கெட்டதிலும் நல்லது நடந்தது
மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு என்ற பதிவின் தொடர்ச்சியாகவும் இதை வைத்துக் கொள்ளலாம், அதன் பின் இது நடந்தது என்னும் அடிப்படையில். ஆனால் விஷயம் சற்றே சிக்கலானது.
முதலில் எட்டு நாட்கள் போல ஆஸ்பத்திரியில் தங்கியதில் உடல் பருமன் குறைய, அதனால் அதுவரை கண்பர்ர்வைக்குப்படாத ட்யூமர் ஒன்று இடது தொடையில் வெளிப்பட்டது. ஏதோ சாதாரண வீக்கம் என சத்ய நாராயணாவிடம் போக அவர் அதை பார்த்த போதே புன்னகையை தொலைத்து கேட் ஸ்கேனுக்கு ஆர்டர் செய்ய, அதன் ரிசல்ட் வந்ததும்தான் நிலைமை சற்றே சீரியஸ் என எனக்கே பட்டது. ஐந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி, 23-ஆம் தேதி அன்றுதான் ட்யூமரை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். டாக்டர் ரவிச்சந்திரன் என்னும் புகழ் பெற்ற ஓன்காலஜிஸ்ட்தான் அதை செய்தார். நேற்று டிஸார்ஜ்.
ஆஸ்பத்திரியில் எல்லாமே படுக்கையில் என ஆயிற்று. சிறுநீர் கழிக்க கதீட்டர், காயத்திலிருந்து கெட்ட நீர் வடிவதை மானிட்டர் செய்யும் ட்ரைன் என்றெல்லாம் அமர்க்களப்படுத்தி விட்டார்கள். பெட்பான் ஒத்துக் கொள்ளாததால் அடல்ட் டையப்பரை வேறு மாட்டி விட்டனர். கண்றாவி. ஆனால் என்ன செய்வது.
இப்போது டிஸ்சார்ஜ் ஆனாலும் கெட்ட நீர் வடிகால் பாத்திரம் அப்படியே உள்ளது. ஆகவே வீட்டை விட்டு வெளியேறுவது அசாத்தியமாயிற்று. வரும் செவ்வாயன்று அதை எடுப்பதாக ஐடியா. பார்ப்போம், கடவுள் விட்ட வழி. பிறகு இருக்கவே இருக்கின்றன தொடர் சிகிச்சைகள்.
இடது காலை நேராகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பெல்ட் போட்டுள்ளார்கள். ஆகவே ஒரு காலை இழுத்து இழுத்துத்தான் நடக்க வேண்டும். கூடவே கையில் டிரைனையும் ஏந்திக் கொள்ள வேண்டும்.
ஈரோட்டு பிடிவாதக் கிழவர் அக்காலகட்டங்களில் தன் மூத்திரச் சட்டியை சுமந்து செல்ல வேண்டியிருந்தாலும், மன உறுதியுடன் தன் வேலையை தான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்வரை செய்தார் அவர். Hats off to him!!!
எனக்கும் அதே மனவுறுதியை அளிக்குமாறு என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பான் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டிக் கொள்கிறேன்.
நடுவில் ராஜேஷ் கன்னா என்னும் ஒரு அன்பர் எனக்கு ஃபோன் செய்து ஏன் எனது பதிவுகள் வரவில்லை எனக் கேட்டார். அவருக்கு அப்போது காரணத்தைக் கூறினேன். இப்போது இப்பதிவு.
நண்பர்கள் யாவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
15 hours ago
42 comments:
விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
விரைவில் குணமடைய இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அன்புமிக்க டோண்டு சார் ,
நீங்கள் பூரண நலம் பெற்று , நல்ல ஆரோக்கியத்துடன் பதிவுகள் போட, நான் வணங்கும் இறைவனை பிரார்த்திக்கிறேன் .
விஜயராகவன்
Wish you speedy recovery! Please take care of your health.
Wishing you and your family and happy, healthy and wealthy new year.
- Simulation
I Pray god for your recovery sir.
i pray god for your speedy recover sir
Get well Soon, sir.
எனக்கும் அதே மனவுறுதியை அளிக்குமாறு என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பான் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டிக் கொள்கிறேன்.
U will get well soon.
நலம் பெற வாழ்த்துக்கள். என் அம்மாவுக்கும் தென்திருப்பேரைதான் சொந்த ஊர். அவரை கெட்டியாய் பிடித்துக் கொள்ளுங்க!. இன்னொரு வேலை செய்யலாம். மனம் எழுந்திருச்சா உடலும் எழுந்திருச்சிரும். அதனால ஒரு நாளைக்கு ஒரு பதிவுன்னு குறிப்பு எடுத்திட்டு போட்டுத்தாக்குங்க...உடல் தெம்பாயிரும்.
வருத்தமான செய்தி! சிறிது காலம் நன்கு ஓய்வெடுங்கள். எல்லாம சரியாகும்.
தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது 'நாங்கள் இறைவனுக்கே உரியவர்கள்: நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்' என்று அவர்கள் கூறுவார்கள்.
அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும் அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.
-குர்ஆன் 2:156,157
உடல்நலம் பெற்று பழையபடி பதிவுகள் வழமையோல் எழுத அநத ஏக இறையைப் பிரார்த்திக்கிறேன்.
அச்சச்சோ.. ஏன் இந்தச் சோதனை..? தாங்கிக் கொள்வீர்கள் ஸார்..! உங்கள் அப்பனும், என் அப்பனும் உளமாற உங்களுக்கு நலமளிப்பார்கள்..!
உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!
Sir,
Please take care of your health...Hope you recover soon..My prayers and best wishes for you...
Krishna
தங்கள் பதிவை படித்து முடித்தேன் இது நாள் வரை சிம்மக் குரலுடன் தாங்கள் எழுதியவற்றை படித்து தற்போபோது உடல் நலமின்றி ஹஸ்ப்பிட்டலில் தங்கி மருத்துவம் பார்த்து தற்போது நல்ல உடல் நலத்துடன் திரும்பி இருக்கும் தாங்கள் அணைத்து நலன்களும் பெற்று தீர்க்காயுசுடன் நோய் நொடி இன்றி நீண்ட நாட்கள் நிம்மதியாக வாழ திருப்பதி வெங்கடாசலபதி ஸ்வாமி ஐயப்பன் அனைவரது அருளும் பெற்று உடல் சுகத்துடன் வாழ ப்ரார் த்திக்கிறேன்
அன்புடன்
licsundaramurthy@gmail.com
www.salemscooby.blogspot.com
விரை வில் பூரண நலம் பெற்று மீண்டுவர பிரார்த்தனைகள். இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்
I am very sorry to know about your health problems, Mr. Raghavan. Let me hope it is just a "benign" one and that you will completely recover as soon as 2012 starts!
Be strong and be optimistic, please! Those are the cure for any disease!
துன்பம் ஏற்பட்ட இந்த வேளையில் நீங்கள் முதலில் பெரியாரையும் அப்புறம் கடவுளையும் குறிப்பிடுகிறீர்கள் என்பதுதான் பெரியாரின் சாதனை ! விரைவில் உடல்நலம் பெற்றுத் திரும்பி வந்து ஆக்ரோஷமான் பதிவுகளை வெளியிட்டு எதிர் தரப்பான எங்களை வலுப்படுத்தும்படி வாழ்த்துகிறேன். அன்புடன் ஞாநி.
படித்தவுடன் மனம் பாரமாகிவிட்டது சார்!. விரைவில் நலம் பெற என் திருப்பதி ஏழுமலையானை வேண்டுகிறேன். மன உறுதியுடன் இருங்கள். எல்லாம் விரைவில் சரியாகும். என்றும் அன்புடன், என்.உலகநாதன்.
என்ன சார் இது,எதிர்பாரா தொடர் தொந்தரவு.கொஞ்சநாடகள் பதிவுகளைக் காணோமே என்று கவலையாகத்தான்
இருந்தது.ஆனால் இப்படியிருக்குமென்று
நினைக்கவில்லை.உரியநேரத்தில்
பார்த்ததுநல்லதாகப்போயிற்று.உடல் தேறி மீண்டும் தீவிரமான பதிவுகளைக்
கொடுக்க பகவானைப் பிரார்த்திக்கிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
Dear Sir
take care about your health.Get well soon. I pray for you to Lord Murugan. I wish you and your family a happy, health and wealthy new year.
with love
Ravichandran
அன்புள்ள ராகவன் அவர்களுக்கு,
இந்த நோயின் தாக்கங்களை நான் அறிவேன். உங்களுக்கு இந்த நோய் வந்திருக்கும் பாகம் எந்த அத்தியாவசியமான உறுப்புகள் கொண்டதல்ல. ஆகவே மனதை தளர விடாமல் தைரியமாக இருக்கவும். இதற்கு கடவுள் நம்பிக்கை உதவும்.
இந்த சமயத்தில் உங்களுக்கு நல்ல மனோதிடத்தை அருளுமாறு ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
உங்கள் உடல் நலம் சீக்கிரமே தேறட்டும்.
அன்புடன்,
கந்தசாமி
மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு பதிவையும் இப்போ தான் பார்த்தேன். விரைவில் உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.
Have rest Sir, We would like to see you again blogging with full swing.
take care get well soon,
விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
வெகு விரைவிலேயே பரிபூரண குணம் அடைய பரம்பொருளைப் பிரார்த்திக்கிறேன்!
வணக்கம்!
வலைப் பதிவில் தங்கள் கட்டுரைகளை படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். பின்னூட்டங்கள் போட்டதில்லை. முந்தைய கட்டுரையில் தங்களுக்கு இருந்த நம்பிக்கை இந்த கட்டுரையில்
இல்லாதது போல் தெரிகிறது. மனம் தளர வேண்டாம். இறைவன் அருள் புரிவான்.
Get Well Soon Dondu Sir...
Wish you & your family members a Very Happy New Year 2012...
விரைவில் குணமடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
http://anubhudhi.blogspot.com/
Dear Mr Raghavan
Be confident that "this too shall pass". No pleasure lasts for ever. No pain lasts for ever as well. Wish you get well soon.
நல்ல ஆரோக்கியத்துடன் தொடர என் பிரார்த்தனைகள். புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.
In the middle of the turbulence surrounding you
These trying times that are so hard to endure
In the middle of what seems to be your darkest hour
Hold fast your heart and be assured
This too shall pass, like every night that's come before it
He'll never give you more than you can bear
This too shall pass, so in this thought you be comforted
For it's in His hands, this too shall pass, oh yes
The Father knows the tears you cry before they fall
He feels your pain, His heart and yours are one
The Father knows that sorrow's heavy chains are strong
But with His strength, you'll overcome
For this too shall pass, like every night that's come before it
He'll never give you more than you can bear
This too shall pass, so in this thought you be comforted
For it's in His hands, this too shall pass
So set your eyes, set them on the mountain
And lift your hands up to the sky
And let His arms of love surround you
Let Him take you to the other side
This too shall pass, like every night that's come and gone before it
I'm so glad, He never gives [Incomprehensible] more than you can bear
This too shall pass, so in this thought you be comforted
For it's in his hands, this too shall pass
It's in His hands, this too shall pass
Oh, it shall pass
When some great sorrow, like a mighty river,
Flows through your life with peace-destroying power,
And dearest things are swept from sight forever,
Say to your heart each trying hour:
"This, too, shall pass away."
When ceaseless toil has hushed your song of gladness,
And you have grown almost too tired to pray,
Let this truth banish from your heart its sadness,
And ease the burdens of each trying day:
"This, too, shall pass away."
When fortune smiles, and, full of mirth and pleasure,
The days are flitting by without a care,
Lest you should rest with only earthly treasure,
Let these few words their fullest import bear:
"This, too, shall pass away."
When earnest labor brings you fame and glory,
And all earth's noblest ones upon you smile,
Remember that life's longest, grandest story
Fills but a moment in earth's little while:
"This, too, shall pass away."
விரைவில் நலம் பெற ஆண்டவனை பிராத்திக்கிறேன் சார்
சரணம் ஐயப்பா! 10 நாட்களுக்கு மேலாக அலுவலக விடுமுறை என்பதால் ஊருக்குப் போய்விட்டேன். அங்கே வேகம் குறைந்த இணைய இணைப்பு என்பதால் பதிவுலகத்தின் பக்கம் வரவில்லை. தாங்கள் விரைவில் குணமடைய எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்..
ஆங்கிலப் புத்தாண்டு 2012 இனிதாய் அமைய நல்வாழ்த்துக்கள்..
விரைவில் பரிபூரண குணம் அடைந்து முன் போலவே வளைய வர பிரார்த்திக்கிறேன்.
விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்
ஸலாம் உண்டாகட்டும் சகோ.டோண்டு,
விரைவில் பூரண குணமடைய இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.
அப்புறம்...
///ஈரோட்டு பிடிவாதக் கிழவர் அக்காலகட்டங்களில் தன் மூத்திரச் சட்டியை சுமந்து செல்ல வேண்டியிருந்தாலும், மன உறுதியுடன் தன் வேலையை தான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்வரை செய்தார் அவர். Hats off to him!!!///
---இந்த நிலையிலும் உங்களுக்கு அவர் நியாபகம் வந்தது... அதுவும் //Hats off to him!!!//...என்பது..!
நீங்கள் அதி விரைவில் பூரண குணமடைய இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.
//---இந்த நிலையிலும் உங்களுக்கு அவர் நியாபகம் வந்தது... அதுவும் //Hats off to him!!!//...என்பது..! //
நான் பெரியாரை ஆதரித்து ஏற்கனவே எழுதியுள்ளதை பார்க்க:
http://dondu.blogspot.com/2007/03/blog-post_27.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Take Care of your health Sir. Get well soon.
Wishing you and your family, happy and healthy new year.
நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது 235
தாங்கள் தங்களுடைய துன்பத்தை எதிர்கொண்டுள்ள விதம் தங்களை ஐயமின்றி ஒரு வித்தகராக அடையாளாம் காட்டுகிறது. தங்களது துன்பம் அகல எனது வாழ்த்துக்கள்
வித்தகர் என்ற சொல்லை நான் புரிந்துகொண்டுள்ளவிதம் இது:
ஈதல் லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு (231)
என்ற குறளின் படி வாழ்பவன் வித்தகனாவான். சரி இந்தக்குறளுக்கு என்ன பொருள்? ஈதல் என்றால் ஒருவருடைய நேரம், உழைப்பு செல்வம் அறிவு ஆகியனவற்றை மற்றவர்கள் மேம்படுவதற்காக அவர்களுக்கு மனமுவந்து தருவது. இசைபடவாழ்தல் என்றால் அவ்வாறு ஈந்து அவர்களின் உள்ளத்தின் மதிப்பைபெறுவது. ஊதியம் இல்லை உயிர்க்கு என்றால் ஆன்மாவிற்கு என்று பொருள்.
சரி ஊதியம் எந்த ஊதியத்தைக்குறிக்கிறது?
இப்படிப்பட்ட செயல்பாட்டால் செம்மையுறுவதே ஊதியம்மாகும். அவ்விதம் செம்மையுறும் ஆன்மா பிறகு என்ன செய்யும்? முற்றிலும் செம்மையுற்ற ஆன்மா கடவுளின் உலகின் நிரந்தரப் பிரஜையாகும். இதை அறிந்து எந்த ஒரு நிகழ்வையும் தன்னுடைய ஆன்மா மேம்பாட்டுக்கு வாய்ப்பு நல்கும் நிகழ்வாக மாற்றிக் கொள்பவன் வித்தகன் ஆவான்
Post a Comment