2/12/2007

ஆரவாரப் பேய்களெல்லாம் - டோண்டுவின் யோம்கிப்பூர்

கடந்த ஒருவாரமாக மனதில் ஒரு போராட்டம். அது என்ன என்பது தமிழ்மண பக்கங்களை இந்த காலக் கட்டத்தில் பார்த்தவர்களுக்கு புரியும்.நானாக தேடிக் கொண்டதுதான் அது என்பதை முதற்கண் கூறிவிடுகிறேன். திடீரென முரளி மனோஹர் வெளிப்பட்டு விட்டான். நல்ல வேளையாக அவன் தேவை இனிமேல் இல்லை என்ற நிலையெடுத்து எனது வலைப்பூவில் மாறுதல் செய்து கொண்ட அடுத்த நாள். எனக்கு ஆதரவளிக்கவே நான் இந்தப் பதிவில் கொடுத்த ஆலோசனையின்படி வந்த நண்பர்களின் ஆலோசனை பெற்று கொண்டு செய்த முடிவு அது. அதற்கு முன்னால் முரளி மனோஹர் வெளியே வந்திருந்தால் கதை கந்தர கோளமாக ஆகியிருக்கும். நல்ல வேளை.

இப்போது டோண்டு ராகவனது மூன்றாம் யோம் கிப்பூருக்கு செல்லும் முன்னால் சில வார்த்தைகள்.

சமீபத்தில் 1962-ல் வெளிவந்த "ஆலய மணி" படத்தை இன்றும் கூட யாரும் மறக்கவில்லை. அப்போது பிறந்திராதவர்களின் குழந்தைகள் கூட இப்படத்தின் பாடல்களை இன்றும் விரும்பி கேட்கின்றனர். முதலில் அதை இங்கு முழுமையாக போடுகிறேன்.

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து
பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டி வைத்ததடா

ஆட்டி வைத்த மிருகம் இன்று
அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில்
கோயில் கொண்டதடா

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா

தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா

எறும்புத்தோலை உரித்துப் பார்க்க
யானை வந்ததடா - நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க
ஞானம் வந்ததடா

பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்
இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி
வந்து விட்டதடா!

என்ன அருமையான பாடல், சிம்மக்குரலோன் சிவாஜியின் நடிப்புடன்! சகபதிவர் SP.VR.சுப்பையா அவர்கள் இப்பாடல் பற்றிய இந்த அருமையான பதிவுக்கும் நன்றி. இப்பாடலில் வரும்

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா

தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா

என்ற அடிகளே இப்பதிவின் அடிப்படை. இதுவும் கடந்து போகும் என்றாலும், அது நல்லபடியாக கடந்து போக வேண்டாமா. அந்த வேலையில்தான் எனது வலைப்பூ நண்பர்கள் சிலர் குதித்தனர்.

தமிழ்மணம் நன்கு அறிந்த ஒரு பதிவர் முந்தாநேற்று திடீரென சேட்டில் வந்தார். அருமையான ஆலோசனை தந்தார். அதிலும் இந்த சேட் அனுபவம் வேறு வகையிலும் புதிதாக இருந்தது. அவர் பேச நான் ஸ்பீக்கர் மூலம் கேட்டேன். ஆனால் என்னால் மைக்கை என்னுடைய தட்டுமுட்டு சாமான் குவியலிலிருந்து கண்டு பிடிக்க இயலவில்லை. ஆகவே அவர் இன்னொரு ஆலோசனை தந்தார். தான் பேசுவதாகவும், நான் தட்டச்சு செய்து பதிலளிக்கலாம் என்பதுதான் அது. அவர் தந்த ஆலோசனையும் இந்தப் பதிவுக்கு ஒரு காரணம். அவருக்கு என் நன்றி.

நேற்று பிற்பகல் இன்னொரு பதிவர் வந்து அதே ஆலோசனையைத் தந்தார். அவருக்கும் என் நன்றி. அதைவிட முக்கியம் எதிர்த்தரப்பில் இருந்தாலும் என்னிடம் அன்பாக பழகிய ராஜா வனஜ் அவர்களிடம் வெற்றிகரமாக எனது நிலையை சொல்லி அவரது மனவருத்தத்தை போக்கியது ஆகும். அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது கடைசியில் 'எனது கார்' வலைப்பதிவர் மீட்டிங்கிற்கு என்னை அழைத்து செல்ல எப்போது வேண்டுமானலும் வரலாம் எனக் கூற வெடிச்சிரிப்புடன் முகமன் கூறி போனை வைத்தார். இந்த முழு முரளி மனோஹர் விவகாரத்தில் எனக்கு மிக வருத்தம் அளித்தது இந்த மனவேற்றுமைதான். அதுவும் சற்று பொறுமையுடன் செயல்பட்டதின் மூலம் தீர்த்து கொண்டது நான் போடவிருக்கும் இந்தப் பதிவை உடனே போடும்படி செய்துள்ளது. நல்ல காரியத்தை தள்ளிப் போடுவானேன். இந்த விஷயத்தில் நான் முரளி மனோஹராக இருந்து செல்வன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் போட்ட பின்னூட்டத்தை அப்படியே தேவையான சுட்டிகளுடன் தனது ஜிமெயிலில் வந்ததை எனக்கு அப்படியே நான் கேட்டு கொண்டதின் பேரில் அனுப்பி வைத்தார். அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து செல்வன் அவர்களுடைய மின்னஞ்சல் ஐடியை மட்டும் மறைத்து (சூடு கண்ட பூனை) நான் ராஜா வனஜுக்கு அனுப்பித்ததுநிலைமை சரியாக பெரிதும் உதவியது. அந்தச் சொல்லின் செல்வனுக்கும் நன்றி.

(சீக்கிரம் விஷயத்துக்கு வருமாறு முரளி மனோஹர் கூச்சலிடுகிறான்). இதோ வந்தேன்.

முதற்கண் என்னால் மனவருத்தம் அடைந்தவர்கள் எல்லோரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். முக்கியமாக எனக்கு பிரச்சினை ஆரம்பித்ததிலிருந்து பின்னூட்டம் இட்டு அதனால் அசிங்கமாக தாக்கப்பட்டவர்கள் என்னை மன்னிக்குமாறு கேட்டு கொள்கிறேன். அவற்றில் முக்கியமானவர்கள் கோபமான இளைஞன் முத்துக்குமரன், பதிவர் தமிழச்சி, நாமக்கல் சிபி (என் வருத்தத்தை உணர்ந்து ஒரு பதிவையே எடுத்தவர்), செந்தழல் ரவி (அடையாறிலிருந்து ட்ரைடெண்ட் ஹோட்டல் வரை நான் எனது காரில் செல்லும்போது என்னிடம் தொலைபேசியில் எஸ்.டி.டி. பேசியவர்), டி.பி.ஆர்.ஜோசஃப், லக்கிலுக், பால பாரதி, என்றென்றும் அன்புடன் பாலா (என் நண்பன் கிருஷ்ணன் என்னும் செர்வாண்டஸ் செய்த ஒரு அசட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்), துளசி மேடம், ஜெயராமன், ஓகை, மரபூரார், தன் விடாத முயற்சியால் என்னை போலியிடமிருந்து காப்பாற்றிய முத்து தமிழினி (அவர் பற்றிய பதிவு படித்திருப்பீர்கள்) ஆகியோர்.

அழையா விருந்தாளியாய் நான் வந்து என்னால் படுத்தப்பட்ட வரவனையானும் என்னை மன்னிக்க வேண்டும். மிதக்கும் வெளியிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

எனக்காக மெனக்கெட்டு களத்தில் வந்த நாட்டாமை, தினகர், அறவாழி அந்தணன், வெங்கடேஷ் ஷர்மா, பிரகாஷ், நெப்போலியன், புதியவன், வரதன் ஆகியோருக்கும் நான் மிக்க கடமைப்பட்டவன். யாராவது விட்டு போயிருந்தால் அது எனது ஞாபகசக்தியின் குறைபாடு என்று எண்ணி மன்னிக்கவும்.

மாசிவகுமாருக்கு தனிப்பட்ட நன்றி. அவர் நான் சரியான மனப்பக்குவத்துடன் இருந்த சமயத்தில் சொன்ன ஆலோசனைதான் முதல் யோம் கிப்பூர் பதிவுக்கு காரணம் என்பதையும் இவ்விடத்தில் கூறி விடுகிறேன்.

சாதி பற்றி நான் எழுதிய இப்பதிவின் முதல் பாதியை கிட்டத்தட்ட எல்லோரும் ஏற்று கொண்டனர். ஆனால் அத்துடன் நில்லாது கலப்புத் திருமணத்தை எதிர்த்து சில கருத்து வெளியிட்டது ஒரு புயலைக் கிளப்பியது. பாரத சமூகத்தை பிரிக்கும் விதமாக எந்த முயற்சியும் செய்யக்கூடாது என்பதை தங்கள் பதிவுகளின் மூலம் உணர்த்திய அரவிந்தன் நீலகண்டன், ஐயன் காளி ஆகியோரது கருத்தை ஏற்று, இனி இம்மாதிரி சாதி உணர்வை பற்றி எழுதியே ஆகவேண்டும் என்னும் பட்சத்தில் ரொம்பவும் டிஸ்கிகள் போட்டு எழுதவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். அளவுக்கு மீறி ஒரு பதிவில் டிஸ்கிகள் போட வேண்டியிருந்தால் அதற்கு அப்பதிவையே கைவிடுவதும் உத்தமமே. (அது சம்பந்தமாக வேறு பதிவர் யாராவது போடும் இடுகையில் பின்னூட்ட கும்மி அடித்தால் போயிற்று - "டோண்டு இப்போதாவது சீரியசாக இருடா என்று கூறுவது முரளி மனோஹர்).

கடைசியாக, ஆனால் முக்கியமாக, வளர்ந்த குழந்தையாக (நன்றி மாசிவகுமார்) செயல்பட்டு, தமிழ்மணம் யுத்த பூமியாக மாறுவதற்கு காரணமாக இருந்து படுத்திய இந்த டோண்டு ராகவனை முதலிலிருந்தே சகித்து வந்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கு எனது மனப்பூர்வ நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

இப்போது மேலே என்ன?

பல விஷயங்களில் கருத்து சொல்லி எனது நிலையை தெளிவாக்கி விட்டேன். அக்கருத்துக்களில் மாற்றம் இல்லை. ஆனால் இனிமேலும் அதை சொல்லித் திரிய வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆகவே இனிமேல் நடேசன் பூங்காதான். டோண்டு ராகவையங்காரும் வரமாட்டான் (ஓசை செல்லா அவர்கள் கவனிக்க).

ஆனால் டோண்டு ராகவன் மட்டுமே வந்து ஹைப்பர் லிங்குகள் எல்லாம் போட்டு தீவிரமாகப் படுத்துவான். இஸ்ரேல், ராஜாஜி, சோ, வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை ஆதரவாளன் டோண்டு ராகவனும் அப்படியே இருப்பான். வாடிக்கையாளர்களை படுத்தும் டோண்டு ராகவன் வேறெங்கே செல்ல முடியும்.? வாடகைக் கார் முதலாளிகள் எனது பதிவுகளைப் படிக்காது மன அமைதியுடன் இருப்பார்களாக. லாலு ப்ரசாத் யாதவும் பயப்பட வேண்டாம். புதிர்கள் பலவும் போடும் டோண்டு ராகவன் அப்படியே இருப்பான் என்பதை கூறவும் வேண்டுமோ.

ஆனால் ஒரு விஷயம். எந்தப் பழைய பதிவுகளையும் இப்போது எடுக்கும் முடிவுகள் காரணமாக திருத்தவோ நீக்கவோ போவது இல்லை. சொன்னவை சொன்னதுதான். வில்லிருந்து விடுபட்ட அஸ்திரங்களை பெறுவது அர்ஜுனனால்தான் முடிந்தது. அஸ்வத்தாமனால் முடியவில்லை. நான் இந்த விஷயத்தில் அஸ்வத்தாமா. அடேடே பரவாயில்லையே இந்த அர்ஜுன அஸ்வத்தாமன் கதையையும் பதிவாக பிற்காலத்தில் போடலாமே.

அவை எனது பழைய அணுகுமுறையால் உருவானவை.அப்படியே ஃப்ரீஸ்தான். சரித்திரத்தை ஏன் திருத்த வேண்டும்? வேண்டாத வேலை. அவை எனது அசட்டுத்தனத்துக்கு சான்றாக அப்படியே இருக்கட்டும்.

இப்போது கூற நினைத்ததையெல்லாம் கடந்த இரண்டு மணி நேரம் மனம் விட்டு கூறியதால்,

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா

தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா

அன்புடன்,
டோண்டு ராகவன்

185 comments:

கோவி.கண்ணன் said...

//சரித்திரத்தை ஏன் திருத்த வேண்டும்? வேண்டாத வேலை. அவை எனது அசட்டுத்தனத்துக்கு சான்றாக அப்படியே இருக்கட்டும்.//

நல்ல முடிவு.... பாராட்டுக்கள் டோண்டு ராகவன்

Anonymous said...

கடும் யுத்தத்திற்கு மத்தியில் நின்று செய்தி சேகரித்த ஒருவரை மறந்து விட்டீர்கள்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//பல விஷயங்களில் கருத்து சொல்லி எனது நிலையை தெளிவாக்கி விட்டேன். அக்கருத்துக்களில் மாற்றம் இல்லை. ஆனால் இனிமேலும் அதை சொல்லித் திரிய வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆகவே இனிமேல் நடேசன் பூங்காதான். டோண்டு ராகவையங்காரும் வரமாட்டான் (ஓசை செல்லா அவர்கள் கவனிக்க).//

நல்ல முடிவு டோண்டு அவர்களே. பாராட்டுகள்!

-மதி

dondu(#11168674346665545885) said...

நன்றி மதி, கோவி. கண்ணன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

Bitte um Entschuldigung.

Danke sehr, Kozuvi, mein lieber Neffe. Wie geht es Ihnen und Ihrer Familie.

Mit freundlichen Grüßen,

Dondu N.Raghavan

Anonymous said...

முரளி மனோஹர் மட்டும்தான் வெளியே வந்து இருக்கிறான்.

மற்ற சர்வாண்டிஸ், ஹேரி பொட்டர், வரதன், பரதன், குறள், முனிவேலு, கண்ணம்மா, தங்கம்மா, கிருஷ்ணா, பிரகாஷ் இவங்க எல்லாம் எப்ப வெளில வருவாங்க?

dondu(#11168674346665545885) said...

மதி அவர்களே,

நடேசன் பூங்காவைப் பற்றி எழுதும் போது நீங்களும் நினைவுக்கு வந்தீர்கள். நான் தவறுதலாக கந்தஸ்வாமி என்று எழுதியதால் நீங்கள் பாதிக்கப்பட்டீர்கள் அல்லவா.

அதே போலத்தானே நடேச முதலியார் குடும்பத்தினரும் வருத்தப் பட்டிருப்பார்கள் எனத் தோன்றியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//மற்ற சர்வாண்டிஸ், ஹேரி பொட்டர், வரதன், பரதன், குறள், முனிவேலு, கண்ணம்மா, தங்கம்மா, கிருஷ்ணா, பிரகாஷ் இவங்க எல்லாம் எப்ப வெளில வருவாங்க?//

அவர்கள் இனிமேல் என் பதிவுக்கு சொந்தப் பெயரிலேயே வருவார்கள் என்றுதான் நினைக்கிறேன். அப்படியே வருவதும் அவர்தம் விருப்பம். அவர்களில் யார் எவர் என்ப்து எனக்கே தெரியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SP.VR. SUBBIAH said...

"பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்
இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி
வந்து விட்டதடா"
- கண்ணதாசன்

எல்லோரும் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.ஏனென்றால் இறைவன் மனிதனுக்குக் கொடுத்த இரண்டு வரங்களில் ஒன்று தூக்கம், மற்றொன்று மறதி!

Take everything easy!

திறந்த மனதுடன் எழுதிய உங்களுடைய இந்தப் பதிவிற்குப்
பாராட்டுக்கள்

நன்றி, வணக்கத்துடன்,
SP.VR.சுப்பையா

dinakar said...

Another great post dondu sir.You really proved that you are a gentleman.Typing this in haste. I am going out now and will comeback after a couple of hours.I will read this more thorughly and provide my feedback.

Once again, my salutes to our dear dondu sir, who always learns from others and in this process is a great example for all of us. Accept my humble salutes, dondu sir.

Anonymous said...

ராபின்ஹூட் என்ற பெயரில் எழுதுவதும் நீர்தான் என்று பரபரப்பா பேசிக்கிறாங்களே?

Anonymous said...

Mr Dondu you are a icon for youth. i welcome your decision. i really a big fan for writings on life experiences.

Thanks Again,

dondu(#11168674346665545885) said...

//ராபின்ஹூட் என்ற பெயரில் எழுதுவதும் நீர்தான் என்று பரபரப்பா பேசிக்கிறாங்களே?//

அப்படியா?

dondu(#11168674346665545885) said...

நன்றி சுப்பையா அவர்களே. "ஆரவாரப் பேய்கள்" என்று இட்டு, கூகளில் தேடியபோது உங்கள் பதிவுதான் முதலில் வந்தது.

கண்ணதாசன் பாடலை தேடும்போது உங்களைத்தான் நினைத்து கொண்டேன். ஆனால் உங்கள் பதிவின் உரல் ஞாபகத்துக்கு கொண்டு வர இயலவில்லை. அதனால் என்ன? கூகளாண்டவர் துணையுடன் பிடித்தேன்.

கண்ணதாசன் பாடல்கள் சொர்க்கம். அவற்றுக்கான திறவுகோல்கள் உங்கள் பதிவுகள்.

நேற்று வலைப்பதிவர் சந்திப்பின் போதுதான் "நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி" என்ற வரிகளின் பல பரிமாணங்களை பற்றி குறிப்பிட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு என்ற 61 வயது இளைஞரே உங்களின் இந்த முடிவை வரவேற்க்கிறேன்

Anonymous said...

எனக்கு நன்றி கூற மறந்து விட்டீர்கள்.

முத்துகுமரன் said...

//
அமைதி தெய்வம் முழு மனதில்
கோயில் கொண்டதடா//

மிக்க மகிழ்ச்சியான செய்தி டோண்டு சார். கடந்தவைகள் கசப்பானவைகளாக இருந்தாலும் இனி வருபவை நலன் பயக்ககூடியதாய் இருக்கட்டும்.

தமிழ் இணையம் கருத்துகளால் மட்டுமே மோதும் களமாக அமையட்டும். அவரவர் பாதையில் அவரவர் பயணம். தொடரட்டும் உங்களின் பங்களிப்பும்.

தனிப்பட்ட முறையில் உங்களின் இந்த மாற்றத்தை முழுமனதோடு வரவேற்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

//எனக்கு நன்றி கூற மறந்து விட்டீர்கள்.//
நீங்கள் நான் நினைப்பவராக இருந்தால் உங்களுக்கு முதல் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

BadNewsIndia said...

நல்ல முடிவுதான்.

வாழ்த்துக்கள்.

மன்னிப்புக் கேட்க ஒரு நல்ல மனம் வேண்டும்.
உங்களிடம் இருப்பது கண்டு மகிழ்ச்சி.

தொடரட்டும் ஆக்கங்கள்.

dondu(#11168674346665545885) said...

//தனிப்பட்ட முறையில் உங்களின் இந்த மாற்றத்தை முழுமனதோடு வரவேற்கிறேன்.//

நன்றி கோபமுள்ள இளைஞன் முத்துக்குமரன் அவர்களே. உங்களை சாடி எழுதியதற்கு இன்னொரு முறை வருத்தம் தெரிவிக்கிறேன்,

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//நீங்கள் நான் நினைப்பவராக இருந்தால் உங்களுக்கு முதல் நன்றி.//

நீங்க என்னை நினைக்கவில்லை தானே வேறு யாரையோ நினைக்கிறீர்கள் போலும் ;(

Anonymous said...

உங்கள் முடிவை நானும் வரவேற்க்கிறேன்

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி BadNewsIndia அவர்களே. இம்மாதிரி ஒரு பதிவை போடுவதற்கு நீங்கள் போன வாரம் அளித்த யோசனையும் ஒரு காரணம். அப்போது அது தேவையில்லை என்று சொன்னதும் இந்த டோண்டு ராகவன், இப்போது அதை ஏற்றுக் கொண்டது பதிவிட்டதும் அதே டோண்டு ராகவன். முதல் டோண்டு ராகவன் வெறுமனே அறிவு பூர்வமாக சிந்தித்து உங்களையும் கன்வின்ஸ் செய்தான்.

ஆனால் இதய பூர்வமாக சிந்தித்த இந்த டோண்டு ராகவனிடம் அவன் தோற்றுப் போனான் என்பதை மகிழ்ச்சியாகவே உணருகிறேன்.

என்ன செய்வது, இப்போது சுலபமாக செய்திருக்க முடியும் என்று தோன்றுவது அப்போது தோல்வி என்று நினைத்ததுதான் காரணம். எல்லாவற்றுக்கும் தக்க நேரம் வரவேண்டாமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் said...

டோண்டு சார்,

நன்றிகளும் வணக்கங்களும். உங்கள் அறுபது ஆண்டு அனுபவங்களை இன்னும் பலனுள்ளதாக பகிர்ந்து கொள்வீர்கள் என்ற ஆவலுடனும.

அன்புடன்,

மா சிவகுமார்

- யெஸ்.பாலபாரதி said...

//மதி கந்தசாமி (Mathy) said...
//பல விஷயங்களில் கருத்து சொல்லி எனது நிலையை தெளிவாக்கி விட்டேன். அக்கருத்துக்களில் மாற்றம் இல்லை. ஆனால் இனிமேலும் அதை சொல்லித் திரிய வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆகவே இனிமேல் நடேசன் பூங்காதான். டோண்டு ராகவையங்காரும் வரமாட்டான் (ஓசை செல்லா அவர்கள் கவனிக்க).//

நல்ல முடிவு டோண்டு அவர்களே. பாராட்டுகள்!

-மதி

//

ரிபீட்டே!

நாமக்கல் சிபி said...

மாற்றத்தை மனதார பாராட்டுகிறேன்!

நன்றியும் கூட!

dondu(#11168674346665545885) said...

நன்றி பாலபாரதி அவர்களே. கொலசாமிகளுக்கும் என் விசாரிப்பை கூறவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பா.க.ச. நங்கனல்லூர் ஹிந்து காலனி கிளை

துளசி கோபால் said...

அருமையான நல்ல முடிவு.

பாராட்டுக்களும் நல் வாழ்த்து(க்)களும்.

இனி எல்லாம் சுகமே:-)

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி பின்னூட்ட நாயகி அவர்களே. கோபால் அவர்களும், கோபாலகிருஷ்ணனும் நலமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாரதி தம்பி said...

நல்ல முடிவு.ஒரு பெரிய போராட்டமே நடத்திப்பார்த்துவிட்டு,யாரும் மசிந்துகொடுக்கவில்லை என்ற நிலையில் திறந்த மனதுடன் மன்னிப்புக் கேட்டிருப்பதாக தெரிகிறது.

'எப்படியாயினும் வாழ்த்துக்கள்' என்று ஒரு வார்த்தையில் சொல்ல இது ஒன்றும் உங்களின் ஒரு கட்டுரை தொடர்பான பிரச்னை அல்ல.ஒட்டுமொத்த உங்களின் மனநிலை,கருத்துநிலை,தொடர்பானது.

அதனால் உங்களின் தற்போதைய மனநிலை, இனி எழுதப்போகும் கட்டுரைகளின் கருத்துக்களிலும் தொடருமா என்பதை பொருத்துதான் தமிழ்மணத்தின் வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள்அடங்கியிருக்கிறது.அதுவரை உங்களுக்கான பூச்செண்டு எங்களிடமே இருக்கட்டும்.

ஜோ/Joe said...

டோண்டு சார்,
நல்ல முடிவு. நல்லவையே தொடரும் என நம்புவோம்.

தனிப்பட்ட முறையில் நான் உங்களை ஏதாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

dondu(#11168674346665545885) said...

//அதுவரை உங்களுக்கான பூச்செண்டு எங்களிடமே இருக்கட்டும்.//

:)))

Touchwood. One bumbles along, you know.

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

நன்றி கடற்புறத்தான் ஜோ அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...


Natappavai Nallathaga Nadakkattum
Best of Luck

ஜோ/Joe said...

டோண்டு சார்,
இந்த விவகாரம் குறித்த என்னுடைய பதிவை நீக்குவது நல்லது என நீங்கள் கருதினால் தயவு செய்து தெரிவிக்கவும் .நீக்க தயாராய் இருக்கிறேன்.

VSK said...

தமிழ்மணம் மேலும் சிறந்து மணம் வீச நீங்கள் எடுத்த இந்த நல்ல முடிவு பெரிதும் உதவும்!

சம்பந்தப்பட்ட அனைவரும் தங்கள் போர் உத்திகளை கைவிட்டு ஒன்றுபட்டு ஒத்துழைத்து கைகுடுக்க வேண்டும் எனக் கேட்டு அனைவரையும் வாழ்த்துகிறேன்.

முருகனருள் முன்னிற்கும்!

dondu(#11168674346665545885) said...

இல்லை ஜோ அவர்களே. அதெல்லாம் அப்படியே இருக்கட்டும். நான் செய்த அசட்டுத்தனத்துக்கு அவை சாட்சிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

தங்கள் முடிவுக்கு நன்றி டோண்டு சார்...

நான் தங்களிடம் ஏதாவது தவறாக நடந்து கொண்டதாக தாங்கள் கருதினால் தயவுசெய்து மன்னிக்கவும்

அன்புடன்
லக்கிலுக்

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்துக்கு நன்றி லக்கிலுக் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பொன்ஸ்~~Poorna said...

// ஆகவே இனிமேல் நடேசன் பூங்காதான். டோண்டு ராகவையங்காரும் வரமாட்டான்//

மிக நல்ல முடிவு டோண்டு சார்.. வாழ்த்துக்கள்...

Anonymous said...

//இனிமேல் நடேசன் பூங்காதான். டோண்டு ராகவையங்காரும் வரமாட்டான் (ஓசை செல்லா அவர்கள் கவனிக்க).

ஆனால் டோண்டு ராகவன் மட்டுமே வந்து ஹைப்பர் லிங்குகள் எல்லாம் போட்டு தீவிரமாகப் படுத்துவான். //

நன்றி.இந்த நிலையில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், "பிரதிபலன்"பாராமல் சில நல்ல தமிழ் இலக்கியங்களை/கட்டுரைகளை அயல் மொழிகளில் மொழிபெயர்க்க ஏன் முன்வரக்கூடாது. இந்த சமயத்தில் நான் தங்களின் "புரொபெஷனிலஷத்தையும்" மதிக்கிறேன் என்பதைக் கூறி கொள்கிறேன்

dondu(#11168674346665545885) said...

நன்றி மாசிவகுமார் அவர்களே. முதல் யாம் கிப்பூருக்கு காரணமான உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி. அதன் லாஜிக்கல் முடிவுதான் மூன்றாம் யாம் கிப்பூரும்.

நன்றி பொன்ஸ், நாமக்கல் சிபி மற்றும் எஸ்.கே. அவர்களே.

படகில் மூவர் அதில் நாயை மறக்கலாமா என்பதும் ஆங்கிலத்திலிருந்து தமிழ்க்கு மொழிபெயர்ப்புத்தானே. தற்சமயம் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு திருக்குறளை மொழிபெயர்க்கும் வேலையில் இருக்கும் என் அத்திம்பேருக்கு துணையாக வேலை செய்கிறேன்.

மற்ற அனானிகளுக்கும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

H.Selva said...

நண்பர் அரவிந்தன் கருத்துக்களை மதித்து ஏற்றுக் கொண்டிருப்பது உங்கள் முதிர்ச்சியைக் காட்டுகிறது. இதுவரை உங்கள் பதிவு எதிலும் நான் பின்னூட்டம் இட்டதில்லை. அரவிந்தனின் பதிவில், உங்களின் சில பதிவுகள் இந்துவிரோதக் கோஷ்டிகளுக்கு அவலாய் அமைந்து விடுவதைக் கண்டு ஆற்றாமையால் மிகக் கோபம் கொண்டு உங்களை தரக்குறைவாய் திட்டி எழுதி விட்டேன். தப்புதான். தயவு செய்து என்னையும் மன்னியும்!

வெல்க பாரதம்!

dondu(#11168674346665545885) said...

//உங்களின் சில பதிவுகள் இந்துவிரோதக் கோஷ்டிகளுக்கு அவலாய் அமைந்து விடுவதைக் கண்டு..//
அந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லை என்பதுதான் நிஜம். பிறகுதான் அவர் சொல்லும் நியாயத்தையும் உணர்ந்து கொண்டேன்.

அதே போல இத்தனை பேர் ஒரே விஷயத்தைக் கூறுகிறார்களே என்பதையும் இது வரை யோசிக்கவில்லைதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Dear Mr.Raghavan,

I cannot say this is an excellent decision. But comparitively good one

Keep the casteist feelings withing you and dont spread that in the soceity.

I will be more happy if I hear that dondu has shed even the casteist feelings within him.

I want to see a human dondu rather than an Iyengar dondu.

Best Regards

your friend

dondu(#11168674346665545885) said...

//I cannot say this is an excellent decision. But comparitively good one//
என்ன செய்வது இருப்பதை வைத்து கொண்டுதான் செயல்பட முடியும்.

//Keep the casteist feelings within you and dont spread that in the soceity.//
அந்த முடிவைத்தான் ஏற்கனவே வெளியிட்டு விட்டேனே.

//I will be more happy if I hear that dondu has shed even the casteist feelings within him.//
அதை கூறுமுன்னால் உண்மையாகவே அந்த எண்ணம் என்னுள் நிலை பெற வேண்டு.

//I want to see a human dondu rather than an Iyengar dondu.//
இப்போது இருக்கும் டோண்டு ராகவன் உணர்ச்சிகளின் கலவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மிதக்கும்வெளி said...

ம்ம்ம்ம்(ஒன்றுமில்லை ஒரு பெருமூச்சுதான்). இப்படியே எல்லா யுத்தங்களும் முடிவுக்கு வந்தால் சுகமாகத்தானிருக்கும். ஆனால் வாழ்க்கை என்பது விருப்பங்களால் நிரப்பப்பட்டது அல்லவே. எப்படியோ திறந்த மனதோடு உரையாடுவதற்கும் மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு முதிர்ச்சி தேவை (வயது, அனுபவங்களையெல்லாம் தாண்டி.) அந்த முதிர்ச்சியோடு நீங்கள் எடுத்த முடிவை வரவேற்கிறேன். உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். ஒருமாதிரி நெகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. பார்ப்போம் இத்தகைய சுமூகச்சூழல் தொடர்கிறதா என்று. தனிப்பட்டமுறையில் உங்களைத் தாக்கவேண்டும் என்று முன் தீர்மானமோ திட்டங்களோ என்னிடம் இருந்ததில்லை என்று நான் கருதுவதால் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றவில்லை. எப்படியோ போலிடோண்டு அவர்களாலும் முடிக்கமுடியாதிருந்த பிரச்சினையை கொசுபுடுங்கி முடித்துவைத்ததற்காக அவருக்கும் நீங்கள் நன்றி தெரிவித்திருக்கலாம். இல்லாவிட்டாலும் இந்த பின்னூட்டத்தின் மூலம் நான் அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். அழையா விருந்தாளியாக உங்களை நாங்கள் நினைத்தோம் என்று நீங்கள் எழுதுவதுதான் மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது. (செந்திலும் அப்படியே உணர்வார் என்றே நம்புகிறேன்.)

- பிரியங்களுடன் சுகுணாதிவாகர்.

dondu(#11168674346665545885) said...

//அழையா விருந்தாளியாக உங்களை நாங்கள் நினைத்தோம் என்று நீங்கள் எழுதுவதுதான் மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது. (செந்திலும் அப்படியே உணர்வார் என்றே நம்புகிறேன்.)//
ஆங்கிலத்தில் கூறுவது போல let us call a spade a spade. பார்க்க:
http://kuttapusky.blogspot.com/2007/02/blog-post_08.html

என்று போட்டுவிட்டு அங்கு
இப்போது போய் பார்த்தால் அந்த வரிகள் xxxx கீழ் சென்ஸார்டு என்று போட்டு வந்திருக்கின்றன. நல்லது. என்னை மிகவும் பாதித்த வரிகள் அவை. ஆனாலும் அவற்றை அவர் இப்போது எடுத்திருப்பது மனதுக்கு ஆறுதலாக உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//இப்படியே எல்லா யுத்தங்களும் முடிவுக்கு வந்தால் சுகமாகத்தானிருக்கும். ஆனால் வாழ்க்கை என்பது விருப்பங்களால் நிரப்பப்பட்டது அல்லவே. எப்படியோ திறந்த மனதோடு உரையாடுவதற்கும் மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு முதிர்ச்சி தேவை (வயது, அனுபவங்களையெல்லாம் தாண்டி.)//
போன அக்டோபர் 2-ஆம்தேதி இட்ட பதிவுக்கு எதிர்வினை சரியாக வந்திருந்தால்... என்ன செய்வது, வாழ்க்கை என்பது விருப்பங்களால் நிரப்பப்பட்டது அல்லவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஆமா இப்ப என்ன நடந்து விட்டது என்று மன்னிப்பு நன்றி எல்லாம் அமர்க்களப் படுகிறது. உங்கள் மனசாட்சிப்படி என்ன நினைக்கிறீர்களோ அதைச் சொல்லுகிறீர்கள். ஒரு மனிதன் எல்லோருக்கும் நல்லவரா இருக்க முடியாது. அப்துல் கலாமைக் கூட நாலு பேருக்குப் பிடிக்காமல் போய் விடுகிறது. உங்களுக்கு உங்கள் கருத்துச் சுதந்திரம் முக்கியமா அல்லது நாலு பேரோட நட்பு முக்கியமா என்பதை முதலில் தீர்மானம் செய்து கொள்ளூங்கள். நாலு பேரோட நட்புதான் முக்கியம்னா, பேசாம இன்னிக்கு நங்கநல்லூர்ல மழை பெஞ்சிது, வெயில் அடிச்சுது, கத்திரிக்கா இன்னிக்கு 2 ரூபா அப்படி இப்படின்னு டெயிலி பதிவு போட்டு ஒப்பேத்த வேண்டியதுதான். டோண்டு என்ற துணிவான மனிதரின் துணிச்சலான கருத்துக்கள் பாப்புலராகப் பரவுவது பலருக்கும் பிடிக்கவில்லை, அதனால் உங்களை அமுக்கி வைக்க முயல்கிறார்கள். ஐயங்கார் என்று அழைத்துக் கொள்வேன் என்று சொன்னது ஜாதி வெறி காரணமாகவா சொன்னீர்கள், சும்மா எல்லோரும் அதையே சொல்லுகிறார்கள். ஒரு வீம்புக்குச் சொன்னது அல்லவா அது. வெள்ள வேட்டிகிட்டு அள்ளித் திங்கிற ஐயங்காரு அல்ல நீங்கள் என்பது உங்களை அறிந்தவருக்கு நன்கு தெரியுமே. அப்புறம் என்ன ? கலப்புத் திருமண எதிர்ப்பு பற்றி உங்கள் கருத்தைச் சொன்னீர்கள், பாலச்சந்தர் கூடத்தான் கலப்புத் திருமணத்தின் அபாயங்களை தன்னுடைய கல்யாண அகதிகளில் சொல்லியுள்ளார் அதற்காக அவர் கலப்பு மணத்துக்கு எதிரியா என்ன ? அடப் போங்க சார் உங்கள அடக்கி வைக்க எல்லோரும் சேர்ந்து சூழ்ச்சி பண்ணுறாங்க. உங்க கொள்கையில உறுதியாய் இருங்க டோண்டு சார், உங்களிடம் உள்ள அன்பில் வந்தால் வரட்டும் இல்லாவிடில் போகட்டும், அப்படி கொள்கைக்காக உங்களை ஒருவர் வெறுப்பாராயின் அந்த நட்பு எதுக்கு ?

கோவிச்சுக்காதீங்க, ஏதோ தேணுச்சு சொன்னேன். தொடர்ந்து சோ, இஸ்ரேல் எல்லாம் பற்றியும் எழுதுங்கள். நாலு பேர் நாலு விதமா சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள், ஒரு டோண்டுவின் வாயை மூடி விட்டால் அவர்களுக்கு எல்லாம் சந்தோஷம், அரவிந்தன் மாதிரி உண்மையான அக்கறையில் உங்களைக் கடிந்து கொள்பவர்களை நான் சொல்லவில்லை, அவர் போன்ற சிந்தனையாளர்களின் கருத்துக்கு மட்டும் மதிப்புக் கொடுங்கள் போதும்

Anonymous said...

// டோண்டு என்ற துணிவான மனிதரின் துணிச்சலான கருத்துக்கள் பாப்புலராகப் பரவுவது பலருக்கும் பிடிக்கவில்லை, அதனால் உங்களை அமுக்கி வைக்க முயல்கிறார்கள். //

இந்த மாதிரி உங்களை ஏத்தி விடுபவர்களை கண்டு கொள்ளாதீர்கள். மாற்றங்கள் மற்றும் மட்டுமே மாறாதது. உங்கள் மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம்.

உண்மையான டோண்டு - போலி டோண்டு இணைப்பு பேரவை.
தர்மபுரி

Anonymous said...

//உங்களுக்கு உங்கள் கருத்துச் சுதந்திரம் முக்கியமா அல்லது நாலு பேரோட நட்பு முக்கியமா என்பதை முதலில் தீர்மானம் செய்து கொள்ளூங்கள்//

(நல்ல) ஆலோசனை சொல்ல அன்சு பேரு இருந்தா பத்த வெக்க பத்து பேரு இருப்பாங்க போல இருக்கே!

அடக் கடவுளே!

:((

Anonymous said...

//அடப் போங்க சார் உங்கள அடக்கி வைக்க எல்லோரும் சேர்ந்து சூழ்ச்சி பண்ணுறாங்க. உங்க கொள்கையில உறுதியாய் இருங்க டோண்டு சார், உங்களிடம் உள்ள அன்பில் வந்தால் வரட்டும் இல்லாவிடில் போகட்டும், அப்படி கொள்கைக்காக உங்களை ஒருவர் வெறுப்பாராயின் அந்த நட்பு எதுக்கு ?
//

டோண்டு சார்!
இனியும் இது போன்ற தூபங்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்!

Anonymous said...

// அரவிந்தன் மாதிரி உண்மையான அக்கறையில் உங்களைக் கடிந்து கொள்பவர்களை நான் சொல்லவில்லை, அவர் போன்ற சிந்தனையாளர்களின் கருத்துக்கு மட்டும் மதிப்புக் கொடுங்கள் போதும்
//

சிரிப்பு வருது சிரிப்பு வருது ..

Anonymous said...

//டோண்டு என்ற துணிவான மனிதரின் துணிச்சலான கருத்துக்கள் பாப்புலராகப் பரவுவது பலருக்கும் பிடிக்கவில்லை, அதனால் உங்களை அமுக்கி வைக்க முயல்கிறார்கள். //

டோண்டு சார்!
உசுப்பேற்றும் உத்தி இது! அனைவரையும் விட அதிகம் பாதிக்கப்பட்டவர் நீங்கள்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

தற்போது நீங்கள் எடுத்துள்ள நிலைப்பாடு சிறந்ததெனக் கருதுகிறேன்.
குறைந்தபட்சம் உங்களுக்கும், அதிகபட்சம் அனைவருக்குமே பலனளிக்கும்!

அனானி ஐயா! இப்படியே இவரை உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டு என்னத்தை சாதிக்கப் போறீங்க?

இனியாவது நிம்மதியா அவர் எழுதட்டும்!

dondu(#11168674346665545885) said...

//ஆமா இப்ப என்ன நடந்து விட்டது என்று மன்னிப்பு நன்றி எல்லாம் அமர்க்களப் படுகிறது. உங்கள் மனசாட்சிப்படி என்ன நினைக்கிறீர்களோ அதைச் சொல்லுகிறீர்கள்.//
மனசாட்சிப்படி சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் ரொம்பவே சத்தம் போட்டு சொல்லி வந்திருக்கிறேன் என்பதை அறியும்போது வெட்கமாக இருக்கிறது.

நான் விவரித்த என்னைப் புரட்டிப் போட்ட அந்த ஞாயிற்றுக் கிழமைதான் நினைவுக்கு வருகிறது.

நான் நினைத்தது சரி என்பதை இப்போது வரும் கருத்துக்கள் கன்ஃபர்ம் செய்கின்றன. என்ன, புரட்டிப் போட்ட அந்த வாரம் என்று வேணுமானால் இப்போது கூறலாம்.

இது சமீபத்தில் 1971-ல் நடந்த போது ஒரு நாளில் சில மணித்துளிகளே என்னை புரட்டிப் போட போதுமானதாக இருந்தன. ஆனால் அதன் பிறகு கங்கையில் நிறைய தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி விட்டது. மேலும் எனது வலைப்பூ பெரிய சைஸாக போய் விட்டதால் republish the whole blog ஒரு வாரம் எடுத்துள்ளது, அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

"அடப் போங்க சார் உங்கள அடக்கி வைக்க எல்லோரும் சேர்ந்து சூழ்ச்சி பண்ணுறாங்க. உங்க கொள்கையில உறுதியாய் இருங்க டோண்டு சார், உங்களிடம் உள்ள அன்பில் வந்தால் வரட்டும் இல்லாவிடில் போகட்டும், அப்படி கொள்கைக்காக உங்களை ஒருவர் வெறுப்பாராயின் அந்த நட்பு எதுக்கு ?"

"ஒரு டோண்டுவின் வாயை மூடி விட்டால் அவர்களுக்கு எல்லாம் சந்தோஷம"

சரியான வாதம்.
அனானி கலக்கிட்ட

Madhu Ramanujam said...

இது ஒரு முடிவா இல்லை புதிய ஆரம்பமா என என்னால் தீர்மானிக்க இயலவில்லை. காலம் தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும். எது எப்படி இருப்பினும் உங்கள் எழுத்தின் பால் எனக்குள்ள பற்று மாறவில்லை. தொடர்ந்து வருவேன். அதை எது ஒன்றாலும் தடுக்க இயலாது.

அன்புடன்
மதுசூதனன் ராமானுஜம்

Anonymous said...

//கோவிச்சுக்காதீங்க, ஏதோ தேணுச்சு சொன்னேன். தொடர்ந்து சோ, இஸ்ரேல் எல்லாம் பற்றியும் எழுதுங்கள். நாலு பேர் நாலு விதமா சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள், ஒரு டோண்டுவின் வாயை மூடி விட்டால் அவர்களுக்கு எல்லாம் சந்தோஷம், அரவிந்தன் மாதிரி உண்மையான அக்கறையில் உங்களைக் கடிந்து கொள்பவர்களை நான் சொல்லவில்லை, அவர் போன்ற சிந்தனையாளர்களின் கருத்துக்கு மட்டும் மதிப்புக் கொடுங்கள் போதும்//

உண்மையை சொன்ன அனானி இனி டோண்டு ரசிகர் மன்றம் கலைக்கபட்டு உங்கள் ரசிகர் மன்றமாக மாற்றபடுகிறது.

சென்ஷி said...

//ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா

தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா//

நல்ல வார்த்தைகள்...
கண்ணதாசனின் பாடல் வரிகள் எல்லா நேரத்திலும் எல்லோருக்கும் கை கொடுக்கும். அது இப்போதும் உண்மை ஆகியுள்ளது. தொகுத்தளித்த ஆசானுக்கு நன்றி..

உங்கள் நெஞ்சுரத்தில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. எப்போதும் டோண்டு - டோண்டுவாகவே இருக்க வேண்டும் என்று தான் நினைத்தோம். சமீபமாயும் நீங்கள் சாதிக்க வேண்டியவை அதிகம் உள்ளதால்...
மற்றவை மறந்து, உங்கள் மனம் எங்களால் புண்பட்டிருந்தால் அதற்கும் மன்னித்து வலையுலகில் வலம் வர இந்த சிறியவன் வரவேற்கிறேன்.

சென்ஷி

Anonymous said...

இனி டோண்டு ரசிகர் மன்றங்கள் கலைக்கபடுகின்றன.

இவன்
டோண்டு ரசிகர் மன்ற தலைவர்
வண்ணாரபேட்டை
சென்னை

Anonymous said...

மாவீரர் டோண்டு மாயந்தார் அய்யகோ இது என்ன வேதனை

Osai Chella said...

There is a Zen saying.. "A lot of water has gone". No need to delete anything since I too belive in retrospection. As you said you will be fondly remembered as DONDU ( cause your are just 25! Younger than me!) after this. I didnt saw any caste in you when we know each other through Blog. Hope you know or recall that I am faced the irony of your POLI guy and i continued to write comments in your posts ignoring those hatemails as a catharisis of a disturbed person. So I was honest even in questioning your JAATHY affiliation. All the best and my humble request is to write in your own name even if we differ with it. as I said a lot of water has gone now.

If i have oversteped a bit!/lot .. forgive me.

Anonymous said...

//மாவீரர் டோண்டு மாயந்தார் அய்யகோ இது என்ன வேதனை //

அவர் ஒன்றும் மாய்ந்துவிட வில்லை!

அவரோடு இருந்த களங்கங்கள்தாம் மாய்ந்துவிட்டன!

இனி அவர் புத்துணர்வோடு வலம் வருவார்! பாரங்கள் ஏதுமின்றி!

Anonymous said...

தல உங்கள் பார்வைக்கு 16வது வட்டம் சேரன்மாதேவியில் இருந்து வந்த fax செய்தியை உங்களுக்கு பதிகிறேன்...

இனி செய்தி

தலைவா...உங்களை நம்பி தாய்கழகத்தில் இருந்து பிரிந்து வந்த எங்களை அரசியல் அனாதையாக ஆக்கி விட்டீர்களே...இனி துஷ்டர்களின் தொந்தரவுக்கு எங்களுக்கு ஆதரவாக யார் வாய்ஸ் கொடுப்பார்கள் .தலைவா உன் முடிவை மாற்று தீக்குளிக்க தயார்

இப்படிக்கு
மாவீரர் டோண்டு ரசிகர் படை,
16 வட்டம் ,
சேரன்மாதேவி

dondu(#11168674346665545885) said...

"No need to delete anything since I too belive in retrospection"

My sentiments exactly. Thanks for your kind understanding.

Take care.

Regards,
Dondu N.Raghavan

Anonymous said...

தலைவர் மாவீரர் டோண்டுவின் முடிவை எதிர்த்து இன்று இரவு 12 மணிக்கு மேல் மெரினா கடற்கரையில் சாலை மறியல்.
அனைவரும் வருக ஆதரவு தருக

இவன்
மாவீரர் டோண்டு ரசிகர் மன்றம்,
காசிமேடு
சென்னை

Anonymous said...

//மாவீரர் டோண்டு மாயந்தார் அய்யகோ இது என்ன வேதனை //

போர்க்களம் என்றாலும் பெருந்தன்மையால் அவர் அனைவரையும் வென்றுவிட்டார் கர்ணா! இனி வெல்லப்போவதும் அதிகம்!

அவரொன்றும் மாய்ந்துவிடவில்லை!
மாறியிருக்கிறார் அவ்வளவே!

Anonymous said...

//இனி டோண்டு ரசிகர் மன்றங்கள் கலைக்கபடுகின்றன.//

ஆமாம்! இனி ஒட்டு மொத்த பதிவுலகமே இவரது ரசிகர்கள்தான்!
எனவே தனியே இவருக்கு ரசிகர் மன்றங்கள் தேவை இல்லை!

:)

Anonymous said...

தலைவா
நீ எழுத வேண்டாம்
கட்டளை இடு செய்து முடிக்கிறோம்

- ஒரு டோண்டுவின் தீவிர தொண்டன்.
தலைமைகழகத்தின் பின்னோட்டங்களை இது வரை வெளியிடாத தலைவரை கண்டிக்கிறோம்

Anonymous said...

மதுசூதனன் said...
"இது ஒரு முடிவா இல்லை புதிய ஆரம்பமா என என்னால் தீர்மானிக்க இயலவில்லை. காலம் தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும்."
இனிதான் ஆரம்பமே

இதை எடுத்து கூறிய தலை'க்கு - 'ஓ' போடுங்கள்

Anonymous said...

Mr.Raghavan


////I will be more happy if I hear that dondu has shed even the casteist feelings within him.//
அதை கூறுமுன்னால் உண்மையாகவே அந்த எண்ணம் என்னுள் நிலை பெற வேண்டு.//

Please tell me the address of your boss magaranedungulaikathan. Let me meet him personally to beg for this. :))))))))))))

Anonymous said...

//ஆமாம்! இனி ஒட்டு மொத்த பதிவுலகமே இவரது ரசிகர்கள்தான்!
எனவே தனியே இவருக்கு ரசிகர் மன்றங்கள் தேவை இல்லை!//

அனைத்து பதிவுலகதையும் தன் ரசிகர்களாக மாற்றிய மாவீரர் டோண்டு சாணக்கியம் வாழ்க்க

Anonymous said...

இதை எடுத்து கூறிய தலை'க்கு - 'ஓ' போடுங்கள்

சின்ன ஓ வா பெரிய வா

ஓஓ ஓooooooooooooooooo

Anonymous said...

//தலைவா உன் முடிவை மாற்று தீக்குளிக்க தயார்//
முதல்ல போய் டீ குடுங்கடா

Anonymous said...

எனது வாரிசாக டோண்டுவை அறிவிக்கிறென்

Anonymous said...

நானும் எனது வாரிசாக டோண்டுவை அறிவிக்கிறேன்

Anonymous said...

//உண்மையான டோண்டு - போலி டோண்டு இணைப்பு பேரவை.
தர்மபுரி //

அனானி ஆப்ஷனை திறந்தாலும் திறந்தீர்கள் இப்படிப்பட்ட நகைச்சுவைகளுக்கு பஞ்சமே இல்லாமல் போய் விட்டது உங்கள் தளத்தில்..

இது தான் உங்கள் ஹிட் கவுண்டர் ( அய்யா இது சாதியில்லீங்க ) ஏறக் காரணம் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

என் வாரிசும் டோண்டு தான்.
(குறிப்பு எனக்கு கடனாக ரெண்டு கோடி இருக்கிறது)

Anonymous said...

தலைவர் விஜய் பாதையில் இனி செல்ல இளைஞர் டோண்டுவை அழைக்கிறேன்

இவன்
விஜய் ரசிகர் மன்ற பேரவை
தமிழ் வலைபூக்கள்

Anonymous said...

//என் வாரிசும் டோண்டு தான்.
(குறிப்பு எனக்கு கடனாக ரெண்டு கோடி இருக்கிறது)//

அப்பா! எனக்கு கூட 20 லட்சம் கடன் இருக்கு!

Anonymous said...

தலைவா! 16 வயதினிலே மாதிரி இன்னொரு படம் எப்போ எடுப்பீங்க?

தயவு செஞ்சி இன்னொரு முறை கேப்ட மகள் மாதிரி விபரீத முயற்சி செய்யாதீங்க! அப்புறம் 2 கோடி என்ன, 10 கோடி கூட கடன் ஆகும்!

Anonymous said...

இந்த நியூஸ் எங்க சேனல்ல வரலியே?
:((

Anonymous said...

நாங்க இந்த ரிசல்டை எதிர்பார்த்துகிட்டிருந்த டென்ஷன்லதான் நேத்து தோத்துட்டோம்!

:(

Anonymous said...

இங்கு மெய்யாலுமே பொய்யான கங்குலிதான் பின்னூட்டமிட்டான் என்பதற்கு சாட்சியாக

கற்பூரம் அணைத்து சத்தியம் செய்கிறேன்!

Anonymous said...

உங்க அடுத்த மீட்டிங்'ல நானும் கலந்துகிறேன், ஆனா 2 கன்டிஷன்

1. மேடை போடனும்.

2.எதாவது ஒரு சாமியாரையும் கூப்பிடனும்.

Anonymous said...

இங்கே கருணாநிதி என்னும் பெயரில் வந்திருக்கும் பின்னூட்டம் என் இளவல் கருணாநிதியினுடையது அல்ல!

அது வேறு ஒரு கருணாநிதி!

Anonymous said...

//ஆரவாரப் பேய்களெல்லாம்//

எங்களை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே!

:)

மணியன் said...

தவறுவது மனித இயல்பு, மன்னிப்புக் கோருதல் தெய்வீக இயல்பு என்ற கூற்றின்படி 'உண்மையான' மனமுதிர்ச்சியைக் காட்டியுள்ளீர்கள்.

Political correctness may sound hypocritical, but necessary to build a societal consensus.

நன்றி நண்பரே, நடப்பவை நல்லதாக அமையட்டும்.

Anonymous said...

கருணாநிதி said...

{{ உங்க அடுத்த மீட்டிங்'ல நானும் கலந்துகிறேன், ஆனா 2 கன்டிஷன்

1. மேடை போடனும்.

2.எதாவது ஒரு சாமியாரையும் கூப்பிடனும்.}}

என் தம்பி இப்படி செய்வான் என்று அப்பவே சந்தேகம் இருந்தது

Anonymous said...

தல கலக்கிட்டிங்க, இனிமேல் நாங்க இங்க தான் கும்மி அடிப்போம்.

Anonymous said...

அனானிகளின் தெய்வங்கள் லக்கி, ரவி யை மிஞ்சப் போகும் டோண்டு மாமாவுக்கு எங்கள் பின்னூட்டங்கள் சமர்ப்பணம்.

டோண்டு டிராவல்ஸ்
ஊட்டி மெயின் ரோடு
மேட்டுப்பாளையம்

Anonymous said...

என் படத்தின் வெற்றியை டோண்டுக்கு அர்ப்பனிக்கின்றேன்.

கௌதம்

Anonymous said...

பாராட்டுக்கள் டோண்டு. எடுத்த எலக்ஷன்ல எங்க கட்சி சார்பாக போட்டியிட உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்

Anonymous said...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி டோண்டு வாழ்க.

dondu(#11168674346665545885) said...

//அது வேறு ஒரு கருணாநிதி!//
ஆம், ஏ.கருணாநிதி. ஹோட்டல் மாமியா நடத்தியவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அனானி ஆப்ஷனை திறந்தாலும் திறந்தீர்கள் இப்படிப்பட்ட நகைச்சுவைகளுக்கு பஞ்சமே இல்லாமல் போய் விட்டது உங்கள் தளத்தில்..

இது தான் உங்கள் ஹிட் கவுண்டர் ( அய்யா இது சாதியில்லீங்க ) ஏறக் காரணம் என்று நினைக்கிறேன்.//

ஹிட் எப்போதுமே இருந்தது. ஆனால் பின்னூட்டங்கள் அதற்கு ஏற்ப இல்லை. என்ன அப்போதெல்லாம் 3 நாட்களுக்கு ஒரு முறை 1000 ஏறும். இப்போது தினமுமே 1000.

அதர் ஆப்ஷன் பயத்தில்தான் திறக்காமல் இருந்தேன். அதை இனிமேல் சமாளிக்கும் திறன் எனக்கு வந்துள்ளது என்பதை அறிந்ததில் சந்தோஷம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தங்களது குறும்புப் பின்னூட்டங்களால் திணறடிக்கும் கொலசாமிகளுக்கு முதற்கண் சக கொலசாமியான டோண்டு ராகவனது நன்றிகள். ஒரு வாரமா எல்லோரும் டென்ஷனில் இருந்திருக்காங்க. அடித்து தூள் கிளப்புங்க. கொஞ்சம் ஓவரா போச்சுன்னா மட்டுறுத்த வேண்டியிருக்கும். முக்கியமா சகவலைபதிவர் யாரையும் தாக்காதீங்க என்று கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நான் சதம் அடிக்க போறேன்

Anonymous said...

100 அடித்த - வலை உலக மாவீரன் டோண்டுவுக்கு வனக்கம்

டோண்டு ரசிகர் மன்றம்

வாஷிங்ட்ன், USA

dondu(#11168674346665545885) said...

12 மணி நேரத்தில் 100 பின்னூட்டங்களா. எனக்கு அது ரெகார்டு. எல்லோருக்கும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ramachandranusha(உஷா) said...

டோண்டு சார்,
போர், யுத்தம் என்று முழங்கிக்கொண்டு இருந்தீர்கள். ஆனால் உண்மையான நீங்கள் சந்தித்த யுத்தம் கடந்த மூன்று நாட்கள்
நடந்ததுதான். அதில் நீங்கள் வென்று விட்டீர்கள் என்பதை இந்த பதிவில் சக பதிவாளர்களின் பின்னுட்டங்கள் சொல்கின்றன.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

Anonymous said...

தமிழால் நாம் இணைந்தோம். உங்கள் மாற்றங்களை எம் பேரவை பாராட்டி வரவேற்கிறது.

டோண்டு தமிழ் பேரவை
உருகுவே

Anonymous said...

டோண்டு சார், என் செல்போனைக் காணோம்

Anonymous said...

அந்த செல்போனை நான் எடுக்கல!!

Anonymous said...

ஹிஹிஹி அந்த செல்போனை நாந்தான் எடுத்தேன்.. டண்டனக்க டனக்கு னக்க...

dondu(#11168674346665545885) said...

நன்றி உஷா அவர்களே. அந்த மூன்று நாட்கள் ரொம்ப நீளமானவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இந்த நேரத்தில் ஒரு அறிவிப்பு, அனானி-அதர் ஆப்ஷன் சங்கத்தலைவராக டோண்டு "கள்ளவோட்டுக்களின்" முலம் தேர்ந்தெடுக்க்ப்பட்டார்.

அனானி ரக்ஷன சேவா சமிதி.
மாண்டியா

Anonymous said...

டோண்டு தல, எங்கள் சங்க உறுப்பினர்கள் போடும் பின்னூட்டத்தக்கு தனித்தனி பதில் பின்னூட்டம் இடுமாறு கேட்டுகொள்கிறோம்,

டோண்டு ஜெர்மன் முன்னேற்றக் கழகம்
இஸ்ரவேல்

Anonymous said...

ha..ha..ha..
a good joke!
brahmins won't change,they are cunning fox.

Gurusamy Thangavel said...

உங்கள் தீர்மானம் குறித்து மகிழ்ச்சி திருவாளர் டோண்டு.

Anonymous said...

இனிமேல் நானும் டோண்டு ரசிகை

Anonymous said...

போடீ!! நமீதா... டோண்டு எனக்கு..

Anonymous said...

டோண்டு சார்! " எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது.
இனி நடப்பது நன்றாகவே நடக்க நீங்க சார் நன்றாகவே நடக்க முயலுங்க"

புள்ளிராஜா

Anonymous said...

யாரங்கே... என் பன்மொழி பண்டிதன் டோண்டுவுக்கு பொற்கிழிகொண்டு வா!!!

Anonymous said...

டோண்டு என்பது தமிழ் பெயரா?

Anonymous said...

என்னை யாரும் உலக கோப்பைக்கு அணிக்கு சேர்த்து கொள்ள ரெகமெண்ட் செய்களேன் ப்ளீஸ் ப்ளீஸ்

Anonymous said...

ஏ டண்டணக்கு டணக்கு டணக்கு
ஏய் இது டோண்டு
இவருக்கு என் மேல காண்டு

என் பையன் பேரு சிம்பு
ஆனா அவன் உடம்பெல்லாம் வம்பு

இந்த இரண்டு பேரு சாமி
ஆனா அது வீராசாமி
ஏ டண்டணக்கு டணக்கு டணக்கு

Anonymous said...

அசுக்கு பிசுக்கு டோண்டு எனக்கு தான்

Anonymous said...

என்னை வைச்சு யாரும் காமேடி கீமேடி பண்ணலையே
ரசினி காந்த்

Anonymous said...

காவிரி எங்களுது ஹோசூர் எங்களுது

Anonymous said...

பெங்களூர் நமதே காவிரி நமதே
நெடுமாறன்

Anonymous said...

பின்னோட்டங்களை உடனுக்குடன் வெளியிடாதா டோண்டுக்கு எங்கள் சங்கத்தின் சார்பாக கண்டத்தை தெரிவித்து கொள்கிறோம்

அனானி முன்னேற்ற சங்கம்
சார்ஜா குறுக்கு சந்து
துபாய்

bala said...

//ஒரு வாரமா எல்லோரும் டென்ஷனில் இருந்திருக்காங்க. அடித்து தூள் கிளப்புங்க//

டோண்டு அய்யா,
நல்ல முடிவு.வாழ்த்துக்கள்.உங்களோடு டூ விட்ட குழந்தை லக்கி,இப்போ பழம் விட்டுடுச்சு போலிருக்கே.அதுக்காகவே நீங்க எடுத்த முடிவு நல்ல முடிவுன்னு சொல்லலாம்.

பாலா

Muse (# 01429798200730556938) said...

அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்பவர்கள் தங்களுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ளுவதில்லை. அங்கனம் ஏற்றுக்கொள்ளுபவர்கள் முதிர்ச்சியுள்ளவர்கள். இளைஞரே, ஹிந்து மதத்தை அபவாதம் செய்யக் காத்திருப்பவர்கள் தங்களின் கருத்துக்களை உபயோகப்படுத்தி, தங்களையும் படுத்திவருவது இனி குறையும். தங்களின் மனமுதிர்ச்சிக்குத் தலை வணங்குகின்றேன்.

thiru said...

//பல விஷயங்களில் கருத்து சொல்லி எனது நிலையை தெளிவாக்கி விட்டேன். அக்கருத்துக்களில் மாற்றம் இல்லை. ஆனால் இனிமேலும் அதை சொல்லித் திரிய வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆகவே இனிமேல் நடேசன் பூங்காதான். டோண்டு ராகவையங்காரும் வரமாட்டான் (ஓசை செல்லா அவர்கள் கவனிக்க).//

//சரித்திரத்தை ஏன் திருத்த வேண்டும்? வேண்டாத வேலை. அவை எனது அசட்டுத்தனத்துக்கு சான்றாக அப்படியே இருக்கட்டும்.//

வரவேற்கதக்க முடிவு! அமைதி பிறக்கட்டும்.

//இஸ்ரேல், ராஜாஜி, சோ, வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை ஆதரவாளன் டோண்டு ராகவனும் அப்படியே இருப்பான். வாடிக்கையாளர்களை படுத்தும் டோண்டு ராகவன் வேறெங்கே செல்ல முடியும்.?//

எல்லோரும் ஒரே கருத்தை கொண்டிருக்க அவசியமில்லை.

கருதுக்களை பகிர்ந்து கொள்வோம். தமிழ் வலைப்பதிவுகள் தரமடையட்டும்.

குமரன் (Kumaran) said...

நல்ல முடிவு டோண்டு ஐயா.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்துத் தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டெழுத்தினால்

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.

dondu(#11168674346665545885) said...

நன்றி தென்னாட்டு வினோத் துவா ம்யூஸ் அவர்களே,

உங்களுக்காகத்தான் காத்திருந்தேன். மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி குமரன் மற்றும் திரு அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சிறில் அலெக்ஸ் said...

டோண்டு சார் இதத்தான் நானும் சொல்லியிருந்தேன்.. உங்களால் பாதிக்கப் பட்டவர்கள் என சிலர் நம்புகிறார்களென்றால் அவர்களிடம் வருத்தம் தெரிவிப்பது உங்கள் கடமை.


இப்ப சரியான நேரத்தில சொல்லிட்டீங்க. சூட்டோட சூடா சொல்லியிருந்தா இந்தப் பதிவும் கோபத்தில திரிக்கப்பட்டிருக்கலாம்.

எல்லாருக்குள்ளும் இருக்கும் நல்லவைகளை வெளிக்கொணர நம்மால் ஆனதை செய்வோமாக.

சிவபாலன் said...

முடிவை வரவேற்கிறேன்!

தாங்கள் அண்ணா பல்கலைக்கழக ( கிண்டி பொறியியற் கல்லூரி) அனுபங்களை தொடர்ந்து எழுதுங்கள்!

முன்னாள் வாசகன்!

dondu(#11168674346665545885) said...

கிண்டி பொறியியல் கல்லூரி நினைவுகள் எழுதப்படவுள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி சிறில் அலெக்ஸ் அவர்களே. செய்திகள் வாசிப்பது எந்த மட்டில் உள்ளது?


அன்புடன்,
டோண்டு ராகவன்

கால்கரி சிவா said...

நல்ல முடிவு.

மன்னிப்பவன் மனிதன்

Unknown said...

Sir,Are you from guindy engineering college.Even my fathera lso from same college.He is also passed out in 1969.he is from civil engineering section,

dondu(#11168674346665545885) said...

கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது சரவணன் அவர்களே. உங்கள் அப்பாவிடம் கேளுங்கள்.

என் பெயர் என்.ராகவன், ரோல் நம்பர் 2093. எலெக்ட்ரிகல். நான் 1963-ல் சேர்ந்து (E&F) batch. இரண்டாம் வருடம் ஃபெயில் ஆகவே 1968-க்கு பதிலாக 1969-ல் பாஸ் செய்தேன்.

உங்கள் தந்தையார் பெயர் என்ன? என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்படி கூறவும். 04422312948.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

his name is shanmugam and he was a hostelite.he is from 64-69 batch.i will ask him to contact u

dondu(#11168674346665545885) said...

Dear Saravanan,

Then your father would have been in G&H batch in the first two years. And he must have known Saranathan, Sundhareshwar, R.Sampath.

Did he attend the annual get-together this year for the CEG1969 batch in GRT Convention hall, T.Nagar?

And in the third year he would have known G.Raghavan, G.Natarajan among other persons.

Unfortunately, I was a day scholar.

Regards,
N.Ragahvan

Anonymous said...

//உங்க அடுத்த மீட்டிங்'ல நானும் கலந்துகிறேன், ஆனா 2 கன்டிஷன்

1. மேடை போடனும்.

2.எதாவது ஒரு சாமியாரையும் கூப்பிடனும்.

//

3. வர்ற சாமியாரு எனக்கு ஒரு மோதரம் வரவழைச்சுக் கொடுக்கணும் (வாய் அது இதுன்னு கண்ட ஓட்டைக்குள்ளருந்து எடுக்காம காத்துலருந்துதான் எடுத்துக் கொடுக்கணும்!)

4. அவர்கிட்ட தெருவையே நாறடிச்சுக்கிட்டு இருக்கற எங்க வீட்டு செப்டிக் டாங்க்கைக் க்ளீன் பண்றதுக்குக் காசு கேப்பேன்.

-முதல் தடவையாக அனானியானவன்

Anonymous said...

//வாட்டாள் நாகராஜ் said...
காவிரி எங்களுது ஹோசூர் எங்களுது
//

வாட்டாளு நம்மவரு இல்லா. அவரு மாத்து கேளுபேடா. யாக்கந்தர அவரு தொட்ட ஜாட்டாளு!

அனானி கன்னடரு பெங்களூருதல்லிதா.

Anonymous said...

//பாரதி ராஜாவின் ஜால்ரா said...
தலைவா! 16 வயதினிலே மாதிரி இன்னொரு படம் எப்போ எடுப்பீங்க?
//

அதுவா? என்னோட அடுத்த ஜென்மத்துல 16 வயசாவும்போது!

இப்போதைக்கு "என் சனிய(ன்) தமிழ் மக்களே" எடுக்கலாம்னுருக்கேன். ஹீரோ டி.ஆர்.

பாரதி ராஜா

Anonymous said...

Mr.Dondu,
I too feel like there is nothing much for you to feel bad. You were writing your views and experiences.
On that particular post regarding street names I felt your view for confusions is perfectly valid. But I felt little odd when I see your signature with cast name in that post. May be you can say your regrets for that.
Also, in Tamil culture and web it is OK to say some views ananymous as long as views are not personal attack in nature. Remember the kural "Epporul yar vai ketpinum apporul mei porul kanpathu arivu". So I find nothing wrong you writing in other names. But infact by your policy you are faithful to yourself and I leave it completely to you.
And finally, I could see several people expressing regrets for their behavior. For me it looks like if you second them they will come with soothing hands and if you protest they will do personal attacks. This I could see from their posts attacking you personally.
One more thing. I don't have a post. (Feel like not yet having stuff to do so!!!) So leaving comments anonymous.
Murali.

Anonymous said...

//கடல் கடந்த தமிழன் said...
தமிழால் நாம் இணைந்தோம். உங்கள் மாற்றங்களை எம் பேரவை பாராட்டி வரவேற்கிறது
//

டேய். ஆனா தமிளு உங்களோட இணைய மாட்டேங்குதேடா? பேரவைங்கற பேர்ல சாக்கடையை மறைச்சு மேல கீத்துக் கொட்டாய் போட்டு வேலைவெட்டியில்லாத பயலுவள்ளாம் மக்கிப்போன நூஸ்பேப்பர் படிக்கறதை உண்மையான பேரவை சார்பாகக் கண்டிக்கிறோம்.

டோண்டு தமிழ் பேரவை
பராகுவே

Raj Chandra said...

Dear Mr. Raghavan,

I have never replied/commented any of your controversial posts. Not afraid of expressing my views but these discussions never end and take you *down* to the next level gets too "personal". Also, like some friends say, I cannot ask you to stop this(don't have right too :) ). Expressing your thoughts is your right, if I don't like them, I will not read.

Basically, the decision you made now is correct and mature. I know you will stand with this decision as you did with other issue, back some time.

Take care. Expecting more from you reg. your translation activities and other things happened recently (like in 1960s :) ).

Regards,
Rajesh

dondu(#11168674346665545885) said...

//On that particular post regarding street names I felt your view for confusions is perfectly valid. But I felt little odd when I see your signature with cast name in that post. May be you can say your regrets for that.//
நான் இப்பதிவில் வெவ்வேறு இடங்கல்ளில் சொன்னது:
1. "சாதி பற்றி நான் எழுதிய இப்பதிவின் முதல் பாதியை கிட்டத்தட்ட எல்லோரும் ஏற்று கொண்டனர். ஆனால் அத்துடன் நில்லாது கலப்புத் திருமணத்தை எதிர்த்து சில கருத்து வெளியிட்டது ஒரு புயலைக் கிளப்பியது".

2."ஆகவே இனிமேல் நடேசன் பூங்காதான். டோண்டு ராகவையங்காரும் வரமாட்டான் (ஓசை செல்லா அவர்கள் கவனிக்க)".

3. "ஆனால் ஒரு விஷயம். எந்தப் பழைய பதிவுகளையும் இப்போது எடுக்கும் முடிவுகள் காரணமாக திருத்தவோ நீக்கவோ போவது இல்லை. சொன்னவை சொன்னதுதான். வில்லிருந்து விடுபட்ட அஸ்திரங்களை பெறுவது அர்ஜுனனால்தான் முடிந்தது. அஸ்வத்தாமனால் முடியவில்லை. நான் இந்த விஷயத்தில் அஸ்வத்தாமா".

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கொலசாமிகளுக்கு ஒரு வார்த்தை. கும்மிகளை ரசிக்கிறேன். பலவற்றுக்கு வெவ்வேறு தருணங்களில் பதில் அளித்துள்ளேன். ஆகவே ஏதாவது புதிதாக பாயிண்டுகள் வந்தால் பதில் கூறுவேன். மற்றப்படி உங்கள் பின்னூட்டங்களில் உள்ள நகைச்சுவைகளை (என்னைத் தாக்கி வருவதையும் சேர்த்து) ரசிக்கிறேன்.

நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ILA (a) இளா said...

.நல்ல முடிவு டோண்டு அவர்களே. பாராட்டுகள்!அப்பாடா ஒரு வழியா முற்றுபுள்ளி வெச்சுட்டீங்க. கொலைவெறியும் இந்தப்பதிவுல நல்லா வந்து இருக்குங்க.

dondu(#11168674346665545885) said...

நன்றி இளா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

I am quite surprised about the people, who takes the blog discussions so seroiusly (sometimes personal split). Not only that, they went one step further and think that they are bringing change through blogs as well save the ideas like secularism or anything etc. If somebody thinks, I can say that they are in the dream.
For example, last 36 years, Thglak is coming and what notable change it will bring in Tamil nadu?. Nothing. Thglak Editor himself told that Thglak is only starting of debating point. Nothing more than that. Even for Thuglak is like this, no need to say more to blogs.

dondu(#11168674346665545885) said...

//For example, last 36 years, Thuglak is coming and what notable change it will bring in Tamil nadu?. Nothing. Thuglak Editor himself told that Thuglak is only starting of debating point. Nothing more than that. Even for Thuglak is like this, no need to say more to blogs.//
Yes, nothing more, nothing less.

Regards,
Dondu N.Raghavan

மரைக்காயர் said...

டோண்டு அவர்களே,

இத நான் முன்னாடியே சொல்லனும்னு நெனச்சேன். ஆரவாரங்கள் அடங்கின பிறகு சொல்லலாம்னு தள்ளிப் போட்டிருந்தேன்.

டோண்டுங்குற உங்க பேர்ல ஒரு போலி நபர் பின்னூட்டங்கள் போடுறது எப்படி தப்போ, அதே போல முஸ்லிமல்லாத ஒரு நபர் 'முகமது யூனுஸ்' என்கிற முஸ்லிம் பெயரில் போலியா பின்னூட்டம் போடுறதும் தப்புதானே. உங்களுக்கு உதவிய உங்களின் 'நெருங்கிய நண்பர்கள்' இந்த தப்பை செய்ய நீங்க அனுமதிச்சிருக்கக் கூடாது.

நன்றி.

Anonymous said...

151 comment

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் மரக்காயர்.

//டோண்டுங்குற உங்க பேர்ல ஒரு போலி நபர் பின்னூட்டங்கள் போடுறது எப்படி தப்போ, அதே போல முஸ்லிமல்லாத ஒரு நபர் 'முகமது யூனுஸ்' என்கிற முஸ்லிம் பெயரில் போலியா பின்னூட்டம் போடுறதும் தப்புதானே.//
வெறுமனே டோண்டுன்னு பேர வச்சிரிந்தா யார் என்ன ஆட்சேபணை சொல்ல முடியும்? இங்கு நடந்தது என்னன்னு உங்களுக்கு தெரியும்தானே?

முகம்மது யூனுசுன்னு இங்கே யாராவது பதிவர் இருந்து அவனோட வலைப்பூவை காப்பியடிச்சாரா எனது நண்பர்? ஏதாவது அசிங்கமாக எழுதினாரா? கூறுங்கள்.

புதுக்கல்லூரியில் படித்த, எனது புதுக்கல்லூரி என பெருமையுடன் கூறிக் கொள்ளும் இந்த டோண்டு ராகவனுக்கு எத்தனை இசுலாமிய நண்பர்கள் உண்டு என்பதை அறிவீர்கள்? அவனுடன் அதே கல்லூரியில் சக மாணவர்களாகப் படித்தவர்கள், அவன் படித்து பல ஆண்டுகளுக்கு பிறகு படித்தவர்கள், பிறகு அவனும் அவங்க நியூ காலேஜில்தான் படித்தான் என்பதாலேயே அவன் மேல் பாசமாக உள்ளவர்கள் எவ்வளவு பேர் என்பது தெரியுமா?

மறுபடியும் கூறுவேன். முகம்மது யூனுஸ் உண்மையாகவே இசுலாமியரா என்பது கூட உண்மையாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அதே போல அவர்கள் செலக்ட் செய்த பெயர்களை அனுமதிப்பது டோண்டு ராகவனது வேலையும் இல்லை.

ஹிந்தி நடிகர் திலீப் குமார், நடிகை மீனா குமாரி, சோப்ராவின் மஹாபாரதத்தில் அர்ஜுனனாக வந்த நடிகர் அர்ஜுன் எல்லோருமே இசுலாமியர்தானே. தேடினால் வேண்டிய அளவுக்கு உதாரணங்கள் தர இயலுமே.

என் நண்பர்கள் கொல சாமிகள் லிஸ்ட் கொடுப்பார்கள் என நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

கமல்ஹாசன் முஸ்லிம் பேரு

ராபின் ஹூட் said...

டோண்டு சார்,உங்களின் சரியான முடிவு என்று நினைக்கிறேன்.
நல்லது நடக்கும் பட்சத்தில் நான் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விடுவேன்.

Santhosh said...

//டோண்டு ராகவையங்காரும் வரமாட்டான் (ஓசை செல்லா அவர்கள் கவனிக்க). //
//மனசாட்சிப்படி சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் ரொம்பவே சத்தம் போட்டு சொல்லி வந்திருக்கிறேன் என்பதை அறியும்போது வெட்கமாக இருக்கிறது.//
ரொம்ப நல்ல முடிவு டோண்டு சார். தவறு செய்பவரைவிட மன்னிப்பு கேட்பவருக்கே மனவலிமை அதிகம். நீங்க மறுபடியும் உங்க மனவலிமையை காட்டிவிட்டீர்கள்.

உங்களை ரொம்பவே நோகடித்த பதிவர்களில் நானும் ஒருவன். இப்பொழுது சொல்றேன் உங்களுடைய கருத்துக்களுக்கு தான் நான் எதிரியே தவிர உங்களுக்கு இல்ல. தொடர்ந்து உங்களின் கருத்துக்களை பதித்துவருக. இஸ்ரேலுக்கு ஆதரவு என்றால் என்னுடைய எதிர்ப்பு கண்டிப்பா அதுக்கு இருக்கும் :)).. Cheer up and Get ready.

Anonymous said...

மிக அபாரமான பதிவு டோண்டு.

தொடர்ந்து உங்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என உறுதி அளிக்கிறோம்

முகமது
செயலாளர்
டோண்டு சிறுபான்மையினர் பேரவை
மெக்கா கிளை
சவூதி அரேபியா

dondu(#11168674346665545885) said...

அவர் பெயர் கமலஹாசன். அவரது அண்ணாக்கள் பெயர் சாருஹாசன், சந்திரஹாசன். இவையெல்லாமா இசுலாமியப் பெயர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

எனக்கு அழுகை அழுகையா வருது

Anonymous said...

அய்யோ இனிமேல் போர் அடிக்கும்

மனதின் ஓசை said...

விரும்பிய, ஆனால் எதிர்பார்க்காத முடிவு. மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்த நிலை நீடிக்க வேண்டும்.
அது கெட இடம்கொடுக்காமல் பார்த்துக்கொள்ளும் கடமையும் உங்களுக்கு உள்ளது.

இது மன அமைதியையும் இன்னும் பல புதிய வாசகர்களையும் தரும் என நம்புகிறேன்.

//ஆனால் இதய பூர்வமாக சிந்தித்த இந்த டோண்டு ராகவனிடம் அவன் தோற்றுப் போனான் என்பதை மகிழ்ச்சியாகவே உணருகிறேன்.//

இதய பூர்வமாக விரும்பும் வெற்றி என்றுமே அதிக மகிழ்ச்சியை தரும்.

உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.. யோசித்து முடிவு எடுத்து இருக்கிறீர்கள் என்பதை கீழ்கானும் வரிகள் உணர்த்துகின்றன...

//மனசாட்சிப்படி சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் ரொம்பவே சத்தம் போட்டு சொல்லி வந்திருக்கிறேன் என்பதை அறியும்போது வெட்கமாக இருக்கிறது.//

//அப்போது தோல்வி என்று நினைத்ததுதான் காரணம். எல்லாவற்றுக்கும் தக்க நேரம் வரவேண்டாமா?//

////I will be more happy if I hear that dondu has shed even the casteist feelings within him.//
அதை கூறுமுன்னால் உண்மையாகவே அந்த எண்ணம் என்னுள் நிலை பெற வேண்டு. //

மகேஸ் said...

டோண்டு சார், என்னுடைய இந்தப் பதிவு கலாய்க்கலாம் என்று தானே தவிர தங்களின் மனதைப் புண்படுத்த அல்ல.
மேலும் இந்தக் கான்செப்ட் பற்றி சென்ற புதன் கிழமையே முத்து தமிழினியிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தேன்.

மேலும் சற்று முன்புதான் தங்களின் நேற்றய பதிவைப் படித்தேன்.

என்னுடைய இந்தப் பதிவு சென்ற சனிக்கிழமை இரவு அலுவலகத்தில் எழுதப்பட்டு, நேற்று பெங்களூரில் விடுமுறை என்பதால்
இன்று வெளியிடப்பட்டது.

இந்தப்பதிவை நீங்கள் நீக்கக் கோரினால் நான் நீக்கி விடுகிறேன்.

Anonymous said...

அய்யோ வெள்ளை காக்கா பறக்குது

Anonymous said...

தலைவா!!! களம் இறங்கி வா!!! முள்போல சூழல் இருந்தாலும் முல்லை போல் சிரிக்கும் வள்ளலே ,,, தரணி ஆள வா!!!

dondu(#11168674346665545885) said...

மகேஸ் அவர்களே,

உங்களது நல்ல பதிவு. மனமார ரசித்து சிரித்தேன்.

இதை நீக்குவாதா? மூச்?

நான் இப்போது சஜஸ்ட் செய்யும் வேறு கேள்விகளில் ஏதேனும் ஒன்றை கேட்டிருந்தாலும் ஆட்டம் ஒரே நிமிடத்தில் க்ளோசாகியிருக்குமே, ஸ்னேப் ரெஃபரியாக இருந்த ஒரே க்விட்டிச் மேட்சில் ஹாரி பாட்டர் ஸ்னிட்சை உடனேயே பிடித்து மேட்சை முடிவுக்கு கொண்டு வந்தது போல.

கேள்விகள்:
1. அவர் மகரநெடுங்குழைகாதனின் பக்தரா?
2. இஸ்ரேல் என்றாலே உணர்ச்சிவசப்படுபவரா?
3. அரசன் தாவூதின் நட்சத்திரத்தை விரும்புபவரா?
4. சோ, ராஜாஜி பிடிக்குமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மரைக்காயர் said...

//வெறுமனே டோண்டுன்னு பேர வச்சிரிந்தா யார் என்ன ஆட்சேபணை சொல்ல முடியும்? இங்கு நடந்தது என்னன்னு உங்களுக்கு தெரியும்தானே?

முகம்மது யூனுசுன்னு இங்கே யாராவது பதிவர் இருந்து அவனோட வலைப்பூவை காப்பியடிச்சாரா எனது நண்பர்? ஏதாவது அசிங்கமாக எழுதினாரா? கூறுங்கள்.//

உங்க குடும்ப உறுப்பினர் ஒருவர் பெயரில்கூட ஒரு வலைப்பதிவை யாரோ திறந்திருந்தாங்க. அதில ஆட்சேபனை பண்ற மாதிரி எதுவும் இல்லேங்குறதால தமிழ்மணத்தில கூட இணைப்பு கொடுத்திருந்தாங்க என்று நினைக்கிறேன். அந்த நபர் கூட யாருடைய வலைப்பதிவையும் பார்த்து காப்பி அடிக்கவில்லை. இருந்தாலும் அது உங்களுக்கு தப்பா தெரியலையா? எனக்கு அது தப்பாகத்தான் தெரிஞ்சுது. அதுபோல போலியா முஸ்லிம் பேர்ல எழுதுவதும் தப்புதான். என்ன இருந்தாலும் இதுவும் 'அடையாளத் திருட்டு'தானே?

G.Ragavan said...

வணக்கம் டோண்டு. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்குப் பின்னூட்டமிடுகிறேன்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். இப்பொழுது புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கெட்ட பெயரை மிகவும் எளிதாக எடுத்து விடலாம். ஆனால் நல்ல பெயரை எடுப்பது மிகக் கடினம். இந்த ஒரு பதிவை மட்டும் படித்து விட்டு எல்லாம் மாறிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது சற்று அதிகம்தான். இது கூட உங்கள் யுத்தத்தில் ஒரு உத்தி என்று நாளை நீங்கள் சொல்லக் கூடும் என்று கூட நினைக்க வைக்கும். அப்படி நினைத்தாலும் அது தவறாகாது. ஆகையால் இனிமேல் நீங்கள் இடும் பதிவுகளும் அதில் சொல்லும் கொள்கைகளும் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும். கண்டிப்பாக நடுவில் பிரச்சனைகள் வரும். அவைகளை எப்படி நீங்கள் எதிர்கொள்கின்றீர்கள் என்பதும் மிகமுக்கியம். என்னுடைய வாழ்த்துகள்.

dondu(#11168674346665545885) said...

//உங்க குடும்ப உறுப்பினர் ஒருவர் பெயரில்கூட ஒரு வலைப்பதிவை யாரோ திறந்திருந்தாங்க. அதில ஆட்சேபனை பண்ற மாதிரி எதுவும் இல்லேங்குறதால தமிழ்மணத்தில கூட இணைப்பு கொடுத்திருந்தாங்க என்று நினைக்கிறேன். அந்த நபர் கூட யாருடைய வலைப்பதிவையும் பார்த்து காப்பி அடிக்கவில்லை.//
தெரிந்துதான் எழுதுகிறீர்களா என்றே புரியவில்லை. எனது மனைவியின் பெயரில் திறந்த பிளாக்கில் எனது முகவரி மற்றும் டெலிஃபோன் எண்கள் தரப்பட்டன. முதலில் சில நல்ல சுலோகங்கள் இருந்தன. அம்மாதிரி 3 பதிவுகள் வந்து தமிழ்மணத்தின் விதிகளின்படி ஆட்டமேட்டிக்காக சேர்க்கப்பட்டது. பிறகு அசிங்கப் பதிவுகளும் வர ஆரம்பித்தன. தமிழ்மணத்துக்கு தெரியவந்து அதை அவர்கள் தூக்கினர்.

என் பெண் பெயரில் ஆரம்பிக்கப் பட்ட வலைப்பூ அவளது போட்டோவுடன் போடப்பட்டது. அதுவும் தமிழ்மணத்தால் தூக்கப்பட்டது. விஷயம் புரியாமல் பேசாதீர்கள்.

முகம்மது யூனுஸ் இசுலாமியரா இல்லையா என்பது கூட உங்களுக்கு தெரியாது. அப்படியே இருந்தாலும் திலீப் குமார்கள், அர்ஜுன்கள் இருக்கும்போது ஏன் எதிர்ப்பதமாக இருக்கக் கூடாது? நீங்களே இசுலாமியரா என்பது கூடத்தான் எனக்கு தெரியாது. முகம்மது யூனுஸ் என்று புனைப்பெயர் வைத்து கொள்ளக் கூடாது என்று கூறுவதற்கு நீங்கள் யார்? அது அடையாளத் திருட்டு என்று கூறுவதற்கும் சேர்த்துத்தான் கேட்கிறேன்.

வேறு ஏதாவது உருப்படியான விஷயம் இருந்தால் பேசுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//அடையாறிலிருந்து ட்ரைடெண்ட் ஹோட்டல் வரை நான் எனது காரில் செல்லும்போது என்னிடம் தொலைபேசியில் எஸ்.டி.டி. பேசியவர்//

:)))

Anonymous said...

புதுக்கல்லூரியில் படித்த, எனது புதுக்கல்லூரி என பெருமையுடன் கூறிக் கொள்ளும் இந்த டோண்டு ராகவனுக்கு எத்தனை இசுலாமிய நண்பர்கள் உண்டு என்பதை அறிவீர்கள்? அவனுடன் அதே கல்லூரியில் சக மாணவர்களாகப் படித்தவர்கள், அவன் படித்து பல ஆண்டுகளுக்கு பிறகு படித்தவர்கள், பிறகு அவனும் அவங்க நியூ காலேஜில்தான் படித்தான் என்பதாலேயே அவன் மேல் பாசமாக உள்ளவர்கள் எவ்வளவு பேர் என்பது தெரியுமா?////

இதை நான் வழிமொழிகிறேன்

சுலைமான்
பொருளாளர்
மதீனா நகர டோண்டு பேரவை
சவூதி அரேபியா

மரைக்காயர் said...

//எனது மனைவியின் பெயரில் திறந்த பிளாக்கில் எனது முகவரி மற்றும் டெலிஃபோன் எண்கள் தரப்பட்டன. முதலில் சில நல்ல சுலோகங்கள் இருந்தன. அம்மாதிரி 3 பதிவுகள் வந்து தமிழ்மணத்தின் விதிகளின்படி ஆட்டமேட்டிக்காக சேர்க்கப்பட்டது. பிறகு அசிங்கப் பதிவுகளும் வர ஆரம்பித்தன. தமிழ்மணத்துக்கு தெரியவந்து அதை அவர்கள் தூக்கினர்.//

உங்க வாதப்படி அசிங்கமா எழுதாத வரைக்கும் யார் வேணாலும் எந்த பேர்ல வேணாலும் எழுதலாம்கிறீங்களா? எனது கருத்து, அசிங்கமான எழுத்தோ இல்லையோ, இன்னொரு அடையாளத்துல போலியா எழுதுறது தப்புதான்.

//முகம்மது யூனுஸ் இசுலாமியரா இல்லையா என்பது கூட உங்களுக்கு தெரியாது.//

இப்ப புதுசா வந்திருக்குற ஒரு படத்துல வடிவேலு ஜோக் ஒன்னு இருக்குதாமே (நான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை) கொண்டைய மறைக்காம வடிவேலு என்ன வேடம் போட்டுக்கிட்டு வந்தாலும் அவருடைய நண்பர்கள் கண்டுபிடிக்கிற மாதிரி, முஸ்லிம் பேர்ல போலியா எழுதுறவங்களை முஸ்லிம்கள் எளிதா கண்டுபிடிச்சுடலாம்.

//அப்படியே இருந்தாலும் திலீப் குமார்கள், அர்ஜுன்கள் இருக்கும்போது ஏன் எதிர்ப்பதமாக இருக்கக் கூடாது? //

திலிப்குமாரோ அர்ஜுனோ தன்னுடைய இஸ்லாமிய அடையாளத்தை மறைச்சுக்கிட்டு தன்னை ஒரு இந்துவா மட்டும் காட்டிக்கிட்டதா தெரியலை. அப்படியே இருந்தாலும் அதுவும் தப்புதான். ஒரு தப்பை வச்சு இன்னொரு தப்பை நியாயப்படுத்த முடியாது.

//விஷயம் புரியாமல் பேசாதீர்கள். //

விஷயம் புரிஞ்சதுனாலதான் பேசுறேன்.

//வேறு ஏதாவது உருப்படியான விஷயம் இருந்தால் பேசுங்கள்.//

உங்களுக்கு இதைப்பத்தி பேசப்பிடிக்கலைன்னா இதோட நிறுத்திக்குவோம். நான் சொல்ல நினைச்சதை நானும் சொல்லி முடிச்சுட்டேன்னு நினைக்குறேன்.

இதுவரைக்கும் என்னோட பின்னூட்டங்களை அனுமதிச்சதுக்கும் அதற்கெல்லாம் பதில் கொடுத்ததற்கும் நன்றி.

Anonymous said...

புதுக்கல்லூரியில் படித்த, எனது புதுக்கல்லூரி என பெருமையுடன் கூறிக் கொள்ளும் இந்த டோண்டு ராகவனுக்கு எத்தனை இசுலாமிய நண்பர்கள் உண்டு என்பதை அறிவீர்கள்? அவனுடன் அதே கல்லூரியில் சக மாணவர்களாகப் படித்தவர்கள், அவன் படித்து பல ஆண்டுகளுக்கு பிறகு படித்தவர்கள், பிறகு அவனும் அவங்க நியூ காலேஜில்தான் படித்தான் என்பதாலேயே அவன் மேல் பாசமாக உள்ளவர்கள் எவ்வளவு பேர் என்பது தெரியுமா?///

இதை நானும் வழிமொழிகிறேன்.

அபூபக்கர்
தலைவர், டோண்டு பக்தர் பேரவை
புதுதில்லி
இந்தியா

Anonymous said...

அட சோழரென்ன சேரரென்ன
பாண்டியரு வீரமென்ன
எங்க டோண்டு அதுக்கு மேலதான்

சுற்றிவரும் பகையை, வட்டமிடும் கழுகளை
அடித்து வீழ்த்தும் மாவீரருதான்.

தலைவா..டோண்டு
ஆணையிடு..அணிதிரண்டு சென்னை வருகிறோம்.
உன் பூமுகம் காண..

போர்க்கோலம் பூண இளைஞர் படை
காத்திருக்கிறது தலைவா
குரல்கொடு

உஸ்மான்
டோண்டு இலக்கிய பேரவை செயலாளர்
ஜெருசலேம் நகர கிளை
ஜெருசலேம்
இஸ்ரேல்

Anonymous said...

Mr. Dondu,
For my comment you have given explanation and told apologies to somebody.
I could see here like some bloggers protested you fiercely but infact they were all atleast honest.
On the other hand some bloggers in particular one of them whom you gave apologies, i could see had allowed a comment from your duplicate. I feel he wouldn't deserve any such regrets from you. Plese avoid expressing regrets for individuals.
murali.

Anonymous said...

//தீதும் நன்றும் பிறர் தர வாரா\\

இதுதான் மிக்ப்பெரிய காமெடி. எவனாவது உன்னை பிக்-பாக்கெட் அடிச்சா கூட இத்த சொல்லிக்குவ போல.

தீதும் நன்றும் பிறர் தர வாரா-ன்னு சொல்லுபவரை தவிர்க்க வேண்டிய நபர் லிஸ்டுல போடவும்

Anonymous said...

/உங்க வாதப்படி அசிங்கமா எழுதாத வரைக்கும் யார் வேணாலும் எந்த பேர்ல வேணாலும் எழுதலாம்கிறீங்களா? எனது கருத்து, அசிங்கமான எழுத்தோ இல்லையோ, இன்னொரு அடையாளத்துல போலியா எழுதுறது தப்புதான்./

அவரு இன்னொரு அடையாளத்தில் எழுதுகிறார் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?அவர் முஸ்லிம் இல்லை என்று மந்திரம் போட்டு கண்டு பிடித்தீர்களோ?

/இப்ப புதுசா வந்திருக்குற ஒரு படத்துல வடிவேலு ஜோக் ஒன்னு இருக்குதாமே (நான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை) கொண்டைய மறைக்காம வடிவேலு என்ன வேடம் போட்டுக்கிட்டு வந்தாலும் அவருடைய நண்பர்கள் கண்டுபிடிக்கிற மாதிரி, முஸ்லிம் பேர்ல போலியா எழுதுறவங்களை முஸ்லிம்கள் எளிதா கண்டுபிடிச்சுடலாம்./

இதுக்கு முந்தி ஸ்காட்லாண்ட் யார்டுல வேலை பார்த்தீங்களோ?

இணையத்தில் முஸ்லிம் யாரு, இந்து யாருன்னு சர்ட்டிபிகேட் கொடுக்கும் அத்தாரிட்டி நீங்களா சார்?

ஜயராமன் said...

டோண்டு ஐயா,

/// It is a good rule in life never to apologize. The right sort of people do not want apologies, and the wrong sort take a mean advantage of them.

P. G. Wodehouse, The Man Upstairs (1914) ///

நான் நேரில் பேசினபோது எனக்கு தங்கள் உள் எண்ணங்களை சிறிதும் கோடி காட்டவில்லை. அதனால், இதைப்பற்றி விவாதிக்கவில்லை. இப்போது கொட்டிய பாலைக்குறித்து அழுவதும் சரியில்லை.

இதனால் விளையும் பயன்களை யோசித்தேன் - தமிழ்மணத்தில் அமைதி தவழுமாம், இரண்டாவது, உங்களுக்கு பின்னூட்டம் அதிகம் வருமாம். நல்லதுதான்.

இறந்துபோன அய்யங்கார் மாமா ஆத்மா சாந்தி அடையட்டும்.

Anonymous said...

ஆட்டம் இனிதான் ஆரம்பம்

Anonymous said...

தல!!! காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

முதல் அனானி : நீ நல்லவனா?

இரண்டாம் அனானி: இல்லை

மூன்றாம் அனானி: அவன் நல்லவனில்லை. ஆனால் நான் நல்லவன்

Anonymous said...

அனானிகளின் புது புகலிடமே!!! நீங்க தூங்கினிங்களா இல்லியா?? நான் எப்போ பின்னூட்டம் போட்டாலும் பப்ளிஷ் பண்ணுறீங்க.. கணினி முன்னாடியே இருந்து உடலை வருத்திக்காதிங்க

Anonymous said...

// தமிழ் பதிவு டயலாக் said...

முதல் அனானி : நீ நல்லவனா?

இரண்டாம் அனானி: இல்லை

மூன்றாம் அனானி: அவன் நல்லவனில்லை. ஆனால் நான் நல்லவன் //

நீ சொன்னது ஒன்னுமே புரியல.

Anonymous said...

//முகம்மது யூனுசுன்னு இங்கே யாராவது பதிவர் இருந்து அவனோட வலைப்பூவை காப்பியடிச்சாரா எனது நண்பர்? ஏதாவது அசிங்கமாக எழுதினாரா? கூறுங்கள்.//

ஒரு முஸ்லிம் ஏதேனும் கருத்துச் சொன்னால் அதை ஒட்டு மொத்த முஸ்லிம்களின் கருத்தாக விளங்கிக்கொள்ளும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. முஸ்லிம்கள் ஏதேனும் தவறு செய்தால் அதை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்தி கருத்துப் பரப்பும் நிலையும் இருந்து வருகிறது.

முஹம்மத் யூனூஸ் என்னும் பெயரில் வரும் கருத்துக்களுக்கு முஸ்லிம்களோ, இஸ்லாமோ பொருப்பாகாது, இஸ்லாத்தில் இல்லாத விசயங்களை முஸ்லிம்களே சொன்னாலும் அதற்கும் ஒட்டு மொத்த முஸ்லிம்களோ, இஸ்லாமோ பொருப்பாகாது என்பது உங்களைப்போன்ற மேதைகளுக்கு தெரிந்திருக்கும், இருந்தாலும் எல்லோரும் உங்களைப்போன்றே மேதைகள் அல்லவே.

//அவர் பெயர் கமலஹாசன். அவரது அண்ணாக்கள் பெயர் சாருஹாசன், சந்திரஹாசன். இவையெல்லாமா இசுலாமியப் பெயர்கள்?//

இவையெல்லாம் இஸ்லாமியப்பெயர்கள் என்று அவர்களைத்தவிர வேறு யாரும் வாதிடவில்லையே.

//கமல்ஹாசன் முஸ்லிம் பேரு//

கமலஹாசனும் அவர்களுடைய சகோதரர்களும் முஸ்லிம்களுடைய பெயர்களை நாங்கள் வைத்திருக்கிறோம் என்று அவர்கள் வாதிட்டாலும், அவர்கள் தங்களை ஹிந்துக்களாகவும், கமலஹாசன் கடவுள் மறுப்பு கொள்கை உடையவராகவும் அடையாளம் காட்டிக்கொண்டுள்ளனர்.
---
அதுபோல் முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கக்கூடிய ஒரு சில பெயர்களை வைத்துக்கொண்டு அதை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதும் எனது வேண்டுகோள்.

உதாரணத்திற்கு

அபூபக்கர் - தலைவர், டோண்டு பக்தர் பேரவை என்று ஒருவர் பதிந்திருக்கிறார். அபூபக்கர் என்னும் பெயர் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் உற்ற நண்பராகவும், உறவினராகவும் இருந்த முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கக்கூடிய ஒருவரின் பெயர், அவர் இறைவனைத்தவிர வேறு யாருக்கும் பக்தராக இருந்ததில்லை. அப்படியிருக்க அந்த பெயரை டோண்டுவின் பக்தராக சித்தரித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அபிவிருத்தி
ரியாத் - சவுதி அரேபியா

enRenRum-anbudan.BALA said...

ராகவன் சார்,
நெறைய பேசியாச்சு இது பற்றி !
எடுத்தது நல்ல முடிவு !

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறுவது முற்றிலும் சரி பாலா அவர்களே. நானும் அது பற்றித்தான் யோசித்து கொண்டியிருந்தேன். கூற வேண்டியதெல்லாம் கூறியாயிற்றுதான்.

கொல சாமிகளையும் குஷிபடுத்தியாச்சு. இது வரை நல்லபடியா, ஜாலியா பொழுது போச்சு. இதுக்கு மேலே ஒரு ஆண்டி க்ளைமாக்ஸ் வந்துடும் என அஞ்சுகிறேன். ஆகவே இப்பதிவின் பின்னூட்டப் பெட்டியை மூடுகிறேன்.

இன்னொரு வேண்டுகோள். எனது பதிவுகளில் வந்து எதிர்வினை அளிக்கும் எல்லோருக்கும் நன்றி. தயவு செய்து எப்பதிவுக்கு வந்தாலும் அது சம்பந்தமான ஒப்புதல்கள், அவை இல்லாமை ஆகியவை பற்றியே எழுதுங்கள். சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள் வேண்டாம்.

எல்லோருக்கும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது