்டுமா...

சனவரி 14 அல்லது 15 தான் தை முதல் நாள் என்பதே உங்களுக்கு "இந்து" பஞ்சாங்கத்தின் படி தான் கணித்துச் சொல்லப்படவேண்டும்.

இன்றைய தனித்தமிழ் திராவிட "சமயச்சார்பற்ற" சமத்துவப்புத்தாண்டின் கதி இதுவே.

வஜ்ரா said...

//
ஆந்திரா, கருநாடக மாநிலங்களின் உகாதி வேறு, தமிழ் நாட்டின் சித்திரை முதல் நாள் வேறு.
//

அதுக்கும் இதுக்கும் என்ன மூன்று மாதமா வித்தியாசம் ?

2011 ஏப்ரல் 4 உகாதி, ஏப்ரல் 14 புத்தாண்டு. கேரளத்தில் விஷுவும் அதே நாள் தான். இதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத ஒன்று. நீங்கள் காட்டவேண்டியது எந்தத் திராவிடத் தனித்தமிழ் பஞ்சாங்கத்தால் தை முதல் நாள் புத்தாண்டு என்கிறீர்கள் என்பதும் சங்க இலக்கியச் சான்றும் தான்.

அருள் said...

வஜ்ரா said...

// //இன்றளவும் நம் மூதாதயர் செய்தது போல் சித்திரையில் தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தையில் நம் மூதாதயரி புத்தாண்டு கொண்டாடினார்கள் என்பதற்கு சான்றுகள் நீங்கள் தான் காட்டவேண்டும். // //

மூதாதையர் என்றால் யார்? எப்போது?

இலக்கியத்தில் ஆவணி முதல்நாள் தான் மூதாதையர் புத்தாண்டு என்பதற்கு கூடத்தான் சான்று இருக்கிறது. தொல்காப்பியர் (கிமு 200 - கிமு 1,500) தமிழர்களது ஆண்டு ஆவணியில் தொடங்கி ஆடியில் முடிந்ததாகச் சொல்கிறார்.

காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்

இந்த நூற்பாவிற்கு உரை எழுதிய நர்ச்சினார்கினியர் சிம்ம இராசிக்கு உரிய மாதம் ஆவணி. கடக இராசிக்கு உரிய மாதம் ஆடி. ஆக முன்னாளில் ஆவணி மாதத்தில் ஆண்டு தொடங்கி ஆடி மாதத்தில் முடிந்திருக்கிறது என்கிறார்.

தமிழ்ப் புத்தாண்டு பழங்காலத்தில் சித்திரையில் தொடங்கவில்லை என்பதற்கு இந்த உரை ஆணித்தரமான சான்று.

அருள் said...

வஜ்ரா said...

// //ஒன்று சொல்லட்டுமா...சனவரி 14 அல்லது 15 தான் தை முதல் நாள் என்பதே உங்களுக்கு "இந்து" பஞ்சாங்கத்தின் படி தான் கணித்துச் சொல்லப்படவேண்டும்.// //

தமிழிசையை திருடி அதற்கு கருநாடக இசை என்று பெயரிட்டது போன்று மற்றுமொரு புரட்டுதான் இந்து பஞ்சாங்கமும்.

தமிழர்களின் வானியல் அறிவைத் திருடி அதனுடன் மூடநம்பிக்கை கட்டுக்கதைகளை கலந்து உருவாக்கப்பட்டதே இந்து பஞ்சாங்கம் என்பதும்.

ஜோதிஜி said...

வீட்டில் இருந்து இதை படிப்பதால் பண்பலையில் ஒலிக்கும் ரா ரா பாட்டு இனிமையாக இருக்கிறது

அருள் said...

வஜ்ரா said...

// //தை மாதம் முதல் நாள் இந்த நாள் என்று எதன் அடிப்படையில், எந்த "தனித்தமிழ்" வானியல் சாத்திரத்தால் "தனித்தமிழ்"அறிஞர்கள் கண்டுபிடித்துச் சொன்னார்கள் என்பதையும் நீங்கள் காட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.// //

தை மாதம் தமிழர்களால் கொண்டாடப்படும் மாதம் என்பதற்கு இலக்கிய ஆதாரம் உள்ளது:

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையும்
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும்
"தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறும்
"தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறும்
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகையும்

குறிப்பிடுகின்றன.

ஆனால், மன்னர்கள் கொண்டாடிய இந்திர விழா தவிர்த்து சித்திரைக்கு தனிச்சிறப்பு எதுவுமில்லை.

தமிழனின் நலம் நாடிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

'பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''

என்ற பாடலில் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்கியுள்ளார்.

அருள் said...

Shanker Shyam Sundhar said...

// //Arul: Pongal is not da day on which sun starts to travel apparently towards south.... Its dec 21st. (One of the two longest days...) Can u just go and study from NASA Site b4 putting any comments...??// //

கதிரவன் வடதிசை நோக்கி பயணிக்கும் முதல் நாள் இந்த ஆண்டில் திசம்பர் 22, 2011 ஆக இருக்கும். ஆனால், இது கால காலத்திற்கும் இப்படியே இருந்தது இல்லை. காலக்கணக்கீட்டின் தவறினால் சீசரின் காலத்தில் - கி.மு. 46இல் - திசம்பர் 25 ஆக இருந்தது 16 ஆம் நூற்றாண்டில் திசம்பர் 12 ற்கு நகர்ந்துவிட்டதாக குறிப்பிடுகின்றனர்.

இந்த குறைபாடு கிறிகேரியன் காலக்கணக்கில் மாற்றப்பட்டு திசம்பர் 20 - 23 இடையே நாளைக் குறித்துள்ளனர்.

எனவே, தமிழர்கள் தைத் திருநாளைக் கொண்டாடத் தொடங்கிய போது "தை 1" கதிரவன் வடதிசை நோக்கி பயணிக்கும் முதல் நாளை ஒட்டியே அமைந்திருக்கக் கூடும்.

http://valavu.blogspot.com/2007/01/blog-post.html
http://en.wikipedia.org/wiki/Winter_solstice
http://www.timeanddate.com/calendar/december-solstice.html

வஜ்ரா said...

//
தமிழ்ப் புத்தாண்டு பழங்காலத்தில் சித்திரையில் தொடங்கவில்லை என்பதற்கு இந்த உரை ஆணித்தரமான சான்று.
//

கேணைத்தனமான சான்று.

இதையெல்லாம் என்றோ சொல்லி அதற்கு தெளிவான பதிலும் சொல்லியாகிவிட்டது.

http://www.tamilhindu.net/t919-topic

அருண் அம்பி என்பவர் கொடுத்த அதே லிங்கைப் ஒழுங்காகப் படிக்கவும். அதில் அதே பாடலுக்குறிய விளக்கத்துடன் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள்.


தமிழர் வானியல் அறிவைத் திருடி அதனுடன் மூடநம்பிக்கையைக் கலந்து (என்னமோ ரேஷன் மண்ணென்னையைத் திருடி அதனுடன் விளக்கெண்ணையைக் கலப்பது போல்!) கொடுக்கும் வரையில் தமிழர்கள் எல்லாம் என்ன சொம்பு நக்கிக்கொண்டிருந்தார்களா ?

குடுகுடுப்பை said...

16. தமிழர்களைக் கொன்ற ராஜபட்சேவுக்கான ஆதரவு பற்றி.
சோ: அவர் அடக்கியது புலிகளை. புலிகள் மட்டுமே தமிழர்கள் என்று இருப்பதாலேயே இக்கேள்வி வருகிறது. அவர் புலிகளை ஒடுக்கியது பெரிய விஷயம். இப்போது கேம்புகளில் இருக்கும் தமிழருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் நடந்து வருகிறது. ஆனால் புலிகளை இங்கும் வடிக்கட்ட வேண்டியிருக்கிறது.
//
ராஜபக்சே விடுதலைப்புலிகளை மட்டுமா கொன்றார். போர் விதிமுறைகள் மீறப்பட்ட வீடியோக்களை சோ பார்க்கமாட்டாரா? இந்துந்துவம் பேசுபவர்கள் இலங்கையில் கொல்லப்பட்டது பெரும்பாலானோர் இந்துக்கள் என்ற முறையிலாவது ராஜபக்சேவை சோ கண்டித்திருக்கலாம். இல்லை பார்ப்பனர்கள் அதிகம் சாவதில்லை என்பதால் ராஜபக்சேவுக்கு கூஜா தூக்குகிறாரா? இனியும் ராஜபக்சே எந்தவொரு தீர்வையும் தருவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
விடுதலைப்புலிகளை எதிர்ப்பு என்பது தமிழின அழிப்பை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கசொல்கிறது, கொடுமை.

Arun Ambie said...

@ டோண்டு ஐயா!
உங்கள் வலைப்பூவில் தமிழ் வானொலிக்கான இணைப்பு கொடுத்திருப்பது நன்றாக இருக்கிறது. என் தமிழ் வலைப்பூவிலும் இணைத்துவிட்டேன். மிக்க நன்றி!!

அருள் said...

// //http://www.tamilhindu.net/t919-topic

அருண் அம்பி என்பவர் கொடுத்த அதே லிங்கைப் ஒழுங்காகப் படிக்கவும்.// //

இந்து மதம், சோதிடம் இவையெல்லாம் தமிழர் வாழ்வில் நச்சாக ஊடுருவிய காலத்திற்கு முந்தைய இலக்கிய தகவல்களை எல்லாம் எடுத்துப் போட்டு குழப்பி, ஏதோ 'காலாகாலத்திற்கும் தமிழர்கள் சாக்கடையில் உழன்றவர்கள்' என்பது போன்று எழுதப்பட்டுள்ள கட்டுரைதான் அந்த சுட்டியில் உள்ளது.

தமிழ்இந்து தளத்தை பார்த்து அதில் எழுதப்பட்டுள்ளவை உண்மை என்று நம்ப வேண்டுமானால் - அதற்கு மரை கழன்றிருக்க வேண்டும்.

அருள் said...

குடுகுடுப்பை said...

// //போர் விதிமுறைகள் மீறப்பட்ட வீடியோக்களை சோ பார்க்கமாட்டாரா? இந்துந்துவம் பேசுபவர்கள் இலங்கையில் கொல்லப்பட்டது பெரும்பாலானோர் இந்துக்கள் என்ற முறையிலாவது ராஜபக்சேவை சோ கண்டித்திருக்கலாம். இல்லை பார்ப்பனர்கள் அதிகம் சாவதில்லை என்பதால் ராஜபக்சேவுக்கு கூஜா தூக்குகிறாரா?// //

சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்று வருணித்துக் கொள்பவர்கள். அந்த வகையில் தமிழ்நாட்டு பார்ப்பனர்களும் சிங்களவர்களும் ஒரே கூட்டம்.

அநீதியாகக் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் - சூத்திரர்கள். மனு'வின் சட்டப்படி "பார்ப்பனர்கள் சூத்திரர்களைக் கொல்லலாம். அவ்வாறு கொலை செய்வது ஒரு குற்றமே அல்ல. மாறாக, அந்தக்கொலையை எதிர்ப்பதுதான் குற்றம்."

எனவே, ராசபட்சே குற்றமிழைத்ததாக பார்ப்பனர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.

குடுகுடுப்பை said...

அருள்
பார்ப்பனர்கள் என்று பொதுப்படுத்த நான் விரும்பவில்லை, இங்கே பின்னூட்டமிடும் தீவிர பார்ப்பனரான பாலா என்பவர் உட்பட ஈழத்தமிழருக்க்கு ஆதரவாகவும், சிங்கள ஆதிக்கத்தை வெறுப்பவர்களும் உண்டு, ஆனால் சோ அப்படி அல்ல.

அருள் said...

குடுகுடுப்பை said...

// //பார்ப்பனர்கள் என்று பொதுப்படுத்த நான் விரும்பவில்லை// //

ஈழத்தமிழருக்கு ஆதரவான பார்ப்பனர்களும் உண்டு என்பதை நானும் ஏற்கிறேன். விதிவிலக்குகள் எல்லா இடத்திலும் உண்டு.

நடைமுறையில் - இந்து ராம், தினமலர், சோ, சுப்ரமணிய சுவாமி, (முன்னாள்) செயலலிதா என ஈழத்தமிழருக்கு எதிரானோர் பலரும் பார்ப்பனராக இருப்பதையே நான் குறிப்பிட்டேன்.

pt said...

JEYA TV IS RETELECASATING THUGLAK MEETING HELD ON 14.1.2011 at CNI-
DATE:18.1.2011
TIME: 0830 p.m

வஜ்ரா said...

//
(முன்னாள்) செயலலிதா
//

அப்ப இப்ப பேர் வேறயா ?

ஞாஞளஙலாழன் said...

-------------------------------
அருள் said...
நடைமுறையில் - இந்து ராம், தினமலர், சோ, சுப்ரமணிய சுவாமி, (முன்னாள்) செயலலிதா என ஈழத்தமிழருக்கு எதிரானோர் பலரும் பார்ப்பனராக இருப்பதையே நான் குறிப்பிட்டேன்.
---------------------------------

இந்நாள் ஜெயலலிதா ஈழத்தமிழருக்கு ஆதரவானவர் என்று கருதுகிறீர்களா அருள்?

Shanker Shyam Sundhar said...

@ Arul: Plz dont blaber. Dondu's notion of u a comedy piece is 100% correct

hayyram said...

குருமூர்த்தியின் இத்தாலிக்காரி சோனியாவின் முகத்திரையை கிழிக்கும் விளக்கமான கட்டுரை http://www.dinamani.com/edition/story.aspx? &SectionName=India&artid=363147&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=

அருள் said...

Shanker Shyam Sundhar said...

// //Dondu's notion of u a comedy piece is 100% correct// //

என்ன செய்வது?

உங்க ஆளுங்களுக்கு நான் காமடி பீசு.

எனக்கு உங்க ஆளுங்க எல்லோரும் "மகா லூசுத்தனமான காமடி பீசு".

hayyram இன் "தமிழ் வருடப்பிறப்பு எப்படி உண்டானது?" என்கிற பதிவைப் பாருங்கள்.

http://hayyram.blogspot.com/2008/12/blog-post.html

சூரியனின் வடக்கு நோக்கிய அயன நகர்வின் தொடக்கத்தையே தை முதல் நாளாகக் கொண்டாடும் பழக்கம் ஏற்பட்டது என்கின்றனர் தமிழறிஞர்கள்.

ஆனால்,இதையே மாற்றி சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளை - சித்திரை முதல்நாளாகக் கணக்கிடுவது தமிழர் மரபு என்று ஹிஹிஹிஹிராம் புரூடா விடுகிறார்.

ஹேராமின் புரூடாவையும் படித்து அவர் காமெடி பீசா? இல்லையா? என்று சொல்லுங்கள்.

truthseeker said...

http://www.sishri.org/puthandufull.html

அருள் said...

ஆத்மா said...

//
http://www.sishri.org/puthandufull.html
//

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0dHj060ecGG773b4F9EO4d2g2h2cc2DpY3d426QV3b02ZLu3e

http://madharasan.wordpress.com/2010/04/15/தமிழ்ப்-புத்தாண்டு-சித்த/

http://eelakkural.mywebdunia.com/2009/01/11/1231625160000.html

http://tholkaappiyam.blogspot.com/2009/01/blog-post.html

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=8825:2010-05-21-12-35-30&catid=44:general&Itemid=123

http://groups.google.com/group/keetru/browse_thread/thread/4a62463dde089067

http://www.ularal.com/2009/01/asa-aaaaya-aaaaaa/

வஜ்ரா said...

அருள்,

அனைத்து கட்டுரைகளிலும் அடிநாதமாக இருப்பது "அவர்களைக்காட்டிலும் நாம் வேறுபடவேண்டும்" என்ற எண்ணம் தான்.

அவர்கள் என்றால் மற்ற ஏனைய இந்தியர்கள். நாம் என்றால் "தமிழர்கள்"

அதில் தெளிவான ஆராய்ச்சியோ, ஒரு கூர்மையான வாதமோ காணாம். வெறும் அவர்கள் அதைக் கொண்டாடுவதாலேயே நாம் இதை இப்படி மாற்றிக்கொள்ளவேண்டும். தமிழர்களின் அடையாளம் தனித்து இருக்கவேண்டும் (கிரிஸ்டியன் மாதிரி ஜனவரியில் புத்தாண்டு இருக்கவேண்டும்). என்பது தான் இருக்கு.

இந்து எதிரி, இந்திய எதிரி வெள்ளைக்காரக் கைக்கூலிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஜஸ்டிஸ் பார்ட்டி (பண்ணையார்களில் பார்ட்டி) தான் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்கிற வாதம் முதலில் வைத்தது. அது தான் தை முதல் நாள் புத்தாண்டு எனப்படும் வாதத்தின் தோற்றம். அதற்கு முன் தமிழகத்தின் சரித்திரத்தில் தை மாதப்புத்தாண்டு இல்லவே இல்லை.

அருள் said...

@ வஜ்ரா

சித்திரை புத்தாண்டு என்று சிலர் கொண்டாடுவதை எவரும் தடை செய்துவிட முடியாது.

தை புத்தாண்டு என்பது தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ புத்தாண்டு. (மீண்டும் செயலலிதா ஆட்சிக்கு வராதவரை இதை எவரும் மாற்றிவிட முடியாது.)

வரலாற்றில் தை முதல் நாளே தமிழர்களின் முதன்மையான திருநாளாக காலம் காலமாக இருந்து வருகிறது.

இதனை புத்தாண்டாகவும் கொண்டாடுவது அவரவர் விருப்பம். அரசும் தமிழ் உணர்வாளர்களும் இதற்காக பரப்புரை செய்வதை எவரும் குற்றம் காணவும் முடியாது.

பார்ப்பன மேலாதிக்கத்தை தகர்க்கும் முதல் அடியை நீதிக்கட்சி எடுத்து வைத்தது. அதனை நீங்கள் திட்டுவதும் இயல்பே.

தமிழகத்தின் வரலாற்றில் சித்திரை மாதப்புத்தாண்டு இல்லவே இல்லை.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது