இன்று பாலபாரதி அவர்கள் ஆர்கனைஸ் செய்த வலைப்பதிவர் மகாநாடு எல்டாம்ஸ் சாலையில் கிழக்குப் பதிப்பகத்தின் எதிரே இருந்த பார்வதி மினிஹாலில் இனிதே நடைபெற்றது.
எனது கார் டி.டி.கே. சாலையிலிருந்து எல்டாம்ஸ் ரோடில் திரும்பும்போது மணி 4.08 ஆகி விட்டது. சற்றே தாமதம். காரிலிருந்து இறங்கி பார்வதி மினிஹாலில் நுழையும்போது உள்ளேயிருந்து பாலபாரதி வந்து வரவேற்றார். முதன் முறையாக அவரை நேரில் சந்தித்தேன். உள்ளே மா.சிவகுமார் தமிழ் வலைத்திரட்டிகளின் அடுத்த நகர்வு பற்றி தன் பேப்பரை வாசித்துக் கொண்டிருந்தார். முகுந்த், தமிழ்மணம் காசி இன்னும் பல ஆர்வலர்கள் நமக்கு போட்டுக் கொடுத்த வசதிகளில் நாம் ப்ளாக்கிங்க் செய்கிறோம். அவ்வாறு நாம் சுலபமாகச் செய்யும்போது வலைப்பதிவருக்கும் சில கடமைகள் உண்டு என்பதை அவர் தனக்கே உரித்தான மிருதுவான தொனியில் கூறினார். அவருக்குப் பின் பேசிய பாலபாரதி அவர்கள் தமிழ்மணத்துக்குள் போய் ஒரு குறிப்பிட்டப் பதிவரை சர்ச் செய்ய அவ்வளவாக வசதிப்படவில்லை என்று கூறினார். அப்படி செய்ய வேண்டுமானால் கூகளைத்தான் நாட வேண்டியுள்ளது என்றும் கூறினார். பூங்கா மகத்தான சேவை செய்வதாகவும் கூறினார்.
சமீபத்தில் டைடல் பார்க்கில் பொது வலைப்பதிவர் சந்திப்பை நடத்தியவர்களில் ஒருவரான விக்னேஷும் வந்திருந்தார். மா.சிவகுமார் அவர்கள் தமிழ்மணம் மூல கோட் ஓபன் சோர்ஸாக இருந்தால் ஏதேனும் செய்ய இயலும் என அபிப்பிராயப்பட்டார். அவர், விக்னேஷ், இன்னும் சிலர் சேர்ந்த ஒரு தொழில்நுட்பக் கமிட்டி அமைக்கப்பட ஒரு ஆலோசனை எழுந்தது. அது பற்றி மா.சிவகுமார் மேலே கூறுவது பொருத்தமாக இருக்கும். இராம.கி. ஐயா ஆடியோ மற்றும் வீடியோ ப்ளாக்கிங் செய்வது பற்றியும் கூறினார்.
மிகவும் மனதை கனக்கச் செய்தவர் ஸ்ரீலங்கா கிளிநொச்சியிலிருந்து வந்த அகிலன் என்னும் பதிவர். அவரும் அவருடன் கூட வந்த இன்னொரு பதிவர் நிலவனும்தான் கிளிநொச்சியில் பதிவர்கள் என்றும் அவர்களும் இப்போது சென்னைக்கு வந்து விட்டதாகவும் கூறினார். அவர் குண்டு வீச்சுகளைப பற்றிக் கூறும்போது எல்லோருமே உறைந்து போனோம். அதுவும் அனாதைக் குழந்தைகள் குண்டுவீச்சுகளுக்கு பலியானது எல்லார் மனத்தையும் உருக்கி விட்டது. நாமெல்லாம் தமிழ்நாட்டில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு கதைத்துக் கொண்டிருக்கிறோம், வாழ்க்கையின் எல்லா கடுமைகளையும் இலங்கைவாழ் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அகிலன் அங்கு ஒரு பத்திரிகையில் உதவியாசிரியராக இருந்தார். ஆனால் பார்க்க ஒரு பள்ளி மாணவன் ரேஞ்சில் இளமையாக இருக்கிறார்.
சிவகுமார் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே இன்னும் சிலர் வந்து சேர்ந்தனர். நான் உள்ளே நுழைந்த போது இருந்தவர்கள் மா.சிவகுமார், இராம.கி. ஐயா, மரபூர் சந்திரசேகர், லக்கிலுக், முத்து தமிழினி, சிமுலேஷன், எஸ்.கே. ஐயா, வரவனையான், வினையூக்கி, ஓகை, ஜயகமல், சரவணன், வி தி பீபிள், அருள்குமார், முகம்மது ரஃபி, பிரியன், தமிழ்நதி ஆகியோர். எனக்குப் பிறகு வந்தவர்கள் ஜோசஃப் சார், சிவஞானம்ஜி, பொன்ஸ், ரோசா வசந்த் ஆகியோர்.
முதல் பேப்பர் படித்து முடிந்ததும் எல்லோருக்கும் தேனீர் மற்றும் பிஸ்கட்டுகள் தரப்பட்டன. சற்று நேரம் கழித்து வலைப்பூவில் சாதீயம் பற்றிப் பேச பால பாரதி எழுந்தார். அவர் சுருக்கமாக ஒரு உரை நிகழ்த்தினார். வலைப்பூவில் ஏன் சாதீயம் பேச வேண்டும், அதனால் ஆகப்போவதென்ன என்பதுதான் கேள்வி. ரோசா வசந்த் அவர்கள் முதலில் இதை பற்றி விவாதித்தே ஆக வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினார். அவர் கருத்துப்படி இது சம்பந்தமான விவாதங்கள் வெகு சீக்கிரம் சூடு பிடிக்கக் கூடும் என்று அஞ்சினார். அவர் கூறுவதும் நியாயமாகப்பட்டது. அது பற்றி ரொம்பப் பேசவில்லை. மேலே இது பற்றி மற்றவர்களும் எழுதுவார்கள் என நம்புகிறேன்.
இப்பதிவர் சந்திப்பு நடக்கும்போதே பொன்ஸ் அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நாமக்கல் சிபி அவர்கள் ஏற்கனவே இட்லி வடை பதிவில் படங்கள் வந்து விட்டன என்று கூறினார். இட்லிவடை அனுமதியை எதிர்பார்த்து அவரால் எடுக்கப்பட்ட படங்களையும் இப்பதிவில் ஏற்றுகிறேன். அனுமதி கேட்டு அவருக்கு பின்னூட்டம் இட்டுள்ளேன். அவர் அனுமதி ம்றுக்கும் பட்சத்தில் அவரிடம் மன்னிப்பு கேட்டு அவை இப்பதிவிலிருந்து நீக்கப்படும்.
பல ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு படைப்புகளை, முக்கியமாக காப்புரிமை இல்லாத பழைய நூல்களை தமிழில் மொழிபெயர்க்க இயலுமா என என்னிடம் பாலபாரதி அவர்கள் கேட்டபோது, நான் தொழில்முறை மொழிபெயர்ப்பாளன், யாராவது வேலையாக எனக்கு இதை அளிக்காவிட்டால் செய்வதற்கில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டேன. நானாகவே எனது பதிவில் 3 men in a boat புத்தகத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினேன். ஆனால் வேலை ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. என்னைப் போன்ற ப்ரொஃபஷனல்களிடம் இதுதான் பிரச்சினை. வேலை என்று வந்து, டெட்லைன் என்று வாடிக்கையாளர் தலைமேல் உட்கார்ந்தால்தான் வேலையே நகரும்.
மாலை 6.40 மணி அளவில் சந்திப்பு முடிவடையும் சமிஞைகள் வர நான் செல்பேசியில் என் காரை உடனே வரச் சொல்லிக் கூப்பிட்டேன். வண்டி வந்ததும் எல்லோரிடமும் விடை பெற்று சென்றேன்.
சந்திப்பை வெற்றிகரமாக நடாத்திய பாலபாரதிக்கும் மற்றவர்களுக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பிறகு சேர்க்கப்பட்டது: சந்திப்பை ஏற்பாடு செய்த பாலபாரதி அவர்கள் தன் பின்னூட்டத்தில் கூறியிருப்பதுவும் நியாயமே. அவர் கேட்டுக் கொண்டபடி படங்களை நீக்குகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்போது பாலபாரதி அவர்கள் அனுப்பியுள்ள படத்தை அவர் அனுமதியுடன் போடுகிறேன்.
படத்தில் இருப்பவர்கள்: டோண்டு ராகவன் (உட்கார்ந்திருப்பவர்களில் நடுவில, கையில் புத்தகத்துடன்), ஓகை, பாலபாரதி, எஸ்.கே., வி தி பீபபிள், முகம்மது ரஃபி, மரவண்டு கணேஷ், வினையூக்கி, மா.சிவகுமார், சிவஞானம்ஜி, முத்து தமிழினி, அகிலன், சீனு மற்றவர்கள் (பெயர் தெரியவில்லை). பெயர்கள் ஒரு வரிசையில் இல்லை. குறிப்பாக அடையாளம் காட்டப்பட்டவர் டோண்டு ராகவன் மட்டுமே.
இரா.முருகன், சுஜாதா- ஒரு விவாதம்
-
விழா படங்கள். மோகன் தனிஷ்க் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு முதன் முறையாக
‘விஷ்ணுபுரம்‘ விருது விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன் எழுதுவது. ஒரு
இலக்கிய விழாவை இவ...
5 hours ago
92 comments:
Yes .. its a very nice meeting and thanks for the nice coverage
விகேஷ் என்றிருக்கிறீர்கள். அது விக்னேஷ் என்றிருக்கவேண்டும்
படங்களெல்லாம் ரொம்பச் சின்னதா இருக்கே...!
:D
நன்றி விக்னேஷ் அவ்ரகளே. திருத்தி எழுதி விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வஜ்ரா அவர்களே, அவை எல்லாம் சுட்ட பழ(ட)ங்களாக்கும். சுடாதது ஒன்றுமே இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
போட்டோவிலை... இரண்டு பேர் சிவப்பு சட்டை போட்டிருக்கிறாங்க... அதிலை..லக்கிலுக் யாருங்க...
ஐயா நீங்க கார் வாங்கிட்டீங்களா.. ரொம்ப சந்தோசம்
காலர் இல்லாத சிவப்பு சட்டை போட்டிருப்பது லக்கிலுக். காலர் வைத்ததை போட்டிருப்பது வினையூக்கி. மூன்றாவது சிவப்பு சட்டைக்காரர் (நின்று கொடிருப்பவர்) பாலபாரதி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"ஐயா நீங்க கார் வாங்கிட்டீங்களா.. ரொம்ப சந்தோசம்."
வாடகைக் காரெல்லாம் என்னுடையதாக்கும். :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
"இந்தியாவில் இப்படி ஒரு சமுகத்தில் பிச்சைகாரர்கள் இல்லையாம், அது சீக் (சர்தார்ஜீ) சமுகம்.!!"
ஆயிரத்தில் ஒரு வார்த்தை. 1984 கலவரத்தில் அத்தனை பொருட்களையும் இழந்தாலும் சீக்கியர்கள் மனம் தளரவில்லை.
அவர்களுக்கு சமமாக நான் நாடார் சமூகத்தினரைப் பார்க்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் மோசமான சமூகச் சூழ்நிலையில் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த சமூகம் தம் சுயமுயற்சியால் கடுமையாக முன்னேறி இன்று முன்னணியில் உள்ளது. அவர்கள் உதாரணம் பின்பற்றத்தக்கது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தங்களின் பதிவுக்கு நன்றி!
மேலும் இட்லி வடை அநாகரீகமான முறையில் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாமல் படம் எடுத்ததே தவறு.
புகைப்படங்களுக்கு அனுமதியளித்த பதிவைகளை மட்டும் தான் நாம் படம் பிடித்தோம். (நண்பர்களிடம் நாம் கேட்ட போது தாங்களும் உடனிருந்தீர்கள்.)அதை விரும்பாத பதிவர்களை நாம் கட்டாயப்படுத்த வில்லை. நிலைமை அப்படி இருக்க..,
நீங்கள் அந்த முறையற்ற முறையில் எடுக்கப்பட்ட படங்களைப் போட்டிருப்பது தவறு.
பேலும், பதிவுகளில் முகம் காட்ட விரும்பாத பெண்பதிவர்களின் படங்களையும் இப்படி வலையெற்றுவது சரியா?
அனுமதி மறுக்கப்பட இந்த படங்களை பதிவில் இருந்து நீங்குங்கள்.
நன்றி!!
பின்னூட்டத்திற்கு நன்றி பாலபாரதி அவர்களே. படங்களை நீக்கி விட்டேன். நீங்கள் கூறியது நியாயமானதுதான். மன்னிக்கவும்.
நான் உங்களைக் கேட்டுக் கொண்டது போல படங்களை எனக்கு மின்னஞ்சல் செய்தால் அவற்றை போடுகிறேன்.
என் மின்னஞ்சல் முகவரி raghtransint@gmail.com
அன்புடன்,
டோண்டு ராகவன்
படங்களை நீக்கியமைக்கு நன்றி!
படங்கள் நண்பர்கள் வசமிருக்கிறது.
வந்ததும் மின்னஞ்சல் செய்கிறேன்.
ஒத்துழைப்புக்கு நன்றி!
தவிர்க்க முடியாத காரணங்களால்
கூட்டத்திற்கு காலதாமதமாக வந்து கூட்டம் முடிவதற்கு முன்பே செல்ல வேண்டியிருந்ததால் நிறைய நண்பர்களை நேரில் சந்திக்க இயலாமல் போய்விட்டது.
இருப்பினும் கூட்டத்தில் நம்முடைய இலங்கை நண்பரின் உரை நெஞ்சை உருக்குவதாக இருந்ததை மறுக்க முடியாது.
இத்தகைய கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.. எதைப்பற்றியெல்லாம் விவாதிக்க வேண்டும் என்பதையும் முன்கூட்டியே தீர்மானித்துக்கொண்டால் இன்னும் சிறப்பாக நடத்த முடியும் என்று நினைக்கிறேன்.
நான் வலைப்பதிவாளர்களுடைய சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதை சில நண்பர்கள் தவறாக புரிந்துக்கொண்டது எனக்கு வருத்தம் தான்.
இத்தகைய சங்கங்கள் இப்போது உலகெங்கிலும் வலைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. ஏன் நம் இந்தியாவிலும் கூட மும்பை போன்ற நகரங்களில் இத்தகைய அமைப்பு உள்ளது.
இதன் பயன் என்ன என்றால் இச்சங்கத்தைச் சார்ந்தவர்கள் மற்ற பத்திரிகை நிரூபர்களுக்கு சமமாக தலைவர்கள் மற்றும் சமுதாயத்தில் பிரபலமானவர்கள் நடத்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகார பூர்வ முறையில் கலந்துக்கொள்ள இயலும்.
நம்மைப் போன்ற நடுநிலையான வலைஞர்கள் சமுதாயப் பிரச்சினைகளை அரசியல் கட்சிகளின் சாயம் இல்லாமல் விவாதிக்க இயலும்.
வலைஞர்களின் சந்திப்பு வெறும் பொழுதுபோக்குக்காகவே என்று நினைத்தால் நாளடைவில் பிசுபிசுத்துப் போய்விட வாய்ப்புண்டு என்பதாலேயே இப்படியொரு ஆக்கபூர்வமான சிந்தனைக்கு நண்பர்களை அழைத்தேன்.
இந்தக் கருத்தை பால பாரதியே தன்னுடைய பதிவுகளில் ஒன்றில் குறிப்பிட்டிருந்ததாக கூறினார்.
ஆனால் என்னுடைய ஆலோசனையை ஆக்கபூர்வமாக விவாதிக்காமல் விட்டதில் எனக்கு சற்று வருத்தம்தான். இருப்பினும் யாருடனும் விவாதத்தில் இறங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லையென்பதால் நான் அமைதியாக இருந்தேன்.
இருப்பினும் மீண்டும் என்னுடைய ஆவலை இங்கு வைக்கிறேன்.
நண்பர்களே பாமரர்கள் ஏற்படுத்தும் சங்கங்களும் நம்முடைய சங்கமும் ஒன்றாகாது. நம்முடைய சங்கத்து உறுப்பினர்கள் அனைவருமே நன்றாக படித்தவர்கள், சிறு வயதிலும் தேர்ந்த பக்குவம் உள்ளவர்கள் என்பதை அவர்களுடைய எழுத்திலும், சிந்தனையிலும் நான் கண்டிருக்கிறேன்..
ஆகவே நம்முடைய சங்கத்தில் பதவி போராட்டமோ அல்லது ஈகோ பாதிப்போ இருக்க வாய்ப்பில்லை..
நம்மாலும் சமுதாயத்திற்கு ஒரு ஆக்கபூர்வமான ஒரு அமைப்பைத் தர முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
இதில் எல்லோருடைய கருத்தும் ஒருமித்து இருக்க வேண்டும் என்பதில்லை. அது சாத்தியமும் இல்லை. ஆனால் பெரும்பாலான சென்னை வாழ் வலைஞர்கள் தீர்மானித்தாலே போதும்..
சிந்தியுங்கள் நண்பர்களே..
//நான் வலைப்பதிவாளர்களுடைய சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதை சில நண்பர்கள் தவறாக புரிந்துக்கொண்டது எனக்கு வருத்தம் தான்.
//
ஜோசப் சார் இது பற்றிய உங்கள் தெளிவான எதிர்பார்ப்புகளுடனான பதிவொன்றை எதிர்பார்க்கிறோம். பதிவர் சந்திப்பைப் பற்றிய எங்கள் பதிவில் இந்த எதிர்பார்ப்பையும் வெளியிட்டிருக்கிறோம்.
நன்றி ஜோசஃப் சார். பொன்ஸ் அவர்கள் கூறியது போல உங்கள் தரப்பிலிருந்தும் ஒரு பதிவு வந்தால் நன்றாக இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வலைப்பூ சுனாமி + சுந்தர ராமசாமி லக்கிலூக்கை எங்கே காணவில்லை ? நீங்கள் நெடுநாட்களாக பார்க்கவேண்டும் என்றீர்களே ? பேசினீர்களா ?
லக்கிலுக்குடன் பேசினேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
லக்கிலுக் வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய தன் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு பின்னூட்டமிட இயலாததால் அதை இங்கு நகலெடுத்து இடுகிறேன். (அங்கு எர்ரர் மெஸ்ஸேஜ்) வருகிறது.
"* ஜாதி குறித்த பேச்சு வந்தபோது "இணையத்தில் தன் சாதிப் பெயரை சொல்லிக் கொள்வதால் தான் பிரச்சினை வருகிறது. ஜாதிப்பெயரை சொல்லிக்கொள்வதில் எந்தப் பெருமையும் இல்லை" என்றேன். டோண்டு சார் உடனே மறுத்து என்னுடைய பர்சனல் தகவல்களை விசாரித்து பதில் அளிக்க முனைந்தார். இடையில் புகுந்த பாலபாரதி என்னை "தம்" அடிக்க வெளியே அழைத்துச் சென்று விட்டார்."
அவருடைய பெர்சனல் தகவல்கள் என்று நான் கேட்டது ஒன்றே ஒன்றுதான். அவர் தனது ஜாதிக்குள்தானே திருமணம் செய்து கொண்டார் என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டேன். மற்றப்படி அவர் ஜாதி என்ன என்று நான் கேட்கவில்லை, அந்த தகவலும் நான் கூறவிருந்த விஷயத்துக்கு ரெலெவண்ட் இல்லை. அவரும் அதை சொல்லவில்லை.
என்னுடைய பாயிண்ட் எல்லாம் ஜாதி இல்லாமல் தினப்படி பெர்சனல் வாழ்க்கை கிடையாது என்பதே, லக்கிலுக் தான் பிற்காலத்தில் ஜாதி இல்லாமல் செயல்படுவதாகக் கூறினார்.
அவருக்கு வாழ்த்துகள். தன் குழந்தைகளுக்கு கலப்புத் திருமணம் செய்து வைத்தாலும் வைக்கலாம் அவர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
இட்லிவடையின் போட்டொ ஹைஜாக் ஹைலைட்டாக அமைந்துவிட்ட சந்திப்பு இது.
"இட்லிவடையின் போட்டொ ஹைஜாக் ஹைலைட்டாக அமைந்துவிட்ட சந்திப்பு இது."
நான் இதை ஆர்வக்கோளாறாகத்தான் பார்த்தேன். அதே சமயம் பாலபாரதி சொன்னதும் சரியாகத்தான் படுகிறது. ஆகவேதான் எனது பதிவிலிருந்து போட்டோக்களை நீக்கினேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்லது ஹமீத் அப்துல்லா அவர்களே. கருப்புக் கட்டங்கள் கூடிய சொக்காய் அணிந்திருப்பவர்தானே நீங்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பஜ்ஜி என்பவர் போட்ட பின்னூட்டத்தை பிளாக்கர் ஏற்க மறுக்கிறது. ஆகவே கீழே அதை ஒட்டுகிறேன்.
"Bajji has left a new comment on your post "சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 19.11.2006":
ஒங்களைத் தவிர நீங்க ஏன் வேறு யாரையுமே போட்டோவோட பொருத்தி அடையாளம் காட்டல்லே?
ஹமீத் அப்துல்லா தான் எங்கே இருக்காருங்கறதை சொன்ன பிறகு தோணிய கேள்வி இது.
பஜ்ஜி
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
Posted by Bajji to Dondus dos and donts at 11/21/2006 09:26:58 AM
மறுபடியும் பஜ்ஜி அவர்களின் பின்னூட்டத்தை பிளாக்கர் ஏற்க மறுத்து விட்டது. ஆனால் அது எனது ஜிமெயிலுக்கு என்னவோ வந்து விட்டது.
பீட்டா பிளாக்கர்கள் சாதா பிளாக்கர்களுக்கு பின்னூட்டம் இட முடியாதா? இது பற்றி மற்ற வலைப்பதிவாளர்கள் கருத்து என்ன?
Bajji(#07096154083685964097) has left a new comment on your post "சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 19.11.2006":
Thanks Dondu. As soon as I tried to publish my last comment, I got an error message. I am a beta blogger. Perhaps this involves a problem of interfacing.
Perhaps this time I succeed?
Bajji
http://bajjispeaks.blogspot.com/
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
நன்றி பஜ்ஜி அவர்களே.
உங்கள் பிரச்சினை விரைவில் தீர்ந்திடும் என நம்புகிறேன்.
பலர் போட்டோவில் நிற்கவே தயங்கினர். நின்றவர்கள் சிலரும் சற்று வற்புறுத்தியதன் பேரில்தான் நின்றனர்.
அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யவே நான் என்னைத் தவிர வேறு யாரையும் அடையாளம் காட்டவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
////என்னுடைய பாயிண்ட் எல்லாம் ஜாதி இல்லாமல் தினப்படி பெர்சனல் வாழ்க்கை கிடையாது என்பதே///
டோண்டு அவர்களே, இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை...
ஒரே ஒரு நாள் இணையத்துக்கு செல்லாமல் இருந்து பாருங்கள்...சாதி பற்றி எந்த சிந்தனையும் எழாது...
ராகவன் ஐயா,
///பலர் போட்டோவில் நிற்கவே தயங்கினர். நின்றவர்கள் சிலரும் சற்று வற்புறுத்தியதன் பேரில்தான் நின்றனர். ///
இவ்வாறு முகத்தை மூடிக்கொண்டு இவர்கள் ப்ளாக் ஏன் எழுதுகிறார்கள் என்பது புரியவில்லை?
தங்கள் கருத்துகளில் நேர்மை இல்லாதவர்கள் என்று சொன்னால் ரொம்பவும் காட்டமாக இருக்கிறது. ஆனால், உண்மை அதுதானோ?
நீ எழுதி கையெழுத்திடாத முடியாததை பேசாதே என்று எனக்கு பள்ளியில் கற்றுக்கொடுக்கப்பட்டது.
ரொம்பவும் யோசித்துப்பார்த்தில், ஒரேயொரு லாபம் மட்டும் கொஞ்சம் நியாயப்படுத்த முடிகிறது. அதாவது, ஆளை எடைப்போடாமல் கருத்துகளை மட்டும் எடை போட வசதியாக, தான் என்ற ஒரு பிம்பம் கொடுக்காமல் தன் கருத்துகளை பதிவது ஒரு விதத்தில் உசத்திதான்.
ஆனால், இந்த கோணலான லாஜிக்கும் மற்ற முகமிலிகளால்தான் ஏற்பட்டது என்பதால் இந்த சமாதானம் ஒரு சப்பைக்கட்டாகவே ஆகிறது.
பொதுப்படையாக பார்த்தால், மனதின் கசண்டுகளை கொட்டும் பதிவாகவே இந்த முகமிலிகளின் பதிவுகள் ஆகிப்போனது ஒரு சிறுமைதான்.
நாளை ஒரு கிளப் அமைத்தால் இவர்கள் இப்படியே அறிமுகமாகாமல் உறுப்பினர்களாக ஆவார்களா? என்று சோசப் ஐயாதான் சொல்லவேண்டும்!!
தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள இயலாத பதிவர்கள் ஒருவிதத்தில் குறைப்பட்டவர்கள் என்பது எல்லோருக்கும் புரியும்வரை, அறிமுகப்படுத்திக்கொண்டு வலைப்பதிவர்களை நாம் அதற்காக ஊக்குவிக்காதவரை, வலைப்பதிவுகளில் காழ்ப்பும், ஏச்சும், விகாரமான கருத்துகளும் படிவதை தடுக்க முடியாது என்றே எனக்குத்தோன்றுகிறது. இதுவே மூல காரணம்.
இதனாலேயே, வலைகளில் சாதீயமும், வேதீயமும் (!!) மண்டுகின்றன.
நன்றி
செந்தழல் ரவி அவர்களே,
நான் கூற வந்ததை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். என் சாதிதான் உயர்ந்தது, அடுத்தவர் சாதிதான் தாழ்ந்தது என்று நினைப்பதுதான் சாதி மனப்பான்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
பத்திரிகைகளில் வரும் திருமண விளம்பரங்களையே பாருங்கள். எவ்வளவு சாதிகள், அவற்றில் எவ்வளவு உட்பிரிவுகள்? நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ சாதி என்பது வாழ்க்கையுடன் ஒன்றி விட்ட விஷயம்.
உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா எனத் தெரியவில்லை. ஆகாத பட்சத்தில், உங்கள் வீட்டில் உங்களுக்கு பெண் பார்த்தால் எங்கு உங்களுக்கு வேண்டிய வாழ்க்கைத் துணைவியை அவர்கள் நாடுவார்கள் என நினைக்கிறீர்கள்?
லக்கிலுக்கிடம் அதே கேள்வியைக் கேட்டபோது அவர் தெளிவாகவே கூறினார். தினப்படி என்றால் தினமும் என்ற பொருள் மட்டும் அல்ல. டீஃபால்ட் நிலைமையையே நான் குறிப்பிட்டேன்.
சாதியில்லை என்னும் கோஷம் எழுப்பும் கட்சிகள் தேர்தல் சமயத்தில் வேட்பாளர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர்? இது தவறா சரியா என்ற கேள்வி இங்கு இல்லை. இருக்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. பதில் தெளிவாகவே உள்ளது.
இந்தக் கருத்தை வெளிப்படையாகக் கூறுவது சில இணைய தாசில்தார்களுக்கு பிடித்தமில்லாமல் இருக்கலாம். அவர்களிடம் Browney பாயிண்டுகள் பெறுவதில் எனக்கு எப்போதுமே அக்கறை இருந்ததில்லை.
சமூகத்தை பிரதிபலிப்பதுதான் இணையமும். அங்கு போகாமல் இருந்து என்ன நிரூபணம் செய்ய நினைக்கிறீர்கள்? கண்ணாடியில் வரும் பிம்பம் பிடிக்கவில்லையென்று கண்ணாடியை பார்க்காமல் இருந்தால் நிஜம் மறைந்து விடுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
"தங்கள் கருத்துகளில் நேர்மை இல்லாதவர்கள் என்று சொன்னால் ரொம்பவும் காட்டமாக இருக்கிறது. ஆனால், உண்மை அதுதானோ?"
நீங்கள் கூறியது ஓரளவுதான் உண்மை.
பலருக்கு ஏன் இந்த வம்பு என்றுதான் இருந்திருக்க வேண்டும். பிரச்சினையில் சிக்க விரும்பாததும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா?
துணி முள்ளின் மேல் விழுந்தாலும் முள் துணியின் மெல் விழுந்தாலும் பிரச்சினை துணிக்குத்தான் என்றும் நினைக்கலாம் அல்லவா.
ஆனால் அவ்வாறு பார்த்துப் பார்த்து செய்தாலும் முள் வந்து துணி மேல் விழுந்து விடுவதும் சில சமயம் நடக்கிறதுதான்.
பாவம், விட்டுவிடுங்கள்.
இதெல்லாம் கோர்வையாகக் கூற வினோத் துவா போன்ற ஆசாமிகளால்தான் முடியும்! :))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள் கருத்து நிதர்சனம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்...
பிரிதொரு சமயத்தில் என் வாதத்தினை முன்வைக்கிறேன்...
இப்போதைக்கு ஜுட் !!!
தங்களின் கூட்டங்களில் கலந்து கொண்ட மேதகு ஜயராமன்(எத்தனை கூட்டம் என்று நினைவில் இல்லை) அவர்கள் இந்த கூட்டம் குறித்து வந்த அறிவிப்புக்கு வாழ்த்துகூட கொடுக்க முடியாத மேண்மை தாங்கிய பெரியவா.., முகமிலிகள் பற்றி குறை பட்டுக்கொள்வது வேடிக்கையானது.
அதிலும் இந்த முகமிலிகள் மற்றவர்களை சந்திக்கவாவது வந்திருந்தார்கள். இந்த பெரியவா ஏன் வரவில்லை?
இவரது வலைப்பூவில் கூட தற்போது புகைப்படம் இல்லையே.. இவரும் முகமிலி தானோ....!
//இவ்வாறு முகத்தை மூடிக்கொண்டு இவர்கள் ப்ளாக் ஏன் எழுதுகிறார்கள் என்பது புரியவில்லை?//
கருத்துக்கு நன்றி ஜெயராமன் அவர்களே!
நீங்கள் உங்கள் முகத்தை வெளியிட்டு ஒரு சந்திப்பில் கலந்து கொண்டீர்கள்.
உங்கள் போட்டோவை வேறு ஒரு வலைப்பூவில் வெளியிட்டு அதற்கு கமெண்டு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த கமெண்டை படித்து பார்த்தீர்களா? அப்படி படித்திருந்தீர்களேயானால் ஜென்மத்துக்கும் நீங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கூட எடுத்துக் கொள்ள மாட்டீர்கள்.
சற்று விரிவாகவே பதில் தர வேண்டும் பாலபாரதி அவர்களே.
நீங்கள் நாகேஸ்வரராவ் பார்க்கில் கூட்டிய கூட்டத்துக்கு ஜோசஃப் அவர்கள் இட்டப் பின்னூட்டமும் அதற்கான ஜிரா அவர்கள் பதிலும் கீழே தரப்படுகின்றன.
"G.Ragavan said...
// tbr.joseph said...
நான் கேக்கறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க. நீங்க சென்னையிலேயே இருந்தும் சென்னையில் கடந்த மூன்று மாதங்களாக நடந்த கூட்டங்களுக்கு வராமலிருந்தது ஏன் என்று தெரிந்துக்கொள்ளலாமா? //
ஜோசப் சார்...ஒங்க கேள்விக்கான விடை எதுவானாலும்...எல்லாரும் சொல்ல நினைக்கிறது ஒன்னாத்தான் இருக்கும். ஆனா யாரும் சொல்ல மாட்டாங்க. அதுனால கேக்காதீங்க. அதே நேரத்துல நீங்க இந்தச் சந்திப்பில கலந்துக்கனுங்குறது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.
at 30 August, 2006 15:43"
அதற்கு அனானி ஒருவர் "எங்களுக்கு அதில் விருப்பமில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பின்னூட்டத்தை நீங்கள்தான் மட்டுறுத்தியிருக்கிறீர்கள்.
அது சம்பந்தமாக ஜயராமன் இட்டப் பின்னூட்டம் இதோ:
"ஜயராமன் said...
வலைப்பதிவர்களை அழைக்கும் இந்த பதிவிலேயே இத்தனை காழ்ப்புகளா!
கிண்டலும், நக்கலும் தனிமனித இடக்கும் நம் வலைக்குழுமத்தின் தற்போதய நிலையை காட்டுகின்றன.
இது குறித்து நாம் எல்லோரும் ஆழ்ந்து யோசிக்க கடன்பட்டுள்ளோம்.
இந்த பதிவராவது இம்மாதிரி குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுபட்டிருப்பர் என்று என் எதிர்பார்ப்பு நிராசையானது.
நம் சக வலைப்பதிவர்களை ஒரு நண்பர்களாக வேண்டாம், ஒரு சக மனிதனாக கருதும் அடிப்படை நாகரீகத்தை நான் எல்லாரிடமும் வேண்டுகிறேன்.
at 30 August, 2006 16:26"
இது சம்பந்தமாக அதே பதிவில் இன்னொரு பின்னூட்டம்:
"ப்ரியன் said...
/*எங்களுக்கு அதில் விருப்பமில்லை :(*/
யாருப்பா இந்த குழப்பம் உண்டாக்கும் அனானி?ஜோசப் அண்ணா உங்களுக்கு விருப்பமானால் கண்டிப்பாக வரலாம் நீங்கள் வரவேண்டும் என்பதுதான் என் எதிர்ப்பார்ப்பும்.
at 30 August, 2006 16:51"
மா.சிவகுமார் இட்டப் பின்னூட்டம்:
"மா சிவகுமார் said...
பாலா,
//அனானி பின்னூட்டங்கள் இனி நிறுத்தி வைக்கப்படுகின்றன.//
அப்படியே தனி மனிதத் தாக்குதலாக எழுதப்பட்ட அனானி பதிவுகளை நீக்கியும் விடுங்களேன். படிப்பதற்கு இடறுகிறது.
அன்புடன்,
மா சிவகுமார்
at 31 August, 2006 18:56"
ஆனால் மீட்டிங் நடக்கும் வரை நீங்கள் அவற்றை நீக்கவில்லை என்பதுதான் நிஜம். நான் அதை முக்கியமாக பார்த்தவன் என்ற ஹோதாவில் கூறுகிறேன். அதனாலேயே அந்த சந்திப்புக்கு நான் வரவில்லை.
நீங்கள் அது சம்பந்தமாக எந்த வருத்தமும் தெரிவித்ததாகத் தெரியவில்லை.
ஆகவேதான் ஜயராமன் இம்முறை எந்தப் பின்னூட்டத்தையும் தவிர்த்து விட்டார் எனத் தோன்றுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பாலபாரதி ஐயா,
என் கருத்து தங்களுக்கு மிகவும் எரிச்சலூட்டியது என்று நினைக்கிறேன். அவ்வாறானால், அதற்கு என் மனமார்ந்த வருத்தங்கள்.
நீங்கள் ஏன் தனிப்பட்ட விசயமாக இதை எடுத்துக்கொண்டுள்ளீர்கள் என்று புரியவில்லை?
மேலும் உங்களின் கமெண்டில் உள்ள தனிப்பட்ட கிண்டல் சாதி சம்பந்தமான ஒரு இடக்கு தங்களின் தரத்தை தாழ்த்துகிறது.
ஆனால், இம்மாதிரி இடக்குகளையும் ஆபாச வசைகளையும் தினசரி அனுபவித்து வருபவன் நான். இதுவே எனக்கு உங்கள் போன்ற ஆதரவாளர்கள் கொடுத்த கொள்முதல்...
நான் சந்திப்புக்கு வராத்துக்கும் என்னுடைய இந்த பொதுப்படையான ஒரு அபிப்ராயத்துக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை? இந்த சம்பந்தத்தை நீங்கள் ஏற்படுத்த முயல்வதிலும் உங்களின் இனம் புரியாத எரிச்சலே வெளியாகிறது.
சந்திப்புக்கு வர இயலாததற்கு நான் வருந்துகிறேன். இதை ராகவன் ஐயாவிடம் நான் முன்பே அவர் தொலைபேசிய போது சொன்னேன். பின்னொரு முறை தங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க நான் வேண்டுகிறேன்.
நன்றி
லக்கி ஐயா,
///நீங்கள் உங்கள் முகத்தை வெளியிட்டு ஒரு சந்திப்பில் கலந்து கொண்டீர்கள்...... ////
வாஸ்தவம். நான் நிறைய சந்திப்பில் கலந்து கொண்டுள்ளேன். மேலும், கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவேன் என்றே நினைக்கிறேன். அந்த சந்திப்புகள் எனக்கு பல இனிமையான நட்புகளை கொடுத்தன; புதுமையான பல கருத்தாக்கங்களை கொடுத்தன.
அவற்றுடன் பல ஈனர்களுக்கும் இலக்கானேன், இலக்காகிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இது ஒரு சராசரி விஷயம். இதை ஒரு பொருட்டாக நீங்கள் காட்டுவதும் ஆச்சரியம்தான்.
ஆனால், இந்த மிரட்டல்களும், கேலிகளும் அடையாளம் காட்டிக்கொண்டவர்கள், காட்டாதவர்கள் என்று எல்லோருக்கும் மானாவாரியாக கிடைக்கிறது என்பதை நீங்கள் தயைசெய்து புரிந்துகொள்ளுங்கள். அதனால், இதைகாரணம் காட்டி நாம் முகத்தை மூடிக்கொள்வதினால் ஒன்றும் தப்ப முடியாது என்றே தோன்றுகிறது....
இந்த கேலிகளும், மிரட்டல்களும், ஆபாச வசைகளும் நம் தமிழகத்தின் திராவிட பாரம்பரியம் என்று அதை பெருமையாக நாங்கள் வாழ்நாளில் முழுதும் அனுபவிக்கிறோம்.
இந்த மிரட்டல்கள் என் கருத்துகளை ஒட்டிய ஒரு ஹேஷ்யத்திற்காக கிடைக்கின்றன. நான் அறிமுகப்படுத்திக்கொண்ட என் முகத்திற்காக அல்ல..
நான் நீங்கள் சொன்ன மாதிரி வேறு பதிவுகளை படிக்கவில்லை. தங்களைப்போன்ற சில கருத்துச்செம்மல்களின் பதிவுகளை மேய்வதற்கே நேரமில்லை என்பது என் வருத்தம்.
இந்த அருமையான சந்திப்பை பற்றிய இந்த பதிவை நான் மேலும் ஹைஜாக் செய்ய விருப்பமில்லை. தனியாக பதியுங்கள். அங்கு பேசலாம்.
நன்றி
உங்கள் தரப்பு நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் அதே சமயம்.., அந்த மேதகு பெரியவர் சந்திப்பு குறித்த மற்றவர்களின் பதிவில் ஒரு பின்னூட்டம் கூட அவகாசமில்லாதவர். தங்கள் பதிவில் வந்து( இங்கு மட்டும் வந்து கருத்து சொல்லும் காரணம்?!?!- எல்லோருக்கும் தனியே சொல்லவேண்டியதில்லை. எளிமையாக புரியும்). முகமிலிகளை சாடுவது அபத்தமானது.
சந்திப்புகளுக்கு வருவதோ, வாழ்த்துவதோ அன்னாரின் தனிப்பட்ட கருத்தாக இருக்காலம். அதே சமயம் அந்த (பதிவுகளில் முகம் காட்டாத)முகமிலிகள் மற்ற பதிவர்களைக் காணவாவது வந்திருந்தார்கள் என்பது தான் உண்மை. ஆனால் தாங்கள் சார்ந்து பேசும் அந்த பதிவர் தன் முகத்தை ஆரம்பத்தில் காட்டி,, சங்கடங்கள்ளுக்கு உள்ளான காரணத்தால் தானே த்ற்போது பதிவில் புகைப்படம் இல்லை. அப்போது அவாரும் முகமிலி தானே..!
ஒரு முகமிலி இன்னொரு முகமிலையை திட்டுவதோ, சாடுவதோ வேடிக்கையாக இல்லை?
:-)
இனி இது குறித்து என் பதிவில் பேச விரைவில் வருகிறேன்.
நன்றி
"ஆனால், இந்த மிரட்டல்களும், கேலிகளும் அடையாளம் காட்டிக்கொண்டவர்கள், காட்டாதவர்கள் என்று எல்லோருக்கும் மானாவாரியாக கிடைக்கிறது என்பதை நீங்கள் தயைசெய்து புரிந்துகொள்ளுங்கள். அதனால், இதைக் காரணம் காட்டி நாம் முகத்தை மூடிக்கொள்வதினால் ஒன்றும் தப்ப முடியாது என்றே தோன்றுகிறது...."
100% நிஜம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//என் கருத்து தங்களுக்கு மிகவும் எரிச்சலூட்டியது என்று நினைக்கிறேன். //
இதில் சந்தேகம் வேறயா?!! ஒரு வேளை உறுதிப்படுத்திக் கொள்வதில் அதிக மகிழ்ச்சியா?
// அவ்வாறானால், அதற்கு என் மனமார்ந்த வருத்தங்கள்.//
ஆரம்பிச்சிட்டாருய்யா..
ஜயராமன்,
மன்னிப்பு, வருத்தம் என்ற வார்த்தைகள் இருக்கும் வரை உங்களின் மட்டையடிப் பின்னூட்டங்களும் இருந்து கொண்டே இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது..
நீங்கள் சொல்வது போல், "சில கருத்துச் செறிந்த பதிவுகளைப் படித்துவிட்டு", உங்களின் பின்னூட்டங்களைக் கவனமாகத் தாண்டிப் போக வேண்டும் இனிமேல்... ;)
//இந்த கேலிகளும், மிரட்டல்களும், ஆபாச வசைகளும் நம் தமிழகத்தின் திராவிட பாரம்பரியம் என்று அதை பெருமையாக நாங்கள் வாழ்நாளில் முழுதும் அனுபவிக்கிறோம்.//
கொடிய நஞ்சான பார்ப்பனீயம் உங்கள் நெஞ்சில் இருக்கும் வரை நீங்கள் குறிப்பிட்ட தமிழகத்தின் திராவிடப் பாரம்பரியத்தை அனுபவித்தே தீரவேண்டும் :-)
பாலபாரதி ஐயா,
///இங்கு மட்டும் வந்து கருத்து சொல்லும் காரணம்?!?! ... ///
இல்லை. தவறான செய்தி. நான் முதலில் தமிழந்தி (என்று நினைக்கிறேன்) அவர்களின் சந்திப்பு பற்றிய பதிவுக்கு பின்னூட்டமிட்டேன். பின் இங்கு டோண்டு ஐயாவின் பதிவில் ஒரு கருத்து வெளிவந்ததால் அதற்கென்று நான் ஒரு பதிலை வைத்தேன்.
என் போட்டோவை காண இணையத்தில் இவ்வளவு ஆர்வமா? வேறொரு போட்டோ மாற்ற முயற்சித்து இப்படி சொதப்பி விட்டது. பழைய என் போட்டோ ரொம்ப இளைமையாக இருந்தது! :-))) இந்த பிளாக்கர் ப்ரபோலில் போட்டோ எப்படி போடுவதென்பது இலகுவாக புரியவில்லை. நான் கம்ப்யூட்டர்காரனில்லை. ஆனால், வெற்றியுடன் விரைவில் என் புகைப்படைத்தை போட்டு தங்களை குஷிப்படுத்துவேன்.
நன்றி
நன்றி
பின்னூட்டத்திற்கு நன்றி பொன்ஸ் அவர்களே.
அதே சமயம் ஜெயராமன் அவர்கள் பால பாரதிக்கு ஏன் பின்னூட்டமிடவில்லை என்பதை போன சந்திப்பு சமயத்தில் நடந்த விஷயங்களை வைத்து விஸ்தாரமாகக் கூறியிருந்தேனே? அது பற்றி தங்களது மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.
அங்கு நான் கூறாத இன்னொரு விஷயத்தையும் இங்கு இப்போது கூறிவிடுகிறேன்.
போன சந்திப்புக்கு வந்தவர்களில் உங்களையும், முத்துக் குமரனையும், லக்கிலுக்கையும் மிஸ் செய்ததில் சற்று வருத்தமே. முத்துக் குமரனை பிறகு தனியாக முத்து தமிழினியுடன் சந்தித்தாகி விட்டது. இச்சந்திப்பில் உங்களைஉம் லக்கி லுக்கையும் சந்தித்தாகி விட்டது. மகிழ்ச்சி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"கொடிய நஞ்சான பார்ப்பனீயம் உங்கள் நெஞ்சில் இருக்கும் வரை நீங்கள் குறிப்பிட்ட தமிழகத்தின் திராவிடப் பாரம்பரியத்தை அனுபவித்தே தீரவேண்டும் :-)"
ஆக, வலைப்பூவில் சாதீயம் பேசாது இருக்க முடியாது என்பதை நீங்களே நிரூபித்து விட்டீர்கள். நன்றி. :))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//விரைவில் என் புகைப்படைத்தை போட்டு தங்களை குஷிப்படுத்துவேன்.//
என்ன கொடுமை சரவணன் இது :-)
(ஸ்மைலி போட்டு விட்டேன் கவனிக்கவும்)
டோண்டு சார்
தங்களின் online consultancy உதவியால் போட்டா போட்டுவிட்டேன். போனில் டெக்னிகல் விவரம் சொன்னதற்கு மிக்க நன்றி
லக்கி ஐயா,
////கொடிய நஞ்சான பார்ப்பனீயம் உங்கள் நெஞ்சில் இருக்கும் வரை நீங்கள் குறிப்பிட்ட தமிழகத்தின் திராவிடப் பாரம்பரியத்தை அனுபவித்தே தீரவேண்டும்////
ஆதாரமற்ற குற்றசாட்டு. என் மனதில் என்றுவேறு தனிப்பட்டு சேறு பூசுகிறீர்கள். நான் பார்ப்பனீய விஷயமாக என்ன எழுதினேன் என்று ஆதாரம் கொடுக்கமுடியுமா?
ஆனால், நான் பெற்ற தனிப்பட்ட தாக்குதல்களை ஆதாரம் கொடுக்கிறேன்.
இதனால், விஷம் யாரிடம் இருக்கிறது என்று தெளிவாகும்.
அம்மணீ,
///ஜயராமன்,
மன்னிப்பு, வருத்தம் என்ற வார்த்தைகள் இருக்கும் வரை உங்களின் மட்டையடிப் பின்னூட்டங்களும் இருந்து கொண்டே இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.. ///
என் கருத்துக்களில் சம்பந்தமில்லாமல் தன்மீது ஏற்றி எரிச்சல்படுபவர்களை, நம்மையறியாமல் அவர்கள் வருத்தப்பட்ட (அது சரியோ, தப்போ ) ஒரு காரணமாகிவிட்டோமே என்று வருத்தம் தெரிவிப்பது ஒரு நல்ல பண்பு என்றே நான் கருதுகிறேன். அதை நீங்கள் ஒரு இழிவாக பார்ப்பதும், வருத்தம் தெரிவித்ததால் நான் தவறிழைத்தவன் என்று நீங்கள் நினைப்பதும், வேண்டுமென்றே தவறு செய்துவிட்டு நான் பின்பு தயங்காமல் வருத்தம் தெரிவிப்பவனாக நீங்கள் சித்தரிப்பதும் தங்கள் புரிதலின் குறை.
//ஆக, வலைப்பூவில் சாதீயம் பேசாது இருக்க முடியாது என்பதை நீங்களே நிரூபித்து விட்டீர்கள். நன்றி. :))))//
பெரியார் என்ற மாமனிதரின் புகழை சாதிய காரணங்கள் காட்டி எதிர்ப்பவர்கள் இருக்கும் வரை வலைப்பூக்களில் சாதீயம் இருந்து தொலைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது
//ஆதாரமற்ற குற்றசாட்டு. என் மனதில் என்றுவேறு தனிப்பட்டு சேறு பூசுகிறீர்கள். நான் பார்ப்பனீய விஷயமாக என்ன எழுதினேன் என்று ஆதாரம் கொடுக்கமுடியுமா? //
ஆதாரம் காட்டி வாதாட இது கோர்ட்டுமல்ல. நான் வக்கீலுமல்ல.
உங்கள் பின்னூட்டங்களை தொடர்ந்து படித்து வருபவன் என்ற முறையிலேயே நீங்கள் பார்ப்பனீயத்தை பின் தொடருபவர் என்ற முடிவுக்கு வர முடிகிறது. மற்ற சில பதிவர்களும் இதை உணர்ந்திருக்கிறார்கள்.
BTW, ஜெயராமன் சார்! உங்க பழைய போட்டோவே தேவலை :-)
(கவனிக்கவும். மீண்டும் ஸ்மைலி போட்டுவிட்டேன்)
லக்கி ஐயா,
///உங்கள் பின்னூட்டங்களை தொடர்ந்து படித்து வருபவன் என்ற முறையிலேயே நீங்கள் பார்ப்பனீயத்தை பின் தொடருபவர் என்ற முடிவுக்கு வர முடிகிறது. மற்ற சில பதிவர்களும் இதை உணர்ந்திருக்கிறார்கள்.///
ஆதாரம் இல்லை. ஆனால் "முடிவுக்கு வந்துவிட்டீர்கள்". அது சரி.
"உணர்ந்திருக்கிறார்கள்" (உணர்வது வேறு முடிவு அறிவது வேறு..) என்று நீங்கள் சொல்வதுதான் சாதீயம்
/// BTW, ஜெயராமன் சார்! உங்க பழைய போட்டோவே தேவலை ///
சரியாகத்தான் சொன்னீர்கள். நான்தான் முன்பே சொன்னேனே, என் பழைய போட்டோ ரொம்ப இளைமையாக இருந்தது என்று. இப்போது reality show.
நன்றி
டோண்டு சார்!
அதர்-அனானி ஆப்ஷன் இல்லாத இந்தப் பதிவையே செஞ்சுரி அடிக்க வைக்க நான் ரெடி... நீங்க ரெடியா? :-)))))))
50வது பின்னூட்டமா இது?
//இவ்வாறு முகத்தை மூடிக்கொண்டு இவர்கள் ப்ளாக் ஏன் எழுதுகிறார்கள் என்பது புரியவில்லை?//
இந்தக் கேள்வியை கேட்க வேண்டியவர்களிடம் எல்லாம் மூடிக்கொண்டு வாயைத்த்தான், இங்கு கேட்பது வியப்பாக இருக்கிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை குறையாக்கி பேசியிருப்பது மிகவும் அநாகரீகமானது.
இந்த வீராப்பை
//தங்கள் கருத்துகளில் நேர்மை இல்லாதவர்கள் என்று சொன்னால் ரொம்பவும் காட்டமாக இருக்கிறது. ஆனால், உண்மை அதுதானோ?//
நேசக்குமாரிடம் சொல்லுவரா ஜயராமன்.
அங்கு கேட்குமே பலமான ஜிங்சாக் சத்தம்.
கருத்து முரண்கள் வேறு. தனிமனித நட்பு, பழக்கம் என்பது வேறு. புரிந்து கொள்ள பழகிக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் விகாரங்களுடன் அணுகும் அவர் மனதிற்கு அவர் வணங்கும் ஆண்டவனே அருள் புரியட்டும்.
முத்துக்குமரன் ஐயா,
வழக்கம்போல என்னை தேடிக்கொண்டு தூற்ற வந்ததற்கு நன்றி....
///நேசக்குமாரிடம் சொல்லுவரா ஜயராமன்.
அங்கு கேட்குமே பலமான ஜிங்சாக் சத்தம்.///
நீங்கள் ரொம்ப லேட்டு.... நேசகுமார் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டால் மகிழ்வேன் என்று ஏற்கனவே இப்னு பஷீர் ஐயா அவர்களின் பதிவில் இன்று பின்னூட்டினேன். படிக்கவும்
நன்றி
"50வது பின்னூட்டமா இது?"
இல்லை 53-வது பின்னூட்டம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜயராமன் நீங்கள் இப்னு பஷீர் பதிவில் சொன்னதையும் இங்கே இந்தப் பதிவில் சொன்னதையும் கொடுத்திருக்கிறேன். இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் கண்கூடாகத் தெரிகின்றன.
ஜயராமன் எதற்கு இந்த தனி மனித இல்லை குழு மனப்பான்மை?
///
நேசகுமார் தான் யாரென்று அறிமுகப்படுத்திக்கொண்டால் நான் மகிழ்வேன். அது அவருடைய பர்ஸனல் விஷயம்.
///
///
தங்கள் கருத்துகளில் நேர்மை இல்லாதவர்கள் என்று சொன்னால் ரொம்பவும் காட்டமாக இருக்கிறது. ஆனால், உண்மை அதுதானோ?
///
நன்றி லக்கிலுக். நான் என்ன 100 பின்னூட்டங்கள் வாணான்னுன்னா சொல்லப் போறேன்.
ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். வலைப்பூவுக்கு சம்பந்தமானதாக அவை இருக்கட்டும். வெறுமனே ஸ்கோர் ஏற்றுவதில் என்ன புண்ணியம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
லக்கி,
தெரியாமல்தான் கேட்கிறேன், என் பின்னூட்டத்துக்கு "பதிலடி" கொடுத்தோம் என்று பாலபாரதி அவர்களின் பதிவில் உங்கள் கருத்துக்களை மீண்டும் பதிந்திருக்கிறீர்களே, அதற்கு டோண்டு மற்றும் நான் கொடுத்த "பதிலடி"களை ஏன் பதிய வேண்டும் என்று தோன்றவில்லை. ஒருபக்கம் பார்ப்பதுதாம் எல்லோருக்கும் சௌகர்யமோ?
நன்றி
பாலபாரதியின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்
//நான் தனியா ஏதும் சொல்லணுமா?
செந்தில் குமரன்,
ஜயராமனின் கருத்துகள் என்று சொன்ன உடனேயே அதில் ஒரு இரட்டைத் தன்மை இருப்பதைப் பார்த்துவிடலாம்.
ஓ, தனி மனிதத் தாக்குதலாகிவிட்டதோ! ஜயராமன் ஐயா பாணியில்,
மன்னிக்க, வருத்தங்கள், மாஃப் கீஜியே,
(பாலாண்ணே, சம்ஸ்கிருதத்துல என்னய்யா இதுக்கு?!!!)
//
(டோண்டு சார், இது உங்க ஸ்டைல் பின்னூட்டம் என்பதாலேயே பதிவுக்குச் சம்பந்தமான பின்னூட்டம் ;) )
//// ஜயராமனின் கருத்துகள் என்று சொன்ன உடனேயே அதில் ஒரு இரட்டைத் தன்மை இருப்பதைப் பார்த்துவிடலாம். ////
வர வர அம்மா பார்த்த உடனே, கேட்டவுடனே எல்லாவற்றையும் புரிந்துகொண்டுவிடுகிறார்கள். அப்படி ஒரு "யான" திருஷ்டி...
மிக்க சந்தோஷம்.. :-))))
செந்தில் குமரன் அவர்களே,
நேசகுமார் ஜிஹாதிகளின் ஹிட்லிஸ்டில் இருப்பவர். அது இணையத்தில் பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இங்கு விஷயமே வேறு. முகத்தை மறைத்து கொள்ள விரும்புவர்களும் ஒரு ஹிட் லிஸ்டில்தான் இருக்கிறார்கள். ஆனால் அதில் உயிர் அபாயம் ஒன்றும் இல்லை. ஆனால் அதிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்பதுதான் நிஜம்.
இதற்கு மேல் அஹ்டு பற்றி பேச விரும்பவில்லை.
ஆனால் பாலபாரதி அவர்களிடம் போன சந்திப்பு பற்றி நான் எழுப்பியிருந்த விஷயத்தை சௌகரியமாக எல்லோருமே, பால பாரதி உள்பட, மறந்து விட்டது போலத்தான் தோன்றுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// அதே சமயம் ஜெயராமன் அவர்கள் பாலபாரதிக்கு ஏன் பின்னூட்டமிடவில்லை என்பதை போன சந்திப்பு சமயத்தில் நடந்த விஷயங்களை வைத்து விஸ்தாரமாகக் கூறியிருந்தேனே? அது பற்றி தங்களது மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். //
1. பாலபாரதி முதல் கூட்டத்தைப் பற்றிய பதிவிட்டபோது, வந்த எல்லா பின்னூட்டங்களையும் பிரசுரித்ததும் அவற்றைப் பின்னர் அழித்ததும் அனைவரும் அறிந்ததே!
2. முதல் அறிவிப்பில் இந்த அனானிகளால் பிரச்சனை ஏற்பட்ட பின்னர்,
//அனானி பின்னூட்டங்களினால் மனம் வருந்திய அன்பர்களுக்கும் எங்கள் மன்னிப்புகள்//
என்ற வாசகங்களுடன் இரண்டாம் அறிவிப்பு வெளிவந்தது.
3. கூட்டத்துக்குப் பின்னர், நன்றியறிவிப்பாக, //சிலர் மனம் வருந்திய தகவல் அறிந்ததும் அந்த பதிவில் இருந்த அனானிகளின் பின்னூட்டங்கள் முற்றிலும் நீக்கப்பட்டு விட்டன(பெரியவர்கள் பெருந்தன்மையோடு மன்னிப்பார்களாக). // என்று தொடங்கும் அடுத்த பதிவும் பாலபாரதி இட்டிருந்தார்.
4. இந்த முறை கூட்டத்துக்கான அறிவிப்பில் மற்றுமொரு பின்னூட்டம்:
//கண்டிப்பாக எல்லோருக்கும் தான் ஜோசப் சார்... நீங்களெல்லாம் வரவேண்டும் என்பது தான் என் ஆசை.
வாங்க!வாங்க!!//
ஆக, இதற்கு மேல் ஒருவர் எப்படி வருத்தம் தெரிவிக்க முடியும் என்பது உண்மையாகவே எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை கூட்டத்துக்கு வந்த ஜோசப் ஐயாவுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இது போன்ற உங்களின் வருத்தங்களைப் படிக்காமல் இருந்திருக்கலாமோ என்னவோ.
அற்புதமான ஒரு வலைப்பதிவர் கூட்டத்திற்குப் பின், அதிலும், அகிலன் மூலம் ஈழத்தில் நம் சொந்த சகோதரர்கள் படும் அவதியைக் கேள்வியுற்றபின், அந்தக் கூட்டத்தைப் பற்றியும், பொதுவில் வலைபதிவர் கூட்டத்தைப் பற்றியும் இப்படி அக்குவேறு ஆணி வேராக, ஆராய்ச்சி செய்து பதில் சொல்லவே எனக்கு வருத்தமாக இருக்கிறது என்பது தான் நிஜம்.
பெரியவர்கள் பெருந்தன்மையோடு என்பன போன்ற வார்த்தைகள் கூட வீணாகப் போய்விட்டதும் இன்னுமொரு கொசுறு வருத்தம்.
இதற்கு மேல் என்னை அழைத்து ஆதாரமில்லாக் குற்றச்சாட்டுகளுக்குக் கருத்து கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
//லக்கி,
தெரியாமல்தான் கேட்கிறேன், என் பின்னூட்டத்துக்கு "பதிலடி" கொடுத்தோம் என்று பாலபாரதி அவர்களின் பதிவில் உங்கள் கருத்துக்களை மீண்டும் பதிந்திருக்கிறீர்களே, அதற்கு டோண்டு மற்றும் நான் கொடுத்த "பதிலடி"களை ஏன் பதிய வேண்டும் என்று தோன்றவில்லை. ஒருபக்கம் பார்ப்பதுதாம் எல்லோருக்கும் சௌகர்யமோ?
நன்றி//
அந்தப் பதில்களை நீங்களும், டோண்டு சாரும் பதிவீர்கள் என எதிர்பார்த்தேன்.
நன்றி
உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி என்றும் தெரிகிறது.
இஸ்லாமியர் எல்லோரும் தீவிரவாதிகள் இல்லை டோண்டு சார்.
ஜயராமனின் அந்தக் கருத்து தனி ஒரு வலைப் பதிவாளரைத் தாக்கி எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது.
தேவை இல்லாமல் துவேஷங்கள் எல்லாம் வேண்டாம் ஆனா நான் சொல்லியா கேட்கப் போறீங்க இதற்கு மேல் இந்த விஷயத்தில் கருத்து சொல்ல எனக்கு விருப்பமில்லை.
///
நேசகுமார் ஜிஹாதிகளின் ஹிட்லிஸ்டில் இருப்பவர். அது இணையத்தில் பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இங்கு விஷயமே வேறு. முகத்தை மறைத்து கொள்ள விரும்புவர்களும் ஒரு ஹிட் லிஸ்டில்தான் இருக்கிறார்கள். ஆனால் அதில் உயிர் அபாயம் ஒன்றும் இல்லை. ஆனால் அதிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்பதுதான் நிஜம்.
///
லக்கி ஐயா,
///அந்தப் பதில்களை நீங்களும், டோண்டு சாரும் பதிவீர்கள் என எதிர்பார்த்தேன்.///
பின்னூட்ட வசூலுக்கு நல்ல ஐடியாவாக இருக்கிறதே!! அடடே, தெரியாமல் போய்விட்டது.
///நன்றி ////
எல்லோரும் வரவர என்னைப்போலவே முத்திரை போடுவதால் போலிகள் நடமாட்டம்.... :-)))
மன்னிக்கவும் பொன்ஸ் அவர்களே, சந்திப்பு நடக்கவிருந்த ஓரிரு மணிகளுக்கு முன்னால்தான் அந்தப் பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டன. அவற்றை அழிக்கக் கோரி அதற்கு முன்னமேயே பின்னூட்டமும் வந்தது. அப்போதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை.
எது எப்படியாயினும் அந்த சந்திப்பில் நடந்த சொதப்பல்தான் ஜெயராமன் அவர்களை தயக்கமடையச் செய்தது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//''வழக்கம்போல'' என்னை தேடிக்கொண்டு தூற்ற வந்ததற்கு நன்றி....//
நன்றி ஜயராமன். இது ஒன்றே போதும் உங்கள் மனோபாவத்திற்கு எடுத்துகாட்டு. தேடி வந்து தூற்றுமளவிற்கு உங்கள் மீது எனக்கெந்த காழ்ப்பும் கிடையாது. என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் மாற்றுக் கருத்து கொண்டவர்களை நான் அணுகும்முறை எப்படி என்று.
டோண்டு சார், உங்கள் பதிவை ஜயராமன் அவர்களுக்கு பதிலளிக்க பயன்படுத்தி கொண்டமைக்கு மன்னிக்கவும்.
பொன்ஸ் அவர்களே,
தங்களின் எல்லா பின்னூட்டங்களிலும் சாதி இடக்கும், கிண்டலும் வைத்து பின்னூட்டமும், பதிவும் போடும் லக்கி, பாலபாரதி அவர்களை நீங்கள் ஆதரித்து என் னை எப்போதும் பழித்துப்பேசி பின்னூட்டம் இடுவது நான் செய்த எந்த குற்றத்திற்காக என்று தெரியவில்லை.
தினசரி ஆபாச வசைகளை எனக்கு கொடுப்பதும் இதை முகமிலி பதிவர்களில் சிலரே. தங்களுக்கும் இதுபோன்ற சில சங்கடங்கள் வந்து நீங்கள் அதை "சமாளித்து தீர்வு பெற்ற" விதத்தையும் நான் அறிவேன்.
அதனால், விஷயத்தின் சாரத்தையும், தீவீரத்தையும் உணர்ந்து கருத்து சொல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி
ட்ரைவ் இன் வுட்லேண்ட்ஸில் சந்தித்தோம்;படம் எடுத்தோம்;வெளியிட்டீர்கள்...
நாகேஸ்வரர் பூங்கா சந்திப்பில்
படமெடுப்பதை நான் தடுத்தேன்-காரணத்தை நீங்களே அறிவீர்கள்..
இந்நிலையில் எல்லோரும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கின்றீர்கள்?
படத்திற்கு முகங்காட்ட மறுப்பதையும்,பெயர்கூறுவதைத் தவிர்ப்பதையும் நியாயப்படுத்திவிட்டாரே, தன்னையும்
பேப்பரஸியாகக் கருதிக்கொண்ட
போலிப்பதிவாளர்(ஆம்!தன்னை பதிவாளர் என்று கூறிக்கொண்டுதான்
அவர் உள்ளே வந்தார்)
பாலபாரதியின் நோக்கத்தை குறைவாக
மதிப்பிட வேண்டாம். 200 ய்த் தாண்டி
பின்னூட்டம் பெற்ற ஒரு பதிவு என்ன ஆனது என்பதை நீங்கள் அறிவீர்களா?
மற்றுமொன்று கூறவுள்ளது:
சந்தித்தபொழுது ANON என்பதைத் தமிழ்ப்படுத்த முயன்றபொழுது
'முகமிலி' என்றுரைத்தவன் நாண்தான்.ஆனால் அது நிச்சயமாக
இப்பொழுது பயன்படுத்தும் அர்த்தத்தில்
அல்ல!
// லக்கி, பாலபாரதி அவர்களை நீங்கள் ஆதரித்து என் னை எப்போதும் பழித்துப்பேசி பின்னூட்டம் இடுவது //
ஜயராமன்,
1. உங்களை எப்போதும் பழித்துப் பேசுவதாக நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்வது?
2. உங்களை இதுவரை மூன்றே மூன்று கருத்து தளங்களில் தான் நேரடியாக உங்களை எதிர்த்து, எதிர்க் கருத்தைப் பதிவு செய்துள்ளேன்
-> தேன்கூடு போட்டியின் உங்கள் நிலை
-> சபாபதி சரவணின் கோக் பெப்ஸி குறித்தான "அபத்தமான பதிவு" மட்டையடி
-> இந்தப் பதிவில்.
இதில் எத்தனை முறை லக்கியையோ, பாலபாரதியையோ பாராட்டி, ஆதரித்து எழுதி இருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று புரியவில்லை
3. இந்தப் பதிவில் கடைசியில் சொல்லப்பட்டது உங்களுக்கல்ல! உங்கள் எண்ணமாக இருக்கும் என்று நினைத்துப் பதில் சொல்லி இருக்கும் டோண்டு ஐயா அவர்களுக்கு!
4. மற்றபடி தனிப்பட்ட முறையில் உங்களைத்திட்ட எனக்கென்ன காரணம் இருக்கப் போகிறது? மக்கள் தொலைக்காட்சி பற்றிய உங்கள் பதிவையும் தகவல் உரிமைச் சட்டத்தையும் விரும்பிப் படித்த நினைவிருக்கிறது.
பொன்ஸ்,
தங்கள் கருத்துக்கு நன்றி.
தங்களை வருத்தப்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்... :-)))))
நான் controversy யாக எழுதினேன் என்று நீங்கள் நினைக்கும் எல்லா பின்னூட்டங்களிலும் நீங்கள் ஆஜர் என்றே எனக்கு தோன்றியதால் அவ்வாறு சொன்னேன். லிவிங்ஸ்மைல் பற்றிய என் பின்னூட்டத்தை "வெளிச்சம்" போட வைத்ததே உங்கள் புண்ணியம்.
மற்றபடி என் பின்னூட்டங்கள் மதம், ஆன்மீகம் என்றிருப்பதால் நீங்கள் "விட்டேன் ஜூட்" போல என்று நினைத்தேன்
பாலா மற்றும் லக்கி அவர்களின் விஷமத்தனமான பின்னூட்டங்களை நீங்கள் பாராமுகமாக இருப்பதே உண்மை.
நன்றி
///உங்கள் எண்ணமாக இருக்கும் என்று நினைத்துப் பதில் சொல்லி இருக்கும் டோண்டு ஐயா அவர்களுக்கு! ///
என் சரியான எண்ணத்தையே ராகவன் ஐயா வெளிப்படுத்தியுள்ளார் என்பதால்தான் நான் இதை மீண்டும் வலியுறுத்தவில்லை. இதை கண்ணியம் காத்து மேலும் பிறண்டாமல் விட்டுவிட பாலபாரதி ஒப்பாமல் மேலும் குடைந்து விவகாரமாக்கிவிட்டார் என்பதே உண்மை
நன்றி
//தங்களை வருத்தப்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்... :-)))))//
:-))))))))))) - என் ஸ்மைலி தான் பெரிசு... :)))
//என் பின்னூட்டங்கள் மதம், ஆன்மீகம் என்றிருப்பதால் நீங்கள் "விட்டேன் ஜூட்" போல //
உண்மை உண்மை உண்மை.. ஆன்மீகம் மதம் தொடர்பான பதிவுகளையும் படிப்பதில்லை. கடைசியாகப் படித்தது தருமியின் மதப் பதிவுகள் மட்டுமே. (ஆன்மிகத் துறையில் தான் உங்களுக்குச் செந்தில்குமரன் இருக்காரே! ;) )
//பாலா மற்றும் லக்கி அவர்களின் விஷமத்தனமான பின்னூட்டங்களை நீங்கள் பாராமுகமாக இருப்பதே உண்மை.//
லக்கி, ரவியோடு சண்டை போட்டதெல்லாம் இங்க இருக்கிற அத்தனைபேருக்கும் தெரியும். இப்போ ராசியா இருக்கோம் என்பதற்காக எதிர்க்கருத்துக்களைப் பதிக்க மறப்பதில்லை, என்றுமே. (சமீபத்தில் அனானி ஆட்டத்தில், நாட்டாமை என்று வேறு பெயர் வாங்கியாச்சு! )
//இதை கண்ணியம் காத்து மேலும் பிறண்டாமல் விட்டுவிட பாலபாரதி ஒப்பாமல் மேலும் //
தப்புத் தப்பா நினைத்துக் கொண்டிருந்தீங்கன்னா, கண்ணியம் காட்ட எப்படிங்க முடியும்? இப்போ சுட்டியெல்லாம் எடுத்துக் கொடுத்துட்டேன் - எங்கெல்லாம் மன்னிப்பு, வருத்தம் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்குன்னு. இனிமே தமிழ்மணத்தினரிடம் சொல்லி பூங்கா அறிவிப்புகளுக்கு அடியில் தான் போடச் சொல்லணும், மன்னிப்பு கேட்டதைப் பத்தி!
இப்போவாவது அடுத்த வலைபதிவர் கூட்டத்துக்கு வருவீங்களா? இத்தனை மன்னிப்பு, வருத்தங்களை வெளிப்படுத்திய சுட்டிகளைப் படித்தபின், இது குறித்த தங்களின் கருத்து என்ன?
ஒரு கூட்டத்துக்கு வந்து சந்தித்துப் பேசிவிட்டால் மனிதர்களைப் பற்றிய பார்வைகள் மாறிவிடுவது உறுதி.
அப்புறம் ஜயராமன், முக்கியமான விஷயம், இந்தப் பதிவில் உங்களுடன் விவாதம் செய்வது லக்கிலுக்குக்காகவோ, பாலபாரதிக்காகவோ இல்லை. நான் கூட இதுவரை எந்தச் சந்திப்பு புகைப்படங்களிலும் முகம் காட்டாத முகமிலிப் பதிவர் தான். நீங்கள் எழுதியது என்னை நேரடியாகச் சுட்டுவதாகப் பட்டதாலேயே பதிலிறுக்க வேண்டியதாகிவிட்டது.
அப்புறம் பாலபாரதி பற்றிய உங்கள் எண்ணத்தைப் பற்றிய என் கருத்தைக் கேட்டதால், அதற்காக சுட்டிகள் தேடும் உருப்படாத வேலை வேறு சேர்ந்து கொண்டது!
மீண்டும் மீண்டும் முகமிலி, பெயரிலி என்று பதிவர்களைப் பற்றிப் பேசும் போது, தமிழ்நதி கேட்டது போல், சென்னைப் பதிவர் கூட்டங்களில் இனிமேல் பெண்கள் யாருமே வராமல் போய்விடுவார்கள். இப்போ தான் 33% வாங்க முன்னே வந்து கொண்டிருக்கும் எங்களை மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வைத்துவிடாதீர்கள்!!!!
பின் குறிப்பு:
ஜயராமன், மற்றும் டோண்டு அவர்களே,
இதற்கு மேல் இந்தப் பதிவில்/பாலபாரதி பதிவில் பதில் சொல்லிக் கொண்டிருக்க நிச்சயமாக நேரமில்லை. இந்தக் குழாயடிச் சண்டைகள் அடுத்தக் கூட்டத்துக்கு வரலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களையும் குழப்பிவிடும் என்ற பயத்தால்..
டோண்டு சார்,
//கண்ணாடியில் வரும் பிம்பம் பிடிக்கவில்லையென்று கண்ணாடியை பார்க்காமல் இருந்தால் நிஜம் மறைந்து விடுமா?//
ஏன் சார் தேவையில்லா கண்ணாடியை பார்க்கனும்?? தேவைக்கு மட்டும் பார்த்தால் போதும். எதுக்கெடுத்தாலும் சாதியை பார்ப்பது எனக்கு தப்பாக தான் தோண்றுகிறது. நீங்க ஒரு நாளுக்கு மிஞ்சி போனா ஒரு ரெண்டு தடவ கண்ணாடி பார்ப்பீங்களா?? எந்த நேரமும் பார்த்துக்கிட்டு இருந்த வேற வேலையை பார்க்கமுடியாது. சாதி உங்க பசங்களை பள்ளியில் சேர்க்கும் போது கேட்ப்பார்கள், அப்புறம் அவர்களுக்கு திருமணம் செய்யும் போது கேட்பார்கள் இப்படி சில விசயங்களில் கேட்கறாங்க சரி தான், இப்படி ரெண்டு மூன்று சம்பவத்துக்கு கேக்கற விசயத்தை வைத்து, எப்ப பார்த்தாலும் சொல்லிக்கிட்டு நடந்து என்ன யூஸ்?? ஏதாவது + உண்டா?? எனக்கு செந்தழார் சொல்லற மாதிரி வலைப்பூவுக்கு வரவில்லை என்றால் சாதி நினைவுகளே வருவதில்லை... யோச்சு முடிவு பண்ணுங்க ரொம்ப மஸ்ட் என்று சாதி பேச்சை நிறுத்துங்க ப்ளீஸ். அவன் சொல்லறான் அதனால என்று சொல்லாம நாமாவது திருந்துவோமே??
பெரியவங்க நீங்க தப்பா எதாவது சொல்லியிருந்தா மன்னிச்சுக்கோங்க.
எல்லோருக்கும்,
///
இதற்கு மேல் இந்தப் பதிவில்/பாலபாரதி பதிவில் பதில் சொல்லிக் கொண்டிருக்க நிச்சயமாக நேரமில்லை. ///
அதே அதே சபாபதே!!!!
///
இந்தக் குழாயடிச் சண்டைகள் அடுத்தக் கூட்டத்துக்கு வரலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களையும் குழப்பிவிடும் என்ற பயத்தால்.. ///
நான் வரலாமா, மேடம். முகமுள்ள எனக்கு முகமிலிகளிடமிருந்து வவாச protection வாங்கித்தருமா? :-)))
நன்றி
நன்றி ஜெயராமன் மற்றும் பொன்ஸ்,
எல்லோருமே அவரவர் நிலையை கூறிவிட்டோம். இனிமேலும் இதைத் தொடர வேண்டாம் என்றுதான் நானும் நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வி தி பீப்பிள் அவர்களே,
நானும் அதையேதான் கூறுகிறேன். நான் மட்டும் என்ன தினமுமா சாதியைச் சொல்லிக் கொண்டு அலைகிறேன். யாருக்கு நேரம் இருக்கிறது இதற்கெல்லாம்.
மேலும் இதற்கான பின்புலன்களை இப்போது பார்ப்பது கால விரயமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சினேகிதன் அவர்களே, இவர்தான் விக்கி என்னும் விக்னேஷ் என அறிமுகப்படுத்தப்பட்டபோது எனக்கு விகேஷ் என்று காதில் விழுந்திருக்கிறது. அதனால்தான் குழப்பம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நான் வரலாமா, மேடம். முகமுள்ள எனக்கு முகமிலிகளிடமிருந்து வவாச protection வாங்கித்தருமா? :-)))//
ஜயராமன் திரும்ப திரும்ப முகமிலி என்று சொல்லி பிரச்சனையை பெருசாக்கறீங்ன்னு மட்டும் சொல்லமுடியுது.
ஜயராமன் "என்னை திருத்தமுடியாது" என்ற முடிவோடு இருக்கார் என்று மட்டும் தெரிகிறது. தூங்கற மாதிரி நடிக்கறவங்களை எழுப்ப முடியாது. நான் பேக் அப் ஆயிட்டேன்.
பால பாரதி அய்யா சொன்னதாவது
"அவர்கள் இந்த கூட்டம் குறித்து வந்த அறிவிப்புக்கு வாழ்த்துகூட கொடுக்க முடியாத மேண்மை தாங்கிய பெரியவா.."
நல்லா போட்டு தாக்குங்க.... அடடா....இப்படியெல்லாம் கூட இருக்கா?வராவிட்டால் வாழ்த்தாவது சொல்லணுமா...ஓகோ...இதுதான் கேட்டு வாங்குறதா? அய்யா பாலபாரதி அவர்களே...உங்களை நான் ஒரு கேள்வி கேட்கிறேன்...என்ன சாதனை செய்துவிட்டதாய் வாழ்த்து கேட்கிறீர்கள்...வாழ்த்துக்குறியது எது தெரியுமா...உங்கள் பெயரிலேயே ஒருத்தர் "http://balaji_ammu.blogspot.com/2006/09/kausalya.html" இங்க அடுத்தவங்களுக்கு உதவி செய்கிறாரே அது போன்ற விசயங்களுக்கு வாழ்த்து சொல்லலாம்...ஆசாமியாகவோ அல்லது அனானியாகவோ கூட...அது சரி ....அங்கு நீங்கள் போய் வாழ்த்து சொன்னதாக தெரியவில்லையே?ஏன் இந்த பாரபட்சம் என்று அடுத்தவரும் கேட்கலாமில்லையா?யோசித்து பார்க்கவும்....அடுத்து ஆரம்பிக்காதீங்க...நீ வாழ்த்து சொன்னியான்னு? நான் அங்கையும் சொல்லவில்லை? இங்கையும் சொல்லவில்லை? இது வாழ்த்துப் பின்னூட்டம் கேட்டுப் பெறுபவர்களுக்கான பின்னூட்டம் மட்டுமே. நாலு பேரை சேத்துக்கிட்டு "you scratch my back...I scratch your bach" செய்துகொண்டு உலா வந்தால் பெரிய ஆள் என்றெல்லாம் அர்த்தம் இல்லை....போக வேண்டிய தூரம் நிறைய...அதுவரை அடுத்தவரைப் பற்றி எகதாளம் கொஞ்சம் குறைவாகவே இருக்கட்டும்..ஓகே....
சரவணகுமார் அவர்களே,
மிகுந்த தயக்கத்துடன் உங்களது இப்பின்னூட்டத்தை வெளியிடுகிறேன். என்ன இருந்தாலும் பால பாரதி அவர்கள் மிக அருமையான முறையில் இச்சந்திப்பை நடாத்தியிருக்கிறார். அவரைப் பற்றிய உங்கள் கடுமையான கருத்துடன் நான் ஒத்துப் போகவில்லை.
அவர் ஜெயராமன் அவர்கள் பற்றி இட்டப் பின்னூட்டத்திற்கு நானே விடை அளித்து விஷயம் ஒரு வழியாக செட்டில் ஆகி விட்டது. தயவு செய்து இந்த விவாதம் மறுபடி வேண்டாம்.
மற்றப்படி நீங்கள் என்றென்றும் அன்புடன் பாலவைப் பற்றி எழுதியது முற்றிலும் சரி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"எங்கு சென்றாலும் தாங்கள் 'நடு நாயகமாய்' விளங்குவதின் ரகசியம் என்ன?"
தெரியல்லியேப்பா (சிவாஜி குரலில்):))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//முகமுள்ள எனக்கு முகமிலிகளிடமிருந்து வவாச protection வாங்கித்தருமா?//
வ.வா.ச வாங்கித் தராது என்பதற்கு ஜொள்ளுபாண்டியின் இன்றைய பதிவு சாட்சி
ஆனால், பொன்ஸ் protection force மூலம் ஏற்பாடு செய்யலாம் (protection force உறுப்பினர்கள்: பொன்ஸ் மட்டுமே!)
அதற்கு முன் உங்களுக்கு யாரிடமிருந்து பாதுகாப்பு தேவை என்று அறிய ஆசை:
1. என்னைப் போன்ற "முகமிலிப்" பதிவர்கள் உங்கள் முகத்தை எடுத்துக் கொண்டுவிடுவார்கள் என்றா?
2. இட்லிவடை போன்ற "முகமிலிப்" பதிவர்கள் உங்கள் படத்தைப் போட்டுவிடுவார்கள் என்றா?
3. வேறு முகமிலி பதிவர்கள் நீங்கள் படிக்க நேரமில்லாத, கருத்துகள் இல்லாத பதிவுகளில் உங்களைப் பற்றி எழுதுவதிலிருந்தா?
ஜொள்ளுப் பேட்டையின் இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. அப்பதிவு எடுக்கப்படும் அபாயம் உள்ளதால் அங்கு நான் இட்ட பின்னூட்டத்தின் நகலை இப்பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். அப்பதிவில் என்னை கிண்டலடித்து வந்ததை மிகவும் ரசித்தேன் என்பதையும் கூறிவிடுகிறேன்.
"லக்கி : ( உரத்தகுரலில் ) இட்லிவடைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............ என அலறிக்கொண்டே ஓட அனைவரும் லக்கியை பின்தொடர்ந்து தெறித்து ஓடி எஸ்கேப் ஆகிறார்கள் ."
சிறிய தவறு இப்பதிவில்; எல்லோரும் ஓடதான் செய்கின்றனர், டோண்டு ராகவனைத் தவிர.
அவர் நடு நாற்காலியாக பார்த்து உட்கார்ந்து கொள்கிறார். சுற்றுமுற்றும் பார்வையை சுழல விட்டு மறைத்து வைக்கப்பட்ட காமெராவை (hidden camera) கண்டு கொண்டு, அதைப் பார்த்து பேசுகிறார்:
"வீடியொவை கூரியர்ல அனுப்பிடு இட்லி வடை. வீட்டிலே போட்டுப் பாத்துக்கறேன். இந்த மாதிரி விஷயத்தை இஸ்ரேலிலே எப்படி சமாளிச்சாங்கன்னா.." என்று பேச ஆரம்பிக்க, வீடியோ மானிட்டர் ஸ்க்ரீன் அருகில் இருக்கும் இட்லி வடை ரிமோட் கண்ட்ரோல் மூலம் கேமராவை அணைத்து விட்டு எகிறி குதித்து, அடுத்த அரை மணி நேரத்துக்கு வரவிருந்த அறுவையிலிருந்து தப்பித்து ஓடுகிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பொன்ஸ் அவர்களே,
///// என்னைப் போன்ற "முகமிலிப்" பதிவர்கள் உங்கள் முகத்தை எடுத்துக் கொண்டுவிடுவார்கள் என்றா? ////
இத்தோடு "குழாயடி" மேட்டரை முடித்துக்கொண்டுவிடலாம் என்று நேற்று சொல்லியிருந்தீர்களே. :-)
நான் தங்களை முகமிலி என்று கருதவில்லை. தங்களின் அறிமுகமும் நிஜப்பெயரும் பலருக்கும் இணையத்தில் தெரியும். அதை நீங்களும் பல இடங்களில் வெளிக்காட்டியிருக்கிறீர்கள்.
முகமிலி என்பது போட்டோ போடாதவர்கள் என்று நான் சொல்லவில்லை. என் கருத்து போட்டோ பற்றியதே அல்ல. இதை நான் பாலா அவர்களின் பதிவிலும் தெளிவுபடுத்தியிருக்கிறேன். தன் நிஜ identity ஐ அறிமுகப்படுத்திக்கொண்டு பின் அதே பெயரிலோ, புனைப்பெயரிலோ எழுதுபவர்கள் என்றுமே முகமிலிகள் இல்லை. "போட்டோ போட வேண்டும் என்று ஜயராமன் சொல்கிறான்" என்று என் கருத்தை திரிப்பது, அதை கொச்சையாக்கி அதை நிராகரிக்க எளிதாக்குவதே என்று எனக்கு தோன்றுகிறது.
இந்த கருத்துக்கள் மிகவும் வன்ம்மாக போனது எனக்கு வருத்தம். அதேபோல மீட்டிங் விஷயமும் அதன் நிர்வாகிகளுக்கு பர்ஸனலாக போனதும் வருத்தமான விஷயம். அதனால், நான் (நீங்கள் சம்மதித்தால்) இந்த கருத்தை தொடர விரும்பவில்லை. மற்றபடி தவறாக எண்ணவேண்டாம்.
நன்றி
//முகமுள்ள எனக்கு முகமிலிகளிடமிருந்து//
என்று குத்து வைத்ததால், தொடரவேண்டியதாகிவிட்டது
நீங்கள் முதன் முதலில் முகமிலி என்று சொல்லி இருக்கும் இடம், பொருளும் கூட இப்போது கொடுத்துள்ள விளக்கத்துக்குத் தொடர்பில்லாததாகவே இருக்கிறது.
// அதனால், நான் (நீங்கள் சம்மதித்தால்) இந்த கருத்தை தொடர விரும்பவில்லை//
ரைட்... அடுத்த பதிவர் சந்திப்பில் நேரில் சந்திப்போம்! (எந்த உள்குத்தும் இல்லாமல்) :))
"தொடர்பில்லாததாகவே தோன்றுகிறது" என்று படிக்கவும்
- Personal feeling only..
""""""சரவணகுமார் அவர்களே,
மிகுந்த தயக்கத்துடன் உங்களது இப்பின்னூட்டத்தை வெளியிடுகிறேன். என்ன இருந்தாலும் பால பாரதி அவர்கள் மிக அருமையான முறையில் இச்சந்திப்பை நடாத்தியிருக்கிறார். அவரைப் பற்றிய உங்கள் கடுமையான கருத்துடன் நான் ஒத்துப் போகவில்லை""""""
dear Mr.டோண்டு,
என் பின்னூட்டத்தை வெளியிட என்ன தயக்கம்?யாரையாவது தரக் குறைவாக பேசியிருக்கிறேனா?யாராயிருந்தாலும் தன்மையாக பேசவேண்டும்.. தற்பெருமையுடனும் எகதாளத்துடனும் அல்ல என்பதை மட்டும் சொல்வதே நோக்கம்...இதற்கு மறுதலிக்காததிலிருந்தே தெரியவில்லையா...நான் சொன்னதிலுள்ள உண்மையை அறிந்தே மெளனம் காக்கின்றனர் என்று..வாழ்த்தாதவன் பேசாதே வராதவன் பேசாதே...என்பதெல்லாம் தாதாகிரி.....எவ்வளவு அருமையாக கூட்டம் நடாஆஆத்தி இருந்தாலும்...
அடக்கம் அமரருள் உய்க்கும்... அடங்காமை ??????????????
ஜயராமன் சொன்னது பொதுவாக முகமிலிகளைப் பற்றி(தப்பான கருத்தானாலும் கூட)..கூட்டத்தை குறைத்து பேசவில்லையே..பின் நடாத்தியவருக்கு ஏன் இவ்வளவு காட்டம்..அடுத்தவர் ஜாதி வரைக்கும் கோடி காட்டி திட்டும் அளவுக்கு????
நான் இரண்டாம் பாராவில் "அவர் ஜெயராமன் அவர்கள் பற்றி இட்டப் பின்னூட்டத்திற்கு நானே விடை அளித்து விஷயம் ஒரு வழியாக செட்டில் ஆகி விட்டது. தயவு செய்து இந்த விவாதம் மறுபடி வேண்டாம்." என்று கூறியதுதான் முக்கியக் காரணம். தவறாக எண்ணாதீர்கள்.
There are wheels within wheels. If you are interested to know more, do ring me up at 9884012948. This is a Chennai number.
அன்புடன்,
டோண்டு ராகவன்
No Thanks...வட்டங்களின் உள் வட்டங்களை உங்களிடம் தொலை பேசியில் பேசி தெரிந்து கொள்ள எனக்கு எந்த ஆவலும் இல்லை...
மதிப்பிற்குரிய டோண்டு சார்,
என்னதான் வலைப்பதிவுகளில் சண்டை போட்டுக்கொண்டாலும் நேரடி சந்திப்பு என்பது நிகழும்போது பொதுவாக நட்பு ஏற்படுத்தவும், அன்பு ஏற்படுவதும் இயல்பான விஷயங்கள். இதற்கு எதிரான விஷயங்களை இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிக்களின்போது விலக்குவது மாண்புடையோர் செயல். நல்லவேளையாக ரோசாவசந்த் வெறுப்புமிழும் விஷயங்களைப் பேசவிடாமல் செய்துவிட்டார் என்பது தெரிகிறது. அவர் எழுதும் நடையில் எனக்கு அவ்வளவு உவப்பு இல்லாவிட்டாலும் அவரின் இந்தச் செயல் பாராட்டுக்குரியது. மாண்பு வரவேற்புக்குரியது.
ஆயினும், நேரடி சந்திப்பில் தவிர்க்கப்பட்ட இந்த விஷயம் இந்தப் பதிவின் பின்னூட்டங்களாக தொடர்ந்திருப்பது வேதனையாக இருக்கிறது.
நீங்கள் என்னதான் ஜோக்கடித்து சமாளிக்க முயற்சி செய்திருந்தாலும் மனக்கசப்புக்கள் வருத்தம் தரும் வகையில் வெளியாகியுள்ளன.
மனித இயல்பை ஜாதியுணர்வுகள் மறக்க வைக்கும் என்பது தெள்ளெனத் தெரிகிறது.
மற்றபடி அகிலன் அவர்கள் பற்றி அவர் வெளியிட்ட வேதனைகள் பற்றி மறந்துவிட்டோம்.(அவருடைய ப்ளாக்கில்) அவருடைய சைக்கிள் பற்றிய கட்டுரை படித்து என் கண் கலங்கிவிட்டது.
அளவிலா குற்ற உணர்வு ஏற்படுகின்றது. ஒன்றும் செய்யாமல் இருக்கிறேனே என்று வெட்கப்படுகிறேன்.
அரசு அராஜகத்திற்கு மிக தெள்ளிய எடுத்துக்காட்டு இலங்கையில் நடக்கும் காட்டு தர்பார்.
இத்தனை கொடுமைகள் நம்மவர்கள்மேல் நடப்பதற்கு இந்த இந்திய அராசாங்கமும் காரணம். ஜனநாயக நாட்டில் வாழும் நானும் காரணம்தான். நம்மால் ஏன் இந்த இந்திய அரசாங்கத்தின் தவறை திருத்தமுடியவில்லை? - எதைத்தான் திருத்த முடிந்திருக்கிறது?
பிஜித் தீவு கொடுமைகளுக்காக அழுதுகொண்டே காவியம் எழுதிய பாரதி இன்றிருந்தால், கப்பலேறி கத்தியேந்திருப்பான்.
நாம் என்ன செய்யலாம்? நம் சக்திக்கு உட்பட்டு ஏதேனும் செய்யவேண்டும்.
தொடர்ந்து ஒருவாரம் (குறைந்தது) இலங்கைத்தமிழர்களின் நல்வாழ்வு குறித்து மட்டும் கட்டுரைகள் எழுதினால் என்ன?
நம் சகோதரனுக்கு வேறென்ன செய்யலாம்?
"நல்லவேளையாக ரோசாவசந்த் வெறுப்புமிழும் விஷயங்களைப் பேசவிடாமல் செய்துவிட்டார் என்பது தெரிகிறது. அவர் எழுதும் நடையில் எனக்கு அவ்வளவு உவப்பு இல்லாவிட்டாலும் அவரின் இந்தச் செயல் பாராட்டுக்குரியது. மாண்பு வரவேற்புக்குரியது."
ரொம்ப சரி. சாதியைப் பற்றிப் பேசினாலே சண்டைதான். ரோசா வசந்த் செய்தது பாராட்டுக்குறியது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இந்த கேலிகளும், மிரட்டல்களும், ஆபாச வசைகளும் நம் தமிழகத்தின் திராவிட பாரம்பரியம் என்று அதை பெருமையாக நாங்கள் வாழ்நாளில் முழுதும் அனுபவிக்கிறோம்//
உப்பைத் திண்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்.
Post a Comment