5/05/2011

டோண்டு பதில்கள் - 05.05.2011

ரமணா
கேள்வி-1. 2ஜி வழக்கில் திமுக தலைவரின் துணைவியாரின் பெயரும் இருக்கும் என வந்த செய்திக்கு மாறாய் அறிக்கை இருப்பதன் காரணம்?
பதில்: அரசியல்ல இதெல்லாம் சகஜம் அப்பா.

தயாளுவை வழக்கில் சேர்த்தபிறகு தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றும் காங்கிரசார் மட்டும் பிளாங்கியடிக்க, மத்தியில் கண்டின்யூ செய்ய திமுகவின் தயவு தேவையாக இருக்கும் என வெளி ஆளான நானே ஊகிக்கும்போது சோனியா அதை செய்யாமல் இருப்பாரா என்ன?

கேள்வி-2. திமுக, காங் கூட்டணி டமாலா?
பதில்: டமாலோ இல்லையோ, ஒருவர் இன்னொருவரை முழுமையாக நம்பும் நிலைமை வராதுதான்.

கேள்வி-3. 2ஜி பற்றிய செய்தியை திரும்பத் திரும்ப போடும் ஜெ.சேனல்கள், செய்தியே போடாத சன் டீவி பற்றி உங்கள் கருத்து?
பதில்: அதில் சராசரியை எடுத்து, கூட்டிக் கழித்துப் பாருங்கள் எல்லாமே சரியாகத்தான் இருக்கும்.

கேள்வி-4. நடுநிலையான பத்திரிக்கை, டீவி சேனல் இனி கானல் நீரா?
பதில்: நடுநிலைமை என்பது இறுகிய நிலை அல்ல, தீயதுக்கும் நல்லதுக்கும் இடையில் நடுநிலைமை என்பதைக் காண நினைப்பது பைத்தியக்காரத்தனமே.

எனக்கு என் மாமா பிள்ளை காலஞ்சென்ற ஸ்ரீதரன் சமீபத்தில் 1952-ல் அம்புலிமாமா பத்திரிகையில் தான் படித்து சொன்னக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு கடையில் அரிசி வாங்க ஒரு படிக்கான விலையைத் தந்து அரிசி போடச் சொன்னால், கடைக்காரர் படியைத் தலைகீழாக வைத்து அரிசியை நிரப்ப, ஓரிரு அரிசிகளே நின்றன. இதை ஆட்சேபித்து கோர்ட்டுக்கு செல்ல நீதிபதி நேராகவும் வேண்டாம் த்லைகீழாகவும் வேண்டாம் என படுக்கப் போட்டு அளக்குமாறு தீர்ப்பு சொன்னதில் அந்த ஓரிரு அரிசிகளும் கிடைக்கவில்லையாம்.

இந்த நடுநிலையையா விரும்புகிறீர்கள்? மேலும், துக்ளக் போன்ற பத்திரிகைகள் இருக்க ஏன் இந்த விரக்தி?

கேள்வி-5. சவுக்கு எழுதும் பரபரப்பு பிளாக்குகள் படிப்பதுண்டா?
பதில்: அவ்வப்போது படித்துள்ளேன். சுவாரசியமாக இருக்கும்.

கேள்வி-6. சோ அவர்களின் ஜெய டீவி பேட்டி-0630 pm -dated 28-4-2011-கனிமொழியின் மேல் சிபிஐயின் குற்றச்சாட்டு பலவீனமானதாமே-இவ்வளவு சலுகை செய்யும் காங்கிரசை குற்றம் சாட்டும் திமுகவின் நிலையை பார்த்தால் என்ன சொல்லத் தோன்றுகிறது?
பதில்: நானும் அப்பேட்டியைப் பார்த்தேன். வேண்டுமென்றே கனிமொழியின் மேல் பலவீனமாக குற்றச்சாட்டுகளைத்தானே வைக்கிறார்கள். இதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறார்களாம்?

கேள்வி-7. கருணாநிதியின் நடிப்பை இன்னும் நம்பும் அப்பாவி திமுக தொண்டன் நிலை?
பதில்: திமுக தொண்டன் கண்டிப்பாக கருணாநிதியை ஒரு விதத்தில் பின்பற்ற வேண்டும். அவன் தனது நலனை பார்த்துக் கொண்டால் போதும்.

கேள்வி-8. வியாபார ரீதியில் பொன்னர் சங்கரும் இன்னுமொரு இளைஞனா?
பதில்: இளைஞன் படம் ஊற்றிக் கொண்டது என்பது உண்மையானால், உங்கள் கேள்விக்கு ஆமாம் என்பதே என் பதில். பொன்னர் சங்கரை வெறுமனே ஓட்டுவதாக அறிகிறேன். ஒரு பிரசாந்தைப் பார்ப்பதே கஷ்டமான வேலை. இருவரைப் பார்ப்பதா? என்ன கொடுமை சரவணன்?

கேள்வி-9. குரங்கு ஆப்பை புடுங்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்ற நிலை பற்றி?
பதில்: கேள்வியின் பின்புலம் என்ன?

கேள்வி-10. தினகரன், தினத்தந்தி, குங்குமம், முரசொலி, நக்கீரன், த ரைசிங் சன்,சன் டீவி குழும சேனலகள், கலைஞர் டீவி குழும சேனல்கள் (இந்து ராமின் ஆதரவு)-75 % மேல் ஊடக ஆதரவை வைத்துக் கொண்டு யாரை கலைஞர் சாடுகிறார்?
பதில்: சமீபத்தில் 1977-ல் இதே மாதிரி எல்லா பக்கபலங்களையும் வைத்துக் கொண்டும் இந்திரா காந்தி தேர்தலில் மண்ணைக் கவ்வவில்லையா? அந்த ஞாபகம் வந்திருக்குமாக இருக்கும்.

கேள்வி-11. சோவின் கணிப்புபடி திமுக மோசமாய் தோற்றால்-முதல் வசவு, திட்டு, சபித்தல் யாருக்கு?
பதில்: முதலில் சோற்றால் அடித்தப் பிண்டங்களான தமிழ் மக்களுக்கு, பிறகு சோவுக்கு.

கேள்வி-12. தருமனுக்கு நேர்ந்த இக்கட்டு என எதைச் சொல்கிறார் கருணாநிதி அவர்கள்?
பதில்: தெரியவில்லையே, ஆனால் இதைவிட யாரும் தருமனை அதிகமாக அவமதிக்க முடியாது.

கேள்வி-13. கருத்துகணிப்புகள் திமுகவுக்கு சாதகமாய் இருப்பதாய் வரும் செய்திகள் பற்றி?
பதில்: இன்னும் சில நாட்கள் பொறுங்களேன்.

கேள்வி-14. கனிமொழி கைது ஆவார் எனச் சொல்லப்படும் விவகாரம் வதந்தியா?
பதில்: அவர் மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் பலவீனமாக இருப்பதாகத் தோன்றுகின்றன. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்க்ள்.

கேள்வி-15. ராகுல் அடுத்து என்ன செய்வார்?
பதில்: எங்கு போய் கஞ்சி குடிப்பாரோ, யாரறிவார்?

கேள்வி-16. அதிமுக தோல்விகண்டால் அடுத்த மூவ்?
பதில்: ஜயலலிதா மனம் தளராது செயல்பட வேண்டும். அவரது ரிகார்டைப் பார்த்தால் அது சந்தேகமே.


pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-17. கனிமொழியை கட்சியின் தொண்டர் என்கிற முறையில்தான் பார்க்கிறேன்-- திமுகவின் தலைவர்-கலைஞர்

பதில்: இந்தத் தொண்டர் தீ குளித்தால் வெறுமனே சில லட்சங்கள் கொடுத்து அமைதியாகி விடுவாரா?

கேள்வி-18. சோதனைகளை உரங்களாக்கி வெல்லும் தி.மு.க.--திகவின் தலைவர் கி. வீரமணி
பதில்: பாவம் கலைஞர். வீரமணி போன்ற சந்தச்ர்ப்பவாதிகளை எல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கேள்வி-19. மே தின விழாவை ஒருவார காலத்துக்கு கொண்டாடுங்கள் --தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்
பதில்: அப்புறம் 13-ஆம் தேதி வரை என்ன செய்வார்களாம்? அதற்கு அப்புறம் என்ன செய்வார்களாம்?

கேள்வி-20. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க இந்தியா முன்வரவேண்டும்-அதிமுகவின் தலைவர் ஜெயலலிதா
பதில்: அதற்கான வலு இந்தியாவிடம் உள்ளதா?

கேள்வி-21. காங்கிரஸ் மீது வருத்தம், பத்திரிகைகள் மீது கோபம், கனிமொழியைக் காப்பாற்றுவது கட்சியைக் காப்பாற்றுவதாகும் - திமுக உயர்நிலைக் குழு செயல் திட்டக் குழு கூட்ட நிகழ்வுகள்.
பதில்: பலசரக்கு கடைக்காரனுக்கு பைத்தியம் பிடித்த மாதிரி என சில பெரியவர்கள் கூறுவதன் பொருள் இபோதுதான் விளங்குகிறது.

மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

21 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.தமிழக அரசுக்கு வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு: திமுக-கருணாநிதி
2.கருத்து கணிப்புகள் சரியாகுமா? -கருணாநிதியின் பாராட்டு பெற்ற சோலை, அரசியல் விமர்சகர்
3.மீண்டும் அவரே முதல்வராக வரக்கூடாது: அதற்காக தான் சமதூரத்தை மாற்றினோம்-கேரளாவில்
4.கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்...-ஒரு எச்சரிக்கை
5.ஆட்சி மாற்றம் ஏற்படுமானால், அடுத்தடுத்து பாயும் வழக்குகள் மூலம், தி.மு.க.,வை நிலைகுலைய வைக்க வேண்டும் என்ற திட்டம், உயரதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்பில் நிச்சயம் நடக்கப் போகிறது என்கின்றனர்-அ.தி.மு.க., முன்னணி நிர்வாகிகள்.

Unknown said...

2ஜி வழக்கில் திமுக தலைவரின் துணைவியாரின் பெயரும் இருக்கும் என வந்த செய்திக்கு மாறாய் அறிக்கை இருப்பதன் காரணம்?
தயாளு அம்மையாருக்கு இதில் நேரடி தொடர்பு இல்லை என்பதை விசாரணை அதிகாரிகள் உணர்ந்தார்கள்.ஆகவேதான் இந்த குற்றப்பத்திரிக்கையில் அவர் பெயர் இல்லை.(சாதரணமாகவே அவர் குடும்ப வேலைகளை செய்வதோடு இருப்பார்)விசாரணை அதிகாரிகள் மிகவும் சரியாகத்தான் இவர் விஷயத்தில் குறிப்பு எழுதி இருக்கிறார்கள்.பாராட்டுக்கள்.

ezhil arasu said...

/ஆட்சி மாற்றம் ஏற்படுமானால், அடுத்தடுத்து பாயும் வழக்குகள் மூலம், தி.மு.க.,வை நிலைகுலைய வைக்க வேண்டும் என்ற திட்டம், உயரதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்பில் நிச்சயம் நடக்கப் போகிறது என்கின்றனர்-அ.தி.மு.க., முன்னணி நிர்வாகிகள்./

கடைசியாக கிடைத்த அருமைத் தகவல் :
கழகத்தின் ஆட்சி தொடரும்.
தருமனின் ஆட்சி தொடரும்.
அதிமுகவின் கனவு பலிக்காது
காகிதப் பூ மணக்காது
கருவாடு மீனாகிறது.
கறந்த பால் மடி புகாது.
கானல் நீராய் மாறும் உண்மை தெரியாமல்
நடக்காத ஒன்றுக்கு இவ்வளவு பில்டப் தேவையா?

ரமணா said...

1.வைகோ வை கூட்டணியில் சேர்க்காததற்கு 1000 கோடி கைமாறியதாய் வரும் செய்திகள் உண்மையா?
2.திருமாவின் விருதுகள்-பரிசுசுகள் கூட்டாளிகளுக்கு?
3.ரஜினியின் உடல்நலம் பற்றி முதல்வரின் நேரடி ஆஸ்பத்திரி விசாரிப்புக்கு ஏதாவது காரணம்?
4.வடிவேலுவுக்கு திரையுலகில் திண்டாட்டமாமே?
5.சாய்பாபா--சீரடி,பிரசாந்தி நிலையம் ஒப்பிடுக?

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6. 2ஜி விவகாரம்--- 17 மாதங்களாக பிரதமர் மௌனம் ?
7.பயங்கரவாதிகளை நீதிக்குமுன் நிறுத்துவதில் உறுதியாகவுள்ளோம்'---- அதிபர் பராக் ஒபாமா
8.2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது --- சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் ஆட்சேபம்
9.நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குலும் மும்பைத் தாக்குதலும் ஒன்றல்ல --- அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர்
10. அட்சய திருதியை முன்னிட்டு ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை

ezhil arasu said...

தருமனைப் போல் குணம் படைத்தோனின் தவப் புதல்வி மேல் வீண் பழி சுமத்தி அவரது அரசியல் வாழ்வை சூனயமாக்க
சதி செய்த சூத்திரதாரர்கள் யார் என்பதை நாடறியும்.

கனிமொழி மாசற்ற தங்கம் என வாதத் திறமையால் வாதிடும் பெரியவர் நல்லவர் ராம் ஜேத்மலானிக்கு
கழகத் தொண்டர்கள் நன்றிக் கடன் பட்டவர்கள்.
கனிமொழிக்கு விழா எடுத்து கொண்டாடும் நல்ல நாளை எதிர்பார்த்து தமிழ் இனமே காத்திருக்கிறது.

பார்ப்பனர் சதி முறியடிக்கப்படும்.
ஆதிக்க சக்திகள் முக்காடு போடப் போகும் நாள் 13.5.2011.
தமிழினம் காக்க தன் உடல், பொருள் ,ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கும் அருமைத் தலைவரையும் அவர்தம் குடும்பமும் இன்னுமொரு நூறாயிரம் ஆண்டு வாழ்க என வாழ்த்தி மகிழுவோம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்

tommoy said...

துக்ளக் போன்ற பத்திரிகைகள் இருக்க ஏன் இந்த விரக்தி?

heheheheheheheheh

baleno said...

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க இந்தியா முன்வரவேண்டும் என்று ஜெயலலிதா சொன்னதை பற்றிய கேள்விக்கு "அதற்கான வலு இந்தியாவிடம் உள்ளதா?" என்று பதில் அளித்துள்ளீர்கள்.அப்படி வலு இந்தியாவிடம் இருந்தால் புலி ஆதரவாளர்கள் விருப்பபடி இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டுவர வேண்டும் என்கிறீர்களா?

ரமணா said...

6.நேற்று சுமாராக இரண்டு மணி நேரம் தஞ்சை பெரிய கோவிலில் சற்றுலாப் பயணிகளாய் வந்திருந்த பலதரப்பட்ட மக்களிடம் பேசியதில் பெரும்பாலோர்கள் திமுக கூட்டணிக்கு எதிராய் வக்களித்தாய் சொல்லும் போது அந்த ஆங்கிலச் சேனல் திமுக ஆட்சி தொடரும் எனச் சொல்வது எப்படி சாத்யம்?
7.ஓட்டுப்போட கொடுத்த பணமெல்லாம் கோவில் உண்டியலில் போடப்பட்டதாய் அவர்கள் சொன்னதை பார்க்கும் போது?
8.கிராமத்து மக்களுக்கு கூட கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் வியாபார உலகிலில் உள்ளது தெளிவாய் தெரிவதை எண்ணுபோது?
9.குருப் பெயர்ச்சி ஜெயலலிதாவுக்கு சாதகம் என வரும் செய்திகள்?
10.தமிழ் சினிமா உலகம் சுதந்திரத்தை எதிர்பார்த்து?

ரமணா said...

//

ezhil arasu said...
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்//

இது எப்படி இருக்கு?

ரமணா said...

//
ezhil arasu said...
தமிழினம் காக்க தன் உடல், பொருள் ,ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கும் அருமைத் தலைவரையும் அவர்தம் குடும்பமும் இன்னுமொரு நூறாயிரம் ஆண்டு வாழ்க என வாழ்த்தி மகிழுவோம்.//

தமிழ் மக்களை ஒருவழி பண்ணாமல் விடமாட்டீர் அன்பு உடன்பிறப்பே!

dondu(#11168674346665545885) said...

//இது எப்படி இருக்கு?//
சேம் சைட் கோல் அடித்தார் போலிருக்கே எழிலரசு!

அன்புடன்,
டோண்டு ராகவன்

hayyram said...

//ராம் ஜேத்மலானிக்கு
கழகத் தொண்டர்கள் நன்றிக் கடன் பட்டவர்கள்.// ராம் ஜெத்மலானி பார்ப்பனராமே! உண்மையா?

pt said...

KINDLY SEE CNNIBN TV FOR POST POLL SURVEY -TAMIL NADU AT 2010 HOURS-10.11.2011
NOW ALL THE TV CHANNELS ARE SAYING JEYALALITHA WILL COME TO POWER.

EDITOR CHO IS BEING INTERVIEWED BY LEADING TV CHANNELS.
HE IS VERY CONFIDENT TO SAY THAT ADMK WILL GET MAJORITY ON ITS OWN.
BUT HEADLINES TV IS OF DIFFERENT VIEW.

DONDU'S SPECIAL COMMENT ABOUT THIS ?

dondu(#11168674346665545885) said...

@PT
I keep my fingers crossed. I don't hesitate to say that my preferences are the same as those of Mr. Cho.

But whether they will materialize or not is another big question.

Cho is better infomed than I of course.

Regards,
Dondu N. Raghavan

ரமணா said...

/// dondu(#11168674346665545885) said...

@PT
I keep my fingers crossed. I don't hesitate to say that my preferences are the same as those of Mr. Cho.

But whether they will materialize or not is another big question.

Cho is better infomed than I of course.

Regards,
Dondu N. Raghavan//

இந்தத் தடவை சோவின் கணிப்பு 100 % நடக்க போவதாய் தொலைக்காட்சி கருத்து கணிப்புகள் தெளிவாக்குகின்றன.
கருணாநிதியின் ஆட்சியில் சலுகைகள் பெற்றோரும்,ஓட்டுக்ககாக பணம் பெற்றொரும் கூட கருணாநிதியின் மெகா ஊழலை,குடும்ப ஆதிக்க அரசியலை வெறுப்பதாகவே தெரிகிறது.
மதுரை அழகிரி இதை முதலிலேயே எச்சரித்தார்.ஆனால் கருணாநிதியின் பாசம் அவரது கண்ணை மறைத்துவிட்டது போலுள்ளது.
ஒருவேளை வைகோவும் அதிமுக அணியில் இருந்திருந்தால் திமுகவின் கதி அதோகதியா என்பது ஒரு கேள்விக்குறியே!
தேர்தல் கமிஷனின் கெடுபிடியால் திருமங்கல பார்முலா செயல் படுத்தா நிலையும் ஒரு காரணமா?

கருத்துக்கணிப்பு சொல்வது போல் திமுக தோற்றால!


1.கருணாநிதியின் குடும்பங்களுக்குள் மோதல் வரலாம் என சோவின் கணிப்பு சரியா?

2.சினிமா உலகம் நிம்மதி பெருமூச்சுவிடுமா?.
3.வியாபார உலகம் கொண்டாடுமா?
4.சொத்து குவிப்பு வழக்குகளால் இனி வக்கீல் காட்டில் மழை கொட்டுமா?.
5.இலங்கை தமிழர் பிரச்சனை இனி திமுகவின் கொட்டு முரசாகுமா?.
6.மீனவர் பிரச்சனையை இனி திமுக கையிலெடுத்து போரடுமா?.
7.திமுக ,பாஜக இடையே புதிய உறவு மலருமா?.
8.அதிமுக காங். உடன் கைகோர்ககுமா?
9.மருத்துவர் அணி மாறுவாரா?.
10.கருணாநிதி முழு நேர இலக்கிய ஆர்வலராய் மாறி இன்னுமொரு புதிய அத்தியாயம் எழுதுவாரா?.

D. Chandramouli said...

Actor Vadivelu must have contributed sizeable no. of votes to DMK by his hectic and humorous campaigning. This is a new element in reckoning the results. If the race is considered neck-to-neck, Vadivelu must have swung a sizable chunk of votes for DMK to return to power. Yes, as you say, we've to keep our fingers crossed. But, I think 200 seats for AIADMK front seems far-fetched, as many don't like Jaya's style of functioning, yet they don't like DMK to return to power either - sort of between the devil and the deep sea. Long back, during one of the previous elections, I heard that Amul had kept an ad for display in Mount Road with two different sets of wordings: If ADMK had the edge, "Amul (for Ammu viz. Jaya) Definite Menu in the Kitchen" (ADMK). If DMK had the edge, just "Definite Menu in the Kitchen" (DMK).

ezhil arasu said...

டோண்டு அவர்களின் ஜாக்கிரதை உணர்வு அவரது ஆழங்கால்பட்ட அனுபவத்தை பறை சாற்றுகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது.


மே திங்கள் 13ம்நாள் தமிழ்ச் சமுதாயம் தருமத் தலைவனுக்கு ஆறாவது முறையாய் மகுடம் சுட்டி மகிழும் நாளென்று எண்ணிப் பார்க்கும்போது மனம் ஆனந்த நடனம் ஆடி மகிழும்
மகோன்னதம் கண்ணில் தெரிகிறது.
கைபர் கணவாய் வந்தவர்களின் கருத்து கணிப்புகளெல்லாம் பொய்,பித்தலாட்டம்,புரட்டு,சரடுவிடுதல் என அழகாய் நக்கீரன் சர்வே சொல்லும் ஊண்மைகள் கோடான கோடி.

திமுகவின் தலமையில் அமையப் போகும் கூட்டணி அரசை வரவேற்க
மானம் காக்கும் மறவர் கூட்டம் ஆர்பரித்து நிற்கிறது.

முயல் கூட்டம் சிங்கத்தின் முன் நிற்குமோ?

இனி பூணுல்களின் ஆட்டம் இங்கே செல்லாது
ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்படும் புனித நாள் 13/5/2011
சோவின் கனவு கானல் நீராய் மாறும் நாள் 13/5/2011
தமிழ்ச் சமுதாயம் தன் நன்றியை வெளிக்கொணறும் நாள் 13/5/2011
தூயவனின் தவப் புதல்வியை, பத்தரை மாற்று சொக்கத் தங்கம் என உலகம் அறியும் நாள் 14/5/2011.

ஊழலை கிஞ்சிற்றும் அனுமதிக்காத
உத்தமர் கலைஞர் போற்றி போற்றி.
தான் வாழும் இல்லத்தை தானமாய் தந்தோன் போற்றி போற்றி.
அரைக்க அரைக்க சந்தணம் மணக்கும்
சங்கு சுட்டாலும் வெண்மை மாறாது.
தலைவர் நூறாண்டு வாழ்ந்து ஒரு கோடி நன்மை செய்து ஜொலிப்பார்.

ezhil arasu said...

/. Chandramouli said...

Actor Vadivelu must have contributed sizeable no. of votes to DMK by his hectic and humorous campaigning. This is a new element in reckoning the results. If the race is considered neck-to-neck, Vadivelu must have swung a sizable chunk of votes for DMK to return to power. Yes, as you say, we've to keep our fingers crossed. But, I think 200 seats for AIADMK front seems far-fetched, as many don't like Jaya's style of functioning, yet they don't like DMK to return to power either - sort of between the devil and the deep sea. Long back, during one of the previous elections, I heard that Amul had kept an ad for display in Mount Road with two different sets of wordings: If ADMK had the edge, "Amul (for Ammu viz. Jaya) Definite Menu in the Kitchen" (ADMK). If DMK had the edge, just "Definite Menu in the Kitchen" (DMK)./

இது தவறான தகவல்.
காமெடியனை நம்பி கழகம் இல்லை
விஜய்காந்த்க்கு எதிர் பிரச்சாரம் செய்ய வடிவேலு தானாகவே வந்தார்.
உறுதி செய்யப்பட்ட கழக வெற்றிக்கு இப்ப்டியொரு கழங்கம் கற்பிக்கும் பார்ப்பனப் புத்தி தெளிவாய் தெரிகிறது.
13/5/2011 இது மாதிரி புலம்பல்கள் தொடரும்
வேடிக்கை பார்ப்போம்.

ezhil arasu said...

தேர்தல் முடிவின் போக்கு கண்டு தமிழன்னை கண்ணீர் வடிப்பாள்.தனது தலைமகனின் தரும ஆட்சி தொடர வேண்டிய நல் வாய்ப்பை ஊழல் எனும் பொய்க் குற்ற்சாட்டு புனைந்து கூறி சாய்த்து விட்டனர் பார்ப்பனர் கூட்டம்.தலைவன் செய்திட்ட நல்லாட்சியையும்,அளித்திட்ட நலத் திட்டங்களையும் எப்படி தீட்டம் போட்டு மறக்கடித்தனரோ!.இன்று பலிகடாவாய் ஆக்கப்பட்ட தமிழினம் 2014 பாரளுமன்ரத் தேர்தலில் மீண்டும் திமுக,காங் லட்சியக் கூட்டணிக்கு வெற்றி பரிசு தரும்.திமுக ஒரு பீனிக்ஸ் பறவை.அது சாம்பலிருந்து மீண்டும் எழும் .திமுக நண்பனாய் தொடர விரும்பும் காங்கிரசை பிரிக்க நடக்கும் சதிகளை உடன் பிற‌ப்புகள் அறிவர்.அன்னை சோனியாவின் ஆதரவு இருக்கும் வரை கழகத் தொண்டன் கலங்க வேண்டாம்.விட்டில் பூச்சியை விளக்கென எண்ணும் போக்கு மாறும்.இனி தலைவரின் முழு நேரமும் இலங்கை தமிழர் நலன் காக்கவும்,மீனவச் சகோத‌ரர்களை காக்கும் காவல்காரனாய் செயல் படவும் ஒரு நல்ல வாய்ப்பு இயற்கை வழங்கியுள்ளது கண்டு மகிழ்ச்சியே.

இப்போது மற‌ந்தாலும்
1)ஒரு ரூபாய் அரிசி
2)இலவச காஸ்
3)இலவச மருத்துவம் 108
4)இலவச பஸ் பாஸ்
5)இலவச வீடு
6)இலவச நிலம்
7)இலவச லேப்டாப்
8)இலவச மிக்ஸி

ஒரு நாள் முகிலை கிழித்து வெளிவரும் முழு மதியாய் மாறி சூரியக் குடும்பத்தின் ஆட்சியை மீண்டும் 2021 ல் வரச் செய்யும்.

Arun Ambie said...

//ezhil arasu said...
ஊழலை கிஞ்சிற்றும் அனுமதிக்காத
உத்தமர் கலைஞர் போற்றி போற்றி.
தான் வாழும் இல்லத்தை தானமாய் தந்தோன் போற்றி போற்றி.
அரைக்க அரைக்க சந்தணம் மணக்கும்
சங்கு சுட்டாலும் வெண்மை மாறாது.
தலைவர் நூறாண்டு வாழ்ந்து ஒரு கோடி நன்மை செய்து ஜொலிப்பார். //

யாகவா முனிவர் கடவுளின் அவதாரம். மூவாயிரம் ஆண்டுகளாய் ஈரேழு பதினான்கு உலகங்களையும் தன் "தத்தத் ததாக் பப்பப் பதாக தகபதபக்க பகதகதக்க" பாஷயால் ரட்சித்து காத்து அருள் பாலிக்கிறார் என்று நம்பும் சிலருக்கு தமிழகத்தில் ஒத்த எண்ண ஓட்டமுடையோர்க்குக் குறைவில்லை.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது