ஹாரி பாட்டர் ஆறாவது புத்தகம் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் என்ன? டம்பிள்டோரேயைக் கொலை செய்து விட்டாரே? இவர் நல்லா இருப்பாரா என்றுதான் என் மனதில் ஆவேசம்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் இப்படித்தான் ஷெர்லாக் ஹோம்ஸ் இறந்ததாக எழுதி ரொம்பவே தாக்குதலுக்கு ஆளானார் சர் ஆர்தர் கானன் டாயில் அவர்கள். அடே கொலைகாரா என்ற ரேஞ்சில் அவருக்கு கடிதங்கள் தந்திகள் ஆகியவை வந்து குவிந்தன. வேறு வழில்லாமல் மீண்டும் ஷெர்லாக் ஹோம்ஸ் என்றெல்லாம் கதைகள் வந்தன.
ஆனால் அதற்கும் இங்கு வழியில்லாமல் செய்துவிட்டாரே கல் நெஞ்சுக்கார ரௌலிங்க். ஏழாவது புத்தகம் வேறு வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ எனத்தெரியவில்லை.
என்ன சஸ்பென்ஸை உடைத்து விட்டேனோ? ஆனால் என்ன செய்வது? என்னை இந்த ரேஞ்சுக்கு புலம்ப விட்ட ரௌலிங்க் ஒழிக. உலகத்துக்கே தெரிந்த விஷயத்துக்கு என்ன ஒளிவு மறைவு? புத்தகம் வந்து மூன்று நாட்கள் ஆகி விட்டனவே. படிக்கவில்லையானால் படியுங்கள். ரௌலிங்குக்கு எல்லோரும் சேர்ந்து தாக்குதல் கணைகள் அனுப்புவோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
22 hours ago
12 comments:
டோண்டு ராகவன்:
கண்டன கணைகளை உங்களுக்குதான் முதலில் அனுப்ப வேண்டும்!! இப்படி போட்டு உடைத்துவிட்டீரே ;((
நல்ல வேளை என் மகனுக்கு தமிழ் படிக்கத் தெரியாது...
- வருத்தத்துடன்
வாசன்
அதானே....இன்னமும் புத்தகத்தை நான் முடிக்கவில்லை. டோண்டு நீங்கள் செய்தது கொஞ்சமும் சரியில்லை. புத்தக விமர்சன இலக்கணத்தை அநியாயமாக உடைத்திருக்கின்றீர்கள். இது என்னுடைய கருத்து.
ரௌலிங்கின் புத்தகம் வெளியாகி, அதை வாங்கி சில மணி நேரங்களிலேயே முடிவு ஊருக்கே தெரிந்து விடுகிறது. இப்போதோ மூன்று நாட்கள் கடந்த நிலையில் அவர் உண்மையான விசிறிகளில் பாதிக்கு மேல் உண்மை தெரிந்திருப்பார்கள். இனிமேலும் என்ன ஒளிவு மறைவு என்பதுதான் என் நிலை. இது என் கருத்து.
மேலும் இந்த திருப்பமே என் கண்டனத்துக்கு உள்ளானது. மற்றப்படி புத்தகம் அற்புதம். வில்லன் வோல் த மோரைப் பற்றி எவ்வளவு ரகசியங்கள்? அதையெல்லாமா கூறி விட்டேன்? இதில் வயிற்றெரிச்சல் என்னவென்றால், டம்பள்டோரே இறக்கும் தருணம் வரை அவர் இறந்து விடுவார் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு:
புத்தகத்தை வாங்கி நாலைந்து நாட்களாகியும் மகனுக்கு நான் தினமும் படிக்க நாழி கிடைக்கவில்லை, இடது கை வீக்கம் வேறு. மகனின் பொறுமை எல்லைக்கு போய் கொண்டுள்ளது..நன்றாக படிப்பவராயினும் அப்பா படிக்க வேண்டுமென்றொரு அடம்..நீங்கள் கொஞ்சம் சுவராசியத்தை குறைத்துவிட்டீர்கள், பரவாயில்லை..
உங்கள் பழைய பதிவுகளை படித்தேன். எனக்கும் கடவுளர்களுக்கும் ஏதொரு சம்பந்தமும் கிடையாது, இருந்தாலும் வைணவ கோவில்களுக்கு நீங்கள் போய் வந்தது பற்றிய பதிவு மிகவும் நன்று. அடுத்த தடவை அந்த பக்கம் போனால், திருக்கண்ணபுரம் சென்று வாருங்கள். அற்புதமான கோவில். தூய்மையானதும். அருகே பேரளத்திற்கு மேற்கே திருமீயச்சூர் எனும் சிற்றூரில் வீற்றிருந்த பெருமாள் கோவிலொன்றுள்ளது. அமைதியான சிறிய கோவில், மனதிற்கு நிம்மதி தருமிடம். எமது குடும்பத்தினரால் கட்டப்பட்டு நிருவாகிக்கப்படுகிறது.
வாசன்
வாசன் அவர்களே,
"திருக்கண்ணபுரம் சென்று வாருங்கள். அற்புதமான கோவில். தூய்மையானதும். அருகே பேரளத்திற்கு மேற்கே திருமீயச்சூர் எனும் சிற்றூரில் வீற்றிருந்த பெருமாள் கோவிலொன்றுள்ளது."
கண்டிப்பாக செல்கிறேன். மேலும் விவரங்கள் தாருங்கள். அதாவது சென்னையிலிருந்து எவ்வாறு செல்வது (நான் காரில் செல்வேன்), கோவில் நடை திறக்கும் நேரங்கள், முதலியன. திருமீயச்சூரில் உங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள இயலுமா என்பதைப் பற்றியும் எனக்கு மின்னஞ்சல் அனுப்ப முடியுமா?
தங்கள் சஸ்பென்ஸ் உடைந்ததற்கு வருந்துகிறேன். இருப்பினும் பையனிடம் கூறாதீர்கள். இடது கை வீக்கம் எப்படி இருக்கிறது? இணையத்தில் பார்த்தேன். யார் இறக்கப் போகிறார்கள் என்று பெட்டெல்லாம் வைத்திருக்கிறார்கள். மெஜாரிடி வோட்டே இம்முறை வெற்றி பெற்றது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு, நானும் புத்தகத்தை முடித்து விட்டேன். எனக்கு ரௌலிங் செய்தது சரியே என்று தோன்றுகிறது. காரணம். ஹாரி என்ற கதாநாயகனைப் படைத்து விட்டு, பிரபலப் படுத்தி விட்டு அவனை எப்பொழுதுமே காப்பாற்ற இன்னொருவரை பக்கத்திலேயே வைத்திருக்க வேண்டுமா? அதா கதாபாத்திரத்தின் மதிப்பைக் குறைத்து விடும். ஆகையால் டம்பிள்டோர் இல்லாமல் போராடி வெற்றி பெறுவதுதான் ஹாரிக்கு அழகு. இதுதான் புத்தகம் படிக்கும் முன்னாலேயே எனது மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த எண்ண ஓட்டம். ரௌலிங்கும் அப்படியே நினைத்ததில் வியப்பில்லை.
நீங்கள் உண்மையைச் சொல்லும் முன்னமே ஒரு நண்பன் வாய்தவறி என்னிடம் டம்பிள்டோரின் மரணத்தைப் பற்றிச் சோல்லி விட்டான். ஆனாலும் அது ஆவலைக் குறைக்க வில்லை. எப்படி நடக்குமென்று ஆவல்தான் கூடியது.
நன்றி ராகவன் அவர்களே. நீங்கள் கூறுவதும் சரிதான். இருந்தாலும் ஹாரி பாட்டர் தன் குருவை காப்பாற்ற ஒரு முயற்சியும் எடுக்க முடியாது போனதுதான் எனக்கு ஆறவில்லை.
அடுத்த புத்தகத்தில் அலை அலையாய் சாவுகள் வரும் என்றுதான் அஞ்சுகிறேன். ஃபீனிக்ஸ் பறவை ஹாரியிடம் வந்து சேருமா? நிறைய கேள்விகள். நிறைய எதிர்பார்ப்புகள். காதிருக்க வேண்டியதோ நிறைய மாதங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஹாரியைக் காப்பாற்றுவதுதான் அந்த இடத்தில் தேவையான ஒன்றாக இருந்திருக்கிறது. அதனால்தான் தன்னுயிரைப் பணயம் வைத்திருக்கிறார் டம்பிள்டோர். மனசுக்குக் கஷ்டமகா இருப்பதும் உண்மைதான்.
அடுத்த முதல்வராக மெக்கானகல். அவரும் பழுத்த அனுபவசாலி. ஆனால் மிகவும் நேர்மையானவர். பள்ளியைத் திறப்பார்களா என்றும் தெரியவில்லை. திறந்தாலும் ஹாரி வருவானா என்றும் தெரியவில்லை. என்னைக் கேட்டால், கதை கோடை விடுமுறையிலேயே முடிந்து விடும்.
பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்த பின் பிள்ளைகள் பள்ளிக் கூடத்திற்குப் போகையில் கதை முடியலாம். நானாக இருந்தால் அப்படிச் செய்திருப்பேன்.
இப்பொழுது வேர்வுல்புகள் வேறு வருகிறார்கள். வேம்ப்பயர்கள். அடுத்த பாகம் முழுவதுமே பரபரப்பாக இருக்கும். இருக்கனும்.
இன்றைய நிலையில் ரானையும் ஹெர்மயானியையும் தவிர ஹாரிக்கு உதவ ஆளில்லை என்பதே உண்மை.
வாசன் அவர்களே மதி கந்தசாமி அவர்கள் பதிவிலிருந்து எடுத்தது கீழே:
"திருநள்ளாறிலிருந்து அம்பகரத்தூர் தாண்டி, கொஞ்சம் அகலமான செம்மண் கலந்த தார் ரோட்டில் வண்டி பயணித்தது. ஐந்தாறு தடவை போய்வந்திருந்தாலும், ஏழு வருடங்களுக்கப்பால் சென்று பார்க்க வேண்டியிருப்பதால் பல இடங்கள் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. கணிசமான தூரம் பயணித்த வண்டி திருநாவுக்கரசருடன் தொடர்புள்ள ஒரு ஊர் வந்ததும் கொஞ்சம் மெதுவாக ஓடியது [என்ன செய்யிறது இப்பிடித்தான் ஞாபகம் இருக்கு! திருநாவுக்கரசர் பிறந்த ஊரோ, அல்லது அவருடைய தமக்கையார் வாழ்ந்த ஊரோ, அல்லது திருநாவுக்கரசர் மறைந்த ஊரோ - இதில் ஒரு ஊர்.]
மெதுவாக ஓடிய வண்டி வீதியில் இடது பக்கம் வந்த பாதையில் திரும்பியது. சிறிது தூரம் பயணித்ததும் அழகான விஷ்ணு கோவில் தெரிந்தது. அதுதான் திருக்கண்ணபுரம் என்று ‘அம்மா’ சொன்னார். ஐந்தாறு தடவை போயிருந்தாலும் ஒரு தடவை கூட கோவிலுக்குச் செல்லும் வாய்ப்புக்கிடைக்கவேயில்லை. ஒரு நாள் போவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ‘திருக்கண்ணபுரம்’ என்றதும் காதில் சீர்காழியின் குரலில் ‘கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்’ பாடல் ஒவ்வொரு முறையும் ஒலித்தது."
நீங்கள் கூறிய திருக்கண்ணபுரம் இதுவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன் அவர்களே,
ஹாரிக்கு டம்பள்டோரேயின் சேனையிலிருந்து கின்னி மற்றும் நெவில் கூட இருக்கிறார்கள் துணைக்கு. எல்ஃப் டாப்பி ரஷ்ய ஜனாதிபதி புடீன் போலவே இருக்கிறார் என்று ஒரு கலாட்டா வந்தது ஞாபகம் இருக்கிறதா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
உண்மை. ஜின்னியும் நெவிலும் இருக்கின்றார்கள். லூனாவும் கூட இருக்கிறார். ஆனால் ஜின்னி நெவில் அளவுக்கு அவர் உதவ மாட்டார் என நினைக்கிறேன்.
மேலும், டாபியும் கிரீச்சரும் இருக்கின்றன. அவைகளையும் பயன்படுத்தலாம்.
புத்தகத்தைப் பார்த்தால் டாபி புடின் போல இருக்காது. ஆனால் திரைப்படத்தில் லேசாக அந்தச் சாயல் இருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் கூட. president of far away country...that wretched man என்றெல்லாம் எழுதியிருப்பது சரியல்ல. மேலும் கால நேர இடைவெளி ( லண்டனில் இரவு, அந்த பிரசிடெண்ட் ஊரில் பகல் ) என்றெல்லாம் வைத்துப் பார்க்கையில் ரஷ்யாவைத்தான் சொல்கிறாரோ என்ற எண்ணம் எழாமல் இல்லை.
Dondu,
Dumbledore had too many centuries of literary tradition against him to be alive in the final episode. Whenever there is a young hero guided by a wise old man, the wise old man has to die before the young hero can realise his full potential and stand up to the evil guy and defeat him.
JK Rowling is too much into such symbolism to avoid this twist in the tale.
Post a Comment