pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-1. செவ்வாய் கிரகத்துல இருந்து தகவல் அனுப்பியிருந்தாங்க... அவங்க சாட்டிலைட் மூலமா இளைஞன் படத்த பாத்தாங்களாம். மொழி புரியாட்டாலும், அடுக்கடுக்கா வந்த வசன ஒலி அவங்க ரொம்ப கவர்ந்திடுச்சாம்.
பதில்: அப்படியானா பெண் சிங்கத்தையும் அனுப்பிவிடலாமே.
கேள்வி-2. அறுபது வருடங்களுக்கு முன்... கூவத்தில் குளித்தார்களாம்! துவைத்தார்களாம்! நீர் குடித்தார்களாம்! சென்னையில் சங்கமம் ஆனபின்னே... இன்று கூவம் இருப்பதைப் போல... தலைநகர அரசியல்! சென்னையில் சங்கமம்...
பதில்: எத்தனை அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி இருந்தது எனக் கூறுகிறீர்கள்?
கேள்வி-3. சாதி சான்றிதழை போலி ஆவணங்கள் மூலம் பெறுவதால் அடித்தட்டு மக்கள் பாதிப்பு: ஊட்டியில் நீதிபதி தர்மராவ் பேச்சு
பதில்: எல்லா சாதிகளிலுமே திறமைசாலிகள் உண்டு. அதை விடுத்து குருட்டுத்தனமாக சாதியை மட்டுமே வைத்து பொருளாதார அடிப்படை பர்றி கவலை கொல்ளாது சகட்டுமேனிக்கு இட ஒதுக்கீடு தந்தால், அதைப் பெற அடித்தளமாக இருக்கும் சாதி சான்றிதழ் விவகாரத்தில் ஊழல் தலைவிரித்து டேன்ஸ் ஆடும்.
கேள்வி-4. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பதில்: கடைசியில் ஏற்றிவிட்டார்கள் போல.
கேள்வி-5. செருப்புகளில் இந்துக் கடவுள் உருவங்கள் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதற்கு மலேசியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது
பதில்: மலேசியா இசுலாமிய மத அரசு. அங்கு இதெல்லாம் நடப்பதில் வியப்பில்லை.
கேள்வி-6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எங்களால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் கூறியுள்ளது.
பதில்: அரசில் உள்ளவர்களுக்கு உரித்தான பங்கை சரியாக தந்திருப்பதைத்தான் அவ்வாறு கூறுகிறாரோ என்னவோ.
கேள்வி-7. மழைக்காலம், கிரிக்கெட் போன்ற சீஸன்களில் தியேட்டர்களில் கூட்டமே இருப்பதில்லை. எனவே டாஸ்மாக் கடை- பார் இணைந்த திரையரங்குகளாக இவற்றை மாற்றிக் கொள்ள அனுமதி தேவை என தமிழக அரசுக்கு தியேட்டர்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பதில்: அந்த அனுமதி மழைக்காலங்களில் அல்லது கிரிக்கெட் சீசனில் மட்டும்தானாமா?
கேள்வி-8. இந்து முன்னணியினர் காதலர் தினத்தை கண்டிக்கும் வகையில் நாய்களை குதிரை மேல் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்து திருமணம் நடத்தி வைத்தனர்.
பதில்: பார்த்துக் கொண்டே இருங்கள். சொல்ல முடியாது. நாய்கள் எங்காவது ஏடாகூடமாக கடித்து வைக்கப் போகின்றன.
கேள்வி-9.உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விரைவில் துவங்கவிருப்பதை யொட்டி , ஸ்பாட்பி்க்ஸிங், ஊழல் உள்ளிட்ட சூதாட்டங்களை தவிர்க்க , கிரிக்கெட் வீரர்கள், அணி நிர்வாகிகள் டிவீட்டர் வலைதளத்தை பயன்படுத்த ஐ.சி.சி. தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதில்: சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா என்ன?
கேள்வி-10. மனைவிக்கு வேறு திருமணம் நடக்க இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று போலீசில் கணவன் புகார் கொடுத்துள்ளார்.
பதில்: எந்தப் புற்றில் எந்தப் பாம்போ. விஷயங்களின் பின்புலம் தேவை.
ரமணா
கேள்வி-11. கருணாநிதி அவர்களின் துள்ளல் வசனத்துடன் வந்ததாய் பெரும் விளம்பரம் செய்யப்பட்ட பா.விஜயின் இளைஞன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாதாதன் காரணம்? இதனால் தயாரிப்பாளரின் நிலை? கருணாநிதி அவர்களின் மனம்? சுய லாபத்திற்காக பாராட்டிப் பேசிய திரை பிரபலங்கள் நிலை? விஜய்கள் என்ன நினைப்பார்கள்?
பதில்: தயாரிப்பாளருக்கு முதலிலேயே கருணாநிதியின் திறமை இந்த விஷயத்தில் வறட்சி அடைந்து பல ஆண்டுக்காலம் ஆகிவிட்டது என்பது தெரிந்திருக்குமாக இருக்கும். அதே சமயம் தலையில் துண்டு போடும் தயாரிப்பாளருக்கு வேறு வகையில் பெர்மிட் ஆகியவை கிடைக்கும் என சோ அவர்கள் ஆண்டு விழா மீட்டிங்கில் கடந்த ஜனவரியில் கூறியதை நினைவில் கொண்டால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் நிலைப்பாடு புரிந்ததே.
தகுதியற்ற பாராட்டை பெறுவது என்பது சாதாரண கூச்சமுள மனிதனுக்கு சங்கடம் அளிக்கக் கூடியதே. உடலே கூச வேண்டும்.ஆனால் அந்தக் கூச்ச நிலை கடந்து பல ஆண்டுகளுக்கு மேல் ஆகி, மரத்துவிட்ட இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களது மனம் பற்றியெல்லாம் கவலை கொள்வது மற்றவர்களுக்கு நேர விரயமே.
திரை பிரபலங்கள் செய்வதும் வியாபாரமே. யாருக்கு என்னென்ன பெர்மிட்டுகள் எதிர்காலத்தில் தேவைப்படுகிறதோ யாரறிவார்?
விஜய்கள் இதற்காகவே முதல்வராக ஆக வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
கேள்வி-12. இன்று நண்பகல் 1100 மணிக்கு பிரபல தொலைகாட்சி செய்தி சேனல்களின் பத்திரிக்கையாளரின் துளைக்கும் கேள்விகளுக்கு நமது பாரத பிரதமர் அவர்களின் பதில் பற்றிய உங்கள் கருத்து என்ன?
1)2ஜி ஸ்பெக்ரம் ஊழலில் அரசின் பெருளாதார இழப்பு
2) பெரிய கார்பொரேட்களுக்கு ராசாவின் இந்தச் கட்டணச் சலுகையை ரேசன் பொருட்களுக்கு கொட்டுக்கபடும் மான்யம் போல் என ஒப்பிட்டது?
3)ராசாவின் நியமனத்தில் திமுகவின் நிர்பந்தம்?
4)கூட்டணி கட்சிகளை காம்பரமைஸ் செய்யும் காங்கிரசாரின் நிலை?
5)விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்க விகிதம் அதனால் ஏழைகள் பாதிப்பு?
6)ஜெபிசி முன்னால் ஆஜாராக ரெடி?
7)பிஜேபி மேல் குற்றச்சாட்டு-குஜராத் அமைச்சரை காப்பாற்றத்தான் இந்த பாராளுமன்றத்தை முடக்கும் செயல்கள்?
8)ஊழல்காரர்களை நிச்சயம் தண்டிப்பேன்?
9.தமிழக மீனவர்களின் தொடர் கைது அரசின் நடவடிக்ககள்
10.பொருளாதார கேள்விகளுக்கு பதில் சொல்லுபோது இருந்த முகத் தெளிவு-மெகா ஊழல்கள்-2ஜி,கா.வெ.கேம்ஸ்,எஸ்பேண்ட்,கார்கில்வீடு ஒதுக்கீடு பற்றிய பதில்களின் போது அவரது தோற்றம்,குரல் செயல் பாடு?
பதில்: அந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. அது மட்டுமல்ல, டிவியை ஆன் கூடச் செய்யவில்லை. காலை 4 மணியிலிருந்து விடாத வேலை கணியில் மொழி பெயர்ப்பு. ஆகவே உங்களது 10 கேள்விகளுக்கும் ஒட்டு மொத்தமாகத்தான் பதிலளிக்க வேண்டியுள்ளது.
நிகழ்ச்சியை பார்க்காவிட்டால் என்ன, சர்தார்ஜி என்ன கூறியிருப்பார் என்பதை நான் அறிவேன். அவரது உடல் மொழி? இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்பதே. ரொம்பவும் நிலைமை தலைக்கு மேல் போனால், கூட்டணிக் கட்சிகளாவது மண்ணாங்கட்டியாவது. அவனவன் பாம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கப்பூ என்பது போன்ற முகபாவம்.
ஊழல்காரர்களை நிச்சயம் தண்டிப்பேன் என்னும் போது மர்றவர்களை சிரிக்க வைக்கும் கோமாளி தான் மட்டும் சீரியுசாக முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதன் இலக்கணத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு.
முதலில் ஜேபிசியை கூட்டட்டும் பிறகு பார்க்கலாம் அவர் ஆஜராவாரா இல்லையா என.
மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
12 hours ago
3 comments:
பிராமணர்கள் உழைப்பாளிகள் என்று ஆய்வு செய்த உங்கள் பதிவுக்கு அருள் ஒரு விளம்பரப்பதிவு பூட்டிருக்கிறாரே? படித்தீர்களா? நீங்கள் ஒதுக்கினாலும் உங்கள் பதிவுகளை பிரபலமாக்க விழையும் அவரது உயர்ந்த உள்ளத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
முட்டாள்களுடன் விவாதம் செய்யாதீர்கள்
அப்படி விடாது முட்டாள்களுடன் விவாதம் செய்யும்போது யாராவது மூன்றாம் மனிதர் அப்பக்கம் வந்தால், அவர்களுக்கு யார் முட்டாள் என்பது புரியாது.
அதிலும் சாதீயம் என்ற பொதுவான சொல்லை பார்ப்பனீயம் என லேபல் செய்யும் அருள் போன்ற முட்டாள்களுடன் விவாதமே செய்யாதீர்கள்.
மற்றப்படி அந்த காமெடி பீஸ் தனது பதிவுக்குள்ளேயிருந்து கொண்டே எனக்காக செய்யும் விளம்பரங்களை ஒரு கேலிப் புன்னகையுடனேயே கடந்து போகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
FOR DONDU'S COMMENT:-
A)Dr Singh showed us on Wednesday that he will cling to power. That makes him no better than run-of-the-mill politicians. So, as an exercise in image-building, his press conference was a depressing failure.
B)The reported statement of an eminent cleric from Gujarat asking Muslims of the state to leave the 2002 riots behind and take advantage of the state's development has unleashed a flurry of arguments and counter arguments.
C)P Chidambaram, Pranab Mukherjee and Digvijay Singh are at least three prime ministerial frontrunners should Manmohan Singh decide to go, unable to face the heat from the 2G and other scams and if Rahul Gandhi declines the hot job.
D)When India and Pakistan met in Thimpu to revive the composite dialogue between their foreign ministers this spring, Pakistan asked India to do more against Hindu extremists allegedly responsible for the Samjhauta Express blasts
E)UPA-2 in the run-up to the budget session of Parliament is plagued by two nightmares: corruption and inflation. And it is acutely aware of them. Prime minister Manmohan Singh, finance minister Pranab Mukherjee, and Planning Commission deputy chairman Montek Singh Ahluwalia expressed their concern over inflation on Friday.
Post a Comment