9/25/2012

விடுதலைப் புலிகளை யூதர்களுடன் ஒப்பிடலாமா?

எனது முந்தையப் பதிவில் விடுதலைப் புலிகளையும் யூதர்களையும் ஒப்பிட்டு வந்த பின்னூட்டமும் அதற்கு எனது எதிர்வினையும் பின்வருமாறு:

//புலிகள் விஷயத்தில் உங்களது நேர்மையைப் பாராட்ட வேண்டும். என்னதான் புலிகள் இஸ்ரேல் ஆதரவு, முஸ்லீம் விரோதப்போக்கு, மோடியைப் போல‌ பொது மக்களைக் கொல்லுதல் என இருந்தாலும், புலி ஆதரவாளராக நீங்கள் இல்லை.//

டோண்டு கூறியது:
//புலிகளை இஸ்ரவேலர்களுடன் ஒப்பிடுவதா? வாயைக் கழுவுங்கள். அவர்களை பாலஸ்தீனியருடன் வேண்டுமானால் கம்பேர் செய்வேன், முட்டாள்தனமாக தமது ஆதரவாளர்களிடம் ஏடாகூடமாக நடந்து கொண்டதில்.

1982-ல் பாலஸ்தீனியரை ஏற்றுக் கொள்ள எந்த அரபு தேசமுமே தயாராக இல்லை.

அதே போல தனக்கு ஏதுவாக செயல்படகூடிய தமிழகத்தை, ராஜீவை கொலை செய்தது மூல்ம் விரோதித்துக் கொண்டனர் புலிகள்.//

இருப்பினும் இந்த ஒப்பிடுதல் சரியில்லை என்பதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன.

ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக பலவித ஆட்சிகளால் பீடிக்கப்பட்டு, ஆண்டுதோறும் தமக்குள் கூறிக்கொளும் முக்கிய முகமனாக “அடுத்த ஆண்டு ஜெரூசலத்தில் பார்ப்போம்” வைத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலர்களுடன் புலிகளை ஒப்பிட நினைப்பதே தகாது.

நான் தில்லியில் இருந்த சமயம் மாரெக் ஹால்டர் என்னும் யூத எழுத்தாளர் எழுதிய  ”அப்ரஹாமின் புத்தகம்” என்னும் புத்தகம் படிக்கக் கிடைத்தது. அருமையான ஃபிரெஞ்சில் அது அமைந்தது பற்றி இங்கே மேலே வேண்டாம்.

அப்புத்தகத்தின் கதை கி.பி. 70 வாக்கில் துவங்கி 1936-ல் முடிவடைகிறது, அதுவும் ஒரே குடும்பத்தின் கதைதான் அது. அதில் யூதர்கள் அனுபவித்த எல்லா சோதனைகளும் அழகாகக் கையாளபட்டுள்ளன. 19940-களில் வார்ஸா யூதக்குடியிருப்பு அழிப்பு சமயத்தில் கதை முடிவடைகிறது. அதில் உள்ள ஒரு கதபாத்திரம் இறக்க, “Ainsi mourut mon grandpère" (இப்படித்தான் இறந்தார் எனது தாத்தா) என்ற வாக்கியம் வர நான் எங்கோ குத்தி விட்டது போல நிமிர்ந்து உட்கார்ந்தேன். இக்கதைசொல்லியும் அக்குடும்பத்தின் உறுப்பினர் என்ற உண்மை முகத்தில் அறைந்தது. அப்புத்தகம் பற்றி இன்னொரு சுவையான செய்தி. சமீபத்தில் 1991-ல் நான் பிரெஞ்சு துபாஷியாக ஆக்ரா சென்ற போது அந்த பிரெஞ்சுக்காரர் மாரெக் ஹால்டர் எழுதிய ”அப்ரஹாமின் குழந்தைகள்” என்னும் புத்தகத்தை சிலாகித்து பேசினார். அது நான் முதலில் குறிப்பிட்ட புத்தகத்தின் தொடர்ச்சி என் நான் அவருக்கு எடுத்துக் கூற், அவ்வளவுதான் ஆக்ராவிலிருந்து காரில் டில்லி வரும்வரை நாங்கள் இருவர் மட்டுமே பேசி வந்தோம். நேரம் போனதே தெரியவில்லை.

முதல் புத்த்கம் சரித்திரத்தைக் கூற இரண்டாம் புத்தகமோ தற்போது இஸ்ரவேலர்கள் அரபியருடன் சேர்ந்து சமாதானத்துக்காக முயற்சிப்பதை கூறுகிறது.

அவை கதை புத்தகங்கள்தான், ஆனால் உண்மையின் அடிப்படை அவற்றுக்கு உண்டு.

இப்போது கூட குடி முழுகவில்லை. ஈழத்தமிழர்கள் கிபி 70-ல் இஸ்ரவேலர்கள் இருந்த நிலையில் உள்ளனர். அவர்களைப் போல இவர்களும் முயன்றல் வேண்டுமானால் ஒப்பீடு குறித்து சில நூற்றாண்டுகள் கழித்து யோசிக்கலாம். இல்லாவிட்டல் ஒப்பிட்ட வாயைக் கழுவு என்றுதான் நான் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன். 

    

16 comments:

மு மாலிக் said...

டோண்டு அவர்களே

இஸ்ரேல் விஷயத்தில் நீங்களும் புலி-ஆதரவாளர்களும் ஒத்துப் போகிறீர்கள் என்றுதான் கூறினேன்.

நீங்களும் புலி ஆதரவாளர்களும் இஸ்ரேலின் அபிமானிகள்.

புலிகளையும் இஸ்ரேலினையும் ஒப்பிடுவதென்பது எனது பின்னூட்டத்தின் நோக்கமல்ல.

இருப்பினும் ஒரு விஷயத்தில் இருவரும் ஒத்துப் போகிறார்கள்: இனவெறி அடிப்படையில் நாடு அமைப்பது. கவனிக்க, இனவெறி அடிப்படையில் எனக் கூறுகிறேன். மொழிவெறி அடிப்படையில் என்றோ மதவெறி அடிப்படையில் என்றோ என நான் கூறவில்லை. (மதவெறி என்பது ஒரு விதத்தில் சரி என்றாலும், "எங்களிடம் கிறிஸ்தவர்களும் மற்ற மதங்களைத் தாக்குவதில் இருக்கின்றனர்" என புலி ஆதரவாளர்கள் கூறுவதால் விட்டுவிடலாம். மதவெறி என்பது தனது மதத்தின் மீதான அதீத பற்றினால் மட்டும்தான் ஏற்படுமென்பதில்லை. ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான வெறுப்பினையும் மதவெறி என்றுதான் சொல்ல வேண்டும். இது அவர்களுக்கு புரிந்தாலும் புரியாதது போல நடிப்பதால், தற்சமயத்துக்கு அவர்களை மதவெறியர்கள் எனச் சொல்வதைத்தவிர்ப்போம்.)

வேறு எந்தெந்த‌ கோணங்களில் புலிகளும் இஸ்ரேலும் ஒன்று படுகின்றன?

பொதுமக்களைக் கொல்லுதல், விவசாயிகளை அவர்களது வயல்களில் கொல்லுதல், செக்போஸ்டுகளை எல்லாசாலைகளிம் வைத்து அதன் வழியாகப் போகுபவர்களில் சிலரைக் கொல்லுதல் (இதில் இஸ்ரேல் புலிகளைப் போல பணம் பிடுங்குவதில்லை என நினைக்கிறேன்), உலகெங்கும் கொலையாளிகளை அனுப்பிக் கொல்லுதல், இனவெறி அடிப்படையில் மக்களை அவர்களது வீடுவாசல்களிலிருந்து வெளியேற்றுதல், இவர்களை யாராவது விமர்சித்தால், "ஆண்டி செமிட்டிசம்", "தமிழின விரோதி" எனக்கத்துதல், அல்லது சில நேரங்களில் ஒப்பாரிவைத்தல், பல இணையதளங்கள் மூலமாக பொய்பிரச்சாரம் செய்தல். இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவுக்கு வருகிறது.

ஆனால் இஸ்ரேல் என்பது தன்னிகரில்லா மான்ஸ்டர். புலிகள் இஸ்ரேலைப் போல, மற்ற இனத்தின் மக்கள்தொகையைக் குறைக்க பெண்களையும் குழந்தைகளையும் குறிவைத்துத் தாக்கியவர்களில்லை.

இனவெறி அடிப்படையில் சியோனிசர்களைப் போல புலிஆதரவாளர்கள் தனி-ஈழம் அமைப்பதற்கு என்னிடம் ஒரு யோசனை உண்டு. ஃபிரான்ஸ், பிரிட்டன் (ஈழத்து பாசையில சொல்லப்போனால் "பிரிர்ரன்"), ஜெர்மனி ஆகிய நாடுகளில் பணம் வசூல் செய்து, கான்சென்ட்ரேஷ‌ன் முகாம்க‌ளை உருவாக்கி, அதில் அவ‌ர்க‌ள் த‌ங்கிக்கொண்டு வெள்ளைய‌ர்க‌ளுக்கு அழைப்பித‌ல் அனுப்பி, ......

அப்ப‌டி செய்தால், இவர்களில் யார் எஞ்சியுள்ளனரோ அவர்களுக்கு வெள்ளைய‌ர்க‌ள் ஈழ‌ம் அமைத்துத் த‌ருவார்க‌ள்

வருண் said...

ஐயா!

1) யூதர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவாங்க. நம்ம ஈழத்தமிழர்கள் பொதுவா சாப்பிடுவது இல்லை.

தமிழீழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமல்ல!
பார்ப்பனரையும்தான் யூதர்களுடன் ஒப்பிடக்கூடாது, முடியாது. பார்ப்பனர்கள் மாட்டுக்க்றி சாப்பிடுவதில்லையே??

2) அப்புறம் யூதர்களில், தமிழர்களில் இருப்பதுபோல -உயர் சாதி என்று பிதற்றிக்கொள்ளும் "பார்ப்பன துரோகிகள்" போல் - யூத உயர்சாதி துரோகிகள் கெடையாது. அவர்கள் சாதி வேற்றுமையெல்லாம் பார்க்காமல் ஒருவரை ஒருவர் மதித்து ஒற்றுமையாக வாழ்பவர்கள்.

தமிழர்களில் தன்னை உயர்சாதினு சொல்லிக்கொண்ண்டு திரியும் பார்ப்பணர்கள் எல்லாம் இருக்காங்க. இது போல் தன்னை தன் இனத்தில் தன் மொழி பேசுகிறவர்களிடம் இருந்து பிரித்துத் தன் இனத்தை ஒதுக்குபவர்கள் அல்ல யூதர்கள்.

நீங்க ஏன் ஐயா எதுக்கு சும்மா யாரோ என்னத்தையோ சொன்னார்கள்னு சொல்லிகிட்டு எதையாவது உங்க தோதுக்கு.

Note! My conclusion is same as yours but it has TRUTH in it! :)))

சார்வாகன் said...

வணக்கம் அய்யா,
பதிவின் தலைப்பில் இருந்து முடிவு வரை ஒரே குழப்பம்.
யூதர்கள் ஒரு இனம்,அதே போல் பால்ஸ்தீனர்கள்,ஈழத்தமிழர்கள்,சிங்களர் என்பது இன‌ங்களே.

விடுதலைப்புலிகள் என்பது ஈழத்தமிழரின் தனி நாடு வேண்டி போராடிய இயக்கம்.இப்போது குறைந்தபட்சம் இலங்கைக்குள் இல்லை எனவே நம்பப் படுகிறது.

இஸ்ரேல் என்னும் நாடு 19848 ல் உருவானதில் இருந்தே அண்டை நாடுகளுக்கு சிம்ம சொப்பனம். எனினும் 1948ல் யூதர்களிலும் பல் விடுதலை இய்க்கங்கள் இருந்த்ன.

அவற்றில் ஏதேனும் ஒன்றை புலிகளோடு ஒப்பிட்டால் சரி அல்லது ஈழத்தமிழர்களின் 60+ வருட போராட்டத்தை யூதர்களின் 2000 வருட வரலாற்றில் ஏன் கால்கட்டத்தில் எங்கேனும் ஒற்றுமை காட்ட முடியும என ஒப்பிடலாம்.

அதையும் பொ.ஆ 70ல் யூதர்களில் நிலை போல் ஈழத்தமிழரின் இன்றைய நிலை என் கூறிவிட்டீர்கள் சரியே.

ரோம அரசன் டைட்டஸ் யூதர்களின் மேல படை எடுத்து பல யூதர்களை அடிமைகளாக சிறைப்பிடித்து சென்ற நிலை போல் என்கிறீர்கள்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்**
நான் சொல்வது இதுதான்.

1. விடுதலைப் புலிகளை யூதர்களோடு ஒப்பிடக் கூடாது வேண்டுமென்றால் இஸ்ரேலுக்கு[1948] முந்தைய யூத போராளி விடுதலை இயக்கங்களில் ஒன்றோடு ஒப்பிடலாம்.ஒப்பிட்டு ஒரு பதிவு இட்டால் விவாதிக்க நான் தயார்.
//http://en.wikipedia.org/wiki/Jewish_military_history//
எ.கா ஹகன்ன‌
/http://en.wikipedia.org/wiki/Haganah/

2. ஈழத் த்மிழரின் 60+ வருட வரலாற்றை யூதரின் 2000 வருடத்தில் சில காலகட்டங்களுக்கு பொருந்துவதை நீங்களே கூறிவிட்டீர்கள்.

ஒரு போராளி இயக்கத்தை[புலி] இன‌த்தோடு[யூத] ஒப்பிடுவது அடிப்படையில் தவறு!!

நன்றி

குட்டிபிசாசு said...

திரு. மாலிக் அவர்களே,

//இனவெறி அடிப்படையில் சியோனிசர்களைப் போல புலிஆதரவாளர்கள் தனி-ஈழம் அமைப்பதற்கு என்னிடம் ஒரு யோசனை உண்டு. ஃபிரான்ஸ், பிரிட்டன் (ஈழத்து பாசையில சொல்லப்போனால் "பிரிர்ரன்"), ஜெர்மனி ஆகிய நாடுகளில் பணம் வசூல் செய்து, கான்சென்ட்ரேஷ‌ன் முகாம்க‌ளை உருவாக்கி, அதில் அவ‌ர்க‌ள் த‌ங்கிக்கொண்டு வெள்ளைய‌ர்க‌ளுக்கு அழைப்பித‌ல் அனுப்பி, ......//

அப்படியே உங்கள் பொன்னான அறிவுரையை பாலஸ்தீனையர்களுக்கும் சொல்லிவிடுங்கள். அவர்களும் கொஞ்சம் முயற்சித்து பார்க்கட்டுமே தனிநாடு கிடைக்கிறதா என்று.

சார்வாகன் said...


சகோ மு.மாலிக் புலிகள் முஸ்லிம்களிடம் சுங்கசாவடிகளில் பணம் வசூலித்த்னர், வாழும் இடங்களில் இருந்து விரட்டி விட்டனர் என கோபப் படுகிறீர்கள்.
ஆனால் கீழே உள்ள விடயத்தை பொய் என்பீர்கள் அல்லது நியாயப் படுத்துவீர்கள் என என்னால் கூற முடியும்.
*********
2338. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர் இப்னு கத்தாப்(ரலி) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்திவிட்டார்கள். இறைத்தூதர் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரசேத்தை வெற்றி கொண்டபோது அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகி விட்டிருந்தது. (அந்த நிலையில்) யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், 'நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலில் 'பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். (மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகிறோம்)" என்று கேட்டுக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும் வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்" என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி), தம் ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா, (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும் வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு வரி செலுத்தி) வசித்து வந்தார்கள்.
Volume :2 Book :41
********
மேலே சொன்னது யூதன் இட்டுக் கட்டிய ஹதிதா[நன்றி மார்க்க மேதை சகோ சுவனப்பிரியன்] இல்லை,இதுதான் சரியா?

சொல்லுங்கள்!!
**************
தமிழ் ஈழமோ, ஒன்று பட்ட இலங்கைக்குள் சுய நிர்ணய உரிமையோ ஈழத்தமிழர்கள் நிச்சயம் பெறுவார்கள். இராஜபக்சே ஆட்சி மாறினால் கதை மாறும்.

ஆயினும் இலங்கை முஸ்லிம்களை பின்பற்றி பாலஸ்தீன கிறித்தவர்கள்,எகிப்து காப்டிக் கிறித்த்வர்கள் ஏன் இஸ்ரேலுடன் கூட்டணி அமைத்து பாலஸ்தீன,எகிப்து முஸ்லிம்களுக்கு அல்வா கொடுக்க கூடாது?

செய்தால் எகிப்திடம் இருந்து சினாய் பிரதேசம் தனிநாடாக கிறித்தவர்களுக்கு கிடைக்குமே!!!


நன்றி!!

குட்டிபிசாசு said...

யூதர்கள் பல்வேறு கஷ்டங்களைத் தாண்டி வெளிநாட்டிலுள்ள யூதர்களின் சில உதவிகளுடன் தங்களுக்கென ஒரு சிறிய நாட்டை ஏற்படுத்திக் கொண்டமை, சுற்றி இருக்கும் பாரிய படைகளைக் கொண்ட நாடுகளை போரில் வென்றுகாட்டியமையைக் கொண்டு சில விடுதலைப்புலி ஆதரவாளர்கள் தாங்களும் அவ்வாறான வெற்றியை ஈட்டவேண்டும் என சில ஒப்பீடு செய்வதுண்டு. ஆனால் அது சரியான ஒப்பீடு அல்ல. சார்வகன் சொன்னதுபோல, விடுதலைப்புலிகள் அல்லாமல் ஈழத்தமிழர்களாகவே எடுத்துக்கொண்டாலும் யூதர்களுடனான ஒப்பீடு சரியானதல்ல. இஸ்ரேலின் பாலஸ்தீனியர்கள் மீதான சில அடக்குமுறைகளை நினைவில் கொண்டு, தமிழர்கள் இஸ்ரேலை ஈழத்திற்கு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளவதும் சரியல்ல.

இன்னொன்று மொழி வேறுபட்டாலும் யூதர்கள் தங்களை ஒரே இனமாகத்தான் கருதுகிறார்கள். யூதர்கள் போல இனத்தால் ஒன்றுபட்டவர்களாக நாம் என்றுமே இருந்ததில்லை. தமிழ் மொழி பேசினாலும் பலர் தமிழ் இனமாக கூறிக்கொள்வதை அவமானமாகவே கருதுகிறார்கள். தங்களை தமிழர்களாக ஒப்புக்கொள்வதில்லை.

ஊர்சுற்றி said...

இஸ்ரேலியர்களை புலிகளுடன் ஒப்பிடுவோர் இங்கு பல காரணங்களுக்காகச் செய்கிறார்கள்.
முஸ்லிம்கள் தமது பாலஸ்தீன அரிப்பை சொறிந்துகொள்ள. இந்தியர்களில் ஒருபகுதியினர் தமது முஸ்லிம் அரிப்பை சொறிய.

ஆனால் எல்லாவற்றிலும் பெரிய ஜோக் என்னவென்றால் இஸ்ரேலிய மொசாட் ஸ்ரீலங்கா அரசுக்கு ராணுவ ஆலோசனை வழங்கியபோது அதனை நடைமுறைப்படுத்த கிழக்குமாகாண முஸ்லிம்/சிங்கள/ தமிழ் கலந்திருக்கும் இடத்தை தேர்ந்தெடுத்தனர். இவர்கள் பாலஸ்தீன குடும்பங்களுக்கு என்ன செய்தார்களொ அவற்ரையே கிழக்கிலும் செய்தனர்.

அவ்விடத்தில் காலம் காலமாக வாழும் தமிழர்கள் விடுதலைப்போராளிகளுக்கு உணவு , இடம் கொடுப்பதை நிறுத்த 1)கிராமங்களில் புகுந்து கொல்லுதல், 2)அவர்களின் வயல்களை கொழுத்தி ஊரை விட்டுத் துரத்துதல்,
3)விளை நிலங்களை வளைத்துப்போட்டு ராணுவ பாதுகாப்பு வலயங்கள் என கையகப்படுத்துதல்.
என பலவகையான கொடூரத்தனத்தை செய்தனர்.
ஆனால் இவற்றை செய்வதற்கு (இஸ்ரேலிய ஆலோசனை) தேர்ந்தெடுத்தது முஸ்லிம்களை :(.

பாலஸ்தீன விடுதலையை ஏற்க மறுக்கும் இஸ்ரேலின் மொசாட்டிடம் பயிற்சி பெற்று பாலஸ்தீன சகோதரர்களுக்கு இஸ்ரேல் இழைத்த கொடுமையை அப்பட்டமாக கிழக்கு மாகானத்தில் நிகழ்த்தியவர்கள் முஸ்லிம்கள்.

ஸ்ரீலங்காவில் இந்திய அமைதிப்படையின் தலைவராக இருந்த ஜெனரல். காக்கிரத் சிங் எழுதிய புத்தகம் படித்தால் முஸ்லிம் விளையாட்டு தெரியவரும்.
இப்படி இன்னும் நிறைய இருக்கிறது.

காலம்காலமாக பாலஸ்தீனர்கள் விளைநிலங்கள் இன்று இஸ்ரேலியர்களின் குடியிருப்புகள், இஸ்ரேலிய ராணுவத்தின் பாதுகாப்பு வலயங்கள். ஈழத்திலும் அதே நிலமை. ஆனால் பரிதாபம் முஸ்லிம்களுக்கு நிலம் இல்லை. தமிழரைத் துரத்த முஸ்லிம் ராணுவப்புலநாய்வாளர்கள். ஆனால் நிலம் என்றுவரும் பொது கோவிந்தா!

திருகோணமலையில் தம்பலகாமம் எனும் கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் 200 ஏக்கர் காணி திருக்கோணேஸ்வரத்துக்கு சொந்தமான காணி உள்ளது. அக்காணி திருகோணமலை தமிழ் மக்களால் சிவனுக்கு திருமண சீதனமாக கொடுக்கப்பட்டது என இன்றும் சொல்லப்படுகிரது. அவ்வளவு பழமையான ஊர் அது. அங்கு நெல்வயல்களை எரித்து குடும்பம் குடும்பமாக கொலை செய்தது இஸ்ரேலிய மொசாட் அட்வைசில் பணியாற்றிய முஸ்லிம் ராணுவ புலநாய்வுக்குழுவினர்.

இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே.

poornam said...

புலிகளைப் பாலஸ்தீனர்கள் மற்றும் யூதர்களுடன் கண்டிப்பாக ஒப்பிட முடியாது, ஏனென்றால் பாலஸ்தீனர்கள், இருவரும் ஒரே மண்ணில் பிறந்தவர்கள். அவர்களுடையதை உண்மையான சகோதரச் சண்டை என்று கூறலாம். (அதாவது இனப் படுகொலை புகழ் சிங்களர்களும் நாங்களும் சகோதரர்கள் என்று பிரபாகரன் இந்தியாவின் மூக்கை அறுக்க ஒரு முறை சொன்னாரே அது போலன்றி உண்மையாக) யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் மரபுரீதியாக ஜெருசலத்தின் மீது உரிமை இருக்கிறது.
புலிகளை ஆரியர்களுடன் ஒப்பிட்டாலும் சரியாக இருக்காது. கிட்டத்தட்ட 1000 வருஷங்களே அங்கிருந்தும் தனி நாடு கேட்கும் உரிமை இருப்பதாக ஒத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது, சென்றேறிய ஒரு தேசத்தில் தங்கள் மொழி, இனம், மதம் பற்றிப் பேசுவதும் நியாயப் படுத்தப் பட்டாகி விட்டதே? ஆனால் பார்ப்பனர்களுக்கு அவர்கள் வந்து 2000 வருஷங்களாகியும் வந்தேறிகள் என்ற பட்டம் தானே கிடைத்துள்ளது? அவர்கள் இந்த நாட்டுக்குள் நுழைந்த காலம் தெரியாத அளவு பழைய வந்தேறிகளாக இருந்த போதும் ஏய், பார்ப்பான், கைபர், போலன் கணவாய் வழியா திரும்பிப் போ என்பது தானே அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை? அதனால் திராவிட இயக்கத்தினரை ராஜபட்சேவுக்கு ஒப்பிடலாமே தவிர பார்ப்பனர்களை புலிகளுக்கு ஒப்பிட முடியாது.
ஆக மொத்தத்தில் விடுதலைப் புலிகள் யாரோடும் ஒப்பிடுவதற்கு அருகதையற்ற ஒரு அமைப்பு. ஒப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால் எனக்கு நினைவு வருவது இது ஒன்று தான்: தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கு திமுகவும் கருணாநிதியும் எப்படியோ அப்படியே இலங்கைத் தமிழர்களுக்குப் புலிகளும் பிரபாகரனும். இதற்கு மேல் எதுவும் சொல்ல இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

Raghavan said...


அய்யா கணவான்களே உங்களுக்கு ஒன்று மட்டும் கூறிக்கொள்ளுகிறேன்..இது ஓர் நாலடியார் பாடல்.. இங்கு பல உரைக்குமுன் இதைச் சற்றே எண்ணுவீராக ..


சொல்தாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார்; - கற்ற
செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்
பலவுரைக்கும் மாந்தர் பலர்.

(பொ-ள்.) சொல் தாறு கொண்டுசுனைத்தெழுதல் காமுறுவர் - சொல்லாகிய முட்கோல்கொண்டு நாத் தினவெடுத்துப் பேச முற்படுதலை மிகவிரும்பும் இயல்பினர், கற்று ஆற்றல் வன்மையும்தாம் தேறார் - நூல்நுட்பங்களைக் கற்றறிந்துஒழுகும் வல்லமையுந் தாம் தெளியார், கற்ற செலஉரைக்கும் ஆறு அறியார் - தாம் கற்ற சிலவற்றைக்கேட்பவர் உள்ளத்திற் பதியும்படி எடுத்துரைக்கும்முறையையும் அறியார்; தோற்பது அறியார் -தம்சொற்கள் பயன்படுதலின்றி வீணாகியொழிதலையுங்கருதார்; பல உரைக்கும் மாந்தர்பலர்-ஒன்றைப் புலப்படுத்தும்பொருட்டு இவ்வாறு பலசொற்கள் சொல்லி அவம்படும் மாந்தர் உலகிற்பலராவர்.

(க-து.) நாத் தின வெடுத்துப் பலசொல்லலாகாது.

baleno said...

விடுதலைப் புலிகளை யூதர்களுடன் ஒப்பிடலாமா?

சரியான விடை இங்கே.

poornam said...
ஆக மொத்தத்தில் விடுதலைப் புலிகள் யாரோடும் ஒப்பிடுவதற்கு அருகதையற்ற ஒரு அமைப்பு.

UNMAIKAL said...

LTTE Funding Strategies

The LTTE initially funded their organization through small scale robberies and extortion such as bank robberies.

The organization grew the LTTE gained funding through international supporters and a diverse range of criminal activities.

There is no evidence that shows that the LTTE was funded or supported by the people of Sri Lanka.

Many Tamils living abroad in countries such as Canada and the United Kingdom support the LTTE economically.

There are said to be about 800,000 Tamil refugees and expatriates worldwide contributing towards the funding the LTTE.

Some support the LTTE by choice and others because of extortion.

LTTE supporters have been caught setting up organizations, disguised as charities and relief funds, whose sole purpose is to raise money for the LTTE.

There is said to be over 200 front organizations supporting the LTTE globally.

“In May 2007, two Tamils with connections to the LTTE were arrested in Australia

for
raising thousands of dollars in Australia under the pretense of being for charities

and aid for those affected by the 2004 Asian Tsunami, which killed 35,000 people in Sri Lanka,

but instead using the money to fund the LTTE”


Criminal activities include, sea piracy, human smuggling, drug trafficking and gunrunning.

Sea piracy

The LTTE is known for hijacking and looting shipments and vessels and killing the crew on board.

Human smuggling

The LTTE started smuggling Tamil people to Western countries, such as Canada in order to gain funds.

The LTTE has been said to charge between $10000 to $40000 USD for a Tamil person to be smuggled to Canada illegally,

while the usual cost of smuggling is said to be between $20000 to $25000 USD,

In addition to this people leaving Sri Lanka have to pay an additional few hundred dollars for an “exit visa” issued by the LTTE.

Those with special skills or wealth have higher charges than ordinary Tamils.

The LTTE also specializes in passport forgery and in Canada 1990 a passport forgery scheme was uncovered which became official proof of a link between Canada and the LTTE.

Drug trafficking

The LTTE’s history in drug smuggling dates back to the 1970s.

LTTE provided a new way for them to get their drugs to markets all over the world.

In addition to this the LTTE started trafficking and selling drugs to Western European countries by 1984.

Tamil heroin smuggling activities have been reported in countries such as Italy, Switzerland, Poland, and France.

One LTTE operative in France who was jailed there for two years for drug trafficking has been said to became the chief of LTTE international operations.

Arms Smuggling

The LTTE has a specialized branch called the “KP Branch”, where “KP” stands for its highest level operative, Kumaran Padmanathan.

This unit is responsible for smuggling weapons, explosives and “dual use” technology for military operations.

The LTTE carries out international arms trafficking and has its own fleet of vessels.

The LTTE had a shipping base in Myanmar, but they were forced to leave due to diplomatic pressure.

However a new base was set up on Phuket Island in Thailand in lieu of the previous.

Other crimes committed by the LTTE that bring in funds are, credit card frauds conducted in a number of countries such as India and the United Kingdom.

Similar crimes include counterfeit currency trading.

UNMAIKAL said...

"LTTE stole 130,00 Norwegian Passports and sold some of them to Al Qaeda"

Liberation Tigers of Tamil Eelam (LTTE) operatives have stolen 130,00 Norwegian passports and sold them to the highest bidders including the terrorists of Al Qaeda.

"One of them surfaced with 700 of the stolen passports in Thailand and got caught to the police," the Ambassador told J.J. Green, the National Security Affairs Correspondent of the Washington Post Radio.

Green said due to the easy access of European Union citizens to the United States this could make a real risk for even this country.

The Radio Station introduced the LTTE as the assassins of the former Prime Minister of India Rajiv Gandhi and friends of the Al Qaeda terrorists of the Middle Eastern notoriety.

LTTE had employed a corrupt police officer to steal the passports for them and when it sold the passports they also sold them to an Al Qaeda group in Algeria.

The LTTE was banned in India in 1991

and the second country they were banned was the United States in 1997, about a decade ago.

When these countries banned them they simply did it because they realized that the Tamil Tigers behavior was really dangerous to the world.

He said the proscription of the group was thereafter followed by Canada and the 27 member European Union.


There were 800,000 estimated Sri Lankan Tamils spread in North America, Australia and Europe.

Money is being bilked from them using sophisticated methods of extortion.

He said the terrorist group has forcibly taken over places of worship like Hindu temples to steal money given for charity.

Narcotic sales,
credit cards frauds of large scale,

are some other methods they used to earn money.

LTTE signed a Ceasefire Agreement in 2002 but soon after the agreement was signed they started showing the insincerity by killing Tamil opponents and continuing with child abductions.

He said they kept on raising funds using front organization because of the proscriptions in the Western countries.

He said when the pseudo charity called Tamil Rehabilitation Organization (TRO) was discovered by the Commissioner of Charity in UK they restarted it under the name White Pigeon.

When White Pigeon was caught they transferred 500,000 sterling pounds to another one called International Tamil Rehabilitation Organization(ITRO).

Then they were transferred to World Tamil Movement. It was always a name game to siphon off charity money for terror.

Two teams related to the LTTE have already got caught trying to buy weapons and influence in the US and one team has already pleaded guilty.

In those sting operations one LTTE team offered one million dollars as bribes to US officials, hoping to get the ban on the group lifted, as one of the expectations.

In the attempt to buy surface to air missiles and other military equipment to down airplanes 70,000 dollars exchanged hands as initial payments to undercover agents. Those figures would indicate, the kind of money the terrorist group was able to spend.

Courtesy - Asian Tribune

UNMAIKAL said...

LTTE extortions .

Apart from being banned as a ruthless terrorist organisation in U.K and many other countries including the 25 nations EU,

LTTE proxy elements are continuing to extort money at will, despite the enforced anti terrorist law regulations glorifying such acts as a criminal offensive.

A 25 minutes documentary which penetrated deep into investigating the LTTE paw prints,

extorting money with sheer intimidations under the very own British regulations against terrorism.

The documentary clear-cuts that the funding are far from voluntary.

There have been recent allegations of intimidations, on Tamils by the representatives of the internationally banned LTTE outfit.

According to the revelations made, parts of the 150,000 strong U.K Tamil community appear increasingly vary towards non-Tamil media.

In 2001 the British government labelled the LTTE as a terrorist group and banned them.

Other countries have also followed the same course.

But now the U.K has made even glorifications of such groups a criminal offensive.

Every body funding the LTTE could be breaking the law under these law enforcements?

The British Tamil Association (BTA), has been the fore runner administering and organising fund raising campaigns throughout the diasporas, for a 'final war' that was promised to fight against the sovereign state of Sri Lanka.


A recent Human Rights Watch report, alleges various degrees of intimidations of British Tamils to make their donations for the cause.

Most people intimidated by the LTTE fund raisers, who were interviewed, were too scared to compromise their terrifying experiences.

Following are two interviews conducted with the U.K Tamils who were continuously intimidated by pro-LTTE agents, especially in London.


A U.K Tamil shop owner, who less feared the LTTE, compromised to reveal the true story behind the terrorist funding in the streets of London.

Q. The day they came to your shop what happened?

A. He (LTTE agent) came round the shop with one of the files in his hand. He came as our collector and said I want money; every shop owner gives me money.

Every one gives me money and you don't give a penny. You give 50,000 pounds; and I said no.
He said you re-mortgage your house and give the money.

I said no!

Q. And did they threaten you?

A. Yes. He phones three, four times and says I want to kill you.

Such threats to Tamil people and their much more vulnerable relatives in Sri Lanka seem to have created a culture of fear among the centres of the Tamil community.

Nirmala Ranasinghe, a former LTTE supporter who had active engagements with the terror outfit since 1982, exchanged her bitter experiences which led her to desert the terror outfit.

"When I went into the organisation I realized it's not my place. It was totally undemocratic.

Internal killings, internal killings of cadres had started to happen then itself.

The LTTE cadres who were challenging the authority were being quietly taken away and finished off."

A few years later Nirmala's younger sister was killed in Sri Lanka for criticising the Tigers treacherous acts.


It may be that an alternative voice to the LTTE could only arise abroad.

"We felt that we could start organising this now to create an alternative Tamil voice to come up, because the LTTE claims to be the sole representative of the Tamil people and we know they are not.

Because we know both here and in Sri Lanka there are lots of people who are discarding the LTTE.

Not simply because our family members were murdered, but their behaviour of control, taxation, child abduction, political killings etc... People are fed up; they have had enough!" sighed Nirmala in desperation.

"I cannot see the LTTE having the political ability to sit down with the state and other political parties and accommodate to work out a solution.


The people who are in the diaspora continuing to support the LTTE are very irresponsible.

UNMAIKAL said...

Jane's intelligence review says
LTTE controls a portion of Montreal's USD 1b drug trade

Citing Royal Canadian Mounted Police sources the Jane's Intelligence Review said the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controls portion of US Dollar one billion drug market in the Canadian city of Montreal.

The Jane's Intelligence Review said that one of the main ways of earning money out of its USD 200-300 million annual income of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is narcotics smuggling using its merchant ships, which also transports illicit arms and explosives which they procure all over the world.

The LTTE and certain other Tamil militant outfits internationally active at this time were thus able to mobilise the services of a large number of Tamil youth to carry consignments of drugs from Sri Lanka and South India to various destinations,

It seems likely that, in the initial stages of this refugee flow, lax surveillance procedures and liberal attitude of the authorities in the host countries towards political refugees facilitated the participation of fairly large numbers of Tamil youth in the drug trade.
To some extent, this has persisted in the Nordic countries.

"The first major detection of LTTE-linked drug rings in Europe took place in Italy in September 1984, following the arrest of a Tamil courier on his way to Rome.

Well co-ordinated police search operations resulted in the arrest of about 200 Tamils, most of whom were believed to have constituted a Rome-based narcotic distribution network spread over several Italian cities such as Milan, Naples, Acilia, Cetania and Syracuse, and extending into Sicily.

The Swiss police, for example, broke up a drug ring - one that was believed to have links with the People's Liberation Organization of Tamil Eelam (PLOTE) rather than the LTTE - engaged in cross-border heroin transactions in Switzerland and France.

Numerous arrests of Sri Lankan Tamils on drug charges were also reported at this time in Germany, France and the Nordic countries.


Sri Lanka Tamils still occasionally figure among those associated with the drug trade in Canada.

A statement released in 1991 by the Sri Lanka High Commission in Canada referred to a report of the Royal Canadian Mounted Police (RCMP),

according to which a part of the billion dollar drug market of Montreal city was controlled by Sri Lankans, who were sending some of the profits to the LTTE.

Again, a report prepared in 1995 for the Mackenzie Institute of Toronto estimated (speculatively) that the 134 kilograms of heroin seized globally by various law enforcement agencies from Tamil drug runners .

Tamil drug runners could be selling around 1,000 kg of heroin a year."

UNMAIKAL said...

.
.

CLICK >>>>
Tamil Tigers Gangs Terrorise communities in England
<<< SEE VIDEO.


CLICK >>>>LTTE terrorising UK Tamils Part 1 of 3 <<< SEE VIDEO.


CLICK >>>>> LTTE terrorising UK Tamils Part 2 of 3 <<<<< SEE VIDEO.

CLICK >>> LTTE terrorising UK Tamils Part 3 of 3 <<< SEE VIDEO

.
.

poornam said...

திரு ராகவன், நாலடியார் நன்றாகவே இருக்கிறது. ராஜீவ் காந்தியையும் அமைதிப்படையையும் கண்டபடிப் பேசுபவர்களுக்கும் அந்த நாலடியார் பொருந்துமல்லவா?
அரசியல் என்று வந்த பிறகு மாற்றுக் கருத்துகளைத் தாங்கித்தான் ஆக வேண்டும். யாரும் மயிலிறகால் வருடிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஒரு புறம் நாங்க தான் உலகத்திலயே பெரிய போராளிகள் என்று பீற்றிக் கொள்வது, மறு புறம் எதிர்ப்பையோ அடக்கு முறையையோ கண்டு நீலிக் கண்ணீரும் விடுவது இது தான் புலிகள் மற்றும் அவர்களது ஜால்ராக்களின் குணம். இவ்வளவு சுய இரக்கம் படைத்த போராளிகளை உலகம் பார்த்திருக்காது. புலி விஷயத்தில் எனக்குத் தென்படும் முரண்பாடுகள் பற்றித் தனிப் பதிவே போட வேண்டும் என்று தோன்றுகிறது. அது பற்றிய தளங்களை ஆராய முற்பட்டுக் கொண்டிருந்தேன்.
இலங்கைத் தமிழர் நலம் என்றாலே புலிகள் நலம் என்று விஷ(ம)ப் பிரச்சாரம் செய்து அதை மறுப்பவர்கள் தமிழ்த்துரோகிகள் என்றெல்லாம் மூளைச் சலவை செய்து உணர்ச்சிப் பொங்கலாகப் பொங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் புலிகள் பற்றிய விவாதத்தைத் துவங்கிய டோண்டு ஸாருக்கு நன்றி.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது