எனது முந்தையப் பதிவில் விடுதலைப் புலிகளையும் யூதர்களையும் ஒப்பிட்டு வந்த பின்னூட்டமும் அதற்கு எனது எதிர்வினையும் பின்வருமாறு:
//புலிகள்
விஷயத்தில் உங்களது நேர்மையைப் பாராட்ட வேண்டும். என்னதான் புலிகள் இஸ்ரேல்
ஆதரவு, முஸ்லீம் விரோதப்போக்கு, மோடியைப் போல பொது மக்களைக் கொல்லுதல் என
இருந்தாலும், புலி ஆதரவாளராக நீங்கள் இல்லை.//
டோண்டு கூறியது:
//புலிகளை இஸ்ரவேலர்களுடன் ஒப்பிடுவதா? வாயைக் கழுவுங்கள். அவர்களை
பாலஸ்தீனியருடன் வேண்டுமானால் கம்பேர் செய்வேன், முட்டாள்தனமாக தமது
ஆதரவாளர்களிடம் ஏடாகூடமாக நடந்து கொண்டதில்.
1982-ல் பாலஸ்தீனியரை ஏற்றுக் கொள்ள எந்த அரபு தேசமுமே தயாராக இல்லை.
அதே போல தனக்கு ஏதுவாக செயல்படகூடிய தமிழகத்தை, ராஜீவை கொலை செய்தது மூல்ம் விரோதித்துக் கொண்டனர் புலிகள்.//
இருப்பினும் இந்த ஒப்பிடுதல் சரியில்லை என்பதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன.
ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக பலவித ஆட்சிகளால் பீடிக்கப்பட்டு, ஆண்டுதோறும் தமக்குள் கூறிக்கொளும் முக்கிய முகமனாக “அடுத்த ஆண்டு ஜெரூசலத்தில் பார்ப்போம்” வைத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலர்களுடன் புலிகளை ஒப்பிட நினைப்பதே தகாது.
நான் தில்லியில் இருந்த சமயம் மாரெக் ஹால்டர் என்னும் யூத எழுத்தாளர் எழுதிய ”அப்ரஹாமின் புத்தகம்” என்னும் புத்தகம் படிக்கக் கிடைத்தது. அருமையான ஃபிரெஞ்சில் அது அமைந்தது பற்றி இங்கே மேலே வேண்டாம்.
அப்புத்தகத்தின் கதை கி.பி. 70 வாக்கில் துவங்கி 1936-ல் முடிவடைகிறது, அதுவும் ஒரே குடும்பத்தின் கதைதான் அது. அதில் யூதர்கள் அனுபவித்த எல்லா சோதனைகளும் அழகாகக் கையாளபட்டுள்ளன. 19940-களில் வார்ஸா யூதக்குடியிருப்பு அழிப்பு சமயத்தில் கதை முடிவடைகிறது. அதில் உள்ள ஒரு கதபாத்திரம் இறக்க, “Ainsi mourut mon grandpère" (இப்படித்தான் இறந்தார் எனது தாத்தா) என்ற வாக்கியம் வர நான் எங்கோ குத்தி விட்டது போல நிமிர்ந்து உட்கார்ந்தேன். இக்கதைசொல்லியும் அக்குடும்பத்தின் உறுப்பினர் என்ற உண்மை முகத்தில் அறைந்தது.
அப்புத்தகம் பற்றி இன்னொரு சுவையான செய்தி. சமீபத்தில் 1991-ல் நான் பிரெஞ்சு துபாஷியாக ஆக்ரா சென்ற போது அந்த பிரெஞ்சுக்காரர் மாரெக் ஹால்டர் எழுதிய ”அப்ரஹாமின் குழந்தைகள்” என்னும் புத்தகத்தை சிலாகித்து பேசினார். அது நான் முதலில் குறிப்பிட்ட புத்தகத்தின் தொடர்ச்சி என் நான் அவருக்கு எடுத்துக் கூற், அவ்வளவுதான் ஆக்ராவிலிருந்து காரில் டில்லி வரும்வரை நாங்கள் இருவர் மட்டுமே பேசி வந்தோம். நேரம் போனதே தெரியவில்லை.
முதல் புத்த்கம் சரித்திரத்தைக் கூற இரண்டாம் புத்தகமோ தற்போது இஸ்ரவேலர்கள் அரபியருடன் சேர்ந்து சமாதானத்துக்காக முயற்சிப்பதை கூறுகிறது.
அவை கதை புத்தகங்கள்தான், ஆனால் உண்மையின் அடிப்படை அவற்றுக்கு உண்டு.
இப்போது கூட குடி முழுகவில்லை. ஈழத்தமிழர்கள் கிபி 70-ல் இஸ்ரவேலர்கள் இருந்த நிலையில் உள்ளனர். அவர்களைப் போல இவர்களும் முயன்றல் வேண்டுமானால் ஒப்பீடு குறித்து சில நூற்றாண்டுகள் கழித்து யோசிக்கலாம். இல்லாவிட்டல் ஒப்பிட்ட வாயைக் கழுவு என்றுதான் நான் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்.
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
9 hours ago