ஜெயமோகனுக்கு என்னவாயிற்று எனத் தெரியவில்லை. மனிதர் விடாது தனது இணைய பக்கத்தில் நெஞ்சத்தை அள்ளும் சிறுகதைகாளாக போட்டு வருகிறார். அறம், சோற்றுக் கணக்கு, மத்துறு தயிர், வணங்கான் என்று மூச்சு முட்டவைக்கும் சிறுகதை வரிசையில் இப்போது நான் படித்தது யானை டாக்டர் என்னும் கதையின் மூன்று பதிவுகள். முதல் பகுதியின் சுட்டி இதோ.
இக்கதை உண்மையிலேயே வாழ்ந்து பலரது நினைவுகளில் வாழும் வனவிலங்கு மருத்துவர் அமரர் கிருஷ்ணமூர்த்தியை வைத்தே எழுதப்பட்டுள்ளது. உண்மை புனைவைவிட அதிசயமானது என பொருள்படும் ஆங்கிலச் சொலவடையின் எடுத்துக்கட்டு இந்த கிருஷ்ணமூர்த்தி.
ஜெயமோகன் கூறுகிறார், “தமிழக கோயில்யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சித்திட்டம் அவர் முன்வைத்து முன்னின்று நடத்தியதேயாகும். பொதுவாக யானையை பயன்மிருகமாக வளர்ப்பதையும் கோயில்களில் அலங்காரமாக வளர்ப்பதையும் நிறுத்தவேண்டும் என்று கோரிவந்தார்.
இலக்கிய ஆர்வம் கொண்டவர் டாக்டர் கே. அவருக்கு லார்ட் பைரனின் கவிதைகளிலும் சங்க இலக்கியத்திலும் ஆர்வம் உண்டு. மிகச்சிறந்த உரையாடல்காரர் என்று இந்து நாளிதழில் அருண் வெங்கட்ராமன் பதிவுசெய்கிறார்.
2002 டிசம்பர் 9 ஆம்தேதி தன் 73 ஆவது வயதில் மரணமடைந்தார்”.
இப்போது ஜெயமோகனின் யானை டாக்டர் கதையில் என்னைக் கவர்ந்த வரிகள்:
//’புழுக்களைப்பாத்து பயந்துட்டேள் என்ன?’ என்றார் டாக்டர் கே. ’புழுக்களை பாத்தாலே பெரும்பாலானவங்களுக்கு பயம்… அந்த பயம் எதுக்காகன்னு எப்பவாவது கவனிச்சா அதை தாண்டி போயிடலாம். பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும், அப்டியே உதுந்துடும். .. நீங்க இங்க கருப்பா ஒரு புளியங்கொட்டை சைசுக்கு ஒரு வண்டு இருக்கறத பாத்திருப்பேள். உங்க வீட்டுக்குள்ள கூட அது இல்லாம இருக்காது’ என்றார் ‘ஆமா, அதுகூடத்தான் வாழறதே. சோத்திலகூட கெடக்கும். பாத்து எடுத்துப் போட்டுட்டு சாப்பிடணும்’. டாக்டர் கே சிரித்து ‘அந்த வண்டோட புழுதான் நீங்க பாத்தது..வண்டு பெரிய ஆள். புழு கைக்குழந்தை. கைக்குழந்தை மேலே என்ன அருவருப்பு?’
நான் மேலே பேச முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தேன். ‘எல்லா புழுவும் கைக்குழந்தைதான். நடக்க முடியாது. பறக்க முடியாது. அதுபாட்டுக்கு தவழ்ந்துண்டு இருக்கறது. அதுக்கு தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான், சாப்புடறது. தின்னுண்டே இருக்கும். சின்னப்புள்ளைங்ககூட அப்டித்தான்…ஒரு கைக்குழந்தை சாப்பிட சாப்பாட்டை அதோட எடையோட கம்பேர் பண்ணினா நீங்க தினம் முப்பது லிட்டர் பால்குடிக்கணும்…’ என்றார் டாக்டர் கே ‘அதுக்கு அப்டி ஆர்டர். சட்டுபுட்டுன்னு அகப்பட்டத தின்னு பெரிசாகிற வழியப்பாருன்னு….’ புன்னகைத்து ‘கிறுக்கு ஃபிலாசபின்னு தோணறதா?’ இல்லை என்றேன்.//
//ஒருமுறை காட்டுக்குள் நானும் அவரும் சென்றுகொண்டிருந்தபோது டாக்டர் கே கைகளை ஆட்டினார். ஜீப் நின்றது. அவர் சத்தமின்றி சுட்டிக்காட்டிய இடத்தில் புதருக்குள் ஒரு செந்நாயின் காதுகள் தெரிந்தன. அது எங்களை வேவுபார்ப்பதை உணர்ந்தேன். அவர் இன்னொரு இடத்தைச் சுட்டிக்காட்டினார். அங்கே இன்னொரு செந்நாய் தெரிந்தது. சில நிமிடங்களில் அந்தக்காட்சி தெளிவாகியது. ஆறு செந்நாய்கள் ஆறு திசைகளிலாக மையத்தில் இருப்பதை காவல்காத்து நின்றன.
‘அங்கே அவர்களின் தலைவன் அல்லது குட்டிபோட்ட தாய் நகரமுடியாமல் கிடக்கிறது’ என்றார் டாக்டர் கே ஆங்கிலத்தில். கண்களை அங்கேயே நாட்டியபடி மிகமெல்லிய முணுமுணுப்பாக ‘ இங்கேயே இருங்கள். அசையவேண்டாம். கைகளை தூக்கக்கூடாது. நான் மட்டும் போய்ப்பார்த்துவிட்டு வருகிறேன்’ என்றார். நான் பதற்றத்துடன் ‘தனியாகவா?’என்றேன் . ‘இல்ல, அதுங்களுக்கு என்னை தெரியும்’ ‘இல்லடாக்டர், ப்ளீஸ் …செந்நாய்கள் ரொம்ப ஆபத்தானவைன்னு சொன்னாங்க’ ‘கண்டிப்பா ஆபத்தானவைதான்…பட்…’ திரும்பி ‘திஸ் இஸ் மை ட்யூட்டி’ என்றபின் மெல்ல கதவைத்திறந்து இறங்கி அந்த செந்நாய்களை நோக்கிச் சென்றார்.
என் வழியாக ஒரு குளிர்ந்த காற்று கடந்து சென்றது. கைகளால் மெல்ல என் பைக்குள் இருந்த சிறிய துப்பாக்கியை தொட்டேன் .அதன் குளிர் ஆறுதலை அளித்தது. டாக்டர் மேடேறி அந்த நாய்களின் அருகே சென்றார். புதருக்குள் இருந்து முதல் நாய் தலை தூக்கி காதுகளை முன்னால் மடித்து அவரைப் பார்த்தது. அவர் நெருங்க நெருங்க தலையை கீழே கொண்டுவந்து மூக்கை நன்றாக நீட்டி அவரை கவனித்தது. மற்றநாய்கள் இருபக்கமும் சத்தமே இல்லாமல் அவரை நோக்கி வருவதைக் கண்டேன். சில நிமிடங்களில் அவர் அந்த ஆறுநாய்களாலும் முழுமையாகச் சூழப்பட்டுவிட்டார்.
டாக்டர் கே முதல் செந்நாயின் அருகே சென்று அசையாமல் நின்றார். சிலநிமிடங்கள் அந்த நாயும் அவரும் ஒரு மௌனமான பிரார்த்தனை போல அப்படியே நின்றார்கள். பின் அந்த நாய் நன்றாக உடலை தாழ்த்தி கிட்டத்தட்ட தவழ்ந்து அவர் அருகே வந்தது. முகத்தை மட்டும் நீட்டி அவரை முகர்ந்தது. சட்டென்று பின்னால் சென்றபின் மீண்டும் வந்து முகர்ந்தது. ஹுஹுஹு என்று ஏதோ சொன்னது. புதர்களுக்குள் நின்ற மற்ற நாய்கள் நன்றாக நிமிர்ந்து தலைதூக்கி நின்றன.
முதல் நாய் அவர் அருகே நெருங்கி அவரது பூட்ஸ்களை நக்கியது. பின் அது அவர்மேல் காலைத்தூக்கி வைத்து அவர் கையை முகர்ந்தது. அதன் உடல்மொழி மாறுவதை கண்டேன். நம்மை வரவேற்கும் வளர்ப்புநாய்போல அது வளைந்து நெளிந்து உடலைக்குழைத்து வாலைச்சுழற்றியது. அவரைப்பார்த்துக்கொண்டு வாலாட்டியபடியே பக்கவாட்டில் நடந்து சென்றபின் துள்ளி ஓடி கொஞ்சதூரம் போய், காதை பின்னால் தழைத்துக்கொண்டு நான்குகால் பாய்ச்சலில் அவர் அருகே ஓடி வந்து நின்று, மீண்டும் முன்னால் துள்ளி ஓடியது. அவரை ஒரு விசேஷ விருந்தாளியாக அது நினைப்பது தெரிந்தது. அவர் வந்ததில் அதற்கு தலைகால் புரியாத சந்தோஷம் என்று தெரிந்தது. அந்த கௌரவத்தை எப்படி கொண்டாடுவதென்று அதற்கு புரியவில்லை.
மற்றநாய்களும் வாலைச்சுழற்றுவது புதர்களின் அசைவாக தெரிந்தது. பின் ஒரு நாய் முதல்நாய் நின்ற இடத்தை எடுத்துக்கொள்ள பிற நான்கும் அவற்றின் பழைய இடத்துக்குச் சென்றன. டாக்டர் கே புதர்களுக்குள் குனிந்து எதையோ பார்ப்பது தெரிந்தது. பின் அவர் அமர்ந்துகொண்டார். அங்கே அந்த நாய் குவ் குவ் குவ் என்று நாய்க்குட்டி போல ஏதோ சொல்வது மட்டும் கேட்டது. அரைமணி நேரம் கழித்து டாக்டர் கே திரும்பிவந்தார். காரில் ஏறிக்கொண்டு ‘போலாம்’ என்றார்
‘என்னசார்?’ என்றேன். ‘அங்க அவங்க தலைவன் அடிபட்டு கெடக்கறான்’ என்றார். ‘என்ன அடி?’ ‘சிறுத்தைன்னு நெனைக்கறேன். வலதுகால் சதைபேந்து போயிருக்கு. எலும்பும் முறிஞ்சிருக்கலாம்…’ ‘நாம என்ன பண்றது?’ என்றேன். ‘ஒண்ணுமே பண்ண வேண்டாம். அது அவங்களோட வாழ்க்கை, அவங்க உலகம்…நாம பாகக்வேண்டியது ரெண்டுமூணு விஷயம்தான். அந்த நாயை யாராவது மனுஷங்க ஏதாவது பண்ணியிருக்காங்களாங்கிறது முதல்ல. அப்டீன்னா குற்றவாளிய கண்டுபுடிச்சு தண்டிக்கணும். ரெண்டு, வழக்கமா இல்லாத ஏதாவது தொற்றுநோய் இருக்கான்னு பாக்கணும். இருக்குன்னா உடனடியா நடவடிக்கை எடுக்கணும்…’
நான் ’அப்டியே விட்டுட்டு போறதா, அது செத்துட்டா?’ என்றேன். ‘சாகாது…ஆனா அந்த நாய் இனிமே தலைவன் இல்லை. அனேகமா என்னை கூட்டிண்டுபோச்சே அவன்தான் இனிமே தலைவன்…’ ‘நாம ஏதாவது மருந்து போட்டா என்ன?’ ‘என்ன மருந்து? நம்மளோட வழக்கமான ஆண்டிபயாட்டிக்குகளா? காட்டுமிருகங்களோட ரெஸிஸ்டென்ஸ் என்ன தெரியுமா? இந்த மருந்துகளை குடுத்து பழக்கினா அப்றம் காட்டுக்குள்ளயும் ஊரைமாதிரி மூணுகிலோமீட்டருக்கு ஒண்ணுன்னு ஆரம்ப சுகாதார நிலையம் தெறக்கவேண்டியதுதான்’
நான் பெருமூச்சுடன் ‘அந்த நாய் உங்கள அடையாளம் கண்டது அமேஸிங்கா இருந்தது…’ என்றேன். ‘நாய்னா என்னன்னு நினைச்சே? சச் எ டிவைன் அனிமல்…மனுஷன் என்னமோ அவன் பெரிய புடுங்கின்னு நினைக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கெடையாது பகுத்தறிவு கெடையாது. அவனோட எச்சப்புத்தியிலே ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டுபண்ணி வச்சிருக்கானே அதில மிருகங்களுக்கு எடம் கெடையாதாம். நான்ஸென்ஸ்…’ டாக்டர் கே முகம் சிவந்தார். ‘பைரன் கவிதை ஒண்ணு இருக்கு. ’ஒரு நாயின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகம்’ . படிச்சிருக்கியா?’
‘இல்லை’ என்றேன். அவர் காட்டையே சிவந்த முகத்துடன் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு திடீரென்று மந்திர உச்சாடனம் போலச் சொல்ல ஆரம்பித்தார். ‘When some proud son of man returns to
earth, Unknown to glory, but upheld by birth..’ நான் அந்த அவ்வரிகளை அவரது முகமாகவே எப்போதும் நினைத்துக்கொள்வேன்.
ஆனால் நாய் வாழ்க்கையில் உன்னத நண்பன்
வரவேற்பதில் முதல்வன்! பாதுகாப்பதில் முந்துபவன்!
அவன் நேர்மை நெஞ்சம் உரிமையாளனுக்கே சொந்தம்,
அவனுக்காகவே உழைக்கிறான் உண்டு உயிர்க்கிறான்!//
அப்படிப்பட்டவருக்கு கிடைக்காத அவார்டுக்கே மதிப்பில்லை.
இக்கதையைப் படித்தவுடனேயே எனக்கு பதிவர் லதானந்த்தான் நினைவுக்கு வந்தார். அவருக்கு போன் போட்டு அவரிடம் இது பற்றிக் கூற, அவரோ சாவகாசமாக இது சம்பந்தமாக ஜெயமோகன் தன்னிடம் ஒரு கட்டுரை அனுப்பச் சொன்னதாகவும், தானும் அவ்வாறே சென்ற வாரம் அனுப்பியதாகக் கூறினார். காட்டிலாகா அதிகாரியான அவர் இக்கதையை இன்னும் அப்ரிஷியேட் செய்வார் என்பதற்காக அவருக்கு நான் கூறப்போக, அவரிடமிருந்து வந்த இத்தகவல் ஒரு கூடுதல் போனஸ்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
12 hours ago
14 comments:
டோண்டு சாரின் விமர்சனம்?
1.112 தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றுள்ள நிலையில் மேலும் 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.
2.நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் நிரபராதி என்பதை சட்டரீதியாக நிரூபிப்பேன் என்று 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறினார். ராசாவின் 14 நாள் சிபிஐ காவல் முடிவடைந்ததையடுத்து அவரை மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
3.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ராசா தான் எல்லாவற்றையும் செய்தார், அமைச்சரவையில் கூட அது தொடர்பாக அவர் ஆலோசிக்கவில்லை. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறை எப்படி அமல்படுத்தப்பட்டது?, ஏன் ஏல முறை பின்பற்றப்படவில்லை? என்பது எனக்குத் தெரியாது-பிரதமரின் பேட்டி
4.7 கூன் மாஃப்… ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் படம். ப்ரியங்காவைவிட இதன் இயக்குனர் முக்கியமானவர், விஷால் பரத்வாஜ், மெக்பூல், ஓம்காரா போன்ற அற்புதப் படங்களை இயக்கியவர்.
இந்தப் படத்தில் ஏழு பேரை திருமணம் செய்து கொண்டவராக வருகிறார் ப்ரியங்கா. அதனால் படத்தின் முழுக் கதையும் இவரைச் சுற்றியே வருகிறது. ப்ரியங்காவின் முதல் கணவராக நீல் நிதின் முகேஷ் நடித்துள்ளார். ஹீரோயின் ஓரியண்ட் கதையில் ஏழில் ஒருவராக நடிக்க எப்படி நீல் நிதின் ஒத்துக் கொண்டார்?
5.பீகாரில் மாலை நேர கோர்ட்கள் அமைக்க அரசு உத்தரவிட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் 80 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது . முதல்வராக நிதீஷ்குமார் உள்ளார்.
அன்புள்ள திரு. டோண்டு ராகவன் அவர்களுக்கு,
திரு ஜெயமோகன் எனது பிளாக் பொது வெளியில் படிக்கக் கிடைக்காதது பற்றிக் குறிப்பிட்டு, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பற்றிச் சில விவரங்கள் கிடைக்கவில்லையென என்னிடம் தொலைபேசியில் கேட்டார். தற்போது பிளாக்கைத் திறக்க விருப்பம் இல்லாததால், ’ஆனை டாக்டர்’ என்று பிளாக்கில் நான் எழுதியிருந்த கட்டுரையை ஈமெயிலில் அனுப்புகிறேன் எனச் சொல்லி அனுப்பி வைத்தேன். மற்றபடி ஜெயமோகனின் கட்டுரை அற்புதமானது. பல புதிய விஷய்ங்க்ளைக் கோர்த்து மிகச் சுவைபட எழுதியிருக்கிறார். உங்கள் பதிவில் யாரேனும் கொண்டு கூட்டுப் பொருள் கோள் கொண்டு விடுவரோ என்பதால் இவ்விளக்கம். கனிவு கூர்ந்து வெளியிடுங்கள்.
http://media-critics.blogspot.com/2011/02/media-twist-advanis-regret.html
இந்தப்பதிவைப் பார்க்கவும்.
பா.ஜ.க மீது ஏன் இந்த கொலைவெறியில் ஆங்கில மீடியாக்கள் இருக்கின்றன ? என்ன காரணம் ? ஏதாவது ஒன்று கிடைக்காதா என்று ஏங்கி ஏங்கி இப்படி பொய் பேசித் திரிவதன் பொருள் தான் என்ன ?
கேள்விபதில் பகுதிக்கு:
இந்த டுபாங்க்ஸ் சாமியார் பற்றி உங்கள் கருத்தென்ன? (டுபாங்க்ஸ் என்னைப் பொறுத்தவரை)
http://ujiladevi.blogspot.com/2011/02/blog-post_14.html
http://ujiladevi.blogspot.com/2011/02/blog-post_17.html
இன்னொரு கேள்வி: இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கூறிக்கொண்டே மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் கொலைகள் பற்றி தங்களது கருத்து?
http://hayyram.blogspot.com/2011/02/blog-post_20.html
Sir,
Is the Memorial day meeting for Sujaathaa Saar being organised for this year – Feb 27,2011 ?
Request you to please provide details,if you had come across.
Thanks,
Venkat
கோத்ரா தீர்ப்பு வந்தேவிட்டது.
குறைந்தது 31 பேர் சதிசெய்து ரயில் பெட்டியில் இந்துக்களை வைத்து எரித்திருக்கிறார்கள். அதில் பிலால் என்கிற நாய் காங்கிரஸ் எலும்புத்துண்டுக்கு வாலாட்டுபவனாம்.
லல்லு யூ.சி.பானர்ஜி இருவரும் மோடியின் காலணியை நாக்கால் நக்கி சுத்தம் செய்யவேண்டும் என்று கூட தீர்ப்பு சொல்லியிருக்கலாம். இன்று லல்லு பீஹாரின் மொத்த ஜனத்தொகையின் காலணிகளை நக்கி சுத்தம் செய்தாலும் அவனுக்கு வோட்டு விழாது.
காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் மௌனம் காப்பதிலேயே தெரிகிறது. இது அவர்கள் எதிர்பார்க்காத தீர்ப்பு என்று. பொய் சொல்ல யோசிக்கவேண்டும், அதற்காகத் தான் இந்த மௌனம்.
இந்த வாரம் கேள்வி/பதில் பகுதி இருந்தால் இதைப்பற்றி கட்டாயம் தங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்.
@ வஜ்ரா
//காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் மௌனம் காப்பதிலேயே தெரிகிறது. இது அவர்கள் எதிர்பார்க்காத தீர்ப்பு என்று. பொய் சொல்ல யோசிக்கவேண்டும், அதற்காகத் தான் இந்த மௌனம்.//
பாவம் காங்கிரசானும் கம்யூனிஸ்டும். இந்த மோதியை பாருங்களேன் க்ளீனாக ஆட்சி செய்து எல்லோரையும் வளைத்து போடுகிறார். ஒரு முனிசிபல் தேர்தலிலும் அவரை வெல்ல முடியவில்லை.
இப்படி குஜராத்திய இசுலாமியரும் அவரை ஆதரிப்பது அட்டூழியம் இல்லையா?
எவ்வளவு நாளைக்குத்தான் காங்கிரசும் கம்யூனிஸ்டும் வலிக்காத மாதிரி நடிக்கிறது?
ஆளும் கட்சியின் மேல் ஒரு ஊழலைக் கூட சொல்ல விடாமல் ஆட்சி நடத்துவது மோதியின் சதிச்செயலே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிய நாடாளுமன்ற கூட்டுக் குழு சாதிக்குமா?சமாளிக்குமா?
2. இலங்கை தமிழர் நலம் பேசும் திருமாவளவன் காங்,திமுகவுடன் கூட்டணி வேடிக்கையா? வினோதமா?
3. வட மாநிலங்களில் கொள்கைரீதியாய் எதிரும் புதிருமாய் இருக்கும் மருத்துவரும் திருவும் பதவி ஆசையில் மீண்டும் ஒரே கூட்டணியில் என்ன உதாரணம் சொல்ல ?
4. ஒருவேளை காங் தனியாய் அணி அமைத்தால் விஜய காந்த் எந்தப் பக்கம் சாய்வார் ?
5. பாஜக,திமுக கூட்டணி சாத்யமானால் சோவின் நிலை?
இந்த மின் அஞ்சலுக்கு டோண்டுவின் விமர்சனம்?
-----------------------------
கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்
என்னை வச்சு காமெடி பண்ணாதிங்கைய்யா என் எவளவு கெஞ்சினாலும்
கனி அழகிரி ராசா அவரை விடுவதாக இல்லை .இந்நிலையில் வரும் தேர்தலில் அவர் தோல்வி அடைய பத்து காரணங்கள்.
1- ஈழ தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை விரட்டி சென்று கொத்து கொத்தாக ராஜபக்ச கொன்ற பொது ஒருமணி நேரம் கலைஞர் உண்ணாதவிரதம் இருந்தது. அதை நேரடி ஒளிபரப்பும் செய்து கொண்டது. கலைஞருக்கு வேர்க்கும் என ராஜாத்தி அம்மாள் அவரது முடி இல்லாத தலையை துடைத்து விட்டது.
2- அதே பிரச்சனைக்கு தினசரி கடிதம் எழுதி ஒரு ஸ்டாம் ஒட்டி பிரதமருக்கு அனுப்பியது. அதை அந்த ஆபீஸ் பியோனாவது படித்தானா என்பது பற்றி கவலையே படாதது.
3- இலவசம் இலவசம் என்று இலவசவீடுகள், ஒரு ரூபாய் மண்,கற்கள் கலந்த அரிசி கலர் டிவி என் கொடுத்து ஓட்டு வாங்கிட துடிக்கும்
கேவலமான தந்திரம்.
4- ராசா இமாலய ஊழல் செய்த போதும் அதை ஒப்பு கொள்ளாமல் அவர் சிறையில் களி தின்ன பிறகு தான் கட்சியை விட்டு நீக்குவேன் என்று அடம்பிடிப்பது.
5- ராசா விவகாரத்தால் வாசிங்டன் போஸ்ட் வரை இந்தியாவில் இப்படி ஒரு பணப்பேய் இருக்கிறது என்று இந்தியாவின் மானத்தை வாங்க வைத்தது.
6- இந்திய மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்படுகின்ற வேளைகளில் மீனவ குடும்பங்களுக்கு உதவி செய்யாமல் ஒரு கவிதை எழுதி கலைஞர் டிவியில் ஒளிபரப்பி மொக்கை போடுவது.
7- தொடர்ந்து கதை வசனம் எழுதி தமிழ்மக்களை வாந்தி எடுக்க வைப்பது.அதை விட கொடுமை அவர் வசனம் எழுதிய படங்கள் ஓடுவதுக்கு முறுக்கு, லட்டு எண்டு மக்களுக்கு கொடுத்து பேதி என்று வீட்டுக்கு ஓடவைக்கிறது .
8- ஓட்டுக்கு லஞ்சம் படிப்புக்கு லஞ்சம் வீட்டுக்கு லஞ்சம் என்று வறிய மக்களின் வாழ்க்கையில் மண்ணை வாரிப்போடுவது .
9- ஓட்டுக்காக குஸ்பு போன்ற நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி
கொடுத்த கஸ்தூரிபாய்களை கட்சியில் சேர்த்து மக்களை வெறுப்படைய
வைப்பது .குஸ்பு யார் என்று நம்ம கார்த்திக்கை கேட்டால் சொல்லுவார் .
10- தமிழ் சினிமா விழா என்றால் ஓடி போய் முன்வரிசையில் இருந்து தன்னை
மற்றவர்களை பாரட்ட விட்டு விட்டு அந்த பாராட்டு மழையில் தூங்குவது.
HOME PAGE
http://enews.phpbb4free.org/
//pt said...
இந்த மின் அஞ்சலுக்கு டோண்டுவின் விமர்சனம்?
-----------------------------
கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்
என்னை வச்சு காமெடி பண்ணாதிங்கைய்யா என் எவளவு கெஞ்சினாலும்
கனி அழகிரி ராசா அவரை விடுவதாக இல்லை .இந்நிலையில் வரும் தேர்தலில் அவர் தோல்வி அடைய பத்து காரணங்கள்.//
உலகில் வாழும் 10 கோடி தமிழர்களின் ஒரே தலைவனை,
உத்தமனை,
நல்லவனை,
நாடாளும் மன்னவனை
பகடி பேசும்
பார்ப்பனக்கூட்டத்தாரின்
பகல் கனவு
கானல் நீராய் மாறிடும் நாள்தான் தமிழக தேர்தல் நாள்.
கூட்டணி எதுவும் வேண்டாம்
நலத்திடங்கள் மட்டுமே போதுமே!
கழகத்தின் ஆட்சிக்கு கட்டியம் கூறும் வகையாக
ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் துயர்கண்டு மனம் வருந்தி கழகத்தின் தலைவர் அறிவிக்க இருக்கும் சலுகைகளாக சொல்லப்படுபவை
பேரூந்துக் கட்டணக் குறைப்பு
பெட்ரோல் மேல் உள்ள வரி 10 % குறைப்பு
21 லட்சம் குடும்பங்களுக்கு காங்கிரிட் வீடுகள்.
குறைக்கப்பட்ட மானிய விலையில் உணவுப் பொருட்கள்-து.பருப்பு,உ.பருப்பு முதலியவை
மானிய விலையில் பால்
கொடுக்கபட இருக்கும் இலவச டீவிகள்
போராடும் அரசு ஊழியருக்கு அறிவிக்கப்பட இருக்கும் பணச் சலுகைகள்.
இன்னும் கொடுக்கப்பட இருக்கும் பிற சலுகைகள்
தமிழ் குடும்பங்களின் நன்றி பாராட்டும் குணம்
அரசு ஊழியரின் ஜெ பற்றிய பயம்
சிறுபான்மை மக்களின் திமுக பாசம்
தொண்டர் பலம்
தமிழ் பாசம்
பகுத்தறிவு உணர்வுகள்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
ஆதிக்க சக்திகளின் ஆட்டம் இனி இங்கே செல்லாது
வெற்றுக் கூச்சல் இனி எடுபடாது
நாடகம் நடிப்பு இனி தோலுரிக்கப்படும்
பாசாங்கு பசப்பு இனி உதவாது
/ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் துயர்கண்டு மனம் வருந்தி கழகத்தின் தலைவர் அறிவிக்க இருக்கும் சலுகைகளாக சொல்லப்படுபவை
பேரூந்துக் கட்டணக் குறைப்பு
பெட்ரோல் மேல் உள்ள வரி 10 % குறைப்பு
21 லட்சம் குடும்பங்களுக்கு காங்கிரிட் வீடுகள்.
குறைக்கப்பட்ட மானிய விலையில் உணவுப் பொருட்கள்-து.பருப்பு,உ.பருப்பு முதலியவை
மானிய விலையில் பால்
கொடுக்கபட இருக்கும் இலவச டீவிகள்
போராடும் அரசு ஊழியருக்கு அறிவிக்கப்பட இருக்கும் பணச் சலுகைகள்.
இன்னும் கொடுக்கப்பட இருக்கும் பிற சலுகைகள்/
சிலரை சில நாள் ஏமாற்றலாம்.
பலரை பல நாட்கள் ஏமாற்றலாம். ஆனால் -
எல்லாரையும், எப்போதும் ஏமாற்றி விட முடியாது
என்பது உண்மை தானே
ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு.
1980ல் தமிழ் நாட்டில் நடந்த கதை மறந்து போச்சா?
எழில் ராசா?
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
ஓஹோஹோஹோஹொஹொஹோ
Post a Comment