3/19/2010

Good riddance Hussain, adieu

அப்பாடா ஒரு வழியக இந்த சில்லுண்டி பயல் ஹுசைன் கத்தார் நாட்டுக்கு சென்றான். கத்தாருக்கு அவனும் அவனுக்கு கத்தாரும் ஒருவருக்கொருவர் தண்டனையே என்பது வேறு விஷயம். அது அவர்கள் பாடு.

ஹுசைனுக்காக கச்சை கட்டி வந்தவர்களிடம் பல முறை பல கேள்விகள் வைத்திருந்தேன். யாரும் நேரடியான பதில் தரவில்லை. இங்கு அவற்றில் சிலவற்றை மறுபடி வைக்கிறேன்.

1. ஹிட்லரை நிர்வாணமாக வரைந்தது அவனை அவமானப்படுத்தவே என திருவாய் மலர்ந்தருளியுள்ள ஹுசைன் சரஸ்வதி, சீதை, பார்வதி ஆகிய பெண் கடவுளரை வரைந்தது எதில் சேர்த்தி?

2. நிர்வாணமாகக் கூட வேண்டாம், முகம்மதுவின் படத்தை துணியுடன் வரையத் துணிவானா அவன்?

3. முகம்மது பற்றிய ரெஃபரன்ஸ் வந்ததற்கே இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகள் கலவரம் செய்ய, துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடி ஒளிந்து அதை நீக்கியவன் இங்கு மட்டும் ஏன் மொண்டித்தனம் செய்ய வேண்டும்?

4. சல்மான் ருஷ்டி விவகாரத்தில் அவருக்கு வந்த மரண மிரட்டலை எங்காவது இவன் எதிர்த்திருக்கிறானா? (முக்கால்வாசி அதற்கு ஆதரவு கூட தெரிவித்திருப்பான்)

5. தஸ்லீமா விவகாரத்தில் இவனது நிலைப்பாடு என்ன?

6. மேலே உள்ள இரண்டு கேள்விகளுக்கான விடைகள் அவனுக்கு சப்பைக்கட்டு கட்டும் போலி மதச்சார்பற்றவர்களிடமாவது அவர்களை பொருத்து உள்ளனவா?

கோவில்களில் இருக்கும் நிர்வாணத்தை பற்றி கூறினார்கள். அவை ஆகம விதிகளுக்குட்பட்ட விஷயம். பக்தி நோக்கில் செய்வது. சில்லுண்டி பயல்கள் எல்லாம் செய்யலாகாது. அப்படி செய்தால் இப்படித்தான் நாடுவிட்டு ஓட வேண்டியிருக்கும்.

நல்ல வேளையாக ஏதோ ஒரு வகையில் இந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது. இல்லாவிட்டால் அவன் இந்தியா திரும்பி, அவனது பாதுகாப்புக்கு என இந்திய மக்களின் வரிப்பணம்தான் விரையம் செய்யப்பட்டிருக்கும். அது மிச்சமாகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

46 comments:

smart said...

All the very best for Hussain.

மீண்டும் ஒரு முறை நாத்திக தீவிரவாதிகள் இதற்கு பதில் சொல்லாமல் தனிநபர் தக்குதல் மட்டும் செய்வார்கள்.

Anonymous said...

நம்ம ஊர் மன நலன் குன்றிய டாக்டர் கம் ஓவியர் , ஈரோட்டு பெரியதாடி அய்யாவின் நிர்வாணப் படத்தை(சில மாறுதல்களோடு) வரைந்து,"தமிழனின் இன (உறுப்பு) எழுச்சிக்கு பாடு பட்ட மகாத்மா" என்று தலைப்பு போட்டு பப்ளிஷ் செய்தால்(சும்மா ஒரு பேச்சுக்குத்தான்) தமிழ்நாட்டில் மஞ்ச துண்டு கும்பலின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

Anonymous said...

நல்லா எழுதியுள்ளீர்கள். நன்றி

Anonymous said...

http://www.deccanchronicle.com/blogs/others/feel-free-mr-husain-go-paint-qatari-leaders-773

Feel free, Mr Husain. Go paint Qatari leaders
March 10th, 2010

By Cho Ramaswamy

Now that M.F. Husain has settled in Qatar where there is total freedom, he is free of the shackles imposed by the Indian system on freedom of expression. All those who appreciate his art would now eagerly await his imaginative paintings of the leaders of Qatari society, hopefully not artistically clothed.

His fans would not expect him to confine nudity to Hindu deities alone; it would extend to all the religions. Having already painted his mother, daughter and Muslim kings fully robed, Mr Husain, being the freed citizen that he is now in Qatar, should be prepared to remove those clothes. How can the artist in him be satisfied with seeing Saraswati and Parvati alone in the nude?

Fortunately for art in the nude, the courts here cannot do anything to Mr Husain now that he has run away from the Indian judicial system. All the cases could be now buried amidst the pictures drawn by him. Both would mercifully go to the dustbin.

I am very anxious not to get branded as communal in my thinking. I want to be hailed as a secularist and so I would say with all the force I can command that Mr Husain has the inalienable right to depict the Hindu deities in the most obscene manner while taking care to paint even non-religious Muslims fully clothed.

He can claim that because he hates Hitler he painted him in the nude so he could humiliate him and in the same breath justify his nude pictures of Hindu goddesses as depiction of purity.

And because I am secular, I would also assert that his not returning to India is only to gain freedom from the Indian fascism and not to avoid being apprehended by the law enforcers in this country. Being a liberal-minded artist, he naturally is not able to put up with the protests which do not harm him in any way.

Shunning the Indian system and preferring the Qatar environment is not an act of hypocrisy but one of liberal, secular and free thought. And now that Mr Husain has established himself as such a stout campaigner for free expression, I must believe firmly that he will forcefully plead with his new protectors in Qatar to roll out of a bit of that red carpet to Taslima Nasreen, another hounded victim from the literary world.

- Cho S. Ramaswamy is a well-known political
analyst, actor, dramatist and editor of
Tamil magazine Tughlak

Sindan said...

Good riddance Hussain, farewell
-------------------------------
பைத்திய வைத்தியர் எங்கே.... வாங்க... வாங்க...

Unknown said...

அருமையான வாதம். உங்களிடமிருந்தா நம்பமுடியவில்லை

virutcham said...

சரஸ்வதி உங்களுக்கு நெருக்கம் இல்லை. அதனால் உங்களுக்கு கலை கண் இல்லை. ஆமாம் சொல்லிப் போட்டேன்.
சும்மா வம்பு பண்ணாதீங்க. எங்களுக்கு கலைக் கண் என்று எதனை பதிவு எழுதிச் சொன்னாலும் உங்களுக்கு மட்டும் புரியவே மாட்டேங்குதுனா அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?

டோண்டு sir, உங்க கேள்விக்கு எல்லாம் யாரு கிட்டேயும் பதில் கிடையாது

virutcham

அ. நம்பி said...

‘‘Now Qatar is my place. Here no one controls my freedom of expression. I'm happy here.''

ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்லியுள்ளார் ஓவியர் ஹுசைன்.

அவர் சொல்லும் முழுமையான சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழட்டும்; வாழ்த்துகள்.

வால்பையன் said...

ஹுஸைன் போனாலும் நமக்கு நல்லா பொழுது போகுது!


//மீண்டும் ஒரு முறை நாத்திக தீவிரவாதிகள் இதற்கு பதில் சொல்லாமல் தனிநபர் தக்குதல் மட்டும் செய்வார்கள்.//

அது யாருப்பா இங்க நாத்திக தீவிரவாதிகள்

Anonymous said...

//ஆகம விதிகளுக்குட்பட்ட விஷயம். பக்தி நோக்கில் செய்வது. சில்லுண்டி பயல்கள் எல்லாம் செய்யலாகாது. அப்படி செய்தால் இப்படித்தான் நாடுவிட்டு ஓட வேண்டியிருக்கும்.///
என்னன்ணா விதி அது.. எப்படிப்பட்ட பக்தி அது... தீவிர வைஷ்ணர்தான அண்ணா நீங்களும்.. இந்த லோகத்துக்கு அதைப் பத்தி விலாவாரியா சொல்லப்படாதா... எத்தனை புண்ணியா போகும்...

bala said...

நான் கூட, நம்ம பெரிய தாடி, மன நலன் குன்றிய டாக்டர் கிட்ட,castrate செய்யப்பட்ட கார்ல்மார்க்ஸ்,ஸ்டாலின்,போல் போட் போன்ற சூப்பர் கம்யூனிஸ்ட் சாமிகளின் நிர்வாண பெயின்டிங் வரைந்து கொடுக்குமாறு வேண்டியிருக்கிறேன்.

போட்டு கொடுத்தார்னாக்க, குறைந்த விலைக்கு வாங்கி,வினவு கும்பலுக்கு ஏகப்பட்ட விலைக்கு வித்து கொஞ்சம் காசு பாக்கலாம்.ஹும்.பாக்கலாம்.தாடி டாக்டர் ஒத்துழைக்கிறாரா என்று?

பாலா

Arunachalam said...

Good article.
One small point on temple art-the naked ones are mostly of yakshas and yakshis and when they are of worshipped deities they are clothed as per agama sastra as you rightly point out.And they are always found OUTSIDE the main worship area on the prahara. And even these are not found in all temples.
Even during abhishekam , the deities are covered with a cloth.
So the argument of some people that God images dont wear clothes falls flat on its face.
What the much discussed artist does is pure perversion .

ரவி said...

வால்பையா. நீயும் நானும்தான். வேற யாரு ?

வால்பையன் said...

//வால்பையா. நீயும் நானும்தான். வேற யாரு ? //

இந்த பால்வடியிற முகத்தை பார்த்தாவா தீவிரவாதி மாதிரி தெரியுது!

NO said...

அன்பான நண்பர் திரு செந்தழில் ரவி,

கிரீடங்களை பிடுங்கி அணிய முயலவேண்டாம்! நண்பர் வால் பையன் நாத்திக தீவிரவாதியா என்பது தெரியாது, அனால் நீங்கள் எந்த வாதி என்று நன்றாக
தெரியும் (நிச்சயமாக "நாத்திக" தீவிரவாதி கிடையாது)

நன்றி

Anonymous said...

பைத்திய வைத்தியர் எங்கே.... வாங்க... வாங்க...
-அவர் கூட்டத்தோடு சேர்ந்துவிட்டார்.
குதிக்கிறார்; கூத்தாடுகிறார். பல்லை நறநற என்று கடித்து பாடம் புகட்டுவேன் என்கிறார். என் தளத்துக்கு வாருங்கள்-காட்டுகிறேன் என்று மிரட்டுகிறார்.

Anonymous said...

இந்த பால்வடியிற முகத்தை பார்த்தாவா தீவிரவாதி மாதிரி தெரியுது!
-பாலா வடிகிறது? வக்ரச்சீழ் அல்லவா வடிகிறது! அதை அல்லவா அந்த முகத்தின் நாக்கு சுவைத்துக் கொண்டு இருக்கிறது!

Madhavan Srinivasagopalan said...

Well written article. All the points are valid, & support/stand by them.

ராஜரத்தினம் said...

1. ஹிட்லரை நிர்வாணமாக வரைந்தது அவனை அவமானப்படுத்தவே என திருவாய் மலர்ந்தருளியுள்ள ஹுசைன் சரஸ்வதி, சீதை, பார்வதி ஆகிய பெண் கடவுளரை வரைந்தது எதில் சேர்த்தி?
ஹிட்லர் இந்த உலகில் ரத்தம் சதையுமாக வாழ்ந்தவர். சரஸ்வதி அப்படியா? அவர் இங்கு வாழ்ந்தாரா? இல்லாத ஒருவரை எப்படி வரைந்தால் என்ன?

2. நிர்வாணமாகக் கூட வேண்டாம், முகம்மதுவின் படத்தை துணியுடன் வரையத் துணிவானா அவன்?
முகம்மது உருவம் யாருக்கும் தெரியக்கூடாது. ஏன்னா அல்லாவுக்கும் அது கிடையாது. கொடுக்க முடியாது. இப்ப உங்களுக்கு தெரிஞ்கிருக்கனுமே? அவரும் அல்லாவும் ஒன்னுதான்னு. அதான்.

3. முகம்மது பற்றிய ரெஃபரன்ஸ் வந்ததற்கே இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகள் கலவரம் செய்ய, துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடி ஒளிந்து அதை நீக்கியவன் இங்கு மட்டும் ஏன் மொண்டித்தனம் செய்ய வேண்டும்?
முஸ்லீம்கள் என்ன இந்துவைபோல் இல்லாத கடவுளையா வணங்குகிறார்கள்? அவர்களுக்கு சொரணை இல்லாமல் இருக்க? அவன் கட்டை விரலை ஒடித்துவிடமாட்டானா? அப்புறம் எப்படி இல்லாத கடவுளை மறுபடியும் துகிலுரிக்கமுடியும். அதனால்தான்.

4. சல்மான் ருஷ்டி விவகாரத்தில் அவருக்கு வந்த மரண மிரட்டலை எங்காவது இவன் எதிர்த்திருக்கிறானா? (முக்கால்வாசி அதற்கு ஆதரவு கூட தெரிவித்திருப்பான்)
மிஸ்டர் உங்களுக்கு ஒன்னும் புரியல. அவர் இந்து மதத்தை தான் இழிவுபடுத்துவாரே தவிர தன் அரபி மதத்தை அல்ல. அதை எதிர்ப்பவர் அவருக்கும் எதிரி.
5. தஸ்லீமா விவகாரத்தில் இவனது நிலைப்பாடு என்ன?
முன் கேள்விக்கான பதில்தான் இதுக்கும்.

இதை தான் அந்த மதசார்பின்மை வாதிகள் சொல்வார்கள்னு நான் நினைக்கிறேன். நீங்க எத்தனை கேள்விகள் கேட்டாலும் அவனுங்க இதைதான் சொல்வானுங்க.ஏன்னா அவங்களுக்கு இதுக்கு மேல ஒன்னும் தெரியாது.

கிருஷ்ண மூர்த்தி S said...

/இந்த பால் வடியுற முகத்தை பார்த்தாவா தீவிரவாதி மாதிரி தெரியுது?/

ஆல் இன் ஆல் கூட்டணியில் பால் மாதிரியே, ஆனாக்க பால் இல்லாத வேறென்னவெல்லாமோ வடியுற மாதிரி சொன்னாங்களே!

வால்ஸ்! நீங்க பண்றது வறட்டு இழுப்பு! வால் இழுப்பு!

தீவீரவாதம் இல்லே! இல்லே!

dharma said...

only people who believe in god like you will say "y he did it only to my god.. cant he do to his god.. " ur mind wish to see other god also in that pose... !

but people who doesnt belive in god, will see all god as same.. let it be saraswathi, or allah or jesus.. they say NO GOD .. !

only you people who believe in god will degrade one god and praise one god..

வஜ்ரா said...

எல்லோரும் பாத்துங்குங்கப்பா நானும் ரவுடி தான் என்று ஒரு படத்தைவரைந்து பைத்தியக்கார டாக்டர் ஒருவர் ஒரு மாபெரும் "காப்பியம்" வலைப்பதிவாக பதித்திருக்கிறார் பார்த்தீங்களா ?
அதுக்கு சிலர் சிஞ்சாகூட அடித்திருக்கிறார்கள்.

தெளிவான கேள்விகள் அரவிந்தனும் வைத்திருக்கிறார். ஆனால் பதில் சொல்லத்தான் ஆளில்லை.

எதேச்சதிகார ஆதரவு போக்கு உள்ள ஹுசைன் போன்ற ஜனநாயக விரோதிக்கு, எதேச்சதிகார கொள்கையான கம்யூனிச சார்புடையவர்கள், ஆதரவளிப்பது வியக்கவேண்டிய விஷயமே அல்ல.

Anony8 said...

//ஆகம விதிகளுக்குட்பட்ட விஷயம். பக்தி நோக்கில் செய்வது. சில்லுண்டி பயல்கள் எல்லாம் செய்யலாகாது. அப்படி செய்தால் இப்படித்தான் நாடுவிட்டு ஓட வேண்டியிருக்கும்.///

Some points need to be added to it...

1. None of those nude statues belong to even demi-gods in Hinduism and the ones in Khajuraho are by "Hindu rebellions" and Buddhists and not built by Vedic Hindus based on Agam and Vastu Sastras.

2. MF's art were not just nude, but one step even vulger showing incest between........ cant even type those...

Anonymous said...

matha saarbinmaikku vidukkappatta savaal ithu

gumthalakka

bala said...

//தெளிவான கேள்விகள் அரவிந்தனும் வைத்திருக்கிறார். ஆனால் பதில் சொல்லத்தான் ஆளில்லை.//

Vajra

I have often wondered as to what possible, common ground can there be among Jihadi terrorists,naxal terrorists,black shirt wearing periyaarists cum terrorists and doctors in Chennai who practise psychiatry (male or female no bar).

One can come to only one conclusion.All these guys are against the very concept of India.All these guys have grown up having been constantly fed hatred against any thing Indian.This hatred extends to ridiculous extent that these johnnies welcome and collude with terrorists who planted bombs in Coimbatore,bombay etc and killed several people including tamils.

Bala

வலைஞன் said...

இன்னும் ஹுசைன் பக்கம் ஞாயம் காணும் ஹிந்துக்கள் கீழ்க்கண்ட பதிவை படித்து, "முடிந்தால்" தெளிவு பெறவும்
http://www.hindujagruti.org/activities/campaigns/national/mfhussain-campaign/
மற்றபடி நெத்தியடிக்கு நன்றி டோண்டுஜி

virutcham said...

பென்சில் கோடுகளை கோவில் சிற்பங்களோடு ஒப்பீடு செய்து அங்கீகாரம் செய்து கொள்வது, மற்றும் ரவி வர்மா ரவிக்கை போட்டுக் கொடுத்து விட்டானா என்றே ஏளனத்துக்கும் எனது எதிர் வினைஇதோ

பென்சில் கோடுகள் கோவில் சிற்பங்களோடு ஒப்பிடத்தக்கதா?
link
http://www.virutcham.com/?p=1004

Suresh Ram said...

/எதேச்சதிகார ஆதரவு போக்கு உள்ள ஹுசைன் போன்ற ஜனநாயக விரோதிக்கு, எதேச்சதிகார கொள்கையான கம்யூனிச சார்புடையவர்கள், ஆதரவளிப்பது வியக்கவேண்டிய விஷயமே அல்ல/

மார்க்சிய கண்ணோட்டத்தில் இதன் அர்த்தம் என்னவெனில் பிரதான எதிரியை அழிப்பதற்கு இரண்டாம் கட்ட எதிரியுடன் தற்காலிக கூட்டுச் சேரலாம்

kaliraj - Qatar said...

Qatar Foundation என்ற அரசு சார் நிறுவனத்தின் மூலம் எழுப்பப்படும் கட்டடங்களில் இவரது கலைவண்ணம் திகழுமாம்????

இது ஒரளவு கட்டு பெட்டியாக உள்ள நாடு. சீக்கிரம் தொரத்திவிடுவார்களா? இல்லை பக்கி இங்கே ஆயுசை முடிக்குமா என்று தெரியவில்லை.

இப்பவே 94-வயசு ஆச்சு ஆனா பார்க்குறதுக்கு 65-ஐ தாண்டாது. என்ன லேகியம் சாப்பிடுறாரோ?

என்னுடைய இசுலாமிய நண்பர்களெல்லாம் பொய் போட்டோ எடுத்துக்கொண்டு Orkut-ல் பெருமையாய் போட்டிருக்கிறார்கள்.

வஜ்ரா said...

//
மார்க்சிய கண்ணோட்டத்தில் இதன் அர்த்தம் என்னவெனில் பிரதான எதிரியை அழிப்பதற்கு இரண்டாம் கட்ட எதிரியுடன் தற்காலிக கூட்டுச் சேரலாம்
//

இப்படித்தான் ஈரானில் செய்தார்கள்.
ஷா மன்னராட்சியை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் கொமேனி போன்ற மதவெறியனை ஆதரித்தார்கள்.

இன்று ஈரானில் கம்யூனிஸ்டுகள் எக்ஸ்டிங்க்ட் ஸ்பீஷீஸ் ஆகிவிட்டார்கள்.

Mukundan said...

Well said. Let him to darks.

Unknown said...

Vajra,

Why dont we invite the iranians here and hand over governance of India to them.

First, they will attend to the Sunni Jihadi terrorism which is about 90% of all terrorist attcks in India and then fix the maoist bastards responsible for the balance 10%.

Incidentally Suharto wiped out the commie swines in Indonesia.Otherwise the commie villains would have converted Indonesia into another Cambodia.

In any case, their governance cannot be worse than the congress/dmk combine.

Anonymous said...

சோ இராமசாமியையும் சேர்த்துக்கொள்ளுங்கள் உங்கள் மதத்தில். நான் அவரை மறந்து விட்டேன்.

Anonymous said...

My answers:

1. அவமானப்படுத்த அல்ல என்று அவர் பதில் சொல்லிவிட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு ஓவியன் இருவிதமாகவும் வரைய்லாம். அவர் சொன்ன விளக்கம் போதும்.

2. முகமது எப்படி இருந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை. எனவே எப்படி வரைவது?

3. இந்துக்களின் மீது அவ்வளவு நம்பிக்கை. அது உண்மைதான். இந்துக்கள் காலம்காலமாக அனைத்தையும் பொறுத்துக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள். கஜுராஹோ, மற்றும் புராணங்களில் வரும் ஆபாசக்கதைகள். இசுலாமியர் பொறுக்கமாட்டார்கள். இப்போது, ஓவியர் வரைந்தபடத்தை எதிர்த்து இந்து மத இயக்கங்களும் மற்றும் தீவிர இந்துக்களும்தான் போராடுகிறார்கள். அவர்களுக்குப் பய்ந்துதான் ஓவியர் ஓடிவிட்டார். சாதாரண இந்துக்களுக்காக இல்லை. சாதாரண் இந்துக்கள் சட்டை பண்ணுவதில்லை.

4 ம் 5ம்: இதை அவரிடம்தான் கேட்க வேண்டும். மற்றவர்களுக்கு எப்படித் தெரியும்?

6. சல்மா ருஷ்டியும், தஸ்லீமாவும் எழுத்தாளர்கள். ஒருவேளை அதனால் இவர் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம். ப்ரோடா காலேஜ் ஓவியம் பயிலும் மாணவன் வரைந்த ஓவியத்தையும் இந்து மதத் தீவிரவாத இயக்கத்தினர் கிழித்துப்போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள். அப்போது இவர் என்ன சொன்னார் என்று டோண்டு கேட்கலாம். அல்லது, டோண்டுவே கண்டுபிடித்து, அவர் மாணவன் செய்தது சரியென்றாரா, தவறு என்றாரா என்று சொல்லால், ஹுசெனைபற்றித்தெரிந்து கொள்ள்லாம்.

எனக்கும் தெரியவைல்லை. அவர்களுக்கும் தெரிய்வைல்லை என்றால், ஏன் எழுதவேண்டும்?

//கோவில்களில் இருக்கும் நிர்வாணத்தை பற்றி கூறினார்கள். அவை ஆகம விதிகளுக்குட்பட்ட விஷயம். பக்தி நோக்கில் செய்வது. சில்லுண்டி பயல்கள் எல்லாம் செய்யலாகாது. அப்படி செய்தால் இப்படித்தான் நாடுவிட்டு ஓட வேண்டியிருக்கும்.//

இந்து மதம் டோண்டுவால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. தொன்று தொட்டு இம்மதம் எதிர்கருத்துகளையும், விமர்சனங்களையும், கடவுளர்கள் மீதும், மதக்க்கொள்கைகள் மீதும் வைக்கப்பட்டவைகளை அனுமதித்து வந்துள்ளது. எவரையும் கொல், என்று சொல்லவில்லை. இன்றுதான் அப்படி நடக்கிறது. காரணம், சில மத ஆராய்ச்சியாளர்கள் சொல்வது போல, அக்காலத்தில் இம்மதத்தின் விமர்சனர்கள் இம்மத்த்தினுள்ளேயே இருந்து வந்தனர் என்றும் அவர்கள் காலப்போக்கில் இம்மதத்தின் ஒரு பிரிவின்ராக (சாக்கியர், புத்தர் ஒரு விஸ்ணு அவதாரம் போன்று) ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்துமதத்தில் assimilate பண்ணப்பட்டார்கள். அல்லது, அவர்களது எதிர்ப்பு dilute ஆக்கப்பட்டது.

இன்று அன்னிய மதங்கள் இந்தியாவில் வேறூன்றிவிட்டன். கோடிக்கணக்கான் இந்தியர்கள் அம்மத்த்திற்கு சென்று விட்டார்கள். இந்து மதம் ஒரு பெரும்போட்டியைச் சந்திக்கத்தொடங்க, இந்தும்தத்தின் liberal nature மதத்தை அழித்துவிடும் என நினைக்கத்தொடங்க, எவை அன்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டதோ, அவை இன்று பெரும்பகையாகவும், கண்டிப்பாக எதிர்த்து வெல்லப்படவேண்டுமெனவும் எடுத்துக்கொள்ளப்பட்டதால், ஹுசென் போன்றோருக்கு எதிர்ப்பு.

இந்தும்தம் அழியாது அது எவர் வரினும் அழியாது நிற்கும் என்பதெல்லாம் சுயதிருப்திக்கு சொல்லிக்கொள்ளலாம். ஆனால், உண்மையல்ல. நாளுக்கு நாள் இசுலாமியர் எண்ணிக்கை அதிக்மாயித்தான் வருகிறதே தவிர குறையவில்லை.

//நல்ல வேளையாக ஏதோ ஒரு வகையில் இந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது. //

ஒரு ஓவியரோடு இது முடியாது. இவர் போனால் ஓவியர்கள் எல்லாரும் போனதாக பொருளா?

ஒரே வழி. இந்துக்கள் இவரை சாத்வீக்மான முறையில் எதிர்த்துக்கொண்டே இருந்து, தங்களின் பாரம்பரிய குணமான லியரல் நேச்சுரை தக்கவைத்துக்கொண்டிருந்தால், அதன் பேரும் புகழும் நிலைக்கும்.

இல்லயெனில், ஒரு புது மதம் ‘இந்துமதம்’ என்ற பேரில் பிறக்கும். அதற்கு டோண்டு, வஜரா, விருச்சம், நம்பி, பாலா, சின்னப்பெண், போன்ற தொண்டர்களே இருக்கமுடியும்.

ஏற்கனவே, இந்தியாவில் கோடிக்கணக்கான் இந்துக்கள் எங்களுக்கும் இந்து இயக்கங்களுக்கு தொடர்பில்லை. நாங்களும் இந்துக்கள்தான் என்கின்றனர்.

கசப்பான கருத்துகள். பொறுமையாக சிந்தித்தால் நலம்.

Anonymous said...

ரெண்டாயிரத்துச் சின்னப்பெண்,
நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னே புரியல்லங்க.

smart said...

//வால்பையா. நீயும் நானும்தான். வேற யாரு//

நான் நீங்க ரெண்டு பெரும் சும்மா பொழுது போகமாக எழுதுரேங்கனு நினைச்சேன். நீங்க அப்ப தீவிரவாதியா?

வன்பாக்கம் விஜயராகவன் said...

ஹுசைன் இங்குள்ல பல விமர்சனங்களுக்கும் சரியான ஆள் ஆகின்றார்.

ஆனால் ஹுசைன் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு கேள்வி. ஹுசைன் அவர் நிர்வாணப்படங்களை வரைந்து 20 வருடம் யாரும் குரல் இடலை, ஏன் 10-12 வருடங்களாகத்தான் ஹுசைன் எதிர்ப்பு? விகிபீடியா படி “The paintings in question were created in 1970, but did not become an issue until 1996, when they were printed in Vichar Mimansa, a Hindi monthly magazine, which published them in an article headlined "M.F. Husain: A Painter or Butcher".”

யாரும் கவலைப்படாத பகிரங்கமான விஷயத்தை பல வருடங்கள் கழித்து குட்டையை குழப்புவதில் பிரயோஜனம் இல்லை.

ஆனால் ஹுசைன் கடாரி தேசீயத்தை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொண்டது தவறு. அதைப்போல் சித்திரங்களை வரைவதால் வரும் சர்ச்சைகளையும் மன திடத்துடன் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். இந்தியாவில் ஒரு ஆதிக்கவர்க்க சாரார், அவரை ஆதரிக்க தயாராக இருக்கும் போது, கடாரி தேசியத்தை கொடுக்கப்பட்டவுடன் ஏற்பது, ஒரு கோழையையும், சந்தர்பவாதியையும் காட்டுகிறது. ஆனால் அவர் வாதம் `நான் படுகிழவன், என்னிடம் சண்டைபோட திராணி இல்லை` என்பதும் நமப்க்கூடியதாக உள்ளது
.

`கலை சுதந்திர” பற்றாளர், தஸ்லிமா நஸ்ரினை கடாரில் தன் விருந்தாளியேக ஏற்ப்பாரா என பார்ப்போம்.

என்னை பொருத்தவரை ஹுசைன் எதிர்ப்பு கேஸ் வீக், ஏனெனில் அது 20 வருடங்கள் கழித்து அரசியல் இயக்கமாக வருகின்றது

Anonymous said...

டோண்டு ராகவனுக்கு ஒரே ஒரு கேள்வி.

நீங்கள் மதிக்கும் ஜெய மோகன் ஹுசைன் ஆதரவாக ஒரு நீண்ட விளக்கம் அளித்திருக்கிறாரே.
அதில் உங்கள் பல கேள்விகளுக்கும் விடை உள்ளதே? அது பற்றி உங்கள் கருத்து என்ன?

Anonymous said...

//None of those nude statues belong to even demi-gods in Hinduism and the ones in Khajuraho are by "Hindu rebellions" and Buddhists and not built by Vedic Hindus based on Agam and Vastu Sastras.
//

Have you gone there, seen the statues yourself?

True, mostly on the wall panels, we find the yakshas-yakshinis in various stages of copulation: some scenes show group sex - in prurient details that may shock people.

Yet, a few show Siva-parvathi, Radha-krishna - not in such crude stage of copulation - but in - what sexologists call - indulging in preliminaries: fondling each other.

As you said, those statues of god-goddess are on the wall panels only. Inside you find the mula statues - that were offered worship, beautifully made, but decently clothed.

If Hindu rebels had built all these, the one Mahadeva temple which is put to fervent worship by the local devotees -Worship of Siva in the locality is very active so much so that I feel they dont worship other Hindu gods. People have not abandoned this temple.

They have been forced to abandon other temples in both West and East complex, and also scattered ones - there are many great ones for an artistic minded person like me - for e.g Varaha temple - only because the ASI took over all of them and barred people from making these temples put to daily use.

I dont know how and why the ASI spared the aforesaid Mahadeva temple which is at the beginning of the West entrance.

You said, Hindu rebels. What is your source? I would like to go there and know for myself.

It may be somewhat true that the builders thought about the reactions of people; so, they built all these temples deep inside forest. And, there they lay for many centuries hidden from people, till one day, the local British collector - an antiquarian and historian - ventured deep inside and stumbled upon these temples. The rest is glorious history.

Taking an overall view, it strains our credulity that these temples are handiwork of some Hindu rebesl. Because the temples were dedicate to Siva couple - either he alone in some, or she alone in some. In a few ones, Vishnu. In one temple, we find, Boar - a huge one- the avatar of Vishnu.

The one Varaha temple I said above is a picture of deep devotion to Vishnu, sexy yaksha-yakshinis in stages of copulation on its wall nothwithstanding. This temple is far away from any group of temples - standing alone. Do you mean to say Hindu rebels were behind it? I am surprised!

Only a group of fervent devotees could have thought and constructed these temples.

Please give us your source or sources.

dondu(#11168674346665545885) said...

//ஆனால் ஹுசைன் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு கேள்வி. ஹுசைன் அவர் நிர்வாணப்படங்களை வரைந்து 20 வருடம் யாரும் குரல் இடலை, ஏன் 10-12 வருடங்களாகத்தான் ஹுசைன் எதிர்ப்பு?//
அதற்கு காரணமே அந்த சில்லுண்டிப் பயலின் திமிர் பேச்சுத்தான் காரணம். அந்த ஓவியங்கள் வரையப்பட்டதற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு, தான் ஹிட்லரை நிர்வாணமாக வரைந்தது அவனை அவமானப்படுத்தவே என கூறிய அந்த சில்லுண்டி நுணல் தன் வாயாலேயே கெட்டது.

நம்ம கருணாநிதியும் தனது பேரன் தயாநிதி மாறன் ஹிந்தி நன்றாக கற்று தேர்ந்ததாலேயே மந்திரியாக போக முடிந்தது என வெட்டிப் பேச்சு பேசியதும்தான் அவரது ஹிந்தி சம்பந்தமான ஆஷாடபூதித்தனம் வெளிப்பட்டு எல்லோரிடமு ஏச்சு கேட்க நேர்ந்தது என்பதும் இந்த இடத்தில் நினைவு கொள்வது சரியாகவே இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//நீங்கள் மதிக்கும் ஜெய மோகன் ஹுசைன் ஆதரவாக ஒரு நீண்ட விளக்கம் அளித்திருக்கிறாரே.//
அது அவரது நிலைப்பாடு. நான் ஒத்து கொள்ளவில்லை. சில்லுண்டி பயல் ஹுசைன் செய்தது வேண்டுமென்றே அவமரியாதை. அதற்காக தண்டிக்கப்படவேண்டியவன் என்பதே எனது நிலைப்பாடு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Mukkodan said...

ஒரே வழி. இந்துக்கள் இவரை சாத்வீக்மான முறையில் எதிர்த்துக்கொண்டே இருந்து, தங்களின் பாரம்பரிய குணமான லியரல் நேச்சுரை தக்கவைத்துக்கொண்டிருந்தால், அதன் பேரும் புகழும் நிலைக்கும்.

----------

Good points those.

AFAIK. Hindus pursued MF only thru courts with various cases and have successfully silenced few fringe elements who indulged in Violence too (never to the extent of physically attacking this painter).

For India MF is an absconding criminal who also has arrest warrants issued against him, who never showed any respect to the laws of this land and never showed up in courts.

Unknown said...

//கத்தாருக்கு அவனும் அவனுக்கு கத்தாரும் ஒருவருக்கொருவர் தண்டனையே என்பது வேறு விஷயம்/

கத்தாருல அந்த ஆள் அடக்க ஒடுக்கமா இருப்பான்

Anonymous said...

Dear Dondu,
my question now would be, WHO or WHAT will stop him in Qatar to paint Indian Deities as he wishes ???.. will he not continue to go on further in Qatar ?...What will the Hindu community do when he releases newer versions of saraswati lakshmi & exhibits in museum of modern art there in Qatar ???

he did not choose qatar for nothing!!

shivatma

வஜ்ரா said...

சிவாத்மா,

ஈரானில் அடிக்கடி ஓவியக்கண்காட்சி எல்லாம் நடக்கும்மாம். அதில் ஹோலோகாஸ்ட் போன்ற கொடுமை நடக்கவேயில்லை என்கிற மாதிரி ஓவியங்கள் எல்லாம் வைக்கப்படுமாம். உலகத்தில் அதனால் ஏதாவது புரட்சி ஏற்படுகிறதா ? ஏன் ? ஈரானின் கருத்துச் சுதந்திரத்தைப்பற்றி அனைவருக்கும் தெரியும். சிரித்துவிட்டுப் போய் விடுவார்கள்.

அதே போல் தான். கத்தாரில் உட்கார்ந்துகொண்டு அதைச் செய்வதனால் ஒரு புரட்சியும் நடக்காது. கத்தாரின் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி உலகம் நன்கு அறியும்.

Anonymous said...

அன்புள்ள டோண்டு,

நான் இந்த விஷயத்தில் உங்களுக்கு எதிர் நிலை உள்ளவன் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். உங்கள் சுட்டியை சுட்டியும், கேள்விகளுக்கு பதிலலளித்தும் இன்று ஒரு சுட்டி எழுதி இருக்கிறேன் - http://koottanchoru.wordpress.com/2010/03/26/எம்-எஃப்-ஹுசேன்-சில-எதிர்/ முடிந்தால் பாருங்கள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது